Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஆடிப்போயிடுவீங்க `ஆடி'!

 

 

69p1.jpg

`ஆடி' காருக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. சொந்தமாக்குகிறோமோ இல்லையோ... வாழ்க்கையில் ஒரு முறையாவது `ஆடி' கார்ல பயணிக்கணும்கிறது பலரோட கனவு. அந்த நிறுவனம் 1,60,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள `ஆர்-8' ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றைப் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான இந்தப் புதிய காரோட விளம்பரங்களுக்குப் பயன்படுத்த புகைப்படங்கள் எடுக்க மிகக்குறைந்த பணத்தை மட்டும் செலவழித்து அசத்தியிருக்கிறார் மெக்சிகோவைச் சேர்ந்த புகைப்பட நிபுணர் ஃபெலிக்ஸ் ஹெர்னான்டஸ் ரோட்ரிக்ஸ்.

நாம வாங்குற பத்து ரூபாய் கூல் டிரிங்க்ஸுக்காக பல கோடி ரூபாய் கொட்டி விளம்பரம் எடுக்கிறதும், புகைப்படங்களுக்காக மட்டும் பல லட்சங்கள் செலவழிக்கிறதும் சகஜமான ஒண்ணா இருக்கும்போது, இவர் சில ஆயிரங்கள்ல பட்ஜெட்டை முடிச்சுருக்கார். ஃபெலிக்ஸ் கொஞ்சம் வித்தியாசமானவர். இந்தக் காரை எப்போ அனுப்பட்டும்னு ஆடி கார் கம்பெனி கேட்டதுக்கு, கார் வேண்டாம். கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்கனு சொல்லிட்டார்.

69p2.jpg

காரே இல்லாம எப்படிய்யா போட்டோ எடுத்திருப்பார்னு யோசிச்சா... சில ஆயிரங்கள் மதிப்புள்ள மினியேச்சர் வெர்சனை வாங்கி, வீட்ல இருக்கிற பொருட்களை வெச்சே பல இடங்களுக்கும் போய் இவர் எடுத்த போட்டோசூட் இப்போ ரொம்பவே பிரபலமாகியிருக்கு. மினியேச்சர் பொருட்களை வெச்சு ஃபெலிக்ஸ் இதுக்கு முன்னாடி நிறைய புகைப்படங்கள் எடுத்து அனுபவம் மிக்கவர் என்றாலும், இது பெரிய நிறுவனம்கிறதால கொஞ்சம் கூடுதல் கவனத்தோட நிறைய இடங்களுக்குப் போய் புகைப்படங்கள் எடுக்க மெனக்கெட்டிருக்கிறார். கொஞ்சம் தொழில்நுட்பத் திறமையும், புதுசா ஏதாவது பண்ணணும்கிற தேடுதலும் இருந்தா எதுவும் சாத்தியம்னு ஃபெலிக்ஸ் நிரூபிச்சிருக்கார்.

இவையெல்லாம் மினியேச்சர் காரை வெச்சு எடுத்த போட்டோன்னு சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு தத்ரூபமா இருக்கு. அடுத்த சில வருடத்துக்கு இவர்கிட்டயே புகைப்படம் எடுக்கும் வேலைய ஒப்படைக்க அந்த நிறுவனம் யோசிச்சிக்கிட்டு இருக்குதாம். அடிச்சான் பாரு அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரை!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பென்குவின் ஆடை

வண்டர் ட்வின் என்ற இந்த பெண் பென்குவினுக்கு ஒரு பிரச்சனை உண்டு. இறகுகள் உதிரும் பிரச்சனை அது. ஒர்லாண்டோ ஸீ வர்ல்டின் ஆடைவடிவமைப்பாளர் இவருக்கு ஒரு ஆடையை வடிவமைத்துள்ளார்.
உடற் சூட்டைத் தக்கவைத்துக்கொள்ள கைகளாலேயே இந்த ஆடைதயாரிக்கப்பட்டுள்ளதாம்.

BBC

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஒக்டோபர் - 31

 

1517 : மார்ட்டின் லூதர், கிறிஸ்­தவ சீர்­தி­ருத்தம் தொடர்­பான தனது 95 கொள்­கை­களை ஜேர்­ம­னியின் விட்­டன்பேர்க் தேவா­லய வாசலில் வெளி­யிட்டார். 

 

1803 : கெப்டன் ட்றைட்பேர்க் தலை­மையில் ஆங்­கி­லேயப் படைகள் பண்­டா­ர­வன்­னி­யனின் படை­களைத் தாக்கின். 

 

838varalaru2.jpg1863 : நியூ­ஸி­லாந்தில் நிலை கொண்ட பிரித்­தா­னியப் படைகள் "வைக்­காட்டொ" என்ற இடத்தில் தாக்­கு­தலை நடத்­தி­யதைத் தொடர்ந்து மவோரி போர்கள் மீண்டும் ஆரம்­ப­மா­னது. 

 

1876 : இந்­தி­யாவின் கிழக்குக் கரையில் இடம்­பெற்ற மிகப்­பெரும் சூறா­வளி கார­ண­மாக 200,000 பேர் வரை இறந்­தனர். 

 

1913 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது நெடுஞ்­சா­லை­யான லிங்கன் நெடுஞ்­சாலை திறக்­கப்­பட்­டது. 

 

1924 : உலக சேமிப்பு நாள் இத்­தா­லியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்­கி­களின் உலக அமைப்­பினால் அறி­விக்­கப்­பட்­டது. 

 

1931 : தமிழின் முதல் பேசும் பட­மான “காளிதாஸ்” வெளி­யா­னது. 

 

1941 : இரண்டாம் உலகப் போரில்  ஐஸ்­லாந்­துக்கு அருகில் அமெ­ரிக்கக் கப்பல் ஒன்றை ஜேர்­ம­னியின் படகு தாக்கி மூழ்­க­டித்­ததில் 100 அமெ­ரிக்கக் கடற்­ப­டை­யினர் கொல்­லப்­பட்­டனர். 

 

1941 : இங்­கி­லாந்தில் தொழிற்­சாலை ஒன்று தீப்­பற்­றி­யதில் 49 பேர் கொல்­லப்­பட்­டனர். 

 

1954 : அல்­ஜீ­ரி­யாவில் பிரெஞ்சு ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக அல்­ஜீ­ரிய தேசிய விடு­தலை முன்­னணி போராட்­டத்தை ஆரம்­பித்­தது. 

 

1956 : ஐக்­கிய இராச்­சியம் மற்றும் பிரான்ஸ் சூயஸ் கால்வா யைத் திறக்க வற்­பு­றுத்தி எகிப்தின் மீது குண்­டு­களை வீசின. 

 

838Metrojet-Flight-9268.jpg1961 : ஸ்டாலினின் உடல் மொஸ்­கோவில் உள்ள லெனினின் நினை­வ­கத்தில் இருந்து அகற்­றப்­பட்­டது. 

 

1963 : இண்­டி­யா­னாவில் பனிக்­கட்டி சறுக்கல் களி­யாட்ட விழா ஒன்றின் போது இடம்­பெற்ற வெடி விபத்தில் 74 பேர் கொல்­லப்­பட்டு 400 பேர் காய­ம­டைந்­தனர். 

 

1968 : வியட்நாம் போர்: பாரிஸ் சமா­தானப் பேச்­சுக்­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து வட வியட்நாம் மீதான அனைத்துத் தாக்­கு­தல்­க­ளையும் நவம்பர் 1 இலி­ருந்து நிறுத்­து­வ­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி லின்டன் ஜோன்சன் அறி­வித்தார். 

 

1973 : அயர்­லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து வெளி­யே­றிய மூன்று ஐரியக் குடி­ய­ரசு இரா­ணு­வத்­தினர் அங்கு தரை­யி­றங்­கிய கடத்­தப்­பட்ட ஹொலி­கொப்டர் ஒன்றில் தப்­பிச் ­சென்­றனர்.

 

1984 : இந்­தியப் பிர­தமர் இந்­திரா காந்தி இரண்டு சீக்­கியப் பாது­கா­வ­லர்­களால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். அதன் பின்னர் டில்­லியில் இடம்­பெற்ற கல­வ­ரத்தில் சுமார் ஆயி­ரக்­ க­ணக்­கான சீக்­கி­யர்கள் கொல்­லப்­பட்­டனர். 

 

1994 : அமெ­ரிக்க விமானம் ஒன்று கடும் பனி கார­ண­மாக இண்­டி­யானா மாநி­லத்தில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 68 பேர் கொல்­லப்­பட்­டனர். 

 

1996 : பிரே­ஸிலில் விமா­ன­மொன்று வீழ்ந்து நொருங்­கி­யதில் அதில் பயணஞ் செய்த  98 பேரும் தரை­யி­லி­ருந்த 2 பேரும் கொல்­லப்­பட்­டனர். 

 

1999 : எகிப்­திய விமா­ன­மொன்று அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் வீழ்ந்­ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் கொல்­லப்­பட்­டனர். 

 

2000 : சிங்­கப்பூர் போயிங் 747 ரக விமானம் தாய்­வானில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 83 பேர் கொல்­லப்­பட்­டனர். 

 

2000 : சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் தங்­கும் முதல் தொகுதி விண்­வெளி வீரர்­க­ளுடன் ரஷ்­யாவின் சோயுஸ் விண்­கலம் விண்­வெ­ளிக்கு ஏவப்­பட்­டது.

 

2000 : வடக்கு அங்­கோ­லாவில் தனியார் அண்­டோனொவ் விமானம் வெடித்துச் சித­றி­யதில் 50 பேர் கொல்­லப்­பட்­டனர். 

 

2003 : 22 ஆண்­டுகள் ஆட்­சியின் பின்னர் மலேஷியப் பிரதமர் மஹதிர் பின் மொஹட் தமது பதவியைத் துறந்தார்.

 

2011 : உலக சனத்தொகை 700 கோடி எண்ணிக்கையை அடைந்தது.

