Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இர்மா சூறாவளி: தொடரும் சீற்றம், அதிகரிக்கும் உயிரிழப்புகள்

 

கடந்த வாரத்தில் கரீபியன் தீவுகள் மற்றும் கியூபாவில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய இர்மா சூறாவளி, தற்போது தனது அடுத்த இலக்கான அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஏராளமான சேதங்களை உருவாக்கியுள்ளது.

ஃபுளோரிடாவில் உள்ள வேல் ஹார்பரில் நீர் அளவு உயர்ந்துள்ள காட்சி

ஃபுளோரிடாவில் உள்ள வேல் ஹார்பரில் நீர் அளவு உயர்ந்துள்ள காட்சி

கடும் சூறாவளியால் பாதிப்படைந்த மியாமி நகரம்

கடும் சூறாவளியால் பாதிப்படைந்த மியாமி நகரம்

இர்மா சூறாவளியின் தாக்கத்தால் ஃபுளோரிடாவை விட்டு வெளியேறும் மக்கள்

இர்மா சூறாவளியின் தாக்கத்தால் ஃபுளோரிடாவை விட்டு வெளியேறும் மக்கள்

பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இர்மா சூறாவளி

பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இர்மா சூறாவளி

நகர சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

நகர சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

கரீபியன் தீவுகளில் இர்மா சூறாவளியின் சீற்றம்

கரீபியன் தீவுகளில் இர்மா சூறாவளியின் சீற்றம்

சூறாவளி பாதிப்புக்களை புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்

சூறாவளி பாதிப்புக்களை புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்

மியாமியில் சூறாவளியால் கவிழ்ந்த வாகனம்

மியாமியில் சூறாவளியால் கவிழ்ந்த வாகனம்

சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் செல்ல முடியாத வாகனம்

சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் செல்ல முடியாத வாகனம்

இர்மா சூறாவளியால் டால்பின்களுக்கும் ஆபத்து

இர்மா சூறாவளியால் டால்பின்களுக்கும் ஆபத்து

http://www.bbc.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கோலியின் செயற்பாட்டால் மகிழ்ச்சியில் திழைத்த சிறுவர்கள்

 

 

சிறுவர்களுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெருவோர கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

virat-koli.jpg

கொழும்பு, நாரஹேன்பிட்டி தொடர்மாடி கட்டிடத் தொகுதியில் சிறுவர்களுடன் இணைந்து தெருவோர கிரிக்கெட் விளையாட்டில் கோலி ஈடுபட்டமையானது அனைவரையும் குறிப்பாக சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கோலி, இவ்வாறு தொருவோர கிரிக்கெட்டில் சிறுவர்களுடன் ஈடுபட்டிருந்தார். 

21553011_10208130017122897_187888629_n.j

கோலியின் செயற்பாடு தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் கோலி சிறுவர்களுடன் இணைந்து விளையாடும் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோலி தலைமையிலான இந்திய அணி அனைத்து வகையான போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனைபடைத்ததுடன் கோலியும் பல சாதனைகளைப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  • தொடங்கியவர்

‘தமிழ் சினிமாவில் நடிக்கத் தயார்!’ - ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரில் கலகல பேட்டி #VikatanExclusive #jimikkikammal

 

“அடிப்படையிலயே நான் ஒரு டான்சர், ஆனா இதுக்கு முன்னாடி டான்ஸ் ஆடுனவரைக்கும் ஒரு மாணவியாத்தான் ஆடியிருக்கேன். ஒரு டீச்சரா டான்ஸ் ஆடியிருக்கிறது இதுதான் முதல் தடவை. கேரளாவைத் தாண்டி தமிழ்நாடு வரைக்கும் அந்த டான்ஸ் வைரல் ஆகிருக்குறது ரொம்பவே ஆச்சர்யமாவும் சந்தோசமாவும் இருக்கு.." கலகல சிரிப்போடு ஷெரில் மலையாளம் கலந்து கொஞ்சமாகப் பேசும் தமிழும் நமக்குக் கொஞ்சும் தமிழாகவே இருக்கிறது. ஓணம் கொண்டாட்டத்தின்போது ஷெரில் மற்றும் குழுவினர் ஆடிய ஜிமிக்கி கம்மல்டான்ஸ்தான் தற்போதைய ஆன்லைன் ஹாட் ஹிட்...

ஜிமிக்கி கம்மல்

எப்படி தோணுச்சு இந்த ஐடியா..?

அந்த வீடியோவுல பார்த்த எல்லோருமே கொச்சின் 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்'ல உள்ள ஸ்டூடன்ட்ஸும் டீச்சர்ஸும்தான். இந்த ஐடியாவை கொடுத்தது எங்க மேனேஜர் மிதுன். ஓணம் பண்டிகை, அதே நேரம் ஆசிரியர்கள் தினமும் சேர்ந்தமாதிரி வந்தது. மாணவர்களுக்கும் டீச்சர்ஸுக்கும் இடையில ஒரு விரிசல் இருக்கக் கூடாதுனு இந்த டான்ஸ் ப்ளான் பண்ணினோம். மொத்தம் இருபது டீச்சர்ஸ், நாற்பது மாணவர்கள்னு ப்ராக்டிஸ் பண்ணினோம். ஆனா இந்த அளவுக்கு வைரல் ஆகும்னு நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கல.

ஜிமிக்கி கம்மல்

தமிழ்நாட்டுல இந்த வீடியோவ கொண்டாடுறாங்க தெரியுமா?

அய்யோ ரொம்பவே சந்தோசமா இருக்கு. தமிழ் ஃப்ரெண்ட்ஸோட மெசேஜ்களால என்னோட இன்பாக்ஸ் எல்லாம் நிறைஞ்சு கிடக்கு. எல்லோருக்குமே எனது பேரன்பும் நன்றியும்..

வீடியோ பார்த்துட்டு கிடைச்ச பாராட்டு..?

மலையாள சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்து நிறையப் பேர் போன் பண்ணாங்க. டைரக்டர் லால்ஜோஸ் அப்புறம் இன்னும் நிறையப் பேர் சோஷியல் மீடியாவுல ஷேர் பண்ணிருந்தாங்க. ஒரு படத்துல நடிக்கக் கேட்டாங்க. இப்போதைக்கு எதுவும் முடிவு பண்ணல.

சினிமாவுல நடிக்க இஷ்டம் இருக்கா?

ரொம்ப பிடிச்சுப் போய்தான் டீச்சரா மாறினேன். நடிப்பும் ரொம்ப இஷ்டம். ஆனா அதுக்கு வீட்ல ஒத்துக்கணுமே...

அப்போ தமிழ் சினிமாவுக்கு வருவீங்களா? 

 

 

என்ன இப்படி கேட்டுட்டீங்க? தமிழ் சினிமான்னா ரொம்ப இஷ்டம் சூர்யாவுக்காக வாரணம் ஆயிரமும், வாரணம் ஆயிரத்துக்காக சூர்யாவையும் கணக்கு வழக்கு இல்லாம பார்த்துருக்கேன். நல்ல கேரக்டர் கிடைச்சா தமிழ்ல நடிக்கவும் நான் ரெடிதான்.

வெல்கம் சேச்சி...

Vikatan

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

தமிழின் முன்னணி நடிகை..
அனேக முன்னணி கதாநாயகர்களோடும் ஜோடி போட்டுள்ள அழகிய நாயகி ஷ்ரேயாவின் பிறந்தநாள்.
Happy Birthday Shriya Saran

Bild könnte enthalten: 3 Personen, Personen, die stehen und Text

இந்திய அணியின் முன்னாள் இடதுகை சுழல்பந்து வீச்சாளரும்
இப்போதைய தொலைக்காட்சி வர்ணனையாளருமான முரளி கார்த்திக் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அண்மையில் இலங்கை இந்திய தொடரின் நாணயச் சுழற்சி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

Happy Birthday Murali Kartik

  • தொடங்கியவர்

உடல் உறுப்புகளை 8 பேருக்கு தானம் செய்த 13 வயது சிறுமி

 

 

உடல் உறுப்புகளை 8 பேருக்கு தானம் செய்த 13 வயது சிறுமி
 

மூளை இரத்த நாள வீக்கத்தால் இறந்த 13 வயது சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன.

ஒருவரின் உடல் உறுப்புகள் அதிகமானோருக்கு தானம் செய்யப்பட்டிருக்கும் வரலாற்றுப் பதிவு இதுதான்.

சோமர்செட்டில் வாழ்ந்த ஜெமிமா லேஸெல் 2012 ஆம் ஆண்டு இறந்தார்.

அவருடைய இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம், சிறு குடல் மற்றும் கல்லீரல் உறுப்புகள் 5 குழந்தைகள் உட்பட 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன.

ஜெமிமா மிகவும் புத்திசாலி, இரக்க குணமுடையவர் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர் என்று தெரிவித்திருக்கும் அவருடைய பெற்றோர், அவர் விட்டுச் சென்றுள்ளதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை செய்யப்பட்ட உறுப்புகள் தானத்தில் இவ்வளவு அதிகமானோருக்கு ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் பயன்பட்டதில்லை என்று ஐக்கிய இராஜ்ஜிய தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

தன்னுடைய தாயின் 38-ஆவது பிறந்தநாளுக்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜெமிமா மயக்கமுற்றார்.

குழந்தைகளுக்கான பிரிஸ்டல் ராயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நான்கு நாட்களுக்கு பின்னர் உயிரிழந்தார்.

அவருடைய இதயம், சிறு குடல், கணையம் ஆகியன மூன்று பேருக்கு வழங்கப்பட்டன. அவருடைய சிறுநீரகங்களை இருவர் பெற்றுக்கொண்டனர்.

இந்த சிறுமியின் நுரையீரல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மேலும் இருவர் தானமாகப் பெற்றனர். அவரது இரு கல்லீரல்களும் ஒரு நோயாளிக்கு வழங்கப்பட்டன.

பொதுவாக, தானம் செய்யப்படும் உறுப்புகளில் 2.6 பங்குதான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நிறைவு பெறுகின்றன. எட்டு என்பது வழக்கத்திற்கு மாறான அதிக எண்ணிக்கையாகும்.

நாடகப் பயிற்சியாளராக இருக்கும் 43 வயதான ஜெமிமாவின் தாய் சோஃபி லாஸெலும் கட்டட நிறுவனம் ஒன்றின் மேலாளராக இருக்கும் 49 வயதான தந்தை ஹார்வி லாஸெலும், 17 வயதான ஜெமிமாவின் சகோதரி அமிலியாவும் ‘த ஜெமிமா லெஸெல்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள்.

மூளைக்காயம் ஏற்பட்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவுவதோடு, உறுப்புகளை தானம் வழங்குவதையும் இவர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

http://newsfirst.lk/tamil/

  • தொடங்கியவர்

144 திருமண மோதிரங்கள்... கருவில் இறந்த 17 குழந்தைகள்... 9/11 தாக்குதல் சோகம்...

 

''அம்மா வேலைக்கு வந்துட்டேன்'', ''ஹே டூட் சாஃப்ட ப்ரேக் ஃபாஸ்ட் போலாமா?'', ''நான் உன்னைக் காதலிக்கிறேன்'', ''அந்த க்ளைண்ட் கால் என்னாச்சு'', ''அடுத்த மாசம், ஆப்பிள் ஏதோ புரோடெக்ட் ரிலீஸ் பண்ணப் போகுதாம்...'' 2001-ம் ஆண்டு காலை 8:45 மணிக்கு அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இந்த வார்த்தைகளெல்லாம் கேட்கப்பட்டிருக்கலாம். அடுத்த நிமிடம் இரட்டைக் கோபுரத்தின் ஒரு பகுதியில் விமானம் ஒன்று மோதுகிறது. நெருப்பு ஒவ்வொரு தளமாகப் பரவுகிறது... மக்கள் கூட்டம் பதறி அடித்து ஓடுகிறது. இது, அந்தக் கட்டடத்தில் முதல் 10 தளங்களில் இருந்தவர்களுக்கு உடனடியாகத் தெரியக்கூட வாய்ப்பில்லை. எல்லாரும் பதறி ஓடும்போதுதான் தெரிந்திருக்கிறது. உயிர் பிழைத்தால் போதும் என்று சிலர் மாடியிலிருந்து குதித்தனர். 9/11 தாக்குதல் அமெரிக்காவின் கறுப்பு தினம். 

அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது விமானம் இரட்டைக் கோபுரம் மீது மோதுகிறது. சில நொடிகளில் மொத்த பில்டிங்கும் தரை மட்டமாகிறது. இந்தத் தாக்குதலால் இரட்டைக் கோபுரத்தைச் சுற்றிய பகுதி கட்டட இடிபாடுகள் கிளப்பிய தூசுகளால் மூடப்பட்டது. அமெரிக்காவில் பல மைல் தூரத்துக்கு இந்தத் கட்டட தூசுகள் பறந்ததை நாசாவின் புகைப்படம் விளக்கியது. இரட்டைக் கோபுரங்களில் உள்ள அலுவலகங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணிபுரிந்து வந்தனர். உலக வர்த்தக மையத்துக்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 1.4 லட்சம் பேராம். இந்தத் தாக்குதலுக்குப் பின் 144 திருமண மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டன. கர்ப்பிணி பெண்கள் 17 பேர் தங்களின் கருவில் இருந்த குழந்தைகளோடு சமாதி ஆனார்கள்.  இந்தக் கட்டடத்தில் பரவிய தீயை அணைக்க 100 நாள்கள் ஆனது.  இது, அமெரிக்க வரலாற்றில்  மிகப்பெரிய சோகமாகப் பதிவாகி இருக்கிறது. அந்தத் தருணத்தில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் தாக்கப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாள் விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த ஒரு தகவலும் பதிவாகவில்லை என்பதுதான் அதிர்ச்சி. 

