Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 24
 

article_1453616445-Ekneli300.jpg41: கலிகுலா என அறியப்பட்ட ரோம மன்னன் கையுஸ் சீசஸ் படுகொலை செய்யப்பட்டான்.

1857: தெற்காசியாவின் முதலாவது பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1862: ருமேனியாவின் தலைநகராக புகாரெஸ்ட் தெரிவுசெய்யப்பட்டது.

1918: ரஷ்யாவில் கிறகரியன் கலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1924: ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பர்க் என முன்னர்அறியப்பட்ட பெட்ரோகார்ட் நகரின் பெயர் லெனின்கிராட் என மாற்றப்பட்டது.

1939: சிலியில் இடம்பெற்ற பூகம்பத்தில் சுமார் 5000 பேர் பலியாகினர்.

1966: பிரான்ஸ், இத்தாலி எல்லையில் எயார் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால் 117 பேர் பலி.

1972: இரண்டாம் யுத்தத்தின் முடிவிலிருந்து குவாம் காட்டில் மறைந்திருந்த ஜப்பானிய படைவீரர் சோய்ச்சி யோகோஸ் கண்டுபிடிக்கப்பட்டார்.

1986: வொயேஜர் 2 விண்கலம்  யுரானஸ் கிரகத்தை 81500 கிலோமீற்றர் தொலைவில் கடந்து சென்றது.

1993: துருக்கிய பத்திரிகையாளர் உகுர் முக்கு, கார் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.

1996: ரஷ்யாவுக்காக உளவுபார்த்தாக குற்றம் சுமத்தப்பட்ட போலந்து பிரதமர் ஜோசப் ஒலெக்ஸி இராஜினாமாச் செய்தார்.

2003: அமெரிக்காவில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் செயற்பட ஆரம்பித்தது.

2006: இலங்கை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

2007: சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

2009: இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல்போனார்.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Nahaufnahme und Text

நடிகை ரியா சென்னின் பிறந்தநாள்
Happy Birthday Riya Sen

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டு

தமிழர் கடல்!

  • தொடங்கியவர்

11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 10 மடங்கு பசுமையாக இருந்த சஹாரா பாலைவனம்: புதிய ஆய்வில் தகவல்

 

11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 10 மடங்கு பசுமையாக இருந்த சஹாரா பாலைவனம்: புதிய ஆய்வில் தகவல்
 

11,000 ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் 10 மடங்கு பசுமையாக இருந்தது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனமான ஆபிரிக்க கண்டத்தில் உள்ள சஹாரா பாலைவனம் அதிக வெப்பம் கொண்ட பாலைவனமாகும்

ஆனால் இந்த பாலைவனம் 5000 முதல் 11000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இருப்பதை விட 10 மடங்கு பசுமையாகவும், ஈரப்பதமாகவும் இருந்தது.

அந்த கால கட்டத்தில் அங்கு அதிகமான மழை பொழிவு இருந்தது அப்பகுதி முழுவதும் பசுமையாக இருந்ததால் மக்கள் அதிக அளவில் குடியிருந்தனர். கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாகவும் இருந்தது.

இதனால் கால்நடைகளும் பெருமளவில் வளர்க்கப்பட்டன. ஆனால் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் வறட்சி பிடியில் சிக்கியது. 1000 ஆண்டுகள் படிப்படியாக வறண்டு வெப்பம் மிகுந்த பாலைவனமாக மாறியது.

இந்த தகவல் புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஜெசிகா டயர்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சஹாரா பாலைவனம் பகுதியில் பெய்த மழை அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் இத்தகைய தகவல் தெரிய வந்துள்ளது, பருவநிலை மாற்றம் காரணமாக சஹாரா படிப் படியாக பாலைவனமாக மாறி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி மூலம் இங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதும் அறியப்பட்டுள்ளது.

sahaaradesert-kfYE--621x414@LiveMint

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

வெளியுறவுத்துறையில் பெண்களுக்கு எதிரான விதிகளை நீக்கிய முத்தம்மாவின் பிறந்த தினம் இன்று!

முத்தம்மா

ன்றைய காலகட்டத்தில் சிவில் சர்வீஸ் எழுதும் பல பெண்கள் அறிந்திருக்க வேண்டிய பெண்ணின் பெயர், முத்தம்மா. ஐ.எஃப்.எஸ் முத்தம்மா. மூடத்தனத்தை தனி ஒருவராக உடைத்தெறிய காரணமாக இருந்தவர். அரசு வேலைகளில் பெண்களுக்கு இருந்த தடைகளை தகர்த்து, அரசின் மிக உயர்ந்த பதவிகளில் பெண்களும் அமர்ந்து சாதிக்க வழி ஏற்படுத்தி கொடுத்த மாபெரும் பெருமைக்குரிய முத்தம்மாவின் பிறந்த தினம் இன்று.

* சி.பி.முத்தம்மா (கொனிரா பெல்லியப்பா முத்தம்மா) கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த விராஜ்பேட் என்ற ஊரில் 1924-ஆம் ஆண்டு பிறந்தார்.

* ஒன்பது வயதாகும் போது தந்தையை இழந்த முத்தம்மாவின் படிப்பில் மிகக் கவனமாக இருந்தவர் அவருடைய தாய். தன்னுடைய நான்கு குழந்தைகளையும் படிப்பில் சிறக்க காரணமாக இருந்தார். மடிக்கேரியில் பள்ளிப்படிப்பை முடித்த முத்தம்மா, சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு, பிறகு சென்னை பிரெசிடென்ஸி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்ட மேற்ப்படிப்பை முடித்தார். படிப்பில் கில்லியான முத்தம்மா கல்லூரி காலங்களில் பல முறை தங்கம் வென்றவர்.

* 1949-ல் வெளியுறவுத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்த சி.பி.முத்தம்மா, 1970-ல் ஹங்கேரிக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டு 'இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி' என்ற பெருமைக்குரியவரானார். அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து, கானா ஆகிய நாடுகளுக்கு இந்திய தூதராக பணியாற்றியுள்ளார்.

* முத்தம்மாவின் காலத்தில் வெளியுறவு துறையில் பணியாற்றும் பெண்ணுக்கு திருமணம் என்றால், அதற்கு அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது.  ஒருவேளை திருமணம் முடிந்து குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியை சரிவர செய்ய முடியாவிட்டால் அவர் ராஜினாமா செய்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல விதிகள் இருந்தன. தெளிவாக சொல்லப்போனால் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்ற ஆண்களுக்கு மட்டுமே பல சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன.

* தனது 25-வது வயதில் முத்தம்மா வெளியுறவுத் துறையில் சேரும் போது, அக்குழுவின் பணி நியமன தலைவர், மேற்கொண்ட விதிகளைக் கூறி 'வெளியுறவுத் துறையில்தான் நீ சேர வேண்டுமா?' எனக் கேட்டபோது, 'ஆமாம் எனக்கு இந்தப் பணிதான் பிடித்திருக்கிறது' என்றுக் கூறிய முத்தம்மா உடனே அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அன்று மாற ஆரம்பித்தது பெண்களின் தலையெழுத்து.

* பணிக்கு வந்த பிறகு தன்னுடைய துறையில் பெண்களுக்கு எதிராக இருந்த விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார். அரசு விதிகளில் இருந்த ஆணாதிக்கக் கருத்துக்களை தன்னுடைய விடா முயற்சியால் உடைத்தெறிந்து,  இன்றைய கால பெண்களுக்கு வழி அமைத்துக் கொடுத்த பெருமைக்குரியவர்.

* தொடர்ந்து 32 ஆண்டுகள் செவ்வனே அரசுப்பணியைச் செய்துவந்த முத்தம்மா, 1982-ல் ஓய்வு பெற்றார். தனது பணி ஓய்விற்கு பிறகு அவர் செய்த காரியம் எல்லோரையும் வியக்கவைத்தது. டெல்லியில் முக்கிய இடத்தில் இருந்த தனது 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

8_Temp_b9efe9fd-35b4-4e43-b160-e0537d673

* அரசுத் துறைகளில் பணியாற்றிய பெண்களுக்கு எதிரான விதிகளை நீக்க, அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு உரமாக அமைந்தது பெரியாரின் பெண்ணடிமை ஒழிப்பு போராட்டமாகும். கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த முத்தம்மா, தனது 85-வது வயதில் அக்டோபர் 10, 2009-ம் ஆண்டு பெங்களூருவில் காலமானார்.

* இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கேற்ப தன்னுடைய வாழ்நாளை அமைத்துக் கொண்டவர் முத்தம்மா.

vikatan

  • தொடங்கியவர்

170 ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு 50 இலட்சம் வசனங்கள்: பின்தங்கிய கிராம ஆசிரியர் சாதனை

 

வெறும் 170 ஆங்கில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி 50 இலட்சம் வசனங்களைக் கொண்ட கட்டுரையொன்றைத் தயாரித்து, மகாராஷ்ட்ர மாநில ஆசிரியர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

7_English_Article_Using_170_Words.jpg

பாலாசாஹேப் சாவன் (37) என்பவர் ஒரு ஆங்கில ஆசிரியர். இவர் மகாராஷ்ட்ராவின் மிகப் பின்தங்கிய மாவட்டமான தஹனுவில் உள்ள பாடசாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்திருக்கவும் அவற்றைக் கொண்டு வசனம் அமைக்கவும் சிரமப்படுவதைக் கண்டு வருந்திய இவர், அவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பினார்.

அதன்படி, தனது மாணவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான வசனங்களை, மிகக் குறைவான வார்த்தைகளைக் கொண்டு அமைக்கத் தொடங்கினார். இதுவே நாளடைவில் உத்வேகமாக மாறவே, மேலும் மேலும் வசனங்களை வடிவமைக்கத் தொடங்கினார்.

இந்த முயற்சியை சாவன் ஆரம்பித்த மூன்றாவது மாதமே இந்திய சாதனைப் புத்தகத்தில் சாதனையாக இது பதியப்பட்டது. அப்போதும் தனது முயற்சியை நிறுத்தாத சாவன், குழந்தைகளுக்கு எப்படி கல்வி புகட்டுவது என்பது குறித்து 50 இலட்சம் வசனங்களைக் கொண்ட பெரியதொரு கட்டுரைத் தொகுப்பை தற்போது பூர்த்தி செய்துள்ளார்.

இதற்காக அவர் பயன்படுத்திய ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை.... வெறும் 170 தான்! இந்த வார்த்தைகளையே மாற்றி மாற்றி ஒழுங்கமைத்தே இந்தப் புத்தகத்தை சாவன் எழுதியுள்ளார்.

இவரது முயற்சியைப் பெரிதும் பாராட்டும் பாடசாலை அதிபர், தற்போது தங்களது மாணவர்கள் எவரும் ஆங்கிலத்தைக் கண்டு பயப்படுவதே இல்லை என்று பெருமைபடக் கூறுகிறார். மேலும், இதற்குக் காரணமாக இருக்கும் ஆசிரியர் சாவனை தங்களது பாடசாலைக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றும் குதூகலிக்கிறார்.

இதுபோன்ற முயற்சி இதுவரை செய்யப்படாததால், கின்னஸ் சாதனையாகவும் இது பதியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

virakesari.lk

  • தொடங்கியவர்

வயதானாலும் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம் இப்படி! #BeautyTips

 

அழகு

 

கத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நம் மனதைப் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளும் போது தான் முகம் பொலிவுற்று புறத்தோற்றத்திலும்  அழகுடன் இருக்க முடியும். வயதானாலும்  இளமையைத் தக்க வைத்துக் கொள்ள அகம் புறம் இரண்டுக்குமான டிப்ஸ்களை தருகிறார் அழகுகலை நிபுணர் ராதிகா.

ஆரோக்கிய உணவு!
அழகு என்றதும் முகப்பொலிவுக்கும் நிறத்துக்குமே முக்கியம் கொடுத்து முகப்பூச்சுக்கு  மட்டுமே தயாராகிக் கொண்டிருப்போம். அப்படி இல்லாமல் வைட்டமின் சத்துகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், சத்தான தானியங்களை எடுத்துக் கொள்வது நல்லது. சுத்தமான நீரை தேவையான அளவுக்குப் பருக வேண்டும்.

உடல் எடை கவனம்!
ஆரோக்கிய உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சரிவிகித உணவும் அவசியம். உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க தேவையற்ற துரித உணவுகளை தவிர்ப்பதுடன், சீரான உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க முடியும்.

மன நலம் காப்போம்!
தேவையற்ற மன அழுத்தத்தால் உடல் பொலிவை இழக்க நேரிடும். பார்லர்களில் இதற்கென உடல் மசாஜ்கள் செய்யப்படுகின்றன. பார்லர்களில் செல்ல விரும்பாதவர்கள் வாரம் ஒருமுறை வீட்டிலேயே மசாஜ் செய்து எண்ணெய் குளியல் செய்து கொள்ளலாம். தினமும் காலையிலும் மாலையிலும் மெடிடேஷன் என்று சொல்லக் கூடிய தியானப் பயிற்சி மனதைப் புத்துணர்வுடன் வைத்திருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் வெளித்தோற்றமும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உருளைக் கிழங்குஇளமையைபுதினா

முகப்பூச்சுக்கு இதெல்லாம்!

  * உருளைக்கிழங்கின் சாறு எடுத்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி,15  நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். கருவளையங்கள் நீங்குவதுடன் நல்ல தூக்கம் கிடைக்கும்.

* தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குளித்து வர, நாளைடைவில் முகம் பொலிவு பெறும்.

*  புதினா இலையை அரைத்து சாறு எடுத்து கடலை மாவுடன் சேர்த்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் `பேக்' போட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர, முகத்தில் உள்ள மாசு நீங்கி `பளிச்' அழகு கிடைக்கும்.

* வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு சேர்த்து குழைத்துப் பூச கன்னம் பொலிவுறும்.

* கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பூசி வர முகச் சுருக்கம் நீங்குவதுடன் முகம் பொலிவுறும். இதை கைகளுக்கும் பூசிக் கொள்ளலாம்.

முக அழகுக்கு முக்கியம் தருவது போலவே தலைமுடி பராமரிப்பும் அவசியம். அதனால் மாதம் ஒரு ஸ்பா செய்து கொள்ளலாம்.

அதிக அளவில் மேக்கப் செய்து கொள்ளாமல், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத காஸ்மெட்டிக் பொருட்களை மட்டும் பயன்படுத்தும் போது உடல் சுருக்கம் மூலம் இளவயதில் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தவிர்க்கலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கமா பிறந்த கதை!

மொழிதீபா ராம்

 

p61a1.jpg

இரண்டு வெவ்வேறு வார்த்தைகளை ஒன்றாக்கி புது வார்த்தை உருவாக்குவதுதான் ஆங்கிலத்தில் Portmanteau. இதோ ஓர் உதாரணம்...

ஸ்பூன் தெரியும். ஃபோர்க் தெரியும். Spork  தெரியுமா? ஸ்பூன் போலவே வட்ட வடிவ நுனியுடன், fork  மாதிரி கூர்மையான முட்கள் சேர்ந்து இருக்கும் கரண்டிக்குப் பெயர்தான் spork. இதைக் கண்டுபிடித்தவர் Samuel W. Francis. இந்த spork-ஐ foon  என்றும் சொல்லலாம்.

* நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள் கைக்கடிகாரம். முன்னொரு காலத்தில் அதை அணிவதற்குப் பதில் velcro வைத்து ஒட்டிகொள்ளும் பழக்கம் இருந்தது. tape போல இருக்கும் முள்ளுப்பட்டியின் மேல் ஓட்டும் இந்தப் பொருளுக்குப் பெயர்தான் Velcro. velvet மற்றும் crochet ஆகிய இரு வார்த்தைகளைச் சேர்த்ததுதான் Velcro. முதலில் இதை Shoe lace ஆகப் பயன்படுத்தவே சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த George de Mestral கண்டுபிடித்தார். காலம் செல்லச் செல்ல வேட்டி முதல் பர்ஸ் வரை அனைத்திலும் velcro இடம்பிடித்துவிட்டது!