 

2015 : ரஷ்யாவின் மெட்ரோஜெட் 9268 விமானம், எகிப்தின் சினாய் பிராந்தியத்தில் வெடித்துச் சிதறிய தால் விமானத்திலிருந்த 224 பேரும் கொல்லப்பட்டனர்.

metronews.lk

  • தொடங்கியவர்

சிக்கன தினம் எதற்காக?

worldsavingsday_10112.jpg

சிக்கன தினத்திற்கான யோசனை வர முக்கிய காரணம், பொருளாதார வகையில் ஒரு நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணம்தான். 1921ல் முதன்முறையாக ஸ்பெய்ன் நாட்டினர் இத்தினத்தை கொண்டாடினர். அதன்பின்னர் சிக்கனத்தை மக்களுக்கு உணர்த்துவது எந்த அளவிற்கு நாட்டிற்கும், உலகமயமாதலிற்கும் முக்கியம் என்பதை அறிந்து ஜெர்மணி, ஆஸ்திரேலியா என இன்னபிற நாட்டினரும் தங்கள் மக்களுக்கு இத்தினத்தினை அறிமுகப்படுத்தினர். உலக சிக்கன தினம் அக்டோபர் 31ம் தேதி என்றபோதிலும், இந்தியாவை பொறுத்த வரையில் இத்தினம் அக்டோபர் 30ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. சில நாடுகளை தவிர்த்து மீதியுள்ள நாடுகளில் எல்லாம் இத்தினம் பொது விடுமுறையாகும். அன்றைய தினம், வங்கிகள் மட்டும் செயல்படும். மக்கள் அத்தினத்தின் முக்கியதுவத்தை அறிந்து சேமிப்பு குறித்த சிக்கன முறைகளில் தெளிவடைய வேண்டும், தெளிவடைவார்கள் என்பதற்காக தான் அவர்களுக்கு இந்த பொது விடுமுறை.

எதற்காக சிக்கன தினம் தெரியுமா?

கடந்த 1924ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு நடைபெற்றது. உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டிற்கு பிறகு, மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டுமென, உலக சிக்கன தினம் என ஒரு தினம் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது. நேற்றுதான் தீபாவளி முடிந்துள்ளது, இப்போதுதான் தீபாவளி செலவெல்லாம் முடிந்திருக்கிறது என்கிறீர்களா? சேமிப்பு, சிக்கனம் போன்றவைப்பற்றி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பதே இத்தினம் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய நோக்கமாகும்.

பணத்தட்டுப்பாட்டிற்கு மட்டுமல்ல சிக்கனத்தேவை!

ஊரில் பெரியவர்கள் ‘சிறுக கட்டி பெருக வாழ்’ என ஒரு பழமொழி கூறுவார்கள்…. சேமிப்பு பழக்கத்தை குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கும் நோக்கில் அன்றே நம் முன்னோர் கூறி வைத்த பழமொழி இது. சேமிப்பின் அவசியத்தையும் முக்கியதுவத்தையும் உணர்வது வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியமான ஒன்று. தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பும் சிக்கனமும் எந்த அளவு முக்கியமோ அதே அளவிற்கு நாட்டின் முன்னேற்றத்திற்கு அது முக்கியம். நவீன பொருளாதாரமுறை நம்மிடையே சிக்கனத்திற்கான எண்ணத்தையும், சேமிப்பிற்கான அறிவையும் தூண்டுகிறது. சிக்கனம் என்பதை பணசேமிப்பு என்பதையும் தாண்டி, பல வகையான சிக்கன தேவைகள் இருப்பதை காணலாம். உதாரணமாக தண்ணீரில் சிக்கனம், எரிபொருள் சிக்கனம், உணவுவகைகளில் சிக்கனம், மின்சாரத்தில் சிக்கனம் என பலதுறைகளும் சிக்கனம் என்ற வார்த்தைக்கும் அடங்கி விடுகிறது.

எது சிக்கனம் தெரியுமா?

சிக்கனமாய் இருத்தல் என்பதற்கு உணவு உண்ணாமல், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளாமல் இருப்பது என பொருள் அல்ல. ஒருமுறை காமராஜர், “தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் திருடன்” என்று குறிப்பிட்டார். சிக்கன வாழ்விற்கான சிறந்த எடுத்துக்காட்டு அவரது வாழ்வு. அவசிய, அத்தியாவசியத் தேவைகளை தாண்டி மீதியை சேமித்து வைத்தல்தான் சிக்கனம். நமது சிக்கனம் பிறரின் பசியை போக்கும் வல்லமை கொண்டது…. இன்றைய நிலையில் பழமொழிகளை தாண்டி பாடவடிவில் அரசாங்கமே சிக்கனம் குறித்த வகுப்புகளையும், அறிவுறைகளையும் பாடத்திட்டதிலேயே கற்றுத்தருகின்றது.

வீட்டையும் நாட்டையும் காக்கும் சிக்கனம்:

சேமிப்பு, சிக்கனம் என்னும் பகுத்தறிவுகளெல்லாம் தனிப்பட்ட முறையில் நம் வாழ்க்கையோடு நிறுத்திவிடாமல், உலகில் தட்டுப்பாடுகளோடு இருப்பவர்களின் நிலைப்பாடுகளை அறிந்து தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முதன்மைப்படுத்தப் படவேண்டியது அவசியம்…. வாழ்வில் எப்பொழுதுமே சிக்கனத்தை முதன்மையானதாக வைத்திருக்க வேண்டும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் நீர், நிலம், உணவு, எரிபொருள், மின்சாரம் என சிறு சிறு விஷயங்களில் நமது சிக்கனத்தை காண்பிப்போமே!. நம் சிக்கனம், உலகத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்…. ஆம், “சிக்கனம் வீட்டையும், சேமிப்பு நாட்டையும் காக்கும்”

vikatan

  • தொடங்கியவர்
இலவச தொலைபேசியை பெறுவதற்காக தனது பெயரை 'ஐபோன் 7' என மாற்றிய இளைஞன்
 

203074th-news.jpgயுக்­ரைனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்,  ஐபோன் ரக தொலை­பே­சி­யொன்றை இல­வ­ச­மாக பெறு­வ­தற்­காக தனது பெயரை ஐபோன் 7 என உத்­தி­யோ­கபூர்வமாக மாற்­றிக்­கொண்­டுள்ளார்.

 

யுக்­ரை­னி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலை­ய­மொன்று, தமது பெயரை ஐபோன் சிம் (ஐபோன் செவன்) என மாற்­றிக்­கொள்ளும்  முதல் 5 பேருக்கு இல­வ­ச­மாக ஐபோன் 7 ரக தொலை­பே­சி­களை வழங்­கு­வதாக அறி­வித்­தது. 

 

அதை­ய­டுத்து, 20 வய­தான ஒலெக்­ஸாண்டர் டூரின் எனும் இளைஞர் தனது பெயரை “ஐபோன் சிம்” என மாற்­றிக்­கொண்டார். (சிம் என்­ப­தற்கு யுக்­ரை­னிய மொழியில் 7 என அர்த்தம்). கடந்த வெள்­ளிக்­கி­ழமை அவர் தனது பரிசை பெற்­றுக்­கொண்டார். 

 

இத்­தீர்­மா­னத்­தினால் அவரின் குடும்­பத்­தினர் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.  

 

இதை தன்னால் நம்ப முடி­ய­வில்லை இந்த இளை­ஞனின் சகோ­தரி டெட்­யானா தெரி­வித்­துள்ளார்.

 

எனினும், தனக்குப் பிள்­ளைகள் பிறக்­கும்­போது மீண்டும் பழைய பெயருக்குத் தான் மாறக்கூடும் என ஐபோன் சிம் கூறுகிறார்.

metronews.lk

  • தொடங்கியவர்

14925281_1171179199597439_63907128093378

சுதந்திர வன்னி நாட்டு இறுதி அரசனும் வெள்ளையருக்கு எதிராக போரிட்ட சுதந்திர வீரனுமான பண்டார வன்னியன் நினைவு தினம்.

  • தொடங்கியவர்

ஹென்றி டூனன்ட் நினைவு தினம் - சிறப்பு பகிர்வு

அக்டோபர் 30, செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் நினைவு தினம் இன்று

ஹென்றி டூனன்ட் என்கிற ஒப்பற்ற மனிதர் மறைந்த தினம் இன்று. சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப்பெரிய செல்வவளம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் இவர் ;இளம் வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் கொண்டு இருந்தவர்;வடக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரிய ஒரு முதலீட்டு திட்டத்தோடு அங்கே நீர்வள பயன்பாட்டு உரிமையை பெறுவதற்காக கிளம்பினார்.  அங்கே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த பிரான்ஸ் தேசத்து மன்னரை சந்திக்க போனார். அங்கே  போரில் எப்படியெல்லாம் வீரர்களும் மக்களும் துன்பப்படுகிறார்கள் என பார்த்து மனம் நொந்து போனார்.

hendry.jpg

போரில் துன்பப்படும் ,காயப்படும் ஜீவன்களை காப்பாற்ற ஒரு நடுநிலையான அமைப்பை உண்டாக்கி காயப்பட்டவர்களின் உயிர் காக்க,உதவி செய்ய உருவாக்க வேண்டும் என அவர் எடுத்த முன்னெடுப்பு தான் செஞ்சிலுவை சங்கம்;தன் ஒட்டுமொத்த வருமானத்தையும் போட்டு அதை நடத்தினார்; பல்வேறு நாடுகளை அதில் இணைத்தார் .நடுவே பிசினஸ் படுத்து தொலைத்தது;எல்லாம் போனது-பிச்சைக்காரன் போல வாழ்வு வாழ்ந்தார்-எங்கே இவர் என்றே யாருக்கும் தெரியாது.மனிதர்
இறந்தே போனார் என பலரும் நினைத்தார்கள்.

அவர் வரிகளிலேயே பாருங்கள்," நான் ஓரிரு ரொட்டித்துண்டுகளில் வாழ்கிறேன். என்னுடைய சாயம் போன கோட்டை செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவி கேட்க போகும் பொழுது மையால் கருப்பாக்கி கொள்கிறேன்; எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாக [படுத்து இரவில் தூங்கிக்கொள்கிறேன்.

முதல் நோபல் பரிசு அறிவிக்கபட்ட பொழுது அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.அதையும் முழுக்க செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட கொடுத்துவிட்டார்  ஒரே ஒரு அறையில் அனாதையாக வாழ்ந்தார் ; தனியாளாக தன் அறையில் இறந்து போனார். எனினும் இன்றைக்கும் பலபேரின் உயிர்களை காப்பாற்றி அவரின் கனவை நிலைபெற செய்து இருக்கிறது செஞ்சிலுவை சங்கம்;

அதுதானே வெற்றி

 

ஹென்றி டூனன்ட் நினைவு தினம் இன்று.. (அக்டோபர் 30,1910)

vikatan

  • தொடங்கியவர்

வெள்ளை மாளிகையில் தீபாவளி : ஒபாமா பெருமிதம்

obama_13284.png

அமெரிக்க அதிபர்  ஒபாமா, வெள்ளை மாளிகையில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் விளக்கேற்றி தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார்.

