Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சிறகுகள் முளைத்த, உலகின் முதல் பெண் வாலண்டினா தெரஸ்கோவா!

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்

மே 21, 1959 அந்தப் பெண் கீழே பார்த்தாள். எப்படியும் தரையில் இருந்து 3000 மீட்டர் உயரத்தில் அவள் செல்லும் விமானம் பறந்து கொண்டிருக்கும். மூச்சை நன்றாக இழுத்துவிட்டு கீழே குதித்தாள். அந்த கணம் 22 வயதுடைய அந்தப் பெண்ணின் மனதில் என்னென்ன ஓடியிருக்கும்?

விவசாயியான அப்பா... ராணுவத்தில் சேர்ந்து உயிரை விட்டபோது வீடெங்கும் பரவிக்கிடந்த அழுகை, பள்ளிக்குத் தாமதமாகச் சேர்ந்து அதனைத் தொடர முடியாமல் வெளியேற்றப்பட்டதன் வெறுமை, அம்மா, சகோதரன், சகோதரி என தன் குடும்பமே நூல் ஆலையில் படும் கஷ்டங்கள்... இப்படி அந்த மனதில் ஓடுவதற்கான வாய்ப்புள்ள சோகங்கள் எண்ணற்றவை.

குதித்த ஒரு நிமிடத்தில், ஃபீனிக்ஸ் பறவையின் சிறகைப்போல விரிந்தது பாராசூட். அந்த கணத்தில் பரிபூரண சுதந்திரத்தின் சுவையை அந்த மனம் உணர்ந்திருக்கும். அதனால்தான், அடுத்தடுத்து 163 முறை வானத்திலிருந்து குதித்து (Sky Diving) தன் மனதில் ஆழமான தீரத்தை நிலைநாட்டினார் வாலண்டினா தெரஸ்கோவா (Valentina Tereshkova). விண்வெளிக்குச் சென்ற உலகின் முதல் பெண்மணி.

1937-ம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த வாலண்டினா தெரஸ்கோவா, அடிப்படையில் விமானி கிடையாது. விமானம் ஓட்டிய அனுபவம் கிடையாது. ஒன்றே ஒன்றை தயக்கம் இல்லாமல் செய்வார். அது  ஸ்கை டைவிங்.
பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் போனபோது, தபால் வழியாக படித்தவாறு ஒரு ஜவுளி ஆலையில் வேலை செய்துகொண்டிருந்தார். 22 வயதில் ஏரோஸ்லேவல் பறக்கும் கழகத்தில் சேர்ந்த பின்புதான் தொடர்ந்து பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சி எடுத்தார். மாஸ்கோ சதுக்கத்தில் புரட்சி தின கொண்டாட்டத்தில் தெரஸ்கோவாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்று, ரஷ்ய அதிபர் முன்னிலையில் ஒரு பெண் ஸ்கை டைவிங் நிகழ்த்தியபோது சதுக்கமே ஆராவாரத்தில் அதிர்ந்தது.

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்

தெரஸ்கோவாவுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது, அரசியல் முகம். தன் ஜவுளி ஆலையில் வேலைசெய்த பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், சவால்களை ஒருங்கிணைத்து தீர்க்க, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார்.

1961-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்று வந்ததும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு பெண்ணை விண்வெளிக்கு அனுப்ப தீர்மானித்தது ரஷ்யா. அந்த அறிவிப்பை மக்கள் முன்வைத்து பெண் வீரர்கள் குழுவை தேர்ந்தெடுக்க முடிவுசெய்தது. தெரஸ்கோவாவின் விண்ணப்பத்தோடு, 400 விண்ணப்பங்கள். சிபாரிசு என்ற வார்த்தைக்கே அங்கு இடமில்லை.
அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது பாராசூட்டில் இருந்து குதிப்பது. தெரஸ்கோவாவின் பலமே அதுதான். நிறைய பயிற்சிகளுக்குப் பிறகு தேர்வுசெய்யப்பட்ட ஐந்து பேரில் முதல் பெயர், வாலண்டினா தெரஸ்கோவா.

விண்வெளி யாருக்குத்தான் ஆச்சர்யம் தரவில்லை? என்ன சவால் என்றால், இதுவரை பெண்களை அனுப்பியதே இல்லை. உடலளவில் அவர்கள் சந்திக்கப்போகும் பிரச்னைகளுக்கு சோதனை எலியே தெரஸ்கோவா தான். ஆண்களுக்கு, பெண்களுக்கு என்றெல்லாம் தனித்தனி பயிற்சிகள் கொடுக்க முடியாது. அறிவுச்சார்ந்த பயிற்சியும் உடல்சார்ந்த பயிற்சியும் பின்னிப்பெடலெடுக்க தொடங்கியது. 15 மாதங்களாக தொடர்ந்தன உடல் பயிற்சிகள். மனரீதியான பயிற்சிக்காக, தனியறை இருட்டில் பல மணி நேரம்... பல நாட்கள்கூட அடைக்கப்பட்டிருப்பார்.

'வோஸ்டாக் - 6' என்பதுதான் தெரஸ்கோவா பயணம் செய்த விண்கலத்தின் பெயர். ஜூன் 16, 1963 அன்று உலகின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை விண்வெளியில் பாய்ந்தார். வெல்லரி பைக்கோஸ்கி என்னும் விண்வெளி வீரரும் 'வோஸ்டாக் - 5' என்ற விண்கலத்தின்  மூலம் இரண்டு நாட்கள் முன்னதாக அனுப்பப்பட்டார். விண்வெளியைச் சுற்றிக்கொண்டிருந்த இந்த விண்கலங்கள், ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டன. வோஸ்டாக் ஆறில் இருந்த வாலண்டினா, பைக்கோஸ்கியை தொடர்புகொள்ள முயற்சித்தார். இருவரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். ஒரு பெண்ணும் ஆணும் விண்வெளியில் உரையாடிய தருணம் அது.

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்விண்வெளியில் இருந்துகொண்டு சோவியத் பிரதமர் குருசேவ் உடன் பேசியபின் தெரஸ்கோவா, ரேடியோவில் பேசினார். "நான் சீகால் (seagull) விமானத்தில் இருந்து பேசுகிறேன். நன்றாக இருக்கிறேன். அடிவானத்தில் அது வெளிறிய ஊதா நிறத்தில், ஊதாக் கோடுகளுடன் காட்சி அளிக்கிறது. அது பூமி."

வளிமண்டலத்தின் ஏரோசோல் படலங்கள், தெரஸ்கோவா எடுத்த புகைப்படங்கள் மூலம்தான் தெரியவந்தது. அந்த விண்கலம் மூலம் 2 நாட்கள் 22 மணி நேரம் 50 நிமிடங்கள் (கிட்டத்தட்ட மூன்று நாட்கள்) விண்வெளியில் இருந்தவாறு பூமியை 48 முறை சுற்றி வந்தார் தெரஸ்கோவா.

ஜூன் 19... விண்கலம் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்தபோது, சுமார் 6000 மீட்டர் இருக்கும். ஒருமுறை நிதானித்து வானத்தில் இருந்து குதித்த தெரஸ்கோவா, உண்மையான ஃபீனிக்ஸ் போல தெரிந்தார். மாபெரும் இறக்கைகளான பாராசூட்டில், கஜகஸ்தானின் பாவின்ஸ்கி என்னும் பண்ணையில் தரையிறங்கினார். அவரை மக்கள் சூழ்ந்துகொண்டு கொண்டாடித் தீர்த்தனர்.

அந்த வரலாற்று பெண் மகள், 1963-ம் ஆண்டு ஆண்ட்ரியன் நிக்கோலேயவ் என்னும் விண்வெளி வீரரை காதலித்து மணந்துகொண்டார். ரஷியாவின் மூன்றாவது விண்வெளி வீரர் அவர். யூரி ககாரி பயிற்சி மையத்தில் சீனியர் விஞ்ஞானியாக இருந்து ஓய்வுபெற்ற தெரஸ்கோவா, வருகிற மார்ச் ஆறாம் தேதி 80 வயதை தொடுகிறார்.

விண்வெளிப் பயணம் என்பது ஓர் உல்லாசப் பயணம் அல்ல. இந்தப் பேரண்டத்தில் மனிதன் என்பவன் நுண்துகள். அந்தப் பிரம்மாண்டத்தை காண முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியின் மணிமகுடக் கல்லாக வாலாண்டினா திகழ்கிறார்.

மாஸ்கோவுக்கு அருகில் உள்ள RKK எனர்ஜியா மியூசியத்தில் முதல் பெண்ணை ஏந்திக்கொண்டு பறந்த அந்த விண்கலம், இன்றும் நின்றுகொண்டிருக்கிறது. அந்த விண்கலம் என்றும் தெரஸ்கோவாவின் பெயர் சொல்லிக்கொண்டிருக்கும்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: கண்ணாமூச்சி கானல் நீர்!

 
mirage_3132973f.jpg
 
 
 

வெயில் காலங்களில் கானல் நீரை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். கானல் நீர் என்பது, நம் கண்கள் செய்யும் பிழையா, கற்பனை செய்யும் பிழையா என்றால் இரண்டுமில்லை. கானல் நீருக்குக் காரணம் இயற்பியல் நடத்தும் இயற்கை விளையாட்டுதான். இந்தக் கானல் நீர் எப்படித் தோன்றுகிறது?

பொதுவாகப் பாலைவனங்களில் மட்டும்தான் கானல் நீர் தோன்றுவதாக நாம் நினைக்கிறோம். அப்படியல்ல; சூரியனின் வெப்பம் தகிக்கும் எல்லா இடங்களிலும் இந்தக் கானல் நீர் தோன்றும். வெப்பம் மிகுந்த தார்ச்சாலைகளில்கூடத் தண்ணீர் பரவி ஓடுவது போன்ற காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். தார்ச்சாலையில் ஏதோ தண்ணீர் லாரி தண்ணீரைக் கொட்டிச் சென்றிருக்கலாம் என்றுகூட நாம் நினைத்திருப்போம். அருகில் சென்று பார்க்கும்போதுதான் தெரியும், அத்தனையும் மாயம் என்று.

நல்ல மதிய வெயில் நேரத்தில் தார்ச்சாலையில் நடந்து செல்லும்போதும், வாகனங்களில் செல்லும்போதும்கூடத் தண்ணீர் ஓடுகிற (பொய்) தோற்றத்தைப் பார்க்க முடியும். சரி, இயற்கை நம்மை எப்படி இப்படி ஏமாற்றுகிறது?

தரையை ஒட்டிய பகுதியில் அழுத்தம் குறைவான காற்று அடுக்கும், இந்த அழுத்தம் குறைவான காற்று அடுக்கிற்கு மேலே அதிக அழுத்தமுள்ள காற்று அடுக்கும் உருவாகும்போது மணல் தரையானது கண்ணாடி மாதிரியான தன்மையைப் பெற்று விடுகிறது.

அதாவது அழுத்தம் குறைவான காற்றடுக்கின் மீது அதிக அழுத்தம் உள்ள காற்று அடுக்கு வரும்போது, இந்தக் கானல் நீர், தெரிகிறது. நாம் தரையைப் பார்க்கிற கோணமும், கானல் நீர் தோற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படியும் சொல்லலாம், பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் தரையில் பட்டு வளை கோணத்திலேயே எதிரொளிக்கின்றன. நாம் பார்க்கிற கோணம் செங்குத்தாகவோ, நேர்க்கோட்டுக் கோணமாகவோ இருந்தால், கானல் நீர் தோன்றுகிறது.

தார்ச்சாலைகளில் கானல் நீர் காணப்படுவதற்கும், வெப்பமும், கோணமும்தான் காரணம். தார்ச்சாலைகள் கறுப்பாக இருப்பதால் அதிகமாகச் சூடாகின்றன. கறுப்பான பொருட்கள் அதிக வெப்பத்தை ஈர்க்கும் என்பது தெரிந்த விஷயம்தான்.

mirage_2_3132974a.jpg

தார்ச்சாலைகளில் மேற்பரப்பில் அதிக வெப்பம் உருவாகிக் காற்றின் எடை குறைகிறது. இந்தக் குறைவான காற்று அடுக்கின் மேல் சற்றுக் கூடுதலான அழுத்தம் கொண்ட காற்று அடுக்கு உருவாகிறது. எனவே கானல் நீர் தோன்றுவதற்கான காற்றடுக்கு சூழல் தார்ச்சாலைகளில் அடிக்கடி உருவாகிவிடுகிறது.

மிக முக்கியமான விளக்கம் ஒன்று இங்கு தேவைப்படுகிறது.

கானல் நீர் தோன்றுவதற்குத் தரையை ஒட்டிய அடியடுக்கில் அழுத்தம் குறைந்த, எடை குறைந்த காற்று இருக்கிறது. இந்த அடுக்கிற்கு மேல்தான் எடை அதிகமான அழுத்தம் அதிகமான காற்று அடுக்கு இருக்கிறது. இது ஆச்சரியமான விஷயம். எடை அதிகமான காற்று எப்படி எடை குறைந்த காற்றுக்கு மேலே இருக்க முடியும்? நல்ல கேள்வி! முக்கியமான கேள்வி!

காற்று இயங்கிக்கொண்டே இருக்கிறது. அடர்த்தி அதிகமாக இருக்கும் காற்று சூடாக்கப்பட்டு மேலே செல்வது என்பது தொடர்ச்சியாக, சுழற்சியாக நடந்துகொண்டே இருக்கிறது. எனவே பாலைவன மணல் மேற்பரப்பில், தார்ச்சாலைகளின் மேற்பரப்பில், கீழ் அடுக்கில் அடர்த்தி குறைவான காற்று குறைந்த அளவில் இருந்துகொண்டே இருக்கும்.

மாணவர்களே இப்போது புரிகிறதா? அதிகமான வெப்பம், காற்று அடுக்கில் ஏற்படுத்தும் அழுத்த மாறுபாடு, நாம் தரையைப் பார்க்கிற கோணம் ஆகியவைதான் கானல் நீருக்குக் காரணம்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

லட்சுமி பூஜை செய்த மைலி சைரஸ்!

மிலே சைரஸ்

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஹாலிவுட் நடிகையும், பாடகருமான மைலி சைரஸ் குறித்து வைரல் செய்திகள் வருவது வாடிக்கையான ஒன்று. ஆனால், இந்த முறை அவர் தனது வீட்டில் லட்சுமி பூஜை செய்தது தொடர்பான செய்திதான் வைரல். பூஜைக்காக அவர் வீட்டை அலங்கரித்து, தேங்காய், பழம்,  பூ ஆகிய செட் அப்களுடன் பக்காவாக பூஜை செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். மேலும், இதற்காக புரோகிதர் ஒருவரையும் அழைத்து இந்தியாவில் நடப்பது போலவே லட்சுமி பூஜை செய்துள்ளார் சைரஸ்.