தாக்குதல் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று இருப்பதாக அமெரிக்க அரசு ஓர் ஆடியோவை டிசம்பர் 13, 2001-ல் வெளியிட்டது. 10 வருடங்கள் கழித்து அப்போதைய அதிபர் ஒபாமா, 9/11 ஹெல்த் மற்றும் இழப்பீடு மசோதாவுக்கு அனுமதி வழங்கினார். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற அல்கொய்தா அமைப்பின் தலைமைப் பதவியை வகித்த ஒசாமா பின்லேடன் மே 2, 2011-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கட்டடங்கள் இடிந்து விழுந்து உருவான மாசுகளின் அளவு மட்டும் 1.8 மில்லியன் டன். இதை, பல பணியாளர்கள் சேர்ந்து 3.1 மில்லியன் மணி நேரத்தில் அகற்றியுள்ளனர். 2001 செப்டம்பரில் தொடங்கிய சுத்தப்படுத்தும் பணி 2002 மே 30-ம் தேதிதான் நிறைவடைந்தது. மீண்டும் உலக வர்த்தக மையம் புதுப்பொலிவுடன் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி  திறக்கப்பட்டது. 

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள்.. ஆப்கான் போரைத் தொடங்கி இன்னமும் அப்பகுதியில் தீவிரவாத ஒழிப்பை மேற்கொள்கின்றன. இதில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்ட துயரங்களும் அடங்கும். இந்தத் தாக்குதல் மனிதர்கள் மீதான இரக்கமற்ற தாக்குதலின் ஆரம்பமாக அமைந்தது. இன்றுவரை உலகின் பல இடங்களில் தொடர் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. உலகின் வல்லமை படைத்த நாடான அமெரிக்காவைக் கொஞ்சம் சறுக்கவைத்தது இந்தத் தாக்குதல். உலக நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்களில் ஆரம்பத்துக்கு இந்தச் சம்பவம் விதை என்பதை மறுக்க முடியாது. 16 வருடங்கள் ஆனாலும் இன்னும் பலரைச் சோகத்தில் ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது இந்த 9/11 தாக்குதல்.

9/11 தாக்குதல் நினைவலைகள்

9 11 தாக்குதல்

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பாலியல் தாக்குதலுக்காக சிறையிலடைக்கப்பட்ட ஹரியானா சாமியாரின் ஆடம்பரத் தலைமையகத்தின் உள்ளே...

 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்கிற்கு சொந்தமான, விசித்திர கதையில் வருவது போன்ற பெரிய எஸ்டேட்டின் உள்ளே காணப்படுபவை பற்றிய புகைப்படத் தொகுப்பு

"தேரா சச்சா செளதா" ஆசரமத்திற்கு வரவேற்பு வளைவு

மில்லியன் கணக்கான சீடர்களை கொண்டிருப்பதாக கூறுகின்ற "தேரா சச்சா செளதா" பிரிவின் தலைமையகத்திற்கு வருவோரை வரவேற்கும் பல அலங்கார வளைவுகளில் இதுதான் முதல் அலங்கார வளைவு. இந்தியாவின் வட பகுதியில் அமைந்திருக்கும் ஹரியானா மாநிலத்திலுள்ள சிர்சாவில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரிவின் தலைமையகத்திற்கு இந்த சாலை வழிகாட்டுகிறது.

பிரபல கட்டடங்களின் மாதிரி கட்டப்பட்டுள்ள மாளிகைகள்

மேஜிக் ஷைனிங் கிராண்ட்‘ அல்லது எம்எஸ்ஜி ரிசார்ட். இந்த ரிசார்ட்டில், ஈபிள் கோபுரம் அல்லது தாஜ்மஹால், தனியார் குளங்கள், 3 உணவகங்கள் மற்றும் ஒரு ஸ்பா போன்ற பிரபல கட்டட மாதிரியிலான மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. மகிழ்ச்சியளிக்கும் எம்எஸ்ஜி ரிசார்ட் 5 நட்சத்திர வசதிகளை வழங்குகின்றன என்றும், முதல் பார்வையிலேயே அனைவரின் கவனத்தை ஈர்க்கின்ற புதுப்பாணியிலான உள் அலங்காரங்களை கொண்டுள்ளன என்றும் அதனுடைய இணையதளம் பெருமையுடன் தெரிவிக்கிறது.

மின்சார கார்

லிம்மி என் திம்மி, சார்சன் மற்றும் ராஜ்வாடெ தாட் என்ற பெயருடைய மூன்று உணவகங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தக்கூடிய ‘மேஜிக் ஷைனிங் கிராண்ட்‘ ரிசார்டின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ள படகு வடிவ மின்சார கார்.

எம்எஸ்ஜி குளோரியஸ் சாவதேச பள்ளி

சிர்சாவிலுள்ள "தேரா சச்சா செளதா" பிரிவின் வளாகத்திற்கு உள்ளே இருக்கும் எம்எஸ்ஜி குளோரியஸ் சாவதேச பள்ளியின் நுழைவாயில். “ எந்த குழந்தையையும் விட்டுவிடாமை” என்பதே இந்தப் பள்ளியின் நோக்கமாகும். இந்தப் பள்ளியின் நிறுவனர் குர்மித் ராம் ரஹீம் சிங்கை ” உத்வேகம் அளிப்பவர்” என்று குறிப்பிடும் இந்தப் பள்ளியின் இணையதளம், இதனை தொடங்கிய தாராள செயலுக்காக, இதயப்பூர்வ மரியாதையை ஊழியர்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.

சிங் மாளிகையின் குகை போன்ற நுழைவாயில்

பல பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் “குஃபா” அல்லது குகை இருக்கின்ற குர்மித் ராம் ரஹீம் சிங் மாளிகையின் நுழைவாயில். இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு ஆகஸ்ட் மாதம் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

விளையாட்டு கிராமம்

“விளையாட்டு கிராமத்தை“ நாட்டுக்கு “உயர் மதிப்பு மிகுந்த பரிசு” என்று குர்மித் ராம் ரஹீம் சிங்கின் இணையதளம் விவரிக்கிறது. தன்னை ஆல்-ரவுண்டர் விளையாட்டு வீரர் என்று கூறிக்கொள்ளும் ராம் ரஹீம் சிங், யோகாவிலும், பனி ஹாக்கி விளையாட்டுகளில் இந்தியாவுக்கு வெற்றிகளை கொண்டு வந்தோருக்கு பயிற்சி அளித்தவர் என்று கூறப்படுகிறது. அதிகபட்ச ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வதே இந்த விளையாட்டு வளாகத்தின் நோக்கமாகும்.

"தேரா சச்சா செளதா" பிரிவை வழிநடத்திய தலைவர்கள்

(இடமிருந்து வலமாக) "தேரா சச்சா செளதா" பிரிவை நிறுவிய ஷெஹான்ஷா மஸ்தானா, அதனுடைய இரண்டாவது “மாஸ்டர்” மற்றும் “மிகவும் மதிப்பளிக்கப்படும் தந்தை” ஷா சாட்நாம் சிங் மற்றும் ”தற்போதைய மாஸ்டர்” மற்றும் “மிகவும் மதிப்பளிக்கப்படும் தந்தை” தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மித் ராம் ரஹீம் சிங்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘காதலின் பார்வை என்றும் வசீகரம்’
 

image_eea9f30be5.jpgஉன் விழி மொழி அறியாதவன் நான் அல்லன். மொழி சுரக்க இதழும் நாவும் கூச்சப்பட அதை உணர்த்துவதே விழிகளின் அசைவுதான். நயனங்கள் திறம்படப் பேசும்.  

நின் உதடுகளுக்குச் சொந்தக்காரன்; எனவே என் பேச்சிலும் உன் குரல் கலந்து கவிபாடும்.

உனது நிழல்கூட முழு உருவமாய்த் தெரிகிறது. கைபேசியின் பதிவுகளைவிட, பல்லாயிரம் உன்விம்பங்களை என் நெஞ்சில் பொருத்தி, என்னை நான் அழகுபடுத்துகின்றேன். 

காதல் இலக்கியங்களைப் படிக்க, இஷ்டமில்லாமல் இருந்தவன், உன் கண்கள் அசைத்ததிலிருந்து கண்டுகொண்டேன் இந்த வலுவை. எல்லாமே பெற்ற திருப்தி எங்கிருந்து வந்தது? உன் பிரேமை என்னை முழுமையாக்கியது. 

நல்ல காதலி வல்லமை தருவாள். ஒளி இல்லாத வழியிலும் பத்திரமாக இட்டுச் செல்வாள். நீண்ட வழிப்பயணம். இந்த வாழ்க்கையில் வழுக்கல், சறுக்கல்கள் தானாகத் தேடி வரும். காதலி கரம் கரிசனையானால் செல்லும் பாதை வழிசமைத்து உலகைக் காட்டும். 

இளமைக்கு மட்டுமல்ல, முதுமைக்கே காதலின் தேவை அதிகமாகத் தேவைப்படுகின்றது. காதலின் கரிசனைப் பார்வை என்றும் வசீகரம். அன்பான காதலர்களுக்கு சந்தோசம் என்றும் நிரந்தரம். 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

செப்டெம்பர் – 12

 

கிமு 490 : மரதன் என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் பார­சீ­கத்தை கிரேக்கம் தோற்­க­டித்­தது. பிடிப்­பிடஸ் என்ற கிரேக்க வீரன் இவ்­வெற்றிச் செய்­தியைத் தெரி­விக்க நெடுந்­தூரம் ஓடினான். மரதன் ஓட்­டப்­போட்­டிக்கு இத­னா­லேயே இப்­பெயர் சூட்­டப்­பட்­டது.
1683: ஒட்­டோமான் பேர­ரசைத் தோற்­க­டிக்கும் முயற்­சியில் பல ஐரோப்­பிய நாடுகள் வியென்­னாவில் இடம்­பெற்ற போரில் ஒன்­றி­ணைந்­தன.


1759 : பிரித்­தா­னியப் படை­யினர் கியூபெக் நகரைக் கைப்­பற்­றினர்.


1948-varalaru1848 :  சுவிட்­ஸர்­லாந்து, கூட்­ட­மைப்பு (சமஷ்டி) ஆட்­சியை நடை­ மு­றைப்­ப­டுத்­தி­யது.


1857 : அமெ­ரிக்­காவின் வட கரோ­லினா மாநி­லத்தில் பய­ணிகள் கப்பல் மூழ்­கி­யதில் 426 பேர் கொல்­லப்­பட்­டனர். இக்­கப்­பலில் சுமார் 15 தொன் தங்கம் கொண்டு செல்­லப்­பட்­டது.


1919 : ஜேர்­ம­னிய தொழி­லாளர் கட்­சியில் அடோல்ப் ஹிட்லர் இணைந்தார்.


1930 : இங்­கி­லாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீர­ரான வில்­பரட் ரோட்ஸ் தனது  1110 ஆவது முதல்­தரப் போட்­டியில் விளை­யா­டி­யபின் முதல் தரப் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற்றார். உலகில் அதிக முதல்­தரப் போட்­டி­களில் விளை­யா­டிய வீரர் இவர்.


1933 : அணுக்­கரு தொடர்­வினை குறித்த கருத்தை முதன்முத­லாக லியோ சிலார்ட் அறி­வித்தார்.


1940 : அமெ­ரிக்­காவின் நியூ ஜேர்­ஸியில் தொழிற்­சாலை ஒன்றில் இடம்­பெற்ற வெடி­வி­பத்தில் 51 பேர் கொல்­லப்­பட்டு 200 பேர் காய­முற்­றனர்.


1942 : இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடு­களின் போர்­வீ­ரர்கள், இத்­தா­லியப் போர்க்­கை­திகள் மற்றும் பொது­மக்­களை ஏற்றிச் என்ற லக்­கோ­னியா என்ற கப்பல் மேற்கு ஆபி­ரிக்­காவில் ஜேர்­ம­னி­யர்­களால் தாக்­கப்­பட்டு மூழ்­கி­யது.


1943 : இரண்டாம் உலகப் போர்: இத்­தா­லிய சர்­வா­தி­காரி முசோ­லி­னி, வீட்­டுக்­கா­வ­லி­லி­ருந்து ஜேர்­ம­னிய படைத்­த­ள­பதி ஒட்டோ ஸ்கோர்­செனி என்­ப­வரால் விடு­விக்­கப்­பட்டார்.


1948 :  இந்­தி­யாவில் நிஜாம் ஆட்­சிக்­குட்­பட்­டி­ருந்த ஹைத­ரபாத் மாநி­லத் தின் இந்திய இராணுவம் நுழைந்­தது. 


1959 : லூனா 2 விண்­க­லத்தை சோவியத் ஒன்­றியம் ஏவி­யது. சந்­தி­ரனை அடைந்த முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.


1974 : எதி­யோப்­பி­யாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் மன்னர் ஹைலி செலாசி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.


1977 : தென் ஆபி­ரிக்­காவின் நிற­வெறிக் கொள்­கைக்கு எதி­ராக போரா­டிய ஸ்டீவ் பைக்கோ பொலிஸ் காவலில் இருந்­த­போது கொல்­லப்­பட்டார்.


1979 : இந்­தோ­னே­ஷி­யாவில் 8.1 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் இடம்­பெற்­றது.


1980 : துருக்­கியில் இரா­ணுவப் புரட்சி இடம்­பெற்­றது.


