Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஜனவரி 6: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

 

star%282%29.jpgஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்..

star%282%29.jpgஅப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.

arrrahman.jpg

star%282%29.jpgஎலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம். கணினி பொறியியல் படிக்க வேண்டும் என்பது இளமைக்கால ஆசை.

star%282%29.jpgபள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால்... லண்டன் இசைக்
கல்லூரியான டிரினிட்டி கல்லூரியின் ஸ்காலர்ஷிப் பெற்றார்.

star%282%29.jpgஆரம்ப காலங்களில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத காலங்களில் கார் ஒட்டவும் கற்றுக்கொண்டார். ஒருவேலை இசை கைகொடுக்காவிட்டால் டிரைவர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் தான் காரணம்.

star%282%29.jpg"பன்னிரெண்டு வயதில் முதுமையடைந்து விட்டேன் நான் ; இப்பொழுது தான் இளைஞனாகிக் கொண்டிருக்கிறேன் !" என்று பொறுப்புகள் அழுத்திய இளமைக்காலத்தை பற்றி குறிப்பிட்டார்

arrrahman1.jpg

star%282%29.jpgஒரு லட்சம் பேர் கொல்கத்தாவில் இவரின் இசை நிகழ்வை காணக்கூடினார்கள். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை.

star%282%29.jpgஇளம் வயதில் 'சினிமா பாரடைஸோ’ படத்தைப் பார்த்து, அந்தப் படத்தின் இசையைப் போல ஒரே ஒரு படத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

star%282%29.jpgபி.எம்.டபிள்யு கார்களில் விருப்பம் உண்டு. இசையமைப்பதை தாண்டி வீடியோ கேம்ஸ்களில் ஆர்வம் அதிகம்.

star%282%29.jpgதொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். அப்போதுதான், இயக்குனர் arrrahman3.jpgமணிரத்னம் மூலம் 'ரோஜா’ பட வாய்ப்பு வந்தது. அதற்காகக் கிடைத்த சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அந்த பணத்தை சில மணிநேரங்களில் விளம்பரங்களில் ரஹ்மானால் சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.

star%282%29.jpgசின்ன சின்ன ஆசை பாடலை இசையமைத்து அன்னையிடம் போட்டு காண்பித்தார். அவர் கண்ணீர் விட்டு அழுதார் ,"பிடிக்கலையா அம்மா ?" என்று கேட்டார் ரஹ்மான். பிடிக்கலையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !”என்று சொன்னார் அவரின் அம்மா

star%282%29.jpg "காதல் ரோஜாவே பாட்டை அதிகாலை மூன்று மணிக்கு கேட்டுவிட்டு சவுண்ட் இன்ஜினியர் கண்ணீர் விட்டு அழுதது மறக்கவே முடியாத அனுபவம் " என்றும் பதிவு செய்திருக்கிறார்.

star%282%29.jpgரோஜா’ படத்துக்கு இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை மத்திய அரசு வழங்கியது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றாண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வைகளில் ஒன்றாக 'ரோஜா’வை அறிவித்தது. 'மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.

star%282%29.jpg'பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்திற்கும் இல்லை.

star%282%29.jpg1997-ல் இந்தியாவின் விடுதலைப் பொன் விழாவுக்காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம், ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. அப்படி உருவானதுதான் 'வந்தே மாதரம்’ இசை ஆல்பம்.

star%282%29.jpgரஹ்மானுக்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது.எவ்வளவோ முன்னேறினாலும் தான் முதலில் உபயோகித்த கீபோர்டை இன்னமும் வைத்து இருக்கிறார் .இன்னமும் தன் பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கிற பழக்கம் உண்டு.

star%282%29.jpgஇளம் வயதில் வறுமையில் வாடிய நினைவுகளின் அடையாளமாக இன்னமும் தானாக
நகைகளை அணிய மாட்டார்

star%282%29.jpgஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு  முன் எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபொழுது "எனக்கொரு அன்னை இருக்கின்றாள்" என்றார்.அதாவது நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்

star%282%29.jpg'அடுத்து ஆஸ்கர்தான்’ என 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் சுபாஷ் காய் சொன்னார். பிறகு, உலக அளவில் பம்பாய் ட்ரீம்ஸ் எனும் இசை நிகழ்ச்சி, மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து, 'மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’, சீன மற்றும் பிரிட்டிஷ் படங்களுக்கு இசை எனப் பல வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்றினார். அப்படி வந்ததுதான், 'ஸ்லம்டாக் மில்லியனர்’. ஒரே ஒரு மின் அஞ்சலில் ரஹ்மானை புக் செய்தார், இயக்குனர் டோனி பாயல். 'ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர்கள் குவிய, 'எல்லாப் புகழும் இறைவனுக்கே’
எனப் பணிவோடு ஆஸ்கர் மேடையில் அன்னைத் தமிழில் பேசினார்.

star%282%29.jpgஅமைதி மற்றும் தனிமை விரும்பி. அமைதி ஆழ்மனதின் குரலை இன்னும் தெளிவாக கேட்க வைக்கிறது ; எரிச்சல்படுத்தும் சத்தம் உண்டு செய்யும் பலர் இருக்கும் உலகில் அமைதி தான் ஒரே இன்பம் என்பது ரஹ்மானின் எண்ணம்

star%282%29.jpg'வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்து எடுத்தேன்’ என்பார். எல்லோரையும் அன்பு செய்யுங்கள் எனும் சூஃபி தத்துவத்தில் ஈடுபாடுகொண்டவர். உலக அமைதிக்காக 'வி ஆர் தி வேர்ல்டு’ எனும் இசைப் பாடலை மைக்கேல் ஜாக்சன் இசை அமைக்கச் சொன்னார். அந்தப் பாடலைக் கேட்பதற்குள், அவர் மரணமடைந்தது சோகமான நிகழ்வு.

1919029_1150666065026252_454973030277999

star%282%29.jpgரஹ்மான் நன்றாக மிமிக்ரி செய்வார், வைரமுத்து போல மிமிக்ரி செய்வதில் விருப்பம் அதிகம். பெரும்பாலும் இரவு நேரங்களில் இசை அமைப்பார். வீட்டில் பிள்ளைகள் தூங்கும் வரை அவர்களோடு இருந்துவிட்டு, பிறகு இசை அமைக்கப்போகிற ஸ்வீட் அப்பா. குழந்தைகள் மீது பெரிய அன்பு. ஒரு சுவாரசியமான செய்தி. இவருக்கும் மகன் அமீனுக்கும் ஒரே தேதியில்தான்
பிறந்த நாள்.

star%282%29.jpgரஹ்மான் லதா மங்கேஷ்கரின் பெரிய விசிறி. "லதாஜி என்னுடைய இசையமைப்பில் பாடினால் கேட்டுக்கொண்டே இருப்பேன் அது என்னுடைய இசை என்பதற்காக இல்லை ! அவர் பாடியிருக்கிறார் என்பதால் அதில் மூழ்கிப்போவேன்"  என்று சொன்னார்

star%282%29.jpgஇசையை... ஏழை மற்றும் திறமைசாலி மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ''இந்தப் பள்ளியில்தான் என் கனவுகள் உள்ளன. இங்கே இருந்து சிறந்த பல இளைஞர்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை'' என்பார்.

star%282%29.jpgவெற்றியை தலைக்கு போகவிடமாட்டார். கொஞ்சம் புகழுடைய சாதாரண ,மனிதன் நான்
என்பார். ஈகோ என்பதை 'edging god out !' என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.வெற்றி மட்டுமே படைப்புத்திறனுக்கு காரணமில்லை. இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை செலுத்துகிறது. இறைவனின் எல்லையற்ற கருணையும் நான் இயங்க முக்கிய காரணம் !" என்பது ரஹ்மானின் வாக்குமூலம்

 

68202_966417136740314_488734384578045605

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சொல்வனம்

p72a.jpg

 

நூற்றாண்டுக் குரல்  

நீலப் பைங்கிளி

தெரியுமோ.                                                                                       

பச்சை  பஞ்சவர்ணம்

சிலநேரம்

வெளிர் சாம்பல்

பார்த்திருக்கிறது.

நீலப் பைங்கிளி

தெரியுமோ...

தாத்தா நிச்சயமாய்

சொல்வார்

’வளைந்த மூக்கில்லை

விசிறிவால் இல்லை

ஆனால் தெரிந்த

கிளி’யென்பார்.

நடையைப் பார் நளினம்

பேச்சுகூடப் புரிகிறது

உற்றுப்பார்.

