Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

‘உன் பெயரே தெரியாது’ நினைவுகளைத் தேடி ஒரு பயணம் #YourName

your name

ஜப்பானிலிருந்து உருவாகும் மரபுச் சார்ந்த அனிமேஷன் திரைப்படங்களை அனீமி ஃபிலிம்ஸ் (Anime films) என்பார்கள். அந்த வகையில், உலகெங்கும் வசூலில் சாதனைப் படைத்து முதலிடம் பெற்ற படம், யுவர் நேம் (Your Name). இதன் திரைக்கதை வித்தியாசமானது. வெவ்வேறு இடங்களில் மூன்று வருட இடைவெளியில் வசிக்கும் ஒரு சிறுவன் மற்றும் சிறுமியின் நினைவுகள், பரஸ்பரம் இடம் மாறுகின்றன. இதனால் ஏற்படும் பரபரப்பான, நெகிழ்ச்சியான சம்பவங்களே திரைப்படம்.

ஜப்பானின் மலையோர சிற்றூரில் வாழும் மாணவி, மிஷூவா (Mitsuha). அங்குள்ள சிறிய வாழ்க்கை அவளுக்குச் சலிப்பூட்டுகிறது. தான் ஒரு பையனாக இருந்தால் விரும்பியவாறு நகரத்துக்குச் சென்று ஊர் சுற்றலாமே என்று நினைப்பாள். தான் ஒரு பையனாகிவிட்டோம் என்கிற உணர்வும் அவளுக்குள் அவ்வப்போது உருவாகிறது. தன் உடலைத் தினமும் பரிசோதித்துக்கொள்கிறாள்.

டோக்யோ நகரத்தில் உள்ள மாணவன் டாகி (Taki). பள்ளி முடிந்ததும் ஓர் உணவகத்தில் பகுதி நேரமாகப் பணிபுரிகிறான். மிஷூவா மற்றும் டாகி ஆகிய இருவருக்குமே விநோதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. மிஷூவா சமயங்களில் தன்னை ஒரு பையனாக உணர்கிறாள். டாகியும் தன்னை ஒரு பெண்ணாக உணர்கிறான். ஆனால், இவை குறித்த நினைவுகள் அவர்களுக்கு மங்கலாகவே இருக்கின்றன. மற்றவர்கள் சொல்லித்தான் குறிப்பிட்ட சில நாட்களில் அவர்கள் விநோதமாக நடந்துகொண்டது புரிகிறது. அவர்கள் பரஸ்பரம் எழுதிவைக்கும் குறிப்புகள்மூலம் அவர்களைக் குறித்த எதிர் அடையாளங்களை உணர்கிறார்கள். டோக்கியோவில் இருக்கும் பையனின் நினைவுகள், தன் மனதில் புகுந்துகொள்வதை மிஷூவா உணர்கிறாள். அப்படித்தான் டாகியும். இந்த விநோத அனுபவம், தங்களின் அன்றாட வாழ்க்கையை அதிகம் பாதிக்காத அளவில் அவர்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

அவர்களின் மனங்கள் இடமாறும் சமயங்களில் என்னவெல்லாம் நிகழ்ந்தன என்பதை பரிமாறிக்கொள்கிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள். டாகி பணியாற்றும் அதே உணவகத்தில் பணியாற்றும் ஒரு பெண் மீது, டாகி காதல்கொள்ள மிஷூவா உதவி செய்கிறாள். அவள் டாகியின் உடம்பில் இருக்கும்போது, இந்த உதவியைச் செய்யமுடிகிறது. அதுபோல, மிஷூவாவின் பள்ளியில் அவள் புகழ்பெற டாகி உதவுகிறான்.

திடீரென மிஷூவாவிடமிருந்து டாகிக்கு எந்தவிதமான செய்தியும் வருவதில்லை. அவள் மீது அவனுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. கூடுவிட்டு கூடு பாயும் இந்த விநோதமான அனுபவம் எதனால் ஏற்படுகிறது என்கிற ஆவலும் உண்டாகிறது. எனவே, மிஷூவா இருக்கும் ஊருக்குச் சென்று அவளை நேரிலேயே சந்தித்துவிடுவது எனப் புறப்படுகிறான் டாகி. அழையா விருந்தாளியாக அவனுடைய காதலியும் நண்பனும் அவனோடு செல்கிறார்கள். தன் நினைவில் பதிந்திருந்த மங்கலான சித்திரங்கள் யோசித்து மிஷூவா வசிக்கும் பிரதேசத்தை ஓவியமாக வரைகிறான் டாகி. அதன்மூலம் அவளுடைய ஊரைக் கண்டுபிடிக்க முயல்கிறான். ஆனால், அது அத்தனை எளிதானதாக இல்லை. மிகுந்த சிரமத்துக்குப் பிறகு அந்த ஊரின் பெயரை கண்டுபிடித்துவிடுகிறான்.

ஆவலுடன் அங்குச் சென்றால், மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, வால்நட்சத்திரங்களின் தாக்குதலால் அந்த ஊர் அழிந்துபோயிருக்கிறது. அந்த ஊரில் வசித்த அனைவரும் இறந்துவிட்டார்கள் என்கிற தகவல் கிடைக்கிறது. இறந்துபோனவர்களில் மிஷூவாவும் ஒருத்தி. பிறகு என்னவெல்லாம் நிகழ்கிறது, டாகியால் மிஷூவாவை சந்திக்க முடிந்ததா என்பதை விநோத காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

your name

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கும் உருவாக்கம் முதற்கொண்டு பல்வேறு விஷயங்களில் இருக்கும் வேறுபாடுகளை இந்தத் திரைப்படத்தின் வழியே அறியலாம். காட்சியின் அசைவுகள், வண்ணங்கள் என்று பலவிதங்களில் ஜப்பானின் அனீமி திரைப்படங்கள் வேறுபடுகின்றன. ஜப்பானின் பாரம்பர்யமும் மரபும் திரைக்கதை நெடுக நினைவூட்டப்படுகிறது. குறிப்பாக, இந்தத் திரைப்படத்தில் ஜப்பானின் பழைய கிராம மரபும், நகரத்தின் பின்புலத்துக்குமான வேறுபாடும் துல்லியமான முறையில் சித்தரிக்கப்படுகிறது. கிராமம் மற்றும் சிற்றூர்களில் வாழும் இளைய மனங்களுக்கு, நகரத்தின் மீதான கவர்ச்சி தங்கியிருக்கிறது. அது சார்ந்த மனோபாவத்தின் பிரதிபலிப்பை, மிஷூவா கதாபாத்திரத்தின் மூலம் உணரமுடிகிறது. இதுபோலவே இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சந்தித்த அழிவு, அவர்களின் ஆழ்மனங்களில் பதிந்து அவர்களது கலைகளில் வெளிப்படுவதையும் உணரமுடிகிறது.

டாகியின் உடம்பில் இருப்பதன்மூலம் தன் ஊருக்கு ஏற்படவிருக்கும் அழிவை முன்கூட்டியே உணரும் மிஷூவா, அதைத் தடுப்பதற்காக செய்யும் முயற்சிகள் கவர்கின்றன. காலையும் மாலையும் சந்திக்கும் அந்தி நேரத்தில் மட்டுமே மிஷூவாவும் டாகியும் தங்களின் அசலான நினைவுகளோடு உரையாட முடியும். அந்தச் சொற்ப நேரத்தில் தன் பெயருக்குப் பதிலாக 'உன்னை விரும்புகிறேன்' என்று டாகி எழுதும் காட்சி நெகிழ்வானது. மிஷூவா வசிக்கும் சிற்றூரின் பின்புலம், மிக அழகியலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வானின் வழியாக ஏற்படும் விபரீதங்கள், மிஷூவாவின் தலையில் கட்டியிருக்கும் கயிறு, தொப்புள்கொடி உறவாக டாகியுடன் இணைவது போன்ற காட்சிகள் அற்புதம். இதில் வரும் பாடல்களின் இசை, அந்நியமாக ஒலிக்காமல் இந்திய மனங்களுக்கு நெருக்கமாக அமைந்திருப்பது ஆச்சர்யம்.

தாம் எழுதிய நாவலைத் தானே படமாக்கியுள்ள இயக்குநர் Makoto Shinkai அற்புதமான பணியைச் செய்துள்ளார். இயக்குநர், எழுத்தாளர், அனிமேட்டர், வரைகலை கலைஞர் எனப் பல பரிமாணங்களால் ஜொலிக்கும் கலைஞர் இவர். வெறுமனே பார்த்து ரசிக்கும் கொண்டாட்டமான அனிமேஷன் திரைப்படமாக மட்டுமில்லாமல், யோசிக்கவைக்கும் உணர்வுபூர்வமான படைப்பாகவும் உருவாகியிருக்கும் 'Your Name' திரைப்படத்தைக் குழந்தைகளுடன் கண்டுகளிக்கலாம்.

 

 

 

http://www.vikatan.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அதிக பேர் பார்த்த யூடியூப் வீடியோ இதுதான்..! - தகர்ந்த கங்னம் ஸ்டைலின் சாதனை

 
 

யூ டியூப்

2012-ம் ஆண்டு வெளியான `கங்னம் ஸ்டைல்' பாடல் உலகம் முழுவதுமுள்ள பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. விளைவு, யூடியூபில் இந்தப் பாடலை இதுவரை 289 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுகளிக்க, யூடியூப்லேயே அதிகமான பார்வைகளைக் கொண்ட வீடியோ எனும் சாதனையைப் பெற்றது. தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. விஸ் கலிஃபா மற்றும் சார்லி புத் இணைந்து பாடிய 'சீ யு அகெய்ன்' (See You Again) பாடல் இதுவரை 290 கோடி பார்வைகளைத் தொட்டு, யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. 2015-ம் ஆண்டு வெளியான `ஃப்யூரியஸ் 7' படத்தின் சவுண்ட் டிராக்காக இடம்பெற்ற இந்தப் பாடல், மறைந்த நடிகர் பால் வாக்கருக்கு இசை அஞ்சலியாகவும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சாதனையை முறியடிக்க லூயில் ஃபான்ஸியில் 'டெஸ்பாஸிடோ', ஜஸ்டின் பெய்பரின் 'ஸாரி' மற்றும் மார்க் ரான்ஸனின் 'அப்டவுன் ஃபன்க்' ஆகிய பாடல்கள் பின்னாலேயே வெயிட்டிங்.

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜூலை 12: நா.முத்துக்குமார் - பிறந்தநாள் பொக்கிஷ பகிர்வு... ***எக்காலத்திற்குமான கலைஞன்!***

மழை - கவிஞர்களின் தலைக்காவிரி. மண் சுமந்த துளிகளை விட மொழி சுமந்த துளிகள் அதிகம். ஆனால், 'மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட அழகு' என வெயிலின் அழகைப் பேசியதற்கு... அண்ணா நா.மு... உமக்கு நன்றி. வெயில் எங்கள் அடையாளம், புழுதி எங்கள் சட்டை. தட்டானைப் பிடிப்பதும், நிலவைத் துரத்தி ஜன்னல் கம்பிகளுக்குள் அடைப்பதும்தான் எங்களின் தேசிய விளையாட்டு. இந்தக் குழந்தைப் பருவ நினைவுகளை தேஜா வூவாய் ஊட்டியதற்கு நன்றி.

