Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

”ஸ்பிலிட்...அஸ் ககாங்...சென்டல்!” - இதெல்லாம் என்ன தெரியுமா?

ice%2022.jpg

ஸ்க்ரீம்...

கிபி 16வது நூற்றாண்டில் மொகாலய அரசர்கள், பழக்கலவைகளில் இந்துகுஷ் மற்றும் இமயமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐஸ் கட்டிகளைத் துருவி  ஒரு கட்டு கட்டியிருக்கிறார்கள்.. பண்டைய கிரேக்க மக்கள், பழங்களையும் தேனையும் ஐஸ் கலவையுடன் இணைத்து ரிப்பீட்’ அடித்திருக்கிறார்கள்.


எல்லா வயசையும் அசைச்சு பார்க்கும் இந்த ஐஸ்க்ரீமிற்காகவே, நியூயார்க் நகரில் ஒரு மியூசியம் கட்டப்பட்டுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

லிக்விட் சாக்லெட் உருகி வழிவது போன்ற சுவர், கோன் ஐஸ் விளக்குகள், ஐஸ்க்ரீம் ஸ்கூப்பர் கரண்டி போன்ற சீ-சா விளையாட்டு, ஸ்பிரிங்கிள்ஸ் பொங்கி வழியும் விளையாட்டுக் குளம், சாக்லெட் நீர்வீழ்ச்சி, சுவைக்க விதவிதமான ஐஸ் வகைகள் என்று இந்த மியூசியம் முழுக்க ஐஸ் க்ரீம்...ஐஸ் க்ரீம்..ஐஸ் க்ரீம் மட்டும்தான்.

சரி...மியூசியம் தாண்டி கலர்புல்லான ஐஸ்க்ரீம் வகைகள் என்னவெல்லாம் இருக்கு?  நாமும் கண்ணால் பார்த்து சுவைக்கலாம். அப்புறமா கடையில் போய் வாங்கியும் சாப்பிடலாம்.

ஸ்பிலிட்:


split%2011.jpg

நீளமான வாழைப்பழத்தை நடுவில் வெட்டி, அதில் இன்னும் கொஞ்சம் வாழைப்பழத் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரி, வெண்ணிலா, சாக்லெட் ஐஸ்க்ரீம்களை அதில் கொட்டி, சாக்லெட் துண்டுகளைப் பரப்பி, கேரமல் சாஸையும் மேலே ஊற்றி படகு வடிவில் பரிமாறப்படும் ஒரு ஐஸ்க்ரீம் வகை.

ப்ளோட்ஸ்:

float%2011.jpg
 

ஆப்பிள் சாறு, ஆரஞ்சுச்சாறு போன்ற பழச்சாறுகளுடன் ஐஸ்க்ரீமையும் தம்ளருக்குள் போட்டு, பழச்சாற்றில் ஐஸ்க்ரீம் மிதக்க, மிதக்க சுவைக்கக் கொடுக்கப்படுவதுதான் இந்த ஃப்ளோட்ஸ்.

அஸ் ககாங்:

cendol%2011.jpg


வடிவேலுவின் ‘ஆஹான்’ இல்லை. மலேசியாவின் பிரபலமான ஐஸ்க்ரீம் ரெசிப்பி இது. சிவப்பு பீன்ஸ், சாதம், ஜெல்லி, தேங்காய்ப்பால், ஐஸ்க்ரீம், மேலே தூவப்பட்ட ஸ்வீட் கார்ன், வேர்க்கடலை. இதுதான் இந்த அஸ் ககாங் ஐஸ்க்ரீம். இதன் இன்னொரு வடிவம் சென்டல்.

சண்டே:

sundae%20%2011.jpg


கரண்டிகளில் அள்ளியெடுத்த உருண்டு, திரண்ட ஐஸ்க்ரீமை ஒரு கப்பில் போட்டு அதன்மீது நட்ஸ், கேரமல் சிரப் எல்லாம் வடிவேலு சொல்வது போல மழைச்சாரலாக போட்டுக் கொடுத்தால் அதுதான் சண்டே. 

குக்கீ சாண்ட்விச்:

cook%2011.jpg

ரெண்டு பிஸ்கெட்களை எடுத்து, ஒன்றின் நடுவில் ஐஸ்க்ரீமைக் கடைப்பரப்பி, மற்றொரு பிஸ்கெட்டால் மூடி, மேலே கொஞ்சம் கலர்ஃபுல் ஸ்பிரிங்கிள்களைத் தூவிக் கொடுத்தால் அதுதான் குக்கீ சாண்ட்விச்.

ஹாலோ ஹாலோ:

halo%2011.jpg

ஹலோனு கூப்பிடறோம்னு நினைக்காதீங்க. இது வேற. பிலிப்பைன்ஸின் பேவரைட். துருவிய ஐஸ், கன்டென்ஸ்டு மில்க், இனிப்பு பீன், அகர் ஜெல்லி, பழத்துண்டுகள் இணைந்த ஒரு ரகமான ஐஸ்க்ரீம் வகை.

