Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஹாய் லேடீஸ்... பீரியட்ஸ் முதல் மெனோபாஸ் வரை... நமக்கு நாமே செக்கப் பண்ணிக்கலாமா? #NationalWomensHealthFitnessDay

மைக்கும் உணவில் சத்தான காய்கறிகளையெல்லாம் சல்லடை போட்டு எடுத்து கணவருக்கும், குழந்தைக்கும் பரிமாறிவிட்டு, மிஞ்சி இருக்கும் சாரையே தங்கள் தட்டுக்கு வைத்துக்கொள்வார்கள் பெண்கள். தங்களைச் சுற்றியிருப்பவர்களைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்ளும் அந்த ஜீவன்களுக்கு, தங்கள் நலனில் அக்கறைசெலுத்தத் தோணாது. ஆனால், அந்த வழக்கத்தை மாற்ற வேண்டியது கட்டாயம்.

பெண்கள் தங்கள் வயதுக்கு ஏற்ப உடல்நலனில் அக்கறைகொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி.

 

பெண்கள்



“டீன் ஏஜ் பெண்கள்... டேக் நோட்ஸ்!

* மாதவிடாய் நாள்களில் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்ய இரும்புச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
* காய்கறிகளை ஒதுக்குவதுதான் பல பருவப் பெண்களுக்கும் சத்துக்குறைபாடும் ரத்தச் சோகையும் ஏற்பட முக்கியக் காரணம். எனவே இரும்புச்சத்துள்ள பசலைக்கீரை, பீட்ரூட்,கேரட் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். 
* வெள்ளைப்படுதல் இயல்பான ஒன்றுதான். ஒருவேளை அது அளவுக்கு அதிகமானாலோ, துர்நாற்றம், பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகவும். 
* கீரை, பருப்பு, பேரீட்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவப் பிரியர்கள் சிக்கன் அல்லது மட்டனை வாரத்துக்கு ஒருமுறையாவது நிச்சயமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* ஆய்லி ஹேர் உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு முறையும், டிரை ஹேர் உள்ளவர்கள் வாரத்துக்கு ஒரு முறையும் தலைக்குக் குளிக்கலாம்.  
* உயரத்துக்கு ஏற்ற உடல் எடை முக்கியம். உதாரணமாக, ஒருவரின் உயரம் 160 செ.மீ எனில் அவரது எடை 160 - 100, அதாவது 60 கிலோ இருக்க வேண்டும். ஒருவேளை உயரத்துக்குக் குறைவான எடை இருப்பின் உணவில் அக்கறை காட்டவேண்டும்.
* சரியான உணவுமுறைகளை, உணவு இடைவேளைகளைப் பின்பற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் உணவைத் தவிர்க்கக் கூடாது. 
* தினமும் தியானம் செய்யலாம். அது ஆரோக்கியத்துடன்  மன உளைச்சலுக்கும் தீர்வாக இருக்கும்.
* துரித உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. இவை உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும். ஒபிஸிட்டிக்கு வாசல் திறந்துவிடும். 
* உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தைப் பெற தினமும் பால், தயிர் இரண்டையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* ஒருவேளை மார்பகத்தில் வீக்கமோ, கட்டியோ தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். 

பெண்கள்


திருமணமான பெண்கள் கவனத்துக்கு!

* டீன் ஏஜ் பெண்களுக்கு அறிவுறுத்திய உணவு முறைகளைப் பின்பற்றவும்.
* தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* கணவர் சாப்பிட்டு, குழந்தைகள் சாப்பிட்டு 12 மணிக்கு காலை சாப்பாடு சாப்பிடும் பழக்கம் இருந்தால் தயவுசெய்து அதை விட்டொழிக்கவும். இவர்கள் அனைவரையும் கவனிக்க இவர்களையெல்லாம்விட உங்களுக்குதான் அதிக எனர்ஜி தேவைப்படும். எனவே, சரியான நேர இடைவேளையில் சாப்பிடவும். 
* மருத்துவரிடம் மார்பகச் சுயபரிசோதனை செய்யும் வழிமுறையைத் தெரிந்துகொண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். மாதவிடாய் முடிவடையும் நாள்களில் இதைச் செய்யவும். 
* மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கர்ப்பப்பை வாய் பரிசோதனை செய்துகொள்ளவும். 
* தாம்பத்யத்துக்குப் பிறகு பிறப்புறுப்பிலோ, சிறுநீர் கழிக்கும்போதோ துர்நாற்றம் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம். மாதவிடாய் நாள்களில் கண்டிப்பாகத் தாம்பத்யத்தைத் தவிர்க்கவும். 