வெயில் மட்டுமல்ல... இருளும் உன்னால் பாடப்பெற்று பிராப்தியடைந்தது. வெறுமைக்கும் அமானுஷ்யத்திற்கும் பெயர்போன இருள் மீது, 'இருளைப் பார்த்து மிரளாதே, இதயம் வெந்து துவளாதே, இரவுகள் மட்டும் இல்லையென்றால் நிலவின் அழகு தெரியாதே' என பாசிட்டிவ் வெளிச்சம் பாய்ச்சியதற்கு நன்றி.

'தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்...தோழியே இரண்டுமாய் நானிருப்பேன்' - எங்களுக்காக வாழும் தேவதைகளுக்கு நாங்கள் தரும் உறுதிமொழி இது. 'என் தந்தை, தோழன் ஒன்றான ஆணை நான் கண்டுகொண்டேன்' - தேவதைகள் எங்களுக்காற்றும் மறுமொழி இது. 'நீ என்பதே நான்தானடி, நான் என்பதே நாம்தானடி' என இதயங்கள் இணைவதைக் கொண்டாட காதல் தேசத்தில் வேறு வார்த்தைகள் ஏது?

எல்லோருக்குள்ளும் ஒரு தொலைந்து போன காதல் இருக்கிறது. மறுமுனை வெளிச்சத்தை இலக்காக வைத்து இருளடர்ந்த கணவாயின் வழியே கை கோர்த்துச் செல்லத் துடிக்கும் முடிவற்ற பயணம், தீராக்காதலில் திளைத்துச் செழிக்கும் முடிவிலா உரையாடல் என அந்தக் காதலில்தான் எத்தனை எத்தனை ஆசைகள்? அந்த தடயங்களை கண்கள் இன்னும் தேடித் திரியத்தான் செய்கின்றன. இந்த அத்தனை தவிப்பையும் 'பறவையே எங்கு இருக்கிறாய்' என ஒற்றைப்பாவில் புதைத்துத் தந்தமைக்கு நன்றி.

நாஸ்டால்ஜியா - நம் பின்மூளையில் பதிவான டைரிக்குறிப்புகள். 'அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் நமது கதையை காலமும் சொல்லும்' என காதலையும், 'வகுப்பின் மேஜையிலும், நடந்த பாதையிலும் நமது சிரிப்பொலிகள் இருக்குமே' என நட்பையும் நினைத்துப் பார்க்க வரிகள் தந்தமைக்கு நன்றி.

தங்கையாய், காதலியாய், தாயுமானவளாய் தோழி அமையப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். முடிவிலி அன்பும் பூஜ்ஜிய காமமுமாய் வகைப்படுத்த முடியாத உறவு அது. இதென்ன ரகம் என குழம்பித் தவித்த எங்களுக்கு, 'காதல் இல்லை... இது காமம் இல்லை... இந்த உறவிற்கு உலகத்தில் பெயரே இல்லை' என விளக்கமளித்ததற்கு நன்றி.

கடைசியாய் எப்போது அவர் உடற்சூட்டை உணர்ந்தோம்? கன்னச்சுவை அறிந்தோம்? இந்த ஷோக்கிற்கும் டீக்கிற்கும் பின்னால் இருப்பது வியர்வை வாசமும் அழுக்கும் படிந்த தந்தையின் கரங்கள்தான் எனத் தெரிந்த நமக்கு, காலம் அவருக்கும் நமக்கும் இடையில் எழுப்பிய கண்ணுக்குப் புலப்படாத சுவரை தகர்க்கத்தான் வழி தெரியவில்லை. 'வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்...தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்?' என உள்ளே கிடந்து அழுத்தியதை போட்டுடைத்ததற்கு நன்றி. லவ் யூ அப்பா!

தாலாட்டும் தாய்மையும் பெண்களுக்கே என்பதை மாற்றி தகப்பன்சாமிகளுக்கும் 'ஆராரிரோ' பாடக் கற்றுக்கொடுத்தன உம் வரிகள். 'இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம், கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே' - உயிரணுவில் விளைந்து உலகில் அடியெடுத்து வைக்கும் பிஞ்சுப்பூக்களுக்கு சமர்ப்பணம்.

போரால் பேச முடியாத உலக அரசியலை ஒற்றைப்பாடல் பேசி விடக்கூடும். 'மனிதன் மனிதன் இல்லை உடைகள் என்று மாறிப் போனதா? ஆள் பாதி ஆடை பாதி யார் சொன்னது... அவனால்தான் நம் மானம் காத்தாடி போல பறந்தோடுது' என சாமானிய அரசியலை பொட்டில் அடித்துச் சொல்லின உம் வரிகள். கபாலிக்கும் முன்பாய் 'ஆடை அரசியல்' பேசிய உன் பேனாவிற்கு முத்தங்கள்.

'ஜோக்கர் என்பதால் ஜீரோ இல்லை, சீட்டுக்கட்டிலே நீதான் ஹீரோ!' - இந்த ஒற்றை வரி அளிக்கும் கிளர்ச்சியை எத்தனை தன்னம்பிக்கை நூல்களாலும் அளிக்க முடியாது.

'அவனாக இருந்தாலும் இவனாக இருந்தாலும் எவனாக இருந்தாலும் இறுதி என்ன?
பிச்சைதான் எடுத்தாலும் பேரரசன் ஆனாலும் புழுவிற்கு இரையாவான் வேறே என்ன?'

- நரை கூடி, மூன்றாம் காலின் உதவியும் தோற்றுப் போய் நான்கு தோள்களின் வழியே பயணப்படும் கணத்திற்கு கொஞ்சம் முன்பாக நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படும் வரிகள் இவை. இப்படியாக எம் இறுதி வார்த்தைகளை வார்த்தமைக்கு நன்றி.

இப்படி எல்லாக் காலத்திற்குமான வரிகளை வள்ளலாய் வழங்கிய நல்ல கவிஞன் வேண்டுமென்று அந்த மரணமும் நினைக்கிறது போலும். ஓய்வெடுங்கள் கவிஞரே... உங்கள் உதிரத்தில் உதித்த வார்த்தைகளினால் உதிரும் கண்ணீர்த்துளிகளில் என்றென்றும் வாழ்வீர்கள் நீங்கள்!

 
Bild könnte enthalten: 1 Person, sitzt, Bart und Innenbereich
  • தொடங்கியவர்

தாலி ஆணுக்கும் வேலி! – புதுவை அருகே 'புதுமைத் திருமணம்'

கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த இந்த திருமணத்திற்கான மேடையை சுற்றி அனைத்திலும் இயற்கை சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

சாதி அடையாளம் இல்லாமல், தமிழ் மற்றும் தமிழர்களின் கலாசார அடையாளங்களுடன் மணமகன் செ.ஆ.திருஞான சம்பந்தனுக்கும், மணமகள் க.புவனேஸ்வரிக்கும் இத்திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு தாலி மற்றும் மெட்டி அணிவது போன்ற சம்பிரதாயங்கள் மிக முக்கியமானவை என இருவரது குடும்பத்து பெரியவர்களும் கூறிவிட்டனர். அதனால் சாதி, மத அடையாளங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட 'சமத்துவ' தாலியை அணிய ஒப்புக்கொண்டோம். அதே சமயம் மணப்பெண்ணிற்கு மட்டுமே அணியும் பொதுவான வழக்கத்தை மாற்றி, சமத்துவமாக இருவருமே அணிந்துக்கொண்டோம் என்கிறார் மணமகன்திருஞான சம்பந்தன்.

அனைத்திலும் பெண்ணிற்கு முன்னுரிமை வழங்கப்பட்ட இந்த விழாவில், 'பறை' இசைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

 

  • தொடங்கியவர்

குப்பையில் இருந்து புதிய கார்... டெஸ்லாவுக்கே சவால் விடும் அமெரிக்கர்!

வீட்டிலிருக்கும் குப்பைத் தொட்டிகளில் காய்கறி தோல்களிலிருந்து, பிளாஸ்டிக் குப்பைகள் வரை கொட்டுகிறோம்.  அதிகபட்சம் அந்தக் குப்பைகளை தெருவிற்கு வரும் வண்டியில் போடுவதோடு நம் கடமை முடிந்துவிட்டதாக இருப்போம். ஆனால், அந்தக் குப்பைகள் எங்கு போகிறது, என்ன ஆகிறது என்று யோசித்ததுண்டா? அதிலும் நாம் வீட்டிலிருந்து தூக்கி எறியும் பழைய பேட்டரிகள், டிவி ரிமோட்கள், செல்போன்கள், டார்ச் லைட்... என எத்தனையோ எலக்ட்ரானிக் பொருட்கள் என்ன ஆகின்றன?, எங்கு போகின்றன ?. இந்த "இ - வேஸ்ட்கள்" எனப்படும் எலக்ட்ரானிக் குப்பைகள் இன்று மொத்த உலகிற்குமே பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இது குறித்து பலரும் பல விழிப்புஉணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், முழுக்க முழுக்க " இ - வேஸ்ட்களை" கொண்டு எலக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் லண்ட்க்ரென். 

 

குப்பைகள் கொண்டு உருவாக்கப்பட்ட கார்

அமெரிக்காவில் " மறு சுழற்சி"பொருட்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் எரிக். பொருட்களின் மறு சுழற்சியும், மறு உபயோகமும் தான் இந்த உலகில் சேரும் குப்பைகளைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்பதில் திடமான நம்பிக்கையைக் கொண்டவர்.  இவர் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஒரு " எலக்ட்ரிக் காரை " உருவாக்கியுள்ளார். " ஹைப்ரிட் மறுசுழற்சி " எனும் புது சொல்பதத்தை அறிமுகப்படுத்தி, அதன் அடிப்படையிலேயே இந்தக் காரை வடிவமைத்ததாகச் சொல்கிறார்.  நம் வீட்டில் ஒரு டிவி ரிமோட் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்கிறோம்? அதை அப்படியே தூக்கி குப்பையில் போட்டுவிடுகிறோம். ஆனால், அந்த ரிமோட்டில் ஏதோ ஒரு பாகம் பழுதாகியிருக்கலாம். மற்ற பல பாகங்கள் நன்றாக வேலை செய்யும் நிலையில் தான் இருக்கும். அப்படியான பாகங்களை எடுத்து மறு சுழற்சி செய்து, மறு உபயோகம் பண்ணுவதைத் தான் " ஹைப்ரிட் மறுசுழற்சி " என்கிறார் எரிக்.

ஃபீனிக்ஸ் மறுசுழற்சி கார்

குப்பைகளிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் தன் காருக்கு " ஃபீனிக்ஸ்" எனப் பெயரிட்டுள்ளார் எரிக். இந்தக் காரின் 88 % பாகங்கள் முழுக்கவே குப்பைகளிலிருந்து எடுக்கப்பட்டவை தான். முதலில் ஒரு குப்பைக் கிடங்கிற்கு சென்றார் எரிக். அங்கு அவருக்குக் கிடைத்தது 1977 E39 528i BMW காரின் சேஸி. அதோடு சேர்த்து அங்கு சில மோட்டார்களும், இன்னும் சில பாகங்களும் கிடைத்தன. மொத்தமாக இந்திய ரூபாய் மூன்றாயிரம் மதிப்பில் குப்பைகளை அள்ளி வந்தார். காய்லாங்கடையில் நசுக்குவதற்கு தயாராக இருந்த ஒரு ஆக்ஸிலை வாங்கி வந்தார். வீட்டு டிவி கனெக்‌ஷனுக்கு வரும் பழைய கேபிள் பெட்டியிலிருந்து 18,650 சிறு பேட்டரிகளை சேமித்தார். பின்னர், சில பழைய லேப்டாப்களிலிருந்தும் பேட்டரிகளை எடுத்துக் கொண்டார். இப்படி பல பேட்டரிகளைச் சேர்த்து, 130 கிலோவாட் பேட்டரி சக்தியை உருவாக்கினார். காரின் உள்ளே இரண்டு பேர் பயணிக்கும் வகையில் சீட்களை அமைத்தார்.  AC - 51 மோட்டாரைப் பொருத்தினார். இப்படியாக, தன்னைச் சுற்றியிருந்த குப்பைக் கிடங்குகளிருந்து மட்டுமே தனக்கு தேவையான பொருட்களை வைத்து காரை உருவாக்கினார்.

