Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

91-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இங்கிலாந்து ராணி!

 
 

queen elizabeth II

உலகையே ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த ஆட்சியாக இருந்தது பிரிட்டன் ஆட்சி. 21 வயதில் இங்கிலாந்தின் ராணியாகப் பதிவியேற்ற இரண்டாம் எலிசபெத், விண்ட்சர் மாளிகையில்  இன்று தனது 91-வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்.

70 ஆண்டு காலமாக பிரிட்டன் அரசாங்கத்தை சிறப்பாக ஆட்சிசெய்துவரும் எலிசபெத், சில காலமாகத் தனது பொறுப்புகளை எல்லாம் மகன்களுக்கும், பேரன்களுக்கும் பிரித்தளித்துவருகிறார். அடுத்த வாரிசாக, இளவரசர் சார்லஸ் இருக்கும்போதும் இங்கிலாந்து மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர்கள், இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் ஹாரி. 

இளவரசர் வில்லியம்ஸ் -கேட் தம்பதியினர், பிரிட்டன் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றனர். மேலும், சமீபத்தில் இளவரசர் ஹாரி தனது குழந்தைப் பருவத்தில் தாய் டயானாவை இழந்து துன்பப்பட்டதை வெளிப்படையாகக் கூறியிருந்தார். பிரிட்டன் மக்களின் நம்பிக்கை நாயகனாகவே ஹாரி உருவாகிவருவதாகக் கூறுகின்றனர்.

ராணியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவருக்கு ராணுவம் சார்பில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. எப்போதும் இரண்டு பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடும் ராணி, தன்னுடைய அதிகாரபூர்வ பிறந்தநாளை, ஜூன் மாதம் இரண்டாம் சனிக்கிழமை கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

 
  • 1 கப் டீ தயாரிக்க 27 லிட்டர் தண்ணீர் தேவை என்பது தெரியுமா? #VikatanPhotoCards
  • தொடங்கியவர்

வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் கிளிகளுக்கெல்லாம் !

நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளிலும், நூற்றுக்கணக்கான பச்சைக்கிளிகளுக்கு உணவளிக்கிறார் ராயப்பேட்டையைச் சேர்ந்த "காமிரா மெக்கானிக்" சேகர்.

  • தொடங்கியவர்

இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! #NonRajaHits

 
 

 

பாடல்கள்

இளையராஜா சிம்மாசனமிட்டு தமிழ்த் திரையிசையை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு வகையான பாடல்கள்தான் இருந்தன. ஒன்று இளையராஜா இசையமைத்த பாடல்கள். இன்னொன்று இளையராஜா இசையமைக்காத பாடல்கள். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். வேறு சில இசையமைப்பாளர்களின் பாடல்களும் அவ்வப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. ராஜா ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு விதத்தில் நம்மை மயக்க, பிறரின் ஏதோ ஒரு பாடல் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. அவற்றில் சிலவற்றை இன்றைக்குப் பார்க்கலாம்.

பருவராகம்

ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம் பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா பாடல்களும் ஹிட்டோ ஹிட் ரகம். இத்தனைக்கும் நேரடித் தமிழ்ப்படம்கூட அல்ல. ‘ப்ரேம லோகா’ என்ற கன்னடப்படத்தின் டப்பிங்தான். நடிகர் ரவிச்சந்திரன், இயக்குநராக அவதாரமெடுத்த படம்.

இதைப் படிப்பவர்கள், இந்தப் பதிவை Pause செய்துவிட்டு அந்த நாஸ்டால்ஜியாவில் ஓரிரு நிமிடங்களாவது மூழ்கப்போவது உறுதி. அப்படியான பாடல்கள். வைரமுத்து வரிகள்!

'கேளம்மா கேளம்மா என் சொல்லக் கேளம்மா’ என்றொரு பாடல். எஸ்.பி.பி அதகளம் பண்ணியிருப்பார். எஸ்.ஜானகி மட்டும் என்னவாம்! பேசிக் கொள்வதே பாடலாக மாறியிருக்கும். ஜூஹி சாவ்லா கல்லூரி வகுப்பிற்கு வரும் முதல்நாள். ப்ரின்சிபல் சோ ‘கேளம்மா கேளம்மா’ என்று ஆரம்பித்து அட்வைஸ் செய்வார்.  வராண்டாவிலே தியாகு உட்பட மாணவர்கள் (அப்ப அவங்க மாணவர்கள்தான் பாஸ்) கிண்டல் செய்வதில் துவங்கும் பாடல். துஷ்யந்தன் கதையை விஷ்ணுவர்த்தன் எடுத்துக் கொண்டிருக்க, ‘வர்றா சார்.. சகுந்தலா... வந்துட்டா சகுந்தலா...’ என்று ரவிச்சந்திரன் சொல்வார். விஷ்ணுவர்த்தன் பாடிக்கொண்டே க்ளாஸ் முன் நிற்கும் ஜூஹியிடம் ‘நீதானா சகுந்தலா?’ என்று கேட்க ‘இல்ல நான் சசிகலா’ என்று, நிறுத்தி தெளிவாக சொல்லும் எஸ்.ஜானகியின் குரல்.

வகுப்புக்குள் நுழையும் ஜூஹி, தடுக்கி விஷ்ணுவர்த்தன் மேல் விழுந்து முத்தமிட்டுவிட, ‘ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக்கொள்ளும் முத்தம்’ என்ற - இதே படத்தின் இன்னொரு பாடலை - புல்லாங்குழல், சாக்ஸ் கலந்து பி.ஜி.எம்மாகக் கொடுத்திருப்பார் ஹம்சலேகா . தொடர்ந்து ‘வந்ததும் மீட்டிங்கா, பார்த்ததும் கிஸ்ஸிங்கா? இஸ்பெல்லா தள்ளிப்போ.. சசிகலா உள்ளே போ!’ என்று துவங்கி க்ளாஸை பாடிக் கொண்டே ஒழுங்குபடுத்துவார் விஷ்ணுவர்த்தன். இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எல்லாரையும் ஏங்க வைக்கும். செம பாடல்! சோ, தியாகு, விஷ்ணுவர்த்தன், ரவிச்சந்திரன் எல்லாருக்கும் எஸ்.பி.பிதான்! 

 

முதல் பாடலான ‘கிளிகளே ராகம் கேளுங்களேன்’, தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே வரும், ஜூஹியின் அறிமுகப்பாடலான ‘மின்னல் போல இங்கு முன்னால் வந்தது யாரு’ எனும் பாடல். அதுவும் ஹிட்தான். எனக்குப் பிடித்தது மேலே சொன்ன ‘கேளம்மா கேளம்மா’தான். ஆனால் ‘பூவே உன்னை நேசித்தேன்’தான் எங்கும் கேட்டுக் கொண்டிருக்கும். ரவிச்சந்திரனை கல்லூரியில் பயந்தவராக இருப்பார். வெளியில், தைரியசாலியாக தவறுகளைத் தட்டிக் கேட்கும் ஒருவரைத்தான் ஜூஹிக்கு பிடிக்கும். அது இதே அப்புராணி ரவிச்சந்திரன்தான். கல்லூரியில் விழாவுக்காக ‘கலையலங்காரங்கள்’ செய்து கொண்டே பாடுவார்கள். ‘பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்’  என்று எஸ்.பி.பி. பாட.. ‘நீயா என்னை நேசித்தாய்.. கோழை போல யாசித்தாய்!’ என்று ஜூஹி அவரை உதாசீனப்படுத்துகிற பாடல். 

 

பூஞ்சிட்டு குருவிகளா புதுமெட்டுத் தருவிகளா...

ஒரு தொட்டில் சபதம் (1989) என்கிற படத்தில் வரும் பாடல் இது. சந்திரபோஸ் இசை. அவரே பாடிய பாடல். மெலடி வகைதான். பல்லவி முடிந்து முதல் இடையிசையின் டிரம்பெட் வசீகரிக்கும். அந்த இசை முடியும் இடத்தில் சட்டென்று தபேலா துள்ளலிசைக்குப் பயணப்படும். மீண்டும் ஆரம்பம்போலவே மெலடிக்குத் திரும்பும்.

ஏதேதொ கற்பனை வந்து

வாய்கொழுப்பு 1989ல் வந்த படம். ஆரம்ப இசை ஒருமாதிரிதான் இருக்கும். பல்லவி ஆரம்பிக்கும்போது வரும் பீட் பாடல் முழுவதும் வரும். இரண்டாம் இடையிசை முடியும்போது நிறுத்தி ஒரு தபேலா இசை வரும். அதுவும் நன்றாக இருக்கும்.
 

மூங்கிலிலைக் காடுகளே

சங்கர் கணேஷ் இசை. 1989ல் வெளியான பெண்மணி அவள் கண்மணி படப்பாடல். அருமையான மெட்டு. வாலியின் அட்டகாசமான வரிகள். பல்லவி, சரணமெல்லாம் இசை குறையே இருக்காது. எஸ்.பி.பி குரல்.. சொல்லவா வேண்டும்! முதல் இடையிசை கொஞ்சம் ஏமாற்றும்.. இரண்டாம் இடையிசை அசத்தும்.

நீலக்குயில்கள் ரெண்டு

சந்திரபோஸ் - விடுதலை. 1986. எஸ்.பி.பாலசுப்ரமணியன் ரொமாண்டிக் குரலுக்காகவே ஹிட்டான பாடல்களில் இதுவும் ஒன்று! இசையை விட, மெட்டுதான் அதிக கவனம் ஈர்த்தது. எஸ்.பி.பி காப்பாற்றிய பாடல் இது. மாதவி, ரஜினியை காதலிப்பார். விஷ்ணுவர்த்தனுக்கு மாதவிமீது மையல். இடையிசைகளெல்லாம் சாதாரணமாகத்தான் இருக்கும். பாடலின் வரிகளும், எஸ்.பி.பியின் ரொமாண்டிக் குரலும் பாடலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும். அதுவும் இரண்டாம் சரணத்தில் ‘கண்விழித்துப் பார்த்தேன் நல்ல காலைப்பொழுது..’ உருகியிருப்பார்.

துள்ளித் துள்ளிப் போகும்பெண்ணே...

ராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், இளையராஜாவோ என்று கொஞ்சம் ஏமாற்றுகிற பிற இசையமைப்பாளர்களின் பாடல்கள் பல உண்டு. ஆனால் ஒரு இசைக்கருவியில் இருந்து, அடுத்த இசைக்கருவிக்கு தாவுகிற இடத்திலோ அல்லது பல்லவியிலிருந்து முதல் இடையிசை எடுக்கும்போதோ, இடையிசை முடிந்து சரணம் துவங்கும் இடத்திலோ ‘நான் Non Raja” என்று காட்டிக் கொடுத்துவிடும். துள்ளித் துள்ளிப் போகும்பெண்ணே அப்படியாக கொஞ்சம் ஏமாற்றுகிற பாடல்தான். ஆனால் தபேலா, ராஜாவின் பாடலில் கேட்பது போல ‘டெப்த்’ ஆக இல்லாததும், பல்லவியின் கடைசி வரியின்போது தபேலாவின் தாளம் மாறுவதும் இது ராஜா இல்லையே என்று சொல்லிவிடும். மனோஜ் கியான் இசையில், வெளிச்சம் (1987) என்ற படத்தில் வந்த பாடல். கே.ஜே. ஏசுதாஸ் குரல்.

மாமரத்துப் பூவெடுத்து

ஊமை விழிகள். 1986ல் வந்த படம். மனோஜ் கியான் இசை. கண்மணி நில்லு காரணம் சொல்லு / ராத்திரி நேரத்து பூஜையில் / நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் என்று மற்ற பாடல்கள் ஹிட் என்றாலும் ‘மாமரத்துப் பூவெடுத்து’, ‘தோல்வி நிலையென நிலைத்தால்’ இரண்டும் மாஸ் ஹிட்.

‘மாமரத்துப் பூவெடுத்து’ பாடலின் ஆரம்பமே அசத்தலான மென்மையில் ஆரம்பிக்கும். எஸ்.என்.சுரேந்தர், சசிரேகா குரல்கள். பல்லவி முடிந்ததும்.. நின்று புல்லாங்குழல் ஆரம்பிக்கும். தொடர்ந்து ‘ஓஹோஹோ....... ஓஒ..... -- ஹொய்யா’ என்று ஆலாப். பின் தொடரும் இசை என்று கம்ப்ளீட் பேக். எங்கே நிறுத்தி எங்கே எடுக்க வேண்டுமோ அந்த பேட்டர்ன் அட்டகாசமாகப் பின்பற்றப்பட்டிருக்கும். பாடலின் இசையிலேயே காட்சிக்குத் தகுந்த மாதிரி - பயமுறுத்துவதோ.. ஆபத்து என்பதை உணர்த்துவதோ, சேஸிங்கோ.. - இசையிலேயே கொடுப்பதில் இளையராஜா என்றென்றும் ராஜா. இந்தப் பாட்டில் அதேபோல, இரண்டாம் இடையிசையில் விசில் சத்தத்துக்குப் பிறகு ஒரு பயமுறுத்துகிற இசை வரும். 2.56ல் கேட்டுப்பாருங்கள். 10 நொடிகள்தான். இந்தப் பாட்டு தெரிந்தவர்களுக்கு இந்நேரம் அந்த இசை மனதுக்குள் கேட்கும். கீழே வீடியோவிலும் கேளுங்கள்!