ஜன்னல் கம்பிகளின் வழி

பூஜையறை பார்த்து

மகாலட்சுமி படம் பார்த்து

வணங்கி மகிழும் பரவசம்

கண்களில் தெரியும்.

கிணற்று மேடையில்

உட்கார்ந்துகொண்டு பார்க்கும்.

ஜகடையொலியும் கேட்கும்.

நூறு குடம் இறைத்துக்கொட்டிய பெருமிதம்கூட.

ஞாயிறு விரதம் இருக்கும்போல.

முகவாட்டம் புரிபட

மனசு முழுக்க நெகிழ்ச்சி.

நூற்றாண்டுப் பெருமைக் குரல்.

துயரம் விழுங்கிய முகம்.

நீலப் பைங்கிளியின்

கழுத்து மணியசைவு

செத்துப்போன பாட்டியின் சாயலென

தாத்தா சிரிப்பு கர்வமாய்!

 

  • தொடங்கியவர்

ஜனவரி 6: வேட்டி தினம்...

12494804_1019389468120067_33294562415740

12469560_663409017094977_265649327820798

'வேட்டி அணிந்து நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்!'

 

லக பாரம்பர்யங்களை பாதுகாக்கும் நோக்கில் யுனஸ்கோவால் ஆண்டுதோறும் ஜனவரி 6-ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நமது பாரம்பர்யத்தை போற்றும் விதமாகவும், நினைவூட்டும் விதமாகவும் சர்வதேச வேட்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

v3.jpg

வேட்டி தினத்தையொட்டி வாசகர்களின் வெரைட்டியான புகைப்பட தொகுப்பு...

தமிழகத்தைப் பொறுத்தவரை சாதி, மதங்களைக் கடந்து அனைத்து சமுதாயத்தினரும் விசேஷ நாட்களில் அணிய விரும்புவது வேட்டியைத்தான். ஆண்களின் கம்பீரத்திற்கு அடையாளமாகவும், நமது கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது வேட்டி என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியாது.

மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட வெகு சிலர் வேட்டியை மறந்திருக்கும் இன்றைய நிலையில், அலுவலகச் சூழலுக்கும், பள்ளி, கல்லூரிகளின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு வேட்டி அணிவதில்லை என்றே பலர் கூறுகின்றனர்.

v2.jpg

வேட்டி தினத்தையொட்டி வாசகர்களின் வெரைட்டியான புகைப்பட தொகுப்பு...

நமது தட்ப வெப்ப நிலைக்கு 100 சதவிகிதம் பொறுத்தமானது வேட்டிதான். அணிவதற்கு ஏதுவாக ரெடிமேட் வேட்டிகள், நறுமணம் கமழும் வேட்டிகள், மேட்சிங் சட்டைகளுடன் வரும் மிக்ஸ் மேட்ச் வேட்டிகள் என்று நவீன ஆடைகளுக்கு இணையாக வேட்டி தயாரிப்பாளர்கள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கும் விலையில்லா வேட்டி, சேலைகளை நெய்வதால் தங்களுக்கு ஓரளவு வருவாய் கிடைப்பதாக கூறும் நெசவாளர்கள், "இன்றைய காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றங்களால் வேட்டி அணிவது வெகுவாக குறைந்து வருகிறது. நாகரீகத்தின் காரணமாக பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை இளைஞர்கள் அணிய விரும்புவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுகிறது. இதனால், நெசவுத் தொழிலை கற்றுக்கொள்ள எங்கள் பிள்ளைகள்கூட ஆர்வம் காட்டுவதில்லை" என்று வேதனைப்படுகின்றனர் நெசவுத் தொழிலாளர்கள்.

v1.jpg

வேட்டி தினத்தையொட்டி வாசகர்களின் வெரைட்டியான புகைப்பட தொகுப்பு...

மேலும் அவர்கள் கூறும்போது, தமிழரின் பாரம்பர்ய சின்னமாக கருதப்படும் வேட்டி அணிவதை இன்றைய இளைஞர்கள் அதிகமாக விரும்பி அணிந்தால், எங்கள் வாழ்வாதாரமும் நெசவுத் தொழிலும் பாதுகாக்கப்படுவதுடன் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
கால ஓட்டத்திற்கு ஏற்ப தேவைகளும், தேவைக்கு ஏற்ப கலாச்சாரமும் மாறுவது இயல்பான ஒன்றுதான். அப்படிப்பட்ட மாற்றங்களுக்கு இடையில் காணாமல் போவதும், சிக்கித் தவிப்பதும் நமது அடையாளங்கள் தான். நமது அடையாளங்களுள் ஒன்றான வேட்டிக்கு அந்த நிலை வராமல் பாதுகாப்பது நமது கடமை தானே!

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12376596_662974897138389_378757781340780


வெள்ளை நிற கொக்கு, கருப்பு நிற கொக்கு, சாம்பல் நிற கொக்குகளைப் பார்த்திருப்பீர்கள். வண்ண வண்ண நிறங்களில் தெரியும் இந்த கொக்கின் பெயர் 'கிரே கிரவுண்டு க்ரேன்' (Grey Crowned Crane) ஆப்பிரிகாவில் காணப்படும் இந்த கொக்குகள் மயில் போலவே நடனம் ஆடும். இது உகாண்டா நாட்டின் தேசியப் பறவை.

  • தொடங்கியவர்

உலக கோப்பையை பெற்று தந்த கபில் தேவ் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

 

ஜனவரி 6: உலக கோப்பையை பெற்று தந்த கபில் தேவ் பிறந்த தினம்   - சிறப்பு பகிர்வு

இந்தியர்களால் எதுவும் முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்த கபில் தேவின் பிறந்தநாள் ஜனவரி ஆறு. கபிலிடம் படிக்க உண்டு பல பாடங்கள். பத்து மட்டும் இங்கே ..

கிடைக்கிற தருணத்தில் கில்லியாகு :

கிரிக்கெட் வாசனையே இல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தார் கபில். 13-வது வய்தில் கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்காக வந்த இடத்தில் ஒரு ஆள் குறைகிறது என்று சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தான் கபில். அப்பொழுதில் இருந்து அடித்து ஆடத்தொடங்கியது காலத்துக்கும் தொடர்ந்தது.

kapil3.jpg

என்னால் எதுவும் முடியும் :

நாற்பது வருடங்களுக்கு முன்னால் பிராபோர்ன் மைதானத்தில் வீரர்களுக்கு உணவு கம்மியாக வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. பதினைந்து வயது சிறுவன் கபில் ,"எனக்கு கூடுதலாக சாப்பாடு போடுங்கள் ! நான் வேகப்பந்து வீச்சாளன் !" என்ற பொழுது இந்தியாவில் அப்படி யாருமே இல்லையே என்று நகைத்தார்கள் சுற்றி இருந்தவர்கள். அப்பொழுது எதுவும் சொல்லாத கபில் ஒய்வு பெற்ற பொழுது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்கள் அவர் வசமே இருந்தன

புலிகள்  போலியாக ஜெயிப்பதில்லை :

ஆஸ்திரேலிய அணியுடனான 1978 ஆம் வருடப்போட்டி அது. ஒரு சிக்ஸர் கபில் இருந்த பக்கம் பாய்ந்து வந்தது. நடுவர் பவுண்டரி என்று அறிவித்தார். கபில் அதை சிக்சர் என்று சொல்லி மாற்றினார். இந்திய அணி ஒரு ரன்னில் தோற்றுப்போனது. கிரிக்கெட் என்னவோ ஜெயித்திருந்தது.

புதிய பாதை உன்னுடையது :

இந்தியர்கள் என்றால் சுழல்பந்து வீச்சுக்கு லாயக்கானவர்கள் என்கிற எண்ணமே எல்லா நாட்டவருக்கும் உண்டு. அதுதான்  கபிலுக்கு முதல் டெஸ்ட் போட்டி. கபில் பாகிஸ்தானின் சாதிக் முகமதுக்கு பந்து வீசப்போனார். முதல் பந்தே இந்தியர் ஒருவர் அதுவரை வீசிய மிகவேகமான பவுன்சராக எகிறியது. உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது அப்பொழுது தான்.

kapil4.jpg

கடந்தகாலம் கடந்து வா ! :

முந்தைய இரண்டு உலகக்கோப்பையை டெஸ்ட் போல ஆடிவிட்டு வந்திருந்தது இந்திய அணி. வெற்றி என்பதை சுவைத்ததே இல்லை என்கிற சூழலில் தான் உலகக்கொப்பைக்குள் நுழைந்தது அணி. கபில் தேவ் கூட்டு முயற்சியை தொடர்ந்து சாதித்தார். இறுதிப்போட்டியில் கம்மியான ஸ்கோர் அடித்ததும் ,"அடித்திருப்பது அருமையான ஸ்கோர். பந்து உங்களைத்தேடி வரக்கூடாது. பந்தை தேடி நீங்கள் போங்கள். கோப்பையோடு டெல்லி போகிறோம் நாம் !" என்று சொல்லி அடித்தார்.

