Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

தாயை மரணத்திலிருந்து காப்பாற்றிய சிறுவன்... உதவியது ஆப்பிள் Siri..!

சிரி

லண்டனில் உள்ள கென்லே பகுதியில் வசிக்கும் நான்கு வயது சிறுவன் ரோமன். அவன் செய்த விஷயம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. மரணத்தின் பிடியில் இருந்த தனது தாயை  ஐபோனின் வாய்ஸ் அசிஸ்டென்ட்டான சிரியின் உதவியுடன் காப்பாற்றி அனைவரையும் நெகிழ வைத்துள்ளான் ரோமன். 

நான்கு வயது சிறுவன் ரோமன் தனது தாய் மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்து எழுப்பியுள்ளான். தனது தாய் எழுந்திருக்காமல் இருந்ததையடுத்து பதறிய ரோமன். தனது தாயின் ஐபோனை எடுத்து அவரது கட்டைவிரலை வைத்து சிரியை ஆன் செய்துளான். அதன் மூலம் தனது தாய் மயங்கிய நிலையில் இருப்பதை தெரிவிக்க சிரி ஆம்புலன்ஸுக்கான எண்ணான 999- ஐ அழைத்துள்ளது. அதில் போலிஸ் உங்களது அவசர தேவை என்ன என கேட்க? 

''நான் ரோமன், என் தாய் வீட்டில் மயங்கிய நிலையில் இருக்கிறார். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? அவரை வீட்டில் வந்து அழைத்து செல்ல முடியுமா என கேட்டுள்ளான். அவர் இறந்துவிட்டார் என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளான்.  மீண்டும் 999 எண்ணில் தொடர்பில் இருந்தவர்கள் தெளிவாக ரோமனிடம் கேட்க அவர் கண்களை மூடிய நிலையில் நீண்ட நேரமாக இருக்கிறார். அவர் மூச்சுவிடவில்லை என்று மழலை மாறாமல் கூறியுள்ளான். 

நிலையை புரிந்து கொண்ட அவசர அழைப்பில் இருந்தவர்கள் ரோமனிடம் வீட்டு முகவரியை கேட்டுள்ளார்கள். அவனும் முகவரியை அளிக்க 13 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து மயக்கத்தில் இருந்த ரோமனின் தாயை காப்பாற்றியுள்ளது. அவர் சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் உயிர்பிழைத்துள்ளார். இதற்கு காரணம் ரோமன் சரியான நேரத்தில் சிரியை கையாண்டு 999க்கு அழைத்தது தான் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் நெகிழ்ந்துள்ளனர்.

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரி ''குழந்தைகள் இன்றைய தொழில்நுட்பத்தை நன்கு அறிந்துள்ளனர். அவசர நேரங்களில் சமயோஜிதமாக யோசித்து சிரியை அழைத்து தனது தாயை காப்பாற்றியிருப்பது உண்மையாலுமே பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று கூறியுள்ளார்.

சிரி மூலம் இதேபோல் நிறைய பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தனது ஒரு வயது குழந்தை மூச்சுவிடமுடியாமல் தவித்த போது சிரி மூலம் ஆம்புலன்ஸை அழைத்து தனது மகளை தாய் ஒருவர் காப்பாற்றியுள்ளார். ஒருவரது ட்ரக் கவிழ்ந்து அதிலிருந்து தப்பிக்க முடியாமல் இருந்த போதும் சிரி உதவியால் உயிர்பிழைத்துள்ளார். 


 ஐபோனில் இருக்கும் சிரி வாய்ஸ் யாரோடது(VoiceofSIRI). இத எப்படி பதிவு பண்ணாங்கங்கறதுதான் சுவாரஸ்யமான விஷயம்.  2011ம் ஆண்டுதான் ஐபோன்களில் சிரி அறிமுகமானது. அதற்கான வாய்ஸ்  சுசான் பென்னட் எனும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டுடையதுதான். இதில் ஹைலைட் என்னவென்றால் சுசான் ஐபோன் சிரிக்காகத்தான் தனது குரலைப் பதிவு செய்தார் என்பது அவருக்கே தெரியாதாம். 

2005ம் ஆண்டு பாடகியாக விளம்பரங்களுக்கு ஜிங்கில்கள் பாடும் வேலையைச் செய்து வந்து சுசான். அவர் பணியாற்றிய ஸ்டுடியோவில் ஒருநாள் சுசான் உங்கள் குரல் தொனி பாடல்களுக்கு ஏற்றதாக இல்லை. சில வாசகங்களைப் படித்துப் பதிவு செய்யும் வேலை இருக்கிறது பார்க்கிறீர்களா எனக் கேட்க சுசானும் சம்மதித்திருக்கிறார். ஒரு மாதம் முழுவதும், தினமும் 4 மணி நேரத்துக்கும் மேலாக ரெக்கார்டிங் நடந்துள்ளது. அதில் வாக்கியங்களும், அதனை தனித்தனி உச்சரிப்புகளாகவும் பிரித்து பதிவு செய்துள்ளனர். ஆரம்பத்தில் சுசான் ”என்ன இது... இப்படி ஒரு ரெக்கார்டிங்... இதனை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்” என்று நினைத்திருக்கிறார். 2011ம் ஆண்டில் ஐபோனில் சிரி அமைப்பு உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. ஆனால் சுசானுக்கு அதில் இருப்பது அவரது குரல்தான் என்பது தெரியாது. காரணம் அவர் ஐபோன் யூஸர் இல்லை. ஒருநாள் சுசான் பென்னட்டின் சக வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் போன் செய்து ஐபோனில் வருவது உன் குரலா எனக் கேட்க, பின்பு விசாரித்ததில் ஆம் அது சிரிக்காகப் பதிவு செய்யப்பட்ட குரல்தான். அதனை ஒரு ஸ்டுடியோவிடம் கொடுத்துச் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

கிளிக் தொழில்நுட்ப காணொளி

லண்டனில் இருந்து பாரிசுக்கு மின்சார விமானம், செயலி மூலம் இயங்கும் கடை, சர்வதேச ரோபோடிக்ஸ் சேலன்ச் போட்டி உள்ளிட்டவை அடங்கிய காணொளி

  • தொடங்கியவர்

25.03.1857: ஒலியைப் பதிவு செய்யும் போனாட்டோகிராஃப் கருவி கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!

 

 
phonautograph

 

போனாட்டோகிராஃப் என்று அழைக்கப்படும் ஒலியை பதிவு செய்யும் கருவியை முதன்முதலாக (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் இன்றுதான் கண்டுபிடித்தார்.

பின்னர் இதற்கான காப்புரிமையையும் அவர் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.

இவருக்கு பின்னர் எடிசன் இதன்மேம்பாட்டு வடிவமான கிராமபோனை கண்டறிந்தார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

உலகின் மிக உயர்ந்த சிலையாகும் வீர சிவாஜி நினைவு சிலை

மஹாரஷ்டிரா மாநிலத்தில் அரபிக்கடல் கரையில் அமையவிருக்கும் வீர சிவாஜி நினைவுச்சிலை தற்போது உலகின் மிக உயர்ந்த சிலையாக உருவெடுக்கவுள்ளது. உலகின் உயர்ந்த சீனாவின் புத்தர் சிலைக்குப் போட்டியாக வரும் வீர சிவாஜி நினைவிடத்தின் திட்டமதிப்பு 3,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

shivaji_statue_18407.jpg

உலகிலேயே மிக உயர்ந்த சிலையாக சீனாவின் புத்தர் சிலை விளங்குகிறது. 208மீ உயரமுள்ள இந்தச் சிலையின் சாதனையை முறியடிப்பதற்காகவே இந்தியாவில் வீர சிவாஜி நினைவுச்சிலை கட்டப்படவிருக்கிறது. 2016ம் ஆண்டின் இறுதியில் 192மீ சிலையாகக் கட்டப்படும் என்ற திட்டத்துடன் அடிக்கல் நாட்டப்பட்டது தற்போது 210 மீட்டராக உயர்த்தப்பட திட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது. அங்கீகாரம் கிடைத்து நினைவுச்சிலை திறக்கப்பட்டால் உலகின் மிக உயர்ந்த சிலையாக வீர சிவாஜி நினைவிடம் திகழும். 3,600 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முதற்கட்ட பணிக்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹெலிபேட், ஐமேக்ஸ் தியேட்டர் என அமையவிருக்கும் இந்த நினைவகத்தில் பார்வையாளார்கள் 60ம் மாடி வரை அழைத்துச்செல்லப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார் (மார்ச் 26, 1953)

 

அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சியாளரும், நச்சுயிரியல் ஆய்வாளருமான ஜோனஸ் எட்வர்ட் சால்க், தனது முதல் போலியோ தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து இதே மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்தார். நியூயார்க்கில் 1914ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி பிறந்த ஜோனஸ் சால்க், மருத்துவ ஆராய்ச்சி படிப்பை முடித்து, 1947 ஆம் ஆண்டில் பிட்சுபர்க் பல்கலைக்கழக மருத்துவக்

 
 
 
 
ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார் (மார்ச் 26, 1953)
 

அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சியாளரும், நச்சுயிரியல் ஆய்வாளருமான ஜோனஸ் எட்வர்ட் சால்க், தனது முதல் போலியோ தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து இதே மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்தார்.