ஆவாரம் பூவு ஆரேழு நாளா

1984. அச்சமில்லை அச்சமில்லை. இசை யார் தெரியுமா? வி.எஸ். நரசிம்மன். பலரது ப்ளேலிஸ்டில் இந்தப் பாடல் இளையராஜா என்றே சேமித்துவைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடலும், இதே பாடலின் ‘ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த’ பாடலும் ஹிட். ஆவாரம் பூவு - எஸ்.பி.பி, பி.சுசீலா. கேட்கவா வேண்டும்! இல்லல்ல.. கேட்கத்தான் வேண்டும்! தபேலா விளையாடும் பாடல். ஆனால் இடையிசையில் தபேலா நின்றுவிடும். மென்மையாகச் சென்று, சரணத்தில் தபேலா மீண்டும் ஆரம்பிக்கும். டிபிகல் ராஜா டைப்-பில் ஒரு உருட்டு உருட்டி தபேலா இசை பாடலோடு சேரும். இரண்டு இடையிசையுமே அப்படித்தான். பாடல் முடியும்போது.. சுசீலாவின் மெஸ்மரிசக்குரல் ஆலாப்பில் முடியும். வாவ் பாடல்! (அப்பறம்.. சொல்ல மறந்துட்டேனே.. சரிதா! அப்படி ஒரு அழகா இருப்பாங்க!)

ஓடுகிற தண்ணியில... -

அதே படம். இதுவும் பெண்குரல் பி.சுசீலா. ஆண்குரல் மலேசியா வாசுதேவன். பல்லவி முழுதும் பெண்குரல். சரணத்தில் ‘அடி கிராமத்துக் கிளியே..’ என்று பாடலில் சேர்வார் மலேசியா வாசுதேவன். மிஸ் யூ சார்! முடிக்கும்போது... இது Non Raja என்று காட்டுக்கொடுக்கும். :-)

அந்திநேரத் தென்றல் காற்று

இணைந்த கைகள். 1990. கியான் வர்மா இசை. படம் வந்தபோது நான் திரும்பத் திரும்ப தினமும் பாடிக்கொண்டிருந்த பாடல் இது. பாடலை நினைத்தாலே இசையும், ரயிலின் சத்தமும் கூடவே கேட்கும். எஸ்.பி.பி, ஜெயச்சந்திரன். ரயில் ஓட்டத்துக்கு ஏற்ப, கூடவே ஒலிக்கும் இசை.

‘தாலாட்ட அன்னை உண்டு, சீராட்ட தந்தை உண்டு, இன்ப துன்பம் எதுவந்தாலும் பங்குகொள்ள நண்பன் உண்டு’ என்று ஆபாவாணன் வரிகளும் பாடலின் ஹிட்டுக்கு முக்கியக் காரணம். இரண்டாம் இடையிசையில் குழந்தை அழுகையைத் தொடர்ந்து ஜெயச்சந்திரன், எஸ்.பி.பி இருவருமாய் 2.23 நிமிடத்தில் ‘ஆராரோ ஆரிராரோ..’ என்று ஆரம்பிப்பார்கள். கேட்டுப் பாருங்கள்! ‘பத்துத் திங்கள் முடிந்தபின்னே.. முத்துப்பிள்ளை அவனைக் காண்பேன்ன்ன்ன்’ என்று ஒரு சங்கதிபோட்டுவிட்டு உறங்காத கண்ணில் இன்று என்று தொடர்ந்து பரிவான நண்பன் தந்த-வில் நண்பனில் ஒரு சங்கதி போடுவார் எஸ்.பி.பி! ப்ச்.. என்ன சொல்ல! கோரஸாகப் பாடிக்கொண்டே பாடல்முடியும்போது.. ரயிலின் சத்தத்தோடு கூடவே புல்லாங்குழலும் சேர பயணத்தை இசையிலேயே கேட்க வைக்கும் பாடல்!

கண்ணுக்குள் நூறு நிலவா

1987. தேவேந்திரன் இசை. ' பாப்பப பாப்பப...'  என்று கோரஸில் ஆரம்பிக்கும் இசையில் தொடரும் கீபோர்ட். எஸ்.பி.பி. சித்ரா. மந்திரம் கற்றுக் கொண்டிருக்கும் ராஜா, அமலாவை சைட் அடிப்பதை உணர்த்த இடையிசையில் மந்திரம்.. பிறகு பாடல் என்று போகும். இடையிசையில் மிருதங்கம். ‘அம்பா சாம்பவி..’ என்று மந்திரங்கள், தொடரும் தபேலா என்று கலவையான பாடல்! 
 

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

1990. இதயதாமரை. சங்கர் கணேஷ். எஸ்.பி.பி - சித்ரா. மெல்ல ஒரு நதியின் ஓட்டம் போன்ற பாடல். இரண்டாம் இடையிசையில் ஜோடிகள் சைக்கிளில் போகும் வேகத்துக்கு இணையாக வயலின் ஒலிக்கும். இரண்டாம் சரணத்தில் முடிவில் வரும் ‘இயல்பானது’ மெட்டும்.. தொடரும் பல்லவியும் பாடலுக்கு அழகு சேர்க்கும்.

இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லையென்றாலும்.. இன்னொரு முக்கியமான விஷயம். இந்தப் பாடலை கீழே உள்ள வீடியோவில் பார்க்கும்போது.. பல ஃப்ரேம்கள் அள்ளி அணைத்துக் கொள்ளலாம்போல.. யார்யா கேமரா மேன் என்று கேட்கவைக்கும். 0.38 / 1.01 / 1.07 / 1.23 முதல் 1.33 / 2.34 / 3.01 இப்படிப் பல இடங்கள். எஸ். ஒன் அண்ட் ஒன்லி.. பி.சி.ஸ்ரீராம்!

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

அண்ணா நகர் முதல்தெரு. 1988. சந்திரபோஸ் இசை. இதைப் படிக்கும் ஆயிரம் பேரில் ஒருத்தராவது ‘அட.. இது ராஜா அல்லவா!?’ என்று நினைப்பது உறுதி. அப்படி பல கேசட் / சிடிக்களில் ராஜா பெயருக்கு மொய் வைக்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. எஸ்.பி.பி, சித்ரா முதல் சரணத்தில் எஸ்.பி.பி ‘உள்ளத்தை உன்னிடம் அள்ளித்தந்தேனே..’ என்று ஆரம்பித்து இசை நிறுத்தப்பட்டு குட்டியாக புல்லாங்குழல் பீட் கொடுத்து என்று ஆச்சர்யப்படுத்தியிருப்பார் சந்திரபோஸ். சரணம் மிக அருமையான மெட்டில் இருக்கும். சந்திரபோஸின் சிறந்தபாடல்களை வரிசைப்படுத்தினால் டாப் டென்னில் வரும் ஒரு பாடல்!

ஏற்கனவே இளையராஜாவின் இந்த 9 பாடல்களில் ஏதோ ஒன்றையாவது மிஸ் பண்ணிருப்பீங்க என்று நான் எழுதியபோது அதில் சில பாடல்களைக் குறிப்பிட்டு ‘இது Rare songஆ?’ என்று  நண்பர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். அதனால் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். இந்தப் பாடல்கள் ஒரு வாரமாக அவ்வப்போது யோசித்துக் குறிப்பெழுதிக் கொண்ட பாடல்கள். நானே விட்ட பாடல்கள்கூட இருக்கும். அடுத்த பாகத்திற்காக சில ஸ்பெஷல் பாடல்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.

இதில் தேவா, டி.ராஜேந்தர் இருவரின் பாடல்களுமே தனித்தனியாக எழுத வேண்டிய பெரிய லிஸ்ட்! எனவே இருவரையும் சேர்க்கவில்லை.  

 
 

இன்னும் சில பாடல்களோடு அடுத்த பாகத்தில் சந்திக்கலாம்! அதில் நீங்கள் கமெண்டில் குறிப்பிடும் பாடல் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்கிறேன்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

புது ரத்தம் பாய்ச்சிய பெருங்கவிஞன் பாரதிதாசன்..!

 
 

பாரதிதாசன்பாரதிதாசன்... தமிழுக்குப் புதுரத்தம் பாய்ச்சிய கவிஞன். அவர் எழுதிய கவிதைகள் வேண்டுமானால் புதுக்கவிதை பட்டியலில் வராமல் இருக்கலாம். எழுதியவை அனைத்தும் புத்தம் புது தமிழ் வார்த்தைக் கோர்ப்புகள். 

தொழிற்சாலையை, `ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே' என்பார்... சிந்தனையை, `மண்டைச் சுரப்பு' என்பார்... இயற்கையை, `அழகின் சிரிப்பு' என்பார்... பெண்களை, `குடும்ப விளக்கு' என்பார்.

இனவிடுதலை, மொழிப் பற்று, தமிழ் தேசியம், திராவிட உணர்வு, பொதுவுடமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, சாதி மறுப்பு ஆகியவை பாரதிதாசன் கவிதைகளின் அடையாளங்கள். அதே சமயத்தில் இயற்கையை நேசித்தல் அவருடைய பெரும் அவா. 

`அமட்டன் மீன்' என்ற பெயரில் புதுச்சேரி கடற்கரையில் விற்கப்பட்டு வந்த மீனை, சாதி இழிவுக்கு அடையாளம் என உண்ண மறுத்தவர். முட்டை விற்ற சிறுமியிடம், ‘சேரி முட்டை வேகாதே என்ன செய்ய?’ எனக் குறும்பாகக் கேட்டதாகவும் அந்தப் பெண் அதை உண்மை என நம்பி திகைத்ததையும் சொல்லி, பாட்டாகப் பாடியவர். அந்தச் சிறுமி முட்டை விற்கிறாளே தவிர அதை ஒருநாளும் வேகவைத்து உண்டவள் இல்லை. அதனால்தான் அது வேகுமா வேகாதா என்பதைக்கூட சொல்லத் தெரியாமல் திகைத்தாள் என்பார்.

சாதி பேதமற்ற, சுயமரியாதை உள்ள சமுதாயம் பாடின அவருடைய கவிதைகள். சினிமாவில் பாட்டெழுத வந்தபோது, ஓர் இசைமைப்பாளர், ‘‘மானே என்ற வரி உதைக்கிறதே’’ என்றபோது வெகுண்டெழுந்தார். ‘‘மான் உதைக்காதடா மடப் பயலே. கழுதைதான் உதைக்கும்’’ எனக் கிளம்பிப் போனவர்.

பாரதிதாசன்

நவீன எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக இருந்தது மணிக்கொடி இதழ். 1930-களில் அந்த இதழின் அட்டைப் படக் கவிதைகளாகவும் பாரதிதாசனின் கவிதைகள் இடம்பெற்றன. பலரையும் எள்ளி நகையாடி விமர்சிக்கும் எழுத்தாளர் புதுமைப்பித்தன், இவருடைய கவிதைகளைக் கொண்டாடி மகிழ்ந்தார். ‘யாப்பு அறிந்த பலரிடம் கவிதை இருப்பதில்லை. இவர் கவிதைகளில் புதுமையான சொற் பிரயோகங்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. மனிதர் தமிழ் மீது வைத்திருக்கும் பற்று மகத்தானது...’ என்றெல்லாம் சிலாகித்து மகிழ்கிறார்.

‘தமிழுக்கும் அமுதென்று பேர்’, ‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு’ எனவும் தமிழ் உணர்வைப் போற்றிப் பாடியவர். பெரியாரை, ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என வர்ணித்திருப்பதில்தான் எத்தனைக் கனிவு... தெளிவு!

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள்  இன்று. 

பாரதிதாசன் தமிழ்க் கனவை பறைசாற்றும் கவிதை இது:-

எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும். 
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

திமிங்கலம் குட்டிப்போடும் அரிய காட்சி

டெக்ஸாஸின் சன் ஆன்டோனியோவிலுள்ள கடல்வாழ் உயிரினப் பூங்காவில் (சிவேல்டு) வாழும் கறுப்பு மற்றும் வெள்ளை பற்களுடைய திமிங்கலம் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.


புதிதாக பிறந்துள்ள திமிங்கல குட்டியின் பாலினம் இன்னும் அறியப்படவில்லை. அதன் பாலினத்தின்படி இந்த குட்டிக்கு பெயர் சூட்டப்படும்.


கடல்வாழ் உயிரினப் பூங்கா (சிவேர்ல்டு), அமெரிக்கா முழுவதும் 23 கறுப்பு மற்றும் வெள்ளை பற்களுடைய திமிங்கலங்களை கொண்டுள்ளது.

