Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

புகையின் நடுவே ஓர் நடனம்!

சீனாவில் புகையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வார தொடக்கத்திலேயே காற்றில் புகையின் அளவு எகிற, மத்திய, வடக்கு சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், சாலைகள் ஆகியவை மூடப்பட்டன. மூடிய சாலைகளில் முகமூடி அணிந்துகொண்டு சீன மக்கள் நடனமாடும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

china_22312.jpg

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மனித உடலில் புது உறுப்பு கண்டுபிடிப்பு!

அயர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் மனித உடலில் புதிய உறுப்பு ஒன்றை கண்டறிந்துள்ளனர். Mesentery என்றழைக்கப்படும் இந்த உறுப்பு சிறுகுடலில் அமைந்துள்ளது. நம் உடலில் இதன் பணி என்ன என தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். இந்த புது உறுப்போடு சேர்த்து நம் உடலில் மொத்தம் 79 பாகங்கள் உள்ளன. Gray’s Anatomy புத்தகத்திலும் இந்த புது உடலுறுப்பு குறித்து அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

mesentery_22574.jpg

vikatan

  • தொடங்கியவர்

இரு உடலில் ஓர் உயிர் இருக்க...!

பிற அகதிகளைப் போலத்தான் ஈராக்கிலிருந்து தன் குடும்பத்தோடு கஷ்டப்பட்டு வெளியேறி மாஸிடோனியா வந்தடைந்தார் நூரா என்ற பெண். மாஸிடோனிய எல்லையில் காவல்பணியிலிருந்த போபி தோதெவ்ஸ்கி என்ற வீரர் இவரைப் பார்த்ததும் காதலில் விழ, ப்ரபோஸ் செய்திருக்கிறார். நீண்ட யோசனை, பெரும் தயக்கம் ஆகியவற்றுக்குப் பின் நூரா ஓகே சொல்ல. இப்போது இருவரும் காதல் கொஞ்சம் காஃபி கொஞ்சம் என மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

couple_00262.jpg

 

இளவரசர் ஹாரியின் புது அவதாரம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மூன்று வார சுற்றுப்பயணமாக ஆப்ரிக்கா சென்றுள்ளார். அங்கே அழியும் நிலையில் உள்ள 500 யானைகளை இடமாற்றம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரின் இந்த முன்னெடுப்பை பாராட்டி Town & Country இதழ் ஹாரியின் போட்டோவை அட்டைப்படத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் மூன்று மாதங்கள் ஆப்ரிக்காவில் தங்கியிருந்து வேட்டைக்காரர்களிடம் இருந்து யானைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

harry_23143.jpg

vikatan

  • தொடங்கியவர்

கால்களை வலுவாக்கும் உத்தித ஏக பாதாங்குஸ்தானம்

இந்த ஆசனம் செய்யும் போது உடலின் முழு எடையும் ஒரு காலில் இருப்பதால், கால் வலுவடையும். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
கால்களை வலுவாக்கும் உத்தித ஏக பாதாங்குஸ்தானம்
 
செய்முறை :

இரு கால்களையும் ஒன்றாக வைத்து நிற்கவும். கைகள் உடலை ஒட்டி இயல்பாக இருக்கட்டும். இதே நிலையில், மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே முதலில் இடது கையை முன்புறமாக மேலே தூக்கவும். ஓரிரு விநாடிகளுக்குப் பின், மூச்சை வெளியே விட்டபடி, இடது காலை முன்பக்கமாக மேலே தூக்கவும்.

அதே நேரம், இடது கையை முன்புறமாகக் கீழே இறக்கி, இடது கால் பெருவிரலை, ஆட்காட்டி மற்றும் நடுவிரலால் நன்கு பிடிக்கவும். வலது கையை இடுப்பில் வைத்துக்கொள்ளவும். பார்வை நேராக இருக்கட்டும். இடது கால் மற்றும் கை நேராக நீட்டியபடி இருக்கட்டும்.

எடை முழுவதும் வலது காலில் இருக்கும். இந்த நிலையில் இருந்து ஆறு முறை மூச்சை இழுத்துவிடவும். பிறகு மூச்சை உள் இழுத்தவாறு இடது கை மேல் நோக்கியும், இடது காலை, பழைய நிலைக்குக் கொண்டுவரவும்.

ஓரிரு விநாடிகளுக்குப் பின், இடது கையை முன்பக்கமாகக் கீழ் இறக்கவும். இதேபோல், வலது புறமும் செய்யவும். இதற்குப் பிறகு, உத்தானாசனம் செய்யலாம். தேவைப்பட்டால், சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம்.  

பலன்கள்:

உடலின் முழு எடையும் ஒரு காலில் இருப்பதால், கால் வலுவடையும். கால் முட்டிக்குப் பின்னால் உள்ள பகுதி நன்கு நீட்டப்படும். ஒரு காலில் நிற்கும்போது கவனம் அதிகரிக்கும். கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கும்.
 
  • தொடங்கியவர்

பொய்மை ஏற்றால் உலகமே நோயாளியாகி விடும்
 

article_1483432202-hjgk.jpgபோருக்கான ஆயுதங்களையும் மது உற்பத்திகளையும் நிறுத்தினாலே போதும் உலகில் வறுமை, பசிப்பிணி அறவே அகல்வதுடன் நிரந்தர சமாதானமும் ஏற்படுவது உறுதியாகும்.  

நோய்களை உற்பத்தியாக்கி அதற்கான நவீன மருந்துகளைத் தயாரிப்பது, நவீன வியாபாரக் கொள்ளையடிப்பை உலக வர்த்தகம் செய்துகொண்டிருக்கிறது.  

நோய்களற்ற உலகை இயற்கையான வழியில் தடுக்காமல் நச்சு மருந்துகளூடாக மக்களுக்குத் திணிப்பது உலக அநியாயத்தின் உச்சமாகும். 

 இப்படியிருக்க, நாடு செழிக்க வேண்டும் எனக் கோஷமிடுவது எம்மை நாமே ஏமாற்றுவது போலாகும். நவீனம் என்னும் பொய்மையைக் கண்டபடி ஏற்றால் உலகமே நோயாளியாகி விடும்.  

