Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

வைரலாகும் "என் ஓட்டு உனக்கில்லை" பாடல்

ஞாயிற்றுக்கிழமையன்று ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் சட்டமன்ற கட்சித் தலைவராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியும் கட்சியின் பொதுச் செயலாளருமான சசிகலா தேர்வுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஜெயலலிதாவின் இல்லம் இருந்த போயஸ் கார்டன் சாலைக்கு வந்த ஒரு ராப் இசைக் குழுவினர், இந்தத் தேர்வைக் கடுமையாக விமர்சித்து பாடல்களைப் பாடினர்.

அந்தப் பாடல் காட்சி ஃபேஸ்புக்கில் நேரலையாகவும் ஒளிபரப்பானது.

சுரேஷ் விகாஸ் என்பவர் இசையமைக்க சோஃபியா தேன்மொழி அஸ்ரப் என்பவர் பாடிய அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

‘ட்ரெண்ட்’ பெட்டி!

 

p124.jpg

கீர்த்தி சுரேஷ் செய்த சாதனை!

கோலிவுட்டில் தற்போது செம பிஸியான நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ்தான். மாஸ் ஹீரோக்களுடன் அடுத்தடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் ஒரு சாதனை புரிந்துள்ளார். இவரை ட்விட்டரில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளதுதான் அந்த சாதனை. ட்விட்டரில் மிக விரைவில் மூன்று லட்சம் ஃபாலோயர்களைப் பெற்றவர்களின் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் பெயரும் இடம்பெற்றுள்ளது. #300khearts4keerthy என்ற டேக்கில் இவரின் ரசிகர்கள் ட்வீட்களைத் தெறிக்கவிட்டதில், ட்ரெண்டிங்கில் இந்த டேக் இடம்பெற்றது. ஆனால் ட்விட்டர் பக்கம் வரமுடியாத அளவுக்கு, அம்மணி ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம். உன் மேல ஒரு கண்ணு..!

p124b.jpg

144 தடை உத்தரவு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் புதிதாக அரசியல் கட்சி துவங்க சமூக வலைதளங்கள் மூலமாக அழைப்பு விடுத்ததையடுத்து, சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர், சென்னை மெரினாவில் இரு வாரங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இது போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் 144 தடை உத்தரவைக் கண்டித்து நெட்டிசன்கள் மீம்களைத் தெறிக்கவிட்டனர். #marina144 என்ற டேக்கில் அரசியல் பிரபலங்களும், நெட்டிசன்களும் தொடர்ந்து தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். இதன் மூலம் இந்த டேக், தமிழக அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது.

p124a.jpg

அழகிய அனுஷ்கா

2015-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற `பாகுபலி' திரைப்படத்தின் அடுத்த பாகமான `பாகுபலி-2' தற்போது தயாராகி வருகிறது. ஜூலை மாதத்தில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரல் ஆகியுள்ளது. நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா இடம்பெற்றுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கில், இளைமைத் தோற்றத்துடன் அனுஷ்கா தோன்றியிருப்பது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வெளியான சிறிதுநேரத்தில் #anushka பெயர் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. இதன் மூலம் எப்போதும் தான் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்பதை அனுஷ்கா மீண்டும் நிரூபித்துள்ளார். அடியே அழகே...

p124e.jpg

விண்ணைத்தாண்டிய காதல்

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவருக்கும் இடையே சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நீண்ட காலமாக காதலித்து வந்த இருவருக்கும், அவர்கள் வீட்டு சம்மதத்துடன் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தென்னிந்தியா முழுவதும் இந்த செய்திதான் ஹாட் டாபிக் ஆனது. `எனது தாய் தற்போது மகளாக (மருமகள்) கிடைத்துவிட்டாள்' என நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜூனா ட்விட்டரில் ஃபீலிங்கைக் கொட்டியிருக்கிறார். திரைப்பிரபலங்களின் வாழ்த்து மழையில் #chaisam #Samantha போன்ற டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்!

p124d.jpg

ஆட்ட நாயகன்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி-20 போட்டி, சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி `திரில்' வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் நெஹ்ரா மற்றும் பும்ரா ஆகிய இரு பவுலர்கள்தான் காரணம். இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, சமீப காலமாக டெத் ஓவர் என சொல்லப்படும் இறுதிக்கட்ட ஓவர்களுக்கு சிறப்பாக பந்துவீசும் பவுலர் இல்லாமல் திண்டாடி வந்தது. இந்நிலையில் ஜஸ்ப்ரீட் பும்ரா, ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை வெற்றிபெறச் செய்ததோடு ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். போட்டி முடிவடைந்த சிறிது நேரத்தில் #IndVsEng டேக்கை பின்னுக்குத் தள்ளி
@bumrahofficial பெயர் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை பெற்றது. கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்த்துகள் பும்ராவுக்கு குவிந்து கொண்டிருக்கின்றன. ஒரு நாயகன் உதயமாகிறான்!

p124f.jpg

டென்னிஸ் விருந்து

டென்னிஸ் ரசிகர்களுக்கு 2017-ம் ஆண்டின் தொடக்கமே பெரும் விருந்தாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகிய இருவர் மோத, இன்னொரு பக்கம் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதினர். நடால் மற்றும் ஃபெடரர் இருவரும் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாடியதால், இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு. இறுதியில் 18-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தினார் ஃபெடரர். மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி பட்டம் வென்றார் செரினா வில்லியம்ஸ். பட்டம் வென்ற ஃபெடரர் மற்றும் செரினா வில்லியம்ஸ் இருவருக்கும் வயது 35 என்பது குறிப்பிடத்தக்கது. #AusOpen #godofgrandslam #roger #fedal2017 #rafa டேக்குகளில் ரசிகர்கள் ஃபீலிங்கை கொட்டியதில், இந்த டேக் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. வயசானாலும் உங்க ஸ்டைல் இன்னும் மாறல!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

16472794_780307775452896_517028763106991

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முரட்டுக்காளை!

cartoonops_00531.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இரும்பை விரும்பு!

 

வ்வளவு பெரிய பிரச்னைகளையும் நல்ல திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் சுலபமாகத் தீர்க்கலாம் என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு உதாரணம். கம்போடியா நாட்டில் மட்டும் மொத்த மக்கட்தொகையில் பாதிப்பேர் இரும்புச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருந்தனர். உலக அளவில் இருக்கும் மக்கள் தொகையில் 3.5 பில்லியன் பேர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் குறைபாட்டால் தான் பலருக்கும் ரத்த சோகை நோய் ஏற்படுகின்றது. இதைப் போக்க என்ன வழி என ஆராய்ந்த கம்போடியாவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சார்லஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர்.

p92.jpg

அதுதான் இரும்பு மீன். ஆமாங்க. இரும்பினால் ஆன மீன்தான். ஒரு இரும்பு மீனானது 200 கிராம் எடை கொண்டது. இதைப் பயன்படுத்திச் சாப்பிட ஆரம்பித்த பின் காம்போடியா நாட்டு மக்கள் உடல் நலத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பயப்படாதீங்க மக்கா! உணவுப்பொருளோடு இதையும் சேர்த்து பொரித்தோ அவித்தோ எதைச் சாப்பிட்டாலும் இரும்புச் சத்து அந்த உணவுகளில் கலந்து சக்தி கிடைப்பதாக நம்புகிறார்கள். 

இந்த இரும்பு மீன்களைத் தற்போது luckyironfish.com தளத்தில் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். `ஒரு மீன் வாங்கினால் ஒரு மீன் இலவசம்' எனக் கவர்ச்சிகரமான ஆஃபர்களும் 25 டாலர்களுக்குக் கிடைக்கின்றன. இரும்பு மீன்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களும் இந்தத் தளத்தில் இருக்கின்றன.

இரும்பு மீன்களைக் கண்டறிவதற்கு முன்பு வரை அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருந்து வந்துள்ளது. பிரசவிக்கும் தாய்மார்கள் இரும்பு மீன்களைப்  பயன்படுத்தத் தொடங்கிய பிறகு அங்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கத் தொடங்கியுள்ளனர்.

p92a.jpg

இந்த இரும்பு மீன்களை எப்படி உணவுப்பொருட்களோடு சேர்க்கிறார்கள் தெரியுமா? மீன்மீதுசில சொட்டுகள் எலுமிச்சைச் சாறை ஊற்றி காய்கறிகளோடு சேர்த்து  பத்து நிமிடம் வேகவைத்தால் இரும்புச்சத்து அந்த காய்கறிகளில் படிந்து விடுகிறதாம். காம்போடிய மக்களில் பெரும்பாலானோர் தினமும் இரும்பு மீனையும் சேர்த்தே சமைக்கிறார்கள். `எங்கள் மக்கள் சாப்பிடத் தொடங்கிய ஒரு வருடத்திலேயே கிட்டத்தட்ட 50 சதவிகித அளவுக்கு இரத்தச்சோகை பிரச்னை மக்களுக்கு தீர்ந்துள்ளது' என அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இரும்பை ஏன் மீன் வடிவத்தில் பயன்படுத்த வேண்டும் எனக் கேள்வி எழுகிறதா? முதலில், ஆய்வாளர்கள் இரும்புக் குண்டைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தனர். ஆனால், அந்நாட்டு மக்கள் அவ்வாறு பயன்படுத்துவதை விரும்பவில்லையாம். பிறகு, மீன்களை ராசியானதாகக் கருதும் மக்களிடையே அதன் மூலமே விழிப்புஉணர்வைப் புகுத்த எண்ணி, மீன் உருவத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பசியில் மீனைத் தின்றால் பல் போய்விடும் மக்கா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
புதிய தலைமுறை நம்புமா?
 
 

article_1486527978-.jpgஅந்த நாள் நினைவுகளில் மனம் நனைகிறது. எங்கும் பச்சை வண்ணக் கிராமங்களில், வீட்டு வளவுகளில் நெடிதுயர்ந்த பனை, தென்னை, மா, பலா, வாழை மரங்கள் நிறைந்திருந்தன. இவையே எமது கிராமங்களின் அரண்களாயின.  

வசந்த காலத்தில் விடியவிடியக் கூத்து, இசைக் கச்சேரிகள், கலை, விளையாட்டு நிகழ்வுகள் கோவில்களில் நடைபெறும். மக்கள் கோவில் வீதிகளில், ஓலைப்பாயில் ஒய்யாரமாக இருந்து இரசனையுடன் இவற்றினைப் பார்ப்பார்கள். 

இன்றோ சுட்டெரிக்கும் இரவுகளாகி விட்டன. பனை, தென்னை ஓலைகளால் வேய்ந்த மண்வீடுகளைப் போல், குளிர்சாதனம் பொருத்திய வீடுகள் ஈடாகுமா? அந்தக் குளுமைமிகு இன்ப இராச்சியம் எங்கே போயிற்று? எங்கள் உயிர்த்தாவரங்களும் வனப்பும் வாழ்வும் சரித்திரம் போலாயிற்று. அது நிஜம் என்று புதிய தலைமுறை நம்புமா? 

