Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

புதிய பாதையில் ஒரு பயணம்

 
paadhai_3163450f.jpg
 
 
 

வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் கடந்து நம்மை அடுத்த கட்டத்துக்கு எப்படிக் கொண்டுபோவது என்பது மிகவும் முக்கியம். அந்தக் கருத்தை மையப்படுத்தி ‘யாத்ரீகா’ என்ற பாடலை இளைஞர்கள் குழுவினர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்பாடல் யூ-டியூப் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களாக இப்பாடல் காட்சிகளின் படப்பிடிப்புக்காக இடங்களைத் தேர்வு செய்து காட்சிப்படுத்தியுள்ளார்கள். இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தின் முதல்படியாக நிகிதா என்பவர் ‘யாத்ரீகா’ இந்தப் பாடலை இயக்கியுள்ளார். இரண்டாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவரும் நிகிதா, இதற்காக ஓராண்டாகப் பணியாற்றியுள்ளார். வைஷாலி நடித்துள்ள இப்பாடல் பதிவுக்கு ஸ்ரீராம் ராகவன் ஒளிப்பதிவு செய்ய அல்-ருஃபியான் இசையமைத்துள்ளார். ஆடை வடிவமைப்புப் பணிகளை சியாஸ்ரீ மேற்கொண்டுள்ளார். தமிழில் யுகபாரதி பாடலை எழுத, ஷக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்., இதன் ராப் பகுதி லேடி கேஷாலால் பாடப்பட்டது.

இப்பாடலை இயக்கியுள்ள நிகிதாவிடம் பாடல் உருவாக்கம் குறித்துப் பேசியபோது, “முதலில் எனக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர் அல்-ருஃபியானுக்கும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். மலைப்பாதைகளில் பைக் ஓட்டுவதற்கு நிறைய சிரமப்பட்டார். முழுப் படப்பிடிப்பையும் சிக்மகளூரில் சுமார் நான்கரை நாட்களில் நடத்தி முடித்துவிட்டோம். அதிகாலை 4 மணி தொடங்கி மாலை 6 மணிவரை தினமும் படப்பிடிப்பு நடத்தினோம். -11 டிகிரி குளரில் படக் குழுவினரோடு காட்சிப்படுத்தியதை மறக்கவே முடியாது” என்று தெரிவித்தார்.

direction_3163451a.jpg

இப்பாடலைக் காட்சிப்படுத்துவதற்கான இடத்தை மட்டும் சுமார் 4 மாதங்களுக்காகத் தேடிப் பிடித்துள்ளனர். அதற்கான காரணம் குறித்து ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் ராகவனிடம் பேசியபோது, “ இதற்கு நிறைய சிரமப்பட்டுள்ளோம். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மலைப்பிரதேசங்களுக்குப் பயணித்து இறுதியாக சிக்மகளூர் இடத்தைத் தேர்வு செய்தோம். சூரியன் உதிக்கும்போது இப்பாடல் தொடங்கி, சூரியன் மறையும்போது முடியும். ஆகையால் அதற்குத் தகுந்தாற் போன்ற இடங்களைத் தேர்வுசெய்தோம். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘யாத்ரீகா’ பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மே 15: சர்வதேச குடும்ப தினம் இன்று கொண்டாடப்படுகிறது..

ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், எவருக்காகவும், குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

International Day of Families

 
Bild könnte enthalten: Text
 
 

Bild könnte enthalten: Text

இன்று சர்வதேச குடும்ப தினம்

குடும்பங்களுக்கிடையே, சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப் பொறுப்புக்கள், தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

குடும்பங்களின் சுய நம்பிக்கையை வளர்த்து துன்பங்களை சகிப்புடன் எதிர் கொண்டு புத்துணர்ச்சியோடு செயற்படத் தூண்டுவதையும் இது போன்ற மக்களின் இயல்புச் சக்திகளை மேலோங்கச் செய்வதையும் இத்தினம் வலியுறுத்துகிறது

குடும்பத்திற்காக கூடு அமைத்து அதில் தன் குஞ்சுகளை குடியேற்றி
இரை தேடிச்சென்று வாயில் கவ்வி குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிப்போம்
சந்தோசங்கள் , சிறு சிறு சண்டைகள் சாமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த
குடும்பம் ஒரு கதம்பம்

 சர்வதேச குடும்ப தின வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

இணைய வெளி: 106 வயது யூடியூப் பாட்டி

 

 
 
 
masthana_3164305f.jpg
 
 
 

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தின் குடிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தப் பாட்டி. அவருக்கு இப்போது வயது 106 என்கிறார். வயதைக் கேட்டதும் ஏதோ ஒரு மூலையில் முடங்கிக் கிடப்பார் என்று நினைத்துவிடாதீர்கள். இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் வசிப்பவர்களும்கூட அவரை அறிவார்கள். உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளார்கள். அந்த அளவுக்குப் பெயர்பெற்ற அவரது பெயர் மஸ்தானம்மா. அவரது புகழுக்குக் காரணம், அவரது சமையல்தான். அவர் கைப்பக்குவமுள்ள சமையற்காரர்.

வழக்கமான சமையல்காரர்கள் போன்றவரல்ல அவர். சமையலுக்கென எந்தப் பிரத்யேக முன்தயாரிப்பும் இன்றி மிகவும் எளிய உடையில், வயல்வெளியின் திறந்த முற்றத்தில் விறகடுப்பிலேயே சமைத்து முடித்துவிடுகிறார் அவர்.

3 லட்சம் சந்தாதாரர்கள்

அவரது சமையலைப் போலவே அவரது துணிச்சலும் தன்னம்பிக்கையும் அடுத்த தலைமுறை அறிய வேண்டியது. ‘கண்ட்ரி ஃபுட்ஸ்’ என்னும் அவரது யூடியூப் அலைவரிசையாலேயே பிரபலமானார். அந்த யூடியூப் அலைவரிசைக்கு சுமார் 3 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளார்கள். உலகின் மிக அதிக வயது கொண்ட யூடியூப் பிரபலமாக அவர் இருப்பதற்கான சாத்தியம்கூட இருக்கிறது. சிறிய கிராமத்திலிருந்த அவரை இன்று உலகம் அறியவைத்ததில் அவருடைய பேரன் லட்சுமணனுக்கும் பங்கிருக்கிறது. அவரும் அவருடைய நண்பரான நாத்தும் சேர்ந்துதான் மஸ்தானம்மாவின் சமையல் நிகழ்ச்சியை யூடியூபில் பதிவேற்றியிருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து பிரம்மச்சாரிகளுக்கான சமையல் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு யூடியூப் அலைவரிசையை நடத்திவந்திருக்கிறார்கள். இருவருமே பாட்டியின் சமையலை அடிக்கடி சுவைத்தவர்கள்தான். அதன் பாரம்பரிய ருசி ஒரு தனித்த சுவையைத் தந்திருக்கிறது. பாட்டி சமையல் செய்வதை அப்படியே ஏன் யூடியூப் வீடியோவாக்கக் கூடாது என்று நினைத்திருக்கிறார்கள். முதலில் சோதனை முயற்சியாக ஒரு வீடியோவை உருவாக்கி யூடியூபில் பதிவேற்றியுள்ளார்கள். அதற்குக் கிடைத்த எதிர்பாராத வரவேற்பு அவர்களை முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் பின்னர் மஸ்தானம்மாவின் கைப்பக்குவமான சமையல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பதிவேற்றிவருகிறார்கள்.