40 ப்ளஸிலும் பெர்ஃபெக்டாக இருக்கலாம்! 

* இந்த வயதுகளில் உடல் நலனில் அதிக அக்கறை தேவை. 
* பச்சைக் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளவும். 
* ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்துகொள்ளவும். 
* மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை அவசியம். 
* சிறிதாக உடலில் வலி ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும். 
* நடைப்பயிற்சியையும், தியானத்தையும் வழக்கமாக்கவும். 
*இந்த வயதுகளில் எலும்பு அடர்த்தி குறைய ஆரம்பிக்கும் என்பதால் கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

* மெனோபாஸ் சிரமங்களை மருத்துவ ஆலோசனைகளுடன் எதிர்கொள்ளவும்.

NationalWomensHealthFitnessDay

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, steht und Text

செப்டம்பர் 27: நாகேஷ் பிறந்ததினம்.

‘தசாவதாரம்’ கடைசிநாள் ஷூட்டிங்கில் கமலிடம் நாகேஷ் என்ன சொன்னார்? #HBDNagesh

பள்ளிக்கூடங்களில் குறும்பு செய்யும் ஒல்லியான குறும்பு சிறுவனின் செல்லப்பெயர் குண்டப்பா. வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு ஹைதராபாத்தில் பல நிறுவனங்களில் வேலை செய்த இளைஞன்தான் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவை நாயகன். ஆம் நாகேஷ் எனும் கலைஞன் ‘தாமரைக்குளம்’ படத்தில் அறிமுகமாகி தனது கடைசி படமான ‘தசாவதாரம்’ வரை மக்களை மகிழ்வித்தார். எம்.ஜி.ஆர் தந்த பரிசு..எம்.ஆர்.ராதாவின் பாராட்டு..சிவாஜி வியந்த நடிகன்..கமலின் பிக் பாஸாக திகழ்ந்த நாகேஷ் பற்றிய சுவாரஸ்யங்கள் சிலவற்றை  படிப்போம்... வியப்போம்!
 

நாகேஷ்

 

 

 

http://cinema.vikatan.com

நாகேஷ் பிறந்த தின சிறப்பு பகிர்வு - 25 சிரிப்பின் நினைவுகள்..

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்..!

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!

- மானா பாஸ்கரன்

Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Text
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Text

#Cricket l நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் பிரன்டன் மெக்கலம் இன்று தனது 36 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.

Bild könnte enthalten: 1 Person, Hut und Text

செப்டம்பர் 27: மாவீரன் பகத்சிங் பிறந்ததினம் இன்று.

Bild könnte enthalten: Text

செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம்.

  • தொடங்கியவர்

 

ஆளில்லா தீவில் ஆதரவற்ற நாய்கள் ; தத்தெடுத்த மீனவர்கள்

பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் அவற்றில் சிலவற்றை அடிக்கடி கொல்கிறார்கள். அவை பொதுச் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் என பலரும் கருதும் அதேவேளை, வேறு சிலரோ அவை தூய்மையற்றவை என்று கலாசார அடிப்படையில் நம்புகிறார்கள். ஆனால், பாகிஸ்தானின் பெரிய நகரான கராச்சியின் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மனிதர்கள் வசிக்காத தீவு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தெரு நாய்கள் சிலவற்றை தத்தெடுத்துள்ளனர். இது பற்றிய ஒரு குறிப்பு.