  • தொடங்கியவர்

டயட், ஜிம், டான்ஸ், நயன்தாரா..!? - ‘சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்’ எப்படி தயாராகிறது?

 

சரவணா ஸ்டோர்ஸ்

ஹன்சிகா, தமன்னாவோடு சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் நடித்த இரண்டு விளம்பரங்கள் தினமும் தொலைக்காட்சிகளை அலங்கரித்துக் கொண்டிருக்க, தற்போது நடன இயக்குநர் ராஜூசுந்தரத்துடன் அவர் சேர்ந்து நடனமாடிய புது விளம்பரம் பட்டைய கிளப்பிவருகிறது. அது போக, நான்காவது விளம்பரத்தின் படப்படிப்பும் பரபரப்பாக நடந்து வருகிறது என்ற தகவல் கிடைத்தது. அது தொடர்பான தகவல்கள் பெற சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனின் காஸ்ட்யூம் டிசைனர் சத்யாவை தொடர்பு கொண்டோம்.

“நேத்து காலையில தான் நாலாவது விளம்பரத்தோட ஷூட்டிங் முடிஞ்சது. சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை பொறுத்தவரை எந்த விஷயம் பண்ணினாலும் அதை சிறப்பா பண்ணணும்னு நினைப்பார். அதுனால தான் ஜேடி-ஜெர்ரி, பிருந்தா மாஸ்டர், ராஜூசுந்தரம் மாஸ்டர், கேமராமேன் ஓம்பிரகாஷ், சுகுமார், திருனு அநத விளம்பரங்களில் பெரிய பெரிய பிரபலங்களை வெச்சு பண்றார். சரவணா ஸ்டோர்ஸின் முதல் விளம்பரத்துல ஹன்சிகா, தமன்னாவோட அவர் நடிச்சிருந்தார். அதைப் பத்தி சோஷியல் மீடியால வந்த ரியாக்‌ஷன் பத்தி அவர்கிட்ட கேட்டேன். ’நான் சோஷியல் மீடியாவுல ஆக்ட்டிவ்வா இருக்கிறதில்லை சத்யா. யாராவது என்கிட்ட ஏதாச்சு காட்டுனா அந்த விமர்சனங்களை நான் கண்டுக்கிறதில்ல. என்ன ஒரு மாசத்துக்கு அதைப் பத்தி பேசுவாங்களா..? அப்பறம் மறந்துடுவாங்க’னு கூலா சொன்னார். 

காஸ்ட்டியூம் டிசைனர் சத்யா

சீரியஸாவே அவருக்கு அதைப் பத்தியெல்லாம் எந்த கவலையும் இல்ல. அதையெல்லாம் பார்க்க அவருக்கு டைமும் இல்ல. அவருக்காக நான் டிசைன் பண்ணின டிரஸ்ஸை ட்ரையல் பார்க்க போனாக்கூட அவரை பார்க்க லேட்டாகும். அந்த அளவுக்கு அவர் பிஸி. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டாருன்னா வேற எதைப் பத்தியும் யோசிக்காம, விளம்பரத்துல தான் கவனமா இருப்பார். ஷூட்டிங்கிற்கு மூணு நாள் முன்னாடியிருந்தே டயட்ல இருக்க ஆரம்பிச்சுடுவார். உடம்பை ஃபிட்டா வச்சுக்க ஒர்க்-அவுட் பண்ணுவார். முதல் இரண்டு விளம்பரங்களில் டான்ஸ்லாம் இல்ல. மூணாவது விளம்பரத்துல கொஞ்சமா டான்ஸ் பண்ணியிருந்தார். அதுக்காக அவர் நிறைய ப்ராக்டீஸ் எடுத்து பண்ணினார்” என்றவர், நயன்தாராவோடு தான் நடிப்பேன் என்று அவர் கூறியதாக வந்த செய்தியைப் பற்றியும் சொல்லத் தொடங்கினார். 

THE LEGEND NEW SARAVANA STORES BRAMANDAMAI - TVC from jdjerry on Vimeo.

“நயன்தாராவோடு தான் நடிப்பேன்னு அவர் சொன்னதா செய்திகள் வந்தப்போ நான் அவர்கிட்ட அதைப் பத்தி கேட்டேன். ‘எனக்கு படங்களில் நடிக்கணும்ங்கிற ஆசையே இல்ல. நான் ‘நயன்தாராயோட தான் நடிப்பேன்னு சொல்லவேயில்ல. அப்படியே நடிக்கணும்னு ஆசையிருந்தாலும் அதை கோயில்லயா சொல்லுவேன்’னு சொன்னார். வியாபாரத்துல எப்படி அவருக்கு அதிக ஆர்வம் இருக்கோ அதே மாதிரி விளம்பரத்துல நல்லா பண்ணணும்னு யோசிச்சுட்டே இருப்பார். ஒரு ஷாட் நல்லா வரவரைக்கும் பண்ணிட்டே இருப்பார்” என்று முடித்தார் காஸ்ட்டியூம் டிசைனர் சத்யா.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நாதஸ்வர வடிவில் ஒரு நாற்று நடவு கருவி... இது விவசாய ‘கேட்ஜெட்’!

 
 

நாற்று

இது கருவிகளின் காலம். சின்ன சின்னக் கருவிகள் பெரிய பெரிய வேலைகளை எளிதாக முடிக்கின்றன. அதுவும் குறிப்பாக ஆள்பற்றாக்குறை நிலவும் விவசாயத்தொழிலில் பண்ணைக்கருவிகளின் பங்களிப்பு பிரதானமாக விளங்குகிறது.

விவசாயத்தில் நெல் நடவு தொடங்கி களை எடுக்கவும், அறுவடை செய்யவும், அறுத்த நெல்லை போரடித்து, தூத்தி, புடைத்து, மூட்டை பிடிக்கும் வரை கருவிகள் வந்து விட்டன. அதே சமயம் குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் மிளகாய், கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை நடவு செய்யவும், பறிக்கவும் சரியாக  வடிவமைக்கப்பட்ட  கருவிகள் நம் நாட்டில்  இல்லை என்பது  விவசாயிகளின் வருத்தமாக இருந்து வந்தது.

அதைப் போக்கும் விதமாக , காய்கறி நாற்றுக்களை எளிதாக நடவு செய்யும் கருவி ஒன்றை ஹாங்காங் நாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார், முன்னோடி வேளாண் வல்லுனர் கோவை சீத்தாராமன். ஒன்றரை கிலோ எடையும், இரண்டரை அடி உயரமும் கொண்டு நாதஸ்வரம் போல காட்சி தரும், இந்த நடவு கருவி குறித்து சீத்தாராமன் கூறியதாவது; 

மிளகாய், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை கட்டைவிரலால் அழுத்தி பதியவைத்து ஈரநடவு செய்வார்கள். அப்படி செய்யும் போது நாற்றுக்களில் நாற்று மடிந்து ஆணிவேர் மேல் நோக்கி வந்து விடும். இதனால் மண்ணில் உள்ள சத்துக்கள் முழுமையாக செடிகளுக்கு போய் சேராது.

அதன் காரணமாக, செடிகளின்  விரைவான வளர்ச்சி பாதிக்கப்படும். வைரஸ் நோய் தாக்கியது போல செடிகள் வாடி காணப்படும். அதனால் விளைச்சல் குறையும். 

நாற்று

இது பல காலமாக உலகம் முழுவதும் காய்கறி விவசாயத்தில் உள்ள பிரச்னை. இதைப் போக்கும் விதமாக ஹாங்காங் நாட்டில் உள்ள வேளாண் பொறியியல் ஆராய்ச்சி மையம் ஒன்று  குறிந்த எடை கொண்ட சில்வரால் செய்யப்பட்ட நடவு கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த கருவியை பயன்படுத்தி காய்கறி நாற்றின் வேர்கள் செங்குத்தாக மண்ணில் பதியும் படி நடவு செய்யமுடியும். கடந்த மாதம் இந்த கருவியை ஹாங்காங் நாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளேன். இதுவரை 30 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கருவி மூலம் நாற்று நடவு செய்துள்ளேன்.

மேலும் இந்த கருவி மூலம் விவசாயத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. வழக்கமாக ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறி நாற்று நடவு செய்ய குறைந்த பட்சம் 15 ஆள்  தேவைப்படும். அவர்களுக்கு கொடுக்கப்படும் சராசரி கூலியாக 4ஆயிரம் ரூபாய்.  ஆனால், இந்த கருவியின் விலை 3,500 ரூபாய் மட்டும்தான். இந்த கருவி நடவுக்கு ஏக்கருக்கு ஒரு ஆள் மட்டும் போதுமானது. நீண்டகாலம் பழுதில்லாமல் வேலை செய்யும் விதமாக இந்தக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

காய்கறி விவசாயத்தில் இந்தக் கருவி ஒரு புரட்சி என்றே கூறலாம்.

 

 

 

 

 

எது எப்படியோ.... அழிந்து வரும் விவசாயத்தை காப்பாற்ற இது போன்ற புதிய கண்டுபிடிப்புக்கள் அவசியமாகிறது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மருந்தகத்துக்குள் நுழைந்த திடீர் விருந்தாளி! துருக்கியில் சுவாரசியம் (காணொளி இணைப்பு)

 

 

ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்றின் பின்புறச் சக்கரம் கழன்று, சுழன்று மருந்தகத்துக்குள் சென்று மோதியதில் இருவர் இலேசான காயங்களுக்கு உள்ளான சம்பவம் கடந்த வெள்ளியன்று துருக்கியில் இடம்பெற்றுள்ளது.

 

காயமடைந்த இருவரும் குறித்த மருந்தகத்தின் பணியாளர்கள். மருந்தகத்துக்கு வாடிக்கையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, திடீரென வேகமாக வந்த சக்கரம் தம் மீது மோதியதில் தாம் கடும் அதிர்ச்சியடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இக்காட்சி, மருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்தது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

புவி நாள்

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

 
 
 
 
புவி நாள்
 
புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவை ஜூன் 5-ம் நாளன்று உலக சுற்றுச் சூழல் நாளை அனுசரித்து வருகிறது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஈரைப் பேனாக்கி, பேனையே பெருமாளாக்கும் மீம் க்ரியேட்டர் ஸ்பெஷல்!

 

எந்த ஒரு விஷயத்தையும் ஒரே போட்டோவில் அழகாகப் புரிய வெச்சு சிரிக்க வைக்கிறதுக்குப் பேர்தான் 'மீம்'. மொதல்லே இந்த மீம்னா என்ன? மீம்ல எவ்வளவு வகைகள் இருக்குன்னு ஒரு அலசு அலசுவோமா?

'வாட் இஸ் கால்டு மீம்?'னு கேள்வி கேட்ட உடனேயே 'இன்ஸ்ட்ருமென்ஸ் தட் ரெக்கார்ட்'னு நண்பன் பட ஸ்டைலில் டெஃபனிஷனெல்லாம் கொடுக்க மாட்டேன் பாஸ் பயப்படாதீங்க... சுருக்கமாவே சொல்லிடறேன். ஒரு போட்டோ, இல்லேன்னா ஒரு வீடியோ எடுத்து அதுல மேலோட்டமாகக் கொஞ்சம் வார்த்தைளைத் தூவினால் சுடச் சுட மீம் ரெடி. அந்த வார்த்தைகளும், போட்டோவும் கொஞ்சம் சிரிக்கிற மாதிரியும் சிந்திக்கிற மாதிரியும் இருக்கிறதுக்குப் பேர்தான் பெர்ஃபெக்ட் மீம். இது வந்த புதுசுல இந்த ஐடியாவுலதான் வந்துச்சு. ஆனா நம்ம ஆளுங்கதான் ஈரைப் பேனாக்கி பேனையே பெருமாளாக்கிடுவாய்ங்களே. நினைச்சுக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு இப்போல்லாம் மீம் வர ஆரம்பிச்சுடுச்சு. அது ரசிக்கிற மாதிரியும் இருக்கு. அப்படி இவங்க போடும் மீம்ஸ் வகைகள்தான் இது. 

நார்மல் மீம் :

vadivelu memes

இந்த ரகத்தைச் சேர்ந்த மீமை க்ரியேட் செய்வது ரொம்பவே சிம்பிள். ட்ரெண்டில் இருக்கும் விஷயத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு போட்டோவை எடுத்துக்கணும். அதுக்கு சூட் ஆகுற மாதிரி கலாய் கவுன்டர்களை எடுத்து கீழே அந்த காமெடியின் டயலாக்குகளைப் போட்டால் போதும். மீம் ரெடி. இந்த ரக மீம்களுக்கெல்லாம் வழிகாட்டி நம்ம காமெடி கிங் வடிவேலுதான். இவர் போட்டோ இல்லாத மீம்களைக் பார்க்கவே முடியாது.   