ஏழ்மை, துன்பம் இல்லாமல் ஒழிக்க வழியுண்டு. தீயநோக்கான முழு அரசுகளின் செயற்பாடுகள் நசுக்கப்படல் வேண்டும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

டிசம்பர் - 04

 

கிமு 46 : டைட்டஸ் ருஸ்பீனா என்ற நகரில் இடம்பெற்ற சமரில் லபீனஸை ஜூலியஸ் சீசர் தோற்கடித்தார்.

 

1493 : கொலம்பஸ், தான் கண்டுபிடித்த புதிய உலகை (அமெரிக்கக் கண்டம்) விட்டுப் புறப்பட்டார்.

 

877sabaragamuwa_province_sri_lanka.jpg1642 : இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ள்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார்.

 

1698 : லண்டனில் அரச குடும்பத்தின் வாசஸ்தலமாக விளங்கிய வைட்ஹோல் மாளிகை பெரும்பகுதி தீயினால் அழிந்தது.

 

1717 : நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தின.

 

1762 : ஸ்பெயினுக்கு எதிராக இங்கிலாந்து போர் பிரகடனம் செய்தது.

 

1847 : சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்க அரசுக்கு விற்றார்.

 

1889 : இலங்கையில் சப்ரகமுவ மாகாணம் ஸ்தாபிக்கப்பட்டது.

 

1912 : பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

 

1948 : பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெற்றது.

 

1951 : சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.

 

1958 : 14 வயதான பொபி ஃபிஷர், ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க சம்பியன் போட்டியில் வெற்றி பெற்றார்.

 

877Burj-Khalifa-.jpg1958 : சோவியத் ஒன்றியத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உலகின் முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.

 

1959 : லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற முதல் விண்கலம் ஆகியது.

 

1990 : பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் ரயில் ஒன்றும் சரக்கு ரயில் ஒன்றும் மோதியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

 

1998 : அல்ஜீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

2004 : நாசாவின் ஸ்பிரிட் கலம்  செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

 


2007: அமெரிக்க நாடாளு மன்றத் தின் முதல் பெண் சபாநாயகராக நான்சி பெலொசி தெரிவானார்.

 

2010 : ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நிர்மாணிக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீபா உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

ஜனவரி 4: பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கிய லூயிஸ் பிரெய்ல்
பிறந்த தினம் இன்று.

 
  • தொடங்கியவர்
 

article_1483512175-IMG_9538.JPG

2017 ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் மலர் கண்காட்சிக்கு, நுவரெலியா விக்டோரியா பூங்கா தயாராகி வருகின்றது. இப்பூங்காவிலுள்ள பலவிதமான பூக்கன்றுகள், மலர ஆரம்பித்துள்ளன. அத்துடன், பார்வையாளர்களை கவரும் வகையில், பூங்காவை நவனமயமாக்கம் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (பா.திருஞானம்)

article_1483512214-IMG_9518.JPG

article_1483512223-IMG_9513.JPG

article_1483512230-IMG_9526.JPG

article_1483512241-IMG_9483.JPG

article_1483512252-IMG_9480.JPG

article_1483512265-IMG_9449.JPG

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த போட்டோ அவ்வ்வ்வ்வளவு அழகு!

ஜப்பானில் ஹச்சி என்ற விசுவாமான நாய்க்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த சிலை அருகே வந்த குட்டி நாய் ஒன்று ஹச்சியைப் போலவே போஸ் தர, அதை அந்தப் பக்கமாக சென்ற பெண் போட்டோ எடுத்து அப்லோட் செய்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தப் படம் பயங்கர வைரலானது. உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும்.

dog_01324.jpg

vikatan

  • தொடங்கியவர்

2015-ல் புத்தகம்... 2016-ல் ஓட்டம்... 2017-ல் என்ன செய்ய போகிறார் மார்க் ஸக்கர்பெர்க்..!?

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் நியூ இயர் ரெசல்யூஷன் எடுப்பவர்களுக்கு இன்ஸ்ப்ரேஷன். ரெசல்யூஷன் எடுத்தோம் ஒரு மாதம் ஃபாலோ செய்தோம் பின்னர் விட்டுவிட்டோம் என்று இல்லாமல் தொடர்ந்து செய்யவும் அதே ரெசல்யூஷனை ஃபாலோ செய்யும் ஒரு சமூகத்தை இணைப்பில் வைத்திருப்பதும் தான் மார்க் ஸக்கர்பெர்க்கின் ஸ்டைல்.

2015-ம் ஆண்டை இயர் ஆப் புக்ஸ் என்ற ரெசல்யூஷனோடு ஆரம்பித்த மார்க், வருடம் முழுவதும் இரண்டு வாரங்களுக்கு ஒரு புத்தகத்தை படிப்பேன் என்று சபதமெடுத்தார். அதேபோல் செய்து முடித்தார். 2016-ம் ஆண்டு என்ன செய்வார் என்று எதிர்பார்த்தபோது உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஓடினார். வருட இறுதியில் 365 மைல்கள் ஓடி முடித்திருக்க வேண்டும் என்பது தான் 2016 இயர் ஆஃப் ரன்னிங் ரெசல்யூஷன்.

மார்க் சக்கர்பெர்க்கின் இயர் ஆஃப் ரன்னிங்

வருடா வருடம் ரெசல்யூஷன்களில் தெறி காட்டிய மார்க். 2017ல் என்ன செய்யப்போகிறார் என்று டைம்லைனில் விழி வைத்துக் காத்திருந்த ரெசல்யூஷன் க்ரூப்பிற்கு இன்றைய ஸ்டேட்டஸ் மூலம் விடை தந்தார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ''எல்லா வருடமும் ஒரு சவாலை முன் வைத்து துவங்குவேன். அதன் விளைவு தான் 365 மைல் ஓட்டம், ஜார்விஸ் மற்றும் 25 புத்தகம் படித்தது அனைத்துமே. 

