Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

’இதுல இருந்து எப்படின்னே லைட்டு எரியும்?’ - ஹேப்பி மேன் செந்திலுக்கு ஹேப்பி பர்த்டே

காமெடி ஜாம்பவான்கள் லிஸ்டில் இவருக்கும் பெரும் பங்குண்டு. கவுண்டமணி என்று சொன்ன மறுநொடியே நம் மைண்டில் வந்து நிற்பது செந்தில்தான். இருவரும் நகமும் சதையுமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். இருவரையும் தனித்தனியாக ஸ்க்ரீனில் பார்ப்பது ரொம்ப அபூர்வம். இன்று ஹேப்பி பர்த்டே கொண்டாடும் செந்தில் ஸ்பெஷல் இது!

செந்தில்

இந்தியா சுதந்திரம் பெற்ற நான்கு வருடங்கள் கழித்து ராமமூர்த்தி, திருக்கம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர்தான் இந்த காமெடி கிங் செந்தில். தனது பன்னிரண்டாவது வயதிலேயே அப்பாவின் திட்டைச் சமாளிக்க முடியாமல் வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டார். முதலில் எண்ணெய் கிடங்கிலும் பின் டாஸ்மாக்கில் அட்டெண்டராகவும் வேலை பார்த்திருக்கிறார். பின் சினிமாவின் மீதிருக்கும் ஈர்ப்பு அதிகரிக்க சென்னைக்கு வந்தவர், 1979-ல் 'பசி' என்னும் படம் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு சில படங்களில் சின்னச் சின்ன ரோல் செய்து தமிழ் சினிமாவில் தன் தடத்தை பதித்தார். விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசாக 'மலையூர் மம்பட்டியான்' படத்தின் மூலம் முக்கியமான ரோல் கிடைத்ததையடுத்து அதில் சிறந்த ஆக்டிங் பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தி பலரிடம் பாராட்டுகளையும் பெற்றார். பின் 1984-ல் கலைசெல்வி என்பவரைத் திருமணம் செயந்தார். 

தனக்குக் கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி 'பேக் டு பேக்' பல வெற்றிப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். அதில் கவுண்டமணிக்கும் பெரும் பங்குள்ளது. இருவரின் காம்போவையும் பார்த்து தமிழ் சினிமாவின் 'லாரல் அண்ட் ஹார்டி' என்று செல்லமாக அழைத்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் பட வாய்ப்பினைத் தேடி போனதையடுத்து இவர்களைத் தேடி வாய்ப்புகள் வரத் தொடங்கின.

செந்தில்

எல்லாப் படங்களிலும் கவுண்டமணி இவரை அடி, உதை என படம் முழுவதும் துவைத்து எடுப்பார். ஆனால் மக்களை மகிழ்விக்க இவரும் அதை வாங்கிக்கொள்வார். 1989-ல் வெளியான 'கரகாட்டக்காரன்' படத்தின் புகழைப்பற்றி இன்னும் பல தலைமுறைகள் பேசும். அந்தப் படத்தின் பெயரைச் சொன்னவுடன் ஹீரோ, ஹீரோயினைத் தாண்டி ஞாபகம் வருவது இவர்கள் இரண்டு பேரும்தான். 'வாழைப்பழம்' காமெடியில் தொடங்கி 'அது ஏண்டா என்னப் பார்த்து அந்த கேள்வி கேட்ட?' என்பதுவரை இன்னமும் பல படங்களில்  ரசிகர்களைச் சிரிக்க வைத்தனர். அதுவும் இவர் கவுண்டமணியை 'அண்ணே' என்று கூப்பிடும் மாடுலேசனை நினைத்துப் பார்த்தால்கூட சிரிப்பு வரும்.  

இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதில் கவுண்டமணி இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இருவரின் காம்போ காமெடிகள் எத்தனைமுறை பார்த்தாலும் சிரிப்பு வரும் பாஸ். 'உள்ளத்தை அள்ளித்தா', 'ஜென்டில் மேன்', 'சின்ன கவுண்டர்', 'ஜெய் ஹிந்த்', 'இந்தியன்', 'லக்கி மேன்' என இவர்களின் புகழைப் பாட ஏராளமான படங்கள் இருக்கின்றன. வாழ்க்கையில் ஒருவனைச் சிரிக்க வைப்பதுதான் கஷ்டம். தன்னை வருத்தி எளிதில் சிரிக்கவைக்க இவர்களால் மட்டுமே முடியும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சொதப்பலும் சறுக்கலும் ஏற்படும். ஆனால் இவர்கள் நடித்த படங்களில் சொதப்பல்களோ, சறுக்கல்களோ எதுவுமே நிகழவில்லை. படங்களின் பெயர் தெரியாமல் இருக்கும் பட்சத்தில் இப்போதெல்லாம் ஹீரோ, ஹீரோயின் பெயரைச் சொன்னால் ஞாபகம் வரும். ஆனால் இவர்கள் நடித்த படங்களின் பெயரை இந்த காமெடி என்று சொன்னால்தான் படத்தின் பெயர் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு அடையாளம் பதித்த மனிதர்கள் இவர்கள். 

செந்தில்

ஒரு வாழைப்பழத்தை வைத்து எப்படி காமெடி செய்வது? என்று கேட்டால் சிரிப்பு வரும். அந்த வாழைப்பழத்தை வைத்தே சிரிக்க வைத்தவர்கள் இவர்கள்தான். இன்றுவரை அந்த காமெடிக்கு ஈடு இணையே கிடையாது. செந்திலுக்குத்தானே பிறந்தநாள்... கவுண்டமணியைப் பற்றி ஏன் கூற வேண்டும்? என்றால் முடியாத காரியம். 'கவுண்டமணி செந்தில்' என்று சொன்னால் உதடுகள்கூட ஒட்டும் பாஸ். 

மீண்டும் இருவரும் சேர்ந்து ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் செந்தில் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்களும் வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்!

http://www.vikatan.com

Bild könnte enthalten: 1 Person, lächelnd

 
 
'அண்ணே.. புயப்பம்.. அதான் அண்ணே இது'
செந்தில் பிறந்தநாள்

அப்பாவியாக அடி வாங்கி, கோமாளியாக குழப்பம் செய்து, பாவமாக படு காமெடி செய்து, காலாகாலத்துக்கும் எங்களை கோலாகலமாக சிரிக்க வைத்து குதூகலம் தரும் நகைச்சுவை நடிகர் செந்திலின் பிறந்தநாள் இன்று.
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

போப் ஆண்டவரின் தொப்பியை கழற்றிய சிறுமி..! காணொளி இணைப்பு 

 

 

ஆசிர்வதிக்கும் சந்திப்பின் போது, போப் ஆண்டவரின் தலையில் அணியப்பட்டிருந்த தொப்பியை, சிறுமி ஒருவர் கழட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் வத்திக்கானில் இடம்பெற்றதுள்ளது.

3E859BF800000578-0-image-m-60_1490184117

உலக கத்தோலிக்க மதத் தலைவராக போற்றப்படும், போப் பிரான்ஸிஸ் ஒவ்வொரு வாரமும் பக்தர்களை ஆசிர்வதித்து வருவார், இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை ஒருவரை அரவணைத்து ஆசிர்வதிக்க முனைகையில், குறித்த சிறுமி போப்பின் தொப்பியை கழற்றி அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.

C7gvMf4W4AEYx4S.jpg

இந்நிலையில் போப் பிரான்சிஸ் புன்னகைத்த வாரே, தனது தொப்பியை மீளப்பெற்று, சரிசெய்துகொண்டு, தனது ஆசிர்வதிக்கும் பணியை தொடர்ந்தமை அனைவரையும் நெகிழ வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

காடுகளைக் காக்க ராணுவத்தை களமிறக்கிய உலகின் ஏழ்மையான நாடு..!

மலாவி. தென்கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு சிறு நாடு. முதலில் இந்த நாட்டைப் பற்றிய முக்கியமான இரண்டு விஷயங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்...

- தனி நபர் வருமானத்தின் கணக்குப்படி பார்த்தால் இது தான் உலகின் மிக ஏழ்மையான நாடு. 

- 2013ல் நாட்டில் அதிகரித்த பசி, வறுமைக்கு உதவிட அதன் அதிபர்  ஜாய்ஸ் பண்டா தன்னுடைய ஜெட் விமானம் மற்றும் 60 சொகுசு கார்களை விற்று மக்களுக்கு உணவளித்தார்.

மலாவி காடு மரம் கரி ராணுவம்

காடுகளும், மலைகளும் சார்ந்த பகுதி தான். ஆனால், இன்று நாட்டின் பெரும் பகுதியான காடுகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. அழிந்துக் கொண்டிருக்கும் காடுகளைக் காப்பாற்ற மலாவி அரசாங்கம் தன் ராணுவத்தை களம் இறக்கியுள்ளது. மலாவி மக்களின் மிக முக்கிய எரிசக்தியாக இருப்பது "மரக்கரி" . இதற்காக, பலரும் காடுகளுக்குள் சென்று மரங்களை வெட்டி எடுக்கின்றனர். மலாவியின்  8.4 மில்லியன் ஏக்கர் பரப்பளவிலான காடுகள், வருடத்திற்கு 2.6% வேகத்தில் அழிந்து வருவதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.

மலாவி காடு மரம் கரி ராணுவம்இப்படி காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க மலாவி ராணுவம் காட்டுப் பகுதியில் 24 மணிநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. காடுகளுக்குள் சென்று மரம் வெட்டுபவர்களைக் கைது செய்யவும், அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்படுவதால், மலாவியின் நீராதாரங்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக தேவையான அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. இப்படி, பிரச்னைகள் தொடர்ச் சங்கிலியாக உருவெடுத்திருக்கின்றன. 

ராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம், மக்கள் மரம் வெட்டுவதைக் குறைத்து, இயற்கைப் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இது மிக முட்டாள்தனாமான முயற்சி என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். மலாவியிலிருக்கும் நகரப் பெண்களிலேயே 54% மரக் கரியைத் தான் பயன்படுத்துகின்றனர். 10ல் ஒரு மலாவியர் மட்டுமே மாற்று எரிபொருளை பயன்படுத்துகிறார். மரக்கரியின் தேவை மிக அதிகமாக இருப்பதால், மக்கள் காடுகளின் மரங்களை வெட்டி, ஒரு திறனற்ற செய்முறையில் கரியை தயாரிக்கிறார்கள். இதனால், அதிகப்படியான மரம் வீணாகிறது. 

சட்டத்திற்கு விரோதமாக செய்யப்படும் இந்தத் தொழிலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். மலாவியின், தேசிய வனச் சட்டப்படி மரங்களை வெட்டி கரித் தயாரிக்கும் தொழிலுக்கு அனுமதி அளிக்கலாம். ஆனால், வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக அரிய வகை மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த இந்த 20 ஆண்டுகளில் இதுவரை ஒரேயொரு நிறுவனத்திற்கு மட்டுமே இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

"நாங்கள் இயற்கையை அழிக்கிறோம் என்று எங்களுக்குத் தெரிகிறது. ஆனால், எங்கள் வறுமையிலிருந்து, பசியிலிருந்து தப்பிப் பிழைத்திட எங்களுக்கு வேறு வழியில்லை" என்கிறார் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு மலாவியன் பெரியவர். 

மலாவி காடு மரம் கரி ராணுவம்

சில தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கம்மியான கரியை உபயோகிக்கும் அடுப்பு ஒன்றைக் கண்டுபிடித்து விற்று வருகிறார்கள். தற்போதைய நிலையில் மலாவியில் 5 லட்சம் குடும்பங்கள் இதை உபயோக்கித்து வருகிறார்கள். 2020ற்குள் 20 லட்சம் வீடுகள் அதை உபயோகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்தக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம், மரத் தேவைகள் குறைந்து, மரம் வெட்டப்படுவது குறையும் என்று நம்புகிறார்கள். அதே சமயம், ஒரு அடுப்பின் விலை 30யூரோக்களாக இருக்கும் நிலையில், ஒரு நடுத்தர மலாவிக் குடும்பத்திற்கே இது அதிகப்படியான விலையாக இருக்கிறது. இதன் விலையைக் குறைக்கவும் அரசாங்கம் மானியங்கள் எதையும் கொடுக்க முன்வரவில்லை. 

இப்படி பிரச்னையைத் தீர்க்க மாற்று வழிகளை கண்டுபிடிக்காமல், இருக்கும் மாற்று வழிகளையும் ஊக்குவிக்காமல், மக்களின் வறுமையைப் போக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல், நேரடியாக ராணுவத்தை களமிறக்கி காடுகளைக் காப்பாற்றிட முடியும் என அரசாங்கம் நம்புவது நிச்சயம் அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. 

மலாவி காடு மரம் கரி ராணுவம்

இங்கு மிக முக்கிய ஒரு விஷயத்தை நினைவூட்ட வேண்டிய அவசியமிருக்கிறது. கென்யாவில், காடுகள் அழிப்பது அதிகரித்த போது, இது போன்ற ஆய்வற்ற, திறனற்ற பலத் திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்தது. ஆனால், அவை எதுவுமே கை கொடுக்கவில்லை. நோபல் பரிசு வென்ற வங்காரி மாத்தாய்  "க்ரீன் பெல்ட் மூவ்மெண்ட்" என்ற இயக்கத்தைத் தொடங்கி இயற்கை பாதுகாப்பையும், மக்களின் வறுமை நீக்கலையும் ஒரு புள்ளியில் இணைத்து பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தார். இன்றைய மலாவியின் தேவை ஒரு வங்காரி மாத்தாய் தான்...