வயதறியா சமையல்

சமையலில் உதவுவதற்காகத் தன் பேத்தி ராகினியை மட்டுமே மஸ்தானம்மா தன்னுடன் வைத்திருக்கிறார். வெற்றுக் கைகளில் தக்காளியையும், இஞ்சியையும் அவர் உரிக்கும் அழகே தனி. தோல் சுருக்கம் மட்டுமே அவரது முதுமையை நினைவுபடுத்துமே தவிர, அவரது செயல்பாடுகளில் முதுமை முகம் காட்டுவதேயில்லை.

பதினோரு வயதில் திருமணம் செய்துகொண்ட அவரது இல்லற வாழ்வு 22 வயதில் முடிவுக்கு வந்திருக்கிறது. வாழ்வு எப்போதும்போல கரிசனமின்றி நடந்துகொண்டது. ஆனால், அவர் தனது உழைப்பைத் தவிர எதையும் நம்பியிருக்கவில்லை. ஐந்து பிள்ளைகளை வளர்த்தெடுத்திருக்கிறார். அதில் நான்கு பேர் இறந்துவிட்டனர். இழப்புகள் பற்றிய கவலையற்று அவரது வாழ்வு தொடர்கிறது.

உலகத்துக்கே பாட்டி

முட்டைக் கறி, சிக்கன் பிரியாணி, ஃபீப் பாயா என நீளும் அவரது சமையல் நிகழ்ச்சிகளில் அதிகப் பார்வையாளர்களைப் பெற்றிருப்பது வாட்டர்மெலன் சிக்கன் தயாரிப்பு வீடியோதான். சமைப்பதைப் போலவே அதைப் பிறருக்குப் பரிமாறுவதையும் விருப்பத்துடன் செய்துவருகிறார் மஸ்தானம்மா.

இன்னும் தனியாகத்தான் காலம் தள்ளுகிறார். ஆனால் உலகம் முழுவதிலும் அவருடைய வீடியோக்களைப் பார்க்கும் பலருக்கும் அவர் பாட்டியாகவே இருக்கிறார். அவரது சமையலைச் சமைத்துப் பார்த்து ருசித்த ரசிகர்களுக்கு, அவர்களுடைய பாட்டிகளை அவர் நினைவுபடுத்துகிறார். அவருடைய உணவின் சுவை நாக்கில் தங்குவதைப் போலவே அவருடைய நினைவுகள் அவர்களின் நெஞ்சில் தங்கிவிடுகின்றன.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

அர்ஜுனின் 150வது படத்தின் டீசர்..!

 

இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன் நடித்திருக்கும் படம் நிபுணன்.

Untitled_17128.png

இது அர்ஜுனின் 150வது படமாகும். இதில் பிரசன்னா, வரலெட்சுமி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிபுணன் படத்தின் டீசரை அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார். கடந்த சனிக்கிழமையன்று இந்தப் படத்தின் டீசரைப் பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். நிபுணன் படத்திற்கான பாடல்களை மதன் கார்க்கி, அருண்ராஜா காமராஜ் மற்றும் அருண் வைத்தியநாதன் எழுதியுள்ளனர்.

 

  • தொடங்கியவர்

 

பியானோ வாசித்த ரஷிய அதிபர் புதின்

  • தொடங்கியவர்

குட்டி மஹேந்திர பாகுபலி பற்றி ஒரு சுவாரஸ்யம்!

'பாகுபலி' படத்தில், குட்டி மகேந்திர பாகுபலியாக நடித்த குழந்தை நட்சத்திரம்குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

ddd_13569.png

'பாகுபலி' படத்தில், பாகுபலியை ரசித்த அனைவரும் கண்டிப்பாக மகேந்திர பாகுபலியையும் ரசித்திருப்பார்கள். 'இரண்டு பாகுபலியாகவும் நடித்தது பிரபாஸ்தானே... அப்புறம் எப்படி ரசிக்காமல் இருப்பார்கள்' என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், இரண்டு பாகுபலியைவிட ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் வாங்கியது, ரம்யா கிருஷ்ணன் கையில் படத்தின் ஆரம்பக் காட்சியில் தோன்றிய குட்டி மகேந்திர பாகுபலிதான். 

இப்போது, அந்த குட்டி மகேந்திர பாகுபலியைப் பற்றி, மலையாள செய்தி ஊடகமான  மனோரமாவில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, உண்மையாகவே குட்டி மகேந்திர பாகுபலி ஒரு பெண் குழந்தையாம். பிறந்து 18 நாளே ஆன அக்‌ஷிதா வால்ஸ்லேன்யைத் தான் பாகுபலி படத்துக்காக நடிக்க வைத்துள்ளனர். அக்‌ஷிதா நடித்த காட்சிகளை மட்டும் எடுத்து முடிக்க  ஐந்து நாள்கள் ஆனதாம்.  

 

குழந்தை அக்‌ஷிதாவின் தந்தை வால்ஸ்லேன், கேரள திரைப்படத் தயாரிப்பின் மேற்பார்வையாளர் ஆவார். அக்‌ஷிதாவுக்கு, பாகுபலி படத்தின்மூலம் ஒரு மகத்தான வாய்ப்பு கிடைத்துவிட்டதாகப் பலரும் கருதுகின்றனராம். அக்‌ஷிதாவுடன் பிரபாஸ் இருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் இன்றளவும் வைரல்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நாடாளுமன்றத்தில் 3 வயது குழந்தையுடன் ஒளிந்து விளையாடும் பிரதமர்!

 
 

தனது 3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புகழ்பெறுவது எப்படிஎன மற்றும் ஒரு முறை உலக தலைவர்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.

3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்த கனடா பிரதமர்படத்தின் காப்புரிமைJUSTIN TRUDEAU

பிரதமர் என்பவருக்கு ஒயாமல் பணிகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அன்றைய நாளில் ஆதரவாளர்களுடனான கூட்டம், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது, பல்கலைக்கழக தலைவர்களுடன் சந்திப்பு என பல பணிகள் இருந்த போதும் தன் மகனுடன் ஒளிந்து கொள்ளும் விளையாட்டை விளையாடவும் அவருக்கு நேரம் கிடைத்துள்ளது.

மூன்று வயது அட்ரீயாங் ட்ரூடோ, பிரதமர் அலுவலகத்தின் மார்பிள் பால்கனி உட்பட அனைத்து இடத்தையும் சுற்றி வந்த புகைப்படம் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு பலரையும் கவர்ந்துள்ளது.