1992 : நாசாவின் எண்­டெவர் விண்­ணோடம்  விண்­ணுக்கு ஏவப்­பட்­டது. விண்­வெ­ளிக்குச் சென்ற முத­லா­வது கறுப்பு – அமெ­ரிக்கப் பெண்­ணான மேய் சரோல் ஜமிசன், அமெ­ரிக்க விண்­க­லத்தில் விண்­வெ­ளிக்குச் சென்ற முதல் ஜப்­பா­னி­ய­ரான மமோரு மொஹ்ரி, விண்­வெ­ளிக்குச் சென்ற திரு­ம­ண­மான முதல் தம்­ப­தி­க­ளான மார்க் லீ, ஜேன் டேவிஸ் ஆகியோர் இவ்­விண்­க­லத்தில் பய­ணித்­தனர். 


2001 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் மாநி­லங்­க­ளுக்­கு இடை­யே­யான முத­லா­வது பய­ணிகள் போக்­கு­வ­ரத்து விமான சேவை நிறு­வ­ன­மான “ஆன்செட் அவுஸ்­தி­ரே­லியா” மூடப்­பட்­டது. இதனால் சுமார் 10,000 பேர் வேலை­யி­ழந்­தனர்.


2003 : ஈராக்கின் பலூஜா நகரில் அமெ­ரிக்கப் படை­யி­னரால் ஈராக்­கிய பொலிஸார் 8 பேர் தற்­செ­ய­லாக சுட்­டுக்­கொல்­லப்­பட்­டனர். 


2003 : லிபியா மீதான தடை­களை ஐ.நா. நீக்­கி­யது.


2005 : காஸா பகு­தியில் இருந்து இஸ்ரேல்  தனது படை­களை  விலக்­கி­யது.


2005 : ஹொங்­கொங்கில் ஹொங்கொங் டிஸ்­னிலாண்ட் திறக்­கப்­பட்­டது.


2008 : அமெ­ரிக்­காவில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 25 பேர் உயி­ரி­ழந்­தனர்.


2011 : செப்­டெம்பர் 11 தாக்­குதல் நினை­வகம் நியூ­யோர்க்கில் திறக்­கப்­பட்­டது.


2015 : இந்­தி­யாவின் மத்­திய பிர­தேச மாநி­லத்தின் பெட்­லாவாட் நகரில் சட்­ட­வி­ரோ­த­மாக களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த வெடி­பொ­ருட்கள் வெடித்­ததால் 105 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

உடல் எடையை குறைக்குமாறு வலியுறுத்தப்பட்டதால் அழகுராணி பட்டத்தைத் துறந்த யுவதி!

பிரிட்­டனைச் சேர்ந்த அழ­கு­ரா­ணி­யொ­ருவர், தனது உடல் எடையை வெகு­வாக குறைக்­கு­மாறு போட்டி ஏற்­பாட்­டா­ளர்­களால் கோரப்­பட்­டதால் அழ­கு­ராணி பட்­டத்தை துறந்­துள்ளார்.

Zoiey-Smale-58

28 வய­தான ஸோயி ஸ்மேல் எனும் இந்த யுவதி இங்­கி­லாந்தின் நோட்­டிங்­ஹாம்­ஷயர் பிராந்­தி­யத்தைச் சேர்ந்­தவர். 


இவர் அண்­மையில் நடை­பெற்ற மிஸ் யுனைடெட் கொன்­டினென்ட்ஸ் யூ.கே. அழ­கு­ராணி போட்­டியில் முத­லிடம் பெற்­றி­ருந்தார். இதன் மூலம், இம்­மாதம் ஈக்­கு­வ­டோரில் நடை­பெ­ற­வுள்ள  மிஸ் யுனைடெட் கொன்­டினென்ட்ஸ் போட்­டியில் பிரிட்­டனின் சார்பில் பங்­கு­பற்­று­வ­தற்கும் அவர் தெரி­வு ­செய்­யப்­பட்­டி­ருந்தார்.

Zoiey-Smale1

எனினும், ஸோயி ஸ்மேலின் உடல் எடையை குறைக்­கு­மாறு மிஸ் யுனைடெட் கொன்­டினென்ட்ஸ் யூ.கே. அழ­கு­ராணி போட்டி ஏற்­பாட்­டா­ளர்கள் வலி­யு­றுத்­தி­னராம். 


அதிக உடற்­ப­ருமன் கொண்­ட­வ­ரல்லர் ஸோயி. இந்­நி­லையில் அழ­கு­ராணி போட்டி ஏற்­பாட்­டா­ளர்­களின் இந்தக் கோரிக்­கை­யினால் அதி­ருப்­தி­ய­டைந்த அவர் தனது அழ­கு­ராணி பட்­டத்தை துறப்­ப­தாக அறி­வித்தார். தனக்கு அணி­விக்­கப்­பட்ட அழ­கு­ராணி கிரீ­டத்­தையும் அவர் துறந்­துள்ளார். 

Zoiey-Smale-2

உடல் எடையை இயன்­ற­வரை குறைக்­கு­மாறு, அழ­கு­ராணி போட்டி ஏற்­பாட்­டா­ளர்கள் தொலை­பேசி மூலம் தன்னைக் கோரி­ய­ போது, தான் பெரும் வியப்­ப­டைந்­த­தாக ஸோயி ஸ்மேல் தெரி­வித்­துள்ளார்.  '21 ஆம் நூற்­றாண்டில் இப்­ப­டி­யான ஒரு அபத்­த­மான விட­யத்தை நீங்கள் எதிர்­பார்க்க மாட்­டீர்கள்' என அவர் கூறி­யுள்ளார்.


'சைஸ் ஸீரோ அள­வு­டை­ய­வர்­களை மாத்­தி­ரமே முன்னுதாரணமாக கருதும் அழகுராணி போட்டிகள் தற்போதும் நடைபெறுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது' எனவும் ஸோயி ஸ்மேல் தெரிவித்துள்ளார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

'நாம் இருவர்' முதல் நாட்டுடைமை வரை..! பாரதியின் படைப்புகள் கடந்து வந்த பாதை ⁠⁠⁠⁠

 
 

t.r._mahalingam_15129.jpg

ம் புரட்சிகரமான பாடல்களாலும் கட்டுரைகளாலும் மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஊட்டி வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் பாரதி. தம் வாழ்நாளில் அவர் கண்ட எதிர்ப்பைவிடவும் பன்மடங்கு எதிர்ப்பை அவரது படைப்புகள்  அவர் காலத்துக்குப்பின் சந்தித்தன. மக்களின் பொழுதுபோக்கு ஊடகமான சினிமாவில் தொடங்கி நூல் பதிப்புகள் வரை பாரதியின் படைப்புகள் சந்தித்த பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல! 

பாரதி பாடல் இடம்பெற்ற முதல் சினிமா இதுதான் தெரியுமா?

''தணிக்கை எதுவுமின்றி ஒரு திரைப்படத்தை எடுக்க எனக்கு அனுமதி தந்தால், திராவிட நாட்டை நான் அடைந்துவிடுவேன்” என சொன்னார் அண்ணா. சினிமா என்ற ஊடகத்தின் வலிமை அத்தகையது என்பதைத்தான் அத்தனை வீரியமாகச் சொன்னார் அவர். உண்மையும் அதுதான். காங்கிரஸுக்குப் பின் தமிழகத்தை நேற்று வரை ஆண்டவர்கள் அந்த அண்ணாவின் வாரிசுகள்தானே?

தமிழகத்தின் ஒப்பற்றக் கவியான பாரதியின் பாடலை யாரையாவது பாடச்சொன்னால், நிச்சயம் அவர்கள் ஏதோவொரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலைத்தான் அதே ராகத்தோடு பாடுவார்கள். கூடவே அதே இசையுடன். சினிமாவின் சக்தி அதுதான். 3 மணிநேரம் திரையில் ஓடக்கூடிய சினிமா மக்களின் மனதில் உருவாக்கும் மாற்றமும் அதன் எதிர்வினையும் தமிழகத்தில் ஆச்சர்யமும் அலாதியுமானது. சினிமாவைத் தவிர்த்துவிட்டு தமிழர்களின் வாழ்வைச் சிந்திப்பது அபாயகரமானது. அப்படி ஓர் உறவு சினிமா உருவான காலத்திலிருந்தே உண்டு.

பாரதியார் பாரதியின் பாடல்கள் நூல் வடிவில் இன்றுவரை ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள் மூலமாக வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் அவரது பாடல்கள் ஒரு சினிமாவில் இடம்பெற்றபோது தமிழக மக்கள் ஆனந்தமும் ஆச்சர்யமும் அடைந்தார்கள். தேர்ந்த இசையில் பாரதியின் பாடல்கள் தங்கள் காதுகளில் விழுந்தபோது ஆனந்தக்கூத்தாடி மகிழ்ந்தார்கள். திரைப்படத்தில் தாங்கள் கேட்டு மகிழ்ந்த பாரதியின் பாடல்களை அந்நாளில் திரும்பத் திரும்பப் பாடி மகிழ்ந்தனர். பாரதியின் பல பாடல்கள் இடம்பெற்றதால் புகழ்பெற்ற அந்தத் திரைப்படம் 'நாம் இருவர்'. 1947-ல் வெளியான இப்படத்தைத் தயாரித்தது ஏவி.எம் நிறுவனம். ஹாலிவுட் ஸ்டூடியோக்களுக்கு நிகராகத் தென்னிந்திய திரையுலகில் பொன்விழா கண்ட ஒரே நிறுவனம் ஏவி.எம் நிறுவனம். 

காரைக்குடியில் ஸ்டூடியோ அமைத்து படங்களைத் தயாரித்துவந்த மெய்யப்பன் என்ற இளம் தயாரிப்பாளர் சினிமா தயாரிப்பில் ஏற்பட்ட சிறு நஷ்டத்தால் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஏவி.மெய்யப்பன் என்கிற தன் பெயரை சுருக்கி ஏவி.எம் ஸ்டூடியோ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னாளில் புகழ்பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டு சிறந்த பொழுதுபோக்கு சினிமா தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது ஏவி.எம்! அந்நாளில் திரைப்படத்துறையில் இயங்கிவந்த  தேசபக்தி கொண்ட கலைஞர்கள் பலர் தாங்கள் சார்ந்த திரைப்படங்களின் மூலம் தேசபக்தியை ஊட்டும் திரைப்படங்களை எடுத்துவந்தனர். காந்தியவாதியான மெய்யப்பனுக்கும் அப்படி ஓர் எண்ணம் இருந்தது. 

அதற்கான கதை ஒன்றைத் தேடிவந்த சமயத்தில்தான் சென்னை ஒற்றைவாடை நாடகக்கொட்டகையில் கலைவாணர் என்.எஸ்.கே நாடக சபையினர் நடத்திவந்த 'நாம் இருவர்' என்ற சமூக நாடகத்தை ஏவி.எம் பார்க்க நேர்ந்தது. 'தியாக உள்ளம்' எனப் பிரபல இயக்குநர் நீலகண்டனால் நடத்தப்பட்டு வந்த நாடகத்தை நீலகண்டனிடமிருந்து வாங்கி  'நாம் இருவர்' எனத் தலைப்பு மாற்றி என்.எஸ்.கே நாடக சபை நடத்தி வந்தது. நாடகம் பெரு வெற்றி. நாடகத்தின் வசனங்களும் அதன் காட்சியமைப்புகளும் ஏவி.மெய்யப்பனை வெகுவாகக் கவர்ந்தது. நாடகத்தில் கதைக்கு ஏற்ற இடங்களில் இடம்பெற்றிருந்த 'அச்சமில்லை அச்சமில்லை, விடுதலை விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே' போன்ற பாடல்கள் நாடகத்துக்கு இன்னும் உணர்ச்சியைக் கூட்டியிருந்தது. நாடகத்தின் கதையை எழுதி இயக்கிய ப.நீலகண்டனை அழைத்துப் பாராட்டிய ஏவி.எம், நாடகத்தை தான் படமாக எடுக்கவிருக்கும் விருப்பத்தையும் தெரிவித்தார். 3,000 ரூபாயில் ஒப்பந்தம் உருவானது. நீலகண்டனை தனக்கு உதவி இயக்குநராகவும் அமர்த்திக்கொண்டார். கதாநாயகன் அன்றைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான டி.ஆர்.மகாலிங்கம். கதாநாயகி டி.ஏ.ஜெயலட்சுமி. உலகப்புகழ் நடனமேதை குமாரி கமலாவும் இதில் நடித்திருந்தார்.

தேவகோட்டை ரஸ்தாவில் கழனிக்காடாக இருந்த ஓர் இடத்தைப் படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்து தற்காலிகமாக ஒரு ஸ்டூடியோவை நிர்மானித்து 3 மாதங்களில் இந்தப் படத்தை எடுத்துமுடித்தார் ஏவி.மெய்யப்பன். 

புராணப் படங்களும் மாயாஜாலப் படங்களும் வெளிவந்து மக்களை மகிழ்வித்துக்கொண்டிருந்த நேரத்தில், தேசபக்தியை வளர்க்கும் சமூகப்படமாக வெளிவந்த படம் 'நாம் இருவர்.' சுதந்திர வேட்கை நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலகட்டமான 1946-ம் ஆண்டின் இறுதியில் 'நாம் இருவர்' படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்கின. 