போராடத்தான் வந்தோம் நாம் :

இந்திய அணியினர் ஒரு நாளையும் டெஸ்ட் போல ஆடிக்கொண்டு இருந்த காலம் அது. அணிக்குள் ஒரு வேகத்தை புகுத்தியது கபில் தான் ! உலகக்கோப்பையின் முதல் போட்டியில் உலக சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை புரட்டிப்போட்ட அந்த எனர்ஜியை கடைசி வரை அணியை விட்டுப்போகாமல் பார்த்துக்கொண்டார் அவர்.
"நாம் எதற்கும் லாயக்கில்லை என்பது எல்லாரின் கணிப்பும் ! நம்மால் முடிந்ததை செய்வோம் ; போராடிவிட்டுப்போவோம் !" என்பதே அவர் தந்த மந்திரம்

வெற்றிக்கும்,தோல்விக்கும் இடையே ஒரே கோடு :

உலககோப்பையில் ஜிம்பாப்வே அணியுடன் போட்டி. வென்றால் மட்டுமே அரையிறுதி போகமுடியும் அணி என்கிற சூழல். 17/5  என்று அணி தடுமாறிக்கொண்டு இருந்தது. வந்தார் கபில். அடித்து ஆடினார். 17/5 175 என்கிற அவரின் ஸ்கோர் ஆனது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள அந்த ஒரு கோடு உங்கள் மீதான சமரசமில்லா நம்பிக்கை

kapil5.jpg

சுற்றி எதிரிகளா ? சுழன்று அடி :

இங்கிலாந்து அணியுட பாலோ ஆனை தவிர்க்கப்போராடி கொண்டிருந்தது இந்திய அணி. ஆல் அவுட் எப்பொழுது வேண்டுமானாலும் ஆகலாம் என்கிற சூழல்.  எட்டி ஹெம்மிங்க்ஸ் பந்து வீச வந்தார். சுழன்று அடித்தார் கபில்.
அதிகமில்லை-தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் நான்கு சிக்ஸர்கள். இந்தியா தப்பித்தது

ஓயாமல் ஓடிக்கொண்டிரு :

கிரிக்கெட் உலகின் ராட்சசன் விவியன் ரிச்சர்ட்ஸ் உலகக்கோப்பையை இந்தியாவிடம் இருந்து பறித்துக்கொண்டு போகிற மாதிரி ஆடிக்கொண்டு இருந்தார். மதன் லால் வீசிய பவுன்சரை தூக்கி அடித்தார். அது எங்கோ போய்க்கொண்டு இருந்தது. "கபில் மோசமான பந்தை வீசிவிட்டேன். விட்டுவிடு !" என்று மதன் லால் கத்திக்கொண்டே இருந்தார். கபில் பின்னோக்கி ஓடிக்கொண்டே அந்த பந்தை துரத்தினார். அந்த கேட்ச் இந்திய அணிக்கு கோப்பையை வென்று
தந்தது.

கொடுக்கப்பட்ட கத்தியை கூர்தீட்டு ! :

கபிலின் இன்ஸ்விங் யார்க்கர் வெகு பிரபலம். கடைசி வரிசை பேட்ஸ்மன்களை அதைக்கொண்டு காலி செய்தவர் அவர். அவரிடம் இதைப்பற்றி கேட்கப்பட்ட பொழுது "கடவுள் எனக்கு அவுட்ஸ்விங்கர் தந்தார். நான் மிச்சத்தை
வளர்த்துக்கொண்டேன் !". அதே போல பந்துவீச்சாளராக தொடங்கி ஆல் ரவுண்டரானதும் ஆட்டத்தின் மீதான காதலை கூர்தீட்டிக்கொண்டதால் தான்.

12402002_966470796734948_901825748432142

 

  • தொடங்கியவர்

12417579_663416940427518_721851489306049

10580753_663416980427514_827876513803628

அழகு மயில்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

கபிலைப் பிடிக்கும், கவாஸ்கரை ரெம்பப் பிடிக்கும் வெரி ஸ்டைலிஷ் பாட்ஸ்மன்...!!  :)

  • தொடங்கியவர்

பார்த்தவுடனே உணவுவகைகள் என்று ஏமாந்துவிடாதீர்கள். இவைகள் எல்லாமே மணிபர்ஸ்கள். டச்சு கலைஞர் Rommy Kuperus உருவாக்கிய இந்த உணவுவகைகள் பர்ஸ்கள் அனைவரையும் கவர்ந்துள்லது.

12509284_663719910397221_586670696148359

12472246_663719920397220_307557683976551

12507088_663719913730554_558830453274829

12400705_663719987063880_635286853464110

12417832_663719983730547_472212388001388

1918261_663720003730545_6306583310959943

1559854_663720073730538_8522359607257843

12400916_663720083730537_669817059756767

12509714_663720093730536_782239853642802

12400434_663720147063864_290875642094536

1604850_663720117063867_9052595820358680

12510264_663720227063856_453283993109370

  • தொடங்கியவர்

placeholder

placeholder

placeholder

ஸ்ரேயா

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

 

p60a.jpg

விலை! 

நிரம்பி வழியும் கல்லூரி மாணவர்கள் 4,000 பேர் முன்பு பேசிவிட்டு வந்ததில் இருந்து முன்னாள் அமைச்சருக்கு இருப்பு கொள்ளவில்லை. உடனே ஆள் அனுப்பினார் கல்லூரியை விலைபேச!

 


p60b.jpg

பாடம்

'சதா 'படி... படி’னு நச்சரிச்சுட்டே இருந்தா அவனுக்குப் போரடிக்காதா?' என மனைவியிடம் சத்தம் போட்டுவிட்டு, 'இந்தா... நீ போய் விளையாடுடா' என, தனது ஸ்மார்ட்போனை மகனிடம் கொடுத்தார் பி.டி மாஸ்டர் கேசவன்!

 


p60c.jpg

கடைசி விருப்பம்

குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து வாங்கிக்கொண்ட ராஜூவும் தேனுஜாவும் கடைசி விருப்பமாக செல்ஃபி எடுத்துக்கொண்டு பிரிந்தார்கள்!

 


p60d.jpg

வரம்

''எமன் வந்தபோது ஈஸ்வரனைக் கும்பிட்டதால் மார்க்கண்டேயன் சாகாவரம் பெற்றான்' என, கதை சொன்னார் தாத்தா. 'ஓ... அப்ப அவர் இன்னும் உயிரோடு இருக்காரா... எங்க?' எனக் கேட்டான் பேரன்!

 


p60e.jpg

பெருமிதம்

அப்பா, அம்மா, சித்தி, அத்தை, மாமா, பெரியப்பா... என அனைவரையும் ஒன்றுசேர்த்து 'கலக்கிட்ட போ’ என்ற கமென்ட்டைக் கேட்டுப் பெருமிதம்கொண்டான் புதிதாக ஃபேமிலி வாட்ஸ்அப் குரூப் தொடங்கிய விசு!

 


p60f.jpg

பொய்

''பொய் சொல்லக் கூடாது... சாமி கண்ணைக் குத்தும்'' என்றேன் மகனிடம். ''இந்த மாதிரி பொய் சொன்ன... நான்தான் உன் முகத்தில் குத்துவேன்'' என்றவாறு செல்லமாக என் முகத்தில் குத்தினான் மகன்!  

 


p60g.jpg

தப்பித்தல்

அந்த நடு இரவில் காம்பவுண்ட் சுவரின் மேல் ஏறிக் குதித்தவன், தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு கதவு அருகே வந்து, சாவிகளில் ஒன்றை எடுத்துத் திறந்து, வீட்டுக்குள் நுழைந்து, கதவைச் சாத்திக்கொண்டான். 'அப்பாடா... லேட்டா வந்ததை ஹவுஸ் ஓனர் பார்க்கலை.’

 


p60h.jpg

திருட்டு

எவரும் அறியாமல் ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ்க்ரீம் எடுத்து சத்தம் இல்லாமல் சாப்பிட்டுத் திரும்பினால், வெடித்து அழத் தயாராக என் மகள்!

 


p60j.jpg

ஊதியம்

''கணேசன் எப்படி இருக்கான்... குறைஞ்ச சம்பளத்துல கஷ்டப்பட்டானே!''

