Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Brille

ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவ அடையாளம் கொண்ட, புகழ் பெற்ற செங்கை ஆழியான் அவர்களின் 75வது பிறந்தநாள் இன்று.

செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள்,வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் தனது சிறப்பு முத்திரை பதித்து வந்திருந்தவர் கடந்த வருடம் பெப்ரவரியில் காலமாகியிருந்தார்.

நினைந்துகொள்கிறோம் ஈழத்தின் எழுத்தின் அற்புதப்பெருமகனை

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாவ்... மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ காற்று வெளியிடை டீசர்ல இதைக் கவனிச்சீங்களா..?

வரைகலைஞர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது. “தனது படங்களின் டைட்டில் டிசைன் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுபவர்களில் மணிரத்னம் குறிப்பிடப்படவேண்டியவர்” என்றார் அவர். காற்றுவெளியிடை படத்தின் டைட்டில் போஸ்டருடன் ரிலீஸான போதே ஆஹா என யோசிக்க வைத்தார் மணிரத்னம்.

காற்று வெளியிடை, மணிரத்னம், கார்த்தி, ஏ.ஆர்.ரஹ்மான், Kaartu veliyidai

அதென்ன காற்று வெளியிடை? நாயகன் பைலட். விமானம் காற்று வெளியிடையில்தான் பறக்கிறது அல்லவா... போதாதற்கு காற்று வெளியிடை கண்ணம்மா என்று பாரதியார் வரிகள் காதலுக்கும் பொருந்துவதால் அந்தத் தலைப்பு என்கிறார்கள். மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ என்றாலே எதிர்பார்ப்பு எக்கச்சக்கத்துக்கு எகிறும். இளைஞர்களை கிறுகிறுக்க வைத்த ஓகே கண்மணிக்குப் பிறகான படம் என்பதால் எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்பு வேறு.

படத்தின் போஸ்டர் வெளியானபோதே கார்த்தியா இது என்று கேட்கவைத்தார். அத்தனை ஸ்லிம்மாக இருந்தார். ஒரு போஸ்டரில் லைட்டான தாடியோடி இருக்க,  இன்னொன்றில் க்ளீன் ஷேவில் கவர்ந்தார். கார்த்தி நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்ததும் மணிரத்னத்திடம்தான் சேர்ந்தார். ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை மறுத்து அதே படத்தில் அவருடன் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ஏற்கெனவே நியூயார்க்கில் ஃப்லிம் மேக்கிங் கோர்ஸ் முடித்தவருக்கு இயக்குநராகத்தான் ஆசை இருந்தது. ஆனால் பருத்தி வீரனின் வெற்றி, கார்த்தியை நடிகராக மாற்றிவிட்டது. ஆய்த எழுத்து படத்தில் தலைகாட்டினாலும், ஹீரோவாக மணிரத்னத்துடன் இணையும் படம் என்பதால் இருவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.  கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைதரி நடித்திருக்கிறார். முதன்முறையாக மணிரத்னத்துடன் கைகோத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. 

படத்தின் டீசர் இதோ:

இதை டீசர் என்று சொல்லாமல் Glimpse என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு படத்தின் ஒரு பார்வை என்று அர்த்தம். கார்த்தியின் குரலில் காற்று வெளியிடை கண்ணம்மா என்று ஆரம்பிக்கிறது படத்தின் டீசர். ஆரம்ப ஷாட்டில் காண்பிக்கும் சாலை ‘வாவ்... எந்த லொக்கேஷன் இது’ என்று கேட்க வைக்கிறது. பனிக்காற்று பறக்க ஹீரோயின் ‘வான் வருவான் வருவான்...’ என்று பின்னணி ஒலிக்க, பார்வையை தவழ விட, நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்று முடிக்கிறது குரல். 

இதில் கார்த்தியைக் காண்பிக்கவே இல்லை.. கவனித்தீர்களா? வான் வருவான் - என்று பைலட்டையும் குறிக்க எழுதியிருப்பதை கவனித்தீர்களா? முடிவில் படத்தின் ஒரு பாடலை பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கும்போதே (அதாவது 1ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு) வெளியிட இருப்பதாய் ஒரு வரி போட்டு, ஏ.ஆர்.ரஹ்மானின் கையெழுத்தையும் போட்டிருக்கிறார்கள். வருவான் என்பது ஹீரோவையா, ஏ.ஆர்.ரஹ்மானையா என்று குதூகலிக்க வைத்திருப்பதைக் கவனித்தீர்களா?

.vikatan.

  • தொடங்கியவர்

ரயில் நடைமேடையில் திருமணம்: கடமைக்காக பொலிஸ் வீரர் செய்த தியாகம்!

தனது தனிப்பட்ட வாழ்க்கை தன்னுடைய கடமைக்குத் தடையாக வந்துவிடக்கூடாது என்று நினைத்த சீன பொலிஸ் அதிகாரி ஒருவர், ரயில் மேடையிலேயே தனது திருமணத்தை நடத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

5_Rail_Wedding.jpg

ஸாங் க்விங்குவா என்பவர் ஒரு பொலிஸ் அதிகாரி. அவரது காதலி ஹுவாங் மெங்ஜியோ. இருவரும் ஜனவரி 23ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டனர். என்றாலும், ஜனவரி 28ஆம் திகதி சீனப் புத்தாண்டு தினம் என்பதால் பாதுகாப்பு மற்றும் ஏனைய தேவைகளுக்காக பொலிஸாருக்கு விடுமுறை மறுக்கப்பட்டது.

எனினும் குறித்த நாளில் திருமணத்தை நடத்திவிட முடிவெடுத்தனர் காதலர்கள் இருவரும்! இதையடுத்து ஜனவரி 23ஆம் திகதி, மணமகளான ஹுவாங் வாழும் ஸேஜியாங் மாகாணத்துக்கு ரயிலில் சென்று இறங்கினார் ஸாங். அங்கு, ரயில் நிலைய நடை மேடையில் மணமகளின் தரப்பில் அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் காத்திருந்தனர். அங்கேயே ஹுவாங்குடன் மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் இணைந்தார் ஸாங்.

சற்று நேரத்தில் அடுத்த ரயிலைப் பிடித்து மீண்டும் தனது வசிப்பிடத்துக்குத் திரும்பினார் ஸாங். கடமையைச் சரிவரச் செய்வதற்காக தன் திருமண நிகழ்வையே தியாகம் செய்த இந்த மணமகனை சீன மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

 

உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தைகள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள்?

  • தொடங்கியவர்

சொந்த ஊருக்கான வழியை மறந்து 30 நாள் 500 கி.மீ சைக்கிளில் பயணம்

 

சீன புத்தாண்டைக் கொண்டாடும் ஆர்வத்துடன் தன் சொந்த ஊருக்கு சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர், 30 நாட்கள், 500 கி.மீ. பயணித்த பிறகுதான், தான் வழிமாறிச் சென்று கொண்டிருந்தததை உணர்ந்துள்ளார்.

கோப்புப்படம்
 கோப்புப்படம்

ஹேலூங்ஜியாங் மாகாணம் கிக்கியாரில் உள்ள தன்னுடைய வீட்டை இலக்காக வைத்து ஒரு இளம் புலம் பெயர்ந்த பணியாளர் ரிஜோவிலிருந்து புறப்பட்டார்.

கிக்கியாரிலிருந்து சுமார் 1,700 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ரிஜோ.

ஆனால், பாதை மாறி பயணித்துக் கொண்டிருந்ததை அவர் உணரவில்லை. 500வது கிலோ மீட்டரில் போக்குவரத்து காவலர்களால் மத்திய சீன மாகாணமான அன்ககுவோவில் நிறுத்தப்பட்டார்.

அந்த நபர் தவறான வழியில் பயணித்ததை அதிகாரிகள் கண்டறிந்தப்பின், அந்த நபர் வீடு சென்று சேர ரயில் கட்டணத் தொகையை அவருக்கு அளித்துள்ளனர்.