 காரைக்குடியில் அப்போது லேப் வசதி கிடையாது என்பதால், பகல் முழுவதும் எடுக்கப்பட்ட காட்சிகளின் ஃபிலிம்களை அன்றிரவு போட் மெயில் ரயிலில் சென்னைக்கு அனுப்பிவைப்பார் ஏவி.எம். அத்தனை சிரமங்களுக்கு மத்தியில் தயாரானது படம். தேசபக்திப் படம் என்பதால் வசனங்கள், காட்சிகள் அதற்கேற்றவகையில் கதையில் சேர்க்கப்பட்டன. அந்த வரிசையில் புரட்சிகரமான வரிகளைக்கொண்ட பாடல்களைப் படத்தில் சேர்க்க விரும்பினார். அப்போது, கனல் தெறிக்கும் தன் பாடல்களால் தமிழர்களால் தேசிய உணர்ச்சிகளை ஊட்டிய பாரதியின் பாடல்களைப் படத்திலும் இடம்பெறச்செய்தால் என்னவென்று 'மேனா' என்கிற ஏவி.எம் செட்டியாருக்கு ஒரு யோசனை உதித்தது. தன் ஆசையை நிறைவேற்ற உடனடியாகக் களத்தில் இறங்கினார்.

டி.ஆர் மகாலிங்கம்

ஆனால், பாரதியின் பாடல்களைப் பயன்படுத்துவதில் இரு சிக்கல்கள் இருந்தன. ஒன்று அது பிரிட்டிஷ் காலம். மற்றொன்று பாரதியின் பாடல்களின் ஒலிப்பதிவு உரிமை பாரதி குடும்பத்தாரிடம் இல்லாதது.

அப்போது, 'சுராஜ்மல் அண்ட் சன்ஸ்' என்ற நிறுவனம் பாரதியின் பாடல்களைத் தங்கள் இசைத்தட்டு கம்பெனி மூலம் வெளியிட உரிமை பெற்றிருந்தது. அதாவது, பாரதியாரின் பாடல் ஒலிப்பதிவு உரிமையை பாரதியின் சகோதரர் விஸ்வநாதன் மூலம் 600 ரூபாய்க்கு பெற்றிருந்தது. ஆனால், சில காரணங்களால் அது வெளியிடப்படவில்லை. கொஞ்சநாளில் அந்த நிறுவனமும் மூடப்பட்டது. ஆனாலும், உரிமை அவர்களிடம் இருந்தது. இதையறிந்து அவர்களை அணுகினார் ஏவி.எம். ஆனால், சுராஜ்மல் பாரதியின் பாடல் உரிமத்துக்கு 10,000 ரூபாய் கேட்டு அதிசயிக்கவைத்தார். 40-களில் பத்தாயிரம் என்பது இன்றைக்கு லட்சக்கணக்கான மதிப்பு. ஆனாலும், பாரதியாரின் பாடல்களைத் தம் படத்தில் இடம்பெறவைக்க வேண்டும் என்ற ஆசையில் எந்தப் பேரமும் இன்றி உரிமையை வாங்கினார். 

'நாம் இருவர்' படம் 1947 ஜனவரியில் பொங்கல் தினத்தன்று மதுரையில் ரிலீஸானது. 'அச்சமில்லை அச்சமில்லை, விடுதலை விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே, கண்ணில் தெரியுது ஒரு தோற்றம், சோலை மலரொலியோ உனது சுந்தரப் புன்னகைதான், வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நானுக்கு, வெற்றிஎட்டுத்திக்குமெட்டக் கொட்டு முரசே' ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தன. தங்கள் தேசியக் கவியின் பாடல்களைத் திரையில் நாயகனும் நாயகியும் பாடக்கேட்டு உணர்ச்சிகரமாகியது தமிழ்க்கூறும் நல்லுலகம். பத்திரிகைகளும் தமிழ்ச்சான்றோர்களும் ஏவி.எம் செட்டியாரைப் புகழ்ந்துத் தள்ளினர். பாரதியின் பாடல்களைப் பாடிக்கொண்டு படம் ஓடிக்கொண்டிருந்தபோதே நாடு சுதந்திரமடையும் நன்னாள் வந்தது, 'நாம் இருவர்' படத்துக்கு இன்னுமொரு சிறப்பு.

avm'பாரதியாரின் பாடல்கள் இந்தளவு மக்களை கவர்ந்திருப்பதால், இப்படம் மெய்யப்பனுக்கு பெரும் வெற்றியைத்தேடித்தரும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்' என கல்கி விமர்சனம் எழுதியிருந்தார்.

'நாம் இருவர் - படத்தைப் பார்த்தேன் அப்படியே பிரமித்துவிட்டேன்' என ஏவி.எம்-க்கு கடிதம் எழுதி பாராட்டினார் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்

பாரதி பாடல்களின் உரிமம் குறித்த பிரச்னையால் அதன் பின்னரும் அரிதாகவே சினிமாக்களில் பாரதியின் பாடல்கள் இடம்பெற்றன. உண்மையில் பாரதியின் பாடல்கள் இடம்பெற்ற முதற்திரைப்படம் 'நாம் இருவர்' அல்ல... 1935-ல் வெளியான டி.கே.எஸ் சகோதரர்களின் 'மேனகா' திரைப்படம்தான் பாரதியின் பாடல்கள் இடம்பெற்ற முதற்படம்! அதுவும் சாதாரணமாக இடம்பெற்றுவிடவில்லை. அதற்குப்பின்னணியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு. 

1926 பொதுத்தேர்தலில் வெளியான குழப்பமான முடிவுகளுக்குப்பின் டாக்டர் பி.சுப்பராயன் தலைமையில், சென்னை மாகாணத்தில் மந்திரி சபை அமைக்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்த பர்மாவில் ராஜதுவேஷ கருத்துகள் நிறைந்திருப்பதாகக் கூறி பாரதியின் 'ஸ்வதேச கீதங்கள்' பாடல் நூலுக்குத் தடை விதிக்கப்பட்டது. அது 1928 ஆகஸ்ட் 7-ம் நாள். அதே ஆண்டில் செப்டம்பர் 11-ம் தேதி சென்னை ராஜதானியிலும் பாரதியின் பாடல்களைத் தடைசெய்வதாக உத்தரவு பிறப்பித்தது சென்னை மாகாண அரசு.

உச்சகட்டமாக பாரதியின் பாடல் நூல்களைப் பறிமுதல் செய்தும் உத்தரவிட்டது சென்னை மாகாண மாஜிஸ்திரேட் நீதிமன்றம். இதைக் கண்டித்து 1928 சென்னை சட்டசபையில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார் காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி. அவர் உள்ளிட்ட 76 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்களில் பனகல் மகாராஜா, பி.டி ராஜன், டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட நீதிக்கட்சித் தலைவர்களும் முத்துலட்சுமி ரெட்டியும் அடக்கம்.

தடையை ஆதரித்து 8 ஆங்கிலேய உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 வாக்குகள் பதிவாகின. முதலமைச்சர் உள்ளிட்ட 15 பேர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தனர். தீர்மானம் வெற்றிபெற்றது. அதேசமயம் இந்தத் தடை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் 'பாரதியின் பாடல்கள் தேச விரோதமானவை அல்ல' எனத் தீர்ப்பு வெளியானது. வெள்ளையர்களால் இந்தத் தோல்வியை ஏற்க முடியவில்லை. தங்களுக்கு ஏற்றபடி எதையும் வளைத்துக்கொள்ளும் சுபாவம்கொண்ட அவர்கள் முள்ளை முள்ளால் எடுக்க முற்பட்டனர். 

ஆம்... அவசர அவசரமாகத் திரைப்படத் தணிக்கைச் சட்டம் மூலமாக விடுதலை உணர்வு பாடல்களைத் தணிக்கை செய்தனர். இதனால், பாரதியின் பாடல்களைத் திரைப்படங்கள் நாடகங்களில் பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

பாரதியின் பாடல்களுக்கு ஆங்கிலேய ஆட்சியில் கடும் கட்டுப்பாடு இருந்தாலும் முதன்முதலாக அந்தக் கட்டுப்பாட்டைத் துணிச்சலுடன் உடைத்தது, மேனகா திரைப்படம்.சிறந்த தேசபக்தர்களான டி.கே.எஸ் சகோதரர்கள் தயாரித்த இந்தத் திரைப்படத்தில், “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி, வாழி வாழியவே'' என்ற பாரதியின் பாடல் இடம்பெற்றிருக்கிறது. படத்தின் கதைக்கும் பாரதியின் பாடலுக்கும் துளியும் சம்பந்தமில்லை. என்றாலும் பாரதியின் பாடலை இடம்பெறச் செய்வதற்காகப் பள்ளி மாணவர்கள் அனைவரும் கூடி இந்தப் பாடலைப் பாடுவதாகச் சாமர்த்தியமாக நுழைத்திருந்தார் இயக்குநர் ராஜாசாண்டோ. படத்தின் பாட்டுப்புத்தகத்தில் பாடலாசிரியர் வரிசையில் பாரதியின் பெயரையும் துணிச்சலாக வெளியிடச்செய்தார் டி.கே.சண்முகம். பாரதியின் பாடல்களை முதன்முதலில் தங்களது தேசபக்தி நாடகத்துக்குப் பயன்படுத்திய பெருமையும் டி.கே.எஸ் சகோதரர்களையே சாரும்.

டி.கே.சண்முகம்

பாரதியின் பாடல் இடம்பெற்ற இரண்டாவது திரைப்படம், 1937-ம் ஆண்டு வெளியான 'நவயுகன்' அல்லது 'கீதாசாரம்'. டி.கே.எஸ் சகோதரர்களின் துணிச்சல் இந்தப் படத் தயாரிப்பாளருக்கு இல்லை. பாடலைப் பயன்படுத்திக்கொண்டாலும் படத்திலோ பாட்டு புத்தகத்திலோ எங்கும் பாரதியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இதன்பிறகு, பாரதியின் பாடல்களின் உரிமம் சட்டப்படி அவர்களது குடும்பத்தாருக்கு உரியது என அறியப்பட்டதால், பரவலாக சினிமாவில் பாரதியின் பாடல்கள் பயன்படுத்தப்படவில்லை. அல்லது முயற்சி எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில்தான் 1946-ம் ஆண்டு 'நாம் இருவர்' திரைப்படம் வெளியாகி பாரதியின்  பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. பாரதி பாடல்கள் குறித்த ஞானம் இல்லாத பாமரர்களையும், பாடல்களை முணுமுணுக்க வைத்தது 'நாம் இருவர்' படம். பாரதியின் பாடல்கள் அதிகம் பேசப்படக் காரணமான சினிமா என்று 'நாம் இருவர்' படத்தைச் சொல்லலாம். 

திரைப்படங்களில் பாரதி பாடல்களைப் பரவலாக எடுத்துச் செல்வதில் இருந்த சிக்கலைப் போன்றே அவரது படைப்புகளை வெளியிடுவதிலும் உரிமம் குறித்த பிரச்னை இருந்துவந்தது.

பாரதியார் குடும்பம்பாரதியின் காலத்துக்குப் பின் செல்லம்மாளுக்குப் பொருளாதார நெருக்கடி வந்தது. இதையடுத்து செல்லம்மாளே தனது உறவினர் ஹரிஹர ஷர்மாவுடன் இணைந்து 'பாரதி ஆசிரமம்' என்ற பதிப்பகம் வாயிலாக பாரதியின் படைப்புகளை வெளியிட்டுவந்தார். ஆனால், பலன் ஒன்றுமில்லை. பொருளாதார நெருக்கடிக்காக செல்லம்மாள், பாரதியார் படைப்புகளின் உரிமையை விற்க முன்வந்தும் யாரும் 3,500 ரூபாய்க்கு மேல் தரத் தயாரில்லை. பாரதியின் நண்பர்களில் ஒருவரான வை.சு.சண்முகம் பாரதியின் குடும்பத்துக்கு உதவும் நோக்கில், 10 ஆயிரம் ரூபாய்க்கு தானே  உரிமத்தைப் பெற்றுக்கொண்டு பாரதியின் படைப்புகளை வெளியிட முயற்சி எடுத்தார். ஆனால், பாரதியின் சகோதரர் விஸ்வநாதன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி கைகூடவில்லை.

இதனிடையே பாரதி ஆசிரமம் வெளியிட்டு விற்கப்படாத பாரதியின் நூல் பிரதிகளின்பேரில் ஹரிஹர ஷர்மா, பாரதி மகள் திருமணத்துக்காக 2,000 ரூபாய் கடன் பெற்றார். இந்தச் சமயத்தில்தான் பாரதியின் படைப்பு உரிமை அவரது குடும்பத்தாரிடமே இருக்கும்படியாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது ஹரிஹர ஷர்மா, பாரதியின் தம்பி விஸ்வநாதன் மற்றும் சகுந்தலாவின் கணவர் நடராஜன் மூவரும் 'பாரதி பிரசுராலயம்' என்ற பெயரில் தாங்களே பாரதியின் படைப்புகளை வெளியிடுவது என முடிவானது.

அதன்படி பாரதியின் மொத்தப் படைப்புகளின் உரிமையை அவரது மனைவி செல்லம்மாள், பாரதி பிரசுராலயத்துக்கு 1931-ம் ஆண்டு 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்றார். பாரதியின் இளைய மகள் சகுந்தலா திருமணத்துக்காக அளித்த தொகை 2,000 போக மீதத்தொகையை சில தவணைகளில் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால்,  சில ஆண்டுகளிலேயே பாரதி பிரசுராலயம்  ஒப்பந்தபடி நடந்துகொள்ளவில்லை என பிரச்னை கிளப்பினார் செல்லம்மாள் பாரதி. பாரதியின் மொத்த படைப்புகளின் உரிமையையும் இழந்துவிட்டதோடு போதிய வருவாயும் இன்றி அவதிப்பட்ட செல்லம்மாளுக்காகப் பல சான்றோர்கள் குரல் கொடுத்தனர். இதனால் பாரதி பிரசுராலயத்தில் குழப்பம் உருவானது. ஒவ்வொருவராக விலக ஆரம்பித்தனர். இறுதியாக விஸ்வநாதன் மட்டுமே பாரதி பிரசுராலயத்தை நடத்தினார்.

