Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

மொத்த நிலத்தில் 33% காடு வேண்டும் என்கிறது சட்டம்...உண்மை என்ன? #WorldWildlifeDay

வன உயிரின நாள் காடு

மார்ச் 3-ம் தேதியான இன்று சர்வதேச வன உயிரின நாள். உலக ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் இந்த வன உயிரின நாளைக் கொண்டாடுகின்றன. வன தாவர மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்த வன உயிரின நாளின் நோக்கம். நம்மையும், நமது சந்ததிகளையும் பாதுகாக்க நமக்கு இயற்கை கொடுத்திருக்கும் வரங்களே 'மரங்கள்'. மரங்கள்தான் சுற்றுச்சூழலை பாதுகாத்து மனிதனுக்குப் பல வழிகளிலும் உதவுகிறது. இந்திய வனக்கொள்கையின்படி நிலப்பரப்பில் மூன்றில் ஒருபங்கு காடுகளாக இருக்க வேண்டும். ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக, வனக்கொள்கைக்கு எதிராக இந்திய வனப்பரப்பில் வெறும் 20 சதவீதம் காடுகளே இருக்கின்றன. விவசாயத்தினை வளர்க்க 'பசுமைப்புரட்சி', மீன்களைப் பாதுகாக்க 'நீலப்புரட்சி' மற்றும் பால்வளத்தை பாதுகாக்க, 'வெண்மைப்புரட்சி' எனப் பல புரட்சிகள் நடந்துள்ளன. ஆனால் வனங்களையும் அவற்றில் வசிக்கும் விலங்குகளையும் பாதுகாக்க தீவிரமான புரட்சி கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். இப்போது மாறிவரும் உலக வெப்பமயமாதலுக்கு வனங்கள் அழிக்கப்பட்டதும் முக்கியமான காரணம். மரங்களும், விலங்குகளும் எண்ணிக்கையில் குறைவது நம்மை முழுமையாகப் பாதிக்கும் என்பது சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூமியின் மேற்பரப்பில் உள்ள வாயு மண்டலத்தில் சுமார் 95% காற்றானது பரவியுள்ளது. இந்தக் காற்றினை உண்டாக்குவதில் முக்கியமான பங்கு வகிப்பது மரங்கள்தான். இந்த மரங்கள்தான் காற்றினை சுத்தப்படுத்தும் பணியாளர்கள். 

செழுமையான வனப்பகுதி

காற்றில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு, கரியமில வாயு மற்றும் கந்தக டை ஆக்ஸைடு ஆகியவற்றை மரங்கள் எடுத்துக்கொண்டு நாம் உறிஞ்சும் ஆக்ஸிஜனாக மாற்றிக்கொடுக்கிறது. இதன்படி ஒவ்வொரு மரமும் மாசுநீக்கும் தொழிற்சாலைதான். நாளாக நாளாகத் தொழில் வளர்ச்சி, மக்கள் தொகைபெருக்கம் என பல்வேறு காரணங்களால் வனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அங்கே வசிக்கும் காட்டுயிர்கள் செல்லும் இடம் தெரியாமல் ஊருக்குள் வருகின்றன. இன்றைய நிலையில் வனப்பகுதியில் பெருகி வரும் கட்டடங்களால் வனவிலங்குகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. வனவிலங்குகளில் கிட்டத்தட்ட சிங்கவால்குரங்கு, காட்டுமிளா கரடி, சிறுத்தை, புலிகள், ராஜநாகம், முதலை, வரையாடு உள்ளிட்ட பல உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளதாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முழுமையான காரணம் மக்கள் தொகைப்பெருக்கம் காரணமாகச் சொல்லப்படுகிறது. விலங்குகள் மட்டுமல்லாமல் மரங்கள் மற்றும் தாவரங்களிலும் சில வகை தாவரங்கள் அழிந்துவிட்டன. இப்போதுதான் இந்தியாவில் சுற்றுச்சூழலைப்பற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட ஆரம்பித்துள்ளது. திருமண விழாக்கள், அரசு விழாக்கள் எனப் பல விழாக்களில் மரங்களை நடுகிறார்கள். சிலர் குழுக்களாக பிரிந்து விதைப்பந்துகளாக மாற்றியும் மர விதைகளைத் தூவுகிறார்கள். மரம் வளர்ப்பு ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும் இன்னும் பணிகள் முழுவீச்சில் ஆரம்பிக்கவில்லை என்பதே உண்மை. இன்னமும் நாம் விழிப்பு உணர்வின் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறோம். 

காடுகள் வாழும் தாவரங்கள்

வனங்களை அழித்தால் கடுமையான தண்டனைக் கொடுக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் அழித்துக் கொள்பவர்கள் இன்னும் அழித்துக்கொண்டே இருக்கிறார்கள். காட்டை அழித்ததால் விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வரத் தொடங்கிவிட்டன. வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன எனச் சொல்லும் நாம் அந்த விலங்குகள் வரும் காரணங்களைப் பற்றியும் சற்று சிந்திக்க வேண்டும். ஏனெனில் இங்கு சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட மரங்களே பல லட்சங்களைத் தாண்டும். ஒரு நிமிடத்தில் வெட்டும் மரங்கள் வளரக் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது எடுத்துக் கொள்ளும். அதேபோல ஒரு காட்டில் புலி வசித்தால்தான் அதனைச் சுற்றியுள்ள வன உயிரினங்களும், மனிதர்களும் வாழமுடியும். ஒரு யானை அழிந்தால் அதைச் சுற்றியுள்ள 16 வகையான தாவரங்கள் அழியும். இதுதவிர ஒவ்வொரு கலாசாரப் பண்பாட்டிலும் மனிதனுக்கு விலங்குகளுடன் அதிக தொடர்பு உண்டு. வனவிலங்குகள் அதிகமாக வசிக்கும் நாடுகளே வளம் செழிந்த நாடுகளாக மாறும். காட்டுயிர்கள் செல்லும் வழித்தடத்தில் கட்டடங்களை எழுப்பி விட்டு ஊருக்குள் 'நல்லவர்களாக' காட்டிக்கொள்பவர்களும் அவர்களுக்குத் துணைபோகும் 'அதிகார' வர்க்கமும் இருக்கும் வரை பல்லுயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை மறுக்க முடியாது. நாம் வாழ விலங்குகள் வாழ்வது மிக மிக அவசியம். வனங்களில் வாழும் ஒவ்வொரு உயிர்களும் நாம் வாழ்வதற்கான ஆதாரம்.  சர்வதேச வன உயிரின நாளான இன்று வன உயிரினங்களைக் காப்போம் என உறுதியுடன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு பசுமையைக் காப்போம்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் (மார்ச்.3, 1847)

அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார். இவருக்கு ல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர். இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதானபோது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது.

 
 
 
 
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் (மார்ச்.3, 1847)
 
அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார். இவருக்கு ல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர்.

இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதானபோது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது.

இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார். பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார்.

கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது. போஸ்டன் நகரத்தில் வசித்தபோது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தினார். அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார். அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக்கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது.

பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார்.

அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875 இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது.

1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது. பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் "வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்." என்பதுதான். இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது.

அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார். 1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார்.

தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை  என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.

பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர்[, மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை.

http://www.maalaimalar.com

நான் இவ்வளவு நாளும் கிரஹாம்பெல் கன்டாவில் பிறந்தார்.அதனாலே தான் கனடாவில் தொலபேசி ப்ரீ என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

  • தொடங்கியவர்

பிரிட்டனில் மின்சார டிராம் வண்டி ஓடிய நாள்: மார்ச் 4- 1882

 

பிரிட்டனில் மின்சாரத்தால் இயங்கும் முதல் டிராம் வண்டி 1882-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்த டிராம் வண்டி கிழக்கு லண்டனில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்: * 1945 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது. * 1945 - எலிசபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) ராணுவத்தில் வாகன ஓட்டுனராக இணைந்தார். * 1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக்கோள் ஆனது.

 
 
 
 
பிரிட்டனில் மின்சார டிராம் வண்டி ஓடிய நாள்: மார்ச் 4- 1882
 
பிரிட்டனில் மின்சாரத்தால் இயங்கும் முதல் டிராம் வண்டி 1882-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்த டிராம் வண்டி கிழக்கு லண்டனில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:

* 1945 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது. * 1945 - எலிசபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) ராணுவத்தில் வாகன ஓட்டுனராக இணைந்தார். * 1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக்கோள் ஆனது.

* 1977 - ருமேனியா தலைநகர் புகாறெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர். * 1980 - றொபேட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமரானார். * 1994 - கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது. * 2001 - லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.

* 2001 - போர்ச்சுக்கல்லி பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர். * 2006 - பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது. * 2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

‘இயந்திரங்கள், கார்கள் மீது அவ்ளோ ப்ரியம்!’ - இந்தியாவின் முதல் பெண் கார் மெக்கானிக்

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் இருக்கும் டிம்மக்கியா கிராமத்தைச் சேர்ந்தவர் பூனம் சிங். வயது 24. இவர், கிராமத்துப் பெண்களுக்குரிய இலக்கணத்தை உடைத்தெறிந்தவர். இவர் செய்யும் வேலையை வைத்தே சொல்லிவிடலாம். ஆம், ஆண்களுக்கான பணியாக அறியப்படும் கார் மெக்கானிக் வேலையில், முத்திரை பதித்து வருகிறார். இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் மீரட்டைச் சேர்ந்த டீலர்ஷிப்பின் சர்வீஸ் சென்டரில் (Mann Service Center) இவர் பணிசெய்து வருகிறார்.