அமெரிக்காவில் உயர் பதவிகள் வகிக்கும் இந்திய வம்சாவளி அதிகாரிகள் முன்னிலையில் விளக்கேற்றிய ஒபாமா, “ உலகம் முழுவதும் உள்ள ஹிந்து மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

பின்னர், 2009-ம் ஆண்டில் இருந்து வெள்ளை மாளிகையில் தீபாவளியைக் கொண்டாடி வருவதாகவும், அமெரிக்காவில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்திய முதல் அதிபர் என்பதில் பெருமைக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p131b.jpg

facebook.com/tvignesh49:
அன்பே...
நீ ஒரு கிரீஸ் டப்பா
உன்னை எட்டி உதைக்க நினைக்கிறேன்
நீ சொப்பன சுந்தரியின் கார்
உன்னை எடைக்குப் போட்டு
பேரீச்சம்பழம் வாங்கத் துடிக்கிறேன்
நீ பளிச்சென்று எரியும் பெட்ரோமாக்ஸ் லைட்
உன்னை போகிறப்போக்கில்
பொசுக்கென்று உடைக்கிறேன்
நீ சவரப்பெட்டிக்குள்
ஒளிந்திருக்கும் லாட்டரிச் சீட்டு
சற்றும் யோசிக்காமல் உன்னை ஆற்றில்
தூக்கி வீசுகிறேன்
மொத்தத்தில்
நீ ஒரு வாழைப்பழம்
நான் அந்த இன்னொரு வாழைப்பழம்.

facebook.com/raghavan.pa: நடுரோடில் பூசணிக்காய் உடைப்போரைக் காணும்போது எல்லாம், `காசு கொடுத்து இன்னொன்று வாங்கி, அவர் தலையில் உடைக்கலாம்' எனத் தோன்றுகிறது.

facebook.com/sowmya.ragavan:  எதிர்க்கத் திராணி இருந்தும் அமைதியா இருக்கிறதுக்கு பேர்தான் பொறுமை. மத்தது எல்லாம் கையாலாகாத்தனம்தான்.

facebook.com/aruna.raj.35: பொங்கல்ல போட்ட முந்திரி, நம்ம தட்டுக்கு வரவே வராது. ஆனா, பிரியாணில் போட்ட ஒரே ஒரு ஏலக்காய் எப்பவுமே நம்ம வாய்க்குள்ளதான் மாட்டும்.

facebook.com/ Raajaa Chandrasekar: உங்கள் எளிமையின் மேல் ஜரிகை சுற்றப் பார்க்கிறார்கள். கவனமாக இருங்கள்.

p131.jpg

twitter.com/k_for_krish:  எதையாச்சும் சொல்லிட்டு கீழே `கலாம்'னு போட்டுட்டா நம்பிடறாய்ங்க.. :))

twitter.com/umakrishh: வேலைசெய்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணி வேலையை விடச் சொல்றதுக்கு, வேலைசெய்யாத பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணலாமே ஃப்ரெண்ட்ஸ்!

twitter.com/meenammakayal : `அழுதுட்டு சொல்லு... இல்லை சொல்லிட்டு அழு' - இரக்கமற்ற வார்த்தைகள்.

twitter.com/samyesudoss: ஒவ்வொரு துளி நீரையும் மதியுங்கள். அது தண்ணீராக இருந்தாலும் சரி... கண்ணீராக இருந்தாலும் சரி!

twitter.com/chevazhagan1:  அவரவர் கடவுளுக்கு கோயில் கட்டிய காலம் போய், அவரவர் கடவுளுக்கு சேனல் ஆரம்பித்துவிட்டார்கள்.

twitter.com/kanavukadhalan: நம்ம ஊர்ல LKG பையன்கிட்ட `நீ என்ன ஆகப்போற?'னு நூறு தடவைக் கேக்குறாங்க.  ஆனா, +2 முடிச்சவனை ஒரு தடவைக்கூட கேக்காம இன்ஜினீயரிங் சேர்த்துவிடுறாங்க.

twitter.com/ thoatta:  ஒவ்வொரு தடவை பேட்டிங் பண்றப்பவும் உலக அழகியோடு டேட்டிங் போற மாதிரி சந்தோஷமா ஆடுறான். நோ டவுட், இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோஹ்லிதான்.

twitter.com/Kannan_Twitz: டேய்... நீ மிஸ்டு கால் தருவதுகூட பரவாயில்லைடா. ஆனா, திரும்ப போன் பண்ணா `என்ன மச்சா... போன் பண்ணேன் எடுக்கவே இல்லை'ங்கிற பாரு, அதான்டா தாங்கிக்க முடியலை.

twitter.com/CreativeTwitz: என்னென்னவோ கனவு கண்டுட்டு இருந்தா, விதி விஜய் டி.வி-யில் வர்ற மா.கா.பா மாதிரி `உங்களுக்கு வேற வழியே இல்லை. C-யைத்தான் லாக் பண்ணி ஆகணும்'னு சொல்லிட்டுப் போயிடுது!

twitter.com/ teakkadai: `மற்ற பெண்களைப்போலத்தான் நீயும்' எனச் சொல்வதை மிகப்பெரிய அவமானமாக எடுத்துக்கொள்கிறார்கள் எல்லா பெண்களும்.

p131a.jpg

twitter.com/Kozhiyaar: தன்னைப் பற்றியும் கவலைப்படாமல், பிறரைப் பற்றியும் கவலைப்படாமல் ஓர் அபாயகரமான தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது!

twitter.com/ Modern_tamizhli: ``போன வாரம் ஒரு வத்தக்குழம்பு வெச்சியே... அதே மாதிரி இன்னைக்கும் செய்யேன்!''

``அதே மாதிரி என்னங்க, அந்தக் குழம்பே இருக்கு!''

#ஃபிரிட்ஜ்

twitter.com/pooponga: எது உண்மைனும் சொல்ல மாட்டேங்கிறாங்க... எது வதந்தினும் சொல்ல மாட்டேங்கிறாங்க. இதுல கைது வேற. உலகம் என்னமோ உருண்டைதான்!

twitter.com/Kannan_Twitz:  புதுச் சட்டையை எடுத்துக்கிட்டு ட்ரையல் ரூமுக்குப் போனதும் சட்டையைப் போட்டுப் பார்க்காம நம்ம ஆளுங்க பாடிபில்டிங் போஸ் எல்லாம் அங்ஙனதான் கொடுப்பானுவே!

vikatan

  • தொடங்கியவர்

'ஹாரி பாட்டர்' பாணியில் ஒரு பள்ளி

சில ஹாரி பாட்டர் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து, பிரான்ஸ் நாட்டில், ஹாரி பாட்டர் படத்தில் வருவது போலவே ஒரு பள்ளியை ஆரம்பித்து, அந்த படத்தில் வருவது போலவே பாடத்திட்டமும் அமைக்க உள்ளனர். 


2017 மே 25 முதல் 28 வரை மட்டும் இந்த பள்ளி செயல்படும், 16 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும்தான் இந்த பள்ளியில் பயில முடியுமாம். 

 

potter%202%20600_17297.jpg

ஹாரி பாட்டர், ஒரிஜினல் சீரீஸ் முடிந்த நிலையில், இதைப் போல் செய்திகள் பாட்டர் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கலாம். ஆனால், பிரான்சு நாட்டில் நடக்க இருக்கும் இந்த முதல் பாட்டர் மாதிரி பள்ளி, முழுக்க முழுக்க பிரென்ச் மொழியிலே தான் இருக்குமாம். 100 பேர் மட்டும் தான் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

தந்தையை இழந்த சிறுமிக்கு தாயாக மாறிய போலீஸார்! (வீடியோ இணைப்பு)

636129121735402694-14633521-112937833044

''நாம் அவரைப் பார்க்க முடியாது என்பதற்காக அவரால் நம்மைப் பார்க்க முடியாது என்று அர்த்தம் அல்ல. அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார்''  இது பணியில் இருந்தபோது இறந்த போலீஸ் அதிகாரிக்கு நடந்த கவுரவ ‛வழியனுப்பு’  விழாவில், அவரது எட்டு வயது மகள் பேசியது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ் நகரத்தில், 35 ஆண்டுகளாக போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் ஜோஸ் கில் வேகா. டிசம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவதாக இருந்த அவரை, நிரந்தரமாக ஓய்வு பெற வைத்து விட்டது ஒரு உள்ளூர் கலவரம். 

கடந்த அக்டோபர்  8 ம் தேதி அந்த பகுதியில் கலவரம் வெடித்ததை அடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஜோஸ் கில் வேகா சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன், நான்கு மாதங்களுக்கு முன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, பேறுகால விடுப்பு முடிவதற்குள் பணிக்குத் திரும்பிய, பெண் போலீஸ் அதிகாரியான லெஸ்லி ஜெர்பினியும் சுட்டு வீழ்த்தப்பட்டார். அதுவும் அவர் கணவர் கண் முன். 

‛‛குண்டடி பட்டு கண்கள் திறந்த நிலையில், போலீஸ் சீருடையில் தரையில் லெஸ்லி வீழ்ந்து கிடக்க, அந்த கோலத்திலும் அவரது கணவர் கடைசியாக  லெஸ்லியின் நெற்றியில் முத்தமிட்டதைப் பார்க்கும்போது மனசு என்னவோ போல் இருந்தது’’ என சக அதிகாரி ரீயெஸ் சொல்லும்போது, அதுவரை அவர் கண்ணில் திரைகட்டி நின்ற நீர் உருண்டு விழுந்தது. இதற்குத்தான் இந்தப் பெண் அவசர அவசரமாக பணிக்குத் திரும்பினாரா என தலையில் அடித்து, கண்ணீர் வடித்தது கலிஃபோர்னியா மாகாணம்.

இதற்கு முன் 1962ல், பணியில் இருந்தபோது போலீஸ் அதிகாரிகள் மரணமடைந்துள்ளனர். அதன்பின் கிட்டத்த அரை நூற்றாண்டுக்குப் பின் ‛ஆன் டூட்டி’யில் இரு போலீஸ் அதிகாரிகள் இறப்பது இதுவே முதல் முறை. இந்த சம்பவம் பாம் ஸ்பிரிங்ஸ் நகரையே உலுக்கி உள்ளது. இரங்கல் கூட்டங்கள், அஞ்சலி என ஒரு வாரம் நகரமே அழுது தீர்த்தது. துக்கம் விசாரித்தவர்கள் அனைவரும் ‛நாங்கள் இருக்கிறோம்’ என தேற்றினர்.

அதோடு, துக்கம் விசாரிப்பது என்பது இறந்தவருக்கு மரியாதை செய்வதோடு முடிந்து விடுவதல்ல, உயிரோடு இருப்பவருக்கு ஆறுதல் சொல்வது வரை நீடிக்கிறது என உணர்த்தியுள்ளனர் பாம் ஸ்பிரிங்ஸ் போலீஸ் அதிகாரிகள். கலவரத்தில் இறந்த ஜோஸ் கில் வேகாவுக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் வனெஸா. 