நியூயார்க்கில் 1914ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி பிறந்த ஜோனஸ் சால்க், மருத்துவ ஆராய்ச்சி படிப்பை முடித்து, 1947 ஆம் ஆண்டில் பிட்சுபர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியில் அமர்ந்தார். 1948 இல் போலியோவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கினார்.

1952 ஆம் ஆண்டில் கொள்ளை நோய்க்கு 58,000 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3,145 பேர் உயிரிழந்தனர். 21,269 பேர் முடக்குவாதத்திற்குள்ளாயினர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். இதனால் தனது ஆய்வை தீவிரப்படுத்திய சால்க், 1952ம் ஆண்டு போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்தார். பின்னர் இதனை மேம்படுத்தி, 1953ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தார். 1955 ஏப்ரல் 12ல் சால்க் தடுப்பூசி வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு சால்க் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது.

அந்நாள் ஏறத்தாழ ஒரு பொது விடுமுறையாகவே கணிக்கப்பட்டது. தனது தனிப்பட்ட வளத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை. இத்தடுப்பூசிக்கான கண்டுபிடிப்பு உரிமம் யாரிடம் உள்ளது என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சால்க்கிடம் கேட்கப்பட்ட போது, அவர் "ஆக்கவுரிமை எதுவும் கிடையாது. சூரியனுக்கு நீங்கள் ஆக்கவுரிமை கோர முடியுமா?" எனக் கேட்டார்.

1960-ல் கலிபோர்னியாவில் உயிரியல் படிப்புகளுக்கான சால்க் கல்வி நிறுவனத்தை சால்க் நிறுவினார். இந்நிறுவனம் இன்று மருத்துவ, அறிவியல் ஆய்வுகளுக்கு மையமாகத் திகழ்கிறது. சால்க் தனது இறுதி நாட்களில் எச்.ஐ.வி.க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஓபியத்துக்கு அடிமையாகும் கிளிகள்!

மத்தியப்பிரதேசத்தில் 'கசகசா' பயிரிட்ட விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். பாப்பிச் செடியில் இருந்து கசகசா எடுக்கப்படும். அதேபோல், மருத்துவ பலன்களுக்காகவும், பாப்பி பயிரிடப்படுகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில், இந்த பாப்பியில் இருந்து ஓபியம் என்ற போதைப் பொருள் எடுக்கப்படுகிறது.

Poppy Opium Parrots

பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில், இந்த பாப்பி பயிரிடப்பட்ட, நிலங்களில், காட்டுக்கிளிகள் அட்டகாசம் செய்கின்றன. விவசாயிகள், நிலத்தை விட்டு செல்லும் வரை பொறுமையாக மரத்தில் இருந்து, அவர்கள் சென்ற உடன், தங்களது வேலையைக் காட்டுகின்றன இந்த கிளிகள். குறிப்பாக, கிளிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. ஓபியத்துக்கு பயங்கர அடிமைகளாகி வருகின்றன இந்தக் கிளிகள். இவற்றை விரட்ட, பட்டாசு வைப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகள் எடுத்து விட்டனர். 

ஆனால், கிளிகள் இந்த பாப்பி செடிக்கு படையெடுப்பதை நிறுத்துவதில்லை. இதனால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு! உணரலாம் வாருங்கள்..

உழைப்பு

 

ந்தியாவில் வீட்டிற்கு வெளியே வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்காமல் வீட்டில் இருக்கும் திருமணமான பெண்ணை , "House Wife" (வீட்டு மனைவி) என அழைக்கின்றார்கள். பெண்ணின் உழைப்பு மதிக்கப்பிழக்க இதுவும் ஒரு காரணம். 
திருமணமாகி கணவன் வீட்டில் இருக்கும் வெளியே வேலைக்கு செல்லாத ஒரு பெண்ணிடம் (திருமணமாகாத‌ பெற்றோர் வீட்டில் இருக்கும் பெண்ணிடமும்) நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என யாராவது கேட்டால், அவர்களில் பெரும்பான்மையானோர் நான் வீட்ல சும்மா தாங்க இருக்கேன் என சொல்வார்கள் . உண்மையாகவே அவர்கள் வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கின்றார்களா என வினவினால்,  வீட்டில்  அவர்கள் தான் சமையல், துணிகளை துவைப்பது, வீட்டை தூய்மைப்படுத்துவது , குழந்தை வளர்ப்பு, வீட்டில் குழந்தைகளுக்கு கல்வியளிப்பது, பல வீடுகளில் கணவன் கொடுக்கும் சம்பள பணத்திற்குள் எல்லா செலவுகளையும் செய்து பொருளாதாரத்தை நிர்வகிப்பது என எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.

 

உழைப்பு


இப்படிக் காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை ஓய்வின்றி உழைக்கும் அவர்கள் ஏன் தங்களை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கின்றேன் என சொல்கின்றனர் என யோசித்தால், அவர்களின் இந்த  உழைப்புக்கு சம்பளம் (பணம்) வழங்கப்படுவதில்லை.  சம்பளம் கொடுக்கப்படாத‌ வேலையை செய்வதால் அவர்கள் தாங்கள் சும்மா இருப்பதாக சொல்கின்றனர்.
பெண்கள் வீட்டில் செய்யும் இந்த வேலைகள் எல்லாம் சம்பளம் கிடைக்காத வேலைகளா எனக்கேட்டால் இல்லை. இந்த வேலைகளை எல்லாம் வேறொரு வீட்டிலோ, நிறுவனத்திலோ செய்தால் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைகளாகும். இங்கே தான் இந்திய ஆண்கள்  எல்லோரும் முதலாளிகளாக மாறுகின்றோம். வீட்டில் பெண்களிடம் இவ்வளவு வேலைகளையும் வாங்கிவிட்டு அதற்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதுடன் மட்டும் நிற்காமல், அவர்கள் சும்மா இருப்பதாகத் திரும்ப, திரும்பப் பொய்யை சொல்கின்றோம். இப்படியாக மீண்டும் , மீண்டும் சொல்லப்படும் ஒரு பொய்யானது பெண்கள் மனதில் உண்மையாக ஆழப்பதிந்து அவர்களும் அதையே சொல்கின்றனர்.


நடிகை ஜோதிகா நடித்த "36 வயதினிலே"  திரைப்படத்தில் வெளிநாடு செல்லும் கணவன், வளர்ந்த பெண் பிள்ளையைத் தன்னுடன் அழைத்து செல்வான். தன்னையும் அழைத்து செல்லுங்கள் என மனைவி ஜோதிகா கேட்கும் பொழுது உனக்கு அங்கு வேலை கிடைக்காமல் எப்படி அழைத்து செல்வது என கேட்டு அவரின் வாயடைத்து விட்டு வெளிநாடு சென்று விடுவான். பின்னர் அதே கணவன் இங்கு உணவு சரியில்லை, வீட்டு வேலைக்கு யாரையாவது அழைக்கலாம் என்றால் அதிக சம்பளம் கேட்கின்றார்கள், அதனால் நீ என்னுடன் வெளிநாடு வந்து தங்கி விடுகின்றாயா என கேட்பான். அவனுக்கு அங்கே தேவை மனைவி அல்ல, சம்பளம் வாங்காத ஒரு வேலைக்காரி மட்டுமே. இதை ஜோதிகா மறுக்கும் பொழுது தன் பிள்ளையை விட்டு பேசச் சொல்லி ஒர் உளவியல் தாக்குதல் தொடுப்பான்.