மட்சா ஐஸ்க்ரீம்:

motcha%2011.jpg

க்ரீன் டீ, பால், முட்டை, சர்க்கரை எல்லாம் சேர்த்து செய்யப்படும் ஐஸ்க்ரீம் வகை இது. இதை சாப்பிட்டால் அதன் சுவைக்கே மோட்சம் கிடைத்துவிடும், அவ்வளவு டேஸ்ட்.

பாப்சிகிள்ஸ்:

popsclies%2011.jpg

நம்ம ஊர் குச்சி ஐஸ்சின் மறுவடிவம்தான் இந்த பாப்சிகிள்ஸ். நமக்குத் தெரிந்ததெல்லாம் பால் ஐஸ், ஜவ்வரிசி ஐஸ், சேமியா ஐஸ் குச்சிகள்தான். இன்று இந்த பாப்சிகிள்ஸ், சாக்லெட், வெண்ணிலா, ரெயின்போ, யோகர்ட், ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, பட்டர் மில்க் என்று விதவிதமான சுவைகளில் கிடைக்கிறது.

பான் ஐஸ்க்ரீம்:

pan%2011.jpg

இது ஹைடெக் இண்டியன் ஐஸ் க்ரீம் ரெசிப்பி. வெற்றிலை, குல்கந்து, சர்க்கரை, ஐஸ்க்ரீம், டூட்டி ஃப்ரூட்டி ஆகியவை இணைந்த பக்கா பான் ஐஸ்க்ரீம்.

அடுத்தது....? வேறெதுவும் இல்லை பாஸ். குதூகலமா நீங்களும் ஐஸ்க்ரீமை சுவைக்க வேண்டியதுதான் பாக்கி...!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

14572212_10155075246029578_2883282655753

  • தொடங்கியவர்

டிரம்ப் போன்று உடை அணிந்த நாய் பரிசு வென்றது

டிரம்ப் போன்று உடை அணிந்த நாய் பரிசு வென்றது

 
 
இங்கிலாந்தில் நாய்களுக்கான ஆடை அலங்கார போட்டியில் லாங்‌ஷர் பகுதியை சேர்ந்த ஸ்புட் என்ற 3 வயது பாக்சர் இன நாய் டொனால்டு டிரம்ப் போன்று உடை அணிந்து இருந்ததால் பரிசை தட்டிச் சென்றது.

இங்கிலாந்தில் நாய்களுக்கான ஆடை அலங்கார போட்டி நடந்தது. இப்போட்டியை ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று நடத்தியது.

இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து 82 நாய்கள் பலவிதமான ஆடை அலங்காரத்துடன் கலந்து கொண்டன. அவற்றில் ஸ்புட் என்ற 3 வயது பாக்சர் இன நாய் பரிசு வென்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் போன்று இந்த நாய் உடை அணிந்து இருந்தது. தலைமுடி அலங்காரமும் டிரம்ப் போன்றே இருந்தது. அதனால்தான் இது பரிசை தட்டிச் சென்றது.

இங்கிலாந்தில் லாங்‌ஷர் பகுதியை சேர்ந்த இந்த நாய் டிரம்ப் போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் பேண்ட், ‌ஷர்ட் மற்றும் கோட் மற்றும் நீல நிறத்தில் சில்க் டை அணிந்து இருந்தது.

http://tamil.adaderana.lk

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஒக்டோபர் - 12

 

1492 : கரீ­பியன் பிராந்­தி­யத்தின் பஹாமஸ் தீவு­களை கிறிஸ்­டோபர் கொலம்பஸ் அடைந்தார். அவர் கிழக்­கா­சி­யாவை தான் அடைந்­த­தாக எண்­ணினார்.

 

826Sri_Lanka--Sri-Lanka.jpg1798 : இலங்­கை­யா­னது பிரித்­தா­னி­யாவின் அரச குடி­யேற்ற நாடாக (Crown Colony) பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. இலங்­கையின் ஆளு­ந­ராக பிரெ­டெரிக் நோர்த் நிய­மிக்­கப்­பட்டார்.

 

1799 : பிரான்ஸை சேர்ந்த ஜேன் லெப்ரோஸ் எனும் பெண் 900 அடி உய­ரத்தில் பறந்த பலூ­னி­லி­ருந்து பர­சூட்டில் குதித்த முதல் பெண் ஆனார்.

 

1901 : அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்­துக்கு அப்­போ­தைய ஜனா­தி­பதி  தியோடர் ரூஸ்வெல்ட் “வெள்ளை மாளிகை” என உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பெய­ரிட்டார்.

 

1918  : அமெ­ரிக்­காவின் மினெ­சோட்டா மாநி­லத்­தி­லி­ருந்து கிளம்­பிய காட்­டுத்­தீ­யினால் 453 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1941 : யுக்­ரைனின் தினி­புரோ பெத் ரோவ்ஸ்க் நகரில் இந்­நா­ளிலும் இதற்கு அடுத்த நாளிலும் நாசி ஜேர்­ம­னி­யினர் 11,000 யூதர்­களைக் கொன்­றனர்.