எரிக் - ஃபீனிக்ஸ் கார் கண்டுபிடிப்பாளர்

"ஃபீனிக்ஸ்" எனப்படும் இந்தக் காரை உருவாக்க எரிக்கிற்குத் தேவைப்பட்ட நாட்கள் வெறும் 35. இந்தக் காரை உருவாக்க செலவான மொத்த தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 8,40,000 ( எட்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ) . குறைந்த செலவில், மறு சுழற்சிப் பொருட்களை உபயோகப்படுத்தி ஒரு காரை உருவாக்கியது மட்டும் எரிக்கின் சாதனை கிடையாது. காரின் மைலேஜ் அளவில் உலகப்புகழ் பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் கார்களை விட அதிக மைலேஜ் கொடுத்து உலக சாதனையைப் படைத்துள்ளது எரிக்கின் ஃபீனிக்ஸ்.
எரிக் சொந்தமாக  அமெரிக்காவைச் சேர்ந்த சிறு கம்பெனிகளின் இரண்டு எலக்ட்ரிக் கார்களை வைத்திருக்கிறார். அவை ஒரு சார்ஜிற்கு 140கிமீ தூரம் மட்டுமே போகும். அதே போல், இந்திய ரூபாய் மதிப்பில் 95 லட்சம் ரூபாய் டெஸ்லா காரையும் வைத்துள்ளார். அது 400கிமீ வரை மைலேஜ் தருகிறது. ஆனால், எரிக்கின் "ஃபீனிக்ஸ்" 550கிமீ மைலேஜ் கொடுத்து உலக சாதனை படைத்துள்ளது. 

டெஸ்லாவை தோற்கடித்த கார்

இனி எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்பதை உணர்ந்து, பல உலக நாடுகளும் அதை நோக்கிய முயற்சியில் இறங்கியிருக்கின்றன. இந்த சமயத்தில் எரிக்கின் இந்தக் கண்டுபிடிப்பு உலக கவனத்தை அவர் பக்கம் திருப்பியுள்ளது. டெஸ்லாவுக்குப் போட்டியாக கார் நிறுவனத்தை தொடங்குவீர்களா என்ற கேள்வி எரிக்கின் முன் வைக்கப்பட்ட போது...

" நான் யாருக்கும் போட்டியாக கார் நிறுவனத்தைத் தொடங்கப் போவதில்லை. என்னுடைய இந்த முயற்சி முழுக்கவே, ' ஹைப்ரிட் மறுசுழற்சி' திட்டத்தை உலக மக்களிடையே பரவலாக கொண்டு செல்ல வேண்டுமென்பது தான். நான் டெஸ்லாவின் அபிமானி. எலன் மஸ்கின் ரசிகன். ஆனால், எலன் மஸ்கிற்கு ஒரு வேண்டுகோள், தன் நிறுவனத்திலும் அவர் ஹைப்ரிட் மறுசுழற்சித் திட்டத்தை பின்பற்ற வேண்டும்..." 

டெஸ்லாவை தோற்கடித்த ஃபீனிக்ஸ் கார்

 

பேரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் பூமியைக் காக்க, இது போன்ற முயற்சிகள் இன்னும், இன்னும் அவசியமாகின்றன. அதைப் பரவலாக எல்லா மக்களும் உபயோகப்படுத்த வேண்டியது அத்தியாவசமாகின்றன. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்

 

பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இங்கே பெயரின் முதல் எழுத்து A to Z வரை உள்ளவரின் குணநலன்களை பார்க்கலாம்.

 
 
 
 
பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்
 
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது. பெயரில் என்ன உள்ளது என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் பெயரானது வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

ஒருவரின் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே அவர்களின் பெயர் தான். சில நேரங்களில் அவரவர்களின் விதியை பிரதிபலிக்கும் விதமாகவும் பெயர் உள்ளது. அப்படிப்பட்ட பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். பெயரின் முதல் எழுத்து A to Z:

A:A உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.
 
B:B உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

C:C உங்கள் பெயர் எழுத்து C-யில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.

D:D உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.

201707121545270588_a-to-z._L_styvpf.gif

E:E உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.

F: உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.

G:  நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

H: H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.

I: நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.

J: J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

201707121545270588_a-to-z._L_styvpf.gif

K:K ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.

L:L வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில் அமையும்.

M: M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

N: N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

O: O என்ற எழுத்து அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.

P: உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.

201707121545270588_a-to-z._L_styvpf.gif

Q: Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்

R: உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.

S: S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.

T: எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

U: அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும். ஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில் பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.

201707121545270588_12a-to-z1._L_styvpf.g

V: V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.

W: W என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.

X: சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.

Y: சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.

Z: Z இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

சத்தோஷி ஓமுரா

uio_3185132f.jpg
 
 
 

நோபல் பெற்ற ஜப்பான் உயிர் வேதியியலாளர்

ஜப்பானைச் சேர்ந்த உயிர் வேதியியலாளரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சத்தோஷி ஓமுரா (Satoshi Omura) பிறந்த தினம் இன்று (ஜூலை 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜப்பானில் நிராசாக்கி மாநிலத்தில் யாமனாஷி என்ற பகுதியில் பிறந்தவர் (1935). பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, யாமனாஷி பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலில் பட்டம் பெற்றார். அப்போது மண்ணிலிருந்து தோன் றும் நுண்ணுயிரிகளின் உயிரியக் கங்கள் உள்ளிட்ட கரிம உயிரி (Bioorganic) வேதியியல் களத்தில் விரிவான ஆய்வுகளை மேற்கொண் டார்.

* 1961-ல் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (டி.யு.எஸ்.) அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மருந்து அறிவியல் மற்றும் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

* கிடாஸாடோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். 1990-ல் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் நுண்ணுயிரிகள் உற்பத்தி செய்யும் கரிம சேர்மங்களில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். பயனுள்ள நுண்ணுயிரிகளைப் பிரித்தெடுக்கும் மிக அசலான முறையைக் கண்டறிந்தார்.

* இந்த முறையைப் பயன்படுத்தி, கிடாடோஸ்போரியா, லாங்கிஸ்போரா மற்றும் அர்போபோமா உள்ளிட்ட 13 புதிய இனங்களையும், 42 புதிய உயிரினங்களையும் கண்டறிந்தார். இவரும் இவரது அணியினரும் இயற்கையாக உருவாகும் நுண்ணுயிரிகளில் இருந்து உற்பத்தியாகும் பல்வேறு பயனுள்ள மருந்துகளைக் கண்டறிந்து மேம்படுத்தினர்.

* உருளைப் புழுக்களால் உண்டாகும் ஆற்றுக் கண் பார்வையிழப்பு மற்றும் பிற ஒட்டுண்ணி நோய்கள் உள்ளிட்ட குறைபாடுகளைக் குணப்படுத்தும் புதுமையான சிகிச்சை முறையையும், மருந்தும் கண்டறிந்ததற்காக வில்லியம் சி.காம்ப்பல் மற்றும் டு யூயூ ஆகியோருடன் இணைந்து இவருக்கு 2015-ம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கலியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* சுமார் 50 ஆண்டுகால தனது ஆராய்ச்சிகளில் மண் மாதிரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து ஏறக்குறைய 500 புதிய மருந்து கலவைகளை இவர் கண்டறிந்துள்ளார்.

* அக்மோனியம் கேர்லுல்ஸ் என்ற பூஞ்சை உற்பத்தி செய்யும் செருலினின் என்ற ஆன்ட்டிபயாடிக்கை இவர் பிரித்தெடுத்தார். இது கொழுப்பு உயிர் வேதிப்பொருள் சேர்க்கைக்கான (biosynthesis) மிக முக்கியமான தடுப்பானாக மாறியது. செருலினின் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொழுப்பு அமில உற்பத்தி (lipid) தடுப்பானாக மாறியது.

* மேலும் இவரும் இவரது சகாக்களும் நுண்ணுயிர் தோற்றத் தின் அல்கலாய்ட்களை (alkaloids) ஆராய்ந்ததன் விளை வாக, ஸ்டோரஸ்போரின் (staurosporine) கண்டறிந்து, பிரித் தெடுக்கப்பட்டது. இந்த ஸ்டோரஸ்போரினின் கட்டமைப்பு மற்றும் உயிரியக்க (bioactivity) அடிப்படை, பல புதிய புற்றுநோய் எதிர்ப்பு பொருள்களை மேம்படுத்த வழிகோலியது.

* ‘மேக்ரோலைட் ஆன்ட்டிபயாடிக்ஸ்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதி யுள்ளார். யாமனாஷி பல்கலைக்கழகத்தில் ஜப்பான் மருந்துக் கழகத் தின் விருது, ஜப்பான் அகாடமி விருது, ஃப்யுஜிவரா பரிசு, ராபர்ட் கோச் தங்கப்பதக்கம், ஜப்பான் மற்றும் அமெரிக்க வேதியியல் கழகங்களின் பரிசு, அரிமா விருது, கனடா காரின்டர் குளோபல் ஹெல்த் விருது உள்ளிட்ட ஏராளமான பரிசுகள், விருதுகளைப் பெற்றுள்ளார்.

* கிடாஸாடோ பல்கலைக்கழகத்தில் இயற்கைப் பொருள்களி லிருந்து மருந்து கண்டறிதல் ஆராய்ச்சிகளின் விசேஷ ஒருங்கிணைப்பாளராகவும் கவுரவப் பேராசிரியராகவும் பணியாற்றி வருபவரும் உயிரி கரிம வேதியியல் துறையின் சர்வதேச அளவில் நிபுணராகக் கருதப்படுபவருமான சத்தோஷி ஓமுரா இன்று 82-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

தொழிலில் ஆணென்ன பெண்ணென்ன?
---------------------------------------------------------------------
ஆறு பிள்ளைகளைக் காப்பாற்ற அரிவாள் செய்கிறார் இலங்கையிலுள்ள ஷோபாவதி

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 12
 

article_1468298218-Neptune-spl.jpg1453: இங்கிலாந்து மன்னர் 8 ஆம் ஹென்ரி, தனது ஆறாவது மனைவி கத்தரினை திருமணம் செய்தார்.

1806: பதினாறு ஜேர்மன் மாநிலங்கள், புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி, ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.

1918: ஜப்பானிய யுத்த கப்பலான 'கவாச்சி' மூழ்கியதால்  621பேர் பலி.

