Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

பர்த்டே பேபி எமி ஜாக்சனை ரஜினி என்ன சொல்லிக் கூப்பிடுவார் தெரியுமா? #HBDAmyJackson

ன்று எமி ஜாக்சன் 26 வயதை கடக்கிறார். இப்போதான் இந்தப் பொண்ணு "மறாந்துட்டியாஆஆஆ...."னு சொன்ன மாதிரி இருந்தது அதுக்குள்ள ரஜினி கூட நடிக்குது என கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கிறது. இதில் எமிக்கு தெரியாமலேயே அவருக்கு இந்த பாதை அமைந்தது தான் சுவாரஸ்யம். மாடலிங் செய்து கொண்டிருந்த எமிக்கு அறிமுகப் படமே அசத்தலாக அமைந்த ஒன்று. இயல்பிலேயே பிரிட்டிஷ் பெண்ணான அவருக்கு மதராசப்பட்டிணம் படத்தில் கிடைத்தது பிரிட்டிஷ்காரப் பெண் கதாபாத்திரம்.

எமி ஜாக்சன்

முதல் படத்திலேயே அத்தனை பாராட்டுகளையும் குவித்தார். இத்தனைக்கும் அவருக்கு அதற்கு முன்பு நடித்த அனுபவமே கிடையாது. இரண்டாவது படமே கௌதமேனன் இந்தியில் இயக்கிய ஏக் திவானா தா. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் எமி ஜாக்சனுக்கு அந்த நேரத்தில் அப்படி ஒரு அறிமுகம், பின்னாளில் அவரது கமர்ஷியல் என்ட்ரிக்கு பயன்பட்டது. அதே சமயத்தில், மறுபடி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்த தமிழில் தாண்டவம் வெளியானது, ராம் சரண் நடித்த யவடு படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.

அடுத்து அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவ்வளவு விரைவில் எதிர்பார்த்திருக்கமாட்டார். முதல் முறை ப்ரிட்டிஷ் கை கொடுத்தது போல இந்த முறை மாடலிங் கை கொடுத்தது. அந்தப் படத்தின் ஹீரோயினுக்கு ஒரு 'மாடல்' கதாபாத்திரம். அதற்குப் பொருத்தமாக இருந்த எமி, ஷங்கரின் 'ஐ' படத்தில் ஹீரோயின் ஆனார். படத்தின் ரிசல்ட்டுக்கு முன்பே எல்லா இடங்களுக்கும் போய் சேர்ந்திருந்தார். சிங் இஸ் பிளிங் மூலம் மீண்டும் இந்திப் படம் நடிக்க ஒரு வாய்ப்பு, ஹீரோ அக்‌ஷய் குமார், இயக்குநர் பிரபுதேவா. படம் படுபயங்கர ஹிட். அடுத்தடுத்த படங்களில் தனுஷ், விஜய் என க்ராஃப் இன்னும் ஏகிறியது. அந்த க்ராஃப் இப்போது வந்து சேர்ந்திருக்கும் இடம், ரஜினிகாந்த் + ஷங்கர் = 2.0.

ஒரு நடிகையாக, பெர்ஃபாமென்ஸ் என்றால் எமி தான் என்று குறிப்பிடும் படி இன்னும் அவர் எதுவும் செய்யவில்லை தான். ஆனால், எமி செய்திருப்பது வெறுமனே, வெளிநாட்டு நடிகை அதனால் தான் இவ்வளவு வாய்ப்பு என்ற எண்ணத்துடன் யாரும், ஒதுக்க முடியாத உழைப்பு மட்டுமே. அது அழகானதும் கூட. Very Happy Birthday To You Amy!

எமி ஜாக்சன் பற்றி அதிகம் வெளியில் தெரியாத சில டிட் பிட்ஸ் இதோ...

* எமி லூயிஸ் ஜாக்சன் இது தான் எமியின் முழுப் பெயர்

collage_22173.jpg

* 16 வயதிலேயே மாடலிங் செய்யத் துவங்கியவர், உலக அளவில் 18க்கும் மேற்பட்ட அழகி விருதுகளை வென்றுள்ளார்.

Amy-Jackson-Miss-Teen_22364.jpg

* விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக், ஏக் திவானா தா படத்தில் எமி தான் ஜெஸ்ஸி.

2_22520.jpg

* ஐஸ்வர்யா ராய், மனிஷா கொய்ரலாவுக்குப் பிறகு ஷங்கரின் இரண்டு படங்களில் இடம்பிடித்திருக்கும் ஹீரோயின் எமி ஜாக்சன் தான்.

3_22089.jpg

* சல்மான் கான் நடித்த கிக் படத்தில் முதலில் எமி ஜாக்சனை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. அந்த சமயத்தில் ஷங்கரின் 'ஐ' படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை நழுவ விட்டார் எமி.

Salman-Khan-AFP_22242.jpg

* இந்தி நடிகை பிபாஷா பாசு மற்றும் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் தீவிர ரசிகை எமி.

collage1_22313.jpg

* 'ஜூனியர் ஐஸ்வர்யா ராய்' என்று தான் ரஜினிகாந்த் எமியை அழைப்பாராம்.

5_22506.jpg

* அக்கா அலிகா ஜாக்சன் மீது மிகுந்த ப்ரியம் உள்ளவர் எமி.

7_22112.jpg

* எமி, தமிழ் வசனங்களை லிப் சிங்க் மிஸ்ஸாகாமல் பேசக்கூடியவர். 

Bild könnte enthalten: 1 Person, Text

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

43 வருடங்களின் பின் நூலகத்தில் திருப்பிக் கொடுக்கப்பட்ட புத்தகம்

ஸ்கொட்லாந்து நூலகத்தில் இருந்து பெறப்பட்ட புத்தகம் ஒன்று, 43 வருடங்களுக்குப் பின் மீண்டும் நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4_Orkney_Library.jpg

ஸ்கொட்லாந்தின் எழுத்தாளரும், கவிஞருமான எட்வின் முய்ர் என்பவர் பற்றிய புத்தகம் ஒன்றை பி.எச்.பட்டர் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஸ்கொட்லாந்தின் ஓர்க்னி நூலகத்தில் இருந்து 1973ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஒருவர் இரவலாகப் பெற்றுச் சென்றிருக்கிறார். எனினும் இந்தப் புத்தகம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், புத்தகத்தை இரவல் வாங்கியவராகக் கருதப்படுபவரது வீட்டை அவரது குடும்ப உறுப்பினர்கள் சுத்தம் செய்துகொண்டிருக்கையிலேயே இந்தப் புத்தகத்தை அவர்கள் கண்டுள்ளனர். அது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியது என்பதை அறிந்து, ஓர்க்னி நூலகத்தில் அதை ஒப்படைத்துள்ளனர்.

43 ஆண்டுகள் கழித்துக் கொடுப்பதனால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டி ஏற்படுமோ என்று அவர்கள் தயங்கியபோதும், நூலக நிர்வாகியோ அபராதம் எதையும் விதிக்கவில்லை.

ஆனால், மிகுந்த மதிப்பு மிக்க புத்தகம் என்பதனால் தற்போது அதை மிகப் பத்திரமாக வைத்துள்ளனர். 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

மகா கலைஞன்! - நாகேஷ் நினைவு தின சிறப்புப் பகிர்வு

னதிற்கு நெருக்கமான ஒருவரின் மரணம் நம்மை என்ன செய்யும்? அழவைக்கும்...வேதனையில் விம்ம வைக்கும்....வாழ்க்கையையே வெறுக்க வைக்கும்..திரையில் கூட மனம்கவர்ந்த கதாநாயகர்களின் இறப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ரசிகர்கள். ஆனால், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை புரிந்த அந்த மகா கலைஞன், ’மகளிர் மட்டும்’ என்னும் திரைப்படத்தில் இறந்துபோனவராக நடித்தே தனது ரசிகர்களைச் சிரிக்க வைத்தார் என்றால் அக்கலைஞனுக்கு அழிவே கிடையாது என்பதுதான் அதன் அர்த்தம்...அவர் நண்பர்களுக்கு குண்டுராவ்...வீட்டில் குண்டப்பா...பிறப்பால் நாகேஸ்வரன்....நகைச்சுவை விரும்பிகளுக்கு ‘நாகேஷ்’.

நாகேஷ்

வாழ்க்கையில் வலிகளை மறைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தனது நடிப்பால் அளித்த நாகேஷுக்கு தனது ரசிகர்களின் வருத்தமும், வேதனையும் பிடிக்காது! மரணத்தில் கூட மற்றவர்களைச் சிரிக்க வைத்த அத்தகைய மா கலைஞன் இம்மண்ணைவிட்டு மறைந்த தினத்தில், அவரது பெருமைகளைப் பார்ப்போம்.

சிறுவயதிலிருந்தே நாகேஷுக்கு நாடகங்கள், நடிப்பு என்றால் உயிர். நாயகனாக வேஷம் கட்டி நடிக்க ஆவல் கொண்டிருந்தவரின் கனவை அடியோடு நசுக்கிப் போட்டது, இரண்டாம் வருடக் கல்லூரிப் படிப்பின்போது அவருக்கு ஏற்பட்ட அம்மை நோய். முகம் முழுவதும் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள். உள்ளத்தில் நொறுங்கிப் போனாலும், உயிர் மூச்சாய் நினைத்த நடிப்பின் மீதான ஆசையை அவர் விடவில்லை. கொஞ்ச காலம் ரயில்வேயில் எழுத்தராய் பணிபுரிந்து கொண்டே, தனது நடிப்பு மீதான ஆசைக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்தார் நாகேஷ்.

பலகட்ட கடினப் போராட்டங்களுக்குப் பிறகு, நாடக உலகினுள் நுழைந்தார். மணியனின் ‘டாக்டர் நிர்மலா’ நாடகத்தில் தை தண்டபாணி என்னும் நோயாளியாக நாகேஷ் நடித்த பாத்திரம் அப்ளாஸ் அள்ளியது. அதனால் அவருக்கு ‘தை நாகேஷ்’ என்னும் பட்டப் பெயர் இணைந்து பின்னாளில் அது ‘தாய் நாகேஷ்’ஆக மாறியது. நாகேஷ் அவர்களின் முதல் திரைப்படம் ‘தாமரைக்குளம்’. நாடக உலகின் மீது தீராக் காதல் கொண்டிருந்த நாகேஷ், கதாநாயகனாக நடித்த இப்படம் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை. மீண்டும் வாழ்க்கையில் போராட்டம். எனினும், போராடத் தயங்காதவருக்கு கிடைத்த துருப்புச் சீட்டுதான், ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம். கிடைத்த சான்ஸில் கெத்தாக ஸ்கோர் செய்தார். உடல்மொழி, வசன மாடுலேஷன் என்று திரையில் தான் தோன்றும் காட்சிகளிலெல்லாம் சிக்ஸர்களாய் விளாசினார்.  பாலையாவிற்கு அவர் சொல்லும் ‘த்ரில்லர் கதை’ இன்றும் நம்மை சீட்டின் நுனியில் அமர்ந்து சிரிக்க வைக்கும் மாஸ் காமெடி.

nagesh_2_600_00237.jpg

அதன்பின்பு, வரிசையாக நகைச்சுவை கதாபாத்திரங்கள் இவர் பெயர் சொல்லும் வண்ணம் கிடைக்கத் தொடங்கியது. எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ நாகேஷ் இருப்பார். திரையில் நாகேஷின் ஆஸ்தான ஜோடிகள் என்றால் அது சச்சுவும், ஆச்சி மனோரமாவும்தான்.  இந்த காம்பினேஷனில் வெளியான திரைப்படங்களின் காமெடிகள் இன்றும் சூப்பர் டூப்பர் ஹிட். நாகேஷ் காமெடி உலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தபோதே, இயக்குனர் சிகரம் பாலசந்தர் கதை, வசனத்தில் ஒரு படம் வெளியானது.  அழவைக்க, சிரிக்க வைக்க, சிந்திக்க என்று கலந்து கட்டி நடிக்க வேண்டிய அந்தப் படத்திற்கு ஹீரோவாக பாலசந்தரும் சரி, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சுவும் சரி.. யோசிக்காமல் டிக் செய்த பெயர்: நாகேஷ். படம் பெயர். சர்வர் சுந்தரம்! இன்றைக்கும் ஹோட்டல்களில் பணிபுரியும் சர்வர்கள்,  வாடிக்கையாளர்களை எப்படி  எதிர்கொள்ளலாம் என்றறிய அந்தப் படத்தின் முதல் மூன்றரை நிமிடங்கள் பார்த்தாலே போதும்.        