இந்தப் படத்தில் கணவன் கதாபாத்திரம் செய்யும் இந்த செயலைத் தான் பெரும்பான்மையான இந்திய ஆண்களாகிய நாம் ஆண்டாண்டு காலமாக செய்து வருகின்றோம். நம‌க்கு பொருளாதார சிரமங்கள் ஏற்படும் பொழுது  கட்டிய மனைவியையே சுமையாக கருதி அவரை அவமானப்படுத்துகின்றோம். பின்னர் அவரால் நம‌க்கு நலன் உண்டாகின்றது எனில் நாம் முன்னர் செய்த தவறுக்கு மன்னிப்பு கூடக்கேட்காமல் எந்த வித கூச்சமுமின்றி "நீ தான் எல்லாம்" என நாகூசாமல் பொய் சொல்கின்றோம். ஒரு தவறை திரும்ப, திரும்ப செய்வதால் அது நம்முடைய‌ பழக்க வழக்கமாக மாறிவிடுகிறது. அதனால் அந்த தவறுகள் நம்முள் எந்த குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.


அந்தப் படத்தில் வரும் பிள்ளையைப் போலத்தான் இன்று பெரும்பான்மையான பிள்ளைகள்(ஆண்/பெண் குழந்தைகள்) இங்கே வளர்க்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தங்கள் அன்னையின் உழைப்பு புரிவதில்லை, அதற்கு காரணமும் பணம் தான். அப்பா பணம் சம்பாதிக்கின்றார், அவரே நாம் கேட்கும் பொருட்களை வாங்கித் தருவார் என எண்ணுகின்றனர். பணம் தான் எல்லாம் என வாழும் இன்றைய சமூகத்தில் வளரும் குழந்தைகள் அவர்கள்.


என் மூன்று வயது மகள் இன்பா "டோரா புஜ்ஜி" கார்ட்டூன் பார்த்துவிட்டு தனக்கு உதவி செய்யும் நபர்களுக்கு நன்றி சொல்லத் தொடங்கினார். அந்த நன்றி எப்பொழுதும் அப்பாவான எனக்கு மட்டுமே கிடைக்கின்றது. என் மகளைப் பொருத்தவரை நான் தான் அவர் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கித் தருகின்றேன். அவரது அம்மாவிற்கு நன்றி கூறி நான் பார்த்ததில்லை. மூன்று வயது குழந்தை அம்மா பணம் சம்பாதிப்பதில்லை, அதனால் அவர் நமக்கு செய்யும் வேலைகளுக்கு நன்றி சொல்லத் தேவையில்லை என யோசிக்கின்றது.


இதை நான் கவனிக்கத் தொடங்கிய‌திலிருந்து அவரிடம் நான் அவரது அம்மா செய்யும் பணிகளைத் திரும்ப, திரும்பச் சொல்லி அதை நாம் மதிக்க வேண்டும் எனப் பேசி வருகின்றேன். குழந்தைகளை வளர்க்கும் நாம் அனைவரும் இதை புரிந்து கொண்டு நம் குழந்தைகளிடம் இன்றிலிருந்தே இதைப் போல பேசத் தொடங்க வேண்டும். அதுமட்டுமின்றி நம் மனைவியரிடம் பணத்தைக் கொடுத்துக் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கித் தரச்சொல்ல வேண்டும். அது மட்டுமின்றிப் பணத்தை வைத்து ஒருவர் செய்யும் வேலையை மதிப்பிடக்கூடாது எனவும்  சொல்லி நம் குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டும். இல்லையென்றால் 36 வயதினிலே திரைப்படத்தில் முதல் பாதியில் தன் அம்மா செய்யும் வேலைகளைப் புறக்கணித்து அவரை அவமானப்படுத்தும் பிள்ளையாகத் தான் நம் பிள்ளைகள் வளரும். நிற்க‌


அப்படியானால் வீட்டில் பெண்கள் செய்யும் இந்த வேலைகளுக்கெல்லாம் ஆண்கள் எல்லோரும் சம்பளம் கொடுக்கவேண்டும் என சொல்கின்றீர்களா என்ற கேள்வி இயல்பாகவே எல்லோருக்கும் எழும்.  வாழ்வதற்கே இன்று நமக்கு கிடைக்கும் சம்பளம் கட்டுபடியாகாத சூழலில் நம்மால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாது என்பது தான் யதார்த்தம், அதே நேரத்தில் அவர்கள் கூலிக்கு மாரடிக்கவில்லை, நம்முடன் ஏற்பட்டுள்ள திருமண‌ உறவிற்காக அவர்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்கின்றார்கள். அவர்கள் வீட்டில் சும்மா இருக்கின்றார்கள் என நாம் சொல்லும் பொய்யை முதலில் நிறுத்துவோம்.
அலுவலகத்தில் இரவு , பகலாக உழைக்கும் எனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என பொருமும் ஆண்களாகிய நாம் வீட்டில் அதைப் போலவே உழைக்கும் நம் வீட்டு பெண்களின் உழைப்பை முதலில் மதிக்கக் கற்றுகொள்ளவேண்டும். நமக்கு என்றாவது உணவு வேண்டாம் என்றால் அதை முதலில் வீட்டில் சொல்வோம்.  ஏனெனில் அவர்கள் நமக்காக சமைத்து குப்பையில் கொட்டுவது உணவை மட்டுமல்ல, அவர்களது உழைப்பையும் தான்.


அலுவலகத்தில் சம்பளம் வாங்கும் வேலைக்காரனாகவும்,  வீட்டில் முதலாளியாகவும் நடந்து கொள்ளும் நமது பழக்கத்தை மாற்றுவோம். வீட்டில் நாம் சக பயணியே அன்றி முதலாளிகள் அல்ல, அவர்களும் நம் வேலைக்காரர்கள் அல்ல‌.  அவர்களுக்கு தேவையான உடை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான சின்ன சின்னச் செலவுகளையும் செய்வதற்கும் நமது சம்பளத்தில் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது அவர்கள் பணம் என்பதையும் நாம் உணர வேண்டும். இதுமட்டும் போதுமா என்றால், போதாது.


நாம்(ஆண்) மட்டும் வெளியே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மூழ்கித் திளைக்காமல் மனைவியின் வேலையைப் பகிர்ந்து கொள்வோம். ஏனென்றால் ஆண்களாகிய நமக்கு விடுமுறை தினமாக ஞாயிற்றுக் கிழமையாவது உள்ளது, அவர்களுக்கு அந்த நாள் கூட விடுமுறை (ஓய்வு) கிடையாது. ஆண்/பெண் இருவருமே வெளியே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் கண்டிப்பாக எல்லா வேலைகளையும் இருவரும் ப‌கிர்ந்து கொள்ள வேண்டும்.
எனக்குப் பெண்கள் செய்யும் வேலை எதுவும் செய்யத் தெரியாதே என சாக்கு போக்கு சொல்ல வேண்டாம். ஏனென்றால் வீட்டில் பெண்கள் செய்யும் இந்த வேலைகளை எல்லாம் (வீட்டிற்கு) வெளியே சம்பளத்திற்காக செய்வது பெரும்பான்மையாக ஆண்களாகிய நாமே.  அவர்களை வீட்டு மனைவி (House Wife) என அழைக்கும் நமது கயமையை நிறுத்திவிட்டு, வீட்டை உருவாக்குபவர்கள், நிர்வகிப்பவர்கள் ("Home Maker") என  அழைக்கத் தொடங்குவோம். இங்கு நடைபெறுவது பெயர் மாற்றம் மட்டுமல்ல ஆண்களாகிய நமது மனமாற்றமும் தான். நம்முடன் வாழும் சக மனிதர்களாகிய பெண்களை, அவர்களது உழைப்பை மதிப்போம் , அவர்கள் மீது உண்மையான அன்பைப் பொழிவோம்.