மனித மனங்கள் சூரிய வெப்பத்தைவிட, அதிகமாகக் கொதித்துக் கொண்டிருக்கின்றது. இயற்கையைத் தொலைத்து அரசியலால் அல்லாடும் இனம் நாம். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

களத்தில் இறங்கினால் துவம்சம்! #HBDBigShow

பிப்ரவரி(8)யில் பிறந்த பிரமாண்ட மனிதர்தான் 'பிக் ஷோ'. இவரின் உண்மையான பெயர் 'பவுல் டொனால்ட் வெயிட்'. இவரது பெயரில் இருக்கும் வெயிட் போதவில்லை என நினைத்த இவர் தனது பெயரை 'பிக் ஷோ'(Big show) என்று மாற்றியமைத்துக்கொண்டார். ஆன்ட்ரீ தி ஜெயின்ட் என்ற முன்னாள் மல்யுத்த வீரரின் ரசிகனாகிய இவரை, இவருடைய ரசிகர்கள் 'தி ஜெயின்ட்' என்று செல்லமாகப் பெயர்வைத்து அழைத்தனர். அவரது உருவச்சிலை அருகில் நின்று போஸ் கொடுத்திருக்கிறார் அவர். மல்யுத்தமே போலியானது, அதில் அடிவாங்குவது போல் நடிக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார் பிக் ஷோ. 200 கிலோ இருக்கும் இவருக்கு அடையாளம் அவருடைய அழகான ஃப்ரென்ச் தாடிதான். அதில்லாமல் இவரைப் பார்த்தால் பப்ளிமாஸ் குழந்தை போல்தான் இருப்பார். 

big show

போட்றா தகிட தகிட :

பார்க்க பிரமாண்டமாக இருந்தாலும் இவர் செய்யும் லூட்டிகளுக்கு அளவே இல்லை. 'தி கிரேட் காலி' என்பவர் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அவருடன் சேர்ந்து டாக் டீம் மேட்ச் விளையாடி ஜெயித்த குஷியில் இருவரும் டான்ஸ் ஆடுவது பார்ப்பவர்களைச் சிரிக்கவும் ரசிக்கவும் தூண்டியது. அதுவும் ஸ்பெஷல் என்னவென்றால் இவர்கள் ஆடுவது பஞ்சாப் மொழி பாடலுக்கு. இடுப்பை ஆட்டி ஆட்டி இவர் போடும் ஸ்டெப் அல்டிமேட்!

கிழி கிழி கிழி :

Big_Show_18110.jpg

முன்பெல்லாம் இவருடன் சண்டை போடும் சூழல் வந்தால் மல்யுத்த வீரர்கள் அனைவரும் பயந்து நடுங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் எல்லோரும் இவரை அடித்து துவம்சம் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள். அதைப் பொறுக்க முடியவில்லையென்றால் இவர் போட்டிருக்கும் ட்ரெஸ்ஸில் ஒரு பக்கத்தைக் கிழித்துக்கொள்வார். பொதுவாக இப்படி அடித்து விளையாடும்போது கோபம் வந்தால் யாருடன் போட்டியிட்டு சண்டை போடுகிறோமோ அவரைத்தான் அடித்துத் துவைக்கத் தோன்றும். ஆனால் இவருக்கோ இவரின் சட்டை மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை.

பிக் ஷோ ரிட்டன்ஸ் :

இவர் விளையாடும் விளையாட்டுக்கு கொஞ்சநாள் லீவ் எடுத்திருந்தார். பின் 2004 ஸ்மேக் டவுனில் மறுபடியும் ரீ-என்ட்ரீ கொடுத்தார். கொடுத்ததோடு இல்லாமல் சின்னப் பசங்களா சேர்ந்து விளையாடிய நேரமாகப் பார்த்து விளையாடும் அனைவரையும் வெளுத்து வாங்குவார். அரங்கில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆட்களையும் வெறித்தனமாக அடித்து வெளியே துரத்துவார். இத்தனைக்கும் அவர் அந்த மேட்ச்சிலே இல்லை. இப்போ எதுக்குடா இந்த வெளு வெளுத்த என்ற சந்தேகம் அங்கு உள்ள ரசிகர்களுக்கும் இருந்தது.

பிக் ஷோவைத் தூக்கியடித்த கோல்டு பெர்க் :

200 கிலோ கொண்ட இவரைத் தூக்குவது என்பது எளிதான காரியமில்லை. ஆனால் பிக் ஷோவிற்கு எதிரான ஓர் ஆட்டத்தில் கோல்டு பெர்க் என்பவர் எளிதாகத் தூக்கி ஸ்மேக் போட்டுவிடுவார். ஏனென்றால் அவர் அடிக்கும் வகையில் தூக்கியடித்தலும் ஒன்று. அதனால் இவருடைய தலையைப் பிடித்து அந்தரத்தில் தூக்கி மூன்று வினாடிகள் வைத்து இவர் ஸ்டைலில் ஸ்மேக் போட்டு மலையைச் சாய்த்துவிடுவார் கோல்டு பெர்க். பின் அந்தப் போட்டியினை வென்றும் விடுவார். அதைச் சற்றும் எதிர்பாராத ரசிகர்களுக்கு இவர் அடித்த விதம் மிகவும் பிடித்திருந்தது. 

ஏழு முறை சாம்பியன் :

46929_18049.jpg

கடந்த 1995-ல் தனது மல்யுத்தப் பயணத்தை ஆரம்பித்தார் பிக் ஷோ. 90-களில் பிறந்த குழந்தைகளுக்கு இவர் ஃபேவரைட் மல்யுத்த வீரர். இவருக்குப் பிடிக்கவில்லை என்றால் எந்த வீரராக இருந்தாலும் பயமின்றி எதிர்ப்பார். அதுவே இவருக்கு ரசிகர்களை ஈர்ப்பதற்கு வழிவகுத்தது. அதே சமயம் எதுவும் செய்யாமல் இருப்பவரிடமும் போய் வம்பிழுப்பார். விளையாட ஆரம்பித்தது முதல் இவர் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக வரும் ஆட்கள் அந்த பெல்ட்டை தட்டிச்செல்வது வழக்கம். அப்படி தரவரிசையில் இவர் அதை ஏழு முறை வென்றிருக்கிறார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

500 குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற அரியதோர் புகைப்படம்!

குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் ஒன்றுகூடி புகைப்படம் எடுத்துக்கொள்வது சாதாரண நிகழ்வுதான். ஆனால், சீனாவின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், குடும்பப் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்வதேசங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

5_China_Family_Photo.jpg

‘ரென்’ என்ற பரம்பரையைச் சேர்ந்த 25வது முதல் 31வது தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகப் படம் எடுத்துக்கொள்ள விரும்பினர். இதற்காக, குடும்ப உறுப்பினர்கள் ஐந்நூறு பேர் ஒரே இடத்தில் ஒன்று கூடினார்கள்.

அனைவரும் ஒரே படத்தில் தெரியவேண்டும் என்பதற்காக மலைச் சரிவு ஒன்றின் அடிவாரத்தில், இரண்டு நடைபாதைகளை ஆக்கிரமித்தபடி இவர்கள் அனைவரும் புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்தார்கள். 

அனைவரையும் நிற்கவைப்பதற்கே சுமார் அரை மணிநேரம் ஆனதாக புகைப்படக்காரர் அங்கலாய்த்துக்கொண்டார்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

பன்னீர்செல்வம் vs சசிகலா.. கலாய் வாட்ஸ்அப் காமெடிகள்! #OPSvsSasikala

வாட்ஸ்அப்

மிழகம் மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவும் நேற்று இரவில் இருந்து அலர்ட்டாக இருக்கிறது. மணிக்கு ஒரு முறை கள நிலவரம் மாறிக்கொண்டியிருக்கிறது.

 

_____________

கண்ணீர் கடிதம்:

விடுநர்:


ஓ. கண்ணீர் செல்வம்
தமிழகத்தின் நிரந்தர ”தற்காலிக முதல்வர்”,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை

பெறுநர்:

தமிழகத்தின் தற்காலிக “நிரந்தர ஆளுநர்”,
ராஜ் பவன், சென்னை

மதிப்பிற்குரிய ஐயா,

தமிழகத்தின் தற்காலிக “நிரந்தர முதல்வர்” ஆகிய நான், தமிழகத்தின் நிரந்தர “தற்காலிக முதல்வர்” ஆக விரும்புவதாலும் மற்றும் மேடம் சசிகலா தற்காலிக முதல்வர் ஆக விரும்புவதாலும் , தமிழகத்துக்கு தற்காலிகமாக “நிரந்தர முதல்வர்” ஒருவரை தமிழகத்தின் தற்காலிக “நிரந்தர ஆளுநர்” பதவி பிரமாணம் செய்து வைக்கும் வரையில் என்னுடைய தற்காலிக முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டி...

இப்படிக்கு,

ஓ.கண்ணீர் செல்வம்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

பெப்ரவரி - 08

 

1238: ரஷ்யாவின் விளாடிமிர் நகரை மொங் கோலியப் படைகள் எரித்தன.

 

1587 : இங்கிலாந்து அரசி முதலாம் எலிஸபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார்.

 

898varalaru-08-02-2016.jpg1622 : இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன் னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

 

1761 : லண்டனில் நில நடுக்கம் பதியப்பட்டது.

 

1849 : புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.

 

1900 : போவர் போர்: தென் ஆபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர்.

 

1904 : சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.

 

1924 : ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

1942 : ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஜேர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.

 

1942 : சிங்கப்பூரை ஜப்பான் ஆக்கிரமித்தது.

 

1952 : பிரித்தானிய அரசியாக இளவரசி 2 ஆம் எலிஸபெத் சம்பிரதாயபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டார். 

 

1963 : கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.

 

1974 : 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.

 

1989 : போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.

 

2005 : இஸ்ரேலும் பலஸ்தீனமும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன.

 

2010 : ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவினால் 172 பேர் உயிரிழந்தனர்.

 

2014 : சவூதி அரேபியா வின் மதீனா நகரில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீயினால் 15 யாத்திரிகர்கள் உயிரிழந்ததுடன் 130 பேர் காயமடைந்தனர்.

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சுத்தமாகக் கைகளைக் கழுவுவது எப்படி? #PhotoStory

கைகளைக் கழுவுவது

`சுத்தம் சோறு போடும்' என்பது பழமொழி. யதார்த்தத்தில், சுத்தமாக இருப்பதுதான் பலவகையான நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்கான முதல் வழி. அதிலும், கைகள் வழியாகத்தான் நோய்த்தொற்றுகள் அதிகம் உண்டாகின்றன. அதாவது, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கைகளின் மூலமாகத்தான் நோய்க் கிருமிகள் எளிதில் பரவும். எனவே, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். உணவு பரிமாறும் ஊழியர்கள் முதல் உடலின் மேல் அக்கறை கொண்டவர்கள் வரை அனைவருக்குமே இது பொதுவான ஒன்று. கைகளைத் துல்லியமாகச் சுத்தம் செய்யச் சில வழிமுறைகள்... 

