Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கடத்தப்பட்ட சிறுமியைக் காப்பாற்றிய விமானப் பணிப்பெண்!

விமானப் பணிப்பெண்

லஸ்கா ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார் 49 வயது ஷீலா பெர்டரிக். பணி செய்யும் இடத்தில் கனிவோடு நடந்துகொள்வதில் சக பணியாளர்களிடமிருந்து வேறுபட்டு நிற்பவர்.

இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் சிட்டில் நகரத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தில் தன் பணியை இன்முகத்துடன் செய்துகொண்டிருந்தார். அப்போது, 14 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மீது பெர்டரிக்கின் கவனம் சென்றது. அந்தச் சிறுமி அருகே அமர்ந்திருக்கும் நபர் கோட், சூட் என டிப் டாப்பாக இருக்க, சிறுமியோ பழைய உடைகளை உடுத்தியிருந்தாள். இதுவே முதல் சந்தேகத்தை பெர்டரிக்கு உண்டாக்கியது.  

குளிர்பானம் கொடுப்பதுபோல சென்று அந்தச் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்தார் பெர்டரிக். ஆனால் அருகில் இருந்த கோட் நபர் சிறுமியிடம் பேச விடாமல், பெர்டரிக் கேட்கும் கேள்விகளுக்கு இவரே பதில்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். சிறுமியின் முகமும் வாட்டமாக இருந்தது. இவற்றையெல்லாம் வைத்து, இங்கு ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார் பெர்டரிக். அதனால், கோட் நபர் வேறு பக்கம் திரும்பியிருந்த நேரத்தில், அந்தச் சிறுமியிடம் 'கழிவறைக்கு வா' என்பதை ஜாடையாக சொல்லிவிட்டு, சிறுமி வருவதற்கு முன் பெர்டரிக் கழிவறைக்குச் சென்று, ஒரு பேப்பரில், "நீ ஏதேனும் ஆபத்தில் இருக்கிறாயா? உனக்கு உதவி ஏதும் தேவையா?" என எழுதி வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார். பிறகு, கழிவறைக்குச் சென்ற சிறுமி, பேப்பரில் எழுதியிருப்பதைப் படித்ததும், "அந்த நபர் என்னைக் கடத்திக்கொண்டு செல்கிறார். எனக்கு உதவி தேவை" எனப் பதில் குறிப்பை எழுதிவிட்டு, வெளியேறியிருக்கிறார்.

 

 

பெர்டரிக் திரும்பவும் கழிவறைக்குச் சென்று சிறுமியின் பதிலைப் படித்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். உடனே அங்கு நடந்தவற்றை விமானிகளுக்குத் தெரிவித்தார். அவர்கள், விமானம் சென்றடையும் நகரமான சான் பிரான்சிஸ்கோ காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். விமானம் தரையிறங்கியதும், அங்கு காத்திருந்த காவலர்கள் அந்தச் சிறுமியைக் கடத்திய நபரைக் கைது செய்து அவளை மீட்டனர்.

''ஏதேனும் குற்றச் சம்பவங்கள் கண்ணில் பட்டால் அதனை, காவல்துறைக்குத் தெரியப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை'' என்று செய்தியாளார்கள் சந்திப்பில் கூறினார் பெர்டரிக்.

பயணிகளின் தேவைகளை மட்டுமல்ல, அவர்களின் பாதுகாப்பும் எங்களின் பொறுப்புதான் என செயலில் காட்டிய பெர்டரிக்குக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்!

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
உற்சவத்துக்குத் தயார்...
 

article_1486622956-IMG_6829.JPG

இன்றும் நாளையும் நடைபெறவுள்ள வருடாந்த நவம் பெரஹரா உச்சவத்தை முன்னிட்டு, கொழும்பு 02, கங்காராம விஹாரையில், யானைகள் தயார் நிலையில் இருப்பதைப் படங்களில் காணலாம்.

இந்த உச்சவத்தின் போது, பாரம்பரிய நிகழ்வுகள் பல இடம்பெறவுள்ளன. (படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்ஷண)

article_1486622975-IMG_6867.JPGarticle_1486622986-IMG_6875.jpgarticle_1486623001-IMG_6892.jpgarticle_1486623013-IMG_6923.jpgarticle_1486623024-IMG_6927.JPGarticle_1486623034-IMG_6931.jpg

 

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சீகல்ஸ் கடற்பறவைகள்: அச்சுறுத்தும் அழகு

கடற்கரைகளின் ஒரு அங்கமாக இருக்கும் சீகல் என்கிற அழகான கடற்பறவைகள், பிரிட்டனின் கடலோர நகரவாசிகள் சிலருக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளன.

  • தொடங்கியவர்
கைட்­சேர்பிங் விளை­யாட்டில் ஈடு­பட்ட பராக் ஒபாமா
 

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவும் பிரிட்­டனின் மிகப் பெரிய கோடீஸ்­வ­ர­்களில் ஒருவரான வேர்ஜின் குழும நிறு­வ­னத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்­சனும் கைட்­சேர்பிங் விளை­யாட்டில் ஈடு­பட்­டனர். 

 

22251958405-01-02---Copy-copy.jpg

 

கரி­பியன் பிராந்­தி­யத்­தி­லுள்ள, ரிச்சர்ட் பிரான்­ச­னுக்குச் சொந்­த­மான பிரத்­தி­யேகத் தீவொன்றின் கடற்­ப­கு­தியில் இந்த நீரியில் விளை­யாட்டில் இவர்கள் ஈடு­பட்­டனர்.

 

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து கடந்த 20 ஆம் திகதி ஓய்வு பெற்ற பராக் ஒபாமா (55),  தனது மனைவி மிஷெல் ஒபாமா சகிதம் கரி­பியன் தீவு­க­ளுக்கு உல்­லாசப் பயணம் மேற்­கொண்டார். 

 

22251_52-copy.jpg

 

இச்­சுற்­று­லா­வின்­போது ரிச்சர்ட் பிரான்­ச­னுக்குச் சொந்­த­மான மொஸ்­கிட்டோ தீவிலும் ஒபாமா தம்­ப­திகள் தங்­கி­யி­ருந்­தனர். 

 

இந்­நி­லையில், பராக் ஒபா­மாவும் ரிச்சர்ட் பிரான்­ஸனும் கைட்­சேர்பிங் விளை­யாட்­டிலும் ஈடு­பட்­டனர்.  பராக் ஒபாமா, தலைக்­க­வசம் அணிந்த நிலையில், கைட்ஸ் சேர்­பிங்கில் ஈடு­ப­டும்­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை ரிச்சர்ட் பிரான்சன் வெளி­யிட்­டுள்ளார். 

 

22251_958276-01-02-copy.jpg

 

முன்னாள் ஜனா­தி­பதி என்ற வகையில், அவரைச் சூழ அதிக பாது­காப்பு இருந்­தது. ஆனால், பராக் உண்­மை­யி­லேயே ஓய்வை அனு­ப­வித்து, இதில் ஈடு­பட முடிந்­தது' என ரிச்சர்ட் பிரான்சன் தெரி­வித்­துள்ளார்.

 

பராக் ஒபாமா ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த காலத்தில் அவர் நீரியல் விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வதை பாது­காப்புத் தரப்­பினர் தடுத்­தி­ருந்­தனர் எனவும் பிரான்சன் குறிப்­பிட்­டுள்ளார். 

 

22251_960151-01-02-copy.jpg

 

கைட்­சேர்­பிங்கில் ஈடு­ப­டு­வது தொடர்பில் பராக் ஒபா­மா­வுக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தற்­காக இரு நாட்கள் செல­வி­டப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

66 வய­தான ரிச்சர்ட் பிரான்சன், 400 நிறு­வ­னங்­களை உள்­ள­டக்­கிய வேர்ஜின் குழு­மத்தின் தலைவர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு 520 கோடி டொலர் (சுமார் 78,400 கோடி ரூபா) என ஃபேர்ப்ஸ் சஞ்­சிகை மதிப்­பிட்­டி­ருந்­தது.

 

வர்த்­த­கத்தில் மாத்­தி­ர­மல்­லாமல் நவீன தொழில்­நுட்­பங்கள், சாக­சங்கள் ஆகி­ய­வற்­றிலும் தீவிர ஈடு­பாடு கொண்­டவர் ரிச்சர்ட் பிரான்சன்.

 

1991 ஆம் ஆண்டு ஜப்­பா­னி­லி­ருந்து  பலூன் மூலம் 10800 கிலோ­மீற்றர் தூரம் பயணம் செய்து கனே­டிய ஆர்ட்டிக் பிராந்­தி­யத்தை சென்­ற­டைந்து சாதனை படைத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

22251_958407-01-02-copy.jpg

 

2007 ஆம் ஆண்டு அவர் மொஸ்கிட்டோ தீவை வாங்கியதுடன் 22 விருந்தினர்கள் தங்கக்கூடிய ஆடம்பர உல்லாச தலமொன்றை நிர்மாணித்தார். 

 

www.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிம்புவின் AAA: அஸ்வின் தாத்தா ப்ரிவியூ டீஸர்!

Ashwin thatha Simbu

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'. இந்தப் படத்தில் சிம்புவின் அஸ்வின் தாத்தா என்ற கெட்-அப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அஸ்வின் தாத்தாவின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது, அஸ்வின் தாத்தா ப்ரிவியூவ் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விரைவில் டீஸர் ரிலீஸ் செய்யப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

  • தொடங்கியவர்
உண்மையின் ஊற்று சிற்றறிவை விசாலமாக்கும்
 
 

article_1486618055-hhhu.jpgஎத்தனை கோடானுகோடி உயிரினங்கள் இருப்பினும், அவை ஒவ்வொன்றும் புதுப்புது வார்ப்புகள். ஹே, இறைவா! எதனைப் படைத்தாலும் நீ உன் கைங்கரியத்தினை, ஆழுமையினை, கலை நுட்பத்தை இம்மியளவும் பிசகாமல் எங்ஙனம் சிருஷ்டிக்கின்றாய்? 

எமக்கு மிகச்சிறிய கருமங்களைக்கூடச் சிறப்பாகச் செய்ய, எவ்வளவு கால அனுபவம் தேவைப்படுகிறது. எங்களை கணப்பொழுதும் எப்படி செதுக்கிக்கொண்டே இருக்கின்றாய்?   ஆஹா, பெருமானே! நீயே பெரும் சிற்பி. நீயோ எழுதுவதுமில்லை; படிப்பதுமில்லை. ஆனால், இந்தப் பேரண்டத்தையே ஆட்சி செய்கின்றாய்; அசைக்கின்றாய். 