Miley Cyrus

 

 
 
 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு கடைசி இடம்!

trump-super-pac-problem_23401.jpg

அமெரிக்காவில் புதியதாக ஒரு அதிபர் பதவி ஏற்றவுடன் அவருக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு மற்றும் அவரது செயல்பாடு ஆகியவற்றைப் பற்றி கருத்துக்கணிப்பு நடத்துவது வழக்கம். புதிதாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் குறித்து அமெரிக்க மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பினை சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. நிறுவனங்கள் இணைந்து நடத்தியது. அதில், 53% பேர் டிரம்பின் செயல்பாடுகள் வரவேற்க கூடியதாக இல்லை என்றும், 44% பேர் செயல்பாடுகள் சரியாக உள்ளது என தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். எனவே இந்த கருத்துக்கணிப்பில் முன்பிருந்த அமெரிக்க அதிபர்களை விட செல்வாக்கில் கடைசி இடத்தில் இருக்கிறார், டிரம்ப். முன்னர் ஒபாமா பதவியேற்றபோது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பராக் ஒபாமா மக்கள் செல்வாக்கில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

முன்னாள், இந்நாள் முதல்வர்களின் இல்லங்கள் நள்ளிரவில் எப்படி இருக்கின்றன? #SpotVisit

மிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவியேற்றுவிட்டார். தமிழக முதல்வர்களின் பட்டியலில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது.

சரி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளும், இந்நாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி வீடும் இரவில் எப்படி இருக்கின்றன, அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய ஒரு ரவுண்ட் அடித்தோம். அங்கு நடந்தது அனைத்தும் அப்படியே இங்கே... 

மு.கருணாநிதி, கோபாலபுரம் : 

கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு இரவு 10.30 மணிக்கு சென்றோம். வீட்டு நுழைவாயிலில் துப்பாக்கியுடன் இரு காவலர்கள், பின் வாசலில் ஒரு காவலர் என மொத்தம் மூன்று காவலர்கள் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு தலைமையாக ஒரு எஸ்.பி-யும் அங்கு இருந்தார். இவர்கள் நால்வரைத் தவிர, அந்த இரவில் வேறு யாரையும் காணோம். நாம் சென்றதும், நிதானமாக வந்து நம்மை விசாரித்தார்கள். அதன்பின் வெகு இயல்பாக நம்மிடம் பேசத்தொடங்கினார்கள். 

 
தலைவர் முதல் தளத்தில் இருக்கார். இப்போ கீழே வருவது கிடையாது. தளபதி வந்தார்ன்னா, சில எம்.எல்.ஏ-க்கள் அவர்கூட  வருவாங்க. அய்யாவை போய் பார்த்துட்டு கிளம்பிடுவாங்க. மற்றபடி இரவு நேரத்தில் யாரும் வரமாட்டாங்க. அதிகபட்சம் ஒன்பது மணிக்கே இந்த ஏரியா கப்சிப்னு அமைதியாகிடும். வெளியூர்ல இருந்து யாராவது வந்தாங்கன்னா... 'இதுதான் கலைஞர் இல்லமா?'னு ஆச்சர்யமாகப் பார்ப்பாங்க. எங்ககிட்ட 'போட்டோ எடுத்துக்கலாமா?'னு கேட்பாங்க. 'அமைதியாக எடுத்துட்டுப் போங்க'னு நாங்க சொன்னதும், அவர்களும் போட்டோ பிடித்துக்கொண்டு போய்டுவாங்க. நாங்களும் யாருக்கும் எந்த கெடுபிடியும் கொடுக்கறதில்லை. நாங்க இங்கயே மாறி மாறி ட்யூட்டியில் இருப்பதால், அடிக்கடி அய்யாவை (கருணாநிதியை) பார்ப்போம். ஒரு பிரச்னையும் இல்லை." என்றவரிடம், "வாசல் கதவு, இந்த நேரத்திலும் திறந்தே இருக்கிறதே?" என கேட்டோம்... சிரித்தவர், "சார், அய்யா வீட்டு கதவு பெரும்பாலும் மூடவே மாட்டாங்க. எப்போதுமே திறந்துதான் இருக்கும். வெளியே நாங்கதான் பாதுகாப்புக்கு இருக்கோமே. எந்த தலைவர் வீட்டிலும் இல்லாத ஸ்பெஷல் இது" என பஞ்ச் வைத்து சிரித்தவர் மீண்டும் அவரது இடத்திலேயே துப்பாக்கியைப் பிடித்த நிலையில்போய் நின்றுகொண்டார். பாதுகாப்பு காவலர்களுக்கு நள்ளிரவில் டீ, காபி மற்றும் ஸ்நாக்ஸ் கருணாநிதி வீட்டில் இருந்தே கொடுக்கிறார்கள். 

கலைஞர் இல்லம்

 

ஜெயலலிதா, போயஸ் கார்டன் : 

இரவு 11 மணி, ஜெயலலிதா வீட்டுக்கு செல்லும் பின்னி சாலை நுழைவாயில் தொடங்கி மொத்தம் ஐந்து இடங்களில் இன்னமும் காவலர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் நான்கு முதல் ஐந்து காவலர்கள் வீதம் நின்றுகொண்டிருந்தார்கள்.  தோராயமாக 30 காவலர்களுக்கு மேல் இரவுப் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இங்கு எந்த தெருவில் யார் நுழைந்தாலும் காவலர்கள் கண்ணில் படாமல் நுழையவே முடியாது. ஜெயலலிதா இறந்த பிறகும், சசிகலா சிறைக்கு சென்ற பிறகும்கூட இவ்வளவு காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. 'யாருக்காக இவ்வளவு பாதுகாப்பு?' என நினைத்துக்கொண்டே 'வேதா இல்லம்' அடைந்தோம். இங்கு மூன்று காவலர்களும், சஃபாரி உடை அணிந்த ஐந்து பவுன்சர்களும் நின்று கொண்டிருந்தார்கள். 

 
அப்போது, ஜெயலலிதா இல்லத்தைக் காண, இந்த நள்ளிரவு வேலையிலும் ஒருவர் வந்திருந்தார். அவரைப் பார்த்த ஒரு பவுன்சர், "இந்த நேரத்துல... உனக்கு இங்க என்ன வேலை? கிளம்பு... கிளம்பு..." என கடுகடுத்தார். "நான் வெளியூர்ல இருந்து வர்றேன்.  இப்பதான் என் வேலை முடிஞ்சது. அப்படியே அம்மா வீட்டைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்'' என்றவரை... "அதுதான் பார்த்தாச்சில்ல இடத்தைக் காலி பண்ணு." என்றார். அங்கிருந்த காவலர்களும் அவரை கிளம்பச் சொன்னார்கள். நம்மையும் ''இந்த நேரத்துல வீட்டை போட்டோ எல்லாம் எடுக்கக்கூடாது. காலையில வாங்க.'' என அதிகார தோரணையில் சொன்னார் அந்த காவலர். அதற்குள் வீட்டு வாசலில் நின்ற இன்னொரு பவுன்சர் வந்து அதே துதியை பாடினார். ஜெயலலிதா இங்கு இருக்கும்போதும் இதே கெடுபிடிகள்தான் இருந்தன. அப்போது காவலர்கள் இந்த வேலையைச் செய்வார்கள்; இன்று பவுன்சர்கள் செய்கிறார்கள். அங்கிருந்து கிளம்பினோம். நம்முடனே வந்த அந்த நபர், "நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? வீட்டைக்கூட பார்க்க விட மாட்டேன்கிறாங்க. ஆளே இல்லாத கடையில யாருக்குத்தான் டீ ஆத்துறாங்களோ...?" என்று பகபகவென சிரித்துக்கொண்டே விடைபெற்று கிளம்பினார். 

ஓ.பன்னீர்செல்வம், க்ரீன்வேஸ் சாலை :

கடந்த சில நாட்களாக 24 / 7 பரபரப்பாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நேற்று இரவு கனத்த அமைதியில் உறைந்து நின்றது. சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட மூன்று அமைச்சர்களின் வீடும் ஓ.பி.எஸ் இல்லத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஓ.பி.எஸ் இல்லத்துக்கு  நள்ளிரவு வேலையிலும் செய்தியாளர்கள் செல்ல அனுமதி தந்த காவல்துறை, நேற்று இரவு அனுமதி தரவில்லை. ஹெச்.ராஜா சந்திப்புக்கு பின்தான், இந்த உத்தரவு தங்களுக்கு வந்ததாக அங்கு நின்ற பாதுகாப்பு அதிகாரி நம்மிடம் சொன்னார்.  பல பத்திரிகையாளர்கள், கையில் மைக்குடன் அந்த சாலையிலேயே இருந்தார்கள். ஓ.பி.எஸ் ஆதரவு ஆட்களும் இருந்தனர். சிறப்பு காவல் படை, ஆயுதப் படை என மொத்தம் 20-க்கும் அதிகமான எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம், நேற்று மாலையில் ஓ.பி.எஸ் வீட்டு முன் நடந்த கல்வீச்சு சம்பவம்தான்.!

ஓ.பி.எஸ் வீடு

அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலர், "நேத்து வரைக்கும் இரவு அண்டா அண்டாவாக பிரியாணி செஞ்சு வர்ற எல்லாருக்கும் போட்டுட்டு இருந்தாங்க. இந்த பிரச்னைக்கு அப்புறம்தான் அதை நிறுத்திட்டாங்க. ஒரு வாரமா ஓ.பி.எஸ் வீட்டுல பிரியாணி போடுறாங்கன்னே பல பேர் இங்கே வந்தாங்க. நாங்க ஒருவாரமாக இங்கதான ட்யூட்டியில இருக்கோம். அதுனால எங்களுக்கு தெரியும். மற்றபடி ஓ.பி.எஸ் வீட்டு ட்யூட்டின்னா நாங்க கொஞ்சம் ஹாப்பி ஆகிடுவோம். பெரிசா எந்த வேலையும் இருக்காது. அவரும் எதுவும் சொல்லமாட்டார்." என ஜாலியாக நம்மிடம் கமெண்ட் அடித்தவர். "ஆனா சார், நேத்து வரைக்கும் ஓ.பி.எஸ் வெளியே போனார்ன்னா... அவர்கூட கான்வாய்ல ஏகப்பட்ட கார்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் போவாங்க. இப்ப ஓவர் நைட்ல எல்லா காரும், பாதுகாப்பு அதிகாரியும் பக்கத்து ஏரியாக்கு போய்ட்டாங்க." என்றார் ஏமாற்றம் நிறைந்த குரலில்... எடப்பாடி பழனிசாமி சி.எம் ஆனதைத்தான் அவர் இப்படிச் சொல்கிறார். 

எடப்பாடி பழனிசாமி, க்ரீன்வேஸ் சாலை : 

இரவு 12 மணி. முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு செல்லும் சாலையில்  இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களிடம் நாம் யார் என்று சொன்னதும், கொஞ்சம் தயக்கமாகவே உள்ளே அனுப்பினார்கள். பழனிசாமி வீட்டுக்கு இடதுபுறம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு. வலது புறம் காலி இடம். அதன் அருகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பலரது இல்லங்களும் இவரது வீட்டை ஒட்டித்தான்  அமைந்திருக்கின்றன. 

பழனிச்சாமி வீடு

பழனிசாமி வீட்டுக்கு அருகில் ஒரு நபரைக்கூட காண முடியவில்லை. ஒரு காவல்துறை ஆய்வாளர் தலைமையில், மூன்று காவலர்கள்  மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களும் ஒரு ஓரமாக சேர் போட்டு, தங்களது மொபைல் போனில், வடிவேலு காமெடியை ரசித்துக்கொண்டிந்தார்கள். நாம் முதல்வர் வீட்டு வாசலில் நின்று படம் எடுப்பதைக்கூட யாருமே சட்டை செய்யவில்லை. பழனிசாமி வீட்டுமுன் 'செவ்வந்தி' என எழுதி இருந்தது. அங்கு உள்ள அனைத்து வீடுகளுக்கும் பூக்களின் பெயர்களையும், அருவியின் பெயர்களையும் வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில், பழனிசாமிக்குக் கிடைத்து இருப்பது செவ்வந்தி.! 

மாடு

வீட்டு வாசல் முன்னே சிறிது நேரம் நின்றோம்.  அந்த வழியாக வந்த ஒருவர் நம்மிடம் பேச்சுகொடுத்தார், "சார், நீங்க ரிப்போர்ட்டரா? நான் இந்த ஏரியாவுலதான் ஒரு ஜட்ஜ் வீட்டுல வேலை பார்க்கிறேன். முதல்வர் பதவியேற்றதும்  இங்கதான் வந்தார். யாருமே கூட வரலையே? நியூஸ் வாசிக்கும் ஒரு அம்மா மட்டும்தான் கூடவந்தாங்க. அப்புறம் அ.தி.மு.க-வில் உள்ள பல எம்.எல்.ஏ-க்களை இவர் வீட்டுல இருந்துதான் கூவத்தூர் கூட்டிட்டுப் போனாங்க. இன்னமும் அவங்களை வெளியே விடலை போலயே? இப்ப கூட இவர் கூவத்தூருக்குத்தான் போயிருக்கார்..." என பேசிக்கொண்டே இருந்தார். அப்போது முதல்வர் வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு அதிகாரி, "சார், சி.எம். கான்வாய் வருது. கொஞ்சம் ஓரமாக நில்லுங்க. எந்தப் பத்திரிகை?" என கேட்டுவிட்டு உள்ளே சென்றவர், மறுபடியும் மின்னல் வேகத்தில் வெளியே வந்தார். "சாரி சார். உங்களை கிளம்ப சொல்றாங்க. இந்த தெருவுலயே நிக்காதீங்க. ரோட்டுல போய் வேணும்னா படம் எடுங்க. எங்களுக்குப் பிரச்னை ஆகிடும் ப்ளீஸ்." என கெஞ்சும் தொனியில் சொன்னார்.

பழனிச்சாமி

நாமும் அங்கிருந்து கிளம்பி சாலைக்கு வந்தோம். போக்குவரத்து அதிகாரிகள் இருவர் மட்டும் வாக்கி டாக்கியில் பேசிக்கொண்டிருந்தனர். " சி.எம் கான்வாய்... நீலாங்கரையைத் தாண்டி வந்துட்டு இருக்கு..." என்ற குரல் சன்னமாக ஒலித்தது. அதற்குள் மூன்று மாடுகள் சி.எம். வீட்டு சாலையில் நுழைய "கான்வாய் வர நேரத்துல இதுவேற..."  என அலுத்துக்கொண்டே அந்த இரண்டு போலீஸ்காரர்களும் மாடுகளை துரத்த ஆரம்பித்தார்கள். சரியாக 12.27 மணிக்கு சைரன் வைத்த காரில் வந்தார் முதல்வர். நாம் அந்த கான்வாயை போட்டோக்களாக க்ளிக்கிக் கொண்டிருந்ததை காரிலிருந்து பார்த்துக்கொண்டே சென்றார் முதலமைச்சர் பழனிசாமி.!