 

1964 : சோவியத் ஒன்­றியம் வஸ்கோத் 1 விண்­க­லத்தை விண்­ணுக்கு ஏவி­யது. இதுவே பல விண்­வெளி வீரர்­களை விண்­ணுக்குக் கொண்டு சென்ற முத­லா­வது விண்­க­ல­மாகும்.

 

1968 :  ஸ்பெயி­னி­ட­மி­ருந்து கினியா சுதந்­திரம் பெற்­றது.

 

1992 : எகிப்தில் பூகம்­பத்­தினால் 210 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1994 : மகெலன் விண்­கலம் வெள்ளி கோளின் வளி­மண்­ட­லத்தை அடைந்­த­தை­ய­டுத்து, அத­னு­ட­னான தொடர்­பு­களை நாசா இழந்­தது. இவ்­விண்­கலம் அடுத்­த­டுத்த நாட்­களில் எரிந்து சேத­ம­டைந்­தது.

 

826general_musharraf.jpg1999 : பாகிஸ்­தானில் இடம்­பெற்ற இரத்தம் சிந்தாப் புரட்­சியில் பெர்வேஸ் முஷாரஃப் பிர­தமர் நவாஸ் ஷெரீபை ஆட்­சியில் இருந்து அகற்றி நாட்டின் அதி­ப­ரானார்.

 

1999 : உலகின் மக்கள் தொகை 6 பில்­லி­யனை எட்­டி­யது.

 

2000 : அமெ­ரிக்க கடற்­ப­டையின் யூ.எஸ்.எஸ். கோல் கப்பல், யேமனில்  தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னதால் 17 பேர் பலி.

 

2001 : அமை­திக்­கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனா­னுக்கும் ஐக்­கிய நாடு­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது.

 

2002 : இந்­தோ­னே­ஷி­யாவின் பாலி தீவில் இரவு விடுதி ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 202 பேர் கொல்­லப்­பட்டு 300 பேர் காய­ம­டைந்­தனர்.

 

2003 : பெலா­ரஸில் மனநோய் வைத்­தி­ய­சாலை ஒன்றில் இடம்­பெற்ற தீவி­பத்தில் 30 மன­நோ­யாளர் இறந்­தனர்.

 

2013 : மைக்கல் ஷுமேக்கர் 6 ஆவது தட­வை­யாக போர்­மி­யூலா வன் சம்­பி­ய­னானார்.

 

2005 : சீனாவின் சென்ஷோ 6,  விண்­வெளி வீரர்கள் இரு­வ­ருடன் ஏவப்­பட்­டது. மனி­தர்­க­ளுடன் பய­ணித்த சீனாவின் ன் ­சென்ஷோ 6,  விண்­வெளி வீரர்கள் இருவருடன் ஏவப்பட்டது. மனிதர்களுடன் பயணித்த சீனாவின் 2 ஆவது விண்கலம் இதுவாகும். 

 

2013 : பெரு நாட்டில்  வாகனமொன்று மலைச்சரிவில் வீழ்ந்ததால் 51 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk

  • தொடங்கியவர்

 

இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தை அறிவித்த செய்தியாளருக்கு 105வது பிறந்ததினம்
================================================

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய செய்தியை முதலில் அறிவித்தவர் பிரிட்டனின் போர்களச் செய்தியாளர் க்லேர் ஹாலிங்வர்த். நாஜி கொடுமைகளிலிருந்து வெளியேற பல கிழக்கு ஐரோப்பிய அகதிகளுக்கு இவர் உதவினார்.

அவர் தனது நூற்று ஐந்தாவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். தப்பிச்செல்ல அவர் உதவிய குழந்தைகளில் ஒருவர் அவருக்கு சிறப்பு வாழ்த்து ஒன்றை அனுப்பியுள்ளார்.

BBC

  • தொடங்கியவர்

மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை...

14523239_1457983467551393_4223562774417314681640_1457983557551384_36159836332796

 

ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக..
இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....

"ஏம்பா நீ சைலண்டா இருக்கே......"

'நம்ம குழந்தையைத் பத்திரமா பார்த்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'

"எப்படிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையைத் தொடர்ந்தார்.

''தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்குத் தெரிய வந்தது.

கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும். ஆனால், சில நேரங்களில் எங்களால புரிஞ்சிக்க இயலாம போகலாம்.
அதனால நாம ஆழமா யோசிக்காமோலோ, சரியா
புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'

*'நம்ம ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்லை, பணத்தை விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்னு அர்த்தம்.

*'முதல்ல மன்னிப்பு கேட்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்லை, ஈகோவை (Ego) விட உறவை மதிக்கிறாங்கன்னு அர்த்தம்.*

*'நம்ம கண்டுக்காம விட்டாலும், இருந்தும் நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேலை வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்லை, நம்ம அவர்களின் மனசில இருக்கோம்ன்னு அர்த்தம்'.*

பின்னொரு காலத்தில நம்ம புள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்..

"யாருப்பா அந்த போட்டோவுல இருக்கிறவங்கல்லாம்???"

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை நாங்க கழிச்சிருக்கோம்'.