ஜார்விஸ்

இந்த வருடத்துக்கான பர்சனல் சேலஞ்சாக நான் எடுத்திருப்பது. அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள மக்களை சந்திப்பது தான். ஏற்கெனவே இங்குள்ள மாகாணங்களில் பெரும்பாலானவற்றிலோ நான் அதிக நாட்களை செலவழித்துள்ளேன். அப்படிப் பார்த்தால் நான் இந்த வருடம் 30 மாகாணங்களுக்கு சென்று மக்களுடன் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. 

நானும் என் மனைவி பிரிசில்லாவும் தரைவழி பயணங்களை மிகவும் ரசித்திருக்கிறோம். இப்போதும் அது தொடரும். சமீபத்தில் பல நாடுகளில் உள்ள மக்களை சந்தித்து அங்குள்ளவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. 

மாற்றத்துக்கு தயார் ஆகி வருகிறோம். இந்த வேளையில் தொழில்நுட்பம், உலகமயமாதல் ஆகியவற்றை செழுமைப்படுத்தி உலக மக்களை ஒன்றினைப்பது அவசியம். உலக மக்களுக்குள் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் ஃபேஸ்புக்கின் நோக்கம். ஃபேஸ்புக் மற்றும் சான்- ஸக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் மூலம் இந்த குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வோம். 

இந்த வருடம் எனது பயணங்கள் வித்தியாசமானதாக இருக்கும். சிறு நகரங்கள், பல்கலைகழகங்கள், ஆசிரியர்கள், சயிண்டிஸ்டுகள் மற்றும் மக்கள் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தும் இடங்கள் என்ற அடிப்படையில் இருக்கும். இந்த சவால் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். இதில் மற்றவர்களும் எப்படி இணையலாம் என்று நாளைய பதிவில் குறிப்பிடுகிறேன் என்று கூறியுள்ளார். 

புத்தகம் படிப்பதற்காக 2015ல் ஒரு சமூகத்தை உருவாக்கினார். உடல் ஆரோக்கியம், ஃபிட்னெஸ் என தனிமனித கவனம் அதிகம் உள்ள ஒரு சமூகத்தை அமைத்து அதன் மூலம் உலகம் முழுவதும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். கட்டாயம் இந்த சேலஞ்ச் அமெரிக்காவுக்கான சேலஞ்சாக மட்டும் இருக்காது. உலகம் முழுவதும் மற்ற மக்களோடு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க் நினைத்தால் அதற்கு இந்த சேலஞ்ச் சரியானதாக அமையலாம். மார்க்கின் மந்திர வார்த்தையான 'கனெக்ட்' கனெக்ட்டாகுமா?

Every year I take on a personal challenge to learn new things and grow outside of my work. In recent years, I've run 365 miles, built a simple AI for my home, read 25 books and learned Mandarin.

My personal challenge for 2017 is to have visited and met people in every state in the US by the end of the year. I've spent significant time in many states already, so I'll need to travel to about 30 states this year to complete this challenge.

After a tumultuous last year, my hope for this challenge is to get out and talk to more people about how they're living, working and thinking about the future.

Priscilla and I have enjoyed taking road trips together since we started dating. Recently, I've traveled around the world and visited many cities, and now I'm excited to explore more of our country and meet more people here.

Going into this challenge, it seems we are at a turning point in history. For decades, technology and globalization have made us more productive and connected. This has created many benefits, but for a lot of people it has also made life more challenging. This has contributed to a greater sense of division than I have felt in my lifetime. We need to find a way to change the game so it works for everyone.

My work is about connecting the world and giving everyone a voice. I want to personally hear more of those voices this year. It will help me lead the work at Facebook and the Chan Zuckerberg Initiative so we can make the most positive impact as the world enters an important new period.

My trips this year will take different forms -- road trips with Priscilla, stops in small towns and universities, visits to our offices across the country, meetings with teachers and scientists, and trips to fun places you recommend along the way.

I've enjoyed doing these challenges with our community and I'll post tomorrow about how everyone around the world can join in. I'm looking forward to this challenge and I hope to see you out there!

vikatan

  • தொடங்கியவர்

 

விளையாடும் பாண்டாக்கள் - காணொளி

  • தொடங்கியவர்

டொனால்ட் டிரம்ப் முதல் சசிகலா வரை 2017-ல் சொல்லி அடிப்பார்களா?! #WeExpectMore

ஹிட்டோ, ஃப்ளாப்போ... 2017-ம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இவைதான். 2016-ம் ஆண்டின் சில முக்கியத் திருப்பங்களைப் போல, இவையும் இந்த ஆண்டையே மாற்றிப் போடுபவைகளாக இருக்கலாம்... இல்லாமலும் போகலாம். காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

உலக சாதனை படைக்குமா இஸ்ரோ :

2017-ம் ஆண்டின் எதிர்பார்ப்புகள் - இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வருகிற 27-ம் தேதியன்று உலக சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. 1994-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இஸ்ரோ 121 செயற்கைக்கோள்களை பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி இருக்கிறது. இவற்றில் 79 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவை. ஆனால் வருகின்ற 27-ம் தேதியன்று, PSLV-C 37 ராக்கெட் மூலம் 103 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. இதில் பெரும்பாலானவைகள் நானோ வகை செயற்கைக்கோள்கள். இது வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்படும்பட்சத்தில் உலக சாதனையாக மாறும். இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இஸ்ரோ உலக சாதனைப் படைக்குமா என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்துகொள்ளலாம்.

பீம் செயலி :

Bhim Application

பண மதிப்புக் குறைப்பு நடவடிக்கைதான் கடந்த ஆண்டில் இந்திய அளவில் அதிகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பணக்கட்டுப்பாடு காரணமாக பிரச்னையில் இருந்து இன்னும் பொதுமக்கள் மீளாத நிலையில், பணமில்லா பரிவர்த்தனைதான் அரசின் அடுத்த இலக்கு என அறிவித்து, 2016-ம் ஆண்டின் இறுதியில் 'பீம்' என்ற செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. இந்தியா முழுவதும் பணமில்லா பரிவர்த்தனை வெற்றிபெறுமா என்பது வரவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத்தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

தமிழக அரசியல் :

தமிழக அரசியல்

தமிழக அரசியலில் கடந்த ஆண்டிலிருந்தே யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா, விரைவில் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை நீங்கள் படிக்கும் இந்த நேரத்தில்கூட அது நிகழ்ந்தால் ஆச்சர்யமில்லை. மக்கள் நலக் கூட்டணியிலிருந்து தே.மு.தி.க., ம.தி.மு.க., த.மா.கா. போன்ற கட்சிகளின் விலகலும், சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து பல கட்சிகள் இன்னும் மீளாமல் இருப்பதாலும் அடுத்த தேர்தல் வரையில் தமிழக அரசியலில் எக்கச்சக்க ட்விஸ்ட்களை எதிர்பார்க்கலாம்.