இப்படியாக இந்நாள்... முன்னாள் முதல்வர்களின் வீடு நள்ளிரவில் இருக்கின்றன

 

Vikatan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு கடைசி இடம்!

trump-super-pac-problem_23401.jpg

அமெரிக்காவில் புதியதாக ஒரு அதிபர் பதவி ஏற்றவுடன் அவருக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு மற்றும் அவரது செயல்பாடு ஆகியவற்றைப் பற்றி கருத்துக்கணிப்பு நடத்துவது வழக்கம். புதிதாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் குறித்து அமெரிக்க மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பினை சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. நிறுவனங்கள் இணைந்து நடத்தியது. அதில், 53% பேர் டிரம்பின் செயல்பாடுகள் வரவேற்க கூடியதாக இல்லை என்றும், 44% பேர் செயல்பாடுகள் சரியாக உள்ளது என தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். எனவே இந்த கருத்துக்கணிப்பில் முன்பிருந்த அமெரிக்க அதிபர்களை விட செல்வாக்கில் கடைசி இடத்தில் இருக்கிறார், டிரம்ப். முன்னர் ஒபாமா பதவியேற்றபோது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பராக் ஒபாமா மக்கள் செல்வாக்கில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com

அமெரிக்காவின் நல்லது கெட்டதுகளுக்கு அப்பால்........
அரசியல் செய்யத்தெரியாமல் முக்கி முழங்கிக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்க அரசியலுடன் சார்ந்தே உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதை தெரிந்தும் மோட்டுவழமாக சிந்தித்து சொதப்பிக்கொண்டிருக்கின்றார்.

ஐரோப்பிய யூனியன் சீனாவுடன் பல ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கின்றது...அதே போல் தென்னமெரிக்க நாடுகளுடனும் புதிய பேச்சு வார்தைகளை ஆரம்பித்து விட்டார்கள்.
கனேடிய பிரதமர்  ஜேர்மன் தலைவி மேர்க்கலை சந்தித்து பல வியாபார ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளார்கள்.

டொனால்ட் ரம்பு மெக்சிக்கோவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலை மதிலை கட்டுறதுக்கு முதல்.........தன்ரை நாட்டிலை ரோட்டை ஒழுங்காய் போடச்சொல்லி இஞ்சை ஒரு ஜேர்மன்காரன் சொல்லிச்சிரிச்சவன்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: பெப்ரவரி 18
 

article_1424237334-2iran3.jpg1925;: அடோல்வ் ஹிட்லர் மேயின் காம்ப் (எனது போராட்டம்) எனும் தனது நூலை வெளியிட்டார்.

1955: முதலாவது டிஸ்னிலான்ட் களியாட்ட பூங்கா கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது.

1976: நாடியா கொமன்ஸி, கோடைக்கால ஒலிம்பிக்; ஜிம்னாஸ்டிக் போட்டியில்  10 புள்ளிகளைப் பெற்ற முதல் வீராங்கனையானார்.

1994: ஆர்ஜென்டீனாவிலுள்ள யூத சங்கமொன்றின் கட்டிடத்தில் நடந்த கொண்டுவெடிப்பில் 85 பேர் பலியாகினர்.

1996: முல்லைத்தீவு இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

2001: இந்தோனேஷியாவின் சாம்பிட் பகுதியில் பாரிய இனவன்முறைகள் மூண்டன.

2003: தென்கொரியாவின் டேகு ரயில்வே தீ விபத்தில் 200 இற்கும் அதிகமானோர் பலி.

2004: ஈரானில் கந்தகம், பெற்றோல், உரம் ஆகியனவற்றை ஏற்றிச்சென்ற ரயில் தீப்பற்றி வெடித்ததால் 295 பேர் பலி.

2007: தில்லியில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டு இருந்த 'சம்ஜவுதா' விரைவு தொடருந்தில் குண்டுகள் வெடித்து தீ பிடித்ததில் 68பேர் கொல்லப்பட்டனர்.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வெற்றிக்கு வெரி சிம்பிள் 5 டிப்ஸ்! #MorningMotivation

Morning motivation

"ஒரே மாதிரியான செயல்களைச் செய்துவிட்டு, வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதற்குப் பெயர் என்ன தெரியுமா? அதற்குப் பெயர், முட்டாள்தனம்" - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. ஒரே மாதிரியான செயல்களை நாம் செய்யும்போது தோல்வி ஏற்படுகிறதெனில், நாம் அதற்கான மாற்று வழிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நமது தோல்விக்கான விடையும் கிடைக்கும். தோல்வி வேண்டவே வேண்டாம். வெற்றி மட்டுமே வேண்டும் என்பது சாத்தியமில்லைதான். ஆனாலும்,  வெற்றி மட்டும்தான் வேண்டுமென்பவர்களுக்கான ஐந்து டிப்ஸ்..

"எங்கு தவறு செய்தீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள்" 

நீங்க எங்கு தவறு செஞ்சிருப்பீங்கனு கண்டுபிடிக்கச் சுலபமான வழி. நீங்க செய்த செயல்களை அப்படியே ஒரு படம் பார்ப்பதைப் போல முன்னிறுத்திக்கொள்ளுங்கள். கொஞ்சம் நிறுத்தி நிதானமாக ரீவைண்ட் பண்ணிப்பாருங்க. ஒரு படம் பார்க்கும்போது எப்படி பாடல்,  வசனம், காமெடியெல்லாம் நினைவில் வருமோ, அதே போல நீங்க எந்த இடத்தில் தப்பு பண்ணினீங்கனு கரெக்டா உங்களால கண்டுபிடிக்க முடியும். அந்த இடத்தைத்தான் நாம் நம்முடைய செயல்பாடுகளில் சரி செய்துகொள்ள வேண்டும். 

"வேற லெவல்ல யோசிங்க பாஸ்"

வேற லெவல்ல யோசிக்கணும்னு சொன்னதும் பயந்துட வேண்டாம் பாஸ். எல்லா சக்ஸஸ் ஃபார்முலாவும் ரொம்ப எளிமையானதாதான் எப்பவும் இருக்கும். அதனால, ரொம்ப எளிமையான விஷயங்கள் மேல கவனம் செலுத்தி, நாம் எந்த இடத்தில் எப்போது தவறு செய்திருக்கிறோம் என்பதை அறிந்து, அதைத் தவிர்த்து, வெற்றி பெறுவதற்கான வழிகளை அமைத்துக்கொள்ளுங்கள். எப்படி இந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவது என்பதைக் கண்டறிந்து, நமக்கான படிநிலைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத்  தொடர்ந்து கடைப்பிடிக்கவும் வேண்டும்.

"உங்க குருகிட்ட அடிக்கடி பேசுங்க"

நீங்கள் வாழ்க்கையில் தடுமாறும்போது, வழிகாட்ட உங்களுக்கென்று எப்போதும் உறுதுணையாய் இருக்கும் உங்கள் வழிகாட்டியிடம் உரையாடுங்கள். உங்கள் தோல்விக்கான பதில் கிடைக்கும். அவர்கள் உங்கள் வெற்றிக்குப் பரிந்துரைக்கும் செயல்களைக் கடைப்பிடியுங்கள்.

"நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கருத்துக்களைக் கேளுங்கள்"

நம்மைக் காட்டிலும் நம்மை நன்கு அறிந்தவர்கள் நமது நண்பர்களும், பெற்றோர்களுமே. நாம் எதை எப்படிச் செய்தால், வாய்க்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்கள். ஆக, அவர்களின் கருத்தையும் கேட்பது சிறந்தது. அது, மேலும் நமது வெற்றிக்கு வித்திடும்.

"உங்களைச் சுற்றி எப்போதும் நல்ல மனிதர்களை வைத்துக்கொள்ளுங்கள்"

சில சமயம் சிலருடைய தீய எண்ணம்கூட உங்களை தோல்வியில் கொண்டுப்போய்ச் சேர்த்துவிடும். அவர்கள் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள். நாம் துவண்டுபோகும் நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் கொடுக்கும் உற்சாகமே நம்மை வழி நடத்திச் செல்லும். எனவே, நமக்கு ஊக்கமளித்து நல்வழிப்படுத்தும் மனிதர்களை நமது சுற்றத்தில் வைத்திருப்பது நல்லது. நமது இலக்கை அடைய இவர்கள் தரும் உற்சாகம், நமக்கான வெற்றியில் பாதியைத் தேடித் தரும்.

தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் கையாண்டால் வெற்றி நிச்சயம்!  

  • தொடங்கியவர்

குரலுயர்த்த வேண்டிய இடத்தில் மெளனம் வேண்டாம் பெண்களே!

பெண்

பெண்கள் குழந்தையாக இருக்கும்போதே மறுக்கப்படும் பல உரிமைகளில் முக்கியமானது பேசுவதற்கான அளவுகோல். 'ஆண்கள் இருக்கும் இடத்தில் நீ ஏன் அவ்வளவு சத்தமாக பேசுகிறாய்' என்பதில் தொடங்கி சிரிப்பதில்கூட அதிக சத்தம் கூடாது என்பதுவரை நீளும். தன் மனம் போல சிரிக்கக்கூடாது என்கிற நிலை பெண்களுக்கு இன்றும் தொடர்கிறது. 'எங்க வீட்டில் எல்லாம் அப்படி இல்லையே' என்று சொல்பவராக நீங்கள் இருந்தால் மகிழ்ச்சி. உங்கள் வீட்டினருக்கு வாழ்த்துகள். ஆனால், இயல்பாக பேசத் தடை விதிக்காத வீடுகளிலும் கூட சில முடிவுகளில் பெண்களின் குரலை அனுமதிப்பதில்லை. அந்தச் சூழல்களில் பெண்களில் பலரும் அந்த இடத்தில் மெளனமாக இருந்துவிடுவார்கள் அல்லது 'சொல்லிப்பார்த்தேன் கேட்கல' என்று ஓய்ந்துவிடுவார்கள்.

இனியும் அப்படித்தான் இருக்க வேண்டுமா?

கல்வியிலும் வேலையிலும் ஆணுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் சாதிக்கும் அளவுக்கு பெண்கள் வந்துவிட்டோம். அதனால் இனியும் அப்படித்தான் இருக்க வேண்டுமா என்பதாக சொல்ல வில்லை. ஒரு குடும்பத்தில், சமுகத்தில், பொது இடத்தில் பெண்களுக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்படுகிறது என்பதாலே மெளனம் கலைக்க வேண்டும்.

* வீடுகளில் ஆண், பெண் குழந்தைகள் இருக்கும்போது, ஆண் பிள்ளையை முதலில் சாப்பிடச் சொல்வது, வீட்டு வேலைகளை பெண் குழந்தைகளை மட்டும் செய்ய சொல்வது போன்ற பழக்க வழக்கங்கள் இருந்து வருகின்றன. இவை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீடுகளில் தொடர்ந்தால் தயங்காமல் எதிர்த்துப் பேசுங்கள். குழ்ந்தைகளில் ஆண், பெண் பேதம் பார்ப்பது முற்றிலும் தவறு என வாதிடுங்கள்.

* பெரும் போராட்டத்திற்குப் பிறகே கல்வியை பெண்கள் அடைய முடிந்தது. ஆனாலும் பெற்றோர் சில பிரிவுகளில் பெண்களைப் படிக்க அனுமதிப்பதில்லை. அந்தப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் வேலைக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். அதனால் வேறு பிரிவுகளில் படிக்கச் சொல்வார்கள். அப்படி உங்களுக்கு நேர்ந்தால் கொஞ்சமும் தயங்காமல் உங்கள் விருப்பமான படிப்பையே படிப்பேன் எனப் பிடிவாதமாக இருங்கள். அதற்கான காரணங்களைத் தெளிவாக முன் வையுங்கள்.

பெண்

* பால்ய திருமணங்கள் சட்டப்படி குற்றம் என்ற நிலையிருந்தும் நாள்தோறும் செய்தித்தாளில் 'சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் நிறுத்தம்' என்ற செய்தியைப் படிக்க முடிகிறது. இப்படியான சூழலில் உங்களுக்குத் தெரிந்த பெண்கள் சிக்கியிருந்தால், அவர்களை விடுவிக்கும் முழு பொறுப்பு உங்களுக்கே இருக்கிறது என உணருங்கள். அந்த இடத்தில் அந்தச் சிறுமியின் வாழ்க்கையைக் காப்பாற்ற போராட்டக் குரலாய் உங்கள் குரல் ஒலிக்கட்டும்.

* திருமணம் ஒருவர் வாழ்வில் முக்கியமான விஷயம். ஆனால், தன் இணையைத் தேர்ந்தெடுப்பதில் ஆணுக்கு கொடுக்கப்படும் சுதந்திரம் பெண்களுக்கு இல்லை. பெண் பார்த்தல் எனும் ஒன்றே இதற்கு சரியான உதாரணம். மாப்பிள்ளையின் பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களைக் கவனமாக அலசும் பெற்றோர்கள், இந்தத் திருமணத்தில் தங்கள் பெண்ணுக்கு முழு சம்மதம் தானா எனக் கேட்பதில்லை. அப்படியான சூழலில் எவருக்கும் அச்சப்படாமல் உங்கள் விருப்பதைத் துணிந்து சொல்லுங்கள். வேறு யாரேனும் குரல் உயர்த்தினால் அதை விட சத்தமாய் ஒலிக்கட்டும்.

* மகிழ்ச்சியான குடும்பம் என்பது அதன் உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கியதே. ஆனால், இந்தக் கணக்கில் பெண்களைச் சேர்ப்பதே இல்லை. என்ன சமையல் செய்வது தொடங்கி வீடு வாங்குவது, பிள்ளைகளைச் சேர்ப்பது உள்ளிட்ட விஷயங்கள் வரை ஆண்களின் விருப்பத்திற்கே நடக்கிறது. இவற்றையெல்லாம் பெண்கள், தங்கள் மனதில் போட்டு  புகைந்துகொண்டிருக்க வேண்டியதில்லை. எல்லோரும் சேர்ந்து உரையாடி முடிவுகளை எடுப்போம் எனக் கூறி, அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யுங்கள்.

* பேருந்தில், அலுவகலத்தில், பொது இடங்களில் பெண்கள் பற்றிய கேலியான உரையாடல்களில் யாரேனும் ஈடுபட்டால் தயக்கமோ அச்சமோ இல்லாமல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். உயர் அதிகாரி என்றோ, சக ஊழியர் என்றோ, வயதில் மூத்தவர், இளையவர் என்பதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. அப்படி நீங்கள் செய்யும்பட்சத்தில் உங்களின் சகப் பெண்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும்.

எந்தச் சூழலிம் தன்னம்பிக்கையை மீட்டெடுக்கும் பெண்களாக மாறுங்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

22,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கொண்ட இஞ்சி இடுப்பழகி !