டிசம்பர் மாதம் ஷான் டூங் மாகாணத்தில் உள்ள ரிஜோவிலிருந்து அந்த நபர் புறப்பட்டார்.

பயணத்தின்போது, இடையிடையே இணைய சேவை மையங்களில் வசித்த வந்த அந்த நபர் நிதிபற்றாக்குறையால் தவித்து வந்துள்ளதாக பீப்பிள்ஸ் ஆன்லைன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கையில் காசு இல்லாவிட்டாலும், தன் வீட்டிற்கு செல்வதில் மிகவும் உறுதியாக இருந்த அந்த நபர் சைக்கிள் மூலம் செல்ல தீர்மானித்தார்.

பெயர் தெரியாத அந்த பருக்கு வரைப்படங்களை பயன்படுத்த தெரியாது, அதனால் வழிகளுக்காக பிறருடைய உதவி தேவைப்பட்டதே அதற்கு அர்த்தம்.

சைக்கிள் ஓட்டுபவர்கள் பயன்படுத்த கூடாத நெடுஞ்சாலை ஒன்றில் இந்த நபர் பயணித்த போதுதான் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தன்னுடைய தவறை அந்த நபர் உணர்ந்தபின், தான் தடுத்து நிறுத்தப்பட்ட சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து அவர் வீடு திரும்புவதற்கான ரயில் கட்டணத்தை கொடுத்துள்ளனர்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: குளிர் அடிக்காத காற்று

 
kulir_3122743f.jpg
 
 
 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஆங்காங்கே பள்ளி மாணவர்களும், சிறுவர்களும்கூடக் கலந்து கொண்டு போராடிய காட்சியைப் பார்த்தோம். நள்ளிரவில், நடுக்கும் குளிரில்கூடத் தீவிரமான போராட்டம் நடைபெற்றது. சரி, குளிர்காற்று ஏன் வீசுகிறது? நமக்கு மார்கழியில் குளிர்காலம் தொடங்கிவிடுகிறது. அது தை, மாசி என இரண்டு மாதங்களுக்கு நீளும்.

காற்று நம் மீது பட்டால் ஜில் உணர்வுதான் நமக்கு ஏற்படும். அதிலும் லேசான குளிர்காற்று என்றால், உடல் சிலிர்க்கும். உண்மையில் காற்று குளிரைக் கொண்டுவருகிறதா? நிச்சயமாக இல்லை. காற்று குளிரையெல்லாம் கொண்டு வருவதில்லை.

ஆனால், காற்று வீசும்போதுதானே நமக்கு அதிகம் குளிர் அடிக்கிறது? வீடுகளில், ‘வாடைக்காற்று வீசுகிறது, வெளியே சுற்றாதே. வீட்டுக்குள் வந்துவிடு’ என்று அம்மா சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அப்படியென்றால் காற்றுதானே குளிரைக் கூட்டி வருகிறது.

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

உங்கள் தாத்தா, பாட்டி, அப்பாவுடன் சேர்ந்து குளிர் காலங்களில் ‘வாக்கிங்’ சென்றிருக் கிறீர்களா? நடக்கும்போது காற்று வீசினால் கூடுதலான குளிரை உணர்வோம். இதை வைத்துப் பார்த்தாலும் காற்றுதானே எங்கிருந்தோ குளிரை எடுத்து வருகிறது.

இப்படிப் பல உதாரணங்கள் சொன்னாலும், உண்மையில் காற்று குளிரைக் கொண்டுவரும் காரணி அல்ல. அதாவது, காற்று குளிரைக் கொண்டுவருகிறது என்றால் அங்கு வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதாவது வெப்பநிலை குறைய வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழாது. அதவாது வெப்பநிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதைச் சோதித்துக்கூடப் பார்க்கலாம். காற்று வீசும்போது அங்கு ஒரு வெப்பநிலைமானியை வையுங்கள்.

அது வெப்பநிலையைக் குறைத்துக் காட்ட வேண்டும் அல்லவா? ஆனால், அந்த மாதிரி வெப்பநிலையில் எந்த மாற்றத்தையும் வெப்பநிலைமானி குறைத்துக் காட்டாது. அப்படியென்றால் காற்று நிச்சயமாகக் குளிரைக் கொண்டுவரவில்லை என்றுதானே அர்த்தமாகிறதா?

kulir_2_3122744a.jpg

பிறகு எப்படிக் காற்று வீசும்போது குளிர்கிறது. அதற்கு வேறு காரணம் இருக்கிறது. எப்போதும் நம்மைச் சுற்றியுள்ள காற்று, சூழலுக்கு ஏற்ப வெப்பமடைந்து மெல்லிய படலமாக நம்மைச் சூழ்ந்து நிற்கிறது. இந்தக் காற்றுப் படலம் நம் உடலைக் கதகதப்பாக வைத்திருக்கிறது. சூழல் வெப்பமும், நம் உடல் வெப்பமும் ஒரே அளவில் இருப்பதால் நம் உடலிலிருந்து வெப்பம் வெளியேறாமல் பராமரிக்கப்படுகிறது.

குளிர்காலத்திலும் இதுபோன்று உடலுக்கும் சூழலுக்கும் ஒரே அளவில், இதமான வெப்பநிலை குறைந்து பராமரிக்கப்படும். காற்று வீசும் போது நம் உடலிலிருந்து வெப்பத்தை இந்தக் காற்று எடுத்துச் சென்றுவிடுகிறது. காற்று வேகமாக வீசும்போது அதன் பலத்திற்கேற்ப அடிக்கடி நம் உடலிலிருந்து வெப்பத்தை எடுத்துச் செல்வதுடன், நம் உடலைச் சுற்றியிருக்கும் வெப்பப் படலத்தையும் காலி செய்துவிடுகிறது. எனவே புதிய காற்று படும்போது நாம் குளிரை அதிகம் உணர்கிறோம்.

மேலும் நமது உடலிலிருந்து நீர் எப்போதும் ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. நீர் ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தை நம் உடலிலிருந்தும், உடலைச் சுற்றியிருக்கும் காற்றுப் படலத்திலிருந்தும்தான் நீர் எடுத்துக் கொள்கிறது. காற்று வேகமாக வீசும் போது ஆவியாதல் இன்னும் வேகமாக நடைபெறுகிறது. அப்போது இன்னும் அதிக வெப்பம் நம் உடலிலிருந்து வெளியேறிவிடுகிறது. எனவே, காற்று வீசும்போது குளிரை உணர்கிறோம். அது மட்டுமல்லாமல் காற்றில் நீர்த்திவலைகள் அடித்து வரும்போதும் பணியுடன் கலந்து காற்று வீசும்போதும் குளிரெடுக்கிறது நமக்கு.

இப்போது புரிகிறதா? காற்று குளிரைக் கொண்டு வருவதில்லை. அது நம் வெப்பத்தை எடுத்துக்கொண்டு போய் விடுகிறது.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

 

இந்திய குடியரசு தினத்தின் கண்கவர் காட்சிகள் (காணொளி)

  • தொடங்கியவர்

பனிக்குள் அடைபட்டுள்ள உலகின் ஆழமான ஏரி!

 

உலகில் மிக பழமையானதும், ஆழமானதுமான பைக்கால் ஏரி சைபீரிய முழுவதும் 400 மைல்கல் பரந்துள்ளதுடன், 5000 அடி ஆழமுடையதாகவும், 130 அடி ஆழத்திற்கு நன் நீரையும் கொண்டுள்ளது. குறித்த ஏரியானது குளிர்காலத்தில் உறைந்திருக்கும் அழகை படப்பிடிப்பாளர் கிறிஸ்டினா மாகேவா பதிவு செய்துள்ளார்.

...

...

...

...

...

 

...

 

...