" மக்களின் வாழ்வை மேம்படுத்தாமல், அவர்களுக்கான அதிகாரங்களை வழங்காமல், அவர்களுக்கு இந்தக் காடும், இயற்கையும் அவர்களின் சொத்து, அதைக் காப்பது அவர்களின் கடமை என்ற அறிவூட்டாமல்... ஒரு போதும் இயற்கையைக் காப்பாற்றிட முடியாது"

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

36p2.jpg

கால்பந்து சூப்பர்ஸ்டார் ரொனால்டோவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், அவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இதுவரை மகனின் தாய் யார் என அறிவிக்காத ரொனால்டோவுக்கு, அடுத்ததாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இந்தக் குழந்தைகளுக்கும் அம்மா யார் என ரொனால்டோ அறிவிக்கவில்லை. சீக்ரெட் ஸ்டார்!


36p1.jpg

ண்டனைச் சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சல்தான் ஸ்ருதிஹாசனின் புதிய நண்பர். ட்விட்டரில் ஸ்ருதி, மைக்கேல் இணைந்திருக்கும் படங்கள் வைரலாகப் பரவிவரும் நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து சென்ற கமல்ஹாசனும் மைக்கேல் கோர்சலைச் சந்தித்திருக்கிறார். அந்தப் படமும் ட்விட்டரில் அப்டேட் ஆனது. இதுபற்றி ஸ்ருதியிடம் கேட்டால், `இந்த நட்பு, காதல் குறித்தெல்லாம் பேசுவதற்கான நேரம் இதுவல்ல' என்கிறார். சீக்கிரம் செய்தி சொல்லு ஸ்ருதி!


36p4.jpg

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகள் இவான்காதான் அமெரிக்காவின் ரெட் கார்ப்பெட் டார்லிங். அமெரிக்காவில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்ப்பைவிட அதிக வரவேற்பு இவான்காவுக்குத்தான். பல்வேறு தூதரக நிகழ்ச்சிகளிலும் இவான்காவே முன்னிலைப்படுத்தப்படுகிறார். அமெரிக்காவின் முதல் பெண் மெலானியாதான் என்றாலும், அப்பாவுக்கு எல்லா அட்வைஸும் கொடுப்பது மகள் இவான்காதான் என்கிறார்கள். சமீபத்தில் அமெரிக்கா வந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், இவான்காவுடன் தனி சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவான்காவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சாச்சா!


36p3.jpg

  `தளபதி' என்ற படத் தலைப்பில் நடிக்க வேண்டும் என்பது இளைய தளபதியின் நீண்டநாள் ஆசை. ஏற்கெனவே ஒரு படத்துக்கு `தளபதி' என டைட்டில் வைக்க முயற்சிகள் நடந்து முடியாமல் போனது. மீண்டும் அட்லி இயக்கும் படத்தின் தலைப்பை `தளபதி' என வைக்க முயற்சிகள் பல தரப்பிலும் நடந்தன. ஆனால், அந்தத் தலைப்பின் உரிமையை வைத்திருக்கும் ஜி.வி ஃபிலிம்ஸ் டைட்டிலைத் தர மறுக்க, மீண்டும் வேறு தலைப்புகள் தேடும் முயற்சியில் இருக்கிறார் அட்லி. ஆல் தி பெஸ்ட்!


36p5.jpg

`நான் அறிமுகமாகி 25 வருஷங்கள் முடிஞ்சிடுச்சு. இப்போவும் மணி சார்கூட இருக்கும் உறவு அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்கு. ஒரு நல்ல ஆசானாக, சகோதரனாக என்னை நகர்த்திட்டுப்போறவர் அவர்' என மணிரத்னத்துடனான 25 வருட இசைப் பயணம் பற்றி சிலிர்க்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். நிஜ நாயகர்கள்!


36p6.jpg

மோடி பிரதமரான பிறகு, மிகக் குறைந்த நாள்கள் நடந்தது 2016-ம் ஆண்டு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்தான். திட்டமிட்டதில் மொத்தமாக 17.9 சதவிகிதம் மட்டுமே மக்களவையும், 20.31 சதவிகிதம் மட்டுமே மாநிலங்களவையும் செயல்பட்டிருக்கின்றன. இதிலும் சட்ட மசோதாக்கள் தொடர்பாக நடந்த விவாதங்கள் மிகவும் குறைவு. மக்களவை, மாநிலங்களவை இரண்டும் சேர்த்து அதிகபட்சமாக 35 நிமிடங்கள் ஒரே பிரச்னையைப் பற்றி தொடர்ந்து பேசியிருக்கின்றன. அது என்ன தெரியுமா? மம்தா பானர்ஜியின் விமானம் தரை இறங்கத் தாமதமானது குறித்துதான் அதிக நேரம் பேசியிருக்கிறார்கள். மக்களால்... மக்களுக்காகவே!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘‘ஃபேஸ்புக்காலதான் கிடைச்சாங்க நான் பெறாத புள்ளைங்க!’’ - ஒரு தாயின் உருக்கமான கதை

ஃபேஸ்புக்

 

மூக வலைதளங்களின் பாசிட்டிவ் எனர்ஜிக்கு மற்றுமொரு சான்று, தன சக்தி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, 16 வயதுக்குள் இரண்டு குழந்தைகளைப் பெற்று, குடிகாரக் கணவர், கூலித் தொழில் வருமானம் என்றிருந்தவரை, வாசிப்புப் பழக்கம் சமூக வலைதளத்துக்கு அழைத்துவர, இன்று அவர்  முகநூலின் பிரபல பதிவர்களில் ஒருவர். அசல் கிராமத்துப் பெண்ணாகச் சிரிக்கும் புகைப்படங்கள்,
அதிரடி போஸ்ட்டுகள் என்று 'வாவ்' சொல்லவைக்கிறது அவரின் ஃபேஸ்புக் பக்கம். தனசக்தியிடம் பேசினோம்...

''என் அப்பாவுக்கு, என் அம்மா இரண்டாம் தாரம். மழைக்காக பள்ளிப் பக்கம் ஒதுங்குவதுபோல மதியச் சாப்பாட்டுக்காக பள்ளிக்குச் சென்றவள் நான். அந்தச் சாப்பாட்டோடு, செவிக்குக் கிடைத்த
உணவின் ஈர்ப்பால் படிக்கத் தொடங்கினேன். சுறுசுறுப்பு, துடுக்கான பேச்சு என்று வாயாடி நான். 'இவ்ளோ பேசுற நீ, பேச்சுப் போட்டியில் கலந்துக்கலாமே' என்ற ஆசிரியரின் தூண்டுதலால், பேச்சுப் போட்டி,
கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்றேன். படித்துப் பட்டம் வாங்க நினைத்த என் கனவுகளை, என் திடீர் திருமணம் சிதைத்தது. 

பெண் சிசுக்கொலை மேலோங்கி இருந்த நாமக்கல் பகுதி அது என்பதால், 'உன்னைப் பெத்து வளர்த்ததே பெருசு. பெத்தவங்க கடமையை முடிக்கணும்... தாலியைக் கட்டிக்க' என்றார்கள் உறவினர்கள்.
உடலும் மனமும் பக்குவப்படாத நிலையில், திருமணப் பந்தத்தில் நுழைந்தேன். 16 வயதுக்குள் ஒரு குழந்தை பிறந்து இறந்து, மற்றொரு குழந்தையும் பிறந்துவிட்டது. வறுமை, குடிகாரக் கணவர், கூலித் தொழில் தந்த சொற்ப வருமானம் எனச் சென்றது வாழ்க்கை. வாழ்வின் வலிகளுக்கு மத்தியில், புத்தக வாசிப்பு மட்டும் என்னைப் புத்துணர்வுடன் வைத்திருந்தது'' எனத் தான் கடந்து வந்த பாதையைப்
பற்றி சொல்லத் தொடங்கினார் தனசக்தி. 

''கூலி வேலை, குழந்தை வளர்ப்பு எனச் சென்றுகொண்டிருந்தது என் வாழ்க்கை. இதற்கு மத்தியில் இலக்கிய சந்திப்புக் கூட்டங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் எங்கே நடந்தாலும் சென்றுவிடுவேன். பங்கேற்றுப் பரிசுகளும் வாங்குவேன். இந்தச்  சூழலில்தான், சைனா செட் மொபைல் போன் வாங்கி, இணைய இணைப்புப் பெற்றேன். ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பித்து, பதிவுகளைப் போடத்
தொடங்கினேன். 

ஃபேஸ்புக்

முகநூல், எனக்குள் இருந்த எழுத்தார்வத்தை அதிகமாக்கியது. என் மனதில் தோன்றிய கவிதை, கருத்துகளைப் பதிவிட்டேன். இயல்பான என் துணிச்சல், பலம் தந்தது. மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பதிவிட்டேன். ஃபேஸ்புக் வழியாக நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள். சில ஆண்டுகளிலேயே 2000-க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்'' என விவரித்தார் தனசக்தி. 

''என் மகனைப் படித்து ஆளாக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் உழைத்துவந்தேன். இதற்கிடையே குடும்பத் தகராறு, தைராய்டு, சர்க்கரை போன்ற உடல் பிரச்னைகள். மருத்துவமனைக்குக்கூட செல்ல இயலாத சூழல். என் பதிவுக்கு மதிப்புக்கொடுத்த பலர், என்னை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி, நடமாடவைத்தனர். இன்று வரை வாழவும்வைக்கின்றனர். 

என் மகன் பள்ளி இறுதி வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம், டைரக்டர் பா.ரஞ்சித் ஃபேஸ்புக் மூலம் நண்பரானார். அவரது அழைப்பின் பேரில், சென்னையில் ஒரு புத்தக அறிமுக விழாவுக்குச் சென்றிருந்தேன். அப்போது, என் பையனின் படிப்புக்கு உதவ வேண்டும் என்ற என்  வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, இன்றுவரை கல்விச் செலவை வழங்கிவருகிறார். 'கற்கை நன்றே... கற்கை நன்றே!
பிச்சை புகினும் கற்கை நன்றே!' என்ற ஔவையின் வரிகளை மனதில்கொண்டு, எனக்குக் கிடைக்காத கல்வி, என் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்துவருகிறேன். ஃபேஸ்புக்
நண்பர்கள் எனக்குத் துணை நின்று உதவிவருகின்றனர். கணவரைப் பிரிந்த சூழலில் தனி மனுஷியாகப் போராடிவருகிறேன். 

என் மகன் தற்போது விஸ்காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். எனக்கு இப்போது ஒரு பிள்ளை மட்டுமல்ல, இந்த ஃபேஸ்புக் மூலம் பெறாத பல பிள்ளைகள், சொந்தங்கள் கிடைத்துள்ளனர். அவர்களின் ஊக்கத்தால், மகிழ்வாகவும் நேர்மையாகவும் வாழ்ந்துவருகிறேன்!'' 

வாழலாம் வழிகள் நூறு!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Anzug

 
 
சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் "சிங்கப்பூர் சிற்பி" லீ குவான் யூ அவர்களின் நினைவுதினம்.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரமிக்கும் வகையில் உலகின் முன்னணி வர்த்தக மையமாக உருமாறியது.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

 

 

 

36p4.jpg

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகள் இவான்காதான் அமெரிக்காவின் ரெட் கார்ப்பெட் டார்லிங். அமெரிக்காவில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்ப்பைவிட அதிக வரவேற்பு இவான்காவுக்குத்தான். பல்வேறு தூதரக நிகழ்ச்சிகளிலும் இவான்காவே முன்னிலைப்படுத்தப்படுகிறார். அமெரிக்காவின் முதல் பெண் மெலானியாதான் என்றாலும், அப்பாவுக்கு எல்லா அட்வைஸும் கொடுப்பது மகள் இவான்காதான் என்கிறார்கள். சமீபத்தில் அமெரிக்கா வந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், இவான்காவுடன் தனி சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவான்காவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சாச்சா!

 

இவாவுக்கு  முதல் அமெரிக்க பெண் சனாதிபதி எண்ட நினைப்பு இப்பவே வரத்தொடங்கியிருக்கும்.

  • தொடங்கியவர்
மாறா இளமையின் இரகசியம்…
 

article_1490249413-644625_42921974047015இளம் வயதிலேயே பலர் முதியவர்கள் போல் தோற்றமளிக்கின்றார்கள். இதற்கான காரணங்களில் முக்கியமானது அவர்களது துர்நடத்தைகள்தான் என்பதே நிதர்சனமாகும்.