''வேற கம்பெனியில நல்ல சம்பளத்துக்கு மாறிட்டான். அவன் உழைப்பு வீண் போகலை!'' 


p60k.jpg

கடமை

''மணி 10 ஆவுது, வாடி... பாருக்குப் போலாம்'  பக்கத்து வீட்டு லதாவை அழைத்தாள் கற்பகம்... டாஸ்மாக்கில் விழுந்துகிடக்கும் தத்தமது கணவர்களைத் தூக்கி வர!

  • தொடங்கியவர்

உலகத் தலைவர்களின் கண்ணீர்த் தருணங்கள்

 

160106155344_gch_crying_obama_624x351_ge

 

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு இருந்துவரும் உரிமை மீது புதிய கட்டுப்பாடுகளை பல எதிர்ப்புகளை மீறி அறிமுகப்படுத்திய அதிபர் ஒபாமா ஒரு கட்டத்தில் கண்ணீர் சிந்தினார்.

2012ஆம் ஆண்டில் சேண்டி ஹூக் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தபோது அது நிகழ்ந்தது.

வேறுபல அரசியல் தலைவர்களும் கண்ணீர் சிந்திய தருணங்கள் உண்டு.

அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

ஒலிம்பிக் கண்ணீர்

160106155010_gch_crying_lula_624x351_get

 

 

பிரஸிலின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ டா சில்வாவுக்கு 2009ல் உணர்வுப் பெருக்கெடுத்த தருணம் இது.

2016ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ரியோ டி ஜெனீரோ தெரிவான செய்தி கேட்டு அவர் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.

கர்சாயின் கண்ணீர்

160106154804_gch_cryin_karzai_624x351_ge

 

செப்டம்பர் 2010ல் காபுல் பள்ளிக்கூடம் ஒன்றில் உரையாற்றிய ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், நாட்டின் வன்முறை நிலை பற்றிப் பேசியபோது அழுதுவிட்டார்.

தனது மகனேகூட உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிவந்தது பற்றி அவர் அப்போது குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டால் வந்த குமுறல்

160106155206_gch_crying_nonomura_624x351

 

 

ஜப்பானிய அரசியல்வாதியான ரியூடாரோ நோனோமுரா அரசு பலனத்தை செலவு செய்த விதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது பச்சை பிள்ளைப்போல பொங்கிப் பொங்கி அழுதார்.

இருந்தாலும் இவ்விவகாரம் தொடர்பில் அவர் பதவி விலக வேண்டி வந்தது.

வெற்றிக் கண்ணீரா? குளிர்காற்றுக் கண்ணீரா?

160106160238_gch_crying_putin_624x351_ap  

மார்ச் 2012, ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் தான் மறுபடியும் வென்ற செய்தியை அறிந்தபோது விளாடிமிர் புடினின் விழிகளில் கண்ணீர் வழிந்தது.

மிகவும் உறுதியானவர் என்ற பொதுவான பிம்பம் கொண்டவர் புடின்.

இந்த சந்தர்ப்பத்தில் புடின் கண்ணில் நீர் வழியவும் காரணம் குளிர் காற்றுதானே ஒழிய உணர்வுப் பெருக்கு அல்ல என்று அவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பதவியிழந்த நேரம்

http://i.dailymail.co.uk/i/pix/2013/04/11/article-2307197-0029BD1000000190-547_634x489.jpg  

 

1990ஆம் ஆண்டு நவம்பர் 28, பிரிட்டனின் பிரதமர் பதவியை விட்டுப் போகும் நேரத்தில் மார்கரெட் தாட்சர் கண்ணீர் மல்க உரையாற்றி விடைபெற்றார்.

'அயன் லேடி' அதாவது இரும்புப் பெண் என்று அறியப்பட்ட தாட்சர், கட்சித் தலைவர் பதவியில் போட்டியிடுவதற்கு அவரது அமைச்சரவை மறுத்ததை அடுத்து பதவி விலகினார்.

  • தொடங்கியவர்

உலகம் பேசிய சிரியக் குழந்தைகள்

 
 
  • children_2685214g.jpg
     
  • children_2_2685216g.jpg
     

கடந்த ஆண்டில் உலகின் கவனத்தில் அதிகம் பதிந்தவர்கள் சிரிய அகதிக் குழந்தைகள். அதற்குக் காரணம் சிரியாவில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டு போர்தான். இதனால் அந்நாட்டுக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அகதிகளாக, ஏதுமற்றவர்களாக இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த அகதிக் குழந்தைகளில் சிலர் உலகின் கவனத்தை மாறுபட்ட காரணங்களுக்காக ஈர்த்திருக்கிறார்கள்:

 

கேமரா தந்த அச்சம்

இந்தப் படத்தில் இருப்பவள் மூன்று வயது சின்னஞ்சிறுமி ஹுதா. துருக்கியின் எல்லையில் உள்ள அத்மே அகதிகள் முகாமில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. பிறந்ததில் இருந்து இந்த முகாமில்தான் அவள் வளர்ந்து வருகிறாள். ஒரு நாள் துருக்கி ஒளிப்படக் கலைஞர் உஸ்மான் சகிர்லி, அந்த முகாமுக்குப் படமெடுக்கச் சென்றிருந்தார். அப்போது நீளமான கேமரா லென்ஸை, துப்பாக்கி என நினைத்து ‘ஹேண்ட்ஸ் அப்’ செய்கிறாள் ஹுதா. போர், சண்டை காரணமாகத் துப்பாக்கிகளைக் கண்டு அவளைப் போன்ற சின்னக் குழந்தைகள் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதற்கு இந்தப் படமே அத்தாட்சி.

 

பேனா விற்பவரின் மகள்

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அகதி அப்துல் ஹலிம் அத்தர், சிரியாவில் உள்ள யர்மூக் அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர். அங்கிருந்து தப்பி லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்குச் சென்று, மிகுந்த வருத்தத்துடன் நகரச் சாலைகளில் சுற்றிக்கொண்டிருந்தார். பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், தன் மகள் ரீமை தோளில் தூக்கிக்கொண்டு பிழைப்புக்காகப் பேனா விற்றார். அவர் பேனா விற்கும் படத்தைப் பத்திரிகையாளர் கிஸ்ஸூர் சைமனார்சன் பிரபலப்படுத்தினார். சமூக ஊடகங்கள் மூலம் சைமனார்சன் ரூ. 1.2 கோடியைத் திரட்டிக்கொடுத்த பின்னர், அத்தர் மூன்று சிறுதொழில்களைத் தொடங்கி, 16 சிரிய அகதிகளுக்கு வேலையும் கொடுத்திருக்கிறார்.

 

ஆயிஷாவின் கலக்கம்

ஐந்து வயது சிரிய சிறுமியான ஆயிஷா, துருக்கி காவல்துறையினரைப் பார்த்தவுடன் கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள். சாலையில் டிஷ்யு பேப்பர் விற்றதற்காகத் துருக்கி போலீஸ்காரர்கள் அவளைத் தேடி வந்துவிட்டதாக, நினைத்துக்கொண்டுதான் அவள் அப்படி அழுதாள். துருக்கி போலீஸ்காரர்களால் அவளைச் சாந்தப்படுத்த முடியவில்லை. இப்போது அவளுடைய அப்பா, அம்மாவிடம் ஆயிஷா பத்திரமாகச் சேர்க்கப்பட்டுவிட்டாள். ஆனால், உலகெங்கும் போர் நடக்கும் பகுதிகளில் காக்கிச் சட்டை, ராணுவச் சட்டைகளைப் பார்த்தாலே, குழந்தைகள் மனதில் பெரும் கலக்கம் வந்துவிடுவது என்னவோ உண்மை.

children_3_2685215a.jpg

அப்பா, அம்மாவுக்கு உதவுவேன்

ஆயிஷாவைப் போலவே 13 வயது சிறுவன் அகமது அபாயத்தும், துருக்கியில் உள்ள இஸ்மிர் நகரச் சாலையில் டிஷ்யு பேப்பர் விற்பவன்தான். ஒரு உணவு விடுதி அருகே அவன் டிஷ்யு பேப்பர் விற்றபோது, அந்த விடுதியின் மேலாளர் அகமதை தாக்கிவிட்டார். அவன் மூக்கில் அடிபட்டு, மயக்கமடைந்து விழுந்துவிட்டான். அதற்குப் பிறகு அவனுக்குப் பல உதவிகள் கிடைத்தாலும் அம்மா, அப்பாவுக்கு உதவுவதற்காக, தொடர்ந்து டிஷ்யு பேப்பர் விற்கப் போவதாகக் கூறுகிறான் அகமது.

