Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சமந்தா சிலம்பம் சுற்றியதற்கான காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவின் பிஸியான கதாநாயகிகளில் முதல் வரிசையில் இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியான இவர் தமிழில் விஜய்யின் தளபதி 61 படத்திலும் , விஜய் சேதுபதியின் அநீதி கதைகள், விஷாலின் இரும்பு திரை படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

4082a6b84e060112c8dd5d32970c576c_16252.j

 

சில நாள்களுக்கு முன்பு சிலம்பம் சுற்றுவது தன்னுடைய ஹாபி என்று சொல்லி, அவர் சிலம்பம் சுற்றுவது போல் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். அப்போது அந்த வீடியோவும் செம வைரல். ஆனால் இன்று அதற்கான காரணம் வெளியாகியுள்ளாகியுள்ளது.

24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தா சிலம்பம் சுற்றியதற்கான காரணத்தை கூறியுள்ளது. 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சமந்தாவும், சிவகார்த்திகேயனும் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கப்போகும் பெயரிப்படாத படத்தில் நடிப்பதற்காகவே அவர் கடந்த 10 மாதங்களாகவே சிலம்பம் கற்று வந்தார் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், சமந்தாவின் இந்த சவாலுக்காக நன்றியும் தெரிவித்திருந்தது 24 ஏ.எம் ஸ்டூடியோஸ். இதற்கு, 'எனக்கு சவால் என்றால் ரொம்ப பிடிக்கும்' என்று ரீ -ட்விட் செய்து இருந்தார் சமந்தா. இந்த படத்துக்கான இசையை டி.இமான் இசைமைக்கிறார்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

தோலுரிக்கப்படும் கழுதைகள்

ஆஃப்ரிகாவின் பல நாடுகளில் சட்டவிரோதமாக கழுதைகள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. அதன் தோல் மருந்துக்கான சீனாவுக்கு ஏற்றுமதி.

  • தொடங்கியவர்

''தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும்!'' - இரா.செழியன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

 
 

இரா.செழியன்''எந்த அரசியல் கட்சிக்கும் நான் சொந்தக்காரன் அல்ல... பொது மனிதன். அரசியலில் இல்லை என்றாலும்கூட, மக்கள் சம்பந்தமான பிரச்னைகளில்தொடர்ந்து போராடுவேன்; அவர்களுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் முன்வந்து செயல்படுவேன். மனிதனை, 'ஓர் அரசியல் விலங்கு' என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் வர்ணித்தார். எனவே, நானும் அத்தகைய மனிதனாவும் மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியாகவும் தொடர்ந்து பாடுபடுவேன். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்''  தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னபோது கூறிய வார்த்தைகள் அவை. அவருடைய பிறந்த தினம் இன்று.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் சகோதரர்தான் இந்த இரா.செழியன். மாணவர் காலத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்த இரா.செழியன், பின்னர் தி.மு.க ஆரம்பிக்கப்பட்டபோது பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து செயலாற்றினார். அவருடைய நம்பிக்கைக்கு முழு பாத்திரமாக விளங்கினார். அதன்பிறகு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனதாக் கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டார். அந்தக் கட்சி பின்னர், ஜனதா தளமாக மாறியபோதும் முக்கியப் பொறுப்புகளில் பதவி வகித்துவந்தார். ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் இரா.செழியன் ஈடுபட்டார். சமூக சேவகர் அண்ணா ஹசாரே, 2011-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராகக் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது... அதற்கு ஆதரவு தெரிவித்த இரா.செழியன், ''இந்தப் போராட்டம் இந்தியாவில் 1975-ம் ஆ‌ண்டே தொடங்கியது. அண்ணா ஹசாரேவின் வடிவில் 2011-ம் ஆ‌ண்டி‌ல் இந்தப் போராட்டம் வலுப்பெற்றுள்ளது'' என்றார். 

இரா செழியன் எழுதிய நூல்20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இரா.செழியன், பல்வேறு பிரச்னைகளுக்காகக் குரல்கொடுத்துள்ளார். அப்படி நாடாளுமன்றத்தில் பேசிய அவருடைய உரைகள் தொகுக்கப்பட்டு, 'Parliament for The People' என்ற நூலாக வெளிவந்துள்ளது. 1975-76 நெருக்கடிக் கால அத்துமீறல்களை ஷா கமிசன் விசாரித்து 525 பக்கங்களில் அறிக்கை அளித்தது. இதை அப்போதைய இந்திய அரசு கிடப்பில் போட... செழியன் அதனை மீட்டெடுத்து, 'Shah Commission Report -Lost and Regained' என்ற நூலாக வெளியிட்டார். அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிய இரா.செழியன், தற்போது அதிலிருந்து ஓய்வுபெற்று வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

''தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள் யாரும் அதற்காக முன்வர மாட்டார்கள். டெல்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள். கட்டடங்கள், அரண்மனைகள் அழிந்தால்கூடப் பரவாயில்லை. ஓர் இனம், மொழி அழிந்தால் நூற்றாண்டுகள் ஆனாலும் அதனை மீட்க முடியாது. இலங்கையில் ஓர் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. இலங்கைப் பிரச்னைக்கு மாநில அரசால் தீர்வு காண முடியாது. டெல்லிதான் முயற்சி எடுக்க வேண்டும். இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை. அவர்கள் இந்தியாவை விற்றாலும் ஆச்சர்யம் இல்லை. அதனைப் பங்குபோட பலர் தயாராக உள்ளனர். யாரை எதிர்ப்பது யாரை எதிர்த்துப் போராடுவது என்றே புரியவில்லை'' எனக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நூல் வெளியீட்டின்போது... ஈழத்தமிழர்களின் வாழ்வையும், வேதனையையும் புரிந்தவராய் இப்படிப் பேசியிருந்தார் இரா.செழியன்.

மிகச் சிறந்த அரசியல்வாதியாகவும், எழுத்தாளராகவும் பயணித்துச் சிறப்புச் சேர்த்திருக்கும் இரா.செழியனுக்கு, இன்று அவருடைய
95-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் சிறப்பு விழா நடைபெற இருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, steht und Text

 
 
தமிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி நடிகை
முன்னணிக் கதாநாயகர்களின் முதல் தெரிவு.
அழகின் மொத்த அடையாளம் சமந்தாவின் பிறந்தநாள்.
Happy Birthday Samantha Ruth Prabhu
  • தொடங்கியவர்

 

மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் சேவை: தொண்டா? தொழிலா?

மாற்றுத்திறனாளிகளின் பாலியல் தேவைக்கு உதவும் தொண்டுநிறுவனம் ஒன்று தைவானில் இயங்குகிறது.


தாமாக சுய இன்பத்தில் ஈடுபட முடியாதவர்களுக்கு இது உதவி செய்கிறது.