மேலும், வாழ்க்கையில் விரக்தி, தோல்வி, நோய்களின் பாதிப்புகளும் இளைஞர்களின் தோற்றங்களில் பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி விடுகின்றது. ஆனால், முதியவர்களில் எல்லோருமே, முதிய தோற்றத்தில் இருப்பதில்லை. இளைஞர்கள் போல் மினுமினுப்பாகவும் இளமைத்துடிப்புடன் சதா சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்றார்களே? இது எப்படிச் சாத்தியமாகும் என நீங்கள் கேட்கலாம்.

என்றும் தேக ஆரோக்கியத்துடனும் சந்தோசத்துடனும் மனஉறுதியுடனும் இருப்பதுடன், மனத்தினைக் களங்கமின்றி குழந்தைகளின் இயல்புடன் வைத்திருப்தே மாறா இளமையின் இரகசியமாகும்.

இளமையின் அழகு முதுமைக்கும் உண்டு. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘எக்காலத்துக்குமான கலைஞன்’ டி.எம்.எஸ் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!

டி.எம்.எஸ்

ரை நுாற்றாண்டுகடந்தும் தமிழர்களின் செவிகளின் இன்றும் இசைராஜாங்கம் நடத்திக்கொண்டிருக்கும் டி.எம்.சௌந்தரராஜனுக்கு இன்று பிறந்தநாள்...

தமிழ்த்திரையுலகின் இருபெரும் ஆளுமைகளாக விளங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் பின்னாளில் தங்கள் திரையுலக வெற்றியை அரசியலுக்கும் முதலீடாக்கிக்கொண்டு மக்களை சந்தித்தனர். இதில் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றி அபாரமானது. அந்த வெற்றியில் அவரது திரையுலக சகாவான டி.எம்.சௌந்தரராஜனுக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு. உண்மையில் திராவிட இயக்கத்தின் நீட்சியாக கருதப்படும் அதிமுக என்ற கட்சி மக்களிடம் கொண்டுசேர்க்கப் பயன்பட்ட, வெளியுலகம் தெரியாத ஆளுமை என்றும் சௌந்தரராஜனை குறிப்பிடலாம். 

மதுரையில் இசைப்பின்னணி அல்லாத ஒரு எளிய குடும்பத்தில் 1923 ம் ஆண்டு பிறந்த சௌந்தரராஜன் பிரபல வித்வான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசைப்பயிற்சி பெற்றவர். இளம்வயதில் கோவில் பஜனைகள், சிறுசிறு கச்சேரிகள் என தம்  இசைஞானத்தை இன்னும் பெருக்கிக்கொண்டார்.

மதுரையில் கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர். அரங்கின் வெளியே அவரது புகழ்பெற்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அது தனது பாடலின் ஒலிப்பேழை என நினைத்தபடி அரங்கில் நுழைந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. கூட்டத்தில் அந்த பாடலை பாடிக்கொண்டிருந்தது ஒடிசலான ஒரு சிறுவன். கச்சேரி முடிந்ததும் “அப்படியே என்னைப் போலவே பாடுறியே... சென்னைக்கு வா தம்பி உனக்கு எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையோடு சிறுவனை வாழ்த்திவிட்டு சென்றார் பாகவதர். 

tms_5_11016.jpgவசிஷ்டரின் வாழ்த்து பெற்ற பின் சிறுவனால் சும்மா இருக்கமுடியுமா.... பகீரத முயற்சிகளுக்குப்பின் கிருஷ்ண விஜயத்தில் முதல் வாய்ப்பு. சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் 1950 ம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரலில் ஒலித்த முதல்பாடல். (ஆனால் பாடல் பதிவுவானது 1946ம் ஆண்டு. நான்கு ஆண்டு இடைவெளிக்குப்பின்னரே படம் வெளியானது). அன்றுமுதல் அரை நுாற்றாண்டுக்காலம் தமிழர்கள் அவரது குரலை ஒருநாளும் கேட்காமல்  உறங்கிப்போயிருக்கமாட்டார்கள்; இனி உறங்கவும் முடியாது. 

தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி என மளமளவென வாய்ப்புகள். மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாக பாடிய 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் டி.எம்.எஸ்ஸை கொண்டுசேர்த்தது. அதுமுதல் திரையுலகில் டி.எம்.எஸ் ராஜ்ஜியம்தான். திரையுலகில் 10 ஆயிரம் பாடல்கள், சில நுாறு மேடைகள், மூவாயிரம் பக்திப்பாடல்கள் என தன் சாதனையை பதிவுசெய்தார். 

மந்திரிகுமாரி படத்தில் அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே என்ற பாடலுக்கு சிங்காரம் என்ற துணைநடிகருக்கு பாடிய சௌந்தரராஜன், எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வாழ்வில் தவிர்க்கவியலாதவராக ஆனபின்னாலும் பந்தா இல்லாமல்தான் திரையுலகில் பவனிவந்தார். “இவருக்குதான் பாடுவேன்... இவருக்கு பாட முடியாது” என சொன்னதில்லை. யாருக்கு பாடினாலும் ஒரு ஒருவிஷயத்தில் மட்டுமே பிடிவாதம் பிடிப்பார். அது, பாடலின் சுவைக்காக ஸ்ருதி விலகி பாடமுடியாது என்பதே! 

லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னாலும் ஸ்ருதி விலகி பாடச்சொன்னால் பாடமாட்டார் அதுதான் டி.எம்.எஸ்! - இது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் பாராட்டு. 

எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல... அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.

குரல் வளம் இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத பாடகர்களில் தனித்துவமாக பாடல்களை பாடியவர் என்பதே திரையிசை வரலாற்றில் டி.எம்.எஸ் விட்டுச்சென்ற தடம்.

உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்... ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு  கண்டத்திலிருந்து  சில ஃபார்முலாவில் பாடி அசரடிப்பார். இப்படி தனித்துவம் மிக்கவர் டி.எம்.எஸ். பாடலின் வரிகளை இசையமைப்பாளர் நோட்ஸ்க்கு தக்கபடி பாடிவிட்டு சென்றுவிடுவதுமட்டுமல்ல ஒரு பாடகரின் பணி என்பதற்கு உதாரணம் டி.எம்.எஸ். 

டி.எம்.எஸ்

உயர்ந்த மனிதன் படத்தில் நடுத்தர வயதை கடந்த கதாநாயகன் தன் பால்ய வயது நினைவுகளை பின்னோக்கி பார்த்தபடி பாடும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே பாடல்  காட்சியில் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குனர் காட்சியை சித்தரித்திருந்தார். காட்சிக்கு உயிரூட்ட  ரிக்கார்டிங் அறையில் குறிப்பிட்ட வரிகளை பாடும் முன் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சி தத்ரூபமாக பொருந்தி பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.

கண் புருவத்திலும் தன் நடிப்பை வெளிக்காட்டும் சிவாஜியையே கூட சமயங்களில் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் டி.எம்.எஸ். சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற “யார் அந்த நிலவு“ பாடல் ரெக்கார்டிங் முடிந்து படப்பிடிப்புக்காக சிவாஜிக்கு தகவல் போனது. நடிக்க வந்த சிவாஜி பாடலைக் கேட்டுவிட்டு சற்று மெனமாகிவிட்டார். அருகிலிருந்து இயக்குனர். “என்னண்ணா ஏதாவது உடம்பு பிரச்னையா... இன்னொரு நாள் படப்பிடிப்பை தள்ளிவைக்கட்டுமா என்றாராம். “வேண்டாம் கொஞ்சம் டயம் கொடு. அண்ணன் இந்த பாடலில் பிய்ச்சி உதறியிருக்காரு. கிட்டதட்ட எனக்கு சவால் கொடுத்திருக்காரு. அவ்வளவு சாதாரணமான இதுக்கு வாயசைச்சிடமுடியாது” என டேப் ரிக்கார்டரை எடுத்துச்சென்று சிலமுறை ரிகர்சல் பார்த்தபின்னரே நடித்துக்கொடுத்தாராம். அதுதான் டி.எம்.எஸ்.

மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம் விதிவிலக்கல்ல. திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ் தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுவார். 

டி.எம்.எஸ்

டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி, நான் உட்பட அரசியலில் பங்கெடுத்த நடிகர்களின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; அரசியல் வாழ்க்கையிலும் டி.எம்.எஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஆம்... தேர்தல் பிரசாரங்களுக்கு நாங்கள் செல்லும் இடங்களில் எத்தனை மணிநேரங்கள் நாங்கள் தாமதமாக சென்றாலும் மக்களை காத்திருக்கச்செய்தது, எங்களுக்காக அவர் குரல் கொடுத்து பாடிய பாடல்கள்தான். இப்படி எங்கள் அரசியல்வாழ்விலும் அவர் பங்கு முக்கியமானது" என வெளிப்படையாக சொன்னார் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இது நிதர்சனமும் கூட.

ஆனால் தன்னால் பயனடைந்த கதாநாயகர்கள் பின்னாளில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தபோதுகூட அவர்களின் சிறு பரிந்துரைக்கு கூட சென்று பல் இளிக்காத பண்பாளராக இறுதிவரை திகழ்ந்தார் டி.எம்.எஸ். 

கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார். அருணகிரிநாதர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை புகழ்ந்து “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடலை பாடியிருந்தார். தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ் இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட அவரது பையன்களில் ஒருவர், “அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா” என கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ். 
“வடநாட்டுக்கு ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என ஒரு முறை டி.எம்.எஸ் குறித்து சிலாகித்த வாலி, கர்நாடக பாடகர்களே கூட சமயங்களில் சுருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை இசைஞானம்” என புகழ்ந்தார். 

டி.எம்.எஸ்தெலுங்கு படம் ஒன்றின் பாடல் பதிவின்போது 'கிருஷ்ணா மனமிரங்கி வந்து என்னை காப்பாற்று' என்ற பொருள்படும் தெலுங்கு வரிகளை பாடினார். அந்த வரிகளை பாடுகிறபோடு உச்சஸ்தாயில் அதிகாரமாய் தெரிந்தது. “உதவி கேட்கிற ஒருவனின் குரல் இறைஞ்சுவதுபோல்தான் இருக்கவேண்டும். அதிகாரக்குரலில் இருப்பது முரண்” என பாட மறுத்தார் டி.எம்.எஸ். இத்தனைக்கும் இசையமைப்பாளர் அன்று பிரபலம். இசையமைப்பாளர் தயவு இல்லையென்றால் தொழிலில் நீடிக்கமுடியாது என்றாலும் அத்தனை துணிச்சலாக பாட மறுத்தவர் டி.எம்.எஸ். 

டி.எம்.சௌந்தரராஜனுக்கு மத்திய அரசின் கவுரவம்போன்றெ நிரந்தர புகழ்தருகிறது இன்னொரு முயற்சி. ஆம் அவரது வாழ்க்கை வரலாற்றுத்தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இமயத்துடன் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இத்தொடர் ஓர் வழக்கமான முயற்சி அல்ல; அவரது வாழும்காலத்திலேயே அவரையே கொண்டு அவர் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகள், இடங்கள், அவரது திரையுல சாதனைகள், மற்றும் 3 தலைமுறை சினிமா உலக ஆளுமைகளுடன் அவரை உரையாட வைத்தும் கிட்டதட்ட 12 ஆண்டுகள் உழைப்பின் பலனாய் குறிஞ்சி மலராய் மலர்ந்திருக்கிறது. 

அடையாறு திரைப்படக்கல்லுாரியின் முன்னாள் மாணவர் டி.விஜயராஜ் இதனை இயக்கியுள்ளார். இவர் ஏ.சி திருலோக்சந்தரின் முத்துக்கள் தொலைக்காட்சித்தொடரில் பணியாற்றியவர். 

“ஆபாவாணனின் தாய்நாடு படத்திற்கு பாட வந்தபோது டி.எம்.எஸ் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரைப்பற்றி பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். எப்பேர்ப்பட்ட சாதனையாளரை நாம் கொண்டாடாமல் இருக்கிறொம் என உணர்ந்தேன். அதுவரை வெறும் ரசிகராக இருந்த நான் அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணமாக்கவேண்டும் என முடிவெடுத்தேன். ஒருநாள் அவரை வீட்டில் சந்தித்து இதுபற்றி சொன்னபோது, சத்தமாக சிரித்தவர், “நான் அப்படி ஒன்றும் சாதனை செய்யலையேப்பா” என மறுத்துவிட்டார். பலநாட்கள் தொடர்ந்து வற்புறுத்தலுக்குப்பின்னர்தான் ஒப்புக்கொண்டார். மிகப்பெரிய ஆளுமையின்  வாழ்க்கையை பதிவுசெய்கிறோம் என்பதால் சிறப்பானதொரு தொடராக இருக்கவேண்டும என ஆரம்பத்திலேயே திட்டமிட்டுக்கொண்டேன்.

