Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

"ஒரு செயல் முடிக்கப்பட வேண்டுமெனில் பெண்ணிடம் சொல்லுங்கள்!" பெண் ஆளுமைகளின் பொன்மொழிகள்!

 

பெண்

அரிச்சந்திரா நாடகம் காந்தியடிகளின் வாழ்க்கை முறையையே மாற்றியது. அதுபோல, ஒரு வார்த்தை ஒருவரின் வாழ்க்கையையே மாற்றும். அதுவும் சாதனையாளர்களின் கூறும் பொன்மொழிகளை வெறும் சொற்கள் என்று எடுத்துக்கொண்டால், எந்தப் பயனும் இருக்காது. அவர்களின் வாழ்வின் சாரம் அந்தச் சொற்கள் வழியே நமக்கு கடத்துகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

சாதனையாளர் ஆவதற்கு ஓர் ஆணை விட, பெண் அதிகம் போராட வேண்டியிருக்கிறது. பெண்கள் கல்வி பெறுவதற்கே பெரும் தடைகளைத் தாண்டி வரவேண்டியிருந்தது. வீட்டை விட்டு வெளி உலகைக் காண, ஆய்வுகள் மேற்கொள்ள, அரசியல் தடம் பதிக்க, இலக்கியத்தில் முத்திரைப் பதிக்க, பொருளாதாரத்தில் சுயமாக காலூன்ற... என ஒவ்வொன்றின் பின்னும் ஏராளமான சவால்களைச் சந்தித்து, அதைக் கண்டு அஞ்சாது, போராடி வென்று வருகிறார்கள் பெண்கள். இத்தனை அனுபவங்களின் வழியே அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானதே. அந்த வார்த்தைகளின் வழியே அவர்களின் வாழ்க்கையை நாம் சென்றடைய முடியும்.

அப்படி பல்வேறு தளங்களில் சாதித்த பெண்களின் பொன்மொழிகள் இங்கே.  

மார்கரெட் தாட்சர்

‘எதையாவது சொல்ல வேண்டும் என்றால் அதை ஆணிடம் சொல்லுங்கள். எதாவது காரியம் முடிய வேண்டும் என்றால் அதைப் பெண்ணிடம் சொல்லுங்கள்’ – மார்கரெட் தாட்சர் - இங்கிலாந்தின் முதன் பெண் பிரதமர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரர்.

ஹெலன் கெல்லர்

"ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்." -  ஹெலன் கெல்லர் - (பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளியான அமெரிக்கப் பெண். ஆனாலும் தன் கடின உழைப்பால் மிகச் சிறந்த எழுத்தாளரானார்)

அன்னை தெரசா

"வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.." அன்னை தெரசா - சேவையின் உருவம் என உலகமே போற்றும் அற்புத பெண்மணி.

இந்திரா காந்தி

‘மனிதர்கள் அவர்களுடைய கடமையை மறக்கப் பழகியிருக்கிறார்கள்; ஆனால், உரிமைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள்’ –இந்திராகாந்தி - இந்தியாவின் முதல் பெண் பிரதமர். இரும்பு பெண்மனி.

அம்ருதா ப்ரீதம்

"வா சிறிது காலம் நம் தலைக்கு மேலே சிறிய கூரையை அமைக்கலாம்
மேலும் அங்கே கவனி
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில்
சிறியதோர் வெற்றிடம் இருக்கிறது" - அம்ருதா ப்ரீதம் - பஞ்சாபி மொழியின் இலக்கிய முகமாக போற்றப்படுபவர். 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி நீங்கா புகழ் பெற்றவர். 

ஷெரின் சான்ட்பெர்க்

" தலைமை என்பதை வரையறுக்கப்பட்ட குணங்களுக்குள் பாதுகாப்பாக திணிக்கப் பட்டிருந்தது இனியும் செல்லாது. ஆனால், தலைமை பண்பு என்பது ஒரு தனிமனிதனின் தனித்தன்மையில் நேர்மையாகவும் , சில சமயம் குறைவாகவும் வெளிப்படும். தலைவர்கள் கச்சிதமானவர்களாக இருப்பதைவிட நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்க முயல வேண்டும்." - ஷெரில் சாண்ட்பர்க் - இன்றைய மிகப் பெரிய சமூக ஊடகமான ஃபேஸ்புக்கின் சீஃப் ஆபரட்டேடிங் ஆபிஸர்.

அரசியல், கலை, இலக்கியம் ... என ஒவ்வொரு துறையிலும் ஆளுமைப் பெற்றவர்களின் பொன்மொழிகளைத் தேடி வாசித்தல் நல்ல பழக்கம். வாசிப்பதோடு நம் வாழ்வில் அவற்றில் எந்தளவு செயல்படுத்த முடியுமோ அந்தளவு செயல்படுத்துவது இன்னும் ஆகச் சிறந்த பழக்கம். நல்லதொரு பழக்கத்தை இன்றே தொடங்குவோம். எந்நாளும் தொடருவோம்.

vikatan.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

பசிபிக் பெருங்கடலுக்குள் பாயும் உருகிய எரிமலைக்குழம்பு

ஹவாயின் கீலவேயா எரிமலை 1983 ஆம் ஆண்டுமுதலே கொந்தளித்தபடி இருக்கிறது.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen, Bart und Text

கூர்ப்புக் கொள்கையின் தந்தை, பரிணாம வளர்ச்சி தத்துவங்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர் சார்ல்ஸ் டார்வினின் பிறந்தநாள்.
Charles Darwin

Bild könnte enthalten: 1 Person, steht und Text

பிரபல கொலம்பிய பொப் பாடகியும் நடிகையுமான ஷாகிராவின் பிறந்தநாள்.

Happy Birthday Shakira

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

”உங்களுக்கும் அவரை பிடிக்காதா? வாங்க காஃபி சாப்பிடலாம்” - கலக்கல் டேட்டிங் ஆப் ’ஹேட்டர்’

ஹேட்டர்

ஃபேஸ்புக்கோ... இன்ஸ்டாகிராமோ... எந்த சோஷியல் மீடியாவில் பட்டா போட்டாலும், முதலில் அவர்கள் நம்மிடம் கேட்பது “உனக்கு என்னலாம்ப்பா பிடிக்கும்?”

தளபதி படம் பிடிக்கும் என்றால், அதற்கென இருக்கும் பிரத்யேக பக்கத்தைக் காட்டி லைக் கேட்கும் ஃபேஸ்புக். எனக்கு கேட்ஜெட்ஸ்தான் உசுரு என்றால், அந்த அக்கவுன்ட்களை காட்டி ‘பாலோ பண்ணு மேன்’ எனச் சொல்லும் ட்விட்டர். நமது விருப்பங்களை தெரிந்துகொள்வதுதான் இந்த சமூக வலைதளங்களின் தலையாய பணி. அப்போதுதான் நமக்கு பிடித்த பொருட்களை கண்டுபிடிக்க முடியும். அதை விற்கும் நிறுவனங்களின் விளம்பரங்களை நம் கண்ணில் காட்ட முடியும்.

ஆனால், இதுதான் ஒரே வழியா? நீங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவான ஆசாமி என்றால் ஒரு விஷயத்தை யோசியுங்கள். உங்களுக்கு சசிகலாவை பிடிக்கும்  , அவரை சிலாகித்து ஒரு ஸ்டேட்டஸ் தட்டினால் 100 லைக்ஸ் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அவரை திட்டி ஸ்டேட்டஸ் போட்டால் எவ்வளவு கிடைக்கும்? நிச்சயம் 200 ஆக இருக்கும். தோனியை பாராட்டி ஒரு மீம் போட்டு பாருங்கள். அவரை கலாய்த்து ஒரு மீம் போட்டு பாருங்கள். அதன் ரீச்சின் வித்தியாசம் மில்லிமீட்டரில் அல்ல, கிலோ மீட்டரில் இருக்கும். 

விஜய் ஃபேன்ஸ் என்பதை விட விஜய் ஹேட்டர்ஸுக்கு கூட்டம் அதிகம் சேரும். ஏனெனில், அந்தக் கூட்டத்தில் அஜித், சூர்யா என இன்னும் நிறைய நடிகர்களின் ரசிகர்களும் சேர்வார்கள். உண்மையில், ஒருவரோடு நாம் ஒத்த அலைவரிசையில் வர, லைக்ஸை விட நாம் டிஸ்லைக் செய்யும் விஷயங்கள் தான் அதிகம் உதவும். ஒரு நல்ல மாலை வேளையில் இதை பற்றி தனது நண்பர்களோடு பேசியிருக்கிறார் பிரெண்டன் ஆல்பர் என்பவர். “நாம் வெறுக்கும் விஷயங்கள் தானே நம்மிடையேயான ஒற்றுமை” என நிறைய பேர் ஆமோதிக்க, ஒரு ஸ்பார்க் தெறித்திருக்கிறது பிரெண்டனுக்கு.

இது தொடர்பாக உலகெங்கும் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளை தேடி சேகரித்தார். எல்லோருமே ஃபேன்ஸை விட ஹேட்டர்ஸே அதிகம். இரண்டு பேருக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதே, அவர்கள் வெறுக்கும் விஷயங்கள்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அதை அடிப்படையாக வைத்து ஒரு மொபைல் ஆப் உருவாக்கியும் விட்டார் பிரெண்டன். அதுதான் HATER

ஹேட்டர்

இப்போதைக்கு, Late night sleeps தொடங்கி சொந்தக்காரர்கள் வரைக்கும் 2000 தலைப்புகள் இருக்கின்றன. இதில் உங்களுக்கு பிடிக்காதவைகளை Hate செய்ய கீழ் நோக்கி தள்ள வேண்டும். லைக் செய்ய வலதுபக்கமும், டிஸ்லைக் செய்ய இடது பக்கமும் தள்ள வேண்டும். இதில் ஹேட்தான் முக்கியமான விஷயம். இப்படி நாம் ஹேட் செய்யும் விஷயங்கள் யாரோ ஒருவரும் வெறுக்கலாம். அவர்கள் உங்கள் லொகேஷனுக்கு அருகில் இருந்தால், இருவரும் ஒரு காஃபி குடிச்சிட்டே பேசுங்களேன் என்கிறது இந்த ஹேட்டர் ஆப்.

பத்து பொருத்தமும் பொருந்துதான்னு பாக்குற நம்ம தேசத்தில், இந்த லாஜிக் வேலைக்காகுமா என்ற சந்தேகம் எழுவது நியாயம்தான். இன்னும் சில நாட்களில் இதன் வெற்றிக்கான சாத்தியம் தெரிந்துவிடும். உலகமெங்கும் இந்த மாதம் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது ஹேட்டர். ஆனால், இப்போதே நீங்கள் ஆப் ஸ்டோரிலே, ப்ளே ஸ்டோரிலே டவுன்லோடு செய்துகொள்ளலாம். 

டொனால்டு டிரம்ப்பை ஹேட் செய்து எனது கணக்கைத் தொடங்கியிருக்கிறேன். நீங்கள் எப்படி?

vikatan

  • தொடங்கியவர்

#WorldWetlandsDay : பேரழிவின் அபாயத்தை தடுக்கும் ஈரநிலம்

World Wetlands Day

இன்று உலக ஈரநில நாள் (World Wetlands Day). நீரும் நிலமும் சேருகின்ற இடம் தான் ஈரநிலம். குளம், குட்டை, ஏரி, ஊருணி, அணை, ஏரி, ஆறு, கண்மாய் என அனைத்துமே ஈரநிலம் தான். ஈரநிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே  இந்த தினம். ஈரநிலங்கள் அழிந்தால் நீர் தட்டுபாடு அதிகரிக்கும். இந்த ஆண்டின் உலக ஈரநில தினத்தின் கருப்பொருளை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 2017 கருப்பொருள் -’பேரழிவின் அபாயத்தை தடுக்கும் ஈரநிலம்’ (Wetlands for Disaster Risk Reduction).

World Wetlands Day

  • தொடங்கியவர்

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கைலத்த நாளாகும்.

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933
 
ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கைலத்த நாளாகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1812 - கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது. * 1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார். * 1848 - மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. * 1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். * 1878 - துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது. * 1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன. * 1897 - பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது. * 1899 - ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

* 1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. * 1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு. * 1920 - எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. * 1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார். * 1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜெர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். * 1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது. * 1971 - உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார். * 1972 - டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. * 1982 - சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

* 1989 - ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. * 1989 - செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. * 1998 - பிலிப்பைன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
செய்திகள் எட்டுத்திக்கும் பரவும்
 

article_1486092332-hjhu.jpgஎன்றும் முறைகேடான, தரம்கெட்ட செய்திகளை உங்கள் நண்பர்களுக்குச் சொல்ல வேண்டாம். இந்தச் செய்திகள் எட்டுத்திக்கும் பரவும். இந்தத் தவறான பழக்கம் உங்களைப் பொய்யர்களாக்கலாம். 

கெட்ட விடயங்களைக் கேட்பதுவே கெட்ட பழக்கம். அதனை மற்றவர்களிடம் பகர்வதோ மகாபாவம். 

இன்று யாரோ ஒருவரின் அந்தரங்கங்களை அவருடன் சம்பந்தமேயில்லாத நபர்கள் அறியவிரும்புவது கேலிக்குரிய, அர்த்தமற்ற விசயம் ஆகும். இதனால் என்ன வருமானத்தைப் பெறப்போகின்றார்கள்.  