3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்த கனடா பிரதமர்படத்தின் காப்புரிமைJUSTIN TRUDEAU

தந்தையும் மகனும் சேர்ந்து ஊடகத்தையும், அரசியல்வாதிகளையும் எதிர்கொள்ளும் புகைப்படமும் அதில் அடங்கும்.

"மிகவும் அற்புதம், உங்களுடைய தந்தையின்(ட்ரூடோவின் தந்தை முன்னாள் பிரதமர்) புகைப்படத்தையும், உங்களின் புகைப்படத்தையும் பார்த்த ஞாபகம் இருக்கிறது; அந்தளவிற்கு எனது வயதும் உள்ளது" என முகநூலில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்த கனடா பிரதமர்படத்தின் காப்புரிமைJUSTIN TRUDEAU

"இது விளம்பரத்திற்கான செயலோ இல்லையோ ட்ரூடோவை ஒரு குடும்பஸ்தர் என்று கூறி கொள்ளலாம்" என மற்றொரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

45 வயதாகும் ஜஸ்டின் ட்ரூடோ அவ்வப்போது தனது செய்கையால் இணையத்தில் புகழ்பெறுவது வழக்கம். எனவே இது அவருக்கு முதல் முறையன்று.

3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்த கனடா பிரதமர்படத்தின் காப்புரிமைJUSTIN TRUDEAU

லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ சிரிய அகதிகளுக்கு ஆதரவு வழங்கிய போதும், ஓரினச் சேர்கையாளர்களுக்கான பேரணியில் கலந்து கொண்ட போதும், தான் ஒரு பெண்ணியவாதி என்று வெளிப்படையாக தெரிவித்த போதும், தனது ஆதரவாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார்.

3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்த கனடா பிரதமர்படத்தின் காப்புரிமைJUSTIN TRUDEAU

கடந்த வாரம் சிரிய அகதி ஒருவர் தன் குழந்தைக்கு ஜஸ்டினின் பெயரை சூட்டினார். குவாண்டம் கம்பூயுட்டிங் பற்றி அவர் சட்டென அளித்த பதிலும், ட்ரம்பின் கை குலுக்கலை லாவகமாக எதிர்கொண்ட போதும் அவர் பாராட்டுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

உலகின் முதல் ஆளில்லா விமானத்தடுப்பு கட்டமைப்பு தயார்

சிறைகளுக்குள் போதைமருந்துகள் உள்ளிட்ட பல பொருட்களை சட்டவிரோதமாக கடத்துவதற்கு டுரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்துவருவது, உலக அளவில் சிறை அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சனையாக மாறிவருகிறது.

ஆனால் அதை தடுக்கக்கூடிய பாதுகாப்புக் கட்டமைப்பு ஒன்று பிரிட்டனின் சேனல் தீவின் சிறைச்சாலையில் நிறுவப்பட்டுள்ளது.

சிறைக்குள் வரும் ஆளில்லா விமானங்களை இது தடுக்கவல்லது.

பிரிட்டன் சிறைகளுக்குள் போதைமருந்து கடத்த முயலும்போது விபத்தில் சிக்கும் ஆளில்லா விமானங்கள் மட்டுமே பிடிபடுவதால் இது எவ்வளவு பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் சிறை அதிகாரிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகியுள்ளது.

வானத்தில் வரும் இந்த புதிய பிரச்சனையை தடுக்கும் வழி ஒன்றை குர்ன்சே சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆளில்லா விமானம் பறப்பதற்கான கட்டளைகளை கடத்தும் வானலைகளை இடைமறித்து ஆளில்லா விமானம் பறப்பதை தடுத்து, அதை கிளம்பிய இடத்துக்கே திருப்பி அனுப்பும் கட்டமைப்பை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.

உலகிலேயே முதல்முறையாக ஆளில்லா விமானத்தைத் தடுக்கும் வான் தடுப்பு கட்டமைப்பு பிரிட்டன் சிறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

22 லட்சம் டாலர்கள் செலவில் மேம்படுத்தப்பட்ட சிறைப்பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு அங்கமாக இது இணைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் செயற்படவிருக்கிறது.

விமான நிலையங்கள் உள்ளிட்ட வேறு இடங்களிலும் இத்தகைய பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள்.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

பிரிட்டனின் நட்சத்திர டென்னிஸ் வீரர் அண்டி மரே
இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்

Happy Birthday Andy Murray

Bild könnte enthalten: 1 Person, sitzt und Text

ஹிந்தி திரையுலகின் புகழ் பெற்ற நடிகை மாதுரி தீட்சித்
இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்


Happy Birthday Madhuri Dixit - Nene

  • தொடங்கியவர்

புதிய சாதனை: எவரெஸ்ட் சிகரத்தில் 8 தடவை ஏறிய நேபாள பெண்

எவரெஸ்ட் சிகரத்தில் எட்டு தடவை ஏறி நேபாள பெண் புதிய சாதனை படைத்தார்.

 
புதிய சாதனை: எவரெஸ்ட் சிகரத்தில் 8 தடவை ஏறிய நேபாள பெண்
 
காத்மாண்டு:

நேபாளத்தை சேர்ந்த மலை ஏறும் வீராங்கனை லாக்பா ஷெர்பா (44). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மலை ஏறுவதில் இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.

ஒரு கால கட்டத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என விரும்பினார். அவரது ஆசை 2000-ம் ஆண்டில் நிறைவேறியது. தனது முதல் குழந்தை பிறந்த 8 மாதங்களுக்கு பின் இச்சாதனையை நிகழ்த்தினார்.

201705151041171653_nepaa._L_styvpf.gif

அதன் பின்னர் அவரது மலை ஏறும் ஆர்வம் அதிகரித்தது. எனவே தொடர்ந்து எவரெஸ்ட் சிகரம் ஏறினார். 2-வது முறை எவரெஸ்ட் சிகரம் ஏறும் போது அவர் 2 மாத கர்ப்பிணி ஆக இருந்தார். அதன் பிறகு 2-வது குழந்தை பிறந்தது.

சமீபத்தில் 8-வது தடவையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக மணல் சிற்பம்!

 

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக மணல் சிற்பம் வடித்துள்ளார் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

மணல்

இந்திய முன்னாள் கப்பல் படை வீரர் குல்பூஷன் ஜாதவ்வை, 'ரா' அமைப்பின் உளவாளி என கைது செய்த பாகிஸ்தான் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதற்கு இந்தியாவின் சார்பில் கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் குல்பூஷனின் தண்டனையை ரத்து செய்யக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையும் நடத்தப்படுகிறது.

 

இதனிடையே இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி  மணல் சிற்பத்தை வடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த நாடு முழுவதும் குல்பூஷனுக்கு ஆதரவு உள்ளது. அதை வெளிப்படுத்தும் நோக்கில் தான் இந்த மணல் சிற்பத்தை வடித்துள்ளேன்' என்றார். இவர் நேற்று இதே கடற்கரையில் அன்னையர் தினத்துக்காக மணல் சிற்பம் வடித்திருந்தார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

18447512_10155876018729578_6360168157608

  • தொடங்கியவர்

61 வயது பேரழகி!