கடந்த 2001 ம் ஆண்டு  மதுரையில் அவரது பிறந்த வீட்டில் முதற்காட்சி எடுக்கப்பட்டது. அவரது கச்சேரிகள், மற்ற பொதுநிகழ்ச்சிகளுக்கு இடையுறு இன்றி படப்பிடிப்பை வைத்துக்கொண்டேன். டி.எம்.எஸ் பிறந்த வீடு முதல் அவர் இளம்வயதில் கச்சேரிகள் செய்த இடங்கள் முதல் பாடல் பதிவான கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ, சேலம் மாடர்ன் தியெட்டர்ஸ், பட்ஷிராஜா ஸ்டுடியோ, சென்னையில் அவர்கள் வாழ்ந்த இடங்கள், முத்தாய்ப்பாக கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆரின் துணைவியார் சதானந்தவதியின் குழல்மன்னம்  வீடு, திரையுலக வாழ்வில் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய இடங்கள் என அத்தனை இடங்களுக்கும் அவரை அழைத்துச்சென்று அவரை பேட்டி எடுத்து பதிவு செய்திருக்கிறோம். மும்பையில் லதா மங்கேஷ்கர்,  ஆந்திராவில் நாகேஷ்வரராவ், தமிழகத்தில் சிவாஜி குடும்பத்தினர், எஸ்.எஸ்.ஆர் , ரவிச்சந்திரன்,ரஜினி, துவங்கி 3 தலைமுறை கலைஞர்கள் என திரையுலகின் அத்தனை ஆளுமைகளுடனும் அவரை சந்தித்து உரையாட வைத்து பதிவு செய்திருக்கிறோம். 

டி.எம்.எஸ்  உடன் முரண்படும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடனும் இதில் காரசார விவாதம் செய்திருக்கிறார் டி.எம்.எஸ். கல்லுாரி மாணவர்களுடன் அவர் தன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்கிறார். இந்த வகையில் இந்த தொடர் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாமல் திரையுலக வரலாற்று ஆவணமாகவும் இருக்கும். டி.எம்.எஸ் பாடி தற்போது கிடைக்காத பல அரிய பாடல்களை மலேஷியாவில் உள்ள கொலம்பியா நிறுவனத்திடம் இருந்து சேகரித்து இணைத்துள்ளோம். 150 வாரங்களுக்கு ஒளிபரப்பும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 2001ம் ஆண்டு எடுக்கத்துவங்கி  2013 ம் ஆண்டுவரை சுமார் 12 ஆண்டுகள் இதற்கென உழைத்திருக்கிறோம். சுமார் 60 லட்ச ரூபாய் வரை செலவானது.

டி.எம்.எஸ்

சமயங்களில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கநேர்ந்தபோது இந்த திட்டத்தை கைவிடும்படி பலர் யோசனை சொன்னார்கள். ஆனால் தளராமல் போராடி எடுத்து முடித்திருக்கிறேன். பணம், பொருள் இத்தனை வருட உழைப்பும் அதனால் ஏற்பட்ட களைப்பையும் தொடரைப்பார்த்து மக்கள் அளிக்கும் பாராட்டு போக்கிவிடும். படைப்பாளி வேறு என்ன எதிர்பார்ப்பான்” - இறைவனுக்கு படையல் வைத்த தொண்டனாய் முகம் மலர சொல்கிறார் டி.விஜயராஜ்.

“கோவை பட்ஷிராஜா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்த சென்றபோது அதன் இப்போதைய உரிமையாளர் அனுமதி தரவில்லை. வற்புறுத்தலுக்குப்பின்னர் அனுமதி கிடைத்தது. அப்போது அங்கிருந்த ஸ்டுடியோ சின்னமான கழகுசிலை உடைபட்டு கிடந்ததை கண்டு டி.எம்.எஸ் அழுதுவிட்டார். அதை உரிமையாளர் கண்டுகொண்டார். மறுதினம் நாங்கள் படப்பிடிப்புக்கு சென்றபோது உடைந்த சிலையையும் காணவில்லை. காட்சி உயிரோட்டமாக இருக்கும் என நினைத்து சென்ற எங்களுக்கு அதிர்ச்சி. கொஞ்சநேரத்தில் உரிமையாளர் வந்தார். அங்கிருந்த புல்கட்டுகளை விலக்கி காண்பித்தார். ஆம் பல ஆயிரங்கள் செலவில் ஒரே இரவில் அதை பழையபடி புதிததாக செய்து அங்கு வைத்திருக்கிறார். டி.எம்.எஸ் ஆனந்த கண்ணீர் விட்டார்.

டி.எம்.எஸ்

படப்பிடிப்பின்போது இப்படி பல நெகிழ்வான அனுபவங்கள். இந்த தொடருக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது நாங்கள் செய்யவேண்டிய வேலைகளை நீங்கள் செய்கிறீர்கள் என அவர் என்னைப்பாராட்டியதை மறக்கமுடியாது. அப்போது கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவில் அவரது தாயார் முதன்முதலாக மேக்கப் டெஸ்ட்டுக்காக எடுத்த படங்களை சேகரித்து வந்து அவரிடம் காண்பித்தோம். நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னார் ஜெயலலிதா. டி.எம்.எஸ். அவர்களுடன் தான் பாடிய பாடல்களையும் தன் பரபரப்பான அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் பகிர்ந்துகொண்டார்” என்கிறார் விஜயராஜ். 

ஓய்வுநாட்களில் தானே சமைத்து தன் குடும்பத்தினருக்கு பரிமாறும் சமையற்கலைஞர் நிபுணர் டி.எம்.எஸ், தான் இசையமைத்த படத்தில் தன் சொந்த மகன்களுக்கு வாய்ப்பு வழங்காமல் பாடலின் சுவைக்காக இன்னொரு பிரபல பாடகரின் பாட வைத்த இசையமைப்பாளர் டி.எம்.எஸ் என ஆச்சர்யமான அவரது பல பரிமாணங்களை இந்த தொடர் தொட்டுச்செல்கிறது. 

கடந்த ஜனவரிமாதம் டி.எம்.சௌந்தரராஜனுக்கு மத்திய அரசு தலை வெளியிட்டு சிறப்பு செய்தது.  இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த 10 ஆளுமைகளுக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்புசேர்த்த இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய கலைஞர் டி.எம்.எஸ் மட்டுமே. ஏற்கனவே மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுபெற்றவர் டி.எம்.எஸ்.

இசையுலகத்தில் டி.எம்.எஸ் புகழ் என்றும் நிலைக்கும்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச்.24, 1996)

காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே நாளில் டாக்டர் ராபர்ட் காக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகினை வியப்பில்

 
 
 
 
உலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச்.24, 1996)
 
காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே நாளில் டாக்டர் ராபர்ட் காக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகினை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவல் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரை கொன்று வந்தது. காக்கின் இந்த கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982-ம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காசநோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24-ம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996-ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1923 - கிரீஸ் குடியரசாகியது.

• 1944 - ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.

• 1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.

• 1998 - இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.

• 1999 - பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

புதைகுழியில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? #HowToEscapeFromQuickSand

புதைமணல்

'மெல்ல திறந்தது கதவு' படம் பார்த்தவர்களுக்குப் புதைகுழி அல்லது புதைமணல் பற்றி தெரிந்திருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அமலாவை தனக்குள் மூழ்கடித்துவிடும் புதைகுழி அல்லது புதைமணல். ஆனால், நிஜத்தில் அதை பார்த்திருக்கிறீர்களா? ஆற்றுப் படுகைக்கு, சில கடற்கரைக்கு அருகில் வசிப்பவர்கள் இதைப் பார்த்திருக்க முடியும். உண்மையில் புதை மணல் என்பது என்ன?

ஆங்கிலத்தில் இதை quicksand என்கிறார்கள். புதைமணல் என்பது நல்ல மணல், களிமண் மற்றும் உப்புத்தண்ணீரின் கலவையே. இதன் மேற்பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டால் இறுகிவிடும். இதில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்பது தெரியாததுதான் நிஜமான பிரச்னை.

புதை மணலில் சிக்கிக்கொண்டால் முதலில் பயப்படக்கூடாது. எந்த பிரச்னையும், காயங்களும் இன்றி அதில் இருந்து தப்பித்து வர முடியும் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதுவே பாதி பிரச்னைகளுக்குத் தீர்வு

புதைமணலில் யாரும் மூழ்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. மனிதர்கள் அதில் மிதக்கவே செய்வார்கள். தண்ணீரைப் போல அல்லாமல், கொஞ்சம் கெட்டியான பொருள் என்பதால் புதைமணலில் மனிதர்கள் இடுப்பு வரை மட்டுமே மூழ்க முடியும்.

புதைமணலில் மீது யாராவது விழுந்துவிட்டால் அடியில் இருக்கும் நல்ல மணல், களிமண் மற்றும் உப்புத்தண்ணீர் கெட்டியாக மாறிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தி கூடும். அதனால், அந்த இறுக்கத்தில் இருந்து வெளியே வருவது சாத்தியம் இல்லை. 

புதைமணலில் ஆகப்பெரிய ஆபத்து viscosity எனப்படும் பாகுத்தண்மை தான். எந்த சலனமும் இல்லாமல் இருக்கும் நேரத்தைவிட, அதன் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டவுடன் புதைமணலின் பாகுத்தண்மை அதிகரிக்கும். அதனால், புதைமணலில் விழுந்த பொருளால் நகர முடியாமல் போகும்.

புதைகுழி

இந்த ஆபத்தில் இருந்து வெளியேறுவது சாத்தியமே. முதலில், புதைமணலில் சிக்கிக்கொண்டவரை வெளியே இருப்பவர்கள் கைப்பிடித்து தூக்குவது கூடாது. அதுதான் காயத்துக்கு உள்ளாக்கும். அதற்குப் பதிலாக, புதைமணலில் சிக்கிக்கொண்டவர் தனது காலை நகர்த்த வேண்டும். சைக்கிள் ஓட்டுவது போல கால்கள் இரண்டையும் அசைக்க வேண்டும்.

கால்களை அசைப்பதால் அந்த இடத்தில் சுற்றியிருக்கும் கெட்டியான மணல் கெட்டித்தன்மை இழக்கும். இதனால் அந்த இடத்துக்குள் தண்ணீர் உள்புகும். கால்களில் காலணி அணிந்திருந்தால் அதை அகற்ற வேண்டும்.

கால்பகுதியில் கெட்டித்தன்மை குறைந்ததும் மெதுவாக முதுகை புதைமணலில் மேல் சாய்க்க வேண்டும். அந்தப் பகுதியில் இதனால் அழுத்தம் அதிகரிக்கும். 

புதைமணல்

பின் கைகளை பின்பக்கமாக அசைத்து நீச்சலடிக்க வேண்டும். backstroke என்பார்களே.. அது போல.. இதனால், மெல்ல புதைமணலில் மாட்டிக்கொண்ட கால்கள் வெளியே வரும். புதைமணலில் மனிதர்கள் மிதப்பார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

புதைமணலில் விட்டு, நல்ல மணற்பரப்புக்கு வந்ததும் எழுந்து விடாமல், படுத்தபடியே நகரவும். முழுவதுமாக திடப்பகுதிக்கு வந்தவுடன் எழுந்திருக்கலாம். 

இந்த வீடியோவை பாருங்கள்...

இப்படித்தான் புதைமணல் செயல்படுகிறது என்றால் உயிரிழப்பு எப்படி நேரும் என்ற சந்தேகம் வரலாம். புதைமணலில் சிக்கிக்கொண்டவர்கள் வெளியே வர முடியாமல் தவிக்கும்போது, பெரிய அலைகளோ அல்லது ஆற்றில் வெள்ளப்பெருக்கோ ஏற்பட்டு அவர்களை அடித்துச் செல்லும். அப்படித்தான் உயிரிழப்பு பல இடங்களில் இதுவரை நடந்திருக்கிறது. மற்றபடி, புதைமணலில் மூழ்கி உயிரிழப்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே நடந்திருக்கின்றன. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் அவசியம். ஏன்?

குழந்தைகளுக்கு


மிழர்கள் குழந்தைகளுக்குத் தமிழில் ஏன் பெயர் வைக்கவேண்டும்? இந்த கேள்வியே சற்று அபத்தமாக தோன்றலாம். ஆனால், இன்றைய சூழல், இந்தக் கேள்வி அவசியமானது என்பதை உணர்த்துகிறது. ஒரு பக்கம் பெயரில் என்ன இருக்கிறது என்று தோன்றினாலும், இன்னொரு பக்கம் பெயர் என்பது நம் அடையாளம் இல்லையா என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது.  


உலகின் தொன்மையான மொழி, உலகில் வாழும் செம்மொழி, சங்கம் வைத்து வளர்த்த மொழி, இயல்-இசை-நாடகம் என மூன்றிலும் வளர்ந்த மொழி என மிகப்பெரிய வரலாறு இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உண்டு.


இப்படி நாம் பெருமைப்பட வேண்டிய சூழலில், இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்று யோசித்துப்பார்த்தால் வேதனையாக தான் இருக்கிறது. தமிழின் சுவை அறியாமல் பிற மொழிகள் மீதான மோகம் இன்னமும் தமிழர்களை விடவில்லை. 