...

...

 

...

 

...

...

...

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

கேரளம்: கடலுக்கு அடியில் நிகழ்ந்த திருமணம்

 

 
Kerala

திருவனந்தபுரம்,  கேரள மாநிலம், கோவளம் பகுதியையொட்டிய கடலுக்கு அடியில் இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிகில் பவார், கோவளத்தில் கடலில் மூழ்கி எழுபவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், ஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த யூனிகா போக்ரனை மணக்க விரும்பினார்.

இதையடுத்து, தனது திருமணத்தை புதுமையான முறையில் நடத்த முடிவு செய்தார். அதன்படி, கடலுக்கு அடியில் திருமணம் செய்ய முடிவானது. இதையடுத்து, இத்திருமணம் கோவளத்திலுள்ள தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டின்பேரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, கோவளத்தையொட்டிய கடலுக்கு அடியில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. நீர் மூழ்கும் சாதனங்கள், கவச உடைகளின் உதவியுடன் மணமக்கள் மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்.

பின்னர், இருவரும் கிளிஞ்சல்களால் செய்யப்பட்ட மாலைகளை மாற்றிக் கொண்டனர். திருமணத்தின் ஒரு பகுதியாக, அச்சடிக்கப்பட்ட கேள்விகள் மணமக்களுக்கு காண்பிக்கப்பட்ட, அதற்கு அவர்கள் சைகை மொழியில் பதிலளித்தனர்.

திருமணத்துக்குப் பின், கடலில் இருந்து வெளியே வந்த நிகில் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுமையாக திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிவிட்டது என்றார்.

யூனிகா போக்ரன் பேசுகையில், திருமணத்தை ரசித்தபோதும், சிறிது பதற்றமாக இருந்ததாக தெரிவித்தார். இந்நிலையில், இந்தியாவிலேயே கடலுக்கு அடியில் நடைபெற்ற முதல் திருமணம் இது தான் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியில், மணமக்களின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்தத் திருமணத்தை மகாராஷ்டிரத்தில் பதிவு செய்யப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஜனவரி - 27

 

1695 : ஓட்டோமான் பேரரசின் மன்னன் இரண்டாம் அஹமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா மன்னரானார்.

 

1880 : தோமஸ் அல்வா எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமை பெற்றார்.

 

1915 : ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.

 

893valrau2.jpg1918 : பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

 

1924 : விளாடிமிர் லெனினின் உடல் மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தில்  அடக்கம் செய்யப்பட்டது.

 

1926 : ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.

 

1938 : நியூயோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.

 

1944 : இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளின் இரு ஆண்டுகளுக்கு மேல் நீடித்த  லெனின்கிராட் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.

 

1967 : அப்பலோ 1 விண்வெளி வீரர்களான கஸ் கிறிஸம், எட்வர்ட் வைட், ரொஜர் சஃபி ஆகியோர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.

 

1973 : வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிஸ் நகரில் எட்டப்பட்டது.

 

1984 : பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜக்ஸன், விளம்பர படப்பிடிப்பொன்றின்போது தீவிபத்துக்குள்ளானார். 

 

1996 : நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

 

2002  : நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

 

2011 : யேமனில் அரசாங்கத்துக்கு எதிராக அந்நாட்டு தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

 

2013 : பிரேஸிலில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் 242 பேர் உயிரிழந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இதையெல்லாம் பின்பற்றினால்.. தொட்டுவிடும் தூரத்தில் வெற்றிக்கொடி! #MorningMotivation

Morning Motivation, வெற்றி

ம் எல்லோருக்குமே வெற்றியின் மீது பெரும் காதல் இருக்கிறது. ஆனால் ஒரு சிலரே தங்களை வெற்றிகளுக்காக தயார்படுத்திக் கொள்கிறார்கள். முறையான திட்டமிடலோடு கடுமையான உழைப்பை கொடுப்பவர்கள் எப்போதுமே தோற்றதாக சரித்திரம் இல்லை. வெற்றிகக்ளைக் கொண்டாட ஆசையா, அப்போ இந்த விஷயங்களையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்களேன்..   

"கெட் செட் யுவர் கோல்"

உங்களுடைய இலக்குகள் பற்றி எனக்கு நிச்சயமாக தெரியாது. ஒருவேளை உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் உறுதியான, தெளிவான இலக்கு எதுவும் இல்லாத பொழுது உங்களுக்கே கூட உங்கள் செயல்களில் நிறைய சந்தேகங்கள் பிறக்கும். சந்தேகங்கள் இருக்கும் இடத்தில் வெற்றிக்கு நிச்சயம் இடம் இருக்காது. தெளிவான திட்டமிடப்பட்ட இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கிய பயணத்தை நம்பிக்கையாக தொடருங்கள். எந்த ஊருக்குப் போவதுனு முடிவு பண்ணிட்டா போற வழிகளை ஈஸியா வகுக்கலாம் அல்லவா?

Morning Motivation

"கனவுகள்"

உங்கள் கனவுகள்தான் வாழ்க்கையின் அடுத்தடுத்த நிகழ்வுகளின் டிரெய்லர் எனச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா!?. ஆனால் அதுதான் உண்மை எனச்சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். நம் அப்துல்கலாம் ஐயா சொன்னது போல நம்மை தூங்கவிடாமல் செய்யும் கனவுகளே நம் வாழ்வின் நிஜங்களாக மாறி வழிநடத்துகின்றன. நல்ல கனவுகளும், அந்தக் கனவுகளை எட்ட, கடுமையான உழைப்பும் கொண்ட எந்த முயற்சியும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.

"பழக்கவழக்கங்கள்"

உங்களின் ஒவ்வொரு செயலும் உங்களின் அடையாளமாக மாறிப்போகும். அவைதான் உங்களுக்கே உங்களுக்கான பழக்கவழக்கங்கள். உங்களுடைய செயல்களை வைத்து மட்டுமே உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை எடைபோட்டுப் பார்ப்பார்கள். தோல்விகளைக் கண்டு துளியும் அஞ்சாமல் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா" என்ற மனநிலையிலேயே தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருங்கள். உங்களின் ஒவ்வொரு நல்ல செயலும் கடலைச் சென்றடையும் ஆறுகளை போல நிச்சயம் வெற்றியையே பரிசாக கொடுக்கும்.

"எண்ணங்கள்"

அலைகள் படகினை, தான் விரும்பிய இடத்திற்குக் கொண்டு செல்வதைப் போன்றதுதான் எண்ணங்களும். உங்களை விரும்பிய இடத்திற்கு எல்லாம் அழைத்துச் செல்லும் சக்தி வலிமையான நம் எண்ணங்களைத் தவிர வேறு எதற்கும் இல்லை. எண்ணங்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு மனநிலையுடன் செய்யும் எந்த வேலையும் முழுமையான வெற்றியை தந்திடாது.

Morning Motivation, வெற்றி

"நேர மேலாண்மை" 

ரைமிங்கோட டைமிங்கும் முக்கியம் கண்ணா! எல்லா விஷயங்களுக்குமே டைமிங் ரொம்ப முக்கியமாச்சே. என்னதான் பொறுமையாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட வேலையாக இருந்தாலும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் வேலைகளே நம் வெற்றியைத் தீர்மானிக்கும். சரியான தருணங்களில் செய்யப்படுகின்ற வேலைகள், தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ராஜபாட்டையில் வீரநடை போட வைக்கும். 

"நம்பிக்கை அதானே எல்லாம்" 

நல்லா யோசிச்சு பாருங்கள்.. நீங்க முழு நம்பிக்கை இல்லாம செஞ்ச எந்த வேலையாச்சும் வெற்றிகரமா முடிஞ்சுருக்கா. நிச்சயமா இருக்காது. ஒவ்வொரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன்பும் அதைப்பற்றிய முழுமையான புரிதலோடு செய்யத் தொடங்குங்கள். நம்பிக்கை வேற எங்கும் இல்லை உங்களுக்குள்ள தான் இருக்குங்கிறதை உணர முடியும். பிரபு சார் சொல்ற மாதிரி "நம்பிக்கை, அதானே எல்லாம்!!" 