கார் மெக்கானிக்

ஆட்டோமொபைல் மெக்கானிக் பட்டப் படிப்பை அதிகாரப்பூர்வமாக முடித்திருக்கும் இவர், அரசுக்குச் சொந்தமான Industrial Training Institute (ITI)-யிலும் தொழிற்பயிற்சிக்கான படிப்பைக் கற்றுத் தேர்ந்துள்ளார். இந்தியாவின் முதல் தகுதிமிக்க கார் மெக்கானிக்காக நிமிர்ந்து நிற்கும் பூனம் சிங், இதற்காக இந்தியாவின் உயரிய ஜனாதிபதி விருதினைப் பெற்றிருக்கிறார். பூனம் சிங்கின் குடும்பத்திலேயே, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முதல் நபர் அவர்தான்! பூனம் சிங்கின் மாத சம்பளம் 12,000 ரூபாய். இதனுடன், செயல்பாட்டுக்கு ஏற்றபடியான ஊக்கத் தொகையும் கிடைக்கும்.

கார் மெக்கானிக்

 

மிகவும் பின்தங்கிய கிராமமான டிம்மக்கியாவில், முறையான வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. இதில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பற்றி, சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. கிராமங்களில் பெரும்பாலும் ஆரம்பக் கல்விக்கே பெண்கள் திண்டாடும் நிலை நீடிப்பதுடன், வருங்காலமும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அமைவதில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், டிம்மக்கியாவில் இருக்கும் பெண்களின் முன்மாதிரியாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் உருவெடுத்துள்ளார் பூனம் சிங். மீரட்டில் இருக்கும் மாருதி டீலரின் சர்வீஸ் பிரிவில் (Mann Service Center), சூப்பர்வைசராக இருக்கும் இவரது அன்றாடப் பணி, சர்வீஸுக்கு வரும் ஒவ்வொரு காரையும் சுயமதிப்பீடு செய்து, அது முறையாக சர்வீஸ் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அதன் உரிமையாளர் சொன்ன குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கார் மெக்கானிக்

தான் செய்யும் வேலையில் மிகுந்த மனநிறைவு இருப்பதாகவும், லேட்டஸ்ட்டான வாகனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த இயந்திரத் தொழில்நுட்பங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆட்டோமொபைல் துறையில் மாற்றம் ஒன்றே மாறாதது; அந்த அளவுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுவதுடன், அவை விரைவாகப் பயன்பாட்டுக்கும் வந்துவிடுகின்றன. எனவே இந்த தொழில்நுட்பங்கள் இடம்பெற்றிருக்கும் கார்களை சர்வீஸ் செய்பவர்களுக்கும், அதைப் பற்றிய தெளிவு இருப்பதும் அவசியமாகிறது. இதற்காகவே மாருதி சுஸூகி நிறுவனம், தன் கார்களைச் சர்வீஸ் செய்பவர்களுக்குப் பிரத்யேகமாக ஒரு தொழிற்பயிற்சிக் கூடத்தை நடத்தி வருகிறது. இங்கேதான் பல விஷயங்களைச் சரியான முறையில் எளிதாகக் கற்றுத் தேர்ந்ததாகப் பெருமையுடன் சொல்கிறார் பூனம் சிங்.

இப்படி பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு, ITI படிப்பு சிறந்த தேர்வாக இருக்கிறது. இவர்களுக்கு ஆட்டோமொபைல் ஆர்வம் இருந்தால் அது கூடுதல் போனஸ்! ஏனென்றால் கார்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்கள், ஃபேக்டரி விசிட், ஆட்டோமொபைல் துறையில் உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் நேரடித் தொடர்பு, அசத்தலான பாடத்திட்டம் என அவர்களை ஈர்க்கக்கூடிய அம்சங்கள் ஏராளம்!

கார் மெக்கானிக்

'ஆண்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த துறையில், என் பணி அமையும் என துளிகூட எதிர்பார்க்கவில்லை. நான் ITI படிப்பைச் சிறப்பாக முடித்ததாலேயே, எனக்குச் சிறந்த நிறுவனத்தில் இப்படிப்பட்ட வேலை கிடைத்ததாக எண்ணுகிறேன். தற்போது இதற்கான மேற்படிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். பெண்கள் செய்யத் தயங்கும் பல விஷயங்களை நான் துணிந்து செய்திருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். இயந்திரங்கள் என்னை பெரியளவில் ஈர்க்கின்றன என்பதுடன், ITI படிப்பு தந்த ஆர்வத்தினால், கார்கள் மற்றும் அதுசார்ந்த பாகங்கள் / தொழில்நுட்பங்களைப் பற்றிக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்'' என தன்னடக்கத்துடன் பேசுகிறார் பூனம் சிங்.

அட்வான்ஸ் மகளிர் தின வாழ்த்துகள் சகோதரி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மேசை பந்தில் கின்னஸ் சாதனை படைத்த ரோபோ..! (காணொளி இணைப்பு)

ஜப்பானின் இயந்திர தொழிநுட்ப நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ மேசை பந்து, பயிற்சியாளரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கச்செய்துள்ளது. 

Omron_tcm25-463586.jpg

மூன்று வருட கடின உழைப்பின் பயனாக, 90 சதவிகிதம் துல்லியத்துடன் விளையாடக்கூடிய, ரோபோ பயிற்சியாளரை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தோடு புதியவர்களுடன் மெதுவாகவும், அனுபவமுடைய வீரர்களுடன் வேகமாகவும் விளையாடுகிறது குறித்த ரோபோ.

குறித்த பயிற்சியளிக்கு ரோபோ தன்னை எதிர்த்து விளையாடுபவருக்கு உக்திகளைச் பயிற்றுவிப்பதோடு, எதிரில் விளையாடுபவரை மிகச் சிறந்த விளையாட்டு வீரராக மாற்றுகிறது. 

edit_omron_tcm25-463500.jpg

மேலும் மனிதர்களைப்போல ரோபோ பயிற்சியாளர் சோர்வோ, கோபமோ படுவதில்லை. இதனால் எதிரில் பயிற்சி பெறுபவர்களுக்கு புத்துணர்வு தரும் வகையில் ரோபோ அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பயிற்சி பெறுபவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவரை உற்சாகப்படுத்தும் வகையில் அபாரம், அற்புதமான பந்து வீச்சு என வசனங்கள் உற்சாகம் அளித்தும் வருகிறது. அத்தோடு வீரர்கள் தவறாக விளையாடும்போது, தவறு என்ன என்பதையும் அதை எப்படிச் சரி செய்ய வேண்டுமென்பதையும், சொல்லிக்கொடுக்கும் வல்லமையுடைய ரோபோவிற்கு கின்னஸ் சாதனையை விருது 

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

 

யு டியூப் நேரலையில் பூனைகள்

அமெரிக்காவின் இல்லனாய் மாகாணத்தில் உள்ள ஒரு பூனைகள் காப்பகத்தில் இருக்கும் பூனைகளை தத்தெடுக்க விரும்புவோர் அவற்றை யு டியூப் நேரலையில் காணலாம்.

  • தொடங்கியவர்

சுற்றுலாச் சிறப்பு மிக்க கட்டிடங்கள்

 

temple_3139963f.jpg

 
 
1_3139964f.jpg
பிரார்த்தனைக்குத் தூண்டும். சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தப் பரபரப்புக்குப் பிறகு ஒரு வழியாகத் தேர்வு முடிந்துவிடும். அதன் பிறகு என்ன? கொண்டாட்டம்தான். அதன் ஒரு பகுதிதான் சுற்றுலா. | படம் - ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான்
msyore_3139965f.jpg
பொதுவாகச் சுற்றுலா என்றதும் குளிர் பிரதேசத்துக்குச் சென்று ஒரு வாரம் செலவிட்டுவிட்டு வருவதாக இருக்கும். அதற்கு மாறாக இந்தச் சுற்றுலாவை ஒரு கருப்பொருள் கொண்டு திட்டமிடலாம். அதாவது கட்டிடம் சார்ந்த சுற்றுலா நகரங்களைச் சுற்றலாம் | படம் - மைசூர் அரண்மனை, கர்நாடகா

 

madurai_3139966f.jpg
இந்த ஒளிப் படத் தொகுப்பு வழியாகச் சிறு சுற்றுலாவுக்குத் தயாராகலாம். | படம் - மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், தமிழ்நாடு

 

 

mahabs_3139967f.jpg
இந்தியாவில் கட்டிடச் சிறப்பு மிக்க நகரங்கள் பல. தலைநகர் டெல்லியே அத்தகைய சிறப்பு மிக்க நகரம்தான். | படம் - மாமல்லபுரப் புடைப்புச் சிற்பங்கள், தமிழ்நாடு
padma_3139968f.jpg
அங்கு முகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தாஜ்மஹால், செங்கோட்டை எனப் பல முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. | படம் - பத்மநாபபுரம் அரண்மனை, தமிழ்நாடு
humby_3139969f.jpg
அதுமட்டுமல்லாது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் தில்லியில் அலுவல் ரீதியாகப் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. | படம் - ஹம்பி நினைவுச் சின்னங்கள், கர்நாடகா
hawaa_3139970f.jpg
அதைப் போல ராஜஸ்தான் மாநிலத்தில் பல அரண்மனைகள் ராஜபுத்திரர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன. | படம் - ஹவா மகால், ராஜஸ்தான்
amer_3139973f.jpg
இம்மாதிரியான கட்டிடக் கலைக்குச் சிறப்பு சேர்க்கும் நகரங்களின் கட்டிடங்களே இந்த தொகுப்பு | படம் - ஆமெர் கோட்டை, ராஜஸ்தான்
  • தொடங்கியவர்

25 இளவரசிகள், 100 அதிகாரிகள், ஆயிரத்தி சொச்சம் பரிவாரங்கள்... சவுதி மன்னரின் ‘அடேங்கப்பா’ விசிட்!