நாகேஷின் நடிப்பில் மகிழ்ந்துபோன பாலசந்தர், ‘நீர்க்குமிழி’ திரைப்படத்திலும் கதாநாயகன் வாய்ப்பை அள்ளிக் கொடுத்தார். அந்தப் படத்தில்தான் அழகென்பது மனதிலும், நடிப்பிலும் இருந்தால் போதும் என்று நிரூபித்துக் காட்டினார் நாகேஷ். இன்று திரைத்துறையில் மிளிரும் பலருக்கும் அது ஒரு தன்னம்பிக்கை பூஸ்ட். ஆம்...நீர்க்குமிழி திரைப்படம் வெற்றிகரமாக பலநாட்கள் ஓடியது. தொடர்ந்து தேன்கிண்ணம், யாருக்காக அழுதான், எதிர்நீச்சல் என்று ஏராளமான கதாநாயக வேடத் திரைப்படங்கள் அவருக்கு கிடைத்தது.

’யாருக்காக அழுதான்’ திரைப்பட இறுதிக் காட்சியில் உண்மையிலேயே அழுது, உருண்டு, பிரண்டு அழுத நாகேஷப் பார்த்து படக்குழுவே பிரமித்துப் போயிருக்கிறது. அப்படத்தினைத் தயாரித்த எழுத்தாளர் ஜெயகாந்தனே வியந்து போயிருக்கிறார். நாகேஷுக்கு, ஜெயகாந்தனும், பாலசந்தரும் ஆருயிர் நண்பர்கள்.

ஒருமுறை ஜே.கேவும், நாகேஷும் காரில் காத்திருந்த தருணமொன்றில், எதார்த்தமாக ‘பிச்சையெடுக்கலாமா?’ என்று ஜெயகாந்தன் கேட்க, நொடியில் சட்டை, பேண்ட்டை களைந்துவிட்டு பிச்சைக்காரனாகவே மாறிப்போனாராம் நாகேஷ். அந்த அர்ப்பணிப்புதான் அவரை மக்களின் மனம் கவர்ந்த கலைஞனாக உயர்த்தியது.

திருவிளையாடல் படத்தின் புலவன் தருமி - கடவுள் சிவன்  காட்சி. எதிரில் நிற்கும் சிவாஜி, சாதாரண வேடம் என்றாலே கம்பீரமான நடிப்பைத் தரும் நடிப்பு இமயம். இதில் கெத்தாக சிவன் வேடம் வேறு. இடுப்பில் கைவைத்து, ‘கேள்விகளை நீ கேட்கிறாயா.. நான் கேட்கவா’ என்று சிம்மக்குரலில் கேட்பதைப் பார்த்தால் எதிரில் நிற்கும் எவருக்கும் நடுங்கும். அந்தக் காட்சியில் சளைக்காமல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அடுத்தவர் கவிதையை தன் கவிதை என்று பொய் சொல்ல வேண்டும் என்ற குற்ற உணர்ச்சியும், வேறு வழியில்லை என்ற தன் நிலையையும் உடல்மொழியிலேயே வெளிப்படுத்தியிருப்பார்.  ஒட்டிய வயிறுடன் அவர் செய்த சிலிர்ப்பான நகைச்சுவை வேடம், சிவாஜியை படப்பிடிப்பில் பலமுறை சிரிக்க வைத்த ஒன்று.   தனது முகத்தழும்புகளைக் கூட, வாழ்வின் ஏணிப்படிகளாகவே பார்த்தவர் நாகேஷ். முன்பொரு பேட்டியில், ‘மாவு அரைபட நன்றாக கொத்தப்பட்ட அம்மி தேவை. அப்படி கடவுள் என்முகத்திலும் கொத்திய குழிகள்தான், இன்று வாழ்க்கையில் நான் வளர்ந்திடக் காரணம்’ என்று நகைச்சுவையாகவே அதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நடனத்தையும் விட்டுவைக்காத சகலகலா திறமைசாலி. கால் முட்டியில் கைகளை மாறி மாறி வைத்தபடி அவர் ஆடும் நடனம் அவரது டிரேட் மார்க்.  

வயோதிகம் சூழந்தபோதும், இவரது நடிப்பின் வேகம் தணியவில்லை. ரஜினி, கமலுக்கே சவால் விடும் வில்லாதி வில்லன் கேரக்டர்களையும் அசால்ட்டாக நடித்து அட்ராசிட்டி செய்தவர் நாகேஷ். ‘ஆபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமலையும், ’அதிசய பிறவி’ படத்தில் ரஜினியையும் உப்பு தின்று தண்ணீர் குடிக்க வைக்கும் மோஸ்ட் வாண்டட் வில்லன். கமலுடன் நெருங்கிய பாசப்பிணைப்பு கொண்டிருந்த நாகேஷ், தனது இறப்பிற்கு முன்பு கடைசியாக நடித்ததும் கமலுடன் தான். ‘தசாவதாரம்’ திரைப்படம்தான் அவரது திரையுலக வாழ்வில் ரசிகர்களுக்கு கிடைத்த கடைசிப் பொக்கிஷம். தனது நடிப்பிற்கு உயர்வான விருதுகள் கிடைக்காதததைக் கூட அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரசிகனின் மனம் மகிழ்ந்த சிரிப்பையே தனக்கான விருதாக ஏற்றுக் கொண்டவர். 

இந்தப் பெரும் கலைஞன், ஆனந்த விகடன் நிருபரிடம் சொல்லி தன் பெயரில் விகடனில் ஜோக்ஸ் எழுதியிருக்கிறார் என்பது தெரியுமா உங்களுக்கு?   ஒருமுறை நாகேஷ், ‘எப்போது அவர் `கட் என்கிறாரோ? எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  கடவுள் எப்பவுமே ` டூ லேட் ஆசாமி’ என்று மரணத்தைக் கூட ரசனையான பதிலாக சொல்லியிருக்கிறார். 2009ல் இதே தினத்தன்று கடவுள் இவரை தன்னருகே அழைத்துக் கொண்டான். நிச்சயம் நாகேஷ் அங்கேயும் பலரைச் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். கண்ணதாசன் சொன்னதைப் போல.. இவரைப் போன்ற கலைஞர்கள்.. நிரந்தனமானவர்கள்.. அழிவதில்லை.. எந்த நிலையிலும் இவர்களுக்கு மரணமில்லை!  

vikatan.

  • தொடங்கியவர்

 

வடதுருவ வைரத்தின் வயது 2 பில்லியன் ஆண்டு

வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பட்டைதீட்டப்படாத வைரத்தின் பெயர் ஃபாக்ஸ்பையர்.

  • தொடங்கியவர்

'சிவலிங்கா' படத்தின் ட்ரெய்லர்...

 

 

ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க பி.வாசு இயக்கி விரைவில் வெள்ளித்திரைக்கு வரவுள்ள திரைப்படம் சிவலிங்கா. வெகு நாட்கள் கழித்து பி.வாசு இயக்கும் படம் என்பதாலும், லாரான்ஸுக்கு தற்போது ஒரு மாஸ் நிலவி வருவதாலும், படத்துக்கு எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. லாரன்ஸின் பேய் பட ஹிட் வரிசையில் சிவலிங்காவும் சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

  • தொடங்கியவர்
‛பால்கன்' பறவைகளுக்கு விமான டிக்கெட் எடுத்த சவுதி இளவரசர்

 

Tamil_News_large_1701450_318_219.jpg

துபாய் : விமான பயணத்தில் பயணிகளுக்கு இணையாக, பால்கன் பறவைகளும் பயணம் செய்ய சவுதி இளவரசர் டிக்கெட் எடுத்த விவகாரம் மற்றும் விமானத்தில் பால்கன் பறவைகள் இருக்கும் போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதுதொடர்பாக, துபாயில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பால்கன் பறவைகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய பறவை. சவுதி இளவரசர், இந்த பால்கன் பறவைகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு, 80 டிக்கெட்களை புக் செய்து, அப்பறவைகளை சீட் உடன் கட்டி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், பால்கன் பறவைகளுக்கு என்று பிரத்யேக பசுமை பாஸ்போர்ட்கள் இருப்பதாகவும், இந்த பாஸ்போர்ட், பால்கன் பறவைகளை, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொனாக்கோ மற்றும் சிரியா நாடுகளின் வான்பரப்பில் பறக்க அனுமதி அளிக்கிறது.

இந்த 80 பால்கன் பறவைகளில், ஆறு பறவைகள், எகனாமி வகுப்பில் பயணம் செய்ததாக கத்தார் ஏர்வேஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

planehawks.jpg

saudi-prince-flies-his-birds-on-plane-2-hours-ago.jpg

http://www.dinamalar.com

  • தொடங்கியவர்
உறுதியின்றேல் நிறைவு இல்லை
 

article_1485926799-aanmigam.jpgஉங்களுக்குள் எழும் சில பிரச்சினைகளுக்கு மனச்சாட்சியின்படி முடிவு எடுப்பீர்களாக. சிலசமயங்கள் நீதியான தீர்மானங்களை எடுக்க முயலும்போது, உங்களுடன் நீங்களே முரண்படும் நிலையும் ஏற்படலாம். 

எப்பொழுதும் சார்ந்தேன் பக்கமாகவே சாயக்கூடாது. எங்களை வெல்லும் நிலையை நியாயத்தின் பொருட்டு எடுத்தேயாக வேண்டும்.  

மனித மனம் சில சமயம் ஆசைகளுக்கு உட்பட்டு, சலனத்தின் வழி புகுந்தும் விடலாம். மனிதன் பிறருடன் போராடுவதைவிட, தன்னுடன் போராடுவதே மிகச் சிரமமாக இருக்கும்.  

நியாய, அநியாயங்களை உள்மனது புரிந்து கொள்ளும். எனவே, நெஞ்சில் உறுதியுடன் இருப்பேன் என நாங்கள் எமக்குக் கட்டளையிட்டேயாக வேண்டும். உறுதியின்றேல் நிறைவு இல்லை. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மஞ்சள் அட்டை திருமணப் பத்திரிகை முதல் - கிரெடிட் கார்ட் பத்திரிகை வரை! #WeddingCards

திருமணப் பத்திரிகை

‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ என்பது உண்மைதான். ஆனாலும் வெவ்வேறு இடங்களிலும், இல்லங்களிலும் அந்தத் திருமண முறைகள் மாறுபடுகின்றன என்பதும் உண்மை. இது ஒருபுறமிருக்க, இன்றைய நவீன உலகில் திருமண நிகழ்வுகள் மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேறிவருவது குறிப்பிடத்தக்கது. ஆகாயத்தில் பறந்துகொண்டும், கடலுக்கு அடியில் பயணம் செய்தபடியும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைச் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. திருமண நிகழ்வுகளில்கூட பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. அன்று சாதாரணமாக நடைபெற்ற திருமணங்கள், இன்று மிகவும் ஆடம்பரமாக நடக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. திருமணங்கள் இவ்வாறு பல்வேறு விதங்களிலும், ஆடம்பரமாகவும் நடைபெறும்போது, அதற்கு அச்சாணியாக இருக்கும் திருமணப் பத்திரிகைகளில் மட்டும் மாற்றம் வராமல் இருக்குமா என்ன?