பாரதியின் படைப்பு உரிமம் குறித்த பிரச்னை பல காலங்களாகத் தொடர்ந்து வந்தபோது பாரதியின் படைப்புகளை அரசுடைமையாக்க வேண்டும் என்ற குரலும் தமிழத்தில் வலுவாக ஒலிக்க ஆரம்பித்தது. கல்கி போன்ற பிரபலங்கள் அதை அழுத்தமாக வலியுறுத்தினர். உரிமைப் பிரச்னையால் பாரதியின் படைப்புகள் பரவலாகப் போய்ச் சேராமல் இருப்பதாக அவர்கள் வாதம் வைத்தனர்.

நாளுக்கு நாள் இந்தக் கோரிக்கை வலுப்பெற்றுவந்த நேரத்தில், 1949-ம் ஆண்டு பாரதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படுவதாக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அறிவித்தார். பாரதி பிரசுராலயத்திடமிருந்து பதிப்புரிமையை விலைக்கு வாங்கியது தமிழக அரசு. செல்லம்மாளுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் பாரதியின் இரு மகள்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயை வழங்கியது.

பாரதியின் படைப்புகள் நாட்டுடைமையான தகவல் வெளியானதும் தமிழக அரசின் கடிதத்தை எதிர்பார்த்திராமல், தானே முன்வந்து தன்னிடம் இருந்த பாரதி பாடல்கள் ஒலிப்பதிவு உரிமையை எந்தப் பிரதிபலனுமின்றி அரசிடம் ஒப்படைத்தார் ஏவி.எம்.!

bharathiyar

பாரதியின் படைப்புகள் அரசுடைமையானது. முன்பு வெள்ளையர்களின் சட்டச்சிறை பின்னர் தனிமனிதர்களின் வீட்டுச்சிறை என முடங்கிக்கிடந்த பாரதி முற்றாக விடுதலையானார். சிறு பதிப்பகங்கள் முதல் பிரபல பதிப்பகங்கள் வரை பாரதியை அடுத்தடுத்து தமிழுலகின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தின. பாரதியின் புகழ்பரவக் காரணமாகின இந்த நடவடிக்கைகள்.

தமிழ்த் திரைப்படங்களில் அஞ்சி அஞ்சி பாரதியின் பாடல்களைப் பயன்படுத்திய காலம் போய் தேசப்பற்று கொண்ட படைப்பாளிகள் காலந்தோறும் பாரதியின் பாடல்களைத் தங்கள் திரைப்படங்களில் பயன்படுத்தினர்; பயன்படுத்தியும் வருகின்றனர். இன்றும் சமூகத்தின் சீர்கேடுகளைத் தன் சாட்டையால் வெளுத்தெடுக்க பாரதியின் பாடல்கள்தான் திரையுலகுக்குத் தேவைப்படுகிறது. 

 

காரணம்... பாரதி எழுதியவை வெறும் கவிதைகள் அல்ல; இந்த நாட்டின் விடுதலைக்கு மக்களிடம் விதைத்த விதைகள்!

 

 

பார் போற்றும் கவி பாரதி... நினைவுதினச் சிறப்புக் கட்டுரை!

 
 

மிழ் மொழியின் தனித்துவத்தை சுவைபட மட்டுமல்லாமல், சுவாரஸ்யத்துடன் விளக்கிய மாபெரும் கவிஞர்களில் சுப்ரமணிய பாரதியாரும் ஒருவர். இவரின் உணர்வெழுச்சியின்பால் பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல் தெறித்தன. குழந்தைகளின் உணர்வுகள் முதல் கட்டிளம் காளையர்களின் உணர்வுகள் வரை அத்துணை உயிர்களின் உள்ளியல்போடு கலந்தவன் இந்த முண்டாசுக் கவிஞன்தான். ஆம், தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சம்கொள்ளாமல் தெளிவுடன் எடுத்துரைத்தவன் இவன்.

ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவனின் ஆக்கங்களை நிறுத்திவிட முடியாது. சமூக ஆர்வலன், பத்திரிகையாளன், எழுத்தாளன், பாடலாசிரியன், சுதந்திரப் போராட்ட வீரன், தமிழ் மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவன், எழுச்சிமிகு சிந்தனைகளின் ஏகலைவன் என பன்முகத்தன்மைகொண்ட தமிழன், பாரதி. இந்திய விடுதலைப் போரில் இவனின் தமிழ் பெரும்பங்காற்றியதன் காரணமாகத்தான் இவரை `தேசிய கவி' எனப் போற்றிப் புகழ்ந்தனர். தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும் மிகமுக்கிய இடத்தைப் பிடித்த இந்த மீசைக்கவிஞனின் நினைவுநாள் இன்று. தன் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் வார்த்தைகளால் வடிவம் கொடுத்த கோபக்காரக் கவிஞனின் நினைவலை கட்டுரை இது...

பாரதியார்

உயிராக்கம்:
சின்னசாமி ஐயர் - லட்சுமி அம்மாள் தம்பதிக்கு 1882-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார் சுப்ரமணிய பாரதியார்.  பிறப்பிலேயே தமிழின்பால் ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர், அந்தக் குழந்தைக்கு தமிழ்க் கடவுளின் பெயரான சுப்ரமணியன் என்ற திருநாமத்தைச் சூட்டினர். குழந்தை வளர வளர, அதன் தமிழ் அறிவும் தமிழ் உறவுகள் மீதான அக்கறையும் சேர்ந்தே வளர்ந்தன.  இளமை ததும்பும் வயதிலேயே தனக்கான துணையாக தமிழ் மொழியைக் கொண்டார்.

இனிய பருவம்:
தன் சரீரத்துக்கான உணவைப் பெறுவதைவிட, தன் சிந்தனைக்கான உணவை வெகு எளிதாகப் பெற்றுத்தந்தது இவரின் தமிழ் ஆர்வம். தமிழ் மொழி மீதான சிந்தனைத் தெளிவும் பற்றும் வெகு விரைவிலேயே இவரை மாபெரும் புலவனாகப் பரிமளிக்கவைத்தன. தன் 11-ம் வயதிலேயே கவி புனையும் அறிவைப் பெற்றார்.

1897-ம் ஆண்டு பாரதியின் இல்லறத்தில் இனியாளாக பங்குகொண்டார் செல்லம்மா. இவர், பாரதியின் இலக்கியப் பணிகளுக்குப் பாலமாக இருந்தார். தன் கணவரின் சொல்லுக்கு மறுசொல் பேசாத இவர், வறுமையிலும் வறட்சியிலும் வாடிப்போனாலும், அகத்தில் மகிழ்ச்சியையும் முகத்தில் புன்சிரிப்பையுமே தனக்கான அணிகலன்களாகக் கொண்டு வாழ்ந்தார். 

பார் போற்றிய இலக்கியப் பணி:
தமிழ் மொழி மீதும், இலக்கியப் பணி மீதும் தணியாத ஆர்வம்கொண்டவர் பாரதி. ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம், இந்தி என பலவேறு மொழிகளின் காவலனாகவும் திகழ்ந்தார். `சுதேசமித்திரன்' என்ற தமிழ் பத்திரிகையில் 1904-ம் ஆண்டு முதல் 1906-ம் ஆண்டு வரை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இந்துக்களின் சுவாசமாக விளங்கும் பகவத் கீதையை 1912-ல் தமிழில் மொழிபெயர்த்தார். கவிதைகள் புனைவதோடு சமுதாயக் கட்டுரைகள், குழந்தைப் பாடல்கள் எனப் பல்வேறு வகையான பாடல்களும் எழுதினார். இவற்றில் சிலவற்றையே கண்ணன் பாட்டு, குயில் பாட்டு... போன்றவை.

சுதந்திரப் போராட்டத்தில் பாரதி:
இவனின் ஒவ்வொரு வார்த்தையும் ஆற்றல்மிக்கதாகவும் அக்னிக்குஞ்சுகளாவும் எழுச்சி கண்டன. குறிப்பாக, சுதந்திரப் போராட்டத்தின்போது இவரின் கருத்துகளும் கட்டுரைகளும் உணர்ச்சிப் பிழம்பாகவும், காட்டுக் கனலாகவும் எழுந்து விடுதலை உணர்வை உலகம் முழுக்க பறைசாற்றின. சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையான தமிழில் கவி புனைந்து கட்டுரைகள் எழுதி, மக்கள் மத்தியில் விடுதலை விழிப்பு உணர்வை உருவாக்கியதில் பாரதி, பார் போற்றும் கவிஞரானார். இவரின் எழுச்சிமிகு உரையில் தமிழர்கள் விழிந்தெழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர், பாரதியின் பல்வேறு படைப்புகளுக்குத் தடைவிதித்து, அவரை சிறையில் அடைத்தனர்.

 

தமிழ் இலக்கியம் தத்தெடுத்துக்கொண்ட அந்த மீசைக் கவிஞன், தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் மட்டுமல்லாது, அகில உலக இலக்கிய ஆர்வலர்களின் மூத்த மகனாக, தமிழ் மொழியின் தலைமகனாக விளங்கியது காலம் என்கிற காலனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லைபோலும். பாரதியின் காலத்தைச் சுருக்க எத்தனித்த காலன், யானை வடிவில் உருவெடுத்து தமிழ் போற்றும் நல்லுலகத்திடமிருந்து பாரதியைப் பிடிங்கிச் சென்றான். ஆம், சூழ்நிலை காரணமாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் யானையின் கால்களால் காயமடைந்து, உடல் நலிவடைந்து 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் தமிழ் உலகைவிட்டு பிரிந்தது பாரதி என்கிற சுப்பிரமணியனின் உயிர். இவரின் இழப்பு இயல் உலகுக்கு மட்டுமல்லாது, இசை மற்றும் நாடக உலகங்களுக்கும் பேரிழப்பாக இன்றும் கருதப்படுவதற்குரிய சாட்சியம்தான் இந்தக் கட்டுரை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

'ஜிமிக்கி கம்மல்' ரசிகர்கள் மட்டும் இந்த வீடியோவை பாக்காதீங்க!

 

59b7504719ffc-IBCTAMIL.jpg

கேரளாவில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கேரளத்து பெண் குட்டிகள் சிலர் 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு ஆடியபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனை வைரலாக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தது நம் தமிழ் இளைஞர்களே. இதனை இப்பாடலின் மூலம் பிரபலமான ஷெர்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஒரு பக்கம் ரசிகர்கள் அதிகம் இருந்தாலும் மற்றொரு பக்கம் ட்ரோல் பண்ணி கலாய்ப்பவர்கள் அதைவிட அதிகமாக உள்ளனர். அந்த வகையில் ஒருவர் பண்ணிய ட்ரோல் வீடியோவானது சமூக வலைத்தளத்தில் விரலாக பரவியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்ததும் ஜிமிக்கி கம்மலை வெறுத்து விடுவீர்கள்.

 

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

“15-வது தடவை காட்டுக்குள்ள போனப்பதான் புலி கண்ணுல பட்டுச்சு..!” - வனவிலங்கு புகைப்படக்கலைஞர் சீமா

 

ஒரு புகைப்படம் ஆயிரம் கதை சொல்லும் என்பார்கள். ஆனால், ஒரு வனப்புகைப்படம் பத்தாயிரம் கதை சொல்லும். கொட்டும் மழையில், மலைச்சரிவில் அமர்ந்துகொண்டு காத்திருந்து ஒரு வனவிலங்கை படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. கடந்த ஏழு வருடங்களாக அதைச் சிறப்பாக செய்துவரும் கேரளாவைச் சேர்ந்த பிரபல பெண் வன புகைப்படக்காரரான சீமா சுரேஷிடம் பேசினோம். தமிழ்நாட்டில் இருந்து அழைக்கிறோம் என்றதும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தார்.

உங்களைப்பற்றி சொல்லுங்களேன்…

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவின் திரிசூர். இப்போதும் அங்கேதான் வசித்துவருகிறேன். என் குடும்பம் பெரியது. சிறு வயதில் இருந்தே எனக்கு வனத்தின் மீதும் வனவிலங்குகள் மீதும் ஆர்வம் அதிகம். விடுமுறை நாள்களில் வனத்துக்குள் டிரெக்கிங் செல்வது என்றால் முதல் ஆளாக நான் தயாராக இருப்பேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் பிரபல கேரள இதழான கலாகோமுதியில் வேலைக்குச் சேர்ந்தேன். சினிமா கட்டுரைகள் எழுதுவதுதான் என் வேலை. தொடர்ந்து கேரளாவின் முன்னணி சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் செய்யும் வேலை மீது சலிப்பு ஏற்பட்டது. தினமும் ஒரே வேலையைச் செய்துகொண்டே இருக்கிறோமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

PhotoGrid_1504955898822_18379.jpg

பொதுவாகவே எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருடனும் இணைந்து வெளியில் டிரெக்கிங் செல்வது வழக்கம். அப்படி தமிழ்நாட்டின் முதுமலை வனத்துக்கு டிரெக்கிங் சென்றோம். அப்போது ஓர் ஆண் யானையைப் பார்த்தோம். அந்த யானை மிகவும் கோபமாக இருந்தது. சத்தம் போட்டுக்கொண்டே அந்தப் கோபத்தை அருகில் இருந்த ஒரு மரத்தின்மீது காட்டிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த மரத்தை கீழே சாய்த்து தன் கோபத்தை தணித்துக்கொண்ட மன நிறைவோடு காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டது. அதனை எனது கேமராவால் தொடர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தேன். அந்த சம்பவம்தான் என் வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. ஒரு வனவிலங்குகளுக்கும் நம்மைப் போலவே கோபம், பொறுமை, மகிழ்ச்சி என எல்லாமும் இருப்பதை உணர்ந்துகொண்டேன். நாம் ஏன் வன விலங்கு புகைப்படக்காரராக ஆகக்கூடாது என்று தோன்றியது. அதை வீட்டில் சொன்னேன். என் கணவர் ஒரு புகைப்படக்காரர் என்பதால் என்னுடைய விருப்பம் எளிதில் நிறைவேறியது. உடனே, பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கேமராவைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தேன். இன்று வரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன்.”