உண்மையின் ஊற்றே எமது சிற்றறிவை விசாலமாக்கும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 

தனிமை விரும்பியா நீங்கள்? #FridayFeeling

தனிமை

னிமைவாதிகள்! அவர்களை நீங்கள் பார்த்ததுண்டா? ரொம்பவே வித்தியாசமாய் இருப்பார்கள் அவர்கள். ரொம்ப சென்சிட்டிவாக இருப்பார்கள். வெளியில் இருந்து நாம் பார்க்கும்போது, ஏன் இவன்/இவள் இத்தனை தனிமையில் இருக்கிறார் எனத்தோன்றும். யார் இவர்கள்? இவர்களது மனநிலை எப்படி இருக்கும்? என்ன வாழ்க்கை முறை இவர்களுடையது? கொஞ்சம் அலசி ஆரோய்ந்தோம். அதன் பதில்கள் ஆச்சர்யம் தரும்படி இருக்கிறது… அப்படி என்னதான் அவர்கள் வாழ்வியல் முறையில் உள்ளதென்று நீங்களும் பாருங்களேன்!

"தனிமை எதிர்மறை வாழ்க்கையை ஏற்படுத்திவிடுமோ?!"

தனிமையில் இருக்கும் ஒருவர், நிறைய யோசிப்பார். அந்த யோசனைகள் யாவும், தனிமை என்ற உணர்வைத் தாண்டி, பல விதமான கோணங்களில் இருக்கும். பொதுவாகவே, தனிமையானது மனதிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து எண்ணங்களையும் வெளியில் கொண்டுவரும் வல்லமை கொண்டது. பெரும்பாலான நேரங்களில் தனிமையின் போது மனதில் கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற உணர்வுகள் மிகுதியாய் இருக்கப்பெறுவர்…. அதுசரி, அதைதானே நாம் அதிகமாய் வெளிகாட்டாமல் இருப்போம்! எனில், தனிமை ஒருவரை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடும் அபாயம் நிறையவே இருக்கிறது. தனிமை அவர்களின் கோபத்தை தூண்டி, வருத்தத்தை அதிகரித்து எதிர்மறை எண்ணங்களை தந்துவிடும் வல்லமை உடையதுதான் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.

இந்தத் தனிமை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்ட கார்டெக்ஸ் இதழின் முடிவு, மேலே கேட்ட கேள்விக்கு ஒரு சபாஷ் பதிலை தந்துள்ளது. என்ன பதில் தெரியுமா அது? நண்பர் படைசூழ இருக்கும் ஒருவருக்கு, ஒரு பொது இடத்தில் ஏதோவொரு அநாகரீகமோ, அநீதியோ இழைக்கப்பட்டால், அதிலிருந்து தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளும் சமயோகித அறிவு பெரிதளவில் இருக்காதாம். இந்த ஆராய்ச்சியானது, நியூயார்க்கில் யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸில் மனநலம் மற்றும் மூளை-தொடர்பியல் ஆய்வாளர்களால் நடத்தப்பட்டுள்ளது. அவர்களது ஆராய்ச்சியினை ஒரு தம்பதியையும், தனி நபர் ஒருவரையும் வைத்து மேற்கொண்டுள்ளனர். தனிமை என்பது ஒருவரது பொது வாழ்வில் எப்படிபட்ட மாற்றங்களை தருகிறது என்பதுதான் இதில் மிகமுக்கியமாக கருதப்படுகிறது.

"தைரியமூட்டும் தனிமை"

தைரியம்

கை-வின்ச் என்ற நியூயார்க்கை சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர், ‘எமோஷனல் ஃபர்ஸ்ட் எய்ட்’ என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் தனிமை விரும்பிகள் பற்றி கூறும்போது, “நண்பர் படைசூழ இருப்பவர்களின் மூளையானது பொதுவாகவே எப்போதும் அதீத-பாதுகாப்பாக உணரும். அதனால் கூட்டத்தில் இருந்து விடப்படும் போது, ஒரு பிரச்சனையை தனியே நின்று எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் திணறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. ஆனால், தனிமையை அதிகமாய் உணர்ந்தவர் ஒருவர், எப்போதும் தன்னை மற்றவர்களிடம் இருந்து விலக்கி கொள்வார். இதன் பாதிப்பாக, அவர்கள் எப்பொழுதும் பிரச்சனைகளை சந்திக்கும் மனநிலையில் தான் இருப்பர். அந்த மனநிலை, பிரச்சனை வந்தால் பார்த்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையை தந்து அவர்களுக்கு தைரியமூட்டும்” என்கிறார்.

38 தனிமை படுத்தவர்களும், 32 தனிமைக்கு அப்பாற்பட்டவர்களும் கலந்து கொண்டு நடத்தப்பட்டுள்ளது இந்த ஆய்வு. தனிமைப்பட்டவர்கள் என்பது, நண்பர்கள், உறவினர்கள் என பலர் இருந்த நேரத்திலும் கூட எனக்கு யாரும் வேண்டாம் எனக்கூறுபவர்கள் என்ற அடிப்படையிலேயே கூறப்படுகிறது. 

"ஆய்வு முறையும், ஆச்சர்ய முடிவும்"

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களின் தலைகளில் இ.இ.ஜி. பொருத்தப்பட்டு, சில தேர்வுகள் நடத்தப்பட்டது! உதாரணமாக, ஸ்ட்ரூப் டெஸ்ட் முதலியவையும் செய்யப்படும். (ஸ்ட்ரூப் டெஸ்ட் என்பது, வார்த்தைகளின் மீது இருக்கும் வண்ணங்களை கண்டறிவது.) ஆராய்ச்சிக்கு உட்பட்டவர்கள் தங்களது செய்யும் வேலையில் எந்த அளவிற்கு கவனத்தோடு இருக்கின்றனர் என்பதை கண்டறிவதற்காகவே இது போன்ற டெஸ்ட் வைக்கப்படுகிறது. ஆண்டி-சோஷியல் வார்த்தைகள், சோஷியல் வார்த்தைகள் முதலியவற்றை கூறி, அவற்றின் போது மூளையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது போன்றவை முடிவுசெய்யப்படும். 

ஆராய்ச்சிகளின் முடிவில், மற்றவர்களை காட்டிலும் தனிமை விரும்பிகள், சஞ்சலங்கள் ஏதுமில்லாதவராய் இருப்பதாக கூறுகின்றனர்.  எனிலும் அவர்கள் இதுகுறித்து எதுவும் அறியாது, இயல்பாகவே இவ்வாறு இருக்கின்றனர். தனிமையில் இருப்பவர்கள் அதிகம் சிரிக்கமாடார்கள் என்ற கருத்து பரவலாய் இருந்தாலும், தனிமையில் ஒருவர் எடுக்கும் முடிவு தான் அவரது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதும் மறுப்பதற்கு இல்லை. தனிமையில் இருப்பவர்கள் சோகமாக இருக்க வேண்டியதில்லை. அதுவும் ஒரு வாழ்விய்ல முறைதான் என்கிறார்கள் அறிஞர்கள்!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண்

Shawna Pandya

சாதாரண பொதுமக்களையும் 2018ம் ஆண்டு விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை (Citizen Science Astronaut ), நாசா அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ், 2018ம் ஆண்டு விண்வெளி செல்லும் குடிமக்கள் பெயர்களை நாசா அண்மையில் வெளியிட்டது. விண்வெளி செல்லும் குழுவில் இந்திய வம்சாவளி பெண், ஷாவ்னா பாண்டியாவும் இடம் பெற்றுள்ளார்.

ஷாவ்னா கனடாவில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார்.  இந்திய வம்சாவளி பெண்களில் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து, மூன்றாவதாக விண்வெளி செல்வது ஷாவ்னா என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

அஞ்சலி #OneMinuteSketch

 

KR_3_12112.jpg

  • தொடங்கியவர்

இந்த அறைக்குள் சென்றால் இதயத்துடிப்பை கேட்கலாம் #OculusVR

oculus

ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டால் போதும். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து கீழே உங்களால் சறுக்கி விளையாட முடியும், தோனியுடன் ஹெலிகாப்டர் ஷாட் ஆட முடியும். ஸ்பைடர் மேனுடன் வலைபின்ன முடியும். இப்படியெல்லாம் இன்னும் சில காலத்தில் யாராவது உங்களிடம் சொல்லி ஒரு கண்ணாடியை விற்றால் நீங்கள் வாங்கித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு தயாரிப்பைத்தான் ஃபேஸ்புக் நிறுவனம் தயார் செய்து வருகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி தான் எதிர்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பம் என்பதற்காக அக்குலஸ்(oculus) என்ற நிறுவனத்தை வாங்கி விர்ச்சுவல் ரியாலிட்டியில் கவனம் செலுத்துகிறது ஃபேஸ்புக்.

வாஷிங்டனில் உள்ள அக்குலஸ் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்ட ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் அது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துந்துள்ளார். இந்த ஆராய்ச்சி மையத்தில் உலகிலேயே சிறந்த அறிவியலாளர்களும், பொறியாளர்களும் விர்ச்சுவல் மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டியை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மைக்கேல் அப்ரஷ் என்பவரது தலைமையில் இயங்கும் இந்த குழு உலகின் அட்வான்ஸ்டு கண்ணாடி லென்சுகள், பார்வையை ட்ராக் செய்வது, மனித உடல் அசைவுகளை வித்தியாசமான முறையில் மேப் செய்வது போன்ற வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறது. அக்குலஸின் கனவு உலகில் எல்லா விஷயங்களையும் கையில் எடுத்து செல்லக்கூடிய அளவு கொண்ட கருவியில் விர்ச்சுவலாக அனுபவிக்க செய்வது தான் என கூறியுள்ளார். மேலும் இந்த அக்குலஸ் ரிஃப்ட்(oculus rift) தயாரிப்பு தயாராகிவிட்டதாகவும் இதனை வாங்கி வித்தியாசமான அனுபவத்தைப் பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதோடு அவர் சில புகைப்படங்களையும் வெளியிட்டு அது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களையும் தந்துள்ளார்.


அக்குலஸ் ஆராய்ச்சி மையம்

விர்ச்சுவல் மற்றும் ஆக்குமெண்டட் ரியாலிட்டியில் கைகளை எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது அக்குலஸ், கையில் க்ளவுஸ்களை அணிந்து கொண்டு விர்ச்சுவலாக  வரையலாம், கீபோர்டில் டைப் செய்யலாம், ஏன் ஸ்பைடர் மேன் போல வலைபின்னலாம் என்று ஸ்பைடர் மேன் போல விரல்களை நீட்டுகிறார் மார்க்.


அக்குலஸ் ஆராய்ச்சி மையம்

இது தான் அக்குலஸின் எக்கோ-ஃப்ரீ சேம்பர். இதனை சத்தங்கள் தொடர்பான சோதனை செய்ய நிறுவியுள்ளது அக்குலஸ், இது கட்டி முடிக்கப்பட்டால் உலகின் அமைதியான இடங்களில் இதுவும் ஒன்றாகிவிடுமாம். இதில் நமது இதயத்துடிப்பின் சத்தத்தை நம்மால் கேட்க முடியும் என்கிற அளவுக்கு அமைதியாக இருக்குமாம்.


அக்குலஸ் ஆராய்ச்சி மையம்

சிறிய பொருட்களை தயாரிக்கும் போது அந்த இடத்தில் மாசு இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த அறை 1000 மடங்கு சிறிய தூசியைக்கூட (1000X) ஃபில்டர் செய்துவிடும் என்கிறார் மார்க்.