 

உலகை விழிக்க வைத்தவன்

ஆலன் குர்தியைப் பற்றி புதிதாகச் சொல்லத் தேவையில்லை. துருக்கியில் இருந்து கிரீஸுக்குக் குடும்பத்துடன் அகதியாகத் தப்பிச் செல்ல முயன்றபோது, கடலில் விழுந்து கடற்கரையில் கரையொதுங்கியவன் மூன்று வயதுக் குழந்தை ஆலன் குர்தி. அவர்களது குடும்பத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவர் ஆலன் குர்தியின் அப்பா மட்டும்தான். சிரியப் போர், அதனால் கொத்துக்கொத்தாக இடம்பெயரும் சிரிய அகதிகள், சிரியக் குழந்தைகள் படும் துயரத்தை உலகுக்கு உணர்த்தியவன் ஆலன் குர்தி. அதற்கு முன்பும் அகதிகள் துன்பத்தில் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருந்தார்கள் என்றாலும், அவனுடைய இறப்பு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உலகுக்கு ஆழமாக உணர்த்தியது.

aylan_2685217a.jpg

  • தொடங்கியவர்

தமிழர்கள் வாழ்த்த... மங்கள வாத்தியம் முழங்க... நாகையில் ஒரு சீன கல்யாணம்!

 

நாகை அருகே, இந்து முறைப்படி சீன ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் சீனர்களும் தமிழர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு புது மண தம்பதியினரை வாழ்த்தினர்.

lovers.jpg

சீனாவை சேர்ந்தவர்கள் கோங் ஜோங். இவரும் ஆன்யா யூ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்கள் இருவருக்குமே தங்களது திருமணத்தை இந்து முறைப்படி இந்தியாவில் நடத்த வேண்டுமென்பது தீராத ஆசை.  இதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம்,  சீர்காழி அருகேயுள்ள தென்னலங்குடியில் வசிக்கும்  நண்பர்களிடம் தங்களது ஆசையை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து தென்னலக்குடியில் கோங் ஜோங் - ஆன்யா யூவுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைக்க இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருமணத்திற்காக சீனாவில் இருந்து மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் தென்னலக்குடிக்கு வந்திருந்தனர். அத்துடன் தென்னலக்குடியை சேர்ந்த பொதுமக்களும் ஏராளமானோர் திருமணத்தில் பங்கேற்றனர்.

மணமகன் கோங் ஜோங் பட்டு வேட்டி அணிந்தும், மணப்பெண ஆன்யா யூ பட்டு சேலை அணிந்தும் தமிழக மணமக்கள் போலவே காட்சியளித்தனர்.

தொடர்ந்து இந்து பாரம்பர்யப்படி,  அம்மி மிதித்து அருந்ததி பார்த்து...  மங்கள வாத்தியங்கள் முழங்க கிராம மக்களின் ஆசியோடு, சீன காதலர்களின் திருமணம் தமிழ் முறைப்படி நடைபெற்றது.

திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு தமிழக முறைப்படி விருந்து பரிமாறப்பட்டது.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 07

 

639Untitled-1.jpg1325 : போர்த்­துக்கல் மன்­ன­ராக நான்காம் அல்ஃ­பொன்சோ முடி­சூ­டினார்.

 

1598 : ரஷ்­யாவின் ஆட்­சியை போரிஸ் கூதுனோவ் கைப்­பற்­றினார்.

 

1608 : அமெ­ரிக்­காவின் வேர்­ஜீ­னி­யாவின் ஜேம்ஸ்­டவுண் நகரம் பாரிய தீயினால் அழிந்­தது.

 

1610 : கலி­லியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு இயற்கை செய்­ம­தி­களைக் கண்­ட­றிந்தார்.

 

1782 : அமெ­ரிக்­காவின் முத­லா­வது வர்த்­தக வங்கியான வட அமெ­ரிக்க வங்கி திறக்­கப்­பட்­டது.

 

1841 : யாழ்ப்­பா­ணத்தில் உத­ய­தா­ரகை பத்­தி­ரிகை தமிழ், ஆங்­கில மொழி­களில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1894 : வில்­லியம் கென்­னடி டிக்சன் அசையும் படத்­துக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

 

1927 : அட்­லாண்டிக் சமுத்­தி­ரத்தைக்  கடந்து முத­லா­வது தொலை­பேசி செய்தி நியூயோர்க் நக­ருக்கும் லண்­ட­னுக்கும் இடையில் அனுப்­பப்­பட்­டது.

 

1935 : முசோ­லினி மற்றும் பிரெஞ்சு வெளி­வி­வ­கார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்­சு -­ இத்­தா­லிய உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டனர்.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: பிலிப்­பைன்ஸின் பட்டான் குடா மீதான தாக்­குதல் ஆரம்­ப­மா­னது.

 

1953 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஹரி ட்ரூமன், ஐக்­கிய அமெ­ரிக்கா ஐத­ரசன் குண்டைத் தயா­ரித்­தி­ருப்­ப­தாக அறி­வித்தார்.

 

1959 : பிடல் காஸ்ட்ரோ தலை­மை­யி­லான புதிய கியூபா அரசை அமெ­ரிக்கா அங்­கீ­க­ரித்­தது.

 

1968 : நாசாவின் சேர்­வயர் 7 விண்­கலம் ஏவப்­பட்­டது.

 

1972 : ஸ்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்­கி­யதில் 104 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1979 : வியட்­நா­மியப் படை­க­ளிடம் கம்­போ­டி­யாவின் தலை­நகர் புனோம் பென் வீழ்ந்­தது. பொல் பொட்டும் அவ­னது கெமர் ரூச் படை­களும் பின்­வாங்­கினர்.

 

1984 : புரூணை ஆசியான் அமைப்பில் 6 ஆவது அங்­கத்­துவ நாடாக இணைந்­தது.

 

1990 : பைஸாவின் சாய்ந்த கோபு­ரத்தின் உட்­ப­குதி பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காகப் பொது­மக்­களின் பார்­வைக்கு மூடப்­பட்­டது.

 

2012 : நியூஸிலாந்தில் வெப்ப வாயு பலூன் ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதால், அதில் பயணம் செய்த 11 பேரும் உயி­ரி­ழந்­தனர். 

 

2015 :  யேமனின் தலை­நகர் சனாவில் இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலில் 38 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் மேலும் 63 பேர் காய­ம­டைந்­தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=639#sthash.EUxc8CXu.dpuf
  • தொடங்கியவர்

இதற்காகத்தான் விமான பயணத்தை மறுத்தார் அண்ணா!

 

ஷ்ய புரட்சியாளர் லெனின், ஒரு மேடையில் மாணவர்களிடையே உரை நிகழ்த்த வந்தபோது மாணவர்களை நோக்கி,  “உங்கள் வாழ்கையில் மூன்று முக்கிய கடமைகளை முன்னிறுத்துகிறேன்”என்றார்.

முதலாவது. 'மாணவர்களே படியுங்கள்', இரண்டாவது 'மாணவர்களே படியுங்கள்', மூன்றாவது 'மாணவர்களே படியுங்கள்' என்று கூறிவிட்டு தன் உரையை முடித்துக்கொண்டார். இதனைவிட யாரும் படிப்பின் மகத்துவத்தை உணர்த்திவிட முடியாது. ஆனால் இன்று பெரும்பாலான மாணவர்கள் பாடபுத்தகங்களை தாண்டி தங்கள் வாசிப்பை விரிவுபடுத்துவதில்லை.

பாடப்புத்தகம் படிப்பது போர் (bore) என்ற நிலையில் நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், டி.வி, போன்ற சந்தோஷத்தை

போலவே பாடப்புத்தகத்தை தாண்டிய புத்தகத்தை வாசிப்பதும் பரவசம் தரும் ஒன்றே.