“ஹேன்ட் ஏஞ்செல்ஸ்” என்கிற பெயரிலான இந்த தொண்டு அமைப்பின் நிறுவனர் வின்செண்ட்.


மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான முழுமையான பாலியல் சேவை அளிப்பதாக கூறும் வின்செண்ட்,
"தொடுவதில் துவங்கி பாலியல் உச்சம் அடைவது வரை அனைத்தும் செய்யப்படும்" என்கிறார்.


இதுவரை ஆறுபேருக்கு இந்த உதவியை செய்திருப்பதாக இந்த அமைப்பு கூறுகிறது.


அப்படி பயனடைந்தவர்களில் ஒருவர் மிய் நு. “நான் வின்செண்டை சந்தித்தபோது இருவரும் நிறைய பேசினோம். நான் ஏராளமான கேள்விகள் கேட்டேன்”, என்றார் அவர்.


இந்த அனுபவத்துக்காக தான் ஏக்கத்தோடு காத்திருந்ததாக கூறும் அவர், இந்த சேவையை வழங்கப்போகும் தொண்டு அமைப்பாளரை தான் இதற்கு முன் சந்தித்ததில்லை என்றும் கூறினார்.


“ஆயினும் ஏராளமான கனவுகள், கற்பனைகள் என்னுள் சிறகடித்து பறந்தன”, என்கிறார் அவர்.


அதேசமயம் இத்தகைய சேவைகள் ஒருவகை பாலியல் தொழிலே என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


ஆனால் தாங்கள் செய்வது தைவானில் சட்டப்படியான செயலே என்கிறது ஹேண்ட் ஏஞ்செல்ஸ் அமைப்பு.


"என்னை ஒரு பாலியல் தொழிலாளியாக மற்றவர்கள் பார்த்தால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்கிறார் "ஹேன்ட் ஏஞ்செல்ஸ்" தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களில் ஒருவர்.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

 
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், உலகின் மிகச் சிறந்த அணித் தலைவர்களில் ஒருவராக இன்றும் கருதப்படும் மைக் ப்ரியர்லியின் பிறந்தநாள்.
Happy Birthday Mike Brearley
 
 
Bild könnte enthalten: 1 Person, Text und Nahaufnahme
 
பிரபல ஹொலிவூட் நடிகை ஜெசிக்கா அல்பாவின் பிறந்தநாள்.
Happy Birthday Jessica Alba
 
Bild könnte enthalten: 4 Personen, Personen, die stehen, Sonnenbrille, Text und im Freien
 
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர், விக்கெட் காப்பாளர், உலகத்தின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அண்டி ஃப்ளவரின் பிறந்தநாள்.
Happy Birthday Andy Flower


இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றி பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.
 
 
Bild könnte enthalten: 1 Person, Bart und Text
 
ஈராக்கின் முன்னாள் அதிபர் காலஞ்சென்ற சதாம் ஹுசெய்ன் பிறந்த நாள்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு ஈராக்கை ஆண்ட தலைவர்.
 
  • தொடங்கியவர்

கோக்கோ இன்றி பலாக்கொட்டையில் இருந்தும் சாக்லேட் தயாரிக்கலாம்: ஆய்வில் ருசிகர தகவல்

 

கோக்கோ இன்றி பலாக்கொட்டையில் இருந்தும் சாக்லேட் தயாரிக்கலாம்: ஆய்வில் ருசிகர தகவல்
 

கோக்கோவில் இருந்து சாக்லேட் தயாரிக்கப்படுவது தான் வழமை. ஆனால், பலாக்கொட்டையில் இருந்தும் சாக்லேட் தயாரிக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சாக்லேட் தயாரிக்க 45 இலட்சம் தொன் கோக்கோ தேவைப்படுகிறது. ஆனால், அந்தளவு கோக்கோ பயிரிடப்படுவதில்லை. வெறும் 37 இலட்சம் தொன் கோக்கோ மட்டுமே பயிரிடப்படுகிறது. எதிர்காலத்தில் சாக்லேட்டின் தேவை அதிகரிக்கக் கூடிய நிலையில், கோக்கோவிற்கான தேவையும் அதிகரிக்கும்.

இந்த நெருக்கடியைக் கருத்திற்கொண்ட பிரேசிலைச் சேர்ந்த பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள், கோக்கோவின் நறுமணத்துடனும் சுவையுடனும் மாற்று வழியில் சாக்லேட் தயாரிக்கு முடியுமா என ஆய்வு செய்யத் தொடங்கினர்.

பலாக்கொட்டையில் இருந்தும் சாக்லேட் தயாரிக்க முடியும் என தற்போது அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பலாக்கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதிலிருந்து சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் பொருளை உருவாக்க முடியும் எனவும் இதன் மூலம் கோக்கோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

இறந்த திமிங்கலம் ஒன்றின் உடலை சுறா மீன் ஆக்ரோஷமாக சாப்பிடும் காணொளி.

  • தொடங்கியவர்
ஆவேசம் – அவமானத்தைத் தரும்
 
 

article_1493098963-.jpgஎவரையும் பணிவுடன் கூப்பிய கரங்களால், கோபம் வரும்போது, கைகளை ஓங்கி, எவரையும் தாக்குவதற்கு எண்ணக்கூடாது.

ஆவேசப்படுதல் பல சமயங்களில் அவமானத்தையே தரும்.கடவுளை வணங்குவதற்கும் ஈகை செய்வதற்குமான கரங்களால், கறைபடிந்த காரியங்களைச் செய்வதற்கு முனைதல் கூடாது.

கரங்களை ஏந்துவது இறைவனுக்கு மட்டும்தான். பண்பான பெரியவர்களை உள்ளத்தில் இருத்தி, கௌரவிப்பதனால் எமது அடுத்த சந்ததியினர் நல்வழியில் வாழும் முறையைக் கற்றுக் கொள்கின்றார்கள்.

வினயமுடையவர்களுடன் அனைத்து மாந்தர்களும் இணைந்து கொள்ள விரும்புவார்கள்.

உங்களை நீங்கள் செதுக்கிக் கொண்டு, புதுவடிவம் பெற, பணிவு, கனிவு என்கின்ற ஆயுதங்களை நெஞ்சத்தில் ஏந்துக. 

ஒழுக்க வாழ்வின் தலைமைப் பொறுப்பு, அனைவருக்குமானது; உலகம் உங்களுக்கானது. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆட்டநாயகன் விருதுக்கான பரிசை ராணுவ குடும்பங்களுக்கு அர்ப்பணித்தார் கம்பீர்

 
 

சத்தீஸ்கர், சுக்மா மாவட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப் படையினர் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, மாவோயிஸ்ட்டுகளுக்கும் மத்திய ரிசர்வ் படை போலீஸாருக்கும் இடையே, கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், 25 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலில், நான்கு தமிழக வீரர்கள் கொல்லப்பட்டனர்.  