  • தொடங்கியவர்

சர்ச் இன்ஜின் முதல் ஆல்ஃபபெட் வரை... அழிக்க முடியாத பிரவுசிங் ஹிஸ்டரி! #HBDGoogle

 

கூகுள் பிறந்தநாள்

 

 

"அன்பே நீயில்லாத நாட்களை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை" - இந்த வரிகள்  ஏதோ ஒரு ஒரு காதல் கடிதம் போல தோன்றுகிறதா?

இருக்கலாம். ஆனால் தினமும் நம் காதலன் / காதலியை விடவும் அதிகம் தேடுவது இவரைத்தான். மொபைலோ, டெஸ்க்டாப்போ... இவர் முகத்தில் விழிக்காமல் ஒரு கணம் கூட இருக்க முடியாது. வேறு யார், நம்ம கூகுள்தான் அந்த நபர். மேலே பார்த்த வரிகளின் அர்த்தம் இப்போது புரிகிறதா? டிஜிட்டல் யுகத்தில் சர்வவல்லமை பொருந்திய கூகுளுக்கு இன்றுதான் பிறந்தநாள். பண்டிகைகள், பிறந்தநாள், நிகழ்ச்சி என எல்லாவற்றிற்கும் டூடுல் விடும் கூகுள், தன் பிறந்தநாளுக்கு மட்டும் சும்மா இருக்குமா? 19-வது பிறந்தநாளை ஒட்டி ஸ்பெஷல் டூடுல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

எந்த சந்தேகம் என்றாலும் உடனே கூகுளில்தான் டைப்புவோம். உடனே ஆயிரக்கணக்கான தகவல்களை நம்மிடம் கொண்டுவந்து கொட்டும். ஆனால் தன்னுடைய பிறந்தநாள் எது என்பதில் கூகுளுக்கே குழப்பம். காரணம், google.com என்கிற டொமைன் பதிவு செய்யப்பட்ட நாள் செப்டம்பர்  15, 1997 , கூகுள் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட வருடம் செப்டம்பர் 4, 1998-ம் ஆண்டு. இதில் எதை பிறந்த நாளாகக் கொண்டாடுவது?. இந்தக் குழப்பத்தின் காரணமாகவே 2003-ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி, 2004-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி, 2005-ம் ஆண்டு செப்டம்பர் 26 என வெவ்வேறு நாட்களில் பிறந்தநாள் கொண்டாடியது கூகுள். அதன்பிறகு ஒரு முடிவெடுத்து 2006-ல் இருந்து செப்டம்பர் 27-ம் தேதியை தன் பிறந்தநாளாக கொண்டாடி வருகிறது. 

கூகுள்

இந்த 18 வருடங்களில் நாம் இணையத்தை பயன்படுத்தும் முறையையே முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது கூகுள். ஏதாவது ஒன்றை பற்றி தெரிய வேண்டுமென்றால் பக்கம் பக்கமாய் காகிதங்களை புரட்டி தேடிய காலம் இப்பொழுது இல்லை. ஓரிரு கீ-வேர்டுகளை டைப் செய்தால் போதும். A to Z தகவல்களைப் பார்த்துக்கொள்ளலாம். இந்த எளிமையும், வேகமும்தான் கூகுளின் வெற்றி. உடனே மக்கள் கூகுளுக்கு லைக்ஸ் குவிக்க, மற்ற சர்ச் இன்ஜின்களை விடவும் வேகமாக வளர்ந்தது கூகுள். கூகுளைத் தவிர்த்து வேறு சர்ச் இன்ஜின்களின் பெயரைக் கூட நாம் யோசித்திருக்கவே மாட்டோம். காரணம், அதற்கான தேவையே இல்லை என்பதுதான். 