அன்னை, மனைவி, அக்கா, தோழி என என்னுடன் பயணிக்கும் எல்லா பெண்களுக்கும், உலகில் உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்".

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

205 அடி உயர ரோலர்கோஸ்டர் உச்சியில் பொறியியலாளர்கள் பிறந்த தினக் கொண்டாட்டம்

பிரிட்­டனில் 205 அடி உய­ர­மான ரோலர்­கோஸ்டர் ஒன்றின் உச்­சியில், பொறி­யி­ய­லா­ளர்கள் பலர் கம்­பி­களில் தொங்­கி­ய­வாறு பிறந்த தினக் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இங்­கி­லாந்தின் சறே பிராந்த்­தி­யத்­தி­லுள்ள தோர்ப் பூங்­கா­வி­லுள்ள இந்த ரோலர் கோஸ்­டரின் உச்­சி­யி­லேயே இக்­ கொண்­டாட்டம் நடை­பெற்­றது.

பரா­ம­ரிப்பு நட­வ­டிக்­கை­களின் பின்னர் இப்­ பூங்கா கடந்த வியா­ழக்­கி­ழமை மீண்டும் பொது­மக்­க­ளுக்­காக திறக்­கப்­பட்­டது.

இதனை முன்­னிட்டு, மேற்­படி ரோலர்­கோஸ்­டரை சுத்தம் செய்­வ­தற்­காக பரா­ம­ரிப்புப் பொறி­யி­ய­லா­ளர்கள் ரோலர்­கோஸ்­டரின் உச்­சியில் ஏறினர்.

இதன்­போது ரோலர்­கோஸ்­டரின் 200 ஆவது பிறந்த தினக் கொண்­டாட்­ட­திலும் பொறி­யி­ய­லா­ளர்கள் ஈடு­பட்­டனர்.

205 அடி உய­ரத்தில் பொறி­ய­லா­ளர்கள் கேக் வெட்டி உட்­கொண்­ட­துடன் தமது தலைக்­க­வ­சங்­க­ளுக்கு மேலாக பிறந்தநாள் கொண்டாட்ட தொப்பியும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக் கது.

Thorpe-Park-

 

Thorpe-Park

PROD-Thorpe-Park-opening-preparations

http://metronews.lk/

  • தொடங்கியவர்

பாரம்பரியமிகு உழவரின் கடல் கடந்த மாட்டு பந்தய போட்டி..!

 

உழவரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், 400 வருடங்கள் பழமையான மாட்டு பந்தய ஓட்டப்போட்டி, பச்சு ஜாவி எனும் பெயரில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா பிராந்தியத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு வருடமும் அறுவடை காலம் நிறைவடைந்த நிலையில், கொண்டாடப்படும் பச்சு ஜாவி நிகழ்வில், உழவர்கள் தமது இரண்டு மாடுகளை ஒன்றாக கட்டி அதன் மீது நின்றவாறு இயக்கவே மாடுகள் வேகமாக ஓடி தமது திறமையை வெளிகாட்டும் நிகழ்வானது, கடந்த 400 வருடங்களாக இந்தோனேசிய மக்களால் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ஆர்க்டிக்கின் அழகான நரி!

 
arctic_fox_3145927f.jpg
 
 
 

காடுகளில் வாழும் நரிகளைப் பற்றி பாடப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். கடலோரப் பகுதிகளில் வாழும் நரிகளைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? அந்த நரியின் பெயர் ஆர்க்டிக் நரி!

வெள்ளை நரி, துருவ நரி, பனி நரி என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன ஆர்க்டிக் நரி. ஆனால், ஆர்க்டிக்கில் துந்த்ரா என்ற நிலப் பகுதியில் இவை காணப்படுவதால், ஆர்க்டிக் நரி என்று அழைக்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டர் உயரத்தில், தென் துருவத்தின் பனிப் பிரதேசங்களில் இந்த நரிகள் வாழ்கின்றன. ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, வட ஐரோப்பா, ரஷ்யா, கனடா, அலாஸ்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.

2_3145928a.jpg

இது பார்ப்பதற்கு ஒரு பெரிய பூனையின் அளவுக்கு இருக்கும். இதன் ரோமம் பருவக் காலத்துக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டது. குளிர்காலத்தில் இதன் அடர்ந்த ரோமம் வெள்ளை நிறமாகத் தெரியும். கோடைக் காலம் ஆகிவிட்டால் சாம்பல் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் இருந்தால்கூட எந்தப் பிரச்சினையின்றியும் இது வாழும். ஏனென்றால், இது வெதுவெதுப்பான முடியுள்ள பாலூட்டி.

இந்த ஆர்க்டிக் நரிகளுக்கு அபாரமான கேட்கும் திறனும் மோப்பச் சக்தியும் உண்டு. பனிக்கு அடியில் ஒளிந்திருக்கும் இரையைக்கூட வெகு சுலபமாகக் கண்டுபிடித்துச் சாப்பிடும். லெம்மிங்குகள், கடல் பறவைகள், அதன் முட்டைகள், சீல் குட்டிகள், மீன்கள் ஆகியவற்றை விரும்பி சாப்பிடும். துருவக் கரடி மிச்சம் வைத்து விட்டுப் போகும் உணவையும் சாப்பிடும். பனிப் பிரதேசத்தில் ஒய்யாரமாக வாழ்ந்துவரும் இதன் ஆயுட்காலம் 3 முதல் 6 ஆண்டுகள் மட்டும்தான்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

நேபாளத்தில் சுகாதார மையங்கள் கட்டும் மெஸ்ஸி!

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, நேபாளத்தில், 14 சுகாதார மையங்களை கட்டி வருகிறார்.

Messi

நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த நாடே ஸ்தம்பித்தது. இதையடுத்து, அங்கு 74 சுகாதார மையங்கள் கட்ட யுனிசெஃப் ஒப்பந்தமிட்டது.

இவற்றில் 14 சுகாதார மையங்களை அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி கட்டுகிறார். யுனிசெஃப் உதவியுடன் அவர். இந்த சுகாதார மையங்களை கட்டுகிறார். தற்போது, மூன்று சுகாதார மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டனர். மேலும் 11 மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதையடுத்து, வருகின்ற ஏப்ரல் மாதத்துக்குள் மீதம் உள்ள சுகாதார மையங்கள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மழை காலத்துக்குள் அனைத்து, சுகாதார மையங்களும் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மெஸ்ஸி, யுனிசெஃபின் நட்சத்திர தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் டைட்டுக்கு இந்தியா அங்கீகாரம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் டைட்டுக்கு, வெளிநாடு வாழ் இந்தியர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Shaun tait

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட். இவர் ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும்போது, கடந்த 2014-ம் ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த மஷூம் சின்ஹாவை திருமணம் செய்தார். இதையடுத்து, வெளிநாடு வாழ் இந்தியர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ஷான் விண்ணப்பத்திருந்தார். தற்போது அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு வெளிநாடு வாழ் இந்தியர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதற்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆங்கில நாவல்கள் எழுதும் தமிழ்ப் பெண்!

இன்ட்ரஸ்ட்டிங்!ஸ்ரீலோபாமுத்ரா

 

ரபரப்பான பெங்களூரூ நகரத்தில் வசிக்கிறார் ராதிகா நாதன். ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பெண். `The Mute Anklet' மற்றும் `Time to Burnish' ஆகிய இவரின் இரண்டு நாவல்களும் சிறப்பு. கதையில் வரும் உரையாடல்கள் போலவே ரசனையுடன் பேசுகிறார் ராதிகா.