636129121733998676-14753438-112937851377


இரண்டு வார துக்கத்துக்குப் பின் வனெஸா மீண்டும் பள்ளிக்குத் திரும்பியபோது, அப்பா இல்லாத குறையை நிவர்த்தி செய்திருந்தனர் பாம் ஸ்பிரிங்ஸ் போலீஸார். இரண்டு நாட்களுக்கு முன் காலையில், வனெஸா பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வெளியே 15 போலீஸார் அவள் வருகைக்காக காத்திருந்தனர். வனெஸா வீட்டை விட்டு வெளியே வந்ததும் ‛குட்மார்னிங் வனெஸா, எப்படி இருக்கிறாய்’ என ஒரு போலீஸ் அதிகாரி அவளைக் கட்டி அணைத்து வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து வரிசையாக நின்றிருந்த போலீஸாரும் வனெஸாவை வரவேற்றனர். ‛நாங்கள் எல்லோரும் சேர்ந்து உன்னை பள்ளிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம்’ என அந்த அதிகாரி சொன்னதும், அந்த சிறுமியின் முகத்தில் புன்னகை. ஒவ்வொரு அதிகாரியும் அவளைக் கட்டி அணைத்ததோடு, பள்ளி வரை அவளுடன் கூடவே நடந்து சென்றனர். வகுப்பறைக்குச் செல்லும் முன்பும்  ஒவ்வொருவரும் ‛ஹக்’ செய்தனர். இதை சற்றும் எதிர்பார்த்திராத அவள், நிம்மதியுடன் விடைபெற்றாள். 

‛இது அவளுக்கு நெருக்கடியான நேரம். இந்த நேரத்தில் அவளை எங்களால் தனித்து விட முடியாது. இப்போது அவளுக்கு ஒரு புதிய குடும்பம் உள்ளது. எங்களால் முடிந்தவரை அந்த சிறுமியின் வாழ்வில் ஒரு புன்னகையை, மகிழ்ச்சியை கொண்டு வர முயற்சிப்போம்’’ என்றார் பாம் ஸ்பிரிங்ஸ் உயர் அதிகாரி வில்லியம் ஹட்சின்சன். சபாஷ் போட வைக்கிற அதிகாரிகள் அங்கேயும் உண்டுதானே!

பிடித்தவர்கள் இல்லையென்றாலும் நம் வாழ்க்கையை நாம் வாழ்ந்தே ஆக வேண்டும் என்பது எட்டு வயதிலேயே வனெஸாவுக்கு புரிந்திருக்கிறது. புரிய வைத்திருக்கின்றனர் அவர் தந்தையுடன் பணியாற்றியவர்கள். 

 

‛‛பேஸ்பால், கராத்தே, ஓட்டம் என எல்லாவற்றையும் என் தந்தையிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். என் தந்தையுடன் ஓடும்போதுதான் வேகமாக ஓட கற்றுக் கொண்டேன். நான் வேகமாக ஓட வேண்டும் என்பதற்காக அவர் மெதுவாக ஓடுவார். என் தந்தை நல்ல போலீஸ் அதிகாரியாக, நல்ல கணவனாக, நல்ல தந்தையாக இருந்தார். அவர் தன் வாழ்க்கையை அனுபவித்தார். தனக்குக் கிடைத்தவற்றில் திருப்தி அடைந்திருந்தார்.  நாம் அவரைப் பார்க்க முடியாது என்பதற்காக அவரால் நம்மைப் பார்க்க முடியாது என்று அர்த்தம் அல்ல. அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார்’’ என்றார் வனெஸா. 

vikatan

  • தொடங்கியவர்

 

விலங்குகளின் பூசணி விளையாட்டு
----------------------------------------------------------------

அமெரிக்காவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஹாலோவின் பண்டிகையையொட்டி ஓரேகான் மிருக காட்சி சாலையில் இருக்கும் விலங்குகளுக்கு பூசணியில் வைத்து உணவளிக்கப்பட்டது. அதை உண்பதற்கும் பெரிய பூசணிக்காய்களை உருட்டி விளையாடுவதற்கும் விலங்குகள் போட்டி போட்டு ஆர்வம் காட்டின.

BBC

  • தொடங்கியவர்

14907652_1171177609597598_78854563489078

முன்னாள் இந்தியப் பிரதமர் (இன்று வரை இந்தியாவின் ஒரே பெண் பிரதமர்) இந்திரா காந்தி அவர்களது நினைவுதினம்.

இவர் தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

 

‘அரசியலை நான் தொழிலாகப் பார்ப்பதில்லை!’ - இந்திரா காந்தி நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

india_13006.jpg

‘‘னக்கு நல்லது செய்தவர்களைவிட, தீங்கு செய்தவர்கள்தான் அதிகம். ஆனால், என்னிடம் அவர்கள் திரும்ப வரும்போது யாரிடமும் எதுவும் சொல்லிக்காட்டாமல் அவர்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அவர்கள் மேல் கசப்புணர்வு தோன்றாமல் இருப்பதும்’’ என்றவர் அன்னை இந்திரா காந்தி. அவருடைய நினைவு தினம் இன்று.

இந்திராவின் சிறுவயது நாட்கள்!

கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் அலகாபாத் நகரம்; அங்கு, ‘ஆனந்த பவனம்’ என்னும் அழகு மாளிகை. அரண்மனைக்கு ஒப்பான அந்த மாளிகையில் ஒரு இளவரசரை விடவும் மேன்மையாக வளர்க்கப்பட்டவர் ஜவஹர்லால் நேரு. இவருக்கும் காஷ்மீர் ரோஜாவுக்கு ஒப்பான கமலாவுக்கும் மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்ஷினி.

தங்கத் தொட்டில்; வெள்ளித் தட்டு; அலங்கார நடைவண்டி; 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்... இவையனைத்தும் அரண்மனை போன்ற அந்த மாளிகையில் நிரம்பி இருந்தன. இருந்தும் என்ன பயன்? சிறுமி இந்திராவின் உறவுகள் எல்லாம் சிறைச்சாலைகளிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் அல்லவா குழுமியிருந்தன. சிறைவாசம் முடிந்து வரும் தாத்தா மோதிலால் நேருவின் மடியில் சில காலம் விளையாடுவார் சிறுமி இந்திரா. பிறகு, மீண்டும் கைதாகிச் சிறைக்குச் சென்றுவிடுவார் தாத்தா. அப்பா ஒரு சிறையில்; அன்னையும், பாட்டியும் அந்நிய நாட்டுத் துணிகளைச் சேகரித்துத் தீயிட்டுக் கொளுத்தும் கண்டன ஊர்வலத்தில். இப்படித்தான் நகர்ந்தன சிறுமி இந்திராவின் சிறுவயது நாட்கள்.

‘தலைமைக்கான தகுதி அதிகம் பெற்றவர்!’’

உறவினர்களின் சுதந்திர தாகம் சிறுமி இந்திராவுக்கும் இயல்பாகவே ஒட்டிக்கொண்டது. ஆனந்த பவனத்துக்கு உள்ளேயே மூவர்ணக் கொடி ஏந்திய தியாகி போன்ற பொம்மைகளையும், ஆங்கிலேயே வீரர் போன்ற பொம்மைகளையும் நிற்க வைத்துப் போராடுவதாகக் கோஷம் எழுப்புவார். பின்னர், தியாகிகள் வெற்றி பெற்றதாக, அந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே வலம் வருவார். விளையாடும் வயதில்கூட இப்படிப்பட்ட வரலாற்று விளையாட்டுகளை விளையாடியவர் சிறுமி இந்திரா. தன்னைப்போன்ற சிறுவயதினருடன் இணைந்து இந்திரா, ஓர் அணியை உருவாக்கினார். அதற்கு கமலா நேரு, ‘வானர சேனை’ என்று பெயரிட்டார். இதைக் காதில் கேட்ட நேருவோ, ‘‘தன் மகள் பிறவியிலேயே தலைமைக்கான தகுதிகள் மிகப் பெற்றவள்’’ என்று பூரித்துப்போனார்.

‘‘நினைவு தெரிந்த நாளிலிருந்து ஏகப்பட்ட பள்ளிகளில் படித்ததால், அவற்றின் பெயர்களை என்னால் நினைவில்கூட வைத்துக்கொள்ள முடிந்ததில்லை’’ என்று இந்திரா ஒருமுறை சொன்னார். வீட்டில் நிலவிய சுதந்திரப் போராட்டச் சூழல், தாயின் உடல்நிலை இவற்றால் இந்திரா, பல ஊர்களில், பல பள்ளிகளில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சாந்தி நிகேதனில் இந்திரா படித்தபோது, அவருடன் படித்த சக மாணவி ஒருவர் தனது தங்க நகையைக் காணவில்லை என்று விடுதிக் காப்பாளரிடம் புகார் சொன்னார். அவர், இந்திராவின் பெட்டியைத் தவிர, மற்ற மாணவிகளின் பெட்டிகளைச் சோதனையிட விரும்பினார். ஆனால், இந்திராவோ தன்னுடைய பெட்டியை முதலாவதாகத் திறந்து காட்டிச் சோதனைக்கு உட்படுத்தினார். இறுதியில், அந்த மாணவியின் நகைகள் குளியல் அறையில் இருப்பது தெரியவந்தது. இந்தச் செயல், இந்திராவின் நேர்மையான குணத்தைப் பிரதிபலித்தது.

indira1_13260.png

தன் மகள் வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் பெறுவதில் விருப்பமில்லாதவராக இருந்தார் நேரு. உலக வரலாற்றையும் இந்திரா தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். அதன் விளைவாக சிறையில் இருந்தபடி அவர், தன் மகளுக்குக் கடிதங்கள் எழுதத் தொடங்கினார். அதில் உலகம்; இயற்கை; மனித வாழ்வு; ஒவ்வொரு நாட்டின் நாகரிகம், வரலாறு என ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதினார். அவைகள், இந்திராவுடைய தனிமையைத் தகர்த்தன; தந்தையை நேரில் காண்பதுபோன்ற உணர்வுகளை ஏற்படுத்தின.

‘தைரியம் மட்டும் உன்னோடு இருந்துவிட்டால்...’