வம்பு பேசுவதால் இன்பம் வந்துவிடுவதில்லை. இது துன்பத்தைத் தேடும் வழி. பிறர் பெறும் வலி கண்டு, சந்தோசம் கொள்ளுதல் அரக்க குணமாகும். நல்லதைப் பகர்ந்து கொள்ளுக; அல்லாததை அகற்றி விடுக.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த 6 விஷயங்களைக் கடைபிடிச்சா.. நீங்களும் ஆகலாம் மிஸ்டர் K

இங்கிலாந்தில் உள்ள ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்.  கடையின் ஊழியரான மிஸ்டர் K-யிடம் வருகிறார் வாடிக்கையாளர். (மிஸ்டர் எக்ஸ்தான் கோமாளியாச்சே. நாம இந்த கேரக்டருக்கு K-ன்னு பேர் வெச்சுப்போம்!) 

மிஸ்டர் K


வாடிக்கையாளர்:  ‘மிஸ்டர்.. எனக்கு அரைக்கிலோ வெண்ணெய் வேணும்’

மிஸ்டர் K: ’ஸாரி சார். இங்க ஒரு கிலோ பேக் மட்டும்தான் இருக்கு. அரைக்கிலோ இல்லை’

‘பரவால்லப்பா... பாதி கட் பண்ணிக்குடு’

‘அப்படியெல்லாம் தரமாட்டாங்க சார். பேக் கட் பண்ணவெல்லாம் முடியாது. ஒரு கிலோதான்’

‘ப்ச். நான் கஸ்டமர் கேட்கறேன். முடியாதுன்ற? போய் மேனேஜர்கிட்ட கேட்டுட்டுச் சொல்லுப்பா’

மிஸ்டர் K கடுப்பாகிறான். ‘யார்றா இவன் கோமாளி’ என்ற கோபத்துடன், திரும்பி,  மேனேஜர் அறை நோக்கி நடக்கிறான். 
சாத்தப்பட்டிருந்த அறையைக் கையால் தள்ளித் திறந்து உள்ளே அமர்ந்திருந்த மேனேஜரிடம் கேட்கிறான்:

’சார்... நம்ம கடைல வெண்ணெய் அரைக்கிலோவா பிரிச்சு தர்றதில்லதானே? ஒரு லூசு வந்து அரைக்கிலோதான் வேணும்னு ஒரே டார்ச்சர் பண்றான் சார்’

சொல்லிவிட்டுப் பார்க்க - மேனேஜரின் பார்வை - தன்னைத் தாண்டி, தனக்குப் பின்னால் நிலைத்திருப்பதைக் கவனிக்கிறான். திரும்பிப் பார்க்கிறான்.  அங்கே இவன் முதுகுக்கு அரையடி தள்ளி அந்த வாடிக்கையாளர் நின்று கொண்டிருக்கிறார். தனக்குப்  பின்னாலேயே வந்திருக்கிறார் அவர் என்பதை உணர்ந்து கொள்கிறான் மிஸ்டர் கே.  சட்டென்று மீண்டும் அதே குரலில், கொஞ்சமும் தயங்காமல் மேனேஜரைப் பார்த்துச் சொல்கிறான்:

‘நல்லவேளை சார்.. இந்த ஜெண்டில்மேனும் அரைக்கிலோ வேணும்னு கேட்கறாரு.. ரெண்டு பேருக்கும் பிரிச்சுக் குடுத்துடவா?’

அவன் சமாளித்துவிட்டதை உணர்ந்த மேனேஜர், ‘சரி.. போய்க் குடுத்துட்டு இங்க வா’ என்கிறார். 

அந்த வாடிக்கையாளருக்கு அரைக்கிலோ வெண்ணெயை விற்றுவிட்டு மேனேஜர் அறைக்குள் நுழைகிறான் மிஸ்டர் K. 

’நீ அந்த கஸ்டமரைத்தான் லூசுன்ன. அவர் பார்க்கறார்னதும் டக்னு பேச்சை மாத்தி சமாளிச்சுட்ட. வாய் ஜாஸ்திடா உனக்கு. ஆனாலும் சமாளிச்சுடற. எந்த ஊரு உனக்கு?’

’மெக்சிகோ சார்’

‘மெக்சிகோவா.... நல்ல ஊராச்சே.. அந்த ஊரை விட்டு ஏண்டா இங்க வந்த?’

‘ப்ச்.. என்ன சார் ஊரு. ஊர்ல பாதி பேர்தான்  ஃபுட்பால் ரசிச்சு வாழ்க்கைய வாழ்ந்துட்டிருப்பாங்க. பாக்கி ஆளுக பூரா காசுக்காக என்ன தொழில் வேணாலும் பண்ற ஆளுக’

‘என்னப்பா இப்டி சொல்ற? என் பொண்டாட்டிகூட மெக்சிகோதான்’

டக்னு கேட்டான் நம்மாளு: ‘அப்டியா சார்.. ஃபுட்பால்ல எந்த டீமை சப்போர்ட் பண்ணுவாங்க சார்?’

உடனே, இங்கிலாந்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இருந்தனவா, அதில் மிஸ்டர் K என்பவர் வேலை செய்தாரா, மெக்சிகோவில் ஃபுட்பால் ஃபேன்ஸ் இருக்கிறார்களா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்காதீங்க. இந்தக் கதைல மிஸ்டர் K சமாளிச்சதை மட்டும் கவனிங்க. அவனுக்கு இருந்ததுதான் Presence of Mind. சமயோசிதம். நம்ம ஊர்ல அதுக்கு சரியான உதாரணம் பீர்பால்!

இந்த சமயோசிதம் நம்ம எல்லாருக்கும் மிக மிக மிக அவசியமான ஒண்ணு. படிக்கற பள்ளி, கல்லூரி, பணி புரியும் அலுவலகம், குடும்பம்னு இந்த Presence of Mind அதிகம் இருக்கறவங்க மத்தவங்களை விட ஒரு படி முன்னே இருப்பதை கவனிச்சிருப்பீங்க. ‘அவன் எப்படியாச்சும் சமாளிச்சுடுவாண்டா’ என்று நீங்கள் உங்களைச் சுற்றி இருக்கறவங்கள்ல யாரையாவது ஒருத்தரைப் பத்தி நினைச்சிருப்பீங்கள்ல.. அந்த ‘அவனு’க்கு நிச்சயம் இந்த சமயோசித புத்தி அதிகம் இருக்கும். 

சரி, இந்த சமயோசித புத்தியை எப்படி வளர்த்துக்கறது? 

1. கவனித்துக் கேளுங்கள்  

கவனித்தல்

 

வீடோ, பள்ளி / கல்லூரியோ, அலுவலகமோ உங்ககிட்ட பேசறதை கூர்ந்து கவனிங்க. சும்மா வெற்றுத் தகவல் பகிர்தல்ன்னாலும் சரி... அவங்க சொல்றதை கூர்ந்து, கவனிச்சு, உள்வாங்கிக் கேளுங்க. புரியலைன்னா, ‘என்ன சார்?’ அப்டினு திரும்பக் கேளுங்க. அப்படிக் கேட்டாலே.. நீங்க கவனிச்சுக் கேட்கறீங்கனு அவங்க புரிஞ்சுகிட்டு இன்னும் தெளிவா பேசுவாங்க. அப்படி கவனிச்சுக் கேட்கற பழக்கம் குறைஞ்சா... நஷ்டம் நமக்குத்தான் பாஸ்!   

2. ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யப் பழகுங்கள்

Multi Tasking

ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டாஸ்க்-குகளை செய்யப் பழகுங்கள். ஒரு வேலையைச் செய்றப்ப, முடிஞ்சுபோன ஒரு வேலையைப் பத்தியோ, அடுத்து முடிக்க வேண்டிய வேலையைவோ நினைச்சுட்டிருக்கறது, செய்யற வேலையை பாதிக்கும். என்னடா.. மாத்தி சொல்றேன்னு பார்க்காதீங்க. அப்படி பாதிக்காம இருக்கப் பழகணும்! Multi Tasking! இதைப் பழகிட்டவங்களுக்கு சமயோசிதப் புத்தி வளருதாம்பா! 


3. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்க

emotional

முக்கியமான விவாதம், பேச்சு இந்த மாதிரியான நேரங்கள்ல உணர்ச்சிவசப்படாதீங்க.  ‘Proffessional ஆ எடுத்துக்கப்பா.. Emotional ஆகாதே’ இதைக் கேட்காதவங்க கம்மி.  இந்தத் திறன், நம்மை சமயோசிதமா யோசிக்கவைக்க மிக அவசியம். ஒரு விஷயம் நடக்கறப்ப எமோஷனலா அதை எதிர்கொண்டோம்னா, அங்க சமயோசிதம் செயல்படறது ரொம்ப கம்மி.   


4. முதலில் முடிக்கவேண்டிய வேலைகளுக்கு முன்னுரிமை

முன்னுரிமை

ஒரே வார்த்தைல சொல்லணும்னா, Prioritize.  இன்னைக்கு இத்தனை வேலை இருக்கு. இது இதை, இப்பப்ப முடிக்கறோம்னு ஒவ்வொரு நாளையும் தொடங்குங்க. இருக்கற 24 மணிநேரத்துக்கும் ஷெட்யூல் போட்டு வேலை செய்யாதீங்க. இன்னைக்கு முடியாது, இதை நாளைக்குப் பார்த்துக்கலாம்னா, அடுத்த நாள் ஷெட்யூல்ல வைங்க. மேக் இட் சிம்பிள்!   


5. ப்ரேக் ப்ளீஸ்! 

Break

ரொம்ப ஸ்ட்ரெஸ் இருந்தா, அது நிச்சயம் மூளையைப் பாதிக்கும். இதை ஆராய்ச்சி சொல்லுதுன்னெல்லாம் சொல்லவே தேவையில்லாத அளவுக்கு எல்லாரும் உணர்ந்திருப்பீங்க. ஸ்ட்ரெஸ்ஸா உணர்றப்ப ஒரு ப்ரேக் எடுத்துக்கோங்க. அது அஞ்சு நிமிஷம் மொட்டை மாடில உட்கார்ந்து வெட்ட வெளியை ரசிக்கறதா இருக்கலாம்.. அஞ்சு நாள் லீவு போட்டு அக்கடானு ஊர் சுத்தறதா இருக்கலாம்.. உங்க மைண்டை ஸ்ட்ரெஸ் இல்லாம பார்த்துக்க வேண்டியது.. நீங்க.. நீங்க மட்டும்தான்! குறைந்த பட்சம் அங்க இங்கனு நடக்கறதாவது அவசியம்.  


6. பிடிச்ச விஷயத்தை விடாதீங்க. 

கிடார்

வேலைகள் தவிர்த்து உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் செய்வதை எந்தக் காரணம் கொண்டும் விடாதீங்க. கிடார் வாசிக்கறதோ, பயணம் மேற்கொள்வதோ எதுவாக இருந்தாலும் அப்பப்ப பண்ணிடுங்க. இது மற்ற நாட்களுக்கான உற்சாகத்தைக் குடுத்து, முதல் 4 பாய்ண்ட்ஸ் வளர வழி வகுக்கும். 

இவைகள் போக, நீங்க நீங்களா இருக்கறது, அந்தக் கணத்துல வாழ்றதுனு சில ஆழமான விஷயங்களும் சமயோசித புத்தி வளர ரொம்ப உதவுமாம். அதெல்லாம் இருக்கட்டும்.. மொதல்ல இந்த ஆறையும் கடைபிடிக்க ஆரம்பிப்போம். நாமளும் மிஸ்டர் K மாதிரி Presence Of Mindல கில்லி ஆகி, வெறிக்கொடியைத் தொடுவோம்!

vikatan

  • தொடங்கியவர்

மூன்று புலிகள் ஒன்றாக நீர் அருந்திய அதிசய சோகம்! #Drought2017

புலிகள்

புலிகள் எப்போதும் ‘சிங்கிள்’ஆகவே வாழ விரும்பும். தனக்கென ஒரு எல்லைக் கோடு. அந்தக் கோட்டைத் தாண்டி இன்னொரு புலி வந்தால் சண்டைதான். இனப்பெருக்க காலத்தில் மட்டும் பெண் புலியைத் தேடி ஆண் புலி கோடு தாண்டும். இதையும் மீறி வழியில் இரண்டு புலிகள் சந்தித்துக் கொண்டால் கண்களாலே சின்னதாக ஒரு ஹாய். அவ்வளவுதான். அங்கேயும் பெரிய புலி, சிறிய புலிகளை டாமினேட் செய்ய நினைக்கும். ஒரு புலியை பார்ப்பதே பெரிய விஷயம். இதில் இரண்டு, மூன்று புலிகளை ஒன்றாக பார்ப்பதெல்லாம் இடைத்தேர்தல் இல்லாத காலங்களில் அமைச்சர்களை தொகுதியில் பார்ப்பது போலதான். அரிது அரிது.

புலி

அப்படியொரு புகைப்படம்தான் சென்ற வாரம் வெளியாகி ஆச்சர்யமூட்டியிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும், பண்டிபூர் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் மூன்று புலிகள் ஒன்றாக நீர் அருந்திக் கொண்டிருக்கின்றன. “டபுள் பைக்ல ஸ்டாண்டிங்ல வந்தவண்டா” என்ற விவேக் ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. நம்ம புலிகளுக்கு என்னதான் ஆச்சு?”