* முதலில் இரண்டு கைகளையும் குழாய் நீரில் கழுவ வேண்டும். சூடான அல்லது வெதுவெதுப்பான நீர் என்றால் நல்லது. இது கிடைக்காத பட்சத்தில், குளிர்ந்த நீரில் கழுவலாம். சிறிது திரவ சோப் (Liquid Soap Or Handwash Lotion) எடுத்து உள்ளங்கையில் விடவும். கைகளைக் கழுவ திரவ சோப்பை எடுத்துக்கொள்வதே சிறந்தது என்பதை நினைவில்கொள்ளவும்.

கைகளைக் கழுவுவது - 1

* இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து நன்கு தேய்க்கவும். இரண்டு கைகளிலும் சோப்பை நன்கு பரவச்செய்ய வேண்டும். இரண்டு கைகளிலும் சோப் பரவியுள்ளதா எனச் சரிபார்க்கவேண்டியது அவசியம். 

 

கைகளைக் கழுவுவது - 2

* வலது கை உள்ளங்கையால் இடது புறங்கையை நன்கு தேய்க்க வேண்டும். பின்னர் அதையே இடது கை உள்ளங்கையால் வலது புறங்கையைத் தேய்க்கவும். அந்த இடங்களிலும் சோப் நன்றாகப் பரவியுள்ளதா என்று சரிபார்க்கவும். 

 

கைகளைக் கழுவுவது - 3

* இரண்டு கைகளையும் கோர்த்து விரல்களுக்கு நடுவிலும் சோப் செல்லும்படியாக விரல் இடுக்குகளை நன்கு தேய்க்க வேண்டும். முன்னும் பின்னும் தேய்த்து நன்கு பரவச்செய்ய வேண்டும். 

 

கைகளைக் கழுவுவது - 4

* விரல்களின் பின்புறத்தை உள்ளங்கையில் தேய்க்க வேண்டும். இதனால் விரல்களின் பின்புறத்திலெல்லாம் சோப் செல்லும்.

 

கைகளைக் கழுவுவது - 5

* சுழல் முறையில் தேய்க்க வேண்டும். ஒரு கையின் உள்ளங்கையை மறு கையின் கட்டை விரலால் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். அப்படியே இரண்டு கைகளுக்கும் செய்ய வேண்டும். 

 

கைகளைக் கழுவுவது - 6

* சுழற்சி முறையை வைத்து இரண்டு உள்ளங்கைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். விரல்களை வைத்து உள்ளங்கையைத் தேய்க்க வேண்டும். 

 

கைகளைக் கழுவுவது - 7

* ஒரு கையை வைத்து மற்றொரு கையின் மணிக்கட்டை சுழல் முறையில் தேய்க்க வேண்டும்.

 

கைகளைக் கழுவுவது - 8

* நன்கு தேய்த்த பிறகு, குழாய் நீரில் இரு கைகளையும் கழுவ வேண்டும். சோப் முழுமையாக நீங்கும்படிக் கழுவ வேண்டும். அதுவும் இளஞ்சூடான நீராக இருப்பது நல்லது. 

 

கைகளைக் கழுவிய பிறகு உலரச்செய்ய வேண்டும். சுத்தமான துண்டால் நன்கு துடைக்க வேண்டும். துடைத்த துண்டை திரும்பவும் உபயோகிக்கக் கூடாது. 

இப்படிக் கைகளை முறையாகச் சுத்தம் செய்வதே சிறந்தது. இதன் மூலம் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

-செ.சங்கீதா,

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஓபிஎஸ்... நேற்றும் இன்றும்: தெறிக்கவிட்ட மீம்கள்!

 

 
 
1_3129841f.jpg
 
 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வரும் வேளையில், தமிழக பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ், தன் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி மிரட்டப்பட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மக்கள் விரும்பினால் ராஜினாமாவைத் திரும்ப பெறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் #ஓபிஎஸ், #OPannerselvam #Panneer #IsupportOPS #Sasikala #ADMK #OPSvsSasikala என்ற ஹேஷ்டேகுகளில் தங்களின் கருத்துக்களையும், மீம்களையும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட மீம்களின் தொகுப்பு

9_3129834a.jpg

8_3129836a.jpg

5_3129837a.jpg

11_3129823a.jpg

10_3129821a.jpg

 

12_3129824a.jpg

pan_3129872a.jpg

4_3129835a.jpg

13_3129825a.jpg

14_3129826a.jpg

15_3129827a.jpg

16_3129828a.jpg

19_3129855a.jpg

17_3129829a.jpg

2_3129830a.jpg

18_3129831a.jpg

19_3129832a.jpg

6_3129838a.jpg

7_3129839a.jpg

 
 

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ஓபிஎஸ்... பாட்ஷாவாக மாறிய மாணிக்கம்!

 

 
படம்: இலக்கியோன்
படம்: இலக்கியோன்
 
 

சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழக பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று அதிரடி பேட்டியளித்தார் . மக்கள் விரும்பினால் ராஜினாமாவைத் திரும்ப பெறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் #ஓபிஎஸ், #OPannerselvam #Panneer #IsupportOPS #Sasikala #ADMK #OPSvsSasikala முதலான ஹேஷ்டேகுகளில் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். #OPannerselvam என்ற ஹேஷ்டேக் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இணையவாசிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Siva Prakash

சொகுசு கார்கள் நிரம்பி வழிகிறது போயஸ் கார்டனில்.. சோத்துக்கே திண்டாடும் தொண்டர்களால் நிரம்பி வழிகிறது ஓ.பி.எஸ் வீடு. மக்கள் யார் பக்கம் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையா என்ன?

Karthikeyan Kpk ‏@KpkKarthikeyan

#OPannerselvam பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால், அதிமுக பொருளாளர் நீக்கம் கூட சட்டப்படி தவறுதான்.

vijaykumar ‏@vijay_vijillu

#OPannerselvam பதவி ஆசையில தற்போதைய முதல்வர மிரட்டுன இவங்க, ஏன் அதே ஆசைல முன்னாள் முதல்வர எதாவது பண்ணிருக்கக்கூடாது?!

Murugan Manthiram

நமக்காக இல்லவே இல்ல. அவங்க சுயநலத்திற்காகவே அடிச்சுக்கிறாங்க.

Manimaran Thendral ‏@ilayathendral

தமிழகத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து மக்களுக்காக பணியாற்றினால் அதை சதிவேலை என்று கூறுகிறது அதிமுக தலைமை. #OPannerselvam

danyg ‏@danysang

சேவல் சின்னம் தூசி தட்டப்படுமா...?

அப்பறம் இலை கைப்பற்றப்படுமா..!! #OPannerselvam

காளையன் ‏@murattukkaalai

கலகம் செய்பவர்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள் அமைதியாகிவிட, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் என நினைத்தவர் திமிறிக்கொண்டு நிற்கிறார்.

Krishna Kumar ‏@KKadyar

இருளை நீக்கிய OPSன் அந்த மெரீனா பேச்சு..

அம்மாவின் ஆன்மா.. மக்களின் முதல்வர்

விவிகா சுரேஷ் ‏@vivika_suresh

பன்னீர், ஸ்டாலின பார்த்து சிரித்தது ஒரு குத்தமாம். #இந்தம்மா கட்சி நடத்தறாங்களா இல்ல 'சிரிச்சா போச்சு' ரவுண்டு நடத்தறாங்களா..

Stephen ‏@SteveNews1

மிருகத்திற்கும் மனிதனுக்குமான வித்தியாசத்தை எளிய மொழியில் தெளிவுபடுத்திய தோழர் ஓபிஎஸ், சிரிப்பு சிற்பி.

Arun Karthik ‏@arunkarthik2

அம்மாவோட ஆன்மா சொல்ல சொன்னதுன்னாரு பாரு, அந்த நொடியே அமாவாசை செத்து நாகராஜசோழன் பொறந்துட்டாரு!!

indhu ‏@indhunachad

சந்தனப்பொட்டும், குங்குமப்பொட்டும் வச்சுகிட்டு, குனிஞ்சு கும்பிட்டு, சின்னம்மா வாழ்கனு சொம்பு தூக்குற அடிமைனு நெனச்சியாடா #OPS டா.

Arunkumar ‏@ArunkumarTNR

தைப் பூசத்தில் முதல்வர் பதவி ஏற்கத் தயாராக இருந்த சசிகலாவிற்கு மை பூசினார் #ஓபிஎஸ்.

Manoj Krishnan ‏@Manokriz

ஒரு நாயகன், உதயமாகிறான்

ஊரார்களின் இதயமாகிறான்....

Raja King ‏@theKingu93

தமிழகத்திற்கான எல்லா மாற்றங்களும் மெரினாவிலேயே விதைக்கப்படுகிறது #MarinaSpeech

Ramesh SP ‏@amtherockfan

CMஆ இருக்கும் போது இத சொன்னாக்கூட பதவிய தக்க வச்சிக்க இப்படி சொல்றாருன்னு சொல்லலாம். ஆனா ரிசைன் பண்ணிட்டு உண்மைய உடைச்சாரே அவர்தான் மனுஷன்.

iniyavan

சினிமாவில் டபுள் ஆக்ட், ட்ரிபிள் ஆக்ட்டை பார்த்திருக்கிறேன். முதன் முறையாக ஒரு ஆன்மாவின் ட்ரிபிள் ஆக்டை இப்போதுதான் பார்க்க முடிகிறது. மாண்புமிகு அம்மாவின் ஆன்மா. அது சசியிடம் ஒன்று சொல்கிறது. ஓபிஎஸ்ஸிடம் ஒன்று சொல்கிறது. தீபாவிடம் ஒன்று சொல்கிறது. அய்யோ! எது ஒரிஜினல் அம்மாவின் ஆன்மா எனத் தெரியாமல் குழம்புகிறானே தமிழன்!

மகிஷா ‏@Magecabletv

செய்தித் தொலைக்காட்சிகள் அரசியல்வாதிகளின் கருத்தை கேட்பதை விட்டுவிட்டு மக்களின் கருத்தைக் கேட்கவேண்டிய நேரம் இது.. #OPannerselvam

பெ. கருணாகரன்

நெருக்கடி மன அழுத்தத்துக்கிடையிலும் ஓபி எஸ்ஸின் புன்னகை வழியும் முகம் அவரது உணர்ச்சி மேலாண்மையைக் காட்டுகிறது. போயஸ் கார்டன் தான் பதட்டத்தில் அதிர்கிறது. உணர்ச்சி மேலாண்மை உள்ள ஒருவர் முதல்வராய் நீடிப்பதே தற்போது நாட்டுக்குத் தேவை.