1943: உலக வரலாற்றில் இராணுவத் தாங்கிகளுக்கிடையிலான மிகப்பெரிய யுத்தம், சோவியத் மற்றும் ஜேர்மன் படைகளுக்கிடையில் ரஷ்யாவின் புரோகொரோவா நகரத்தில் இடம்பெற்றது. இச்சமரில் சுமார் 500 தாங்கிகள் சேதமடைந்தன.

1961: இந்தியாவின் புனே நகரில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.

2006: தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய உமர் தம்பி இறப்பு.

2011: நெப்டியூன் கிரகம் 23.09.1846ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அது, முதல் தடவையாக சூரியனை வலம்வந்து முடித்தது.

2012: சிரியாவில் துராய்மீசா கிராமத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் 250பேர் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘காப்பாற்றுபவன் மகான் ஆகின்றான்’
 

image_c30825aec0.jpgஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போதும், அவன் மறைந்துவிட்டபோதும், அவனுக்குப் பலபிறவிகள் உண்டு. இதைச் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் இது நூற்றுக்குநூறு சதவீதம் உண்மைதான்.  

உயிருடன் வாழும் ஒருவன், இரத்த தானம், சிறுநீரக தானம் உட்பட, தானம் செய்வதனால், அவன் மூலம் பல உயிர்கள் வாழும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. இந்த அரிய உதவிகள் ஒருவன் மூலம், உயிர் பெறும்; பல ஆத்மாக்கள் புதிய ஜனனம் பெறுகின்றன. 

அதேசமயம் உயிர் துறந்த ஒருவரின் உடல் உறுப்புத் தானங்களினால் பல பல உயிர்களின் இழப்புகள் தவிர்க்கப்படுகின்றன. இதுவும் பல ஜனனங்களை உலகத்துக்கு அளிக்கின்றது. மனிதன் உயிர்களைக் காப்பாற்றுபவன் மகான் ஆகின்றான். 

  • தொடங்கியவர்

அலுவலகத்தில் நீங்கள் தோனி போல ஓல்டு ஒயினா? #MorningMotivation

தோனி

மேற்கிந்திய தீவுகளுடனான ஒருநாள் போட்டித் தொடரில் ஆட்டநாயகன் விருது வாங்கிய தோனி, பரிசளிப்பின்போது தன்னை ஓல்டு ஒயின் என கூறினார். அவர் கூறியதற்கு அர்த்தம், அணியில் அதிகப் போட்டிகளில் ஆடி அனுபவம் அதிகரிக்கும்போது ஆட்டம் மெருகேறுகிறது அதனால் தன்னை ஓல்டு ஒயின் எனக் கூறினார் தோனி. இதைத்தான் அனைவரும் அலுவலகத்தில் பின்பற்ற வேண்டும் என்று நிர்வாகம் நினைக்கும். ஓல்டு ஒயினாக அனுபவத்தை வெளிப்படுத்தி நிறுவனத்தையும், உங்களையும் வளர்க்க இந்த நான்கு குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

விமர்சனங்களுக்கு பயப்படாதீர்கள்:

நீங்கள் ஒரு காலத்தில் அலுவலகத்தின் தனி ஒருவனாக இருந்திருக்கலாம். ஆனால், மாற்றம் உண்டாகி அதன் மூலம் அலுவலகத்தின் அமைப்பு மாறும்போது அதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ள கொஞ்சம் நேரம் எடுக்கும். அப்போது உங்கள் செயல் மீது விமர்சனங்கள் வரும். அதற்காக கோபப்பட்டு ஒதுங்காமல். மாற்றத்துக்கான வழிமுறைகளை தேர்ந்தெடுங்கள். அனுபவத்தோடு மாற்றம் இணைந்தால் நீங்கள் ஓல்டு ஒயினாக மீண்டும் சிக்ஸர் தூக்கலாம். இதைத்தான் தோனியும் செய்தார்.

வழிநடத்துங்கள்:

உங்கள் அலுவலகத்தில் நீங்கள் தான் அனுபவசாலி என்றால் அதனை பாசிட்டிவாக அணுகுங்கள். உங்களைவிட குறைந்த அனுபவம் கொண்டவர்கள், புதிதாக சேர்ந்தவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள். அவர்களுக்கு வழிவிட்டு அவர்களை வழிநடத்துங்கள். ஒரு நல்ல மெண்டாராக இருங்கள். உங்கள் அனுபவம் அவர்களுக்கு நல்ல பாடமாக அமையும். விராட் கோலி வழிநடத்தட்டும் என்று தோனி நகர்ந்து நின்றதுதான் இன்று களத்தில் தோனியை புகழ வைக்கிறது.

தோனி

முடியாது என்றால் முடியும்.

அலுவலகம் ஒரு வேலை மிகவும் கடினம் முடியாது என்று ஒதுங்க நினைத்தால் அதற்கு முடியும் என்ற பதில் உங்களிடமிருந்து வர வேண்டும். அனுபவசாலிகள் எல்லாம் ஆரம்பத்தில் முடியாது என்று ஒதுங்கிச் செல்பவர்களாக  இருப்பார்கள். ஆனால், அதன்பின் அவரது ஆக்ரோஷம் பல மடங்காகி வெற்றி  ஈட்டுவர். இப்படியெல்லாம் ஆர்பாட்டமான தோனி கேப்டனாக மாறி உலகம் முழுவதையும் கட்டிப்போட்டு வைத்திருந்தார். இன்றும் கோலி முடியாது என்று மறுக்கும் அவுட்களை ரி-வியூ மூலம் மாஸ் காட்டுகிறார் தோனி.

சூழ்நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்:

அலுவலகம் மாறிவிட்டது, வேலை பிரமாதமாக உள்ளது என்று கூறுபவர்களின் உண்மைநிலை 360 டிகிரி வித்தியாசமானதாக இருக்கும். யார் என்ன சொன்னாலும் உங்கள் சூழலை சர்ச்சையில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் அனுபவம் உங்களை தலைமைப் பதவியில் வைத்திருக்கும். புதியவர்கள் வேகமாக ஓடினாலும், அனுபவத்தை சம்பாதிக்க முடியாது. அதனால், வெற்றி உங்கள் பக்கம் தான், இதைத்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகியதும் தோனி செய்தார். ஆனால், அவர் கோலியின் தலைமையின் கீழ் சாதாரணமான வீரராக தொடர்கிறார். அப்படி இருக்க, உழைப்புடன் கூடிய அர்ப்பணிப்பு மனநிலை அவசியம்.

 

ஒருவர் வெற்றி பெறுவது மிகச் சிரமம் என்றால், வெற்றி பெற்ற பின் வரும் விமர்சனங்களுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்வது, அதைவிட சிரமம். அப்படித் தயார்படுத்திக் கொண்டு, விமர்சனங்களைத் தாண்டி தங்கள் வேலையின்மீது மட்டுமே கவனம் எடுத்து முன்னேறுவது ஒரு கலை.   

இப்ப சொல்லுங்க பாஸ் நீங்களும் ஓல்டு ஒயின் தானே?

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

டாலர் என்றால் என்ன அர்த்தம்?

உலகிலேயே முக்கியமான பணம் என்றால், அது டாலர்தான். பல நாடுகளில் இந்த பணப்புழக்கம் இருந்தாலும் ஐக்கிய அமெரிக்க நாடே 'டாலர் தேசம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் வரலாற்றையும் முக்கியத் தகவல்களையும்தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

டச்சு, ஸ்பெய்ன், பிரிட்டன் நாட்டு வியாபாரிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்பு வரை அமெரிக்கப் பழங்குடி மக்களிடம் இந்த நாணய முறையே இல்லை. அமெரிக்காவுக்கு வந்த டச்சு வணிகர்களால்தான் முதன்முதலில் பணம் புழங்கத் தொடங்கியது. 16-ம் நூற்றாண்டில், டச்சு நாணயங்கள் அமெரிக்காவிலேயே அச்சடிக்கப்பட்டன. ஆம், அமெரிக்காவின் பொஹீமியா என்ற பகுதியில் உள்ள செயின்ட் ஜோஹிம்ஸ் தால் என்ற பகுதியில்தான் டச்சு நாட்டு வெள்ளி நாணயங்கள் அச்சாகின. தால் என்றால் ஜெர்மன் மொழியில் பள்ளத்தாக்கு என்று அர்த்தம். தால் பகுதியில் அச்சானதால், இந்த நாணயங்கள் ஜோஹிம்ஸ் தாலர் என்றே அழைக்கப்பட்டு, பின்னர் நாளடைவில் சுருங்கி, 'டாலர்' என்றானது.

டாலர்

பின்னர், ஏறக்குறைய வட அமெரிக்கா முழுவதும் பிரிட்டன் வசமானதும், பிரிட்டன் நாணயங்கள் புழக்கத்துக்கு வந்தன. பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா விடுதலை பெற்றதும் சீரமைக்கப்பட்ட நாணயம் 1785-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாள் வெளியானது. 100 சென்ட் ஒரு டாலர் என்ற அளவில் இது புழக்கத்துக்கு வந்தது. ஜிம்பாப்வே, ஈக்குவேடார், பனாமா உள்ளிட்ட 10 நாடுகளின் புழக்கத்திலிருந்து உலகையே ஆட்டிப்படைக்கிறது இந்த நாணயம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விழாவில் பல்ப் வாங்கிய அமெரிக்க வீரர்!

 

இஎஸ்பிஎன் ஊடகத்தின் 2017 ஆண்டுக்காக சிறந்த விளையாட்டு வீரர் விருதை அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரசல் வெஸ்ட்ப்ரூக் பெற்றுள்ளார். சிறந்த வீராங்கனையாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

espn
 

ஒவ்வொரு ஆண்டும் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலை இஎஸ்பிஎன்  வெளியிட்டு அவர்களைக் கெளரவிப்பது வழக்கம். இந்தாண்டு ”The ESPYS” என்னும் பெயரில் நடைபெற்ற இவ்விழாவை அமெரிக்க கால்பந்து அணியின் குவார்ட்டர்பேக் வீரரான பெய்டன் மானிங் தொகுத்து வழங்கினார். 

2017-ம் ஆண்டின் தலைசிறந்த விளையாட்டு விருதைப் பெற்றுள்ள கூடைப்பந்து வீரர் ரசல் வெஸ்ட்ப்ரூக் அமெரிக்காவின் ’மதிப்புமிக்க வீரர்’ என்னும் பட்டத்தைப் பெற்றவர். இந்த ஆண்டின் தலைசிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சிமோன் பைல்ஸ் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் தங்கம் வென்றவர்.

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பாகிஸ்தானில் 3 ரெயில்கள் மோதல்: 150-க்கு மேற்பட்டோர் பலி- 13-7-2005

பாகிஸ்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று ரெயில்கள் மோதியதில் 150 பேருக்கு மேல் பலியானார்கள். குவேட்டா எக்ஸ்பிரஸ் ரெயில் சர்ஹாட் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது கராச்சி எக்ஸ்பிரஸ் சிக்னல் பிரச்சினையால் பின்னால் வந்து மோதியது. இதனால் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட ரெயில்கள் மீது தெகாம் ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த மூன்று ரெயில்களிலும் சுமார் 3000 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

 
 
 
 
பாகிஸ்தானில் 3 ரெயில்கள் மோதல்: 150-க்கு மேற்பட்டோர் பலி- 13-7-2005
 
பாகிஸ்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று ரெயில்கள் மோதியதில் 150 பேருக்கு மேல் பலியானார்கள்.