மஞ்சள் நிற திருமணப் பத்திரிகை!

முன்பெல்லாம் பலருடைய திருமணம் மிகவும் எளிய முறையில் நடந்தேறியதைப் போன்றே, அவர்களுடைய திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட பத்திரிகைகளும் மிக மிக எளிமையாக அச்சடிக்கப்பட்டு சாதாரணமான பத்திரிகைகளாக அமைந்திருந்தன. நான்கு மடிப்பாக மடிக்கப்பட்டு, கவருக்குள் வைத்துக் கொடுக்கப்படும் அந்தப் பத்திரிகைகள், பார்ப்போரைக் கவரும் வண்ணம் இருக்கும். மஞ்சளும், ரோஸும் கலந்த நிறத்தில் அந்தப் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கப்பட்டன. இதில், திருமண நிகழ்வு பற்றிய குறிப்புகள் மஞ்சள் நிறப் பக்கத்திலும், ரோஸ் நிறத்திலான மறுபக்கத்தில் திருணம் நடைபெறும் நாள், நேரம், இருவீட்டார் அழைப்பு போன்ற தலைப்புகளும் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற பாரம்பர்ய மஞ்சள் மற்றும் ரோஸ் வண்ணத்திலான திருமணப் பத்திரிகைகளை இன்றைய தலைமுறை அவ்வளவாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், சில வீடுகளில் திருமணத்துக்கான சாட்சியாக அதுபோன்ற பத்திரிகைகளை ஃபிரேம் செய்து மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.

ஆரம்பகால மஞசள் நிற திருமணப் பத்திரிகை

திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, பெண்ணும், மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக்கொள்ளாமல் நடைபெற்றது அந்தக் காலம். தற்போது, ஒருவரை ஒருவர் பார்த்து, காதலித்து, அதன்பின் பெற்றோருக்குத் தெரியப்படுத்தி, நிச்சயித்து திருமணம் நடைபெறுவதும் உண்டு. வேறுசில நிகழ்வுகளில், இரு வீட்டாருமோ அல்லது பெண் அல்லது பையன் வீட்டாரோ காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்பட்சத்தில், பதிவுத் திருமணம் செய்துகொள்ளுதல் அல்லது நண்பர்கள் உதவியுடன் தாங்களாகவே எளிய முறையில் கோயில்களிலோ அல்லது மண்டபங்களிலோ வைத்து திருமணம் செய்துகொள்வதும் நடைபெற்றுவருவதை அறிகிறோம்.

கால மாற்றத்துக்கேற்ப திருமணம் செய்துகொள்வது மாறிவிட்டது போன்று, திருமணத்துக்காக அச்சிடப்படும் பத்திரிகைகளிலும் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன. மஞ்சள் - ரோஸ் நிற பத்திரிகைகளுக்குப் பிறகு, டிஜிட்டல் யுகம் அசுர வளர்ச்சி பெற்றதால், அதன்மூலம் திருமணப் பத்திரிகைகள் புதுப்பொலிவு பெறத் தொடங்கின. திருமணக் குறிப்புகளுடன், மணமகன் மற்றும் மணமகள் உருவம் பதித்த படங்கள் வெளிவர ஆரம்பித்தன. இன்றும் பல வீடுகளில் இப்படித்தான் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதுதவிர, மிகவும் சிம்பிளாக போஸ்ட் கார்டு சைஸிலும் பத்திரிகைகள் வரத் தொடங்கிவிட்டன.

ஜனார்த்தன ரெட்டி தயாரித்த பத்திரிகை!

இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக கர்நாடக முன்னாள் அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான கலி ஜனார்த்தன ரெட்டி, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தனது மகளின் திருமணத்துக்காகத் தயாரித்திருந்த பத்திரிகை மிகவும் வித்தியாசமானதாக அமைந்திருந்தது. அது, வழக்கமான வார்த்தைகள் அச்சடிக்கப்பட்ட பத்திரிகையாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட வகையில், எல்.சி.டி திரையுடன் கூடிய ஒரு பாக்ஸ் வடிவில் தயாரிக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்தால்... ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், திருமணத்துக்கு அழைப்பது போன்ற வீடியோ காட்சி எல்.சி.டி திரையில் தோன்றும் வகையில் வடிவமைத்திருந்தனர். அதில் ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவியுடன் பாட்டுப் பாடியபடியே தனது மகளை அறிமுகப்படுத்துவார். அதன் பிறகு மணமகள் ப்ராமினியும், மணமகன் ராஜீவ் ரெட்டியும் டூயட் பாடுவார்கள். இறுதியில், திருமணத் தேதி மற்றும் இடத்தை ரெட்டி குடும்பத்தினர் கூறுவதுடன் பாடல் முடிவடையும். இதுபோன்ற மிகவும் ஆடம்பரமான அழைப்பிதழை எல்லோராலும் வழங்க முடியாவிட்டாலும், இப்படிப்பட்ட பத்திரிகையும் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தது.

ஜனார்த்தன ரெட்டி தயாரித்த திருமணப் பத்திரிகை

தற்போது உலகமே டிஜிட்டல்மயமாகி, கார்டுகளில் இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், திருமணப் பத்திரிகையும் ஒரு ஏ.டி.எம் கார்டுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாகவும், எல்லோரையும் அசத்தும் விதத்தில் கைக்கு அடக்கமாகவும் அந்தத் திருமண கார்டு அச்சடிக்கப்பட்டிருக்கிறது. அதில், ஒருபுறத்தில் திருமணத் தேதியும், மணமக்கள் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. மறுபுறத்தில் திருமண மண்டபம் பற்றிய குறிப்புகளும், அவர்களுடைய தொடர்பு எண்களும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாகப் பேச... அதில், இடம்பெற்றிருந்த இரண்டு செல்போன் எண்களுக்கும் நாம் தொடர்புகொண்டோம். ஆனால், ஓர் எண் உபயோகத்தில் இல்லை. மற்றோர் எண்ணில் தொடர்புகொண்டபோது அவர், நம் அழைப்பை ஏற்கவில்லை.

ஏ.டி.எம் கார்டு வடிவில் பத்திரிகை!

இதுகுறித்து திருமணப் பத்திரிகை அச்சடிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள வடிமைப்பாளர்கள் கூறுகையில், ‘‘ஏ.டி.எம் வடிவமைப்பில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அதுபோன்ற திருமண கார்டுகளுக்கு சமீபகாலமாக நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. மிகவும் சிம்பிளாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதுடன் கைப்பையிலோ அல்லது மணிபர்ஸிலோ அதுபோன்ற கார்டை அழைப்பாளர்கள் வைத்துக்கொள்ள முடிவதால், திருமணம் நடைபெறும் நாளன்று எளிதில் மண்டபத்துக்குச் செல்ல ஏதுவாகவும் இருக்கிறது. வித்தியாசமாக இருக்கும் இதுபோன்ற திருமண கார்டைப் போன்று, வரும் காலங்களில் மற்றவர்களும் அச்சடிக்க வாய்ப்பு இருக்கிறது. டிஜிட்டல் புரட்சியில் இதைவிட இன்னும் மாற்றம் வரக்கூடும்’’ என்றனர்.

ஏ.டி.எம் கார்டு வடிவில் திருமணப் பத்திரிகை

சமூக வலைதளங்களில் இளைய சமுதாயத்தினர் தங்களது நேரத்தைச் செலவிடும் இன்றைய சூழ்நிலையில், தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கு, ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில் உள்ளவர்களுக்கு, திருமணத்துக்கான கார்டை ஸ்கேன் செய்து அனுப்பிவிட்டு, ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போடும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. ‘இதனையே நேரில் வந்து கொடுத்ததாகக் கருதவும்’ என்று பின்குறிப்பையும் போட்டுவிடுகிறார்கள். பின் என்ன? திருமணத்துக்குச் சென்று வாழ்த்திவிட்டு, சாப்பிட்டு வர வேண்டியதுதான்.

மாற்றம் என்பது திருமண அழைப்பிதழ் கார்டில் மட்டும்தானா? மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இதற்கும் சாலப்பொருந்தும்.

vikatan.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று 

பெப்ரவரி - 01

 

662 :  ஒன்­பது மாத முற்­று­கையின் பின்னர் சீனாவின் இரா­ணுவத் தள­பதி கொக்­சிங்கா, தாய்வான் தீவைக் கைப்­பற்­றினார். 

 

1788 :  ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்­லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீரா­விப்­ப­ட­குக்­கான காப்­பு­ரிமம் பெற்­றனர். 

 

1793 : ஐக்­கிய இராச்­சியம் மற்றும் நெதர்­லாந்­துக்கு எதி­ராக பிரான்ஸ் போர்ப் பிர­க­டனம் செய்­தது. 

 

896varalaru-01-02-2017.jpg1814 : பிலிப்­பைன்ஸில் மயோன் எரி­மலை வெடித்­ததில் 1,200 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1832 : ஆசி­யாவின் முத­லா­வது அஞ்சல் (தபால்) வண்டி சேவை (mail--coach) கண்டி, கொழும்­புக்­கி­டையில் ஆரம்­ப­மா­கி­யது. 

 

1880 : யாழ்ப்­பா­ணத்­திற்கும் பருத்­தித்­து­றைக்கும்  இடையிலான தபால் வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டது. 

 

1884 : ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்­கில அக­ரா­தியின் முதற் பதிப்பு வெளி­யா­னது.

 

1893 : தோமஸ் எடிசன் தனது முத­லா­வது அசையும் படத்­துக்­கான ஸ்டூடி­யோவை நியூ ஜேர்­சியில் கட்டி முடித்தார்.

 

1908 : போர்த்­துக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவ­னது மகன், இள­வ­ரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்­லப்­பட்­டனர். 

 

1913 : உலகின் மிகப்­பெ­ரிய ரயில் நிலையம் நியூயோர்க் நகரில் திறக்­கப்­பட்­டது.

 

1918 : ரஷ்யா ஜூலியன் நாட்­காட்­டியில் இருந்து கிற­கோ­ரியன் நாட்­காட்­டிக்கு மாறி­யது.

 

1924 : சோவியத் ஒன்­றி­யத்தை ஐக்­கிய இராச்­சியம் அங்­கீ­க­ரித்­தது.

 

1946 : நோர்­வேயின் ட்றிகிவா லீ, ஐக்­கிய நாடுகள் சபையின் முத­லா­வது செய­லாளர் நாய­க­மாகத் தெரிவு செய்­யப்­பட்டார். 

 

1958 : எகிப்து மற்றும் சிரியா ஆகி­யன இணைந்து 1961 வரையில் ஐக்­கிய அரபுக் குடி­ய­ரசு என ஒரு நாடாக இயங்­கின. 

 

1974 : பிரே­ஸிலில் 25 மாடிக் கட்­டடம் ஒன்றில் தீப்­பற்­றி­யதில் 189 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1979 : 15 ஆண்­டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் ஆன்­மீகத் தலைவர் அயத்­துல்லா கொமெய்னி ஈரா­னுக்குத்  திரும்­பினார். 

 

2003 : நாசாவின் கொலம்­பிய விண்­ணோடம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து பூமிக்குத் திரும்­பிய­போது வெடித்துச் சித­றி­யதில் இந்­திய விண்­வெளி வீராங்­கனை கல்­பனா சாவ்லா உட்­பட ஏழு பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

 2004 : சவூதி அரே­பி­யாவில் ஹஜ் பய­ணத்தின் போது கூட்ட நெரி­சலில் சிக்கி 251 பேர் கொல்­லப்­பட்­டனர். 