* Johnson & Johnson, L & T, Dolce & Gabbana... இப்படி பல நிறுவனங்களின் பெயர்களோடு இணைந்து இருப்பதுதான் ampersand என்கிற and. ஏற்கெனவே இருக்கிற 26 ஆங்கில எழுத்து களோடு சேர்த்து 27-வதாக ampersand-ம் இருந்தது என்பது ஆச்சர்யமான செய்தி! and எனப்படும் இந்த எழுத்தின் வடிவம் (&) உண்மையில் இரு வேறு லத்தீன் எழுத்துகளின் ஒட்டு. encyclopaedia-வில் இருக்கிற  ஒட்டு எழுத்து போலவே, et எனும் எழுத்தை சேர்த்து எழுதினால் and போல தெரியும். இன்றும் கணினி font Caslon-ல் இந்த amperstand அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

* ampersand எனப்படும் `&' 1800-களில் குழந்தைகள் பாடும் ABCDEFG ரைம்ஸில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ரைம்ஸ் பாடும்போது `X, Y, Z, and.' எனப் பாடி முடித்தால் குழப்பமாக இருக்கும் என்பதால், `and per se and.' என்று குழந்தைகளுக்குப் புரியும்படி ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தார்களாம். பின்னர் இந்தப் பாடலின் கடைசி வரி முற்றிலும் மருவி `ampersand' என்று மாறியது.

* Aldus Manutius என்கிற இத்தாலியப் பதிப்பாளர் உருவாக்கியதே comma எனப்படும் punctuation. இவர்தான் italics மற்றும் semicolon-னையும் உருவாக்கினாராம். முன்னொரு காலத்தில் slash mark ( / ) virgule என்று சொல்லப்பட்ட punctuation மட்டுமே வார்த்தையை பிரிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அச்சில் ஏற்றும்போது இந்த நிறுத்தக் குறியை கொஞ்சம் குட்டியாக வார்த்தைக்கு கீழே போட்டுப் பார்த்தால்  நன்றாக இருக்குமே என்று  Manutius-க்கு தோணியது. உடனே அவர் அதை செய்ததோடு, இந்த ஸ்லாஷ் குறியீட்டை கொஞ்சம் வளைத்து (,) அலங்காரமாக உருவாக்கினார். அன்றில் இருந்து இன்று வரை comma எனப்படும் நிறுத்தக்குறி வளைந்தே இருக்கிறது!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

giphy.gif

யாருகிட்ட...நம்மகிட்டயேவா?

  • தொடங்கியவர்

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள 10 வழிகள்! #ReadToLearn

வாசிப்புப் பழக்கம், புத்தகம், 10 வழிகள், படிப்பு

“எனக்கும் புத்தகங்கள் படிக்க ஆசை தான். ஆனா,இருக்குற நேரம் பூரா வாட்ஸ்ஆப், பேஸ்புக் பார்க்கவே சரியா இருக்கு. டிவி பார்க்ககூட நேரம் இல்ல  இதுல எங்க இருந்து புக்கு படிக்கிறது”என்கிற மனிதரா  நீங்கள் ..?  வாசிப்புப் பழக்கம் இல்லையே என்று ஏங்குபவரா..  அப்போ உங்களுக்கு இந்த முத்தான பத்து வழிகள் கண்டிப்பாக பயன்தரும்.

வழிமுறைகளை பார்ப்பதற்கு முன்,”புத்தகங்கள் படிப்பது இனிமையான அனுபவம்” என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்.புத்தக வாசிப்பு என்பது மனது ஒன்றிச் செய்ய வேண்டிய செயல்.இல்லையெனில் நீங்கள் படிக்க தேர்ந்தெடுத்திருக்கும் புத்தகம் எவ்வளவு தான் எளிமையான பொருளடக்கத்தைக் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக படிக்க முடியாது. அப்படி உங்களால் எவ்வளவு முயன்றும் படிக்கும் மனநிலை வரவில்லை எனில் புத்தகங்களை மூட்டை கட்டிவைத்து விட்டு, உங்கள் விருப்ப வேலைகள் எதையாவது செய்யலாம் 

சரி,பாயிண்ட்களுக்குக்கு வருவோம்,

டைம் ப்ளீஸ்!

நாம் சாப்பிட, தூங்க நேரம் ஒதுக்குவது போலவே புத்தக வாசிப்பிற்கும் ஒரு நாளில் குறிப்பிட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரங்களில் படித்தே தீருவது என்று உறுதி எடுத்துகொள்ளுங்கள்.காலையில் தேநீர் அருந்தும் நேரத்தில் அன்றைய செய்தித்தாள்கள் பார்ப்பதுபோல,காலை,மதியம் மற்றும் இரவு உணவு உண்ணும் நேரங்களில் படிக்க முயற்சி செய்யுங்கள். இதுவே கிட்டத்தட்ட ஒரு நாளில் ஒரு மணிநேர வாசிப்பாக ஆகிவிடும்! இது ஒரு நல்ல தொடக்கமாக மட்டுமே இருக்கும். இதற்கு மேலும் நீங்கள் நேரம் ஒதுக்கலாம்!

புத்தகமும் கையுமாக அலையுங்கள்!

கையோடு ஒட்டிபிறந்த ரெட்டை பிறவியாய் இருக்கும் மொபைல் போன்களுடன் ஒரு புத்தகத்தையும் வைத்திருங்கள். ’இதென்ன எல்லா எடத்துக்கும் புக்கு எடுத்துட்டு அலைய முடியுமா?’என யோசிக்காதீர்கள்.நாம் வாழும் இந்த காலத்தில் பெரும்பாலான நேரம்  யாருக்கோ காத்திருத்தலிலே கழிகின்றது.எப்போதும் கையில் புத்தகம் இருப்பது இந்த நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க பயன்படும். உதாரணமாக, பேருந்துக்கோ அல்லது ரயிலுக்கோ காத்திருக்கும் நேரம். ஆர்வக்கோளாறில் படம் பார்க்க செல்லும் தியேட்டர்களுக்கு எல்லாம் எடுத்து செல்லாதீர்கள். சற்றேனும் படிக்க நேரம், இடம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டும் எடுத்து செல்லுங்கள்.

 

புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்,

பட்டியல் போடுங்கள்

என்னென்ன புத்தங்கங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் கைவசம் இருப்பது நல்லது. அதில் எந்த புத்தகங்கள் உங்களிடம் உள்ளன என குறித்து கொள்ளலாம்.ஒரு புத்தகத்தை படித்து முடித்தவுடன் அதனை அடித்து விடுங்கள், அல்லது படித்து முடித்ததற்கு எதாவது அடையாளம் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பட்டியலை உங்கள் மொபைல் போன், அல்லது மெயிலிலோ கூட வைத்துக்கொள்ளலாம். பட்டியலில் புத்தகங்கள் படித்து முடித்து எண்ணிக்கை குறைய குறைய புதிய புத்தகங்களை சேர்த்தக்கொண்டே இருப்பதை கவனித்து கொள்ளுங்கள்.

இடம் முக்கியம் ஜி!

நாம் எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்கிறோம் என்பதை போலவே எந்த இடத்தில் இருந்து படிக்கிறோம் என்பதும் முக்கியம்! உங்களை சுற்றி எந்த இடையூறுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.மிகவும் இரைச்சல் மிகுந்த இடத்தில அமர்ந்து படிப்பது வீண். அதனால் அமைதியான இடமாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.அமர்ந்து படிப்பது தான் சரியான முறை.  அப்படி படித்தால் தான் முழு கவனத்துடன் படிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மறந்தும் கூட படுத்தபடி படிக்க வேண்டாம். இல்லையெனில் தூங்கி எழுந்தவுடன் உங்கள் புத்தகத்தை உங்கள் முதுகின் கீழே கசங்கிய நிலையிலோ அல்லது தரையிலோதான் கண்டெடுப்பீர்கள்.

 

புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்

டிவி, இன்டர்நெட்க்கு போடுங்கள் தடா!

மற்ற எல்லாவற்றையும் விட இது சற்று கடினம் தான். ஆனால் இதனால் விளையும் பயன் ரொம்பவே அதிகம்.தினமும் டிவி மற்றும் இன்டர்நெட்டில் செலவழிக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.படிக்கும் நேரம் தானாக அதிகமாகும்.”இப்போதெல்லாம் மக்கள் சமூக வலைதளங்களில் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் மேல் படிக்கிறார்கள்” என்கிறார் எழுத்தாளர்.ஜெயமோகன். இதில் பாதி நேரத்தை புத்தகங்கள் படிக்க ஒதுக்கினாலே போதுமானது.

கதை சொல்ல கத்துக் கொள்ளுங்கள்

இதுதான் நமக்கு கை வந்த கலையாச்சேன்னு கிளம்பிடாதீங்க. ஒரு புத்தகத்தை படித்து அந்த புத்தக கருத்துகளையோ அல்லது கதையையோ மற்றவரிடம் பேசும்போது மேற்கோள் காட்டி பேசி பழகுங்கள்.வீட்டில் சிறுவர் சிறுமியர் இருந்தால் இரவு நேரங்களில், அவர்கள் தூங்கப் போகும்முன் ஏதாவது ஒரு சிறுவர் புத்தகத்தை படித்து காட்ட பழகுங்கள். இதனால் சிறு வயதிலேயே வாசிப்பின் மீது அந்தக் குழந்தைகளுக்கும் ஈர்ப்பு வரும்,நமக்கும் படித்தது போல் இருக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!

புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்

பழைய புத்தகக் கடைகளை நாடுங்கள்!

புத்தகங்களின் விலையை பார்த்தவுடனே மயக்கம் போட்டு விழுநதுவிட வேண்டாம்.புது புத்தகங்கள் தான் படிக்க வேண்டும் என்பது இல்லை.நமக்காகவே உள்ளன பழைய புத்தக நிலையங்கள்.”பல சமயங்கள் பழைய புத்தக கடைகளில் தான் மாணிக்கங்கள் கிடக்கும்”என எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி கூறுவதுண்டு. சோ,மாணிக்கங்களைப் பொறுக்க எடுக்க பழகிக்கொள்ளுங்கள்.அருகிலுள்ள நூலகங்களை பயன்படுத்துவது இன்னும் நலம்! திருப்பி கடுக்க வேண்டிய அவசியத்தால் நிச்சயம் படித்து விடுவீர்கள்.  

ஈஸி! ஈஸி!

என்னதான் தமிழ் நம் தாய் மொழியாக  இருந்தாலும், புதிதாகப் படிக்க ஆரம்பிக்கும் பொது கொஞ்சம் எளிமையான புத்தகங்களை படிப்பதே நல்ல வாசகருக்கு அழகு. இல்லையெனில் தற்போதுள்ள சூழலில் பயன்படுத்தும் சிக்கலான வார்த்தைகளைப் பார்த்து தெறித்து விடுவீர்கள். ஒவ்வொரு வருட சென்னை புத்தககக் கண்காட்சியிலும் மாறாத ஒரே விஷயம், தமிழின் பெஸ்ட் செல்லர் நம்ம சுஜாதா சார் தான். படிக்க எளிமையாகவும்,சுவாரஸியமாகவும்  இருப்பதால் இவரது புதினங்கள் நிச்சயம் ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கும்.

புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்

கேங் லீடர் ஆகுங்கள்!

நீங்கள் படிக்கத் தொடங்கியுள்ள புத்தகம் பற்றி உங்கள் முகநூல் பக்கம் அல்லது வாட்ஸ்அப் நிலைத் தகவலில் எழுதுங்கள். அப்படியே படிக்கும் போது அந்த புத்தகத்தில் இருந்து சில வாக்கியங்கள் அல்லது கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுங்கள்.அதைப்பற்றி யாரேனும் உங்களிடம் நிச்சயம் கேட்பார்கள். அவர்களுக்கு நீங்கள் புத்தகங்கள் சிபாரிசு செய்யலாம்! அப்படியே படிக்கும் புத்தகம் பற்றி விவாதிக்கவும் ஆள் கிடைத்தாற் போலும் இருக்கும்.நீங்கள் கேங்லீடர் ஆவதற்கும் வாய்புகள் இருக்கு பாஸ்!

லட்சியம் முக்கியம்!

புதுவருடம் பிறக்கும்போதெல்லாம் “குடியை விடணும்”,”ஜிம்முக்கு போகணும்”  என்று உறுதிமொழிகள் எடுப்பதுபோல,  ‘இந்த வருஷம் கண்டிப்பா இத்தனை புத்தகங்கள் படிக்கணும்’ என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த உறுதிமொழியை  பாதியில் விட்டுவிடாமல் நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இதே உறுதிமொழியை மாதம் இத்தனை புத்தகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதே போல் யார் எழுதிய புத்தகம், என்னென்ன புத்தகம் என சேர்த்து சபதம் எடுத்தால் கொஞ்சம் வெற்றிபெற வாய்ப்பு அதிகம் ஆகும்.

மேலே உள்ள எல்லா விதிகளையும் இப்போதே செய்ய வேண்டும் என்றில்லை. மெதுவாக ஒவ்வொன்றாக சேர்த்து கொண்டு செய்யுங்கள்.வெற்றி நிச்சயம்!

vikatan

  • தொடங்கியவர்

டான் ஷெக்மன் 10

 

 
 
 
muthukal_3122579f.jpg
 
 
 

நோபல் பெற்ற இஸ்ரேல் வேதியியலாளர்

நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் வேதியியல் வல்லுநரான டான் ஷெக்மன் (Dan Shechtman) பிறந்தநாள் இன்று (ஜனவரி 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் (1941) பிறந்தார். அங்கு பள்ளிக்கல்வி பயின்றார். இளம் வயதிலேயே அறிவியல் நூல் களை அதிக நாட்டத்துடன் படிக்கத் தொடங்கினார். பிரபல விஞ்ஞானி ஜுல்ஸ் வெர்னேவின் ‘தி மிஸ்டீரியஸ் ஐலண்ட்’ நூலைப் படித்ததும், பொறியியலில் ஆர்வம் பிறந்தது.

* ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, இஸ்ரேல் தொழில்நுட்பக் கல்வி (டெக்னியான்) நிறுவனத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். மெட்டீரியல் இன்ஜினீயரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து படித்து, முனைவர் பட்டம் பெற்றார்.

* டெக்னியான் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். ஓஹியோ மாநிலத்தில் உள்ள வான்வெளி ஆய்வுக்கூடத்தில் ஃபெல்லோவாக நியமிக்கப்பட்டார். டைட்டானியம், அலுமினியத்தின் பண்புகள், மைக்ரோ ஸ்ட்ரக்சர் குறித்து அங்கு 3 ஆண்டுகாலம் பயின்றார். இதுகுறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

* பால்டிமோரில் உள்ள அமெரிக்க தேசிய தரம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான அமைப்பில் பணியாற்றினார். வேகமாக திடப்படுத்தப்படும் அலுமினியம் மற்றும் 10 முதல் 14 சதவீத மாங்கனீஸ் கொண்ட கலவையை எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் பார்க்கும்போது அணுக்கள், இருபதுமுக (Icosahedral) அமைப்பில் நீண்ட தொடராகக் காணப்படுவதைக் கண்டறிந்தார்.

* சீரற்ற ஆனால் சீரானதுபோலத் தோற்றமளிக்கும் அடுக்குமுறைகள் கொண்ட படிகங்கள் இருப்பதைக் கண்டறிந்தார் . இவை குவாசிகிரிஸ்டல் (Quasicrystal) எனக் குறிப்பிடப்பட்டன. இதன்மூலம் திடப்பொருள்களின் அணு அமைப்பை விவரித்தார். ஆனால் இது உடனடியாக ஏற்கப்படாமல் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. இறுதியில் இவரது முடிவுதான் சரி என நிரூபணமானது.

* குவாசிகிரிஸ்டல், இருபதுமுக முக்கோணக வடிவநிலையை (Icosahedral Phase) கொண்டது என்பதைக் கண்டறிந்தார். குவாசிகிரிஸ்டல்களைக் கண்டறிந்ததற்காக 2011-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

* பெரும்பாலான திடப் பொருட்கள் படிக வடிவிலானவை என்பதால், அவற்றின் அணுக்கள் அமைப்பு குறித்த இந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு குவாசிபீரியாடிக் கிரிஸ்டல்கள் (அரைதனிம படிகங்கள்) என்ற புதிய களம் உருவாகக் காரணமாக இருந்தது. மேலும் பல முக்கிய ஆராய்ச்சிகளுக்கும் வழிகோலியது. குறைந்த அளவிலான வெப்பம், மின்சாரத்தைக் கடத்துகிற, அதேநேரம், உயர் அளவிலான கட்டமைப்பு உறுதிகொண்ட இதே மாதிரியான குவாசிகிரிஸ்டல்கள் கண்டறியப்பட்டன.

* இயற்பியலுக்கான உல்ஃப் பரிசு, இஸ்ரேல் அரசின் இயற்பியல், வேதியியலுக்கான பரிசுகள், ஐரோப்பிய பொருள் ஆய்வுக் கழகத்தின் 25-வது ஆண்டுப் பரிசு, வேதியியலுக்கான இஸ்ரேல் ஈமெட் பரிசு, ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் பரிசு, ரோத்ஸ்சைல்ட் பரிசு என ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.