குறிப்பாக ஆங்கில மோகமும், வடமொழி மோகமும் இன்னமும் குறையவில்லை. "ஆங்கிலம் என்பது அறிவல்ல, அது மொழி மட்டும் தான்", "இந்தி தெரியாததால் நாம் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை" என்பதையும் திரும்பத் திரும்ப சொல்லும் அளவுக்கு இங்கே தாழ்வு மனப்பான்மை தமிழர்களிடையே நிலவுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 

 

குழந்தைகளுக்கு

 

தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் வழக்கத்துக்கு வருவோம். குழந்தை பிறக்கப் போகும் சமயத்தில் அல்லது பிறந்தவுடன் உங்கள் நண்பர்களிடம் இருந்து "ஏதாவது நல்ல பெயரா சொல்லுங்களேன்?" என்ற கேள்வியை நீங்கள் கேட்டு இருக்கலாம். நீங்கள் உடனே அவசரப்பட்டு பெயர்களைச் சொல்லிவிட முடியாது. நீங்கள் அடுத்து எந்த எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்கள் என்று கேட்கவேண்டும். ஏனென்றால், ஜோசியக்காரர், "இந்தெந்த  எழுத்தில் வைத்தால் குழந்தை டாப்பாக வரும்!" என்று சொல்லி இருப்பார். அதனால், அந்த எழுத்தில்தான் நீங்களும் சொல்லவேண்டும். சிலர், ஷ,ஸ்ரீ,ஹ  என்று ஆரம்பிக்கிற மாதிரி தமிழ்ப் பெயர் சொல்லுங்க என்று கேட்டு இருக்கிறார்கள். இவை வடமொழி எழுத்துகள் என்ற புரிதல் கூட இங்கே பலருக்கு இருப்பது இல்லை. வடமொழி எழுத்துகளை பெயரில் வைப்பதும், வடமொழி பெயர்களை வைப்பதும் பரவலாக தமிழ்நாட்டில் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கு ஜோசியம், நியூமராலஜி, நேமலாஜி போன்ற நம்பிக்கைகள் துணைப் போகிறது. 

ஷ, ஸ்ரீ, ஹ மட்டுமல்ல, தமிழில் வடமொழி கலப்பு என்பது இன்னும் அதிகம். என் பெயர் "ராஜராஜன்" என்பது கூட தமிழ் கிடையாது. ராஜராஜ சோழன் தமிழ் மன்னன் என்பதால் அதைத் தமிழ்ப்பெயர் என்று நாம் எண்ணுவது இயல்பு. ஆனால், இதுவும் வடமொழி கலந்த பெயர் தான். ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி வர்மன். இப்படி, நம்மை அறியாமலே நாம் தமிழ்ப்பெயர்களை விட்டு விலகி இருக்கிறோம். 

கடந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள், தனித்தமிழ் இயக்கங்கள் மூலம் தமிழ்ப்பெயர்கள் மீதான கவனம் அதிகரித்தது என்று சொல்லலாம். இந்த இயக்கங்களின் தாக்கத்தால் வீடுகளில் தனித்தமிழ் பெயர்கள் அதிகரித்தது. நம் முந்தைய தலைமுறையில் பல குடும்பங்களில் தேடித்தேடி தமிழ்பெயர்களை வைத்து இருப்பதை பார்க்கலாம். அவர்களுக்கு அதில் ஒரு பெருமிதமும், கர்வமும் கூட இருக்கும். இந்தப் பெயர்களில் கூட இருவகைகளை பார்க்கலாம். மத அடையாளத்துடன் வைக்கப்படும் பெயர்கள், மத அடையாளம் இல்லாமல் வைக்கப்படும் பெயர்கள் என்று. மதங்களைக் கடந்தும் தமிழை நேசித்து தமிழ்ப் பெயர்களை வைத்தார்கள். இன்பன், இனியன், அறிவழகன், தமிழரசி, தமிழரசன், கயல்விழி, மலர்விழி, சுடர்க்கொடி என கவித்துவத்துடன் தனித்தமிழ் பெயர்கள் போன தலைமுறையில் அதிகமாக இருந்தது. 


பெயர்களில் தந்தை பெரியார் ஏற்படுத்திய தாக்கமும் குறிப்பிடத்தகுந்தது. அவர் தனித்தமிழ் என்ற பெயர்களைத் தாண்டி, பெயரில் இருக்கும் அரசியலைப் பார்த்தார். பெயருக்கு பின்னால் இருக்கும் சாதியை நீக்க வேண்டும் என்று போராடி வென்றவர் பெரியார். அவர், இந்த பெயர்களில் இருக்கும் புனிதங்களைக்கூட உடைத்தார். ரஸ்யா, மாஸ்க்கோ போன்ற பெயர்களை போன தலைமுறையினரிடம் நீங்கள் நிறைய பார்க்கலாம். இது தந்தை பெரியார் அவர்களின் தாக்கத்தினால் வைக்கப்பட்ட பெயர்கள். தனித்தமிழ் பெயர்கள் என்பதைத் தாண்டி, பெயரிலேயே புரட்சி வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். இந்த வரிசையில், இன்குலாப், இங்கர்சால், கார்கி, லெனின், மார்க்ஸ் போன்ற பெயர்களும், இந்திய சுதந்திர போராட்டத்தின் தாக்கத்தினால் காந்தி, நேரு போன்ற பெயர்களும் அதிகரித்தது. முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் பலருக்கு பென்னிகுக் என்ற பெயர் வைக்கப்பட்டதும் வரலாறு. தமிழர்கள் நன்றி உணர்வு மிகுந்தவர்கள் என்பதற்கும், மொழியை வெறும் அழகுணர்ச்சியுடன் மட்டும் பார்க்காமல் அறிவு சார்ந்தும் பார்ப்பவர்கள் என்பதற்கும் மேற்சொன்ன பெயர்கள் சில எடுத்துக்காட்டுகளே. 

வடமொழி மோகம் அதிகரித்துவிட்ட இந்த காலத்திலும் தனித்தமிழ் பெயர்களை வைக்கவேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களிடம் இருப்பது ஆரோக்கியமானது. இன்றும், நல்ல தனித்தமிழ் பெயர்களை வைக்கவேண்டும் என்று தேடுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆம்பல், யாழினி, கவின், வெண்பா, நவிரா, ஆதிரை, ஆதிரன் என இனிமையான பெயர்கள் வைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஆனால், எண்ணிக்கை அளவில் வடமொழி பெயர்கள்தான் இன்னமும் அதிகமாக இருக்கிறது.

தனித்தமிழ் பெயர்கள் தரும் இனிமைக்கு மாற்றே இல்லை. ஆனாலும், தமிழ்ப் பெயர்களைச் சொல்லுங்கள் என நண்பர்கள் கேட்கும் போது கொஞ்சம் தடுமாறத்தான் வேண்டி இருக்கிறது. பெயர் தமிழாகவும் இருக்கவேண்டும், அதேவேளையில் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தனித்தமிழ் பெயர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாராட்டப்படவேண்டியது, முக்கியமானது என்பது ஒருபுறமிருக்க, இதற்கு அடுத்த நிலை ஒன்று இருப்பதாக  தோன்றுகிறது. அது என்னவென்றால், நம்மிடையே அறிமுகமான, நாம் படித்த வரலாற்றில் இருந்தும், காப்பியங்களில் இருந்தும், இலக்கியங்களில் இருந்தும் எடுக்கப்படும் பெயர்கள். இவை தூயத்தமிழ்ப் பெயராக இல்லாவிட்டாலும். இந்த பெயர்களுக்கு ஒரு தனி வலிமை இருக்கிறது. 

சங்கமித்ரா என்ற பெயர் தூயத்தமிழ் இல்லை. ஆனால், அந்த பெயரில் ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இந்தப்பெயருக்கும் தமிழின் ஐம்பெரும் காப்பியமான மணிமேகலைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதேப்போல, இன்னொரு பெயர் சொல்லவேண்டுமென்றால், சித்தார்த்தன் என்ற பெயரைச் சொல்லலாம். சித்தார்த்தன் என்ற பெயர் வசீகரமானது. அந்தப் பெயர் ஆழமானதும்கூட. புத்தர் நம் நாட்டின் புரட்சிகர ஆன்மிகத் தலைவர். அவரின் இயற்பெயர் என்பதாலே இந்தப் பெயருக்கு ஒரு தனிச் சிறப்பு.


குழந்தைகளுக்கு அர்த்தமே தெரியாத "ஏதோ" ஒரு பெயருக்குப் பதில், தனித்தமிழில் பெயர் வைத்து தமிழின் இனிமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம். அல்லது,  இம்மாதிரி உலகப்பெயர்களை, காப்பியப் பெயர்களை, இந்தியப் பெயர்களை வைக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது? என்று ஒதுக்காமல் அதை நம் அடையாளமாகவும், அதில் இருக்கும் அரசியலையும் புரிந்துகொள்ளவேண்டும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

படுக்கை பியானோ... ரேடியோ தொப்பி... பூச்சி இழுக்கும் வண்டி..! #VintageInventions

இந்த உலகைப் படிப்படியாக முன்னேற்றிக் கொண்டு வந்தது அறிவியல் தான். அறிவியல் இல்லையேல் இந்த அகிலம்...இருங்க, இருங்க... இவ்ளோ சீரியஸ் ஆன விஷயமெல்லாம் இல்ல பாஸ். சும்மா கூலா,  அப்படியே திரும்பிப் பார்க்கும் போது சில கலாட்டாவான பழைய விஷயங்கள் கண்லபட்டது. இன்னிக்கு தமிழ்நாட்டோட டாக்கே ஆர்கே நகர் தொப்பிய பத்தி தான் இருக்கு. அந்தத் தொப்பில தொடங்குன தேடல்,  எங்க கொண்டு போய்விட்ருக்குங்குறத கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுக்குங்க :

ஆர்கே நகர் தொப்பி அமெரிக்கத் தொப்பி


ஃபுல் பேஸ் ஸ்விம்மிங் மாஸ்க்  (Full Face Swimming Mask):

பதறாதீங்க... பதறாதீங்க... முகமூடிக்குப் பின்னாடி இருக்குறது அழகான முகம் தான். கருப்பை வெறுப்பாகப் பார்த்த காலகட்டம். சிகப்பை சிறப்பாக பார்த்த காலகட்டம். நடக்கும்போது வேணா ஜெனிபர் டீச்சர் மாதிரி குடை பிடிச்சு, வெயில் படாம பார்த்துக்கலாம். ஆனா, நீச்சல் குளத்திலயோ, கடற்கரையிலயோ குளிக்கும் போது கலர் கொஞ்சம் கருத்துட்டாக் கூட " ஐயோ... ஐயையோ"ன்னு பதறிய பெண்களுக்காகவே பிரத்யேகமாக கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த "ஃபுல் பேஸ் ஸ்விம்மிங் மாஸ்க்" . இந்தக் கொடுமைய தட்டிக் கேட்க ஆளே இல்லையான்னு எல்லோரும் காத்திட்டிருந்த போது தான், ஒரு புண்ணியவான் சன் ஸ்கிரீன் லோஷனைக் கண்டுபிடித்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

ஆர்கே நகர் தொப்பி, அமெரிக்கத் தொப்பி

பேபி கேஜ் (Baby Cage) :

"குழந்தைகளுக்கு வெயில் நல்லது. ஒரு நாளைக்கு கொஞ்ச நேரமாவது வெயில்ல குழந்தைய காட்டுங்க... இல்ல குழந்தைக்கு வெயில காட்டுங்க" இப்படி ஏதோ ஒரு லண்டன் டாக்டர் சொன்னதன் விளைவா விளைஞ்சது தான் இந்த பேபி கேஜ். 1930கள்ல வீடுகள் நிறைஞ்சிருக்கும், லண்டன் வீதிகள்ல நடந்தீங்கன்னா, " கியா...மியா...ஹா...ஹி...ஹூ...ஷூ...ஊ"ன்னு ஏக சத்தங்கள் கேட்கும். அப்படியே தலைய கொஞ்சம் நிமிர்த்திப் பார்த்தா வீட்டு சுவற்றுக்கு வெளியில கூண்டுகள் இருக்கும். அந்தக் கூண்டுகளுக்குள் இந்த "சுட்டிக் குழந்தைங்க" இருக்கும். அந்த சமயத்துல "பேபி கேஜ்" பெரிய வியாபார பொருளா இருந்திருக்கு. 

தொட்டில்          ஆர்கே நகர் தொப்பி, அமெரிக்கத் தொப்பி

கோன் மாஸ்க் (Cone Mask):

வெயிலடிச்சா தான் மேக்-அப் கலையுமா என்ன?, பனியடிச்சாலும் மேக்-அப் கலையத் தான் செய்யும். 1930கள்ல கனடாவுல பிரபலமாக இருந்தது இந்த "கோன் மாஸ்க்". அதிகப்படியான பனிப் பொழிவின் காரணமாக பெண்கள் வெளியே போகும் போது அவங்களுடைய மேக்-அப் கலையறத தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அரிய கண்டுபிடிப்பு.