இவற்றையெல்லாம் பின்பற்றினா ஒவ்வொரு நாளையும் உங்களுக்கே டெடிகேட் பண்ணிக்கற அளவுக்கு, வெற்றிக்கொடியைத் தொட்டுவிடுவீர்கள்! 

vikatan

  • தொடங்கியவர்

சீனர்களை பயமுறுத்தும் திகில் தீவு! #YimTinTsai

அவர்களின் பூர்வீகம் சீனம் தான். அந்த இனத்தின் பெயர் "ஹக்கா". அவர்களுக்கு என குறிப்பிட்ட ஒரு நிரந்தர  புவியியல் அடையாளம் கிடையாது. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வடக்குப் பகுதியிலிருந்து இந்த தீவிற்கு நகர்கிறார்கள். சான் (Chan) என்ற பின் பெயரைக் கொண்ட ஒரு ஜோடி தான் முதன்முதலில் இங்கு குடியேறினர். பின்னர், அவர்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஆயிரம் பேர்வரை இங்கு வாழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. முதலில் உப்பளங்களை உருவாக்கி உப்புத் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். பின்னர், கொஞ்சம் விவசாயம், மீன்பிடித் தொழில் என ஈடுபட்டிருந்த அந்த இனம்... அந்தத் தீவை காலிசெய்யத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் இறுதியாக வாழ்ந்து வந்த அந்த முதியவரும் தீவை விட்டு வெளியேற... மனித சஞ்சாரமற்ற தீவாக உருமாறுகிறது. சீனர்கள் பயத்தோடு "திகில் தீவு" என்றழைக்கும் அந்த தீவின் நிஜப் பெயர் "யிம் டின் சய்" (Yim Tin Tsai). 

திகில் தீவு சீனாவின் ஹாங்காங் பகுதி

மறைக்கப்பட்டு கிடந்த மூன்று நூற்றாண்டுகளின் வரலாறை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார் காலின் சான் (Colin Chan). காலின் பிறந்தது "யிம் டின் சய்" தீவில் தான். பின்னர் நடந்த வெளியேற்றத்தில், பிரிட்டன் சென்று பெற்றோரோடு குடியேறினார். இருந்தும் தன் பழைய வாழ்க்கைக் குறித்த எண்ணங்கள், அந்த வாழ்க்கைக் குறித்த ஏக்கங்கள் அவரைத் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருந்தன. எல்லாவற்றையும் விடுத்து 40 ஆண்டுகள் கழித்து 2004-ல் தன் மண்ணிற்கு திரும்பினார் காலின்...

"சிறுவனாக இந்த மலைகளில் ஏறி விளையாடிய உணர்வு உலகின் எந்த மூலைக்கு சென்ற போதும் எனக்குக் கிடைக்கவில்லை. என் உள் உணர்வின் தேடல், இந்த தீவை நோக்கியதாகத் தானிருந்தது. நான் முதலில் வந்த போது, ஒரு பெரும் வரலாற்றைப் புதைத்துக் கொண்டு நெருங்கவே முடியாத அளவிற்கு கோபமாய் இருந்தது தீவு. கொஞ்சம் கொஞ்சமாக புனரமைக்கத் தொடங்கினேன். தீவின் வரலாற்றோடு தொடர்புடையவர்களைத் தேடி அலையத் தொடங்கினேன்..." என்பவர் கடந்த 2004ல் இருந்து தன் வாழ்வையே இந்தத் தீவிற்காக அர்ப்பணம் செய்துள்ளார். 

1840களில் ஜோசப் ஃப்ரெய்னடெமெட்ஸ் (Joseph Frienademetz) என்ற புனிதர் ஒரு தேவாலயத்தை கட்டினார். தீவு மக்கள் அனைவரையும் கிருத்துவர்களாக மதம் மாற்றினார். காலின், முதலில் அந்த தேவாலயத்தைப் புதுப்பிக்கத் தொடங்கினார். செய்தியை கேள்விப்பட்டு உலக கத்தோலிகர்கள் பலரும் பொருளாதார உதவிகளை செய்தனர். அதன் மூலம் உலகின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார் காலின். அதைத் தொடர்ந்து, அந்தத் தீவில் தங்கள் பால்யத்தை செலவிட்ட 10 பேர் காலினோடு கைகோத்தனர். தீவின் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து புனரமைத்தனர். இயற்கை சுற்றுலா மேற்கொள்ளும் ஊர்சுற்றிகளை இந்த தீவு ஈர்த்தது. புதைக்கப்பட்ட வரலாறை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு தீவிற்கு வரத் தொடங்கினர்.

தீவின் சில பகுதிகள் புனரமைக்கப்பட்ட பிறகும் கூட இங்கு யாரும் இரவில் தங்குவதில்லை. 2014ல் இருந்து கிஃபூ (Gifu) என்ற 75 வயது முதியவர் மட்டும் வார இறுதிகளில், தீவின் ஒரு சிறு குடிசையில் தங்குகிறார். மற்றவர்கள் யாரும் இங்கு தங்குவதில்லை. தீவின் சில பகுதிகளுக்குள் ஊடுருவிப் போகும் ஊர்சுற்றிகளுக்கு சில அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுவதாக சொல்கிறார்கள். இந்த தீவிற்கு வந்த பலருக்கும் காய்ச்சல்  ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

திகில் தீவு சீனாவின் ஹாங்காங் பகுதி

தன் 13 வயது வரை தீவில் வாழ்ந்த ரோசா (Rosa) என்ற பெண், தற்போது காலினுடன் இணைந்து தீவின் டூர் கைடாக வேலை செய்து வருகிறார். 

"இந்த தீவின் சில இடங்களைக் கடக்கும் போது என் மூதாதையர்களின் குரலை என்னால் கேட்க முடிகிறது. அந்தக் குரல்கள் எம் இனத்தின் வரலாற்றை எனக்கு சொல்லித் தருகிறது..." என்று சொல்பவர் இதுவரை அந்த வரலாற்றை யாரோடும் பகிர்ந்துக் கொண்டதில்லை. 

உலகில் பல திகில் கிளப்பும் தீவுகள் இருந்தாலும், அவற்றின் வரலாறு ஓரளவாவது வெளியே வரும். ஆனால், இந்தத் தீவைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான கேள்விக்கு மட்டும் இதுவரை உறுதியான ஒரு விடைத் தெரியவில்லை... அது... " ஏன் ஹக்கா இனம் மொத்தமாக இந்த தீவை காலி செய்தது?" என்பது தான்!!!

vikatan

  • தொடங்கியவர்

S8 மூலம் மீட்சி பெறுமா சாம்சங்- இணையத்தில் கசிந்த புகைப்படம்!

Samsung S8

சாம்சங்கின் கேலக்ஸி நோட் 7 போன்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே வெடித்தன என்ற பரவலான புகாரால், ஸ்மார்ட் போன் சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது சாம்சங் நிறுவனம். இதையடுத்து, தனது அடுத்த ஸ்மார்ட் போனான கேலக்ஸி S8 மூலம் கம்பேக் கொடுக்க முனைகிறது.