*வாழ்க்கை குறுகியது, ஆனா, அழகானது..*

(படித்ததில் பிடித்தது!)

vikatan

  • தொடங்கியவர்

 

“ஒரு பவுண்ட் உணவு”
எந்த வகை உணவு தயாரிக்கவும் ஒரு பவுண்ட தான் செலவு. நம்ப முடிகிறதா?

BBC

  • தொடங்கியவர்

 

 

இது வட அமெரிக்காவின் மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் வருடாந்த போட்டி. மெய்ன் நகரில் தடைகளை தாண்டி ஓட வேண்டிய இந்த போட்டியில் 44 ஜோடிகள் கலந்துக்கொண்டனர். வெற்றிப்பெற்றவர்கள் ஃபின்லாண்டில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

BBC

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

 

 

இது வட அமெரிக்காவின் மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் வருடாந்த போட்டி. மெய்ன் நகரில் தடைகளை தாண்டி ஓட வேண்டிய இந்த போட்டியில் 44 ஜோடிகள் கலந்துக்கொண்டனர். வெற்றிப்பெற்றவர்கள் ஃபின்லாண்டில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

BBC

முயற்சி செய்யலாம்தான் ஆனால் யாருடைய மனைவியை என்று சொல்லவில்லையே  நவீனன்....!:unsure:  tw_blush:

  • தொடங்கியவர்

ஃப்ளோரிடாவில் கடல் நீருக்கடியில் பூசணிக்காய் சிற்பங்களை உருவாக்கும் போட்டி (Photos)

 

ஃப்ளோரிடாவில் கடல் நீருக்கடியில் பூசணிக்காய் சிற்பங்களை உருவாக்கும் போட்டி (Photos)

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நீருக்கடியில் பூசணிக்காய்களை செதுக்கி சிற்பத்தை உருவாக்கும் போட்டி நடைபெற்றது.

கீலார்கோ நகரிலுள்ள அமோரே டைவ் ரிசோட் என்ற உணவகமே இந்த நூதனப் போட்டிக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

கடலுக்கு அடியில் 30 அடி ஆழத்தில் பவளப்பாறைகளுக்கு இடையே நீச்சல் உபகரணங்களுடன் சென்ற போட்டியாளர்கள் பூசணிக்காய்களை செதுக்கி உருங்களை உருவாக்கினர்.

இதன்போது, பூசணிக்காய்த் துண்டுகளை உண்பதற்காக மீன்களும் திரண்டன. இந்தப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியின் முடிவில் நீருக்கடியில் வைக்கப்பட்டிருந்த பூசணிக்காய்களுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி மற்றும் டிரம்ப் ஆகியோரது முகமூடிகள் அணிவிக்கப்பட்டன.

இந்தப் போட்டியை நீருக்கடியில் வைக்கப்பட்டிருந்த கெமரா மூலம் உணவகத்தில் கூடியிருந்தோரும் கண்டு களித்துள்ளனர்.

 

2189

underwater-pumpkin-carving

08_530-jpg-638x0_q80_crop-smart

underwater-pumpkin-carving-3

http://newsfirst.lk

  • தொடங்கியவர்
18 minutes ago, suvy said:

முயற்சி செய்யலாம்தான் ஆனால் யாருடைய மனைவியை என்று சொல்லவில்லையே  நவீனன்....!:unsure:  tw_blush:

ஹஹா எனக்கு தெரியும் இப்படி யாராவது வருவார்கள் என்று..:grin:

 

 

  • தொடங்கியவர்

 

போனும் ஸ்மார்ட்... பெண்ணும் ஸ்மார்ட்!

வாழ்க்கையே ஸ்மார்ட் போனுடன்தான் என்றாகிவிட்டது. அதையே எப்படி ஸ்மார்ட்டாக இந்தப் பெண் பயன்படுத்துகிறார் என்று பாருங்கள். உங்களுக்கும் பயன்படும் நிச்சயமாக!

  • தொடங்கியவர்

 

அறிவியல் எவ்வளவு முன்னேறியிருக்கு :grin:

  • தொடங்கியவர்

லண்டனில் திரையிடப்பட்ட மைசூர் பெண்ணின் வாழ்க்கை!

selvi.jpg

லக அளவில், குழந்தைகள் திருமணம் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 50 சதவிகிதம் பெண்களுக்கு 18 வயது முன்பே திருமணம் செய்துவைக்கப்படுகிறது. அந்த வரிசையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த செல்வியும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு 14 வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிடுகின்றனர். தன்னுடைய குழந்தைப் பருவம் முடிவதற்கு முன்பே இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிடுகிறார் செல்வி. அதற்குபின் செல்விக்கு நடந்தது பெரும் அவலம். கணவனின் கொடுமையைத் தாங்கமுடியாமல் வீட்டைவிட்டு ஓடிவந்து மைசூரில் உள்ள 'ஒடநாடி' என்ற பெண்கள் காப்பகத்தில் சேர்ந்தார். இங்குதான் செல்வி, வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டார். தற்போது மைசூரில் டாக்சி ஓட்டி தன் குழந்தைகளைக் காப்பாற்றி வரும் செல்வி, தென் இந்தியாவின் முதல் பெண் டாக்சி ஓட்டுநர்.