‘‘பிறந்தநாளின்போது உனக்கு மற்றவர்களிடமிருந்து பரிசுகளும் வாழ்த்துகளும் கிடைப்பது வழக்கம். நிறைந்த வாழ்த்துகளைப் பெற்றிருக்கும் உனக்கு இந்த நைனி சிறையிலிருந்து நான் என்ன பரிசை அனுப்ப முடியும்? என்னுடைய பரிசுகள் யாவும் வெறும் மூலக்கூறுகள் மட்டும்தான்’’ என்று பயணிக்கும் அந்தக் கடிதத்தில் தொடர்ந்து, ‘‘பிறர் அறியாமல் ஒளிப்பதற்கும், செய்வதற்கும் நம்மிடம் ஏதுமில்லை. அதனால், பிரகாசமான சூரிய ஒளியில் செய்யப்படும் எந்தச் செயல் குறித்தும் நாம் பயப்படத் தேவையே இல்லை. இதைப்போலவே நம்முடைய சொந்த வாழ்விலும் சூரியனை நட்புகொண்டு அதன் ஒளியில் நாம் செய்யும் எந்தச் செயலிலும் ரகசியங்களோ அல்லது மற்ற வகையான மறைத்தல்களோ இருக்க வாய்ப்பே இல்லை. இவ்வாறு ஒளிவுமறைவின்றி நடந்து கொண்டால்தான் நீ ஒளியின் குழந்தையாக வளர முடியும். தைரியம் மட்டும் உன்னோடு இருந்துவிட்டால் போதும். மற்ற எல்லா நல்லவைகளும் அதைத் தொடர்ந்து உன்னிடம் வந்துவிடும்’’ என்று நேரு, தன் மகளுக்கு எழுதிய முதல் கடிதத்திலேயே இப்படியான தைரியத்தைப் பதிந்திருந்தார்.

இதுபோன்ற கடிதங்களின் உந்துதல்தான் இந்திராவை ஒரு துணிச்சல்மிக்கப் பெண்ணாக மாற்றியது. அதனால்தான், அவர் பின்னாளில் இப்படிச் சொன்னார்: ‘‘இளமைக் காலத்திலிருந்தே தைரிய உணர்வு என்னுள் ஒரு நெருப்பாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும். இது தேவைப்பட்ட காலத்தில் பெரிதாகப் பற்றி ஒளிவிடும்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும்.’’

மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய மற்றொரு கடிதத்தில், ‘‘நீண்ட காலத்துக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதனை முழுவதுமாகப் புரிந்து கொள்வதற்கு, முதலில் நாம் செய்ய வேண்டியது இதுதான்.... அந்தக் காலகட்டத்தில் அவன் வாழ்ந்த சூழ்நிலை, அப்போதைய அவனுடைய மனநிலை இரண்டையும் முதலில் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று மனிதனின் தன்மையை உணர்த்தியிருந்தார்.

பெரோஸ் மீது காதல்!

தன் அன்னையின் உடல்நிலை காரணமாகச் சாந்தி நிகேதனிலிருந்து விடுபட்ட இந்திரா, அயல்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கமலா நேருவுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத சூழல்; காலன், அவரை அழைத்துக்கொள்ளும் நிர்பந்தம்; யாரும் ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் இந்திராவின் நிலை. அந்த நேரத்தில்தான் அவருக்கு ஆறுதல் சொல்பவராய்... உதவி செய்பவராய் வந்தார் ஒரு நண்பர். அவர், நேரு குடும்பத்து பால்ய நண்பரான பெரோஸ். லண்டனில் தங்கிப் படித்து வந்தார். அழகு, நுண்ணறிவு, புத்திசாலித்தனம் என அனைத்தும் ஒருங்கே அமைந்திருந்த இந்திராவை, பெரோஸ் விரும்பினார். தன் அன்னையின் மீது காட்டிய அக்கறையும், கைமாறு கருதாத பிரியமும் இந்திராவுக்கு, பெரோஸிடமிருந்த அவரது நட்பை இன்னும் ஆழமாக்கியது. நாட்கள் நகர்ந்தன. கமலா நேருவை காலன் அழைத்துக் கொண்டான். இந்திராவின் மனதைத் துயரம் தொற்றியது. அன்னையின் மறைவும், தந்தை இல்லாத வெறுமையும் அவரை மிகவும் வாட்டியது. அந்த நேரத்தில் பெரோஸின் மீதிருந்த நட்பு காதலாக மாறியது.

indira22_13515.jpg

தன் காதல் விஷயத்தைத் தந்தையிடம் தெரிவித்தார் இந்திரா. வாயடைத்துப் போனார் நேரு. தன் மகளின் காதலை அவரால் அங்கீகரிக்க முடியவில்லை. ஆனாலும் இந்திரா தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இறுதியில், இந்திரா - பெரோஸ் காதல் வென்றது. திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. அது, கலப்புத் திருமணம் என்பதால் கடிதங்கள் வாயிலாகவும், தந்திகள் மூலமாகவும் ஆதரவும், எதிர்ப்பும் சங்கமிக்கத் தொடங்கின. ஆயினும், அண்ணல் காந்தியடிகளின் முதல் ஆசியினால் திருமணம் இனிதே நடைபெற்றது. பெரோஸும், இந்திராவும் அற்புதமான மன ஒற்றுமை படைத்தவர்கள். அரண்மனை போன்ற ஆனந்த பவனத்தில் வலம் வந்த இந்திரா, பெரோஸை மணந்த பிறகு அவருடைய அழகான சின்னஞ்சிறு வீட்டிலும் சந்தோஷமாகவே வாழ்ந்தார். சுத்தத்தையும், ஒழுங்கையும் எப்போதும் கடைப்பிடிக்கும் இந்திராவுக்கு, ரோஜா மலர்களைக்கொண்டு வீட்டை அலங்கரிப்பது பொழுதுபோக்கு. இதனால் பெரோஸ், வீட்டைச் சுற்றி நிறைய ரோஜாச் செடிகளை வைத்து வளர்த்தார்.

துணிச்சல் மிகுந்த பெண்!

இந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கை உதயமான காலகட்டத்தில், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கமும் வீறுகொண்டு எழுந்தது. தந்தை நேரு, சிறைக்குச் சென்றார்; கணவர் பெரோஸ் தலைமறைவானார். இந்திராவைப் பாதுகாத்த இந்த இரண்டு துருவங்களும் அருகே இல்லாததால் வேதனையில் துடித்தார். வீட்டைச் சுற்றி காவலர்கள். இருந்தாலும் வீறுகொண்டு எழுந்தார். அந்த நேரத்தில், லக்னோ நகர கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சிறப்பு விருந்தினராக இந்திராவை அழைத்திருந்தனர்.  அவர் செல்வதற்கு முன், மாணவன் ஒருவன் தன் தேசியக்கொடியை இரும்புத் தொப்பிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக அதைக் கீழே விழாதவாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ஆனால், ஆங்கிலேய சிப்பாயோ அதைக் கீழே போடச்சொல்லிப் பலமாகத் தாக்கினான். குருதி சிந்தக் கீழே சாய்ந்தான் அந்த மாணவன். கொடி கீழே விழும்முன் அம்புபோலப் பாய்ந்து அதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தினார் இந்திரா. காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கினர். இந்திராவுக்கும் முதுகில் அடி விழுந்தது. ஆனாலும் தூக்கிப் பிடித்த கொடியைப் பறக்க வைத்து விட்டே வீட்டுக்குச் சென்றார். அப்படிப்பட்ட துணிச்சல் மிகுந்த பெண்ணாக அன்றே விளங்கினார் இந்திரா. அதற்குப் பிறகு இன்னும் அதிகமாக விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆரம்பித்தார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, நேரு பிரதமரானார். அங்கேயே பெரோஸும், இந்திராவும் தனது குழந்தைகளுடன் தங்கினர். இருவரும், தத்தம் வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்த வேளையில்தான் பெரோஸின் மரணம் மாரடைப்பு மூலம் வந்தது. உண்மைக் காதலை உணராதவன் காலன். அதனால்தான் இன்றும் நிறைய நிஜக் காதலர்களுடைய உயிர்களில் ஒன்றைப் பறித்துச் சென்று விடுகிறான். இளம் விதவையான இந்திராவின் நிலையைக் கண்டு இந்தியாவே கண்ணீர் விட்டது. மனதின் வெறுமை அவரை வாட்டியது. அன்பான தந்தையினாலும், அழகான பிள்ளைகளின் பாசத்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டார். இதுவரை சாதாரணமாக கடந்த இந்திராவின் வாழ்க்கை 1960-க்குப் பிறகு, சரித்திரம் மிக்க வாழ்க்கையாக மாறியது. ஆம், அரசியல் என்னும் அத்தியாயத்துக்குள் அதிதீவிரமாகக் காலடி எடுத்து வைத்தார் இந்திரா. தந்தைக்கு உதவியாக இருந்து செயல்பட்டார். அதுகூடக் கொஞ்சகாலம்தான். அடுத்து, உறங்கப்போன அவரது தந்தை ஒரேயடியாக உறங்கி விட்டார். துக்கம் திரும்பத் திரும்ப இந்திராவைத் தொற்றிக்கொண்டும், துரத்திக்கொண்டும் இருந்தது. என்றாலும் இந்திரா மீண்டும் அதிலிருந்து விடுபட்டு வந்தார்.

இளம்வயது முதல் பெண் பிரதமர்!

indiraa444_13141.jpgநேருவுக்கு அடுத்தபடியாக, சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராக லால்பகதூர்  சாஸ்திரி பொறுப்பேற்றார். அவருடைய அமைச்சரவையில் இந்திராவுக்கு ஒலிபரப்புத் துறை ஒதுக்கப்பட்டது. இந்தத் துறையில் இருந்தபோதுதான் அகில இந்திய வானொலியைச் சிறப்பான முறையில் செம்மையாக்கி சாதனை படைத்தார்.  தொலைக்காட்சியைக் கொண்டுவந்தார். எப்போதும் மக்கள் தொடர்பு, இந்திராவின் தாரக மந்திரமாகவும், சிறப்பம்சமாகவும் இருந்தது. இதன் பயன்தான் அவரை, இளம் வயதிலேயே இந்தியாவின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்க வைத்தது. இந்தியாவின் பிரதமராக அவர் பதவியேற்றபோது, ‘‘ஒரு பெண்மணியினால் இந்தியாவை ஆள முடியுமா?’’ என ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.  அதற்கு இந்திரா, ‘‘I am no woman but human’’ என்று பதிலளித்தார்.

இந்திரா, பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக எத்தனையோ சாதனைகளை செய்தார்.  தன் மனதுக்குச் சரியென பட்டதைத் தானே முடிவெடுத்து நிறைவேற்றும் இந்திராவை, ‘இந்தியாவின் துணிச்சல் மிக்கப் பெண்மணி’ என்று மக்கள் போற்றினர். இந்திராவின் வெற்றிப் பாதையில் நெருக்கடி நிலை, நெருடலைத் தந்தது. இதனால் 1977-ல் நடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில் ஆட்சியமைத்த ஜனதா அரசால், நாட்டை சரியான பாதையில் அழைத்துச் செல்ல முடியாமல் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் இந்திரா பிரதமரானார். சொந்த மகனைக்கூட விமான விபத்தில் இழந்து நின்ற அவர், தொடர்ந்து வந்த பல சோதனைகளைச் சாதனைகளாக்கிய வியத்தகு பெண்மணியாகத் திகழ்ந்தார்.