இந்நிலையில், சாம்சங்கின் கேலக்ஸி S8-ன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கேலக்ஸி S8 ஸ்மார்ட் போன், 5.8 இன்ச் மற்றும் 6.2 இன்ச் அளவு கொண்ட ஸ்கிரீனில் வருமென்று கூறப்படுகிறது. அதேபோல, 'edge’ டிஸ்ப்ளேவுடன் இந்த போன் இருக்கும். S8 பேட்டரியின் செயல்திறன் கிட்டத்தட்ட சாம்சங்கின் முந்தைய போன்களை விட 20 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

  • தொடங்கியவர்

டெல்லி வந்த அபுதாபி இளவரசரின் பிரமிக்க வைக்கும் தனி விமானம் (வீடியோ)

இந்தியாவின் 68வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு குடியரசுத் தினத்தின் போதும், வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை,  சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த, அபுதாபியின் பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் ஷயாத் அல் நயான் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தின விழாவில் கலந்து கொண்டார்.

அபுதாபி இளவரசரின் தனி விமானம்

ஐக்கிய அரபு அமீரகம் என்பது துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட 7 நகரங்கள் இணைந்த ஒரு நாடு. அபுதாபிதான் தலைநகர். துபாய் பொருளாதாரத் தலைநகர். அபுதாபியின் பட்டத்து இளவரசர் இந்திய குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதால்தான் துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான 'புர்ஜ் கலீபா' இந்திய தேசியக் கொடியின் வர்ணத்தில் ஒருநாள் இரவு முழுவதும் ஒளிர்ந்தது. 

சரி.. இந்திய குடியரசுத் தினவிழாவில் பங்கேற்ற அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது யார்? அபுதாபியின் முதல் ஆட்சியாளரான ஷேக் ஷயாத் பின் சுல்தான் அல் நாயான்- பாத்திமா பின்ட் முபாரக் அல் கெத்பி தம்பதியின் மூன்றாவது மகன்தான் ஷேக் முகமது அல் நயான். தற்போது 56 வயதாகிறது. கடந்த 2003ம் ஆண்டு தந்தையால் அபுதாபியின் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்.

வளைகுடா நாட்டு இளவரசர்களிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட இளவரசர்களில் ஷேக் முகமதுவுக்கு இரண்டாவது இடம். இவரது மொத்த சொத்து மதிப்பு 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பொதுவாகவே வளைகுடா அரசர்கள், இளவரசர்களுக்கு விலை உயர்ந்த கார்கள் பிடித்தமான விஷயம்.  அதுபோல் தனி விமானங்களையும் வைத்திருப்பார்கள். பல விமானங்களை வாங்கி அழகு பார்க்கும் இளவரசர்களும்  உண்டு.                                              

இந்திய குடியரசு விழாவில் பங்கேற்ற இளவரசர் ஷேக் முகமதுவும் தனது பயணங்களுக்காக தனி விமானம் வைத்துள்ளார். அதில்தான் இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில்  தனி விமானத்தில் வந்து இறங்கிய ஷேக் முகமதுவை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். அதற்கு பிறகு, அவரது விமானம் டெல்லி பாலம் விமான நிலையத்தின் டெக்னிக்கல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த விமானத்தில் உள்ள வசதிகள் பிரமிக்க வைக்கிறது.  இது குறித்து வீடியோ ஒன்று, தற்போது யு- டியூப்பில் வெளியாகியுள்ளது. அட்டகாசமான மெஜந்தா வர்ணத்தில் விமானத்தின் உள்பகுதி ஆழகாக இன்டீரியர் டெக்கரேஷன் செய்யப்பட்டுள்ளது. இரு கூட்ட அரங்குகள் உள்ளன. நவீன கழிவறைகள் உள்ளன. 

விமானம் முழுவதுமே குஷன் ஷோபாக்கள் போடப்பட்டுள்ளன. விமானத்தில் இளவரசர் உறங்குவதற்கு என்றே பிரத்தியேக படுக்கை அறை உள்ளது. அதில் எல்.இ.டி டி.விக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்திலேயே சிறிய கிச்சன் உள்ளது. இளவரசருக்குத் தேவையான சுவையான உணவுகளை சமைத்துத் தரவும் செஃப் எப்போதும் உடன் பயணிப்பார். சமையலுக்குத் தேவையான பொருட்கள், காய்கறிகள், இறைச்சி வகைகள், மீன் வகைகள் சேமித்து வைப்பதற்கு என்றும் பிரத்யேக வசதிகள் விமானத்தில் செய்யப்பட்டுள்ளது. இளவரசர் உணவருத்துவதற்கான தனிக் கூடம் உள்ளது. இளவரசருக்கு மட்டுமல்லாமல், ஊழியர்கள் சாப்பிடவும் தனி அறை இருக்கிறது. 

சுமார் 2 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் அபுதாபி இளவரசரின் ஊழியர்கள், சில பணிப்பெண்கள் வருவது போல காட்சிகள் வருகின்றன. இந்த வீடியோ தற்போது வாட்ஸப், ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. 

vikatan

  • தொடங்கியவர்

புலியை வென்ற வாத்து! (வீடியோ)

Duck beats tiger

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் உள்ள சிம்பியோ வனவிலங்கு பூங்காவில், வாத்து ஒன்று தனது அறிவைப் பயன்படுத்தி புலியை வென்றுள்ளது.  அந்த வனவிலங்கு பூங்காவில் தண்ணீரில் நீண்ட நேரம் வாத்தைப் பிடிக்க முயன்றும் புலியால் பிடிக்க முடியவில்லை. கடைசியில் டயர்டாகி தோல்வியை ஒப்புக் கொண்டு வெளியேறியது புலி.  இந்த வீடியோ தற்போது யூ-ட்யூபில் வைரலாகி வருகிறது.

 

 

 

  • தொடங்கியவர்

ஃப்ளோரிடாவை பாதுகாக்கும் பணியில் இந்தியர்!

SnakeHeader_1024_17379.jpg

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், இந்தியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹீரோவாகி வருகிறார். அங்கு பூர்மிஸ் வகை மலைப்பாம்பின் தொல்லை அதிகரித்தது. இதையடுத்து, அங்குள்ள மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம், இந்தியாவின் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் ஒருவரை களமிறக்கியது.  அவர் தனது உதவியாளர், வேட்டை நாய், ஆகியவற்றின் உதவியுடன் 8 நாட்களில்13 பாம்புகளைப் பிடித்துள்ளார். அதில் ஒரு பாம்பு 16 அடி  நீளம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

 

இணையத்தில் யாருடைய செல்வாக்கு அதிகம்?
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

நியூசீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான டானியல் வெட்டோரியின் பிறந்தநாள்.
Happy Birthday Daniel Vettori

Bild könnte enthalten: 1 Person, Text

இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சமிந்த வாஸின் பிறந்த நாள் இன்று.

இலங்கை இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்.
உலகின் மிகச் சிறந்த இடது கை வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர்.

முரளியும் இவரும் சேர்ந்து உருட்டிய எதிரணிகள் ஏராளம்.
இலங்கை அணிக்குப் பெற்றுத் தந்த வெற்றிகளும் பலப்பல.
வாழ்த்துக்கள் வாஸ்.

  • தொடங்கியவர்

'அவர்களும் உங்கள் குழந்தைகள்தான்!' - ட்ரம்புக்கு சிரியா சிறுமியின் உருக்கமான கடிதம்

தாய் உடன் ஏழு வயது சிறுமி பானா அலாபெட்

சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைப்பெற்று வருவது அனைவரும் அறிந்த விஷயமே. அலெப்போவை மீட்க சிரியா படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற கடும் போரில் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என எல்லாமே தரைமட்டமானது. அங்கிருந்து மக்களை வெளியேற்றிவரும் நிலையில், சிரியாவில் இருந்து வெளியேறி துருக்கியில் தஞ்சமடைந்திருக்கிறாள் ஏழுவயது சிறுமி பானா அலாபெட்.

தஞ்சமடைந்த வலியுடன் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அவள் எழுதிய கடிதத்தில் அத்தனை குழந்தைத்தனமும், வலியும் அடங்கியிருக்கிறது.