குவேட்டா எக்ஸ்பிரஸ் ரெயில் சர்ஹாட் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது கராச்சி எக்ஸ்பிரஸ் சிக்னல் பிரச்சினையால் பின்னால் வந்து மோதியது. இதனால் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன.

தடம் புரண்ட ரெயில்கள் மீது தெகாம் ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த மூன்று ரெயில்களிலும் சுமார் 3000 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இதே தேதியில் நடந்த மேலும் முக்கிய சம்பவங்கள்:-

* 1844 - இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

*  1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.

* 1908 - லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.

* 1878 - பெர்லின் உடன்படிக்கை: செர்பியா, மொண்டெனேகுரோ, ருமேனியா ஆகிய நாடுகள் ஒட்டோமான் பேரரசில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.

* 1923 - லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது ஹாலிவுட்லாந்து என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.

* 1930 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.

* 1931 - காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

* 1941 - இரண்டாம் உலகப்போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

* 1971 - மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.

* 1977 - மின்சார இழப்பினால் நியூயோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.

* 1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.

* 2001 - சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008-க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது
 
 

இலங்கைத் தமிழரசு கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம் சுட்டுக்கொலை: 13-7-1989

 

யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும், வள்ளியம்மைக்கும் மகனாக 1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951-ல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார். சட்டத்துரையை கைவிட்டு தந்தைச் செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில்

 
 
 
 
இலங்கைத் தமிழரசு கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம் சுட்டுக்கொலை: 13-7-1989
 
யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும், வள்ளியம்மைக்கும் மகனாக 1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார்.

பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951-ல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார். சட்டத்துரையை கைவிட்டு தந்தைச் செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துக் கொண்டார். 1952-ம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1956-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இலங்கை பராளுமன்றம் சென்றார். இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972-ம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார்.

தந்தைச் செல்வ நாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார். 1977-ம் ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார். இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவியை வகித்த ஒரே தமிழர் அமிர்தலிங்கம் ஆவார். 1970 முதல் 1980 வரை, அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப்போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின.

இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.

இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. 1989 ஜுலை 13-ம் நாள் கொழும்பில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார். இவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வைரமுத்து

 
வைரமுத்து | கோப்புப் படம்.
வைரமுத்து | கோப்புப் படம்.
 
 

பிரபல தமிழ்த் திரைப்பாடலாசிரியரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியருமான வைரமுத்து (Vairamuthu) பிறந்தநாள் இன்று. (ஜூலை 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

* தேனி மாவட்டம், மெட்டூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் (1953). தந்தை, விவசாயி. 1957-ல் இவரது குடும்பம் பக்கத்து கிராமமான வடுகப்பட்டிக்கு இடம் பெயர்ந்தது. வடுகப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். 11 வயதில் கவிதை எழுதத் தொடங்கினார்.

* 14 வயதில் வெண்பா என்னும் கடினமான யாப்பு வடிவத்தில் தேர்ச்சியடைந்தவர். பள்ளி இறுதித் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்று, வெள்ளிக் கோப்பையை வென்றார். 1972-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்றபோது, இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘வைகறை மேகங்கள்’ வெளிவந்தது.

* சென்னைப் பல்கலைக்கழகத்தில், எம்.ஏ. தமிழ் இலக்கியத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சியடைந்து, தங்கப்பதக்கம் வென்றவர். 1978-ல் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதிய ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது...’ பாடல், இவரது முதல் திரைப்படப் பாடல்.

* இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, வெற்றிகரமான பாடலாசிரியராக இயங்கி வந்தாலும், தமிழ் மீது கொண்ட நேசத்தால் நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார்.

* இதுவரை 37 நூல்கள் எழுதியிருக்கிற இவரது சில படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, கொங்கணி, வங்காளம், ரஷ்யன், நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 இந்திய மொழிகளில் சாகித்ய அகாடமியால் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

* சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறையும், சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 6 முறையும் வென்றுள்ளார். ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக 2003-ல் சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. பத்ம, பத்மபூஷண் விருதுகள் மட்டுமல்லாமல், இலக்கியத்துக்கான உயர்ந்த விருதாகக் கருதப்படும் ‘சாதனா சம்மான்’ விருதையும் பெற்ற பெருமைக்குரியவர்.

* இவரது இலக்கியப் பணிகளைப் பாராட்டி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவை இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. வாஜ்பாய் இவரைக் ‘கவி சாம்ராட்’ என்றும், அப்துல்கலாம் ‘காப்பியக் கவிஞர்’ என்றும் அழைத்தனர்.

* முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி இவருக்கு ‘கவிப்பேரரசு’ என்ற பட்டம் வழங்கினார். லண்டன் முன்னாள் கல்வியமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ், ‘உணர்ச்சியும் அறிவும் சரியாக இணைந்த கலவைகள் வைரமுத்து கவிதைகள்’ என்று இவரைப் பாராட்டினார்.

* ‘அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ இவரது கவிதைகளை இவர் குரலில் ஒலிப்பதிவு செய்து அழியாத ஆவணமாய்ப் பாதுகாக்கிறது. புவிவெப்பமாதல் குறித்து இவர் எழுதிய ‘மூன்றாம் உலகப்போர்’ மலேசியா டான் சோமா அறக்கட்டளையால் உலகத்தமிழில் வெளியான சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 10,000 அமெரிக்க டாலர் பரிசு வழங்கியது.

* அண்மையில் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிட்ட இவரது மலையாளச் சிறுகதைகள் நூல் இரண்டே வாரங்களில் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது. ‘இயற்கை மறைப்பதை மனிதன் கண்டடை கிறான்; மனிதன் மறைப்பதை இலக்கியம் கண்டறிகிறது’ என்ற படைப்புக் கொள்கையோடு எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் வைரமுத்து இன்று 64-ம் வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

தித்திக்கும் கடலை மிட்டாய் எப்படித் தயாராகுதுன்னு தெரியுமா!? #VikatanPhotostory

 
 
 

21ம் நூற்றாண்டில் ஸ்நாக்ஸ் என்றால் எத்தனையோ வகை உள்ளன. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்நாக்ஸ் என்றால் நமது பாரம்பர்யமான கடலைமிட்டாய்தான். சிறுவர்கள் முதல் முதியவர் வரை ருசித்துச் சாப்பிடும் இனிப்பு வகைகளில் ஒன்று இந்தக் கடலை மிட்டாய். இதன் வடிவம் தொடர்ந்து மாறாமல் இருந்து வருகிறது. எத்தனையோ நாள்கள் எத்தனையோ முறை இதை சாப்பிட்டுருப்போம், ஆனால் இது எப்படித் தயாராகிரது என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?!

கடலை மிட்டாய்

வறுப்பதறக்காகத் தயாராக உள்ள கடலை

 

கடலை மிட்டாய்

இதமான சூட்டில் வறுக்கப்படுகிறது

 

கடலை மிட்டாய்

வறுத்தகடலையை ஜல்லடையில் சலிக்கின்றனர்

 

D_14552.JPG

கடலையில் உள்ள சிறு சிறு கற்களை நீக்குகின்றனர்

 

கடலை மிட்டாய்

சலிக்கப்பட்ட கடலையை இயந்திரத்தின் மூலம் இரண்டாக உடைக்கின்றனர்

 

கடலை மிட்டாய்

உடைத்த கடலையில் உள்ள குருணையை நீக்குகின்றனர்

 

கடலை மிட்டாய்

இனிப்பு பாகுடன் கலப்பதற்காகத் தேவையான அளவில் உடைத்த கடலை எடை போடப்படுகிறது

 

கடலை மிட்டாய்

வெல்லப்பாகு காய்ச்சப்படுகிறது

 

J_14441.JPG

உடைத்த கடலை பாகுடன் கலக்கப்படுகிறது

 

L_14149.JPG

காய்ச்சப்பட்ட பாகுடன் கலக்கப்பட்ட கடலை, மட்டப்படுத்துவதற்காக பலகையில் கொட்டப்படுகிறது

 

M_14524.JPG

பாகுடன் கலக்கப்பட்ட கடலை பலகையில் போட்டு மட்டப்படுத்த உருட்டப்படுகிறது

 

N_14459.JPG

மட்டப்படுத்தப்பட்ட கடலை மிட்டாய் சரியான அளவில் கத்தியால் வெட்டப்படுகிறது

 

O_14484.JPG

வெட்டப்பட்ட மிட்டாய் உலர்த்தப்படுகிறது

 

கடலை மிட்டாய்

மிட்டாய் பிரித்து எடுக்கப்பட்டு, பேக்கிங்குக்குத் தயாராகிறது

 

கடலை மிட்டாய்

பேக்கிங் செய்யப்படுகிறது

 

கடலை மிட்டாய்

சுவையான கடலை மிட்டாய் விற்பனைக்குத் தயார்

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

புதுவையில் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் ஆலமரம்!

4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய “லைஃப் ஆஃப் பை” ஹாலிவுட் படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள்... 300 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கும் நம்ம கீழூர் ஆலமரத்தைச் சுற்றிதான் எடுக்கப்பட்டவை! 45 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறார் மகேஸ்வரி என்ற பாட்டி..

நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் ஆலமரம்

புதுச்சேரி மாநில வரலாற்றில் தவிர்க்க முடியாதது வில்லியனூரை அடுத்துள்ள கீழூர் கிராமம்.

கீழூர் ஆலமரம்

1954-ல் பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, சுதந்திர இந்தியாவில் இணைய வேண்டுமா பிரான்சின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டுமா என்று மிகப்பெரிய விவாதம் நடந்தது. அதற்காக, மக்கள் பிரதிநிகள் 178 பேரிடம் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது புதுச்சேரி.

இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கீழூரிலிருக்கும் மற்றுமொரு சிறப்பம்சம், இங்கிருக்கும் ஆலமரம். நூற்றுக்கணக்கான விழுதுகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த ஆலமரத்தின்  வயது 300 ஆண்டுகளுக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது.

நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய “லைஃப் ஆஃப் பை” ஹாலிவுட் திரைப்படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள், இந்த ஊரிலும், இந்த ஆலமரத்தைச் சுற்றியும் எடுக்கப்பட்டவைதான். நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் இந்த ஆலமரத்தை, கடந்த 45 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறார் மகேஸ்வரி என்ற பாட்டி.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வைரமுத்து.. ஒரு காதல்.. ஒரு பதில்.. ஓர் உதாரணம்! #HBDVairamuthu

 
 

லைப்பிரசவத்துக்காக மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, விடுமுறை விண்ணப்பம் எழுதிக் கொடுக்க அலுவலகம் சென்ற அந்தக் கவிஞருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தொலைபேசியில் பேசிய  இயக்குநர் ``யோவ்... அட்லான்ட்டிக் ஹோட்டல் ரூம் நம்பர் 410-க்கு உடனே கிளம்பி வா" என்று அணைகிறது அந்தக் குரல். அம்மாவிடம் மனைவியைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு விரைகிறார் அந்தக் கவிஞர்.