31 வயதான பெக்கி கியூரல், மூன்றாவது குழந்தை பெற்ற பின்னர் அதிகமாக எடை போடத்தொடங்கினார். ஒருமுறை ஷாப்பிங் சென்றபோது பெக்கி, தனது உருவத்தை கண்ணாடியில் பார்த்து வேதனை அடைந்தார். பின்னர் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையைக் குறைக்க முடிவெடுத்தார். சில மாதங்களிள் 9 கிலோ எடையைக் குறைத்தார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடை குறைப்பு டிப்ஸ் மற்றும் தனது அழகிய உடை மற்றும் காஸ்ட்யூம்கள் அணிந்த போட்டோக்களைப் பதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.இஞ்சி இடுப்பழகியாக மாறிய இவரது இன்ஸ்ட்டாகிராம் பிகினி போஸைக் கண்டு மயங்கிய பிரபல ஃபிரிமியர் லீக் ஃபுட்பால் வீரர், இவரை டேட்டிங்குக்கு அழைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெக்கியின் கணவர், இவரை விட்டுப் பிரிந்துள்ளார். கணவர் பிரிந்த சோகம் ஒருபக்கம் இருந்தாலும், தனது அழகின் காரணமாக, குறுகிய காலத்தில் 22,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இவரைப் பின்தொடர்வது, பிரபலங்கள் வாழ்த்துவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக பெக்கி தெரிவித்துள்ளார்.  

_01301.jpg

 

 
 
  • தொடங்கியவர்

அமளிதுமளி சட்டசபை #OneMinuteSketch

ஓவியம்: கோ.ராமமூர்த்தி

onminssss_12513.jpg

 

 
 
 
  • தொடங்கியவர்

ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கவேண்டிய 15 ஆரோக்கியப் பழக்கங்கள்! #HealthTips

`உடலை நல்ல ஆரோக்கியத்தோடு வைத்திருக்கவேண்டியது நம் கடமை. தவறினால், மனதை உறுதியாகவும் தெளிவாகவும் நம்மால் வைத்திருக்க இயலாமல் போய்விடும்’ என்கிறார் புத்தர். அத்தனை பேருக்குமே ஆரோக்கியம் அவசியம். குறிப்பாக பெண்களுக்கு மிக மிக அவசியம். 

பெண்

ஓர் ஆணிடம், `வேலை எப்படி போய்க்கிட்டு இருக்கு?’ என்று கேட்டுப் பாருங்கள். `எட்டு மணி நேர வேலைதான். ஆனா முடியலை... தாவு தீர்ந்துபோயிடுது’ என்று வருகிற பதில் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் அல்ல இன்றைக்கு அரசுத் துறையில் வேலை பார்க்கிறவர்களுக்கே பணிச்சுமை அதிகமாகத்தான் இருக்கிறது. அது இருக்கட்டும்... உண்மையில், ஆணைவிட, பெண்ணுக்கே வேலைப்பளு மிக அதிகம். அவர்கள் ஆண்களைவிட அதிக நேரம் உழைக்கவேண்டியிருக்கிறது. பணிக்குச் செல்லும் பெண்களாக இருந்தால், வீட்டு வேலையையும் சேர்த்து இரட்டைச் சுமை. அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குத் தொடங்கும் அவர்களுக்கான வேலை, இரவு 10 மணிக்குள் முடிவதே பெரும்பாடு. இன்றைய தறிகெட்டு ஓடும் வாழ்க்கைச் சூழலில் இது தவிர்க்க முடியாதது. எனவே, பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் தங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவேண்டியது காலத்தின் தேவை. 

பெண்கள் கடைப்பிடிக்கவேண்டிய 15 ஆரோக்கியப் பழக்கங்கள்...   

சொந்தக்காலில் நில்லுங்கள்! 

மனதில் ஆழமாக நிறுத்திக்கொள்ளவேண்டிய வாசகம். இது சம்பாதிப்பது, தன் வருமானத்தில் வாழ்வது என்பதை மட்டும் குறிப்பதல்ல. எதற்கும் யாருடைய துணையையோ, உதவியையோ எதிர்பார்க்காமல் சுயமாகச் செயல்படுவதையும் குறிக்கும். அது, இரண்டாவது மாடி. 15 வயது மகள் மயக்கமடைந்து கீழே விழுந்துவிடுகிறாள். வீட்டில் அம்மா மட்டும்தான். உதவிக்கு அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை. அவளைத் தூக்கிக்கொண்டு ஓட உடம்பில் திராணி வேண்டும் அல்லவா? இது, மிகச் சாதாரண உதாரணம்தான். சங்கிலிப் பறிப்புச் சம்பவமோ, தனியாக வீட்டில் இருக்கும்போது எதிர்கொள்ளவேண்டிய வன்முறை நிகழ்வோ... அதை எதிர்கொள்ள மனதில் உறுதி வேண்டும். அதற்கு உடலில் வலு வேண்டும். தவறாத உடற்பயிற்சி பெண்ணுக்கு வலுவளிக்கும். உடற்பயிற்சி தரும் நன்மைகள் அளப்பரியவை. இதயநோய்க்கான அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்; நல்ல தூக்கம் கிடைக்கும்; நினைவாற்றலை அதிகரிக்கும்; தன்னம்பிக்கையை வளர்க்கும்.

ஒவ்வொரு நாளையும் ஃப்ரெஷ்ஷாகத் தொடங்குங்கள்! 

முதல் நாள் இரவு எப்படி முடிந்ததாகவும் இருக்கட்டும்; விடிகிற பொழுதை ஃபிரெஷ்ஷாகத் தொடங்குங்கள். இன்றும் இந்த உலகம் உங்களுக்காகவே புலர்ந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள். அழகான காலை, உடல் வருடும் தென்றல், மலரும் பூக்கள், குழந்தையின் சிரிப்பு... என உங்களுக்குப் பிடித்த ஏதாவதொன்றை ரசித்து அனுபவியுங்கள். புத்துணர்வோடு ஒரு காலையைத் தொடங்குவது நம் உடலுக்கும் மனதுக்கும் மிக நல்லது. சின்னதாக ஒரு யோகா, நடைப்பயிற்சி, பிராணாயாமம் செய்வதெல்லாம் அன்றைய நாள் முழுக்க உங்களைப் ஃபிரெஷ்ஷாக வைத்திருக்கும். பணியிலும் வீட்டிலும் எந்தப் பிரச்னை வந்தாலும், நிதானமாக முடிவெடுக்க வழிவகுக்கும். அதிகாலைக் காற்றை சுவாசிப்பதில் கிடைக்கும் பலன்கள்... ஜீரண சக்தியை மேம்படுத்தும்; ரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்; மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

யோகா

உடல் சொல்வதைக் கவனியுங்கள்!  

உடல் நம்மோடு நிகழ்த்தும் உரையாடலை பெரும்பாலானோர் புறக்கணிப்பதுதான் பல பிரச்னைகளுக்கு மூல காரணம். வயிற்றைக் கிள்ளுகிற பசி உணர்வுகூட உடல் நம்மோடு நிகழ்த்தும் ஓர் உரையாடல்தான். வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் அதற்குக் காதுகொடுக்காமல்விடுவது அசிடிட்டி பிரச்னையை ஏற்படுத்தும்; நேரம் கழித்துச் சாப்பிடும்போது இறங்காது; மதிய உணவுகூட முழுமை பெறாது. இது தொடர்ந்தால் பல வயிற்று உபாதைகளைச் சம்பாதிக்கவேண்டியிருக்கும். இப்படிச் சின்னதாக ஏற்படும் தலைவலி, இடுப்புவலி, கால்வலி எதுவாக இருந்தாலும் உடல் நமக்கு ஏதோ பிரச்னை என்று சொல்லும் சமிக்ஞை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உடனே அதற்கு தீர்வு காணுங்கள். உடனே கவனிக்காவிட்டால், பிரச்னை பெரிதாகக்கூட வாய்ப்பு இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.   

நண்பர்களோடு இருக்கும்போது போன் வேண்டாமே!

அனைவருக்குமே இன்று இணைபிரியா துணையாகிவிட்டது மொபைல். அதில் இருந்து எழும் கதிர்வீச்சுக்கள் நம்மை பாதிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். தோழிகளிடமோ, நண்பர்களிடமோ உரையாடும்போதுகூட `ஒரு நிமிஷம்’ என்று சொல்லிவிட்டு யாரிடமோ பேசப் போவது சரியல்ல. சிலர் நண்பர்களிடம் உரையாடியபடியே செல்போனில் எதையோ நோண்டிக்கொண்டு இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை இது இயல்பான ஒரு செயல். ஆனால், உடன் இருப்பவருக்கு தன்னைவிட செல்போன் முக்கியமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். நம் மீதான அபிமானம் நண்பர்களுக்குக் குறைவது நமக்குத்தான் இழப்பு. நண்பர்களோடு இருக்கும்போது போன் வேண்டாமே! 

ஜில் ஸ்மூத்தீஸ் அதிகமாகக் குடியுங்கள்!  

உடல் உழைப்பு, மூளை உழைப்பு இரண்டுமே சீராக நடைபெற எனர்ஜி தேவை. காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு ஸ்மூத்தீஸ் எடுத்துக்கொள்வது பெண்களுக்கு அதிக எனர்ஜி தரும். அதிலும் பழங்களால் தயாரான ஸ்மூத்தீஸ் மிக நல்லது. இதிலிருந்து நமக்குத் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைக்கும்; உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். மிக முக்கியமாக, இவற்றைக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவதைவிட, நாமே தயாரிப்பது சுகாதாரம், ஆரோக்கியம். 

 

 

 

துறுதுறுவென இருங்கள்! 

எப்போதும் துறுதுறுவென இருப்பது ஆரோக்கியமாக இருப்பவர்களால் மட்டுமே முடியும். மலர்ச்சியாக, துறுதுறுவென இருப்பவர்கள் பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அனைத்தையும் கட்டுப்படுத்தும். எனவே, ஆரோக்கியத்தோடு, சுறுசுறுப்பாக இருப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

உண்டி சுருங்குதல் தேவையில்லை... ஆனால், பசியில்லாத நேரத்திலும் சாப்பிடுதல் வேண்டாமே!

`பசித்துப் புசி’ என்பது மருத்துவ மொழி. இதைச் சட்டை செய்யாமல் இருப்பதுதான் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளுக்குக் காரணம். காலை 11 மணி... பசியே இருக்காது. தோழிகள் கூப்பிடுகிறார்கள் என்பதற்காக கேன்டீனில் ஒரு சமோசாவோ, இரண்டு வடையையோ சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கான வழி அல்ல. அது மதிய உணவின் அளவைக் குறைக்கும்; உடல்பருமனுக்கு வழிவகுக்கும். தேவையில்லாத சோர்வையும் அயர்ச்சியையும் உடலுக்குத் தந்துவிடும். 

ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்! 

`இன்றைக்கு இலவசமாகக் கிடைப்பது அறிவுரை மட்டும்தான்’ என்று விளையாட்டாகச் சொல்வார்கள்; விமர்சனங்களும் அப்படித்தான். உண்மையில் நம்மை நோக்கி எறியப்படும் விமர்சனம் மிக அழுத்தமான காயங்களை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை. பலருக்கு அது மனதைத் தளரச் செய்துவிடும். மனம் தளர்ந்தால், உடலும் ஒத்துழைக்காது. தனிப்பட்ட முறையில் நம்மைத் தாக்குவதுபோல் எழும் விமர்சனங்களை இடது கையால் ஓரங்கட்டுங்கள். உண்மையிலேயே, நமக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் வைக்கப்படுபவற்றுக்கு செவி கொடுங்கள். அது நம் வளர்ச்சிக்கு உதவும். `எல்லாத்தையும் சரியா செஞ்சுடுறீங்க... ஆனா, தினமும் லேட்டாத்தான் வரணுமா?’ என்கிற அதிகாரியின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்துதான் பாருங்களேன். உங்கள் மதிப்பும் தானாக உயரும். 

பெண்

நீங்கள் விரும்பும் இடமாக வீட்டை மாற்றுங்கள்! 

நம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வையும், மகிழ்ச்சியையும், நிறைவையும் தர நம் இல்லத்தால் மட்டுமே முடியும். அது, நாம் விரும்பக்கூடிய இடமாக இருக்கும்பட்சத்தில் எளிதாக சாத்தியமாகும். சுவர்களில் உங்களுக்குப் பிடித்த நிற வண்ணங்களை அடிப்பதும்கூட மகிழ்ச்சிக்கான ஒரு படிதான். உங்களுக்குப் பிடித்த வடிவமைப்பில் வரவேற்பறை, கச்சிதமான கிச்சன், காற்றோட்டமான ஹால், மொட்டை மாடியின் ஓரத்தில் செம்பருத்திச் செடி... என எதுவாகவும் இருக்கட்டும். இப்படி இருக்கவேண்டும் என நினைத்தால் அப்படியே மாற்றுங்கள். இல்லம் உணர்வு சார்ந்த ஒரு விஷயம். அது, உங்களை வீட்டாருடன் மேலும் நெருக்கம் கொள்ளச் செய்யும். மனதுக்கு இதமளிக்கும். மனச்சுமை, சோர்வைக் குறைக்க உதவும். 

உங்கள் எடைக்குத் தேவையான தண்ணீரை தினமும் அருந்துங்கள்!

பெண்களை நாள் முழுக்க ஆரோக்கியத்தோடு வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது தண்ணீர். ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் ஒன்று. உடல் எடை, ஆரோக்கியத்துக்கு ஏற்ப, ஒவ்வொருவரும் இந்த அளவுக்குத் தண்ணீர் பருகலாம் என்பதை மருத்துவரால் மட்டுமே சொல்ல முடியும். அந்த அளவைத் தாண்டினாலோ, குறைத்தாலோ பிரச்னைதான். எனவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவரவர் எடைக்கு ஏற்ப தண்ணீர் அருந்துவதை வழக்கப்படுத்திக்கொள்ளவும். 

எல்லாவற்றையும் படியுங்கள்..! உச்சரிக்க முடியாதவற்றை தவிர்த்துவிடுங்கள்! 

ஷாப்பிங் செய்யும் பெண்கள் செய்யும் தவறுகளில் முக்கியமானது, வாங்கும் பொருட்களின் லேபிளைப் படிக்காமல் இருப்பது. குறைந்தது வாங்கும் மருந்தோ, உணவுப் பொருளோ காலாவதியாகும் தேதியையாவது சரிபார்த்து வாங்க வேண்டும் என்பது பொதுவிதி. புரிகிறதோ, இல்லையோ பொருட்களின் லேபிளில் ஒட்டியிருக்கும் எல்லாவற்றையும் படித்துவிடுங்கள். உச்சரிக்கவே சிரமமாக இருப்பவற்றைத் தவிர்த்துவிடுங்கள். படிக்கப் படிக்க நாம் வாங்கும் பொருளில் என்ன இருக்கிறது என்பது மெள்ள மெள்ளப் புரிய ஆரம்பிக்கும். அதிகக் கொழுப்புள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்கலாம், நிறைய ஊட்டச்சத்துள்ள பொருட்களை வாங்கலாம்... அது, நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவும்.  