கனடா கோன் மாஸ்க் பனிப் பொழிவு

குத்தும் முள் கவசம்:

அமெரிக்காவின் ரசல் ஓக்ஸிற்கு நாடி, நரம்பு, எலும்பு, காது, வாய், மூக்கு, கண், நெற்றி, விரல்கள்... என எல்லாத்திலயும் ஏதாவது புதுசா கண்டுபிடிக்கணுங்குற வெறி ஏகத்துக்கும் ஏறியிருந்தது. தன்னுடைய கண்டுபிடிப்புகளால உலக சமூகத்திற்கே புது ரத்தம் பாய்ச்சிட முடியும்ன்னு நம்பினார். நாம் கூட்டமான இடத்துல இருக்கும் போது, நம்ம மேல வேற ஒருத்தர் இடிக்கும் போது அவங்கள ஊசி வச்சு அப்படியே குத்துணும் போல இருக்கும்ல?... அந்த வெறிய தீர்த்துக்க இவரு கண்டுபிடிச்ச அந்த முள் கவசம் வேற லெவல். 
"காதல் கொண்டேன்" தனுஷ் கணக்கா நூடுல்ஸ் சாப்பிட கஷ்டப்படாம இருக்க ஒரு கண்டுபிடிப்பு, தலைக்குக் குளிர்ச்சி கொடுக்க ஒரு கண்டுபிடிப்புன்னு... இவர் ஒரு "தி மாஸ் சயின்டிஸ்ட்".

crazy inventions

பூச்சிகள் இழுக்கும் வண்டிகள்:

ராய் ஹெக்லர். இந்த நூற்றாண்டின் அவதார புருஷன். அறிவியலின் 20000.000 வெர்ஷன். சின்ன, சின்ன உண்ணி பூச்சிகளை வைத்து சர்க்கஸ் நடத்தியவர். அந்தப் பூச்சிகள் இழுக்கும் வண்டிகளை 1900த்திலேயே கண்டுபிடித்தது அறிவியலின் ஆகப்பெரும் சாதனை.

தொப்பி

 படுக்கை பியானோ:

பிரிட்டனில் 1935ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர் யாரென்று தெரியவில்லை. பொதுவாக, ஒரு ஸ்டூலில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தபடியே பியானோ வாசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இது அட்டகாச கண்டுபிடிப்பாக இருந்தது. 

படுக்கை பியானோ

நகரும் வீடுகள்:

நம்ம இந்தியாவுல தான் "கேரவன்" என்றாலே ஏதோ ஹீரோ, ஹீரோயின்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டது மாதிரி இருக்கு. ஆனா, வெளிநாடுகள்ல அது ஒரு தனி கம்யூனிட்டி. அது ஒரு வாழ்க்கை முறையாகவே இருக்கு. அப்படி, அந்தக் காலத்துல கேரவன்களோட முன்னோடிகளா இருந்தது இந்த நகரும் வீடுகள். இது தான் பிற்காலத்துல ரஜினி நடிச்ச 'கழுகு' படத்துல வந்தது என்று சொன்னால், அது மிகையாகா...து

நகரும் வீடுகள்

ரேடியோ தொப்பி  (Radio Hat):

இது மார்ச் மாதம். தமிழ்நாட்டளவுல இன்னிக்கு புல் ட்ரெண்டிங்க்ல இருக்குறது தொப்பி தான். அப்படியே ஆர்.கே. நகர் தொப்பிலருந்து டைம் மெஷின்ல டிராவல் செய்து 1949 அமெரிக்காவுக்குப் போனீங்கன்னா... அங்கயும் தொப்பி தான் ட்ரெண்டிங். போற இடத்தில எல்லாம் பாட்டுக் கேக்கணும்ன்னு ஆசைப்பட்ட இசை வெறியர்களுக்காக உருவாக்கபப்ட்டது தான் இந்த ரேடியோ தொப்பி. சிகப்பு, மஞ்சள், பிங்க், ஆரஞ்ச் என பல வண்ணங்கள்ல கிடைச்ச இதோட விலை 7 டாலர். பணக்காரர்களுக்கானதா மட்டுமே இருந்த ரேடியோ தொப்பி, சேல்ஸ்ல செல்ஃப் எடுக்காம வந்த வேகத்திலேயே, காணாமப் போயிடுச்சு. ( ஐயையோ... அமெரிக்க தொப்பியோட முடிவுக்கும், ஆர்.கே.நகர் தொப்பியோட முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ...) 

அமெரிக்கத் தொப்பி    thoppi

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பீட்டர் ஜோஸஃப் வில்லியம் டீபை

 
 
 
sci_3146896f.jpg
 
 
 

நோபல் பரிசு பெற்ற டச்சு அறிவியலாளர்

டச்சு நாட்டைச் சேர்ந்த அறிவியலாளரும் வேதியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான பீட்டர் ஜோஸஃப் வில்லியம் டீபை (Peter Joseph William Debye) பிறந்த தினம் இன்று (மார்ச் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* நெதர்லாந்தில் மாஸ்ட்ரிச்ட் என்ற இடத்தில் பிறந்தார் (1884). பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, 1901-ல் ஜெர் மனியில் ஆக்கென் தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தில் சேர்ந்த இவர் மின் பொறியியலில் பட்டம் பெற்றார்.

* சுழல் மின்னோட்டப் பிரச்சினைக்கான கணித அடிப்படையிலான தீர்வு தொடர் பான கட்டுரையை வெளியிட்டார். அங்கே பணியாற்றிய பிரபல இயற் பியல் விஞ்ஞானி சோமர்ஃபெல்ட் தனது முக்கிய கண்டுபிடிப்பே தன் மாணவரான இவர்தான் என்று பாராட்டியுள்ளார்.

* 1908-ல் கதிர்வீச்சு அழுத்தம் குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். 1910-ல் பிளாங்க் கதிர்வீச்சு சூத்திரத்தைத் தானே கண்டறிந்த முறை மூலம் விளக்கினார். 1911-ல் சூரிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவியேற்றார்.

* சமச்சீரற்ற மூலக்கூறுகளில் மின்னேற்ற விநியோகத்துக்கு இருமுனை திருப்புத்திறன் (dipole moment) என்ற கருத்துருவை 1912-ல் பயன்படுத்தினார். வெப்பநிலைக்கு இருமுனை திருப்புத் திறன், மின்கடவாப் பொருள் மாறிலிகள் (dielectric constant) தொடர்பான சமன்பாடுகளை மேம்படுத்தினார். இதனால் மூலக்கூறு இருமுனை திருப்புத் திறன் அலகுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

* நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்புக் கோட்பாட்டை விரிவுபடுத்திய இவர், நீள்வட்டச் சுற்றுப் பாதைகளை அறிமுகப்படுத்தினார். படிகத் திடப்பொருட்களில் எக்ஸ்-கதிர் சிதறல் உருபடிமங்களின் மீது வெப்பநிலையின் தாக்கத்தை பால் ஷெர்ரருடன் இணைந்து கணக்கிட்டார்.

* தனது ஆராய்ச்சிகளுக்காக மிகச் சிறந்த வசதிகள் கொண்ட சோதனைக்கூடம், சிறந்த உபகரணங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால்தான் பெர்லின் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் பேராசிரியராகவும் இப்போது மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்ட்டியூட் என்று குறிப்பிடப்படும் கெய்சர் வில்ஹம் இன்ஸ்டிடியூட்டில் இயக்குநராகவும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த உடனேயே அங்கு சென்றார்.

* இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜெர்மனியில் பணியைத் தொடர முடியாமல் போனதால் இத்தாலி சென்றார். அங்கு சில காலம் பணியாற்றிய பின் விரிவுரைகள் ஆற்றுமாறு கார்னெல் பல்கலைக்கழகம் விடுத்த அழைப்பை ஏற்று 1940-ல் அமெரிக்கா சென்றார்.

* மூலக்கூறுகளின் அமைப்பு குறித்த இவரது பங்களிப்புகளுக்காகவும் குறிப்பாக மின் இருமுனையத் திருப்புத்திறன் (Electric dipole moment) மற்றும் எக்ஸ்-கதிரில் சிதறலின் சிறப்பான பங்களிப்புகளுக்காகவும் 1936-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1946-ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.

* டீபை நீளம், வெப்பநிலையுடன் திண்மங்களின் வெப்பக் கோட்பாடு, டீபை அலகு, டீபை அதிர்வெண், டீபை சார்பு உள்ளிட்ட பல இவரது பெயரால் வழங்கப்படுகின்றன. செயற்கை ரப்பர் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டார். பாலிமர்களின் பண்புகளின் ஒளிச் சிதறல்களில் மூலக்கூறு எடையைத் தீர்மானித்தார்.

* ராம்ஃபோர்ட் பதக்கம், ஃபிராக்ளின் பதக்கம், ப்ரீஸ்ட்லி பதக்கம், தேசிய அறிவியல் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இயற்பியலில் பல்வேறு களங்களில், குறிப்பாக மூலக்கூறு கட்டமைப்பு குறித்த புரிதலை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய பீட்டர் ஜோஸஃப் வில்லியம் டீபை 1966-ம் ஆண்டு 82-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலகம் முழுவதும் வாழும் குழந்தைகளின் வேறுபட்ட வாழ்க்கையை சித்தரிக்கும் தத்துருவமான புகைப்படங்கள்

 

உலகம் முழுவதும் வாழும் குழந்தைகளின் வேறுபட்ட வாழ்க்கையை சித்தரிக்கும் தத்துருவமான புகைப்படங்கள்

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: மார்ச் 24 :ஜேர்மன்விங்ஸ் விமானம் அல்ப்ஸ் மலையில் மோதியதால் 150 பேர் பலி

2015: பயணிகள் விமானமொன்றை துணை விமானி அல்ப்ஸ் மலையில் மோதி நொறுங்கச் செய்ததால் 150 பேர் பலி


மார்ச் 24

1707: பிரித்தானிய, ஸ்கொட்லாந்து இராச்சியங்களை இணைத்து பெரிய பிரித்தானிய இராச்சியம் உத்தியோகபூர்வமாக  ஸ்தாபிக்கப்பட்டது.

1837:  கனடாவில் கறுப்பின ஆண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

1878 : பிரித்தானியக் கப்பல் எம்.எம்.எஸ். யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.

1882 : காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ரொபர்ட் கோக் அறிவித்தார்.

1923 : கிறீஸ் குடியரசாகியது.

1944 : ரோமில் 335 இத்தாலியப் பொதுமக்களை ஜேர்மனியப் படைகள்  படுகொலை செய்தன.

1944 :- இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் ஜேர்மனிய சிறையில் இருந்து 76 போர்க் கைதிகள் தப்பித்தனர்.

1947 : மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.

1965 : டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

Rescue workers work on debris of the Germanwings jet at the crash site near Seyne-les-Alpes, France, Thursday, March 26, 2015. The co-pilot of the Germanwings jet barricaded himself in the cockpit and intentionally rammed the plane full speed into the French Alps, ignoring the captains frantic pounding on the cockpit door and the screams of terror from passengers, a prosecutor said Thursday. In a split second, he killed all 150 people aboard the plane. (AP Photo/Laurent Cipriani)

1965 : நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.

1972 : வட அயர்லாந்தில் ஐக்கிய இராச்சியம்  தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது.

1976: ஆர்ஜென்டீனாவில் ஜனாதிபதி இஸபெல் பெரோனின் ஆட்சி இராணுவத்தினரால் கவிழ்க்கப்பட்டது.

1998 : இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000 இற்கு அதிகமானோர்  காயமடைந்தனர்.

1999 : கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொஸ்லாவியாவில் வான் தாக்குதலை நடத்தின. இறைமையுள்ள நாடொன்றில் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தியமை அதுவே முதல் தடவையாகும்.

1999 : பெல்ஜியத்தில் மொண்ட் பிளாங்க் சுரங்கத்தில் லொறி ஓன்று தீப்பற்றியதில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

2003: ஈராக்கிலிருந்து அமெரிக்க, பிரித்தானிய படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென அரபு லீக் தீர்மானம் நிறைவேற்றியது.

2008: பூட்டானில் முதல் தடவையாக பொதுத்தேர்தல் நடைபெற்றது.

2014: பொது பல சேனா இயக்கம், பாணந்துறையில் பாரிய பேரணியொன்றை நடத்தியதுடன், இலங்கை பல்லின, பல்மத நாடு அல்ல எனவும் இது சிங்கள பௌத்த நாடு எனவும் வலியுறுத்தியது.

2015: ஸ்பெய்னின் பார்ஸிலோனாவிலிருந்து ஜேர்மனியின்  டஸர்டோர்வ நகரை நோக்கிப் புறப்பட்ட

பிளைட் 4U9525 அதன் துணை விமானி அன்றீஸ் லுபிட்ஸ் தற்கொலை நோக்கத்துடன் பிரான்ஸில் அல்ப்ஸ் மலையில் மோதி நொருங்கச் செய்ததால்  விமானத்திலிருந்த 150  பேரும் உயிரிழந்தனர்.

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

கிரீஸ் குடியரசு பெற்ற நாள்: மார்ச் 25

கிரேக்கம் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.

 
 
 
 
கிரீஸ் குடியரசு பெற்ற நாள்: மார்ச் 25
 
கிரேக்கம் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.

மைசீனியர்கள் உள்ளிட்ட இந்தோ- யூரோ மக்கள் கி.மு.2000-ம் ஆண்டளவில் கிரேக்கத்தில் குடியேறினர். கி.மு.1200-ம் ஆண்டளவில் டோரியர் என்னும் மற்றோர் இந்தோ- யூரோ குழுவினர் கிரேக்கத்தைக் கைப்பற்றியதை அடுத்து, இங்கு இருண்ட யுகம் ஆரம்பமாகியது. இந்த இருண்ட யுகத்தின் இறுதிக் கட்டமாகிய கி.மு.750 ஆம் ஆண்டின் பின்னர் கலை, இலக்கியம், வர்த்தகம், அரசியல், தத்துவம் என பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்து வளம் பொருந்திய நாடாக மாறியது.