அக்குலஸ் ஆராய்ச்சி மையம்

விர்ச்சுவல் மற்றும் அக்குமெண்டட் ரியாலிட்டிக்கான லென்சுகளை தயாரிக்கிறது அக்குலஸ், இதில் மெட்டல்களை தரமான டைமண்ட் கட்டிங் மூலம் வடிவமைக்கிறது. இதனைச் செய்ய 5 ஆக்ஸிஸ் சி.என்.சி இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது.


விர்ச்சுவல் ரியாலிட்டி தான் உலகை ஆச்சரியப்படுத்தும் அடுத்த டெக்னாலஜி என்பதை நன்கு அறிந்த ஃபேஸ்புக் அக்குலஸ் மூலம் தன்னை இந்தத் துறையில் முன்னிலைப்படுத்தி வருகிறது. இது இருந்தால் போதும் உலகின் எந்த மூலையையும் சர்வசாதாரணமாக கண்ணாடியை அணிந்து உணர முடியும். அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டாலும் நீங்கள் வெள்ளை மாளிகை பூங்காவில் விர்ச்சுவலாக  ஓடி விளையாடலாம் என்று கூறினாலும் கூறுவார் மார்க்.

Mark Zuckerberg hat 5 neue Fotos hinzugefügt.
12 Std. ·
 

I just visited our Oculus Research lab in Redmond, Washington where some of the best scientists and engineers in the world are pushing the boundaries of virtual and augmented reality.

The team is led by Michael Abrash and focuses on things like advanced optics, eye tracking, mixed reality and new ways to map the human body. The goal is to make VR and AR what we all want it to be: glasses small enough to take anywhere, software that lets you experience anything, and technology that lets you interact with the virtual world just like you do with the physical one.

Oculus Rift is already the best VR experience you can buy -- and the technology being built in this lab right now makes me want the future to get here a lot sooner.

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Innenbereich
Bild könnte enthalten: 1 Person
Kein automatischer Alternativtext verfügbar.
Bild könnte enthalten: 1 Person, steht und Innenbereich
Bild könnte enthalten: eine oder mehrere Personen
 
Gefällt mirWeitere Reaktionen anzeigen
KommentierenTeilen

 

 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தன் பொம்மையுடன் ட்ரம்புக்கு எதிராகப் போராடும் 4 வயது சிறுமி!

4 வயது சிறுமி

மெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் ஜனவரி 20-ம் நாள் பதவியேற்றார். அன்றுமுதலே அவரின் அதிரடி நடவடிக்கைகளால், கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்த ட்ரம்ப்பின் உத்தரவு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ட்ரம்ப்-க்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் 4 வயது சிறுமி, யாருமே எதிர்பார்க்காத அளவில் தன் எதிர்ப்பை அமெரிக்க அதிபருக்கு காட்டிவருகிறாள். அவளின் படங்கள்தான் சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின், வெர்ஜினியாவில் வசிக்கும் மார்க் ரெட்ஃபெர்ன் (Mark Redfern), வெண்டி (Wendy)  தம்பதியினர் வாஷிங்டன் நகரில் நடக்கும் ட்ரம்ப்-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தயாராகிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் 4 வயது மகள் ரோஸ், தானும் வருவேன் என அடம்பிடித்தார். பெற்றோருக்கும் அவளை அழைத்துச் செல்ல விருப்பம்தான். ஆனால் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் வெகு தூரம் என்பதால் மறுத்தனர். போராட்டத்துக்கு வந்தே ஆவேன் எனக் கையில் பொம்மை ஒன்றுடன் புறப்பட்டு விட்டாள். அதைப் பார்த்ததும், அவள் அம்மாவுக்கு ஒரு ஐடியா தோன்றியது.

dolls_13025.jpg

மகள் ரோஸிடம், "உன் பொம்மைகள் அனைத்தையும் எடுத்து வா" என்றார். எதற்கு அம்மா இப்படிச் சொல்கிறார் என யோசித்துக்கொண்டே பொம்மைகளை எடுத்து வந்து அம்மாவிடம் தந்தாள். பொம்மைகளுக்கு ஏற்ப சிறிய அளவில் ஸ்லோகன் போர்டுகளை உருவாக்கிய அம்மா, அதனை பொம்மைகள் பிடித்திருப்பதுபோல அதன் கைகளில் டேப் கொண்டு ஒட்டினார். உடனே ரோஸூம் அம்மாவுக்கு உதவியாக பொம்மைகளில் ஸ்லோகன் போர்டுகளை ஒட்டினாள். அம்மாவைப் பார்த்து தானே இரண்டு போர்டுகளை தன் மழலைத் தனத்தோடு உருவாக்கினாள்.

ட்ரம்ப்-க்கு எதிரான ஸ்லோகன் போர்டுகளைப் பிடித்திருப்பதுபோல் இருக்கும் பொம்மைகளோடு, தன் மகளும் அட்டைகளைத் தூக்கிப் பிடித்திருப்பதுபோல புகைப்படங்கள் எடுத்த ரோஸின் தந்தை தன் பேஸ்புக் பக்கத்தில் அவற்றை போஸ்ட் செய்தார். ட்ரம்ப் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தன் மகளும் எதிர்ப்பாளர் என்று தெரிவித்ததோடு, இன்றைய சூழலுக்கு ஏற்ப பிள்ளைகளைத் தயார் செய்வது பெற்றோர்களின் கடமை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் நான்கு வயது சிறுமியின் புகைப்படங்களைக் கண்டு, நெட்டிசன்களின் இடையே 4 வயது சிறுமியின் அசத்தலான ஐடியா  மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தாய்க்குக் கோயில் கட்டிய மகன்கள்!

kk8_New_15391.jpg

திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜராஜசோழன் என்பவரின் தாய் அமுதா, கடந்த வருடம் ஜனவரி 24-ம் தேதி உயிரிழந்தார். அதன் பிறகு, தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்த ராஜராஜசோழன் மற்றும் அவரின் சகோதரர்கள் நான்கு பேரும் சேர்ந்து, தங்கள் தாய்க்குக் கோயில் கட்ட ஒருமனதாக முடிவுசெய்தனர். அதன்படி, அவர்களுக்கு சொந்தமான மற்றொரு இடத்தில் கோயில் கட்டப்பட்டு வந்தது.

kk3_New_15179.jpg

இந்நிலையில், தங்கள் அம்மா அமுதாவுக்காக, உருவாக்கப்பட்ட திருக்கோயில் திறப்பு மற்றும் சிலை திறப்பு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஏழைகளுக்கு அன்னதானமும், இலவச வேட்டி சேலைகளும் வழங்கி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தாய் அமுதா மீது, அவரது ஐந்து மகன்கள் வைத்திருந்த பாசத்தைக் கண்டு விழாவுக்கு வந்தவர்கள் மெய்சிலிர்த்துப்போனார்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா! - செப்டம்பர் டு பிப்ரவரி ரீவைண்ட்!

போன வருஷம் செப்டம்பர்ல தொடங்கிய மக்கள் ஓட்டம் இந்த வருஷம் பிப்ரவரி வந்தும் நிற்கவில்லையே குருநாதா! வாங்க கொஞ்சம் ரீவைண்ட் பட்டனை அழுத்திப் பார்ப்போம்..! 

குருநாதா

ஸாரி சார் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தோம் எங்களால் காப்பாற்ற முடியாமல் போயிடுச்சு!

6.%E0%AE%90_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D_

சாதாரணமாக உடம்புக்குச் சரி இல்லைனு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவரை சிகிச்சை என்னும் பெயரில் 'உள்ளே வெளியே' பாவ்லா காட்டும் சீனுக்கு 'ரமணா' தான் பெயர் போன படம். கொஞ்சம் நிகழ்கால அரசியலை ஆராய்ந்து பார்த்தால் இந்த மாதிரியான விஷயமெல்லாம் நம்மைச் சுற்றி நடக்கிற மாதிரியே இருக்கும். இப்படி நடக்கப்போறது தெரிஞ்சேதான்  படத்தை எடுத்தார்களா? இல்லை இதெல்லாம் இதுக்கு முன்னாடியே நடந்து அதைப் படமா எடுத்தாங்களா? என்று தெரியவில்லை.

5.%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E

ஃபாரீன் டாக்டர் வந்து சிகிச்சை அளித்து நன்றாக உள்ளார்; இன்னும் சிறிது நாட்களில் சரியாகிவிடுவார் என்று சொல்வது, காலையில் குடல் குழம்பும், இட்லியும் சாப்பிட்டு தெம்பாக இருக்கிறார்னு வெளி உலகத்துக்குச் சொல்றதுனு, நெருக்கடி அதிகமாக அறிக்கைகளும் வதந்திகளும் பல கோணத்தில் வெளிவர ஆரம்பித்தன. கடைசியில் நினைத்தது மாதிரியே 'ஸாரி சார். எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை' டயலாக்தான்... 

கங்கா, சந்திரமுகி அறைக்குப் போனா..! கங்கா சந்திரமுகியா நின்னா..! கங்கா சந்திரமுகியாவே ஆனாள்!

8_16577.jpg

`போலச் செய்தல்' என்பது ஒரு பெரும் கலை. இந்த மாதிரியான கேரக்டரில் ஊருக்குள் பல பேர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு 'சந்திரமுகி' படத்தில் வரும் ஜோதிகா மாதிரி. 'சந்திரமுகி' உபயோகித்த பொருட்களையெல்லாம் படத்தில் ஜோவும் யூஸ் பண்ணுவார். சந்திரமுகியோட புடவை, ஒட்டியாணம், ஜிமிக்கி, சலங்கை என எல்லாப் பொருட்களையும் யூஸ் பண்ணுவார். அது மட்டுமில்லாமல் அவரை போல் டான்ஸும் ஆடுவார். யாருக்கும் தெரியாமல் ஓர் அறையில் சந்திரமுகி ஆடிப் பாடிய அதே பாடலுக்கு இவரும் குத்தாட்டம் போடுவார். பேச்சு, ட்ரெஸ், ஜிமிக்கி எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கு. ஆனால் மூஞ்சி அப்படி இல்லையே!

உங்களில் யார் அடுத்த சி.எம்?

16251078_1196547870398958_205814224_o_16

பொதுவாக முதல்வர் என்றால் மக்களில் எதிர்பார்ப்பு 'முதல்வன்' படத்தில் வரும் அர்ஜூன் மாதிரி ஒரு நல்ல சி.எம் வர மாட்டாரா? என்பதுதான்! `வரப்போற முதல்வராவது நமக்கு நல்லது செய்ய மாட்டாரா?' என்ற ஏக்கம் ஒரு கட்டத்தில் துக்கமாக மாறி ஒவ்வொரு தேர்தலிலும் நம்மை குழப்பமான முடிவினை எடுக்க வைக்கும்.  நம்மைப் படைத்த பிரம்மனே வந்தாலும் இதை மாற்ற முடியாது. முன்பெல்லாம் முதல்வர் பதவிக்கு வந்துவிட்டால் ஐந்து வருடம் ஒரே ஆள்தான் இருப்பாங்க. இப்போதெல்லாம் `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?' மாதிரி `உங்களில் யார் அடுத்த சி.எம்?'னு ரியாலிட்டி ஷோவெல்லாம் நடக்கும் போல. போற போக்கைப் பார்த்தால் மியூஸிக்கல் சேர் போட்டி வைத்து அதில் ஜெயிக்கிறவர்கள் சி.எம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள். ஒரு நாள் சி.எம் கேள்விப்பட்டிருக்கேன். அது என்னய்யா யாரு வேணும்னாலும் சி.எம்?