அமெரிக்காவில் ஓர் ஏழைச்சிறுவன், ஒருபண்ணை முதலாளியிடம் புத்தகம் ஒன்றை இரவல் பெற்றான். படித்து முடித்தபின் அதை தனது வீட்டுக்கூரையில் வைக்க,  மழையில் அது நனைந்துவிட்டது. அதனை உலர்த்தி பண்ணை முதலாளியிடம் கொடுக்க, அவர் அதனை வாங்க மறுத்து,  அதற்குபதிலாக அவர் வயலில் வேலைசெய்யுமாறு பணித்தார். அந்த சிறுவனும் அவரின் வயலில் வேலை பார்த்துக்கொண்டே ஓய்வு நேரங்களில் அந்த புத்தகத்தை திரும்ப திரும்ப படித்தான். அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஏழ்மை விலங்கை அறுத்தெறிந்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன். அவர் படித்த அந்த புத்தகம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி 'வாஷிங்டனின் வாழ்க்கை வரலாறு'.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், துணை குடியரசு தலைவராக இருந்தபோது வெளிநாட்டிற்கு பயணமொன்றை மேற்கொண்டார். அவருக்கான தங்கும் அறையில் இரண்டு படுக்கைகள் தயார் பண்ணச் சொன்னார். மனைவியை இழந்த ஒருவர்,  எதற்காக இரண்டு படுக்கையை தயார் பண்ண சொல்கிறார் என்ற சந்தேகத்தில் நோட்டமிட்ட அவரது உதவியாளருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு படுக்கையில் ராதாகிருஷ்ணன்  அடுத்த கட்டிலில் முழுவதுமாக அடுக்கடுக்கான புத்தகங்கள். ராதகிருஷ்ணனோ சிரித்தபடி சொன்னார். “புத்தகங்கள்தான் என்னுடைய மனைவி, எப்போதும் அவைதான் என்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும்” என்றார்.

lenin%20600%201.jpg

பேரறிஞர் அண்ணா ஒருமுறை டெல்லியிலிருந்து சென்னை திரும்பும்போது,  'விமானத்தில் டிக்கெட் பதிவுசெய்து விடுகிறோம்' என்றவர்களிடம், “வேண்டாம் ரயில் டிக்கெட் பதிவு செய்யுங்கள் என்றாராம். ஐயா, "ரயிலில் போனால் இரண்டு நாட்கள். பயணமும் வெகு சிரமமாக இருக்கும். அதனால் விமானத்திலேயே போய்விடலாமே?” என்றவர்களிடம், “நீண்ட ரயில் பயணத்தில் நிறைய படிக்கலாம். நிறைய எழுதலாம் வெவ்வேறு மாநிலங்களின் வழியே பயணிப்பதால் என்னை அவர்களுக்கு யாரென்று தெரியாது. அதனால் எந்த தொந்தரவும் இருக்காது" என்றார். புத்தகத்தை அந்தளவு நேசித்தவர் அவர்.

ஆபிரஹாம் லிங்கனுக்கு புத்தகப்படிப்பில் கொள்ளை ஆசை. அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு,   எப்பொழுதும் புத்தகமும் கையுமாக இருக்கும் அவரை மனைவிக்கு அறவே பிடிக்கவில்லை. ஒருமுறை புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி எறிந்துவிட்டு கத்திய அவரது மனைவி, "இதை படிப்பதால் என்ன பிரயோஜனம்... பத்துகாசு சம்பாதிக்க இது பயன்படுமா ?"  என சீறினார். லிங்கன் அமைதியாக,  “இதோ பார்... பத்துகாசு சம்பாதிக்க வழி என்னவென்று எனக்கே தெரியும். ஆனால் பத்துகாசு சம்பாதித்த பின் பண்போடு வாழ்வது எப்படி என்பதை இந்த புத்தகத்தின் மூலம் கற்றுக்கொள்கிறேன்” என்று பதில் அளித்தார்

book%20reading%20250.jpgஒரே நாளில் பலமுறை நூலகம் செல்லும் பழக்கம் கொண்டவர் சுவாமி விவேகானந்தர். இதனைக்கண்ட நூலகர் சில கேள்விகளை எழுப்பினார். சுவாமி விவேகானந்தரோ,  எந்த பக்கத்தில் என்ன உள்ளது என்பதுவரை கூறி ஆச்சர்யப்படுத்தினாராம். சேகுவேரா,  கொரில்லா யுத்தத்தின்போது கூட,  கிடைக்கும்  இடைவேளைகளில் புத்தகத்தை படித்துக்கொண்டே இருப்பாராம். நடுக்காட்டில் யுத்தத்தின் போதும்கூட தனது வீரர்களில் ஒருவனை அனுப்பி,  வேண்டிய புத்தகங்களை வாங்கி வர சொல்லுவாராம்.     

ஜோகன் டிக்கின்ஸ் என்ற பிரஞ்சுக்காரர் 102 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட “புரோக்கன் தி ஹெல் (broken the hell)” என்ற புத்தகத்தை தேடி,  பன்னிரண்டு ஆண்டுகளாக 16,000 கி.மீ க்கு மேலாக அலைந்து திரிந்திருக்கிறார். அந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் டிக்கின்ஸ் குடும்பம் , உறவு, பணம், சந்தோசம் என வாழ்வின் ஒரு அத்தியாயத்தையே தொலைத்திருந்தார். ஆனால் அந்த புத்தகத்தை கண்டுபிடித்த தருணத்தில் உலகையே வென்றவரைப்போல் ஆனந்தப்பட்டார். இந்த மகத்தான பிரதியை அச்சாக்கி,  இனிவரும் தலைமுறையினருக்கு கொடுத்துவிடமுடியும் என்பதைவிட வேறென்ன சந்தோசம் இருந்திருக்கும் அவருக்கு வாழ்வில்?

சில புத்தகங்கள் நம்மை புரட்டி எடுக்கும். காரல்மார்க்ஸின் ஒரு புத்தகம் உலகவரலாற்றையே மாற்றி இருக்கிறது. திருவள்ளுவரின் திருக்குறள், மானுடப்பண்புகளை உலகெங்கிலும் விதைத்திருக்கிறது. பகவத்கீதை திலகரையும், டால்ஸ்டாயின் ஒரு நூல் மகாத்மாவையும் உலகம் போற்றும் உன்னதத் தலைவர்களாக்கி இருக்கிறது.

ஒரு புத்தகமும்,  அதன் வாசிப்பும் நமக்கு ஆயிரம் ஆயிரம் கண்களையும் செவிகளையும் கொடுத்து,  அறிவின் விசாலப்பாதையில்,  உலகின் ஏதோ ஒரு மூலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. மொட்டை மாடியின் குட்டிச்சுவரில் உட்கார்ந்து படித்து கொண்டிருக்கும் நம்மை, விக்கிரமாதித்யன் காலத்திற்கும், ஈழத்தின் போர்ச்சத்தங்களுக்கும் நடுவே தன் அம்மாவைத்தேடி அலையும் குழந்தையின் பரிதவிக்கும் மன நிலைக்கும் கொண்டு சென்றுவிடுகிறது.

book%20fair%20500%201.jpg

நம்மால் போகமுடியாத இடத்திற்கெல்லாம் புத்தகம்,  அதன் சாளரத்தின் வழியே கூட்டிப்போகும். நம் கைக்கு எட்டும் தூரத்தில் எவரெஸ்ட்டை கொண்டுவந்து நிறுத்தும் , காலுக்கடியில் கங்கையை ஓடவிடும். தேயிலைத்தோட்டங்களில், ஏகாபத்தியத்தின் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் எவனோ ஒருவனுக்காக நம்மை தேம்பி தேம்பி அழவைக்கும். அடுத்தவர் மீதான அன்பையும், பாசத்தையும் கரிசனத்தையும், சகோதரத்துவத்தையும் விதைக்கும். வாசிப்பின் வாயிலாகவே சேகுவேராவுக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் சலாம் போட வைக்கும்.

அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபோது,  இங்கு எழுதப்பட்ட நூல்களை எடுத்துவரும்படி அந்நாட்டு அறிஞர்கள் கேட்டுகொண்டார்களாம். புத்தகங்களை உருவாக்காத தலைமுறை உலகை மேம்படுத்தாது. புத்தகங்களை வாசிக்க தொடங்கிய பின்புதான் மைனராக இருந்த தலைமுறை மேஜரானது. புத்தகம் புரட்சியை உண்டு பண்ணும். கோடான கோடி மனிதர்களின் இதயங்களில் பட்டாம்பூச்சிகளாக பறக்கவிடும். புத்தகம் ஒரு நல்ல நண்பன். காதல் எப்போதும் கேட்க மட்டுமே செய்யும். நட்பும் புத்தகமும் தான் கொடுக்க மட்டுமே செய்யும்.

படிக்க நேரம் ஒதுக்குவோம். புத்தகத்திற்கு பணம் ஒதுக்குவோம். அப்போதுதான் இந்த உலகம் நம்மை ஒதுக்காமல் இருக்கும்.

  • தொடங்கியவர்

12466051_967023790012982_398521905445426


தமிழின் மூத்த நடிகை..
அந்த நாளைய கனவுக்கன்னி, கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவில் கனமழை: பாலைவன ஏரி நிரம்புகிறது
-----------------------------------------------------------------------------------
ஆஸ்திரேலியாவில் பெய்த கன மழையின் காரணமாக, அங்கு உள்ள மிகப் பெரிய பாலைவன ஏரியான கடி தண்டா ஏரி நிரம்ப ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக, அங்கு தாவரங்கள் வளர ஆரம்பித்துள்ளன.