கூகுள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அது பல மாற்றங்களை கண்டிருக்கிறது. அதே போல பல மாற்றங்களை இணைய உலகிலும் நிகழ்த்தியிருக்கிறது. வெறும் தேடுபொறியாக மட்டும் களத்தில் இறங்கிய கூகுள் இன்றைக்கு அதையும் தாண்டி பல்வேறு துறைகளில் கால் பதித்திருக்கிறது. கூகுளின் மிகப்பெரும் வெற்றிக்கு காரணம் எதிர்காலத்தில் வெற்றிபெறக்கூடிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்து அதை செயல்படுத்துவதுதான். 2005-ம் ஆண்டு வெறும் 50 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம் இன்றைக்கு ஸ்மார்ட்போன் சந்தையையே ஆக்கிரமித்துவிட்டது. இன்றைக்கு உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் முதலிடம் ஆண்ட்ராய்டுக்குதான். சந்தையில் எது வெற்றி பெறுமோ அதை வாங்குவதற்கும் தயக்கமே காட்டுவதில்லை கூகுள். யூ-டியூபில் இருந்து பிக்ஸல் போன் தயாரிக்க HTC நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை வாங்குவது வரைக்கும் இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். கடந்த சில மதங்களுக்கு முன்னால் கூட ஹல்லி லேப்ஸ் எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் துறை தொடர்பான புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வாங்கி கொண்டது.

பெரும்பாலான சேவைகளை இலவசமாகவே அளிக்கும் கூகுள் வருமானம் ஈட்டுவது நம்மை பற்றிய "பிக் டேட்டா" க்களை வைத்துதான். மின்னஞ்சல், மேப்ஸ், யூ-டியூப் என நாம் அடிக்கடி பயன்படுத்தும் பெரும்பாலான சேவைகள் கூகுளுக்கு சொந்தமானவைதான். இப்படி ஒவ்வொரு யூசரையும் எல்லா ஏரியாவிலும் சென்றடைவதால், விளம்பரங்களுக்கு தேவையான டேட்டாக்களுக்கு பஞ்சமே இல்லாமல் பணம் பார்க்கிறது. இந்த டேட்டா கூகுளின் பெரும்பலம். இப்படி கூகுளாக மட்டுமே இருந்த நிறுவனத்தை, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து "ஆல்ஃபபெட்" என்னும் தனி நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ் இயங்கிவருகிறது. 

அதன் கீழ் தற்பொழுது செயல்பட்டு வருகிறது. மோட்டோரோலா நிறுவனத்தை லேனோவோவிடம்  விற்ற பிறகு பிக்சல் என்ற பெயரில் ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது கூகுள். இது தவிர எதிர்கால தொழில்நுட்பங்களான வெறும் மென்பொருள் மட்டும் என இல்லாமல், மொபைல், ஸ்மார்ட் டிவைஸ்கள் என ஹார்டுவேர் கோதாவிலும் குதித்துவிட்டது. எதிர்காலத்தை ஆளப்போகும் AI, ஆக்மெண்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, தானியங்கி கார்கள், IoT என அனைத்து துறைகளிலும் கூகுளின் தயாரிப்புகள் 'உள்ளேன் ஐயா' சொல்லிக்கொண்டிருக்கின்றன. 

தொழில்நுட்ப புரட்சியில் அழிக்கவே முடியாத ஒரு 'History' கூகுளின் சாதனைப் பயணம். எதிர்காலத்தில், ஒரு நிறுவனமாக கூகுள் எப்படி இருக்கப் போகிறது என்பதிலும் சரி, ஒரு பயனாளருக்கு கூகுள் எப்படி இருக்கப்போகிறது என்பதிலும் சரி; இரண்டிலுமே நிறைய ஆச்சர்யங்களுடன் காத்திருக்கிறது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘இறைவன் மீதான அன்பை ஊட்டியபடி இருக்க வேண்டும்’
 

image_6c8d4532de.jpgகல்வியால் கடவுளைக் காண முடியாது. இறை விசுவாசம் உள்ள சாமானிய மனிதனின் மனத்திடம், நம்பிக்கை ஆகியவை படித்தவனுக்கு கூடுதலாக இருக்கும் எனச் சொல்லமுடியுமா? கல்வி, அறிவு அகந்தையை ஏற்படுத்தலாம். ஆனால், பாமரன் ஒரு யோகியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.  