இதுக்குமேல தாங்க முடியாது குருநாதா :

ClUXYN0UoAI5Jfx_16161.jpg

மோடி ஐநூறு, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று சொன்னவுடன் இரவோடு இரவாக செலவுக்குக் காசு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்து பல் துலக்கி, குளிச்சுட்டு வெளியில் வந்தா, வந்தான்டா வர்தா புயல். பல்சர், புல்லட்டை மிஞ்சும் ஸ்பீடுக்கு அடிச்சு ஊரையே சூறையாடியது. சரி சேதமான இடத்தை ஆங்காங்கே பட்டி, டிங்கரிங் பண்ணி முடிக்கிறதுக்குள்ள நாளைக்கு என்ன குண்டு வெடிக்கப் போகுதோ என்ற எண்ணத்திலேயே தூங்கி எழுந்தனர் தமிழக மக்கள். நினைத்த மாதிரி தமிழ்நாட்டின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒழித்துக்கட்டச் சதி நடந்ததையடுத்து ஊர் முழுக்க காட்டுத் தீ போல பரவி தமிழ்நாடு முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிலிருந்து கிளம்பி அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். பின் போராட்டத்தைப் போர்க்களமாக மாற்றி தீக்காடாக மாறியது தமிழ்நாடு. இதோட முடிஞ்சு போச்சுடான்னு பெருமூச்சு விடக்கூட முடியாம வந்தது ஒரு வாக்குவாதம். உங்களில் யார் அடுத்த சி.எம்?. எப்போவாவது ப்ரேக்கிங் நியூஸ்னா பரவாயில்லை. எப்பவுமே ப்ரேக்கிங் நியூஸ்னா எப்படி?

சாது மிரண்டா :

1477560664_kodi-upcoming-tamil-movie-dir

தமிழ்ப் படங்களில் இந்த மாதிரியான விஷயம் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. படம் முழுவதும் சாதுவாக இருக்கும் ஹீரோ இன்டர்வெல் ப்ளாக் வந்ததும் விஸ்வரூபம் எடுத்து ட்ரான்ஸ்ஃபர்மேசன் கொடுப்பார். அதே போல்தான் தற்போது அரசியலிலும் நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் 'கொடி', 'வேதாளம்', 'தெறி', 'விஸ்வரூபம்' போன்ற படங்கள் எல்லாம் பார்த்தாரா என்று தெரியவில்லை. நேற்றுவரை குனிந்த தலை நிமிராமல் இருந்த பன்னீர்செல்வம் 'கொடி' படம் தனுஷ் போல் இரணடு நாட்களாக மிரட்டிக்கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களிலும் அவரைக் கலாய்த்தவர்களும் மிகுந்த அளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். யாரென்று தெரிகிறதா இவர் தீ என்று புரிகிறதா?

குறியீடு கமல் :

viswaroopam_movie_stills_0142_16452.jpg

பொதுவாக கமலின் படங்கள்தான் அப்படி இருக்குமென்றால் அவர் ட்விட்டரில் போடும் ட்விட்டும் அப்படித்தான் இருக்கிறது. 'சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று சில மாதங்களுக்கு முன் ட்விட் போட்டிருந்தார். அப்போது புரியாத மக்களுக்கு ஜல்லிக்கட்டின் தடை அறிவிப்புக்குத்தான் அது என்ன என்று அப்புறமாய் மக்களுக்குத் தெரிந்தது. அதனால் அவரது ட்விட்டைத் தேடிப் பார்த்து அதற்கு முன்னதாகவே உஷார் ஆகிக்கொண்டனர். ஏதாவது ட்விட் கமலிடமிருந்து வந்திருக்கிறது என்றால் பின்னால் ஏதோ பெரிதாக ஆப்பு காத்திருக்கிறது என்று அர்த்தம். 'ரெண்டும் சேர்ந்ததுதான் நான். ஐ யம் எ ஹீரோ ஐ யம் எ வில்லன்'.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

காதலர் தினத்தை முன்னிட்டு இணையதளங்களை கலக்கும் அசத்தல் மீம்ஸ்கள்!!

 

காதலர்தினத்தை முன்னிட்டு மீம்ஸ்கள் மூலம் இணையதளவாசிகள் தங்களின் ஃபீலிங்ஸ்ஸை கொட்டி வருகின்றனர்.

 சென்னை: காதலர் தின விழா வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சினிமா டையலாக்குகளையும் சினிமா காட்சிகளையும் வைத்து இணையதளங்களில் இளைஞர்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

பாதிரியார் வேலண்டைன் நினைவாக காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர் தின விழா பெரும்பாலும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலன் மற்றும காதலிக்கு காதலர் தினத்தன்று கொடுக்க இப்போதே இளசுகள் பரிசுப்பொருட்களை பார்த்து பார்த்து தேர்வு வருகின்றனர். ஆனால் இதுவரை காதல்வயப்படாத இளைஞர்கள் சிங்கிளாக இருப்பது தான் சுகம் எனக்கூறி மீம்ஸ்களை இணையதளத்தில் வளையவிட்டு வருகின்றனர். அவற்றில் சில...

காதலில் விழுந்தால் புஸுதான்..

காதலில் விழுந்தால் புஸுதான்.. காதலில் விழுந்தால் சாக்லேட் கூட கிடைக்காது. தனியாக இருந்தால் நமக்கே எல்லாம் என்பதை கூறும் விதமாக இந்த மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

சிங்கிளா இருக்குறதுதான் கெத்து

 

சிங்கிளா இருக்குறதுதான் கெத்து காதல் வயப்பட்டவர்கள் காதலர் தினத்தில் கெத்துக் காட்டலாம். ஆனால் நிஜத்தில் அழுவார்கள் என்பதைப் போல் சென்னை 28 படத்தில் ஜெய் அழுவதை போட்டு கலாய்த்துள்ளனர் நெட்சன்கள்

சொப்பன சுந்தரியை யாரு இப்போ வச்சிருக்கா?

 

சொப்பன சுந்தரியை யாரு இப்போ வச்சிருக்கா? சொப்பன சுந்தரியை யாரு இப்போ வச்சிருக்கா காமெடியை வைத்து இந்த மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காதலில் விழுந்தவர்கள் காதலர் தினத்துக்கு பிளான் பண்ணுவதையும், காதலில் விழாதவர்கள் பிளான் குறித்து கேட்டதற்கு டென்ஷன் ஆவதைய்ம காட்டுவதாக உள்ளது இந்த மீம்ஸ்.

காதல் காலம் பிளாஷ்பேக்

 

காதல் காலம் பிளாஷ்பேக் பாட்ஷா பட சீனை வைத்து மீம்ஸ் உருவாக்கிகயுள்ளனர். காதலில் விழுந்தவர்கள் சிங்கிளாக இருப்பவர்களை கேள்வி கேட்பது போலவும் அதற்கு காதலைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று சிங்கிளாக இருப்பவர் தனது ஃபிளாஷ்பேக்குக் போவதுமாக காட்டுகின்றனர் வலைஞர்கள்.

தலையில துண்டு

 

தலையில துண்டு இந்த ஆண்டும் காதலில் விழ வாய்ப்பு கிடைக்காததால் சிங்கிளாக இருப்பவர்கள் தலையில் துண்டைப் போட்டுள்ளதை காட்டுவதாக இந்த மீம்ஸ் உருவாக்கியுள்ளனர் நெட்சன்கள்
காதலிச்சா வலிதான்

 

காதலிச்சா வலிதான் லவ் ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னாடி சுதந்திரமாக சந்தோஷமாக சிரித்துக்கொண்டிருந்ததையும் ப்ரபோஸ் பண்ணிய பிறகு அடிவாகி மூலையில் உட்காந்திருப்பதையும் கத்திப்பட சீன்களை வைத்து இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபிரன்ட்ஸ நினைச்சதான் வருத்தம்

 

ஃபிரன்ட்ஸ நினைச்சதான் வருத்தம் வேலன்டைன்ஸ் டேக்கு காதலி இல்லைன்னா கூட வருத்தம் இல்லை. ஆனால் நண்பர்கள் என்ன பிளான் என்று கேட்கும் போது தான் வருத்தமாக இருக்கும் என்று தசாவதாரம் கமலை வைத்து இந்த மீம்ஸை உருவாக்கியுள்ளனர்.

சிங்கிள்டா கெத்துடா...

 

சிங்கிள்டா கெத்துடா... வேலன்டைன்ஸ் டேகுகு பொன்னுங்களோட சுத்த நாம என்ன கமிட்டடா... சிங்கிள்ஸ்.. சிங்கிள்தான் கெத்து என எஸ்ஜே.சூரியவை வைத்து காட்டுகின்றார் இந்த நெட்டிசன்.

சிங்கிள் தான் கெத்து சார்

 

சிங்கிள் தான் கெத்து சார் ராஜா ராணி படத்தை வைத்து இந்த மீம்ஸை உருவாக்கியுள்ள இணையதளவாசி காதலர் தினத்தன்று ஆபிஸ் போவதும், சிங்கிள் தான் கெத்து எனக் கூறி இங்கிரீமென்ட் வாங்குவதாகவும் கூறியுள்ளார்.

பிரியாணிதான் முக்கியம்

 

பிரியாணிதான் முக்கியம் காதலர் தினம் நெருங்கும் நிலையில் வேலன்டைஸ் டேவை விட எனக்கு பிரியானிதான் முக்கியம் என கூறும் வகையில் இந்த மீம்ஸ்ஸை உருவாக்கியுள்ளார் இந்த நெட்டிசன்.

எப்போதுமே சிங்கிள் தான்

 

எப்போதுமே சிங்கிள் தான் போன வருஷமும் சிங்கிள்தான், இந்த வருஷமும் சிங்கிள் அடுத்த வருஷ வேலன்டைஸ்டேவுக்கும் சிங்கிள் தான் என காட்டுகிறார் இந்த மீம்ஸ்கலைஞர்.

 http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

இந்திய மணல் சிற்பக் கலைஞர்களின் கின்னஸ் சாதனை!

C4Ug7fzUYAA_Zr5_23398.jpg

ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பங்கள் செய்வதில் உலகப் புகழ் பெற்றவர். இவர் தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். உலக அமைதியை வலியுறுத்தி ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் 48 அடி 8 இன்ச் அளவிலான உயரம் கொண்ட மணல் கோட்டை ஒன்றை தனது குழுவோடு இணைந்து உருவாக்கியுள்ளார். உலகிலேயே மிக உயரமான மணல் கோட்டையாக இது கின்னஸ் சாதனை குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் சுதர்சன் பட்நாயக்கிடம் வழங்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/

WR_20170211001956.jpeg

இந்திய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், 48 அடி 8 இன்ச் உயரமுள்ள உலகின் பிரமாண்டமான மணற் கோட்டையை வடிவமைத்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். இடம்: பூரி கடற்கரை, ஒடிசா.