 

2005 : நேபாள மன்னர் ஞானேந்­திரா நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்தார்.

 

2005 : கனடா, ஓரினத் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடா னது. 

 

2012 : எகிப்தில் நடை­பெற்ற கால்­பந்­தாட்டப் போட்­டி­யொன்­றின்­போது ரசி­கர்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்­களில் 72 பேர் உயிரிழந்தனர்.

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அக்கடதேசத்துல பிரம்மானந்தம் தான் 'ஆல் இன் ஆல்' அழகுராஜா! #HBDBrahmanandam

தெலுங்குத் திரையுலகில் ஒரு பிரபலமான கதை உண்டு. தயாரிப்பாளரிடம் கதை சொல்லி ஓகே வாங்க வரும் இளம் இயக்குநர், 'சார்... முதல் சீன்லயே ஹீரோவ பல பேர் துரத்துறாங்க. ஒவ்வொருத்தரையா அடிச்சு துவம்சம் பண்றார் ஹீரோ. இதுவரைக்கும் ஹீரோவோட கை கால்கள மட்டும்தான் காமிக்கிறோம். தன்ன சுத்தி இருக்குற பலரையும் அடிச்சு பறக்கவிடும்போது கரெக்ட்டா ஹீரோ முகத்தைக் காட்றோம்' என கதை சொல்ல ஆரம்பிக்கிறார். முதல் பாதி வரை கதைகேட்ட தயாரிப்பாளருக்கு கதை பிடித்துப்போகிறது. 'சரிப்பா பர்ஸ்ட் ஹாப் சூப்பர். செகன்ட் ஹாப் என்ன பண்ணப்போற?' என இளம் இயக்குநரிடம் தயாரிப்பாளர் கேட்கிறார். இதற்கு, 'சிம்பிள் சார். செகன்ட் ஹாப்ல பிரம்மானந்தம் சார் வர்றார். மிச்சத்த அவர் பார்த்துப்பார்' எனப் பதில் சொல்லி கதைக்கு வெற்றிகரமாக 'ஓகே' வாங்குகிறார் இயக்குநர். அந்த அளவுக்கு தெலுங்குத் திரையுலகத்தில் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் கொடி உயரப் பறக்கிறது.

பிரம்மானந்தம்

யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவை செய்வதென்பது தனிக்கலை. அதில் வெற்றிபெற்றவர்களில் மிக முக்கியமான இருவர்களில் ஒருவர் வடிவேலு. இன்னொருவர் பிரம்மானந்தம். 'டோலிவுட்டில் கேமரா இல்லாமக்கூட படம் எடுப்பாங்க. ஆனா பிரம்மானந்தம் இல்லாம படம் எடுக்கமாட்டாங்க' என்பது இவரைப் பற்றிய பிரபலமான சொல்வழக்கு. பிரம்மானந்தத்தை மனதில் வைத்துத்தான் பெரும்பாலான தெலுங்குப் படங்களின் திரைக்கதையே எழுதப்படுகின்றன. 'கிங் ஆஃப் செகண்ட் ஹாப்' என்ற அடைமொழிக்கேற்ப, படத்தின் இரண்டாம் பகுதியை தொய்வு ஏற்படாமல் தனது காமெடி ட்ராக்குகளால் பலம் சேர்ப்பதில் இவர் திறமை வாய்ந்தவர்.

யார் மனதும் புண்படாத வகையில் நகைச்சுவை கதாபாத்திரமேற்று நடிப்பதை தனது தனிப்பட்ட அடையாளமாக வளர்த்துக்கொண்டவர். தனது முக பாவனைகளால் அக்கட தேசம் மட்டுமின்றி, 'டப்பிங்' படங்களின் புண்ணியத்தில் தென்னிந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

டோலிவுட்டைப் பொறுத்தவரை ஹீரோ அறிமுகமாகும் காட்சி அனல் பறக்கும். திரையரங்குகளில் கைதட்டல்களும், விசில் சத்தங்களும் விண்ணைப் பிளக்கும். அந்த அளவுக்கு ஹீரோயிசம் நிறைந்த டோலிவுட்டில், பிரம்மானந்தம் அறிமுகமாகும் காட்சியிலும் ஹீரோவுக்கு நிகராக திரையரங்குகள் அதிரும். எப்பேற்பட்ட படமானாலும் தனது காமெடியால் படத்தை ரசிக்கும்படியாக்கி காப்பாற்றிக் கொடுப்பதாலேயே தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் முதல் சாய்ஸ் இவர்தான்.

தெலுங்கில் எம்.ஏ. பட்டம் முடித்துவிட்டு, விரிவுரையாளராக பாடம் சொல்லித்தந்து கொண்டிருந்த பிரம்மானந்தம் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் உடன் நடித்து, அவரது மகன் பாலகிருஷ்ணா, தற்போது ஜூனியர் என்.டி.ஆர் வரை அனைவருடனும் நடித்தாலும், தலைமுறை தாண்டியும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பிரம்மானந்தம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பதால், தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற கத்தி படத்தின் ரீமேக்கான 'கைதி நம்பர் 150' படத்தை வெற்றிப்படமாக்க வேண்டுமென பெரிதும் விரும்பினார் சிரஞ்சீவி. அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது பிரம்மானந்தத்தை தான். ஒரிஜினல் கதையில் இல்லாத பாத்திரத்தை பெரிதுபடுத்தி, காமெடி பொறுப்பை பிரம்மானந்தம் கையில் கொடுத்த பின்புதான் சிரஞ்சீவிக்கு நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கை பொய்த்துப் போகாமல் படத்தை வெற்றிபெறச் செய்ததில் பிரம்மானந்தத்தின் பங்கும் உண்டு.

நேரடித் தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கு முன்னரே, தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் ஆகிவந்த படங்கள் மூலம் பிரம்மானந்தம் அத்தனை சென்டர்களிலும் அறிமுகமாகியிருந்தார். 'கில்லி', 'நியூ' போன்ற தமிழ்ப்படங்களில் சிறிய கதாபாத்திரமேற்று நடித்தாலும், 'மொழி' திரைப்படத்தில் இவரது நடிப்பு இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நின்றது இவரது தனிச்சிறப்பு.

இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' வென்றவர், தெலுங்குத் திரையுலத்தினருக்கு ஆந்திர அரசு வழங்கும் உயரிய விருதான நந்தி விருதை ஐந்து முறை வென்றவர், 'அதிகப் படங்களில் நடித்த வாழும் நடிகர்' என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர் என்று இவரது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 1980-களில் இருந்து நடித்து வரும் இவர், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானபோது தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக சுருளிராஜன் நடித்துக்கொண்டிருந்தார். அதன்பின் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் வரிசையில் தற்போது சதீஷ், யோகிபாபு என பல தலைமுறை நடிகர்கள் மாறிவிட்டாலும், இன்றும் தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகராக பிரம்மானந்தம் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

பிரம்மானந்தத்திற்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்கள் யார் தெரியுமா? இதோ அவரே சொல்கிறார்... ''தெலுங்கில் ரேலங்கி, ராஜ்பாபு பிடிக்கும். அவங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் வெச்சுக்கிட்டு நடிச்சாங்க. தமிழ்ல எனக்குப் பிடிச்ச காமெடியன்  நாகேஷ். குணச்சித்திர நடிப்பிலும் சட்டையர் காமெடியிலும் அவர் ஒரு லெஜன்ட். இப்போ,  வடிவேலு, விவேக் காமெடியை ரசிச்சுப் பார்ப்பேன். புதுசா சந்தானம் காமெடி பத்தி நிறையச் சொல்றாங்க. நேரம் கிடைக்குறப்ப அவர் காமெடி ஸீன்களைப் பார்க்கணும். ஆனா, எப்பவும் என் மானசீக ரோல் மாடல் சார்லி சாப்ளின்தான். உலக அளவில் அவர்தான் காமெடியின் உச்சம். ஒரு வார்த்தை வசனம்கூட இல்லாம, உலகத்தையே சிரிக்கவெச்ச மனுஷன்".

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மகத்தான கலைஞன் பிரம்மானந்தத்திற்கு நாமும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

vikatan

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text
 

பிப்ரவரி 1: கல்பனா சாவ்லா - விண்ணைத்தொட்ட தேவதையின் நினைவு நாள்

அப்பா பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் இருந்து வந்திருந்தார் ; பாகிஸ்தானில் இருந்து அகதியாக எல்லாவற்றையும் அங்கே விட்டுவிட்டு கொஞ்சம் காசு,ஏகத்துக்கும் நம்பிக்கை என்று சாதித்து காட்டியவர் அவர். அவரின் கரம்பிடித்து நடைபயின்ற குழந்தை என்பதால் கொஞ்சம் கல்பனாவுக்கு அடம் அதிகம்.

நான்கு பிள்ளைகள் இருந்த வீட்டில் கடைக்குட்டி என்பதால் இன்னமும் செல்லம் தூக்கல். எல்லா குழந்தைகளும் வெளியே விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது வீட்டின் சுவற்றில் விமானங்களை அவரின் பிஞ்சுக்கரங்கள் கிறுக்கி கொண்டு இருக்கும். அண்ணனுடன் சந்திகர் சாலைகளில் போகிற பொழுது கண்கள் எப்பொழுதும் வானோடு காதல் செய்து கொண்டிருக்கும்.

தாகூர் அரசுப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற பின் கல்லூரி சேர வேண்டும் என்று முடிவான பொழுது உறுதியாக பெண் பிள்ளைகளே இல்லாத பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் ஏரோநாடிகல் துறையை எடுத்து சாதித்து காட்டிய அந்த பிடிவாதக்கார பெண் அடுத்து கிளம்பியது அமெரிக்காவுக்கு !

முதுகலைப்பட்டம்,முனைவர் பட்டம் பெற்ற பிறகும் விண்ணை தொடும் அவளின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. மூன்றாயிரம் பேர் உயிரை உறைய வைக்கும் தேர்வு முறைகள் இறுதியில் ஆறே ஆறு பேர். அதில் ஒருவராக நம்மின் குட்டிப்பெண்ணும். பயிற்சிகள் ஆரம்பித்தன எந்த அளவுக்கு என்றால் ஆற்றின் ஒரு புறத்தில் இருக்கும் ஒரு பொதிமூட்டையை கொண்டு போய் இன்னொரு புறம் இருட்டில் யாருமே இல்லாமல் சேர்க்க வேண்டும். சேர்த்த பிறகு பிரித்துப்பார்க்க வேண்டும். பிணம் கனம் கனக்கும் அதைக்கொண்டு போய் சேர்த்து பிரித்து பார்த்தால் பிணமே இருக்கும் ! இப்படிப்பட்ட எண்ணற்ற போராட்டங்களை,சோதனைகளைத்தாண்டி விண்ணில் முதல்முறை பறந்த பொழுது விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி ஆனார் .

கொலம்பியா ஓடத்தில் நாற்பத்தி ஒரு வயதில் பறந்த அந்த வான்வெளி தேவதையின் இறுதி பயணமாக அதுவே மாறிப்போனது. பூமியை ஓடம் தொடுவதற்கு பதினாறு நிமிடங்களுக்கு முன்பு அது வெடித்து சிதற வானோடு உறைந்தது கல்பனா சாவ்லாவின் சிரிப்பு. சின்னஞ்சிறு ஊரில் இருந்து விண்ணைத்தொட்ட அந்த தேவதை மண்ணில் உதிர்ந்த தினம் இன்று.