Prakash Ramasamy

அவுட் ஆக்கினதுக்கு அப்புறமும் சிக்ஸர் அடிச்ச ஓபிஎஸ் தான்.. '.மேன் ஆப் த மாட்ச்'

Shahjahan R

இப்போ பன்னீர் மனச்சாட்சிப்படி பேசிட்டார், வீரமா எதிர்த்து நிற்கிறார்னு சந்தோஷப்படறீங்க. எரியற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளின்னு பாக்கறீங்கன்னு புரியுது. தாராளமா செய்ங்க. வேண்டாம்னு சொல்லலே. ஆனா, இதே பன்னீர்தான் சசிகலாவை அதிமுக பொதுச் செயலராக்க முன்மொழிந்தார் இல்லையா? அதிமுக கூட்டத்துக்கே வராத சசிகலாவை வீட்டுக்குப் போய்ச் சந்திச்சு, பொதுச் செயலராக்கற தீர்மானத்தைக் கொடுத்தார், சசிகலா முதல்வர் ஆவதற்காக ராஜினாமா கடிதமும் கொடுத்தார் இல்லையா?

மனசாட்சி, வீரம்கிறதெல்லாம் ஏதோ அப்பப்போ செலக்டிவா தலைகாட்டிட்டுப் போற விஷயம் இல்லை. அது எப்பவும் கூடவே இருக்க வேண்டிய விஷயம். மெரினா பீச்சில் பன்னீரின் சோக முக நாடகத்தைப் பாராட்டி மகிழ்வதற்கு முன்னால் இந்த விஷயத்தையும் ஞாபகம் வச்சுக்குங்க. மத்தபடி ஒரு விஷயத்துல சந்தோஷம். இப்படியே அவரை இன்னும் உசுப்பி விட்டா, அந்த 75 நாள் மர்மங்களும், இன்னபிற சதிகளும் வெளியே தெரிஞ்சா நல்லது.

aravindsaga ‏@aravindsaga15

துரோகிகளின் பின்னால் போகாதீர்கள் - சசிகலா.

அப்புறம் ஏன் இன்னும் நின்னுட்டு இருக்கீங்க, வாங்க போலாம்.

இடி ‏@ideemutti

தனி ஒருவன் நினைத்து விட்டால்... தமிழகமே பின்னால் நிற்கும். #OPSvsSasikala

ரஞ்சித் ‏@gudduranjith

#OPSvsSasikala ஓபிஎஸ் பின்னாடி யாருமே இல்லை -நவநீதகிருஷ்ணன். அங்க காஷ்மீரே கலவர பூமியா இருந்தப்போ பியூட்டிபுல் காஷ்மீர்னு பாடுனது நீங்கதானே?

அம்மு ‏@itsNayagi

கங்கா சந்திரமுகியா மாறும்போது, மாணிக்கம் பாட்ஷாவா மாற மாட்டாரா? #ops #OPSvsSasikala

Vigneswari Suresh

ஜெ'வ பிடிக்காதவங்க மனசுல கூட பன்னீர் இடம் பிடிச்சுட்டார். ஜெ'வ பிடிக்கும்ன்றவங்க மனச கூட சசியால வெல்ல முடியல.

ThaaruMaaru Arul ‏@arulgud

ஜெயலலிதாவின் ஆத்மா இன்னிக்கு தான் சாந்தி அடையும். #பன்னீர் கெத்த காமிச்சிட்டாரு.

சிவபாலன் ‏@sivabalan1934

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் எங்கயோ போய்ட்டிங்க பன்னீர் செல்வம்.

Hari ‏@HariHariramana

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்....

இதை பன்னீர் ஐயா வாய்ஸ்ல கேட்கணும் போல இருக்கே..!

Mirnalini ‏@Mirnalini_Miru

முதல்வர் ஆனதுக்கு அப்புறமா ப்ரஸ்மீட் வச்சுக்கலாம்னு இருந்தாங்க. ஆனா ஓவர் நைட்ல தெருவுக்கு கொண்டு வந்துட்டார் நம்ம பன்னீர்.

RaRa ‏@Rara0001

#ஜெயலலிதா மரணத்திற்கு நீதிவிசாரணை -பன்னீர். இத அவங்க செத்த மறுநாள் சொல்லியிருந்தா நான் நம்பியிருப்பேன்.

ஜெ.ஜெயபிரகாஷ் ‏@JprakashJp3

சசிகலா என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. பன்னீர் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்.

இடி ‏@ideemutti

ஆனாலும் இத்தனை குழப்பங்கள் அதிமுகவில் இருந்தும் எந்தவொரு குறுக்குசாலும் ஓட்டாமலிருப்பதற்கு திமுகவிற்கு மிகப்பெரிய பாராட்டுகள். #OPSvsSasikala

Raja hussain ‏@rajahussain83

தாமரையோடு தண்ணீர்தான் ஒட்டாது, பன்னீர் ஒட்டுமாமே!

எமகாதகன் ‏@Aathithamilan

48 மணி நேரத்தில் ஒ.பன்னீர் செல்வத்திற்கு நடந்தது என்ன -சசிகலா.

#75 நாட்கள் ஜெவிற்கு நடந்தது என்ன, ஒரு வார்த்தையாவது அதைப்பற்றி கூறியதுண்டா?

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

போலி இறுதிச் சடங்கு

மறுப்பிறவியை அடையாளப்படுத்தும் போலி இறுதிச் சடங்கு

  • தொடங்கியவர்

"பன்னீரின் தியானத்துல இண்டர்வெல் விடுறோம்!" - 2025ன் சூப்பர் ஹிட் படம்

படம் இப்படித் தொடங்குகிறது...

சைரன் சத்தங்கள் காதைக் கிழிக்க வரிசையாக வண்டிகள் மருத்துவமனைக்குள் நுழைகின்றன. ஒருவர் ஓடி வந்து அந்த இனோவா காரின் கதவைத் திறந்துவிடுகிறார். முழுக்கைச் சட்டையை முழங்கை வரை மடித்தவிட்டபடியே பரபரப்பாக இறங்குகிறார் செல்வம். ஊதா நிற புடவையில் படியிறங்கி வரும் கலாவைப் பார்த்து அமைதியாக ஒதுங்கி நிற்கிறார். 

"அம்மா..." என்று உடைந்த குரலில் தொடங்கும் செல்வத்தை, "ஒன்றுமில்லை, சீக்கிரம் சரியாகிவிடும். இப்போ யாரும் பார்க்க வேண்டாம்..." என்று சைகையிலேயே அடக்குகிறார் கலா. மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூட்டம், கூட்டமாக திரண்டு அழுகிறார்கள். கேமராக்களும், மைக்குகளும் பரபரக்கிறது. செல்வத்தைக் கடந்து, படியேறும் கலா யாரும் பார்க்காத வகையில் ஒரு புன்னகையை வெளிப்படுத்துகிறார்.

இந்த முதல் காட்சியே அடுத்த மூன்று மணி நேரமும் இதயத்தை படபட வைக்கும் படமாகத்தான் இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்திவிடுகிறது. ஆனால், படம் முடிந்தும் பல நாட்கள் படபடப்பு குறையாமலேயே இருப்பதை இயக்குநரின் வெற்றி என்று பாராட்டுவதா? இல்லை திரைக்கதையின் வலிமை என சிலாகிப்பதா என்றுதான் தெரியவில்லை.

பல அரசியல் நாடகங்களைக் கடந்து முதல்வராக பதவியேற்கிறார் செல்வம். ஆனால், கலாவின்  கைப்பாவையாகத்தான் ஆரம்பத்தில் செயல்படுகிறார். இதற்கிடையே, எதிர்பாராவிதத்தில் இளைஞர்களின் எழுச்சி பெரும் புரட்சியாக வெடிக்கிறது. இந்த சமயத்தில் செல்வம் டில்லிக்கு டூர் போகும் காட்சியும், கலாவின் நடவடிக்கைகளும் கொஞ்சம் காமெடித்தனமாகப் பார்க்கப்படுகிறது. சீரியஸாகவே போகும் படத்தின் இந்தப் பகுதி ரசிகர்களுக்கு சிறிது ஆசுவாசத்தைக் கொடுக்கிறது. ஆனால், அதே காட்சியில் செல்வத்துக்கும், கலாவுக்கும் மேலாக காவி உடையணிந்த ஒரு வில்லன் இருப்பதை ரசிகர்கள் தெளிவாக உணரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் எதிர்பாரா க்ளாஸ் ட்விஸ்ட். அரசியல் பேசியவர்கள் மிக்சர் சாப்பிடுவதும், பீட்சா சாப்பிடுபவர்கள் அரசியல் பேசுவதுமாக இருக்கும் அந்தக் காட்சி ரசிகர்களுக்கான தீபாவளி விருந்தாக அமைகிறது. அதேசமயத்தில், காட்சியின் இறுதியில் நடத்தப்படும் அந்தக் கலவரத்தில் அடிக்கப்படும் அடிகள் நேரடியாக ரசிகர்களின் தலையில் இறங்குவது போன்ற அந்த 3டி எஃபெக்ட்டை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். 

பன்னீர்செல்வம் சசிகலா தமிழக அரசியல் படம்

செல்வத்தின் டீக்கடை ஃபிளாஷ்பேக்கும், கலாவிடம் அவருக்கு இருக்கும்  நட்பும் தன் பதவியை கலாவுக்காக விட்டுக் கொடுக்கும் அளவுக்குப் போகிறது. இனி கலாதான்  முதல்வர், செல்வம் துணை முதல்வர் என்ற ரீதியிலான காட்சிகள், ரசிகர்களின் நகத்தைக் கடிக்க வைக்கிறது. ஆனால், "தனியொருவனாய் நின்று தமிழகத்தைக் காப்பேன்..." என்று சூளுரைத்து மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறார் செல்வம். அடங்கி, ஒடுங்கி, வளைந்து, நெளிந்து இருக்கும் செல்வம் அந்த அரைமணி நேர தியானத்துக்குப் பிறகு நிமிர்ந்து நடக்கும் அந்த இடைவேளைக் காட்சி உலக சினிமா வரலாற்றில் நிச்சயம் இடம்பிடிக்கும். ரசிகர்கள் பாப்கார்ன் வாங்கக் கூட வெளியே போகாத அளவிற்கு இடைவேளைக் காட்சி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே படத்தின் இரண்டாம் பகுதி துவங்குகிறது. முதல் பாதியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் "தேமே" என இருக்கும் செல்வம், இரண்டாம் பகுதியில் மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார். செல்வத்தின் நடிப்புக்கு முன்னால், என்ன செய்வதென தெரியாமல் திருதிருவென விழிக்கும் கலாவின் பல காட்சிகள் பரிதாபமாக இருக்கின்றன. ஆனால், கலா மீது பரிதாப படத்தான் ஒருவருமில்லை. "அவர் எப்படி சிரித்தார் தெரியுமா?", " எதிரி பேசும்போது அமைதியாக இருந்தார்", "எதிரியோடு கைகோத்துவிட்டார்" என்று செல்வத்துக்கு எதிராக கலா பேசும் பெரும்பாலான வசனங்கள் ஶ்ரீஹரிகோட்டாவில் விடப்படும் பட்டாசு ராக்கெட்டுகளாகவே இருக்கின்றன.