* அமெரிக்காவின் இயோவா பல்கலைக்கழகம், அமெரிக்க அரசின் ஆற்றல்சார் துறையைச் சேர்ந்த ஆமெஸ் ஆய்வகத்தின் இணை ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது கண்டுபிடிப்புகள் குறித்து பல கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளார்.

* டெல் அவீவ் டெக்னியான் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இயற்பியல்சார் வேதியியல், கட்டமைப்பு வேதியியல் துறைகளுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ள டான் ஷெக்மன் இன்று 76-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
மதம், வாதத்துக்கு உரியதல்ல!
 

article_1485318950-Religion.jpgமதப்பற்றைவிட ஆழ்ந்த இறைபக்தியே மேலானது. இன்று மதப்பற்று எனும் போர்வையினுள் நடைபெறும் அராஜகங்கள் சொல்லில் அடங்காது. 

‘பற்றை ஒழிப்பாயாக; பக்தியை வளர்ப்பாயாக’ என்பதுவே நல்வாக்கியமாகும். உண்மையான ஆன்மீகவாதிக்குத் தனது மதம் பற்றிய வெறி இருக்காது. ஆன்மாவை வளம்படுத்தும் ஆத்மீகத்துக்குள் இருள் பரவாது. 

இன்று உலகம் அமைதி இழப்பதற்கு முக்கிய காரணம், தூய ஆன்மீகம் பற்றியே தெளிவூட்டல் இன்மையாகும். எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன.  

தவறு மனிதர்களிடத்தில் மட்டும்தான்; சமயங்களில் அல்ல. மாற்றுக் கருத்துகளைத் திரிவுபடுத்தி, புரட்டுக்கதை பேசுவதில் சரிவு யாருக்கு? மதம், வாதத்துக்கு உரியதல்ல! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பயணங்களில் இத்தனை வகைகளா! #TypesOfTravels

பயணம், Travel, Tour

பயணம், சுற்றுலா என்றாலே 6 முதல் 60 வரை எல்லோருக்கும் குதூகலம்தான். அப்படிப்பட்ட பயணங்களில் பல வகைகள் உண்டு. இதோ இருக்கிறது ஒரு 10 வகைகளைப் பட்டியலிட்டுள்ளோம். பயணம் என்றால் பிடிக்கும் பலருக்குமே, பயணப்பட நேரமும், வாய்ப்பும் இல்லை என்ற ஏக்கம் இருக்கும். இதைப் படித்தால், இதிலுள்ள ஏதாவது ஒரு வகையில் பயணம் மேற்கொள்ள முயற்சிக்கலாம்!

1. வார இறுதிச் சுற்றுலா:

உங்களுக்கு பயணப்பட பிடிக்கும். அதே சமயம் 9 டூ 5 வேலை. பயணத்திற்காக என் வேலையை ஒரு நாள் கூட மிஸ் பண்ண விரும்பவில்லை என்கிறீர்களா? உங்களுக்கே உங்களுக்கென இருக்கிறது வார விடுமுறை.

விலை மலிவான போக்குவரத்துக்கு வழியில் வெள்ளி மாலை கிளம்பி ,ஞாயிறு இரவு வரும் படி ஒரு திட்டத்தை போட்டு விடலாம். இணையத்தில் தேடினால் போதும், 48 மணி நேரத்துல எப்படி எல்லாம் உலகை ரசிக்கலாம் என்று கிறிஸ் வீலர் போல பலரும் நமக்கு அட்வைஸ் தருவார்கள்.

2. தொகுப்பு விடுமுறைப் பயணம்:

மாதக்கணக்காய் வேலை பார்த்துப் பெறும், இரு வார விடுமுறையை வீணாக்கலமா? நிச்சயம் முடியாது. ஒரு கடற்கரை ஓரம் காலார நடந்து அந்த மென்மணலில் படுத்து .... கடலில் குளிப்பது ...! நினைத்தாலே உவர் காற்று முகத்தை வருடுகிறது. 

உல்லாசப் பயணமோ உறவினர், நண்பருடன் பயணமோ... எதுவானாலும் 2 வார விடுப்பை எந்த வித டென்ஷனும் இல்லாமல் கழிக்க கடலும் கடற்கரையும் சிறந்த இடம். 

3. குழுச்சுற்றுலா:

பார்ட்டி வைத்து கொண்டாடும் இளைஞர் முதல் பக்தி மார்க்கமாய் கோவில் குளம் என்று தீர்த்தயாத்திரை செல்லும் பாட்டி தாத்தாவரை அனைவரும் தங்கள் கூட்டம், சங்கம் என்று குழுவாகச் சுற்றவே விரும்புவர். “ஒரு வேன் புக் பண்ணுடா.. எடு ஒரு பஸ்ஸ கிளம்பு போவோம்" என்று போவது தான் குழுச் சுற்றுலா. கலை, சரித்திரம், சாப்பாடு, பொழுதுபோக்கு என்று எது உங்கள் விருப்பமாயினும் அது இப்பயணத்தில் சாத்தியப்படும். எல்லா தரப்பட்டவரின் எண்ணங்களும் இணைந்து எல்லா செயல்களும் இயைந்ததாகவே இப்பயணம் அமையும். 

4. சாலைப் பயணச் சுற்றுலா: 

நம்ம சிம்பு அச்சம் என்பது மடமையால R.E-ல போவார்ல அதுதாங்க இது. புது வண்டி வாங்கினாலே அதுல ஒரு ரைடு போலம்னு தோணும். அதுவே கொஞ்சம் பெரிதாய் அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கு உள்ளுரோ வெளியூரோ சென்றால் அதன் பெயர் சாலைப் பயணச் சுற்றுலா. நண்பர்கள் சேர்ந்தோ இல்லை குடும்பத்துடன் சேர்ந்தோ தேவையானதை டிக்கியில் போட்டுகொண்டு கார் எடுத்தும் சுற்றி வரலாம்.  

5. நீண்ட கால பொறுமையாக பயணம்:

இதை பெரும்பாலும் நம் நாட்டு முதியவர்கள் செய்வார்கள். எல்லாக் கடமையும் முடித்த பின்னர் காசி முதல் ராமேஸ்வரம் வரை பயணபடுவார்கள். இன்றைய காலத்தில் இளைஞர்கள் கூட இதைச் செய்கின்றனர். ஓரிரெண்டு மாதங்கள் தொடங்கி, வருடங்கள் கூட பயணம் செய்வார்கள்.

பெரும்பாலும் இப்படி பயணம் செய்ய முற்படுபவர்கள் "பட்ஜெட் யாத்திரிகர்களாக" இருப்பர். எளிமையான விடுதி, உணவு என எடுத்துக்கொண்டு சுற்றுவர். இவ்வகைப் பயணங்கள், அந்த அந்த ஊர்க் கலாசாரங்கள் குறித்து அறிந்து கொள்ள பெரிதும் உதவும். சிலர் இந்த நீண்டகாலப் பயணத்தை, உலக அமைதி, சுற்றுச்சூழல் விழிபுணர்வு என்று ஏதாவது ஒரு காரணத்திற்காகவும்   மேற்கொள்வார்கள்.  

6. கால இடைவெளிப் பயணம்: 

சிலர் வெளி நாட்டில் படிக்க வாய்ப்புக்காக காத்திருப்பார். இல்லை படிப்பு, வேலை எனத் தேடி அதற்காக காத்திருக்கும் காலம் இருக்கும் . அந்த இடைவெளியில் ஒரு பயணம் போகலாம். அதுவே கால இடைவெளிப் பயணம்.

"ஒர்க்கிங் ஹாலிடே விசா" என சில நாடுகள் நமக்கான வாய்ப்புக் கதவை திறந்து வைத்துள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று வரிசை கட்டி நம்மை அழைக்கிறார்கள். அதென்னவென்றால் அங்கு ஊர் சுற்ற காசு வேண்டுமல்லவா... அதற்காக அங்கேயே வேலை செய்து சம்பாதித்து, அங்கேயே ஊர் சுற்றி செலவு செய்து வருவது தான். இதற்கான வயது வரம்பு 18 - 30 . சில நாடுகளில் 35 வரை கூட உண்டு.

7. ஒரு நாள் பயணம்:

பெரும்பாலும் உறவினர் வந்தால் இப்பயணம் நமக்கு உதவியாய் இருக்கும். இதுதான் நடக்கும். வீட்டிற்கு யாராவது வந்தால் ஊர் சுற்றிக் காண்பிக்கலாம் என்று தோன்றும்.. உடனே கார் இருப்பவர்கள், பெட்ரோலை நிரப்பி அருகில் உள்ள எல்லா இடத்தையும் சுற்றிக் காண்பித்து உறவினரை மகிழ்ச்சியோடு அனுப்பி வைப்பார்கள். இதுதான் ஒருநாள் பயணம், சரியான திட்டம் அமைந்தால்.. இது செம ஹிட்டடிக்கும் சமாச்சாரம்!