தரையிறங்க 16 நிமிடங்களில் வெடித்த விண்கலம்..! கல்பனா சாவ்லா விண்ணில் கலந்த நாள் இன்று

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா

விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, உலகமே வியந்த விண்வெளி வீராங்கனையாக வாழ்ந்த கல்பனா சாவ்லா, அமெரிக்காவின் கொலம்பியா ஓடத்தில் இருந்து விண்வெளிக்குப் பறந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அவருடைய நினைவு நாளை முன்னிட்டு சில துளிகள்...

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 1961ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி கர்னால் என்ற ஊரில் பிறந்தார் கல்பனா. வீட்டின் நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. அவர் தந்தை ஒரு வியாபாரி, தாய் இல்லத்தரசி. பொம்மை வைத்து விளையாடும் வயதில் கல்பனாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு, விமான ஓவியங்கள் தீட்டி அழகுபார்ப்பது. விமானங்களின் சத்தம் கேட்டாலே வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடிவந்து அந்த அலுமினியப் பறவை புள்ளியாக மறையும் வரை கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டே நிற்கும் குழந்தைகளில் ஒருவர்தான் கல்பனாவும்.

கர்னாவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த கல்பனாவுக்கு, அந்த வயதிலேயே விண்வெளி வீரராக ஆக வேண்டும் என்ற இலக்கு மனதில் பதிந்துவிட்டது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமானப் பொறியியல் பயில விரும்பினார். ஆனால் அது அப்போது ஆண்களின் படிப்பாக இருந்ததால், பெற்றோர் மறுத்தனர். என்றாலும் கல்பனாவின் பிடிவாதத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை. அந்தக் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற கல்பனாவை, 1982ல் அமெரிக்கா வரவேற்றது. 1984ம் ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கல்பனா நான்கு ஆண்டுகள் கழித்து கொலோராடோ பல்கலைக்கழகத்தில் விமானப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 1993ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே அவரின் விண்வெளி வீரர் கனவு நனவாகத் தொடங்கியது. நாஸாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பத்திருந்த சுமார் 3,000 பேரில், ஆறு பேர் மட்டுமே தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர். ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ச்சிப் பட்டியலில் இடம்பிடித்தார். 

1995ம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாக தகுதி பெற்ற கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நிகழ்ந்தது. ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87-ல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்ட கல்பனாவுக்கு அதில் ஆராய்ச்சி குறித்த முக்கியப் பொறுப்புகளும் தரப்பட்டன.  பூமியை சுமார் 252 தடவை சுற்றிய அந்த விண்கலத்தில் சுமார் 10 மில்லியன் மைல் தொலைவு பயணித்த கல்பனா, சக விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார்.

விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார் கல்பனா. கொலம்பியா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முன் கல்பனா, 'முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால் எனக்கும் ஊக்கம் ஏற்படும்' என்றார். ஆராய்ச்சியாளர்களின் சரிதைகளை விரும்பிப் படிக்கும் அவர், தன் ஆசிரியர்களுக்கு எப்போதும் தன் நன்றிகளை தெரிவித்தபடி இருப்பார். 

முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா, பிறகு அதே கொலம்பியா விண்கலத்தில் 2003 ஜனவரி 16ம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் விண்ணுக்குப் பயணித்தார்.  பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர்கள், பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக  திட்டமிட்டபடி பிப்ரவரி ஒன்றாம் தேதி தரையிறங்க ஆயத்தமானார்கள். பூமியைத் தொட 16 நிமிடங்களே இருந்த நிலையில், அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது. 41 வயது கல்பனா, தேவதையாக விண்ணில் கலந்தார்.

இந்திய அரசு கல்பனா சாவ்லாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில், 2011ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வீரதீர சாதனைகள் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவப்படுத்துகிறது. அந்த விண்வெளி தேவதை, நம் வீட்டின் பல குட்டி தேவதைகளுக்கு ப்ரியமான ரோல்மாடல்!

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

16p1.jpg

twitter.com/iamVariable: வரலாற்றில், இந்த வருடம் நடந்ததுதான் சிறந்த காணும் பொங்கலாக இருக்கும்.

twitter.com/ckcbe: மாணவர்கள் போராட்டத்தை இப்படித் துச்சமா மதிச்சதால்தான், தி.மு.க-வால் எதிர்க்கட்சியாக்கூட ஆக முடியாமப்போச்சு. இப்ப, அதே நிலைமைதான் அ.தி.மு.க-வுக்கும்.

twitter.com/withnav_: சென்னையில் மெரினா இல்லை... மெரினாவில்தான் சென்னையே இருக்கு.

16p2.jpg

twitter.com/aruntwitz: லைட்டை ஆஃப் பண்ணிட்டா, போராட்டம் நின்றுமா?

கரன்ட்டை கட் பண்ணி, எத்தனை தரம் டிரெய்னிங் கொடுத்திருப்பீங்க.

ஃபன்னி கய்ஸ்!

#Jallikattuprotest

twitter.com/SolitaryReaper_ : இவ்வளவு பிரமாண்டமான மக்கள் சக்தியும் எழுச்சியும் உணர்வும் உள்ள மாநிலத்துக்கு, தன்னலமற்ற ஒரு தலைவன் இல்லை என்பது எத்துணை துரதிர்ஷ்டம்.

twitter.com/HAJAMYDEENNKS:  சீருடை அணிந்து ஜெயலலிதாவுக்காக மொட்டை அடித்த போலீஸ் இருக்கும்போது, சீருடை அணிந்து தமிழர் உரிமைக்காக ஒரு போலீஸ் குரல் கொடுத்தது தவறா என்ன?

16p3.jpg

twitter.com/g4gunaa: மோடியைத் திட்டுனாய்ங்களாம்! அப்புறம் என்ன, மடியில தூக்கிவெச்சு முத்தம் கொஞ்சவா இந்தப் போராட்டம்?!

twitter.com/thoatta: ஒவ்வொருத்தங்க வாட்ஸ்அப் இமேஜ் ஃபோல்டர்லயும் குறைந்தது 300 ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட போட்டோஸ் கிடக்கும் ;-) போராட்டத்துக்கான ஆயுதக்கிடங்கு ;-)

twitter.com/thalabathe: எக்காலத்திலும் இவ்வளவு ஆக்ரோஷமான பெண்களின் எழுச்சியைக் கண்டது இல்லை, தமிழ்ப் பெண்களின் வீரம், அழகு #JusticeForJallikattu

16p4.jpg

twitter.com/IamVavar:  தலைவன் இல்லாத போராட்டத்தில் கூட்டம் கூடுவது ஈஸி. ஆனா, கூட்டத்தைக் கலைப்பது கடினமான விஷயம்.எவன் சொன்னாலும் ``உனக்கென்ன தெரியும்?''னு சொல்லிடுறாங்க.

twitter.com/iamVariable: வெற்றிக்குக் காரணமே பெண்கள் போராட வந்ததுதான்.நாட்டில் இத்தகைய தெளிவான பெண்கள் இருக்க, அரசியலில் எல்லாம் சசிகலா, சரஸ்வதி, வளர்மதிகளாக இருக்கின்றனர்.

twitter.com/thoatta: கடந்த ஐந்து வருஷங்களா சி.எம்-மா இருந்தவங்க பேரைக்கூட சொல்லாதவங்க எல்லாம், இன்றைய சி.எம் பேரை மட்டும்தான் சொல்லிக் கூப்பிடுறாங்க ;-)

  • தொடங்கியவர்

’காற்று வெளியிடை’ படத்தின் சிங்கிள் ட்ராக் டீசர்..!

902bef4a-277c-4a41-93f1-441281802098_185

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படம் ‘காற்று வெளியிடை’. இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, பார்த்த அனைவரையும் 'வாவ்' போட வைத்தது. தற்போது, இப்படத்தின் 'அழகியே' என்னும் பாடலின் ஒரு நிமிட ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. முழுப்பாடல் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப்படம் வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

...

  • தொடங்கியவர்

என்னால், எனக்காக மீடியாவின் வெறுப்பை எதிர்கொண்டார் என் மனைவி - ரோஜர் பெடரர்

வ்வொரு ஆணின் வெற்றியையும் உச்சிமுகர்ந்து கொண்டாட ஒரு பெண் இருப்பார். சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் ஃபெடரருக்கு, அந்தப் பெண்ணாக இருந்தது அவரின் மனைவி மிர்கா!

தன் மனைவியுடன் ரோஜர் பெடரர்

ஆறு வயதில் ஆரம்பித்தது ஃபெடரரின் டென்னிஸ் பயணம். இன்று வயது 35. நிற்காமல், சளைக்காமல் தொடர்ந்து வெற்றிகளை தக்கவைத்துக் கொண்டிருக்கார் இந்த அசத்தல் வீரர்.

2012ம் ஆண்டில் விம்பிள்டன் வென்று நம்பர் ஒன் இடத்தை  தக்கவைத்துக் கொண்ட ஃபெடரருக்கு, அதன் பிறகு ஏற்பட்டதெல்லாம் சரிவுதான். இறுதிப்போட்டி வரை வந்த ஃபெடரருக்கு, முதுகு வலி மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக கோப்பை மட்டும் ஏனோ நழுவியே போனது.

விக்கிரமாதித்தனைப் போல விடாது போராடி, தொடையில் ஏற்பட்ட காயங்களையெல்லாம் மீறி, தன் 35வது வயதில், நடேலை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓப்பன் டைட்டிலைக் கைப்பற்றியிருக்கிறார் ஃபெடரர். அந்த வெற்றியுடன் மீடியாவைத் சந்தித்தவர், அந்தத் தருணத்தில் தன் மனைவிக்கு மரியாதை செய்தது லவ்லி. 

'என் மனைவிக்கு என்னைவிட என் குழந்தைகள்தான் முதலில் முக்கியம்' என்று சொல்லிச் சிரித்த ஃபெடரர், 'நான் ஒரு டைட்டில்கூட பெறாத என் ஆரம்பநாட்களில் இருந்து என்னுடன் இருப்பவர் என் மனைவி. நான் 89 டைட்டில்கள் வென்று வந்திருக்கும் இந்த நீண்ட பயணத்தில் இதோ என்னுடன் நிற்கிறார் அவர். என் வெற்றிகளில் அவருக்குப் பெரிய பங்குண்டு.

அவருக்குத் தெரியும், எனக்கும் தெரியும், அனைவருக்கும் தெரியும். அவரைப் பொறுத்தவரை முதலில் அவர் அம்மா. பிறகு மனைவி. அதற்கு அடுத்துதான் என் சப்போர்ட்டர்.

என் நான்கு குழந்தைகள்தான் என் மனைவிக்கு உலகம். ஏழு வயதாகும் என் இரட்டை குழந்தைகள் மைலா ரோஸ், சேர்லின் ரிவாவுக்கு என் கோப்பையைப் பார்த்ததும் அத்தனை சந்தோஷம். நேற்று இரவு என்னுடைய வலிகள், மன அழுத்தம் எல்லாம் மறைந்துபோனது. அந்தப் பொழுதை சூப்பர் டூப்பராக  எங்கள் குடும்பம் கொண்டாடினோம்.

சூழல் காரணமாக நான் மீடியாவை தவிர்க்க வேண்டி வந்தபோது, 'அவரால் இப்போது பேட்டி தர முடியாது' என்ற தகவலை என் மனைவிதான் தெரிவிக்க வேண்டி இருந்தது. அதனாலேயே பல விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிட்டது. அவரை அந்த இக்கட்டில் இருந்து விரைவில் விலக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இப்போது அவர் சந்தோஷமாக இருக்கிறார். நானும். அவர் என் அன்புக்குரிய மனைவி, என் குழந்தைகளுக்குப் பொறுப்பான தாய். மொத்ததில் என் கோட்(அதாவது எப்போதும் அவரைச் சுற்றியிருக்கும், பாதுகாக்கும் கவசம்)!"