PhotoGrid_1504955926021_18157.jpg

நீங்கள் இதுவரை எடுத்த படங்களில் மிகவும் பாராட்டப்பட்டது எது?

“தமிழ்நாட்டில் நான் முதன் முதலாக எடுத்த யானையின் படம்தான் அதிக பாராட்டுகளை பெற்றது. அதனாலேயே எனக்கு தமிழ்நாட்டின் மீது அதிக பாசம் என்று கூட சொல்லலாம். அடுத்ததாக கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பந்திபூர் சரணலாயத்தில் ‘பிரின்ஸ்’ என்ற புலியை படம் எடுத்தது அதிக பாராட்டுகளை பெற்றது. எல்லா புகைப்படக்காரர்களும் காட்டுக்குள் இருக்கும் புலியைப் படம் எடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். எளிதில் அந்த வாய்ப்பு அமையாது. இதுவரை நான் 14 முறை பந்திபூர் சரணலாயத்துக்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புலியை படம் எடுக்க முடியாத ஏக்கத்தோடு தான் வீட்டுக்கு வருவேன். 15-வது முறை சென்றிருந்தபோது ஒரு புல்வெளியில் இயல்பாக நடந்துவந்துகொண்டிருந்தது புலி. என் ஆசை நிறைவேறியது. அந்தச் சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.

புலி

அதேபோல் ‘ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சிப்பறவை’ என் கேமராக்களில் அதிகமாக பிடிபடும். ஆனால், திடீரென மூன்று வருடங்களாக என் கண்களில் ஹார்ன்பில் சிக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த சமயம் ஒரு டிரெக்கிங் போன போது ஒரு ஜோடி ஹார்ன்பில் பழங்களை தங்களுக்குள் ஊட்டிவிட்டுக்கொண்டு காதல் செய்துகொண்டிருப்பதை பார்த்தேன். சுமார் 5 மணி நேரம் அந்த ஹார்ன்பில்களை புகைப்படம் எடுத்தேன். அவையும் சலிக்காமல் காதல் செய்துகொண்டிருந்தன. அந்தத் தருணம் என்னை காடுகளோடும், காட்டு உயிரினங்களோடும் நெருக்கமாகக் கொண்டு சென்றது. அதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் இந்தியாவின் முதல் தேசிய பூங்காவான ’ஜிம் கார்பெட்’ தேசிய பூங்காவில் நீர் நாய்களை படம் எடுத்தேன். கடும் குளிரில் நடுங்கிக்கொண்டே நான் படம் எடுக்க, அவை மீன்களை வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு ஜாலியாக மீன்களை பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. அந்த நீர்நாய்களின் படம் அதிக பாராட்டுகளைப் பெற்றது.”

இளம் தலைமுறை புகைப்படக் கலைஞர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன?

“இப்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புகைப்படக் கலைஞராவது எளிது. அதில் சிறப்பாக மாறுவதற்கு பொறுமையும், கற்பனைத்திறனும் வேண்டும். ஒரு யானைதானே என்று அதை இயல்பாக புகைப்படம் எடுத்துவிட்டு வரலாம், அதனோடு பொறுமையாக பயணம் செய்தால், அவை சாப்பிடுவது, சேட்டை செய்வது, சண்டை போடுவது என அவற்றின் அசாதாரண தருணங்களை படம் எடுக்க முடியும். அதேபோல் ஒரு படத்தின் கோணம் மிக முக்கியம். ஒரு சாதாரண மனிதன் ஒரு வன விலங்கை பார்ப்பதற்கும், ஒரு புகைப்படக் கலைஞன் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். யாருமே எதிர்பார்க்காத கோணத்தில் படத்தை எடுக்க வேண்டும். அவைதான் நம்மை தனித்துவமாக காட்டும்.” என்றார் நிறைவாக.

PhotoGrid_1504955607619_18411.jpg

 

பார்த்துக்கொண்டிருந்த பத்திரிகை துறை வேலையை விட்டு விட்டு கையில் கேமராவோடு காட்டுக்குள் பயணம் செய்யும் சீமா சுரேஷ், இளம் தலைமுறைகள் காட்டின் மீது எப்போது அக்கறை கொண்டிருக்க, அவர்களுக்கு இலவசமாக வைல்ட் லைஃப் போட்டோகிராபி பயிற்சியும் கொடுக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தமிழுலகு போற்றுகின்ற தமிழ்ப் பேரறிஞர் தாமோதரம்பிள்ளை

இன்று அவரின் பிறந்ததினம்

Bildergebnis für தமிழ்ப் பேரறிஞர் தாமோதரம்பிள்ளை

தமி­ழன்னை தன்­னைத் தற்­காத்­துக்­கொள்ள காலம் தோறும் தவப்­பு­தல்­வர்­களை பெற்­றெ­டுத்தே வந்­தி­ருக்­கி­றாள். இவர்­கள் தமி­ழன்­னை­யின் இள­மை­யும், அழ­கும் இழக்­கா­த­படி மெரு­கேற்­றிப் பணி செய்­த­னர்.

தமி­ழன்­னையை ஏற்­றி­யும் போற்­றி­யும் தம் வாழ்வை அன்­னை­யின் கால­டி­யில் சமர்ப்­ப­ணம் செய்­த­னர். அத்­த­கைய சான்­றோர் வரி­சை­யில் சி.வை.தாமோ­த­ரம்­பிள்ளை அவர்­க­ளுக்­கும் தனிப்­பெ­ரும் இட­முண்டு.

சி.வை.தாமோ­த­ரம்­பிள்ளையை தமிழ்த் தொண்­டின் பால் ஈர்த்து தமிழ்ப்­பணி செய்ய தூண்­டு­வ­தி­லும் ஊக்­கு­விப்­ப­தி­லும் ஸ்ரீலஸ்ரீ ஆறு­மு­க­நா­வ­லர் பெரு­மான் ஒரு கரு­வி­யாக செயற்­பட்­டுள்­ளார்.

ஸ்ரீலஸ்ரீ ஆறு­மு­க­நா­வ­லர் பெரு­மா­னின் பிர­சங்­கங்­க­ளும்,கட்­டு­ரை­க­ளும், அவ­ரின் தமிழ்ப்­ப­ணி­க­ளும், மிகச்­சி­றந்த வாழ்க்கை முறை­க­ளும் பேர­றி­ஞர் சி.வை.தாமோ­த­ரம்­பிள்ளையை வெகு­வாக கவர்ந்­தி­ருந்­தது. பேர­றி­ஞர் சி.வை.தாமோ­த­ரம்­பிள்ளை பிறந்­தது கிறிஸ்­த­வ­ராக எனி­னும் வாழ்ந்­தது சைவ­ச­ம­யத்­த­வ­ரா­கவே.

தான் பிறந்த சம­யத்­த­வர்­க­ளின் எதிர்ப்­பு­க்க­ளுக்­கும், தனது தாய்ச் சம­யத்­த­வர்­க­ளி­னது பழிப்­புக்­க­ளுக்­கும் அஞ்­சாது தமிழ் அன்­னைக்கு பணி செய்த பேர­றி­ஞ­ரின் தமிழ்ப் பற்று போற்­று­தற்­கு­ரி­ய­தன்றோ!
சி.வை.தாமோ­த­ரம்­பிள்ளை 1832ஆம் ஆண்டு புரட்­டாதி மாதம் 12 ஆம் திகதி சைரஸ் கிங்க்ஸ்­பரி வைர­வ­நா­தர் என்­ப­வ­ருக்­கும், மேரி டேற்­றன் என்­ப­வ­ருக்­கும் மக­னாகப் பிறந்­தார்.

இவ­ருக்கு சாள்ஸ் வின்ஸ்லோ தாமோ­த­ரம் என நாமம் வழங்கி 1833 ஆம் ஆண்டு மாசி மாதம் 24 ஆம் திகதி ஞானஸ்­தா­னம் அளித்­த­னர்.

ஆரம்­பத்­தில் யாழ்ப்­பா­ணத்­தில் கிறிஸ்­த­வப் பாட­சா­லை­யி­லேயே கல்­வி­யைப் பெற்­றார். சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தனது உயர்­கல்­வி­யைத் தொடர்ந்து, அப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 1857 இல் பட்­டம் பெற்ற முதல் பட்­ட­தா­ரி­க­ளில் ஒரு­வ­ரா­னார்.

தொடர்ந்­தும் இந்­தி­யா­வி­லேயே வசித்து அங்­கி­ருந்த காலத்­தில் இலக்­கிய முயற்­சி­க­ளிலும் ஈடு­பட்­டார்.

தமிழின் பதிப்புத் துறைக்கு அரும்பணியாற்றியிருந்தார்

பழந்­த­மிழ் ஓலைச் சுவ­டி­க­ளைப் பதிப்­பிப்­ப­தில் இவர் பெரிய சிர­மங்­களை சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது. தமிழ் நாடெங்­கி­லும் பய­ணம் செய்து இவற்­றைச் சேக­ரிக்­க­வும் அதி­லுள்­ள­வற்­றைப் புரி­யும்­படி மாற்­ற­வும் இவ­ருக்­குப் பெரு­ம­ளவு நேர­மும் முயற்­சி­யும் தேவைப்­பட்­டது. இத­னையே அவர் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்­றார்.

‘‘ஏடு ஏடுக்­கும் போது ஓரம் சொரி­கின்­றது கட்டு அவிழ்க்­கும் போது இதழ் முறி­கின்­றது, ஒற்றை புரட்­டும் போது துண்டு துண்­டாய் பறக்­கி­றது. இனி எழுத்­துக்­க­ளோ­வென்­றால் வாலும், தலை­யு­மின்றி நாலா­பு­ற­மும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்­கி­றது’’

எனி­னும் தனது முயற்­சியை கைவி­டா­த­வ­ராக செயற்­பட்­டார் என்­ப­தற்கு அவர் அச்­சிட்டு வெளி­யிட்ட மறு­ப­திப்­பு­களே சான்­றா­கின்­றன. சி.வை.தாமோ­த­ரம்­பிள்ளை அச்­சிட்டு வெளி­யிட்ட மறு­ப­திப்­பு­க­ளில் அதி­கம் பெறு­மதி வாய்ந்­தவை தொல்­காப்­பி­யம், இலக்­கண விளக்­கம், வீர சோழி­யம், கலித் தொகை, சூளா­மணி, நீதி விளக்­கம், தணி­கைப் புரா­ணம், இறை­ய­னார் அகப்­பொ­ருள் என்­ப­ன­வா­கும். இந்­தக் கையெ­ழுத்­துப் பிர­தி­க­ளை­யெல்­லாம் அச்­சிட்டு பதிப்­புக்­குள்­ளாக்­கு­வ­தற்­குத் தாமோ­த­ரம்­பிள்ளை எத்­தனை சிரத்­தை­யு­டன் செயற்­பட்­டார் என்­பது தெளி­வா­கும்.

உண்­மை­யில் இத்­த­கைய பணிக்கு அவ­ருக்கு ஏட்­டுப் பிர­தி­க­ளைக் கொடுத்­து­த­வி­ய­வர்­கள் போற்­று­தற்­கு­ரி­ய­வர்­களே! மேலும் தனது சொந்த நிதி­யி­லும் நலன்­வி­ரும்­பி­கள் வழங்­கிய நன்­கொ­டை­க­ளை­யும் பயன்­ப­டுத்­தியே மறு­ப­திப்­பு­களை அச்­சிட்டு வெளி­யிட்­டமை அவ­ரின் தமிழ் மீதான ஆழ­மான நேசத்தை எடுத்­தி­யம்­பு­கி­றது. இத­னால் தான் தமிழ் மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வித­மாக பின்­வ­ரு­மாறு எடுத்­தி­யம்­பி­னார்.

‘‘கன­வான்­களே! இந்த ஏட்­டுப் பிர­தி­கள் அழிந்து போகின்­ற­னவே என்ற கவலை உங்­க­ளுக்கு இல்­லையா? தமிழ் உங்­கள் அன்னை என்­பதை உண­ர­வில்­லையா? உங்­கள் அன்­னைக்கு உத­வும் வகை­யில் நீங்­கள் எத­னை­யும் செய்­கி­றீர்­கள் இல்லை.