அம்மாவின் உருவ ஒற்றுமையோடு வரும் தீ, எதிரிக் கட்சித் தலைவராக வரும் ஸ்லீடன், கலாவின் மூளையாக செயல்படும் மொடராசு, கன்னாபின்னாவென்று கருத்து பேசும்  மைகோ , அந்த எம்.எல்.ஏ, இந்த அமைச்சர் என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் படத்தின் தெளிவைக் குழப்புகிறார்கள். அதுவும் மைகோ வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு சிரிப்பு நிச்சயம். மொத்தப் படத்தின் ட்விஸ்ட்களுக்குப் பின்னாலும் இருக்கும் காவி சாமியாரின் உழைப்பு திரையில் தெளிவாகத் தெரிகிறது. திரைக்கு முன்னும் அவர்கள் தெளிவாக வெளிப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை பல ரசிகர்கள் வெளிப்படுத்தியதை மறுக்க முடியாது. 

இது சஸ்பென்ஸா, த்ரில்லரா, ஹாரரா, சைக்கோவா எனப் படத்தை எந்த வரையறைக்குள்ளும் கொண்டு வரமுடியவில்லை. நடக்கும் நுண் அரசியலை இன்னும் பல நுட்பமான காட்சிகளின் மூலம் ரசிகர்களுக்கு விளக்கியிருக்க வேண்டிய பொறுப்பு இயக்குநருக்கு இருக்கிறது. அதை அவர் இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும். பரபரவென பறக்கும் காட்சிகளைத் தொடர்ந்து கிளைமேக்ஸில் திடீரென தொடரும் என்று போட்டிருப்பது டிவி சீரியல் யுக்தியாக இருப்பது நெருடல்.

பாலியல் வன்புணர்வு ஆளாக்கப்பட்டு கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்ட நந்தினி, மாணவர் எழுச்சி, எண்ணூர் எண்ணெய், விவசாயிகள் தற்கொலை, என பல முக்கிய விஷயங்களை ரசிகர்களை மறக்க வைத்தது படத்தின் வரவு என்பதால், படம் வெற்றிபெற்றாலும் அது மனிதத்தின் ஆகப்பெரும் தோல்வியாகவே இருக்கிறது. மொத்தப் படத்தின் இயக்குநர் யார்.. தயாரிப்பாளர் யார்.. என்பதன் பின்னணியில் ஒளிந்திருக்கிறது ரசிகர்களுக்கான மிகப் பெரும் மர்மம். 

ஒவ்வொருவரும் தெளிவாகப் பார்க்க வேண்டிய இந்தத் திரைப்படம்... அரசியல் பாடமும் கூட!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மாம்பழத்துக்குள் வண்டு வருவது எப்படி?

 
 
vandu_3129803f.jpg
 
 
 

மாம்பழத்துக்குள் வண்டு பார்த்திருக்கிறீர்களா? அந்த வண்டு மாம்பழத்துக்குள் எப்படி வந்தது? முழுதாக மூடியுள்ள மாம்பழத்துக்குள் அது உயிர் வாழ்வது எப்படி?

உண்மையில் மாம்பழத்தின் உள்ளே வண்டு புகுவது கிடையாது. மாம்பூ பருவத்தில் இருக்கும்போது அதில் வண்டு முட்டை இட்டுவிடும். மாம்பூ காயாகி, கனியாக மாறும். அதற்குள் அந்தப் பூவுக்குள் இருந்த முட்டையும் தன் அடுத்தடுத்த பருவத்தை முடித்துக்கொண்டு சிறிய வண்டாக மாறியிருக்கும்.

அதெல்லாம் சரி, மாம்பழம் முழுவதுமாக மூடியிருக்கும்போதும். அதற்குள் உள்ள வண்டு எப்படி வாழ்கிறது? சுவாசித்தல் என்பது உணவுப் பொருளைச் சிதைத்து ஆற்றலை உற்பத்தி செய்யும் ஒரு செயலியல் நிகழ்வுதான். இந்த உதாரணம் வண்டுக்கு ரொம்ப பொருந்தும். சில செயல்கள் ஆக்ஸிஜன் உதவியுடனும் சில நேரங்களில் உதவியில்லாமலும் நடக்கும். மாம்பழத்துக்குள் உள்ள வண்டு ஆக்ஸிஜன் உதவியில்லாமலேயே பழச் சர்க்கரையைச் சிதைக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் சக்தியைக் கொண்டு அது வாழ்கிறது.

ஒரு வேளை மாம்பழத்தை யாரும் சாப்பிடவில்லையென்றால் வண்டு என்னா ஆகும்? ஒன்றும் ஆகாது. எப்படியும் அடுத்த சில நாட்களில் மாம்பழம் அழுகிவிடும். அப்போது வண்டு சாதாரணமாக வெளியே வந்துவிடும்

http://tamil.thehindu.com

 

  • தொடங்கியவர்

குழந்தையின் முத்தம் ... அப்பாவின் நேசம்... பெண் கவிஞர்கள் தொடங்கி வைக்கட்டும் விடுமுறை நாளை!

கவிதை

இன்று விடுமுறை நாள். அலுவலக பரப்பில்லாமல் சற்றே ரிலாக்ஸான மனநிலையில் எல்லோருமே இருப்போம். அந்த மனநிலையை நெகிழ்வாக்கும் கவிதைகள் படிக்க நீங்கள் தயாரா? பெண்கள் நுழைந்து சாதிக்காத துறையே இல்லை என்று சொல்லி விடலாம். இலக்கியத்திலும் பல நூற்றாண்டுகளாய் பெண்களின் அளப்பரிய பங்களிப்பை மறுக்க முடியாது. அதன் தொடர்ச்சி இன்றும் அந்தப் பயணம் நீள்கிறது.

இன்றைக்கு கவிதைகள் எழுதும் பெண்கள், இதுவரை எழுதாமல் விடப்பட்ட பல புதிய விஷயங்களைத் துணிவோடு தொடுகின்றனர். அதனால் அந்தக் கவிதைகளை வாசிப்பது புதிய அனுபமாக இருக்கிறது. அதுபோல, எழுதப்பட்ட கவிதைகளில் சில இதோ:

கவிதை


உமா மகேஸ்வரி:

ஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது
தோசைகளின் விட்டம்.
விளிம்பு தாண்டாதது அவற்றின் வட்டம்.
வடிவம் மாறாதது தோசைகள்
வாழும் வாழ்தலற்று
அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்
ஆண்டாடு காலமாய் அப்படியே'

- 'வெறும்பொழுது' தொகுப்பிலிருந்து.

பேருந்து

அ.வெண்ணிலா:

எதிர் இருக்கை கம்பி பிடித்து
இருக்கையின் நுனியிலேயே
அமர்ந்திருக்கிறாய்
புடவை நுனி
உரசி விடாதிருக்கப் பிரயத்தனப்பட்டு
முது சாய்க்காமல் இருக்கிறாய்
இயல்பாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்ள
முகம் பார்த்துப் பேச முயற்சிக்கிறாய்...
உன் கூச்சத்தில் சிக்கி
மூச்சுவிட முடியாமல்
சிரமப்படுகிறது நம் நட்பு.
இயல்பின்றி நிற்கும் நம்மைப்
பார்த்துச் சிரிக்கவோ என்னவோ
இடையில் உட்கார்ந்திருந்தது - உன்
தோழி என்ற வார்த்தை...

- 'நீரிலலையும் முகம்' தொகுப்பிலிருந்து.

அப்பா

தமிழச்சி தங்கப்பாண்டியன்

எப்பொழுதும் போலவே
இந்தக் கோடையிலும்
எனக்காகக் காத்திருக்கும்
எல்லாமும் இருக்கின்றன
என் பிறந்த ஊரில்...
ஒரு மாலை நேரத்து மாரடைப்பில்
பாராமல் எனைப் பிரிந்த
என் அப்பாவைத் தவிர...

- 'எஞ்சோட்டுப் பெண்' தொகுப்பிலிருந்து.

குழந்தை

சந்திரா:

குழந்தை

பொம்மைகளை விற்க
பொம்மைக்காரன் குட்டிக்கரணம் அடிக்கிறான்
பொம்மைகளை விடுத்து
பொம்மைக்காரனே வேண்டுமென்று கேட்கிறது குழந்தை.

#

வாராதவர்களுக்கான மழை

வாராதவர்களுக்கான காத்திருப்பில்
கடைசியாக மழை வந்தது
வழிந்த கண்ணீரை அழித்து தூய்மைபடுத்தியது.
இனி வருபவர்கள்
மழையோடு போகட்டும்
நான் மழையில் வளர்ந்த
அன்பின் செடியைப் பூக்க வைப்பேன்
அது என்னை அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் செல்லும்
வழியெங்கும் நினைவின் மழையின்
பசுமை துளிர்க்க துளிர்க்க
காட்டின் பாடலைப் பாடிச் செல்வேன்
நிலம் சிலிர்க்கும்
ஆகாயம் நட்சத்திரங்களை உதிர்க்கும்
என்னுடன் நானிருப்பேன் எப்போதும்...

- 'வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்' தொகுப்பிலிருந்து.

கண்ணாடித் தொட்டி

மனுஷி:

மழைக்குழந்தை

வெளியில் கிளம்பும்போது
காலைக் கட்டிக்கொண்டு அடம்பிடிக்கும்
சிறு குழந்தையைப் போல
வெளியில் செல்ல விடாமல்
கொட்டித் தீர்க்கிறது மழை
வேறு வழியே இல்லை
நனைவதைத் தவிர

#

கடைசி நம்பிக்கை

உடைந்துபோன கண்ணாடித் தொட்டி நான்.
உடைந்த சில்லுகளை எடுத்து வைத்து
உருக்கொடுக்கிறாய்.
என் கடைசி நம்பிக்கை
நீ.

- 'முத்தங்களின் கடவுள்' தொகுப்பிலிருந்து.

குழந்தை


கனிமொழி.ஜி:

எங்கெங்கும் குழந்தைகள்

நீல நிறத்தில் டோரிமான் ஸ்டிக்கர் கேட்டு வாங்கி,
விரல்களால் வருடும் தருணம்
சட்டென முகத்தில் ஒளியேற்றிக் கொண்டவன்...
நெருங்கத் தொடுத்து அன்போடு கொடுத்த
வெளிர்பூச்சரத்தை வாங்குபோது
அந்நிறத்தை பிரதிபலிப்பவள்...
பணம் செலுத்தி பருத்த பைகளை
தளர்வாய் வாங்கித் திரும்ப,
அழைத்துத் தந்த எளிய அன்பளிப்பில்
பெருத்த மலர்ச்சி காட்டுபவள்...
தலை கவிழ்ந்து நடந்த
எல்லாரும் தாத்தாவென அழைக்கும் தன்னை
தன் பெயர் கொண்டு விளிக்கும் பின்புற குரலை
திரும்பி சட்டென பற்றிக்கொள்பவர் என....

எங்கெங்கும் குழந்தைகள்.

- 'மழை நடந்தோடிய நெகிழ் நிலம்' தொகுப்பிலிருந்து.