ட்ரம்ப் :

டொனால்ட் ட்ரம்ப்

கருத்துக்கணிப்புகளைத் தாண்டி அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற செய்தி 2016-ம் ஆண்டின் இறுதியில் உலகத்தில் பலரது புருவத்தை உயர்த்த வைத்தது. முந்தைய அமெரிக்க அதிபர்களுடன் ஒப்பிட்டால், ட்ரம்ப் நிர்வாகத்திறமை குறைந்தவர். தனது சர்ச்சையான கருத்துகளால் ஏற்கெனவே பலரது வயிற்றிலும் புளியைக் கரைத்திருக்கும் ட்ரம்ப், அதிபர் ஆனதும் என்ன செய்யப்போகிறார் என்பதை உலகமே உற்றுநோக்கிக் கவனித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கிறார் ட்ரம்ப். அதன்பின் அவர் எடுக்கும் முடிவுகளால் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிகழப்போவது மாற்றமா? இல்லை வீழ்ச்சியா? எனத் தெரியவரும்.

ஜூனியர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் :

ஜூனியர் உலகக்கோப்பை கால்பந்து

17 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் முதன்முறையாக சர்வதேசக் கால்பந்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. போட்டிகளை நடத்தும் நாடு என்பதால், இப்போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்று மைதானங்கள் பட்டியலில் சென்னை இடம் பெற்றுள்ளது என்பது ஆறுதல் செய்தி. ஐ.எஸ்.எல். போட்டிகளுக்கு அடுத்தபடியாக இதையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினால், கால்பந்து விளையாட்டில் இந்தியாவிற்கு இது பெரிய உந்துதலாக அமையும்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை :

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை

கிரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பையாகக் கருதப்படும், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை இந்த முறையும் இங்கிலாந்து நடத்துகிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி குரூப்-பி பிரிவில் இடம் பெற்றிருக்கிறது. இதே பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இந்தியாவின் முதல் போட்டியே பாகிஸ்தான் அணியுடன் என்பதால் சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது. தோனி தலைமையிலான இந்திய அணி சாதிக்கவில்லை எனில், ஒருநாள் போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பு விராத் கோஹ்லி வசம் மாற வாய்ப்பு உள்ளது. சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமா இந்திய அணி? பொறுத்திருந்து பார்ப்போம்.

பாகுபலி-2 :

பாகுபலி-2

2015-ம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார்?' என்ற கேள்வி 2016-ம் ஆண்டில்கூட ட்ரெண்ட்டில் வலம் வந்தது. இந்தியாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் இதன் இரண்டாம் பாகத்தை வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் என இப்படம் சார்ந்து வெளியிடப்படும் அத்தனையும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகுமளவிற்கு எதிர்பார்ப்பு பெருத்துக் கிடக்கிறது. இப்படமும் வெற்றி பெற்றால், பாகுபலி இந்தியத் திரையுலகத்தின் பெரிய மைல்கல்லாக நிலைத்து நிற்கும்.

2.0 :

2.0

எந்திரன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அதே கதைக்களத்தை அடிப்படையாகக்கொண்டு '2.0' படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாயை நெருங்கியிருப்பதால், இப்போதைக்கு அதிகப் பொருட்செலவில் உருவான இந்தியப் படம் என்ற பெருமையைத் தட்டிச்சென்றுள்ளது.

ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ரசூல் பூக்குட்டி என பெரிய டீம் இருப்பதால், படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமில்லாமல், ஆங்கிலம், சைனீஸ் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவிருப்பதாகத் தகவல். சூப்பர்ஸ்டார் படம் வெளியானாலே பட்டாசு கொளுத்தும் ரசிகர்கள், தீபாவளியை எதிர்நோக்கி இப்பவே வெயிட்டிங்!

vikatan.

  • தொடங்கியவர்

04.01.1643: பிரபல விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இன்று!

 
newton

 

ஐசக் நியூட்டன்  04.01.1643 (பழைய ஜுலியன் நாட்காட்டியின் படி 25.12.1642) அன்று இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார்.

சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் தனது சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவர் ஒரு ஆங்கிலக் கணிதவியலாளராக, அறிவியலாளராக, தத்துவஞானியாகவும் விளங்கினார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் திகழ்ந்தார்.

உடல் நலக் குறைபாடு காரணமாக நியூட்டன் மார்ச் 20, 1727 அன்று மரணமடைந்தார்

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

வீடியோ விளையாட்டுக்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன?

உலக அளவில் வேகமாக வளரும் வீடியோ விளையாட்டுத்துறையில் பிரிட்டன் நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன.

  • தொடங்கியவர்

'இந்தியாவில் தீர்வு கண்டால், உலகத்துக்கு தீர்வு கண்டுவிடலாம்'- சுந்தர் பிச்சை

sundar-pichai_1_14327.jpg

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு வந்துள்ளார். டெல்லியில் இன்று சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினார் சுந்தர் பிச்சை. 

'கடந்த 18 ஆண்டுகளாக எவ்வளவு மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த முடியும் என்பதையே இலக்காக வைத்துள்ளது கூகுள். அதற்கு ஆன்ட்ராய்ட் போன்ற தளங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இந்தியாவில் ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டால், உலகுக்குத் தீர்வை கண்டுவிடலாம்' என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியின் போது, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடன் இருந்தார். இந்நிகழ்ச்சியில், 'மை பிஸ்னஸ்' (My Business) என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இணையதளத்தின் மூலம் 10 நிமிடங்களில் சிறிய தொழிலுக்குத் தேவையான இணையதளத்தை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 'டிஜிட்டல் அன்லாக்ட்' (Digital Unlocked) எனும் புதிய கோர்ஸ் (course) இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், ஆன்லைனில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பதற்கான வழிவகைகள் இருக்கும் எனக் கூறப்பட்டது.

vikatan.