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் இருந்த புலிகளின் எண்ணிக்கை 40,000. இன்று அது வெறும் 4000 ஆகிவிட்டது. அந்த நாலாயிரம் புலிகளில் 2000 புலிகள் வாழ்வது இந்தியக்காடுகளில். இந்த அழிவுக்கு காரணங்கள் என்ன?

புலி பற்கள் விலையுயர்ந்த ஆபரணம். ஆசியாவில் பல நாடுகளில் புலியின் பாகங்கள் மருந்தாகவும் பயன்படுகின்றன. புலியின் மீசைமுடி விஷத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள் மலேஷியர்கள். அதற்காகவே புலிகள் அங்கே தேவைப்படுகின்றன. வெறும் 20 டாலருக்கே இந்தியாவில் சில கிராமங்களில் புலிகள் கொல்லப்படுகின்றன. பின், அவை நமது நாட்டின் எல்லையைத்தாண்டி சீனாவுக்கு கொண்டு போகும்போது அதன் மதிப்பு 5 லட்சம் டாலராக மாறிவிடுகிறது. இதனாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆனால், அதை விட மிகப்பெரிய அச்சுறுத்தல் மாறிவரும் காலநிலைதான். ராஜஸ்தான் மாநிலத்தில்தான் புலிகள் அதிகமாக வாழ்ந்து வந்தன. அந்தப் பகுதி மக்களுக்கு பல வழிகளில் புலிகள் பொருளாதார ஆதாயங்களை தந்திருக்கின்றன. ஆனால், ராஜஸ்தானில் தற்போது கிட்டத்தட்ட 17000 கிராமங்கள் தண்ணீர் பிரச்னையில் தவிக்கின்றன. இது மக்களை மட்டுமல்ல, புலிகளையுமே பாதித்திருக்கிறது. இந்தியா முழுவதும் இருக்கும் புலிகளை இந்தத் தண்ணீர் பிரச்னை பாதித்திருக்கிறது. அதனால்தான் குடிக்க தண்ணீர் கிடைத்ததும், தன் இயல்பை மறந்து மூன்று புலிகள் ஒன்றாக நீர் அருந்தும் காட்சி காண முடிகிறது. இந்தியா முழுவதுமே தண்ணீர் பிரச்னை இந்த ஆண்டு அதிகமாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்காகியிருக்கிறது. 2006ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 76 புலிகளே இருந்தன. 2014ல் அந்த கணக்கு 224 ஆகிவிட்டது. இந்தியாவின் மற்ற புலிகள் சரணாலயங்கள் புலிகளை இழந்து வரும் சமயத்தில், இந்தச் செய்தி நம்பிக்கை அளிக்கிறது. 

புலிகளை காப்பாற்ற இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. புலிகள் சர்வதேச நாடுகளின் தேவைக்காக கொல்லப்படுவதை குறைக்க முடிந்திருக்கிறது. ஆனால், இயற்கையின் அச்சுறுத்தலால் பாதிக்கப்படும் புலிகள் இனத்தை எப்படி காப்பாற்றப்போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி.

vikatan.

  • தொடங்கியவர்

அண்ணா: சாதாரண மனிதனின் அசாதாரண வாழ்க்கை.... நினைவு தின பகிர்வு...

 

16425731_1393692277356225_17936864849025

THE LIFE AND TIMES OF C.N.ANNADURAI என்கிற அற்புதமான நூல் தமிழில் விகடன் வெளியீடாக ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண வாழ்க்கை என்று மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளது.

அண்ணா என்கிற சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கையை முழுமையாக ஆதாரப்பூர்வமாக ஆராதனை தொனி இல்லாமல் விமர்சகர்களின் பார்வையையும் சேர்த்து இந்நூல் பதிவு செய்திருக்கிறது .அதில் ஈர்த்த அண்ணாவை பற்றிய பதிவுகளும், கூடுதலாக சில தகவல்களும் மட்டும் இங்கே :

அண்ணா வாரிசு அரசியலை காட்டு ராஜாங்கம் என்கிறார் ;அதுவே அவர் கட்சியின் முகமாகி போகும் என்று அவருக்கு தெரியாது ; முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக் கூடாது… என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார் பெரியாரை விட்டு பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்கு கண்டனக்கணைகள் என பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்த அண்ணா பெரியாரை எதிர்ப்பதா என சொல்லி அதை கண்ணீர் துளிகள் என்று மாற்றினார்

முதல்வராக இருந்த காலத்தில் அண்ணா பெட்ரோல் போடக் காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்திருக்கிறார் .சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் ஆகியன் மட்டுமே இறந்த பொழுது அவருக்கு இருந்த கையிருப்பு !

திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை ;பெரியாருடன் மனவருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது எப்படி அவ்வளவு பெரிய பாரத்தை சுமப்பது வேண்டாம் என மறுத்தவரை ஈ.வெ .கி சம்பத் சம்மதிக்க வைத்திருக்கிறார் .கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் DRAVIDAN PROGRESSIVE FEDERATION.பத்திரிக்கைகள் DMK என குறிப்பிட அப்படியே ஆகிப்போனது

”கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது” என்றார்.

"கேட்போர் மனம் குளிர பேசுவதில்லை ; போருதமற்றதை முறையற்றதை எழுதும் பழக்கமில்லை ; சுடு மொழி கூறும் பழக்கமில்லை,விரைவாக மன வேதனையை நீக்கிக்கொள்ளும் இயல்பு இல்லை ; உருட்டி மிரட்டிப் பேசுவதில்லை ; சொந்த விருப்பு வெறுப்பு அதிகளவில் இல்லை ; பதில் கூறி காலத்தைக் வீணாக்கிக்கொள்வதில்லை. சுறுசுறுப்புடன் ஓயாது உழைப்பது இல்லை ;
நாள்,நேரம்,காலம் பற்றிய நினைவு இருப்பதில்லை -இவையெல்லாம் அண்ணா தன்னைப்பற்றி தானே சொல்லியிருப்பவை ! "காலண்டர் பார்த்து வேலை செய்ய வேண்டிய சிக்கலுக்கு தள்ளியதே முதலமைச்சர் பதவி என்று நேரடியாக ஆதங்கப்பட்ட ஒரே நபர் அவராகத்தான் இருக்க முடியும்

அண்ணா விமர்சனங்களை வரவேற்றார் ,சிறுகதையே இல்லை உங்கள் எழுத்து என்பதை ஒத்துக்கொண்டார் ;பிரசார நெடி என ஜெயகாந்தன் விமர்சித்ததை ஆமாம் என்றும் ஒப்புக்கொண்டார் . "NUISANCE" என நேரு அழைத்த பொழுது அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம் ;நாங்கள் கொட்டிகிடக்கும் செங்கல் என்றாராம்
.
உச்சபட்ச நாகரீகம் காட்டி இருக்கிறார் ;பெரியாரை 19 வருட பிரிவில் ஒரு
முறை கூட விமர்சித்து கடுஞ்சொல் சொன்னதில்லை ;

இவர்களின் விரல்களை வெட்டுவேன் என சொன்ன காமராஜரை "குணாளா குலக்கொழுந்தே !"என்று அழைத்திருக்கிறார் ;பிரிந்து போன சம்பத் ,"தோழர் அண்ணாதுரை !"என பெயர் சொல்லி விளித்த பொழுது "வைர கடுக்கன் காது புண்ணாகிவிடும் என கழட்டி வைத்திருக்கிறேன்" என்கிறார்

சிவாஜி கட்சியை விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல ,”அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா ?”என கேட்டாராம்.

அப்பாவியாகவே வாழ்நாள் முழுக்க இருந்திருக்கிறார் ;பெரியார் தவிர தலைவர் இல்லை என சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் ;பொது செயலாளர் பதவியை தம்பி தலைமையேற்க வா என நெடுஞ்செழியனுக்கு விட்டு கொடுத்திருக்கிறார் .அடுத்த முதல்வராகும் வாய்ப்பு எனத்தெரிந்தும் எம்.பி தேர்தலில் போட்டியிட்டவர் அவர்

சட்டமன்றம் முதல் முறை போனதும் "நீங்கள் போகும் ரயில் வண்டி புதிதாக வந்திருக்கிறோம் கொஞ்சம் நெருக்கி எங்களுக்கும் இடம் தாருங்கள்" என கேட்டார் அண்ணா
காமராஜரை தோற்கடிக்க நாகர்கோயில் எம் பி தொகுதியில் ஆள் நிறுத்த வேண்டும் என கட்சியே சொன்ன பொழுது மறுத்து தமிழர் தோற்க கூடாது என முழு ஆதரவு தந்தார்

பொடி போடுவதை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் . அமெரிக்காவில் காக்டாயில் பார்டி நடந்த பொழுது அண்ணா கேட்டது தக்காளி ஜூஸ் அவரின் பேச்சாற்றல் பலரை கட்டி போட்டது . தலைப்பில்லை என தலைப்பு தந்தாலும் பேசினார் ;இவர் பல்கலைகழகதுக்குள் பேச வரக்கூடாது என அண்ணாமலை பல்கலைகழகம் தடை விதிக்கிற அளவுக்கு !

எதிர்கட்சிகள் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததால் பதவியை விட்டு விலக வேண்டும் என கேட்ட பொழுது செ.மாதவன் எனும் சட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்படி விலக என்ன வழி என கேட்டார் அவர்.

சென்ற ஊரெல்லாம் தமிழர் பெருமையை உணர செய்த அவரை தமிழர்கள் கொண்டாடினார்கள் ;மலேசியா நாட்டில் உணவருந்தாமல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர் . அமெரிக்காவில் வேட்டி கிழிந்து போகிற அளவுக்கு கூட்டம் அவர் மீது அன்பு காட்டியது தேர்தலில் வென்று விட்டோம் என சொல்கிறார்கள் ,"காமராஜரை தோற்கடித்து விட்டார்களே" என வருத்தப்படுகிறார் ;சி.சுப்பிரமணியம் தோற்ற பொழுது "மத்தியில் தமிழர் ஒருவர் மந்திரி ஆவது போனதே !" என வருந்துகிறார் .

அழுக்கு வேட்டி ,சவரம் செய்யாத முகம் என உட்கார்ந்து தான் இருந்தார் நீங்கள் முதல்வர் என்று அறிவிக்க சொல்ல க.ராசாராம் சொன்ன பொழுது ,”வெட்கத்தை விட்டுச்சொல்கிறேன் நான் தான் தமிழக முதல்வர் “என்று அப்பாவியாக சொன்னார்

சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்;சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என பெயர் மாற்றம் பண்ணினார் ;ஆங்கிலம் மற்றும் தமிழ் என்று இருமொழிக்கொள்கையை சட்டப்பூர்வமாக்கினார் அவர். கல்விக்கு காங்கிரசை விட ஏழு கோடி அதிகம் ஒதுக்கினார் .

சாவதற்கு முன் மேரி கரோலியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை வாசித்து கொண்டிருந்தாராம் ;இதை படித்துவிட்டு செத்துப்போகலாம் என்றாராம் உச்சபட்சமாக அண்ணா இறந்த பொழுது நாலரை கோடி தமிழரில் ஒன்றரை கோடி பேர் கூடி இருந்தனர் ;அது கின்னஸ் சாதனை.

vikatan

முடியாதவனாக்கப்பட்டு சூழ்நிலைக் கைதியாய் கிடக்கிறேன்...' அண்ணாவின் கடைசி கடிதம் இதுதான்

அண்ணா

நாடு முழுவதும் கோலோட்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலில் இருந்து இறங்க வைக்க திராவிட இயக்கங்களுக்கு மூலதனமாக இருந்தது தமிழ் மொழியும் அதன் எழுத்துக்களும் என்றால் மிகையில்லை. அந்த எழுத்துக்கள்தான் இன்றளவும் திராவிட இயக்கங்களை உயிர்பிப்போடு வைத்திருக்கின்றன. அதற்கு உதாரணம் தனது 93 வயது வரையிலும் கலைஞர் கருணாநிதி தனது உடன் பிறப்புகளுக்கு நாள் தோறும் தீட்டி வந்த மடல்கள்தான்.

கருணாநிதிக்கு மட்டுமல்ல அவரது கடிதத்திற்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா. தனது இயக்கத்தில் உள்ளவர்களை தனது தம்பியாகவே விழித்து அவர்களுக்கு நாள்தோறும் பத்திரிக்கை வாயிலாக மடல் எழுதி வந்தவர். அவரது 48 வது நினைவு தினம் இன்று. தனது மறைவுக்கு இரு வாரங்களுங்கு முன் தன் தம்பிகளுக்கு அண்ணா எழுதிய கடைசி கடிதம் இது.