Gambhir

இதையடுத்து, கௌதம் கம்பீர், 'கடந்த புதன்கிழமை காலையில், நான் செய்தித்தாளைப் பிரித்துப்பார்த்தபோது, மாவோயிஸ்ட் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு ராணுவ வீரர்களின் மகள்களின் புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் ஒருவர், வீர மரணம் அடைந்த அவரின் தந்தைக்கு சல்யூட் வைத்துக்கொண்டிருந்தார். அவரது பக்கத்தில் இருந்த உறவினர்கள், துக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணைத் தேற்றிக் கொண்டிருந்தனர். எனது 'த கௌதம் கம்பீர் ஃபவுண்டேஷன்' இறந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு ஆகும் செலவை ஏற்கும். என் குழு, இதைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்கெனவே இறங்கிவிட்டது. சீக்கிரமே, இதுகுறித்து என்ன வேலைகள் செய்திருக்கிறோம் என்பதைத் தெரியப்படுத்துவோம்' என்று கூறி இருந்தார்.


இந்நிலையில், நேற்று நடந்த கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கம்பீர் 71 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதைத்தொடர்ந்து, கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதுக்காக அவருக்கு வழங்கப்பட்ட பரிசையும், சுக்மாவில் உயிரிழந்த  சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்: ஏப்.29- 1848

 

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா- நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம்,

 
 
 
 
இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்: ஏப்.29- 1848
 
ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.

ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா- நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.

ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862-ம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார். சுதேசிமுறையில் செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868-ல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். 1870 - 1880 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார்.

மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன. தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் மும்பாயில் கழித்தார். அங்குதான் 1894-ல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார். 1896 இல் அவரது அச்சகத்தில் முதல் பிரதி ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது. 1899 இல் அச்சகத்தை ஸ்லிஷர் (Slisher) நகரத்துக்கு மாற்றினார். 1906 இல் தமது 58-வது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

புகழ்பெற்ற ஓவியங்கள்

1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். "நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது

இந்தியக் கலை விமர்சகர்கள் அவரது ஓவியங்களில் வெறும் கதை சொல்லும் (illustrative) தன்மையும், உணர்ச்சி மேலோங்கிய தன்மையும்தான் காணப்படுகின்றன என்றும் அவர் கற்பனை வரட்சி மிக்க, மேலை நாட்டுப் பாணியை நகல் செய்யும், இந்தியக் கலையியலைப் புறக்கணித்த ஓவியர் என்றும் குறைகூறினார்கள். அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட பிரதி ஓவியங்கள் 'கேலண்டர் ஓவியர்' என்று அவரை கொச்சைப் படுத்தப் பயன்பட்டன. மேலை நாட்டு உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி இந்திய வண்ண உத்தியை அவர் அவமதித்ததாகக் கூடக் குறிப்பிட்டார்கள்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

சென்னை மாடல் டூ ஆந்திரா மருமகள்...! சமந்தாவின் பியூட்டி கிராப் #HBDSamantha

 

17 வருடங்களில் 25 படங்களில் ஹீரோயின், இன்னும் சில படங்களில் கெஸ்ட் ரோல், சில படங்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடம் என மிக சீரான வளர்ச்சி சமந்தாவினுடையது. ரசிகர்கள் மனம் கவர்ந்த, விஜய் 61 பட நாயகி சம்முவுக்கு இன்று பிறந்தநாள். குறுகிய காலத்துக்குள்ளேயே டாப் ஹீரோக்களுடைய படங்கள், பல விருதுகள் வென்றவர் பற்றி அதிகம் வெளியில் தெரியாத சீக்ரெட்ஸ் இதோ...

சமந்தா

  • ஹோலி ஏஞ்சல்ஸில் ஸ்கூலிங், ஸ்டெல்லா மேரீஸில் காமர்ஸ் முடித்துவருக்கு மாடலிங் வாய்ப்பு வந்தது. தோழி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிதான் அதற்குக் காரணம். அந்த பார்ட்டியில் சமந்தாவின் புகைப்படங்களைப் பார்த்த ஒருவர் சமந்தாவை மாடலாக வைத்து விளம்பரம் எடுக்கலாம் என நினைக்க மாடலிங் வாய்ப்பு வந்திருக்கிறது. பாக்கெட் மணிக்குப் பணம் கிடைக்க ஆரம்பிக்க, மிக விரும்பி மாடலிங் செய்து கொண்டிருந்தார் சமந்தா. அப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கும் போது ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கண்ணில்பட்டார். ரவிவர்மன் இயக்கிய 'மாஸ்கோவின் காவிரி' மூலம் சினிமாத் துறைக்குள் நுழைந்தார். 

Vijay

  • 2015ல் ஃபிலிம் ஃபேர் விருது விழாவில்  'மனம்' படத்துக்காக சிறந்த நடிகை விருதை வென்றார். அதே நிகழ்வில் ‘கத்தி’ படத்திற்காகவும் சிறந்த நடிகை விருதைப் பெற்றார் சமந்தா. இதற்கு முன் இப்படி, ஒரு ஃப்லிம்ஃபேர் விழாவில்  இரண்டு மொழிகளுக்காக இரண்டு  விருதுகள் வாங்கிய நடிகை ரேவதி. 

Nazria

  • பெங்களூர் டேய்ஸ் படத்தில் நஸ்ரியாவின் ரோல் சமந்தாவுக்கு மிகவும் பிடித்தது. 'ச்சே... இந்த ரோல் நாம பண்ணியிருக்கணும்’ என சமந்தாவே சொல்லும் அளவுக்குப் பிடிக்குமாம். 

Shankar

  • ”'கடல்’, 'ஐ’ படங்களில் நடிக்க முடியாமப்போச்சு. மிஸ் பண்ணிட்டோம்னு மனசுக்குள்ள ஃபீலிங்ஸ்தான்” என டாப் இயக்குநர்களின் படங்களை தவறவிட்டது பற்றி கூறுவார். 

சீக்ரெட்

  • ரோன்டா பைரன் எழுதிய சீக்ரெட் புத்தகம் சமந்தாவின் ஆல் டைம் ஃபேவரைட். 

Sam

  • சமந்தாவை சில நண்பர்கள் சாம் என அழைப்பார்கள். கூடவே யசோதா என்கிற செல்லப் பெயர் உண்டு. 

Kajal

  • சினிமாவில் இவரின் தோஸ்து படா தோஸ்த்து காஜல் அகர்வால். பிருந்தாவனம் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது ஏற்பட்ட பழக்கம் இப்போது வரை தொடர்கிறது. 