  • தொடங்கியவர்

 

அந்தரத்தில் ஒரு அதிசய பயணம்

நடுவானில் மிதந்தபடி நினைத்தபடியெல்லாம் பறப்பதை கற்பனை செய்துபாருங்கள்.

  • தொடங்கியவர்

10.02.1996: கம்ப்யூட்டரிடம் உலக செஸ் சாம்பியன் காஸ்பரோவ் விளையாடி தோற்ற தினம் இன்று!

 

 
deep-blue-kasparov


டீப் புளூ - காஸ்பரோவ் இருவரும் விளையாடிய செஸ் விளையாட்டு ஒரு உலகப் பிரசித்தி பெற்ற செஸ் விளையாட்டாகும். இவ் விளையாட்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஃபிலடெல்ஃபியாவில் விளையாடப்பட்டது. செஸ் விளையாடும் கணினியொன்று வழக்கமான செஸ் சுற்றுப்போட்டி விதிகளின் கீழ் (நேரக் கட்டுப்பாடு) அக்கால உலக சம்பியன் ஒருவரை வென்ற முதலாவது விளையாட்டு இதுவாகும். 

'டீப் புளூ' என்ற கணினியானது காரி காஸ்பரோவை வெல்வதற்காக ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். ஆறு போட்டிகள் தொடரில் "டீப் புளூ" கடைசி போட்டியை வென்றது. எனினும் மிகுந்த ஐந்து விளையாட்டுக்களில் 3 வெற்றிகளையும், 2 சமநிலைகளையும் பெற்றது மூலம் 1996ல் காஸ்பரோவ் வெற்றிபெற்றார். 1997ல் மீண்டும் விளையாடியபோது இரண்டு விளையாட்டுக்களை மேலதிகமாக வென்றதுடன், முழு "மாட்ச்"சையும் 'டீப் ப்ளூ' வென்றது. எனினும் காஸ்பரோவ் உலகின் தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரராகவே கருதப்படுகிறார்.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

சார்லஸ் லாம்ப்

 
sceice_3130690f.jpg
 
 
 

ஆங்கில எழுத்தாளர், கவிஞர்

ஆங்கில இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான சார்லஸ் லாம்ப் (Charles Lamb) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பிரிட்டன் தலைநகர் லண்டனில் (1775) பிறந்தவர். தந்தை, வழக்கறிஞரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். தன் அக்கா ஏற்படுத்திய ஆர்வத்தால், புத்தகங்கள் படிப்பதில் சார்லஸுக்கு அதிக நாட்டம் பிறந்தது. எந்தப் புத்தகம் கிடைத்தாலும் படித்துவிடுவார்.

* சிறுவயதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தால், தனியாக ஒருவரிடம் கல்வி பயின்றார். சிறிது காலம் பள்ளியிலும் கற்றார். 1782-ல் உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு மிக மோசமான கற்கும் சூழல், முரட்டுத்தனமான ஆசிரியர்கள் இருந்தாலும்கூட, பின்னாளில் புகழ்பெற்ற சாமுவேல் கோல்ட்ரிட்ஜ் உள்ளிட்ட இலக்கியவாதிகளுடன் பழக வாய்ப்பு கிடைத்தது.

* லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றார். வறுமை காரணமாக 14 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றார். 1792-ல் பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியில் கணக்காளராக நியமிக்கப்பட்டார். 25 ஆண்டுகள் தொடர்ந்து அங்கு பணியாற்றினார்.

* இளம் வயதிலேயே எழுத்தாற்றல் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் கவிதைகள் எழுதி வந்தார். 1796-ல் வெளிவந்த இவரது நண்பர் கோல்ட்ரிட்ஜின் கவிதைத் தொகுப்பில் இவரது சில கவிதைகள் இடம்பெற்றன. இதன்மூலம் கவிஞராக அங்கீகாரம் பெற்றார். நண்பரின் 2-வது கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் இவருக்கு ஓரளவு பெயர் வாங்கித் தந்தன.

* மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த அக்கா, நோய்ப் படுக்கையில் கிடந்த அம்மாவைக் கத்தியால் குத்திவிட்டார். தனது செல்வாக்கால் இந்தக் குற்றத்துக்கான தண்டனையில் இருந்து அக்காவைக் காப்பாற்றினார். மனநலக் காப்பகத்தில் அக்காவைச் சேர்த்து, தன் வருமானத்தின் பெரும்பகுதியை அவருக்காகச் செலவிட்டார்.

* குணமடைந்த பின்னர், அக்காவும் இவரது வீட்டிலேயே வசித்தார். ஒரு கட்டத்தில் அக்கா, அப்பா, அத்தை என உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பு இவரது தோள்களில் விழுந்தது. கொஞ்சம்கூட சலிப்படையாமல் இறுதிவரை அவர்களைப் பராமரித்தார். இதனால் கடைசிவரை இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

* தனது உரைநடை மீது அபார நம்பிக்கை பிறந்ததால், அதில் கவனம் செலுத்தினார். தனது இளமைப் பருவம், பள்ளிக்கூடம், ஆசிரியை, பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என தனது அனுபவங்கள் அனைத்தையும் கட்டுரைகள், கதைகளாகப் படைத்தார். இவரது கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்தன.

* ‘லண்டன் மேகஸின்’ இதழுக்காக இவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘எஸ்ஸேஸ் ஆஃப் இலியா’ என்ற நூலாக வந்தது. அக்காவுடன் இவர் வாழ்ந்த வீடு, பிரபல நாடகக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் கூடும் இடமாக மாறியது.

* ‘இலியா ஆன் தி ஓல்டு பெஞ்சர்ஸ்’, ‘பிளாக்ஸ்மூர் இன் ஹெச்-ஷயர்’, ‘ரோஸ்மன்ட் கிரே’, ‘ட்ரீம் சில்ட்ரன்’, ‘நியூ இயர்ஸ் ஈவ்’, ‘டிராஜிடி’, ‘ஜான் வுட்வில்’, ‘ஃபார்ஸ்’ ஆகிய படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. தன் சகோதரியுடன் இணைந்தும் சில கதைகளை எழுதினார். இவரது ‘டேல்ஸ் ஃபிரம் ஷேக்ஸ்பியர்’ கதை, விற்பனையில் சாதனை படைத்தது.

* வில்லியம் வேட்ஸ்வொர்த் இவருக்கு, ‘ஈடு இணையற்ற கட்டுரை யாளர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கில இலக்கிய உலகின் மகத்தான உரைநடை எழுத்தாளர்களில் ஒருவராகப் புகழ்பெற்ற சார்லஸ் லாம்ப் 59-வது வயதில் (1834) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

லண்டன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் (பிப்.11 1826)

லண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 1,30,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது 1826-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1809 -ராபர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் படகுக்கான காப்புரிமம் பெற்றார். 1814 - நார்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது. 1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது. 1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம்

 
 
 
 
லண்டன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் (பிப்.11 1826)
 
லண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 1,30,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது 1826-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1809 -ராபர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
 
1814 - நார்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
 
1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.
 
1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.
 
1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.
 
1929 - இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.
 
1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
 
1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது.
 
1945 - இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது.
 
1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
 
1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1964 - சைப்பிரசில் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் லிமசோல் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.
 
1964 - சீனக் குடியரசு (தைவான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
 
1968 - இஸ்ரேல்- ஜோர்டான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது. 1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.
 
1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது.
 
1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.
 
1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
 
1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
 
2005 - ஜெர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
 
2008 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

ஆப்பிளின் புது 'பச்சைப் பசேல்' அலுவலகம்! #AppleCampus2

ஆப்பிளின் புதிய அலுவலகம்

ருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றை நம்மை விடவும் நன்கு உணர்ந்துள்ளன, சிலிக்கான் வேலியில் உள்ள டெக் நிறுவனங்கள். எனவேதான் பெரும்பாலான நிறுவனங்கள் மரபுசாரா ஆற்றல்மூலங்களை நோக்கி முன்னேறி வருகின்றன. கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கூட இவற்றில் முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளன. அதிலும் ஆப்பிள் நிறுவனம், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில், முன்னிலை வகித்துவருகிறது. உலகின் மொத்த மின்சக்தியில் 7 சதவீதத்தை எடுத்துக் கொள்வதும் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களே ஆகும். எனவே பெரும்பாலான நிறுவனங்கள், மரபுசாரா ஆற்றல் மூலங்களின் தேவையை உணர்ந்து அதற்கான திட்டமிடல்களில் இறங்கியுள்ளன. தற்போது ஆப்பிள் கட்டிவரும் புதிய தலைமையகத்திலும் இதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது அந்நிறுவனம். ஆப்பிள் தலைமையகத்தின் இரண்டாவது கேம்பஸ் ஆன இதனை ஸ்பேஸ்ஷிப் என்றும் அழைக்கின்றனர். இப்படி அழைக்க காரணம் இதன் வடிவமைப்புதான். சீனாவில், ஒலிம்பிக் போட்டிகள் நடந்த பீஜிங் பறவைக்கூடு மைதானம் நினைவிருக்கிறதா? மேலே இருந்து பார்க்கையில் வடிவமைப்பில் அதேபோல காட்சியளிக்கிறது இந்த ஆப்பிள் கேம்பஸ். ஆப்பிளின் இந்த அலுவலகம், ஸ்டீவ் ஜாப்ஸின் கனவுகளில் ஒன்று என்பது இதன் கூடுதல் ஸ்பெஷல்.

2011-ம் ஆண்டிற்கு முன்பு, இந்தக் கட்டடத்தின் திட்டத்தை தயாரிக்கவே இரண்டு ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார் ஜாப்ஸ். இந்த அலுவலகம் 2.8 மில்லியன் சதுர அடியில், கலிபோர்னியாவில் மிகப் பிர1மாண்டமாகத் தயாராகி வருகிறது. 

ஆப்பிள் அலுவலக சோலார் பேனல்கள்

2011-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கட்டுமானப் பணிகள், 2015-ம் ஆண்டுக்குள் முடியும்படி திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது குறிப்பிட்ட காலத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. எப்படியும் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் இது செயல்படும் என எதிர்பார்க்கலாம். இதற்கான மொத்த செலவு எவ்வளவு என்பது குறித்து ஆப்பிள், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் 5 பில்லியன்கள் வரை இருக்கலாம் என யூகிக்கின்றனர் நிபுணர்கள். இதன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரத்திற்காக மட்டுமே ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அளித்த தகவலின்படி, இந்த அலுவலகத்தில் மொத்தம் 14,200 ஊழியர்கள் பணிபுரிய உள்ளனர். இந்த அலுவலகத்தின் முதன்மை கட்டடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிதான் உலகின் மிகப்பெரிய வளைந்த கண்ணாடி. இந்த கட்டடத்தை சுற்றி பசுமையான சூழலுக்காக ஏராளமான மரங்கள் நடப்படவுள்ளன.