‘‘அரசியலில் உங்களுக்கு எப்போதாவது அலுப்புத் தோன்றி இருக்கிறதா?’’ என்று அன்னை இந்திரா காந்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நான் அரசியலின் அடிப்படை அம்சத்தைத்தான் நோக்குகிறேன். அதை ஒரு தொழிலாகவோ, போட்டிக்குரிய விஷயமாகவோ  பார்ப்பதில்லை’’ எனப் பதிலளித்தார்.

1984-ம் ஆண்டு ஜூன் மாதம் சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாரா எனப்படும் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் ராணுவத்தினரை அனுப்பி வன்முறையை அடக்கினார். இது அவருடைய அரசியல் வாழ்வில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட இந்திராவைப் பற்றி ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அது, இப்படிச் சொல்கிறது. ‘‘The most honest, competent impressive and respected world leader with great charm and tolerance.’’

இந்தியாவின் விடுதலையிலும், ஆட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்த அன்னை இந்திரா காந்தி, 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி தன்னுடைய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

‘‘கல்வி கற்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியம். அதே நேரத்தில் சிறந்த மனிதனை உருவாக்குவதாக அவை அமைய வேண்டும்’’ - இந்திரா காந்தி.

vikatan

  • தொடங்கியவர்

 

“கடற்கரையில் சிற்பக்காட்சி” - காணொளி
ஆஸ்திரேலிய கடற்கரைக்கு வந்த உலக புகழ்பெற்ற சிற்பங்கள்

  • தொடங்கியவர்

நான் சொன்னதும் மழை வந்துச்சா..!

 

 

p14a.jpg‘மழை  எப்பவுமே எனக்குப் பிடிக்கும். ஆனா,  ஆசைப்படுற அளவுக்கு நான் நனைஞ்சதே இல்லை. நான் நனையணும்னா, நான் சொன்னதும் மழை வரணும்... வருமா?’ - இது அக்‌ஷயா, aasai@vikatan.com-க்கு அனுப்பிய குட்டிச் சுட்டி ஆசை.

`மழைதானே... வரவெச்சுடலாம்’ என்று தயார் ஆனோம்.

அக்‌ஷயாவுக்கு, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி. அம்மா வளர்மதி, ஹோம் மேக்கர். அப்பா,  பிசினஸ்மேன். ஒரே தம்பி காருண், பத்தாவது படிக்கிறார்.

அக்‌ஷயாவின் ஆசைக்கு `ஓ.கே’ சொல்லிவிட்டாலும், அதற்குப் பிறகு மழை ஏற்பாடுகளைச் செய்வ தற்குள் நிஜமாகவே கண்களில் மழை வந்துவிடுமோ என கலங்கடித்துவிட்டன வேலைகள். 

`‘ரெய்ன் எஃபெக்ட்டா சார்... என்ன படம், எவ்ளோ நாள் ஷூட்டிங்?, `சாங்’னா சொன்னதைவிட அதிக நாளாகுமே, லொக்கேஷன் சென்னையா... வெளியூரா?’’ - கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தொப்பலாக நனைத்துவிட்டார் ‘ரெய்ன் எஃபெக்ட்’ ஏழுமலை.

p14.jpg

‘`நாளைக்குக் காலையில பெசன்ட் நகர்  வாங்க... சொல்றோம்’’ என்றோம்.

பெசன்ட் நகர், கலாக்ஷேத்ரா காலனி, பார்வதி தெருவில் இருக்கிறது அக்‌ஷயாவின் அப்பார்ட்மென்ட். ‘ஞாயிறு அன்னைக்குக்கூட, யார் இது?’ என்ற சலிப்போடுதான் கதவைத் திறந்தார் அக்‌ஷயா. ``மழை வரணும்னு ஆசைப்பட்டீங்கள்ல... ரெடியா?’’ என்றோம். வெளியே அடிக்கிற வெயிலை எட்டிப் பார்த்துவிட்டு, `‘என்னது இப்ப மழை வருமா?’’ என்றார் ஆர்வமாக.

``இருங்க வர்றேன்’’ என்று குதித்தோடி உள்ளே போனவர் உடைமாற்றிக்கொண்டு (ஆமாம்... மழையில நனையிறதுக்கு மேக்கப் எதுக்கு?) சுற்றுமுற்றும் பார்த்தபடியே வந்தார். யாரையோ போனில் அழைத்தார். கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் எதிரில் வந்தார்.

‘`ப்ரியா ஆன்ட்டி... இப்ப மழை வரணுமா?’’ என்றார். `‘வந்தா நல்லாத்தான் இருக்கும்’’ என்றவர் நம்மைப் பார்த்துவிட்டு அக்‌ஷயாவிடம் ‘`என்ன நடக்குது?’’ என்றார். `‘இப்ப நான் சொன்னா மழை வரும்’’ என்ற அக்‌ஷயாவிடம்,

‘`இரு, ஜஸ்மிதாவைக் கூப்பிடுறேன்’’ என்று விளையாடிக்கொண்டிருந்த மகளை அழைத்தார்.

கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் சிலர் ஓடி வந்தனர்.  என்ன விஷயம் என்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, `‘மழை வரப்போகுதாம். இந்த அக்கா சொன்னா வருமாம்’' என்று  உற்சாகமானார்கள். `‘இரு... நான் சஹானாவைக் கூப்பிடுறேன். அவளுக்கு மழைன்னா ரொம்பப் பிடிக்கும். நீரஜ் எங்கேடா... நந்தினி அக்கா எங்கே, டேய் ராஉல்... (பேரு தப்புனு நினைக்காதீங்க பாஸ். அவர் ராஉல்தான்... ராகுல் அல்ல)’’ என்று ஒரு கல்யாண மண்டப மூடுக்கு செட்டாகிவிட்டனர் குட்டீஸ்.

வீடியோ கேமராவைப் பார்த்ததும், `‘சும்மா மழை வரும்னு எடுத்துட்டு கிராஃபிக்ஸ்ல மழை வர்ற மாதிரி பண்ணுவாங்கடா’’ என்றது ஒரு வாண்டு. `‘ஐ... கேமராவா? நான் `தெறி’ படத்துல நடிச்சிருக்கேன்’’ என்றார் ஒரு சுட்டிப்பெண்.  ``சும்மா... தூரமா கூட்டத்துல நின்னா அங்கிள்’’ என்று கலாய்த்தது இன்னொரு சுட்டி.

p14b.jpg

அதற்குள் மழைக்கு லொக்கேஷன் பார்க்க ஆரம்பித்தார் அக்‌ஷயா.

``நிஜம்மா சொல்றீங்களானு தெரியலை. இருந்தாலும் எங்கே மழை வரணும்னு நான் இடம் பார்க்கிறது... ஜாலியா இருக்கு’’ என்று வெளியில் வந்து நின்றவர், `‘இங்கே வந்தா நல்லா இருக்குமா?’’ என்றார். `‘அதை நீங்கதான் முடிவுபண்ணணும்’’ என்றோம். உடனே ஒரு குட்டி ‘`ஐ... இங்கே ஓ.கே’’ என்று பெர்மிஷன் கொடுக்க ‘`அச்சச்சோ... அப்பா கார் கவர் போடாம நிக்கிதே... இங்கே மழை வந்தா அப்பா திட்டுவாரே’’ என்றது ஒரு சுட்டி.

ரெய்ன் எஃபெக்ட் ஏழுமலை, யாருக்கும் தெரியாமல் எங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அக்‌ஷயா ஓர் இடத்தில் நிலை கொள்வதைப் பார்த்ததும் அவசரமாக, அவருக்குத் தெரியாமல்  ரெய்ன் எஃபெக்ட்  முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். காருக்குப் பின்னால் மோட்டாரை செட் செய்தார்.

அக்‌ஷயா நின்ற இடம்  நடுரோடு. மேலே பார்த்தார். வெயில் சுளீரென முகத்தில் அடித்தது.  ``இப்படி வெயில் அடிக்கிறப்ப, ச்சில்னு மழை பெய்யணும்னு நிறையத் தடவை நினைச்சிருக்கேன்’’ என்றார். மீண்டும் மேலே பார்த்தவர், ‘`வெயில் ஜாஸ்தியாகுது. நிஜம்மா இப்ப மழை வருமா?’’ என்று டவுட்டானார்.

``சரி போதும்... மழையைக் கூப்பிடுங்க’’ என்றதும், சிரித்துக்கொண்டே மேலே பார்த்தார். சரசரவென மழை பொழிய ஆரம்பித்தது. நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் உற்சாகத் துள்ளல் போட ஆரம்பித்தார். சற்றுத் தள்ளி நின்றிருந்த சுட்டீஸை `‘வாங்க... வாங்க...’’ என்று அழைத்தார். அவ்வளவுதான். அனுமதி கிடைத்ததும் ‘ஓஓஓஓஓ’ என்று ஆர்ப்பரித்துக்கொண்டே மழைக்குள் புகுந்தனர் மழலைகள். கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டே குதிக்க ஆரம்பித்தனர். ‘`மழை... மழை... ஏ... நிஜம்மா மழை பெய்யுதுடீ!’’ என்று கத்தினர். தூரத்தில் சுட்டிக்காட்டி ‘`ஏ... அங்கே மழை இல்லை... இங்கே இருக்கு. சூப்பர்ல?’’ என்றனர். அக்‌ஷயாவைச் சுற்றி ஓடி விளையாடினர். அக்‌ஷயாவைவிட அதிகமாக குட்டீஸ் மழையை ரசித்து விளையாட ஆரம்பித்தார்கள்.

நேரம் அதிகமாக, தெருவில் வாகன ஓட்டிகள் இரண்டு புறங்களிலும் நின்று ‘`எப்படி நடுரோட்ல மட்டும் மழை வருது?’’ என்று பார்க்க ஆரம்பித் தார்கள். கூட்டம் சேருவதுபோலிருக்கவே, ‘`நீங்க சொன்னாத்தான் மழை நிக்கும்’’ என்றோம். அதெல்லாம் காதில் விழவே விழாததுபோல குழந்தைகளோடு குழந்தையாகிவிட்டார் அக்‌ஷயா. சிறிது நேரத்தில் `‘அவனுக்கு கோல்டு... இவளுக்குக் காய்ச்சல் வந்துடப் போகுது’’ என்று அம்மாக்கள் வந்துவிட, அக்‌ஷயா `போதும்’ என்று சைகை காட்டினார். நின்றது மழை.

p14c.jpg

``மழையில நனையிறதுன்னாலே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா என்ன... மழை வர்றப்ப ஆபீஸ்ல வேலை செஞ்சுட்டிருப்பேன். இல்லன்னா வீட்ல தூங்கிட்டிருப்பேன். நான் சொன்னா மழை வரணும்னு அடிக்கடி நினைக்கிறது உண்டு. வி.ஐ.பி சம்பந்தப்பட்ட ஆசைகள் மட்டும்தான், `ஆனந்த விகடன்’ல நிறைவேத்துவாங்கன்னு நினைச்சேன். இருந்தாலும் மெயில் அனுப்புவோமேன்னு அனுப்பினேன். இப்படி உடனேயே நிறைவேத்துவாங்கன்னு நினைக்கலை. ரொம்ப ஹேப்பியா இருக்கு. இந்தத் தீபாவளி எனக்கு ரொம்ப ஸ்பெஷலாகிடுச்சு. ஆனந்த விகடனுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தேங்கஸ்!’’ என்று மழையில் நனைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் அக்‌ஷயா.