selvi1.jpg

'' என் வாழ்வில் எல்லாமே என நான் நம்பிய கணவரே, என்னை பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வற்புத்தினார். உலகமே இருண்டு விட்டதைப் போல தோன்றி, என்னுடைய வாழ்கை முடிந்துவிட்டது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். மனம் முழுக்க இருந்த தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டு, எப்படியாவது வாழ்ந்துகாட்டவேண்டும் என்று எண்ணி வீட்டைவிட்டு ஓடிவந்து மைசூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்ந்தேன். வெட்டியாக இருப்பதுபிடிக்காமல் டிரைவிங் கற்றுக்கொண்டு, டாக்சி டிரைவர் ஆனேன். என் வாழ்க்கை பயணம் இப்போது சரியான பாதையில் செல்கிறது" என்கிறார் செல்வி.

கனடாவைச் சேர்ந்த எலிசா பலோச்சி என்பவர், 2004 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்தியப் பயணத்தின்போது செல்வியை யதேட்சையாக செல்வியைச் சந்திருக்கிறார். அப்போது செல்விக்கு 18 வயது. செல்வியின் அனுபவங்கள் குறித்து, 'டிரைவிங் வித் செல்வி' (Driving With Selvi) என்ற பெயரில் ஆவணப் படம் எடுத்து, சென்ற ஆண்டில் வெளியிட்டுள்ளார் எலிசா பலோச்சி. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 11) லண்டனில் இந்த ஆவண படம் திரையிடப்பட்டது.

படத்தின் டிரைலரைக் காண:


'டிரைவிங் வித் செல்வி' படத்தைப் பார்த்த பிரட்டனின் யூனிசெப் துணை நிர்வாக இயக்குனர் லில்லி கப்ரானி (Lily Caprani), ''செல்வியின் துணிச்சல் பெண்களுக்கு முன்மாதிரியாக உள்ளது" என்று பாராட்டைத் தெரிவித்துள்ளனர். அவரைத் தவிர மனித உரிமை ஆர்வலர்களும் இந்தப் படத்தை பல இடங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்கின்றனர்.

வாழ்வது என முடிவெடுத்துவிட்டால் பாதைகள் பல உண்டு என வாழ்த்துகாட்டும் செல்விக்கு சல்யூட்!

vikatan

  • தொடங்கியவர்
சிலர் தங்கள் எதிர்கால நலனை இழக்கும் வகையில் நடந்து கொள்கின்றார்கள்
 

article_1476071722-yuyu.jpgஎளிதில் கிடைக்கும் அதிஸ்டத்தின் பெறுமதி தெரியாமலே சிலர் தங்கள் எதிர்கால நலனை இழக்கும் வகையில் நடந்து கொள்கின்றார்கள். 

எதனையும் மெய்வருந்தி உழைத்தால் தான் முன்னேற்றத்துடன் நல்ல அனுபவங்களும் கிடைக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. 

ஆனால், முறைகேடுகள் மூலம் கிடைக்காமல், அனுகூலங்களை உடன் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்துதலே புத்திசாலித்தனமாகும். 

தெளிந்த மனோநிலையுடன் துணிச்சலுடன் அறிவு, அனுபவம் இணைந்தால் எல்லாக் காரியங்களுமே சத்தமின்றிக் கைக்குள் வந்துசேரும்.

சலனம், சஞ்சலத்துடன் எந்த காரியத்துக்குள்ளும் நுளைவது பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். காரிய சித்திக்குக் கரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். 

  • தொடங்கியவர்

உங்கள் வாழ்க்கையில் மேஜிக்குகளை நிகழ்த்துங்கள்! #MorningMotivation

 

o-MAGICIAN-facebook.jpg

மேஜிக் என்றால் என்ன ? இல்லாத ஒன்றை இருப்பது போல  ஒருவரை நம்ப வைப்பதா? அது இல்லை. அதை நம்ப வைக்க உழைப்பதுதான் மேஜிக்.  ஒரு மேஜிக் கலைஞனாக உங்களை நினைத்துக் கொண்டு குழப்பமில்லாத திறந்த மனதுடன் இந்த விஷயங்களை உங்கள் மனதில் விதைத்துப் பாருங்கள்   

1. இது வேற மாதிரி :
          ஒரு மேஜிக் கலைஞன் எப்பொழுதும் புதுப் புது முயற்சிகளில் இறங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.  பல இடங்களில்  ஒரே மேஜிக்கை பார்த்த குழந்தைகளுக்கு மேஜிக்கின் மீதிருந்த பழைய ஆர்வம் குறைவதை பார்க்க முடியும். அந்த மேஜிக் கலைஞனைப் போலவே ஒவ்வொரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் புதிதாக முயற்சி செய்து பாருங்கள். ஒரு விஷயத்தை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறைகளை உடைத்தெறிய பழகுங்கள்.  ' இது வேற மாதிரி '  எனச் சொல்லி அடிக்கும் அதே நேரம் அந்த செயலுக்கான நேரத்தையும் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.