அண்ணா

1969ம் ஆண்டு  ‘‘காஞ்சி’’ பொங்கல் மலரில் அண்ணா எழுதிய கடைசி மடலில், ‘‘எந்தப்பணி எனக்கு இனிப்பும், எழுச்சியும் தந்து வந்ததோ, எந்த பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்தேனா,  எந்தப்பணி மூலம் என்னை உன் அண்ணனாக உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு பெருமிதத்துடன் இந்த உலகத்துக்கு அறிவித்து வந்தேனோ,  எந்தப்பணி வாயிலாக என் கருத்துக்களை அண்ணாஉனக்கு அளித்து, உன் ஒப்புதலைப் பெற்று அந்த கருத்துகளின் வெற்றிக்கான வழியினை காண முடிந்ததோ, எந்தப்பணி மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழி கிடைத்து வந்ததோ, எந்தப்பணி மூலம் எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து நான் அளவற்ற அக மகிழ்ச்சி பெற முடிந்ததோ அந்த பணியினை முன்பு போலச் செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்று ஏக்கத்தால் துக்கப்பட்டுச் சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டு கிடக்கிறேன் என்பதனை அறிவாய். ‘சூழ்நிலையின் கைதி’ என்ற சொற்றொடருக்குத்தான், ‘முதலமைச்சர்’ என்ற முத்திரையிட்டு இருக்கின்றனர்.

தம்பி! என் மனதுக்கு இனிமை தந்திடும் பணியிலே என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லையே என்ற கவலை ஒருபுறம். அத்துடன் பின்னிப் பிணைந்து கொண்டு, என் பேரப்பெண் இளங்கோவின் மகள் கண்மணி  மழழை மொழியில் பாடுகிறாள்: ‘‘நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? என்று.

எனக்கென்னவோ, அந்த பாட்டைக்கேட்கும் போதெல்லாம், என் தம்பி, தங்கைகள் நாட்டின் நல்லோர் அனைவருமே என்னை  'நலந்தானா?' என்று கேட்பது போலவே தோன்றுகிறது. கடந்த ஓராண்டாகவே இந்தக் கேள்வி கிளம்பியபடி இருந்தது. அமெரிக்கா சென்று, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அளவுக்கு உடல் நலம் பாழ்பட்டது. ஆனால், அதனால் ஏற்பட்ட கவலையை நான் உதறித் தள்ளும் விதமான அன்பும், கனிவும் நாடு முழுவதிலும் இருந்து கிடைத்தன. அரசியலில் நம்மோடு மாறுபட்டிருப்பவர்களிலே பலரும் கனிவு காட்டக் கண்டேன். மனிதத் தன்மை மடிந்து விடவில்லை என்பதனை உணர்ந்தேன்.’’ இவ்வாறு அந்த கடிதத்தில் அண்ணா எழுதியிருந்தார்.

எந்த சூழலில் 48 ஆண்டுகளுக்கு முன் தன் தம்பிகளுக்கு அண்ணா இந்த கடிதத்தை எழுதினாரோ அந்த சூழல் மீண்டும் உருவாகி இருக்கிறது. தங்கள் தலைவரிடம் இருந்து ‘உடன்பிறப்பே’ எனத்துவங்கும் அந்த ஒற்றை மந்திர கடிதம் எப்போது வரும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் தி.மு.க.வினர்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நேட் ஜியோவின் அட்வெஞ்சுரர் ஆஃப் தி இயர் மீரா ராய்.

16266280_1243317635745131_45677547982717

29 வயதான மீரா ராய் தான் 2017-ம் ஆண்டுக்கான நேஷனல் ஜியாக்ரஃபியின் அட்வெஞ்சுரர் ஆஃப் தி இயர். இவர் ட்ரெயில் ரன்னிங் என்று சொல்லப்படும் மலைகளின் மேல் ஓடும் ஓட்டப் பந்தயத்தில் சர்வதேச போட்டிகள் பலவற்றில் வென்றிருக்கிறார். ஒரு காலத்தில் இமய மலையில் அரிசி மூட்டைகளைச் சுமந்து வந்து விற்று காசாக்கி குடும்பத்தைக் காப்பாற்றியவர்.

பிறகு, பெண் அடிமைத் தனத்தை எதிர்த்து சிறிது காலம் மாவோயிஸ்ட் போராளியாக இருந்தார். பின் அவரின் திறனை வேறு வகையில் வெளிப்படுத்த வேண்டும் என காத்திருந்தபோது, எதார்த்தமாக ட்ரெயில் ரன்னிங்கில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்குபெற்ற அனைத்து ஆண்களையும் பின்னுக்குத் தள்ளி தங்கம் தட்டினார். அன்றில் இருந்து இன்று வரை பதக்கங்களும், பட்டயங்களும் நீண்டு கொண்டே போகின்றன. இவர் பலருக்கு உதாரணமாக காட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

  • தொடங்கியவர்

பிஞ்ச பேண்ட்... பேட்ச் வொர்க்! - கேர்ள்ஸின் ட்ரெண்ட் இதுதான்!

பேண்ட்

காதல் தேசம்  படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு இளைஞன் தன்னை யாரும் கவனிக்கவில்லை என சோகமாக படிக்கட்டில் உட்கார்ந்திருக்க, வடிவேலு அவருடைய பேண்ட், சட்டையை அங்கும் இங்குமாக கிழித்து அவர் தோற்றத்தையே மாற்றிவிட்டு இதான் இப்ப ட்ரெண்ட் என அசால்ட் காட்டுவார். யூத்களின் ட்ரெண்ட் செட் நாம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் காலத்துக்கு ஏற்ப அடிக்கடி மாறுபடும். அந்த வகையில் யுவன் யுவதிகளின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ரிப்டு மற்றும் பேட்ச் வொர்க் ஜீன்ஸ்கள்!. சமீபத்தில் வெளியான  ‘டியர் ஜிந்தகி’ படத்தில் அலியாபட் அணிந்திருக்கும் ஜீன்ஸை கவனித்திருக்கிறீர்களா? இப்போது மார்கெட்டில் அந்த மாதிரியான ஜீன்ஸ் பேண்ட்களுக்கு தான் மவுசு அதிகம்.

giphy.gif

 

யாராவது திடீரென இப்படியான மாடர்ன் லுக்கில் நம்மை கடந்து செல்லும் போது,  ‘அட, இது என்ன பிஞ்ச பேண்ட் மாதிரி இருக்கே’,  ‘ஒட்டு போட்டு தச்ச மாதிரி இருக்கே’ என்றெல்லாம் கலாய்ப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது இதுதான் ஸ்டைல். ஃபேஷன் சந்தைகளை  தன்வசம் வைத்திருக்கும் இந்த வகை ஜீன்ஸ்கள் குறித்துப் பேசுகிறார்  சென்னை, சுவஸ்ட்ரா டிசைன்ஸ் உரிமையாளர் ஷாலினி.

Dear Zindagi

‘’கேர்ள்ஸ் மத்தியில் ஸ்லிம் பேண்ட், ஃப்ளோரல் பேண்ட், பிரிண்ட் பேண்ட் இதெல்லாம் இப்போது லேட்டஸ்ட் ஃபேஷனாக இருக்கு. இதையும் தாண்டி அதிகமா ஆசைப்பட்டு வாங்குறது ரிப்டு பேண்டுகளை தான். அதுக்கு அடுத்த இடத்தில் பேட்ச் வொர்க் பேண்ட்கள் இருக்கு. பேண்டுகள்ல என்ன மாதிரியான டிசைன் வேணும்னு முதல்லயே முடிவு செஞ்சுட்டு, அதுக்கு ஏத்த மாதிரி பேண்டில் உள்ள குறுக்கும் நெடுக்குமான நூல்களை பிரிக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப மொத்தமாக கிழிந்த வடிவத்தில் நூலை எடுத்துவிடலாம். பார்ப்பதற்கு கிழிந்த மாதிரிதான் தெரியுமே தவிர, இதன் ஆயுள் அதிகம். சீக்கிரத்தில் மொத்தமாக கிழிந்துவிடாது. டார்க் கலர் பேண்டுகளை விட லைட் கலர் பேண்ட்கள் பார்க்க அழகாக இருக்கும். பேட்ச் வொர்க் பேண்ட்களைப் பொறுத்தவரை ஆங்காங்கே ஒட்டு போட்டது போல துணியை துண்டாக வெட்டி சேர்த்து தைத்திருப்பார்கள். பார்க்க வித்தியாசமான லுக் கொடுக்கும் இந்த பேண்ட்கள் டார்க் மற்றும் லைட் கலர்களில் கிடைக்கிறது’’ என்னும் ஷாலினி இதன் விலையை சொல்லும் போது கொஞ்சம் ஷாக்கிங் தான்.

குறைந்த விலை, 2000 ரூபாய்: அதிகப்பட்சம், வேலைப்பாடுகளைப்(!)  பொறுத்து 10 ஆயிரத்துக்கும் மேல்!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புத்தாண்டை ஒட்டி சீனத் தூதரகத்துக்கு விசிட் அடித்த இவாங்கா ட்ரம்ப்!

ட்ரம்பின் 90 நாள் தடை உத்தரவு, உலக மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் 35 வயதான ட்ரம்பின் மகள் இவாங்கா அதைப் பற்றி எல்லாம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. தனது ஐந்து வயது மகள் ஆரபெல்லாவுடன் வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தில் சீனப் புத்தாண்டில் அமெரிக்காவின் சீனத் தூதுவர் டியான்காய்யுடன் கலந்து கொண்டுள்ளார். ட்ரம்பின் குட்டிப் பேத்தி அரபெல்லா சீன மொழியில் பாடும் பாடல் வீடியோவை இவான்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது.

3CC331BE00000578-4184440-image-a-53_1486

 

சிரியா பத்திரிகையாளர் அமெரிக்கா செல்லத் தடை!

சிரியாவைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சைனா எர்ஹாமுக்கு அமெரிக்காவில் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர் 2015-ம் ஆண்டு 'மக்கள் பிரச்னைக்காகப் போராடும் சிறந்த பத்திரிகையாளர்' என்ற விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'இன்ஸ்ட்டியூட் ஃபார் வார் அண்ட் பீஸ் ரிபோர்ட்டிங்'  என்னும் தனியார் நிறுவனம் நாளுக்கு நாள் உலகம் சந்திக்கும் பிரச்னைகள் பற்றிய அவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தைத் துவக்கி வைக்க, சைனாவுக்கு அந்நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. ட்ரம்பின் 90 நாள் தடை உத்தரவால் இப்போது சைனா அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.
 

https__blueprint-api-production.s3.amazo

  • தொடங்கியவர்

சந்தானம் நடிப்பில்.. சந்தோஷ் நாராயணன் இசையில்.. சர்வர் சுந்தரம் டீசர்!

சர்வர் சுந்தரம்

அறிமுக ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க வெளியாக இருக்கிறது சர்வர் சுந்தரம். கதாநாயகியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். இவர் ஒன்றிரண்டு மராத்தியப் படங்களில் நடித்தவர். தமிழில் புதுமுகம். சந்தோஷ் நாராயணன் இசை.  

லெஜண்ட் நாகேஷ் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட படத்தின் டைட்டில் இது. இந்தப் படத்தின் டீசரை சற்று முன் சிம்பு வெளியிட்டார். சிம்பு பிறந்தநாளான இன்று, டீசர் வெளியானதை கவனிக்கலாம். சந்தானத்திற்கு பெரிய திரையில் ஆரம்பம் முதலே ஆதரவாய் இருந்து வருபவர் சிம்பு.

நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷும் படத்தில் இருக்கிறார். கவனிக்க வைக்கிறார். ஆனந்த் ராஜ், பூனம் ஷா ஆகியோரும் இவர்களுடன் நடித்துள்ளனர். படம் தீபாவளி வெளியீடாக இருக்காலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

  • தொடங்கியவர்

ஓவியர் அண்ணாவின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறீர்களா? #RareDrawings

கண்ணியம் மிக்க, முன்மாதிரி அரசியல் தலைவர்; சிலேடையும் அடுக்குமொழியும் கரைபுரண்டோடும் பேச்சாளர்; கொண்ட கொள்கை வழுவாமல் வாழ்ந்த போராளி; உணர்ச்சி ததும்ப எழுதும் எழுத்தாளர் என பேரறிஞர் அண்ணாவுக்கு பல அடையாளங்கள் உண்டு. இதையெல்லாம் கடந்து அவருக்குள் ஓர் ஓவியக்கலைஞனும் வாழ்ந்தான் என்பது பலர் அறியாதது. 

அண்ணா, ஓவியம், பேரறிஞர் அண்ணா

1963... இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தை கனன்று எரியச் செய்திருந்த நேரம். திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு வழிகளில் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தது. சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. இறுதியாக சென்னையில் அக்டோபர் 13-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் மாநாடு கூடியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஆட்சிமொழி பற்றிய 17-வது பிரிவின் நகலை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை அங்கே அறிவித்தார் அண்ணா. போராட்டத்திற்கான ஆயத்தங்கள் தொடங்கிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். அவரோடு அன்பழகன், மதியழகன், கே.பி.சுந்தரம், பொன்னுவேல், வெங்கா, பார்த்தசாரதி உள்ளிட்ட இயக்கத் தோழர்களும் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

அண்ணாவைப் பொறுத்தவரை சிறைச்சாலை புதிதல்ல. வெளியில் எந்த அளவுக்கு உத்வேகமாக இயங்குவாரோ, அதே அளவுக்கு சிறைக்குள்ளும் இயங்குவார். நாடகம், கேலி, கிண்டல், விளையாட்டு என்று சிறையே களைகட்டும். 