ஒருவித தயக்கத்தோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் ‘நாமளும் நனைஞ்சிருக்கலாமோ?’

 என்று நினைத்துக் கொண்டிருப்பது அவர்களின்  முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. மழை எப்படியும் எப்போதும் வரலாம். ஆனால், அதில் நனைந்தாடும் மனது ஒரு சிலருக்குத்தானே வாய்க்கிறது.

மனமிருந்தால் மழை உண்டு!

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

நவம்பர் - 01

 

1520 : தென் அமெ­ரிக்­காவில் மகலன் நீரிணை மக­லனால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

1592 : கொரியக் கடற்­ப­டை­யினர் பூசான் என்ற இடத்தில் மிகப்­பெரும் ஜப்­பா­னியப் படை­களைத் தோற்­க­டித்­தனர்.

 

839JR.jpg1604 : ஷேக்ஸ்­பி­யரின் ஓத்­தெல்லோ நாடகம் முதற்­றட­வை­யாக லண்­டனில் அரங்­கே­றி­யது.

 

1755 : போர்த்­துக்கல், லிஸ்பன் நகரில் இடம்­பெற்ற நில­ந­டுக்கம் மற்றும் சுனாமி கார­ண­மாக 60,000–-90,000 பேர் வரை கொல்­லப்­பட்­டனர்.

 

1805 :  ஆஸ்­தி­ரி­யாவை நெப்­போ­லியன் முற்­று­கை­யிட்டான்.

 

1814 : நெப்­போ­லி­யனின் பிரான்ஸ் தோல்­வி­ய­டைந்­ததைத் தொடர்ந்து ஐரோப்­பாவின் எல்­லை­களை மீள­ வ­ரையும் பொருட்டு வியென்னா காங்­கிரஸ் கூடி­யது.

 

1876 : நியூ­ஸி­லாந்தின் மாகாண சபைகள் கலைக்­கப்­பட்­டன.

 

1894 : ரஷ்­யாவின் மூன்றாம் அலெக்­சாண்டர் இறந்­ததை அடுத்து இரண்டாம் நிக்­கலஸ் மன்­ன­னானார்.

 

1904 : இலங்­கையின் வட மாகா­ணத்­துக்­கான ரயில் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்த ரயில் அநு­ரா­த­புரம் வரை சேவையில் ஈடு­பட்­டது.

 

1911 : இத்­தா­லிக்கும் துருக்­கிக்கும் இடையில் இடம்­பெற்ற போரில் முதற்­ற­ட­வை­யாக விமா­னத்தில் இருந்து குண்­டுகள் வீசப்­பட்டன.

 

1914 : முதலாம் உலகப் போர்: சிலியில் ஜேர்­ம­னியக் கடற்­ப­டை­யுடன் நடந்த மோதலில் பிரித்­தா­னியக் கடற்­ப­டை­யினர் முதன் முதலில் தோல்­வி­ய­டைந்­தனர்.

 

1922 : ஒட்­டோமான் பேர­ரசின் கடைசி சுல்தான் ஆறாம் மெகமட் பத­வி­யி­ழந்தார்.

 

1928 : துருக்­கிய மொழி சீர்­தி­ருத்தம் ஏற்­பட்­டது. அரபு எழுத்­துக்கள் புதிய துருக்­கிய எழுத்­துக்­க­ளாக மாற்­றப்­பட்­டன.

 

1948 : சீனாவின் மஞ்­சூ­ரியா என்ற இடத் தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்­கி­யதில் 6,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1950 : புவேர்ட்டோ ரிக்கோ தேசி­ய­வா­திகள் அமெ­ரிக்கத் தலைவர் ஹரி ட்ரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.

 

839shirani-bandranayke.jpg1951 : அமெ­ரிக்­காவின் நெவா­டாவில் அணு­குண்டு வெடிப்புச் சோத­னையில் அமெ­ரிக்கப் படைகள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன.

 

1954 : புதுச்­சேரி பிரெஞ்சு ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­தலை பெற்று இந்­தி­யா­வுடன் இணைந்­தது.

 

1956 : நிசாம் என அழைக்­கப்­பட்ட பகுதி ஆந்­திரப் பிர­தேசம் என்ற மாநி­ல­மாக்­கப்­பட் ­டது.

 

1956 : இந்­தி­யாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநி­லங்கள் உரு­வாக்­கப்­பட்­டன.

 

1956 : இந்­தி­யாவில் கன்­னி­யா­கு­மரி பிர­தேசம் கேரள மாநி­லத்திலிருந்து பிரிந்து தமிழ்­நாடு மாநி­லத்­துடன் புதிய மாவட்­ட­மாக இணைந்­தது.

 

1957 : அக்­கா­லத்தில் உலகின் மிக நீள­மான தொங்கு பால­மான மக்­கினா பாலம் மிச்­சிகன் மாநி­லத்தில் அமைக்­கப்­பட்­டது.

 

1970 : பிரான்ஸில் நடன மாளிகை ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 144 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1973 : மைசூர் மாநிலம் கர்­நா­டகா என பெயர் மாற்­றப்­பட்­டது.

 

1981 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து அன்­டி­குவா பர்­புடா விடு­தலை பெற்­றது.

 

1982 : ஜப்­பானின் ஹொண்டா நிறு­வனம் அமெ­ரிக்­காவில் வாகனத் தயா­ரிப்பை ஆரம்­பித்த முத­லா­வது ஆசிய நிறு­வ­ன­மா­கி­யது.

 

1993 : ஐரோப்­பிய ஒன்­றியம் அமைப்­ப­தற்­கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

 

1996 : இலங்கையின் முதலாவது நிறை வேற்று அதிகார ஜனாபதி தியான ஜே.ஆர்.ஜயவர்தன காலமா னார்.

 

1998 : மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

 

2006 : இந்தியாவின் பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.

 

2012 : பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஐ.ம.சு.கூட்டமைப்பின் 117 எம்.பிகள் கையெழுத்திட்ட குற்றவியல் பிரேரணை,  சபாநாயகர் சமல் ராஜபக் ஷவிடம் கையளிக்கப்பட்டது.

 

2012 : சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில்  எரிபொருள் தாங்கி வாகனமொன்று வெடித்ததால் 25 பேர் உயிரிழந்ததுடன் 135 பேர் காயமடைந்தனர்.

metronews.lk

  • தொடங்கியவர்

14939410_1172061949509164_47732856746669

இருவர் படத்தில் அறிமுகமாகி, இன்று வரை அழகியாகவே வலம்வரும் அழகி ஐஸுக்கு பிறந்தநாள்.

முன்னாள் அல்ல, எந்நாளுமே பலரும் ரசிக்கும் 'உலக அழகி' இந்திய முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் பிறந்த நாள்..
Happy Birthday Aishwarya Rai

 
 
 
இன்று 43 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் ஐஸ்வர்யா ராய்
 

பொலிவூட்டின் முன்னிலை நடிகையும் முன்னாள் உலக அழகு ராணியுமான ஐஸ்வர்யா ராய் இன்று தனது 43 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

 

20334aishwarya-rai-birthday.jpg


1994 ஆம் ஆண்டு உலக அழகுராணியாக தெரிவான ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான இருவர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 

2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்தார். இத் தம்பதியின் மகள் ஆரத்யாவுக்கு 4 வயதாகுகிறது.


ஐ.நாவின் எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் ஐஸ்வர்யா ராய் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. பொலிவூட் நட்சத்திரங்கள் உட்பட பிரபலங்கள் பலரும் ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்த தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

20334Aishwarya-Rai-25.jpg

 
 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மிகத் துல்லியமான உலக வரைபடம் பார்த்திருக்கீங்களா?

நம் பள்ளிகளில், உலக வரைபடம் பார்த்திருப்போம். அதில், அன்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து பெரியதாகவும், ஆப்ரிக்கா சற்று சிறியதாகவும் இருக்கும். ஆனால், உண்மையில், இந்த இடங்களின் அளவு நாம் பொதுவாக பார்க்கும் உலக வரைபடத்தில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கும்.

'ஆத்தோகிராஃப் உலக வரைபடம்' என்ற புது வகையிலான வரைபடம், இந்த விஷயத்தை தீர்த்து, உலக வரைபடத்தின் சரியான அளவை காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

Map%201%20600_12155.jpg

ஹஜிமே நருகவா என்ற ஐப்பானியரால் உருவாக்கப்பட்ட இந்த வரைபடம், உலகத்தை அதன் சரியான அளவோடு காட்டுகிறது. இதனால், நாம் வழக்கமாக பார்க்கும் உலக வரைபடத்தை விட இது சற்று வித்தியாசமாக இருக்கிறது.
 

vikatan

  • தொடங்கியவர்

வெள்ளை மாளிகையில் மைக்கேல் ஜாக்சன் பாட்டுக்கு நடனமாடிய ஒபாமா! (வீடியோ)

நவம்பர் 8-ம் தேதி புதிய அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரவுள்ள நிலையில், பாராக் ஒபாமா வெள்ளை மாளிகையில், கடைசியாக ஒரு முறை ஹேலோவீன் பார்ட்டி கொடுத்துள்ளார். 

 

 


இந்த நிகழ்ச்சியின்போது, அவர் கூடி இருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு, பிறகு மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற ஆல்பமான 'திரில்லர்' பாடலுக்கு, அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவுடன் சேர்ந்து நடமாடியுள்ளார். 

vikatan

  • தொடங்கியவர்

 

முதல் பெண் சுவரோவியர் லேடி பிங்

ஆண்களே அதிகம் கோலோச்சும் சுவரோவியக்கலைத்துறையில் அவர்களோடு போட்டிபோடும் வல்லமை மிக்க பெண் சுவரோவியராக வர்ணிக்கப்படுபவர் லேடி பிங்.


தன் 16 வயது முதல் சுவரோவியம் வரைய ஆரம்பித்தவர் இன்று பள்ளிக்கூட சிறார்களுக்கு சுவரோவியக் கலையை கற்பிக்கும் ஆசிரியராக திகழ்கிறார்.