ஆப்பிள் புது அலுவலகம்

எப்படி ஆப்பிளின் கேட்ஜெட்ஸில், ஒவ்வொரு பகுதியும், பார்த்துப் பார்த்து துல்லியமாக வடிவமைக்கப்படுகிறதோ, அதைப் போலவே இந்த கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியும் இழைக்கப்படுகிறது. இந்தக் கட்டுமானப் பணியில் மட்டும் சுமார் 13,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் சுற்றளவு சுமார் 1 மைல். இந்த வளாகத்தில் மொத்தம் 8 கட்டடங்கள் அமையவுள்ளன. 1000 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியமும் இங்கே உருவாகி வருகிறது. இந்த அலுவலகம் திறந்தபின்பு ஆப்பிளின் கீ-நோட் நிகழ்ச்சிகள் இங்கேயே நடக்கவும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே கூறியபடி இந்த அலுவலகத்தின் மொத்த மின்சக்தியும் மரபுசாரா ஆற்றல் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. வெறும் அலுவலகமாக மட்டும் காட்சியளிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அலுவலகத்தை சுற்றிலும் 80% அளவிற்கு மரங்கள் நடப்படுகின்றன. இதனால் வெறும் கட்டடமாக இல்லாமல், பச்சைப் பசேல் என குட்டி வனம் போல காட்சியளிக்க உள்ளது இந்த டெக் கேம்பஸ்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஆயிரம் ஆண்டுகளில் தோன்றிய முக்கியமான 100 பேரில், முதல்வரின் பிறந்த தினம் இன்று!

மின்சாரமே இல்லாத ஓர் இரவை எண்ணிக் கொள்ளுங்கள். நம்மிடம் UPS இல்லை. ஜெனரேடர் இல்லை. உங்களை சுற்றி இருள் மட்டுமே. வேண்டுமானால், எண்ணெய் விளக்குகளையும், மெழுகுவர்த்தியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 170 ஆண்டுகளுக்கு முந்தைய, அப்படியான இருளில் ஒரு வீட்டில் ஏற்பட்ட வெளிச்சம், முன் எப்போதும் ஏற்பட்டிருக்காத அந்த வெளிச்சம் பின் வந்த ஆண்டுகளில் இந்த உலகத்தையே பிரகாசிக்க வைத்தது. அன்றைக்குத் தன் வரவால், வீட்டை வெளிச்சமாக்கிய எடிசன் இன்றைக்கும் என்றைக்குமான வெளிச்சத்தை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். 

எடிசன்

"நான் ஏன் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறேன் என்றால், என் அடுத்த கண்டுபிடிப்பிற்குத் தேவையான பணம் ஈட்டத்தான்" இப்படி சொல்லும் இந்த மனிதர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார். இத்தனை கண்டுபிடிப்புகளை செய்திருக்கிற எடிசனின் அம்மா நான்சி, அவரை பள்ளியில் சேர்த்த சில மாதங்களிலேயே ஆசிரியர் சொல்லி காதில் கேட்ட வார்த்தைகள் இவைதான்,"உங்கள் மகன் மூளை வளர்ச்சி இல்லாதவன்"

அந்தத் தாய் ஒன்றும் செய்யவில்லை. தன் பிள்ளையை கைபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அடிப்படையில் அவரும் பள்ளி ஆசிரியர்தான். அதனால் தன் மகனுக்கு தானே கற்றுக் கொடுத்தார். மூன்று வருடங்கள் வீட்டிலிருந்த தங்கள் மகனை சாமுவேல் எடிசனும், நான்சியும் ஏராளமான புத்தகங்களைப் படிக்க வைத்தனர். ஒரு புத்தகம் படித்தால், பாக்கெட் மணி அதிகரிக்கும் என்றெல்லாம் மகிழ்வித்து அவரை வளர்த்தனர். அவரை "நீ டிகிரி வாங்கணும் , வேலைக்கு போகணும்" என்றெல்லாம் டார்ச்சர் செய்யவில்லை. எடிசனின் இன்னொரு குறைபாடு சிறுவயதிலிருந்தே அவருக்கு சரியாய் காது கேட்காது. 

எடிசன் பேப்பர் விற்றார், கசாப்பு கடையில் வேலை செய்தார். காய்கறிகள் விற்றார். ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரயில் பெட்டியையே பதிப்பகம் ஆக்கி, "தி வீக்லி எரால்ட்" வார இதழை  நடத்தினார். எடிசன் பல்வேறுபட்ட வேலைகளைச் செய்தார். அதேபோல பல்வேறு சேட்டைகளையும் செய்தார். ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தபோது இவர் செய்த ஆய்வில் ஆசிட் எகிறிச் சென்று அவரின் முதலாளி அறையிலேயே விழுந்தது. அவர் ஆசிட்டுடன், எடிசனையும் வெளியே தள்ளிவிட்டார்.

1869 ல் நியூயார்க் சென்ற எடிசன், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பில்களை அச்சடிக்கும் கருவியை உருவாக்கினார். அந்த கருவியின் உரிமத்தை கோல்டு ஸ்டாக் கம்பெனியிடம் இருந்து கூலாக 40,000 டாலர்களை வாங்கும் போது எடிசனின் வயது  ஜஸ்ட்  22. கேமரா, கிராமஃபோன் என உலகெங்கும் நிறைந்திருக்கும் அவரின் கண்டுபிடிப்புகளுக்கு பின் அசுரத்தனமானதொரு உழைப்பு இருக்கிறது. எடிசன் மீதான விமர்சனங்களையும் நாம் பார்க்க வேண்டும். பல கண்டுபிடிப்புகளை ஆல்டரேஷன் செய்து இவர் உரிமம் பெற்றுக் கொண்டதும், நிறைய பேரின் உழைப்பை ஒற்றையாளாய் பெற்றுக் கொண்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவை. 

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த உலகின் மிக முக்கிய நூறு மனிதர்கள் LIFE இதழ் பட்டியலிட்டது. அதில் எந்த சந்தேகமும் இன்றி எடிசனின்  பெயரை முதலாவதாகத்  தேர்ந்தெடுத்தனர். 1870 களில் உலகின் மிக முக்கியமான விஞ்ஞானியாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்ட எடிசன், 1884 ல்  அவர் மனைவி மேரி புற்றுநோயால் இறந்த போனபின் சற்றே தளர்ந்துப்போனார். சில ஆண்டுகள் கழித்து மறுமணம் செய்து கொண்டார். பல தொழிற்கூடங்களையும் , ஆய்வகங்களையும் நிர்வகித்த எடிசன் சர்க்கரை நோயால் 1931 ல் அக்டோபர் 18 இறந்துபோனார். அவர் தன் மனைவி மினாவுக்கு பரிசளித்த வீட்டின் , பின்னால்  அடக்கம் செய்தனர். அவரின் கடைசி மூச்சு ஒரு டெஸ்ட் ட்யூபில் அடைக்கப்பட்டு Hendry Ford அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

உலகில் வாழ்ந்த பெரும்பாலான அறிவியல் அறிஞர்களின் வாழ்விலிருந்தும், விஞ்ஞானிகளின் வாழ்விலிருந்தும் நாம் ஒன்றை புரிந்து கொள்ளமுடியும், டார்கெட் என்ற ஒன்று அவர்களுக்கு இருக்கும் போது அதற்காக எந்த அளவிலும் உழைப்பார்கள். ஈஸியான வெற்றி என்பது எங்குமே இல்லை ஆனால் ஈஸியான ஹார்ட் வொர்க் என்பது இருக்கிறது. நமக்கு பிடித்ததை வாழ்க்கையில் செய்து கொண்டிருப்பதுதான் அந்த ஈஸியான ஹார்ட் வொர்க். 

1847 ல் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு, பாடுபட்டு, துயரப்பட்டு உயர்ந்தார் என்பது போன்ற ஸ்டிரியோடைப் சோகம் என்பதெல்லாம் தூக்கி எறிந்து விடலாம். குறைகளே வாழ்க்கையில் அதிகமிருந்த மனிதன் , இன்று உலகின் மிக முக்கிய மனிதனாக இருக்கிறார் ஏனென்றால் அவர் பிடித்ததை செய்தார். அதற்காக உழைத்தார். இன்று எடிசன் பிறந்தநாள் (பிப்ரவரி 11).

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தந்தை சமையலால் யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த தமிழக இளைஞர்..!

 

தமிழகத்தில் கோவை அருகில் உள்ள திருப்பூர் என்ற நகரைச் சேர்ந்த கோபிநாத் என்ற 26 வயது இளைஞர் தனது தந்தையின் சமையல் கலையை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவு செய்துள்ளார்.

 

திருப்பூர்: யூடியூப் இணையதளத்தில் ஒரே ஒரு வீடியோ அப்லோட் செய்த தமிழக மாணவர் ஒருவர் ஆறு மாதங்களில் ரூ.6.5 லட்சம் சம்பாதித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

 

தமிழகத்தில் கோவை அருகில் உள்ள திருப்பூர் என்ற நகரைச் சேர்ந்த கோபிநாத் என்ற 26 வயது இளைஞர் தனது தந்தையின் சமையல் கலையை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவு செய்துள்ளார். அவரே வீடியோ எடுத்து அவரே எடிட் செய்த இந்த வீடியோ உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று கூகுள் ஆட்சென்ஸ் மூலம் லட்சக்கணக்கில் இந்த வாலிபருக்கு வருமானத்தைக் கொடுத்துள்ளது. 

300 முட்டைகள் போட்டு குழம்பு

 

300 முட்டைகள் போட்டு குழம்பு

கோபிநாத், தனது தந்தை ஆறுமுகம் 300 முட்டைகள் போட்டு சுவையான குழம்பு வைக்கும் வீடியோவை எடுத்துள்ளார். இந்த குழம்பை தயார் செய்ய அவரது சகோதரர் மணிகண்டனும் உதவி செய்துள்ளார். இதேபோல் ஒரு முழு ஆட்டை வெட்டிக் குழம்பும் செய்யும் வீடியோவையும் எடுத்துள்ளார். இந்த இரண்டு வீடியோக்கள் இவரது வருமானத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.

 

42 வகை சமையல்

 

42 வகை சமையல் இதுவரை 42 வகையான சமையல் வீடியோக்களை தயார் செய்துள்ளார். இவரது வீடியோக்களை இதுவரை 30 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி 66000 பேர் இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். மேலும் 20 நாட்களில் மட்டும் இவரது யூடியூப் சேனலில் 50000 பேர் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ் பெற்ற வீடியோக்கள்

 

புகழ் பெற்ற வீடியோக்கள் மாட்டுக்கறி குழம்பு, ஆட்டின் குடல் குழம்பு, இறால் குழம்பு, வாத்துக்கறி குழம்பு ஆகிய வீடியோக்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறதாம்.