“சிறையில் இருக்கும் யாரும் மன வருத்தம் அடையக்கூடாது என்ற எண்ணத்தில் அவர் எப்போதும் ஏதாவது கேலி செய்து சிரிப்பூட்டிக் கொண்டே இருப்பார். சிறையில் நாங்களே சமைத்துக் கொள்வோம். எங்களுக்கு சமையல் மாஸ்டரும் அவர்தான்.  நூல் நூற்றுக்கொண்டே, "வெங்காய ஸ்பெஷல்" சாம்பார் வைக்க பக்குவம் சொல்லத் தொடங்கி விடுவார். சிறையில் எனக்கு கண் வலி. வலி என்றால் சாதாரண வலியல்ல. துடித்துப் போய் விட்டேன். மருத்துவமனைக்குக் கிளம்பும்போது, ’வெளியே போகிறாயே... எனக்குக் காராபூந்தி வாங்கி வா’ என்றார் அண்ணா. எனக்கு கண்வலி மறந்து போய்விட்டது. அவர் கேட்ட காராபூந்தி ஞாபகம் தான். சிகிச்சை முடிந்து வரும் வழியில், காராபூந்தி வாங்க உடன் வந்த காவலர் சம்மதிக்கவில்லை. சிறைக்கு வந்ததும் அண்ணா சிரி சிரியென்று சிரித்து விட்டார். ’கண்ணில் இருந்து உன் சிந்தனை மாறவேண்டும் என்பதற்காகத் தான் காராபூந்தி கேட்டேன். நீ வாங்கி வரமாட்டாய் என்று எனக்குத் தெரியும்’ என்றார். 

சிறையிலேயே நாடகம் எழுதி எங்களை நடிக்க வைப்பார். தீராத தோல் வலி, வெளியில் அரசியல் ரீதியாக பல நெருக்கடிகள் என எல்லா துயரங்களையும் தனக்குள் அடக்கிக்கொண்டு, பிறர் துன்பப்படக்கூடாது என்பதிலேயே அவர் குறியாக இருப்பார்..." என்று எழுதுகிறார் அண்ணாவோடு சிறையில் இருந்த "தையற்கலை" இதழின் ஆசிரியர் கே.பி.சுந்தரம். 

அண்ணா வரைந்த ஓவியம், பேரறிஞர் அண்ணா, அறிஞர் அண்ணா

கே.பி.சுந்தரம் நன்றாக ஓவியம் வரைவார். சிறையில் பொழுதுபோக்குவதற்காக அவர் வரையும் போது அண்ணா ஆர்வத்தோடு பார்ப்பார். அவருக்கு ஓவியம் மிகவும் பிடிக்கும். அதன் காரணமாகவே, அனைத்து மாநாடுகளிலும் ஓவிய கண்காட்சிகள் ஏற்பாடு செய்ய வைப்பார். சிறையில் சுந்தரம் ஓவியம் வரைவதைப் பார்த்து அவருக்கும் வரையும் ஆசை வந்து விட்டது. ஒரு காகிதத்தையும் பென்சிலையும் எடுத்துக்கொண்டு ஓரமாக அமர்ந்து வரையத் தொடங்கி விட்டார். ஒரு ராணுவ வீரனின் ஓவியத்தையும், ஒரு மலைக்காட்சியையும் வரைந்தார். பிறகு வண்ணப் பென்சில்களை வாங்கி சிரத்தையாக தீட்ட ஆரம்பித்து விட்டார்.  அவரின் ஈடுபாட்டையும் வரையும் போது அவருடைய முகபாவத்தையும் வரைந்த ஓவியங்களையும் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். 

ஒருவர் சொன்னார், "ராணுவ வீரரின் தொப்பி சரியாக இல்லை" என்று. அண்ணா விட்டுக் கொடுக்கவில்லை. "அதெப்படி சரியாக இருக்கும்... இவன் தோற்றுப்போன ராணுவத் தலைவனப்பா" என்று சொல்ல எல்லோரும் சிரிப்பு மறந்து அனுதாபப்படத் தொடங்கி விட்டார்கள். 

அண்ணா வரைந்த ஓவியம், மலைக்காட்சி, அறிஞர் அண்ணா

அண்ணா வரைந்த மலைக்காட்சியில் யானையை விட புலி பெரிதாக இருந்தது. "இதென்ன புதுவகை புலியாக இருக்கிறதே" என்று சுந்தரம் சொல்ல சிறை எங்கும் சிரிப்பு சத்தம். விடவில்லை அண்ணா. "நீங்கள் பதினாறு அடி வேங்கையைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா... அதுதான் இது" என்று சொல்ல சிறை மறந்து எல்லோரும் சிரித்தார்கள். 

16.11.1963 அன்று கைதாகி சிறைக்குப் போன அண்ணாவும் தோழர்களும் 23.05.1964 அன்று விடுதலை ஆனார்கள். சிறைக்குள் இருந்தபடியே காஞ்சி இதழில் எழுதிய, "கைதி எண் 6342" என்ற சிறைக் குறிப்புகளில் தான் வரைந்த ஓவியங்கள் பற்றி சுவாரஸ்யமான குறிப்புகளை எழுதியிருக்கிறார்.

21.04.1964 அன்றைய குறிப்பில் எழுதியவை;
"ஓவியங்கள் தீட்டுவதில் நானும் முனைந்து விட்டேன். ஒரு ராணுவத் தலைவன், மலைப்பகுதி எனும் இரண்டு ஓவியங்கள் தயாரித்திருக்கிறேன். "ராணுவத் தலைவனுடைய தொப்பி சரியாக இல்லையே" என்றார்கள் நண்பர்கள். “அதெப்படி சரியாக இருக்க முடியும். இவன் தோற்றுப்போன ராணுவத் தலைவன்; சரண் அடைவதற்காக செல்லும் வேளை; எந்தத் தொப்பி கிடைத்ததோ அதை எடுத்துப் போட்டுக் கொண்டு போகிறான்" என்று காரணம் கூறினேன். "ஐயோ பாவம்" என்று அனுதாபம் தெரிவித்தார்கள். ராணுவத் தலைவனுக்கா..? ஓவியம் போடத் தெரியாத எனக்கா? என்று நான் கேட்கவில்லை. கேட்பானேன்..!"   

26.04.1964 அன்றைய குறிப்பில்; 
“காட்டுக்காட்சி ஒன்றை வரையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஓரளவுக்கு தயாராகி விட்டிருக்கிறது. அடர்ந்த காடு-மலைகள்- ஒருபுறம் வேங்கை; மறுபுறம் யானை. யானையை விட வேங்கை பெரிய அளவாக இருப்பதாக தம்பி சுந்தரம் கேலி பேசினார். "தம்பி, உனக்குப் பதினாறு அடி வேங்கையைப் பற்றித் தெரியாது. அது. இது..." என்று சமாளித்துக் கொண்டேன்." 

அண்ணா வரைந்த அந்த ஓவியங்கள் 19.01.1969 ஆனந்த விகடன் இதழில் இடம் பெற்றிருந்தன. மேலே இருப்பவை அந்த ஓவியங்கள் தான்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அசிங்கமான பெண்களுக்கு வரதட்சணை அதிகம்: வார்த்தைகளில் பொறுப்பற்ற பள்ளிப் பாடப்புத்தகம்!

வரதட்சணை

 


உலக நாடுகள் பலவும் வேலைவாய்ப்புகளில் இந்தியர்களை வாரியணைத்துக்கொள்ள முக்கியக் காரணம், நம் கல்வி முறை. ஆனால், அதில் அரசுக் கல்வித்துறையின் கவனமும் பொறுப்பும் குறைவது வேதனை... மகாராஷ்டிரா மாநில பன்னிரெண்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம் போல.

'அசிங்கமான பெண்களுக்கு வரதட்சணை அதிகம் கேட்கப்படுகிறது' என்ற வரிகள், சமூகவியல் சம்பந்தப்பட்ட புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

சமூகவியல் பாடத்தில் 'முக்கிய சமூகப் பிரச்னைகள்' என்ற தலைப்பில், வரதட்சணை பற்றிக் குறிப்பிடும்போது, மதம், இனம், சமூக அந்தஸ்து போன்ற காரணங்களின் வரிசையில், 'அசிங்கமான பெண்கள்' என்பதையும் சேர்த்து அதை 'Ugliness' என்ற வார்த்தையில் குறிப்பிட்டு விவரித்துள்ளது அம்மாநில கல்வித்துறை.

''பெண் அசிங்கமாக, மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவளுக்கு திருமணம் என்பது எட்டாக்கனியாகி விடுகிறது. அதுபோன்ற பெண்களை மணம் முடிக்க, மாப்பிள்ளை வீட்டினர் அதிக வரதட்சணை தரச்சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அந்தப் பெண்களின் பெற்றோர்கள் வேறுவழியின்றி அவர்களின் வரதட்சணை எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய சம்மதிக்கிறார்கள். இது வரதட்சணை பழக்கம் அதிகரிக்கக் காரணமாகிறது."

ஆறு கல்வியாளர்களால் எழுதப்பட்டு, மகாராஷ்டிராவின் மாநிலக் குழுவால் வெளியிடப்பட்ட புத்தகம் இது. 2013ல் வெளியிடப்பட்ட இப்புத்தகத்தை, இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் படித்துக் கடந்துள்ளனர். சம்பந்தப்பட்ட இந்தப் பாடத்தை எடுக்கும்போது அதிர்ச்சிக்குள்ளானதாகவும், மேற்கொண்டு அதைப் பற்றிப் பேச விருப்பமின்றி, அந்தப் பாடத்தையே 'ஸ்கிப்' செய்து விட்டதாகவும் பல ஆசிரியர்கள் இப்போது கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

பாடப்புத்தகம்

 

'சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேசிவிட்டு பிறகு கருத்து தெரிவிக்கிறேன்' என்கிற பதிலோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார் மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை சேர்மன் கங்காதர்.

பல்லாயிரம் மாணவர்களின் கைகளில் இருக்கும் பாடப்புத்தகத்தில் இந்த வரிகள். மாநில கல்வித் துறை அமைச்சர் வினோத் தௌடேவிடம் இது பற்றிக் கேட்கப்பட்டபோது, 'மகாராஷ்டிரா மாநிலக் கல்வித் துறை அதிகாரிகளிடம் இதுபற்றி கலந்து ஆலோசித்தேன். இந்த சிலபஸை, கடந்த மூன்று வருடங்களாக மாணவர்கள் படித்துவருகிறார்கள். இது அரசியலாக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல என்று நான் நினைக்கிறேன். மாநிலக் கல்வித்துறை தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்த பின்னர், இது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருக்கிறார்.

 

மாநிலக் கல்வித் துறை என்பது, நாளைய இந்தியாவின் கல்வித் திறன் மற்றும் சமூக மதிப்பீடுகளை வளர்க்கும் பெரும் பொறுப்புடையது. இந்த மெத்தனமான, கவனமற்ற வார்த்தைகளுக்கு அது நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். மற்றும், அந்த மாண்புமிகு துறைக்கு ஒன்று சொல்ல வேண்டும்... ஒவ்வொரு பெண்ணும் பேரழகியே!
 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தனித்தீவின் பிதாமகன்!

 

வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு வந்து திரும்பியவர்களில் ஒருவர் மோரிஸ் வைடல் போர்ட்மேன் (Maurice Vidal Portman). லண்டனில் 1860-ல் பிறந்த இவர், தனது 16-வது வயதில் பிரிட்டிஷ்-இந்தியக் கடற்படையில் சேர்ந்து இந்தியாவுக்கு வந்தவர். தனது 19-வது வயதில் அந்தமான் பகுதியின் ஆட்சிப் பொறுப்பாளராக போர்ட் ப்ளேர் பகுதிக்குக் குடிவந்தார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அந்தமானைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர்களைப் பற்றி ஆராய்வதில் கழித்திருக்கிறார்.

p88a.jpg

அந்தமான் பழங்குடியினர் பற்றி அக்காலத்தில் பலருக்கும் ஒருவித அச்சம் இருந்தது. பழங்குடியினர் வாழ்ந்த தீவுகளை நெருங்கியவர்கள் பலர் அடித்துத் துரத்தப்பட்டும், சிலர் கொல்லப்பட்டிருந்ததுமே அதற்குக் காரணம். ஆனால், அமைதியான வழியில் அவர்களிடம் நெருங்கவும், அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் போர்ட்மேன் விருப்பப்பட்டார். சிலரை மட்டும் பலவந்தமாகக் கடத்திவந்து நிறையப் பரிசுப் பொருட்களுடன் திருப்பி அனுப்புவதன் மூலம், பிற மனிதர்கள் தங்களிடம் அன்புடன் நடந்துகொள்கிறார்கள் என்ற கருத்தைப் பதியவைத்து நட்புறவை ஏற்படுத்தியது போர்ட்மேனின் ராஜதந்திரம். அந்தமான் பழங்குடியினரின் மொழி, ஆயுதங்கள், கலாசாரம் குறித்து இவர் எழுதிய புத்தகங்களும், இவரின் புகைப்படங்களும் பிரிட்டிஷ் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்துவந்த, வடக்கு சென்டினல் தீவில் இருக்கும் சென்டினலிஸ் இனத்தவரைப் பற்றி ஆராய முடிவெடுத்தார். 1880-ம் ஆண்டு அத்தீவில் தனது சிறிய படையோடு இறங்கினார். ஆனால், சில நாட்கள் வரைக்கும் அடர்ந்த காட்டுக்குள் வசிக்கும் சென்டினலிஸ் மக்கள் யாரும் அவர் கண்ணில் அகப்படவில்லை. இறுதியாக, உடல் நலமின்றி  இரண்டு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் மட்டும் இருந்தனர். ஆனால், போர்ட் ப்ளேர் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சில நாட்களில் இரண்டு பெரியவர்களும் உயிரிழந்தனர். இதையடுத்து நான்கு குழந்தைகளை மட்டும் தீவுக்கு மறுபடியும் வழக்கம்போல கைநிறையப் பரிசுகளோடு வழியனுப்பி வைத்தார் போர்ட்மேன். அதற்கு அடுத்தும் பலமுறை இவர் அத்தீவுக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார். இத்தீவுக்கு அதிகமுறை சென்று உயிருடன் திரும்பியது இவராகத்தான் இருக்கும்.

p88.jpg

இருபது ஆண்டு காலத்துக்கும் அதிகமாக அந்தமான் பகுதியில் ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த அவர், திருமணம் செய்துகொள்ளவில்லை. ஓய்வுக்குப் பின் இங்கிலாந்துக்குத் திரும்பி பத்திரிகையாளராகப் பணியாற்றினார்; முதலாம் உலகப்போரின்போது ரகசிய சர்வீஸ் பணியிலும் ஈடுபட்டார். பழங்குடியினர் பற்றிய பல மர்மங்களை உடைத்தெறிந்த இவர், 1935-ம் ஆண்டு உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். இன்றளவும் மனிதர்கள் செல்ல முடியாத பகுதியாக இந்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள வடக்கு சென்டினல் தீவைப் பற்றியும் அதன் மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் அதிகம் தெரிந்தவர் போர்ட்மேன் மட்டுமே என ஆராய்ச்சியாளர்கள் அவரைப் பற்றிப் பெருமிதமாக பதிவுசெய்கின்றனர்.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....
பெப்ரவரி - 03

 

1575 : இந்­தி­யாவின் முக­லாயப் பேர­ரசர் அக்பர், வங்­காளப் படை­களைத் தோற்­க­டித்தார்.