கல்விக்கு மேல் செல்ல, அறிஞர்கள் பலருக்கும் இஷ்டமில்லை. அதனுள்ளே பிணைந்து நிற்பதால், அவனால் ஆன்மாவைச் சுத்தப்படுத்த கால அவகாசத்தை ஏற்படுத்தாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  

ஆனால், இந்த உலகத்தில் கல்வி, அறிவு தேவையில்லை எனும் அர்த்தம் கிடையாது. கல்வியுடன் இறைவன் மீதான அன்பையும் ஊட்டியபடி இருக்க வேண்டும்.  இன்று ஆன்ம ஞானம் பற்றிய தேடல்களில் சாமானிய பாமரனுக்கு ஈர்ப்பு; பெரும் செல்வந்தர்களுக்கோ படித்தவர்களுக்கோ உண்டா என்பது கேள்விக்குரியதே. இறைவன் மீதான வாத்ஸல்யம் ஜீவனை ஒளியேற்றும். இந்த மேலான ஆகர்ஷிப்பை எவராலும் ஏற்படுத்திவிட முடியும். பக்தியே ஒரே வழி. 

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கு முன் மாதிரி ஒருவரைச் சொல்வற்கும் மற்றவரோடு ஒப்பிடுவதற்கு என்ன வித்தியாசம்? #GoodParenting

 
 

குழந்தை

“எப்போ பாரு டிவியையே பார்த்துட்டே இருக்கிறது... பக்கத்து வீட்டு ஆகாஷைப் பார்.... ஸ்கூல் விட்டு வந்ததும் படிக்க ஆரம்பிடுறான்" இந்தத் தொனியில் தங்கள் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் பேசுகின்றனர். 

 

ஒரு குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று அவரைப் போலதான் இல்லையே எனும் தாழ்வு மனப்பான்மை. அடுத்து, ஒப்பீடாக இருப்பவர் மீது உருவாகும் வெறுப்பு. இவை இரண்டுமே உங்கள் பிள்ளையின் மனநிலையைச் சிதைக்கக்கூடியவைதான். தாழ்வு மனப்பான்மை தன்னை மற்றவர்களிடமிருந்து விலகச் செய்துகொன்டு தனிமையைக் கொடுத்துவிடும். வெறுப்பு என்பது அடுத்தவர் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் அளவுக்கு மாற்றிவிடும். எனவே ஒருவரோடு ஒப்பிட்டு உங்கள் குழந்தையின் பழக்கத்தை மாற்ற முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

“ஒப்பிடுவது தவறு. சரி. ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவரைப் போலப் படித்து நல்ல நிலைக்கு வா.... அவரைப் போலப் பயிற்சி எடுத்து விளையாடி வெற்றிப் பெறு' என்று சொல்லக்கூடாதா? அப்படிக் கூறுவதையும் மற்றவரோடு ஒப்பிடுகிறோம் என்பதாகவே சொல்வீர்களா?” இப்படிப் பலரும் கேட்பதுண்டு. உண்மையில் பார்த்தால் ஒப்பீடு - முன் மாதிரி இவை இரண்டும் மெல்லிய வேறுபாடுகள்தான் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்வதும் குழந்தை வளர்ப்பில் முக்கியமான ஒன்றுதான். 

தவறு செய்வது என்பது தவிர்க்கவே முடியாத இயல்பு. தவறு செய்யும் குழந்தையை, மற்றவரின் செய்கையோடு இணைத்து ஒப்பிட்டுப் பேசுகிறோம். இதை நமது குழந்தையின் செயலைத் திருத்துவதற்கு எனச் செய்கிறோம். ஆனால், நாம் முன்பு சொன்னதுபோலப் தாழ்வு மனப்பான்மையும் வெறுப்பும் நமது குழந்தையின் திறமைகளை மழுங்கடித்துவிடும். அதே சமயம் ஒருவரை ரோல் மாடாக முன்னிருத்தும்போது அது நம் குழந்தை செய்யும் தவற்றைத் திருத்தும் நோக்கில் நாம் சொல்ல வில்லை. அதனால் குழந்தையும் அதேபோல யோசிக்காது. 

child

கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள பிள்ளையிடம் சச்சினை ரோல் மாடலாகச் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். சச்சின் வளர்ந்த சூழல், பயிற்சியில் காட்டிய அக்கறை, தோல்வியில் துவண்டுவிடாமல் போராடியது, விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் களமிறங்கியது.... உள்ளிட்ட பல விஷயங்களைச் சொல்வோம். அப்படிச் சொல்லும்போது அவரோடு உங்கள் குழந்தையை ஆங்காங்கே ஒப்பிடத்தான் செய்வீர்கள். ஆனாலும், தான் ஆர்வத்துடன் இருக்கும் துறையில் சாதித்த ஒருவரைப் பற்றிச் சொல்லும்போதும் ஒப்பிடும்போதும் அதை நெகட்டிவ் விஷயமாகக் கருதுவதற்கு வாய்ப்பில்லை. 