Kajol

  • நடிகை கஜோல் சம்முவின் ஃபேவரைட். அவரைப்போல இருக்க வேண்டும் என்பது தான் ஆசையாம். நடிகை ரேவதியையும் பிடிக்கும். இவர்கள் தவிர பிரிட்டிஷ் நடிகை ஆட்ரி ஹெப்பர்னை தன் இன்ஸ்பிரேஷன் என சொல்வார் சமந்தா.

 

 

  • புதிதாக எதாவது கற்றுக் கொள்வது இவரின் ஹாபி. அப்படி இப்போது கற்றுக் கொண்டிருப்பது சிலம்பம்.

Samantha

  • கடைத் திறப்பு விழா, விளம்பர வருமானங்கள் என வரும் பணம் முழுவதையும் தன் ‘பிரத்யுஷா டிரஸ்ட்’டுக்குக் கொடுத்துவிடுவது இவரின் வழக்கம். அந்த அமைப்பின் மூலம் உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

Sam

 
 
  • சமந்தா என்றால் 'கடவுள் அவர்கள் கோரிக்கையைக் கேட்டார்' என அர்த்தம். இவருக்கு, டேவிட், பிரபு என இரண்டு அண்ணன்கள். தீவிர அசைவப்  பிரியர். தினமும் மீன் சாப்பிடப் பிடிக்குமாம்.  

சமந்தா

  • சீக்கிரமே இவருக்கும் நடிகர் நாக சைத்தன்யாவுக்கும் திருமணம் ஆக இருக்கிறது. அதற்கும் சேர்த்து வாழ்த்துகள் சமந்தா என்கிற சாம் என்கிற யசோதா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

த்ரில்லர் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் மலர் டீச்சர்!

பிரேமம் படத்தின் மூலம் மலையாள உலகில் அறிமுகம் ஆனவர் நடிகை சாய் பல்லவி. அந்தப் படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல ரீச். தென்னிந்தியாவின் ஃபேவரிட் கதாபாத்திரமானார் மலர் டீச்சர். இவர் தமிழில் எப்பொழுது நடிப்பார் என்று இவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். 

p100a_11218.jpg

இந்த நிலையில் இயக்குநர் விஜய் தனது தேவி படத்துக்குப் பின், மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன் நடிப்பில்  மெஹா ஹிட்டான 'சார்லி' படத்தைத் தமிழில் எடுக்கவுள்ளார். தமிழ் வெர்ஷனில் நடிகர் மாதவன் மற்றும் சாய் பல்லவி நடிக்கின்றனர். ஆனால் இயக்குநர் விஜய் இந்தப் படத்துக்கு முன்பே சாய் பல்லவியை வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் படம் எடுக்க முடிவு செய்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரத்தில் நடிக்கவுள்ளதால் சாய் செம்ம ஹாப்பி.

இந்தப் படத்துக்கு 'கரு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்  என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 
 

 

p16a.jpg

facebook.com/swetha chandrasekaran:

துரோகங்கள் வலியைவிட ஆச்சர்யத்தைத் தான் தருகிறது... எப்படி இவ்வளவு சிறப்பாக நடித்து ஏமாற்றினார்கள்!

facebook.com/writermugil:

நான் அதிமுகவை விட்டு நேற்றே ஒதுங்கிவிட்டேன் என்பதை, இன்று அறிவிக்க வேண்டும் என்று முந்தாநாளே முடிவுசெய்துவிட்டேன்; நாளை நமதே! என்று நாளை மறுநாள் சொல்வேன் என்பதையும்...

twitter.com/anithatalks:

நேற்றுவரை தினகரனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்ப எதிர்க்குறீங்க?

அமைச்சர்கள் : எங்களுக்கு ஐடி ரெய்டுதான் பயம். மத்தபடி ஐ லவ் சின்னம்மா ஃபேமிலி.

twitter.com/arattaigirl:

நாய் வளர்க்கறவங்க வீட்லயெல்லாம் ஒரே மாதிரி, `ஒண்ணும் பண்ணாது வாங்க'ன்றாங்க. ஆனா, நாய் லுக் `வாயேன் வந்துதான் பாரேன்'னு சூனா பானா லுக்லதான் இருக்கு.

p16b.jpg

facebook.com/kannakannan:

சூரியன்கிட்ட கொஞ்சம் ``இரக்கம் காட்ட சொன்னா'', அது ``இறங்கிவந்து காட்டுது...''

twitter.com/BoopatyMuruges:

எல்லா முடிவையும் தீபா தூங்குற நைட்டு அல்லது மதியம் நேரமா அறிவிச்சு அரசியல் பழக விடாம சதி பண்ணுறாங்க.

twitter.com/thoatta:

சின்னம்மா இந்நேரம் பெங்களூர்ல புலம்ப ஆரம்பிச்சிருக்கும்... `இ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் சிரித்துக்கொண்டும்...'

twitter.com/BoopatyMurugesh:

ஜிம்ல பொண்ணுனா பக்குவமா சொல்லிக் கொடுக்குறானுங்க... பசங்களுக்கு சீனியர் ஒருத்தன், ``மாஸ்டர் வர்றாரு கம்பெடுத்து சுத்துங்கலே''ன்னுட்டு போய்டுறான்.

twitter.com/aiyswarya:

உண்மையிலேயே இதுவரைக்கும் நீங்க யார் மனசும் புண்படறமாதிரி  நடந்துக்கலைன்னா, அப்ப நீங்க யார் கிட்டேயுமே உண்மையா இருக்கலைனு அர்த்தம்!

p16d.jpg

twitter.com/pattaasu:

ரூம் ரொம்ப வெக்கையா தெரிஞ்சது.

ஒரு ஐந்து நிமிஷம் வெளில போய்ட்டு வந்தேன். இப்போ அதே ரூம், ஏசி போட்ட மாதிரி இருக்கு. இப்படித்தான் போகுது பொழப்பு.  
   
twitter.com/maniiiiii:

வளர்ந்த பின் ஆங்கில ஆசிரியரைவிட நன்றாக ஆங்கிலம் பேசுகிறோம்.