யெஸ். தலைப்புதான் மேட்டர். இதற்கு சொந்தக்காரர், லியூ ஸியாஓக்விங் (Liu Xiaoquing). சீனாவின் டாப் சினிமா நாயகி. வெயிட்... வெயிட்.. வெயிட். இவை எல்லாம் பழைய புகைப்படங்கள் அல்ல. சமீபத்தில் எடுக்கப்பட்டவை! அதனால்தான் லியூவை என்றும் பேரழகி என திரையுலகம் கொண்டாடுகிறது. ‘Frozen Beauty’ என்றும் செல்லமாக அழைக்கிறது.
4.jpg
1980களில் சீனத் திரையுலகில் முன்னணி நாயகியாக கலக்கிய லியூ, இப்போது பெரிய பிசினஸ் மேக்னட். உலகின் சிறந்த அழகியாக சீன தொலைக்காட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். பிறந்து வளர்ந்ததெல்லாம் சான்க்விங் கிராமத்தில்தான். சிறுவயதில் வயலில் கூலி வேலை பார்த்திருக்கிறார். மக்கள் ராணுவ இயக்கத்தில் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டிருக்கிறார்.

அரசியலிலும் கால் பதித்திருக்கிறார். சீன ராணுவ மேடை நாடகக் குழுவான ‘செங்குடு’வில் நடிகையாக மாறிய லியூ, தனது 30 வயதில் ‘The Great Wall of the South China Sea’ (1976) படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். ‘What a Family’, ‘The Little Flower’, ‘The Burning of the Imperial Palace’ என தொடர் வெற்றி, லியூவுக்கு க்யூ கட்டியது.
4a.jpg
1990களில் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு தொழிலில் கவனம் செலுத்தியவர், 2004ம் ஆண்டு மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். சினிமா, பிசினஸ் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்தார். ‘I did my way in 1983’ என்னும் இவரது சுயசரிதை பரவலாக கவனம் பெற்றது. ‘உலகின் டாப் 50 பணக்காரர்களில்’ இவருக்கு 45வது இடத்தை அளித்து 1999ம் ஆண்டு ‘Forbes’ பத்திரிகை இவரை கவுரவப்படுத்தியது.

இதனையடுத்து வெளியான ‘From A Movie Star to A Billionaire’ புத்தகம் டாப் செல்லராக வெளுத்து வாங்கியது. யார் கண் பட்டதோ... 2002ம் ஆண்டு யானைக்கு அடிசறுக்கியது. வரி ஏய்ப்புப் பிரச்னையில் லியூவின் நிறுவனம் சிக்கியது. கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். தவிர, 7.1 மில்லியன் அபராதம் வேறு.

விடுதலைக்குப் பின் 2004ல் மீண்டும் நடிக்கத் தொடங்கி, பிசினஸிலும் வெற்றி பெற்று, இன்று உலகப் பேரழகிகளில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். சர்ச்சை? அது இல்லாமலா..?! பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர், உடல் தோலையே மாற்றிக் கொண்டவர்... என ஏகப்பட்ட வதந்திகள். ‘‘முப்பது வயது வரை எந்த க்ரீமையும் நான் பயன்படுத்தியதில்லை. இப்போதும் எந்த சிகிச்சையும் செய்துகொள்ளவில்லை.

மற்றபடி என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஐ டோன்ட் கேர்...’’ என தோளைக் குலுக்குகிறார். இதுவரை நான்கு முறை திருமணம் செய்து கொண்டிருக்கும் லியூவின் ‘For a Few Bullets’ திரைப்படம், 2016ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீசை அதிர வைத்திருக்கிறது. இப்படத்தின் ஹீரோயின் சாட்சாத் இவர்தான்!

அழகின் ரகசியம்? அஸ்கு புஸ்கு என்கிறார். அந்த சீக்ரெட்டை மட்டும் வெளிப்படுத்தாமல் இருக்கிறார். 30 வயதிலேயே வயதாகி விட்ட தாகக் கருதும் பெண்கள் - மீண்டும் ஒருமுறை இந்தப் பக்கங்களில் அச்சாகியிருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள்!              

லியூவின் ‘For a Few Bullets’ திரைப்படம், 2016ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீசை அதிர வைத்திருக்கிறது. இப்படத்தின் ஹீரோயின் சாட்சாத் இவர்தான்!

www.kungumam.co.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 16
 

article_1431750992-first-640.gif1920: பிரான்ஸின் வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க், பாப்பரசர் 15 ஆம் பெனடிக்டினால் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

1874: அமெரிக்காவின் மில் நதி பெருக்கெடுத்ததால் 139 பேர் பலியாகினர்.

1929: முதலாவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது.

1943: போலந்தின் கெட்டோ பிராந்தியத்தில் ஜேர்மனிய படைகளுக்கு எதிராக யூதர்கள் மேற்கொண்ட கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.

1960: அமெரிக்க உளவு விமானமொன்று சோவிய யூனியன் வான் பறப்பில் பறந்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் மன்னிப்பு கோரவேண்டும் என சோவியத் யூனியன் அதிபர் நிகிட்டா குருசேவ் வலியுறுத்தினார்.

1974: யூகோஸ்லாவியாவில் ஜோசப் டிட்டோ ஆயுட்கால ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

1975: சிக்கிம் பிராந்தியம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

1975: ஜுன்கோ தாபேய் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்ணானார்.

1992: எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.

2004: 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.

2006: தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

2006: நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அப்ரைசலுக்கு உதவும் ஆறு விஷயங்கள்! #MorningMotivation

அஜித்

மே மாதம் ஊர் மட்டும் ஹீட்டா இருக்காது ஆபிஸும் தான். ஆமா பாஸ்... அப்ரைசல் நேரம். இதுக்கு தல அஜித் சொல்லுற 6 பன்ச் டயலாக் ரொம்ப முக்கியம்.

நீயா ஒப்புக்கிற வரைக்கும்
எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது!

“தோல்விங்கிற விஷயமே நம்ம வேலையில் இருக்கக் கூடாது”ங்கிற மனநிலையோடு வேலையை அணுகுங்க. அப்படியே உங்க வேலையில் தப்பு இருக்காதுனு ஆபீஸ் நம்புற அளவுக்கு உங்க திறமையை வளர்த்துக்கங்க. தப்பே பண்ணாலும் அதை ஏத்துக்கிட்டு  உடனடியா திருத்திக்காட்டுங்க. அப்புறம் என்ன பாஸ்... ஆபீஸ் உங்களை விவேகமான ஆளுனு பார்க்க ஆரம்பிச்சுடும். இனிமே யார் நினைச்சாலும் எங்கேயும் எப்பவும் உங்களை வீழ்த்த முடியாது. 

ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும்
நானா செதுக்கினது!