’’டியர் டொனால்டு ட்ரம்ப்... என்னுடைய பெயர் பானா அலாபெட். சிரியாவின் அலேப்போ நகரை சேர்ந்த ஏழு வயது சிறுமி. நான் பிறந்து வளர்ந்தது சிரியாவில்தான். அங்கு போர் நடைப் பெற்றுவருவதால் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் என் பெற்றோருடன் வெளியேறி, தற்போது துருக்கியில் அகதிகளாக தஞ்சம் அடைந்து அமைதியாக வாழ்ந்துவருகிறேன். நான் அலேப்போ நகரில் உள்ள பள்ளியில்தான் படித்தேன். ஆனால் அந்த பள்ளி குண்டு வீச்சினால் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதில் என் நண்பர்கள் சிலர் இறந்தது விட்டனர்.

அவர்களை நினைத்து நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். அவர்கள் இப்போது என்னுடன் இருந்திருந்தால் நான் நிம்மதியாக விளையாடியிருப்பேன். நாங்கள் பலமுறை ஒன்றாக விளையாடியிருக்கிறோம். தற்போது நான் குடும்பத்துடன் துருக்கியில் அமைதியாக இருந்தாலும் என் மனதிற்கு நிம்மதி இல்லை. நான் இங்கு பள்ளிக்கு செல்லலாம், ஆனால் நான் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை. என்னைப்போல் அல்லாமல் சிரியாவில் லட்சக்கணக்கான குழந்தைகள் சிரமப்பட்டுவருகிறார்கள். அவர்கள் என்னைப் போல நிம்மதியாக இல்லை. அவர்களும் உங்களைப் போலவே அமைதியை விரும்புகிறார்கள். அவர்களுக்காக நீங்கள் எதையாவது செய்யுங்கள்.

 

 

எனக்குத் தெரியும் நீங்கள் அமெரிக்காவிற்கு புதிய அதிபராக பதவி ஏற்றியிருக்கிறீர்கள். சிரியாவில் இருக்கும் குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுவீர்களா? நீங்கள் கண்டிப்பாக எதை செய்தாவது சிரியாவில் உள்ள குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் அவர்கள் உங்கள் குழந்தைகள். உங்களைப்போல அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். நான் உங்களின் புதிய நண்பராகி இருக்கிறேன். கண்டிப்பாக அவர்களை காப்பாற்றுவேன் என எனக்கு உறுதி அளிப்பீர்களா? நான் உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்" என சிறுமி பானா அலாபெத் ட்ரம்புக்கு எழுதிய கடிதத்தை அவளுடைய தாயார் ட்விட்டரில் வெளியிட படித்தவர்களின் கண்கள் குளமானதை அலாபெட் அறிந்திருக்க மாட்டாள்.

vikatan.

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: செயல் தலீவர்

 
1_3124123f.jpg
 
 
 

2_3124122a.jpg

3_3124121a.jpg

4_3124120a.jpg

5_3124119a.jpg

6_3124118a.jpg

7_3124117a.jpg

8_3124116a.jpg

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

27.01.1832: உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர் லூயிஸ் கரோல் பிறந்த தினம் இன்று!

 
louis_carole

 

உலகப் புகழ்பெற்ற ‘ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ குழந்தைகள் நாவலைப் படைத்த பிரிட்டன் படைப்பாளியும், கணிதவியலாளரும், கவிஞருமான லூயிஸ் கரோல் இன்று பிறந்தார்.

இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள டாரஸ்பரி கிராமத்தில் (1832) பிறந்தார். இயற்பெயர் சார்லஸ் லுட்விக் டாட்ஸன். தந்தை மத போதகர். வீட்டிலேயே தனது 11 குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கற்பித்தார். புதுப்புது விளையாட்டுகளை உருவாக்கி சகோதர, சகோதரிகளை உற்சாகப்படுத்துவது சிறுவன் லுட்விக்கின் வழக்கம்.

சிறு வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதிவந்தார். கல்வி உதவித்தொகை பெற்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் பட்டம் பெற்றார். அங்கேயே கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார். நகைச்சுவைக் கதைகள், கணிதத்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். ‘லூயிஸ் கரோல்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார்.

தேவாலயத்தில் பணியாற்றிவந்தபோது, ஒருமுறை ஆலிஸ் லிடல் என்ற 4 வயது குழந்தையை சந்தித்தார். அப்போதிருந்து அது இவரது செல்லக் குழந்தையாகிவிட்டது. அவளையும் அவளது 2 சகோதரி களையும் குட்டிப் படகில் வைத்து வெகு நேரம் ஆற்றில் பயணம் செய்வார். சளைக்காமல் வெகுநேரம் அவர்களுக்கு கதை சொல்வார். சில நேரங்களில், படம் வரைந்துகொண்டே கதை சொல்வார்.

ஆலிஸ் என்ற கதாபாத்திரம் வருவதுபோல கதை எழுதித் தருமாறு 1862-ல் இவரிடம் கேட்டது குழந்தை. ‘ஆலிஸ் அட்வெஞ்சர்ஸ் அண்டர்கிரவுண்ட்’ என்ற கதையை இவர் எழுதிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிரபல நாவலாசிரியர் ஒருவர், புத்தகமாக வெளியிடலாம் என்று ஆலோசனை கூறினார்.

சில மாற்றங்களுடன் 1865-ல் ‘ஆலிஸ் அட்வெஞ்சர்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ என்ற பெயரில் இது புத்தகமாக வெளிவந்தது. 1932-ல் இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, குழந்தைகளுக்கான நூல்களில் உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற நூல்களில் ஒன்று என்ற அந்தஸ்தை இந்த நூல் பெற்றது.

குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளியாகப் போற்றப்படும் லூயிஸ் கரோல் 1898 ஜனவரி 14-ம் தேதி 66-வது வயதில் மறைந்தார்.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

என்ன கொடுப்பான்... எதைக் கொடுப்பான்? ஒரு கதை... ஒரு நீதி!

ன்ன தானம் முதல் சொர்ண தானம் வரை நாம் அறிவோம்! மனிதன் தன் பாவங்கள் தீரவும் இன்னல்களை நீக்கிக்கொள்ளவும் இறைவன் நமக்குக் கொடுத்த கொடை, ஒரு வழிமுறையே தானம். அன்ன தானம் நம் தரித்திரத்தையும் கடன்களையும் நீக்கும் என்றால், அரிசி தானம் நம் பாவங்களைப் போக்கும்... இப்படி அத்தனைவிதமான தானங்களுக்கான பலன்களை புராணங்கள், இதிகாசங்கள் அழுத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றன. ஒரு தந்தை, தன் மகளை மணமுடித்துக் கொடுப்பதையே `கன்னிகா தானம்’ என்றுதான் சொல்வார்கள். எத்தனையோ வகைகள் இதில் இருந்தாலும், தகுதியானவருக்கு, மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம். இதை பகவான் கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வும் உண்டு. அதைப் பார்க்கலாமா?  

ஒரு கதை ஒரு நீதி 

ஒருமுறை அஸ்தினாபுரத்துக்கு வந்திருந்தார் கிருஷ்ண பரமாத்மா. காலை நேர நியமங்களை முடித்துக்கொண்டு பாண்டவர்களைப் பார்க்கச் சென்றார். வாயிலில் இருந்தே வரவேற்ற யுதிஷ்டிரரின் (தர்மர்) முகம் வாட்டத்தோடு இருப்பதைக் குறிப்பால் உணர்ந்துகொண்டார். உள்ளே வந்து அமர்ந்தவர் தர்மரைப் பார்த்தார். அவரோ தலைகுனிந்து அமர்ந்திருந்தார். 

“மைத்துனா... ஏன் என்னவோபோல் இருக்கிறாய்? உடல் உபாதை ஏதும் இல்லையே?’’

“இல்லை கிருஷ்ணா... இரவில் சரியாகத் தூங்கவில்லை.’’ 