 மனஅழுத்தம் வெற்றிபெற அனுமதிக்காதீர்கள்!  

எங்குதான் பிரச்னை இல்லை; யாருக்குத்தான் பிரச்னை இல்லை. வீடோ, பணியிடமோ நம்மை கைகூப்பி வரவேற்கக் காத்திருப்பவை அவை மட்டுமே. அதிக வேலை, சக ஊழியர்களின் முகச்சுளிப்பு, திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்வதால் ஏற்படும் மனச்சலிப்பு (Monotonous)... எதுவாகவும் இருக்கட்டும். அது ஏற்படுத்தும் மனச் சோர்வு நம்மை மனஅழுத்தத்தின் பக்கம் திரும்பவிடாமல் பார்த்துக்கொள்ளவும். மனஅழுத்தம், நம் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதித்துவிடும். அதிகமானால், மனநோய் வரை கொண்டுபோய்விட்டுவிடும். எனவே எப்போதும் `ரிலாக்ஸ்’ மூடிலேயே இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். `எதுவும் எனக்குப் பெரிதல்ல’ என்கிற மனோபாவம், மனஅழுத்தம் நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். 

மன அமைதி

நிறைவாகச் சாப்பிடுங்கள்! 

காலை, மதியம், இரவு... எந்தப் பொழுதானாலும் அவசரம் இல்லாமல், நிதானமாக, நொறுங்கச் சாப்பிடுங்கள். உணவு, நமக்கு சக்தி தரும் ஒன்று என்பதை மறக்காதீர்கள். அது நமக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து ஆரோக்கியமான, நம் உடல்வாகுக்கு ஏற்ற உணவுகளைத் தேர்ந்தெடுத்து ரசித்து, திருப்தியாகச் சாப்பிடுங்கள். உணவில் கிடைக்கும் திருப்தி, மனதுக்கும் கிடைக்கும். துள்ளலோடு உங்களைச் செயல்பட வைக்கும்.    

நிறையச் சிரியுங்கள், அது மற்றவரையும் தொற்றிக்கொள்ளும்! 

சிரிப்புதான் மனிதர்களின் மிக முக்கியமான அடையாளம். எதிரே உங்கள் தோழி வருகிறார். நீங்கள் புன்னகைத்தால் அவரால் பதிலுக்குச் சிரிக்காமல் உங்களைக் கடக்க முடியாது. எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பது, உங்களை மற்றவர்களிடம் நெருங்கவைக்கும். நிறையச் சிரிப்பது பல நோய்களை ஓரங்கட்டும். ஆரோக்கியத்துக்கு நல்லது. முக்கியமாக மனப் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக அமையும். உங்கள் சிரிப்பு உங்கள் அருகில் இருப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும். 

நன்றாக உறங்குங்கள்! 

ஏழு முதல் எட்டு மணி நேர உறக்கம் எல்லோருக்கும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். நாள் முழுக்க உழைத்த உடலுக்கு ஓய்வு தருவது உறக்கமே. நல்ல ஆழ்ந்த உறக்கம், அடுத்த நாள் பொழுதை உற்சாகத்தோடு ஆரம்பிக்க உங்களுக்கு உதவும். அன்றைக்கு முழுக்க சக்தி குறையாமல் செயல்படவைக்கும். நல்ல உறக்கம், உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள் ஆகியவற்றைச் சற்று ஓரமாகத் தள்ளிவைக்கும் மருந்து என்பதை மறக்காதீர்கள்! 

எல்லாப் பெண்களுமே அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய 15 பழக்கங்கள் இவை. கடைப்பிடித்துப் பாருங்கள்... வாழ்க்கை ரசனையாகவும் ஆரோக்கியச்செறிவோடும் இருக்கும். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பொதுச்செயலாளர் பதவியே தான் வேணுமா

CzaPbsWW8AAryME.jpg

 

C47b3jwWQAA-cVj.jpg

சபாநாயகர் தனபாலை திமுக MLAக்கள் சேரோடு சேர்த்து தூக்கிச்சென்றனர்

 

C47yGGOVUAA3jMi.jpg

கூவத்தூர் விடுதி மூடல்-நிர்வாகம் அறிவிப்பு #இப்ப அவன் கடைய மூடிட்டு போய்ட்டான்னா நமக்கு அவன் அடிமை.. ஹோட்டல எழுதி வாங்கிடலாம்-சசி குரூப்பு?

 

C47xtmjUkAA5K3T.jpg

கூவத்தூர் சொகுசு விடுதியை மூடுவதாக நிர்வாகம் அறிவிப்பு.. # எங்கள நிம்மதியா இருக்க விடுங்க ப்ளிஸ் ! ?????

 

C47mfQsW8AAFNOi.jpg

சட்ட மன்றம் வெளில காவல்துறை... ?????

 

 

C47xz2PUEAAGaK0.jpg

கூவத்தூர் சொகுசு விடுதியை மூடுவதாக நிர்வாகம் அறிவிப்பு இனி நாங்க எங்கடா போவோம் .. . ???

 

 

C47t05nUMAInzWC.jpg

 

வரலாறு முக்கியம் மக்களே??

 

C47l0mhWAAEGeE5.jpg

 

இந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டில் பிபி மாத்திரைகள் அதிகம் விற்றுள்ளதாக மருத்துவ துறை மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி??????

 

 

  • தொடங்கியவர்

ஆண் பிள்ளைகளுக்கும் அப்பாவுக்கும் ஏன் டிஷ்யூம் டிஷ்யூம் ஆகிறது? #GoodParenting

ஆண்

ண் பிள்ளைக்கும் அப்பாவுக்குமான இணக்கம் பெரும்பாலும் எதிரும் புதிருமாகவே இருக்கும். தன் வெற்றி, சந்தோஷம், துக்கம், கவலை, காதல் என சகல விஷயங்களையும் தன் அம்மாவிடம் சொல்லும் ஆண் பிள்ளைகள் அப்பாவிடம் முகம் கொடுத்துக் கூட பேசுவது குறைவே. இந்த போக்குக்குக் காரணம் என்ன, இதனால் ஆண் பிள்ளை சந்திக்கும் வேதனைகள் என்ன என்பது பற்றிப் பேசுகிறார் குழந்தைகள் நல ஆலோசகர் பிரீத்தா நிலா .

எந்த ஒரு குழந்தையும் தன்னை தொட்டிலில் படுக்க வைத்து தாலட்டுப் பாடி, தொட்டிலில் இருந்து எழுப்பி, பால் கொடுத்து, சாப்பாடு ஊட்டி, குளிப்பாட்டி, உடன்ஆண் பிள்ளைகள் பற்றி-குழந்தைகள் நல் ஆலோசகர் பிரீத்தா நிலா விளையாடுவதுன்னு தன்னுடன் பெரும்பாலான நேரங்களை செலவிடும் அம்மாவுடன்தான் அதிக இணக்கமாக இருக்கும். மேலும், நமக்கு எல்லாமே அம்மாதான் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் ஆழமாக உருவாகும். அத்தோடு தன்னைப் பத்தி, தன்னோட செயல்பாடுகள், வேலை, உடல்நலம்னு எல்லா விஷயத்தையும் குழந்தைகிட்ட அம்மாக்கள் ஷேர் பண்ணிக்குவாங்க. குழந்தையை குளிக்க வெச்சு, டிரெஸ் மாட்டிவிட்டு, சாப்பாட்டு ஊட்டுற சமயத்துலக்கூட, ஏன்டா என்னப் படுத்துற, அம்மாவுக்கு வீட்டு வேலை, துணி துவைக்குற வேலை, கடைக்குப் போறதுன்னு நிறைய வேலை இருக்கு. நீ சமத்தா அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணுப்பான்னு கொஞ்சலுடன் சொல்லுவாங்க. அதேமாதிரி அம்மாவுக்கு உடம்பு சரியில்லப்பா. அதனால அம்மாவை சத்தம்போட வெக்காதன்னு தன் கஷ்ட நஷ்டங்களையும் பரிவாகச் சொல்லுவாங்க. இதைத் தாண்டி, உனக்கு ஒரு குட்டிப்பாப்பா பிறக்கப் போகுது. உன்கூட விளையாட புதுசா ஒரு ஆள் வரப்போறாங்க. இப்படியெல்லாம் தன்னப்பத்தின எல்லா விஷயங்களையும் குழந்தைக்குப் புரியும்படி சொல்லிப் பழகுவது அம்மா மட்டுமே. மேலும், அம்மாக்களும் தன்னோட பெரிய பலமாகவும் ஆண் குழந்தையைப் பார்ப்பாங்க.

இதனாலேயே ஒரு குழந்தை, 'அம்மா எனக்கு சுச்சா வருது. பசிக்குது. என் டீச்சர் என்னை பாராட்டினாங்க... இப்படி தன்னோட எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவில்லாம பேசுவாங்க. அம்மாவின் இந்த பரிவும், பரிசுத்த அன்புமே ஆண் பிள்ளை வளர்ந்து பெரியவனாக ஆகும்வரை அம்மாமீது பாசத்தை அதிகமாக வெச்சிருப்பாங்க. அதனால்தான் தான் கல்லூரி, வேலைக்குச் சென்ற பிறகும் தன்னோட எல்லா விஷயங்களையும், தான் ஒரு பெண்ணை காதலிச்சாலும் அதை முதலில் அம்மாவிடம் சொல்லித்தான் அனுமதி பெறுவான்.

மேற்சொன்ன அம்மாக்களின் செயல்பாடுகளை எல்லாம் அப்பாக்கள் பெரும்பாலும் செய்வதேயில்லை. தனக்கு ஓய்வு கிடைக்கும்போது, தோன்றினால் மட்டுமே குழந்தையை தூக்கி கொஞ்சுவார்கள். குழந்தை அழும்போது அம்மாவிடமே குழந்தையைக் கொடுப்பது. தான் கோபமாக இருக்கும்போது அக்கோபத்தை குழந்தை மேல் காட்டுவது. குழந்தை யூரின், டாய்லெட் போனால் சுத்தம் செய்ய கூச்சப்படுவது. சின்ன விஷயத்துக்குகூட திட்டுவது, அடிப்பது. இதெல்லாம் அப்பாவின் மீது குழந்தைக்கு பயத்தையும், வெறுப்பையும் உண்டாக்கி விடுகிறது. ரொம்பவே பழக்கம் இல்லாத, ஓரளவுக்கு மட்டுமே பழக்கம் இருக்குற யார்கிட்டயும் நாம மனம் விட்டுப் பேசமாட்டோம். அதுதான் குழந்தைப்பருவத்துல இருந்தே தொடரும். இந்த பழக்கம்தான் அப்பா-மகன் உறவிலும் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே தொடர்கிறது.

ஆண் 

பெண் குழந்தைங்களை அப்பா அடிச்சாலும், திட்டினாலும் அக்குழந்தை அதே இடத்துல இருக்கும். கோபத்தை மறந்து கொஞ்ச நேரத்துல அப்பாக்கூட பெண் பிள்ளைங்க சகஜமா பேசுவாங்க. ஆனா ஆண் பிள்ளை உடனே அந்த இடத்தை விட்டுப் போவதோடு, ரொம்ப காலம் அப்பாகிட்ட பேசாம கோபமா இருப்பாங்க. அப்பாவின் முகம் பார்த்தே பேச மாட்டாங்க. இந்நிலை ஆண் பிள்ளை வளர்ந்து பெரியவனாக ஆனப்பிறகும்கூட தொடரும்.

பொதுவா ஒரு குழந்தை தன் அம்மாவிடம் அன்பும், அப்பாவிடம் அறிவும் பெற வேண்டும் எனச் சொல்வார்கள். அம்மாவிடம் அன்பு கிடைத்தாலும், அப்பாவுடனான இணக்கம் இல்லாததால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அப்பாவிடம் இருந்து அறிவு கிடைப்பதில்லை. தனக்கு தெரிஞ்ச வெளியுலக அனுபவங்கள், வாழ்க்கை முறைகளை குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது அப்பாவின் கடமை. அக்கடமையை பெரும்பாலான அப்பாக்கள் செய்வதில்லை. அதுமாதிரியே முன்பெல்லாம் அப்பாக்கள்தான் குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கத்துக்கொடுப்பாங்க. இப்போ சைக்கிள் விழாம இருக்க அதன் பின்னாடி ரெண்டு சின்ன  வீல் இருக்கும்படியான சைக்கிளை வாங்கிக் கொடுத்து,  குழந்தைகளையே ஓட்டி பழகிக்கச் சொல்லுறாங்க. இதெல்லாம் பார்க்கவே கஷ்டமா இருக்கு. இது வெறும் ஒரு சைக்கிள் ஓட்டும் பழக்கமா பார்க்காம, தன் பையனோட வாழ்க்கையில ஒரு அத்யாயமா பார்த்தால்தான் அதோட வலியும், உணர்வும் புரியும். இப்படி அப்பாகிட்ட இருந்து கிடைக்க வேண்டிய அறிவு கிடைக்காத ஆண் பிள்ளைங்க, அப்பாமேல வெறுப்பைக் காட்டுவாங்க. அதோட தனக்காக அடையாளத்தை, வெற்றியைப் பெற அதிக முயற்சிகளையும் எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். அத்தோடு அப்பாவால் மட்டுமே சரிசெய்யப்பட வேண்டிய ஒரு பிரச்னையைக்கூட, அப்பாக்கூட இணக்கம் இல்லாததால, தானே சரிசெய்ய முயன்று கூடுதல் சிக்கல்களையும் ஆண் பிள்ளைகள் ஏற்படுத்திக்கொள்வாங்க.