'ரோல் மாடல் என்றதுமே சச்சின், சிந்து, மித்தாலி ராஜ், விஸ்வநாதன் ஆனந்த்... இவர்களைத்தான் சொல்ல வேண்டுமா?' என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மைதான். ஒரு சிறு திருத்தம் இவர்களையும் சொல்ல வேண்டும். அந்த மாவட்டத்தில், அந்த ஊரில் உள்ளவர்களையும் நாம் ரோல் மாடலாகக் கூறலாம். ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு மட்டும் ரோல் மாடல்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டாம். நல்ல பழக்கங்களை, பேசுவதில் இயல்பாக, பழகுவதில் சாதி, மத, பாலின வேறுபாடுகளைக் கடைபிடிக்காமல் இருக்கவும் நல்ல ரோல் மாடல்களை அறிமுகப்படுத்தலாம். 

ரோல் மாடல்களைப் பற்றிக் கூறும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவரை எதன் நோக்கில் பின்பற்ற சொல்கிறோம். அதை மட்டும் கவனிக்க உங்கள் குழந்தையைப் பழக்க வேண்டும். அவரின் தனி மனித விஷயங்களில் சில முரண்பட்டவை இருக்கலாம். அவற்றைக் கழித்துவிடவும் குழந்தைகளிடம் கூற வேண்டும். இல்லையெனில் அவரை ஜெராக்ஸ் எடுக்கத் தொடங்கிவிடுவர். அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும். 

 

சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒப்பீடு என்பது எப்படி இருக்கக்கூடாது என்பதை நேரடியாகவே மறைமுகமாகவோ சொல்வது, முன்மாதிரி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது. திட்டமிட்டு முன்நகரச் செய்வது. இந்த வேறுபாட்டை பெரியவர்களை விட குழந்தைகள் மிக விரைவாகப் புரிந்துகொள்வார்கள். எனவே நாம் கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 28
 

1687 – கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது.

1708 – ரஷ்யாவின் முதலாம் பீட்டர் மன்னன் சுவீடன் படைகளை லெஸ்னயா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.

1791 – பிரான்ஸ் ஐரோப்பாவில் யூதர்களை அடிமைத்தளையில் இருந்து விடிவித்த முதலாவது நாடானது.

1867 – டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாகியது.
1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைக் கைப்பற்றியது..
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சா ஜேர்மனியிடம்.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள் எஸ்தோனியாவில் இருந்த நாசிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.
1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.
1958 – பிரெஞ்சு ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது.
1960 – மாலி, செனெகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1961 – டமாஸ்கசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா ஒன்றியமான ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது.
1994 – பால்ட்டிக் கடலில் சுவீடன் சென்று கொண்டிருந்த எஸ்தோனியப் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – பொப் டெனார்ட் மற்றும் சில கூலிப் படைகள் கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினர்.
2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

கடல் அரக்கனிடமிருந்து, உயிரினங்களைக் காப்பாற்றும் ஆச்சர்ய மனிதர்!

 

திகாலை நேரத்தில் அந்த ஆறு பேரும் கடற்கரையில் வந்து நிற்கிறார்கள். 

"இன்னும் லிய்பர் வரவில்லையா? "

 

"இல்லையே... அவன் என்ன ஆனாலும், காலையில் நமக்கெல்லாம் முன்னாடியே வந்திடுவானே! "

"அது ஒன்னுமில்ல... கிழவனுக்கு வயசாயிடுச்சுல்ல, அதான் கப்பல்லயே படுத்து தூங்கிட்டிருக்கும். போய் பார்க்கலாம் வா..."