கி.மு.431 முதல் கி.மு.403 வரை நடைபெற்ற பாபிலோனேசியன் யுத்தத்தால் நாடு பெரிதும் பலவீனமடைய, 2-ம் பிலிப் மற்றும் அவரது மகன் ஆகியோர் மசிடோனியாவின் மகா ஆலெக்சாண்டரினால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கிரேக்கம் என்றும் கிரேக்கர்கள் என்ற அடையாளமும் நிலைநாட்டப்பட்டது. கி.மு.2-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரிசுத்த உரோமானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. பின்னர் 1460-ல் ஒட்டோமன் பேரரசின் கீழ் வந்தது. 1821-ல் கிரேக்க சுதந்திரத்திற்கான யுத்தம் ஆரம்பமானது. 1821 மார்ச் மாதம் 17-ம் திகதியில் சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் 1827-ல் ஒட்டோமன் பேரரசிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஜேர்மனியின் பிடியில் சிக்கியது. 1967-ல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் மன்னர் கொன்ஸ்தாந்தின் நாட்டைவிட்டு ஓடினார். 1974-ல் மன்னராட்சி முடிவுக்கு வந்து, 1995 இதற்குப் பின்னர் குடியரசானது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்... இவர் இருந்தால்..! #InvestmentTips

‘அண்ணாமலை' ரஜினி, ‘சூர்யவம்சம்' சரத்குமார் என சினிமாவில் மட்டும் ஒரே பாடலில் கோடீஸ்வரர் ஆகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் பணக்காரர்கள் ஆவதற்குப் பல படிகளை ஏற வேண்டியுள்ளது; பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது; பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. 

financial planner, கோடீஸ்வரர், பணக்காரர்


நல்ல ஆசிரியர்!

முக்கியமாகப் பல வருடங்கள் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு சிலரால் மட்டுமே பணக்காரர் ஆக முடிகிறது. மற்றவர்கள், அந்த கனவிலேயே கடைசி வரை காலத்தை கடத்த வேண்டியுள்ளது. உழைத்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம், பணக்காரர் ஆகலாம். அதேசமயம் நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்துக் கொண்டு இருக்கும்போது, நம்முடைய பணத்தையும் உழைக்க வைத்தால் எளிதாக கோடீஸ்வரர் ஆகலாம். எப்படி எனில் பணத்தை பீரோ அல்லது பேங்க் லாக்கரில் தூங்க வைக்காமல், நல்ல நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு மேற்கொண்டால் லட்சாதிபதி என்ன கோடீஸ்வரர் கூட ஆகலாம். ஆனால், இவை அனைத்தும் ஒரே வாரத்திலோ, ஒரே மாதத்திலோ நடைபெறாது. நல்ல முதலீட்டு சார்ந்த திட்டங்களில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக முதலீடு மேற்கொண்டால் நிச்சயம் பணக்காரர் ஆகலாம். 

ஆனால், நம்மில் பலர் பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதற்கு பதிலாக பணத்தை இழந்து வருகின்றனர்; மோசமான நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு மேற்கொண்டு நஷ்டத்தைச் சந்திக்கின்றனர். மொத்தத்தில் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை விழிப்புஉணர்வு இல்லாமல் ஏதேதோ செய்து வருகின்றார்கள். நம் வாழ்க்கையில் நல்ல ஆசிரியர் கிடைத்தால் சிறந்த மாணவனாக எப்படி உருவாக முடிகிறதோ, அதைப்போல நல்ல நிதி ஆலோசகர் கிடைத்தால் நம் வாழ்க்கையை வளமாக்கவும் முடியும், பணக்காரர் ஆகவும் முடியும். ஆனால், நம்மில் பலர் `அவரு சொன்னாரு, இவரு சொன்னாரு' என்று காரணம் சொல்லியே பணத்தை வீணாக்கி வருகின்றோம். 

sureshவாழ்க்கையை வளமாக்க `சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகரைத் தேர்வு செய்வது எப்படி' என்று மைஅஸெட் கன்சாலிடேஷன்.காம்., நிதி ஆலோசகர், சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். 

"பெரும்பாலும் பல முதலீட்டாளர்கள் நல்ல மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகரைத் தேர்வு செய்வதில் மிகவும் குழப்பமடைகின்றனர். நல்ல ஆலோசகரைத் தேர்வு செய்வதைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் அவர் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தின் (Association of Mutual Funds of India - AMPI) சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் உங்களுடைய தேவைக்கு ஏற்றார்போல் சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பரிந்துரைக்க முடியும். 

24 மணி நேரமும் ஆலோசனை!

முதலில் ஆலோசகர் வெளிப்படைத்தன்மையாகச் செயல்பட வேண்டும். அவரது வருமானத்தை விட வாடிக்கையாளர் தேவை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எல்லாம் பங்குச் சந்தை சார்ந்தது. அதனால், ஆலோசகரால் எந்த வருமானத்தையும் உறுதியாகக் கூற முடியாது. பல நேரங்களில் முதலீட்டாளர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருக்கிறார்கள்; எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது சந்தையை பாதிக்குமா என்ற அச்சம் அடைகின்றனர். அதுபோன்ற சமயத்தில் ஆலோசகர், தனது முதலீட்டாளர்களுக்கு போதுமான தகவல்களை வழங்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் அடிக்கடி புதிய ஃபண்ட்கள் மற்றும் திட்டங்களை பரிந்துரைக்கக்கூடாது. பொதுவாகக் கடன் சார்ந்த திட்டங்கள் உட்பட 10 முதல் 12-க்கும் மேற்பட்ட திட்டங்களை பரிந்துரைக்கக் கூடாது. உங்களுடைய சந்தேகங்களை பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும். சந்தைச் சிறப்பாக செயல்பட்டு உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் உங்களுடைய போர்ட்ஃபோலியோவை சமநிலை செய்ய வேண்டும். உங்களுக்குத் தெரியாமல் உங்களுடைய விவரங்களை மூன்றாம் நபருக்குப் பகிரக்கூடாது. உங்கள் ஆலோசகர் தொடர்ந்து அவருடைய திறன்களை மேம்படுத்துபவராக இருக்கிறாரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஈக்விட்டி சந்தைகளின் போக்குக்கு ஏற்ப அவர் தன்னை மேம்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஆலோசகர் 24 மணிநேரமும் ஆலோசனை வழங்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், முதலீடு குறித்து எந்தச் சந்தேகம் எழுப்பினாலும் உடனே அதைத் தீர்த்து வைப்பவராக இருக்க வேண்டும். 

நம்பிக்கையுடன் முதலீடு செய்யுங்கள்!

முதலீட்டாளரிடம் அடிக்கடி முதலீடு மேற்கொள்வது தொடர்பாக நெருக்கடி கொடுக்கக் கூடாது. கண்டிப்பாக அவர் நீங்கள் மேற்கொள்ளும் முதலீட்டுக்கான செலவினை தெளிவுபடுத்த வேண்டும். உங்கள் குணாதிசயம் மற்றும் நோக்கம் அடிப்படையில் உங்களுக்கான சரியான மியூச்சுவல் ஃபண்டினை அடையாளம் கண்டு சரியான ஃபண்டினை பரிந்துரைக்க வேண்டும். 

உங்களுடைய ஆலோசகர் தொடர்ந்து சரியான காரணம் இல்லாமல் போர்ட்ஃபோலியோவை கடைந்தெடுத்து பரிந்துரைக்கக் கூடாது. எனவே, நல்ல ஆலோசகரைத் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஆலோசகரைத் தேர்ந்தெடுக்கும் முன் அவரை ஒரு சில முறை சோதிக்கலாம். ஆனால், அதன் பின் ஆலோசகருடன் தகுந்த முறையில் உறவுகளை மேம்படுத்தி நம்பிக்கையுடன் முதலீட்டைத் தொடருங்கள்" என்று முடித்தார். 

நல்ல நிதி ஆலோசகரைத் தேர்ந்தெடுத்து, உங்களுடைய உழைப்பை மட்டுமே நம்பாமல் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய் பணத்தையும் நல்ல முதலீட்டு சார்ந்த திட்டங்களில் உரமாக விதையுங்கள், ஒரு நாள் விருட்சமாக வளரும். நீங்களும் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகலாம். 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

107p1.jpg

twitter.com/bri2o: வடிவேலெல்லாம் ராயல்டி கேட்டா, இங்கே ஒரு பய சோடா விற்க முடியாது #Vadivelu4life

twitter.com/lusupaiyan7777: தங்கச்சிப் பையனுக்கு ரெஸ்லிங் பார்க்கச் சொல்லிக்கொடுத்தது தப்பாப்போச்சு. `இங்குட்டுத் திரும்பு மாமா'னு காதைக் காட்டி ஒண்ணு குடுத்தான். காது கொய்யுங்குது!

twitter.com/erode_kathir: புன்னகைக்கும் முன் இதழ்களைக் கொஞ்சம் ஈரப்படுத்திக்கொள்ளுங்கள். வறண்ட புன்னகை உயிரற்றது!

twitter.com/udaya_Jisnu/  `சமாதியில் தியானம் செய்ய...'

`கட்சிக்குப் பெயர்வைக்க...'

`சபதமெடுக்க...'னு - தனித்தனியா கட்டணம் வசூலிச்சா, டாஸ்மாக் வருமானத்தை ஈடுசெய்யலாம்!

twitter.com/twittornewton/: `ப்ளஸ் டூ எப்ப முடிச்சீங்க?' என்று கேட்பது, வயதை நாகரிகமாகக் கேட்டறிய முயலும் செயல்!

twitter.com/i_Soruba: இப்பத்திய முதல்வரையே பதவியேற்புலதான் இன்னார்னு தெரிஞ்சது. இதுல மருதுகணேஷ் தெரியாததெல்லாம் ஒரு குத்தமாம் :-|

twitter.com/Kozhiyaar: குழந்தைகள் பள்ளியில் நடப்பதை நம்மிடம் எந்த வயது வரை பகிர்ந்துகொள்கிறார்களோ, அதுவரை மட்டுமே நம்மை நண்பர்களாகப் பார்க்கிறார்கள்!

twitter.com/udaya_Jisnu: காலண்டர் அட்டையில் பரீட்சையும், பரீட்சை அட்டையில் கிரிக்கெட்டும் விளையாடிய கடைசித் தலைமுறை நாம்தான்!

twitter.com/kumarfaculty: மருத்துவமனையில் நோயாளி யாகவோ, நோயாளிக்கு உதவியாகவோ இருந்துவிட்டு வந்த பிறகு, வார்த்தைகளும் மருந்துகள்தான் என்று உணர முடிகிறது!

107p2.jpg

twitter.com/suryamsk_offl: ``மச்சான் ஃப்ரீயா இருந்தா ஒரு காமெடி சொல்டா.''

``ஸாரி மச்சான், நான் என் ஆளோட இருக்கேன்.''

``மச்சான், செம காமெடிடா... keep it up.’’

twitter.com/meenammakaya: ப்ளூ டிக்காகி பதில் சொல்லலைன்னாகூடப் பரவாயில்லை. ஆன்லைன்ல இருந்துக்கிட்டு ப்ளூ டிக் ஆகலைன்னாதான் பயங்கரக் கோபம் வரும். # வாட்ஸ்அப் சோகங்கள்!

twitter.com/YamudhanSharma: மீதி கொடுத்தா சின்னக் கடை. மிட்டாய்க் கொடுத்தா பெரிய கடை!

twitter.com/arattaigirl: இவ்ளோ பகுத்தறிவு பேசுற இந்தக் காலத்திலயே இப்படி இருக்காங்களே!? பெரியார் காலத்தில் அவர் எவ்ளோ எதிர்ப்புகளைச் சந்திச்சிருப்பார்!

twitter.com/tparavai: மாமனார், ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியிருக்கார்... # `வானும் மண்ணும் ஃப்ரெண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா’!

twitter.com/thoatta: பா.ஜ.க. கங்கை அமரனை நிறுத்தியுள்ளதால், காங்கிரஸ் வெகுண்டெழுந்து அனந்து சாரை நிறுத்த வேண்டுகிறேன்!

twitter.com/kaviintamizh: `பேரைக் கேட்டா சும்மா அதிருதில்ல...' டயலாக் பெரியாருக்குதான் நூறு சதவிகிதம் பொருந்துகிறது!

facebook.com/gurushree: காலேஜ்ல ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். ஒரு க்ளாஸ்கூட கட்டடிக்க மாட்டான். ஆனா, ஒரு எக்ஸாமும் பாஸும் ஆக மாட்டான். # தே.மு.தி.க வேட்புமனு தாக்கல்!

107p3.jpg

facebok.com/ பெருமாள்சாமி சுப்புராஜ்: 1980 - ஒரு டீ மாஸ்டர் சம்பளம் 8 ரூபாய்.

1980 - ஒரு லிட்டர் பால் 8 ரூபாய்.