பல அப்பாக்கள் குழந்தையை தன் தோல், மார்பு மேல் வைத்து வளர்ப்பதையும், அத்தகைய அப்பாக்களின் மீது ஆண் பிள்ளைகள் பாசத்துடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது. அப்போ குழந்தை பிறந்தது முதல் அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்துலயும் அம்மா, அப்பா ரெண்டு பேருமே போதிய அக்கறையும், பாசமும் கொடுத்து வளர்க்கறப்போ நிச்சயம் பெற்றோர் இருவர் மீதும் குழந்தைங்க பாசமா இருப்பாங்க. இதுமாதிரி இருக்குற தன் ஃப்ரெண்டைப் பார்க்கறப்போ, தன் அப்பாகிட்ட பாசம் கிடைக்காத குழந்தைங்க ஏங்கிப்போறதோடு, தனக்குள்ள தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்குவாங்க. குறிப்பா எல்லா அப்பாக்களுமே தன் பிள்ளை நல்லா இருக்கணும்னுதான் மனசுல நெனசுட்டு இருப்பாங்க. ஆனா தங்கிட்ட இருக்குற பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாம இருப்பாங்க. அதுவே ஆண் பிள்ளைக்கும் அப்பாவுக்கும் பெரிய இடைவெளியை உண்டாக்குது. அப்போ சின்ன வயசுல இருந்து ஆண் பெண் பாகுபாடு இல்லாம, எல்லா வேலையையும் செய்யக் கத்துக்கொடுத்து ஆண் குழந்தையை வளர்க்கணும். அப்போதான் தான் தகப்பன் ஆனாலும், தன் குழந்தைக்கான எல்லா தேவைகளையும் கூச்சப்படாம செய்துவிட்டு, குழந்தையின் அன்பையும் அப்பாக்கள் பெற முடியும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மனதை வெல்ல, மகிழ்ச்சியாக வாழ 5 வழிமுறைகள்! #MindRelaxTips

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. நமக்கு நடக்கும் ஒவ்வொரு நன்மையும் தீமையும் யாரோ தந்து வருவதல்ல... நம் எண்ணங்களின் பிரதிபலிப்புகள்தான் அவை. உண்மையில் தினமும் நாம் போராடுவது, பிற மனிதர்களுடன் அல்ல... நம்முள் இருக்கும் உணர்வுகளுடன்தான். `உலகை வெல்வதைவிட மனதை வெல்வதுதான் கடினம்’ என்றார் புத்தர். அப்படி நம்மை தினந்தோறும் ஆக்கிரமிக்கும் எத்தனையோ எண்ணங்கள் உள்ளன. அவை அனைத்தையும் முறையாகக் கையாள்வதும் மனதை அடக்கப் பழகுவதும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், முக்கியமான ஐந்து விஷயங்களைக் கவனமாகக் கடைப்பிடித்தால், நம் வாழ்வில் இன்பம் என்றும் நிரந்தரம். அவை...

மன மகிழ்ச்சி

விமர்சனங்களைப் பாராட்டாக மாற்றுங்கள்!

‘இதெல்லாம் ஒரு சாப்பாடா... வாயில வைக்கவே முடியலை...’, ‘ஒரு வேலையை ஒழுங்கா எப்படிச் செய்யணும்னு தெரியுமா?’ இப்படி வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் சக மனிதர்களை விமர்சிக்காமல் சிலருக்கு அந்த நாள் முழுமை பெறாது. இன்னும் சிலர் தங்களையே விமர்சித்துக்கொள்வார்கள். `நான் குண்டா இருக்கேன்... எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. அதனால பார்ட்டிக்கு வரலை’ என்பார்கள். ஓர் உண்மை தெரியுமா? விமர்சனம் செய்வதால், எந்த ஒரு நபரும் திருந்தப்போவதில்லை; எந்த விஷயமும் சரியாகப்போவதில்லை. விமர்சனம், மேலும் மோசமான ஒரு சூழ்நிலையையே உருவாக்கும்.

மாறாக, ‘இன்னைக்குச் சாப்பாடு நல்லா இருந்துச்சும்மா. கொஞ்சம் உப்பு மட்டும் கம்மியா போட்டிருந்தா இன்னும் பிரமாதமா இருந்திருக்கும்’ என்று சொல்லிப் பாருங்கள். மறுநாள் உங்கள் மனைவி உங்களிடம் இருந்து பாராட்டைப் பெறுவதற்காகவே ஆர்வத்துடன் சமைப்பார்.

விமர்சனம் - பாராட்டு

உங்களுக்குக் கீழே பணியாற்றுபவர்களிடம், ‘நல்லா பண்ணியிருக்கீங்க, பட் உங்களால இன்னும் சிறப்பா செய்ய முடியும்னு நம்புறேன்’ என்று கூறுங்களேன். நிச்சயம் அவர்கள் சிறப்பாக வேலை பார்ப்பார்கள்.

‘குண்டா இருந்தா என்ன? என் மனசுபோல நான் அழகுதான்’ என்று உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்வதன் மூலம் தன்னம்பிக்கையோடு இருக்கலாம்.

அனைவரின் மனதும் சின்ன பாராட்டுக்காகத்தான் ஏங்குகிறது... நம் எல்லோரையும் சேர்த்துத்தான். முடிந்தவரை விமர்சனத்தைப் பாராட்டாக மாற்றப் பாருங்கள்.

மன்னிக்கப் பழகுங்கள்!

பழியுணர்வு, குற்ற உணர்ச்சி, கோபம், துக்கம், கவலை, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் இருப்பதற்கு என்ன காரணம்? யாரையோ, எந்தக் காரணத்துக்காகவோ மன்னிக்காமல் இருப்பதால் நம்மிடம் தேங்கியிருக்கும் உணர்வுகளே இவை. ‘அவனை எப்படி மன்னிக்க முடியும்? மன்னிக்கக்கூடிய தவறையா அவன் செய்தான்?’ என்று உங்களுக்குள்ளேயே இந்த உணர்வுகளை வைத்துக்கொள்வதால் நோய்கள்தான் உண்டாகும். அதோடு, வாழ்க்கையை நிம்மதியாக வாழவும் முடியாது.

மன்னிக்கப் பழகுங்கள் 

சிலர் இளம் வயதில் செய்த தவறை நினைத்து, காலம் முழுக்கத் தங்களையே வருத்திக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள், முடிந்தால் உங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் மன்னிப்பைக் கேளுங்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லையா..? கவலையைவிடுங்கள். உங்கள் தவறை உணர்ந்துவிட்டீர்கள்... எனவே, உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள். நாம் செய்த தவறை மனப்பூர்வமாக உணர்ந்துவிட்டால் அதுவே நமக்குக் கிடைத்த பாவமன்னிப்புதான். ஆனால், அந்தத் தவறை மறுபடியும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.`வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ - இது இயற்கை விதி. எனவே கவலைகளை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை வாழப் பழகுங்கள்.

நன்றி சொல்வதை ஒரு வேலையாகச் செய்யுங்கள்!

நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு நல்ல விஷயத்துக்கும் நன்றி சொல்லிப் பழகுங்கள். அதன் பலனைப்  பல மடங்குகளாக உங்கள் வாழ்க்கையில் திரும்பப் பெறுவீர்கள். 

உதாரணமாக, உங்கள் வேலையை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைத்ததற்காக உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள். 
உங்கள் கவலைகளைப் பகிர்ந்துக்கொள்ள எந்நேரமும் தயாராக இருக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு நன்றி கூறுங்கள். 
எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் உங்கள் நலனையே விரும்பும் பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள். 

நன்றி சொல்லி பழகுங்கள்...

எக்கச்சக்கமாக எகிறும் விலைவாசியையும், அதற்கான பில்களையும் பார்த்துப் பயப்படாதீர்கள். மாறாக, இந்தப் பெரிய தொகையை செலுத்தும் அளவுக்கு உங்களிடம் பணம் இருக்கிறதே என நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்குக் கிடைக்காததை நினைத்து வருத்தப்படாமல், கிடைத்த நல்லவற்றுக்கு நன்றி செலுத்திப் பாருங்கள்... உங்கள் வாழ்க்கை நிச்சயம் மாறும்! 

உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில்!

உங்கள் வாழ்க்கையானது, துரோகம் செய்யும் நண்பர்களாலும், அலட்சியப்படுத்தும் வாழ்க்கைத்துணையாலும், குறை கூறும் மனிதர்களாலும் சூழப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் நினைத்து, `என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே...’ என்று வருத்தப்பட வேண்டாம். உங்கள் சந்தோஷத்தை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். ஆம்... ஒவ்வொரு மனிதனையும் சந்தோஷப்படுத்தும் தேவதை அவனுக்குள்ளேயேதான் இருக்கிறாள். உங்களுக்கு சமையல் பிடிக்கும் என்றால், புதிது புதிதாக உணவுகளைத் தயாரியுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேளுங்கள். நல்ல புத்தகங்களை வாசியுங்கள். எழுதப்பிடிக்கும் என்றால், கதை எழுதுங்கள். உங்களுக்குப் பிடித்தவர்களிடம் போன் செய்து பேசுங்கள்... இப்படி உங்களுக்குப் பிடித்த விஷயங்களைத் தொடர்ந்து செய்வதால், சந்தோஷம் என்றும் உங்களை என்றும் விட்டு விலகாமல் இருக்கும்.

பாடல் கேளுங்கள்

வம்பு பேச்சு வேண்டாமே..!

வம்பு பேச்சு எதிர்மறையானது. யாரைப் பற்றி வம்பு பேசப்படுகிறதோ, அவர்களை அது பாதிப்பதில்லை. மாறாக யார் வம்பு பேசுகிறார்களோ அவர்களைத்தான் அது பாதிக்கும். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்காவிட்டால், அவரைப் பற்றி தவறாகப் பேசாமல் அவர்களிடம் இருக்கும் ஏதேனும் ஒரு நல்ல குணத்தை நினையுங்கள். முடியாவிட்டால், உங்கள் கவனத்தை உங்களுக்குப் பிடித்த விஷயத்தின் மீது செலுத்துங்கள். நீங்கள் ஆசைப்படும் வீட்டைக் கட்டுவதைப்போல அல்லது உங்களுடைய நெடுநாள் கனவு நிஜமாவதுபோல நினைத்துப் பாருங்கள். சதா அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருங்கள். ஒரு நாள் உங்கள் கனவு நிஜமாகவும்கூடும்!

வம்பு பேச்சு வேண்டாமே

இந்த ஐந்து விஷயங்களைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். உங்கள் வாழ்க்கை, உங்களுக்குப் பிடித்த விதத்தில் அமையும்... இன்பமே சூழ இன்புற்று வாழலாம்!

  • தொடங்கியவர்

16649545_786270154856658_276004137321094

16807039_786304354853238_812956881869422

  • தொடங்கியவர்

வின்னர்ஸ்... இந்த ‘ரன்’னர்ஸ்!

 

 
 
runners_3133966f.jpg
 
 
 

“காலையில் சீக்கிரம் எழுந்து நடப்பதா. அட போங்க பிரதர்!” எனக் கூறி விட்டுப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போரே அதிகம். அதிலும் இரவெல்லாம் இணையத்தில் அலைந்துவிட்டு அதிகாலையில் படுக்கைக்குச் செல்லும் இளையோரே அதிகம். மனஅழுத்தம் தொடங்கிப் பலவிதமான‌ உடல் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில் வயதானாலும் தொடர்ந்து இளைஞர்களாக வலம் வருவோர்கள் சில‌ இளையோருக்கு ரோல்மாடல்களாக இருக்கின்றனர்.

அந்த ‘ரோல்மாடல்’களை, புதுச்சேரி அருகே ஆரோவில் சர்வதேச நகரில் ஆரோவில் உதயதினத்தையொட்டி பத்தாவது ஆண்டாக நடந்த மாரத்தான் போட்டியில் பார்க்க முடிந்தது.

இந்த மாரத்தானின் விசேஷமே, ஆரோவில் நகரில் வசிக்கும் வெளிநாட்டவர் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுதான். மாரத்தான் போட்டிகளைப் பொறுத்தவரை முதல், இரண்டு, மூன்றாம் இடங்கள் என்றெல்லாம் இல்லை. நீங்கள் தேர்ந்தெடுத்த தூரத்தை உங்களால் அடைய முடிந்தால், அதுவே வெற்றிதான். அடுத்த மாரத்தானில், அந்த தூரத்தை விட கூடுதலாக இன்னும் கொஞ்ச தூரத்தை அடைந்தால், உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்ளலாம்!

உடல்வலிமை, மனித ஒற்றுமை ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்போட்டி நடந்தது. 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ., என 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு ஆர்வத்துடன் ஓடினர். குறிப்பாக தமிழகத்தின் 50 வயதைக் கடந்த பிரபல முகங்களும் இப்போட்டியில் முழு தொலைவான 21 கி.மீ. ஓடிக் கடந்தனர். 54 வயதான தமிழக ஏடிஜிபி சைலேந்திரபாபு 15 கமாண்டோ வீரர்களுடன் இந்த‌ மாரத்தானில் கலந்து கொண்டு 42 கி.மீ. நிறைவு செய்தார்.

run_3133968a.jpg

“மாரத்தான் போட்டி எங்கு நடந்தாலும் நானும், எனது வீரர்களும் பங்கேற்கிறோம். இந்த ஆண்டிலேயே 5-க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். நீச்சலும், ஓட்டமும் உடலைக் கட்டுகோப்பாக வைக்க உதவும். எங்களைப் போன்று போலீஸார் பலரும் தற்போது அதிக அளவில் பங்கேற்றுவருகின்றனர்” சில டிப்ஸ்களையும் தந்தார்.

“மனஅழுத்தத்திலிருந்து குழந்தைகள், இளைஞர்கள் விடுபட விளையாட்டு அவசியம். குறிப்பாக ஓட்டம் நல்ல மருந்து. விளையாட்டில் சிறப்பிடம் பிடிக்கும் குழந்தைகள், படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள்” என்றார் உற்சாகத்துடன். அதேபோலத் தனது 50-வது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார் 57 வயதான முன்னாள் சென்னை மேயர் சுப்பிரமணியன்.

சென்னை சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.வான இவர், கடந்த 15 ஆண்டுகளாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். கடந்த, 2004-ம் ஆண்டு பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் இவரின் இடது கால் மூட்டு பல துண்டுகளாக உடைந்ததால், அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

“என‌து காலில் மாற்று மூட்டு பொருத்தப்பட்டது. அதனால் வேகமாக நடக்கக் கூடாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். முதலில் நடக்க முயற்சித்தேன். அதுவே மிகவும் கடினமாக இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்து யோகா கற்றேன். பின்னர் மெதுவாக ஜாக்கிங் செய்யத் தொடங்கினேன். கடந்த

2014-ம் ஆண்டு புதுச்சேரி ஆரோவிலில் நடந்த மாரத்தான் போட்டிதான் நான் பங்கேற்ற‌ முதல் போட்டி. எனது 50-வது மாரத்தான் போட்டியிலும் இங்கேயே பங்கேற்பது சந்தோஷமாக இருக்கிறது” என்றவர், தனது 50-வது மாரத்தான் குறித்து ஆர்வமுடன் பேசினார்.

“புதுச்சேரியில்தான் முதன்முதலில் மாரத்தான் ஓடத் தொடங்கினேன். அங்கு ஓடத் தொடங்கிய என் கால்கள் ஆஸ்திரேலியா, மும்பை, சிம்லா, சென்னை, கோவை எனப் பல ஊர்களிலும் ஓடியது. குறுகிய காலத்தில் 50 மாரத்தானில் பங்கேற்றுள்ளேன். உடலை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் உருவாக்குவதே எனது விருப்பம்.

runners_2_3133967a.jpg

காலையில் தினமும் 5 மணிக்கு எழுந்து ஓட்டப் பயிற்சி எடுக்கிறேன். தினசரி பயிற்சியால் உடல் நிலை நன்றாக இருக்கிறது. இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய வலியுறுத்தித்தான் ஓட்டத்தைத் தேர்ந்தெடுத்தேன். 60 வயதுக்குள் நூறாவது மாரத்தானில் ஓடுவேன்” என்கிறார் நம்பிக்கை மிளிர.