40p1.jpg

‘`நான் மதுரைப் பெண். அம்மா அரசு ஊழியர், அப்பா வங்கிப் பணியாளர். எல்லா வார, மாத இதழ்கள், நாவல்களையும் அவர்கள் வாங்கிப் படிப்பார்கள். சிறுவயதில் சரித்திர நாவல்கள், சிறுகதைகள், தத்துவம், உளவியல் என வெவ்வேறு வகைப் புத்தகங்களை நான் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். சாண்டில்யன், சுஜாதா இருவரின் எழுத்துகளும் என்னை மிகவும் வசீகரித்தவை. சுஜாதாவின் நாவல்களை ஏதோ தேர்வுக்குத் தயார் செய்வதைப்போல மீண்டும் மீண்டும்  படித்துக்கொண்டே இருப்பேன். எழுத்துக்கு மட்டுமல்ல, இந்த வாழ்வை அணுகும் விதத்துக்கும் என் ஹீரோ சுஜாதா சார்தான்!

கல்லூரித் தோழிகளில் ஒருத்தி முதல் பாதிக் கதையை எழுத, மற்றொரு தோழி மீதிக் கதையை எழுதி முடிக்க வேண்டும். எங்களுக்குள் இப்படி விளையாடிக்கொள்வோம். நான் தனிப்பட்ட முறையில் எழுதிய சிறுகதைகளை உறவினர் மற்றும் தோழிகளிடம் கொடுத்து படிக்கச் செய்து, கருத்துகளைக் கேட்டறிந்து, அதற்கேற்ப என் எழுத்தையும் எண்ணத்தையும் மேம்படுத்திக்கொண்டேன். அப்படி எழுதிய கதைகளில் ஒன்று ‘தென்றல்’ பத்திரிகையில் பிரசுரமானது. மற்றொரு கதை ‘கல்கி’ இதழில் வெளிவந்தது’’ என்கிற ராதிகா, ஆங்கில எழுத்தைக் கைக்கொண்டது அவர் பேராசிரியரின் வழிகாட்டுதலின்படி. 

‘`கல்லூரியில் என் ஆங்கிலப் பேராசிரியர், ‘நீ இங்கிலீஷும் சூப்பரா எழுதுவதானே? அப்போ கற்பனை வளத்தை அந்த மொழியிலும் வெளிப்படுத்தலாமே?’ என்று கேட்டார். முதலில் கட்டுரைகள், சிறுகதைகள் என எழுத ஆரம்பித்தேன். 15 வருடங்களுக்கு முன் பிளாக் உருவாக்கி, என் எழுத்துகளை அதில் பதிவிட ஆரம்பித்தேன்.

40p2.jpg

திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கை அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நகர்ந்தபோதும், எழுத்தையும் விருப்பத்துடன் எடுத்து வந்தேன். பெற்றோரும் புகுந்த வீட்டினரும் தந்த ஊக்கத்தில் ஆங்கில நாவல் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு சாப்டர் முடித்த பின்னும், என் இரு பெண்களிடமும் கொடுத்து அதைப் படிக்கக் கொடுப்பேன். அவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வேன்’’ என்கிற ராதிகாவுக்கு, இப்போது வயது 43. ஐ.டி துறையில் பணிபுரிகிறார். இவர் கணவரும் ஐடி பணியாளரே. www.rathikanathan.com என்கிற தன் வலைதளத்தில் பல நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துவருகிறார்.

‘`என் நாவல்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் புதுமைப் பெண்களாகவே தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் எழுதினாலும், சென்னை, தஞ்சாவூர் இவற்றை மையப்படுத்தி நகரும் என் கதைக்களம் தமிழ் நாவல் படிப்பது போன்ற நெருக்கத்தைக் கொடுக்கும்.

முதல் நாவல் எழுதியபோது, ஹார்டு டிஸ்க்கில் சேமித்திருந்த டிராஃப்ட்டை ரிட்ரீவ் (retrieve) செய்ய முடியாமல் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் எழுதினேன். முதல் நாவலை எழுதி முடித்து பதிப்பாளருக்கு அனுப்பும் வரை நல்ல தலைப்பு கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு கால் சிலம்பினால் நீதி கிடைத்தது நினைவுக்கு வர, `The Mute Anklet' என்று தலைப்பிட்டேன்’’ என்றவர்,

‘`என் அப்பா பத்திரிகையில் வந்த சிலை கடத்தல் குறித்த செய்தியை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அதுகுறித்து அறிந்துகொள்வதற்காக ஆராய்ச்சியில் இறங்கினேன். நாவல்களில் வரும் மயிர்க்கூச் செறியும் காட்சிகளை மிஞ்சும் வகையில் நிஜத்தில் நடப்பது புரிந்தது. பெங்களூரு கஸ்தூரிபாய் சாலை அருங் காட்சியகத்துக்குச் சென்று விவரங்கள் சேகரித்தேன். அதோடு, தில்லை நடராஜப் பெருமானின் தாண்டவம் பற்றிய தகவல்களை அறிந்தபோது நான் அடைந்த ஆனந்த அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இவற்றையெல்லாம் என் இரண்டாவது நாவலான `Time to Burnish'-ல் விளக்கியுள்ளேன்.

எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என்பதே நாவல் எழுதுவதில் உள்ள சிரமம். என்னைச் சுற்றி நடப்பதை கூர்ந்து கவனித்து எழுதுவதன் மூலம் உலகத்துடன் என்னை இணைத்துக்கொள்கிறேன்!'' என்கிறார்.

`இரண்டாம் உலகப் போரில் தமிழகத்தின் பங்கு' - ராதிகா இப்போது எழுதிக் கொண்டிருக்கும் மூன்றாவது நாவலின் கதைக்கரு இதுதானாம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நூல்களின் அற்புத உலகம்!

 
 
கேரே எஸ். தாமஸ் நூலகம், சென்வர் செமினரி, கொலராடோ.
கேரே எஸ். தாமஸ் நூலகம், சென்வர் செமினரி, கொலராடோ.
 
 

அமெரிக்க ஒளிப்படக் கலைஞர் தாமஸ் ஆர். ஷிஃப் எடுத்த ஒளிப்படங்கள்தான் இவை. அமெரிக்காவில் உள்ள பல்வேறு நூலகங்களை தாமஸ் ஆர். ஷிஃப் ஒளிப்படம் எடுத்திருக்கிறார். இந்த ஒளிப்படங்களெல்லாம் ஆல்பெர்ட்டோ மேங்குவெல் என்பவரின் ‘தி லைப்ரரி புக்’ என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ‘பேனரமிக் கேமரா’வைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் இவை.

lincoln_3146913a.jpg
லிங்கன் பொது நூலகம், இல்லினாய்ஸ்

sanfrancisco_3146911a.jpg
பருவ இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்குமான ஹெர்ப் கான் மையம், சான் ஃபிரான்ஸிஸ்கோ பொதுநூலகம்.

அமெரிக்கக் கலாச்சாரத்தில் நூலகங்கள் மிக முக்கியமான பங்குவகிக்கின்றன. அமெரிக்காவின் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ உலகில் மிகப் பெரிய நூலகம். உலக அறிவின் மிகச் சிறந்த பங்களிப்புகள் இங்கே இடம்பெற்று ஒவ்வொரு அமெரிக்கரும் அதை அடைய வேண்டும் என்ற இலக்கில் 216 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதைப் போல அமெரிக்க நூலகங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. நூல்களின் சேகரங்கள் மட்டுமல்ல நூலகக் கட்டிடங்களும் மிகவும் தனித்துவமானவை. தாமஸ் ஆர். ஷிஃப் எடுத்த ஒளிப்படங்களில் அமெரிக்க நூலகங்கள் ஆலீஸின் அற்புத உலகம் போல் மிளிர்கின்றன.

iowa_3146914a.jpg
ஐயோவா சட்ட நூலகம், த மைய்ன்

pensyllvania_3146912a.jpg
பென்சில்வேனியா நூலகத்தின் வரலாற்று மையம், ஃபிலடெல்ஃபியா.

நன்றி: தி கார்டியன்

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: மக்கள் தீர்ப்பா, குமாரசாமி தீர்ப்பா?