தமிழ் ஆசிரியரை விட நன்றாக தமிழ் பேச முடிவதில்லை...

facebook.com/Nelson Xavier:

நனைவதென்று முடிவாகிவிட்டபின் மழையென்ன வெயிலென்ன!

twitter.com/vandavaalam:  

நல்லா வேலை பார்க்க தெரிஞ்சா மட்டும் போதாது, எப்போ பேப்பர் போடுவான்ங்குற பரபரப்புலேயே மேனேஜரை வச்சிருக்கணும்.

twitter.com/King_Deera: 

`பார்க்கணும்போல இருக்கு' எனும் ஒற்றை குறுஞ்செய்தி போதும் நமக்கான இந்த உலகை அழகாக்க.

twitter.com/Subbu_official: 

கிரிக்கெட் போட்டி நாள்களில் மூச்சிரைக்க பள்ளியிலிருந்து ஓடிவரும் பால்யங்களில் டிவியில் தெரியும் சச்சினின் முகமே நீராகவும் இளைப்பாறுதலாகவும்!

p16f.jpg

twitter.com/Kozhiyaar: 

ஓனரே எப்படி செத்தாங்கன்னு இன்னும் தெரியலை, காவலர் இறந்ததையா கண்டுபிடித்துவிடப் போகிறார்கள்?

twitter.com/joseph_offcl:  

இப்போதெல்லாம் கடவுளிடம் நினைத்தது நடக்கணும் என வேண்டுவதை விட,
நினைத்துப்பார்க்க முடியாதது எல்லாம் நடந்திடக்கூடாதுன்னுதான் அதிகம் வேண்டுகிறேன்.


#ட்ரெண்டிங்

p16c.jpg

ஃபேஸ்புக்கின் #F8 மாநாடுதான் சமீபத்திய உலக வைரல். வரும் ஆண்டில் என்ன மாதிரியான தொழில்நுட்ப பாய்ச்சலை ஃபேஸ்புக் கொண்டு வரும் என்பதை எடுத்துச்சொல்லும் மாநாடு இது. இந்த ஆண்டு ஆக்மென்ட்டட் ரியால்ட்டிதான் அந்த மேஜிக் டெக்னாலஜி என அறிவித்திருக்கிறார் மார்க். ``இதுவரை குடும்பங்களையும் நண்பர்களையும் ஃபேஸ்புக் இணைத்திருக்கிறது. இனி, சமூகங்களை இணைக்க உதவுவோம். அதற்கு, இந்த வீடியோ தொழில்நுட்பம் அதிகம் உதவும்” என்பது மார்க்கின் வாக்கு!


p16e.jpg

மாத்தி யோசி!

நவாசுதீன் சித்திக்கி வெளியிட்டுள்ள வெறும் 55 விநாடி வீடியோதான் சமீபத்திய ஹிட் வீடியோ. 16.66 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவில் ‘டி.என்.ஏ டெஸ்டில், நான் 16.6 சதவிகிதம் இந்து, 16.6% முஸ்லிம் என வெவ்வொரு  மதத்தைச் சார்ந்தவனாகக் காண்பித்தது. ஆனால், என் ஆன்மாவை சோதித்தேன். அது நான் 100% கலைஞன் என்றது” என்று பொட்டிலடித்தாற்போலச் சொல்லியிருக்கிறார் நவாசுதீன். வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=bCyPvnwxJSQ  


p16g.jpg

முன்பல் தெரிய முனிவர்போல அமர்ந்திருப்பார் இந்த g_for_guru. உண்மையிலேயே பெயர் ‘குரு’தான். சிங்காரச் சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகாரி! அரசியல்வாதிகளை அசால்ட் மொழியில் கலாய்ப்பதில் கில்லாடி. அதேசமயம் பெரும் காட்சிக்கான அழகியலை வெளிப்படுத்துவதிலும் கில்லி.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஃபார்முலா E பந்தயக் கார் ஓட்டிய முதல் இந்தியப் பெண்!

பார்சிலோனாவில் நடந்த கார்ப் பந்தயத்தில்ஃபார்முலா E  பந்தயக் காரினை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையினைப் பெறுகிறார் குல் பனாங்.

முதல் கார் ரேஸ் பெண்


கார்கள்மீது குறிப்பாக ரேஸ் கார்கள்மீது தீராக் காதல் கொண்ட குல் பனாங் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் நடந்த ’மஹிந்திரா ஃபார்முலா E  கார்ப் பந்தயம்’ போட்டியில் பங்கேற்று M4 எலக்ட்ரோ பந்தயக் காரில் போட்டியில் கலந்துகொண்டார். இம்மாதிரியான பந்தயக் காரினை ஓட்டும் முதல் இந்தியப் பெண் இவர்.

பாலிவுட் திரைப்பட நாயகி, தொழிலதிபர், மோட்டார் காதலர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் குல் பனாங். ஹிந்தியில் ‘டார்’ திரைப்படத்தில் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் குல் பனாங். ’அப் தக் சப்பான் 2’ திரைப்படத்திலும் இவர் நாயகியாக நடித்துள்ளார். பந்தயக் கார்கள் ஓட்டுவதென்றால் அதற்கு சிறப்பு உடற்தகுதி மிகவும் அவசியம். இந்தக் கார்ப் பந்தயத்தில் பங்கேற்பதற்காகவே குல் பனாங் சிறப்புப் பயிற்றுநர் மூலம் உணவு, உடற்பயிற்சி, பந்தயப் பயிற்சி எனப் பல கட்டமாகப் பயிற்சி எடுத்த பின்னரே பங்கேற்றுள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வானில் வரையும் ஓவியர்

வானமே அவரது திரை. விமானமே தூரிகை. அசையும் மேகங்களே அவரது ஓவியங்கள்.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Brille und Text

புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்ததினம்.

"புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"

"தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!- இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!- இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"

Bild könnte enthalten: 3 Personen, Personen, die stehen und Text

உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்த, இந்தியாவின் மிகச் சிறந்த ஓவியர்களில் ஒருவரான ராஜா ரவி வர்மா பிறந்த நாள்.

இவர் வரைந்த இந்துக் கடவுளர்களின் ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை.

Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Personen, die stehen, Tennis und Text

டென்னிஸ் உலகின் முன்னைய சூப்பர் ஸ்டார் அன்ட்ரே அகாசியின் பிறந்த நாள் இன்று.

அமெரிக்க டென்னிஸ் வீரரான அகாசி, 8 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், 1996 இல் ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டிக்கான தங்கப்பதக்கத்தையும் பெற்றவர்.

Happy Birthday Andre Agassi

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Nahaufnahme

கானங்களால் எங்கள் இதயங்களை வருடித் தந்த பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள்..
மறைந்தாலும் தான் பாடிய பாடல்களால் மனதை அள்ளி எடுத்து வைத்துள்ள பாடகியை சூரியன் ஞாபகிக்கிறான்.

என்றென்றும் மனம் ரசிக்கும் பாடல்களால் ஸ்வர்ணலதா நிலைத்திருப்பார்..

  • தொடங்கியவர்

கட்டப்பா பாகுபலியைக் கொல்லலைன்னா, இதெல்லாம்தான் நடந்திருக்கும்..!