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: மனிதர்களை ஏமாற்றும் கொசு!

 

 
mosquito_toon_3112640f.jpg
 
 
 

ங் கொய்ங்… என ரீங்காரமிட்டுக்கொண்டு கடிக்கும் கொசுவைத் திரும்ப அடித்திருக்கிறீர்களா? பெரும்பாலும் அடிக்கும்போது கொசு எஸ்கேப் ஆகிவிடும். சுதாரித்து அடித்தாலும்கூட அவ்வளவு சுலபத்தில் அடிக்க முடியாது. கொசுவை அடிக்க ஏன் இவ்வளவு கஷ்டம்? அதற்கு என்ன காரணம்?

கொசுவை ஏன் அடிக்க முடியவில்லை? “அடிக்கப் போனேன். கண் இமைக்கும் நொடியில் பறந்துவிட்டது என்கிறீர்களா? உண்மையிலேயே கொசு ரொம்ப நேரம் உங்கள் கைகளுக்கு இடையே இருந்தது. ஆனாலும் முடியவில்லை. நீங்கள் சொல்கிற கண் இமைக்கும் நேரம் என்பது எவ்வளவு நேரம் தெரியுமா? இந்த நேரத்தில் எவ்வளவு பெரிய விஷயங்கள் எல்லாம் நடந்து விடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

தமிழ் இலக்கணத்தில் ‘மாத்திரை’என்ற ஓர் அலகு உண்டு. ஓர் எழுத்தை உச்சரிக்க ஆகும் கால அளவை, மாத்திரை என்று கூறுவார்கள். பொதுவாக ‘கண் இமைக்கும்’நேரமும் ‘கை சொடுக்கும்’நேரமும் மாத்திரை எனப்படும். சரி, மிக ரொம்ப நேரம் கைகளுக்குள் இருந்தும் கொசுவை ஏன் அடிக்க முடியவில்லை? முதலில் உண்மையில் அது ரொம்ப நேரம் நம் கைகளுக்குள் இருந்ததா?

ஓர் ஆண்டின் அருமையை மாணவனிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு மாதத்தின் அருமையை மாதச் சம்பளக்காரரிடம் கேட்டுப்பாருங்கள். ஒரு நிமிடத்தின் அருமையை உயிர் காக்கும் மருத்துவரிடம் கேட்டுப்பாருங்கள். ஒரு வினாடியின் அருமையை ஓட்டப்பந்தய வீரரிடம் கேட்டுப்பாருங்கள்.” என்ற விழிப்புணர்வு வசனத்தை நீங்கள் படித்திருப்பீர்கள் அல்லது கேட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ‘நானோ நொடி’யின் அருமையை யாரிடம் கேட்பது? அதாவது ஒரே ஒரு செகண்ட், அதை ஆயிரம் பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பகுதிதான் நானோ நொடி.

ஏதேனும் விழாவுக்குத் தாமதமாகச் செல்வதையே நம்மில் பலரும் பொருட்படுத்துவதில்லை. இதில் ‘நானோ நொடி’யை யார் பொருட்படுத்துவார்கள்? ‘நானோ நொடி எல்லாம் ஒரு விஷயமா?” என்று நினைப்பவர்களைத்தான் கொசு கடிக்கிறது. அவர்களிடமிருந்து தப்பித்தும் போய்விடுகிறது. ‘நானோ நொடி’யில் அது தப்பித்துச் செல்வது ஆச்சரியமில்லை. எப்படித் தப்பிக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

அந்த ஆச்சரியத்திற்கு முன்னால், நேரத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு நொடி நேரத்தில் இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கிறது? ஒரு ‘நானோ’ நொடியில் என்னவெல்லாம் நடக்கிறது?

ஒரு நொடி நேரத்தில் ஒரு வார்த்தையை நாம் பேசிவிட முடியும். ஓர் எழுத்தை எழுதிவிட முடியும். போனில் ஒரு ஹலோ சொல்லிவிட முடியும். ஒரு ‘மடக்கு’த் தண்ணீரை விழுங்கிவிட முடியும். ஒரு நானோ நொடியில் என்ன நடக்கிறது என்பது அதைவிட ஆச்சரியம். இந்த ஆச்சரியத்தைத் தெரிந்துகொண்டால், கொசு ஏன் தப்பித்துவிடுகிறது என்பதும் தெரிந்துவிடும்.

ஒரு நானோ நொடியில், பூமி தன் சுற்றுப்பாதையில் 30 மீட்டர் தூரம் நகர்ந்திருக்கும் இடி முழக்கம் 30 செ.மீ. தொலைவைக் கடந்து முழங்கியிருக்கும். மின்னல் ஒளி ரொம்பவே ஆச்சரியம், ஆயிரத்தில் ஒரு பங்கு வினாடி நேரத்தில் அது 300 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து போயிருக்கும். 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் கார் ஒன்று 3 செ.மீ. தூரம் நகர்ந்திருக்கும்.

இந்த நானோ நொடியில் தன் இறகை மேலும் கீழுமாகக் கொசு ஒரு முறை அசைத்திருக்கும். அதாவது கொசு ஒரு வினாடி நேரத்தில் தன்னுடைய இறகைக் கிட்டத்தட்ட ஆயிரம் முறை அடித்துக் கொள்கிறது. அதனால்தான் ‘ங்கொய்ங்’என்ற சப்தம் வருகிறது. வினாடிக்கு ஆயிரம் முறை அடித்துக்கொள்கிறது என்றால் அதன் வேகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு வேகத்தில் போகிற கொசுவை நம்மால் எப்படிப் பிடிக்க முடியும்? அடிக்க முடியும்?