 

 
t_3146919f.jpg
 
 
 

1_3146926a.jpg

2_3146925a.jpg

3_3146924a.jpg

4_3146923a.jpg

5_3146922a.jpg

6_3146921a.jpg

7_3146920a.jpg

 

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • தொடங்கியவர்

புதிய மேகக் கூட்டங்கள் கண்டுபிடிப்பு

 

 

உலகில் பதினொரு புதிய வகை மேகங்களை (மேக அமைப்புகளை) தாம் கண்டறிந்துள்ளதாக பிரித்தானிய மற்றும் உலக வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில், மேகக் கூட்டங்களைப் படம் பிடிக்கும் கலைஞர்கள் அனுப்பிய புகைப்படங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இந்த பதினொரு புதிய மேகக் கூட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

2_V_Cloud5.jpg

இதுபோன்ற மேகக் கூட்டங்கள் வானிலை மாற்றங்களால் அவ்வப்போது தோன்றி வருவதையடுத்தே இவற்றையும் தாம் வகைப்படுத்தியிருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

2_V_Cloud2.jpg

மேகக் கூட்டங்களின் அடர்த்தி மற்றும் தோற்றங்களை வைத்தே அவை வகைப்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பதினொரு மேகக் கூட்டங்களுக்கும் பெயரிடுவதுதான் சற்றுச் சிரமமான பணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2_V_Cloud3.jpg

மெலிந்த கீற்றுப் போன்ற மேகங்கள், அடர்த்தியான திரள் மேகங்கள், பயமுறுத்தும் விதத்தில் உள்ள கருமேகங்கள், வில்லைகள் போன்ற மேகங்கள் எனப் பல வகையான மேகக் கூட்டங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

2_V_Cloud7.jpg

இதற்கு முன் 1987ஆம் ஆண்டிலேயே புதிய வகை மேகங்கள் இனங்காணப்பட்டு வகைப்படுத்தப்பட்டன. அதன் பின் சரியாக முப்பது ஆண்டுகளின் பின் தற்போது மீண்டும் புதிய மேகக் கூட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2_V_Cloud4.jpg

உலகெங்கும் உள்ள சுமார் 43 ஆயிரம் புகைப்படக் கலைஞர்கள் அனுப்பியிருந்த சுமார் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் படங்களின் அடிப்படையிலேயே பதினொரு வகை மேகக் கூட்டங்கள் வகுக்கப்பட்டதாக உலக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

டென்னசி வில்லியம்ஸ்

 
 
 
 
dennici_3147435f.jpg
 
 
 

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னணி நாடகாசிரியரும் படைப்பாளியுமான டென்னசி வில்லியம்ஸ் (Tennessee Williams) பிறந்த தினம் இன்று (மார்ச் 26).

* மிசிசிப்பி மாநிலத்தில் கொலம்பஸ் நகரில் பிறந்தார் (1911). தாமஸ் லேனியர் வில்லியம்ஸ் III இவரது இயற்பெயர். தனது 28-வது வயதில் தன் பெயரை டென்னசி வில்லியம்ஸ் என மாற்றிக்கொண்டார். ஸோல்டன் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் சிட்டி உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார்.

* 12 வயதில் அம்மா இவருக்கு ஒரு தட்டச்சு இயந்திரம் வாங்கிக் கொடுத்தார். அப்போதே எழுத ஆரம்பித்து விட்டார். 16-வது வயதில் எழுதிய ஒரு கட்டுரைக்குப் பரிசு கிடைத்தது. அடுத்த ஆண்டே இவர் எழுதிய ‘தி வெஞ்ஜன்ஸ் ஆஃப் நைட்டோகிரிஸ்’ என்ற சிறுகதை வெளிவந்தது.

* 1929-ல் மிசோரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது ஊடகவியலும் பயின்றார். அந்த சந்தர்ப்பத்தில் வருமானம் ஈட்டுவதற்காகக் கவிதை, கட்டுரைகள், கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதும் போட்டிகளில் கலந்துகொண்டார்.

* கல்லூரிப் படிப்பை நிறுத்திய தந்தை இவரை சர்வதேச காலணி நிறுவனத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். இந்த வேலை இவருக்கு சலிப்பூட்டவே, அதிகமாக எழுத ஆரம்பித்தார்.

* குடிகார அப்பா, எப்போதும் சோகமயமாய் இருக்கும் அம்மா இவர்களுடன் வாழ்ந்து வந்த இவருக்கு வேலையும் பிடிக்கவில்லை; எழுத்திலும் பெரிதாக சாதிக்க முடியவில்லை எனப் பல காரணங்களால் 24 வயதான இவருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்பட்டது. வேலையை விட்டார்.

* 1936-ல் செயின்ட் லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பின்னர் அயோவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். டிராமாடிக் வொர்க் ஷாப்பில் சேர்ந்து பயின்றார். எது எப்படி இருந்தாலும் எப்போதும் எழுதிக்கொண்டே இருந்தார்.

* நியு ஆர்லியன்சில் இருந்தபோது மெட்ரோ கோல்ட்வின் மேயர் ஃபிலிம் ஸ்டுடியோவில் ஒப்பந்த எழுத்தாளராகப் பணியாற்றினார். 1944-ல் இவர் படைத்த ‘தி கிளாஸ் மெனாஜெரி’ இவரது திடீர் புகழுக்குக் காரணமாக அமைந்தது. குறிப்பாக, இவரது ‘ஏ ஸ்ட்ரீட்கார் நேம்ட் டிசையர்’ நாடகம் அமெரிக்காவில் 20-ம் நூற்றாண்டில் வெளிவந்த தலைசிறந்த நாடகங்களுள் ஒன்றாகப் போற்றப்பட்டது.

* அமெரிக்காவின் சிறந்த நாடகாசிரியர்களுள் ஒருவராகப் புகழ்பெற்றார். இவரது படைப்புகள் பெரும்பாலும் இவரது வாழ்க்கையையே பிரதிபலித்தன. மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்ட தன் சகோதரியை அன்புடன் பராமரித்துவந்தார்.

* இவரது பெரும்பாலான நாடகங்களைத் தழுவிப் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. நாடகங்கள், ஓரங்க நாடகங்கள் தவிர, சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை உள்ளிட்ட அத்தனை களங்களிலும் முத்திரை பதித்தார். 2 முறை புலிட்சர் பரிசு, 3 முறை நியுயார்க் டிராமா கிரிட்டிக்ஸ் சர்க்கிளின் விருது, 3 டொனால்ட்சன் விருது, செயின்ட் லூயிஸ் லிட்ரரி விருது மற்றும் டோனி விருது என பல பரிசுகளும் விருதுகளையும் பெற்றார்.

* 1979-ல் அமெரிக்கன் தியேட்டர் ஹால் ஆஃப் ஃபேமில் இவரது பெயர் இணைக்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் ஆர்த்தர் மில்லர், யூஜின்ஓநில், டென்னசி ஆகிய மூவரும் அமெரிக்க நாடகத் துறையின் முக்கிய ஆளுமைகளாகப் போற்றப்பட்டனர். அமெரிக்க நாடகத் துறையில் முன்னணி நாடகாசிரியர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட டென்னசி வில்லியம்ஸ் 1983-ம் ஆண்டு 72-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

இணையில்லாத் தோழி வேண்டும்
 
 

article_1490587584-u-iyuo978.jpgஎன் காதலியின் பிரதேசத்துக்குப் போனபோது, நான் காணாமல்போய் விடுகின்றேன். எனது வாலிபம் இவளது அன்பினால் கொள்ளையடிக்கப்படுகின்றது.

நான் கோழையாய்ப் போனேனா? அல்லது இவள் பேரன்பைப் பெற்ற வீரனாகி விட்டேனா எனத் தெரியவில்லை. மன்மதன் கூட காதலியின் முன், தன்னிலை மறந்து விடுவான்.

பெண்ணின் ஆளுமையினால் உருவான பிரேமையும் இவளால் பெற்ற புதுவித அனுபவங்களும் அநேகம். இவளிடம் மெல்லிய ஸ்பரிசத்தை சுவீகரித்தமையினால் நான் வலிமை பெற்றவனாகினேன். இந்த ஈர்ப்பு பாரிய விஸ்வரூப இன்பப் புயலை என்னுள் பிரவாகித்து விட்டமை அற்புதம்.

நான் ஒருத்தியிடம் திருட்டுப்போன ஆத்மாவாகி விட்டேனா என எண்ணுகையில் கணப்பொழுதும் மகிழ்ந்து போகின்றேன். வாழ்க்கைக்கு இணையில்லாத் தோழி வேண்டும். முதுமையிலும் என்னுடன் இணையவேண்டும்.