டெம்ப்ளேட் மீம் :

மீம் க்ரியேட்டர்

வார்த்தைகளில் விளையாடி மீம் போட்ட காலம் போய் வெறும் போட்டோக்களை வைத்தே மீம் வரத் தொடங்கிவிட்டது. மீம் க்ரியேட்டர்களுக்கு போர் அடித்துவிட்டதால் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி மீம் போட்டு வருகின்றனர். டெம்ப்ளேட்டுகள் வேண்டுமென்றால் உடனே யூ-டியூப் தான். வெறும் போட்டோக்களை மட்டும் பயன்படுத்திப் போடும் இந்த ரகத்தைச் சேர்ந்த மீம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

சிங்க் (Sync) மீம் :

க்ரியேட்டர்

இது தெய்வ லெவல் ரகத்தைச் சேர்ந்தது. இந்த வகை வந்த பிறகுதான்  இப்படியெல்லாம் கூட ஒரு ஆளுக்கு யோசனை வருமா எனப் புல்லரிக்க வைத்தது. மேலே சொன்ன டெம்ப்ளேட் மீம் ஒரு போட்டோவுக்கும் இன்னொரு போட்டோவுக்கும் சம்பந்தம் இருக்கும். ஆனால் இந்த டைப் மீம்களில் வரும் போட்டோக்களுக்கு ஒன்றோடு ஒன்று சம்பந்தமே இருக்காது. இரண்டையும் ஒன்றிணைத்து முதலில் இது என்னவாக இருக்கும்? என்று யோசிக்க வைத்து அப்புறம்தான் சிரிக்கவே வைக்கும். திஸ் இஸ் கால்டு சிங்க் மீம்.

க்ரியேட்டிவிட்டி மீம் :

மீம் க்ரியாட்டர்

மேலே சொன்ன மீம்களை கூட நார்மல் மனுஷனே ஏதாவது டியூசன் போய், ட்ரெயினிங்க் எடுத்து மீம் போட்டு விடலாம். ஆனால் இந்த ரகத்தைச் சேர்ந்த மீமை தயாரிப்பவன் கண்டிப்பாக வேற்று கிரகவாசியாகதான் இருப்பான் (!?). ஏனென்றால் அப்படி ஒரு கான்செப்ட் ஒரு மனிதனின் கனவுகளில் கூட ஏற்படாது. இந்த வகை மீம்களுக்கு பெயர்தான் க்ரியேட்டிவிட்டி மீம். நாடி, நரம்பு, ரத்தம், சதை என எல்லாப் பாகங்களிலும் மீம் வெறி ஊறிப்போன ஒரு ஆளால் மட்டும்தான் அப்படியான மீமை உருவாக்க முடியும். 

360 டிகிரி மீம் :

ஃபேஸ்புக்கில் மார்க் ப்ரோ புதிதாக 360 டிகிரி போட்டோக்களைப் பார்க்கும் வசதியினைக் கொண்டு வந்தார். 'அடேய் ஓடுனா மட்டும் விட்ருவோமா'னு வடிவேலு டயலாக் வர்ற மாதிரி அதுலேயும் சேட்டையை ஆரம்பித்துவிட்டனர் நம்ம மீம் க்ரியேட்டர்ஸ். 360 டிகிரி வடிவப் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்து கொள்ளலாம். அதில் வடிவேலுவை மையமாக வைத்துப் போட்ட மீம் ஒரு காலத்தில் பயங்கர வைரலாகி வந்தது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

லண்டனில் வலம்வரும் குட்டி ரோபோ கார்கள் : கிளிக் காணொளி

கணினிகளை நமது மூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம், கார்களிலும் இலவசமாக இணையத் தொடர்பு வசதி, லண்டனின் தெருக்களில் வலம்வரும் குட்டி ரோபோ கார்கள், கைவிரல் ரேகை மூலம் அடையாளம் கண்டுகொள்ளும் கடன் அட்டைகள் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தொழில்நுட்ப செய்திகள் இந்த வார கிளிக் காணொளியில் இடம்பெறுகின்றன.

  • தொடங்கியவர்

’நான் ஏன் கவர்ச்சியாக இருக்க வேண்டும்!?’ ‘Kodaikanal' சோபியா அஷ்ரஃப் #ICan'tDoSexy #ViralVideo

 
 

சோபியா அஷ்ரஃப்

சோபியா அஷ்ரஃப்  - யூடியூப்பில் கலக்கிக்கொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த பெண்! இளைஞர்களை ஈர்க்கும்  நட்பு, காதல், ஃபேஷன் விஷயங்களை  வீடியோ ஆக்காமல்,  சமூகப் பிரச்னைகளையும் அரசியல் நடப்புகளையும், தனது பாடல் வரிகளில்  அழுத்தமாக பதிவு செய்து, பாடி வீடியோவாக வெளியிட்டு அசத்துபவர்.

2010ஆம் ஆண்டு, ஹிந்துஸ்தான்  யூனிலிவர் நிறுவனத்தின்  பாதரச கழிவுகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக பாடிய, “கொடைக்கானல் வோண்ட்” வைரல் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் அமைக்கப்படவிருந்த பாதரச திட்டமும்  கைவிடப்பட்டது. அதன்பிறகு, பெண்களின் அழகியல் கோடப்பாடுகளை உடைக்கும்  ‘சிஸ்டா ஃபரம் தி செளத்’ (Sista from the South) என்ற  வீடியோ சேனலாகட்டும், ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக போயஸ் கார்டன் தெருவில்  இறங்கி பாடியதாகட்டும்... சோபியா  தில்லேடி என்பதை சமூகத்துக்கு தன் சிறப்பான கருத்துக்கள் மூலம் புரியவைத்தார்.   

தற்போது, யூடியூப்பில் வைரலாகிக்கொண்டிருக்கிறது சோஃபியாவின் சமீபத்திய ‘ஐ காண்ட் டூ செக்ஸி’ (I can't do sexy) என்கிற டைட்டில் கொண்ட வீடியோ.  பெண்கள்  எப்போதும் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஏன் தள்ளப்படுகிறார்கள்; அனைத்து பெண்களும் கவர்ச்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பன போன்ற பல  விஷயங்களை நுழைத்து, ஒரு காமெடியான, அதே சமயம், துடிப்பான பெண்ணியத்தை பேசும் வீடியோவாக உருவாக்கப்பட்டிருக்கிறது 

“இந்த பாட்டை நான் ஒரு வருஷம் முன்னாடியே எழுதிட்டேன். நான் காலேஜ் படிக்கும் போதே, நிறைய பொண்ணுங்க  தங்களை கவர்ச்சியா, அழகா காட்டிக்கணும்னு நினைச்சு ரொம்ப மெனக்கிடுவாங்க. அது சில சமயம் அவங்களுக்கு பொருத்தமில்லாம இருக்கும். பல பெண்கள் சோஷியல் மீடியாவுல அவங்களோட புரொபைல் படம் போடுறதுக்காக மேக்கப்புகள் போட்டு செல்பி எடுத்து போடுறாங்க. இத்தனை மெனக்கிடல் தேவையானு எனக்குத் தோணும். நாம நாமளா இருந்தா போதாதா? நான் இப்ப வேலை பார்க்கிற ஆபீஸ்ல ஒரு பொண்ணு இருக்காங்க. அவங்களுக்கு ஏத்த மாதிரியான டீஷர்ட்ல வந்து ஆஃபீஸை அதிர வைப்பாங்க. அது அவங்களுக்கு ஃபிட்டாவும் இருக்கும். ஆனா ''நான் மட்டும்தான் இந்த ஆபீஸ்ல வித்தியாசமா டிரஸ் பண்றேன்''னு ஃபீல் பண்ணுவாங்க. அப்படிப்பட்ட எண்ணமே தேவையில்லைங்கிறதுதான் என்னோட கருத்து" என்றவர் தொடர்ந்து...

''இதெல்லாம் பேசுறதுனால நான் பெண்ணியவாதியானு என்னை பலர் கேட்கிறாங்க. பெண்ணியவாதிகள்னா கல்யாணம், குடும்பம், குழந்தை தவிர்க்கிறவங்க என்கிற ஒரு பிம்பம் நம்ம மக்கள் மனசுல இருக்குது. அப்படியில்ல... சமூகத்துல ஆண்களுக்கு இணையா உரிமை வேணும்னு எதிர்பார்த்து அதுக்காக குரல் கொடுக்கிறவங்கதான் பெண்ணியவாதிகள். அனேகமா நம்ம நாட்டுல பெண்ணியம் பத்தியெல்லாம் பேசுற முதல் தலைமுறை நாமளாதான் இருப்போம். அப்படி  இருக்கும்போது  கவர்ச்சி, அழகு பத்தின  பிம்பத்தை கூட நாமதான் தூக்கி எறியணும். 

இதுவரைக்கும் நான் பண்ணின வீடியோ எல்லாம் சீரியஸா இருக்கும். ஆனா இந்த வீடியோவை காமெடி கலந்து சொல்லியிருக்கோம். பெண்களுக்கு ஹியூமர் சென்ஸ் இல்லைனு நினைச்சுட்டு இருக்காங்க. அந்த எண்ணத்தை உடைக்கிறதுக்காகவே ஹியூமர் கலந்து ஐ காண்ட் டூ செக்ஸி வீடியோவை பண்ணினோம். இதுக்கு உறுதுணையா இருந்த பிளஷ் நிறுவனத்துக்குதான் நன்றி சொல்லணும். என்னோட அடுத்த வீடியோவும், பெண்களை மையப்படுத்திதான்  இருக்கும்..ஆனா செம்ம ஜாலியாக இருக்கும்!” என ‘ஹிண்ட்’ கொடுத்து முடிக்கிறார் சோபியா. 

வி ஆர் வெயிட்டிங், சோபி கண்ணு! 

சோபியாவின்  ‘ஐ காண்ட் டூ செக்ஸி’ வீடியோவை பார்க்க: 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ரவிவர்மா ஓவியம், ரேடியோகிராம், குக்கூ கடிகாரம்.. மதுரையில் ஒரு ப்ரைவேட் ம்யூசியம்!

 
 

மதுரை எஸ்.எஃப். காலனியில் உள்ள ரத்தின பிரகாஷ் ஆஸ்லி-யின் வீட்டுக் கதவைத் தொட்டோம். மாயாஜாலம் போல் நம் கண்முன்னே விசையால் கதவுகள் திறந்தன. அலாரம் தானாக அடிக்கின்றது. வரவேற்பு விளக்கும், அதன் ஓசையும் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றன. பிறகு, வீட்டிற்குள் நம்மை அழைத்தார் ரத்தின பிரகாஷ் ஆஸ்லி. இவர்  பழமையான பொருட்களைச் சேகரிப்பவர் மட்டும் அல்ல, வேலையை எளிமையாக்க பல அறிவியல் படைப்புகளை கண்டுபிடித்த குட்டி விஞ்ஞானியும் கூட. வெயிலின் தாகம் தணித்துவிட்டு அவரது இல்லத்துக்குள் பயணித்தோம். வீடு முழுவதும் ஆங்கிலேயர் காலத்திலான அரிய பொருட்களைக் கட்டிகாத்து வருகிறார். எப்படி இவ்வளவு பொருட்களையும் சேகரிக்க முடிந்தது என்ற கேட்டவுடன், ஒவ்வொரு பொருளுக்குமான விளக்கத்தையும் கொடுத்தார் ரத்தின பிரகாஷ் ஆஸ்லி.

பழமையான பொருட்கள்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

"நான் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றினேன்.  இந்த வேலையில் இருந்து விலகி மெக்கானிக்கல் தொடர்பாக ஆசிரியர் பணியில் சேர்ந்து வேலை செய்தேன். மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதில் நிம்மதியை உணர்ந்தேன். அப்போது  பல கண்டுபிடிப்புகளும், சேகரிப்பு விஷயங்களும் என்னுள் ஆழமாகப் பதிந்தது. எங்க அம்மா இசையில் ஆர்வம் உடையவர். அவர் பியானோ, கிட்டார், வயலின் என்று பல இசைக்கருவிகளையும் வாசிப்பார். அவ்வாறு வாசிக்கும் போது எனக்கும் அதை சொல்லிக்கொடுத்தார். அதன் ஆர்வம் என்னை பல இடங்களுக்குச் சென்று பழமையான இசைக்கருவிகளை வாங்குவதற்குத் தூண்டின. ஜெர்மனியில் 100 பியானோக்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்தார்கள். இதில் தற்போது ஏழுபதுக்கு குறைவான பியானோக்கள் தான் இருக்கின்றன. இதில் நான் வைத்திருக்கும் பியானோவும் ஒன்று. இந்த பியானோவின் சிறப்பு துல்லியமான இசையை வாரி வழங்கும் என்பது தான். இதை நாகர்கோயிலில் வசித்த சாலமன் என்பவரிடம் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு கேட்டு வாங்கினேன். 