இயற்கையான சமையல்

 

இயற்கையான சமையல் கிராமிய மணத்துடன் விறகு அடுப்புகளை மட்டுமே பயன்படுத்தி இயற்கையாகவும், அதே சமயம் சுத்தமாகவும் தயார் செய்வதுதான் இவருடைய குடும்பத்தினரின் சிறப்பாம்.

 

மாதம் லட்சம் ரூபாய் வருமானம் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் முதல் மாதம் ரூ.8000 வருமானம் வந்தவுடன் முதலில் ஆச்சரியம் அடைந்த இவர், அடுத்த மாதத்தில் ரூ.45000 வருமானம் வந்தவுடன் இன்ப அதிர்ச்சி அடைந்தாராம். அதன்பின்னர் மூன்றாவது மாதத்தில் ரூ.1.05 லட்சமும், கடந்த மாதம் ரூ.3.10 லட்சமும் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் வருமானம் வந்துள்ளது. குறிப்பாகக் கடைசி ஒரே வாரத்தில் ரூ.2.13 லட்சம் வருமானம் வருவதற்கு இவர் தந்தை 300 முட்டைகளில் செய்த குழம்புதான் காரணமாம்.

உலகம் முழுவதும் பிரபலாமான தந்தை

 

உலகம் முழுவதும் பிரபலாமான தந்தை வருமானம் வருவது மட்டும் கோபிநாத்தின் மகிழ்ச்சி இல்லையாம். இன்று அவரது தந்தையின் சமையல் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டதில்தான் அவருக்குப் பெருமையாம். ஏழ்மை நிலையில் இருந்த தனது குடும்பத்தை எப்படியாவது முன்னேற்றத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற தனது கனவு தற்போது நிறைவேறிவிட்டதாகவும், மேலும் புதிய வகை வீடியோக்களை அதிகமாக உருவாக்கி தனது தந்தை புகழை மேன்மேலும் பரப்ப வேண்டும் என்பதே தனது கனவு என்றும் கோபிநாத் கூறுகிறார்.

குடும்பமே இப்போது யூடியூப் வீடியோவில்

 

குடும்பமே இப்போது யூடியூப் வீடியோவில் தற்போது கோபிநாத்தின் தாயார், தங்கை ஆகியோர்களும் யூடியூப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்களாம். மேலும் தற்போது திருப்பூர், கோவை, போன்ற பகுதிகளில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் சமையல் செய்யும் படப்பிடிப்பை தகுந்த அனுமதியுடன் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

யார் இந்த கோபிநாத்

 

இலக்கு

 

இலக்கு வாரம் ஒரு வீடியோ வீதம் யூடியூபில் பதிவு செய்து மொத்தம் 1000 வீடியோக்களை பதிவு செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் எதிர்காலத்தில் இயற்கை சமையலுடன் கூடிய மிகச்சிறந்த ஓட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்பதே இவரது விருப்பமாம்.

 

10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்த கோழி வறுவல் வீடியோ..!
 


Read more at: http://tamil.goodreturns.in/news/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சம்பளமும் கொடுத்து அதிக விடுமுறையும் அளிக்கும் கம்பெனி இதாங்க!

ஸ்ரெயல் சான்ட்பெர்க் சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினங்களை வெளியிட்டுள்ளார்

ஒவ்வொரு வருடமும் அலுவலகம் தனி நபருக்கான விடுமுறை நாட்களுக்கான அளவுகளை அறிவிக்கும். அப்படிப்பட்ட அறிவிப்பில் அதிக நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றால் எவ்வளவு ஹேப்பியாக இருப்போம். அப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தில்தான் இருக்கிறார்கள் ஃபேஸ்புக் பணியாளர்கள். சமூக வலைதளங்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஃபேஸ்புக் தனது ஊழியர்களுக்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது.

2017ம் ஆண்டின் மேக்கர்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பேஸ்புக் நிறுவனத்தின் சி.ஒ.ஒ. ஸ்ரெயல் சான்ட்பெர்க் ,பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தில் நிகழும் இறப்புக்கான விடுப்பு நாட்களை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் தகவல் வெளியிட்டுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி இந்த ஆண்டு ஜனவரி 1க்கு பிறகு நிறுவன ஊழியர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்குள் நிகழும் மரண நிகழ்வுகளுக்கு 20 நாட்கள்வரை விடுப்பு எடுத்து கொள்ளலாம். அதே போல் உறவினர்கள் வீட்டு இறப்புகளுக்கு 10 நாட்கள்வரை விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

There have been many times when I've been grateful to work at companies that supported families. When my son was born and I could take time off to focus on him. When my daughter came along and I got that time all over again. Every time one of them got sick, both my husband Dave and I had the ability to leave work to take care of them so we could decide whose turn it was to supply the patient with ginger ale. And then amid the nightmare of Dave's death when my kids needed me more than ever, I was grateful every day to work for a company that provides bereavement leave and flexibility. I needed both to start my recovery.

I know how rare that is, and I believe strongly that it shouldn't be. People should be able both to work and be there for their families. No one should face this trade-off. We need public policies that make it easier for people to care for their children and aging parents and for families to mourn and heal after loss. Making it easier for more Americans to be the workers and family members they want to be will make our economy and country stronger. Companies that stand by the people who work for them do the right thing and the smart thing - it helps them serve their mission, live their values, and improve their bottom line by increasing the loyalty and performance of their workforce.

I'm really proud of Facebook's commitment. Our parental leave policy is one of the best in the nation. We offer four months of paid time off for new moms and dads for childbirth and adoption. Our commitment to supporting parents starts at the very top – Mark Zuckerberg made sure our parental leave policy covered both moms and dads long before I got to Facebook and led by example by taking parental leave after Max was born.

Today, we're taking another step. We're extending bereavement leave to give our employees more time to grieve and recover and will now provide paid family leave so they can care for sick family members as well. Only 60 percent of private sector workers in the United States get paid time off after the death of a loved one and usually just a few days. Starting today, Facebook employees will have up to 20 days paid leave to grieve an immediate family member, up to 10 days to grieve an extended family member, and will be able to take up to six weeks of paid leave to care for a sick relative. We're also introducing paid family sick time – three days to take care of a family member with a short-term illness, like a child with the flu. This comes on top of our policies announced in 2015 to ensure that our contractors and vendors are paid a minimum of $15 an hour, receive paid vacation and sick days, and receive income during parental leave. Great workforce policies make for great employees. As always, I am grateful to my colleagues, especially Mark and our Head of People Lori Matloff Goler, for their leadership and for their support.

Our workforce is by far our greatest asset— and we've seen again and again that being committed to our people makes our people more committed to Facebook. At a time when nearly nine of ten working women in the United States have no parental or family leave, women make 80 cents on the dollar compared to men, and there's no system of national paid leave, companies need to step-up and lead. I hope more companies will join us and others making similar moves, because America's families deserve support.

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Personen, die sitzen
 
Gefällt mirWeitere Reaktionen anzeigen
Kommentieren

 

 

மேலும், இந்த புதிய அறிவிப்பின்படி ஊழியர்கள் தன்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுள் யாராவது நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவர்களை கவனித்து கொள்ள 6 வாரங்கள் வரை விடுப்பு எடுக்கவும், சிறிய அளவிலான உடல்நலக்குறைவுகளுக்கு 3 நாட்களும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

இதுபோக ஏற்க்கனவே, ஃபேஸ்புக் ஊழியர்கள் யாருக்காவது குழந்தை பிறந்தால் அவர்கள் நான்கு மாதங்கள்வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறலாம். மேலும் மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கணவர்களுக்கும் சிறப்பு விடுமுறைகள் உண்டு. அதேபோல் ஆண்டுக்கு 21 நாட்கள் மருத்துவ விடுப்பும் எடுத்து கொள்ள வசதிகள் உண்டு.

பணியாளர்கள்தான் நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து. அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் விடுமுறை அளிப்பது நிறுவனத்தின் கடமை. அமெரிக்காவில் முன்பு 10ல் 9 பெண்களுக்கு குடும்ப விடுப்புகள் அளிக்கப்படாமல் இருந்தது. அவர்கள் ஆன்களை போன்றே 80 சதவிகிதம் உழைக்கிறார்கள். இன்னும் நாட்டில் சம்பளத்துடன் கூடிய தேசிய விடுமுறைகள் இல்லை. நிறுவனங்கள் இதனை பின்பற்ற வேண்டும். இது பணியாளர்களுக்கு நன்மை பயக்கும் என்றார்.

இன்னோரு ஆச்சர்யமான தகவல் என்னெவென்றால் கூகுள்தான் உலகில் பணியாளர்கள் உற்சாகமாக பணிபுரியும் நிறுவனமாக இருந்து வருகிறது. ஃபேஸ்புக் அந்த இடத்தை மெல்ல மெல்ல தட்டி பறித்து வருகிறது. அமெரிக்காவில் குடியுரிமை பிரச்னை காரணமாக பணியாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருந்த போதும் முதலில் குரல் எழுப்பியது ஃபேஸ்புக் தான்.  மார்க் நீங்க வேற லெவல் பாஸ் என மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் ஃபேஸ்புக் நிர்வாகிகள். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

35p1.jpg

bullet.jpg மனதில்பட்டதைப் பட்டெனப் பேசிவிடுவார் அலியா பட். தன்னுடைய பேட்டிகளில் காதல், ரிலேஷன்ஷிப் பற்றி எல்லாம் நிறையவே வெளிப்படையாகப்  பேசியவர், இப்போது நடிகைகளின் உரிமைக்காகவும் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். `நடிகைகள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் இருப்பார்கள் என எல்லோரும் கற்பனையிலேயே வாழ்கிறார்கள். நடிகைகளும் பெண்கள்தான். அவர்களுக்கும் காதல், குடும்பம், அப்பா, அம்மா, காதலன் என எல்லோருமே இருக்கிறார்கள். வெறும் அழகு பொம்மைகளாகப் பார்த்து ரசிக்கும் பொருளாக நடிகைகளைப் பார்க்காதீர்கள். உணர்வுகள் உள்ள சகமனுஷியாகப் பாருங்கள்' என போல்டாகப் பேட்டிதட்ட, `சூப்பர்ஜி... சூப்பர்ஜி' எனக் கைதட்டிக்கொண்டிருக்கிறது பாலிவுட். அடி தூள்!

bullet.jpg கடந்த பிப்ரவரி 2-ம் தேதி பெரம்பூர் டு பெசன்ட் நகர் போய்க்கொண்டிருந்த 29C பஸ், பாட்டும் தாளமுமாகப் பயணித்தது. பேருந்துக்குள் ஒலித்தது காலேஜ் கானா அல்ல... கச்சிதமான கர்னாடக சங்கீதம். பேருந்தில் கச்சேரி நிகழ்த்தியவர் பாடகர் டி.எம்.கிருஷ்ணா. விவரம் தெரியாமல் பேருந்துக்குள் ஏறியவர்களுக்கு இன்ப இசை அதிர்ச்சி. அண்ணா சாலையில் அதுவும் கசகசக்கும் மாலை நேர டிராஃபிக்கில், ஒரு பேருந்து இசையும் இன்பமுமாகப் போனதை ஆச்சர்யமாகப் பார்த்தது சென்னை. இசை மழை எங்கும்... பொழிகிறது!

 bullet.jpgசீனியர்கள் எல்லோரும் குடும்பம், குட்டிகள் என செட்டில் ஆகிவிட, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாதான் இந்திய கிரிக்கெட்டின் லவ்வர் பாய். ஹர்திக் பாண்டியா - லிஷா ஷர்மா ஜோடிதான் கிரிக்கெட் வட்டாரத்தின் கலகல கப்புள். கொல்கத்தாவில் பிறந்து, தற்போது பாரீஸில் வசித்துவருபவர் மாடலிங் பெண் லிஷா ஷர்மா. ஃபேஷன் ஷோ ஒன்றில் இருவருக்கும் முளைத்த நட்பு, அடுத்தடுத்த சந்திப்புகளில் காதலாகி இப்போது லிஷாவின் இன்ஸ்டாகிராமில் போட்டோபோடுவது வரை வளர்ந்து நிற்கிறது. பட்டையக் கெளப்பு பாண்டியா!