“இவர்தான் நான் சொன்ன கவிஞர்'' என இசையமைப்பாளரிடம் அறிமுகம் செய்துவைக்கிறார் இயக்குநர். `மாலை நேரத்தில் ஒரு லட்சியவாதி பாடும் பாட்டு' எனக் காட்சியைச் சொல்லி, ``மெட்டுக்கு  எழுதுவீங்களா?'' என்று நம்பிக்கையின்றி கவிஞரிடம் கேட்கிறார் இசையமைப்பாளர். கவிச்செருக்குடன்கூடிய தமிழ்த் திமிரில் ``மெட்டைச் சொல்லுங்க, முயற்சி செய்வோம்'' என்று பதிலளிக்கிறார் கவிஞர். மெட்டு வாசிக்கப்படுகிறது. கவிஞர் யோசிக்கிறார். அவர் யோசிப்பதைப் பார்த்த இசையமைப்பாளர் ``நாளை சந்திக்கலாம். போயிட்டு வாங்க'' என்று சொல்கிறார். சிறிதும் நேரம் கொடுக்காமல் ``கொஞ்சம் பொறுங்கள். பல்லவி வந்துவிட்டது,  சொல்லட்டுமா... பாடட்டுமா" என்று கேட்கிறார் கவிஞர். ஆச்சர்யத்துடன் பாடச் சொல்ல,  மனதில் உதித்த வரிகள் ஒலியில் பதிவுசெய்யும் முன் கவிஞரின் குரலிலேயே பாடலாக ஒலிக்கிறது. முழு பாடலையும் எழுதிக் கொடுத்ததும் அந்த இளம் கவிஞனை அணைத்துக்கொள்கிறார் இசையமைப்பாளர்.

வைரமுத்து

அந்த அறையில் ஒலித்த பாடல் `பொன்மாலைப் பொழுது... இது ஒரு பொன்மாலைப் பொழுது'. மேலே சொன்ன இயக்குநர், இசையமைப்பாளர், கவிஞர் யாரெனச் சொல்லித் தெரிய தேவையில்லை. ஒரு வரலாற்றின் முதல் அத்தியாயத்தின் கதை மாந்தர்கள் இவர்கள். பாரதிராஜாவின் இயலுக்கும் இளையராஜாவின் இசைக்கும் வைரமுத்துவின் பேனா எழுதத் தொடங்கிய நாள் அது.

வைரமுத்து - ஒரு காதல்

வைரமுத்து

“நான் விதைத்தேன். அது உயர்ந்த விருட்சமானது'' என்று அறிமுகம் செய்துவைத்த இயக்குநர் பாரதிராஜா சொல்வார். அந்த விதையின் வீரியம்தான் தமிழ் சினிமாவின் பாடல்களில் கவிதைத் தரத்தை உயர்த்தியது எனச் சொன்னால் அது மிகையல்ல. வைரமுத்து மிகச்சிறந்த கவிஞர், நாவலாசிரியர், பாடலாசிரியர் என்பதையெல்லாம் தாண்டி, அவர் ஓர் ஆகச்சிறந்த ரசிகர். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு ரசிக்கிறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவன் இளமையாகிறான். கபிலனும் கார்க்கியும் எழுதிக்கொண்டிருக்கும் இந்நாளில் `கள்ளக் காமுகனே...' என்று அவரால் எழுத முடிகிறதென்றால், அதுதான் அவருடைய ரசனையின் உச்சம்.

வைரமுத்துவின் கல்லூரிக் காலத்தில் ஒரு மாணவி, தான் வரைந்த ஓவியத்தை வைரமுத்துவிடம் காண்பித்து கருத்துக் கேட்டிருக்கிறார். அந்த ஓவியத்தின் கீழே ஒரு கவிதை எழுத்தி, கையெழுத்திட்டிருக்கிறார் வைரமுத்து.


`நீ
இனிமேல் நெருப்பை ஓவியமாய் வரையாதே.
தூரிகை தீப்பிடித்துவிடப்போகிறது.'

இந்தக் கவிதைதான் ‘அன்பே சிவம்’ படத்தின் `பூவாசம் புறப்படும் பெண்ணே...' பாடலில் பல்லவியாக மாறியது.

`பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்...'

அந்த ஓவியம் வரைந்த பொன்மணி என்கிற மாணவிதான் கவிஞருக்கு மனைவியானார்.

வைரமுத்து - ஒரு பதில்

தமிழ், ஒவ்வொருவரையும் கேள்வி கேட்கச் சொல்லும்; கேட்ட கேள்விக்கு இலகுவாகப் பதிலும் சொல்லச் செய்யும். வைரமுத்துவின் தமிழும் கேள்வி-பதில்களைக் கண்டிருக்கிறது. ‘வசந்தி’  திரைப்படத்தில் ‘ரவிவர்மன் எழுதாத கலையோ...' என்ற பாடலில் வைரமுத்து இப்படி ஒரு வரி எழுதியிருக்கிறார்... 

`பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல்  அணைப்பேன்...'

‘முதல் இரவில், புதுச்சேலை கசங்காமல் அணைப்பதெல்லாம் அணைப்பா?' என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உடனே அதற்குப் பதிலாக ‘முதல் இரவில் புடவைக்கு விடுமுறை' என்று ரசனையைப் பதிலளித்திருக்கிறார்.

இதேபோல ‘ராவணன்' படத்தில் `உசுரே போகுதே...' என எழுதியதற்கு, `காதலின் உச்சத்தில் ஏன் உயிர் போவதாய் எழுதியிருக்கிறீர்கள்?' எனக் கேட்டதற்கு “மாற்றான் மனைவியை நேசித்தால், இறுதியில் உயிர் போய்விடும்" என்று சொல்கிறார். அந்தப் படத்தின் இறுதியில் விக்ரம் இறந்துபோவார்.

வைரமுத்து - ஓர் உதாரணம்

வைரமுத்து

பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா என எத்தனை ஆளுமைகளோடு இணைத்து வைரமுத்துவை எழுதினாலும் மணிரத்னம்-வைரமுத்து கூட்டணிதான் தமிழ் சினிமாவின் கவிதை கூடிய பாடல்களின் கூடாரம். “நான் மணிரத்னத்தோடு சேர்ந்த பிறகுதான் என் பாடல்களில் கவிதை கூடியது'' என்று வைரமுத்து ஒருமுறை சிலாகித்தார். வைரமுத்துவின் எழுத்துகளுக்கு முதல் ரசிகர்கள் மணிரத்னமும் ரஹ்மானும்தான். வைரமுத்துவின் பேனா படித்து முடித்ததும் இவர்கள்தான் முதலில் படிக்கிறார்கள். இவர்கள் மூவருமே ஒருவருக்கொருவர் ரசித்துக்கொள்கிறார்கள். ஒரே அலைவரிசையில் தமிழை ரசிக்கிறார்கள். வைரமுத்துவின் கவி வரிகளை ரஹ்மான் இசைக் குறிப்புகளோடு மெருகேற்றி மணிரத்னத்தின் கதாபாத்திரங்களுக்கு உணர்வளிக்கிறார்.

பாடல்களின் புதுமைக்காக இசையில் லாகவமாக அமரும் சொற்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஒருமுறை வைரமுத்து எடுத்துரைத்தார். ‘பம்பாய்' படத்தின் ‘கண்ணாளனே...' பாடலில் பல்லவிக்காக ரஹ்மான் கொடுத்த இசை அளவுக்கு ஏற்றதுபோல `என் நண்பனே...', ‘என் அன்பனே...', `என் தேவனே...' என பல வார்த்தைகள் எழுதி, இறுதியில் `கண்ணாளனே...' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த `கண்ணாளனே...' பாடலை இப்போது கேட்டால்கூட புதுமையாகத் தெரிகிறது. இதை உள்ளார்ந்து கவனித்தால் வைரமுத்து முதலில் எழுதிய `என் நண்பனே...', `என் அன்பனே...' போன்ற சொற்களைவிட `கண்ணாளனே...'தான் பழைமையான சொல். பழைய திரைப்படங்களில் சரளமாகக் கேட்கும் சொல். புதுமை என்பது புதுப்பித்தல்தான் என்ற உண்மையை நன்கு அறிந்தவர் வைரமுத்து. இந்தப் பாடலின் மொத்த ஜீவனும் பாடலின் முதல் சொல்லான `கண்ணாள'னில் இருக்கிறது. காரணம், இந்தப் பாடலின் போக்கு முழுவதும் கதாநாயகனின் கண்களையும் கதாநாயகனின் பார்வையையுமே மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும்.

`பம்பாய்' படத்தின் முதல் காட்சியே கதாநாயகனும் கதாநாயகியும் ஒருவரையொருவர் முதன்முதலாகச் சந்தித்துக்கொள்ளும் காட்சிதான்.  இருவரும் பார்த்துக்கொள்ள, பெய்யும் மழையில் நனைந்துகொள்ளும் அவர்களின் முதல் பார்வை. பர்தா விலகிய நொடியில் கதாநாயகனும் கதாநயாகியும் பார்த்துக்கொண்டதைத்தான் சரணத்தில் வைரமுத்து இப்படி எழுதுகிறார்.

‘எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்'
அந்த முதல் பார்வை அங்கேயே முடிந்துவிட, மீண்டும் ஒரு திருமணச் சடங்கில் அதேபோல இருவரும் யதேச்சையாகப் பார்த்துக்கொள்ள வாய்ப்பு அமைகிறது. அந்தப் பார்வையின் தொடர்தலில், கதாநாயகியின் குரலில் தொடங்குகிறது பாடல்.

பம்பாய்

‘கண்ணாளனே
எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை'
முதல் நாள் பார்த்துக்கொண்டபோதே அவளின் கண்களை அந்தப் பார்வைக்குப் பறிகொடுத்ததுதான் `எனது கண்ணை நேற்றோடு காணவில்லை' என்ற வரியின் பொருள். மேலும், அவனின் பார்வைகளை  வைரமுத்து கீழ்க்காணுமாறு குறிப்பிட்டு தொடர்கிறார்.

`உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்'

`ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்'

சதாசர்வகாலமாக ஒரு பெண்ணின் பார்வையை வைத்து மட்டுமே எழுதப்பட்டு வந்த பாடல்களில், ஓர் ஆணின் பார்வையைச் சொல்லியது இந்தப் பாடலின் மற்றுமோர் அழகு. ‘கண்ணாளன்'  என்றால் `கண் + ஆளன்' - `கண்களால் ஆள்பவன்' அல்லது `கண்களை ஆள்பவன்' என்று இரு பொருள்களில் விளங்கிக்கொள்ளலாம். இந்தப் பொருள்களைத்தான் மேலே சொன்ன வரிகளைக்கொண்டு விளக்குகிறார் வைரமுத்து.

`கண்களை ஆள்பவன்' என்ற பொருள் `என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை' என்ற வரிகள் பொருந்தி நிற்கின்றன.  அதே போல, `கண்களால் ஆள்பவன்' என்ற அர்த்தத்துக்குக் கீழுள்ள வரிகளும் பொருத்தமாக இருக்கின்றன.

`உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்'
`ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன்'
`உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்'

இப்படி அடுத்தடுத்த சந்திப்புகள் இருவருக்குமான பரிட்சயங்களை, ஆசைகளைத்  துளிர்விடவைக்கின்றன. பெண்ணாகப்பட்டவள் வெளிக்காட்ட தயங்கும் ஆசைகளில் இந்தக் காதலும் ஒன்று. அந்த ஆசையைக் காதலாக முன்னெடுக்கும் நாயகன்,  `நான் உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வருவேன். நீ எனக்காக வருவியா. நாளைக்கு உனக்காகக் கோட்டையில காத்திருப்பேன். ப்ரியம் இருந்தா வா' என்று நாயகியிடம் ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறான்.