சில சோம்பேறிக் கொசுக்கள் இருக்கின்றன. அவை நிமிடத்துக்கு 500 அல்லது 600 முறை மட்டுமே இறகுகளை அடித்துக்கொள்கின்றன. கொசுவைப் பொறுத்தவரையில் இது ரொம்ப ரொம்ப மெதுவான வேகம். இந்த மெதுவான நேரத்தில் கொசுக்கள் நம் கைகளில் நீண்ட நேரம் இருப்பதாகவே அர்த்தம். அப்படியிருக்கும் அவை தப்பித்து விடுகின்றன. இப்போது சொல்லுங்கள். “நீயெல்லாம் எனக்குக் கொசு மாதிரி” என்று யாரையாவது பார்த்துக் கேட்க முடியுமா?

(காரணங்களை அலசுவோம்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்

 

உலகில் மிகவும் செங்குத்தான சாலையில் வசிப்பது எப்படியிருக்கும்?
----------------------------------------------------------------------------------------------------
வாருங்கள்....உங்களை நியூசிலாந்திலுள்ள டுனேடின் பகுதிக்கு
அழைத்துச் செல்கிறோம்.

  • தொடங்கியவர்

லூயி பிரெய்ல்

 

stalin_3112905f.jpg
 
 
 

பிரெய்ல் எழுத்துமுறையை உருவாக்கியவர்

பார்வையற்றோர் படிக்க உதவும் பிரெய்ல் எழுத்துமுறையைக் கண்டறிந்த லூயி பிரெய்ல் (Louis Braille) பிறந்த தினம் இன்று (ஜனவரி 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு அருகே உள்ள கூப்வெரி கிராமத்தில் (1809) பிறந்தவர். தந்தை குதிரை லாடம், சேணம் தயாரிக்கும் பட்டறை வைத்திருந்தார். 3-வது குழந்தையான லூயி, தந்தையின் பணிமனையில் ஊசியை வைத்து விளையாடியபோது, கண்ணில் குத்தி காயம் ஏற்பட்டது.

* முறையான சிகிச்சை பெறாததால் அந்தக் கண் பார்வை பறிபோனது. கண் நோயால் இன்னொரு கண்ணிலும் பார்வை இழந்தார். தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் கேட்டு, தொட்டு, முகர்ந்து பார்த்து உணர்ந்து அவை பற்றி அறிந்துகொண்டார்.

* பார்வையற்றோருக்கான உலகின் ஒரே பள்ளியான ‘ராயல் இன்ஸ்டிடியூட் ஃபார் பிளைண்ட் யூத்’ அமைப்பில் 10 வயதில் சேர்க்கப்பட்டார். அங்கு எழுத்துகளை விரலால் தொட்டு உணர்வதற்கு ஏற்ப அவற்றை மேடாக்கிப் புத்தகங்கள் தயாரித்து மாணவர்களுக்கு கல்வி புகட்டப்பட்டது.

* அனைத்து எழுத்துகளும் மேடாக இருப்பதால், பெட்டிகள் போல புத்தகங்கள் தடிமனாக இருக்கும். மொழிகள், இலக்கணம், இசை, கணிதம், கைத்தொழில் பயிற்சி அனைத்தும் இந்த முறையிலேயே கற்பிக்கப்பட்டன. அப்பள்ளியில் படிப்பது, இசை கற்பது, கணக்குப் போட்டு பார்ப்பது, கைத்தொழில் கற்பது எனப் புதிய அனுபவங்களில் உற்சாகமாக மூழ்கினார்.

* போர்க்களத்தில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக ‘நைட் ரைட்டிங்’ என்ற முறையை சார்லஸ் பார்பியர் என்ற ராணுவத் தளபதி உருவாக்கியிருந்தார். இதுபற்றி விளக்க அவர் இப்பள்ளிக்கு வந்தார். அவரது எழுத்துமுறை 12 புள்ளிகளைக் கொண்டிருந்தது.

* மாணவர்களுக்கு கற்றுத்தர இந்த முறை பின்பற்றப்பட்டது. ஏற்கெனவே இருந்த அளவுக்கு சிரமம் இல்லை என்றாலும், இதிலும் சற்று சிரமப்பட்டும் மெதுவாகவும்தான் படிக்க முடிந்தது. எனவே, இதற்கு மாற்றாக எளிதாகவும் வேகமாகவும் பயில ஒரு புதிய முறையை உருவாக்க உறுதியேற்றார் லூயி.

* இரவும் பகலும் பாடுபட்டு ஆராய்ச்சியில் இறங்கினார். புள்ளிகளைப் பலவிதமாக மாற்றி மாற்றி அமைத்து, பரிசோதனைகள் செய்து, புதிய குறியீட்டு மொழியை உருவாக்கினார். வெறும் ஆறே புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த மொழியில், பாடங்கள், சூத்திரம், அறிவியல் கோட்பாடு, கணக்கு, இசைக்குறிப்பு, கதை, கட்டுரை, நாவல் என எல்லாவற்றையும் எழுதலாம், படிக்கலாம்.

* இந்த அற்புதத்தை நிகழ்த்தியபோது இவருக்கு 20 வயதுகூட பூர்த்தியாகவில்லை. இவரது அற்புதமான இந்தக் கண்டுபிடிப்பை பாராட்டி, ஊக்கப்படுத்திய பள்ளியின் இயக்குநர், பள்ளியிலும் அதை அறிமுகம் செய்தார்.

* பட்டப்படிப்பு முடித்த பிறகு, அதே பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 6 புள்ளிகள் கொண்ட பிரெய்ல் முறையின் முதல் புத்தகத்தை 1829-ல் வெளியிட்டார். இதே முறையைப் பயன்படுத்தி ‘ஹிஸ்டரி ஆஃப் பிரான்ஸ்’ என்ற நூலை இவரது பள்ளி நிர்வாகம் 1837-ல் வெளியிட்டது.

* தொடர்ந்து அறிவியல், கணிதம் தொடர்பான பிரெய்ல் புத்தகங்களை வெளியிட்டார். தன் நண்பர் பியரியுடன் இணைந்து பிரெய்ல் தட்டச்சு இயந்திரத்தை தயாரித்தார். பார்வையற்றோர் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றிவைத்த மேதை லூயி பிரெய்ல், காசநோயால் பாதிக்கப்பட்டு 1852 ஜனவரி 6-ம் தேதி மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

இப்படி ஒரு கேலக்ஸியை பார்த்திருக்க மாட்டீங்க!