அந்த ஆறு பேரும் கப்பலுக்குள் குதிக்கிறார்கள். அந்தக் கிழவரைத் தேடுகிறார்கள். அப்போது திடீரென கப்பல் ஸ்டார்ட் ஆகி, வேகமாக ரிவர்ஸில் போகிறது. அனைவரும் நிலைத்தடுமாறி கீழே விழுகிறார்கள். கிடைக்கும் பிடிகளைப் பிடித்துக் கொண்டு, ஆளுக்கொரு பக்கமாய் உட்காருகிறார்கள்.

“அப்பவே சொன்னேன், அவனை நீ கிழவன்னு சொல்லாதே... கேட்டியா? இப்ப பாரு அந்தக் கிழவனோட வேலைய..."

"ஐயோ...."

பெரும் அலையில் அத்தனை வேகமாகப் பாய்ந்தது அந்தக் கப்பல். 

கடல் அரக்கனிடமிருந்து உயிர்களைக் காப்பாற்றும் ஹீரோ

" யோவ்... லிய்பர். சாரி... மன்னிச்சிடு. சரி, சரி... நீ கிழவன் இல்லைதான்" என்று அவர்கள் சொல்லவும் கப்பல் சற்று மெதுவாக போகத் தொடங்குகிறது. 

இன்ஜின் ரூமிலிருந்து வெளிவருகிறார் கேர்ட் லிய்பர் (Kurt Lieber). 

"கய்ஸ்...இன்னிக்கு கடல் கொஞ்சம் கொதிப்பா இருக்கு. எல்லோரும் ஜாக்கிரதையா டைவ் பண்ணுங்க" என்று சொல்லி டைவ் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.

வெளிச்சம் மெதுவாகப் படரத் தொடங்கியதும், ஒவ்வொருவராக கடலில் குதிக்கிறார்கள்.  

ஒரு மணி நேரம் கழிகிறது. கப்பலின் ஒரு மூலையில் உட்கார்ந்து கடலையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார் லிய்பர். ஒரு சிகப்பு நிற பலூன் சட்டென்று கடலிலிருந்து வெளிப்பட்டு மிதக்கிறது. அதைக் கப்பலை நோக்கி இழுக்கிறார். கூடவே, கடலுக்குள் போனவர்களும் வெளியே வருகிறார்கள். அனைவரும் கப்பலில் ஏறுகிறார்கள். அந்த சிகப்பு நிற பலூனை அனைவருமாக பிடித்து தூக்குகிறார்கள். அதன் கீழே ஒரு பெரிய இரும்புக் கூண்டு இருக்கிறது. அதை இழுத்து அதில் சிக்கியிருக்கும் நண்டுகளையும், இறால்களையும் விடுவிக்கிறார்கள். 

கடல் அரக்கனிடமிருந்து உயிர்களைக் காப்பாற்றும் ஹீரோ

இந்த விஷயங்கள் எல்லாம் நடப்பது அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஹண்டிங்டன் கடற்பகுதியில். 1970களிலிருந்தே ஆழ்கடல் நீச்சல் வீரராக இருந்து வருபவர் கேர்ட் லிய்பர். காலங்கள் மாற, கடல் பெருமளவு மாசுபடுவதை உணர்கிறார். குறிப்பாக, கடலில் மீன் பிடிக்கப் போகும் மீனவர்களின் வலைகள் சமயங்களில் அறுந்து கடலிலேயே தங்கிவிடுகின்றன. அவை பல உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நண்டுகளையும், இறால்களையும் பிடிக்க பெரிய கூண்டுகளைக் கடலுக்கடியில் அனுப்புவார்கள். சமயங்களில் கப்பலுக்கும், கூண்டுக்குமான கயிறு அறுந்துவிடும், பலத்த காற்றினால் அந்தக் கூண்டு பல திசைகளுக்கு மாறிப்போவதும் உண்டு. இதைத் தேடி எடுப்பது மீனவர்களுக்கு மிகவும் கடினமான வேலை என்பதால், அதை அப்படியே விட்டுவிட்டு கரைக்குத் திரும்பிவிடுவார்கள்.