உங்க வேலையில் ஏதாவது ஒரு தனித்துவத்தைக் காட்ட மறக்காதீங்க. இந்த வேலை இவர் இல்லைன்னா யாராலயும் செய்ய முடியாதுங்கிற நம்பிக்கையை நிர்வாகத்துக்குக் கொடுங்க. உங்க வேலையில ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நீங்களா செதுக்கினதுங்கிற அளவுக்கு உங்க வேலை புதுமையானதா இருக்கணும். அப்படி இருந்தா, அப்ரைசல் ஒரு விஷயமே இல்லை பாஸ். 

கஷ்டம் வரும்போது
தனியா நின்னு சமாளிக்கிறவன்தான் மனுஷன்!

நிர்வாகத்துல எப்பவுமே ஏதாவது ஒரு சிக்கல் உருவாகும். அதை  தலைமைப் பொறுப்பில் இருக்கும் நபர் தன்னோட டீமுக்குக் கொண்டுபோகாம, தனி ஆளா சமாளிக்கிறதுதான் கெத்து. தன்னோட டீமை ஒழுங்கா வேலை வாங்கி, அதுல இருந்து டார்கெட்டைத் தொடுறதுதான் மாஸ். அது இல்லாம டீமுக்கும் அழுத்தத்தைக் கொண்டுபோனா டீம் ஈஸியா டவுன் ஆகிடும். இப்படி சவால்களைச் சமாளிக்கிற ஆளாக இருந்தால், ஆபீஸ் குட்புக்ல உங்க பெயர் நிச்சயம் இருக்கும்.

தமாசு... தமாசு...தெறிக்கவிடலாமா?

வேலை பார்க்கிற இடத்துல ரொம்ப சீரியஸா இருக்கணும்னு நினைக்காதீங்க. உலகத்துலேயே வேலை பார்க்க பெஸ்ட் கம்பெனின்னா அது கூகுள்தான். அங்கே நீங்க ரொம்ப ஜாலியா வேலை பார்க்க முடியும். அதனாலதான் அது நம்பர் ஒன் கம்பெனியா இருக்கு. ஸோ, ஜாலியா வேலையைப் புடிச்சு பேஷனோடு பாருங்க... அப்புறம் தெறிக்கவிடுங்க!

Make it Simple

எல்லாத்தையும் ரொம்ப கஷ்டப்பட்டு செய்யாம, ஈஸியா செய்யுங்க. நிர்வாகத்துல 80:20 தத்துவம்னு ஒண்ணு இருக்கும். அதன்படி 80 சதவிகித வேலையை 20 சதவிகித ஆள்கள் ஸ்மார்ட்டா செஞ்சு முடிக்க முடியும்னா, அந்த 20 சதவிகித ஆள்ல ஒருத்தரா இருங்க. எல்லா டார்கெட்டையும் ஈஸியா முடிச்சு தூக்கிவீசுங்க. இதெல்லாம் நடந்தா, அப்ரைசல் எல்லாம் அசால்ட் விஷயம்.

Never Ever Give Up

!

ஒரு வேலை உங்களை நம்பிக் கொடுத்தால், அதை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காதீங்க. எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர்த்து நின்னு சமாளிச்சு Never Ever Give Up-னு நிரூபிச்சுடுங்க. அப்புறம் என்ன பாஸ், அடுத்த வருஷம் நீங்களே நாலு பேருக்கு அப்ரைசல் போடலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஏன் இப்படி ஒரு பழக்கம்? : குழந்தைக்காக மட்டுமே ஆண்கள்

 

 

தன்­சா­னியா பழங்­கு­டி­யின மக்­க­ளிடம் ஓர் விசித்­தி­ர­மான பாரம்­ப­ரிய பழக்கம் இருப்­ப­தாக அறிக்­கை­கள் கூறு­கின்­றன. அது என்­ன­வெனில், பெண்கள் மற்ற பெண்­களை திரு­மணம் செய்து கொள்­வது.

women.jpg

வடக்கு தன்­சா­னி­யாவின் நியா­மோங்கோ கிரா­மத்தில் உள்ள குரிய பழங்­கு­டி­யி­னத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்­களை திரு­மணம் செய்து கொள்­வார்கள். உள்ளூர் பாரம்­ப­ரி­யத்தின் படி, இந்த பழங்­கு­டி­யின பெண்கள் மற்ற பெண்­களை திரு­மணம் செய்து கொள்ளும் முன், ஒரு ஆணை திரு­மணம் செய்து குழந்தைப் பெற்றுக் கொள்­வார்­களாம். அதுவும் குழந்­தைக்­காக மட்­டுமே ஆண்­களை திரு­மணம் செய்து கொள்­வார்­களாம். திரு­ம­ண­மான தம்­ப­திகள் இந்த பழங்­கு­டி­யின பெண்கள் மற்ற பெண்­களை திரு­மணம் செய்து கொண்ட பின், ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வரு­வார்­களாம். இந்த பழங்­கு­டி­யி­ன­ருக்கு ஓரினச் சேர்க்­கை­யா­ளர்­களைப் பற்றி தெரி­யாது. ஆகவே உட­லு­றவில் ஈடு­ப­ட­மாட்­டார்­களாம். பெண்கள் தான் தனக்­கான ஆணை தேர்ந்­தெ­டுப்­பார்கள். இந்த பழங்­கு­டி­யி­னரின் வழக்­கப்­படி, பெண்கள் தனக்­கான ஆண் துணையைத் தேர்ந்­தெ­டுப்­பார்­களாம். அதுவும் குழந்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக மட்­டுமே. குழந்தை பிறந்த பின், ஆண்­களும் தந்­தைக்­கான உரி­மையை எடுத்துக் கொள்­ளாமல் விட்டு சென்­று­வி­டு­வார்­களாம். பின் பெண்கள் மற்ற பெண்­களை திரு­மணம் செய்து, இரு­வரும் சேர்ந்து குழந்­தையை வளர்ப்­பார்­களாம். 

இந்த பழங்­கு­டி­யினர் இப்­ப­டி­யொரு பழக்­கத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு காரணம், சொத்து தன்னை விட்டு செல்­லக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவாம். ஒரு­வேளை குழந்தை இல்­லாத பெண்கள், தன் சொத்தை பாதுகாப்பதற்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறுகின்றனர். 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

மிஸ் ஈராக்!