இங்குள்ள குக்கூ கடிகாரங்கள் ரஷ்யா நாட்டின் பழமையான கடிகாரங்கள். இவை  பேட்டரி, சாவி  என எதுவும் இல்லாமலேயே எடையைக் கொண்டே தானே இயங்கும். மணிக்கு ஒரு முறை இனிமையான குருவியின் ஓசையை வழங்கும். இது போல 50-க்கும் மேற்பட்ட கடிகாரங்கள் என்னிடம் உள்ளன" என்றவர், அடுத்தடுத்த பொருட்களைக் குறித்து உற்சாகமாக விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். 

"என்னிடம் ஜெர்மன், ஸ்விஸ், லண்டன் என்று பல நாட்டு பழமையான ரெக்கார்டர்கள் உள்ளன. இவை தன்னிச்சையாகக் கேசட்களை மாற்றிக்கொண்டு பாடல்களை இசைக்கும். போர்டபுள் ரெக்கார்டு பிளேயர் அதிக அளவு யாரும் பார்த்திருக்க முடியாது. இதனை 20-வது வருடங்களுக்கு முன்னரே சென்னையில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். அதை வைத்திருந்த நபருக்கு என்ன கருவி என்பது கூட அவருக்கு தெரியாது. ஆனால், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பரிசாக கொடுத்தாக கூறினார் .

என்னிடம் பத்துக்கு மேற்பட்ட ரேடியோகிராம்கள் உள்ளன. இதில் உலகத்தில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளையும் கேட்க முடியும். இங்கிலாந்து நாட்டு தயாரிப்பு மிக அழகாக இருக்கும். இரவில் வெளிச்சம் குறைவாக இருந்தால் தானே அமர்ந்து விடும்.

பழமையான பொருட்கள்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

மதுரை தலைமை தபால் நிலையத்தில்  தந்தி அடிக்கும் மிஷினை பெற்றேன். ஆரம்பத்தில் இதை எனக்கு தர மறுத்து விட்டார்கள். பிறகு, நான் பழைய பொருட்களின் சேமிப்பாளர் என்ற தெரிந்த பிறகே எனக்கு வழங்கினார்கள் . எனக்கு ஓவியங்களும் பிடிக்கும். ராஜ ரவிவர்மாவின் ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். இவை அனைத்து ஒரிஜனல் தான் என்பதற்கு சான்றிதழ்களும் என்னிடம் உள்ளது.

என்னிடம் 15 பைக்குகளுக்கு மேல் உள்ளன. ஒரு சில என் அப்பா வாங்கியது. மற்றதை எல்லாம் நான் வாங்கியது. நான் எந்த பைக் வாங்கினாலும் விற்க மாட்டேன். எக்சேஞ்சும் செய்ய மாட்டேன். தற்போது என்னிடம் மூன்று கார்கள் உள்ளன. ஒன்றை மட்டும் தான் பயன்படுத்துகிறேன். மற்ற  இரண்டும் முன்பு பயன்படுத்தியவை.

 எனது அறை மிகவும் அமைதியானது. நான் மட்டும் தான் அதற்குள் செல்வேன். அங்கு தான் எனது ஆய்வுகள் அனைத்தையும் செய்வேன். ஏடிஎம் மிஷன் தத்துவத்தை  வங்கிகள் செயல்படுத்துவதற்கு முன்பே கண்டுபிடித்துவிட்டேன்" என்று சொன்ன ஆஸ்லி  சென்சார் மூலம் சில்லறைகள் வரும் குட்டி இயந்திரத்தை நம்மிடம் காட்டி ஆச்சர்யப்படுத்தினார்.

பழமையான பொருட்கள்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

தானாக டால்கம் பவுடர் கையில் கொட்டும் இயந்திரம், தலைக்கு தேங்காய் எண்ணெய் வழங்கும் இயந்திரம், தலை துவட்டும் இயந்திரம், கை தட்டும் ஓசையில் மின்விசிறி, விளக்கு எரியும் இயந்திரம், பழமையான கேமரா, கெரோசின் ஹீட்டர் என்று நம்மிடம் பல இயந்திரங்களை அறிமுகம் செய்து அதை இயக்கியும் காண்பித்தார். 

"இத்தனை பொருட்களைச் சேகரிக்கவும், அதனை ஆய்வு செய்யவும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தது என் மனைவி தான்.  மனைவி என்னை என் போக்கில் விட்டதால் தான் இன்று வரை நான் ஆனந்தமாக வாழ்கிறேன். என் இரண்டு மகன்களும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள். நான் என் மனைவியுடனும் இந்த பொருட்களுடன், நிம்மதியாக வாழ்கிறேன். நான் பல விஷயங்களைக் கண்டுபிடித்தாலும் பணமாக மாற்ற நினைத்ததில்லை. எல்லாமே என் சந்தோசத்திற்காவும், என்னிடம் படித்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் தான் கண்டுபிடித்தேன். என்னிடம் நிறைய பழமையான பொருட்கள் உள்ளன. அதனை விரைவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்த்து அறிந்துகொள்ளும் வகையில் மியூசியம் போல வைக்கவும் திட்டமிட்டு இருக்கிறேன் " என்று சொன்னார் ஆஸ்லி.

மியூசியத்தை பார்வையிட தயாராக இருங்கள். பல விஷயத்தை நேரில் கற்றுக்கொள்ள முடியும். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பூமியைக் காக்க உங்களால் இந்த 8 விஷயங்களை செய்ய முடியும்..! #WorldEarthDay

பூமி

Go Green கான்செப்ட் என்றதும் பலரும் பயந்து நடுங்குவதை பார்த்திருப்போம். உண்மையில் அது அவ்வளவு சிரமமா? நிச்சயம் இல்லை. இந்த எட்டு விஷயங்களை படித்துவிட்டு சொல்லுங்கள்.

 
  1. முதல் முக்கியமான விஷயம் தண்ணீர்தான். காலையில் பல் துலக்கும்போது தண்ணீரை எப்படி பயன்படுத்துவீர்கள்? குழாயில் இருந்து தண்ணீரை கைகளால் பிடிப்பேன் என்றால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு மக்-ல் தண்ணீர் பிடித்து பயன்படுத்தினால் நீங்கள் இந்தப் பூமிக்கு நன்மை செய்கிறீர்கள். அந்தத் தண்ணீரால் என்ன நன்மை நடக்கும் என்பவர்கள் அந்நியன் படத்தில் சுஜாதா சொன்ன “அஞ்சு பைசா திருடினா தப்பா” என்ற வசனத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.
  2. பக்கத்தில் இருக்கும் கடைக்கு பைக் எடுத்துச் செல்வதை தவிருங்கள். வாரத்தில் ஒருநாள் பேருந்தில் அலுவலகம் செல்லுங்கள். மாதம் 2 லிட்டர் பெட்ரோல் ஒருவர் குறைவாக பயன்படுத்தினால் ஒரே மாதத்தில் எத்தனை கோடி லிட்டர் மிச்சம் ஆகும் என யோசியுங்கள்
  3. உங்கள் அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர்? தினமும் எவ்வளவு காகிதம் பயன்படுத்தப்படுகிறது? அதில் எத்தனை மறுசுழற்சிக்கு உள்ளாக்க முடியும்? ஒரு பக்கம் மட்டுமே அச்சடிக்கப்பட்ட காகிதங்களை, மீண்டும் பயன்படுத்த முடியாதா? உங்களால் முடியும் பாஸ்.
  4. உங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை எது, மக்கா குப்பை எது என பிரித்து வைக்கும் பழக்கம் உண்டா? உடனே செய்யுங்கள். அதுவே ஒரு பேருதவி.
  5. தலையை தூக்கி கொஞ்சம் பாருங்கள். உங்கள் வீட்டிலோ , அலுவலகத்திலோ என்ன மாதிரியான விளக்குகள் இருக்கின்றன? குண்டு பல்பு இருந்தால் சிக்கனம் பார்க்காமல் உடைத்து விடுங்கள்.  சி.எஃப். எல் விளக்குகள் சாதாரண விளக்குகளை விட 10 மடங்கு அதிகமாக உழைக்கும். குறைந்த மின்சாரத்தையே எடுத்துக்கொள்ளும்.
  6. சக்தியை மிச்சப்படுத்துங்கள். வீட்டில் இருக்கும் போது தேவையற்ற மின்விசிறி, விளக்குகள் எரிவதை குறைக்கலாம். குளிர்சாதன பெட்டியின் ஃபில்டர்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அதுவும் சக்தியை மிச்சப்படுத்தும். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி அறையும் தூங்கும் பழக்கம் இருந்தால், அதையும் வாரம் இரண்டு நாட்கள் தவிர்க்கலாம். ஏ.சி.என்பது ஓர் அறையை குளிர்வித்து, இந்த பூமியையை சூடாக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
  7. உங்கள் வாகனங்களின் டயர்களை சரியாக பரமாரிப்பதும் பூமிக்கு செய்யும் நல்லதுதான். எப்படி? காற்றழுத்தம் குறைவாக இருக்கும் வாகனங்கள் 20% வரை அதிக எரிபொருளை வீணாக்கும். அவற்றை சரியாக வைத்திருப்பதன் மூலம் நமக்கும் பணம் மிச்சம். பூமிக்கும் குறைந்த சேதாரம். போலவே, அதிக வேகத்தை தவிர்க்கலாம். 60-70 கிமீ / ஒரு மணி நேரம் என்பதை மந்திரமாக கொள்ளுங்கள்.
  8. திடக்கழிவுகள் தான் பூமியின் பெரும்பாலான இடத்தை ஆக்ரமித்திருக்கிறன. கடலை நாசம் செய்கின்றன. இந்தப் பூமியை மாசுபடுத்துக்கின்றன. ஒவ்வொரு தனி நபரும் உருவாக்கும் கழிவுகளை குறைக்கலாம். அதுவும் கோ க்ரீன் வாழ்வுதான்.

இன்று உலக பூமி தினம். இன்றே இந்த 8 விஷயங்களில் உங்களால் முடிந்தவற்றை பின்பற்ற தொடங்குங்கள். அடுத்த வருடம் இதே நாளில் நம்மால் முடிந்த நல்லதை இந்த பூமிக்கு செய்தோம் என்ற திருப்தியுடன் மீண்டும் பூமியை கொண்டாடுவோம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சட்டையில் இந்த லூப் எதற்கு தரப்பட்டுள்ளது என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

சட்டையின் பின்புறத்தில் இந்த லூப் எதற்கு தரப்பட்டுள்ளது என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? இதப்படிச்சு தெரிஞ்சுக்குங்க.

 சில வகை ஷர்ட்டுகளில் மட்டும் நீங்கள் இந்த லூஸ் ஹோல் கண்டிருக்க வாயப்புகள் உண்டு. இது எதற்காக இருக்கிறது என்று நீங்கள் என்றேனும் யோசித்தது உண்டா? நம்மில் பெரும்பாலானோர் இதை டிசைன் அல்லது ஃபேஷன் என்று நினைத்திருக்க வாய்ப்புகள் உண்டு.

ஆனால், சட்டையின் பின்புறத்தில் அமைந்திருக்கும் இந்த லூப் ஹோல் ஓர் காரணத்திற்காக தான் 1960-களில் அறிமுகப்படுத்தப்பட்டது என ஓர் சுவாரஸ்யமான காரணமும் இருக்கிறது...

Ever Noticed The Small Loop At The Back Of Your Shirt?

இந்த வகை சட்டைகளை 1960-களில் அமெரிக்க உடை தயாரிப்பு ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்தது. இந்த லூப் ஹோலை லாக்கர் லூப், ஃபேரி லூப் மற்றும் ஃப்ரூட் லூப் என்றும் கூறுகின்றனர். பெண்கள், இதை விளையாட்டு பொருளாக கருதி இழுத்து, இழுத்து விளையாடுவதும் உண்டு.

சில சமயங்களில் எங்கேனும் சிக்கி அதன் காரணமாக சட்டை கிழியவும் வாய்புகள் இருக்கின்றன. பல்வேறு பிராண்டு சட்டைகளில் இந்த லூப் ஹோல் பின் பகுதியில் அமைந்திருக்கும். இது, ஸ்டைல் அல்லது டிசைன்காக அமைக்கப்படவில்லை. ஒருமுறை நீங்கள் கழற்றி மாட்டினாலோ அல்லது துவைத்து இஸ்திரி செய்து வைத்தாலோ சட்டை கசங்காமல் இருக்க அமுக்கமாக லாக்கர் அல்லது ஹேங்கரில் மாட்டி வைக்க தான் இந்த லூப் ஹோல் சட்டையில் இணைக்கப்பட்டது.

ஆனால், இதன் நோக்கம் எதற்கென தெரியாமலேயே நம்மில் பலர் இந்த வகை சட்டைகளை வாங்கி அணிந்து வருகிறோம்.

http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

குட்டி டி வில்லியர்ஸ் களமிறங்கியாச்சு!