2. அமைதி :
           ஒரு மேஜிக் கலைஞன் தனது திறமைகளை பார்வையாளருக்கு வெளிப்படுத்தும்  முன்பு அவன் செய்யும் முதல் விஷயம். கூட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதுதான். அப்படி ஆரம்பத்திலேயே அந்த கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால் அவனின் ஒவ்வொரு செயலுக்கும் கமெண்டுகள்  குவியும்.  ஆர்வமாக பார்த்து ரசிக்க நினைப்பவர்களுக்கும் கூட தன் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். இப்படி எல்லா காலக்கட்டத்திலும் உங்கள் மனதை  நிலையாகவும் தெளிவாகவும் வைத்துக் கொள்ள பழகுங்கள். எல்லா விஷயங்களுக்கும் கோபப்படுபவராகவோ அல்லது எளிதில் குழப்பமடைபவராவோ இருக்காதீர்கள். 

3. உடலும் உள்ளமும் :
           மேஜிக் செய்வதற்கு மேஜிக் கலைஞனின் மனநிலை எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான உடல்நிலையும் ரொம்ப முக்கியம். நல்ல ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் யோசிப்பதை செய்ய எப்போதும் உங்கள் உடலைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.          

4. ஃபார்முலா :
      ஒவ்வொரு மேஜிக் கலைஞனும் தனக்கென தனித்துவமான ஒரு  மேஜிக்கை கண்டறிந்து அதில் சிறப்பாக தேர்ச்சி பெற்றிருப்பான். குறிப்பிட்ட  அந்த மேஜிக்கை செய்யும்பொழுது மட்டும் ரசித்து கூட்டத்தை இன்னும் உற்சாகப் படுத்தியவாறு செய்து முடித்து கைதட்டலை அள்ளுவான். யாராவது மேஜிக் ரகசியங்களை கேட்கும்பொழுது சொல்லும் அவன், தன் தனித்துவமான மேஜிக்கை பற்றி மட்டும் அவ்வளவு எளிதில் சொல்லிவிட மாட்டான். அப்படி நம் ஒவ்வொருவருக்குமே தனித்துவமான திறமைகள் இருந்திருக்கும்.  உங்களுக்கான சக்ஸஸ் ஃபார்முலாக்களை  உருவாக்கிக் கொண்டே இருங்கள்.யாரோ உருவாக்கி வைத்திருக்கும் வெற்றி மந்திரத்தை கடைபிடிப்பதை விட  உங்களுக்கான ஃபார்முலாவை நீங்களே உருவாக்குங்களேன்! 

உங்கள் மேஜிக், உங்கள் வாழ்க்கையில் பல மேஜிக்குகளை நிகழ்த்த வாழ்த்துகள்!

vikatan

  • தொடங்கியவர்
 
 

வரலாற்றில் இன்று...

ஒக்டோபர் - 13

 

54 : ரோமப் பேரரசன் குளோடியஸ், நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து அவனின் வளர்ப்பு மகன், மனைவி மூலம் பிறந்த மகன் நீரோ ரோமப் பேரரசனானான்.

 

82716.jpg1582 : கிறகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

 

1792 : வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன், டிசியில் நடப்பட்டது.

 

1884 : அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.

 

1923 : துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.

 

1943 : ஜேர்மனிக்கு எதிராக புதிய இத்தாலிய அரசு போர்ப் பிரகடனம் செய்தது.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.

 

1946 : பிரான்ஸில் நான்காவது குடியசு  அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. 

 

1970 : ஐ.நாவில் பிஜி   இணைந்தது.

 

1972 : ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு அருகில் வெளியே  விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.

 

1972 : உருகுவே  விமானம் ஒன்று ஆர்ஜெண்டீனாவுக்கும் சிலிக்கும் இடையில் அந்தீஸ் மலைகளில் மோதியது. 1972டிசம்பர் 23 ஆம் திகதி 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.

 

827turkey_map1.jpg1976 : பொலீவியாவைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று பொலிவியாவின் சாண்டா குரூஸ் நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.

 

1990 : லெபனான் மீது சிரியப் படைகள் தாக்குதலை ஆரம்பித்தன.

 

2010 : சிலி சுரங்க விபத்தொன்றில் சிக்கிய, 33 தொழிலாளர்கள் 69 நாட்களின்பின் மீட்கப்பட்டனர்.

 

2013 : இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பாலமொன்றுக்கு அருகில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 115 பேர் உயிரிழந்தனர்.