இந்தோனேஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் சல்மான், அந்த நாட்டு முன்னாள் அதிபர் மேகவதி சுவர்ணபுத்ரியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையங்களில் பரவி வருகிறது.

saudi king salman

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேஷியா. தென்கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 26 கோடி. பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமியர்கள். சவுதி அரேபியா போலவே இஸ்லாமிய சட்டதிட்டங்களை முறைப்படி பின்பற்றும் நாடு இந்தோனேஷியா. இந்த நாட்டுக்கு சவுதி மன்னர் சல்மான் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 46 ஆண்டுகளில் இந்தோனேஷிய நாட்டுக்கு சவுதி மன்னர் ஒருவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. 

சுற்றுப்பயணம்தானே என சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். மன்னருடன் 25 இளவரசிகள், 10 அமைச்சர்கள், 100 பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம்1,500 பரிவாரங்கள் இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கின்றனர். குண்டு துளைக்காத ‘மெர்சிடஸ் பென்ஸ் எஸ் -600’ ரக கார்கள் இரண்டும் ஜகர்தாவுக்கு முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டது. மொத்தம் 506 டன் பொருள்கள் மன்னருடன் இந்தோனேஷியா வந்தடைந்தது. மன்னர் சல்மானின் பிரத்யேக ‘747 போயிங் ஜெட்’ உள்பட 3 விமானங்கள் ரியாத்தில் இருந்து ஜகர்தாவுக்கு வந்து சேர்ந்தன. அதில் இரு விமானங்கள் நிறைய பொருள்கள் இருந்தன. மன்னர் உணவு அருந்தும் ‘பிளேட்’ கூட அவர் அரண்மனையில் இருந்தே கொண்டு வரப்பட்டுள்ளது. சவுதி மன்னர் கொண்டு வந்த பொருள்களை இறக்கவே 572 ஊழியர்கள் தேவைப்பட்டுள்ளனர்.

இதற்குமுன் கடந்த 2015ம் ஆண்டு  சல்மான் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வாஷிங்டன் ஜார்ஜ்டவுனில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் தங்கினார். அந்த ஹோட்டலில் இருந்த 222 அறைகளும் சல்மானுக்காக புக் செய்யப்பட்டிருந்தது. வாஷிங்டனில் உள்ள ஹோட்டல்களிலேயே ஃபோர் சீசனில்தான் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

saudi king salman

உலகிலேயே அதிக நபர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது சவுதி மன்னர்களும் அமெரிக்க அதிபர்களும் மட்டுமே. கடந்த 2013ம் ஆண்டு செனகல் மற்றும் தான்சேனியா நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சுற்றுப்பயணம் சென்றார். அப்போது, 14 உயர் ரக வாகனங்கள் உள்பட மொத்தம் 56 வாகனங்கள் அந்த நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த 2014-ல் பெல்ஜியத்துக்கு ஒபாமா சென்ற போது அவருடன் 900 பேர் சென்றிருந்தனர். விலை உயர்ந்த வாகனங்கள் உள்பட 45 வாகனங்களும் அமெரிக்காவில் இருந்து பிரஸ்ஸல்சுக்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட்டது. அதனை சவுதி மன்னர் முறியடித்துள்ளார்.

தற்போது 81 வயதான மன்னர் சல்மான், இந்தோனேஷிய முன்னாள் அதிபர் மேகவதி சுவர்ணபுத்ரி, அவரது மகளும் இந்தோனேஷிய அமைச்சருமான பூவான் மகாராணி ஆகியோருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதில் சுவர்ணபுத்ரி, சல்மான், இந்தோனேஷிய அதிபர் ஜேகோ விடோவா ஆகியோர் உள்ளனர். இந்த செல்ஃபி இணையத்தில் வைரல். லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை share செய்துள்ளனர். 

ஜகர்தா அருகே பொகார் என்ற இடத்தில் உள்ள இந்தோனேஷிய அதிபரின் மாளிகையில் சவுதி மன்னருக்கு விருந்தளிக்கப்பட்டது. விருந்துக்கு முன்னதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டார் கிங் சல்மான். ‘‘இந்தோனேஷியாவில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதைப் பார்த்து பெருமிதப்படுகிறேன்'' என்றார் சல்மான். அவர் தற்போது புகழ்பெற்ற பாலி தீவில் ஓய்வெடுத்து வருகிறார்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

பெஞ்சமின் வாட்டர்ஹவுஸ்

sir2_3139952f.jpg
 
 
 

அமெரிக்க மருத்துவர், ஆராய்ச்சியாளர்

பெரியம்மை தடுப்பூசியை அமெரிக்காவில் முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த பிரபல மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான பெஞ்சமின் வாட்டர்ஹவுஸ் (Benjamin Waterhouse) பிறந்த தினம் இன்று (மார்ச் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் நியூபோர்ட் நகரில் (1754) பிறந்தார். தந்தை தச்சர். தாய் தன் மகனை மருத்துவராக்கிப் பார்க்க ஆசைப்பட்டார். மருத்துவம் தொடர்பான நிறைய நூல்களைப் படித்ததில், மருத்துவராகும் விருப்பம் இவரிடமும் துளிர்விட்டது.

* உள்ளூரில் உள்ள ஒரு மருத்துவரின் உதவியாளராக 16 வயதில் பணியாற்றி னார். லண்டனில் உறவினர் வீட்டில் தங்கி, எடின்பரோவில் மருத்துவம் பயின்றார். 1780-ல் லெய்டனில் உள்ள டச்சு பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1782-ல் அமெரிக்கா திரும்பினார்.

* கனிமங்கள் குறித்து விரிவுரைகள் நிகழ்த்தினார். ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியின் இணை நிறுவனரான இவர், அங்கு பேராசிரியராகவும் பணியாற்றினார். பெரியம்மை நோய் குறித்து இங்கிலாந்தின் எட்வர்டு ஜென்னர் ஆராய்ச்சி மேற்கொண்டது குறித்தும், அதற்கான தடுப்பு மருந்து குறித்தும் கேள்விப்பட்டார்.

* உடனடியாக இதுதொடர்பான ஆராய்ச்சியில் இறங்கினார். இதுபற்றி பிரபல ஆராய்ச்சியாளர்களுடன் கடிதம் மூலம் தொடர்பு கொண்டார். இந்த தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய முறையை வகுத்தார். இதுகுறித்து கட்டுரை எழுதி வெளியிட்டார். பெரியம்மைக்கான தடுப்பூசியை அமெரிக்காவில் பிரபலப்படுத்த வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார். பல விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதினார்.

* பெரியம்மை தடுப்பு மருந்தை அமெரிக்காவில் முதன்முதலாக பரிசோதனை செய்து வெற்றியடைந்தார். இதில் இவர் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையாலும், இந்நோயை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற முனைப்பாலும், தன் 5 வயது மகன் உட்பட சொந்த குடும்பத்தினர், பணியாளர்களுக்கும் இந்த மருந்தை அளித்து பரிசோதனை செய்தார்.

* அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததைக் கண்டறிந்தார். இந்த வெற்றி குறித்து பிரச்சாரம் செய்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1812-ல் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து, ராணுவ மருத்துவக் குழுவில் இணைந்து பணிபுரிந்தார். அங்கும் பெரியம்மை நோய் தடுப்பு மருந்தை வழங்கினார்.

* ‘ஹாஸ்பிடல் சர்ஜன்’, ‘போஸ்ட் சர்ஜன்’ பதவிகளை வகித்த பிறகு, 1821-ல் ராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது, இவரது இலக்கியத் திறனுக்கும் நேரம் கிடைத்தது. நிறைய கதைகள், நாவல்கள் எழுதினார். ‘ஏ ஜர்னல் ஆஃப் ஏ யங் மேன் ஆஃப் மசாசூசெட்ஸ்’ என்ற இவரது கதை மிகவும் பிரபலமடைந்தது.

* ராணுவத்தில் இருந்து வெளிவந்த பிறகு, தனது ஆராய்ச்சி, கோட்பாடுகளைப் பத்திரிகைகளில் எழுதினார். பெரியம்மை தடுப்பூசி குறித்த பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கினார். தடுப்பூசி போடும் முறை குறித்து பலருக்கும் கற்றுத் தந்தார்.

* முதலில் இவரது பேச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. பின்னர் மெல்ல மெல்ல இவரது உறவினர்கள், நண்பர்கள் நோயாளிகள் எனத் தொடங்கி, நாடு முழுவதும் பெரியம்மை தடுப்பூசி பிரபலமடைந்தது. புகை பிடிப்பது, மது அருந்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தன் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

* மருத்துவம், மருந்துகள் தொடர்பாக ஏராளமான நூல்களை எழுதினார். அமெரிக்க கலை, அறிவியல் அகாடமி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிவரை சுறுசுறுப்பாக இயங்கிவந்த பெஞ்சமின் வாட்டர்ஹவுஸ் 92-வது வயதில் (1846) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ரசனை என்கிற மாயாஜாலம்... வாழ்க்கைப் பயணம் முழுக்க ஆனந்தம்! #MindRelax

`என்னப்பா... இப்பிடிக் கண்ணைக் கூசவைக்கிற மாதிரி கலர்ல சுடிதார் போட்டிருக்கே... உனக்குக் கொஞ்சமாச்சும் ரசனை இருக்கா?’ அவ்வப்போது இப்படி யாராவது, யாரிடமாவது பேசுவதை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். உடலுக்குப் பொருத்தமான அளவில், நிறத்தில் உடை உடுத்துவதுகூட ஒருவிதத்தில் ரசனை தொடர்பான விஷயமே! ரசனை என்பது இயல்பாகவே நமது மனதில் ஆழப்பதிந்த ஒன்றாக இருக்கிறது. ரசனை என்கிற மாயாஜாலம் மட்டும் இருந்தால், நம் வாழ்க்கைப் பயணம் முழுக்க ஆனந்தம் நம்மைத் தொடர்ந்து வரும்.