தனக்காகக் காத்திருப்பவனிடம் வீடு, உறவு, சார்ந்திருக்கும் சமுதாயம் என அனைத்தையும் துறந்து சேர்வதற்கு ஓடிவரும் அவள், மீண்டும் அவனை `கண்ணாளனே...'என்றுதான் அழைக்கிறாள்.

`நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே'

அவளின் பார்வையில் பாடும்போது கண்ணாளனுக்காகப் பார்வையைச் சுற்றியே பாடுகிறாள்.

`ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்தபோது
மறு கண்ணும் தூங்கிடுமா'

வைரமுத்துவின் காதலும் ரசனையும் கடைசி தமிழ் ரசிகனும் இசை ரசிகனும் இருக்கும்வரை கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கும். வைரமுத்து எப்போது பேசினாலும் அவரின் உரையில் ஒரு வரி வரும். அது `உங்களுக்கு ஒரு வார்த்தை'.

 

கவிப்பேரரசு வைரமுத்து
உங்களுக்கு ஒரு வார்த்தை
‘வாழ்க.’

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

`அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத் தோல்வியிலிருந்து மகனை மீட்டெடுக்க, டி.ஆர் புதிய திட்டம் ஒன்றைப் போட்டிருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவே இயக்கிய `கெட்டவன்’ படம் பாதியிலேயே டிராப் ஆனது. ஆனால், படத்தின் ஒரு மணி நேர ஃபுட்டேஜ் எஞ்சி இருக்கிறது. அதை மீண்டும் தூசிதட்ட  முடிவெடுத்திருக்கிறது சிம்பு டீம். விரைவில் சூட்டிங்காம்! அன்பான அப்பா... அசராத அப்பா...

p36a.jpg

p36b.jpg

டோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் அனு இம்மானுவேல். ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’ படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக சினிமாவுக்குள் நுழைந்தவர், இப்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் என ஓரே நேரத்தில் மூன்று ஸ்டார் ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். சீக்கிரமே தமிழுக்கும் வர இருக்கிறாராம் அனு! கேரள எக்ஸ்பிரஸ்.

p36c.jpg

`தி நேஷன் வான்ட்ஸ் டு நோ’ என்கிற வரிகள் அர்னாப் கோஸ்வாமியின் அடையாளம். முன்பு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருந்தபோது எல்லா விவாதங்களிலும் இதை மறக்காமல் சொல்வார். ரிபப்ளிக் டி.வி-க்குப் போன பிறகும் இதையே சொல்ல, டைம்ஸ் நவ் இனி அர்னாப் அந்த வாக்கியத்தைப் பயன் படுத்தக் கூடாது எனத் தடை கேட்டு கோர்ட்டுக்குப் போயிருக்கிறது. இப்போது நீதிமன்றம் அர்னாபை விளக்கம் தரச் சொல்லியிருக்கிறது. அதுவரை அவர் `தி நேஷன் வான்ட்ஸ் டு நோ’வைப் பயன்படுத்திக் கொள்ளலாமாம்! டிவி வார்ஸ்!

p36d.jpg

மோகன்லாலின் மகன் ப்ரணவ் ஹீரோவாகிறார். `பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் ‘ஆதி’ படத்தில் சின்னலால் பிரணவ்தான் ஹீரோ. இவர் ஏற்கெனவே ஜித்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர். ஹீரோ அவதாரம் எடுப்பதற்கு முன்பாக முறைப்படி நடிப்பு, நடனம், சண்டைப் பயிற்சிகள் எல்லாம் கற்றுக்கொண்டு வந்திருக்கிறார் ப்ரணவ். புலிக்குப் பிறந்தது!

ன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அதனாலேயே, அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் விளம்பர ஸ்டேட்டஸ் போட பெரிய நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ரொனால்டோ பக்கத்தில் போடும் ஒரு போஸ்ட்டின் மதிப்பு 2.6 கோடி ரூபாய் என்று சமீபத்திய ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள்! ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் கோஹ்லி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது மாதிரியான விளம்பர வீடியோக்களைப் பகிர்ந்துகொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஒரு ஸ்டேடஸ்க்கு இம்புட்டா!

p36e.jpg

ந்தியக் கால்பந்தாட்ட அணி உலக ரேங்கில் 96-வது இடத்தை எட்டி சாதனை படைத்திருக்கிறது. 2014-ல் 171-வது இடத்தில் இருந்த அணி மூன்றே ஆண்டுகளில் 77 இடங்கள் முன்னேறி இந்த இடத்தை எட்டியிருப்பது சாதாரண விஷயம் இல்லை. இதற்குக் காரணம் இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன்தான்! அவர் வந்தபிறகுதான் இந்திய அணியில் பல மாற்றங்கள் நடந்தன. கடைசியாக ஆடிய 15 போட்டிகளில் 13 போட்டிகளில் இந்தியா வென்றது. ``இந்த ரேங்கிங் வளர்ச்சிக்காக நாம் பெரிதாகச் சாதித்துவிட்ட திருப்தியை அடைந்துவிடக் கூடாது. நமக்கு இனிமேல்தான் சவால்கள் காத்திருக்கின்றன’’ என பாசிட்டிவாகப் பேசியிருக்கிறார் பயிற்சியாளர். குருநாதா...

p36f.jpg

ச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தான் இப்போது இங்கிலாந்தின் ஹாட் ஸ்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன்பாக, வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அர்ஜுன்தான் பெளலர். பயிற்சியின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜான் பேர்ஸ்டோவுக்கு, இன்ஸ்விங்கிங் யார்க்கர் போட, அது பேர்ஸ்டோவின் காலைப் பதம் பார்த்தது. இப்போது அவர்முதல் டெஸ்ட் ஆடுவாரா, மாட்டாரா என இங்கிலாந்தே குழம்பிப்போய் இருக்க, பந்தைப்போட்ட அர்ஜுனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்க இருக்கிறார் அர்ஜுன்! வர்லாம் வர்லாம் வா...

  • தொடங்கியவர்
‘மமதையின் உச்சம் இது’
 

image_b5d06d413e.jpgநான்தான் செய்தேன்; என்னால்த்தான் எல்லாமே முடியும்; வேறு ஒருவராலும் முடியாது, என்பது மமதையின் உச்சம்.  

கடவுளின் கிருபையினால் எல்லாமே அருளப்படுகின்றது என எண்ணினால் என்ன குறைந்துவிடப் போகின்றது? 

மாறிவரும் யுகத்தில், தனிமனிதன் ஒருவனே எல்லாமே அறிந்தவன், தெளிந்தவன் என்பதில்லை. எக்கணமும் வல்லவர்கள் உருவான வண்ணமே இருக்கின்றனர். இதில் யார் பெரியவன், பெரியவள் என்ற பேச்சுக்கே இடமில்லை.  

அறிவுக்கு எல்லைகள் வகுக்க முடியாது. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதுவே இறை சித்தம்.  

எனவே, எனக்கு மட்டும்தான் எல்லாமே என எண்ணுதல் அறியாமை இல்லையா?  கொடுக்கின்ற கடவுளிடம் இருந்து எடுக்கிறவன் நாம் மமதை கொள்ளலாகாது.  

 

 

  • தொடங்கியவர்

ஆண்களுக்கு மட்டுமே அனுமதி... ஜப்பானில் உள்ள விநோதத் தீவு!

 
 
 

okinoshima_16316.jpg

ப்பான் அருகே உள்ள ஒகினோஷிமா என்னும் தீவுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆண்கள் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கும் சில விதிமுறைகள் என நிபந்தனை வைக்கிறது இந்தத் தீவு. ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பெரிய நிலப்பரப்பான க்யுஷூவுக்கும் கொரிய தீபகற்பத்துக்கும் இடையே உள்ளது ஒகினோஷிமா தீவு. நான்காம் நூற்றாண்டிலிருந்து சீனா மற்றும் கொரியாவுடன் தொடர்புகொள்வதற்கான மையமாக இந்தத் தீவு இருந்து வந்தது. சிண்டோ வழியைச் சேர்ந்த ஜப்பானின் பாரம்பர்யமான கோயில்களில் ஒன்றான முனகட்டா தைஷாவின் குருமார்கள் இங்கு வந்து இங்குள்ள
17-ம் நூற்றாண்டின் வழிபாட்டு தலமான ஒகிட்ஷூவில் பிரார்த்தனை செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

OkinoshimaTeam_16509.jpg

மேலும், ஆண்டுக்கு ஒருமுறை மே மாதம் ரஷ்யா - சீனா போரில், இந்தத் தீவுக்கு அருகில் நடைபெற்ற கடல் யுத்தத்தில் உயிரைத் துறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது நடைபெறும். இதில் கலந்துகொள்ள 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இங்கு வரும் ஆண்கள் முதலில் தங்கள் ஆடைகளைக் கலைந்து இந்தக் கடலில் குளிக்க வேண்டும். இது அவர்களின் உடல் அசுத்தத்தை நீக்கி  சுத்தம் செய்யப்படுகின்றது.  பின் `மிசோகி` என்ற சடங்கு நடைபெறும். இந்தச் சடங்கு முடியும் வரை ஆடைகளை உடுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய நிபந்தனை. அதனால், இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை. மேலும், இங்கு வரும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் இருந்தால் இந்த வழிபாட்டு தலம் தூய்மை இழப்பதாக கருதுகின்றனராம். 

okinoshima-ann-jp-wb_16063.jpg

அதேபோல், இங்கு வருபவர்கள் இங்குள்ள சிறு கல் உள்பட எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது. 700 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த விநோத தீவில் பல அரியவகை பொருள்களும் ஜப்பானின் பழைய கால பொக்கிஷங்களும் அந்நாட்டின் கலாசார பழக்கவழக்கங்களை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆக, இந்த ஒகினோஷிமா தீவை பாரம்பர்ய பட்டியலில் சேர்த்துள்ளது ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகம் (UNESCO). இதனுடன் சேர்த்து மொத்தமாக ஜப்பானில் யுனெஸ்கோவின் பாரம்பர்ய சின்னங்களின் பட்டியல் 21 ஆக உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

facebok.com/Saravanan Chandran

அதிகாலையில் நாம் வளர்த்த செடியில் இருந்து பழத்தை எடுத்துச் சாப்பிட்டு நாளைத் துவக்குவது, உண்மையிலேயே எதனைக் காட்டிலும் பேருசியாக இருக்கிறது. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சே. தொட்டியில் வைத்தாவது எதையாவது வளர்த்துப் பாருங்கள். அருமை புரியும்.

p106a.jpg

facebook.com/Umamaheshvaran Panneerselvam

ரிலேட்டிவிட்டி தியரி, பித்தகோரஸ் தியரம், ஆர்க்கிமெடீஸ் தத்துவம், மின்சாரம், லைட் பல்ப், ஆர்யபட்டரின் பூஜ்யம், சுஸ்ருதரின் அறுவைசிகிச்சை என மாபெரும் கண்டுபிடிப்புகள் நிழத்தப்பட்டபோது, அங்கே நிச்சயம் ஓர் அசரீரி கேட்டிருக்கும்.