"கலை என்பது கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், அறைகளுக்குள் முடக்கப்பட்டு சிலருக்கு மட்டுமே ஏன் பயன்படவேண்டும்?", என்று கேட்கும் லேடி பிங், தனது சுவரோவியங்கள் கலை என்பது அனைத்து மக்களுக்குமானது என்பதை வலியுறுத்துவதற்கான ஓவிய முயற்சி என்கிறார்.

BBC

  • தொடங்கியவர்
Miss Earth 2016
 

2016 புவி அழ­கு­ரா­ணி­யாக (Miss Earth) ஈக்­கு­வடோர் நாட்டின் கெத்­த ரின் எஸ்பின் தெரிவு செய்­யப்­பட்­ டுள்ளார். மிஸ் ஏர்த் 2016 அழ­கு­ராணி போட்­டிகள் பிலிப்­பைன்ஸில் நடை­பெற்­றன.

 

2033614915689_1725372107787358_233525540

 

2033614572853_1181288228622567_578438298

 

84 நாடு­களின் அழ­கு­ரா­ணிகள் இப் ­போட்­டி­களில் கலந்­து ­கொண்­டனர். தலை­நகர் மணி­லாவில் கடந்த சனிக்­கிழமை நடை­பெற்ற இறுதிச் சுற்றில் ஈக்­கு­வ­டோரின் கெத்­தரின் எஸ்பின் மிஸ் ஏர்த் 2016 அழ­கு­ரா­ணி­யாக தெரிவு செய்­யப்­பட்டார்.

 

2033614721721_1181298448621545_917654125

 

2033614604858_1180747842009939_868264801

 

மிஸ் ஏர்த் எயார் (வான்) 2016 அழ­கு­ரா­ணி­யாக கொலம்­பி­யாவின் மிஷெல் கோமஸ் தெரி­வானார். மிஸ் ஏர்த் வோட்டர் (நீர்) அழ­கு­ரா­ணி­யாக வெனி­
சூ­லாவின் ஸ்டெஃபனி டி ஸோர்ஸி தெரி­வானார்.

 

2033614572868_1181291808622209_916325202

 

மிஸ் ஏர்த் ஃபயர் (தீ) 2016 அழகுராணியாக பிரேஸிலின் புரூனோ ஸனர்டோ தெரிவானார்.

 

203361.jpg

 

203362.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

 

“ஹலோவீனை வென்ற நாசா” - காணொளி

BBC

  • தொடங்கியவர்

இலையுதிர் காலத்தில் ஸ்னோடோனியா

 

வேல்ஸின் வட பகுதிகள் 2017 ஆம் ஆண்டில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்று என்று லோன்லி பிளாநெட் என்ற பிரபல சுற்றுலா வழிகாட்டி நிறுவனத்தால் குறிப்பிடப்படுகிறது.

இந்த சுற்றுலா வழிகாட்டி நிறுவனம் அதிகமாக பரிந்துரைக்கின்ற இடங்களில் ஸ்னோடோனியா தேசிய பூங்காவும் உள்ளது.

எல்லா பருவகாலங்களிலும் இதன் காட்சிகள் மிகவும் பிரமிக்கச் செய்கின்றன.

கடந்த சில நாட்களில் கர்நார்வன் நகர புகைப்படக் கலைஞரான ரிச்சர்ட் அவுட்ராமால் படம் பிடிக்கப்பட்ட இலையுதிர்கால காடசிகள் இவை:

 

தனிமரம்

சிறந்த இயற்கை பின்னணியில் தனி மரம்

ஒக்வென் பள்ளத்தாக்கிலுள்ள போக்லிவிட் நதி

ஒக்வென் பள்ளத்தாக்கிலுள்ள போக்லிவிட் நதி

பெட்ஜிலர்ட் அருகிலுள்ள பிரமிக்கத்தக்க காட்சி

பெட்ஜிலர்ட் அருகிலுள்ள பிரமிக்கத்தக்க காட்சி

சிலின் படானில் ஒரு அமைதியான தருணம்

சிலின் படானில் ஒரு அமைதியான தருணம்

குவெஸ்லின்

குவெஸ்லின் நீர்த்தேக்கம்

சியுனான்ட் மாவர் நீர்வீழ்ச்சி, சிலான்பேரியஸ்

சியுனான்ட் மாவர் நீர்வீழ்ச்சி, சிலான்பேரியஸ்

சிலின் படான்

சிலின் படானுக்கு மேல் காணப்படும் வியத்தகு மேகங்கள்

சிலின்டி இசாஃப் பண்ணை, சிலின் டினாஸ்

சிலின்டி இசாஃப் பண்ணை, சிலின் டினாஸ்

ஸ்னோடன் மீதான லின் சிலாடவ்

ஸ்னோடன் மீதான லின் சிலாடவ்

சிலின் ஸ்வெய்கிலின் ஒரு பிரமிக்கத்தக்க சூரிய உதயம்

சிலின் ஸ்வெய்கிலின் ஒரு பிரமிக்கத்தக்க சூரிய உதயம்

டிரைவான், அக் குலிடிரா மற்றும் ஒக்வென் ஏரி

டிரைவான், அக் குலிடிரா மற்றும் ஒக்வென் ஏரி

ஸ்னோடனின் உச்சியிலிருந்து பிரமிக்க வைக்கும் காட்சி

ஸ்னோடனின் உச்சியிலிருந்து பிரமிக்க வைக்கும் காட்சி

இலிடிர் ஃபாவர் மற்றும் டினோர்விக் குவாரி

இலிடிர் ஃபாவர் மற்றும் டினோர்விக் குவாரி

ஸ்னோடன் மீதான சிலின் சிலாடவ்

ஸ்னோடன் மீதான சிலின் சிலாடவ்

பிடாஸ்-அக் கோய்டு அருகிலுள்ள ஃபெய்ர்ரி குலெனின் இயற்கை அழகு

பிடாஸ்-அக் கோய்டு அருகிலுள்ள ஃபெய்ர்ரி குலெனின் இயற்கை அழகு

 

 

 

BBC

  • தொடங்கியவர்

 

உலகின் முதல் தொலைக்காட்சி எப்படி துவங்கியது?

இன்றைய தொலைக்காட்சித்துறை எவ்வளவோ மாறிவிட்டது.

டிவிடி, புளூ ரே, பீடா மேக்ஸ், வீடியோ டேப் என பலவகை மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மோதல்கள்.

ஆனால் ஆரம்பத்தில் இரண்டு தொழில் நுட்பங்களுக்கு இடையிலான போட்டியாகவே தொலைக்காட்சித் தொழில்நுட்பம் துவங்கியது.

ஜான் லோகி பேர்டின் தொழில்நுட்பம். மற்றது மார்க்கோனி இஎம்ஐ தொழில்நுட்பம்.

ஆரம்பத்தில் இந்த இரண்டையுமே பிபிசி பயன்படுத்தினாலும் ஜான் லோகி பேர்டின் தொழில்நுட்பம் காலப்போக்கில் காணாமல் போனது.

உலகின் முதலாவது முழுமையான தொலைக்காட்சி சேவையை 1936 ஆம் ஆண்டு பிபிசி துவங்கியது.

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 1 Person
 

மகிழ்ச்சி தருவது மனமே!

கவலை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அரசன் இருந்தான்.

ஒருநாள் தனது சபையைக் கூட்டி, ‘‘எல்லாரும் பற்றி பேசுகிறார்களே... கவலை என்றால் என்ன?
கவலை எப்படியிருக்கும்? என்ன செய்யும்…?’’ எனக் கேட்டான்.

‘‘இது தேவையில்லாத விஷயம் மன்னரே! அதைப் பற்றியெல்லாம் இப்போது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை...’’ என்றார் அமைச்சர்.

மன்னர் விடாப்பிடியாக ‘"எனக்குக் கவலையைப் பற்றி உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
யாராவது விளக்கிச் சொல்லுங்கள்…’’ என்றார்.

ஆளாளுக்கு கவலையைப் பற்றி விளக்கம் சொன்னார்கள்.

‘‘இவ்வளவுதானா கவலை? இது வெறும் பயம். இதற்குப் போயா நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வருந்துகிறீர்கள்?’’ என மன்னர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்தார்.

‘கவலை என்பதை மன்னருக்கு எப்படி உணர்த்துவது?’ என எவருக்கும் தெரியவில்லை.

அப்போது அரண்மனை ஓவியன், ‘‘மன்னரே நான் கவலையை ஓவியமாக வரைந்திருக்கிறேன். பாருங்கள்…’’ எனக் காட்டினான்.

அதை வாங்கிப் பார்த்த மன்னன் திகைத்துப் போனார்.
காரணம், அதில் அவரது உருவம் மெலிந்து, நரைத்து, முகமெல்லாம் சுருக்கம் விழுந்து, ஒரு நோயாளியைப் போல இருந்தது.

அவர் ஆத்திரத்தில் ‘‘முதுமையில் நான் இப்படி ஆகிவிடுவேனா..?’’ எனக் கேட்டார்.

அதற்கு ஓவியன் ‘‘முதுமையில் நீங்கள் இப்படி ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று பதில் சொன்னான்.

‘‘இதை எப்படி தடுப்பது? வாழ்நாள் முழுவதும் இதே இளமையுடன் சந்தோஷத்துடன் எப்படி வாழ்வது?” எனக் கேட்டார் மன்னர்.

ஒருவரிடமும் பதில் இல்லை!

அன்றிரவு மன்னரால் உறங்க முடியவில்லை.

மறுநாள் சபைக்கு வந்தபோது அமைச்சர் சொன்னார்:
‘‘மன்னா உங்கள் முகத்தில் கவலை படர்ந்திருக்கிறது. மனித மனதில் ஒரேயொரு கவலை புகுந்துவிட்டால் போதும், அது பெருகி வளர்ந்து விடும். இனி நீங்கள் நினைத்தாலும் கவலையில் இருந்து விடுபடவே முடியாது!’’ என்றார்

மன்னர் வருத்தமான குரலில் கேட்டார், ‘‘முதுமையில் நான் மெலிந்து நோயாளி போலாகி விடுவேனா..?’’

‘‘இது உங்கள் குரல் இல்லை. கவலையின் குரல் மன்னா! இனி, உங்களால் கவலையில் இருந்து விடுபடவே முடியாது!’’ என்றார் அமைச்சர்.

மன்னர்
கவலையில்
மூழ்க தொடங்கினார்.
ஆக...
கவலை, மகிழ்ச்சி போன்ற தீய மற்றும் நல்ல உணர்வுகள் அனைத்தும் நமது எண்ணத்தில் இருந்துதான் தொடங்குகின்றன...
ஆகவே, சித்தம் தெளிவாக இருந்தால் தீய சக்திகள் (உணர்வுகள்) நெருங்காது...

இவ்வாறு தவறான எண்ணங்களை விலக்கியே பேரின்ப நிலையை பெற்ற சித்தர்கள், 'மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை...' என்றார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.