மழை, குழந்தை உள்ளிட்ட சில விஷயங்களைப் பற்றி எழுதப்படும் கவிதைகள் எப்போதுமே நமது விருப்பதுக்கு உரிய ஒன்றாகி விடும். பெண்கள் எழுதிய இந்தக் கவிதைகள், இன்றைய விடுமுறை பொழுதைத் தொடங்கி வைக்கட்டும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கண்ட இடத்துல கிறுக்கி வைங்க! #WisdomWednesday #Motivation

நாம் ஏதாவது ஒரு விஷயத்த செய்யலாம்னு நினைக்கும் போதோ அல்லது செய்யப் போகும் போதோதான், அதைச் செய்யவே முடியாத அளவுக்கு முட்டுக்கட்டைகள் வந்து விழும். உடனே, நாமும் இதுதான் சமயமென்று அந்த வேலைக்கு முழுக்கு போட்டுவிடுவோம். ஜிம்முக்கு போறது, யோகா பண்றது, டெய்லி வாக்கிங், வாரம் ஒரு புக் படிக்கறதுனு ஆரம்பிச்சு முட்டுக்கட்டை போட்டு நிக்கற பல விஷயங்களைச் சொல்லலாம். அதுபோல் நடக்காமல் இருக்கணும்னு தான் நானும் நினைக்கிறன். ஆனா, முடியலையேனு சொல்றவரா நீங்க? இந்தா புடிங்க நச்சுனு நாலு டிப்ஸ்!

Motivation Wednesday

உடைத்துக் கொள்ளுங்கள்!

கைகால்களை அல்ல. உங்கள் இலட்சியத்தை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, வாக்கிங் போக முடிவு செய்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அதனை, முதல் நாள் காலை 6 மணிக்கெல்லாம் எந்திரிக்கணும். அடுத்த நாள் வாசல எட்டி பார்க்கணும். அடுத்த நாள் பத்து அடிகளாவது நடக்கணும், என்பது போல பிரித்துக் கொள்வது உசிதம். ஏனென்றால், பெரிதாக எதைப் பார்த்தாலும், உடனே மயங்கி விழும் ஆட்கள் நாம். எனவே, சின்ன சின்ன ஸ்டெப்ஸ் ரொம்ப நல்லது. அதே நேரம் ஒரு பகுதி வெற்றியானதும் அடுத்ததிற்கு நகர்ந்திடுங்கள். இதுபோல் சின்னதாக கோல் வைக்கும் போது இன்னொரு நன்மை என்னவென்றால் ஒரு பகுதி முடிந்ததும், அப்பாடா! சக்சஸ் என ஒரு நிம்மதி வரும். அந்த நிம்மதியை போன்ற எதுவும் உங்களை அடுத்த கட்டத்திற்கு போக தூண்டாது. சின்ன சின்ன வெற்றிகள்தான் பெரிய வெற்றிகளுக்கான ஊக்க மருந்து.

அதே நேரம், அதே இடம்!

டைட்டிலே எதோ சினிமா பட தலைப்பு போல இருக்குல்ல?!. எந்த ஒரு இலக்கை நோக்கிய செயலையும், நாம் தினமுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளியிலோ தொடர்ந்த வண்ணம் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது! உதாரணத்திற்கு நாம் சாப்பிட ஒதுக்கும் நேரம் போல. அதே போல் அந்த வேலைகளை முடிந்த வரை ஒரே இடத்திலோ அல்லது ஒரே போன்ற சுற்றுச் சூழலிலோ செய்து பழகுங்கள். தினமும் ஒரே நேரத்தில் படிப்பது ரொம்ப நல்லது. ஈசியா மனப்பாடம் ஆகும்னு நம்ம பிரண்டு ஸ்கூல் படிக்கும் போது சொன்னது ஞாபகம் வருதா? என்னது, படிச்சதுலாம் கூட ஞாபகம் வருதா?! நீங்க வேற லெவல் பாஸ்!

Motivation Wednesday

சுறுசுறுப்பு சூப்பரப்பு!

நம்ம உடல் அமைப்பு எப்போதும் நமக்கு ஊக்கம் அளிக்கிற விஷயம். நாம் ஜிம்முக்கு சென்று சிக்ஸ் பேக் தான் வைக்க வேண்டும் என்று இல்லை. லேசாக வாக்கிங் ஜாகிங் போன்ற எளிதான உடற்பயிற்சிகள் செய்து கொஞ்சமே கொஞ்சம் பார்க்க நன்றாக இருப்பதுபோல் ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்தாலே போதும். நம்ம கான்பிடன்ஸ் லெவல், தானா ஏறும். அப்படி இல்லாமல் நமக்கே நம் தோற்றத்தை பார்த்துப் பரிதாபம் வருவதுபோல் இருக்கக்கூடாது. இதை விட அவ்வப்போதைய உடற்பயிற்சி நமக்கு தருவது சுறுசுறுப்பு எனும் எனர்ஜி. இந்த சுறுசுறுப்புதான் நமக்குள்ளே எரிந்து கொண்டு இருக்கும் லட்சிய நெருப்பு அணையாமல் இருக்க ஆக்சிஜனாக உள்ளது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!

Motivation Wednesday

கண்ட எடத்துல கிறுக்கி வைங்க!

உங்க நோக்கம் அல்லது எந்த இலட்சியத்தை நோக்கி போறீங்களோ, அதைச் சின்ன சின்ன நோட்களாக அங்கங்கே எழுதி ஒட்டி வைங்க. உங்க வீட்டு ஃபிரிட்ஜ், பீரோ, டி.வி மேல் என எங்கெல்லாம் உங்கள் பார்வை அதிகம் விழுகிறதோ அங்கெல்லாம் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் ஒட்டும் இடங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கண்களுக்கும் தெரியுமாறு ஒட்டுங்கள். அப்போதுதான், நாமே அந்த விஷயத்தை கைவிட்டு விடலாம் என்று நினைத்தாலும் அவர்களின் கலாய்த்தலுக்குப் பயந்தாவது அந்த விஷயத்தை செய்து முடிக்கத் தோன்றும். 

 மேலே சொன்ன நாலு வழிமுறைகளை மட்டும் ஃபலோ பண்ணுங்க, வெற்றி உங்களைத் தேடி வரும்!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்
உண்மையின் ஊற்று சிற்றறிவை விசாலமாக்கும்
 
 

article_1486618055-hhhu.jpgஎத்தனை கோடானுகோடி உயிரினங்கள் இருப்பினும், அவை ஒவ்வொன்றும் புதுப்புது வார்ப்புகள். ஹே, இறைவா! எதனைப் படைத்தாலும் நீ உன் கைங்கரியத்தினை, ஆழுமையினை, கலை நுட்பத்தை இம்மியளவும் பிசகாமல் எங்ஙனம் சிருஷ்டிக்கின்றாய்? 

எமக்கு மிகச்சிறிய கருமங்களைக்கூடச் சிறப்பாகச் செய்ய, எவ்வளவு கால அனுபவம் தேவைப்படுகிறது. எங்களை கணப்பொழுதும் எப்படி செதுக்கிக்கொண்டே இருக்கின்றாய்?   ஆஹா, பெருமானே! நீயே பெரும் சிற்பி. நீயோ எழுதுவதுமில்லை; படிப்பதுமில்லை. ஆனால், இந்தப் பேரண்டத்தையே ஆட்சி செய்கின்றாய்; அசைக்கின்றாய். 

உண்மையின் ஊற்றே எமது சிற்றறிவை விசாலமாக்கும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பஞ்சபூதங்கள் மிரட்டும் உலகின் அதிக ஆபத்து நிறைந்த இடங்கள் இவைதான்..!

லையில் இருந்து கடல் வரை இயற்கை மிகவும் அழகானது. அதற்கு இணையாக ஆபத்தும் நிறைந்தது. உலகின் அதி ஆபத்தான, இயற்கை சீறும் இடங்கள்தான் இவை..! 

தண்ணீர்:

2012ம் ஆண்டில் மட்டும் கடலில் 1051 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக சர்வதேச கடல் அமைப்பு தெரிவித்துள்ளது. சுனாமிகள் பெரும்பாலும் பசிஃபிக் பெருங்கடலில்தான் ஏற்படுகின்றன. கிட்டத்தட்ட 71%. நார்வேயில் அமைந்துள்ள 'சால்ட்ஸ்ட்ராமென் ஸ்ட்ரெய்ட்' கடல்தான் உலகத்திலேயே மிக அதிகமான மற்றும் வேகமான நீரோட்டத்தைக் கொண்ட கடல். இங்கு உருவாகும் நீர்சுழற்சி அதீத வேகத்திலும், மிகுந்த ஆழத்திலும் உருவாவதால் இது மிகவும் ஆபத்தான இடமாகக் கருதப்படுகிறது. நிறைய ஆராய்ச்சிகளுக்குப் பின் ஓரளவுக்கு கடலின் நீரோட்டத்தை கணித்து, நீரில் மூழ்காத படகில் பயணம் செய்ய மட்டும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீறினால், கடல் மாதாவுக்கு உயிர் அர்ப்பணம்தான். 

சால்ட்ஸ்ட்ராமென் ஸ்ட்ரெய்ட் கடல் ஆபத்து

இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் மாலத்தீவுகள் அழிந்துவரும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 'The emphemeral isles', அதாவது குறுகிய காலமே இருக்கக்கூடிய தீவு என்று பொருள். மாலத்தீவுகள் இந்த நிலையை எட்ட, மாறிவரும் தட்ப வெப்ப நிலைகளே காரணம். 

வானம்:

”மின்னல் ஒரே இடத்தில் மின்னாது” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதையெல்லாம் நம்பாதீங்க. வெனிஸுலாவில் இருக்கும் மாரகைபோ (maracaibo) ஏரிதான் உலகிலே வெளிச்சமான இரவை காண்கிறது. 9 மணி நேரம் வரை தொடர்ந்து மின்னல்கள் மின்னிய வரலாறு இதற்குண்டு. இந்த இடம்தான் உலகின் “லைட்னிங் கேப்பிட்டல்” என்கிறார்கள். “மின்னல்கள் கூத்தாடும்” பாடலை இங்கே படமாக்கியிருக்கலாம்.

மாரகைபோ மின்னல்

காற்று:

ஆப்பிரிக்காவில் நிறைய அபாயகரமான நதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 'லிம்னிக் எரப்ஷன்' எனப்படும் புவிமாற்றத்தால் ஏற்படக்கூடிய நதிகளான இவை, மிகவும் ஆபத்தானவை. அதாவது நதியின் அடியில் இருந்து புகைமண்டலம் வெளிப்படும் அதில் கார்பன் டை ஆக்ஸைடு இருக்கும். நையோஸ் நதி மற்றும் கிவு நதி இந்த லிம்னிக் எரப்ஷனால் பாதிக்கபட்டிருக்கின்றன. 980-களில் ஏற்பட்ட இந்த எரப்ஷனால் 3,500 கால்நடைகள் உள்ளிட்ட பல ஆயிரம் உயிரினங்கள் பறிபோயிருக்கின்றன. இங்கு வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடை குழாய்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுருந்தாலும், இன்றளவும் அங்கு பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகிறன. கிவு நதியில் கார்பன் டை ஆக்ஸைடுடன் மீத்தேன் வாயுவும் வெளிகுயாவதால் இந்த வாயுவை உறிஞ்சி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளனர்.