 

ஈராக் என்றால் ஏவுகணைகள் பறக்க, துப்பாக்கிகள் புல்லட்டுகளை துப்ப ஆல்டைம் டிஷ்யூம் டிஷ்யூம் மட்டும்தான் நடக்குமா என்ன? உலகின் அத்தனை அவநம்பிக்கையையும் தன் அழகிய ஜிலுஜிலுவென்ற பளீர் புன்னகையில் துடைத்து எறிந்துவிட்டார் ஷைமா. முழுப்பெயர் மிஸ். ஷைமா காசிம் அப்துல் ரஹ்மான். புதிதாக செலக்ட் ஆகியுள்ள மிஸ். ஈராக் அழகி இவர்தான். இதமாகச் சிரிக்கும் ஷைமா, 1972ம் ஆண்டுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஈராக் அழகியும் கூட.
20.jpg
வணிக பட்டதாரியான இவர், தன் இருபதுகளிலேயே குயின் கிரீடம் சூடி திறமை காட்டியவர். ‘‘ஈராக் பெண்களுக்கு அற்புதமான வரலாறு உண்டு. அரசியலில் பணியாற்றிய பெண் அமைச்சர்கள் எங்கள் நாட்டிலும் உண்டு. கடந்த பத்தாண்டுகளில்தான் அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறைந்துவிட்டது. மீண்டும் பெண்கள் அரசியலுக்கு வருவார்கள்!’’ என்கிறார் அழகு ராணி ஷைமா.

www.kungumam.co.

  • தொடங்கியவர்

’நான் பெண்ணியவாதி அல்ல...' அரங்கையே அதிரவைத்த மிஸ் அமெரிக்காவின் பதில்!

’மிஸ் அமெரிக்கா 2017’ பட்டத்தை 25 வயது விஞ்ஞானி காரா மெக்கல்லோ (Kara McCullough) வென்றுள்ளார்.

Kara McCullough
 

‘மிஸ் அமெரிக்கா’ போட்டி நேற்று முன்தினம் அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில்  நடைபெற்றது. இந்தப் போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இறுதியில், வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கொலம்பியாவைச் சேர்ந்த காரா மெக்கல்லோ, மிஸ் அமெரிக்காவாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

Kara McCullough
 

காரா, வேதியியல் படிப்பில் பட்டம் பெற்று, அணு விஞ்ஞானியாக (Nuclear scientist) அமெரிக்க அணு ஒழுங்குமுறை ஆணையத்தில் பணியாற்றிவருகிறார். மிஸ் அமெரிக்கா போட்டியில்,  நடுவர்களின் சில கேள்விகளுக்கு காரா அளித்த பதில்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தப் போட்டி முழுவதும் தன் சுருள் தலைமுடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்யாமல் அப்படியே காட்சி அளித்தார். காராவின் அழகான சுருள் கூந்தலுக்கு ஃபேன்ஸ் குவிந்துவிட்டனர்!

Kara McCullough

 

'அமெரிக்க  நிறுவனங்கள், பணியாளர்களுக்கு வழங்கும் சுகாதார சேவை சலுகையா அல்லது அவர்களின் அடிப்படை உரிமையா?' என்று காராவிடம் நடுவர் கேள்வி எழுப்பினார். அதற்கு காரா சற்றும் யோசிக்காமல், சுகாதார சேவைகள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சேவைகள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைதான் என்றார். 'மருத்துவக் காப்பீடு என்பது பணியாளரின் அடிப்படை உரிமை' என்று நெட்டிசன்ஸ் காராவை சாடி வருகின்றனர்.

இதையடுத்து, ’நீங்கள் பெண்ணியவாதியா?’ என்று நடுவர்கள் கேட்டதற்கு, ‘நான் நிச்சயமாக பெண்ணியவாதி கிடையாது. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள். 'Feminist' என்ற வார்த்தையைக் காட்டிலும் 'Equalist' என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்கிறேன்’ என்றார். காராவின் இந்தப் பதிலுக்கு, அரங்கே அதிரும்படி கைத்தட்டல் எழுந்தது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

டேவிட் ஹ்யூஸ்

 
uop_3164987f.jpg
 
 
 

அமெரிக்க இசைக் கலைஞர், ஆராய்ச்சியாளர்

பிரிட்டனில் பிறந்த அமெரிக்க கண்டுபிடிப்பாளரும், இசைக் கலைஞருமான டேவிட் எட்வர்டு ஹ்யூஸ் (David Edward Hughes) பிறந்த தினம் இன்று (மே 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* லண்டனில் (1831) பிறந்தார். தந்தை உட்பட இவரது குடும்பத்தில் பலரும் இசைக் கலைஞர்கள். குழந்தைப் பருவத் திலேயே இசை பயின்றவர், 6 வயதிலேயே இசைக் கருவிகளை நன்கு வாசித்தார்.

* இவரைப் பல்வேறு இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று இசைக் கருவிகளை வாசிக்க வைத்தார் தந்தை. இவருக்கு 7 வயதானபோது, குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. வர்ஜீனியாவில் ஒரு பண்ணை வீட்டை வாங்கி அங்கேயே நிரந்தரமாகத் தங்கினர். இவரது குடும்பத்தினர் பல இசைக் கச்சேரிகள் நடத்தினர். இவரும் அதில் பங்கேற்று, தன் இசைத் திறமையை வெளிப்படுத்தினார்.

* பள்ளிப் படிப்பை முடித்து, பட்டம் பெற்றார். அறிவியலில், குறிப்பாக இயற்பியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இயந்திரங்கள் இவரை வெகுவாகக் கவர்ந்தன. பல்வேறு விதமான கருவிகள், மின் சாதனங்கள் இயங்கும் முறை குறித்து ஆராய்ந்தார். கென்டகி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்கை தத்துவம், இசைத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார்.

* அத்துடன், மின் பொறியியல் பரிசோதனையாளராகவும் செயல்பட்டார். இசையை நகலெடுக்கும் இயந்திரத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். எதேச்சையாக, அச்சிடும் இயந்திரத்தை வடிவமைத்தார். 1855-ல் அச்சிடும் டெலிகிராப் முறையைக் கண்டுபிடித்து, காப்புரிமை பெற்றார்.

* 1857-ல் மீண்டும் லண்டன் சென்று, கண்டுபிடிப்பு வேலைகளைத் தொடர்ந்தார். தனது கண்டுபிடிப்புகளை வர்த்தகரீதியாக விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். வயர்கள் மூலமாக ஒலியைக் கடத்துவதற்கான சோதனைகளை மேற்கொண்டார். இதற்கிடையில், அச்சிடும் டெலிகிராப் அமைப்பை உருவாக்கினார்.

* பல சிறுசிறு டெலிகிராப் நிறுவனங்கள் இணைந்து வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராப் நிறுவனமாக உருவெடுத்தன. அந்த நிறுவனம் இவரது டெலிகிராப் அமைப்பை பயன்படுத்தி வியாபாரம் செய்யத் தொடங்கியது. ஐரோப்பாவில் ஹ்யூஸ் டெலிகிராப் சிஸ்டம் உலகத் தரம்வாய்ந்த சிஸ்டமாக மாறியது.

* தொடர்ந்து பரிசோதனைகளில் ஈடுபட்டவர், 1878-ல் ஒலி விளைவு குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். ஒலிவாங்கிகள் மிக மிக மெல்லிய ஓசைகளையும் கிரகிக்கும் திறன் பெற்றிருந்தன. இதை இவர், ‘மைக்ரோபோன் விளைவு’ என்று குறிப்பிட்டார். இவரது ஆய்வுக் கட்டுரை, லண்டன் ராயல் சொசைட்டியில் வாசிக்கப்பட்டு பாராட்டுப் பெற்றது.