 

1857 : பிரான்ஸூம் ஐக்­கிய இராச்­சி­யமும் சீனா­வுக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்­தன.

 

1878 : ஓட்­டோமான் பேர­ரசின் கீழ் பல்­கே­ரியா சுதந்­திரம் பெற்­றது.

 

1913 : அமெ­ரிக்­காவின் வொஷிங்டன் நகரில் வாக்­க­ளிப்பு உரிமை கோரி ஆயி­ரக்­க­ணக்­கான பெண்கள் ஊர்­வலம் சென்­றனர்.

 

1918 : முதலாம் உலகப் போரில் ரஷ்­யாவின் பங்­க­ளிப்பை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஜேர்­மனி, ஆஸ்­தி­ரியா மற்றும் ரஷ்யா ஆகி­யன உடன்­பாட்­டிற்கு வந்­தன.

 

1933 : ஜப்­பானில் ஹொன்ஷூ என்ற இடத்தில் பூகம்பம் மற்றும் சுனாமி கார­ண­மாக 3,000 பேர் வரையில் இறந்­தார்கள்.

 

1938 : சவூதி அரே­பி­யாவில் பெற்­றோ­லிய எண்ணெய் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

1939 : மும்­பையில், மகாத்மா காந்தி ஆதிக்­க­வா­தி­க­ளுக்கு எதி­ராக உண்­ணா­நோன்பை ஆரம்­பித்தார்.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் புரூம் என்ற நகரில் ஜப்­பானின் பத்து போர் விமா­னங்கள் குண்டுத் தாக்­கு­தலில் ஈடு­பட்­டதில் நூற்­றுக்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டனார்.

 

1943 : இரண்டாம் உலகப் போர்: லண்­டனில் விமானக் குண்­டுத்­தாக்­கு­தலின் போது சுரங்க ரயில் நிலை­யத்தில் ஒதுங்­கிய 173 பேர் நெரி­சலில் சிக்கி இறந்­தனர்.

 

1966 : பிரித்­தா­னிய போயிங் 707 பய­ணிகள் விமானம் ஒன்று ஜப்­பானின்  ஃபியுஜி மலையில் விபத்­துக்­குள்­ளா­னதில் 124 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1969 : நாசாவின் அப்­பலோ 9 விண்ணில் ஏவப்­பட்­டது.

 

897varalaru.jpg1971 : இந்­திய –  - பாகிஸ்தான் போர் ஆரம்­ப­மா­னது.

 

1974 : பிரான்ஸின் பாரிஸ் நகரின் அருகில் துருக்­கிய விமானம் ஒன்று வீழ்ந்து மோதி­யதில் அதில் பயணம் செய்த 346 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆத­ர­வாக லத்­வி­யாவின் 74 சத­வீத மக்­களும் எஸ்­தோ­னி­யாவின் 83 சத­வீத மக்­களும் வாக்­க­ளித்­தனர்.

 

2005: ஸ்டீவ் பொசெட் என்­பவர், விமா­ன­மொன்றை எங்கும் நிறுத்­தாமல், மீள் எரி­பொருள் நிரப்­பாமல் தனி­யாக உலகை சுற்றிவந்த முதல் மனிதரானார்.

 

2013 : பாகிஸ்தானின் கராச்சி நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 45 பேர் உயிரிழந்ததுடன், 180 பேர் காயமடைந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

காலத்தை மீறி நிற்கும் கண்ணாடிக் கைவினைஞர்கள்

கண்ணாடிக்குடுவைகள் தயாரிப்பதிலும் அவற்றை கலைவடிவங்களாக மாற்றுவதிலும் பேர் போன ஊர் எகிப்தில் இருக்கும் கர்ரா கிராமம்.

  • தொடங்கியவர்

இதைக் கொஞ்சம் படிங்க.. நீங்களும் ஆகலாம் பி.சி.ஸ்ரீராம்! #Photography

புகைப்படக் கலை

க்கத்து டவுனில் இருக்கும் ஸ்டூடியோவுக்கு குடும்பத்தோடு வண்டிகட்டி சென்று புகைப்படம் எடுத்துக் கொண்ட காலம் போய் எல்லோருடைய கையிலும் DSLR தவழும் காலத்திற்கு வந்துவிட்டோம். கையில் கேமரா இல்லையென்றாலும் மொபைலில் படங்களைக் கிளிக்கிக் கொண்டு உலாவரும் ஒவ்வொரு இளைஞனின் உள்ளுக்குள்ளேயும் ஒரு பி.சி. ஸ்ரீராமும், சந்தோஷ் சிவனும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்குப் புகைப்படக் கலை பெரும்பாலானோரை ஈர்க்கும் ஒரு விஷயம்!       

போட்டோகிராபி மீது ஆர்வம் கொண்டு புது DSLR கேமரா வாங்கியும், நீங்கள் எடுக்கும் படங்களுக்கு பேஸ்புக்கில் லைக்ஸ் வரவில்லையா? உங்களுடைய போட்டோகிராபி திறமையை வளர்த்துக்கொள்ள ஏதேனும் சிறப்பு வகுப்பிற்கு செல்லலாம் என்று இருக்கிறீர்களா? உங்களுக்கானதுதான் இந்த கட்டுரை.

1. உங்கள் கேமராவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் :

கிராமத்தில் பெண்களின் சமையல்! படம் : க.விக்னேஸ்வரன்

முதலில் உங்களிடம் உள்ள கேமராவைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ளுங்கள். அந்த கேமராவைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ள தவறாதீர்கள். உங்கள் கேமராவுடன் அளிக்கப்பட்ட ‘User Manual’ கையேட்டை முழுமையாக படித்துவிடுங்கள்.

விலை உயர்ந்த கேமராவில் மட்டுமே சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம் என்ற பொது கருத்து நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறான கருத்து. சுவையான சமையலுக்கு சமைப்பவரின் திறமைதான் காரணமே தவிர, விலை உயர்ந்த அடுப்பு இல்லை. விலை உயர்ந்த கேமராக்கள் சில அம்சங்களில் மட்டுமே தேவைப்படும். அதனால் திறமை இருந்தால் சிறந்த படங்களை எந்தக் கேமராவிலும் எடுக்க முடியும்.

2. குறிப்பெழுதுங்கள்  : 

போட்டோகிராபி சம்மந்தமான உங்கள் எண்ணங்களை, லட்சியங்களை ஒரு பிரத்யேக நோட்டில் எழுதுவதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள் .

உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட காட்சியை படமாக்க எடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால், உடனே அதை உங்கள் போட்டோகிராபி குறிப்புகளில் எழுதிவிடுங்கள். அந்தக் காட்சியைப் படம் பிடித்தவுடன் அதை நீங்கள் எழுதிய குறிப்பின் அருகில் ஒட்டிவிடுங்கள். வாடிக்கையாய் டைரி எழுதும் பழக்கம் போல் இந்த குறிப்பெழுதும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள். நாளைடைவில், உங்கள் போட்டோகிராபி டைரி,  உங்களின் வெற்றிக் கதைகளை கூறும் பொக்கிஷமாக மாறிவிடும்.  தவிர, இது போல் இலக்கை தீர்மானித்து செயல்படும் பொழுது உங்கள் போட்டோகிராபி திறமை மேலும் மெருகேறும்.

3. தினமும் நேரம் ஒதுக்குங்கள் :

புகைப்படக் கலை

போட்டோகிராபி கலையில் உங்களின் திறமையை வளர்க்க விரும்பினால், கண்டிப்பாக தினமும் உங்கள் கேமராவுடன் ஒரு குறிப்பிட்டளவிலான நேரத்தை செலவிடுங்கள். தினமும் மனதிற்கு திருப்தியாக 3 படங்களாவது எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். வார இறுதி நாட்களில் Photo Walk மேற்கொள்ளுவதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். ஒரு கிராமத்திற்கோ அல்லது ஒரு சுவாரசியமான இடத்திற்கோ சென்று அந்த இடம் முழுவதும் சுற்றி திரிந்து புகைப்படம் எடுப்பதே Photo Walk. உங்கள் ஊரிலும் கண்டிப்பாக ஒரு Photo Walk குழு இருப்பார்கள். முகநூலில் தேடி பாருங்கள். அப்படி இல்லை என்றால் நீங்களே ஒரு Photo Walk குழுவை உருவாக்குங்கள்.

4. புதுமையை புகுத்துங்கள் :

மூதாட்டி! படம் : க.விக்னேஸ்வரன்

தினமும் புகைப்படம் எடுப்பதை விட அதிமுக்கியமான விஷயம், புகைப்படம் எடுப்பதில் புதிய யுத்திகளை முயற்சி செய்வது. அனுதினமும் ஒரே  மாதிரியான காட்சிகளை படம் பிடிப்பதில் ஒரு பயனும் இல்லை. நீங்கள் Photo Walk செல்லும் இடங்களை மாற்றி கொண்டே இருங்கள். புதிய இடம், புதிய முகங்கள், புதிய நிறங்கள் என்ற தேடலை வளர்த்துக்கொள்ளுங்கள். இதைத் தவிர மாறுபட்ட வெளிச்சங்களில் புகைப்படம் எடுக்க முயலுங்கள். பொதுவாக போட்டோகிராபி துறையில் Magic Hours என்றழைக்கப்படும் அதிகாலை மற்றும் அந்திமாலை நேரங்கள்தான் Outdoor போட்டோகிராபிக்கு சிறந்த நேரம். ஆனால் இரவு நேரம், மதிய நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களும் தங்களுக்கே உரித்தான பிரத்யேக சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். அவைகளையும் முயற்சித்து பாருங்கள்.

5. இலக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள் :

கடற்கரையில் தம்பதி! படம் : க.விக்னேஸ்வரன்

உங்கள் போட்டோகிராபிக்கென்று சில  Theme-களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ஆங்கில எழுத்துக்களின் வடிவம் கொண்ட விசயங்களை படம் எடுப்பதாக முடிவு செய்தால், கோவில் கோபுரம் A வடிவம் போல் இருக்கும், மலைத்தொடர்ச்சிகளின் நடுவே M வடிவத்தை காணலாம். இப்படி A முதல் Z வரை தேடி தேடி எடுப்பது சுவாரசியமாக இருக்கும்!  மேலும் ஒரு புகைப்பட கலைஞராக நீங்கள் உலகை பார்க்கும் விதம் தேர்ச்சியடையும்.  நம் வாழ்வியலில் அழிந்து வரும் சில விசயங்களை Theme ஆக எடுத்துக் கொள்வது, உங்கள் புகைப்பட கலைக்கு மேலும் மதிப்பைக் கூட்டும். அழிந்து வரும் வாழ்வியலிற்கு தண்டட்டி அணிந்த கிராமத்து பாட்டிகள் நல்ல உதாரணம்.

இது போல் இலக்குகளை உருவாக்கிக்கொள்வதால் எந்நேரமும் நமக்குள் ஒரு தேடல் இருக்கும். ஒரு புகைப்பட கலைஞருக்கு இந்த தேடல் மிக அவசியம்.

6. அப்டேட்டாக இருங்கள் :

எந்த துறையாக இருந்தாலும் சரி, அந்த துறையில் வெற்றிபெற வேண்டுமென்றால் அந்தத் துறையை பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். உலகளவில் போட்டோகிராபி துறையில் அனுதினம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. போட்டோகிராபி உலகில் என நடந்துக்  கொண்டிருக்கிறது என்பதில் அப்டேட்டாக இருங்கள். இதற்கு போட்டோகிராபி சம்பந்தமான பத்திரிகைகளும், ஆன்லைன் தளங்களும் உதவிகரமாக  இருக்கும்.