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸின் மகனான 3 வயது ஆபிரகாம் இப்போதே தனது பயிற்சியை ஆரம்பித்துவிட்டார். தந்தையுடன் அவர் பயிற்சி செய்யும் வீடியோ தான் இப்போது ஆன்லைன் வைரல்.

abd

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர். மைதானத்தின் நாலாபுறங்களிலும் ரன் குவிப்பவதால் அவர் Mr.360 என்று அழைக்கப்படுவார். தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் தனது மூன்று வயது மகனுடன் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டி வில்லியர்ஸின் மகன் ஆபிரகாம், தந்தையுடன் இணைந்து பயிற்சி செய்வதோடு நில்லாமல், சிறிய பேட்டை பிடித்துக் கொண்டு டி வில்லியர்ஸ் போல அதிரடி ஆட்டத்தை ஆடுகிறார். மேலும், இப்போதே டி வில்லியர்ஸுடன் சேர்ந்துக் கொண்டு 'கோ ஆர்.சி.பி' என லூட்டி அடித்து வருகிறார். விராத் கோலியின் பேட்டிங் பயிற்சியையும் ஒய்யாரமாய் சாய்ந்துக் கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறார் குட்டி டி வில்லியர்ஸ். 

 

 

 

 

 
 
 
 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒரு பாட்டுக்காகவே வைரல் ஆன தமிழ்ப்படங்கள் இதெல்லாம்!

தமிழ் சினிமாவுல எவ்வளவோ படங்கள் வந்து ஹிட் அடிச்சாலும் சில படங்கள் ஒரே ஒரு பாட்டுக்காகவே ரொம்பக்கவனத்தை பெற்றிருக்கும். அதனாலேயே கூட்டம் கூட்டமாகலாம் வந்து படத்தைப் பார்த்துட்டுப்போவாங்க. சாம்பிளுக்கு அப்படியான சில டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட்தான் இது.

2_13108.jpg

திருடர்கள்
'துள்ளுவதோ இளமை',  'காதல், கொண்டேன்'னு ரெண்டே ரெண்டு படங்கள் மட்டுமே அதுவரைக்கும் நடிச்சிருந்த தனுஷுக்கு, மூணாவதா சிக்குன படம்தான் இந்த 'திருடா திருடி'. மேல சொன்ன ரெண்டு படங்களும் கதைக்காகவும், அவரோட நடிப்புக்காகவும் கொண்டாடப்பட்டது. ஆனா 'திருடா திருடி' எப்படி இருக்கும்னு தெரியிறதுக்கு முன்னாடியே  படத்தைப்பார்க்க ஆடியன்ஸை கொத்துக்கொத்தாக உள்ளே இழுத்துட்டு வந்த காரணம் என்னன்னா அது 'மன்மதராசா மன்மதராசா' ங்கிற அந்த  ஃபாஸ்ட் நம்பர் சாங் தான். சின்னப்பசங்கள்ல இருந்து யூத்துகள் வரைக்கும் இதுக்கு ஆடாத ஆளுங்களே இல்லை. தனுஷ் இப்படில்லாம் ஆடுவாரான்னு பலபேரை ஆச்சரியப்பட வச்சதும் இந்தப்பாட்டுதான்.

பாட்டு

ஓ போட்டோம்
பாட்டு வந்து பல வருசம் ஆனாலும் இப்பவரைக்கும் நாம பாக்குற பல ஸ்டேஜ் ப்ரோக்ராம்கள்ல எல்லாருக்கும் ஒரு ஓ போடுங்கன்னு ஆங்கரிங் பண்றவங்க சொல்றதையும் அதுக்கு ஆடியண்ஸ்கிட்ட இருந்து ஓ.... ஓ.. ன்னு ஒரு பெரிய சத்தம் வர்றதையும் பார்த்துக்கிட்டு இருக்குறோம்னா, அது இந்த 'ஜெமினி' படத்துல வந்த 'ஓ போடு' பாட்டுதான் காரணமே. குக்கிராமம் முதல் குக்கர் சிட்டி வரைக்கும் அடிச்சுப் பிரிச்சு மேஞ்சது இந்தப்பாட்டு. படம் பார்க்கபோனவங்களாம் படத்துல இந்தப்பாட்டு எப்ப வரும்னுதான் காத்துக்கிட்டு இருந்தாங்கன்னா பார்த்துக்கங்க.

சிம்பு

குத்துப்பாட்டு...
ஏதாவது ஒரு பாட்டு வந்து ஹிட் ஆகிட்டா அதேமாதிரி ஆளாளுக்குக் கிளம்புறதுதானே வழக்கம். மன்மதராசாவைப்பார்த்துட்டும் அதேமாதிரி சில பேர் கிளம்பினாங்க. அந்த லிஸ்ட்டுல  இந்த 'குத்து' படத்து 'போட்டுத்தாக்கு'ம்  ஒண்ணு. மன்மதராசாவுல கறுப்பு ட்ரெஸ் போட்டு வந்து ஆடுனமாதிரி இந்தப்பாட்டுல கான்ட்ராஸ்ட்டா வெள்ளை ட்ரெஸ் போட்டு ஆடிருப்பாங்க சிம்புவும், ரம்யாகிருஷ்ணனும். இந்தப்பாட்டு இப்படி ஒருபக்கம் ஃபேமஸ் ஆக, இவ்ளோ ஏஜ்லயும் இப்படி ஒரு குத்தாட்டாம் ஆடுறாங்களான்னு ரம்யாகிருஷ்ணனும் பரபரப்பா பேசப்பட்டுட்டாங்க. இதென்ன பிரமாதம் இதைவிட ஒரு ஸ்பெசல் ஐட்டம் இருக்கு  கேப்டன் பிரபாகரன் படத்து 'ஆட்டமா தேரோட்டாமா' பாட்டுலாம் நீங்க பாத்தது இல்லையான்னு ரசிகர்கள் சிலாகிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

காதலில் விழுந்தேன்

நாக்கா மூக்கா...
இப்பவரைக்கும் இந்தப்பாட்டுக்கு என்ன அர்த்தம்னே தெரியலை. ஆனா பாட்டு செம ஹிட். பாட்டு ஹிட் ஆனதைப் பார்த்துட்டு மேல் வெர்சன் ஃபீமேல் வெர்சன்னு ரெண்டு வெர்சனும் வேற வர ஆரம்பிச்சிடுச்சு. நடிகர் நகுல், சன்பிக்சர், பாடகி சின்னப்பொண்ணுனு பலபேருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது இந்தப்பாட்டுதான். பாட்டுல என்னனுதான் டான்ஸ் ஆடிருக்காங்கன்னு பார்க்குறதுக்காகவே தியேட்டருக்குப் பலபேரை வரவச்சது இந்த 'காதலில் விழுந்தேன்' படத்துப்பாட்டு.

ஜீன்ஸ்

அந்த ஏழு அதிசயம்...
குத்துப்பாட்டை பார்க்குறதுக்காகத்தான் மக்கள் இப்படி கூடுவாங்களான்னு கேட்டா அதுதான் இல்லை. சில பாட்டுகள் விதிவிலக்காகவும் இருந்திருக்குது மக்களே. 'ஜீன்ஸ்' படத்துல வந்த  'பூவுக்குள் ஒளிந்திருக்கும்' பாட்டுல ஏழு உலக அதிசயங்களையும் விஷ்யூவலாக காட்டுறாங்கங்கிறதுக்காகவே அந்தப்பாட்டு செம ஃபேமஸ் ஆகிடுச்சு. தாஜ்மகாலும், சீனச்சுவரும், ஈபிள் டவரும் இதுலதான் பலபேருக்கு அறிமுகம். இன்னைக்கு டைரக்டர் ஷங்கர் விஷ்யூவலாக செம ஸ்ட்ராங்கா இருக்குறார்னா ஆரம்பத்துல இந்தமாதிரி பாட்டெல்லாம் எடுத்து இன்டஸ்ட்ரியையே திரும்பிப்பார்க்க வச்சதுதான் பாஸ் காரணம்.


SPB

மூச்...
அப்படியே கொஞ்சம் பின்னோக்கிப் போனோம்னா சில பாடல்கள் இருக்குது; அது எல்லாத்தையும் சொன்னோம்னா 'அடுத்த முதலமைச்சர்' லிஸ்ட் மாதிரி பெரு...சா போகும். அதனால இந்தப்பாட்டை மட்டும் எடுத்துக்குவோம். எஸ்.பி.பியே நான் மூச்சு விட்டுத்தான் பாடினேன்னு சொல்லிருந்தாலும் மக்கள் இன்னும் அதை ஏத்துக்காம அது எப்படி சார் மூச்சு விடாம பாடுனீங்கன்னு கேக்குற பாட்டுனா அது இதுதான். மூச்சுவிடாம பாடிருக்காராமே வாய் வலிக்காதா... மூக்கு அரிக்காதா...ன்னு எல்லாம் பலபல ஆச்சரியத்தோடயே இந்த 'கேளடி கண்மணி' படத்தை பலபேர் பார்க்கப்போனதுங்கிறது வரலாறு.

கொலவெறி

 
 

பொயட்...
இந்த '3' படத்து  'வொய் திஸ் கொலவெறி' பாட்டு நவீனத்தலைமுறையின் ட்ரெண்ட் செட் பாட்டுன்னே சொல்லலாம். கேட்ஜெட்ஸ் சோசியல் மீடியான்னு நிரம்பி வழியுற இந்தக்காலத்துல எப்படி எல்லாம் அதை வச்சு ஹிட் அடிக்கலாம்னு பலபேருக்கு சொல்லித்தந்ததே இந்தப்பாட்டுதான். படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே அதிகமாக யூ-டியூபில் பார்க்கப்பட்ட பாட்டுன்னு யூ-டியூப்பே 'கோல்டு விருது'லாம் கொடுத்திருந்திச்சு. இந்தப்பாட்டு எந்த அளவுக்கு ஹிட்னு சொல்லிவேற தெரியணுமா மக்களே.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22 அன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கும் ஓர் நாள் ஆகும்.

இந்த புவி நாளானது 1970ஆம் ஆண்டு முதலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. என்ற போதும் அன்றிருந்த நிலை இன்று இல்லை என்பதும் உண்மையே.

இன்று புவிநாளை முன்னிட்டு நாசா புவி தொடர்பில் விசேட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

பூமி இவ்வளவு அழகானதா? என்ற வகையில் ரசனை மிகு சிந்தனையை ஏற்படுத்துகின்றது இந்த புகைப்படங்கள். இதன் மூலம் வாழும் சொர்க்கத்தை நாசா புகைப்படமாக காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

ஆனாலும் இந்த பூமியின் அழகை கெடுப்பவர் யார்? மனிதர்களே. எப்போதோ இருந்த பூமியா இன்று உள்ளது? இந்தக் கேள்விக்கு சட்டென்று பதில் வரும் மாற்றத்தை தவிர மற்றவை அனைத்துமே மாறிப்போகும் என.

625.0.560.350.160.300.053.800.668.160.90.png

மாற்றத்தை தோற்று விப்பதே நாம் (மனிதர்கள்). ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளுவது என்பது சற்று கடினமே.

மனிதர் அறிவுக்கு எட்டியவரை அதிசய வாழிடமாக புவியே காணப்படுகின்றது. இன்று வரை பதில் கண்டுபிடிக்க முடியாத விசித்திரங்கள் பூமி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

எவ்வாறாயினும் இப்போதைய சூழலில் புவி பல்வேறு மாற்றங்களை அடைந்து விட்டது. அதனால் காலநிலையும் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றது.

பூமியே பூமியை அழித்து விடவேண்டும் என்ற நிலை கூட ஏற்பட்டுக் கொண்டு வருவதாகவும் இதனைக் கூற முடியும். எவ்வாறாயினும் நாம் வாழும் பூமியை காக்க வேண்டியது மனிதர்களின் முக்கிய கடமையே.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p36a.jpg

 சூப்பர் ஸ்டாரின் போயஸ் தோட்டம் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு வாங்கிக் குடிபோயிருக்கிறது ஸ்போர்ட்ஸ் ஜோடி தினேஷ் கார்த்திக் - தீபிகா பலிக்கல். ட்ரிப்பிள் பெட்ரூம், நீச்சல்குளம், ஜிம் உள்ளிட்ட வசதிகள்கொண்ட இந்த அப்பார்ட்மென்ட்டைக் கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்களாம் இந்த சாம்பியன்ஸ் தம்பதி. ஸ்டார்ஸ் தோட்டம்!


p36b.jpg

 ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால், படம் ரொம்ப நீ......ளமாக இருக்கிறதாம். அவ்வளவு எடுத்துத் தீர்த்திருக்கிறார்கள். இப்போது அத்தனை மேட்டர்களையும் என்ன செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இறங்கியிருக்கிறார் சிம்பு. யோகா, தியானம் எல்லாம் செய்து ஒருவழியாகப் படத்தை இரண்டு பகுதிகளாக வெளியிடலாம் என முடிவெடுத்திருக்கிறதாம் சிம்பு தரப்பு. ஆஹான்!


p36c.jpg

‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா, இரண்டாவது இன்னிங்ஸ் ஆட ரெடி. இந்த முறை தயாரிப்பாளர், கணவர் உதயநிதி ஸ்டாலின் அல்ல. விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கிறார். படத்தின் பெயர் `காளி’. கெட்டப்பயலா சார் காளி?