 

2014 : 1990 ஆம் ஆண்டு முதல் யாழ் தேவி ரயில் சேவை வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,  இந்திய உதவியுடன் ரயில் பாதை நிர்மாணிக்க ப்பட்ட தையடுத்து 24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

 

metronews.lk

  • தொடங்கியவர்

  http://4.bp.blogspot.com/-DNZJi4aZXtc/TxYzp0ULO6I/AAAAAAAACwE/q8D-BJtFqo4/s1600/100%252C000+hits.png

இந்த திரிக்கு வந்து போனவர்கள், கருத்து சொன்னவர்கள், பச்சை புள்ளிகள் தந்து ஊக்கம் தந்தவர்கள் எல்லோருக்கும் நன்றி..:100_pray:

27 minutes ago, நவீனன் said:

http://4.bp.blogspot.com/-DNZJi4aZXtc/TxYzp0ULO6I/AAAAAAAACwE/q8D-BJtFqo4/s1600/100%252C000+hits.png

தப்பு நவீனன்:grin:

100 298

வாழ்த்துக்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

  http://4.bp.blogspot.com/-DNZJi4aZXtc/TxYzp0ULO6I/AAAAAAAACwE/q8D-BJtFqo4/s1600/100%252C000+hits.png

இந்த திரிக்கு வந்து போனவர்கள், கருத்து சொன்னவர்கள், பச்சை புள்ளிகள் தந்து ஊக்கம் தந்தவர்கள் எல்லோருக்கும் நன்றி..:100_pray:

வாழ்த்துக்கள் நவீனன் ....! அளவில்லாத அளப்பரிய செய்திகள் துணுக்குகள் போன்ற அனைத்தையும் சேகரித்து  சோர்வின்றி தந்தத்துக்கு ....! tw_blush:

  • தொடங்கியவர்

உலகத்திலுள்ள மிக பழமையான கார்களிலொன்று யாழ்ப்பாணத்தில்  (படங்கள், காணொளி இணைப்பு)

 

(ரி.விரூஷன்)

உலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வனிடமுள்ளது.

14556006_759159834235388_2033319192_n.jp

இக் கார் 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் இருந்திருந்தனர்.

 

 

14716311_759138484237523_415793242027781

அவ்வாறு ஓர் பண்ணையாளரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும் வேட்டைக்கு செல்லவும் இக் காரையே பயன்படுத்தியிருக்கிறார்.

 

 

குறித்த நபர் இத்தாலியில் இருந்து காரை இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்துவரும் கார் விற்பனை நிறுவனமொன்றின் ஊடாக  இலங்கை பெறுமதி 3300 ரூபாவிற்கு 1931ஆம் ஆண்டு  கொள்வனவு செய்துள்ளார். 

 

 

14699876_759151137569591_1258305232_n.jp

இதன் விலையை ஞாபகப்படுத்தும் வகையிலேயே இக் காரிற்கு இவர் 3300 என்ற இலக்கத் தகட்டையும் வைத்துள்ளார்.

 

 

14696809_759150880902950_1090042919_n.jp

இதன்பின்னர் அவர் இறந்துபோகவே யாழ்.குடாநாட்டில் பெயர்போன கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வன் (கப்பிரெக்ஸ் ரவி) என்பவருக்கு 1994 ஆம் ஆண்டு 2 அரை இலட்சத்திற்கு அக் கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

14658437_759151167569588_1746442915_n.jp

இதன்பின்னர் இக் காரை இன்றுவரை அவரே வைத்துள்ளார். தற்போது இக்காரை வைத்துள்ள குமாரசாமி ரவிச்செல்வன் கருத்து தெரிவிக்கும் போது,

 

 

14658172_759150884236283_1810200390_n.jp

இது நீண்ட பராம்பரியம் மிக்க கார். இதனை பண்ணையர் வைத்திருக்கும் போது எங்களுக்கு பத்து வயதிருக்கும். பண்ணையர் யாழ்ப்பாணத்தில் தினகரன் விழா நடக்கும் போது அங்கு இடம்பெறும் கார் போட்டியில் இக் காரே முதலிடம் பெறும். அப்போதிருந்தே எனக்கு இந்த காரில் பிரியம் ஏற்பட்டது.

 

 

14643064_759151140902924_106110074_n.jpg

அதன்பின்னர் பண்ணையர் இறந்துபோக இக் காரை நான் ஆசைப்பட்ட பிரகாரமே எனக்கு விற்றுவிட்டனர். அதன்பின்னர் இக் காரை என்னிடம் கொழும்பில் இருந்து கூட வந்து 45இலட்சம் வரை விலைக்கு கேட்டிருந்தனர். ஆனால் நான் விற்காமல் வைத்துள்ளேன்.

 

 

14642863_759151170902921_355797_n.jpg

இக் காரில் முன்னால் உள்ள விளக்கின் மேல் சிவப்பு கல்லொன்று உள்ளது. இது கார் ஒடும்போது விளக்கு ஒளிர்கின்றதா? இல்லையா? என்பது சாரதி ஆசனத்தில் இருந்தவாறே இதனூடாக பார்க்க முடியும்.

 

 

14696905_759160090902029_1394145833_n.jp

தற்போது இக் காருக்கு தேவையான பாகங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு இலண்டனில் இருந்து வாங்கி வந்து வைத்துள்ளேன் என்றார்.