 

பாகுபலி

`கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாரு?'ங்கிறதுதான் கடந்த ரெண்டு வருசமா மக்கள் கேட்டுக்கிட்டு இருந்த கேள்வி. அதுக்கும் இப்போ விடை தெரிஞ்சிடுச்சு. சரி, ஒருவேளை கட்டப்பா பாகுபலியையே கொல்லாம இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்னு கற்பனை குதிரையை தட்டிவிடுவோமா மக்களே... 

 

nZq5OR.gif

 

முதல் விஷயம், இந்தக் கட்டப்பா மட்டும் பாகுபலியைக்கொல்லாம இருந்திருந்தார்னு வைங்க, இப்போ உள்ளூர் மீடியாவுல இருந்து உலக மீடியா வரைக்கும்  `ஹேங்' ஆக்கி துவைச்சு துவம்சம் பண்ணிட்டு இருக்கிற அந்த #WKKB (why kattappa killed bahubali) ஹேஸ்டேக்கே உருவாகி இருக்காது உறவுகளே. 

y8GPXW.gif

 

அப்புறம் அந்தக் கட்டப்பா கேரக்டரில் வந்த சத்யராஜ் பாகுபலியைக் கொல்லாமல் இருந்திருந்தார்னா இந்த அளவு அந்த கேரக்டரும் பிரபலம் ஆகியிருக்காது. அவர் மகன் சிபிராஜும் 'கட்டப்பாவ காணோம்'னு  டைட்டில் வெச்சி அதில் ஹீரோவாகவும் நடிச்சுருக்க மாட்டார். ஏதோ அவருக்கு ஏற்றமாதிரி  'அமாவாசையைக் காணோம்', 'சின்னப்பதாஸை காணோம்', 'தகடை காணோம் தகடு தகடு 'னு  வேற டைட்டில் வெச்சி அதில் நடிச்சிட்டு இருந்திருப்பார்.                     

*அமரேந்திர பாகுபலியைக் கொல்லலைன்னா அவர் பாட்டுக்க மகிழ்மதியிலேயே  உயிரோடு இருந்திருப்பார். ரம்யாகிருஷ்ணனும் அந்த நட்ட நடு ராத்திரியிலே நட்டாத்துக்குள்ளே இறங்கி மகேந்திர பாகுபலியை ஒற்றைக் கையில் தூக்கிட்டுப் போய் குளிர்ல நின்னுருக்க மாட்டாங்க. ஆனா அப்படி ஒரு சம்பவம் நடந்ததால்தான் அவந்திகா கேரக்டரில் நடிச்ச தமன்னாவையே  பார்க்கமுடிஞ்சது. அதற்காகவே `#ஐ சப்போர்ட் பாகுபலி'னு ஹேஷ்டேக் போடுறதுக்காக  பல தமன்னாவின் ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்காங்கங்கிறது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் பிரண்ட்ஸ்..?

* 'சாம்பார் வைப்பது எப்படி?', 'சத்யமில் டிக்கெட் புக் செய்வது எப்படி?'ன்னு மட்டுமே 'கூகுள்'ல தேடிக்கிட்டு இருந்த கோடானு கோடி மக்கள் இப்படி திபுதிபுன்னு கிளம்பி 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாரு'ன்னு டேப்லட் முதல் டேப்லட்டை முழுங்கிட்டு மொபைல்போன் வரைக்கும் தேடி, `அதிகம் பேர் தேடிய ஒரு கேள்வி'யாக ஆன்லைனில் சாதனை படைச்சிருக்க மாட்டாங்க.

நெட்டிசன்ஸ்

* கட்டப்பா அப்படி பண்ணாமல்  இருந்திருந்தார்னா அவரோட லுக்ஸ், ஹேர்ஸ்டைல்லாம்  இவ்வளவு பிரபலம் ஆகியிருக்காது. அப்புறம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்  ஹாசிம் அம்லாவையும், கட்டப்பாவையும் ஒண்ணா வெச்சு மீம்ஸ்லாம் போட்டிருக்க மாட்டாங்க இந்த நெட்டிசன்ஸ்.

WKKB

*'பாகுபலி பிகினிங்' எடுத்ததால்தான் அதில் கட்டப்பா பாகுபலியையே கொன்னாருங்கிறது வேற விஷயம். ஆனால் அவர் மட்டும் கொல்லாம இருந்திருந்தால் `பாகுபலி-2'வுக்கே கதை இல்லாமல் போயிருக்கும். அவர் பாட்டுக்கு நானியையும் சமந்தாவையும் வெச்சி  'சுதீப் ஏன் நானியைக் கொன்னாரு தெரியுமா?'ன்னு 'நான் ஈ' படத்தின் பார்ட் -2 வை எடுத்திருந்திருப்பார் யாருக்குத்தெரியும்.

* அப்புறம் 'எதுக்கு கொன்னார்?', 'ஏன்  கொன்னார்?''னு நாம ஏதோ சூட்டிங் ஸ்பாட் பக்கத்தில் சூப் கடை போட்டு பார்த்துட்டு உட்கார்ந்திருந்தது போல நம்மகிட்டேயே தேடிவந்து அந்தக்கேள்விகளைக் கேட்கிறவங்ககிட்ட இருந்து கிரேட் எஸ்கேப் ஆகியிருக்கலாம். ஹ்ம்ம்... ஆனா இந்தக் கட்டப்பா எங்கே அப்படி விட்டாரு...

* அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பாஸ். கட்டப்பா பாகுபலியைக் கொல்லலைனா... 'கட்டப்பா பாகுபலியைக் கொல்லாம இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்'னு கான்செப்ட் பிடிச்சு  இப்படி ஒரு ஆர்டிகளையே நான் எழுதியிருக்கவும் முடியாது, அதை நீங்க படிச்சிருக்கவும் முடியாது மக்களே. ஜெய் மகிழ்மதி..!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம் - 31: பீரங்கிகள் ஏன் மேல் நோக்கி இருக்கின்றன?

 

 
peerangi_3158323f.jpg
 
 
 

விளையாட்டுத் துப்பாக்கிகளில் தக்கை வைத்துச் சுடும்போது நேருக்கு நேர்தானே சுடுகிறோம். திரைப்படங்களில் கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்கும்போது போலீசார் நேருக்கு நேர்தானே துப்பாக்கியைப் பிடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் போர்க்களத்தில் போர் செய்யும் பீரங்கிகள் மட்டும் ஏன் எதிரிகளை நேருக்கு நேர் நோக்குவதில்லை..? எங்கேயோ வானத்தைப் பார்த்து வைக்கப்பட்டிருக்கின்றன ஏன்?

பீரங்கிகளை இயக்கி எதிரிகளின் முகாம்களை அழிக்க வேண்டும் என்றால், அவை முகாம்களை நேருக்கு நேர்தானே குறி வைக்க வேண்டும்.