“உறக்கம் வரவில்லை என்றால் அது நிம்மதியின்மையைக் குறிக்கிறது. உன் மனம் அமைதியில்லாமல் இருக்கிறதா என்ன..? அப்படி அசம்பாவிதச் சம்பவம் எதுவும் அஸ்தினாபுரத்தில் தற்போது நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே..!’’ 

“அசம்பாவிதமெல்லாம் இல்லை கண்ணா... ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்தேன். அது என்னை தூக்கம் இல்லாமல் அடித்துவிட்டது.’’

“தர்மா... மனம் வேதனைப்படும் எதுவாக இருந்தாலும் யாரிடமாவது அதை வெளிப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால், அது உள்ளத்தை அரித்து அரித்து பெரும் துன்பத்தை வரவழைத்துவிடும். என்னிடம் சொல்... எதுவாக இருந்தாலும் சொல்! என்னால் தீர்க்க முடிகிறதா என யோசிக்கிறேன்...’’

தர்மர் சற்றுத் தயங்கிவிட்டு ஒரு கேள்வி கேட்டார்... “கிருஷ்ணா... பாண்டவர்களாகிய நாங்கள் நல்லவர்கள்தானே..?’’

“அதிலென்ன சந்தேகம்? அதனால்தான் நான் உங்களோடு இருக்கிறேன்.’’

“எங்களின் அருங்குணங்கள்..?’’

“எது வந்தாலும் நீதியின் பக்கம் நிற்கும் துணிவு, நல்லவர்க்கு உதவும் பாங்கு, எளியோர்க்கு இரங்கல்... என உங்கள் ஐவரின் நற்குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாமே! அத்தனையும் ஒருங்கே பெற்றவனாக நீ இருக்கும்போது, உன் தலைமையில் உன் தம்பிமார்களும் அப்படித்தானே இருப்பார்கள்?’’ 

“சரி... தான, தர்மத்தில்?’

“அதையும் நீங்கள் செய்துகொண்டுதானே இருக்கிறீர்கள்..?’’

“அப்படியானால் ‘கொடைக்குச் சிறந்தவன் கர்ணன்’ என்று உலகமே பாராட்டுகிறதே... நாங்கள் அவனைவிட எவ்விதத்தில் குறைந்துபோனோம்? இந்த எண்ணம்தான் என்னை இரவெல்லாம் உறங்கவிடாமல் அடித்தது.”

கிருஷ்ண பரமாத்மாவின் அதரங்களில் மென்நகை நெளிந்தது. தர்மரின் முகத்தையே உற்றுப் பார்த்தார்.  

“சரி வா என்னோடு... உன் தம்பிகளையும் அழைத்துக்கொள். உன் சந்தேகத்துக்கு விடை கிடைக்கிறதா எனப் பார்ப்போம்...’’ 

தானம்

கிருஷ்ணர் முன்னே செல்ல, பாண்டவர்கள் பின் தொடர்ந்தார்கள். அஸ்தினாபுரத்தின் எல்லையைத் தாண்டி ஓர் இடத்தில் எல்லோரையும் நிற்கச் சொன்னார் கிருஷ்ணர். ஆயர்குலத் தோன்றல் ஸ்ரீகிருஷ்ணர் தன் வலக் கரத்தை உயர்த்தினார். இரு சிறு குன்றுகள் தோன்றின. ஒன்று, தங்கக் குன்று. மற்றொன்று, வெள்ளிக் குன்று. 

“ஒரு சின்ன பரீக்‌ஷை தர்மா! நீயும் உன் தம்பிகளும் சேர்ந்து இந்த இரு குன்றுகளையும் தானமாகக் கொடுக்க வேண்டும். யாருக்கு வேணுமானாலும் கொடுக்கலாம். ஆனால், ஒரு நிபந்தனை. மாலைக்குள் கொடுத்துவிட வேண்டும்... முடியுமா? அது நடந்தால், கர்ணனைவிட நீங்கள் சிறந்தவர்கள் என நான் ஒப்புக்கொள்கிறேன்... உலகுக்கே எடுத்துச் சொல்கிறேன்.’’ 

தர்மர் தன் தம்பிமார்களைப் பார்த்தார். வலுவிற் சிறந்த பீமன், வில்லிற் சிறந்த அர்ஜுனன், நகுலன், சாஸ்திரத்தில் சிறந்த சகாதேவன் அனைவரும் களமிறங்கினார்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரையெல்லாம் அழைத்து, தங்கக் குன்றையும் வெள்ளிக் குன்றையும் வெட்டி வெட்டிக் கொடுத்தார்கள். ஆனாலும், மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும், அவர்கள் கொடுத்ததில், பாதி குன்றுகள் அப்படியே தீராமல் இருந்தன. 

தர்மர், யோசனையோடு கிருஷ்ணர் முகத்தையே பார்த்தார். 

“இன்னுமா தீரவில்லை?’’ என்ற பகவான், “சரி... நான் ஒரு யோசனை சொல்கிறேன். யாரையாவது அனுப்பி, கர்ணனை அழைத்துவரச் சொல்!’’ 

கர்ணனை அழைக்க ஆட்கள் பறந்தார்கள். கர்ணனும் வந்து சேர்ந்தான். 

“கர்ணா..! இவை இரண்டும் அபூர்வக் குன்றுகள். இன்று மாலைக்குள் இவற்றைக் கொடுத்துவிட வேண்டும். மாலையாகிவிட்டால், இவற்றின் மகிமை போய்விடும்... உன்னால் முடியுமா?’’ 

கர்ணன் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். சற்று தூரத்தில் ஒரு வயோதிக விவசாயி வருவதைப் பார்த்தான். ஓடிப் போய் அவர் கையைப் பிடித்து இழுத்து வந்தான். 

“ஐயா... நான் மகிழ்ச்சியோடு கொடுப்பதை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்பீர்களா?”

கர்ண மகாராஜா கேட்கிறாரே... அது சாதாரணமாகவா இருக்கும்? விவசாயி சரியெனத் தலையசைத்தார். 

“இதோ... இந்த தங்கக் குன்று, வெள்ளிக் குன்று இரண்டையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்...” விவசாயி மலைப்போடு தன் பரிசுப் பொருளைப் பார்த்தார். 

‘கர்ணன் ஏன் சிறந்தவன் என்று இப்போது புரிகிறதா?’ என்று சொல்லாமல் தன் பார்வையாலேயே பார்த்தார் கிருஷ்ணர். தர்மர், தன் தலையைத் திருப்பிக்கொண்டார். மனமுவந்து கொடுப்பதில், வாரி வழங்குவதில் கர்ணனுக்கு இணை யாரும் இல்லை. தர்மமோ, தானமோ இரண்டையும் மனமுவந்து செய்யவேண்டும் என்பதை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உணர்த்திய சம்பவம் இது. 

இதைத்தான் `ச்ரத்தயா தேயம்! அச்ரத்தயா தேயம்...’ எனச் சொல்கிறது தைத்ரிய உபநிஷத். அதாவது, முழு நம்பிக்கையோடு, ஈடுபாட்டோடு (சிரத்தையோடு) எதையும் தானம் செய்ய வேண்டும் என்கிறது இந்த ஸ்லோகம். பகவான், ‘தானத்தைக்கூட நிதானத்தோடு செய்தால் முழுப்பலன்’ என்பதை பாண்டவர்களுக்கு உணர்த்தினார். ‘தீர்த்த விட்டலா... ‘க்ஷேத்ர விட்டலா...’ எனத் தொடங்கும் அபங் பாடலில் ஒரு வரி வரும். `தண்ணீர் விட்டலன், ஊர் விட்டலன், அம்மா விட்டலன், அப்பா விட்டலன்... அனைத்துமே பகவான் விட்டலனின் ரூபம்’ எனப் போகும் அந்தப் பாடலில் ஒரு வரி, `நிதான விட்டலா...’ என்கிறது. அதைத்தான் பகவான் தர்மருக்குத் தெளிவாக விளங்க வைத்தார். தானம் நல்லது... அதை நிதானமாகச் செய்வது மிக நல்லது! 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 28
 
 

article_1422420096-antarctica.jpg1547: 8 ஆம் ஹென்றி மன்னன் இறந்ததையடுத்து, அவரின் 9 வயது மகன் 6 ஆம் எட்வர்ட் மன்னனாக முடிசூடப்பட்டான். இங்கிலாந்தின் முதல் புரட்டஸ்தாந்து மன்னன் இவன்.