35p2.jpg

bullet.jpg`ஆக்‌ஷன் படங்களில் நடித்து நடித்து, எனக்குச் சலித்துவிட்டது. முழுமையான காதல் படங்களில் நடிக்கவே எனக்கு ஆசையாக உள்ளது. அதுவும் இந்தியப் படத்தில் காதல் நாயகனாக நடிக்க ஆசை. இயக்குநர்கள், காதல் கதையுடன் வாங்க' என, ஓப்பன் அழைப்பிதழ் கொடுத்திருந்தார் ஆக்‌ஷன் ஹீரோ ஜாக்கி சான். இதற்குக் காரணம், 11 வருடங்களுக்குப் பிறகு, `குங்ஃபூ யோகா' என்ற இந்தியப் படத்தில் சோனு சூட்டுடன் நடித்திருந்தார் ஜாக்கி. படம் நெகட்டிவ் விமர்சனங்களை வாங்கி, பாக்ஸ் ஆபீஸிலும் பஞ்சராக, முன்பு ஆசையாகப் பேசியவர், இப்போது `இந்தியப் படமா... ஆளைவுட்ரா!' என நாலு கால் பாய்ச்சலில் தாவிக்குதித்து ஓடுகிறாராம். ஜாக்கியின் சேவை, தேவை!

35p3.jpg

bullet.jpgஸ்ருதிஹாசனும் தமன்னாவும் கோலிவுட்டின் உடன்பிறவா சகோதரிகள் எனச் சொல்லும் அளவுக்கு அவ்வளவு நெருக்கமான நண்பர்கள்  ஆகிவிட்டார்கள். சமீபத்தில் தன்னுடைய 31-வது பிறந்தநாளை தன் நீலாங்கரை வீட்டில் கொண்டாடினார் ஸ்ருதி. 25 பேர் மட்டுமே அழைக்கப்பட்ட அந்தப் பிரத்யேக பார்ட்டிக்கு வந்த ஒரே ஹீரோயின், தமன்னா மட்டும்தான். பார்ட்டி கேர்ள்ஸ்!

 bullet.jpgபிரபாஸ் - ராணா ஜோடி, `பாகுபலி' படத்தில்தான் பரம எனிமீஸ். நிஜத்தில் இருவருமே உயிருக்கு உயிரான நண்பேன்டாஸ். அதை நிரூபிக்கும் வகையில், பட வெளியீட்டுப் பிரச்னையில் இருந்த ராணாவுக்குத் தோள்கொடுத்து உதவியிருக்கிறார் பிரபாஸ். 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் `காஸி'. இந்தப் பின்னணியில் `காஸி' என்ற பெயரிலேயே ஒரு படம் தயாரானது. இதில் ராணா டகுபதிதான் நாயகன். தமிழ்,தெலுங்கு,இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் வர, இரண்டு கோடி ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார் பிரபாஸ். காவிய நட்பு!

35p4.jpg

bullet.jpgதமிழ்ப் படங்களுக்கு இசையமைப்பது மட்டும் அல்லாமல், உலகம் முழுக்கச் சுற்றி இசை நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொண்டே இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். சமீபத்தில் சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக `லெட்ஸ் கோ கிரேஸி' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார். நிகழ்ச்சி நாளில் லேசாக மழை தூற, அதையும் மீறி ஆயிரக்கணக்கில் வந்து குவிந்தனர் ரசிகர்கள். வந்தவர்களைத் தன்னுடைய அதிரடியான இசை மழையில் நனைத்து அனுப்பியிருக்கிறார் அனிருத். மேகம்... கொட்டட்டும்! 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

-30 டிகிரி குளிரில் மாஸ்கோ தெருக்களில் வாழும் 15,000 பேர்

ரஷ்யாவில் குளிர் மைனஸ் முப்பது டிகிரி அளவுக்கு உறையச் செய்யும் நிலையில், மாஸ்கோவின் வீதிகளில் வாழும் பதினையாயிரம் பேரின் நிலை மிகவும் கொடூரமானது.


அவர்களால் குளிர் காலத்தை தாங்க முடியுமா?

  • தொடங்கியவர்

டேஞ்சர் பசங்க!

 

`குரைக்கிற நாய் கடிக்காது'னு பழமொழி சொன்னாலும், நாய்னா பயப்படுற கோஷ்டி இங்கே அதிகம். குரைக்கிறதை விடுங்க, இதோ... இந்த நாய்களெல்லாம் முறைச்சாலே முழி பிதுங்குமாம். அந்தளவுக்குப் பயமுறுத்தும் நாய்களில் சில...

40p1.jpg

American Bulldog : பார்க்கவே படுபயங்கரமாக இருக்கும் தெற்கு அமெரிக்காவைச் சேர்ந்த நாய் இனங்களுள் ஒன்றுதான் `அமெரிக்கன் புல்டாக்'. டென்மார்க், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த வகை நாய்களை வளர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஃபேமஸ் கார்ட்டூனான `டாம் அண்ட் ஜெர்ரியில்' இடம்பெற்றிருக்கும் `ஸ்பைக்' மற்றும் `டைக்' இந்த இன நாய்களை மையமாக வைத்து சித்திரிக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தாம். ஆனால், அதில் காட்டுவதுபோல் காமெடி டாக் இல்லை இது. இந்த வகை நாய்களிடம் கொஞ்சம் உஷாராகத் தான் இருக்க வேண்டும்.

40p2.jpg

Bandog : இந்த நாய்க்குச் சொந்த ஊர் `இங்கிலாந்து'. பழைமையான இனத்தைச் சேர்ந்த நாய்களுள் ஒன்று தான் `பான்டாக்'. நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த இன நாய்களை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாய் வளர்க்கும் சொந்தக்காரரைத் தவிர யாருக்கும் அடங்காது. இரவு நேரத்தில் ஏதேனும் இடத்தைப் பாதுகாப்பதற்காக இந்த இன நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தன. வாலை ஆட்டுகிறது என்பதற்காக அருகே சென்றால், ஆயுசு முடிந்துவிடும். ஓங்கிக் கடித்தால் ஒன்றரை கிலோ காலியாம்.

40p3.jpg

Neapolitan Mastiff :கன்றுக்குட்டி போல் தோற்றம் கொண்டிருக்கும் இன வகை நாய்தான் `நீயாபோலிடன் மாஸ்டிஃப்'. முகம் சாதுவாக உள்ளதால், இதைச் சாதாரணமாக எடைபோட்டு விடக் கூடாது. வளர்ந்து பருவத்தை எட்டினால் இதனுடைய எடை 60 முதல் 70 கிலோ வரை இருக்கும். தனியார் வீட்டைப் பாதுகாப்பதற்காக வளர்க்கப்பட்டு வந்த நாயிடம் தனியாக சிக்கினால் சின்னாபின்னம் தான். `

40p4.jpg

Wolfdog : சாம்பல் நிறத்தில், பார்க்க ஓநாய் போல் தோற்றம் கொண்டிருக்கும் உல்ஃப்டாகின் சொந்த ஊர் அமெரிக்கா. இதில் `ஜெர்மன் ஷெப்பர்ட்', `சைபீரியன் ஹஸ்கி', `அலாஸ்கன் மல்ம்யூட்ஸ்' எனப் பலவகைகள் உள்ளன. ஓநாய் எப்படி ஊளையிடுமோ அதே போல் ஊளையிடுவது இதனுடைய தனித்துவ குணங்களில் ஒன்று. இதன் வகைகளுள் ஒன்றான சைபீரியன் ஹஸ்கி பனிப்பிர தேசங்களில் வண்டியிழுக்கப் பயன்படும். பார்க்க அழகாக இருக்கிறது என்று அருகே சென்று கொஞ்சினால், உயிர்ப் பிச்சை கேட்டுக் கெஞ்சும்படி ஆகிவிடும் மக்களே!

40p5.jpg

Boerboel : திடமான உடற்கட்டைக் கொண்டுள்ள இந்தப் பயலின் சொந்த ஊர் `தென் ஆப்பிரிக்கா'. பார்க்க அப்பாவி போல் முகம் இருந்தாலும் ஆபத்துமிகுந்த நாய் வகைகளுள் ஒன்றுதான் `போயர்போயல்'. பிரான்ஸ், மலேசியா, மொரீஷியஸ், பெர்முடா போன்ற நாடுகளில் இதை வளர்க்கத் தடை விதித்துள்ளனர். இதற்கு முறையாகப் பயிற்சியளித்தால் ஊரோடு ஒத்துப்போகும் தன்மையுடையது. இதற்குப் பிடிக்காத முறையில் சீண்ட நினைத்தால், வேரோடு செத்துதான் போக வேண்டும்.

40p6.jpg

Dogo Argentino : பார்த்தால் வெகுளியாக, அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் நாய் வகைதான் `டோகோ அர்ஜென்டினோ'. பால் வடியும் முகத்தை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. இந்த வகை நாய்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்திவந்தனர். இதன் வம்சாவளியாக கிரேட் டேன், பாக்ஸர், பாயின்டர் என்ற பல நாய் வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ‘பாட்ஷா’ படத்தில் சூப்பர் ஸ்டார் அருகில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் நாய்தான் `கிரேட் டேன்'.

40p7.jpg

Pit Bull : இதன் உருவம் மிக மிகச் சிறியது ஆனால், பாய்ந்தால் தொண்டையைக் கவ்வும் அளவுக்கு மிகவும் வலிமை வாய்ந்த நாய். இதன் சொந்த ஊர் 'அமெரிக்கா'. இந்த ‘பிட்புல்’ வகை நாய்களை காவல்துறை, ராணுவம் போன்ற இடங்களில் பயன்படுத்திவந்தனர். இதனிடம் நட்பாகப் பழகினால் உயிரைக்கூடக் கொடுக்கும் அளவுக்கு மிகவும் பாசமான நாய். இருந்தாலும் சில நாடுகளில் இந்த வகை நாய்களுக்குத் தடை விதித்துள்ளனர்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.