ரசனை

* சாலையைக் கடக்கும்போது, ரோட்டோரத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் சிறு பொம்மைகளை அவ்வளவு எளிதாகச் சிலரால் கடந்து செல்ல இயலாது. நின்று, நிதானமாக பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள்.

* எச்சில் வடிய, பொக்கை வாயைத் திறந்தபடி சிரித்துக்கொண்டிருக்கும் மழலையை ரசிக்காமல் சிலரால் இருக்க முடியாது. பதிலுக்குச் சிரித்து, கையசைத்து, கண் சிமிட்டி, சில சமிக்ஞைகளைக் காட்டிவிட்டுத்தான் நகர முடியும்.

* பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் நம் கன்னங்களை வருடிய தென்றலையும், அந்த கணத்தில் பார்த்த மனதுக்கினிய காட்சிகளையும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். இதுவும் ரசனைப் படலத்தின் ஒரு பகுதியே!

இளையராஜா

* இளையராஜா இசையமைத்த ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி, தனிமையில் கண்கலங்கிய நாட்கள் சிலரின் மனதில் இருந்து விடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. 

இப்படி எதைப் பார்த்தாலும் கேட்டாலும் மனம் ரசிக்கத் தொடங்கிவிடுகிறது. சூழலுக்கு ஏற்ப, அவரவர் ரசனை வெளிப்படவும் செய்கிறது. அப்படி நாம் ரசிப்பதற்கும் அடிப்படைக் காரணங்கள் உள்ளன. அவற்றை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார் மனநல மருத்துவர் கணேசன்...
 
கதைகள்

சிறு வயதில் நம்முடைய பாட்டியோ, தாத்தாவோ கதைகளை நம் கண்முன்னே காட்சிப்படுத்த முயற்சித்திருப்பார்கள். அப்போது அவர்கள் கூறிய கற்பனைக் காட்சிகள் அத்தனையும் நம் மனதில் ஆழப்பதிந்து போயிருக்கும். இவையும் நம் ரசனைத் தன்மைக்கு காரணங்கள்தான்.

கதைகள்

 
ரோல் மாடல்!

நம்முடைய ரோல் மாடல் என்று யாரையாவது வைத்திருப்போம். அவர் என்னென்ன செய்கிறாரோ அதை அப்படியே நாமும் பின்பற்றுவோம்.. `அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி... .கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி... என்னுடைய ரோல் மாடலுக்கு மண்ணில் விழுகிற மழைத்துளியின் குதூகலத்தை ரசிப்பது பிடிக்கும் என்றால் எனக்கும் பிடிக்கும்’ என்கிறவர்களும் இருக்கிறார்கள்.
 
ஆளுமைகள்

ஒரு சராசரி மனிதனுக்குள் இயல்பாகவே பெற்றோர், குழந்தை, இளைஞர் என மூன்று குணாதிசயங்கள் உள்ளன. பெற்றோராக இருக்கும்போது `இதனைச் செய்.., செய்யாதே’ என்று கட்டுப்பாட்டுக்குள் குழந்தையை வளர்க்க நினைப்பார்கள். இளைஞராக இருக்கும்போது மனைவியைப் பாசத்தோடு கவனித்துக்கொள்வார்கள். குழந்தை எண்ணம் வரும்போது, தன் குழந்தையோடு சேர்ந்து தானும் குழந்தையாக மாறி விளையாடத் தொடங்கிவிடுவார்கள். இதுபோன்ற மனநிலைகளாலும், இயற்கையாகவே எந்த விஷயத்தையும் ரசனையுடனேயே கடந்துசெல்லும் வாய்ப்பு அமைந்துவிடும்.

காதல்

காதல்

ஓர் ஆண் ஒரு பெண்ணைக் காதலிப்பதுகூட ரசனையே. ஏனெனில், காதலும் ஒரு வகை ரசனையின் வெளிப்பாடுதான். அளவுக்கு அதிகமாக ஒருவரை ரசிப்பதால்தான் சம்பந்தப்பட்டவரைக் காதலிக்க வேண்டும் என்றும், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. இதற்கு புராணங்களிலும், கதைகளிலும், சினிமாவிலும் நாம் கேட்டு, பார்த்துப் பழகிய தலைவன்- தலைவி, நாயகன்- நாயகி காதல்களே காரணம். நாம் விரும்பிக் கேட்ட, பார்த்த விஷயங்களையே நாமும் பின்பற்ற விரும்புகிறோம். இதுதான் ரசனையின் முக்கியமான அம்சமாக இருக்கிறது.
 
இதுபோன்ற காரணங்களாலேயே நாம் எந்த விஷயத்தையும் ரசனையுடனேயே பார்க்கிறோம். இவை நம் மனதில் ஆழப் பதிந்து, நம் ஆயுள் முழுவதும் கூடவே வருபவை. எனவே, அவற்றை இன்னும் அதிகமாக நேசித்து, ரசித்து, மகிழ்ந்து கடந்து செல்வோம். எதையும் அவசரம் அவசரமாக செய்யாமல் ரசனையோடு செய்து பழகுவோம். ரிலாக்ஸான மனநிலையில் இருப்பதும் ஒரு வகையில் தியானம்தான். இதனால், உங்கள் வாழ்க்கைப் பயணம் ரசனையோடு இன்னும் அழகாகும்..

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சீனா : மலர் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள தத்ரூப டைனோசர்கள் (புகைப்படத்தொகுப்பு)

 

சீனாவில் வடமேற்கு ஹூபே மாகாணத்தில் உள்ள ஷியாங்யங் நகரில் டைனோசர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டைனோசர் கலைப்படைப்புகள் குறித்த புகைப்படத் தொகுப்பு.

சீனாவில் மலர் தோட்டத்தில் தத்ரூப டைனோசர்கள் (புகைப்படத்தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவில் மலர் தோட்டத்தில் தத்ரூப டைனோசர்கள் (புகைப்படத்தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவில் மலர் தோட்டத்தில் தத்ரூப டைனோசர்கள் (புகைப்படத்தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவில் மலர் தோட்டத்தில் தத்ரூப டைனோசர்கள் (புகைப்படத்தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவில் மலர் தோட்டத்தில் தத்ரூப டைனோசர்கள் (புகைப்படத்தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவில் மலர் தோட்டத்தில் தத்ரூப டைனோசர்கள் (புகைப்படத்தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவில் மலர் தோட்டத்தில் தத்ரூப டைனோசர்கள் (புகைப்படத்தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவில் மலர் தோட்டத்தில் தத்ரூப டைனோசர்கள் (புகைப்படத்தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிபிசி தமிழ் :

  • தொடங்கியவர்

 

கிளிக் - பிபிசியின் வாராந்திர தொழில்நுட்பக் காணொளி

தற்கொலை எண்ணம் கொண்டஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களை, செயற்கை அறிவை பயன்படுத்தி அடையாளம் காணும் முறை தொடக்கம், தென் கொரியாவில் உருவாகும் இறந்து போன உறவினர்களிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள வழிவகுக்கும் செயலி, வானில் பறக்கும் போது சுடக்கூடிய ட்ரோன் குறித்த காணொளிகளை காணலாம்.

  • தொடங்கியவர்

ஆரோவில் - கண்ணைக் கவரும் வண்ண திருவிழா!

பாண்டிச்சேரியில், ஆரோவில் சர்வதேச நகரம் உருவாகி 49 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, மாத்ரி மந்திர் அருகேயுள்ள ஆம்ஃபி தியேட்டர் திறந்தவெளி கலையரங்கில் நெருப்பு மூட்டி தியானத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர்.

காலை பனிமூட்டத்தின் நடுவே எடுக்கப்பட்ட படங்கள் உங்கள் ரசனைக்கு...

காலை நேரத்தில் பனிமூட்டத்தின் நடுவே எடுக்கப்பட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு...

 
 
 
 
Pic_3138600f.jpg
 
 
thumbnail_DSC_0277_3138599f.jpg
 
 
 
thumbnail_DSC_0318_3138598f.jpg
 
 
thumbnail_DSC_0322_3138597f.jpg
 
 
thumbnail_DSC_0327_3138596f.jpg
 
 
thumbnail_DSC_0328_3138595f.jpg
 
 
thumbnail_DSC_0364_3138588f.jpg
 
 
thumbnail_DSC_0360_3138589f.jpg
 
 
thumbnail_DSC_0349_3138591f.jpg
 
 
thumbnail_DSC_0341_3138593f.jpg
 
  • தொடங்கியவர்

வாவ் காலண்டர்!

பரிசல் கிருஷ்ணா

 

ந்த வருடத்தின் சிறந்த காலண்டராக அனைவரின் லைக்ஸையும் அள்ளியிருக்கிறது ப்ரீத்தி ராயின் `ரைஸிங் எபவ்' காலண்டர். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன், ஓட்டப் பந்தய வீராங்கனை ஷாலினி சரஸ்வதி, பேட்மின்டன் வீராங்கனை மானஸி ஜோஷி உள்பட மாற்றுத்திறன்கொண்ட 12 வீரர்-வீராங்கனைகள், கலைஞர்களை வைத்து இந்த வருடத்தின் காலண்டரை வடிவமைத்திருக்கிறார் ப்ரீத்தி.