'இதுவரை இப்படி ஒரு கேலக்ஸியை பார்த்ததே இல்லை' என கண் அகல சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். சமீபத்தில் அவர்கள் கண்டறிந்த PGC 1000714 கேலக்ஸியின் மையம் சிவப்பு நிறத்திலும் சுற்றி இருக்கும் வளையம் நீல நிறத்திலும் இருக்கிறதாம். Hoag என்ற வகையை சேர்ந்த இந்த கேலக்ஸி மிக மிக அரிதானது என்றும் இதன் மையத்தின் வயது 5.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மொத்த பிரபஞ்சத்திலும் PGC 1000714 மட்டும்தான் இப்படி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

 

galaxy_00529.jpg

vikatan

  • தொடங்கியவர்

தொடைப் பகுதியை வலுவாக்கும் அர்த்த உட்கடாசனம்

 

முட்டிகள், தொடைப் பகுதி, கால் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த அர்த்த உட்கடாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்லபலனை காணலாம்.

தொடைப் பகுதியை வலுவாக்கும் அர்த்த உட்கடாசனம்
செய்முறை :

இரு கால்களையும் ஒன்றாக வைத்து நிற்கவும். கண்கள் திறந்தபடி, கைகள் உடலை ஒட்டிய நிலையில் இயல்பாக இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் முன்புறமாக மேலே கொண்டுசெல்லவும். தலைக்கு மேல் கைகள் நேராக இருக்க வேண்டும்.

ஓரிரு விநாடிகளுக்குப் பின், மூச்சை வெளியே விட்டபடி, முட்டியை மடித்து, மேல் உடலை முன்புறமாகக் கொண்டுசெல்லவும். ஓரிரு விநாடிகளுக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேல்புறமாக நகர்த்தி முதுகெலும்பை, பின்னால் நன்றாக வளைக்க வேண்டும். இந்த நிலையில் தொடைகள் தரைக்குச் சமமாக இருக்கும். பார்வை நேராக இருக்கும்.

பலன்கள்:

கணுக்கால்கள், முட்டிகள், தொடைப் பகுதிகள் வலுவாகும். கீழ் முதுகு நன்கு பலம்பெறும். தோள்பட்டைத் தசைகள் நன்கு விரிவடையும்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
பொறுமையுடன் நிறை மாந்தராக உயர்ந்திடுக
 

article_1483504576-ghfjgi.jpgசகிப்புத்தன்மை என்பதே மனோபலத்தின் ஆழமான அடையாளம்தான். தன்னம்பிக்கை மிகையாக உள்ளவர்களே, சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.  

தனது குறிக்கோளை அடைய மௌனமாக இருப்பவன் என்றும் தனது மனோபலத்தில் நம்பிக்கையுடையவனாவான். மாறாத திடசிந்தனையுடன், எடுத்த நல்ல காரியங்களைச் சிரத்தையுடன் முடிப்பான்.  

மேற்படி சிந்தனையினை மனத்தில் இருத்தினால், பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மையும் பிறர்செய்த தவறுகளை மன்னிக்கும் இயல்பும் தானாகவே சுரக்கும்.  

தேசத்தலைவர்களின் மாபெரும் வெற்றிக்கு, இந்தச் சகிப்புத்தன்மையே கைகொடுத்துள்ளது. மேலும், எல்லா அறிஞர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் எடுத்த காரியத்தை சகிப்புத்தன்மையுடன் ஏற்று, இடர் களைந்து வெற்றியீட்டியுள்ளார்கள். 

சதா சஞ்சலமான நிலையினை நிரந்தரமாகக் கொண்டவர்களுக்குப் பொறுமை எது? பொறுமையுடன் நிறை மாந்தராக உயர்ந்திடுக. 

  • தொடங்கியவர்

நாள்முழுமைக்குமான எனர்ஜி கொடுக்கும் 3 நிமிடப்பயிற்சிகள் ! #InstantEnergyTips

பயிற்சிகள்

காலையில் தாமதமாக எழுவது... அவசர அவசரமாகக் குளித்து, உடையணிந்து, அரைகுறையாகச் சாப்பிட்டு அலுவலகம் செல்வது... நாள் முழுவதும் சோர்வுடன் வேலை பார்ப்பது... இரவில் தூக்கம் வராமல் பல மணிநேரம் ஃபேஸ்புக்கில் சாட் செய்வது... நள்ளிரவில் உறங்குவது... மீண்டும் அடுத்தநாள் காலை தாமதமாக எழுவது... இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்றைய இளையதலைமுறையினரின் அன்றாட வாழ்க்கை. அதீத வேலைப் பளு, உடல் சோர்வு காரணமாக வார இறுதி எப்போது வரும் என ஏங்கித் தவிக்கிறார்கள். வார இறுதி விடுமுறை கொண்டாட்டங்களும் ஓய்வும் முடிந்தாலும், மறுபடியும் திங்கள் திரும்பத் தொடங்கிவிடுகிறதே! பிறகு..? இதே சோர்வு... களைப்பு... அலுப்பு... வேலை! உடல் சோர்வைப் போக்குவதற்கு இவர்களில் பலருக்கும் யோகா பயிற்சி செய்வதற்குக்கூட நேரமில்லாமல் போகிறது. வேலைப் பளு காரணமாக ஏற்படும் இந்தச் சோர்வை, அலுவலகத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்தே விரட்டும், சில எளிய பயிற்சிகள் பற்றித் தெரிந்துகொள்வோமா ?

முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர்ந்து, தலையை இடப் பக்கத்திலிருந்து வலப் பக்கமாக மெதுவாகச் சாய்க்கவும். வலது தோள் மேல், வலது காது படும்வரை சாய்க்க வேண்டும். பின்னர் இதேபோல் வலப் பக்கத்திலிருந்து இடப் பக்கமாக தலையைச் சாய்க்கவும். இதேபோல ஐந்து முறை செய்யவும்.

கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து, கழுத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கீழ்நோக்கி முன்னே சாய்க்கவும். இப்படிச் செய்யும்போது மூச்சை வெளியேற்றவும். அதேபோல் மெதுவாக மூச்சை உள்வாங்கிக்கொண்டு கழுத்தை மீண்டும் மேலே உயர்த்தவும். இப்படி தொடர்ந்து 10 முறை செய்யவும். இதனால் பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் தசை இறுக்கம் நீங்கும்.

இரு புருவங்களுக்கும் மேலே, முன்நெற்றியில் இரு கைக்கட்டை விரல்களால் ஒரு நிமிடம் வரை அழுத்திக்கொண்டேயிருந்து பின்னர் விடவும். இதனால் வேலைக்கு நடுவில் ஏற்படும் சோர்வு நீங்கும்.

இரண்டு கை ஆள்காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் சேர்த்துவைக்கவும். இந்த நான்கு விரல்களையும் முகத்தின் இருபுறமும் படுமாறு வைத்து,  முகம் முழுக்க மெதுவாக அழுத்திவிடுகிற மாதிரி தேய்க்கவும். இதனால் முகத்தில் ஏற்படும் சோர்வு, தளர்ச்சி நீங்கும்.

கண் விழியை இட வலமாக, மேல் கீழாக ஐந்து முறை சுழற்றவும். எண் '8' வடிவில் சுழற்றவும். இதுபோ‌ல் இரண்டு ‌நி‌மிட‌ம் செ‌ய்யவு‌ம். இதன் மூலம் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம், சுருக்கம், சோர்வு நீங்கும்.

இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று அழுந்தத் தேய்த்தால், உஷ்ணம் அதிகரிக்கும். இப்படி தேய்த்த பிறகு, இரு உள்ளங்கைகளாலும் முகத்தை மூடி 5-8 விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும். இதனால் கண்கள் சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெறும்.  

ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு, அதனை முதலில் விழிக்கு 10 சென்டிமீட்டர் தொலைவில் வைத்துப் பார்க்கவேண்டும். பின்னர் ஒரு அடி தொலைவில் வைத்துப் பார்க்க வேண்டும். பின்னர் 10 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்க்கவேண்டும். இதோப்போன்று 10 முறை தொடர்ந்து செய்யவேண்டும்.  இதனால் கண்ணின் குவித்துப்பார்க்கும் திறன் (Focus ability) அதிகரிக்கும். கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.

முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர்ந்து, தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்த்து பின்னர் நிமிரவும். தலையை நேராக வைத்துக்கொண்டு, வாயை நன்றாகத் திறந்து கீழ்த்தாடையை இடம் வலமாக அசைக்கவும். இதனால் கழுத்து, தோள் தசை இறுக்கம் நீங்கும்.

ஆங்கில எழுத்தான 'E' -யை உச்சரிக்கும்படி  பற்களைக் கடித்துக்கொண்டு, அதன் வழியாக வா‌ய்‌க்கு‌ள் கா‌ற்றை ‌உள்ளிழுக்கவு‌ம். ‌பி‌ன்ன‌ர் உள்ளிழுத்த கா‌ற்றை மூக்கு வழியாக வெ‌ளியே‌ற்றவு‌ம். இதுபோ‌ல் 10 முறை செ‌ய்யவு‌ம். இப்படிச் செய்யும்போதே வாய்க்குள் குளிர்ச்சி ஏற்படுவதை உணர முடியும். இதனால் மூளை சுறுசுறுப்பாகும்.

வேலைக்கு நடுவில் அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடக்கவேண்டும். காபி, டீ உள்ளிட்ட கஃபைன் பானங்கலுக்கு பதிலாக,  தண்ணீர், பழச்சாறு பருகலாம்.     

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 05

 

1554 : நெதர்லாந்தில் ஐன்ட்ஹோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால், அப்பகுதியிலிருந்த வீடுகளில் 75 சதவீதமானவை சேதமடைந்தன.

 

878varalaru-05-01-2016.jpg1757 : பிரான்ஸின் பதினைந்தாம் லூயி கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.

 

1781 : அமெரிக்கப் புரட்சிப் போரின்போது வேர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரை யாக்கப்பட்டது.

 

1854 : அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

 

1896 : வில்ஹெம் ரொண்ட் ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பின்னர் “எக்ஸ் கதிர்” எனப் பெயரிடப்பட்டது.

 

1900 : ஐரிஷ் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.

 

1918 : ஜேர்மனி­ய தொழிலாளர் களின் அமைதிக்கான சுதந்திரக் குழு (நாஸிக் கட்சி) அமைக்கப்பட்டது.

 

1940 : பண்பலை வானொலி முதற்தடவையாக செயற்படுத்திக் காட்டப்பட்டது. 

 

1945 : போலந்தின் புதிய சோவியத் சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.

 

878vararu.jpg1967 : இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

 

1971 : உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடைபெற்றது.

 

1974 : பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த பூகம்பத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் கொல்லப்பட்டனர்.

 

1991 : சோமாலியாவில் வன்முறைகள் தீவிரமடைந்ததால் அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் ஹெலிகொப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

 

1993 : பிரிட்டனின் ஷெட்லண்ட் தீவுக்கு அருகில் எண்ணெய்த்தாங்கி கப்பலொன்று மூழ்கியதால்  84,000 தொன் மசகு எண்ணெய் கடலில் பரவியது.

 

1976 : கம்போடிய நாடானது ஜனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.

 

1997 : ரஷ்யப் படைகள் செச்சினியாவிலிருந்து வெளியேறின.

 

2000 : அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

2005 : ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள்  ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

 

2007 : நிட்டம்புவையில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 60 பேர் காயமடைந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

அலமாரிக்கடியில் சிக்கிய தம்பியைக் காத்த இரண்டு வயது அண்ணன்

அமெரிக்காவின் உடாவில் இரட்டையர்களான பாவ்டியும் ப்ராக் ஷாஃபும் தங்கள் அறையில் விளையாடிக்கொண்டிருந்தபோது இது நடந்தது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.