குண்டுகள் மலைகளைத் தாண்டிச் சென்று விழ வேண்டும் என்பதற்காக வானத்தை நோக்கியதுபோல வைக்கப்படுகின்றன என்று நீங்கள் கூறினால் உங்கள் விடை தவறு. ஏனெனில், சமவெளிகளில் நின்று போர் செய்யும்போதுகூடப் பீரங்கி வண்டிகளின் குண்டுகள் பாயும் குழல்கள் மேல் நோக்கியே இருக்கும். பார்ப்பதற்கு ஏதோ வானத்து நட்சத்திரங்களை வீழத்துவதற்கு வைக்கப்பட்டுள்ளதுபோலத் தோன்றும்.

இதற்கான காரணத்தை ஒரே வரியில் சொல்லிவிடலாம். காற்றின் விசையிலிருந்து தப்பிக்கவே பீரங்கிகள் மேல்நோக்கிய திசையில் வைக்கப்படுகின்றன. ஆம், பீரங்கிக் குண்டுகளைக் காற்று தடுத்து, அதன் வேகத்தைக் குறைத்துவிடுகிறது. மேல் நோக்கிக் குண்டுகளைச் செலுத்துவதால் பீரங்கிக் குண்டுகளுக்கு எதிராகக் காற்றின் சக்தியை முழுவதும் குறைத்துவிட முடியாது. ஏதோ முடிந்த வரை குறைக்கலாம்.

அப்படியென்றால் பீரங்கிக் குண்டுகளை விட காற்று அதிக சக்தி மிக்கதா என்று நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கலாம். உங்கள் ஆச்சரியம் உண்மைதான். பீரங்கிக் குண்டுகளை விடவும் காற்று பல மடங்கு சக்தி வாய்ந்தது.

காற்று என்றால் புயல் மாதிரி அடித்து வீசுகிற காற்று அல்ல. சாதாரணமாக நம்மைச் சுற்றி ஆடாமல் அசையாமல் இருக்கிற காற்றுக்கே அவ்வளவு சக்தி உண்டு.

எவ்வளவு சக்தி?

ஒரு கைத்துப்பாக்கியை ஒரு போலீஸ்காரர் அல்லது ராணுவ வீரர், சற்று மேல் நோக்கியபடி சாய்வாக, 30 அல்லது 40 டிகிரி சாய்வான கோணத்தில், பிடித்துக்கொண்டு இயக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது துப்பாக்கியிலிருந்து நிமிடத்துக்கு 250 கி.மீ. வேகத்தில் புறப்படும் குண்டு அதிகபட்சமாக 10 அல்லது 15 கி.மீ. உயரத்தை அடைந்து, பிறகு கீழே விழுந்துவிடும். காற்றே இல்லாத வெற்றிடத்தில் இப்படி நீங்கள் துப்பாக்கியால் சுட்டிருந்தால் அது ஐம்பது கி.மீ. தூரம் வரை பயணித்திருக்கும். இதன் பயண தூரம் ஒரு வளைகோடாக அமைந்திருக்கும். நம் முகத்தில் பரவிப் படர்ந்து பரவசத்தை ஏற்படுத்தும் காற்றின் பலத்தைப் பார்த்தீர்களா? துப்பாக்கிக் குண்டு பயணித்திருக்க வேண்டிய 50 கி.மீ. தூரத்தை எப்படிச் சுருக்கிவிட்டது காற்று! காற்றின் இவ்வளவு வலுவான எதிர்ப்பு சக்தியை மீறித்தான் கைத்துப்பாக்கிகள் செயல்படுகின்றன.

இதற்கும் பீரங்கிகள் வானத்தை நோக்கியபடி சாய்வாக வைக்கப்பட்டிருப்பதற்கும் இடையே என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது.

பீரங்கிக் குண்டுகளை மேல் நோக்கிச் சுடும்போது அவை அதிக உயரத்துக்குச் செல்கின்றன. மேலே செல்லச் செல்ல வளிமண்டல அழுத்தம் குறைகிறது. வளிமண்டல அழுத்தம் குறைகிறபோது பீரங்கிக் குண்டுகளின் வேகத்தைப் பாதிக்கும் காற்றின் எதிர்ப்புச் சக்தியும் குறைகிறது. எனவே, பீரங்கிக் குண்டுகள் நீண்ட தூரம் பயணிக்கின்றன. நீண்ட வளைகோட்டில் பயணம் செய்து தூரத்தில் இருக்கும் இலக்கைத் தாக்குகின்றன. 30 டிகிரி சாய்வுக் கோணத்தில் வைக்கப்பட்டிருக்கும் பீரங்கியிலிருந்து செல்லும் குண்டுகளை விட 40 டிகிரி சாய்வுக் கோணத்தில் வைக்கப்பட்டிருக்கும் பீரங்கியின் குண்டுகள் அதிக தூரம் பயணித்து நீண்ட தூர இலக்கைத் தாக்குகின்றன.

வளிமண்டலத்தில் பல்வேறு அடுக்குகள் இருப்பதைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். பூமியின் மேல் பகுதியில் டிராபோஸ்பியர் என்ற அடுக்கு அடியடுக்காக உள்ளது. இது துருவப் பகுதியில் 8 கி.மீ. உயரம் வரையிலும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் 18 கி.மீ. உயரம் வரையிலும் பரவியிருக்கும். இதற்கு மேல் உள்ள அடுக்கு ஸ்ட்ராடோஸ்பியர். இது பூமியின் மேற்பரப்பில் 80 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளது. (ஜெட் விமானங்கள் இந்த அடுக்கில்தான் பயணிக்கின்றன).

டிராபோஸ்பியர் அடுக்கில் சுடப்படும் பீரங்கிக் குண்டு இலக்கை அடைய இரண்டு நிமிடம் எடுத்துக்கொண்டால் அதே குண்டு டிராபோஸ்பியருக்கு மேல் அடுக்கான ஸ்ட்ராடோஸ்பியரில் ஒரு நிமிட நேரமே எடுத்துக்கொள்கிறது. ஏனெனில், ஸ்ட்ராடோஸ்பியரின் வளிமண்டல அழுத்தம் டிராபோஸ்பியரைவிடக் குறைவாகவே இருக்கிறது.

மாணவர்களே, பீரங்கிகள் ஏன் மேல் நோக்கி இருக்கின்றன என்பது இப்போது புரிகிறதா? ஜெர்மானியர்கள் முதல் உலகப்போரின்போதே (1914-1918) இதைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். பிரான்ஸின் மீது பீரங்கிகளைக் கொண்டு தாக்கிக்கொண்டிருந்தபோது உயரமான பாதையில் சென்ற குண்டுகள் நீண்ட தூரம் பயணிப்பதை எதேச்சையாத்தான் பார்த்தார்கள். பிறகுதான் எதிரிகளை எட்ட நின்று தாக்கும் வித்தையை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதிக உயரமாக அடிக்கப்பட்ட பந்து எந்தப் பக்கம் போகிறது என்று ஊகிக்க முடியாமல் அதைப் பிடிக்க ஓடி வருபவர்கள் தடுமாறுவதற்கும் காற்றுதான் காரணம், கண்மணிகளே!