இவர், பெங்களூருவில் உள்ள பண்பலை நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். ‘என்னடா இது... வாழ்க்கை போரடிக்குதே!’ என நினைத்தவர், கடந்த ஆண்டு ‘மிஷன் ஸ்மைல்’ என்ற திட்டத்தைத் தொடங்கினார். `இன்ஃபோசிஸ்' நாராயண மூர்த்தி, தடகள வீரர் மில்கா சிங், கவிஞர் குல்சார் உள்ளிட்ட பல பிரபலங்களை வைத்து கல்வியை எல்லாருக்கும் வலியுறுத்தும்விதமாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் திட்டத்தைத் தொடங்கினார். எல்லோராலும் பாராட்டப்பட்ட முயற்சி அது. அந்த உற்சாகத்தில் இந்த ஆண்டு `ரைஸிங் எபவ்' என்ற இந்த காலண்டரை உருவாக்கியிருக்கிறார்.

p54.jpg

p54a.jpg

``பொதுவாக இணையம் என்றாலே, மாடல், செலிப்ரிட்டிகள் கவர்ச்சியாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் படங்கள்தான் நிறைந்திருக்கும். ஆனால், மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடுவதன் மூலம் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர எண்ணினோம். அப்படி உதித்ததுதான் `ரைஸிங் எபவ்’ என்ற இந்த காலண்டர் ஐடியா” என உற்சாகமாகப் பேசுகிறார் ப்ரீத்தி.

``கை, கால்களை இழந்த தடகள வீராங்கனை ஷாலினி சரஸ்வதிதான் எங்களின் முதல் மாடல். ஒருசிலருக்கு பதற்றமும், சிலருக்கு புதிய முயற்சி என்பதால் ஒருவித ஆர்வமும் இருந்தது. ஆனால், ஸ்டூடியோ வந்து ஆர்ட் லைட்டுக்குக் கீழே நின்றதும், ஏதோ ஒரு பெரிய விஷயத்துக்கு நாமும் ஒரு பங்கா இருக்கப்போகிறோம்’ என்ற உணர்வுக்கு வந்துட்டாங்க.

p54b.jpg

p54c.jpg

மானஸி ஜோஷி, சீனாவின் பீஜிங்ல நடந்த பேட்மின்டன் போட்டியில வெண்கலம் ஜெயிச்சுட்டு வந்திருந்தாங்க. வர்றப்பவே அவங்க முகத்துல அவ்ளோ சோர்வு தெரிஞ்சது. ஆனா, ஷூட்டுக்குத் தயாரானதும் அவங்க சோர்வெல்லாம் மறந்து, அவ்ளோ உற்சாகமாகிட்டாங்க. மாரியப்பன், அவ்ளோ நட்பா இருந்தார். போட்டோஷூட்டுக்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுத்தார். எங்களுக்கெல்லாம் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.

இந்த காலண்டரின் புகைப்படக் கலைஞர் குமரன், தேனிக்காரர். அவர் உள்பட இந்த காலண்டரை உருவாக்க உறுதுணையாக இருந்த டெக்னீஷியன்ஸ் யாருமே ஒரு பைசாகூட வாங்கலை. இது முழு திருப்தியும் மன நிம்மதியும் தந்த புராஜெக்ட்” என்கிறார் ப்ரீத்தி.

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக இருக்கிறது இந்தப்பக்கம்..இயற்கை முதல் எனக்கு பிடித்த நிறைய விடையங்கள் அடங்கியுள்ளது..பகிரவுக்கு நன்றியோடு தொடர்ந்து இன்னும் நிறைய பகிர நல் வாழ்த்துக்கள் நவீனன்.✔️

  • தொடங்கியவர்

பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்த நாள்: மார்ச் 5- 1824

பிரிட்டன் அரசு உலகமெங்கும் தன் ராஜ்ஜியத்தை நிலைநாட்டியது. 1824-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி பர்மா மீது போர் தொடுத்தது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1770 - பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1793 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன. * 1940 - சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை

 
 
 
 
பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்த நாள்: மார்ச் 5- 1824
 
பிரிட்டன் அரசு உலகமெங்கும் தன் ராஜ்ஜியத்தை நிலைநாட்டியது. 1824-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி பர்மா மீது போர் தொடுத்தது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1770 - பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1793 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன. * 1940 - சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது. * 1964 - இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது. * 2008 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

உங்களிடம் இந்த 7 குணங்கள் இருந்தால் நீங்களும் சாதனையாளரே..! #SuccessTips

‘தன்னம்பிக்கை உடையவன் தரணியை ஆள்வான்’ என்பார்கள். ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாகத் தன்னம்பிக்கை இருக்கவேண்டும். தன்னம்பிக்கைதான் ஒருவரை சாதிக்க வைக்கும். என்னதான் நம்மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருந்தாலும் சில சமயங்களில் நம்பிக்கை இழந்து தோல்வியின் விளம்பிற்கே சென்றுவிடுகின்றோம். தரமான சில குணங்கள் நம்மிடம் இருந்தால் நாம்தான் சாதனையாளர். அதற்கு, தன்னம்பிக்கை மிகவும் அவசியம். உண்மையில், தன்னம்பிக்கை உடையவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? 

* தன்னம்பிக்கையுடைய மனிதர்கள் தாங்கள் எடுக்கும் முடிவில் அடுத்தவர்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டார்கள் பிறரின் ஆலோசனைகளை அவர்கள் கேட்டாலும், எது சரி, எது தவறு என்பதை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, தங்களுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படியே செயல்படுவார்கள். பொதுவாக இப்படிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுகளுமே இதயபூர்வமானதாகவும், நிம்மதியைத் தருவதாகவும் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

சாதனை

* தன்னம்பிக்கை உடையவர்கள் சவால்களை எதிர்கொள்ளத் தயங்கமாட்டார்கள். எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் தங்களின் சக்திக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும்கூட, அது தங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கக்கூடும் என்று எண்ணி துணிந்து செயல்படுவார்கள் . ஒவ்வொரு புது அனுபவமும் ஒரு பாடம் என்பதை நன்கு அறிவார்கள். அவர்களின் சாதனைப் பட்டியல்களுக்கு வரையறையை வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள் . 

* தாங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும், அதனால் விளையும் விளைவுகளுக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதை நன்கு உணர்வார்கள். சில சமயங்களில், வாழ்க்கை என்னும் விளையாட்டின் முடிவுகள் கை மீறிப் போகும்போது, அதை எப்படித் தங்களுக்குச் சாதகமாக மாற்றிகொள்ள முடியும் என்பதைப் பற்றிதான் யோசிப்பார்களே தவிர அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டார்கள். 

* தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் அதிகம் விரும்பும் நபர், அவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பொய்யான வேஷம் போட்டுக்கொண்டு, 'நான் ரொம்ப நல்லவன்' என்று பிறரிடம் காட்டிக்கொள்வதில் விருப்பம் கொள்ளாதவர்கள். யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம், தான் இப்படித்தான் என்று வெளிப்படையாக இருப்பார்கள். பிறரைப் போலத் தன்னிடத்திலும் குறைகள் உண்டு என்பதை உணர்வார்கள். அவர்களின் எண்ணங்கள் ஒத்துப்போகும் ஒரே அலைவரிசையில் இருப்பவர்களோடுதான் அதிகம் உறவாடுவார்கள் . 

* இவர்கள் காணும் கனவுகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து கனவுகள் நனவாகப் பாடுபடுவார்கள். தன்னம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் போகும் பாதையில் சந்தேகம் வந்தால், உடனே பின்வாங்கிவிடமாட்டார்கள். அதற்கான காரணத்தை ஆராய்ந்து வெற்றி பெறுவதற்கான வழியைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள். 

திட்டமிடல்

* விலை உயர்ந்த கார்களை வாங்குவதாலும், ஆபரணங்கள், ஆடைகளை அணிவதாலும் மட்டும்தான்தான் பிறரைக் கவர முடியும் என்பது தன்னம்பிக்கையற்றவரின் செயல் என்று கூறுவார்கள். பிறரைக் கவர்வதற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் தற்காலிகமானதுதான். நம்மிடம் உள்ள குணங்களையும், நல்ல மனதையும் பார்த்துவரும் உறவுகள்தான் நிலைத்துநிற்கும் என்பார்கள் . 

* தோல்வியடையும் போதும், ஒவ்வொரு முயற்சியிலும் அவர்களை ஊக்குவிக்க மற்றவரின் ஆறுதல் அவசியம் என்று நினைப்பதில்லை. எதைக்காட்டிலும் சுயமரியாதை அவசியம் என்று எண்ணுவார்கள். பிறரிடம் கருத்து விவாதம் செய்வது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. எதிர்தரப்பினர் கூறும் கருத்துகளில் நியாயம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டார்கள். தன் கருத்துகள் அனைத்துக்கும் ஆமோதிப்பதையும் விரும்பமாட்டார்கள் . 

மேலே குறிப்பிட்டுள்ள 7 குணங்களோடு உங்கள் குணம் ஒத்துப்போனால் நிச்சயம் நீங்களும் ஒரு தன்னம்பிக்கையாளர்தான். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!

ழுத்து வடிவில் இருக்கும் சிறுகதை, நாவல்களை விஷூவல் வடிவில் பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்று. தமிழ்சினிமாவிலும் ஏராளமான சிறுகதை, நாவல்கள் சினிமாவாக உருமாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் சில!