ங்களுக்கு நீரிழிவுநோய் இருக்கிறதா? சர்க்கரை அளவை அறியும் பரிசோதனைக்கு ரத்தம் எல்லாம் தரத் தேவையில்லை. அடுத்த ஆண்டு ஆப்பிள் வாட்ச்சோ, மேக் லேப்டாப்போ வாங்கிக்கொள்ளலாம். இதற்காக ஆப்பிளின் சீக்ரெட் குழு `டயாபடிக் டெஸ்டிங் சென்ஸார்’ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது. தோலின் மீது ஒளியைப் பாய்ச்சி, அதன்மூலம் ரத்தத்தில் இருக்கும் குளூக்கோஸ் அளவை அறிய முடியுமாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த இந்தச் சோதனை, இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லி. ஆனால், ரத்தம் கொடுக்கத் தேவையில்லை என்பது ஆச்சர்யம்தானே. இன்னும் என்னவெல்லாம் இருக்கோ!


p36d.jpg

15 மாதத் தடை முடிந்து, ஏப்ரல் மாத இறுதியில் மீண்டும் டென்னிஸ் களத்தில் இறங்குகிறார் மரியா ஷரபோவா. போர்ஷே கிராண்ட் ப்ரீதான், 15 மாதத் தடைக்குப் பிறகு மரியா ஷரபோவா களம் இறங்கும் முதல் பந்தயம். ரேங்கிலேயே இல்லாத மரிய ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு என்ட்ரி இல்லாமல், இந்தப் போட்டியில் நேரடியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது டென்னிஸ் அமைப்பு. இதனால் மற்ற டென்னிஸ் வீராங்கனைகள் எல்லாம் கடுப்பாகி ஸ்டேட்டஸ் போட, ‘நானே ஒப்புக்கொண்டு ஒரு தண்டனையை அனுபவிக்கிறேன். என்னை மேலும் தண்டிப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என மற்ற வீராங்கனைகள் தேடினால் நான் என்ன செய்வது?’ என வருத்தப்பட்டிருக்கிறார் ஷரபோவா. இன்னிங்ஸ்-2 இனிக்கட்டும்!


p36e.jpg

ஜூலை மாதம் ஓய்வுபெறுகிறார் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. ஓய்வுக்குப் பிறகு, இளைஞர்களுக்கு உதவுவதற்காக ஓர் அமைப்பைத் தொடங்குகிறார் பிரணாப். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நிதி உதவி செய்வதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாம். ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவிருக்கும் இந்த அமைப்புக்கான வேலைகளை, அவரது செயலாளர் ஒமிதா பால் என்கிற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி செய்துவருகிறார். சிறப்பா செய்யுங்க!


புழல் சிறையில் தீவிர புத்தக வாசிப்பில் பிஸியாக இருக்கிறார் வைகோ. சிறைக்குள் போகும்போதே `என் வழக்குரைஞர்கள் தவிர வேறு யாரும் சிறைக்கு வந்து என்னைச் சந்திக்கக் கூடாது’ என கண்டிஷன் போட்ட வைகோ, வழக்குரைஞர்களிடம் ஒரு பெரிய புத்தக லிஸ்ட்டைக் கொடுத்திருக்கிறார். அவற்றுள் மல்யுத்த வீரர் தாராசிங் பற்றிய புத்தகம், வரலாற்று ஆய்வு நூலான ‘நீலம் மஞ்சள் சிவப்பு’, சிவாஜி கணேசன் பற்றிய ஆய்வு நூல் என வைகோ கொடுத்த லிஸ்ட்டின்படி புத்தகங்கள் சிறைக்குள் சென்றுவருகின்றன. கம்பிகளுக்குள் வெளிச்சம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

லா லா லேண்ட்க்கு ரகுமான் இசையமைத்திருந்தால் இப்படி தான் இருந்திருக்குமோ.!

 
 

கடந்தாண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற லா லா லேண்ட் திரைப்படத்தின் காட்சிக்கு வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் ரீமிக்ஸ் செய்யபட்ட வீடியோ தான் இப்போது ஆன்லைன் வைரல்.

la la land

எம்மா ஸ்டோன், ரியான் கோசஷ்லிங் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் லா லா லேண்ட். ஆஸ்கர் விருதுகளையும் இத்திரைப்படம் தட்டி சென்றது. இப்படத்தில் பிரபலமாக பேசப்பட்ட 'சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ்' பாடல் பலருக்கும் ஃபேவரட். இப்பாடலின் தமிழ் வடிவம் தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.

பிரபுதேவா, கஜோல் நடிப்பில் உருவான மின்சார கனவு படத்தின் வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் இந்திய அளவில் புகழ்ப்பெற்றது. இப்பாடலுக்கு தான் லா லா லேண்ட் ஜோடி ஆடுகிறது. ஃபேஸ்புக்கில் இப்படல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளது. பாடலின் இசைக்கேற்ப காதலர்களின் நடனம் நூறு சதவீதம் பொருந்தும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கோலி இன்... தோனி? - ஐபிஎல் அலப்பறைகள்!

 
 

பு.விவேக் அனந்த்

 

தோனி கேப்டன் இல்லை; கோலி  ஃபிட்டாக இல்லை; சுழற்பந்து சூப்பர் ஸ்டார் அஸ்வின் அணியில் இல்லை... என மந்தமாகத் தொடங்கிய ஐ.பி.எல்., இப்போது வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. கோலி மீண்டும் விளையாட வந்துவிட்டார். கம்பீர் வெளுத்துக்கட்டுகிறார், பண்ட், சஞ்சு சாம்ஸன்... போன்ற இளம்வீரர்கள் அதிரடிக்கிறார்கள் என்பதுதான் பரபரபுக்குக் காரணம்.

p56j.jpg

கோலி ரிட்டர்ன்ஸ்

கடந்த ஐ.பி.எல்-லில் கோலியின் விளாசலை டிவி-யில் பார்த்தவர் களுக்கே மூச்சிரைத்தது. ஒரே சீஸனில் 973 ரன்கள். நான்கு சதங்கள், ஏழு அரைச் சதங்கள் எனத்  தெறிக்கவிட்டார். ஆனால், காயம் காரணமாக இந்த ஆண்டு முதல் மூன்று போட்டிகளில் கோலி ஆடவில்லை. `நூறு சதவிகிதம் ஃபிட்டாக இருந்தால் மட்டுமே விளையாடுவேன்’ என்பதை பாலிஸியாக வைத்திருக்கும் கோலி, இப்போது ஃபுல் ஃபார்முடன் திரும்பியிருக்கிறார். முதல் போட்டியில் அரைச் சதத்துடன் ஆரம்பித்திருக்கும் கோலியின் ராஜ்ஜியம் தொடரும்.

p56a.jpg

பாவம் புனே

`தோனியை கேப்டன்ஷிப்பில் இருந்து நீக்கியது சரியான முடிவு. ஸ்மித் செம கேப்டன்' என ஸ்டேட்டஸ் தட்டிக்கொண்டிருந்த புனே அணியின் உரிமையாளர்கள் கோயங்கா பிரதர்ஸ், இப்போது அரண்டுபோயிருக்கிறார்கள். முதல் போட்டியில் மட்டுமே வெற்றி. அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்தோல்விகள் எனப் படுத்தப்படுக்கையாகிவிட்டது புனே அணி. இதில் உச்சகட்டம் பென் ஸ்டோக்ஸ்தான்.

p56c.jpg

இந்த ஆண்டின் உச்சப்பட்சத் தொகையாக  14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர் பென் ஸ்டோக்ஸ். ஆனால், அவரே புனே அணியின் தோல்விக்கு முதல் காரணம். ஸ்டோக்ஸின் பந்துகளைத் துவைத்து எடுக்கிறார்கள் எதிர் அணி பேட்ஸ்மேன்கள். ஸ்டோக்ஸ் நான்கு ஓவர்கள் போட்டால் எதிர் அணிக்கு 40 ரன்கள் நிச்சயம் என மீம்ஸ்கள் பறக்கின்றன.  ஆனால், அவர் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வருவார் எனச் சமாளிக்கிறது புனே அணி நிர்வாகம்.

p56b.jpg

பட்டையைக் கிளப்பும் பாண்டியா பிரதர்ஸ்

பாண்டியா சகோதரர்கள்தான் இந்த ஆண்டின் அதிரடி பிரதர்ஸ்.  ஹர்திக் பாண்டியா- க்ரூனால் பாண்டியா இருவருமே மும்பை அணிக்காக விலையாடுகிறார்கள். இருவரும் ஆல் ரவுண்டர்ஸ்.  ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சாளர். க்ரூனால் பாண்டியா சுழற்பந்து மன்னன். மும்பை அணியில் ரோஹித் ஷர்மா, பட்லர், பொல்லார்டு போன்ற பெருந்தலைகள் ரன்கள் குவிக்கச் சிரமப்பட்ட போட்டிகளில் எல்லாம், `நாங்க இருக்கோம்' எனப் பொறுப்புகளை எடுத்துப்போட்டுச் செய்தது இந்த பிரதர் கூட்டணிதான்.

இதுவரை மூன்று போட்டிகளில் டிவில்லி யர்ஸுக்குப் பந்து வீசியிருக்கிறார் க்ரூனால் பாண்டியா. மலிங்கா, பும்ரா பந்துகளைச் சிதறாமல் சிக்ஸர் விளாசும் ஏபிடி, க்ரூனாலிடம் மட்டுமே மூன்று முறையும் அவுட் ஆகியிருக்கிறார். `டிவில்லியர்ஸ் போன்ற ஆள்களுக்குப் பந்து வீசும்போது, இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற மனநிலையுடன்தான் வீசுவேன். பௌண்டரிகளோ, சிக்ஸரோ விளாசப்பட்டால் டென்ஷன் ஆக மாட்டேன். முழு உத்வேகத்துடன் சரியான பந்துகளை வீசுவேன். அதற்குக் கிடைத்த பரிசுகள்தான் இவை' என்பது க்ரூனாலின் சிம்பிள் பதில்.

கிறிஸ் லின்

பெங்களூருக்கு கிறிஸ் கெய்ல் என்றால், எங்களுக்கு கிறிஸ் லின் எனக் கெத்துகாட்டியது கொல்கத்தா. அதற்கு ஏற்றாற்போலவே முதல் மேட்சில் 41 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் லின். இதில் எட்டு மெகா சிக்ஸர்கள். ஆனால், கிரிக்கெட் வாழ்க்கையில் துரதிர்ஷ்ட அரக்கனால் தொடர்ந்து துன்புறத்தப் பட்ட லின், இந்த முறையும் அவுட். காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் லின் விளையாடுவது சந்தேகம்.

 27  வயது  வீரரான கிறிஸ் லின் ஆஸ்திரேலியாவுக்காக இதுவரை ஒரேஒரு ஒரு நாள் போட்டி மற்றும் 5 டி-20 மேட்ச்களில் மட்டுமே ஆடியிருக்கிறார். 2011-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல்-லில் இருக்கிறார். ஆனால், அவரை ஏலத்தில் எடுக்கும் அணிகள் எதுவுமே, ஆட்டத்தில் சேர்க்காது. இந்த விதியை மீறி 2014-ம் ஆண்டு சீஸனில் கொல்கத்தா அணிக்காக முதல் போட்டியில் ஆடி, `மேன் ஆஃப் தி மேட்ச்’ வென்றார் லின். ஆனால், அதன்பிறகு காயம் காரணமாக அந்த சீஸன் முழுக்க விளை யாடவில்லை. அதேபோல் இந்த முறையும் இரண்டு போட்டிகளோடு மூட்டைக் கட்டியிருக்கிறார் லின்.  `கிரிக்கெட் கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?' என ட்விட்டரில் புலம்பியிருக்கிறார் லின்.

p56d.jpg

ப்ரீத்தி  ஹேப்பி  அண்ணாச்சி

`பஞ்சாபுடன் ஆடினால் இரண்டு புள்ளிகள் நிச்சயம்' எனப் பரிகாசிக்கப்பட்ட பஞ்சாப் அணி, இந்த சீஸனில் எதிர் அணிகளை விரட்டியடிக்கிறது. எல்லாம் கிளென் மேக்ஸ்வெல் கேப்டனான மாயம்தான். களத்தில் கூல் கேப்டனாக இருக்கிறார் என்பதால், பஞ்சாப் வீரர்களுக்கும் மேக்ஸியைப் பிடித்துவிட்டது. ஆனால், ஷேவாக் ரசிகர்களோ, `கேப்டனாக இருக்கும் வரை தடுமாறிய ஷேவாக், பயிற்சியாளர் ஆனதும் சக்ஸஸ் சீக்ரெட்டைப் பிடித்துவிட்டார்’ என உற்சாகமாகிறார்கள். மொத்தத்தில் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி செம ஹேப்பி.

p56e.jpg

பாவம் ஸ்டெய்ன்

உலகின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னுக்கு, இந்த சீஸனில் எந்த அணியிலும் இடம் இல்லை. `கடந்த ஒன்பது வருடங்களில் முதன்முறையாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெட்டியாக உட்கார்ந்திருக்கிறேன். வியர்வை நனைய அங்கே விளையாடிக்கொண்டிருக்க வேண்டியவன் நான்' என ஃபீல் பண்ணுகிறார் ஸ்டெயின்.

p56f.jpg

தோனி தொடர்வாரா?