* மேம்பட்ட கார்பன் மைக்ரோபோனை கண்டறிந்தார். மற்ற ஆராய்ச்சியாளர்களும் இதைப் பயன்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்பதால், அதற்கு இவர் காப்புரிமை பெறவில்லை. இதன்மூலம் ரேடியோ அலைகளை உற்பத்தி செய்த முதல் நபராகப் பெருமை பெற்றார். காந்தவியல் கோட்பாட்டின் அடிப்படையில் தூண்டல் சமநிலையைக் கண்டறிந்தார்.

* டெலிகிராப், ட்யூப்ளெக்ஸ் டெலிகிராப், பிரின்டிங் டெலிகிராப் ஆகியவற்றைக் கண்டறிந்து, காப்புரிமை பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராயல் பதக்கம், ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் அரசுப் பதக்கங்கள், ஆனே விருது, தி கிராண்ட் ஆபீசர்ஸ் ஸ்டார் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள், கவுரவங்களைப் பெற்றார்.

* அடிப்படையில் இசைக் கலைஞராக இருந்தாலும் தனது அறிவியல் ஆர்வத்தாலும் திறமையாலும் ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய டேவிட் எட்வர்டு ஹ்யூஸ் 69-வது வயதில் (1900) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
 
 

Naked சைக்கிள் பிரசாரத்தில் பங்கேற்ற இந்தியப் பெண்!

 

உலகம் முழுக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், உலக வெப்பமயமாதல் குறித்தும் பல்வேறு அமைப்புகள் விதவிதமான வித்யாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. முக்கியமாக காற்று மாசுபடுதலை எதிர்த்து மட்டும் பல நிகழ்ச்சிகள், பேரணிகள் நடப்பது வழக்கம்.
30.jpg
அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ‘கார், இருசக்கர வாகனங்களால்தான் அதிகம் காற்று மாசுபடுகிறது. அவற்றைத்தவிர்த்துவிட்டு சைக்கிள், நடைபயணம் செல்லுங்கள், காற்று மாசுபடுவதைக் குறைக்க முயலுங்கள்’ என்னும் கருத்தை வலியுறுத்தி வருடா வருடம் ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடைகளின்றி சைக்கிள் பயணம் செல்வார்கள்.

கடந்த 2004ம் ஆண்டு முதல் WNBB (World Naked Bike Ride) என்ற அமைப்பு இந்தப் பேரணிகளை நடத்தி வருகிறது. சைக்கிளும் அதற்குரிய ஹெல்மெட்டும் தவிர்த்து ஆடைகளின்றி பயணிக்க வேண்டும் என்பதே இந்தப் பேரணியின் விதிமுறை. இதில் பங்கேற்கும் சிலர் பாடி ஆர்ட், பெயிண்டிங் என உடல் முழுக்க விழிப்புணர்வு பிரசாரம் சார்ந்த கற்பனைகளை வரைந்துகொள்வதும் வழக்கம்.
30a.jpg
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய வரலாறு இதுவரை ஓர் இந்திய ஆண் / பெண் கூட இதில் பங்கேற்றதே இல்லை என்பதுதான். இதைத்தான் சமீபத்தில் முறியடித்துள்ளார் ஓர் இந்தியப் பெண். இந்தியாவில் பிறந்து லண்டனில் வசிக்கும் டிவி நடிகை மினாள் ஜெயின் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டு ஆடைகளின்றி சைக்கிள் பயணம் சென்று பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளார்.

இவர் பைக்கர் மற்றும் சைக்கிள் பயண விரும்பியும் கூட. மினாளின் இந்த துணிச்சலான செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சிலர் நேரடியாக அவரைத் திட்டி சமூக வலைத்தளங்களில் எழுதியுள்ளனர். அதேநேரம் பெரும்பாலானோர் மினாளுக்கு தங்கள் ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேரணியின் முக்கிய அம்சம் என்ன தெரியுமா? சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் யாருமே மினாள் உள்ளிட்ட எந்த பெண்ணின் உடலையும் தவறான எண்ணங்களுடன் பார்க்கவில்லை என்பதுதான். சாதாரண சுற்றுச்சூழல் மாசு விழிப்புணர்வுப் பேரணியாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பெண் கலந்துகொண்டதால் பெண்கள் மேல் திணிக்கப்படும் ஆடை கட்டுப்பாடுகளையும் எதிர்த்து கேள்விகள் எழும்பத் தொடங்கியுள்ளது.

பேரணி நடத்தும் பொறுப்பாளர்களும், பங்கேற்றவர்களும் ‘மினாள் கலந்து கொண்டதால் இந்தப் பேரணி மற்றுமொரு களத்திற்குச் சென்றுள்ளது. ஆசியர்களைப் பொறுத்தவரை ஆடைகள் என்பது அவர்கள் தன்மானம் சார்ந்த விஷயம். அதையே ஒரு பெண் உதறிவிட்டு கலந்து கொண்டதுதான் இந்தப் பேரணிக்கு மேலும் மரியாதையைச் சேர்த்துள்ளது’ என்கின்றனர்.

விமர்சனங்களைத் தவிர்க்க முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட தனது அனைத்து சமூக வலைத்தள அக்கவுண்டுகளையும் இப்போதைக்கு தவிர்த்துள்ளார் மினாள்.

www.kungumam.co

  • தொடங்கியவர்

இது ஆல்கஹால் எலி!

 

இந்தியாவில் மதுவிலக்கு என்ற வார்த்தையே கேலிக்கூத்தாக மாறியுள்ள சூழலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மதுவிலக்கு சட்டப்படி கோடவுனில் வைத்திருந்த பறிமுதலான மதுபாட்டில்கள் எங்கே... என்று பீகார் போலீசாரிடம் பத்திரிகைகள் கேட்டிருக்கின்றன. இதற்கு அவர்கள் சொன்ன விளக்கத்தை கேட்டுத்தான் உலகமே வயிறு புண்ணாகும்படி சிரித்துக்கொண்டிருக்கிறது.
19.jpg
பீகாரில் மதுவிலக்கு அமலான கடந்த 13 மாதங்களில் பிடிபட்ட மதுபானங்களின் அளவு 9.15 லட்சம். இது குறித்து செய்தி வெளியிட்ட உள்ளூர் பத்திரிகை கேட்ட கேள்வியில்தான் போலீஸ்காரர்கள் கொத்தாக மாட்டினர். கோடவுனில் வைத்திருந்த பறிமுதலான மதுபாட்டில்கள் எங்கே? என்றபோது, அதனை சரக்கு வெறி கொண்ட எலிகள் குடித்துத் தீர்த்துவிட்டன என்று பதிலளித்தனர் பீகார் போலீசார். எலிகள் டைம்டேபிள் போட்டு குடித்த மதுபானங்களின் அளவு மட்டும் 9 லட்சம் லிட்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! 

 

 

சிலை கிடைத்தால் ரொக்கப்பரிசு!