அடிலெய்ட் நகரிலிருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள உப்பு நிறைந்த பாலைவனப் பகுதியை விமானியான ட்ரெவோர் ரைட் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களில் தண்ணீர் நிறைந்திருப்பதை பார்க்க முடிந்தது.

கடந்த வாரம் அந்தப் பகுதியில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததால், ஏரிப் பகுதியைச் சுற்றிலும் மழை நீர் நிரம்பியுள்ளது.

கடி தண்டா - அயர் ஏரி எனப்படும் இந்த ஏரி ஒரு நூற்றாண்டில் சில முறை மட்டுமே நிரம்பும். அப்போது, இந்த ஏரியே ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய ஏரியாக இருக்கும்.

அந்த ஏரியச் சுற்றிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பெய்யும் மழையைப் பொறுத்தே, அந்த ஏரியின் பரப்பு அமையும்.

குயின்ஸ்லாண்டின் மத்தியப் பகுதியிலிருந்தும் தென்மேற்குப் பகுதியிலிருந்தும் ஓடும் ஆறுகளும் வரும் மாதங்களில் இந்த ஏரிக்குத் தண்ணீரைக் கொண்டுவரும்.

இந்த ஏரிக்கு வரும் பறவைகளின் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம்.

1700_10153188902580163_36123740517295848

8284_10153188902590163_69778355104250789

10665049_10153188902575163_1109496776096

10292529_10153188902645163_6016923320689

 

  • தொடங்கியவர்

பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் 'பீப்புள்ஸ் சாய்ஸ்' விருது
----------------------------------------------------------------------------------
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவில் பொதுமக்கள் வாக்களிப்பின் மூலம் வழங்கப்படும் பீப்புள்ஸ் சாய்ஸ் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

தெற்காசியாவைச் சேர்ந்த ஒரு நடிகை இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

குவாண்டிகோ தொடரில் எஃப்பிஐ ஏஜென்டாக நடித்ததற்காக அவர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.

எம்மா ராபர்ட்ஸ், ஜாமி லீ கர்டிஸ், லீ மிச்செல், மார்சியா கே ஹார்டன் ஆகிய நடிகைகளும் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

அந்த விருதுடன் தான் நிற்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாப் நட்சத்திரமான டைலர் ஸ்விஃப்ட், ஜஸ்டின் பீபர், ஜிம் பார்சோன்ஸ் ஆகியோருக்கும் இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

‪#‎PeoplesChoiceAwards‬ என்ற ட்விட்டர் ஹாஷ்டாக் இந்தியாவில் பிரபலமல்லாத ஒன்றாக இருந்தது. ஆனால், பிரியங்கா சோப்ராவின் வெற்றியையடுத்து அந்த ஹாஷ்டாக் இந்தியாவில் ட்ரெண்டிங் ஆகத் துவங்கியுள்ளது.

535135_10153190412720163_235780016117995

  • தொடங்கியவர்

12485855_967016706680357_522625197689322

திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும், திறமையான, முத்திரை பதித்த திரைப்பட இயக்குனர், நடிகர் கே.பாக்கியராஜின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

தங்கம்மா அப்பாக்குட்டி

 
Untitled_2686364f.jpg
 

இலங்கையைச் சேர்ந்த பிரபல சமூக சேவகியும் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவருமான தங்கம்மா அப்பாக்குட்டி (Thangamma Appakutty) பிறந்த தினம் இன்று (ஜனவரி 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார் (1925). மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலை யிலும், விசாலாட்சி வித்யாசாலையிலும் பயின்றார். 1946-ல் சென் சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

l பின்னர் கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழையும் சைவ சமயத்தையும் முறையாக கற்ற இவர் 1952-ல் பால பண்டிதராகத் தேர்ச்சி பெற்றார். 1958-ல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டமும் பெற்றார். 1961-ல் துர்க்கை அம்மன் ஆலயத் திருப்பணிச் சபையில் உறுப்பினரானார்.

l அதிலிருந்து இவரது சமயப் பணி தொடங்கியது. யாழ் பகுதியில் இறைவழிபாட்டை மேம்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. பண்டிதை என்று அழைக்கப்பட்டு வந்த இவர், இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்பட பல இடங்களில் சமயச் சொற்பொழிவு மூலம் சமயப் பணியைத் தொடங்கினார்.

l தமிழ்நாட்டிலும் சமயச் சொற்பொழிவாற்றியுள்ளார். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்ட பெருமைக்குரியவர். 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தை பெரிய கோயிலாக கட்டும் முனைப்பில் முக்கிய பங்காற்றினார். கோயில் நிர்வாக தனாதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், 1977-ல் ஆலய நிர்வாகப் பணியை ஏற்றார்.

l சொற்பொழிவுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஆலயப் பணிகளுக்கும், அறப்பணிகளுக்கும் செலவிட்டார். கோயிலில் ராஜகோபுரம், மண்டபங்கள் அறச்சாலைகள், நந்தவனம், தீர்த்த தடாகம் ஆகியவற்றை அமைத்ததோடு ஆலயத்தை ஒரு சமூகப்பணி நிறுவனமாகவும் உருவாக்கினார்.

l இவரது கந்தபுராண சொற்பொழிவு நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. பல அறநெறி நூல்களையும் வெளியிட்டார். ஆலய வளாகத்தில் அனாதைச் சிறுமிகளுக்காக துர்க்கா மகளிர் இல்லம் என்ற ஆதரவு இல்லம் நிறுவி சேவையாற்றி வந்தார். சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், துர்க்கா தேவி மணிமண்டபம் ஆகியவற்றைத் தொடங்கினார். அன்னபூரணி அன்னதான மண்டபமும் அமைத்தார். கல்யாண மண்டபம் ஒன்றை நிறுவி குறைந்த செலவில் திருமணங்கள் நடத்துவதற்கும் உதவினார்.

l இவரது 31 ஆண்டு ஆசிரியப் பணியின் கடைசி 12 ஆண்டுகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1976-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை  துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார்.

l யாழ் பல்கலைக்கழகம் 1998-ல் இவருக்கு கவுரவ கலாநிதிப் பட்டம் வழங்கியது. ‘சிவத்தமிழ்ச் செல்வி’, ‘திருவாசகக் கொண்டல்’, ‘செஞ்சொற் செம்மணி’, ‘சிவஞான வித்தகி’, ‘துர்க்கா புரந்தரி’ உள்ளிட்ட ஏராளமான பட்டங்களையும் பல்வேறு விருதுகள், பரிசுகள், பதக்கங்களையும் பெற்றவர்.

l 2002-ல் சிவத் தமிழ்ச் செல்வி ஆய்வு நூலகத்தைத் தொடங்கினார். அருள் ஒளி என்ற மாதாந்திர இதழையும் தொடங்கி நடத்தி வந்தார். 10-க்கும் மேற்பட்ட சமய நூல்களை எழுதியுள்ளார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று சமயச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

l அன்பு ஆசிரியராக, தலைசிறந்த சமய சொற்பொழிவாளரான இவர், ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாகப் போற்றப்பட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேல் சைவத்துக்கும் தமிழுக்கும் ஏழை, எளியவர் களுக்கும் தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி 2008-ம் ஆண்டு ஜுன் மாதம் 83-ம் வயதில் மறைந்தார்.