7. கேள்வி கேளுங்கள்  :

தமிழக கடற்கரை படம் : க.விக்னேஸ்வரன்

புதிதாக கேமரா வாங்கிய அனைவரின் மனதிலும் கேமரா பற்றியும் போட்டோகிராபி பற்றியும் பல கேள்விகள் இருக்கும். புகைப்பட துறையில் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் உங்களின் சிறு சந்தேகங்களிற்கு கூட விடை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். பல ஆன்லைன் தளங்களில் போட்டோகிராபி குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வசதியுள்ளது. புகைப்படத்துறை சம்பந்தமான உங்களின் சந்தேகத்தை இந்த தளங்களில் பதிவேற்றினால், அனுபவமுள்ள புகைப்பட நிபுணர்களால் உங்கள் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்.

சில ஆன்லைன் தளங்கள் :

https://learn.sudhirshivaram.com/forum/

http://www.jjmehta.com/forum/

YouTubeல் போட்டோகிராபி சம்பந்தமான பல்லாயிரக் கணக்கில் வீடியோக்கள் உள்ளன. அவைகளின் மூலம் ஒரு முழு புகைப்பட கலைஞராகவே ஆகிவிடலாம்.

மேலும்  flickr.com, 500px.com  போன்ற தளங்களில் உலகளவில் சிறந்த, அனுபவமிக்க புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்களை காணலாம். அவர்களுடன் உரையாடலாம். இந்த இரண்டு இணையதளங்களும் புகைப்பட கலைஞர்களுக்கான பிரத்யேக தளங்கள் எனலாம். நீங்கள் போட்டோகிராபி பயில ஆரம்பிக்கும் பொழுதே இந்த இணையதளங்களில் இணைவது உங்கள் போட்டோகிராபி திறமைக்கு இன்னும் பலம் சேர்க்கும்.

8. எடிட்டிங்கில் கவனம் செலுத்துங்கள் :

புகைப்படக் கலை படம் : க.விக்னேஸ்வரன்

டிஜிட்டல் போட்டோகிராபியின் மிகப்பெரிய பலம், அது கேமராவில் படம் எடுப்பதுடன் மட்டும் முடிவுபெறுவதில்லை என்பதுதான் . படங்களை  சிறந்த முறையில் எடிட்டிங் செய்யும் திறமை என்பது மிக  அவசியமான ஒன்றாகும். சின்ன அளவில் Brightness மற்றும் Contrast அளவுகளை மாற்றுவது புகைப்படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தக்கூடும். படத்தின் உண்மைத்தன்மை பாதிப்படையாமல் எடிட் செய்வதில்தான் வெற்றியின் சூட்சமம் ஒளிந்துள்ளது. புகைப்படம் எடுக்க செலவிடும் நேரத்தை போல எடிட்டிங்கிற்கும் நேரம் செலவிடுவது மிக அவசியம். 

உதாரணத்திற்கு இந்த காணொளிகளை காணுங்கள் :

 

 

 

 

 

 

ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை என்றொரு பழமொழி உண்டு. மகத்தான விஷயங்கள் ஒரே நாளில் கைகூடுவதில்லை. தொடர்ந்து பயிற்சியும், முயற்சியும் மேற்கொள்ளுங்கள், விரைவில் சிறந்த புகைப்படங்களை உருவாக்குபவராக மாறிவிடுவீர்கள்.

 வாழ்த்துகள்!!

vikatan

  • தொடங்கியவர்

'ரா ரா ரா'- டோராவின் அடுத்த சிங்கிள் ட்ராக்!

Dora 'Ra Ra Ra'

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ஹாரர் பாணி திரைப்படம் 'டோரா'. ஏற்கெனவே டோரா படத்தின் இரண்டு சிங்கிள் ட்ராக்குகள் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது மூன்றாவது சிங்கிள் ட்ராக்காக 'ரா ரா ரா' எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் வாய்ஸில் ஹை-டெம்போவில் அமைந்திருக்கும் இந்தப் பாடல், உங்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.  

 

  • தொடங்கியவர்

ச்சே.... நாங்கள் படிக்கிற காலத்தில் இந்தமாதிரி டீச்சர் இல்லாம போய்டாங்களே ..tw_yum:

  • தொடங்கியவர்

ஒரே ஒரு அறைக்குள் எடுக்கப்பட்டு... உலகையே திரும்பவைத்த உலக சினிமாக்கள்! #MustWatchMovies

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே ஒரு அறைக்குள் மட்டுமே எடுக்கப்பட்ட சினிமா என்ற வியாபாரத்துடன் களமிறங்கவுள்ளது தாயம் திரைப்படம். இதுபோல் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிசோதனை முயற்சி செய்யும் முன்னரே, ஹாலிவுட்டில் சிங்கிள் ரூம் மூவீஸ் மிகப் பிரபலம். தாயம் வரும் முன்னர் அது அவுட் ஆஃப் ஃபேசனாக கூட ஆகியிருக்கும். இந்த கான்செப்டை மையப்படுத்தி வரவேற்பைப் பெற்ற சில உலக சினிமாக்கள் பற்றிய பதிவுதான் இது.

உலக சினிமா

சாதாரண சினிமாக்களைவிட பட்ஜெட் விஷயத்தில் நிறைய சாதகங்கள் உடையது இந்த டைப் படங்கள். ஆனால், ஒரே அறைக்குள் உங்களுக்கு அலுப்பு தட்டாமல் கதையை சொல்ல வேண்டும் என்கிற சவாலும் இருக்கும். அந்த வகையில் ஒரே அறைக்குள் எடுக்கபட்டிருந்தாலும் சுவாரஸ்யத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாத படங்கள் இவை. 

 

டெவில்(DEVIL):

Single room movies

செம கான்செப்ட்! நரகத்திலிருந்து நேராக ஒரு லிஃப்ட் வருகிறது. அந்த லிஃப்ட்டில் சாத்தான் இருப்பது தெரியாமல் ஒரு மனித கூட்டம் (ஃபாரின்லையும் லிஃப்டுனா கூட்டம் தான் போல) நுழைந்து விடுகிறது. அதன் பிறகுதான் தெரிகிறது... தங்களோடு லிஃப்டில் ஒரு சாத்தானும் இருக்கிறது என்று. பேய் இருப்பது அவர்களுக்குத் தெரிந்தவுடன் தொடங்கும் பரபரப்பு படம் முடியும் வரைக்கும் இருக்கும்!  

தி கில்லிங் ரூம்(THE KILLING ROOM)

the killing room

ஒன்றும் தெரியாத அப்பாவி ஏழை மக்களை, சட்டவிரோதமாக மருந்துகள் சோதிக்கப் பயன்படுதிகொள்ளும் ‘ஈ’ படத்தை மறந்திருக்க மாட்டீர்கள். அதே போன்ற கதை. மருத்துவ பரிசோதனைகளை அரசின் உதவியுடன் 50களில் நடத்திக்கொண்டு இருந்ததை மையமாக வைத்து எடுக்கபட்ட படம். தேசப் பாதுகாப்பு என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்துகொண்டு ஒன்றும் தெரியாத அநாதை மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் அறைதான் இந்தக் ‘கில்லிங் ரூம்’  அரசின் கொடூரமான முகத்த தில்லாகக் காட்டிஇருக்கிறார்கள்.

 

அன்நோன் (UNKNOWN)

unknown

ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற ஐந்து நபர்கள் ஒரு வீட்டின் அண்டர்கிரௌண்ட் அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவருக்கு, தான் யார் என்ற பிரக்ஞை சுத்தமாக இல்லை. நினைவுகள் அனைத்தும் மின்னல்கள் போல் அவ்வப்போது வந்து போகிறது. இந்த நிலையில் அவர்களில் யார் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் எனக் கண்டு பிடித்து கெட்டவர்களை கொன்றால் இங்கிருந்து தப்பிக்கலாம் என்ற அசரீரி கேட்கிறது. கெட்டவன் யாரென்று கண்டு பிடித்தார்களா.. கொலை நடந்ததா.. மற்றவர்கள் தப்பித்தார்களா.. அந்த அசரீரி யார்... என்ற பல கேள்விகளுக்கு பதில்களை ஒரே அறையில் காட்சிப்படுத்திக் கலவரப்படுத்திய  தெறி த்ரில்லர் மூவி!  

 

எக்ஸாம்(EXAM)

Exam

ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர பலகட்டத் தேர்வுகளுக்கு பிறகு தேர்வாகிறார்கள் எட்டு பேர். அவர்கள் எட்டு பேரும் ஒரு அறைக்குள் தேர்வெழுத அடைக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தால் போதும். ஆனால், அந்தக் கேள்வித் தாளில் எந்தக் கேள்வியும் இல்லை. அங்குள்ள காவலரிடம் பேச கூடாது, அது இது என்று பல விதிகள். அவர்கள் எல்லோரும் என்ன செய்தார்கள் என்பதை 2 மணி நேர விறுவிறு திரைக்கதையில் சொன்ன படம்.  ஒரே அறையில் அவர்களுக்குள் போட்டி பொறாமையால் நடக்கும் சண்டை , பின் எல்லோரும் சேர்ந்து பதில் கண்டுபிடிப்பது என பரபரப்புக்கு பஞ்சமில்லை.

 

பரிட்(BURIED)

BURIED

தூக்கத்தில் இருந்து கண் விழிக்கிறீர்கள். ஒரே இருட்டு. கை கால்களை அசைத்து பார்கிறீர்கள். எழ முடியவில்லை. ஒரு சிறிய பெட்டிக்குள் அடைக்கபட்டுளீர்கள். சிறிது சிறிதாக தெரிகிறது, நீங்கள் இருப்பது ஒரு சவபெட்டிக்குள். புதைக்கப்பட்டு விட்டீர்கள். இந்த நிலையில் இருந்தால். நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது. ஆனால் இந்த நிலையில் மாட்டிகொண்ட ஒருவன் எப்படி அதிலிருந்து தப்பிக்கிறான் அதன் பின் கதை என்ன என்ற  பரபரப்பான த்ரில்லர்தான் இந்தப் படம். படம் பார்க்கும் போது நாமே பெட்டிக்குள் மாடிக்கொண்டதைப் போன்ற பயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

 

ஃபெர்மாட்’ஸ் ரூம் (FERMAT’S ROOM)

FERMAT’S ROOM

இது ஒரு ஸ்பானிஷ் த்ரில்லர். படத்தின் மையக்கரு கணக்கு! உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு கணிதவியலாளர்கள் ஒரு தீர்க்கக் கடினமான கணிதப்புதிரை தீர்க்க வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நால்வரும் ஓர் அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் நால்வரையும் அழைக்க ஒரு பொதுவான காரணம் உள்ளது அது என்ன? அதை அவர்கள் சரியாக கண்டுபிடித்து சொல்லவில்லை எனில் அந்த அறை தானாக நான்கு பக்கமும் அழுத்தி அவர்களைக்  கொன்றுவிடும். அந்த அறையில் இருந்து அவர்கள் எப்படித் தப்பினார்கள என்பதை கொஞ்சமே கொஞ்சம் கணிதத்துடனும், நிறைய த்ரில்லுடனும் கொடுத்த படம்.  

ஹங்கர் (HUNGER)

HUNGER

பசி வந்திட பத்தும் பறந்திடும் என்பார்கள். பசி ஒரு மனிதனை எந்த அளவிற்குக் கொண்டு போகும் என்பதைக் காட்டுவதற்காகவே இந்தபடத்தை எடுத்திருப்பார்கள் போல. வழக்கம் போல ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத ஐந்து பேர் ஒரு பாதாள அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். அங்கு ஒரு வெட்டுக் கத்தி மற்றும் 30 நாட்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளது. பசி அதிகரிக்க அதிகரிக்க மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை மொரட்டு த்ரில்லராக எடுத்திருகிறார்கள்.

 

போண்ட்டிபூல் (PONTYPOOL)

PONTYPOOL

ஒரே ஒரு அறைக்குள் எடுக்க வேண்டிய படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் இந்த போண்ட்டிபூல்.  ஸோம்பி ஹாரர் வகை படம். ஒரு சிறு கிராமத்தில் உள்ள எஃப்.எம். ஜாக்கி ஒலிபரப்பு அறையிலிருந்தபடி,  ஸோம்பி நோய் பரவுகிறது என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.  அது ஒரு வைரசினால் பரவும் நோய். ஆனால், இந்தப் படத்கின் முக்கிய ட்விஸ்ட் அதுதான். அந்த நோய் எப்படிப் பரவுகிறது தெரியுமா? நாம் யூகிக்க முடியாத ஒரு கோணத்தில் படத்தை முடித்து, தெறிக்க விடுகிறார்கள்.

 

ரோப் (ROPE)

Rope

த்ரில்லர் படங்களின் பிதாமகன் ஆல்பர்ட் ஹிட்ச்காக்கினுடையது இந்த ரோப்!  தன் வகுப்பில் தன்னை விட அதிகம் கவனம் ஈர்க்கும் மாணவன் மேல் உள்ள பொறாமையினால் அவனைத் தன் வீட்டிலேயே வைத்துக் கொன்று விட்டு, பிணத்தையும் வீட்டிற்குள்ளேயே ஒளித்து வைத்துவிட்டு - தான் செய்த குற்றம் பெர்ஃபக்ட் க்ரைம் என்பதை நிரூபிக்க -  தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கே பார்ட்டிக்கு அழைக்கும் ஒரு சைக்கோ கொலைகாரனின் கதை! கடைசிவரை சுவாரஸ்யம் குன்றாத இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா?  ஒரு வீட்டுக்குள் எடுக்கப்பட்ட மிக நீளமான திரைப்படம்.