8. நண்பர் உறவினர் வீட்டுப் பயணம்.

மேலே இருப்பதன் இன்னொரு வெர்ஷன் தான் இது!  நீண்ட நாட்களாக வெளி ஊரிலோ வெளிநாட்டில் உள்ள நண்பனோ உறவினர்களோ வீட்டிற்கு வருமாறு கூப்பிடுவார். அங்கு செல்லும்முன், வழியில் உள்ள சுற்றுலாத்தலங்களை பட்டியல் போட்டால், நண்பரைப் பார்த்த மாதிரியும் ஆனது. அங்குள்ள இடங்களை உற்ற நண்பனுடன் சுற்றி பார்த்தது மாதிரியும் ஆனது. "ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்"

9. நிகழ்வுப் பயணம்:

ஒரு நிகழ்வுக்காக ஒரு ஊருக்கு செல்வோம். நேரம் இருக்கிறதே என்று அதன் அருகில் உள்ள மற்ற இடங்களையும் சுற்றி வருவோம். என்ன நடந்ததுண்டுதானே? அதேதான்.ஐ பி எல் மேட்ச் பார்க்க சேப்பாக் ஸ்டேடியம் வந்தாலும் அப்பிடியே வள்ளுவர் கோட்டத்தையும் மெரினா பீச்சையும் பார்த்து செல்கிறோமே.. அது தான்.  ஒரு நிகழ்வுடன் இணைப்பாக இன்னும் கொஞ்சம் இடங்களை பார்த்து செல்வது. 

10. பிசினஸ் ட்ரிப்: 

இது பெரும்பாலும் கேட்டதுதான். வேலை காரணமாக வெளியூர் செல்லும் போது கம்பெனி செலவில், முதல் வகுப்பு டிக்கெட் , சொகுசு விடுதி என்று செலவு செய்யும். அந்த வேலை முடிந்து விட்டால் மிச்சம் இருக்கும் நேரத்தில் வெளியில் செல்லலாம். அதற்கும் DA வாங்கி, கம்பெனி காசிலேயே ஊர் சுற்றலாம்.  அதற்கு பின் அந்த வாய்ப்பு எப்போது என்று தெரியதல்லவா!

இதைப் போல, சுற்றுலாக்களில் பல வகைகள் உண்டு. நமக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து இந்த உலகின் நீள அகலத்தை அளக்கலாம்.  

vikatan.

  • தொடங்கியவர்

ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் அனைவரையும் கவர்ந்துள்ள புதிய மோட்டார் இல்லம்

 

படுக்கை வசதி, குளியலறை, சமயலறை என வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடன் மற்றும்  ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் இல்லம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பினை பெற்றுள்ளது.

25-1485320592-furrion-elysium-motor-home

அமெரிக்காவை சேர்ந்த பியூரின் என்ற நிறுவனம் உயர் வகை மோட்டார் இல்லத்தை தயாரித்துள்ளது. எலிசியம் என்ற பெயரில் இந்த மோட்டார் இல்லத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

25-1485320600-furrion-elysium-motor-home

குறித்த மோட்டார் இல்லம் 45 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சில சொகுசு தொடர்மாடி குடியிருப்பு வீடுகளில் இருப்பதைவிட அதிக வசதிகளை கொண்டுள்ளதாக இந்த மோட்டார் இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

25-1485320609-furrion-elysium-motor-home

இந்த மோட்டார் இல்லத்தின் மேற்கூரையில் ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளமை பலரையும் கவர்ந்துள்ளது. மேலும், இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்ட ராபின்சன் ஆர்22 ஹெலிகொப்டரும் இந்த மோட்டார் இல்லத்திற்காக வாங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது பயணிகள் பயன்படுத்தக் கொள்ளலாம்

25-1485320617-furrion-elysium-motor-home

மோட்டார் இல்லத்தின் உள்பகுதி மிக சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. அத்துடன், ஓய்வாக அமர்வதற்கான பெரிய அளவிலான இருக்கை, 75 இன்ச் திரையுடன் கூடிய எல்இடி தொலைகாட்சி பொருத்தப்பட்டு இருக்கிறது. குறித்த தொலைகாட்சி மிக மோசமான வானிலையிலும் மிகவும் துல்லியமாக இயங்குமாம்.

25-1485320633-furrion-elysium-motor-home

குறித்த மோட்டார் இல்லத்தில் அனைத்தும் தொடுஉணர்வு கட்டுப்பாட்டு ஆளிகள் கொண்டதாக இருக்கிறது. வாகனத்தை இயக்குவது கூட மிக எளிதானது என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அனைத்து வசதிகளையும் சாரதியின் இருக்கை அருகேயுள்ள தொடுதிரை சாதனத்தின் மூலமாக கட்டுப்படுத்த முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

25-1485320641-furrion-elysium-motor-home

வாகனத்தின் பின்புறத்தில் படுக்கையறை  இரண்டு பேர் தங்குவதற்கான மிக சொகுசான படுக்கை வசதியுடன் இந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது.

25-1485320649-furrion-elysium-motor-home

மரத்தாலான மாடிப்படிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாடியில் சுடுநீர் குளியலிற்காக பெரிய நீர் தொட்டி, ஓய்வாக அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இறங்குதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

25-1485320658-furrion-elysium-motor-home

25-1485320666-furrion-elysium-motor-home

சகல வசதிகளுடன் கூடிய இந்த மோட்டார் இல்லம் 2.5  மில்லியக்  அமெரிக்க டொலர் மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த மோட்டார் இல்லத்தை விற்பனை செய்யப்போவதில்லை.

25-1485320837-furrion-elysium-motor-home

தங்களது தொழில்நுட்பத்தையும், தயாரிப்புகளையும் பிரபலப்படுத்தும் நோக்கில் தயாரித்துள்ளதாகவும் பியூரின் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

virakesari.lk

  • தொடங்கியவர்

ஜப்பானின் பாராம்பரிய கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி : (படங்கள் இணைப்பு)

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜப்பானின் பாராம்பரிய கலை கலாசாரம் மற்றும் வர்த்தகம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையிலான கண்காட்சி கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபாகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

IMG_0965.jpg

இதன்போது தொழில்நுட்பம் சார்ந்த பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. 

IMG_0954.jpg

இதேவேளை, இந்த கண்காட்சி நிகழ்வானது இலங்கை மக்களுக்கு ஜப்பான் தொடர்பான தகவல்களை நேரடியாக அறிந்துக் கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனச்சி சுகனுமா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_0941.jpg

IMG_0937.jpg

IMG_0931.jpg

IMG_0924.jpg

IMG_0915.jpg

virakesari.lk

  • தொடங்கியவர்

இன்னும் 25 ஆண்டுகளில் பில்கேட்ஸ் நிலை இது தான்!

Bill Gates

இன்னும் 25 ஆண்டுகளில் பில்கேட்ஸ் உலகின் மாபெரும் பணக்காரராக உருவெடுப்பார் என ’ஆக்ஸ்போம் இன்டர்நேஷ்னல்’ என்னும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  2009ம் ஆண்டில் இருந்து,  பில்கேட்சின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 11 சதவீதம் அதிகரித்து வருகிறதாம். இது நீடித்தால், பில்கேட்ஸ் தனது 86ம் வயதில் உலகின் முதல் மிகப் பெரிய பணக்காரராக (trillionaire)  இருப்பார் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

  • தொடங்கியவர்

பிரபஞ்ச அழகி' மேடையில் அன்று போட்டியாளர்.. இன்று நடுவர்! அசத்தும் சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மலினாவில் நடக்கவிருக்கிறது 65-வது பிரபஞ்ச அழகிப் போட்டி. 23 வருடங்களுக்கு முன், இதே நகரத்தில், இதே மேடையில்தான் நம் சுஷ்மிதா சென், 'பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்' என்ற பெருமையுடன் அந்த கிரீடத்தை சூடிக்கொண்டார். இதோ... இப்போது அதே மேடைக்கு நடுவராகச் செல்லவிருக்கிறார் சுஷ்மிதா.