“மாவு எடுத்து ஃப்ரிட்ஜில வெச்சியா?’’

facebook.com/Karthick Rama samy

அநேகமா இன்னும் சில வருடங்களில் வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் எல்லாம் ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

twitter.com/karukkan

வெளிநாட்டுக்குப் போனா, இங்கிலீஷ்ல தானே பேசுறீங்க... தமிழ்நாட்டுக்கு வந்தா மட்டுமே ஏன் இந்தியில பேசுறீங்க...

twitter.com/thowfiqs

மக்கள் எல்லோரும் பார்த்துட்டு இருக்கும் போதே கீழடியை மூடுறானுகளே, அந்தக் காலத்துல அதிகாரத்தில இருந்துட்டு எவ்ளோ வரலாற்றை மாத்தி எழுதிருப்பானுக?

twitter.com/vandavaalam

பசங்க பொண்ணுகிட்ட பேச ஆரம்பிச்சதுமே கரெக்ட் பண்ணிட்டேன்னு சொல்லுவானுக. பொண்ணுக பத்திரிகை கொடுக்கும்போதுதான் இவனை லவ் பண்றேன்னே சொல்லுவாங்க!

facebook.com/Vannadasan Sivasankaran S

காகிதக் கடல்.
காகிதப் படகு.
காகித ஞாயிறு.

p106b.jpg

facebook.com/Guru Srini

அந்த இஸ்ரேலியப் பிரதமர் இந்தியிலேயும் பேசியிருந்தார்னா, இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.

twitter.com/prakash24894

வட்டிக்குப் பயந்தகாலம் போய், வரிக்குப் பயப்படுற காலம் வந்துட்டு!

twitter.com/ShivaP_Offl 

 டிக்கெட் விலை 200 ரூபாய்க்கு விற்பதுகூட பிரச்னை இல்ல.

ஆனா, 10 ரூபாய்க்குக்கூட வொர்த் இல்லாத, பாப்கார்னை 180 ரூபாய்க்கு விற்பதைத்தான் தாங்க முடியல!

twitter.com/Kozhiyaar

 உன்கிட்ட குச்சி இருக்குதுங்கிறதுக்காக எல்லோரையும் குரங்கா நினைக்கக் கூடாது!

டு ஆல் மானேஜர்ஸ்!

p106c.jpg

twitter.com/nithratweets

தகுதியில்லாமல் ஒருவரைப் புகழ்வது, மறைமுகமாகத் திட்டுவதற்குச் சமம்.

twitter.com/amuduarattai

பெற்றோரை வரச்சொல்லி, வண்டி வண்டியாகத் திட்டினால், அது தனியார் பள்ளி. பெற்றோர் வந்து, வண்டி வண்டியாகத் திட்டினால், அது அரசுப் பள்ளி.

twitter.com/HAJAMYDEENNKS 

ட்விட்டர், ஃபேஸ்புக் வந்தது; எல்லோரும் எழுத்தாளர் ஆனார்கள். டப்ஷ்மாஸ் வந்தது; எல்லோரும் நடிகன் ஆனார்கள். ஸ்மூல்ஆப் வந்தது; எல்லாரும் பாடகர் ஆனார்கள்.

twitter.com/Sathik_143

VEG / NON-VEG ஹோட்டல்னு தேடிப் போன எங்களை,
GST / NON-GST ஹோட்டல் எங்கே இருக்குன்னு தேட வெச்சிட்டீங்களேடா!

twitter.com/manipmp

காலை முழுவதும் ஸ்கூல் ட்யூஷன்,
மாலை முழுவதும் ஹோம் ட்யூஷன்
என்று வழக்கப்படுத்திக்கொள் பாப்பா!

twitter.com/HAJAMYDEENNKS

பிக்பாஸ்ல யாருக்கு ஓட்டுப் போடலாம்னு யோசிக்கிற அளவுக்கு, எல்லாரும் எம்.எல்.ஏ, எம்.பி எலக்‌ஷன்ல யோசித்து ஓட்டுப் போட்டிருந்தால், நாடு நல்லா இருந்திருக்கும்!

twitter.com/Kannan_Twitz

அப்பல்லோவில் மருத்துவரானோம்,
மெரினாவில் போராளியானோம்,
கூவத்தூரில் அரசியல் மேதைகளானோம், இப்போ GST-யில் பொருளாதார அறிஞராகியிருக்கோம்.

twitter.com/Viky_Twitz

உலகிலேயே `சிகரெட்’ அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு `இஸ்ரேல்’. உலகிலேயே புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை உள்ள நாடு `இஸ்ரேல்.’

Think about it!

p106d.jpg

twitter.com/ShivaP_Offl

நகை, துணிக்கடையில 30 நிமிஷத்துக்குள்ள செலக்ட் பண்ணிட்டு, கேஷ்கவுன்ட்டருக்கு வரும் பெண்களுக்கு GSTவரி இல்லைன்னு ஒரு போர்டு போடுங்க!

கும்பல் கூடும்.

twitter.com/Kannan_Twitz

எண்ணெயில் சுடும் வடைகளைவிட, சிலர் வாயால் சுடும் வடைகளில் கொலஸ்ட்ரால் அதிகம்.

twitter.com/mekalapugazh

செய்தியை எப்படி வெளியிடுகிறார்கள் என்பதைவிட, எல்லாச் செய்திகளையும் வெளியிடுவதில்லை என்பதில்தான் தனியார் செய்தி ஊடகங்களின் அரசியல் உள்ளது.

twitter.com/Kozhiyaar

இப்பல்லாம் முடி வெட்டத் தோனுச்சுன்னா கடைக்குப் போறதில்லை; தலை குளிச்சுட்டுத் துண்டால அழுத்தித் தேய்ச்சா, அதுவா கொட்டிடுது!

twitter.com/sathyathetruth

தூங்குற நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் தூக்கமா வருது.

twitter.com/urs_priya  

நூறு நாள்கள் கழிச்சு நமீதா நல்லா தமிழ் பேசுவாங்க. மற்ற எல்லோரும் நமீதா மாதிரி தமிழ் பேசிட்டுருப்பாங்க.

twitter.com/mekalapugazh

நாம் வாங்கும் புத்தகத்தின் விலை, காகிதம், மை, பிரதியெடுப்பவரின் உழைப்புக்கூலி மட்டுமே; சிந்தனை,கற்பனைக்கெல்லாம் காசு கொடுத்து மாளாது.

twitter.com/thimirru

நம்மளை யாராவது ஒரு பொண்ணு அங்கிள்னு கூப்பிடுறதை ரெக்கார்ட் பண்ணி அலாரம் டோனா வெச்சுட்டா, அலாரம் அடிக்கிறதுக்கு முன்பே எழுந்து ஜாகிங் போய்டுவோம்.

twitter.com/withkaran 

சமைக்கும்போதுகூட கொக்கு நெட்டை கொக்கு முட்டைன்னு ஓவியா மாதிரி ஆடிட்டே சமைக்கிறேன். அடிக்டட்

twitter.com/fanatic_twit

குளிக்க ஐந்து நிமிஷம், டிரெஸ் பண்ண ஐந்து நிமிஷம், சாப்பிட ஐந்து நிமிஷம், வண்டி சாவி தேட 20 நிமிஷம்!

twitter.com/teakkadai1 

என் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காதபோதெல்லாம் கமல்ஹாசனை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்கிறேன்.

twitter.com/mekalapugazh

அந்தக் கால பள்ளிப்படிப்பில் அறிவு குறைவாகவும், ஒழுக்கம் அதிகமாகவும் போதிக்கப்பட்டது.

twitter.com/ShivaP_Offl

அம்சமான அந்த ஐந்து நிமிட தூக்கத்தின் முக்கியத்துவத்தை, முதன்முதலில் அலாரம்தான் மனிதனுக்கு உணர்த்துகிறது!


p106e.jpg

ட்ரெண்டிங்

பிரதமர் மோடி சமீபத்தில் கால் வைத்த தேசம் இஸ்ரேல். மற்ற நாட்டு பிரதமர்களை விட இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ கொஞ்சம் அதிகமாகவே மோடியிடம் அன்பு காட்டினார். மோடி விமானத்தை விட்டு இறங்கியதில் இருந்து, எங்குச் சென்றாலும் நேதன்யாஹூவும் உடன் இருந்தார். “மோடியின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது. என்னை யோகா செய்யச் சொல்லியிருக்கிறார். நிச்சயம் செய்வேன்” என நெகிழ்ந்திருக்கிறார் நேதன்யாஹு. “எப்படியோ... மோடியை பாலஸ்தீனம் பக்கம் போக விடாம செஞ்சிட்ட மேன்” என விமர்சனம் செய்த நெட்டிசன்ஸ் அதோடு விடவில்லை. இருவரையும் இணைத்து மீம்ஸும் உருவாக்கி வைரல் ஆக்கினர்.

  • தொடங்கியவர்

புதுமை உலகம்: ஹைப்பர்லூப் ஹோட்டல் தெரியுமா?

 

 

 
  • ஹைப்பர்லூப் ஹோட்டல்
    ஹைப்பர்லூப் ஹோட்டல்
  • ஹைப்பர்லூப் பயணம் மாதிரி படம்
    ஹைப்பர்லூப் பயணம் மாதிரி படம்
 

ஒரு சுற்றுலா போகிறோம். பேருந்து, ரயில், விமானம் எனத் தனித்தனியாகப் பயணிக்க வேண்டும். அதற்காக டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். அதேபோல ஹோட்டல்களுக்கெனத் தனியாகச் செல்ல வேண்டும். அதற்காகவும் புக்கிங் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகச் செல்வதைவிட இருக்கும் இடத்தில் இருந்தபடியே இவை எல்லாம் கிடைத்தால் எப்படியிருக்கும்? கற்பனை செய்து பார்க்கவே முடியாதல்லவா?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் நெவாடா பல்கலைக்கழக ஆர்கிடெட் மாணவர் பிராண்டன் சைப்ரச்ட்டுக்கு இந்தக் கற்பனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதுதான் ஒரே கனவு, லட்சியம் எல்லாம். ஹோட்டலிருந்தே பஸ், ரயில், விமானம் என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதற்கான செயல்வடிவத்தைக் கொடுத்து வருகிறார் இந்த இளைஞர்.

கடந்த ஜூன் மாதம் ‘எதிர்கால ஹோட்டல்களுக்கான டிசைன்’ என்ற தலைப்பில் ஒரு போட்டி அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த 65 வடிவமைப்புகள் வந்தன. அதில் சிறந்த கற்பனைக்கான ‘ரேடிகல் இன்னோவேஷன்’ என்ற பெயரில் பிராண்டன் சமர்ப்பித்திருந்த யோசனை விருதை வென்றது.

இவரின் யோசனைப்படி, எதிர்காலத்தில் அமெரிக்காவில் பல்வேறு இடங்களிலுள்ள ஹோட்டல்களை அனைத்தையும் ‘அதிவேக வளையப் போக்குவரத்து’ என்றழைக்கப்படும் ‘ஹைப்பர்லூப்’ முறையில் இணைத்துவிட்டால் பேருந்து, ரயில், விமானம் எனத் தனி டிக்கெட் எடுக்கத் தேவையில்லையாம்.

அமெரிக்காவின் அடுத்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஹைப்பர்லூப் போக்குவரத்துதான். தங்கிப் பயணிக்கும் அனுபவத்தை இனிதாக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஹைப்பர்லூப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முயல்கிறார் இந்த இளைஞர்!

 

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.