தங்கர் பச்சான் கதைகள் 

சிறுகதை, நாவல்களைப் படமாக்குவதில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் தங்கர் பச்சான் காட்டிய அக்கறை அதிகம். இயக்குநராக அறிமுகமான 'அழகி'யை 'கல்வெட்டு' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' கதையை 'சொல்ல மறந்த கதை'யாக சினிமாவில் சொன்னார். தான் எழுதிய 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'அம்மாவின் கைப்பேசி' நாவல்களை அதேபெயரில் படமாக்கினார். பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் இவருடைய 'களவாடிய பொழுதுகள்' படமும் தங்கர் பச்சான் எழுதிய நாவலே!

தலைகீழ் விகிதங்கள் நாவல்

அதிகாலையின் அமைதியில் 

தஸ்தாயெவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'இயற்கை'யின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் எஸ்.பி.ஜனநாதன். நாவலை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய மற்றொரு படம், 'பேராண்மை'. பரீஸ் வஸீலியெவ் என்பவர் எழுதிய 'அதிகாலையில் அமைதியில்' நாவல், ஒரு ராணுவத் தளபதியும், ஐந்து பெண்களும் ஜெர்மன் பாஸிஸ்டுகளுக்கு எதிராக நிகழ்த்திய சாகசங்களைச் சொன்னது. 'பேராண்மை' படமும், இந்தியாவின் ராக்கெட்டிற்குக் குறிவைக்கும், அந்நிய சக்திகளை ஒரு ராணுவ வீரனும், ஐந்து இளம் பெண்களும் சேர்ந்து முறியடிப்பதுதான் கதை. 

அதிகாலையின் அமைதியில் நாவல்

தலைமுறைகள் 

நீல.பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்' என்ற நாவல், அப்படியே 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. 1998-ல் வெளியான 'கனவே கலையாதே' படத்திற்குப் பிறகு, 'ஆட்டோ சங்கர்', 'சந்தனக்காடு' சீரியல்களை இயக்கிக்கொண்டிருந்த வ.கெளதமன் இயக்குநராக 'ரீ-என்ட்ரி' கொடுத்த படம். குமரி மாவட்டத்தில் வாழும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் காலாச்சரமும், கட்டமைப்புமே நாவலின் மையம். 

தலைமுறைகள் நாவல்

ஏழாம் உலகம்

ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நாவலின் பாதிப்பில் உருவானது, பாலா இயக்கிய 'நான் கடவுள்' திரைப்படம். பிச்சைக்காரர்கள் எப்படி வாங்க/விற்கப்படுகிறார்கள், அவர்களுடைய உலகம் எப்படி இயங்குகிறது என பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பிரதானமாகப் பேசிய நாவல். இந்த நாவலின் மையத்தை, காசியில் வாழும் ஒரு அகோரியின் வாழ்க்கையோடு இணைத்து திரைக்கதை ஆக்கியிருப்பார், இயக்குநர் பாலா.

ஏழாம் உலகம் நாவல்

எரியும் பனிக்காடு 

பி.எச்.டேனியல் எழுதிய 'ரெட் டீ' நாவல், பல வருடங்களுக்குப் பிறகு 'எரியும் பனிக்காடு' ஆக தமிழில் வெளிவந்தது. தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலைத் தோட்டம் உருவான கதையும், தேயிலைத் தோட்டத்திற்காகப் பலியாக்கப்பட்ட தொழிலாளர்களைப் பற்றியும், அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றியும் பேசுகிறது இந்நூல். பாலாவின் மற்றொரு படைப்பான 'பரதேசி' இந்நாவலின் இன்னொரு வடிவம். 

எரியும் பனிக்காடு நாவல்

லாக்கப் 

சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியான வரவேற்பையும், ஏராளமான விருதுளையும் பெற்ற வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம், மு.சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' நாவலின் தழுவல். 'மிகச்சிறந்த மனித உரிமைக்கான திரைப்படம்' என்ற அங்கீகாரத்தைப் பெற்ற இப்படத்தின் கதை, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. காவல் துறையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், அதிலிருந்து மீண்டு வந்த போராட்டத்தையும் மு.சந்திரகுமார் 'லாக்கப்'பில் பதிவு செய்திருக்கிறார்.

லாக்கப் நாவல் சினிமா

இதுதவிர, சு.வெங்கடேசன் எழுதிய 'காவல்கோட்டம்' நாவலின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அரவான்', சுஜாதாவின் 'ஆ..!' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'சைத்தான்' என ஏராளமான படங்கள் இலக்கியம் டூ சினிமாவாக உருமாறியிருக்கிறது. சுஜாதாவின் ஜன்னல் மலர் நாவல்தான், இறைவியின் விஜய் சேதுபதி போர்ஷன்களில் பல. இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். உங்களைக் கவர்ந்த, நாவல் டூ சினிமா படைப்பைக் கமெண்ட்டில் சொல்லுங்கள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வெள்ளை மாளிகை ஓவல் மண்டபத்தில் விநோதமான கோலத்தில் அமர்ந்திருந்த ட்ரம்பின் ஆலோசகர்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ரான கெலியென் கொன்வே, வெள்ளை மாளி­கை­யி­லுள்ள ஜனா­தி­ப­தியின் பிர­தான அலு­வ­லக அறை­யான ஓவல் மண்­ட­பத்­தி­லுள்ள கதி­ரை­யொன்றில் வித்­தி­யா­ச­மான பாணியில் அமர்ந்­தி­ருந்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­படம் இணை­யத்தில் வேக­மாக பரவி வரு­கி­றது.

ad_236897095

 

ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் கெலியென் கொனேவே
 

50 வய­தான கெலியென் கொன்வே, குடி­ய­ரசுக் கட்­சியின் பிர­சார முகா­மை­யாளர் ஆவார். தற்­போது ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பின்­ஆ­லோ­ச­க­ராக பணி­யாற்­று­கிறார். 

அமெ­ரிக்கப் பல்­க­லைக்­க­ழ­கங்கள், கல்­லூ­ரி­களின் கறுப்­பினத் தலை­வர்­களை கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சந்­தித்தார். 
 

ஓவல் மண்­ட­பத்தில் நடந்த சந்­திப்­பின்­போது அங்­குள்ள சோபாவில் அமர்ந்து தனது செல்போன் மூலம் புகைப்­படம் பிடித்த கெலியென், பின்னர் அப்­ப­டங்­களை செல்­போனில் பார்த்­துக்­கொண்­டி­ருந்தார். இதன்­போது பிடிக்­கப்­பட்ட படமே இணை­யத்தில் பர­வி­யுள்­ளது.

 

பாத­ணி­களை அணிந்த நிலையில், ஷோபாவில் முழந்­தா­ளிட்­ட­தைப்போல் கெலியென் அமர்ந்­தி­ருந்­ததை சிலர் விமர்­சித்­துள்­ளனர்.

 

எனினும், ஒவல் மண்­ட­பத்தில் பிடிக்­கப்­பட்ட வித்­தி­யா­ச­மான ஒரு புகைப்டம் இது­வல்ல. முக்­கிய தீர்­மா­னங்கள் மேற்கொள்ளப்படும் ஓவல் மாளிகையில், சுவாரஸ்யமான நடவடிக்கைகளுக்கும் பஞ்சம் இல்லை. அவற்றில் சில படங்களை இங்கு காண லாம்.

1

முன்னாள் ஜனாதிபதி ஜெரால்ட் போர்ட்

2

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா

 

JFK-JFK-Jr-Oval-Office

முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி, அவரின் மகன் ஜோன் எவ். கென்னடி ஜூனியர்

 

whit-houe-Sasha-Obama

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, அவரின் மகள் சஷா,

http://metronews.lk

  • தொடங்கியவர்

05.03.1815: 'மனோவசியத்தின் தந்தை'  மருத்துவர் ப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் மரணம் அடைந்த தினம் இன்று!

 

 
mesmer

 

ஆழ்மனதின் அற்புத சக்திகள் குறித்து யோகிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பே அறிந்திருந்தும், உபயோகித்தும் வந்தனர் என்றாலும் அவை அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் தான். ஆழ்மன சக்தியால் உடல் நோய்களை குணப்படுத்த முடியும் என்ற உண்மையை அறிஞர்கள் உணர ஆரம்பித்தது அந்த சமயத்தில் தான்.

அந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னோடி ப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் என்னும் ஜெர்மானிய மருத்துவர் ஆவார். ஆரம்பத்தில் சாதாரண மருத்துவ முறையையே பாரிஸ் நகரத்தில் பின்பற்றி வந்த அவர் தன் ஆராய்ச்சிகளின் முடிவில் நோயாளியைக் குணப்படுத்த வேறு ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார்.

1774ல் ஒரு பெண் நோயாளிக்கு இரும்புச் சத்து கலந்த திரவத்தைக் குடிக்கக் கொடுத்து அவள் உடம்பில் பல இடங்களில் காந்தங்களை வைக்க அந்தப் பெண்மணி தன் உடலெல்லாம் ஒரு விசித்திர திரவம் பயணிப்பதாக உணர்ந்தார். சில மணி நேரங்களில் அந்தப் பெண்ணின் உடல் உபாதை நீங்கி குணமடைந்தாள்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

ஆண்களின் உதவியின்றி பெண் பணியாளர்களை வைத்து சாதித்து காட்டிய ஏர் இந்தியா

 
 

முதன்முறையாக உலகைச்சுற்றி பயணிகள் விமானம் முழுவதும் பெண் குழுவினரால் இயக்கப்பட்டதாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் பூமியை சுற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்துள்ளதுபடத்தின் காப்புரிமைTWITTER - SAN FRANCISCO AIRPORT Image captionஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் பூமியை சுற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்துள்ளது

கடந்த திங்கட்கிழமையன்று, புதுதில்லியிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானமானது வெள்ளிக்கிழமையன்று இந்திய தலைநகருக்கு திரும்பியுள்ளது.

ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் அமெரிக்கா செல்லும் பயணத்தில் பசிஃபிக் பெருங்கடல் மீது பயணப்பட்டதாகவும், மீண்டும் திரும்பும் போது அட்லான்டிக் மீது பறந்து பூமியை சுற்றி வந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்பாகவே இந்த பயணம் நிறைவடைந்துள்ளதுபடத்தின் காப்புரிமைTWITTER - SAN FRANCISCO AIRPORT Image captionசர்வதேச மகளிர் தினத்திற்கு முன்பாகவே இந்த பயணம் நிறைவடைந்துள்ளது

இந்த சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக பதிவு செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது, பயணச்சீட்டை சரிபார்க்கும் பணியாளார்கள், விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு பணியாளார்கள், விமானம் புறப்படுவதற்குமுன் அதற்கு சான்றிதழ் அளிக்கும் பொறியாளர்கள் மற்றும் விமானம் கிளம்பவும் தரையிறங்கவும் அனுமதியளிக்கும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆகிய அனைவரும் பெண்கள் என்று பெருமையுடன் கூறுகிறது ஏர் இந்தியா.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

தனுஷுக்கு சிக்கல் தந்திருக்கும் DNA பற்றி தெரியுமா? #HowDNAworks

dna

நடிகர் தனுஷின் படங்கள் வெளியாகும் வேகத்தை விட சர்ச்சைகள் வேகமாக வருகின்றன. அப்படி ஒன்றுதான் நீதிமன்றத்துக்கு வந்தது. கதிரேசன் - மீனாட்சி தம்பதி தனுஷ் தங்கள் மகன் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ஏகப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தி வரும் இந்த வழக்கு முடியாமல் நீண்டு கொண்டே போகிறது.

நீதிமன்றத்தில் தனுஷ் தரப்பில் இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும், இதை தனுஷ் என மாற்றியதாகவும்  தெரிவித்தனர். ஆனால், அவருடைய பள்ளி மாற்றுச்சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி தரப்பில் சந்தேகம் கிளப்பப்பட்டது. இவர்கள் அளித்த சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள், தனுஷின் உடலில் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தார்கள். இதற்காக நீதிமன்றத்தில் மருத்துவச் சோதனை நடத்தப்பட்டது. தனுஷ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பெயர் மாற்றம் செய்ததற்கான கெஸட் நகல்கள் ஆகியவற்றில் உள்ள விவரங்கள் பல கேள்விகளை எழுப்பியதால் ‘சான்றிதழ்களில் சந்தேகம் உள்ளது’ என கதிரேசன் - மீனாட்சி தரப்பின் வழக்கறிஞர் சொன்னார். 

டி.என்.ஏ சோதனை செய்தால் உடனே முடியும் வேலையை இழுத்தடிப்பதால் சோஷியல் மீடியாவிலும் இது பற்றி அதிகம் பேசப்பட்டது. கதிரேசன் தரப்பில் டி.என்.ஏ. சோதனைக்கு தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து என்ன ஆகப்போகிறது என்பதுதான் மர்மமாகவே இருக்கிறது. எல்லோருக்கும் டி.என்.ஏ தெரியும். ஆனால், அது எப்படி செய்யப்படுகிறது என்பது தெரியுமா?

உயிரின் அடிப்படை மூலக்கூறே டி.என்.ஏ தான். மற்ற எந்த மூலகூறுகளுகள் போல் இல்லாமல், டி.என்.ஏ தன்னைத் தானே நகல் செய்துகொள்கிறது. இதுதான் உயிரின் அடிப்படை. இந்த மூலக்கூறை ஆராய்ந்தால், அதில் ஒரு பேட்டர்ன் கிடைக்கும். அதை வைத்து இரண்டு பேருக்கிடையில் ரத்த தொடர்பு இருக்கிறதா, அவர்தான் நிஜமான உயிரியல் பெற்றோரா என்பதை கண்டறிய முடியும்.
ரத்தம், முடி, தோல் அல்லது உடலில் இருக்கும் எதாவது ஒரு திசுவின் மாதிரி கிடைத்தால் போதும். அதில் இருக்கும் டி.என்.ஏ. மூலக்கூறுவை ஆராய்ந்து அதன் வடிவத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். 

DNA  

பொதுவாக கீழ்கண்ட காரணங்களுக்காக டி.என்.ஏ டெஸ்ட் செய்யப்படும்.

1) Newborn screening

பிறந்த குழந்தைக்கு செய்வார்கள். அமெரிக்காவில் இது அதிகம். இதன் மூலம் பிறந்த குழந்தைக்கு எதாவது குறை இருந்தால், அதை ஆரம்பத்திலே சரி செய்ய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

2) Forensic testing

குற்றவாளிகளை கண்டறிய... எல்லா குற்றங்களிலுமே அதை செய்பவர்கள் எதாவது ஒரு க்ளூவை விட்டுச் செல்வார்கள் என்பார்கள். அப்படி அவர்கள் விட்டுச்செல்வது அவர்கள் உடல் சார்ந்த விஷயம் என்றால், அதிலிருந்து டி.என்.ஏ. மாதிரியை எடுத்து குற்றவாளிகளை கண்டறிய முயற்சி செய்வார்கள்.

3) carrier testing

இதில்தான் பெற்றோர் இருவரின் டி.என்.ஏ மாதிரியை வைத்து மகன் அல்லது மகளின் டி.என்.ஏவுடன் ஒப்பிடுவார்கள். தனுஷ் வழக்கு போன்ற விஷயத்துக்காக மட்டுமில்லாமல், பரம்பரையாக இருக்கும் நோய் பற்றி அறியவும் இந்த டெஸ்ட் பயன்படும்.

4) Prenatal testing

இது குழந்தை பிறக்கும் முன்னரே செய்யப்படும் டெஸ்ட். பிறக்க போகும் குழதைக்கு ஜெனடிக் டிஸ் ஆர்டர் எதாவது இருக்குமா என முன் கூட்டியே அறிவதற்காக செய்யப்படுவது,.

இன்னும் பல காரணங்களுக்காக டி.என்.ஏ டெஸ்ட் செய்வதுண்டு.

தனுஷ் விஷயத்தில் டி.என்.ஏ டெஸ்ட் செய்யப்படுமா என்பதை விரைவில் நீதிமன்றம் உறுதி செய்யும். கதிரேசன் தம்பதி தரப்பில் டி.என்.ஏ. டெஸ்டுக்கு  தயார் என சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இருட்டில் மிரட்டிய சிறுத்தை... வழிமறித்த குட்டியானை..! ஒரு வைல்ட் லைஃப் பெண் போட்டோகிராபரின் அனுபவம்

பூஜா சோர்தியா -  வைல்ட் லைஃப்ஃ போட்டோகிராபர்

குட்டிகளைப் பாதுகாப்பாக அரண் அமைத்து அழைத்துச் செல்லும் யானைக் கூட்டம், புதருக்குள் மறைந்து கொண்டு சீறும் சிங்கம் என ஒரு வனத்தையே தன்னுள் அடக்கி வைத்திருந்தது அந்த அரங்கு. அந்த புகைப்படங்களின் சொந்தக்காரர் சென்னையைச் சேர்ந்த பூஜா சோர்தியா. தென் ஆப்பிரிக்க காடுகளில் பயணம் செய்து அதை புகைப்படக் காட்சியாக வைத்திருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹவுஸ் அரங்கத்தில் நடந்து கொண்டிருக்கும் புகைப்படக் காட்சியைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

அரங்கில் நுழையும் இடத்திலேயே வரையாடு ஒன்று அமைதியாக நம்மை வரவேற்றுகிறது.  புகைப்படக்காட்சியை பார்க்க வந்திருந்த வாண்டுகளிடம் அந்தப் படங்களுக்குப் பின்னணியில் இருக்கும் அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருக்க, அதை விழிகள் விரிய கேட்டுக் கொண்டிருந்தனர் அந்த சுட்டீஸ். நாமும் கதை கேட்க ஆரம்பித்தோம்.

"நாள் முழுக்க காட்டுல சுத்திட்டு, ஈவ்னிங் தங்கியிருக்கிற இடத்துக்கு போயிட்டு இருந்தோம். அங்கே 5.30 மணிக்கு மேலே காட்டுக்குள்ள சுத்தக்கூடாதுன்னு சட்டம் இருக்கு. நாங்க கேம்ப்க்கு திரும்பிட்டு இருந்த நேரத்துல ஒரு சிறுத்தை ரோட்டைக் கடந்து போய்கிட்டு இருந்துச்சு. டிரைவர் வண்டியை நிறுத்திட்டாரு. சிறுத்தை ரொம்ப தனிமை விரும்பி. அவ்வளவு சீக்கிரம் அதை போட்டோ எடுக்க முடியாது. அது கடந்து போன பக்கம் எட்டிப் பார்த்தோம். ஒரு விலங்கை வேட்டையாடிட்டு இருந்துது. கூட வந்தவங்க எல்லாம் ‛கிளம்பலாம் இங்கே இருப்பது பாதுகாப்பு இல்லை’னு சொன்னாங்க. ‛அது நிச்சயமா இங்கேதான் பக்கத்தில இருக்கும். இல்லைனா  இதைத் தேடி வேறு ஏதாவது விலங்கும் வர வாய்ப்பிருக்கு’னு  சொன்னேன். கொஞ்ச நேரம் காத்திருந்தோம். ரொம்ப இருட்டருச்சு.  திடீரென பக்கத்திலிருந்து உறுமல் சத்தம். டிரைவர் வண்டியை கிளப்பத் தயாரானார்.