இது மிசஸ் ஃபெடரருக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய தருணம். வாழ்த்துகள் மிர்கா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
ஆப்கானிஸ்தானின் வூஷு தற்காப்புக் கலை பயிற்றுநரான முதலாவது பெண்
 

ஆப்­கா­னிஸ்­தானைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் அந்­நாட்டின் யுவ­திகள், சிறு­மி­க­ளுக்கு வூஷு தற்­காப்புக் கலையை பயிற்­று­விக்­கிறார்.

 

22120913273-01-02.jpg

 

20 வய­தான சீமா அஸிமி எனும் இந்த யுவதி, வூஷு தற்­காப்புக் கலை பயிற்­று­விக்கும் ஆப்­கா­னிஸ்­தானின் முதல் பெண் பயிற்­றுநர் ஆவார். இவ­ரின் தந்­தையும் ஒரு வூஷு பயிற்­றுநர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 

“ஷவோலின் வூஷு கழ­கத்தின்” இளம் பெண்­க­ளுக்கு வூஷு பயிற்­சி­ய­ளிக்­கிறார் சீமா அஸிமி. ஆப்­கா­னிஸ்தான் தலை­நகர் காபூலில்  உள்ள மலைச் சிக­ர­மொன்றில் ஷவோலின் கழ­கத்தின் அங்­கத்­த­வர்கள் பயிற்­சி­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.

 

22120913677-01-02.jpg

 

14 முதல் 20 வய­தான யுவ­திகள் சிறு­மிகள்  சீனாவின் வூஷு தற்­காப்புக் கலையை பயில்­கின்­றனர். ஷவோலின் வூஷு கழ­க­மா­னது 2015 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

ஆப்­கா­னிஸ்­தானில் பெண்­க­ளுக்­காக ஸ்தாபிக்­கப்­பட்ட முத­லா­வது வூஷு கழகம் இது­வாகும். இக்­ க­ழ­கத்தின் அங்­கத்­த­வர்­க­ளான சுமார் 20 பேர், கடந்த வாரம், பனி­யினால் மூடப்­பட்ட சிக­ர­மொன்றில்  வூஷு பயிற்­சி­களில் டுபட்­டி­ருந்­தனர்.

 

22120914169-01-02.jpg

 

இதன்­போது தன்னைப் பற்றி சீமா அஸிமி கூறுகையில், 'சிறு­மி­யாக இருந்த காலத்­தி­லி­ருந்து நான் ஒரு வெற்­றி­யா­ள­ராக இருக்க வேண்­டு­மென விரும்­பினேன். வூஷு  தொடர்­பான திரைப்­ப­ட­மொன்றை பார்த்­த­தி­லி­ருந்து வூஷு  தற்­காப்புக் கலையின் மீதான எனது ஆர்வம் அதி­க­ரித்­தது.

 

எனது சக நாட்­ட­வர்­க­ளிடம் இந்தக் கலையை வளர்ப்­பது குறித்து நான் எப்­போதும் சிந்­தித்து வந்தேன்' என்றார். ஈரானின் இஸ்ஃ­பஹான் நகரில் வூஷு கலையை சீமா அஸிமி கற்றுக்­கொண்டார்.

 

22120913277-01-02.jpg

 

இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆப்­கா­னிஸ்­தா­னுக்குத் திரும்­பி­ய­வுடன் அவர் வூஷு பயிற்சிக் கழ­க­மொன்றை ஸ்தாபித்தார். 'இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் நான் இந்தக் கழ­கத்தை ஸ்தாபித்­த­ போது ஒரு யுவ­தியும் இதில் இணை­வ­தற்கு முன்­வ­ர­வில்லை.

 

ஆனால், பின்னர் ஒவ்­வொ­ரு­வ­ராக இணையத் தொடங்­கினர். தற்­போது 20 பேர் பயிற்சி பெறு­கின்­றனர்' எனவும் சீமா அஸிமி தெரி­வித்­துள்ளார். 'ஆப்­கா­னிஸ்­தானில் ஆண், பெண் சமத்­து­வத்தை ஏற்­ப­டுத்­து­வதே எனது பிர­தான நோக்கம்.' எனவும் அவர் கூறி­யுள்ளார்.

 

22120913280-01-02.jpg

 

சீமா அஸி­மியின் தந்தையும் தற்காப்புக் கலை நிபுணருமான ரஹ்மதுல்லா கருத்துத் தெரிவிக்கையில், 'எனது மகள் குறித்து நான் பெருமையடைகிறேன். அவளுக்கு நான்  தொடர்ந்தும் ஆதரவளிப்பேன்' என்றார்.

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

சிம்பன்ஸி குட்டிகள் எப்படி பிடிக்கப்படுகின்றன?

 

சிம்பன்ஸி: குட்டிகளுக்காக கொல்லப்படும் குடும்பங்கள்

குட்டி சிம்பன்சிகளை விற்கும் சட்டவிரோத வனவிலங்கு கடத்தல்காரர்களை பிபிசியின் புலனாய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

  • தொடங்கியவர்

சைக்கிளில் டீ விற்பவர்களுக்காக ஒரு ’வாவ்’ முயற்சி! #Tea2go

டீ

வேலை தேடுபவர்களாக இருந்தாலும், நிறுவனங்களில் பணியில் இருப்பவர்களாக இருந்தாலும், தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை இங்குள்ள பலருக்கும் இருக்கிறது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், சுயத்தொழில் துவங்குவது போன்றதொரு சுலபமான காரியமும் இல்லை, அதை விட ஒரு கடினமான வேலையும் இல்லை. காரணம் இன்றைய சூழலில், தொழிலில் வெற்றி பெறுவதற்கு முதலீடு, ராசி, யோகம் போன்றவைகளை காட்டிலும் தனித்துவமான திட்டங்கள், நுணுக்கமான புதிய யோசனைகள் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

தொழிற்துறை, தொழில்நுட்பம் இரண்டின் போக்கை சற்று ஆழமாக கணித்து, எதிர்கால மாற்றங்களுக்கு தகுந்தவாறு திட்டமிடுவது ஒரு வழி என்றால், பயன்பாட்டில் உள்ள தொழில்களில் புதுமைகளை புகுத்தி, மாற்றங்களை கொண்டு வருவது மற்றொரு வழி. அப்படி பயன்பாட்டில் உள்ள சைக்கிள் டீ விற்பனையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார், சிவராஜ் முத்துராமன். கடந்த சில வருடங்களாக தொழில் துவங்குவதற்கு தேவையான புதிய யோசனைகளை, பலருக்கு வழங்கிவரும் இவர், கடந்த 2012ஆம் ஆண்டில் சுற்றுசூழலுக்கேற்ற எலக்ட்ரிக் ரிக்‌ஷாவை வடிவமைத்திருந்தார். இவர் வடிவமைத்த ரிக்‌ஷா, சர்வதேச அளவில் சிறந்த வடிவமைப்பிற்கான பல விருதுகளை பெற்றது. இவர் தற்போது, Tea2go எனும் புதிய தொழில் திட்டத்தை துவங்கியுள்ளார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

அது என்ன Tea2go ? 

இந்தியர்களாகிய நாம் டீ பழக்கத்திற்கு அடிமையானவர்கள். தெருவிற்கு நான்கு டீ கடைகள் இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக சைக்கிள் டீ விற்பனையில் இந்தியா முக்கிய இடம் பிடித்திருக்கிறது. வெகுநாட்கள் ஆய்விற்கு பிறகே இந்த துறையினை தேர்வு செய்தேன். அமைப்பு சாரா தொழிலான, சைக்கிள் டீ விற்பனையில் என்னால் முடிந்த மாற்றங்களை கொண்டு வர நினைத்தேன். tea2go அப்படி தான் உருவானது. முதலீடு செய்பவர்களுக்கும், வேலை தேடுபர்களுக்கும், tea2go ஒரு பாலமாக இருந்து செயல்படும். அதிக அளவிலான முதலீட்டாளர்கள் கிடைத்தால், சைக்கிள் டீ விற்பனை மூலம், போதிய வருவாயினை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திதர முடியும், இதோடு வேலை தேடுபவர்களுக்கும், எளிய வழியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும். சைக்கிள் டீ விற்பனையாளராக விளிம்பு நிலை பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் முன்னுரிமை வழங்க திட்டமிட்டுள்ளேன். சமூக ரீதியாகவும், வணிக ரீதியாகவும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை விளைவிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். 

Tea2goவில் உள்ள மற்ற அம்சங்கள் என்ன ? ஒரு பிராண்டை மக்களிடம் கொண்டு செல்வது சுலபமா ?

எல்லா பிராண்டுகளையும் மக்கள் விரும்புவதில்லை, மாறாக எல்லா விதங்களிலும், தனித்துவம் கொண்டவைகளை மக்கள் அதிகம் ரசிக்கின்றனர். எனவே தான் சைக்கிள் அமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வந்தேன். டீ கொண்டு செல்லும் பாத்திரம், ஸ்டெயின் லஸ் ஸ்டீல் ஃப்ளாஸ்காக இருப்பது வழக்கம், எனது சைக்கிளில் தெர்மோ ஃப்ளாஸ்கினை பொருத்தினேன். பார்வையாளர்களை கவரும் விதத்தில் சில நுணுக்கங்களை புகுத்தினேன்.

இன்று காபி விற்பனையில் பல கார்ப்ரேட் நிறுவனங்கள் தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறார்கள். மக்களும் தரம், சேவை, தனித்துவமான வியாபாரம் போன்றவைகளுக்காக ப்ராண்டட் கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

டீ

உங்களின் எதிர்கால திட்டம் என்ன ?

வணிக ரீதியான வெற்றிக்கு, புரட்சிகரமான மாற்றங்கள் அவசியமான ஒன்று. எனவே தான், முன்பு நான் வடிவமைத்த ரிக்‌ஷாவில் கூட அதன் வடிவமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். தொடர்ந்து மூன்று ரிக்‌ஷாக்கள் தயார் செய்து, சென்னையின் முக்கிய இடங்களில் சில நாட்கள் பார்வைக்கு வைத்தேன். பல இடங்களில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் எனது எக்கோ ப்ரண்ட்லி ரிக்‌ஷா இன்று பல வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும். இருப்பினும் தொடர்ந்து நம்பிக்கையோடு இருக்கிறேன். தற்போது முயற்சி செய்துள்ள Tea2go, சைக்கிள் டீ விற்பனையில் புதிய பரிணாமம் படைக்கும்.

சிவராஜிடம் வாழ்த்து தெரிவித்துவிட்டு, விடைபெற்ற போது, அவர் நம்மிடம், சார் என்னிடம் இது போன்ற பல யோசனைகள் இருக்கிறது, ஆனால் எல்லாவற்றிற்கும் முதலீடு ஒன்று தான் தடையாக உள்ளது. இருந்தாலும் கூட எனக்குள் உதயமாகும் கண்டுபிடிப்புகளை, மூலதனமாக மாற்றி வணிகரீதியாகவும், சமூக ரீதியாகவும் வெற்றி பெற தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.

vikatan

  • தொடங்கியவர்

மாட்டு வண்டியின் ஸ்பேர் பார்ட்ஸ் பெயர்களும், அதன் பயன்களும்!