மனிலாவுக்கு தான் அழைக்கப்பட்டிருப்பது பற்றி தன் சமூகவலைதளப் பக்கத்தில் சுஷ்மிதா வெளியிட்டிருக்கும் ஹேப்பி போஸ்ட் இது:

''கூதூகலிக்கும் இதயத்துடன் தயார் ஆகிக்கொண்டிருக்கிறேன். 23 வருடங்களுக்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக, நெகிழ்ச்சியாக ஃபிலிப்பைன்ஸுக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். எல்லாம் ஆரம்பித்தது மனிலா 1994 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில்தான். பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, இன்று அதே மேடைக்கு நடுவராகச் செல்வதில்... வாழ்க்கை ஒரு பூரண வட்டமாவதை உணர்கிறேன். என் ஃபிலிப்பைன் நண்பர்களுக்கு இப்போது நான் அந்த உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை தெரிவிக்கிறேன். ஆம்... நான் வருகிறேன். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்!"

மனிலாவில் 65-வது பிரபஞ்ச அழகிப் போட்டி வரும் ஜனவரி 30-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் இந்தியாவின் சார்பாக பெங்களூருப் பெண் ராஷ்மிதா ஹரிமூர்த்தி கலந்துகொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் 19 வயதில் இப்படி தானும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டதில் இருந்து, இன்று தன்  41-வது வயது வரை சுஷ்மிதா ஒரு ஸ்வீட் செலிப்ரிட்டியாக நம்முடன் இருக்கிறார்.

ஹைதராபாத்தில் வசித்த பெங்காளிக் குடும்பத்தில் பிறந்தவர் சுஷ்மிதா. டீன் ஏஜிலேயே மாடலிங் துறைக்கு வந்துவிட்டவருக்கு, 19 வயதுக்குள்ளாகவே வசப்பட்டன 'ஃபெமினா மிஸ் இந்தியா' மற்றும் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டங்கள்.  அழகிப் பட்டங்கள் சுஷ்மிதாவை திரைக்கு அழைத்து வந்தன. தமிழில் 'ரட்சகன்' முதல் இந்தியில் 'ஸிந்தகி ராக்ஸ்', 'மேன் ப்யார் கூன் க்யா' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

சுஷ்மிதா சென், மகள்களுடன்

25 வயதில் சிங்கிள் உமனாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தபோது, மொத்த இந்தியாவும் சுஷ்மிதாவை நிமிர்ந்து பார்த்தது. பின்னர் மீண்டும் ஒரு கைக்குழந்தையைத் தத்தெடுத்து, இடுப்பில் ஒரு குழந்தை, கையில் ஒரு குழந்தையுடன் ஃபேஷன் முதல் சினிமா வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார் இந்த 'மாம் யுனிவர்ஸ்'.

திருமணம் செய்துகொள்ளாத சிங்கிள் பேரன்டான சுஷ்மிதா, ரெனீ,  அலிஷாவின் அன்பு அம்மா. வாழ்வையும் அழகாக்கிக்கொண்டுள்ளார்  சுஷ்மிதா!

vikatan

  • தொடங்கியவர்

இந்திய மூவர்ணத்தில் ஜொலிக்க போகும் ’புர்ஜ் கலிஃபா’

BurjKhalifa

உலகின் மிகப்பெரியக் கோபுரமான ’புர்ஜ் கலிஃபா’, இந்திய குடியரசு தினத்திற்கு மூவர்ணத்தில் ஜொலிக்க போகிறது. ஆம் ஜனவரி 26ம் தேதி அன்று இந்திய தேசிய கொடி வண்ணங்களில்  துபாயில் உள்ள புர்ஞ் கலிஃபா கட்டிடத்தை ஒளியூட்ட உள்ளனர். குடியரசு தின சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

#BurjKhalifa to be lit up in tri-colour to mark India's #RepublicDay.

 
 
71
2
3
  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

நட்பை காப்பாற்றிய நாய்! : காணொளி இணைப்பு

இரண்டு இணைபிரியாத நாய்கள் தங்களுக்குள் மரக்கிளை துண்டொன்றை மாறிமாறி பிடுங்கி விளையாடிய நிலையில்,  நீரில் அடித்து செல்லப்பட்ட தனது நட்பு நாயை, மறுமுனையிலிருந்த நாயொன்று மிக சூட்சுமமாக காப்பாற்றிய சம்பவத்துடனான காணொளி ஆர்ஜெண்டினாவில் வெளியாகியுள்ளது.

3C7BEDB700000578-0-image-m-7_14853209399

ஆர்ஜெண்டினாவின் கோர்டோபா எனுமிடத்திலேயே மேற்கண்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள ஆற்றில், இரண்டு நாய்களும் ஒரு மரக்கிளை துண்டொன்றை பிடித்து விளையாடிய நிலையில், ஒரு நாய் ஆற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் விழவே, மறுமுனையில் நின்ற நாய், நீரில் அடித்து வந்த நாயை லாவகமாக பிடித்து காப்பாற்றியுள்ளது.

3C7BEDAC00000578-0-image-m-5_14853209236

3C7BEDBB00000578-0-image-a-8_14853209548

மேலும் தங்கள் விளையாடுவதற்காக பயன்படுத்திய மரக்கிளை துண்டை நீரில் சென்ற நாய், கவ்விய நிலையில் இருந்ததாலேயே மறுமுனையில் இருந்த நாயிற்கு காப்பாற்ற வழியேற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...
ஜனவரி 25


1498 : போர்த்துக்கீச நாடுகாண் பயணி, வாஸ்கொட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.


1755 : மொஸ்கோ பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.


1881 : தோமஸ் அல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.


1882 : வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் இலங்கைக்கு வந்தனர்.


1890 : நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.


1917 : டேனிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு 25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.


1918 :  போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக யுக்ரைன் பிரகடனப்படுத்தியது.


1919 : நாடுகளின் அணி (லீக் ஒவ் நேஷன்) நிறுவப்பட்டது.


1924 : முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்ஸில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.


1942 : இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.


1949 : சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பெய்ஜிங் நகரினுள் நுழைந்தன.


1949 : இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.


1955 : ஜேர்மனியுடனான போர் நிலையை முடிவுக்கு கொண்டு வருவதாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.


891idi-amin.jpg1971 : உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் ஜனாதிபதியானார்.


1971 : இந்தியாவின் 18 ஆவது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


1981 : மா ஓ சே துங்கின் மனைவி ஜியாங் கிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.


1986 : தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.


1994 : நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.


1995 : ஜாசப் வாஸ் அடிகளார் பாப் பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.


1998 : கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.


1999 : கொலம்பியாவில் ஏற்பட்ட 6.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


2004 : ஒப்போர்ச்சுனிட்டி விண்ணுளவி  செவ்வாய் கிரகத்தின் தரையில் இறங்கியது.


2005 : இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சனநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.


2006 : சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 : 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

 

2009: முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.


2010: எத்தியோப்பிய விமானமொன்று மத்திய தரைக்கடலில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 90 பேரும் உயிரிழந்தனர்.


2013: வெனிசூலாவில் சிறைச்சாலையென்றில் ஏற்பட்ட கலவரத்தினால் 50 பேர் பலியானதுடன் மேலும் 120 பேர் காயமடைந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

 
நீருக்கடியில் கண்காட்சி - காணொளி
  • தொடங்கியவர்
உண்மைத்துவம் ஒருவனை வலிமையாக்கும்
 
 

article_1485405974-Wrestling-M_49.jpgஜப்பானில் உள்ள பயில்வானிடம் போட்டியிட்டு வெல்வதற்கு ஒருவன் அவரைப் பார்க்கச் சென்றான். பயில்வான் தனது சிற்றுண்டிச்சாலையில் இருப்பதால் அங்கு சென்றவன், அங்கே அவர் தேநீர் தயாரித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.  

கடையின் தோற்றம், பொருட்கள் வைத்திருந்த நேர்த்தி, எல்லாமே சிறப்பாக அமைந்திருந்தது. அங்கு, பயில்வான் தேநீர் தயாரிக்கும் நேர்த்தியைப் பார்த்து வியந்து போனான். நிதானமாகச் செம்மையாக, நல்ல துப்பரவான பாத்திரத்தில் தயாரித்து அதனை அவனுக்கு வழங்கினார்.  

ஆனால், பயில்வானுக்கு வந்தவன் என்ன நோக்கத்துக்காக வந்தான் என்பது தெரியவே தெரியாது. ‘அட! இத்தனை நேர்த்தியாகக் கருமமாற்றுபவரிடம் எப்படி என்னால் மோதமுடியும். தனது மல்வித்தையையும் இப்படித்தானே பயின்றிருப்பார்’ என்று மனதார உணர்ந்தவர் அங்கிருந்து விடைபெற்றார். 