ஒருவரை ஒருவர் ஆகர்ஷிக்காதுவிடின் அமைதியும் இன்பமும் வந்துவிடுமோ? தனித்து வாழுதல் சிரமம்தான். இதனால்த்தானே இல்லறத்தை உலகம் இயற்றியது.

இவ்வறம் உலகில் செழிக்குக.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

மார்ச் – 27

 

513 : ஸ்பானிய நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன், புளோ­ரி­டா­வுக்­கான தனது பய­ணத்தில் பஹாமஸ் தீவின் வட­ப­கு­தியை அடைந்தார்.


1625 : முதலாம் சார்ல்ஸ் இங்­கி­லாந்து, ஸ்கொட்­லாந்து, மற்றும் அயர்­லந்து மன்­ன­ராக முடி சூடினார். அத்­துடன் பிரான்ஸ் மன்­ன­ரா­கவும் தன்னை அறி­வித்தார்.


1797: அமெ­ரிக்­காவில் நிரந்­தர கடற்­படை ஸ்தாபிக்­கப்­பட்­டது. 


1854 : முத­லா­வது கிரைமியா போர்:  ரஷ்யா மீது போரை ஐக்­கிய இராச்­சியம் போர்ப் பிர­க­டனம் 
செய்­தது. 


1890 : அமெ­ரிக்­காவின் கென்­டக்கி மாநி­லத்தில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறா­வளி தாக்­கி­யதில் 76 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1918 : மோல்­டோவா, பெச­ரா­பியா ஆகி­யன ருமே­னி­யா­வுடன் இணைந்­தன.


1941 : இரண்டாம் உலகப் போர்: யூகோஸ்­லா­வி­யாவில் அச்சு அணி­ஆ­த­ரவு அர­சாங்கம் யூகோஸ்­லா­விய வான்­ப­டை­யி­னரால் கவிழ்க்­கப்­பட்­டது.


1958 : நிக்­கிட்டா குருஷேவ், சோவியத் யூனியனின் பிர­த­ம­ரானார்.


1964 : அமெ­ரிக்க வர­லாற்றில் அதி சக்தி வாய்ந்த 9.2 ரிச்டர் பூகம்பம் அலாஸ்­காவில் இடம்­பெற்­றது. இதனால் அன்­கரேஜ் என்ற நக­ரத்தின் பெரும் பகுதி சேத­முற்­றதுடன் 125 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1968 : விண்­வெ­ளிக்குச் சென்ற முதல் மனி­த­ரான சோவியத் ஒன்­றி­யத்தின் யூரி ககாரின் விமான விபத்­தொன்றில் கொல்­லப்­பட்டார்.


1969 : நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானி­யங்கி விண்­கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்­பட்­டது.


1970 : கொன்கோர்ட் விமானம் தனது முத­லா­வது சுப்­பர்­சோனிக் பய­ணத்தை மேற்­கொண்­டது.


1977 : அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­தி­லுள்ள கனாறி தீவு­க­ளி­லுள்ள ஓடு­பா­தையில் இரண்டு பய­ணிகள் விமா­னங்கள் மோதிக் கொண்­டதால் கே.எல்.எம். விமா­னத்­தி­லி­ருந்த 248 பேரும், பான் எம் விமா­னத்­தி­லி­ருந்த 335 பேரு­மாக 583 பய­ணிகள் பலி­யா­கினர். 61 பேர் உயிர் தப்­பினர். வர­லாற்றில் அதிக உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­திய விமான விபத்து இது.


1980 : நோர்­வேயின் எண்ணெய்த் தாங்கி ஒன்று வட கடலில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 123 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1993 : ஜியாங் செமின் மக்கள் சீனக் குடி­ய­ரசின் ஜனா­தி­ப­தி­யானார்.


2000 : அமெ­ரிக்­காவில் பெற்­றோ­லிய ஆலை­யொன்றில் இடம்­பெற்ற வெடிப்புச் சம்­ப­வத்தில் 71 பேர் உயி­ரி­ழந்­தனர்.


2009 : பாகிஸ்­தானில் பள்­ளி­வா­ச­லொன்றில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் 48 பேர் உயி­ரி­ழந்­தனர். 


2009 : இந்­தோ­னே­ஷி­யாவில் செயற்கை ஏரியொன்று உடைந்ததால் 99 பேர் உயிரிழந்தனர். 


2016 : பாகிஸ்தானின் லாகூர் நகரில் பூங்காவொன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 70 பேர் பலியானதுடன் 300 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

எங்க நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் கிரிக்கெட்தான்!’ - ட்ரோல் கிரிக்கெட் தமிழ் வெர்ஷன் அட்மின்கள்!

ட்ரெண்டாகும் விஷயங்களை ஐடியாவாக வைத்து மீம் அப்லோட் பண்றது வழக்கம். அதில் பெரும்பாலும் சினிமா, கிரிக்கெட் தொடர்பானவையாக இருக்கும். அப்படி கிரிக்கெட்டுக்கு என்று பல ட்ரோல் பேஜ்கள் இருந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர் இந்த இரண்டிலும் பேமஸ் 'ட்ரோல் கிரிக்கெட் தமிழ் வெர்ஷன்' என்ற இந்தப் பக்கம்தான். பெயரை வைத்து தப்பா புரிஞ்சுக்க வேண்டாம் மக்களே... இவங்க ட்ரோல் பண்றது கிரிக்கெட்டை இல்லை... கிரிக்கெட்டில் நடக்குற சுவாரசியமான விஷயங்களையும், ரசிக்கும்படியான கலாய் நிகழ்வுகளையும் வெச்சு மீம்ஸ்களை போடுவதுதான் இவங்க குல தொழிலே. இப்போ நடந்துட்டு இருக்க டெஸ்ட் மேட்சில் கூட 'புஜாரா' முதல் 'ஸ்டீவன் ஸ்மித்' வரைக்கும் 'வெச்சு' செய்யும் அந்தப் பேஜ் அட்மின்களுள் ஒருவர் நம்மிடம் சேட்டில் சிக்கினார்.

ட்ரோல் கிரிக்கெட்

யார்யா நீங்க எனக்கே உங்களை பார்க்கணும் போல இருக்கு'?

ட்ரோல் கிரிக்கெட்

ஆரம்பிக்கும்போது 6 பேர்தான் இருந்தோம். அடுத்து பிக் அப் பண்ணி இப்போ இதுக்குன்னு ஒரு பதினாறு பேர் கொண்ட குழு இருக்கு என்றார் சிரித்தபடி. 2014-ல் இலங்கைக்கு எதிரான மேட்சில் இருந்து ஆரம்பித்ததுதான் இந்த பேஜ். அந்த மேட்சில் ரோகித் ஷர்மா 264 ரன்கள் அடித்தார். அதிலிருந்து நாங்களும் மீம்ஸ் ரெடி பண்ணி களத்தில் இறங்கி அடிக்கலாம் என்று முடிவு பண்ணோம். பின் சோஷியல் மீடியாவில் தனித்தனியாய் இருந்த சில பேஜ்களையும் அதன் அட்மின்களையும் ஒண்ணு சேர்த்து உருவான கூட்டம்தான் இந்த 'ட்ரோல் கிரிக்கெட் தமிழ் வெர்ஷன்'. ஒருவருக்கொருவர் தெரியாத முகம்தான். ஆனா, சீக்கிரமே நண்பர்கள் ஆயிட்டோம். இதில் மூணு, நாலு பேர் வேலை பாக்குறாங்க. மத்தபடி எல்லாரும் ஸ்டூடண்ட்ஸ்தான்.  

அது ஏன் குறிப்பிட்டு கிரிக்கெட்டில் களம் இறங்குனீங்க?