2017 - ஒரு டீ மாஸ்டர் சம்பளம் 800  ரூபாய்.

2017 - ஒரு லிட்டர் பால் 47 ரூபாய்.

விவசாயிகள், மாடு வளர்ப்போர்கள் ஏன் சாகிறார்கள் என்று இப்போது தெரிந்திருக்கும்.

எந்தப் பொருளாதாரச் சூத்திரங்களும் உழைக்கும் மக்களின் வருமானத்தைக் குறைத்து நேரடியாக அவர்களைச் சுரண்டியே கட்டமைக்கப்படுகின்றன. உழைக்கும் மக்களின் பொருளாதார மூக்குக் கயிறு, அவர்களைச் சுரண்டும் அதிகார, அரசியல்வர்க்கத்திடமே உள்ளது!

facebook.com/மதுரை சத்யா: சுத்தம் செய்ய அழுக்குத்துணி தேடும் அப்பழுக்கற்ற மனிதர்கள் நாங்கள்!

facebook.com/Karl Max Ganapathy: யோகி ஆதித்யநாத்தான் அடுத்த மோடியோன்னு தோணுது எனக்கு. ட்ராக் ரெக்கார்டு அதைத்தான் சொல்லுது. அதாவது ஆர்.எஸ்.எஸ்-ஸோட ட்ராக் ரெக்கார்டு!

facebook.com/Nelson Xavier:  ஆளுமைகள் கடைசிவரை ஆளுமைகளாகவே இருப்பதே இன்றைய நாளில் பெரிய ஆளுமைப் பண்பு!

facebook.com/Aruna Raj: குப்பை கொட்டுறேன் - இதை விளையாட்டா சொல்ல முடியும்.

குப்பை  அள்ளுறேன்  - இதை விளையாட்டாக்கூட யாரும் சொல்றதில்லை!

facebook.com/வெ.பூபதி: `நான் சொல்றதை பேரன்ட்ஸ் கேட்கிறதே இல்லை'னு குழந்தைகள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சாதனைக்குத் தயாராகும் யோகா கிராமம்

கேரளாவின் குன்னம்தானம் கிராமத்தினர் இந்தியாவின் ‘முதல் யோகா கிராமம்’ என்ற சாதனையை எட்டவுள்ளனர். அக்கிராமத்துப் பஞ்சாயத்து தலைவரின் கிராம வளர்ச்சி திட்டத்தால் இந்த அங்கீகாரத்தை குன்னம்தானம் கிராமம் பெறவிருக்கிறது.

yoga

கேரளாவின் பத்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான குன்னம்தானம் வருகிற உலக யோகா தினத்தன்று ‘முதல் யோகா கிராமம்’ என்ற தேசிய சாதனையை நிகழ்த்தவுள்ளது. குன்னம்தானம் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கே.கே. ராதாகிருஷ்ண குருப். கிராம வளர்ச்சி திட்டங்களுக்காகப் பல நலத்திட்டங்களை மேற்கொண்டுவரும் இவர், சமீபத்தில் ‘எனது கிராமம், ஆரோக்கியமான கிராமம்’ என்ற புதிய வளர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் கிராம மக்கள் அனைவருக்கும் கிராம பொது இடங்களில் யோகா பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

வருகிற மே 31ம் தேதியுடன் இப்பயிற்சி நிறைவடைவதால் ‘உலக யோகா தினமான ஜூன் 21ம் தேதியன்று ஒட்டுமொத்த கிராம மக்களும் இணைந்து மிகப்பெரிய யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் மூலம் ‘முதல் யோகா கிராமம்’ என்ற சாதனையை குன்னம்தானம் நிகழ்த்தவிருக்கிறது.

 

 

 

நிஜ சூரியனை மிஞ்சிய ‘செயற்கை சூரியன்’

உலகிலேயே மிகப்பெரிய சூரியனை உதிக்க வைத்துள்ளனர் ஜெர்மனி அறிவியல் ஆய்வாளர்கள். சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த செயற்கை சூரியன் ஜெர்மன் விண்வெளி மையத்தில் சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

artificial sun rises in Germany

ஜெர்மன் விண்வெளி ஆய்வாளர்கள் இணைந்து 149 சக்திவாய்ந்த செனான் மின்விளக்குகளால் உலகின் மிகப்பெரிய சூரியனை உதிக்கவைத்துள்ளனர். சூரிய எரிபொருள் உற்பத்தி பயன்பாட்டிற்கான இந்த சோதனை முயற்சி வருங்காலத்தில் உலகின் ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ உற்பத்திசெய்யும் கூடமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சூரிய எரிபொருள்களில் முக்கியமான ஹைட்ரஜன் உற்பத்தியை இந்தச் செயற்கை சூரியன் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ’கார்பன்-டை-ஆக்ஸைட்’ வெளிப்படாமல் செயல்படும் ஆற்றல் நிறைந்தது ஹைட்ரஜன் என்பதால் எதிர்காலத்தின் அதிமுக்கிய எரிபொருளாக வாய்ப்புள்ளது.

ஒரே ஸ்விட்சில் 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் இந்த செயற்கை சூரியன் சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையம்.

 

 

 

களத்தில் கோலியின் புது வெர்ஷன்!

இந்தியா-ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்டில் கோலி புது வெர்ஷனில் களமிறங்கினார்.

Virat Kohli Drinks

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில் இன்று துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து கோலி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரஹானேவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  கோலிக்கு பதிலாக அறிமுக வீரர் குல்தீப் யாதவ் களமிறங்கியுள்ளார். மேலும், இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், இதில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, இந்திய வீரர்களுக்கு எனர்ஜி டிரிங்ஸ் கொடுத்துள்ளார் கோலி. பொதுவாக, ரெஸ்ட்டில் இருக்கும் ஜூனியர் பிளேயர்கள்தான் வீரர்களுக்கு, டிரிங்ஸ் தருவார்கள். இந்நிலையில், இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ட்வீட் செய்ய, இந்த சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. சற்று முன் வரை அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஸ்மித் 88 ரன்களிலும், ஹேண்ட்ஸ் கோம்ப் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உலகின் அதிவேக பொலிஸ் கார் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு (வீடியோ இணைப்பு)

 

 

3E99CE7B00000578-0-image-a-62_1490384215

டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும்  “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 

 

 

3E99CC6800000578-0-image-a-59_1490384192

மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும். 

3E99CE9300000578-0-image-a-60_1490384205

இதற்கு முன்னர் அதிவேக பொலிஸ் காரினை வைத்திருந்த பெருமையினை இத்தாலிய பொலிஸார் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3E99CE2E00000578-0-image-a-65_1490384221

3E99CD8C00000578-0-image-a-66_1490384228

3E99CED700000578-0-image-a-69_1490384237

3E99CCE600000578-0-image-a-72_1490385512

 
 

 

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

வானில் தோன்றிய அற்புதம் ; மக்கள் அதிர்ச்சியில்

பிரித்தானியாவின் வான்பரப்பில் முகில்களால் தோன்றிய இராட்சத வடிவங்களால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் வான்பரப்பில் தோன்றிய வடிவங்கள் கடவுளின் கை உருவம் மற்றும் கால்கள் எனக் கூறப்படுகின்றது. 

3E8DA4E600000578-4343884-Give_us_this_da

குறித்த வடிவம் நேற்று மாலை சூரியன் மறையும் வேளையில் தோன்றியதாகவும், தங்க நிறத்தில் அழகான தோற்றத்துடன் காணப்பட்டதாகவும், அதன் காரணமாக அது கடவுளின் கையை ஒத்ததாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3E8DA52100000578-4343884-image-a-4_14903

மேலும், நோர்த் யோக்சேர் பகுதியில் கால்கள் இரண்டு நடந்து செல்வது போன்ற மாபெரும் வடிவமும் தோன்றியமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், குறித்த முகில் வடிவமைப்பானது சர்வதேச உலக வானிலை தினத்தின் 11 புதிய வானிலைகள் பட்டியலில் (international Cloud Atlas) சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

வைரமுத்துவின் பேரன் எழுதிய முதல் பாடல்... ட்விட்டரில் நெகிழ்ந்த ஹைக்கூ!

har_1_15343.jpg

தமிழ்த் திரையுலகில் தன் பாடல் வரிகளால் நீங்கா இடம் பிடித்தவர் கவிஞர் வைரமுத்து. அவரது மகன் மதன் கார்க்கியும் தன் பாடல்களால், ஜென்-ஸீ தலைமுறையினர் இடையே குறைந்த காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றவர்.

இந்நிலையில், மதன் கார்க்கியின் மகன் ஹைக்கூ கார்க்கியும் தற்போது பாடல் எழுத தொடங்கியுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பென்னி தயாள் பாடியிருக்கும் பாடலுக்கு வரிகள் எழுதியிருக்கிறார் ஹைக்கூ கார்க்கி.

har_2_15518.jpg

இதைப் பற்றி ஹைக்கூ கார்க்கி அவரது ட்விட்டர் பக்கத்தில், 'என் முதல் பாடல் வரியை ஹாரீஸ் ஜெயராஜின் டியூனுக்கு அவரது புத்தம் புது ஸ்டுடியோவில் எழுதியுள்ளேன். என் வரிகளை பாடலாக்கிய பென்னி தயாளுக்கு நன்றி' என்று நெகிழ்வாக பதிவு செய்துள்ளார்.  

View image on Twitter View image on Twitter

Wrote my first line of lyric for @Jharrisjayaraj uncle’s tune in his awesome new studio. Thank you @Benny_Dayal uncle for singing it.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒரு கோடி பேரின் வேலைவாய்ப்பை பறிக்கவுள்ள ரோபோக்கள்..!

 

 

பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று செய்த ஆய்வின் மூலம், எதிர்வரும் 15 வருடங்களில், அந்நாட்டில் மாத்திரம் 1 கோடி பேர் ரோபோக்களால் வேலையிழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

robo.jpg

பிரிட்டனின் முன்னணி தொழிநுட்ப ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான பி.டபிள்யு,சி (P.W.C) எனும் நிறுவனம், அந்நாட்டு தொழில் துறைகளில் 30 சதவீதம் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், எதிர்வரும் 15 வருடங்களில் சுமார் 1 கோடி பேரின் வேலைவாய்ப்புகளை, ரோபோக்கள் செய்யக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

chi-inc-robots-doing-more-office-work-bs

மேலும் மேலைத்தேய நாடுகளில் அதி நவீன தொழில்நுட்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை மனித உழைப்பை குறைத்து, பல்வேறு துறைகளின் பணிகளை, இயந்திரமயமாக்கியுள்ளதாக பி.டபிள்யூ.சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

PROD-Robot-and-Businesswoman-Using-Compu

அத்தோடு பிரிட்டனில் தற்போது 22 இலட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 10 இலட்சத்து 20 ஆயிரம் பணியிடங்கள் ரோபோக்களின் பயன்பாட்டினால், ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

உலகின் மிக நீளமான கட்டிடம் ‘தி பிக் பெண்ட்’

 

 

உலகின் மிக நீளமான கட்டிடம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் அமைக்கப்படவுள்ளது.இதற்கான வடிவமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

3E8628AA00000578-0-image-a-34_1490196427

குறித்த கட்டிடத்தின் வடிவமைப்பு படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.

3E8628B800000578-0-image-a-35_1490196427

உலகின் உயரமான கட்டிடமான டுபாயின் புர்ஜ் கலிஃபாவை விட இரண்டு மடங்கு நீளமான கட்டிடத்தை நியூயோர்க்கில் அமைக்கத் திட்ட வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘தி பிக் பெண்ட்’ எனப் பெயர் சூட்டப்படவிருக்கும் இக்கட்டடம் ஆங்கில எழுத்து ‘யு’ வடிவ வளைவு போன்று கட்டமைக்கப்படவிருக்கிறது. 

3E8628C500000578-0-image-a-37_1490196440

4,000 அடி நீளம் (1.22km) இக்கட்டடத்தை ‘யு’ வடிவில் வளைத்து அமைக்கவுள்ளனர். 

3E8628FE00000578-0-The_elevator_can_trav

ஓயோ ஸ்டூடியோ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இக்கட்டடத்தில், வளைவுகளில் செல்வதற்கான ‘மின்னுயர்த்தி’ வசதியும் செய்யப்படவுள்ளது. நியூயோர்க்கின் மான்ஹட்டான் நகரில் இருக்கும் ’உயர்ந்த கட்டிடங்களுக்கான தளர்வு’ விதிகளுக்கு இக்கட்டிடம் மாற்றாக அமைந்துள்ளது. 4,000 அடி உயரமான கட்டிடமாக இல்லாமல் 4,000 அடி நீளமான கட்டடமாக நிலைநிறுத்தவுள்ளனர். 

3E8628B000000578-0-image-a-44_1490196812

நியூயோர்க் கட்டிடக்கலைக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த வடிவமைப்பின் கட்டமைப்புக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3E8628A300000578-4339282-Explaining_the_

3E8628F400000578-4339282-The_longest_tow

3E8628E400000578-0-image-m-49_1490196851

3E86289300000578-0-image-a-50_1490196868

 
 

http://www.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.