1624: கரிபியன் (மேற்கிந்திய) தீவுகளில் முதலாவது பிரித்தானிய குடியேற்றம் சென் கிட்ஸ் தீவில் ஸ்தாபிக்கப்பட்டது.

1820: ரஷ்ய ஆய்வாளர்கள் பாபியன் கொட்லியெப் வோன் பெலிங்சௌசென் மற்றும் மிகைல் பெட்ரொவிச் லாஸாரேவ் ஆகியோர் அந்தார்ட்டிக் கண்டத்தை கண்டுபிடித்தனர்.

1909: குவான்டனாமோ குடா கடற்படைத் தளம் தவிர, கியூபாவின் ஏனைய பகுதிகளிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.

1915: அமெரிக்க கரையோர காவற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1932: சீனாவின் ஷாங்காய் நகரை ஜப்பான் தாக்கியது.

1933: பாகிஸ்தான் எனும் பெயரை சௌத்ரி ரெஹ்மட் அலி இயற்றினார்.

1986: அமெரிக்காவின் சலெஞ்சர் விண்கலம் ஏவப்பட்டபின் வெடித்ததால் 7 விண்வெளி வீரர்கள் பலியாகினர்.

2002: கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 92 பேர் பலி.

2010: பங்களாதேஷின் முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர்.

2011: எகிப்தில் ஜனாதிபதி முபாரக்கிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்தியாவின் இரண்டாவது பெரிய குகையில் நடக்கலாம்.. வாருங்கள் #Belumcaves

பெலும் குகை, Belum Cave, பெலூம் குகை

பிரபஞ்சத்தின் கண்டறியப்படா பல மர்மங்களும் ஆச்சரியங்களும் குகைகளில் உறங்கிக் கிடக்கின்றன. ஆதி மனிதர்கள் வாழ்ந்த, தொன்மையான நிலப் படிமங்கள் மிகுந்த குகைகளில் பயணிப்பது ஒரு அமானுஷ்ய அனுபவம். அப்படி ஒரு சாகச அனுபவத்தை பெற விரும்புபவர்கள் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெலூம் குகைகளில் பயணம் செய்யலாம்.  இந்திய துணைக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய குகை, சமவெளியில் இருக்கும் மிக நீளமான குகை என பல சிறப்புகளைப் பெற்ற இந்தக் குகையில் பயணிப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கும்.

மொத்தம் 16 பாதைகள் உண்டு இந்தக் குகைக்குள் நுழைய. ஆனாலும் விசாலமான ஒரு பாதையின் வழியாக நுழைவது பாதுகாப்பு.   உயிரியல் சார்ந்தும் வரலாற்று ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குகை, தண்ணீர் சொட்டும் வடிவத்தாலான கூம்பு வடிவ பாறைகளால் ஆனது. பாறைகளின் வடிவமே பேரழகு.  கசித்துளி படிகம் என்று சொல்லப்படும் இந்தப் படிகங்களில் சொட்டுச் சொட்டாக குளிர்ந்த, தூய நீர் வடிந்து கொண்டே இருக்கும். அந்த நீர் நம் உடலில் பட்டு பயணத்தை சிலிர்ப்பாக மாற்றும். திடீரென நம் பயணத்தின் நடுவே சிறு அருவிகளையும் பார்க்க முடியும். இந்த வீடியோவின் 1.35-வது நிமிடத்தில் அப்படியான ஒரு சிறு அருவி நம்மைக் கடக்கிறது. திறந்து விட்ட குழாயில் கொட்டுவது போல, பாறையைத் துளைத்துக் கொண்டு இடைவிடாது கொட்டும் இந்த தூய நீர், மனதை ஈர்க்கிறது. பலநூறு வருடங்களுக்கு முன்னால், இந்தக் குகைக்குள் வாழ்ந்த சமண, புத்த துறவிகளின் சுவடுகள், கற்படுகைகள், தியான அறைகளின் வடிவமைப்புகளை  1.02வது நிமிடத்தில் பார்க்கும்போது பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் நம் மனம் நம்மை இழுத்துச் செல்கிறது. 

சுமார் 3229 மீட்டர் நீளமுள்ள இந்தக் குகையைக் கண்டறிந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த நிலவியல் ஆய்வாளர் ராபர்ட் புரூஸ் பூட். 2002ல் ஆந்திர அரசு இந்தக் குகையை சுற்றுலா தலமாக மேம்படுத்தியது. மூன்றரை கிலோ மீட்டர் நீளம் வரை குகை ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பார்க்க வேண்டிய இடமான சிலவற்றில்,  9 கிமீ தூரத்திற்கு குகை சாலை, ஸ்ரீநகரில் உள்ளது. இந்த பெலூம் குகைக்கு, ரொம்ப தூரமெல்லாம் பயணிக்க வேண்டியதில்லை..  கர்நூலில் இருந்து, 106 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் பெலூம் குகை. இருட்டும், ஆதி மனிதர்களின் உயிர் வாசமும், வரலாற்றின் படிமங்களும், இன்னும் கண்டறியப்படாத ஆச்சரியங்களும் நிறைந்த இந்தக் குகைக்குள், ஒன்றரை கிலோ மீட்டர் பயணிப்போம் வாருங்கள். பயத்தை கழட்டி வைத்து விட்டு உற்சாகத்தோடு குகைக்குள் இறங்குங்கள். 

வீடியோவிற்கு:-

 

 

vikatan.

  • தொடங்கியவர்

ஹேப்பி பர்த்டே ஸ்ருதி ஹாசன்! #HappyBirthdayShrutihaasan

shruti_hassan_01165.png

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இன்று தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

shruti_hassan_BDP_01164.png

இவரது நடிப்பில் தமிழில் சூர்யாவுடன் சிங்கம் 3 மற்றும் தனது தந்தையுடன் சபாஷ் நாயுடு; தெலுங்கில் பவன் கல்யாணுடன் வீரம் ரீமேக், ஹிந்தியில் ஒரு படம் 2017- ஆண்டில் வெளியாக இருக்கின்றன. கடந்த 2015-ல் ’இசிட்ரோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இவரது புரொடக்‌ஷன் நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக குறும்படங்கள் எடுக்கவிருக்கிறார். வித்யாசமான, அதே சமயம் கொஞ்சம் அனிமேஷன், கிராஃபிக்ஸ் சார்ந்த குறும்படங்களாக அதிகம் எடுக்க முடிவெடுத்துள்ளார். இதற்காக முற்றிலும் இளம் படைப்பாளிகளை தேர்வு செய்துவரும் ஸ்ருதி ஹாசன், புதிய இசையமைப்பாளர்களுக்கும் வாய்ப்பளிக்க உள்ளார். ’இசிட்ரோ’ ஒரு கிரேக்க நாட்டுச் சொல். இதற்கு ’கடவுளின் அன்பளிப்பு’ என்பது பொருள். 

Shruti Hassan Hot in Anaganaga O Dheerudu

Shruti Hassan Hot in Gabbar Singh

Shruti Hassan Hot in D Day

Shruti Hassan Hot in Balupu

Shruti Hassan Hot in Ramayya Vastavayya

Shruti Hassan Hot in Yevadu

Shruti Hassan Hot in Race Guraam

Shruti Hassan Hot in Aagadu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.