மிகமிக மோசமான ஃபார்மில் இருக்கிறார் முன்னாள் கேப்டன் தோனி. அவருடைய அதிரடி ஆட்டம் என்னாச்சு, ஹெலிகாப்டர் ஷாட்லாம் எங்கே போச்சு... எனக் கண்களைக்  கசக்குகிறார்கள் ரசிகர்கள். இதே ஆட்டத்தை தோனி தொடர்ந்தால், அணியிலிருந்து நீக்கும் முடிவில் இருக்கிறது புனே நிர்வாகம்.

 நடராஜனுக்கு வாய்ப்பு?

பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்குச் சரியான வாய்ப்பு அமையாததால், முழுத் திறமையை நிரூபிக்க முடியாத சோகத்தில் இருக்கிறார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயரெடுத்த யார்க்கர் மன்னனுக்கு இன்னும் கடைசி ஓவர் கொடுக்கப்படவே இல்லை. முதல் போட்டியில் மூன்று ஓவர்களும், இரண்டாவது போட்டியில் ஒரு ஓவரும் மட்டுமே வீசினார் நடராஜன். மூன்றாவது போட்டியில் அணியிலேயே அவர் இல்லை.

p56g.jpg

கலக்கும் தாஹிர்

உலகின் நம்பர் ஒன் 20-20 பெளலரான இம்ரான் தாஹீரை, இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியுமே எடுக்கவில்லை.இதனால் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகியிருந்தார் தாஹீர். கடைசி நேரத்தில் புனே அணி மிச்சேல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரராகத்தான் இவரை எடுத்தது. ஆனால், இப்போது புனே அணியின் டாப் பெளலர் தாஹிர்தான். அவரின் கூக்ளியைச் சமாளிக்க முடியாமல் வரிசையாகப் பெவிலியன் நோக்கித் திரும்பிகிறார்கள் பேட்ஸ்மேன்கள்.

p56h.jpg

ரிஷப் பன்ட்

இந்திய அணியில் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் தோனியின் இடத்தை நிரப்பப்போகும், விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். 19 வயதுதான். ஆனால், அனுபவமிக்க பெளலர்களே இவரிடம் உதை வாங்குவார்கள். ஏற்கெனவே, ரஞ்சியில் காட்டடி அடித்திருந்த பன்ட், ஐ.பி.எல் தொடருக்காக டெல்லி அணியில் ஆட ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், முதல் போட்டி தொடங்குவற்கு முந்தைய நாள், அப்பா ராஜேந்திர பன்ட் மாரடைப்பால் மரணமடைய தளர்ந்துபோனார் ரிஷப் பன்ட். அப்பாவின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கி 36 பந்துகளில் மூன்று பௌண்டரி, நான்கு சிக்ஸர் விளாசி 57 ரன் அடித்தார். பாராட்டுகள் குவிந்தாலும், தந்தை இறந்த சோகத்தில் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை பன்ட்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கனடாவின் கடலோரம் மாபெரும் பனிப்பாறை

கனடவின் நியூஃபவுண்ட்லாண்ட் பகுதியின் கடலோரம் தெரியும் மாபெரும் பனிப்பாறையைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.

  • தொடங்கியவர்

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995-ம் ஆண்டு முதன் முதலாகக்

 
 
 
 
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23
 
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.

இது 1995-ம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு, "அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன.

பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு

அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association)

உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

1616-ம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23-ம் நாளை சென். ஜார்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

"நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது...!?'' எஸ்.ஜானகி #HBDSJanaki

 

பாடகி எஸ்.ஜானகி

'60 ஆண்டுகளாக இசைத் துறையில் ஜொலித்த இசை அரசி, எஸ்.ஜானகியின் பிறந்த தினம் இன்று'. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் ஒலித்த இவரது குரலுக்கு மயங்காதோர் இல்லை. 

" 'வயசான காலத்துலேயும் ஏன் பாடிக்கிட்டு இருக்காங்க. குரலில் தடுமாற்றம் வந்துடுச்சு'னு ஒரு குரல் ஒலிக்கும் முன்பே, கெளரவத்துடன் இசைத் துறையில் இருந்து விலகிக்கிறேன்'' என அதிரடியாக முடிவெடுத்தவர் எஸ்.ஜானகி. யாரும் எந்தச் சூழலிலும் தன்னை குறைசொல்லிவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பவர். இந்திய இசையமைப்பாளர்கள் பெரும்பாலானவர்களின் இசையில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய இவர், இசைத்துறைக்கு வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. 

ஆந்திர மாநிலம் பள்ளப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். ஒவ்வோர் ஊரிலும் சில ஆண்டுக்காலம் என மாறி மாறி வசிக்கும் இளமைக் காலம். தந்தை ஆசிரியராக இருந்தாலும், ஜானகிக்குக் கல்வியில் பெரிய அளவில் நாட்டம் இல்லை. அப்பாவிடம் அடியும் திட்டும் வாங்கியபோதும் தனக்குப் பிடிக்காத கல்வியிடம் இருந்து விலகியே இருந்தார். இளம் வயது முதலே ஒரு முடிவு எடுத்தால், அதில் விடாப்பிடியாக இருப்பது ஜானிகியின் குணம். 'இனி என்னதான் செய்றது? படிக்க மாட்டேன்னு சொல்றாள். இனி அவளோட தலையெழுத்தை அவளே முடிவு செய்யட்டும்' என அவரது அப்பா சொல்லிவிட்டார். 

படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தாலும், இசைஞானம் ஜானகியைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. மூன்று வயதிலேயே கேள்வி ஞானத்துடன் கடினமான பாடல்களையும் பாடி அசத்தினார். இவரது ஆர்வத்தைப் பார்த்து, எட்டாவது வயதில் பைடிசாமி என்கிற நாதஸ்வர வித்வானிடம் இசை கற்க அனுப்பினார் தந்தை. ஆர்வமுடன் இசை கற்றுவந்த ஜானகியிடம், 'நீ சங்கீதம் கத்துகிட்டது போதும். நீயே சங்கீதம்தான். இனி உனக்குச் சங்கீதம் கத்துக்கொடுக்கத் தேவையில்லை' என பத்தே மாதங்களில் குருநாதர் வாழ்த்தி அனுப்பினார். 

சென்னைக்கு குடிபெயர்ந்த நிலையில், ஏவிஎம் ஸ்டுடியோவில் பணிக்குச் சேர்ந்தவருக்கு, படிப்படியாகச் சினிமா பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. 1957-ம் ஆண்டு, 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் 'பெண் என் ஆசை பாழானது ஏனோ' என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து அவரது குரலில் ஏராளமான வெற்றிப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. குறிப்பாக, 1962-ம் ஆண்டு 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் இவர் பாடிய 'சிங்கார வேலனே தேவா' பாடலை இன்றளவும் பிற பாடகர்கள் பாட அச்சப்படுவர். அவ்வளவு கடினமான பாடலை இளம் வயதிலேயே பாடி அசத்தினார் ஜானகி. தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். கன்னடம், மலையாள மொழிகளை நன்றாகப் பேசுவார். இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடல்களை ஓய்வின்றி பாடினார். 

பாடகி எஸ்.ஜானகி

தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தபோதும், 70-களின் இறுதியில்தான் எஸ்.ஜானகிக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. பல வெரைட்டியான பாடல்களையும் பாடும் திறமை இருந்தும், அதற்கான முழுமையான வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது நேரம் உருவானது புதுக்கூட்டணி. 1976-ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' திரைப்படம், ஜானகிக்குத் தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத புகழைக் கொடுத்தது. அந்தப் படத்தில் இவர் பாடிய எல்லாப் பாடல்களும் செம ஹிட். இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தொடர்ந்து ஜானகியின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். அதனால், எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி, தொண்ணூறுகள் வரை, இளையராஜா இசையமைப்பில் எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இளையராஜா இசைடமைப்பில் எஸ்.ஜானகி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய டூயட் பாடல்கள் இன்றளவும் காதல் மனங்களை வருடும் கீதங்கள். தொடர்ந்து 90-களில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி தற்போதைய அனிருத் வரையில் எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

சோலோ, டூயட், தாலாட்டு, குத்து, பக்தி என எல்லா வகையான பாடல்களையும் பாடி, இன்றளவும் சாதனையில் முன்னிலையில் இருக்கும் தென்னிந்திய பின்னணிப் பாடகி இவரே. கஷ்டமான பாடலாக இருந்தாலும், கண்களை மூடாமல், கைகளை அசைக்காமல், முகபாவனைகளில் கஷ்டப்படாமல் மிக எளிதாகப் பாடுவது இவருக்கே உரிய சிறப்பு. குழந்தைக் குரலில், ஆண் குரலில் பாடி எல்லோரையும் ஆச்சர்யப்படவைப்பார். அதிகமான இந்தி மொழிப் பாடல்களைப் பாடிய ஒரே தென்னிந்திய பாடகியும் இவரே. நான்கு தேசிய விருதுகள், பல்வேறு மாநிலங்களின் முப்பதுக்கும் அதிகமான விருதுகளை வென்றவர் ஜானகி. புகழ் உச்சியில் இருந்தபோது மத்திய அரசின் பத்ம விருதுகள் கிடைக்கவில்லை. எனவே, 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த 'பத்ம பூஷண்' விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தென்னிந்திய கலைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை தைரியமாகச் சொன்னார். 

1992-ம் ஆண்டு, தேவர் மகன் படத்தில் பாடிய 'இஞ்சி இடுப்பழகா' பாடலுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதைப் பெற டெல்லி சென்றிருந்த சமயம். ஜானகியைப் பேட்டி எடுத்த செய்தியாளர்களிடம், 'இதே ஆண்டில் 'ரோஜா' படத்தில் 'சின்னச் சின்ன ஆசை பாடலை பாடகி மின்மினி மிகத் திறமையாகப் பாடியிருந்தார். எனக்குக் கிடைத்த தேசிய விருது அந்தப் பொண்ணுக்கு கிடைத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்' என கூறி நெகிழவைத்தவர். அந்த அளவுக்குத் திறமையான கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடியாக இருந்தவர் ஜானகி. 

பாடகி எஸ்.ஜானகி

நடிகர் கமல்ஹாசன் பின்னணிப் பாடகராக இவருடன் இணைந்து பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட். நடிகர் ரஜினிகாந்த் பாடிய ஒரே பாடலான, 'மன்னன்' படத்தின் 'அடிக்குது குளிரு' பாடலில் இனைந்து பாடியவரும் ஜானகிதான். 

எந்த அலங்காரமும் செய்துகொள்ளாத, நகைகள் அணியும் பழக்கம் இல்லாத எளிமையான தோற்றம். எப்போதும் வெள்ளை நிறச் சேலையுடன், கழுத்துவரை நீண்ட ரவிக்கையுடன் இருப்பது ஜானகியின் அடையாளம். 'ஒருவேளை எனக்குப் படிப்பில் ஆர்வம் வந்து படிக்கச் சென்றிருந்தால், வேறொரு துறைக்குப் போயிருப்பேன். என் குரல் வீட்டைத் தாண்டிருக்காது. இப்போ இத்தனை பேர் என் பாடல்களை ரசிச்சுக்கிட்டு இருக்க மாட்டாங்க. கடவுள் எனக்குக் கொடுத்த அன்புப் பரிசு இசைஞானம். நான் சின்ன வயசுல இருந்து ஒரு முடிவெடுத்தால், அது சரியாகத்தான் இருக்கும்' என அடிக்கடிச் சொல்வார். 

''திறமை இருக்கிறது, வாய்ப்பு வருகிறது என நாம் மட்டும் பாடி புகழையும் பணத்தையும் சம்பாதிச்சுக்கிட்டு இருப்பது நியாயமில்லை. அதனால், வருங்கால சந்ததியினருக்கு வழிவிட வேண்டும். அதன்படி மற்றவர்கள் யாரும் என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறை சொல்லும்முன், என் வருங்கால தலைமுறையினரும் புகழ்பெற வேண்டும் என நான் அமைதியாக இசைத் துறையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன்'' எனக் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படியே ஓய்வுக் காலத்தை இசையுடனே கழித்து வருகிறார், எஸ்.ஜானகி. 

79-ம் பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் எஸ்.ஜானகி, இன்னும் பல்லாண்டுகள் நீடித்த ஆயுளுடனும் புகழுடனும் வாழ வாழ்த்துவோம்! 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.