தேசா­பி­மா­னம் மொழி­ய­பி­மா­னம் என்­பன உங்­க­ளுக்கு இல்­லை­யென்­ப­தில் பெருமை கொள்­கின்­றீர்­களா? தயவு செய்து இவ் விட­யத்­தை­யிட்டு சிரத்­தை­யு­டன் சிந்­தி­யுங்­கள்’’ என அறை­கூ­வல் விடுத்த பேர­றி­ஞ­ருக்கு ரி.கன­க­சுந்­த­ரம்­பிள்ளை, குமா­ர­சா­மிப்­பிள்ளை, திரு­கோ­ண­ மலை என்.கே. சதா­சி­வம்­பிள்ளை, யாழ்ப்­பா­ணத்­துச் சின்­னத்­தம்பி உபாத்­தி­யா­யர், யாழ்ப்­பா­ணம் வேலுப்­பிள்ளை, நல்­லூர் கைலாச பிள்ளை என்­ப­வர்­கள் இவ­ரின் பணி நிறை­வேற உத­வி­யமை என்­றும் நினை­வில் கொள்­ளத்­தக்­கது.

இவ்­வாறு தமிழ்ப்­பணி புரிந்த பேர­றி­ஞர் 1884 ஆம் ஆண்­டில் புதுக்­கோட்டை உயர்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­யாக நிய­ம­னம் பெற்­றார். ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பின் ஓய்வு பெற்ற தாமோ­த­ரம்­பிள்­ளைக்கு 1895 ஆம் ஆண்­டில் அர­சி­னர் ‘ராவ் பக­தூர்’ பட்­ட­ம­ளித்­துப் பாராட்­டி­னர்.

தாமோ­த­ரம் எந்­தப் பணி ஆற்­றி­னா­லும், தமது சொந்­தப் பணி­யா­கக் கருதி உயர்ப்­பு­டன் பணி­யாற்­று­ப­வர். ஏடு தேடு­வதை, சுவ­டி­க­ளைப் பிரதி எடுப்­பதை, விளக்­க­மு­டன் பதிப்­பித்து வெளி­யி­டு­வ­தைத் தனது ‘உயிர்த் தொண்­டாக’க் கருதி, இரவு பகல் பாராது, தாகத்­து­டன் பாடு­பட்டு, உழைத்­துத் தமிழ் மொழி­யைச் செழு­மைப்­ப­டுத்­தி­னார்.

இதன் பய­னா­கவே தமி­ழ­றி­ஞர் உல­கம், பேர­றி­ஞ­ரின் செயற்­க­ரிய செய­லைத் தெளி­வாக உணர்ந்து, தாமோ­த­ரம்­பிள்­ளை­யைச் ‘செந்­த­மிழ்ச் செம்­மல்’ எனப் பாராட்டி, போற்றி மகிழ்ந்­தது.

தன்­ன­ரிய தமி­ழுக்­குப் பன்­ன­லம் பெரு­கச் செய்து, பதிப்­புத் துறை­யின் ‘முன்­னோடி’ எனப் புகழ் பெற்­றுத் தமது அறு­பத்தி ஒன்­ப­தாம் வய­தில், 1901 ஆம் ஆண்­டில் தாமோ­த­ரம்­பிள்ளை மறைந்­தார். மறைந்­தது அப்­பெ­ருந்­த­கை­யின் உடல் மட்­டுமே.

அப்­பெ­ரு­ம­க­னார் உரு­வாக்­கிய நூல்­க­ளும், ஊட்­டிய உணர்­வு­க­ளும் என்­றென்­றும் மறை­யா­தவை.; ஆம், தமி­ழும், தமி­ழ­ரும் உள்­ள­வரை நிலை­யா­னவை. என்­றென்­றும் தமி­ழன்­னை­யின் போற்­று­தற்­கு­ரிய மகவே!
சிறுப்­பிட்டி சி.வை.தாமோ­த­ரம்­பிள்ளை ஒன்­றி­யம்.

 

http://newuthayan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bildergebnis für 300,000

 

Ähnliches Foto

 

  • 8,189 replies
  • 300,000 views

இந்த பக்கத்திற்கு வந்து  போன எல்லோருக்கும் நன்றி!!

  • தொடங்கியவர்

அமெரிக்க அழகியாக கல்லூரி மாணவி காரா மன்ட் தேர்வு

2018-ம் ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக கல்லூரி மாணவியும், வடக்கு டக்கோட்டா மாநில அழகியுமான காரா மன்ட் (23) தேர்வு செய்யப்பட்டார்.

 
அமெரிக்க அழகியாக கல்லூரி மாணவி காரா மன்ட் தேர்வு
 
நியூயார்க்:

அடுத்த ஆண்டுக்கான அமெரிக்க அழகியை தேர்வு செய்யும் 97-வது ஆண்டு போட்டி அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில்  நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மற்றும் புவெர்டோ ரிக்கோவை சேர்ந்த 18 முதல் 24 வயதுக்குட்பட்ட 52 மாநில அழகிகள் பங்கேற்றனர்.

நீச்சல் உடை அணிவகுப்பு, பகுத்தறிவுசார்ந்த கேள்வி-பதில், இசை மற்றும் நடனத்தில் திறமையை வெளிப்படுத்துதல் ஆகிய சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் கலந்துகொண்ட 52 பெண்களில் இறுதிச்சுற்றுக்கு மொத்தம் 15 பேர் தேர்வாகி இருந்தனர்.

தலா 20 வினாடிகள் நடைபெற்ற நேர்முக கேள்வி-பதில் சுற்றில் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக தீர்மானித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முடிவு தொடர்பான கேள்விகளுக்கு சாதுர்யமாக பதிலளித்த கல்லூரி மாணவியும், வடக்கு டக்கோட்டா மாநில அழகியுமான காரா மன்ட் (23) 2018-ம் ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

டிரம்ப்பின் தவறான முடிவு நம்மை பேச்சுவார்த்தைக்கான நாற்காலியின் முன் அமர வைத்துவிடும் என அவர் கூறிய பதிலை அரங்கில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

201709121855522798_1_miss-america-2-s._L

கடந்த ஆண்டில் 2017-ம் ஆண்டுக்கான அமெரிக்க அழகி பட்டத்தை வென்ற சாவ்வி ஷீல்ட்ஸ், காரா மன்ட் தலையில் கிரீடம் சூட்டி வாழ்த்தினார்.  

இரண்டாவது இடத்தை மிசோரி மாநிலத்தை சேர்ந்த ஜெனிபர் டேவிஸ் பிடித்தார். அமெரிக்க அழகியாக தேர்வாகியுள்ள காரா மன்ட், பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்த ஆண்டின் கல்வி செலவுக்கு 50 ஆயிரம் டாலர்களுடன், சில லட்சம் டாலர்கள் சம்பளத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் பகுதிநேர தொகுப்பாளினி வேலையும் இவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வைரலாகும் விஜய் சேதுபதியின் லேடி கெட்டப் போட்டோ..!

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இரண்டாவதாக இயக்கும் திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் என பலர் நடிக்கும் இந்தப் படம், த்ரில்லர் மூவியாக ரெடியாகி வருகிறது. மேலும், இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கினும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னதாக இந்தப் படத்தின் பெயர் 'அநீதி கதைகள்' என பெயரிடப்பட்டு தற்போது 'சூப்பர் டீலக்ஸ்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ed49122a-1514-4fd6-a3fb-06227096d368_184

 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நிரவ்ஷா மற்றும் வினோத் ஒளிப்பதிவு செய்கின்றனர். இந்தப் படத்துக்கான திரைக்கதையை தியாகராஜா குமாராஜனுடன் சேர்ந்து நலன் குமாரசாமி மற்றும் மிஷ்கின் எழுதியிருக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் தொடங்கி பல முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் விஜய் சேதுபதியும் சேர்ந்திருக்கிறார்.  இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற பெண் வேடத்தில் நடிக்கிறார். தற்போது அந்த கதாபாத்திரத்துக்கான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

Bildergebnis für 300,000

 

Ähnliches Foto

 

  • 8,189 replies
  • 300,000 views

இந்த பக்கத்திற்கு வந்து  போன எல்லோருக்கும் நன்றி!!

வாழ்த்துக்கள் நவீனன். தொடருங்கள்....!  tw_blush:

  • தொடங்கியவர்

தம் ரத்த சோதனை முடிவுகளை ஆடைகளில் அச்சிடும் வடிவமைப்பாளர்

 
diabeticபடத்தின் காப்புரிமைMELANIE HYAMS

நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சோதனை செய்வது என்பது உங்கள் வாழ்வின் அங்கமாக மாறிவிடும். ஆனால், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஆடை வடிவமைப்பாளரோ அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். தான் வடிவமைக்கும் ஆடைகளில் அவரின் ரத்த மாதிரியின் முடிவுகளை அச்சிட்டு ஆடைகளை வடிவமைக்கிறார்.

போப்பி நாஷ், தான் ஆறு வயதாக இருக்கும் போதே டைப் 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரது உடல் இன்சுலினை உற்பத்தி செய்யாது.

"இது பயங்கரமானது மற்றும் அச்சம் நிறைந்தது" என்று அவர் கூறுகிறார். "மருத்துவமனையில் எனது தாய் அழுது கொண்டிருந்த போது, ஏதோ தவறு நடந்துள்ளதை என்னால் உணர முடிந்தது.

மருத்துவமனையில் இருந்து நாஷ் வெளியேறிய போது, அன்றாட வாழ்க்கையில் ஊசிகளை பயன்படுத்துவது மற்றும் ஒரே நாளில் பல முறை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அளவிடுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் வீட்டிற்கு வந்தார்.

diabeticபடத்தின் காப்புரிமைMELANIE HYAMS

ஒரு முறை நாஷ் தவறுதலாக இரண்டு மடங்கு இன்சுலினை தனக்குத் தானே செலுத்திவிட்டார். இதனால், தன்னுடைய 18 வயதில் அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன்பின்னர் அவர் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோவ் கல்லூரியில் இணைந்து டெக்ஸ்டைல் துறையில் துணியில் அச்சிடுவது குறித்து கற்றுக் கொண்டார். அவரது கல்லூரியில் அவருக்கு செயல்முறை விளக்க திட்டத்திற்கான பணி ஒன்று கொடுக்கப்பட்டது.

"நான் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். நீரிழிவு நோயால் மிகவும் அவதிக்குள்ளானேன்" என்று அவர் கூறினார். " என்னுடைய நீரிழிவு நோயினால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையை என்னால் செய்ய முடியவில்லை, பின்னர் அந்த சூழ்நிலையை எனக்கு தகுந்தவாறு நான் மாற்றிக் கொண்டேன்".

diabeticபடத்தின் காப்புரிமைMELANIE HYAMS

இதனையடுத்து நாஷ் தனது ரத்தத்தில் உள்ள சர்க்கைரையின் அளவை தரவுகளாக சேகரித்து நாள்தோறும் குறிக்க தொடங்கினார்.

அந்த தரவுகளை எடுத்து சில நேரங்களில் அதை பெரிதாக்கி அதன் மீது வண்ணங்கள் தீட்டி துணிகளில் அச்சிட துவங்கினார். உடுத்தக் கூடிய இந்த கலைப்படைபுகள் தனது ரத்தத்தால் நெய்யப்பட்ட ஆடைகளைப் போல் அவர உணர ஆரம்பித்தார்.

"இது எனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியது, ஏனெனில் நான் ஏமாற்றுகிறேன் என்று உணர்ந்தாலும் அவை அனைத்தும் உண்மையான எண்கள் என்பதால் அச்சமாகவும் இருக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.

diabeticபடத்தின் காப்புரிமைPOPPY NASH

இருப்பினும் நாஷ் அவரது பணியில் கவனம் செலுத்த தொடங்கினார், சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் கூட உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக பணியில் கவனம் செலுத்தினாலும் நாள்தோறும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சோதனை செய்வதில் இருந்து அவர் தவறுவதில்லை.

சர்க்கரை அளவீடுகளின் தரவுகளை தொடர்ச்சியாக கண்காணித்து எழுதிக் கொண்டேயிருப்பதும் நல்ல சிகிச்சை முறையாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

ஐரோப்பாவை பொறுத்தவரை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒவ்வொரு நபருக்கும் வேறுபாடாக இருந்தாலும் நான்கிலிருந்து ஐந்திற்குள் இந்த அளவீடுகள் இருக்கும். ஆனால், நாஷ்-ற்கு சில நேரங்களில் 18 அளவு வரை செல்கிறது. அவர் அச்சிட்டுள்ளவையில் இருந்தே இதை தெரிந்து கொள்ள முடியும்.

diabeticபடத்தின் காப்புரிமைPOPPY NASH

தற்போது நாஷ் ஆடை வடிவமைப்பிலும் அவற்றை காட்சிப்படுத்தும் வேலைகளிலும் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளார்.

"மக்கள் இதை உடுத்தினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்றும் "நீரிழிவு நோய் குறித்தும் மக்களும் தெரிந்து கொள்வார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நான் எப்போதும் எனது நோய் குறித்து சிந்தித்துக் கொண்டேயிருப்பேன், மக்களிடம் அது குறித்து நான் உரையாடும் போது சற்று ஆறுதலாக உணர்வேன்"

நாஷ் தொடர்ச்சியாக சர்க்கரையின் அளவை கண்காணிப்பதின் மூலம் புதிய படைப்புகளை அவரால் உருவாக்க முடிகிறது.

http://www.bbc.com/

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நவீனன். தொடருங்கள்

  • தொடங்கியவர்

மதுரையில் களை கட்டும் ஈசல் வியாபாரம்

 

மதுரை வட்டாரத்தில் தற்போது ஈசல் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தென் மாவட்டங்களில் ஈசலை விரும்பி உண்போர் அதிகம். ருசியான சத்தான உணவாக ஈசல் கொண்டாடப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ஈசல் வரத்து மிக குறைந்துவிட்டது. இந்த வருடம் மழை பெய்துள்ளதால் ஈசல் வேட்டை களை கட்டியுள்ளது.