 

 

14696788_759160104235361_220067911_n.jpg

அத்துடன் இலங்கையில் “A” எழுத்திலுள்ள ஒரேயொரு காரும் இதுவேயாகும். இக் காரை இறக்குமதி செய்த நிறுவனம் தற்போதும் கொழும்பில் அதே முகவரியில் உள்ளது அவர்கள் இறக்குமதி செய்த காரும் என்னிடமுள்ளது என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

14686576_759159857568719_593389621_n.jpg

தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள இக் கார் இலங்கையிலே “A ” எழுத்திலுள்ள ஒரேயொரு கார் என நம்பப்படுகின்றது. குறித்த காரை நல்லூர் ஆலய நிர்வாகத்தினர், இராணுவத் தளபதிகள் உட்பட பலர்  45 இலட்சம் ரூபா வரையில் கேட்டும் அதனை விற்காமல் அதன் உரிமையாளர் வைத்துள்ளார்.

14686086_759159847568720_1065603644_n.jp

14642723_759162944235077_1024186330_n.jp

14699979_759163220901716_911955710_n.jpg

14694628_759163217568383_1309172601_n.jp

14658374_759163234235048_1641880780_n.jp

.virakesari.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14721455_1153863824662310_28298513445025

 
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜோன் ஸ்னோவின் பிறந்தநாள்.
Happy Birthday John Snow
  • தொடங்கியவர்

இன்று உலக பார்வை தினம்! 

womens-eye%20New.jpg

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வியாழக்கிழமை உலக பார்வை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் 2014-ம் ஆண்டு கணிப்பின் படி உலகம் முழுவதும் பார்வை பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 285 மில்லியன் ஆகும். இவர்களில் 39 மில்லியன் பார்வையிழந்தவர்கள் என்றும், 246 மில்லியன்  பேர் குறைந்த பார்வை உடையவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இவற்றில் பெரும்பாலான பார்வையிழப்புகள், ஏறக்குறைய தவிர்க்கக் கூடியவையே என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. 

  • தொடங்கியவர்
Miss International 2016
 

மிஸ் இன்­டர்­நெ­ஷனல் 2016 (Miss International 2016) அழ­கு­ராணி போட்டி ஜப்­பானில் நடை­பெ­று­கி­றது.

 

19936_5.jpg

 

19936_1.jpg

 

19936_2.jpg

 

70 நாடு­களின் அழ­கு­ரா­ணிகள் இப்­ போட்­டியில் பங்­கு­பற்­று­கின்­றனர். இலங்­கையின் சார்பில் அயேஷா பெர்­னாண்டோ பங்­கு­பற்­று­கிறார்.

 

19936_3.jpg

 

19936_4.jpg

 

19936_299433-01-02.jpg

 

டோக்­கியோ நகரில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஊடக அறி­முக நிகழ்வில் தேசிய ஆடை அலங்­கா­ரங்­க­ளுடன் தோன்­றிய போட்­டி­யாளர்­களில் சிலரை படங்களில் காணலாம்.

 

19936_Big-photo.jpg

 
 

metronews.lk

  • தொடங்கியவர்

உலகத் தலைவர்களின் ஓராண்டு சம்பளத்தைக் கேட்டா.... ஷாக் ஆயிடுவீங்க!

World-leader-Salary.jpg
 
முதல்வன் படத்தில் "ஒரு நாள் இந்த சீட்டுல உட்காந்து பார், அப்போ தெரியும் முதல்வரா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு" என்று ரகுவரன் சொல்வார். முதல்வர் வேலை மட்டும் இல்லங்க, கொசு மருந்து அடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலும் இதே டயாலாக்கை ஒரு படத்தில் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் எல்லா வேலையும் கஷ்டமான வேலைதான். 

ஆனால் யாருக்கும் வேலை குறித்த கஷ்டம் பிரச்னை இல்லை. நாம் செய்கிற வேலைக்கு ஏற்ற, நம் திறமைக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதுதான் பிரச்னை. சரி ஒரு நாட்டின் மொத்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் ஒரு தலைவனுக்கு என்ன சம்பளம் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சக்கலாம் வாங்க.
 
நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர் - 28,800 டாலர் (ரூபாய் மதிப்பில் 19,25,000)
 
ஜி ஜின்பிங், குடியரசு சீனாவின் ஜனாதிபதி - 20,600 டாலர்
 
விளாதிமிர் புடின், ரஷ்ய அதிபர் - 1,37,650 டாலர்
 
தெரசா மே, பிரதமர், இங்கிலாந்து - 1,86,119 டாலர்
 
பிராங்கோயிஸ் ஹாலன்டே, பிரான்ஸ் அதிபர் - 1,98,700 டாலர்
 
ஜகோப் சுமா, தென் ஆப்ரிக்க அதிபர் - 2,06,600 டாலர்
 
ஹின்சோ அபே, ஜப்பான் அதிபர் - 2,41,250 டாலர்
 
ஏஞ்செலா மார்கெல், ஜெர்மனி பிரதமர் - 2,42,000 டாலர்
 
ஜஸ்டின் ட்ருடுயூ, கனடா பிரதமர் - 2,60,000 டாலர்
 
ஒபாமா, அமெரிக்க அதிபர் - 4,00,000 டாலர்
 
(ஆண்டு வருமானம், டாலரில்) ஒரு டாலர் (13.10.2016 நிலவரப்படி) ரூ. 66.9
 

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.