பூஜா சோர்தியா - வைல்ட் லைஃப்ஃ போட்டோகிராபர்

சத்தம் வந்த பக்கம் என் கேமராவோடு திரும்பவும், எங்களுடன் இருந்தவர் இன்ஃபிராரெட் லைட்டை அங்கே அடிக்கவும் சரியாக இருந்தது. கிளிக் பண்ணிட்டேன். வண்டி சத்தம் கேட்டதுல அந்தச் சிறுத்தை அங்கிருந்து ஓடிருச்சு. அப்புறம்தான் சொன்னாங்க அவ்வளவு இருட்டுல இப்படி சிறுத்தையை யாருமே பார்த்தது இல்லையாம்." கதை சொல்லி முடிக்க, குழந்தைகள் ஆச்சர்யம் விலகாமல் அந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பூஜாவிடம் பேசினோம். "நான் வளர்ந்தது படிச்சது எல்லாமே சென்னையிலதான். ஸ்டெல்லா மேரிஸ்ல பி.காம் படிச்சேன். போட்டோகிராபி மேல இன்ட்ரஸ்ட். உடனே கிளாஸ்ல சேர்ந்து போட்டோகிராபி சம்பந்தப்பட்ட அடிப்படையான விஷயங்களைக் கத்துக்க ஆரம்பிச்சேன். அடிக்கடி வீட்ல காடுகளுக்கு சின்ன சின்ன ட்ரிப் போவோம். ஸ்கூல்லையும் முழுக்க முழுக்க மரம் செடியாதான் இருக்கும். இப்படி சின்ன வயசுல இருந்து இயற்கையான சூழல்லையே வளர்ந்ததால வைல்ட் லைஃப்  போட்டோகிராபி மேல ஆர்வம் வந்துடுச்சு. வீட்லயும் எல்லோரும் என்ன போலத்தான். அதனால பெருசா எதிர்ப்பு இல்லை. 'உனக்குப் பிடிச்சதை ரசிச்சது செய். அப்போதான் நல்ல ரிசல்ட் கிடைக்கும்'னு தன்னம்பிக்கை கொடுத்தாங்க. அதுதான் இந்த ஷோ வரைக்கும் கொண்டுவந்திருக்கு.  

யானைகள் எப்பவுமே குட்டிகளை ரொம்ப பாதுகாப்பாக வெச்சுக்க விரும்பும். குட்டிகளோடு இருக்கும்போது யாரையும் பக்கத்துல நெருங்க விடாது. துரத்த ஆரம்பிச்சுடும். அவ்வளவு கவனமா குட்டிகளை கூட்டிட்டு போகும். அந்தக் காட்சியைப் படம்பிடிச்சதை மறக்கவே முடியாது.

பூஜா சோர்தியா - வைல்ட் லைஃப் போட்டோகிராபர்

இப்படி இங்கே இருக்கிற எல்லாப் படங்களுக்கு பின்னாடியும் அவ்வளவு கதைகள் இருக்கு. கார்ல போய்கிட்டு இருந்தப்போ ஒரு குட்டி யானை  சாலையை மறிச்சு நின்னுகிட்டு தன்னோட காலை கிராஸா வெச்சு விளையாட ஆரம்பிச்சுடுச்சு. நாங்களும் சந்தோஷமா படம் எடுத்தோம். பின்னாடி பார்த்தா தாய் யானை குட்டியை நோக்கி வந்துட்டு இருக்கு. எல்லோரும் பயந்துட்டாங்க. யானை அவ்வளவு பக்கத்துல வந்தும் கூட நான் பயப்படவே இல்லை. ஏன்னா இயற்கையை நாம நேசிக்க ஆரம்பிக்கும்பொழுது அந்த பயமெல்லாம் ஓடியே போயிடும்." என்றார் பூஜா..

சில நொடிகளில் "இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். இந்த புகைப்படக் கண்காட்சிக்கு என்ன பெயர் தெரியுமா!?  "Respect Nature" என கண்சிமிட்டி சிரிக்கிறார்..!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் காட்சிகள்

 
 

ஆஸ்திரேலியாவில் ஆவலானில் மார்ச் 3 ஆம் தேதி சர்வதேச விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. அதில், அமெரிக்காவின் ஸ்கிப் ஸ்டீவர்ட் மற்றும் விமான சாகச சாம்பியனான ஜர்கஸ் கைரிஸ் ஆகியோர் சாகசங்களில் ஈடுப்பட்டனர்.

ஆஸ்திரேலியா சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் படங்கள் ஆஸ்திரேலியா சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் படங்கள் ஆஸ்திரேலியா சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் படங்கள் ஆஸ்திரேலியா சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் படங்கள் ஆஸ்திரேலியா சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் படங்கள் ஆஸ்திரேலியா சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் படங்கள் ஆஸ்திரேலியா சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் படங்கள் ஆஸ்திரேலியா சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் படங்கள் ஸ்கிப் ஸ்டீவர்ட் மற்றும் ஜர்கஸ் கைரிஸ் இவர்களை தவிர இரு ஸ்குரீல் ரக ஹெலிகாப்டர்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன ஆஸ்திரேலியா சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் படங்கள் சாகசத்தில் ஸ்குரீல் ரக ஹெலிகாப்டர்கள் ஆஸ்திரேலியா சர்வதேச விமான சாகச கண்காட்சியின் மலைக்க வைக்கும் படங்கள் 

 பிபிசி தமிழ் :

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

லின் மர்குலிஸ்

 
 
 
linnn_3140153f.jpg
 
 
 

அமெரிக்க உயிரி அறிவியலாளரும் உயிரணுக்கள், அவற்றின் வளர்ச்சி குறித்த கோட்பாடுகளை வகுத்தவருமான லின் மர்குலிஸ் (Lynn Margulis) பிறந்த தினம் இன்று (மார்ச் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் சிகாகோ நகரில் (1938) பிறந்தார். தந்தை வழக்கறிஞர், வர்த்தகர். இலினாய்ஸ் மாநில அரசின் துணை வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். ஹைடே பார்க் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் மர்குலிஸ். படுசுட்டியான இவர் 14 வயதுக்குள் பள்ளிக் கல்வியை முடித்தார்.

* சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சிறு வயது முதலே அறிவியலில், குறிப்பாக உயிரியலில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல விஞ்ஞானிகளின் நூல்களைப் படித்தார். பாரம்பரியம், மரபணுக் கூறுகள், தலைமுறைகளுக்கு இடையிலான பொதுவான தொடர்புகள் குறித்து இவருக்குள் பல கேள்விகள் எழுந்தன.

* இதற்கு விடை தேடி ஏராளமான நூல்களைப் படித்தார். பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் விலங்கியல், மரபியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பெர்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மரபணுக்கள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார்.

* பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறை ஆசிரியராகவும், இறுதியாக பேராசிரியராகவும் பணியாற்றினார். இங்கு 22 ஆண்டு கள் பணியாற்றினார். பின்னர் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டார்வினின் ‘தக்கது பிழைக்கும்’ என்ற கோட்பாட்டை தீவிரமாக ஆதரித்தார்.

* நுண்உயிரிகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். எண்டோசிம்பயாடிக் கோட்பாட்டை உருவாக்கினார். உயிரணுக்களில் இருக்கும் சில நுண்அமைப்புகள் பரிணாமத்தில் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* செல் மரபணுக்கள் குறித்த ஆராய்ச்சியில் பல ஆண்டு காலம் ஈடுபட்டார். செல்களின் உட்பகுதி கட்டமைப்புகள் குறித்து மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார். தன் கருத்துகளை 1970-ல்

* ‘ஆரிஜின் ஆஃப் யூகார்யோடிக் செல்ஸ்’ என்ற நூலில் எழுதியுள்ளார். முதலில் மறுக்கப்பட்ட இவரது கோட்பாடு பின்னர் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* சிம்போசிஸ் இன் செல் எவால்யூயேஷன் என்ற 2-வது நூல் வெளிவந்தது. கையா (Gaia) என்ற கருதுகோளை பிரிட்டன் விஞ்ஞானி ஜேம்ஸ் லவ்லாக்குடன் இணைந்து உருவாக்கினார். இது மிக முக்கிய சூழலியல் கண்ணோட்டமாக விளங்குகிறது. நிலவியல், புவி உருவாக்கம், அதன் செயல்பாடு, நுண்உயிரிகளின் பங்கு குறித்தும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

* பூமியில் வாழும் உயிரினங்களை விலங்கு, தாவரம், பாக்டீரியா, பூஞ்சை, அதிநுண்உயிரி என்ற ஐந்தாகப் பிரிக்கும் வழிமுறை குறித்த ‘ஃபைவ் கிங்டம்ஸ்’ என்ற இவரது நூல் நல்ல வரவேற்பை பெற்றது. ‘லுமினியஸ் ஃபிஷ்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டார். இவரது அறிவியல் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தன.

* சுமார் 20 ஆண்டுகாலம் ஏராளமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல முக்கிய பங்களிப்புகளை வழங்கினார். ஏராளமான அறிவியல் நூல்களை எழுதினார். கவுரவம் வாய்ந்த ‘டார்வின்-வேல்ஸ் பதக்கம்’ 2008-ல் இவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* நவீன உயிரியலில் சிறந்த சிந்தனையாளர் எனப் பெயர் பெற்றவரும், தத்துவார்த்த உயிரியல் விஞ்ஞானியும், நவீன யுகத்தின் ஆக்கபூர்வமான அறிவியல் கோட்பாட்டாளர்களில் ஒருவருமான லின் மர்குலிஸ் 73-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.