மதுரை அருகேயுள்ள கிராமங்களில் ஈசல் வேட்டைக்கு  இளைஞர்களும், சிறுவர்களும் அதிகாலையில் வயல்வரப்புகளில் சுற்றி வருகிறார்கள்.  சூரியன் உதித்த பின்னர் காற்றில்லாத நேரத்தில் மண்ணுக்குள் இருந்து ஈசல் கிளம்பி, பெரும்படையாக  அந்தப் பகுதியில் பறக்கும்.  ஈசலைப் பிடிக்க  சில நுணுக்கமான வேலைகளைச் செய்கிறார்கள்.  புற்றுக்குழிக்கு அருகிலேயே வலை, பிளாஸ்டிக் பைகளை வைத்து, புற்றிலிருந்து வெளிவரும் ஈசலைப் பிடிக்கிறார்கள்.

ஈசல்வேட்டை

 

பிறகு அவற்றின் சிறகை நீக்கி  காயவைத்து, தலையை பிரித்துவிட்டு உண்ணுவதற்கேற்ற பகுதியை மட்டும் அரிசியோடு சேர்ந்து வறுத்து சாப்பிடுகிறார்கள். அதிகமாக பிடிபட்டால் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். கிலோ ரூ.200 வரைக்கும் விற்பனையாகிறது. நெல் ஈசல், மாலைக்கண் ஈசல், கொழுந்தீசல், நாய் ஈசல் என பலவகை இருந்தாலும்  நாய் ஈசலைத் தவிர மற்ற அனைத்தும் உண்ண ஏற்றது என்கின்றனர். ஆடி முதல் ஐப்பசி மாதம் வரை கிராமத்து இளைஞர்களுக்கு இது ஜாலியான சைடு பிசினெஸ்ஸாக உள்ளது. உயிர்ப்போடு இருக்கும் மண்ணில்தான் ஈசல் உண்டாகுமாம். நகரங்களில் ஈசல் உருவாவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களிலும் ஈசல் குறைந்துவிட்டநிலையில் இந்தாண்டு  ஈசல்கள்  பெருகியுள்ளன என்று மகிழ்ச்சியாக சொல்கிறார்கள் கிராமத்து மக்கள்.

http://www.vikatan.com

 

உண்மையில் ஈசலை சாப்பிடுவதை இன்றுதான் அறிகிறேன்.. இது உண்மையா என்று தேடியபோது கிடைத்த இன்னுமொரு செய்தி

நள்ளிரவில் ஈசல் வேட்டை சாமிக்கு வினோத படையல்

 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 
 

பொன்னமராவதி:பொன்னமராவதியில் ஈசல்களை பிடிக்கும் பணியில் மக்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இவற்றை சாமிக்கு படைத்து பிரசாதம் போல் சாப்பிடுகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஈசல்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இரவில் கண் விழித்து ஈசல் பிடிக்கும் பணியை மக்கள் மேற்கொண்டுள்ளனர். பிடிக்கப்பட்ட ஈசல்கள் சாலையோரங்களில் காய வைக்கப்படுகின்றன. பின்னர் சர்க்கரை போட்டு இடித்து சாமிக்கு படைக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஈசல் பிடிப்பது ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் நடைபெறுவது வழக்கம். மழை பெய்துள்ளதால், ஈசல்கள் அதிகளவில் உருவாகி உள்ளன. ஈசல் பிடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. காட்டுப் பகுதியில் உள்ள புற்றில் நள்ளிரவில் அதற்கு உரிய மருந்தை போட்டால், புற்றில் இருந்து ஈசல் கிளம்பி வரும். ஈசல்களை தின்பதற்காக பாம்புகளும் வரும். மிகவும் கவனத்துடன் இருந்து ஈசல் பிடிப்போம். பவுர்ணமி நாளில் வயக்காடுகளில் மண்ணுக்கு அடியில் இருந்து வெளியே வரும் ஈசல்களையும் பிடிப்போம். ஈசல்களை பகலில் காயவைத்து அன்று இரவு பச்சரிசி, வெல்லம் போட்டு சுவாமிக்கு படையல் போடுவோம். பின்னர் பிரசாதம் போல அனைவருக்கும் வழங்கி சாப்பிடுவோம். ஈசல் பிடிப்பதால் மழை வரும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளையில் ஈசல் சாப்பிடுவது உடலுக்கும் நல்லது‘ என்றனர்.

அப்பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவர் கூறுகையில் ‘ஈசல் பிடிப்பது அந்தக் காலத்தில் கலையாக இருந்தது. ஆனால் இன்று ஈசல்கள் பிடிப்பதையும், அதை தின்பதையும் அசிங்கம் என பலர் நினைக்கின்றனர். அந்த காலத்தில் ஒருவர் ஒரு படி ஈசல் வரை தின்பாராம்’ என்றார்.

http://tamilmurasu.org

இந்த செய்தி நிழலியின் கண்ணில்பட்டால்..tw_blush:tw_blush:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘திருப்பங்கள் நிறைந்ததே வாழ்க்கை’
 

image_c515f53206.jpgகோழைகளை, வீரனாக்குவது அவர்களின் எதிரிகள்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, எதிரிகள் செய்யும் அடாவடிகளைக் கண்டு, வேறுவழியில்லாமல் இவர்கள் போராடி, இத்தகையவர்களை வெல்வதே ஒரேவழி என, முடிவு எடுத்து விடுகின்றார்கள்; வெற்றி கொண்டும் விடுகின்றார்கள்.

எவரையும் தேவையின்றிச் சீண்டக்கூடாது; அதுவே வினையாகி விடும். சாதனையாளர்களில் பலர், துன்ப துயரங்களையும் எதிரிகளின் சூழ்ச்சி வலைகளையும் அறுத்து எறிந்தே முன்னுக்கு வந்தார்கள்.  

எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததே வாழ்க்கை. ஆனால், முயற்சி எடுத்தவர்கள் தோற்பதுமில்லை. இடையில் வந்துபோகும் இடையூறுகள், உடைந்து போகும். எவரையும் துன்புறுத்தியவர்கள் நிரந்தர மகிழ்ச்சியை அடையவே முடியாது.  

வெற்றிக்கான சூட்சுமம் என்பது, நல்ல எண்ணங்களினால் மட்டுமே ஈடேற்றப் படுகிறது.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

செப்டெம்பர் – 13

 

1503 : இத்­தா­லிய சிற்­பக்­க­லை­ஞரும், பொறி­யி­ய­லா­ளரும், கவி­ஞ­ரு­மான மைக்கல் ஏஞ்­சலோ புகழ்­பெற்ற டேவிட் என்ற சிலையை உரு­வாக்கும் பணி­களை ஆரம்­பித்தார்.


1759 : கன­டாவின் கியூபெக் நக­ருக்கு அரு­கா­மையில் இடம்­பெற்ற போரில் பிரித்­தா­னியப் படைகள் பிரெஞ்சுப் படை­களைத் தோற்­க­டித்­தன.


1788 : நியூயோர்க் நகரம் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் தற்­கா­லிக தலை­ந­க­ராக அறி­விக்­கப்­பட்­டது.


oslo-accord-13-9-199311847 : மெக்­ஸிக்கோ அமெ­ரிக்கப் போரில் அமெ­ரிக்கப் படை­யினர் மெக்­ஸிக்கோ நகரைக் கைப்­பற்­றினர்.


1898 : ஹனிபல் குட்வின், செலு­லோயிட் புகைப்­படச் சுருளைக் கண்­டு­பி­டித்தார்.


1899 : அமெ­ரிக்­காவில் இடம்­பெற்ற மோட்டார் வாகன விபத்தில் ஹென்றி பிளிஸ் என்­பவர் கால­மானார். அமெ­ரிக்­காவில் மோட்டார் வாகன விபத்தில் உயி­ரி­ழந்த முதல் நபர் இவர்.


1906 : இறக்கை பொருத்­தப்­பட்ட விமானம் ஐரோ­ப்­பாவில் முதல் தடவை­யாக பறந்­தது.


1914 : முதலாம் உலகப் போரில்  ஜேர்­ம­னியின் நமீ­பியா மீது தென் ஆபி­ரிக்கப் படை­யினர் தாக்­கு­தலை ஆரம்­பித்­தனர்.


1923 : ஸ்பெயினில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.


1939 : இரண்டாம் உல­கப்­போரில் கனடா  குதித்­தது.


1940 : இரண்டாம் உலகப் போரில் எகிப்­தினுள் இத்­தாலி  நுழைந்­தது.


1940 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னியின் குண்­டுகள் லண்டன் பக்­கிங்ஹாம் அரண்­ம­னையைச் சேதப்­ப­டுத்­தின.


1943 : சியாங் காய் ஷேக், சீனக் குடி­ய­ரசின் அதி­ப­ரானார்.


1948 :  நிஜாம் ஆட்­சியின் கீழி­ருந்த ஹைத­ரா­பாத்தை இந்­திய ஆளு­மையின் கீழ் இந்­தியப் படைகள் கொண்டு வந்­தன.


1953 : சோவியத் யூனி­யனின் உயர் பத­வி­யான சோவியத் கம்­யூனிஸ்ட் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக நிகிட்டா குருஷேவ் நிய­மிக்­கப்­பட்டர்.


1968 : வோர்சா ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து அல்­பே­னியா வில­கி­யது.


1971 : நியூ­யோர்க்கில் சிறைக்­கை­தி­களின் கிளர்ச்­சியைக் கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையில் 42 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1989 : தென் ஆபி­ரிக்­காவில் நிற­வெ­றிக்கு எதி­ரான மாபெரும் போராட்டம் பேராயர் டெஸ்மண்ட் டூட்டு தலை­மையில் இடம்­பெற்­றது.


1993 : நோர்­வேயில் இடம்­பெற்ற இர­க­சியத் தொடர்ப் பேச்­சு­வார்த்­தை­களை அடுத்து பலஸ்­தீனத் தலைவர் யாசிர் அர­பாத்­துக்கும் இஸ்­ரே­லியப் பிர­தமர் இட்சாக் ரபீ­னுக்கும் இடையில் சமா­தான ஒப்­பந்தம் எட்­டப்­பட்­டது.


1994 : யுலிசெஸ் விண்­கலம் சூரி­யனின் தென் முனையைக் கடந்­தது.


1999 : மொஸ்­கோவில் இடம்­பெற்ற குண்­டு­     வெ­டிப்பில் 119 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2001 : செப்­டெம்பர் 11 தாக்­கு­தல்­களின் பின்னர் அமெ­ரிக்­காவில் மீண்டும் சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து ஆரம்­ப­மா­கியது.


2008 : இந்­தி­யாவின் டில்­லியில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பு­களால் 30 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 130 பேர்கா­ய­ம­டைந்­தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

திரு­மண வைப­வத்தில் டோனட் திண்­பண்ட மலர்ச்­செண்­டுகள்

திரு­ம­ணத்­தின்­போது மலர்­செண்டு கொடுத்து புது­மணத் தம்­ப­தி­களை வாழ்த்தும் பழக்கம் எம்மில் பல­ருக்கும் உண்டு. பெரும்­பா­லான மணப்­பெண்கள் தமது திரு­மண நாளில் மலர்­களை பிரிக்க முடி­யாத ஒரு பொரு­ளா­கவே பார்க்­கின்­றனர்.

donuts

அவுஸ்­தி­ரே­லி­யாவில் ஒரு புது­ம­ணப்பெண் தனது திரு­மண நாளில் ஒரு விநோ­த­மான காரியம் செய்­துள்ளார். தனது திரு­மண நாளில் அலங்­க­ரிக்­கப்­பட்ட திண்­பண்­டங்கள் நிறைந்த “டோனட்”  மலர்ச்­செண்­டு­களைக் கொடுத்து மணப்­பெண்ணின் தோழி­யரை அவர் இன்­ப­அ­திர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்ளார். 


சிட்­னியைச் சேர்ந்த 23 வயதான பேஜ் கேர்க். 23 வய­தான ஸ்டீவனை அண்­மையில் திரு­மணம் செய்து கொண்டார். “நானும் எனது கணவர் ஸ்டீவனும் திரு­மண நாளன்று வித்­தி­யா­ச­மாக ஏதா­வது செய்ய வேண்டும். அது மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தா­கவும் இருக்க வேண்டும் என நினைத்தோம்.

 

என­வேதான் டோனட்­க­ளா­லான இந்த வித்­தி­யா­ச­மான மலர்ச்­செண்டை மணப்­பெண்ணின் தோழி­ய­ருக்கு கொடுத்தோம். ஆனால் இந்த டோனட் மலர்ச்­செண்டு கண்­க­ளுக்கு அழ­காகத் தோன்­றி­னாலும் மணப்­பெண்ணின் தோழியர் அதை உண்­ப­தற்கு விரும்­ப­வில்லை” என அவர் பி பி சி யிடம் தெரி­வித்­துள்ளார். 


மலர் அன்­ப­ளிப்­பு­க­ளுக்கு மாறாக புதி­தாக ஏதா­வது செய்ய வேண்டும் என நினைத்த நிறு­வனம் ஒன்று நடத்­திய போட்­டி­யி­லேயே இந்த டோனட் மலர்ச்­செண்­டுகள் பேஜ் தம்­ப­தி­ய­ருக்கு இல­வ­ச­மாக கொடுக்­கப்­பட்­டன. குறித்த நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து டோனட் மலர்ச்­செண்­டு­களைப் பெற்­றுக்­கொண்ட முதல் மணப்பெண் பேஜ் ஆவார்.   
 

http://metronews.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.