சுமார் 70 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் முகமெல்லாம் புன்னகையுடன் வியர்வை வழிய மாரத்தானை நிறைவு செய்தப்படி இருந்தனர். எதற்காக ஓடுகிறீர்கள் என்று கேட்டால், “சந்தோஷத்துக்காகதான்!” என்கிறார்கள்.

நாமும் ஒரு ‘ரன்’ போவோமா..?

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
 

உலகின் முதல் பறக்கும் கார் விற்பனைக்கு... விலை என்ன?

பறக்கும் கார்

கமர்ஷியலாக அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் உலகின் முதல் பறக்கும் கார் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது PAL-V லிபர்டி (Liberty). £4,25,000 என்ற விலையில் (உள்ளூர் வரிகள் இல்லாமல்) கிடைக்கக்கூடிய இந்த பறக்கும் காரின் இந்திய மதிப்பு, ஜஸ்ட் 3.56 கோடி ரூபாய்தான் மக்களே! 2018-ம் ஆண்டு இறுதிமுதலாக PAL-V Liberty-ன் டெலிவரிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவகை கார்களின் விதிமுறைகளைப் பின்பற்றி, பறக்கும் காரான லிபர்டியைத் தயாரித்திருப்பதாகக் கூறியுள்ள PAL-V நிறுவனம், `விமானப் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்’ எனத் தெரிவித்துள்ளது.

பறக்கும் கார்

முதற்கட்டமாக லிபர்டி பயனீர் எடிஷன் (Liberty Pioneer Edition) எனும் ஸ்பெஷல் எடிஷனில் களமிறங்கும் இந்த கார், 90 மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. Flight Instruction Session, Power Heating, Personalisation Options, CarbonFibre Detailing போன்ற பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. 90 கார்களில் சரிபாதி எண்ணிக்கை, ஐரோப்பியாவில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது. இவற்றின் டெலிவரிகள் முடிந்த பிறகு,  லிபர்டி ஸ்போர்ட் (Liberty Sport) மாடலின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என PAL-V நிறுவனம் தெரிவித்துள்ளது. $3,99,000 என்ற விலையில் (உள்ளூர் வரிகள் இல்லாமல்) கிடைக்கக்கூடிய இந்த வேரியன்ட்டின் இந்திய மதிப்பு, 3.34 கோடி ரூபாய். இதன் விலை குறைவாக இருப்பதற்கு, இந்த வேரியன்ட்டுடன் வழங்கப்படும் குறைவான Personalisation Option-களே காரணம். ஆனால் Flying Lessons, Power Heating, Carbonfibre Detailing ஆகியவை இதனுடன் வழங்கப்படும் என்பது ஆறுதல். 

பறக்கும் கார்

பறக்கும் காரான லிபர்டி, ஆட்டோ போல மூன்று சக்கரங்களை மட்டுமே கொண்டிருக்கிறது; கார் பறப்பதற்குத் தேவையான றெக்கைகள், காரின் கூரை மேலே பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. இந்த செட்-அப், இரண்டு Dual Propulsion - Rotax வகை இன்ஜின்களைக் கொண்டிருக்கும் GyroCopter விமானத்தை நினைவுபடுத்துகின்றன. இரண்டில் ஒரு இன்ஜின் சாலைப் பயன்பாட்டுக்கும், மற்றொன்று ஆகாயத்தில் பறப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே இருக்கக்கூடிய பெரிய Rotor, 664 கிலோ எடையுள்ள இந்த காரை மேலெழுப்புவதற்கு உதவுகிறது. இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள பிளேடுகள், இந்த பறக்கும் காருக்குத் தேவையான உந்துசக்தியைத் தருகின்றன. இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய லிபர்டி, தாழ்வான சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கிறது. 

பறக்கும் கார்

சாலைப் பயன்பாட்டில் இருந்து பறப்பதற்குத் தயாராக, லிபர்டி காருக்கு 5 முதல் 10 நிமிடங்களே தேவைப்படும் என PAL-V நிறுவனம் கூறினாலும், காரின் ஓட்டுநர்தான் பின்பக்கத்தில் மடிந்த நிலையில் இருக்கும் இரண்டு Rotor பிளேடுகளை, வெளியே எடுத்து விரித்துவிட வேண்டும். இந்நேரத்தில் காரின் கூரையில் இருக்கும் றெக்கைகள் தானாக விரிந்துவிடும். ஆக கார் பறப்பதற்கு ரெடி! லிபர்டியை ஓட்டுவதற்குப் பிரத்யேகமான லைசென்ஸ் தேவை என்பதுடன், பறக்கும்போது நினைத்த மாத்திரத்தில் இதனை தரையில் இறக்கிவிட முடியாது. எந்த தடைகளும் இல்லாத 90-200x20 மீட்டர் இடமானது, லிபர்டி டேக்-ஆஃப் ஆவதற்கும் தரையிறங்குவதற்கும் தேவைப்படும் என்கிறது PAL-V நிறுவனம். எனவே Small AirStrip, AeroDome, Glider Site, UltraLight AirField ஆகியவை இதற்கு ஏற்றதாக இருக்கும் என நம்பலாம். மேலும் 246 கிலோ எடையைச் சுமக்கும் திறன் இருப்பது ப்ளஸ். 

பறக்கும் கார்

லிபர்டி பறக்கும்போது வெளிப்படுத்தும் சத்தம், சிறிய விமானம் மற்றும் ஹெலிகாப்டர் போன்றவற்றைவிடக் குறைவாகவே இருக்கும் என  PAL-V நிறுவனம் தெரிவித்துள்ளது. காராகப் பயன்படுத்தும்போது, 100bhp பவரை வெளிப்படுத்துகிறது லிபர்டியின் இன்ஜின். சாலையில் அதிகபட்சமாக 160 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய லிபர்டி, 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 9 விநாடிகளில் எட்டிவிடுகிறது. லிட்டருக்கு 11 கி.மீ மைலேஜ் தரும் லிபர்டியின் 100 லிட்டர் டேங்கை ஒருமுறை நிரப்பினால், கிட்டத்தட்ட 1,314 கி.மீ தூரம் வரை செல்ல முடியும். பறக்கும்போது 3,500 மீட்டர் உயரம் வரை செல்லக்கூடிய லிபர்டி, அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தை எட்டுகிறது. இதற்கு லிபர்டியில் இருக்கும் 200bhp பவரை வெளிப்படுத்தும் இன்ஜினே காரணம். சாலைப் பயன்பாட்டை விட ஆகாயத்தில் அதிக வேகம் செல்லும் லிபர்டி, மைலேஜில் பின் தங்கிவிடுகிறது -  500 கி.மீ தூரம் மட்டுமே அதிகபட்சம் பறக்க முடியும். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 26 லிட்டர் எரிபொருளை (Euro 95, Euro 98, E10, Avgas) பயன்படுத்துகிறது லிபர்டி! 

பறக்கும் கார்

நெதர்லாந்தில் அசெம்பிள் செய்யப்படும் இந்த பறக்கும் காரின் பாகங்கள், பலநாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இத்தாலியில் லிபர்டியின் டிஸைன் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2009 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் இந்த காரின் மாதிரிகளைக் கொண்டு, டெஸ்ட்டிங் பணிகள் நடைபெற்றன. ''பல ஆண்டு உழைப்பிற்குப் பிறகு, தொழில்நுட்ப ரீதீயாகப் பல இன்னல்களைத் தாண்டியே, எங்களது அணி இந்தப் புதுமையான பறக்கும் காரைத் தயாரித்திருக்கிறது. உலகெங்கும் இவ்வகை கார்களுக்கு இருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியே லிபர்டியை வடிவமைத்துள்ளோம்'' என PAL-V நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Robert Dingemanse கூறியுள்ளார். 

இந்த காரின் வீடியோ உங்கள் பார்வைக்கு:

– ராகுல் சிவகுரு

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: திமுகவினர் வெளியேற்றம் - பேரவை மல்லுக்கட்டு

 
 
vadivelu_3134892a_3134947f.jpg
 
 
 

ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.''ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர்'' என்று ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப் பேரவையில் நடந்த இந்தச் சம்பவம் நெட்டிசன்களின் மத்தியில் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

சண்டியர்

நியாயமா இந்த முற்றுகையை OPS பண்ணிருக்கனும்.. ஏன் அமைதியா இருக்கார் தெர்ல..

சிந்தனைவாதி

MLAக்களே! முதல்ல நீங்க சட்டசபையை காப்பாற்றுங்க

# தமிழ்நாட்டை மக்கள் காப்பாற்றுவாங்க

Athisha Vino

கலைஞருடைய கன்டினியூட்டி இப்போதான் தெரியுது...

Palai Karthik

பிரச்சனை சசிகலாவுக்கும் ஓபிஎஸ்க்கும் கடைசியில் கிழிந்ததோ ஸ்டாலினின் சட்டை.!

கொடுமை :

Kavin Malar

தமிழ்நாட்டு மக்கள் இன்று நடக்கும் சட்டப்பேரவை நிகழ்வுகளை மிகவும் என்ஜாய் செய்வதுபோல் தெரிகிறது.

Dauntless

சசி ஆட்சி வேணாம்னு நீங்க புலம்புனது opsக்கு கேட்டுச்சோ இல்லயோ..ஸ்டாலினுக்கு கேட்டிருச்சு

vadivelu_3134863a.jpg

Vigneshwaran Sp

vadivelu_3134892a.jpg

அசால்ட்டு

மக்களோட மன நிலையைதான் சட்டசபைல திமுகவின் செயல்பாடுகள் பிரதிபலிக்குது.

Arun Kumar Celestin

இவுங்க ஆட்டத்துல இது புதுசால இருக்கு!! சபாநாயகர் வெளிநடப்பு ..

#திமுகராக்ஸ்

Venki Rko

நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல..!

#DMK #TNAssembly

Vini Sharpana

இன்று பிரளயமே நிகழ்ந்தாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமைதி காத்துதான் ஆகவேண்டும்...! வேறு வழியே இல்லை :-) :-)

Rahul Sekar

கிழிஞ்ச சட்டையோட

பாட்ஷா பாய் மாதிரி வெளியே வராப்டி ஸ்டாலின்..

Raj Bala

செயல் தலைவர் தன் செயலை காட்டிவிட்டார் ...

#திமுகராக்ஸ்

senthilkumar.s

வரச்சொல் வரச்சொல் MLA வை வரச் சொல்

வரச்சொல் வரச்சொல் தொகுதிக்கு வரச்சொல்

Sethu Pathi

Breaking News :

உடைந்த சபாநாயகர் இருக்கையை சரிசெய்ய இரண்டு ஆசாரிகள் சட்டசபைக்கு விரைந்தனர்..!!

ராஜா

இன்று சட்டப்பேரவையில் மல்லுக்கட்டு

Venba Geethayan

எல்லாரையும் அடித்துத் துரத்திவிட்டு வாக்கெடுப்பு வெற்றியாம்...

அடுத்த breaking news ஆளுநர் மாளிகையிலிருந்து On the way....

மக்கள் முதல்வர் OPS வாழ்க...

Yuva Krishna

திமுகவை வெளியேற்றியதின் மூலம் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் எடப்பாடி.

இனி கவர்னரை கடவுளாலும் கட்டுப்படுத்த முடியாது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

16806745_786379104845763_143165046102246

 

 
 
நடக்குறதே வேற..! #கேப்டன்லெவல்
 
 
Bild könnte enthalten: 6 Personen, Text
நெசம்தானே மக்களே..?
Bild könnte enthalten: 3 Personen
 
ஸ்டாலின் தி பாஸ்..! 1f44d.png?1f4aa.png
 
 
 
 

trash dove

 

தமிழ்நாட்டு மக்கள் now

  • தொடங்கியவர்

 

விலங்குகள் கனவு காணுமா?

  • தொடங்கியவர்

பெண்மையையும் பசுமையையும் போற்றும் ஆச்சர்ய கிராமம்!

புதிய நம்பிக்கைஸ்ரீலோபாமுத்ரா

 

52p1.jpg

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ளது பிப்லாந்திரி கிராமம். பெண்களைப் போற்றும் முன்மாதிரி கிராமம் என உலகமே வியந்து நோக்கும் வகையில், பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் கம்பீர கிராமம் இது!

 பத்தாண்டுகளுக்கு முன் வரை, சமூக, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கி, இந்தியாவின் மற்றுமொரு கிராமமாகவே இருந்தது பிப்லாந்திரி. 2005-ம் ஆண்டு இதன் பஞ்சாயத்துத் தலைவராக ஷ்யாம் சுந்தர் பொறுப்பேற்ற பின், நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. பள்ளிக் கல்வியைக்கூடத் தாண்டாத ஷ்யாம், தொலைநோக்குப் பார்வையுடன் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு, மக்களின் ஏகோபித்த ஒத்துழைப்புடன் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, பத்து ஆண்டுகளுக்குள் பிப்லாந்திரியை முற்றிலும் முன்னேறிய கிராமமாக மாற்றியுள்ளார். 

52p2.jpg

ஷ்யாம் சுந்தருக்கு அவள் விகடனின் வாழ்த்துகளைத் தெரிவித்தோம். பணிவு, எளிமை, மக்கள் நலனில் அக்கறை... இம்மூன்றும் அவர் பேச்சில் புலப்பட்டன. அந்த கிராமத்தின் வளர்ச்சிப் பயணத்துக்கான ஆரம்பப் புள்ளியாக, ஷ்யாம் சுந்தர்  மகளின் மரணம் இருந்தது நாம் எதிர்பாரா அதிர்ச்சி.

‘`நான் பொறுப்பேற்றவுடன் வீடு வீடாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தேன். குடிநீர்ப் பற்றாக்குறை, கல்லாமை, பெண் சிசுக்கொலை, குற்றங்கள், மார்பிள் (வெள்ளை சலவைக்கல்) குவாரிகளில் இருந்து வெளியேறும் கழிவு எனப் பல சவால்கள் காத்திருந்தன. முதல் கட்டமாக, நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்புப் பணிகளை மேற்கொண் டேன். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர்த் தட்டுப்பாடு தீர்ந்தது.