ட்ரோல் கிரிக்கெட்

கிரிக்கெட்னா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு தொடர் வர வர எங்களுக்கு முரட்டுத் தீனி. அப்போ எங்களோட முக்கியமான நோக்கமே 2015 உலக கோப்பைதான். அப்புறம் ஒவ்வொரு மேட்ச்லயும் எங்க வேட்டை தொடங்குச்சு. மீம்ஸ் நல்லா ரீச் ஆனதால அப்படியே தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சுட்டோம். சில மீம்ஸ்களுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குள்ளேயே சண்டை வரும். தோனி ரசிகர்கள் ஒரு பக்கம், கோலி ரசிகர்கள் ஒரு பக்கம்னு மோதிப்பாங்க. அந்த சண்டைகள் எல்லாம் குறையணுங்கிறதுதான் எங்க நோக்கம்.

மறக்க முடியாத பாராட்டுகள் ஏதாவது?

ட்ரோல் கிரிக்கெட் தமிழ் வெர்ஷன்

அது நிறைய வந்துருக்கு. ஒரு தடவை 'டைம்ஸ் நவ்' பேஜில் எங்க மீம் போட்ருந்தாங்க. அதை பார்க்கும்போது செம ஹேப்பி. இலங்கை நியூஸ் பேப்பர்லேயும் எங்க மீம்ஸ் போட்ருந்தாங்க. இலங்கை வரைக்கும் பேமஸ் ப்ரோ நாங்க. அட இதையெல்லாம் விடுங்க ப்ரோ, விகடன்லயும் வேர்ல்ட் கப் டைம்ல எங்க மீம்ஸ்தான் போட்டாங்க. (இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே... அடேங்கப்பா). அப்பப்போ டி.விலகூட வந்துருக்கு. நம்ம வீரேந்தர் சேவாக் கூட அவரோட ட்விட்டர் பக்கத்துல எங்க மீமை ஷேர் செஞ்சுருக்காரு ப்ரோ. அவருக்கு தமிழ் தெரியலைனாலும் ஒருத்தர் மொழிபெயர்த்து போட்ருந்ததை ரீட்வீட் பண்ணிருந்தாரு.

அடுத்த கேள்வி என்னன்னா....?

'போதும் ஜி! ரொம்ப லென்த்தா போகுது. இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் வேற போயிட்டிருக்கு. ஐ.பி.எல் மீம்ஸ் வேற ரெடி பண்ணணும். ஸோ, நாங்க உத்தரவு வாங்கிக்குறோமே' என எஸ்கேப்பானார்.

தொடர்ந்து ட்ரோல் பண்ணுங்கய்யா!  

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

யாழ் நூல் தந்த கிழக்கிலங்கையின் தவப்புதல்வன் சுவாமி விபுலானந்தரின் ஜனன தினம் இன்று.

இவரது தமிழ்ப்பணிகள் அரும் பணிகளைப் போற்றுவோம்.

  • தொடங்கியவர்

கன்னிப்பெண்களுக்கு புதிய கால் அணிகலன்

 

இப்போது இந்தியாவில் கன்னிப் பெண்களிடையே பிரபலமாகிவரும் பேஷன்களில் இதுவும் ஒன்று. இதுதொடைப் பகுதியை அழகுபடுத்தும் அணிகலன்.

 
 
 
 
கன்னிப்பெண்களுக்கு புதிய கால் அணிகலன்
 
காலுக்கு அணியும் ‘நெக்ஸஸ்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்போது இந்தியாவில் கன்னிப் பெண்களிடையே பிரபலமாகிவரும் பேஷன்களில் இதுவும் ஒன்று. இதுதொடைப் பகுதியை அழகுபடுத்தும் அணிகலன்.

டெல்லி, மும்பை, பெங்களூரு கல்லூரி மாணவிகளிடையே பிரபலமாகி வரும் இந்த அணிகலன், டீன்ஏஜ் பருவத்தினருக்கு பிடித்தமான பேஷன் பொருளாகிக்கொண்டிருக்கிறது. இதற்கான மவுசு அதிகரித்துக்கொண்டிருப்பதால், பல்வேறு வடிவங்களில் இதை உருவாக்க வடிவமைப்பு நிபுணர்கள் முன்வந்திருக்கிறார்கள். தங்க நகை வடிவமைப்பாளர்களும் இதை புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இது ஒன்றும் தற்கால நவநாகரிக அணிகலன் அல்ல. பழங்காலத்திலே இது போன்ற தொடை அணிகலன்கள் பெண்களால் விரும்பி அணியப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாட்டிய நங்கையர்கள் உடைக்கு மேல் இந்த அணிகலனை அணிந்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் மாதவி இந்த அணிகலனை விரும்பி அணிந்திருக்கிறார்.

C54E37A6-76A4-4E8D-A8E0-D4408B7B7C25_L_s

காலுக்கு அழகு செய்யும் இந்த அணிகலனை தற்போது ஜீன்ஸ் மீது பெண்கள் அணிகிறார்கள். இந்தி நடிகைகள் பலரிடமும் இந்த பேஷன் ஜூரம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இதன் மேற்பகுதியை இடுப்பில் சொருகிக் கொண்டால், மீதமுள்ள சங்கிலியை காலுக்கேற்றாற்போல அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். காலுக்கு ஏற்றபடி அணிந்து, கடைசி கொக்கியை இழுத்து மாட்டிவிட்டால் தொடை செயின் சூப்பர் அழகைத்தருகிறது.

கால்களுக்கு கொலுசு அணிவது கொஞ்சம் மாறுபட்டு தொடைவரை சென்றிருக்கிறது. இதை ஒரு காலில் அணிவது மட்டுமே பேஷன். அதனால் ஒற்றையாக தான் கிடைக்கிறது. பெண்கள் லெகிங்ஸ் மீது அணிந்துகொண்டாலும் அழகு தருகிறது. அதே நேரத்தில் ஜீன்ஸ், லெகிங்ஸ் போன்று உடலை ஒட்டியபடி இருக்கும் உடைகளுக்கே இது பொருத்தாக இருக்கிறது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வருடத்தின் பிரமாண்ட புகைப்படங்களுக்கான தெரிவுகள் ஆரம்பம்..!

 

வருடத்தின் சிறந்த புகைப்படத்தை தெரிவு செய்வதற்காக சோனி நிறுவனம் நடத்தி வரும் விருது வழங்கள் போட்டியில், இம்முறை உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 227, 596 புகைப்படங்கள், விருதுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவற்றிலிருந்து 49 நாடுகளை சேர்ந்த புகைப்படங்கள் இறுத்திக்கட்டப் போட்டியிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதிக்கட்ட தெரிவுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுகுழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

கோயமுத்தூரிலிருந்து காரிலேயே சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 23 நாடுகள் வழியாக 70 நாட்களில் லண்டன் செல்லும் சாதனை பெண்கள் 3 பேர் இன்று புதுச்சேரி வந்தனர். அவர்களை கவர்னர் கிரண்பேடி வரவேற்று வாழ்த்தி வழி அனுப்பினார்.

Bild könnte enthalten: 12 Personen, Personen, die stehen und im Freien
 
 
  • தொடங்கியவர்

பினிபினிங் பிலிப்பினாஸ் 2017 அழகுராணி போட்டிகள் ஆரம்பம்

பிலிப்பைன்ஸின் பினிபினிங் பிலிப்பினாஸ் 2017 (Binibining Pilipinas 2017) அழகுராணி போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

1964 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெறும் பினிபினிங் பிலிப்பினாஸ் போட்டிகள் மூலம் பிரபஞ்ச அழகுராணி, மிஸ் இன்டர் நெஷனல் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பிலிப்பைன்ஸ் சார்பாக பங்குபற்றவுள்ள யுவதிகள் தெரிவுசெய்யப்படுகின்றனர்.

 

2

இம் முறை 39 பிராந்திய அழகுராணிகள் இப் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர்.

1

 

3

கடந்த வாரம் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் நீச்சலுடையில் தோன்றிய பிராந்திய அழகுராணிகள் சிலரைப் படங்களில் காணலாம்.

17342508_1371064039617177_3597634586089168368_n

17458149_1371929706197277_5203149939121718510_n

 

17498513_1371929876197260_9173358958303319787_n

மலைப்பாம்பொன்றுடன் பினிபினிங் பிலிப்பினாஸ் 2017 அழகுராணி போட்டியாளர்கள் சிலர்

http://metronews.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.