  • தொடங்கியவர்

10628142_1019891451403202_45443933758470

12507635_1019891521403195_21266077443622

சிங்கம் 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  • தொடங்கியவர்

துவரைக்கும் இப்படி ஒரு ஐஸ்வர்யா ராயைப் பார்த்ததே இல்லை' எனச் சிலிர்க்கிறார் பாலிவுட் இயக்குநர் ஓமங் குமார். பாகிஸ்தான் சிறையில் வாடும் கைதியான சரப்ஜித் சிங்கின் வாழ்க்கையை `சரப்ஜித்’ என்ற பெயரில் படமாக எடுக்கின்றனர். அதில் சரப்ஜித் சிங்கின் தங்கையாக நடிப்பது ஐஸ்வர்யா ராய். இதற்காக, சரப்ஜித்தின் தங்கையிடம் போனில் பேசினாராம் ஐஸ்வர்யா. அதன் பின்னரே, `இந்தப் படத்துக்கு மேக்கப் இல்லாமல் இருந்தால்தான் நன்றாக இருக்கும்' எனச் சொல்லி திகைக்கவைத்த ஐஸ், மேக்கப் இல்லாமலேயே முழு படத்திலும் நடித்திருக்கிறார். அன்டார்ட்டிக்காவுக்கு எதுக்கு ஐஸ் வாட்டர்... ஐஸுக்கு எதுக்கு மேக்கப்?

p83a.jpg


‘இன்டர்ஸ்டெல்லர்’ படத்தின் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் அடுத்தப் படம் ‘டன்கிர்க்’. இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸின் ‘டன்கிர்க்’ துறைமுகத்தில் நடந்த சண்டைதான் படத்தின் கதைக் களம். நோலனுக்கு இந்தக் களம் புதுசு. ஆனால், கனவை வைத்தே கல்லா கட்டியவராயிற்றே... போர் பற்றிய படம் என்றால் விடுவாரா? ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துவிட்டது. மூன்றாம் உலகப்போர்!

p83b.jpg


2015-ம் ஆண்டின் ஹிட் சேட்டன், நிவின் பாலி. ஹீரோவாக ‘வடக்கன் செல்ஃபி’, வில்லனாக ‘இவிடே’, லவ்வர் பாயாக ‘பிரேமம்' என நிவின் பாலியின் அத்தனை அவதாரங்களும் பாக்ஸ் ஆபீஸில் செம கலெக்‌ஷன். 2016-ம் ஆண்டில், அதிரடி போலீஸ் கெட்அப்பில் வந்து நிற்கிறார் நிவின். ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ படத்தில் நிவின், கரடுமுரடு போலீஸ். படத்தின் தயாரிப்பாளர் அவரே. நிவின் ராக்ஸ்!

p83c.jpg


`கில்லி' படத்தில் செமி ஃபைனலில் தோற்கும் விஜய் டீம், ஃபைனல் போகும் இல்லையா? அதுபோல ஹாலிவுட்டில் எந்தப் படம் வந்தாலும், எந்தக் காட்சியில் என்ன தவறு, காஸ்ட்யூம், கன்டினியூட்டியில் என்னென்ன தவறுகள் என்பதைக் கண்டுபிடிப்பதில் பிரபலமான இணையதளம் moviemistakes.com வெளியிட்டுள்ள பட்டியலில், 2015-ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் அதிகத் தவறு செய்தது `ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்-7'. மொத்தம் 41 தவறுகள். 33 தவறுகளோடு அடுத்த இடத்தில் இருப்பது `ஜூராசிக் வேர்ல்டு'. மூன்றாவதாக, 20 தவறுகள் செய்திருப்பது `தி மார்ஷியன்'. கோலிவுட் லிஸ்ட் எப்போ பாஸ் வெளிவரும்?


ஷூட்டிங், பட ரிலீஸ், புரொமோஷன்... என பிஸியாக இருந்த மகேஷ் பாபு, சினிமாவுக்கு சடன் பிரேக் போட்டு குடும்பத்துடன் ஒரு ஜாலி ட்ரிப் முடித்திருக்கிறார். சம்மர் வெக்கேஷனுக்குப் பதிலாக மகேஷ் பாபு அடித்தது ஸ்னோ வெக்கேஷன். மனைவி நம்ரதா, மகன் கௌதம் மற்றும் மகள் சித்ராவுடன் பனிச்சறுக்கு, ஐஸ் ஹாக்கி, ஸ்னோ ஷாப்பிங்... என ஜிலீர் ஜாலி ஆட்டம் முடித்து, மீண்டும் ஆக்‌ஷனுக்கு வந்துவிட்டார் ஆந்திரா சூப்பர்ஸ்டார்! குடும்பத் தலைவன்!

p83e.jpg


லேட்டஸ்ட் ட்ரெண்டில் இளசுகளின் பல்ஸ் பிடித்துப் பார்த்த ‘ஓ காதல் கண்மணி’, இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. கரண்ஜோகர் தயாரிக்க, ஆதித்யா ராய் கபூர், ஷ்ரதா கபூர் நடிக்கிறார்கள். ஏற்கெனவே மணிரத்னத்தின் `அலைபாயுதே' படத்தை இந்திக்குக் கொண்டுசென்ற ஷாஹித் அலிதான் இதையும் இயக்குகிறார்.  டி.கே கண்மணி!

p83d.jpg


சானியா மிர்ஸாவுக்கு 2015-ம் ஆண்டைவிட சிறந்த ஆண்டு வாழ்க்கையில் இருக்கவே முடியாது. சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து, விம்பிள்டன் உள்பட 10 சர்வதேசப் பட்டங்களை வென்று, மகளிர் இரட்டையர் டென்னிஸில் ‘பட்டத்து' ராணியாகிவிட்டார். இப்போது இவர்கள் இருவரையும் 2015-ம் ஆண்டின் மகளிர் இரட்டையர் பிரிவின் உலக சாம்பியன்களாக அறிவித்திருக்கிறது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு. வருடத்தின் சிறந்த வீரர்களுக்குக் கிடைக்கும் இந்தப் பெருமை, ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சுக்கும், பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸுக்கும் கிடைத்திருக்கிறது. வாடி ராசாத்தி!

p83f.jpg


பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்ட நீதிமன்றத்தில் டீக்கடை வைத்திருப்பவர் சுரிந்தர் குமார். நீதிபதிகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் ஓடி ஓடி டீ கொடுப்பதுதான் அவர் வேலை. இப்போது சுரிந்தரின் 23 வயது மகள் ஸ்ருதி, அதே நீதிமன்றத்தில் நீதிபதி. முதல் முயற்சியிலேயே பஞ்சாப் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை பாஸ்செய்த ஸ்ருதி, ஒரு வருடப் பயிற்சிக்குப் பிறகு, தீர்ப்பு எழுதத் தயார். `இனி... மகளுக்கு டீ கொண்டுபோவாரா அப்பா?' எனக் காத்திருக்கிறது நீதிமன்றம்! ஜட்ஜம்மாவுக்கு ஒரு ஸ்பெஷல் டீ!


88-வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்டது. நாமினேஷன் பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ஆஸ்கர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படங்களின் பட்டியலை வைத்து `இதுதான் ஃபைனல் லிஸ்ட்டுக்கு வரும்’ என ஆளாளுக்கு ஒரு பட்டியல் தயார்செய்கிறார்கள். அதில், ‘தி வாக்’, ‘மேட் மேக்ஸ்’, ‘இன்சைட் அவுட்’ எனப் பல படங்கள் உண்டு. ஆனால், ஆஸ்கரின் அதிகாரபூர்வ இறுதி நாமினேஷன் பட்டியல் ஜனவரி 14-ம் தேதிதான் ரிலீஸ். வி ஆர் வெயிட்டிங்!

p83g.jpg


வயதில் அரை சதம் அடித்துவிட்டார் சல்மான் கான். சென்ற வாரம் சல்லு பாயின் 50-வது பிறந்த நாள் பார்ட்டியால் அவரது பண்ணை வீடே அதிர்ந்தது. அரை கி.மீ தூரத்துக்கு முன்பே செக்யூரிட்டி டைட் செய்யப்பட, வரிசையாக பாலிவுட் ஹாட்டீஸ் வந்து இறங்கினார்கள். நடிகைகளில் தீபிகா படுகோன் மட்டும் மிஸ்ஸிங். விடுவாரா சல்மான்? ஹாலிவுட் நடிகர் வின் டீசல் படத்தில் நடிக்கவிருக்கும் தீபிகா, அவருடன் எடுத்த செல்ஃபியை நெட்டில் போட்டிருந்தார். அதை கிண்டல்செய்வதுபோல, வின் டீசலாக சல்மான் திரும்பி நிற்க, சானியாவும் ஜெனிலியாவும் சிரித்தபடி அதே போல போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் இறக்கி கலாய்த்திருக்கிறார்கள். சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க சல்லு!

p83h.jpg

p83j.jpg

விகடன்.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

920872_967019643346730_24267175532849492


ஹிந்தியின் முன்னணி நடிகை - கவர்ச்சிக் கட்டழகி
பிரபல ஹிந்தி நடிகையும் மொடல் அழகியுமான
பிபாஷா பாசுவின் பிறந்தநாள்.
Happy Birthday Bipasha Basu

  • தொடங்கியவர்

'நயன்தாரா'ன்னு சொன்னா உங்க மனசுல என்ன தெரியுது?

 

 

  • தொடங்கியவர்

1560462_967022736679754_2802659684138315


ஹொலிவூட்டின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நிக்கோலஸ் கேஜின் பிறந்தநாள் இன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.