 

 

‘‘திருட்டுப்போனது சேரிலுள்ள சிம்பிள் சிலைதான். ஆனால், எங்கள் கடை திரும்ப திறக்கப்படும் முன் தயவு செய்து அதை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்!’’ அமெரிக்காவின் நியூஜெர்சி நகரிலுள்ள மெக்டொனால்ட் உணவகத்தின் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை இது. ஏப்ரல் 27 அன்று இரவோடு இரவாக உணவகத்தின் முன்பிருந்த சிலையை யாரோ அபேஸ் செய்துவிட்டதுதான் மேட்டர்.
16.jpg
சரி, ரொனால்ட் சிலையில் அப்படியென்ன ஸ்பெஷல்? மெக்டொனால்ட் கடைக்கு குடும்பமாக வரும் பெற்றோர் பலரும் தங்கள் குழந்தையைப் போல ரசித்துப் பழகிய சிலையாம் அது. எனவே ‘‘நீங்கள் சிலையோடு அவர்களின் இனிமையான நினைவுகளையும் திருடிவிட்டீர்கள். ப்ளீஸ் அதனை திருப்பிக் கொடுத்து விடுங்களேன்...’’ என கடை முதலாளிகளான பிலிப் மற்றும் டைனே தம்பதிகள் சென்டிமென்டாக மிரட்டியுள்ளனர். தங்கள் பங்குக்கு போலீசாரும் 500 டாலர்கள் பரிசை அறிவித்துள்ளனர். சிலை கிடைக்குமா?

www.kungumam.co

  • தொடங்கியவர்

ஆண் நண்பரைக் காதலித்து கரம்பிடித்த பிரபல ’பிக் பேங் தியரி’ நடிகர் ஜிம்!

 

பிரபல ஆங்கில சீரியலான பிக் பேங் தியரியில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும்  ஜிம் பார்சன்ஸ் தன் ஆண் நண்பர் டாட் ஸ்பீயாக்கை திருமணம் செய்து கொண்டார்.  

bigbang star
 

ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நண்பர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் பிக் பேங் தியரி. இந்த காமெடி சீரியலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்  ஜிம் பார்சன்ஸ்தான் இன்று இணையத்தின் ஹாட் டாபிக்.   

ஜிம் பார்சன்ஸ் பதினான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்த  டாட் ஸ்பீயாக்கை நேற்று திருமணம் செய்து கொண்டார். ரிசப்ஷன், டான்ஸ் என களைகட்டியது இவர்களின் திருமணம். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த ஜிம் ‘14 ஆண்டுகளுக்கு முன்  டாட் ஸ்பீயாக்கை சந்தித்தேன். இன்று என் வாழ்வின் இனிமையான நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

big bang star jim
 

 

கடந்த 2012ம் ஆண்டு ஜிம் பார்சன்ஸ் தான் ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை ஊடகங்களில் தெரிவித்தார். அவர் மீது பல்வேறான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று தான் காதலித்த ஆண் நண்பரை உலகறிய கரம் பிடித்துள்ளார் ஜிம் பார்சன்ஸ்!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, steht und Text

பிரபல ஹொலிவூட் நடிகையும் மொடலுமான Megan Fox இன் பிறந்தநாள்..
Happy Birthday Megan Fox

Bild könnte enthalten: 1 Person, Text

பிரபல ஹொலிவூட் நடிகையும் பாடகியுமான ஜனெட் ஜக்சனின் பிறந்தநாள்.
இவர் பொப் கிங் மைக்கேல் ஜக்சனின் சகோதரியாவார்.
Happy Birthday Janet Jackson

Bild könnte enthalten: 1 Person, steht und Anzug

 
 
பிரபல ஹொலிவூட் நடிகர் பியேர்ஸ் ப்ரோஸ்னனின் பிறந்தநாள்.
ஜேம்ஸ் போண்டாக நடித்தும் புகழ் பெற்றவர் இவர்.
Happy Birthday Pierce Brosnan
  • தொடங்கியவர்

இளம் விஞ்ஞானி காரா மெக்கல்லோ அமெரிக்க அழகியாகத் தெரிவு


இளம் விஞ்ஞானி காரா மெக்கல்லோ அமெரிக்க அழகியாகத் தெரிவு (Photos)
 

பிரபஞ்ச அழகி போட்டிக்கான அழகிகளின் தெரிவு இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்க அழகியாக வேதியியல் துறையில் பட்டம் பெற்று, அமெரிக்க அணு ஒழுங்குமுறை ஆணையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் காரா மெக்கல்லோ தெரிவாகியுள்ளார்.

அமெரிக்க அழகிப் போட்டி நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. வெவ்வேறு மாநிலங்களின் சார்பில் 50 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 3 பேர் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் வாஷிங்டன் மாகாணத்தின் கொலம்பியா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான காரா மெக்கல்லோ, நியூஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்த சாவ்வி வெர்ஜ், மினசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த மெரிடித் கோல்ட் ஆவர்.

இறுதிப்போட்டியாளர்களிடம் நடுவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு காரா மெக்கல்லோ சாதூர்யமாக பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மிஸ் அமெரிக்காவாக தெரிவு செய்யப்பட்டார்.

அமெரிக்க அழகியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் காரா மெக்கல்லோ, இந்த ஆண்டு நடைபெறும் பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்பார்.

அவர் ஏற்கனவே மிஸ் வாஷிங்டன் பட்டம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

os-new-miss-usa-says-health-care-a-privilege-not-a-right-20170515

 

14948621940522

Kara-McCullough-celebrates-her-Miss-USA-title

Miss_USA_50606-ae20f

170515-zimmerman-miss-usa-tease_n4xrdv

5919bda70c2aff4921753720_o_F_v0

http://newsfirst.lk

 

  • தொடங்கியவர்

அமெரிக்க கடற்கரையில் நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா

 

அமெரிக்கா கடற்கரையில் பிரியங்கா சோப்ரா நீச்சல் உடையில் உலா வந்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.

 
201705161551449991_Priyanka-chopra-bikin
 
இந்திப்பட உலகில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ராவுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் டி.வி. தொடரும் இவருக்கு பெயரை பெற்றுத் தந்திருக்கிறது. இப்போது ஹாலிவுட்டிலும் பிரபலம் ஆகிவிட்டார்.

இந்தி, ஹாலிவுட் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள மகிழ்ச்சியில் இருக்கும் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடந்த விழாவில் அணிந்து வந்த உடை அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் பிகினி உடையில் குளியல் போட்டு இருக்கிறார்.

201705161551449991_priyan223-X._L_styvpf

நீலநிற நீச்சல் (பிகினி) உடையில் அவர் அங்கு உலா வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை விதம் விதமாக புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியிலும், ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ராவின் பிகினி உடை தோற்றம் அவர் பெற்றுள்ள வெற்றியின் கொண்டாட்டம் என்று பல ரசிகர்கள் இணையதளத்தில் வர்ணித்து இருக்கிறார்கள்.

http://cinema.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.