52p3.jpg

என் மகள் கிரண், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள். அவளின் நினைவாக 111 மரங்களை கிராமம் எங்கும் நட முடிவெடுத்தேன். இதுபற்றி மக்களிடம் பேசினேன். குறிப்பாக, பெண்களின்  முன்னேற்றத்துக்கு இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் நிச்சயம் கைகொடுக்கும் என்பதை விளக்கிச் சொல்லி நம்பிக்கை அளித்தேன். ஆரம்பத்தில் யாரும் ஒத்துழைக்கவில்லை. ஆனால், ஒரு பஞ்சாயத்துத் தலைவராக, அரசின் நலத்திட்டங்களை நான் வெற்றிகரமாகச் செயல்படுத்தி கிராமத்தின் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்த பின், மக்கள் எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்க ஆரம்பித்தனர்’’ என்கிற ஷ்யாம், அந்த முயற்சி கிராமத்திலும், கிராமத்துப் பெண்களிடமும் ஏற்படுத்திய மலர்ச்சியைப் பற்றிக் கூறினார்.

‘`கடந்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் மரங்களை உருவாக்கியுள்ளோம். மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தி, அந்த மரங்களைப் பராமரிக்கிறோம். இப்போது எங்கள் கிராமம் முழுவதும் நல்ல வருமானம் தரக்கூடிய வேம்பு, மா, நெல்லி, ஸ்ரீஷம் (தேக்கு மர வகை) மற்றும் மூலிகை மரங்கள் வளர்ந்து சோலையாகவே காட்சி அளிக்கின்றன. பெண்கள் இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை விற்றுக் கிடைக்கும் தொகையை, பிள்ளைகளின் கல்விச் செலவுக்கும், பெண் குழந்தை வளர்ப்புக்கும் பயன்படுத்திக் கொள் கிறார்கள். இதைத் தொடர்ந்து, நகரங்களுக்கு வேலை தேடிச் செல்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இப்படி எங்கள் கிராம மக்கள் பொருளா தாரத் தன்னிறைவைப் பெற்றனர். அடுத்த அவசிய நடவடிக்கையாக, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த குடும்பத் தலைவிகளின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கும் திட்டத்தைச் செயல்படுத்தினேன்’’ என்கிற ஷ்யாம், பெண் குழந்தை பிறந்தால், அதைத் தங்கள் கிராமம் வரவேற்கும்விதம் பற்றிச் சொன்னபோது, வியந்துபோனோம். 

52p4.jpg

‘`பெண் குழந்தைகளின் மேற்கல்வி மற்றும் திருமணச் செலவுகளைக் கருத்தில் கொண்டோம், குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் தங்களின் பங்களிப்பாக ரூ. 10 ஆயிரம் மற்றும் கிராம மக்கள் தங்களுக்குள் வசூலித்த ரூ.21 ஆயிரம் என, மொத்தம் ரூ. 31 ஆயிரத்தை 20 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக (Fixed deposit) அக்குழந்தையின் பெயரில் வங்கியில் முதலீடு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினேன். அதைப் பெற, பெற்றோர் மூன்று விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவாதம் அளித்து, உறுதிமொழிப் பத்திரத்தை பஞ்சாயத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விதிமுறைகள்...

1. வனத்துறையின் ஒத்துழைப்புடன் நல்ல வருமானம் தரும் 111 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும்.

2. தங்கள் பெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் செய்யக் கூடாது.

3. இருபது ஆண்டுகளுக்குப் பின் பல லட்சங் களாகப் பெருகியிருக்கும் நிரந்தர வைப்பு நிதிப் பணத்தை மகளின் மேற்கல்வி அல்லது திருமணச் செலவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!’’

- இப்படி அசரவைக்கும் ஷ்யாமின் அதிரடி இன்னும் நீள்கிறது.

52p5.jpg

அரசின் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, மின்சாரம், தெருவிளக்குகள் போன்ற பயன்கள் மக்களை அடையச் செய்திருக்கிறார். தங்கள் கிராமத்தில் மதுக்கடைகள் கிடையாது என்று பெருமையுடன் சொல்பவர், இதனால் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து அமைதியும் ஒற்றுமையும் நிலவுவதாகவும் சொல்கிறார்.

சமூக சேவகர் அன்னா ஹஸாரே இந்த கிராமத்தைப் பார்வையிட்டு, பெண்கள் நலன் மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரத் தன்னிறைவு என மும்முனைப் பயனுடன் பிப்லாந்திரி வளர்ச்சியடைந்ததாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘பிப்லாந்திரி’ என்ற பெயரிலேயே இந்த கிராமத்தின் வெற்றிக் கதை இந்தி மற்றும் மலையாள மொழிகளில் திரைப்படங்களாகவும் தயாராகி வருகிறது.

 ‘`சிறந்த பஞ்சாயத்துக்கான பல விருதுகளை எங்கள் கிராமத்துக்கு வழங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள், பிப்லாந்திரியை மாதிரி கிராமமாக அங்கீகரித்து, மற்ற கிராமங்களிலும் இந்த நிர்வாக நேர்த்தியைச் செயல்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன. நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். இந்த கிராமத்தின் வெற்றிக்குப் பின்னால், என் மகள் கிரண் இருக்கிறாள்!”

அந்த அப்பாவின் நெகிழ்வும் அன்பும் சமூக அக்கறையாக ஆக்கம் பெற்ற கதையைச் சலசலக்கின்றன பிப்லாந்திரி மரங்கள். 

  • தொடங்கியவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
Tamil_News_large_1713473_318_219.jpg
 
பன்னீருக்கு வாத்தியார் மனைவி எழுதிய பரிவு கடிதம்!

 

 

சிறப்பு இது உங்கள் இடம்
எஸ்.கே.ஏ.ஈஸ்வரி அம்மாள், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பெரியகுளத்தில் படிக்கும் காலத்தில், உங்கள் ஆசிரியர், எஸ்.கே.ஏ.அய்யாசாமியிடம், நீங்கள் படித்தீர்கள்; டியூஷன் படிக்க, எங்கள் வீட்டிற்கு வந்தீர்கள். மற்ற மாணவர்கள் எல்லாம் அரட்டை அடிக்கும்போது, நீங்கள் மட்டும் அமைதியாக,
யாரிடமும் பேசாமல் படித்து கொண்டிருப்பீர்கள்.


உங்கள் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு, சத்தம் இல்லாமல் பதில் சொல்வீர்கள். எதற்கெடுத்தாலும் கையை கட்டியும், கேட்கும் கேள்விக்கு, 'சரி, இல்லை' என, தலையை மட்டும் தான் ஆட்டுவீர்கள்.
உங்களை, ஆசிரியருக்கு மிகவும் பிடிக்கும். மற்ற மாணவர்களையும், கவனிக்கும்படி, உங்களிடம் தான் ஆசிரியர் வலியுறுத்துவார். நீங்கள் பள்ளி வாழ்க்கையை முடித்து செல்லும் போது, உங்கள் ஆசிரியர், சில அறிவுரைகளை கூறினார்.'பன்னீரு... நீ சிறந்த மாணவன். சுறுசுறுப்பாகவும், யாரிடம் பேசினாலும், கம்பீராக பதில் சொல்ல வேண்டும். கூனி, குறுகி இருக்கக் கூடாது. சத்தம் போட்டு பதில் சொல்ல வேண்டும்.


இப்படி மவுன சாமியாக இருக்கக்கூடாது' என்றார்.உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெயலலிதாவின் அன்புக்குரியவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும்
விளங்கினீர். உங்கள் மீது தனி மதிப்பு வைத்திருந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பின், நல்ல முறையில் ஆட்சி செய்து கொண்டிருந்த நீங்கள், சசிகலாவிடம் ஏமாந்து விட்டீர்கள்.


சசிகலாவிடம், 'முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என, கடிதம் கொடுத்து விட்டு வரும்போது, உங்கள் முகத்தில் சோக சிரிப்பு, மனதில் கொதிப்பு இருந்ததை, ஒரு தாய் என்ற முறையில் எனக்கு தெரியும். தன் பிள்ளையின் மனதில் என்ன வேதனை, நினைப்பு இருக்கிறது
என்பதை, 'டிவி'யில் பார்த்து தெரிந்து கொண்டேன். 'ஐயோ, பன்னீரு ஏமாந்து விட்டாய்' என, அழுது புலம்பினேன். அடிமைக்கு அடிமையாக இருந்து விட்டாயே. என் பிள்ளைகள், 'என்னம்மா, மாமா, இப்படி பண்ணிட்டார்' என, கொதித்து போய் விட்டனர். உங்கள் ஆசிரியர், உன் மாமா... 'பன்னீரு' என்ற விதையை விதைத்து விட்டார். ஆனால், உன் ஆசிரியர்
இப்போது இல்லை. ஜெயலலிதா சமாதியில் முறையிட்டு, அழுது, கும்பிட்டு, அதிரடியாக, எல்லாரிடமும், விளக்கமாக, 'என்னை கட்டாயப்படுத்தி தான் கையெழுத்து வாங்கினர்' என, பத்திரிகையாளரிடம் கூறினாயே, அப்போது தானப்பா, எனக்கு வயிற்றில் பால் ஊற்றினாற் போல் இருந்தது; என் வயிறு குளிர்ந்ததுப்பா!
உனக்கு நாங்கள் இருக்கிறோம்... இப்பதானப்பா, உனக்கு வீரம் வந்திருக்கு. நீ எப்பவும் முதல்வர் தான் பன்னீரு... என் ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் இருக்குய்யா!

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: பெப்ரவரி 19
 
 

article_1424320315-dutchmanhattastreets.1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான  அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.

1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.

1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.

1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.

1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.

1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.

1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த ஞாயிற்றுக்கிழமையை ஸ்பெஷலாக்குங்களேன்! #SpecialSunday

Sunday

      விடுமுறை என்றாலே உற்சாகம்தான். அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். ‘Sunday டோய்...’ என்று தனி உற்சாகமே வந்துவிடும். வாரத்தில் ஆறு நாள் உழைக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிப்பதே அந்த ஒரு நாள் விடுப்பு தான். வாரம் முழுக்க மண்டைக்குள் ஓடும் குதிரைக்கு அன்று மட்டும் தான் ஓய்வு. அன்றைய நாளை பெரும்பாலும் ஓய்வு எடுத்து மட்டுமே கழிக்க விரும்புவோம். ஒருசிலர் அந்த ஒரு நாளைத் தன் வாழ்க்கை புத்தகத்தின் பொன் பக்கமாக சேகரிக்க முனைவர். வாழ்வை அனுபவித்து வாழும் அவர்களை போன்றோருக்கான டிப்ஸ் இதோ!

$ ஒரு நாள் லீவா..பாச்சுலரா...’நமக்கு வாய்த்த அடிமைக’ளுடன் ஒரு நாள் பயணமாக அருகில் உள்ள தீம் பார்க்குக்கோ மாலுக்கோ சென்று சுற்றி வரலாம். இல்லை நண்பர்கள் வீட்டுக்குக் கூட சென்று வரலாம். நண்பனின் குடும்பத்திற்கும் மகிழ்ச்சி. நமக்கும் மகிழ்ச்சி. நீங்கள் இருப்பது ஹாஸ்டல் என்றால்.. ஒருநாள் வழக்கமான சாப்பாட்டில் இருந்து எஸ்கேப். நண்பர்களைச் சந்திக்கச் செல்லும்போது அவர்களுடன் பேச, அவர்களுக்குப் பிடித்தமான சப்ஜெக்டை மனதில் அசைபோட்டபடி செல்லுங்கள். நிச்சயம் சிறப்பான அனுபவமாக இருக்கும்.   

 

$  `என்ன பாஸ்.. மால்.. ஃப்ரெண்ட்ஸ்னு சின்ன ஐடியாவா சொல்றீங்க..?’ எனும் கட்சியா?  “ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல” என்பது உங்கள் தாரக மந்திரமாக இருக்கும் பட்சத்தில் அருகில் இருக்கும் மலை சார்ந்த பிரதேசத்திற்கு ஒரு விசிட் அடிக்கலாம். யாரும் வேண்டாம். அவற்றின் உயரம் உங்களை பிரமிக்க வைக்கும். உடலுக்கும், மனதுக்கும் செம ரிஃப்ரெஷாக இருக்கும்.  மலை ஏற்றம்,காட்டில் ஒரு நாள் தங்குதல் போன்ற அட்வென்ச்சர் ட்ரிப்பாக அதை மாற்றலாம்.  

$  நம் கூட்டத்தில் இருக்கும் எப்படியும் ஒரு நண்பன் பட ஸ்ரீகாந்த்தாக இருப்பான். அவனைப் பிடியுங்கள். ‘டேய்.. உன் கேமராவோட வாடா ஸ்டிரீட் ஃபோட்டோகிராஃபிக்கு போகலாம்’ என்று அழையுங்கள். நாலு தெருவுக்கு சுத்தின மாதிரியும் ஆச்சு. சில அழகியலான விஷயங்களைப் பார்த்தமாதிரியும் ஆச்சு. 

நமக்கு பாதி உறவுகளே தெரிவதில்லை. பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஒரு விசிட் அடித்துவிட்டு  வரலாம். குழந்தைகளுக்கு உறவின் பெயர்கள் தெரியவும் அன்பில் நனையவும் நிறைய வாய்ப்புண்டு.  பாட்டி கதையும், அத்தையின் கிண்டலும் போனஸாகக் கிடைக்கலாம்.

வீட்டில் எல்லாரும் சேர்ந்து இருக்கும் ஒருநாளை மனம் விட்டுப் பேச பயன்படுத்தலாம்.இன்றைய சூழலுக்கு பெரிதும் “வான்டட்” விஷயம் இது. பிள்ளைகளை தினசரி ஓட்டத்தில் கவனிக்க முடிவதில்லை என்பது குறையாய் இருப்பின், அதைக் களையும் நாளாய் இது அமையும். ஒருவாரக் கதையை கேட்கவும் சொல்லவும் செய்ய ஒரு வாய்ப்பு. அப்படிப் பேசும்போது உங்கள் ஃபோனை அவுட் ஆஃப் ரீச்சில் வைங்க பாஸ்.

குழந்தைகள் புதிதாய் ஏதேனும் முயற்சிக்க இந்த நாளைப் பயன்படுத்தலாம். ஓவியம், பாடல், பேச்சு என்று அவர்களை எதாவது செய்யச் சொல்லி ரசியுங்கள். வாராவாரம் இதைச் செய்து பாருங்கள். ஒருகட்டத்தில் அவர்களின் ஸ்பெஷல் திறமை என்னவென்பது தெரியும்.

இந்த ஐடியாக்கள் எல்லாம், படிக்க ரொம்ப சாதாரணமான ஐடியாக்களாகத்தான் இருக்கும். ஆனால் இவற்றில் ஒன்றிரண்டையாவது சீரியஸாக எடுத்துக்கொண்டு ஃபாலோ செய்துபாருங்கள். மாற்றம்.. முன்னேற்றம்.. ஸ்பெஷல் சண்டே என்றிருக்கும்! திங்கட்கிழமையை உற்சாகமாக எதிர்கொள்ளலாம்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.