புயல், சூறாவளி இரண்டும் காற்றின் அடிப்படையில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள். பொதுவாக மிகவும் வேகமாக சுழன்று வரும் புயலோ அல்லது சூறாவளியோ அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் சுழன்று வருகயில் அதன் வேகம் தணிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும். எனினும் புயல்களின் வீரியத்தை எப்போதும் 100% சரியாகக் கணித்துவிட முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுபோன்ற புயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது, கரீபியன் தீவுகள். இதனால் அங்குள்ள மரங்கள், காடுகள், அதில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே பாதிக்கபட்டுள்ளன.

2016ம் ஆண்டில் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக வாண்டாவ் அறிவிக்கபட்டுள்ளது. புயல், எரிமலைச்சீற்றம், பூகம்பம் என அனைத்து பேரிடர்களாலும் இந்த நகரம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூமி:

நிலநடுக்கம், மற்ற பேரிடர்களைவிட சற்றே அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. பூமியிம் மேல் ஓடு, நகரும் தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் ஒன்றுக்கு ஒன்று எதிரான திசையில் நகரும் போது நில அதிர்வலைகள் ஏற்பட்டு நிலநடுக்கம் ஏற்படும். ஃபிலிப்பைன்ஸ் நகரில் 10ல் 8 நகரங்கள் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

1556ல் சைனாவில் உள்ள ஷான்சி நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 80,0000 மக்கள் உயிரிழந்துள்ளார்கள். வட அமெரிக்காவில் இருக்கும் சான் ஆன்டிரியாஸ் நகரமும் இந்த டேஞ்சரஸ் பட்டியலில் அடங்கும்.

நெருப்பு:

தனாகி எரிமலை

மலையின் அடியில் இருக்கும் தட்டுகள் எதிர் திசையில் திரும்புவதால் மாக்மா வெளிப்படுகிறது. கடந்த 400 வருடங்களில் சுமார் 2,00,000 மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தியோப்பியாவில் உள்ள தனாகி நகரம்தான் உலகத்திலேயே எரிமலையால் அதிகம் பாதிக்கப்பட்ட, அதிக ஆபத்து நிறைந்த இடம். உலகத்தின் மிக வெப்பமான இடமாக கருதப்படும் இந்த நகரம், எரிமலை சீற்றத்தால் நீர்வளம் குறைந்து உப்பரித்து காணப்படுகிறது. இப்போது இங்கு யாரும் வசிக்கவில்லை. 1815-ம் ஆண்டு சம்பாவா தீவுகளில் உள்ள தம்போரா எரிமலை சீற்றத்தால் 70,000 மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலே சொன்ன இடங்களில் ஏதாவது ஒன்றில் நாம் பிறந்திருந்தால்..?! சிக்னலில் நிற்பதற்கே 'ச்சே ஊரா இது?' என்று சலிப்பவர்கள், இப்போது உங்கள் ஊரை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்... 'தப்பிச்சோம் சாமி' என்று பெருமூச்சு வரும்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

படிக்கும் வயதில் பாடம் சொல்லும் 18 வயதான பேராசிரியர்

18 வயதான நபர் ஒருவர் துணை பேராசியராக தெரிவாகியுள்ள சம்பவம், அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

englishonlineindusnews_5898932d4e22e_459

ஹொங்கொங்கை பூர்விகமாகவுடைய, மார்ச் டியான் என்ற 18 வயதான இளைஞர், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் துணை பேராசியராக பதவியேற்றுள்ளார்.

மார்ச் டியான் சிறு வயது முதலே சிறப்பாக கற்று, கடந்த 2007ஆம் ஆண்டு அவரின் 9 வயதிலேயே, கணிதத்தில் முதல் தர நிலை மற்றும், புள்ளிவிபரவியலில் இரண்டாம் தர நிலைகளைக் கற்று, கல்வியியலுக்கான பொதுக் கற்கையை  இங்கிலாந்தில் முடித்துள்ளார். ஆனால் பொதுவாக மாணவர்கள் 17 வயதில்தான் இதற்கான நுழைவுப் பரீட்சைகளை எழுதுவார்கள். 

htrg-1486523474481.jpg

இந்நிலையில், அவர் அதே ஆண்டில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் இணைந்து, 4 ஆண்டுகள் கற்கையை மேற்கொண்டு, அவரது முதுகலை பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு தற்போது உலகின் முதல் 10 முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக கடமையாற்றுகிறார். 

அத்தோடு தான் ஒரு மேதை என அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றும், தான் இயல்பான கற்றல் நடவடிக்கைகளின் ஊடாகவே அனைத்து பரிட்சைகளையும் வெற்றி கொண்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

கணவருக்கு காதலர் தினத்தில் இப்படியும் பரிசளித்து அசத்தலாம்!

காதலர், காதலர்தினம்

காதலின் கரம் பிடித்து பல காத தூரம் நடந்து வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பலருக்கும் இந்த ‘காதலர் தினமே’ ஸ்பெஷல் கிப்ட் தான். காதல்திருமணம் செய்தவர்களிடம் ஒரு சர்வே எடுத்தால் அவர்கள் இப்படியும் சொல்லக் கூடும். ‘‘வேற வழியில்லாம மாட்டிக்கிட்டேன். இவன கட்டிக்கிட்டு வாழறது எவ்வளவு கஷ்டம்னு அப்பவே தெரிஞ்சிருந்தா?’’ என்ற வசனங்கள்தான் பதிலாகக் கிடைக்கும். 

அதையும் தாண்டி வாட்ஸ் அப், பேஸ் புக் என உலகம் முழுக்க அரட்டை அடித்து பழகியவர்களுக்கு பக்கத்தில் தன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னோர் உயிர் பற்றிய எண்ணமே உலர்ந்துபோய் விட்டது. தனது இணை என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதுகூட இரண்டாம் பச்சம் ஆகிப்போனது. என்ன சாப்பிட்டான் என்பது முதல், அடுத்த நிமிடம் என்ன செய்யப் போகிறான் என்பது வரை அவனது முகநூல் தோழனுக்குத் தெரிந்த அளவுக்கு அவன் துணைக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. இந்த முரண்பாடு பல இடங்களில் கணவன் மனைவி உறவை இறுக்கமாக மாற்றி வருகிறது. 

இந்த இறுக்கமான மனநிலை, சின்னப் பிரச்னைகள் வந்தால்கூட ஒருவரைப் பற்றிய வெறுப்பை மற்றவர்கள் மனதில் அதிகம் வளரும் சூழல் உருவாக காரணமாகின்றன. ஆண்-பெண் உறவில் இருவருமே சுய சார்பு உள்ளவர்களாக இருப்பதால் மனக்கசப்பு அதிகரிக்கும் போது குடும்ப உறவில் நம்பிக்கையற்று பிரிவது இயல்பாகி வருகிறது. வாழும் காலத்தில் உறவுகளுக்கான முக்கியத்துவம் அளித்து பழைய நினைவுகளைத் திரும்பிப் பார்த்தால் இது போன்ற பிரிவுகளுக்கு வாய்ப்பிருக்காது. 

காதலர்

நினைவுகளைத் திரும்பிப் பார்க்க இந்த காதலர் தினம் எல்லாக் காதலர்களுக்கும் தன்னுள் ஒரு பொக்கிஷத்தைக் கொண்டே மலர்கிறது. காதலில் எத்தனை ஆண்டுகள் கடந்து வந்திருந்தாலும் பழைய நினைவுகளைப் பரிசளிக்கும்போது அவை மீண்டும் உங்கள் உறவைப் புதுப்பிக்கிறது. 

* பழைய நினைவுகளைப் பரிசாக்க நீங்கள் கடைகளைத் தேடி ஓட வேண்டியதில்லை. மன அலமாரியை தூசு தட்டுங்கள். 

* காதலித்த காலத்தில் வாங்கித் தந்த பரிசுப் பொருட்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் இன்னும் இருக்கும். எவ்வளவு கோபம் வந்தாலும் நிகழ்வுகளை அழிப்பதற்கான அழிப்பான் கண்டுபிடிக்கப்படவில்லையே. அந்தப் பரிசை புதுப் பொலிவூட்டுங்கள். இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப அதை புதிதாக்கலாம். அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் கூட இன்றைய பிரேமில் அழகுபடுத்தலாம். 

* காதலித்த காலத்தில் அடிக்கடி சந்தித்த இடத்துக்கு இந்த காதலர் தினத்தில் செல்ல சஸ்பென்ஸ் திட்டம் போடுங்கள். அந்த இடத்தில் உங்களுக்கு இடையில் அமரும் தனிமை உள்ளே பூட்டி வைத்த காதலை கரை தாண்டிய வெள்ளமாய் உணர வைக்கும். மனம் பேசாத பேச்செல்லாம் சேர்த்து வைத்துப் பேசும். மனம் விட்டுப் பேசுங்கள். மனக் கசப்புகள் காணாமல் போகும். 

* காதல் காலத்தில் மனம் நெகிழ்ந்த பல நிகழ்வுகளைத் தொகுக்கலாம். கடிதம், கவிதை எதுவாகவும் இருக்கலாம். பழைய நினைவுகள் உலர்ந்த மனதில் பசுமை பரப்பும். எழுத்து வடிவில் மாற்றிக் கொடுங்கள். 

காதலர்

* காதலித்த கால விருப்பங்கள் இப்போது மாறியிருக்கலாம், ஆனாலும் அந்த காலகட்டத்தில் விரும்பிய விஷயங்களை பட்டியலிட்டு அதையே பரிசாகவும் வழங்கலாம். அதில் குச்சி மிட்டாய், குருவி ரொட்டி கூட இருக்கலாம். வழக்கமாக கொடுக்கும் ரோஜா பூவாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒரு சில வண்ணத்தில் ரோஜா கொடுக்கக்கூடாது என்றெல்லாம் புதுப்புது 'ரூல்ஸ்' சொல்கிறார்கள். அதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

* இறுகிய மனதில் பெய்யும் மழை போல ஏதேதோ சந்தர்ப்பங்களில் தெரியாமல் செய்த பிழைகளுக்கான மன்னிப்பையே இந்த ஆண்டுக்கான காதல் பரிசாகவும் அள்ளிக் கொடுக்கலாம்.

* எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் எந்த விஷயத்துக்கு அடுத்தவர் மனம் இறங்குவார்கள் என்பது அனுபவத்தில் தெரிந்திருக்கும். அதையே இந்த ஆண்டின் காதல் பரிசாக அளித்து நெகிழ வைக்கலாம். அது முத்தமாகவும்கூட இருக்கலாம். 

* மன வெளி எங்கும் கொஞ்சும் மழை போல சேர்த்து வைத்த காதலை எல்லாம் கொட்டித் தீர்ப்பதற்கான பயணங்களைத் திட்டமிடலாம். பிடித்த இடத்துக்கு இருவரும் பயணிக்கலாம். இந்தக் காதல் பயணம் வாழ்வையே பிரஷ்ஷாக மாற்றிவிடும். 