 

ரியர் விண்டோ (REAR WINDOW)

Rear-Window_poster_goldposter_com_32_213

சஸ்பென்ஸ் நாயகன் ஹிட்ச்காக்கின் மற்றொரு அருமையான திரைப்படம் இந்த ரியர் விண்டோ. ஒரு விபத்தில் கால் உடைந்த நிலையில் ஒரு புலனாய்வு புகைப்படக்காரர் தன் வீட்டின் பாலகனியில் அமர்ந்து கொண்டு, கையில் பைனாகுலருடன் அக்கம்பக்கத்து வீடுகளை நோட்டமிடுகிறார். அப்போது எதிர் அபார்ட்மெண்ட் பெண் ஒருவர் கொல்லப்படுவதை பார்க்கிறார். போலிசுக்கு சொல்கிறார் ஆனால் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அதன் பின் அவர் எப்படி உண்மையை வெளியே கொண்டு வருகிறார் என்பது மீதி கதை.

நல்ல பரபரப்பான திரைக்கதை இருந்தால் ஒரே ஒரு அறைக்குள்ளும் அற்புதமான படங்கள் எடுக்கலாம் என்பதற்கு இந்த படங்களே சாட்சி. இது தவிர ரூம், ஃபோன் பூத், 12 ஆங்க்ரி மேன்ஸ் என பல படங்கள் இருக்கிறது. திரைப்பட விரும்பிகளுக்கு இந்த ஜானர் படங்கள் வேறு லெவல் அனுபவமாக இருக்கும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
உடலுக்கு ஒவ்வாததைத் தவிர்ப்பது நல்லது
 
 

article_1486018962-4-Why-to-Avoid-Oily-aநீங்கள் ஆடம்பரமான விருந்துகளுக்குப் போவதற்குமுன், உங்கள் தேக நலனைப் பற்றியும் சிந்தியுங்கள். அங்கு பரிமாறும் உணவு வகைகள், நறுமணம் உங்களை வெகுவாக ஈர்த்து விடலாம்.  

ஆனால், இவைகள் எல்லாமே எமக்கு உகந்தவைதானா என ஒரு கணம் நினைத்துப் பார்ப்பீர்களாக.  

வயதுவந்தவர்கள், இன்னமும் தங்கள் பராயத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இளைஞர்கள் போல உண்டுகளிக்க எண்ணுவது தப்பு. முதியோர் என்றும் இளைஞர்களாக இருக்க விரும்பினால், கண்டதையும் உண்ணுதல், மதுப்பாவனை என உடலுக்கு ஒவ்வாததைத் தவிர்ப்பது நல்லது. 

உணவுக் கட்டுப்பாடு எல்லோருக்கும் உகந்ததுதான். உடல் எடை குறைத்து சுறுசுறுப்பை ஏற்றுக. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எத்தனை ஆச்சர்ய கணங்களை தவற விடுகிறீர்கள் தெரியுமா? #MorningMotivation

ஒரு நிமிடம்... உங்களிடம் ஒரு கேள்வி... ஒருநாளை உற்சாகமாக்க, தன்னம்பிக்கை ஊட்டிக்கொள்ள என்ன செய்வீர்கள்?  இந்தக் கேள்விக்கான பதிலை உங்களுக்குள் நீங்களே ஒருமுறை சொல்லிவிட்டு, இவர்கள் சொல்லும் பதில்களைப் படியுங்கள். 

Motivation

ஒரு பயணி:

கோவாவின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு சின்ன கிராமம். சுற்றி, பெரிதாக கடைகள் ஏதுமில்லை. ஒரேயொரு ஐஸ்கிரீம் கடை மட்டும் தான். வெளியே ஒரு பழைய காலத்து மாருதி 800 நின்று கொண்டிருந்தது. உள்ளே போனேன். ஒரு பெண். அவரோடு இரண்டு குழந்தைகள். இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு குழந்தை தன் டிரெஸ் மீது தவறுதலாக ஐஸ்கிரீமைக் கொட்டிவிட்டது. பயந்து போய் அந்தப் பெண்ணைப் பார்த்து, " ஸாரி ஆன்ட்டி... தெரியாமல் சிந்திவிட்டது..." என்று சொன்னது. அந்தப் பெண்மணியும், சிரித்துக் கொண்டே, "இட்ஸ் ஓகே பேபி... டிரெஸ் தான துவைச்சிக்கலாம். நீ நல்லா சாப்பிடு..." என்றார்.

உடனே, மற்றோர் குழந்தையும் "அம்மா... என் டிரஸ்லயும் ஐஸ்கிரீம் பட்டா பரவாயில்லையா?" என்று கேட்டதும், அந்தப் பெண் சிரித்துக் கொண்டே  "சரி" என்றார். உடனே, அந்தக் குழந்தை ஐஸ்கிரீமை கையில் எடுத்து, தன் டிரெஸ்ஸில் பூசிக் கொண்டது. இப்படியாக விளையாடிக் கொண்டே அவர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர். அவர்களை கவனித்து அங்கே நான் இருந்த நிமிடங்கள், அந்தப் பயணத்தின் ஸ்பெஷல் தருணங்களாக என் நினைவில் தங்கிவிட்டது. இது போன்ற சின்னச் சின்ன, அழகான விஷயங்கள் எத்தனையோ நடந்திருக்கும். ஆனால் அன்றிலிருந்து இவற்றை கவனித்து ரசிக்கப் பழகிவிட்டேன்.  

Motivation

ஒரு சமையல் காரர்:

"நான் ஒரு முறை கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன். அது விடியற்காலை நேரம். நம் உள்ளங்கையில் வைக்கும் அளவிற்கான சின்ன சின்ன "ஆலிவ் ரிட்லி" ஆமைக் குஞ்சுகள். முட்டையிலிருந்து அப்பொழுதுதான் வெளிவந்திருந்தன. அப்படியே... மெதுவாக ஊர்ந்து அலைகளிடம் சென்றன. முதன் முறை தண்ணீர் அதன் மேல் பட்டவுடன் ஒரு நொடி... குழப்பம், பயம், ஆச்சரியம் என பல உணர்வுகள்... பின்பு, இது தான் நம் வாழ்க்கை என்பது அவைகளுக்குப் புரிந்தன. அடுத்த அலை வரும் பொழுது உற்சாகமாக... அந்த அலைகளோடு கடலுக்குள் சென்று விட்டன... பொதுவாக மணலில் கால்புதைத்து அலைகளை மட்டுமே ரசித்து நடந்து கொண்டிருந்த நான், அதற்குப் பிறகு இந்த உயிர்களை உன்னிப்பாக கவனிக்கப் பழகிவிட்டேன். அது ஒரு தனி உலகம்.  

 

Tajmahal_18525.jpg

ஒரு புகைப்படக்காரர்:

‛‛தாஜ்மஹால் போயிருந்தேன்... அங்கு ஒரு குடும்பம்...  உலக அதிசயத்தின் அழகைப் பார்த்து பிரமிப்பது... போட்டோ எடுத்துக் கொள்வது... குழந்தைகளோடு விளையாடுவது...ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என க்யூட்டாக இருந்தனர். நான் ஆரம்பத்தில் தாஜ் மஹாலை படம் எடுத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அந்தக் குடும்பத்தின் குதூகலத்தைப் படம் எடுக்கும் ஆசை வந்தது. கேட்டதும் ‘அதுக்கென்ன ப்ரதர். எடுத்துக்கோங்க’ என்றபடி சகட்டு மேனிக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். அந்தக் குடும்பம் தாஜ்மஹாலைவிட கொள்ளை அழகு. வந்து புகைப்படங்களைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். எல்லா படங்களை விடவும் அந்தக் குடும்பத்தினரை எடுத்த படம்தான் அத்தனை உயிர்ப்போடு வந்திருந்தது. இதுதான். நாம் நினைக்காத கோணத்தில், நினைக்காத இடத்தில் நமக்கான ஆச்சர்யங்கள் காத்திருக்கும் என்பதை எனக்குச் சொல்லிக் கொடுத்தது..

Motivation 

ஒரு கல்லூரி மாணவி:

"ஒருமுறை நானும் 15 ஃப்ரெண்ட்ஸும் கொடைக்கானல் போயிருந்தோம். எங்களுக்கெல்லாம் கொலப்பசி. எதாவது சாப்பிட்டே ஆகணும்னு ஒரு ரெஸ்டாரெண்ட் போனோம். ஆளாளுக்கு ஏதோதோ ஆர்டர் பண்ணிட்டிருந்தோம். என் தோழி ஒருத்தி, ரெண்டு சாக்லேட் எடுத்துட்டு வெளில இருக்கற பெஞ்ச்ல உட்கார்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சா. கூப்பிட்டப்ப, ‘இட்ஸ் ஓகே.. எனக்கு இது போதும்’னுட்டா. இங்க ஆளாளுக்கு அதையும் இதையும் சாப்பிட்டுட்டு இருந்தப்ப, நான் அவளை மட்டும் கவனிச்சுட்டிருந்தேன். வாகனங்களை ரசிக்க, குழந்தைகள்கிட்ட கை காட்டன்னு அவ அந்த மொமண்ட்ல இருந்தா. நாங்கள்லாம் வழக்கமான சாப்பாடு, சண்டைன்னுதான் பண்ணிட்டிருந்தோம். என்னன்னு சொல்லத் தெரியலை. அவகிட்ட இருந்து நான், அந்த டூர்ல நிறைய கத்துகிட்டேன். இதை அவகிட்டகூட சொல்லல!”

prettiest-butterfly-664x531_18591.jpg


 ஐடி ஊழியர்:

"ஒரு தடவை தர்மஸ்தலா பக்கம் காட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். ஒரு பட்டாம்பூச்சி நின்று கொண்டிருந்த வண்டியின் கண்ணாடி வைப்பரில் சிக்கிக் கொண்டிருந்தது. அதைக் காப்பாற்றினேன். அப்போது அதை கையில் எடுத்த போது அதன் வண்ணங்கள் என் கையில் ஒட்டிக் கொண்டது. அதை நினைத்து மகிழ்ச்சிக் கொள்வதா, வருத்தப்படுவதா என எனக்கு தெரியவில்லை. ஆனால், கையில் ஒட்டிக் கொண்ட அந்த வண்ணம் தானாக மறையும் வரை நான் அதைக் கழுவவோ, துடைக்கவோ முயற்சி எடுக்கவில்லை. அந்தப் பட்டாம்பூச்சி  என் கையில் இருந்ததாகவே உணர்ந்தேன். அந்த நிமிடங்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலாக இருந்தது"

Rainbow_18596.jpg

வானவில் பார்க்கும்போது, மழையில் நனையும்போது,  பயமும் ஆர்வமும் கலந்து அப்பாவைக் கட்டிப்பிடித்தபடி பைக்கில் செல்லும் குழந்தையைப் பார்க்கும்போது, ஏதோ ஓர் ஆர்வத்தில் ஏறிவிட்டு பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடற்கரைக் குதிரையில் செல்லும் இளைஞனைப் பார்க்கும்போது, யானையின் தும்பிக்கைக்கு பயம் கலந்து குனியும் பெண்மணியைப் பார்க்கும்போது, தூரத்தே பயத்துடன் சாலை கடக்க நிற்கும் பெரியவருக்காக தன் வாகனத்தை நிறுத்திய இளைஞனின் சிநேகமான புன்னகையைப் பார்க்கும்போது, வரிசையில் ‘பரவால்ல.. நீங்க முன்னாடி போங்க’ என்று ஒதுங்கி நிற்கும் மனிதனைப் பார்க்கும்போது,  ரயிலைப் பார்த்துக் கையசைக்கும் குழந்தைகளுக்கு பதில் கையசைப்பைப் பரிசாய்த் தருபவர்களைப் பார்க்கும்போது, இருக்கும் ஒரு இருக்கையை இவர் உட்காரட்டும் என்று அவரும், அவர் உட்காரட்டும் என்று இவரும் விட்டுக்கொடுத்து நிற்கும் மனிதர்களைப் பார்க்கும்போது.. இப்படி...  இப்படி...  நம்மைச் சுற்றிலும் எத்தனையோ அற்புதமான கணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  

"சிறியவை தான் பேரழகு"... வாழ்வின் ஓட்டத்தில் நாம் கவனிக்க மறுக்கும், மறக்கும் சின்ன சின்ன விஷயங்கள் தான் நமக்கான மகிழ்ச்சிகளை ஒளித்து வைத்திருக்கும் பெட்டகங்கள்.   உங்களின் பெட்டகம் எது என்பதை கண்டுபிடியுங்கள்... அந்த சின்ன விஷயத்தில் இருந்து உங்களுக்கான பெரிய மகிழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்... அதற்கு முன், சிறிய புன்னகையோடு இந்தக் கட்டுரையைப் படித்து முடியுங்கள். உங்களின் இன்றைய நாளை உற்சாகமாகத் தொடங்குங்கள்...

மகிழ்ச்சி !!!!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.