வண்டி

முன்பெல்லாம் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் இரண்டு மாடுகளை வண்டி இழுப்பதற்காக கட்டாயமாக வீட்டில் வைத்திருப்பார்கள். மோட்டார் வாகனங்கள் அதிகம் புழக்கம் இல்லாத காலங்களில் விவசாயிகள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மாட்டு வண்டியையே பெரிதும் உபயோகித்து வந்தனர். இந்த வண்டிக்கு 'கட்டை வண்டி' என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த வண்டியானது சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. இந்த மாட்டு வண்டிகளின் பயன்பாடு தொன்றுதொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் விளையும் வேளாண் பொருட்களையும், பிற பொருட்களையும் ஏற்றிச்செல்ல அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரே வாகனமும், இந்த மாட்டு வண்டிதான். இந்த மாட்டுவண்டியை இன்று காண்பதே அரிதாகி வருகிறது. இந்த வகை மாடுகளை ஜல்லிக்கட்டிற்காக பெரிதும் பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் சில பகுதிகளில் வண்டி மாடுகளுக்கும் ஜல்லிக்கட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த வண்டிப் பயணமானது, பெரும்பாலான கிராம மக்களின் போக்குவரத்துக்காகவும் பயன்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் வண்டிப் பந்தையமான 'ரேக்ளா பந்தையம்' என்ற விளையாட்டுக்கும் இந்த வண்டிகள் பெரிதும் உதவியுள்ளன. இந்த வண்டியினுடைய ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு சிறப்புக்காக செய்யக் கூடியது. எவ்வளவு பெரிய வாகனப் பயணமாக இருந்தாலும் மாட்டு வண்டி பயணத்துக்கு ஈடாகாது. இன்று பெரும்பாலோனோர்க்கு மாட்டு வண்டியின் பயன்பாடுகளும், அதனை பற்றிய விளக்கங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாட்டுவண்டியின் ஒவ்வொரு பாகங்களையும் பற்றி தெரிந்து கொள்வோம்...

மாட்டு வண்டி

கடையாணி: இரண்டு சக்கரங்களையும் அச்சினை விட்டு வெளியேற விடாமல் பிடித்துக் கொள்ளும். வண்டியில் உள்ள மைய அச்சு தொடங்கி கடைசியாக உள்ள பகுதியாக இருப்பதால்'' என்று பெயர் வந்திருக்கலாம்.

அல்லைப்படல்: பொதுவாக படல் என்றால் மறைக்க உதவுவது என்று அர்த்தம். வண்டியின் இரண்டு பக்கவாட்டுகளிலும் பொருட்கள் விழாதவாறு தடுக்கும் பாகத்திற்கு பெயர் 'அல்லைப்படல்' என்று பெயர்.

குடம்:  ஆரக்கால்களை வட்டை(சக்கரத்தின் வெளிப்பகுதி)யுடனும் மையஅச்சுடனும் இணைக்கும் பகுதிக்கு பெயர்தான் குடம். 

நுகத்தடி: வண்டியில் பூட்டும் மாடுகளை கட்ட பயன்படும் நீளமான தடிப்பகுதியே இந்த நுகத்தடியாகும். நுகத்தடியில் மாடுகளைப்பூட்ட அதன் இரு பக்கங்களிலும் இரண்டு துளைகள் இருக்கும். 

வட்டை: வண்டி சக்கரத்தின் வெளிப்பகுதியை வடிவமைக்க உதவும் பகுதிதான் வட்டை. ஒரு சக்கரத்தினை வடிவமைக்க ஆறு வட்டைகள் தேவை. இந்த வட்டையானது தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இருக்கும்.

சவாரித்தப்பை: மாடுகள் சவாரி செய்ய ஏர்க்காலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தப்பை. இது ஆட்கள் சவாரி செய்ய வசதியாக உருவாக்கப்பட்டது.  

மாட்டு வண்டி

(படம்: அந்தியூரன் பழமைபேசி)

பட்டா: சக்கரத்தின் நுனிப்பகுதியில் இரும்பினை கொண்டு சக்கரத்தை சுற்றிலும் அதன் மேற்புறம் தேய்ந்து போகாதவாறும், சேதமடையாமலும் பாதுகாக்க 'பட்டா' அமைக்கப்பட்டிருக்கும்.

இருசு:  'இருசு'க்கட்டைதான் வண்டியின் மையப்பகுதியை தாங்கி நிற்கும். வண்டியின் அச்சானது இந்த இருசின் வழியேதான் செல்லும். அந்த அச்சின் முனையில் இருக்கும் சக்கரங்கள் இருசின் உதவியுடனே இணைக்கப்பட்டிருக்கும். வண்டி சுழல்வதில் இருசின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏர்க்கால், மூக்கேர், ஏர்க்கால் சட்டம்: ஏர்க்கால் சட்டம் என்பது மாட்டு வண்டியினுடைய மையப்பகுதியிலிருந்து மாட்டினை பூட்ட பயன்படும் இடம் வரையுள்ள பகுதிக்கு பெயர்தான் ஏர்க்கால் சட்டம். இந்த ஏர்க்கால் சட்டத்தில் உள்ள நுனிப்பகுதி மூக்கேர் எனவும், வண்டியை ஓட்டுபவர் அமரும் பகுதிக்கு முன்பாக உள்ள பகுதி ஏர்க்கால் என பல பெயர்களால் இடத்துக்கு தகுந்தவாறு அழைக்கப்படும். 

பூட்டாங்கயிறு, பூட்டாங்குச்சி: நுகத்தடியில் காணப்படும் துளையில் ஒன்றில் பூட்டாங்குச்சியும் மற்றொரு துளையில் பூட்டாங்கயிறும் தொங்க விடப்பட்டிருக்கும். இந்த இரண்டின் மூலமே மாடுகள் பூட்டப்பட்டு வண்டியிழுக்கும். 

முளைக்குச்சி: அல்லைப்படல் இந்த முளைக்குச்சியின் உதவியோடு கட்டபட்டிருக்கும். வண்டியிலுள்ள பொருட்கள் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்கு இருதுவும் பக்கபலமாக இருக்கும்.

கொலுப்பலகை: வண்டி ஓட்டுபவர் அமர்ந்து வண்டியை இயக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள பலகைதான் இந்த கொலுப்பலகை. கொலுப்பலகை சில நேரங்களில் வண்டியை ஓட்டுபவர் நின்று கொண்டே பயணிக்க ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
பழைமையில் பொதிந்துள்ள புதுமைகளைக் கற்றுணர்க!
 
 

article_1485863572-aanmai1.jpgவழக்கத்தை உடைப்பதால் சில சமயங்களில் பிரச்சினைகள் உருவாகி விடுகின்றன. ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் பலவற்றை, எங்கள் முன்னோர்கள் மறைமுகமான வழிகள் மூலம் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் பல எமது தேகசுகாதாரம் தொடர்பானவையாகும். 

 

தியானம், யோகாசனம், சூரியவணக்கம், ஆலயக் கிரியைகள், உபவாசங்கள் எனப் பலவழிமுறைகள், பலவித வடிவங்களில் சமயங்களூடாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. 

 

பெரியோர்கள் சொல்லும் விடயங்கள் எமக்குக் கேலியாகக்கூட இருக்கலாம். ‘குறுக்கு வழியில் போகாதே; தனி வழியில்போகாதே’ என்பது போன்ற அறிவுரைகள் மனிதரைத் தீய வழியில் செல்லாதிருக்கச் செய்யும் மணிமொழிகள். 

பழங்கதை பேசக்கூடாது எனும் இளைஞர்கள், பழைமையில் பொதிந்துள்ள புதுமைகளைக் கற்றுணர்க! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

60 வயதுக்காரரின் 24 ஆண்டு உழைப்பு உங்கள் நாளையே மாற்றும்! #MorningMotivation

எம்.எம்.எம் கார்னர் பசுபதிநாதன் தன்னம்பிக்கை வாசகங்கள்

சேலத்தில் உள்ள பெரும்பாலான சுவர்களில் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ள வகையில் தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக வாரந்தோறும் பல்வேறு வகையான தகவல்களை  எம்.எம்.எம் கார்னர் (MMM Corner) என்ற பெயரில் எழுதி வருகிறார் பசுபதிநாதன். இன்று நேற்றல்ல. இருபத்து நான்கு வருடங்களாக!  தீபாவளி பொங்கல் சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற விழா காலங்களில் அது தொடர்பான பல்வேறு வாசகங்களை எழுதி வருகிறார். சேலத்தில் இவரின் வாசகத்திற்காக பல மாணவர்கள் மற்றும் மக்கள் என ரசிகர் பட்டாளமே உள்ளன. அவரை சந்தித்த போது.. 

வாசகங்கள் எழுத வேண்டும் என்று எப்படி ஆர்வம் வந்தது?

ஆரம்பத்தில் சினிமா போன்ற சுவர் விளம்பரங்களை வரைந்தும் எழுதியும் வந்தேன். என்னுடைய தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகி. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவரது வழி வந்த நான் மக்களுக்கு ஏதாவது நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்று எண்னினேன். அதற்காக 1993 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இருபத்து நான்கு ஆண்டுகளாக சமூக அக்கறை, பொன்மொழி, தன்னம்பிக்கை வரிகள் போன்றவற்றை வாரம் ஒரு முறை எழுதி வருகிறேன்.

முதன் முதலாக எழுதியது பற்றி கூறுங்கள்?

முதன் முதலாக ஒரே ஒரு இடத்தில் 'வெற்றிகரமாக வாழ்ந்து காட்டு, வஞ்சகம் தீர்க்க இதை தவிர வேறு எதுவுமில்லை' என்று எழுதினேன். இந்த வரிகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அடுத்த வாரமே ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெவ்வேறு வாசகங்களை எழுதினேன். வெவ்வேறு வாசகங்கள் எழுதும் போது நிறைய பேர் எங்க எல்லாம் எழுதி இருக்கீங்க என்னென்ன வரிகள் எழுதி இருக்கீங்கனு கேட்டார்கள். அதனால் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான வாசகங்களை எழுத முடிவு செய்தேன். தற்போது 35 இடங்களில் எழுதி வருகிறேன்.

இதன் மூலம் ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றி கூறுங்கள்?

எம்.எம்.எம் கார்னர் பசுபதிநாதன்

ஒரு சில காரணங்களால் இயக்குநர் சசி படம் ஒன்று பாதியில் நின்று விட்டது. அப்போது நான் எழுதி இருந்த ' ஒரு நொடி துணிந்திருந்தால் இறந்துவிடலாம், ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்' என்ற வரியை பார்த்து விட்டு மீண்டும் படத்தை இயக்கி வெற்றி படமாக வெளியிட்டார். இன்று வரை என்னிடம் நண்பராக தொடர்பில் உள்ளார்.ஒரு முறை நான் சுவரில் எழுதி இருந்த வாசகத்தை பார்த்த பள்ளி மாணவன் ஒருவன் மற்ற இடங்களில் எழுதி உள்ளதை போன்று எங்கள் வீட்டு சுவரிலும் எழுத வேண்டும் என்று கூறினான். அன்றிலிருந்து இன்று வரை அந்த மாணவன் வீட்டு சுவற்றிலும் எழுதி வருகிறேன்.என்னுடைய வாசகங்களை படித்து விட்டு நிறைய பேர் என்னிடம் வந்து அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட காரணமாக எனது வாசகங்கள் உள்ளதாக கூறுவார்கள். பல்வேறு தனியார் அமைப்புகள், ஊடகங்கள் என்னுடைய பணியை பாராட்டி  பல்வேறு அங்கீகாரங்கள் அளித்துள்ளனர். அதை விட முக்கியமாக மக்கள் ஆதரவு என்ற அங்கீகாரம் உள்ளது.


பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் ஆதரவு எப்படி உள்ளது? 

ஆரம்பத்தில் இருந்து இப்போது  வரை மக்களிடமும் மாணவர்களிடமும்  நல்ல ஆதரவு உள்ளது. சேலம் மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் என்னுடைய வாசகங்களை தெரிந்து கொள்ளும் வகையில் முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் அந்த வாரத்திற்கான வாசகங்களை பதிவேற்றம் செய்து விடுவேன். அதில் மக்கள் ஆதரவு பலமாக உள்ளன.
 