* உங்களது இணை, பல ஆண்டுகளாக தனது விருப்பங்களை உங்களது காதில் கொட்டிக் கொட்டி சலித்துப் போயிருக்கலாம். அப்படியான விருப்பங்களைச் செயல்படுத்த இது நாள் வரை உங்களது ஈகோ மனத்தடையாக இருந்திருக்கும். அந்த ஈகோவுக்கு காதலர் தினத்தில் விடுமுறை விட்டு இணையின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். 

* ஊடலே காதலை மேலும் அழகு செய்யும் என்பது வள்ளுவர் நமக்கு சொல்லியிருக்கும் பாடம். ஆம் ஊடலில் இருந்து வெளி வந்து காதல் செய்துபாருங்கள்... அடடா வாழ்க்கை அவ்வளவு அழகென்று புரியும். 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

60 நாள்களில் சின்னம்மா ஆவது எப்படி? - கையேடு

தோனிக்கு அடுத்து கோஹ்லி, ஆடிக்கு அடுத்து ஆவணிங்கிற மாதிரி அம்மாவுக்கு அடுத்து சின்னம்மாதானே பாஸ் வரணும்னு முடிவு பண்ணி அ.தி.மு.க. அவங்களோட முதல்வரா சசிகலாவைத் தேர்வு செஞ்சுட்டாங்க. சி.எம் ஆகுறதுக்கு சின்னத் தகுதிகூட இல்லாத சின்னம்மாவை எப்படி பாஸ் முதலமைச்சரா தேர்த்தெடுத்தீங்கனு தமிழ்நாடே அ.தி.மு.க-வைப் பார்த்து கேள்வி கேட்டுகிட்டு இருக்கு. இந்த நேரத்துல வருங்கால `நிரந்தர முதல்வர்` சின்னம்மா ஆகிறதுக்கு ஸாரி `சின்னம்மா மாதிரி` ஆகிறதுக்கு என்னவெல்லாம் வழி இருக்குனு மல்லாக்கப் படுத்து மரணமா யோசிச்சோம். அதன்படி பார்த்தா சின்ன மாண்புமிகு, சின்ன இதய தெய்வம், சின்ன புரட்சித் தலைவி, சின்னம்மா சசிகலா ஆவதற்கான சின்ன சின்ன இன்ஸ்டன்ட் ஏழு வழிகள் இதோ.... .இந்த ஆர்டிக்களை எழுதியதே ஒரு மன்னார்குடிக்காரர் என்பது நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும். 

சின்னம்மா

* சின்னம்மாவா வாழணும்னா அதுக்கு முக்கியமா நீங்க பேசவே கூடாது. ஆமா உங்களால் மூச்சுவிடாம முன்னூறு நிமிடம் பாடவே முடிஞ்சாகூட ஒரு வார்த்தையும் பேசக் கூடாது. 'ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்'னு ஊரே உங்களைப் பார்த்துப் பாடுற அளவுக்குத்தான் நீங்க இருக்கணும். அப்படியே தப்பித்தவறி பேசுனாகூட யாருக்கும் கேட்காத அளவுக்கு அமைதியாத்தான் பேசணும். சின்னதா சொல்லணும்னா பேசிப் பேசி அரசியல் பண்ண தமிழ்நாட்டுல சின்னம்மா மாதிரி இருந்தா, பேசாமத்தான் அரசியல் பண்ணணும்.

* உலகமே அழிஞ்சாலும் சில சேனல்ல டான்ஸ் புரோகிராம் போடுற மாதிரி என்ன நடந்தாலும் முகத்தை ஒரே மாதிரி வெச்சிக்கணும். நடிகர் திலகம் சிவாஜி மாதிரி முகத்துல நவரசத்தையும் காட்டாம அமைதியா சாம்பாரை மட்டும் காட்டினா போதும். இப்ப இருக்கிற சின்னம்மா சசிகலாகிட்ட இருந்து நீங்க கத்துக்க வேண்டிய மிக முக்கியமான பாடம் இதுதான். சின்னதா சொல்லணும்னா, தேவைக்கு அதிகமா ரியாக்‌ஷன் கொடுக்கிற சிவாஜி கணேசன் இல்லை, ரியாக்‌ஷனே கொடுக்காத பவர் ஸ்டார். வீ வான்ட் லெஸ் எமோஷன்.

சின்னம்மா

* உங்களை எந்த நேரத்துல பார்த்தாலும் இப்பத்தான் தூங்கி எழுந்திரிச்சு இருப்பாங்கனு சொல்ற ரேஞ்சுக்குத்தான் உங்க முகம் இருக்கணும். இல்லைனா நிற்கிறப்பகூட தூங்கிக்கிட்டே இருக்கிற மாதிரிதான் முகத்தை வெச்சுக்கணும். `கண்ணைக் காட்டு போதும்'னு உங்க வருங்காலத் தொண்டர்கள் எல்லாம் நீங்க எப்பதான் முழிச்சு பார்ப்பீங்களோன்னு நினைக்கிற அளவுக்கு எப்பவும் தூக்கக் கலக்கத்தோடதான் இருக்கணும். சின்னதா சொல்லணும்னா விஷாலுக்கு ஒரு படத்துல தூங்குற வியாதி வருமே அந்த மாதிரி இருக்கணும்.

*`சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா'னு ஃபீல் பண்ணி எப்பவும் உங்க மனசுல இருக்கிறதை அப்படியே வெளிய சொல்லிடக் கூடாது. ஏன்னா நீங்க சின்னம்மா ஆகிறதுக்கான முக்கியமான வழியே மனசுல இருக்கிறதை மறைக்கிறதுதான். நீங்க என்ன நினைக்கிறீங்கனு உங்களைச் சுற்றி இருக்கிற யாருக்குமே தெரியக் கூடாது. ஏன் சில சமயம் உங்களுக்கே தெரியக் கூடாது. சின்னதா சொல்லணும்னா, உங்க மனசுல என்ன இருக்குனு யாருமே புரிஞ்சிக்க முடியாத அளவுக்குத்தான் நடந்துக்கணும். சின்னம்மா ஆவதற்கான முழு முதற் தகுதியே இதுதான்.

சின்னம்மா

* நீங்க எதாவது  முடிவு பண்ணீங்கனா அதை எப்பவும் நேரடியா நீங்களே சொல்லக் கூடாது. வேற யாராவது ஒருத்தங்களை வெச்சு மறைமுகமாத்தான் சொல்லணும். எப்படி பன்னீர்செல்வம் சின்னம்மாவை பொதுச்செயலாளர் ஆகக் கூப்பிட்டாரோ, அதே பன்னீர்செல்வம் அதே சின்னம்மாவை முதல்வர் ஆகக் கூப்பிட்டாரோ அதே மாதிரிதான் உங்க ஆசை எல்லாத்தையும் மத்தவங்க மூலமாவே சொல்ல வைக்கணும். சின்னதா சொல்லணுமா நீங்க ஆசைப்படணும்னாலும் நீங்கதான் முடிவு பண்ணணும், அவங்க ஆசைப் படணும்னாலும் நீங்கதான் முடிவு பண்ணணும்.

* சின்னம்மா ஆகுறதுக்கு மிக முக்கியமான தகுதின்னா, அது கண்டிப்பா இதுவாத்தான் இருக்கும். உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் பண்றது எல்லாத்தையும் அப்படியே திரும்பப் பண்றதுதான். அவங்களுக்குப் பச்சைப் புடவை பிடிக்கும்னா உங்களுக்கும் பச்சைப் பிடிக்கணும், அவங்க கொண்டை போட்டா, நீளமான பொட்டு வச்சா நீங்களும் அதையே பண்ணணும். நீங்க நீங்களா இல்லாம உங்க ஃப்ரெண்டாவே மாறிடணும். சின்னதா சொல்லணும்னா ஃப்ரெண்டுக்காக நீங்கள் ஃப்ரெண்டாகவே நீங்கள்!

சின்னம்மா

* எப்படி எல்லோரும் ஏதாவது பெருசா சாதிச்சதும் என்னோட வெற்றிக்குக் காரணம் இவங்கதான் அவங்கதான்னு சொல்வாங்களோ அதே மாதிரி நீங்களும் முன்னாடி வந்து டயலாக் பேசணும்னா அதுக்குக் கண்டிப்பா உங்க குடும்பம் உங்ககூட எப்பவுமே இருக்கணும். எப்படி சின்னம்மா அவங்களோட  பெரிய ஃபேமலிகூட ஒண்ணாவே இருக்காங்களோ அப்படித்தான் நீங்களும் உங்க ஃபேமலிகூட ஒண்ணா இருக்கணும். சின்னதா சொல்லணும்னா `எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை லாலலா...'னு பாடுற மாதிரி ஒற்றுமையா இருக்கணும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

பெப்ரவரி - 09

 

1822 : புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை ஹெயிட்டி  முற்றுகையிட்டது.

 

1825: அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 4 வேட்பாளர்களில் எவருக்கும் பெரும்பான்மையான தேர்தல் கல்லூரி வாக்குகள்  கிடைக்காததால் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையினால் ஜோன் குயின்ஸி அடம்ஸ் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

 

899varalaru.jpg1885 : முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.

 

1895 : அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஜி. மோர்கன் கரப்பந்தாட்ட (volleyball)   விளையாட்டை அறிமுகப்படுத்தினார். கரப்பந்தாட்டம் தற்போது இலங்கையின் தேசிய விளையாட்டாகும். 

 

1897 : பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

 

1900 : இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

 

1900 : டேவிஸ் கிண்ண டென்னிஸ் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

 

1904 : ரஷ்ய - ஜப்பானிய யுத்தத்தில் போர்ட் ஆர்தர் சமர் ஆரம்பித்தது.

 

1942 : ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

899Volleyball2.jpg1962 : ஜமெய்க்கா சுதந்திரம் பெற்றது.

 

1965 : வியட்நாம் போரில் ஐக்கிய அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.

 

1969 : போயிங் 747 விமானத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது.

 

1971 : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 6.4 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

1971 : சந்திரனிலிருந்து திரும்பிய அப்பலோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமியை அடைந்தது.

 

1975 : சோவியத் யூனிய னின்  சோயூஸ் 17 விண்கலம் 29 நாள் பயணத்தின் பின் பூமிக்குத் திரும்பியது.

 

1986 : ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கி.மீ. தூரத் தில் வந்தது.

 

1991 : லித்துவேனி யாவில் சுதந்திரத்துக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.

 

1996 : ஐரிஷ் குடியரசு இராணுவம் தனது 18 மாத யுத்த நிறுத்த உடன்பாட்டினை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

 

2001 : அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு அருகில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கியொன்று, ஜப்பானிய மீன்பிடி பயிற்சிக் கல்லூரியொன்றின் கப்பலுடன் தற்செயலாக மோதியதால் கப்பலிலிருந்த 9 பேர் உயிரிழந்தனர். 

 

2016 : ஜேர்மனியில் இரு பயணிகள் ரயில் மோதிக்கொண்டதால் 12 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 85 பேர் காயமடைந்தனர்.

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

7.30 மணிக்கு ரிசல்ட் இருக்கும் போல #OneMinuteSketch

 

RA_2A_14398.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.