- (காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இந்திய மாணவிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளித்தது நாசா!

 

சிறந்த விண்கலம் வடிவமைப்பிற்காக, இந்திய மாணவி தபஸ்வினி, நாசாவின் சர்வதேச விண்வெளி வளர்ச்சி மாநாட்டில் பங்குபெற அழைக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் நடந்த நாசா போட்டியில் வென்றதற்காக, இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நாசா விருது

பூனே நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தபஸ்வினி ஷர்மா, நாசா நடத்திய சர்வதேச விண்கலம் வடிவமைக்கும் போட்டியில் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச அளவில் நடந்த இந்த விண்கலம் வடிவமைக்கும் போட்டியில், 6,000 போட்டியாளர்களை வென்று இந்தப் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார், தபஸ்வினி ஷர்மா. 

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் மாகாணத்தில் நடைபெற இருக்கும் நாசாவின் 36-வது சர்வதேச விண்வெளி வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்க, சிறப்புப் பார்வையாளராக அழைக்கப்பட்டுள்ளார் தபஸ்வினி. ‘Kirithra Orbis’ எனப் பெயரிடப்பட்டுள்ள விண்கலம், தேன்கூடு வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பே, தனிநபர் விண்கல வடிவமைப்பாளர் பிரிவில் தபஸ்வினிக்கு விருதைப் பெற்றுத்தந்துள்ளது. 

இதுகுறித்து, அந்த மாணவி கூறுகையில், ‘நாசாவின் இணையதளப் பக்கத்தை எதார்த்தமாகப் பார்த்தபோது, இந்தப் போட்டிகுறித்து அறிந்துகொண்டேன். பள்ளியின் துணையுடனும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் உலக அளவில் நடந்த இந்தப் போட்டியில் முதல் பரிசு வெல்லமுடிந்தது’ என்றார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நாயகிகள்

  • தொடங்கியவர்

இந்த அழகு, கறுப்பு நிறத்துக்கு மட்டுமே சொந்தம்!

 
நெற்றியை உரசும் நெத்திச் சுட்டியும், கைகளை நிரப்பியிருக்கும் வளையல்களும், பார்வையை ஈர்க்கும் மூக்குத்தியும், அழகான பட்டுத் தாவணியும் அணிந்திருக்கும் மூன்று அழகிய பெண்களின் செல்ஃபிதான் தற்போதைய ஃபேஸ்புக் வைரல்.

அழகு

உலகம் முழுவதும், கறுப்பு நிறம்குறித்த எதிர்மறையான கற்பிதங்களும், இந்தியாவைப் பொறுத்தவரை, சிவப்பு நிறம் மீதான ஏக்கமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னமும் திரைப்படங்களில் சிவப்பு நிறம் கொண்டவர்களே பெரும்பாலும் கதாநாயகிகளாக நடிக்க முடியும் என்ற எழுதப்படாத விதி உள்ளது.

'கறுப்பாக இருப்பவர்கள் வெள்ளையாகலாம்' என்ற வகையிலான அழகு சாதனப் பொருள்களுக்கு எப்பவும் மவுசுதான். இத்தகைய சமூகச் சூழலில் 'The Uncanny Truth Teller 2' என்ற பேஸ்புக் பக்கத்தில், கருப்பு நிறம்கொண்டவர்கள் மற்றும் எடை அதிகமாக இருப்பவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுவருகிறது. அந்த பேஸ்புக் பக்கத்தில், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கறுப்பு நிற மேக்கப்பில் மூன்று பெண்கள் தமிழ்க் கலாசார அடையாளத்துடன் நெத்திச் சுட்டி, வளையல்கள், மூக்குத்தி, பெரிய கம்மல்கள் அணிந்துகொண்டு பட்டுத் தாவணியில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் படத்துக்கு டேக் லைனாக, 'The Faces of India they won't show you' என்ற வாசகத்தைக் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் புகைப்படம், தற்போது ஃபேஸ்புக்கில் வைரல் ஆகியுள்ளது. இதுவரை, அந்தப் படத்தை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்துள்ளனர். இருப்பினும், அந்தப் பெண்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வெளியானது நிவின் பாலியின் ரிச்சி டீசர்!

நிவின் பாலி  நடிப்பில் உருவாகியிருக்கும் நேரடி தமிழ்ப் படம், 'ரிச்சி'. இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ரிச்சி

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் தனது ஆர்பாட்டமில்லாத நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர், நிவின் பாலி. இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான, 'பிரேமம்' திரைப்படம், தமிழிலும் ரசிகர்களை உருவாக்கியது. இதையடுத்து, மலையாளப் படங்களில் நடித்துவரும் இவர், முதல்முறையாக நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கித்தில், 'ரிச்சி' என்ற படத்தில் நிவின் பாலி நடித்துள்ளார். தூத்துக்குடியைக் கதைக்களமாகக் கொண்டு, இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தூத்துக்குடி தாதாவாக நிவின்பாலி நடிக்கும் இந்தப் படம், ஆக்‌ஷன் கலந்த மசாலா படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

 

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அட்டகாச, அதிரடி சகலதுறை நட்சத்திரம் அன்றே ரசலின் பிறந்தநாள்.
Happy Birthday Andre Russell

 

Bild könnte enthalten: 1 Person, Text

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரராகப் பிரகாசித்து வரும் ஜேம்ஸ் ஃபோல்க்னரின் பிறந்தநாள்
Happy Birthday James Faulkner

 

Bild könnte enthalten: 1 Person, Text

இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட பந்துவீச்சாளர் ஆசிஷ் நேஹ்ராவின் பிறந்தநாள்.
மீண்டும் இந்திய தேசிய T20 அணிக்குள் மீள்வருகை புரிந்து, அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் நேஹ்ராவுக்கு இனிய வாழ்த்துக்கள்.
Happy Birthday Ashish Nehra

  • தொடங்கியவர்

கிளிக் தொழில்நுட்ப காணொளி

ஃபிட்பிட் ஃப்ளெக்ஸ் 2 உடை தீப்பிடித்த விவகாரம், நிண்டெண்டோவின் புதிய முயற்சியான ஸ்விட்ச், சுவிட்ச் விளையாட்டுகருவி, அமெரிக்காவில் ரத்த தானம் செய்பவர்களுக்கான ஒரு மொபைல் செயலி மற்றும் முப்பரிமாண வீடு கட்டும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை அடங்கிய காணொளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.