எம்.எம்.எம் கார்னர் பசுபதிநாதன்

வாசகங்கள் எப்படி தயார் செய்கிறீர்கள்?

கல்வி மற்றும் வாழ்க்கையில் கற்று கொண்டவை, ஆங்காங்கே படித்தவற்றை எழுதி வருகிறேன். வாழ்க்கை அனுபவங்கள் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களையும் வாசகங்களாக எழுதி வருகிறேன். நான் கற்றுக் கொண்டதை பிறருக்கு கற்று தருகிறேன்.சமூக அக்கறையுடன் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்ட பின்பு சுவர் வாசகத்திற்காக செலவு செய்யும் தொகை ஒன்றும் பெரியதாக தெரியாது.

ஒவ்வொரு நாளையும் ஊக்கத்துடன் தொடங்க நினைக்கும் பலருக்கும், இவர் அமைதியாக தன் தொண்டை செய்து வருகிறார். இவர் எழுதிய வாசகங்களைக் கடந்து செல்லும் எவருக்கும், அது ஓர் எனர்ஜி பூஸ்டர்தான்!  புதியன விரும்பும் இளைய சமுதாயத்தினருக்கும் இந்த 60 வயதுக்காரரின் வாழ்க்கை ஒரு ஊக்கம்தரும் பாடம்தான்!

vikatan

  • தொடங்கியவர்

திறமைக்கு எல்லையில்லை : மூதாட்டியின் வியத்தகு செயல்

வைத்திய துறையில் 68 வருடங்கள் சேவையாற்றியுள்ள, 90 வயதை நெருங்கும் மூதாட்டியின் கையால் இதுவரை 10,000 சத்திர சிகிச்சைகள் மேற்கொண்ட சம்பவம் ரஷ்யாவில் பதிவாகியுள்ளது. 

3CB92DA900000578-4180646-Surrounded_by_h

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள, ரியாஸன் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவில் 68 வருடங்களாக, 89 வயதான யலே லிலிக்கினலனி உசுகினா எனும் மூதாட்டி சத்திர சிகிச்சைகளை செய்து வருகிறார். 

3CB8D1F100000578-4180646-The_patient_sai

இதுவரை சுமார் 10,000 இற்கும் மேற்பட்ட சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ள இவர், எதிர் வரும் மே மாதத்துடன் தனது 90ஆவது வயதை பூர்த்தி செய்யவுள்ளார். 

3CB92C2700000578-4180646-Alla_slipping_i

மேலும் தள்ளாத வயதிலும் சத்திர சிகிச்சை அறைக்கு செல்லும் இவர் சுறுசுறுப்புடன் இயங்குவதோடு ஒரு நாளைக்கு 4 சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதாக, ரியாஸன் வைத்தியசாலை தகவல் பகிர்ந்துள்ளது.

3CB99FDC00000578-4180646-Alla_Ilyinichna

அத்தோடு 4 அடி உயரமான உசுகினா, தனக்கு தொழில் சத்திர சிகிச்சை செய்வதெனவும், தனக்கு பிறகு தனது பணிக்காக யாரும் இல்லை அதனால் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

3CB91C6700000578-4180646-Russia_s_oldest

3CB9479A00000578-4180646-Prepared_and_re

இந்நிலையில் வழமையாக இவர் மூலம் சத்திர சிகிச்சை செய்துகொள்ள வருபவர்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுவதாகவும், உசுகினாவின் கை அவர்கள் மேல் பட்டதும், குறித்த பயம் அவர்களைவிட்டு போய்விடுவதாக குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரம் உபுல் தரங்கவின் பிறந்தநாள்.
இப்போது இடம்பெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தலைவராகக் கடமையாற்றுகிறார்.
Happy Birthday Upul Tharanga

Bild könnte enthalten: 1 Person, steht und Text

ஹிந்தி நடிகை ஷமிதா ஷெட்டியின் பிறந்தநாள்.
Happy Birthday Shamita Shetty

  • தொடங்கியவர்

இசையோடு வாழ்வோம்! ஆய்வுகள் சொல்லும் ஆச்சர்யங்கள் #LoveMusic

நம் ஆன்மாவை தாலாட்டும், மலர்த்தும், புத்துணர்வாக்கும் சக்தி இசைக்கு உண்டு. அதை மனதார நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அது மருத்துவ ரீதியாகவும் உண்மை என்று தெரிவிக்கின்றன ஆய்வுகள். 

இசை

நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள், நல்லிசைக்கும், மனதுக்கும் மூளைக்குமான தொடர்பு பற்றி வெளியிட்டுள்ள ஆய்வு முடிவின் சுவாரஸ்யங்கள் இங்கே!

கேட்கும்போது...

இசை கேட்கும்போது அது மனதிற்கும் மூளைக்கும் பாஸிட்டிவ் மாற்றங்களைத் தருகிறது. 'பிரைன் ப்ளாஸ்டிசிட்டி' என்பது வயது, நேரம் என்ற வரம்புகள் அற்று மூளையின் செயல்களைத் தூண்டச் செய்யும் ஒரு பயிற்சி. அந்தப் பயிற்சி, இசை கேட்கும்போது தானாகக் கிடைக்கிறது. பொதுவாக இசையுடன் நேரம் செலவழிக்கும் மனித மூளை, இசையிடம் இருந்து விலகி இருக்கும் மனித மூளையைவிட மாறுபட்டு இருப்பதாகவும், இசைப் பிரியர்களுக்கு 'கார்ப்பஸ் கொலோஸம்' எனப்படும் நரம்பு இணைப்புகள் இயல்பைவிட வலுவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

மூடை மாற்றும் மியூஸிக்! 

இசை, அது குறித்த தொழில்முறை ஞானம் இல்லாதவர்களுக்கும், நிரம்ப நிரம்ப இதம் தரக்கூடியது. அது மூளையையும் சுறுசுறுப்பாக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வேலை செய்யும்போது பாடல்கள் கேட்பது, வேலை சுமையைக் குறைத்து புத்துணர்ச்சி பெறவைப்பதாகவும் தெரிவிக்கும் அவர்கள், நாள்பட்ட மன அழுத்தத்தைக் குறைப்பது, ஆற்றலை அதிகரிப்பது என்று இசையின் பயன்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள். மெல்லிசை, கொண்டாட்டப் பாடல்கள் மட்டுமல்ல... நம்புங்க பாஸ்... சோகமான கீதங்களும் இவையனைத்தையும் செய்யவல்லவை என்கிறது ஆய்வுகள். 

இசையும் ஹார்மோன்களும்!

'ஆக்ஸிடைஸின்' எனப்படும் பிரைன் ஹார்மோன், நம்பகத்தன்மை, தாராள உணர்வு, மகிழ்ச்சி ஆகியவற்றை தரக்கூடியது. அதிகமாக சாக்லெட் சாப்பிடும்போது, வெற்றி பெறும்போது என குஷியான  தருணங்களில் எல்லாம் மனதில் ஏற்படும் அந்த ஜில் மாற்றம், அந்த ஹார்மோன் தூண்டப்படுவதால்தான். ம்யூசிக் கேட்கும்போது ஆக்ஸிடைஸின் ஹார்மோன் அதிகமாகத் தூண்டப்படுகிறது என்பது அடுத்த ஆச்சர்யத் தகவல். 

கற்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இசையைக் கேட்கும்போதே இவ்வளவு பலன்கள் எனில், கற்கும்போது..? இதோ...
 
* பேச்சாற்றல் வளரும். செவித்திறன், விழித்திறனை அதிகரிக்கும்
* ஐக்யூ லெவல் உயரும். 
* மனதுக்கும் மூளைக்குமான தொடர்பு அதிகரிக்கும். 
* வெளியுலகைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். 
* கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு இசை சிறந்த பயிற்சியாக அமையும். 
* இசை மற்றும் அதற்குரிய  கருவிகள் பயிற்சி, மூளையின் உள் அமைப்பு மற்றும் பாகங்களுக்கு இடையில் இருக்கும் தொடர்புகளை வலுப்படுத்தும். 
* இசை குறித்த சிந்தனை மனதில் இருக்கும்போது, மனதுக்கும் மூளைக்குமான தொடர்புகள் சிறப்பாகச் செயல்படும். 

குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்  

இசை குழந்தைகளின் திறன் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும். அவர்களுக்கு ரைம்ஸ் கற்றுக்கொடுக்கப்படுவதன் அடிப்படையே அதுதான்! மேலும்...

*  மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். 
* மூளையின் ரத்த ஓட்டம் சீராகும். 
* நான்கு வருடங்கள் இசை பயின்றால், அதன் பலன் 40 வருடங்கள் கழித்தும் மூளையில் பிரதிபலிக்கும். 
* ஏழு வயதிற்கு முன்னரே கற்க ஆரம்பித்தால் அதன் பலன் ஆயுளுக்கும் இருக்கும். 
* இசை கற்கும் குழந்தைகள் முகத்தில் சிரிபோடும் மனதில் மகிழ்வோடும் இருப்பார்கள். 
* குழந்தை முதல் முதியவர்கள் வரை, கேட்கும்போதும், கற்கும்போதும் அவர்களின் கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.  

சிகிச்சை 

நோயாளிகளுக்கு அவர்களின் நோய்க்கான சிகிச்சையுடன், 'மியூஸிக் தெரபி' கொடுக்கப்படும்போது, அது அவர்களின் மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. குறிப்பாக, 'அல்ஸைமர்' எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு மியூஸிக் தெரப்பி நல்ல பலன் கொடுப்பதாக அமைகிறது. நோயாளிகள் கேட்கும்போதும், பாடும்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

இசை கேட்கவும் சில டிப்ஸ் உண்டு பாஸ். நாளும் நல்லிசையைக் கேட்டு.. வாழ்வைக் கொண்டாடுவோம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அங்கே ட்ரம்ப்! இங்கே யார்?- சட்டப்பேரவை வளாகத்தை அதிரவைத்த அமெரிக்கர்கள்

newspict_16460.jpg

சட்டசபை வளாகம் அமைந்துள்ள‌  செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப்பார்க்க வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வருவது வழக்கம். இன்று, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப்பார்க்கையில், சட்டசபை நிகழ்வுகளை கவரேஜ் செய்ய பத்திரிகைக்காரர்களுக்குத் தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர். அங்குள்ள பத்திரிகையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மைக்கை தூக்கியடிப்பது போன்ற குசும்புகளுக்கு அங்கே ட்ரம்ப்! இங்கே  அதுபோல யாரும் இருக்கிறார்களா என்று கேட்டார்கள்.

சொல்லவா வேணும், நம்ம கேப்டன் விஜயகாந்தைப்  பற்றிச் சொன்னவுடன் பரவசம் ஆனார்கள். "அவர்  வந்திருக்கிறாரா?" எனக் கேட்க , போன வருடம் வந்திருந்தால் லைவ் ஆக்‌ஷனைப்  பார்த்திருக்கலாம் என்றவுடன், ஏமாற்றத்துடன் திரும்பினர். 

  • தொடங்கியவர்

ஒபாமாவை இப்படி பார்த்திருக்கிறீர்களா...? இது ஒபாமா ஸ்டைல்!

Obama in Vacation

தனது அமெரிக்க ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல்லும் விடுமுறையில் இருக்கின்றனர். அமெரிக்காவின் விர்ஜினியா தீவுகளில் இருக்கும் அவர்களின் புகைப்படங்கள் சில வெளியாகின. வழக்கமாக ஒபாமாவை கோட்-சூட்டிலே பார்த்துப் பழகிவிட்டதால் ஷார்ட்ஸ், தொப்பி போன்ற வெக்கேஷன் உடைகளில் வெளியான புகைப்படங்கள் இன்டெர்நெட்டில் செம வைரலாகி வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.