செய்கருமங்களை ஆத்மார்த்தமாகச் செய்பவனின் செயலின் விஸ்தீரணம் அளவிட முடியாதது. இதன் உண்மைத்துவம் அவனை வலிமையாக்கும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'அடேய் எலிப் பயலே ஓடாதடா..!’ - டாம்&ஜெர்ரி விமர்சனம் படிக்கிறீங்களா?! #MustReadFun

ஃபேமஸ் கார்ட்டூன்களில் ஒன்றான டாம் அண்ட் ஜெர்ரிக்கு சில அகாதுகா விமர்சகர்கள் ரிவ்யூ பண்ணா எப்படி இருக்கும்? பார்ப்போமா?

ரிவ்யூ

ரிவ்யூ ரவி :

இந்தப் படத்தில் காட்டும் குட்டி எலி யார் என்னவென்று தெரியவில்லை; ஜெர்ரிக்கு அவர் தம்பியா இல்லை ஏதும் சொந்தமா என்றும் படத்தில் குறிப்பிடவே இல்லை. இருவரும் ஒரே போல் இருந்ததால் தம்பி என்றே வைத்துக்கொள்வோம் அதைப் படத்தில் உணர்த்தும்படியான ஒரு காட்சியினை வைத்திருக்கலாம். முக்கியமாகப் படத்தில் கேமராவும் சரியில்லை. ஒரு ஷாட்டில் மண்டை தெரியவில்லை டைரக்டர் கொஞ்சம் கேமாராவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் சுமார்தான். ஜெர்ரியின் தம்பி வாயில் சாப்பாட்டைத் திணித்தவுடன் கடப்பாரை போலக் காட்டியிருக்க வேண்டாம். அதிலும் டைரக்டருக்கு கவனம் தேவை. படத்தில் லாஜிக்கிலும் தவறவிட்டுவிட்டார். டாம் படுத்தக்கொண்டே எப்படி அவ்வளவு தூரம் சறுக்கி வர முடியும்? நடந்து வருவதுபோல் காட்டியிருந்தால் அந்தக் காட்சி மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். கடைசியில் மக்களுக்குக் கொண்டுசேர்த்த சோஷியல் மெசேஜ் மட்டும் சிறப்பு. ஒட்டுமொத்தமாகப் படம் ஒரு முறை பார்க்கலாம். படத்திற்கு என்னுடைய மார்க்  2/5

கறுப்புக்கலர் சட்ட கார்த்தி :

இந்தப் படம் ஒரு சின்ன ரூமிலே முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் இல்லை என்றாலும் படத்தின் வேகம் சிறப்பு. டைரக்டருக்கு பெரிய சல்யூட். படத்தில் வேறு சிறப்பம்சங்கள் என்று பார்த்தால் டாமும் ஜெர்ரியும் சண்டையிடுவது போன்ற காட்சிகள் தத்ரூபமாகவே இருந்தன. ஸ்க்ரீன்ப்ளேவில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக இருந்திருக்கும். டைரக்டர் அந்த ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு அடுத்த படத்தில் சரி செய்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. டாம், ஜெர்ரியை நோக்கிக் குச்சியை எறிவார். அந்த இடத்தில் மியூஸிக் நன்று. அதுவும் க்ளைமாக்ஸில் ஜெர்ரியைப் பந்துகள் துரத்தும் காட்சியில் பந்தின் வேகம் மட்டுமில்லை. ஒட்டுமொத்த படத்தின் வேகத்தையே கூட்டியதென்றே சொல்லலாம். ஹீரோ வில்லனைப் பழி வாங்கும் வழக்கமான கதை என்றாலும் டைரக்டர் அதை மக்களுக்குப் பிடித்தவாறே அமைத்தது படத்தின் ப்ளஸ். படத்திற்கு என்னுடைய மார்க் 3.5/5

இட்ஸ் பாண்டி :

கிரிக்கெட், பாக்ஸிங், அத்லெட் ஜானர் போன்ற படங்களுக்கு மத்தியில் டைரக்டர் டென்னிஸை மையமாக வைத்து படம் எடுத்ததற்கே பாராட்டலாம். ஹீரோ டாமிற்கும் வில்லனுக்கும் நடக்கும் டென்னிஸ் போட்டிதான் ஒட்டுமொத்தக் கதை. படத்தில் ஜெர்ரியின் காமெடி ஆங்காங்கே நன்றாக இருந்தது. சில இடத்தில் சிரிப்பு வரவில்லையென்றாலும் காமெடி காட்சிகள் ஓ.கேதான். இப்போதுள்ள ட்ரெண்டில் இல்லாமல் காமெடி காட்சிகள் மிகப் பழமையான ஒன்றாக இருந்தது. ஹீரோவும், வில்லனும் இடித்து ஒட்டிக்கொள்வது போல காட்சி 'மாற்றான்' படத்திலே வந்துவிட்டது. அதனால் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. படத்தின் நடுவில் ட்விஸ்ட்டுகள் பெரிதாக எடுபடவில்லை. படத்தின் ப்ளஸ் என்று பார்த்தால் சண்டைக் காட்சிகள் மட்டும்தான். படம் கொஞ்சம் ஸ்லோ என்றாலும் ஒருமுறை பார்க்கலாம். படத்திற்கு என்னுடைய மார்க் 1.75/5

தமிழ்வுட்ஸ் :

 

 

படம் முழுவதுமாக கெளபாய் ஜானர் திரைப்படம். வில்லன் டாமிடம் மாட்டிக்கொண்ட ஜெர்ரியை அவரது இரு நண்பர்களும் சேர்ந்து மீட்கும் காமெடிப் படம்தான் இது. மீட்க இவர்கள் பயன்படுத்தும் யுக்திகள் ரசிகர்களைக் கவரும் வண்ணம் இருந்தன. காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தாமல் கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். வெடி மருந்தை வைத்து வில்லனைக் காலி செய்யத் திட்டமிட்டிருந்தாலும் அந்த மருந்து அவ்வளவு தூரம் எப்படி வந்தது என்ற லாஜிக்கை டைரக்டர் தவறவிட்டுவிட்டார். மற்றபடி படம் ஹிட்தான். கிளாமர் காட்சிகள் இடம்பெறாத முழுக்க முழுக்க குடும்பத்துடன் சென்று பார்க்கும் ஃபேமிலி ஸ்டோரி. தொடர்ந்து இதேபோல் படம் கொடுக்காமல் டைரக்டர் கதையிலும் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுக்கும் திறன் இவரிடம் உள்ளது. படத்திற்கு என்னுடைய மார்க் 2.75/5

மறக்காம சர்ப்ரைஸ் (Subscribe) பண்ணுங்க!  மீண்டும் அடுத்த ரிவ்யூவில் சந்திப்போம்.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஜனவரி - 26

 

1340 : இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்ஸின் மன்னனாக அறிவிக்கப்பட்டார்.

 

1500 : விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேஸில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

 

1531 : போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

 

892varalaru-26-01-1017-a.jpg1788 : ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானிய கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் அவுஸ்திரேலிய சிட்னியை அடைந்து புதிய குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. இது அவுஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.

 

1841 : ஹொங்கொங்கை ஐக்கிய இராச்சியம் அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.

 

1924 : ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

 

1926 : ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.

 

1930 : இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதல் தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.

 

1949 : அவுஸ்திரேலியக் குடியுரிமைச் சட்டம் அமுலுக்கு வந்தது.

 

1950 : இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது ஜனாதிபதியானார்.

 

1952 : பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் சேதமாக்கப்பட்டது.

 

1958 : ஜப்பானிய பயணிகள் கப்பல் தெற்கு அவாஜி தீவில் மூழ்கியதில் 167 பேர் கொல்லப்பட்டனர்.

 

1965 :  இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது.

 

1980 : இஸ்ரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.

 

1992 : ரஷ்யாவின் அணுவாயுத ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.

 

2001 : இந்தியாவின் குஜராத் பூகம்பத்த்தில் 20,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

 

2004 : ஆப்கானிஸ்தானுக்கான புதிய அரசியலமைப்பில் அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் கையெழுத்திட்டார். 

 

2015 : இங்கிலாந்து திருச்சபையின் முதலாவது பெண் ஆயராக லிபி லேன் நியமிக்கப்பட்டார். 

.metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.