கடலுக்கடியில் இருக்கும் ஒரு நைலான் வலை அழிய 650 வருடங்கள் ஆகும்.

வலைகளில் சிக்கும் கடல் திமிங்கலங்கள்

ஒரு வருடத்திற்கு உலகம் முழுக்க இது போன்ற கூண்டுகளும், மீன்பிடி வலைகளுமாக சேர்த்து 3 லட்சத்து 60 ஆயிரன் டன் அளவிற்கு சேர்கின்றன. இதனால் பல லட்ச கடல் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. இந்த வலைகள் மற்றும் கூண்டுகளினால் அமெரிக்காவில் வருடத்திற்கு சராசரியாக 10-லிருந்து 15 திமிங்கலங்கள் சிக்கி உயிரிழக்கும். ஆனால், கடந்த நான்கு வருடங்களாக இந்த எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 72 திமிங்கலங்கள் இந்த வலைகளில் சிக்கி உயிரிழந்தன.

கடல் அரக்கனிடமிருந்து உயிர்களைக் காப்பாற்றும் ஹீரோ

இந்தப் பிரச்னைகளைக் களைய தன்னால் இயன்ற முயற்சிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2000மாம் ஆண்டு "பெருங்கடல் பாதுகாப்பாளர்கள் கூட்டியக்கம்" (Ocean defenders Alliance) எனும் இயக்கத்தைத் தொடங்கினார் லிய்பர். முதலில் 6 நண்பர்கள் மட்டுமே அவரோடு கைகோர்த்தனர். ஆரம்பத்தில் அது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை. கடலின் ஏதாவது ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அதற்குள் சென்று இதைத் தேடிப் பிடித்து எடுப்பது மிகவும் சிரமமான விஷயமாகவே இருந்தது. அந்த சிரமம் இன்று வரையிலும் தொடர்கிறது. ஆனால், இன்று அவர்கள் 6 பேர் மட்டுமே அல்ல. இந்தக் குழுவில் இன்று 200 பேர் இருக்கின்றனர். அமெரிக்காவின் பலதரப்பட்ட கடற்பகுதிகளில் தங்கள் வேலைகளைச் செய்து வருகிறார்கள். தான் செய்யும் இந்த முன்னெடுப்புகள் குறித்து இப்படிச் சொல்கிறார் லிய்பர்... 

கடல் ஹீரோ

 

“ஒவ்வொரு நாளும் இந்தக் கடல் அரக்கர்களிடம் சிக்கி எத்தனையோ உயிரினங்கள் இறக்கின்றன. அதில் சிலவற்றையாவது காக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் செய்வது ஏதோ உலக சாதனை எல்லாம் கிடையாது. நான் பெரிய புரட்சி செய்துவிட்டேன் என்றும் நான் சொல்லவில்லை. ஆனால், ஒரு மிகச் சிறிய மாற்றத்திற்கு நான் வித்திட்டிருக்கிறேன். இது என் கடமை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. இந்த வேலை கொஞ்சம் கடினமானதுதான். ஆனால், அந்தக் கூண்டில் சிக்கியிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்றியதும், அது அத்தனை மகிழ்ச்சியோடு நீந்திப் போவதைப் பார்க்கும் போது எல்லா கஷ்டங்களும் மறைந்துவிடும்..."

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ஜிப்சிக்கள் சமூக மைய நீரோட்டத்தில் இணைவதால், அழிந்துவரும் கைரேகை பார்த்தல்

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

* சமீபத்தில் `மிஸ்.துருக்கி’ பட்டம் வென்றவர் இட்டிர் எஸன். பட்டத்தை வென்ற சில மணி நேரங்களிலேயே அவருடைய அழகிப் பட்டத்தை பறித்துவிட்டது தேர்வுக்குழு. காரணம் அவர் ட்விட்டரில் எழுதிய சர்ச்சைக்குரிய ட்வீட். சென்ற ஆண்டு துருக்கியில் அரசுக்கு எதிராக நடைபெற்ற ராணுவப் புரட்சியில் உயிர் நீத்தவர்களைப் பற்றி ட்விட்டரில் எழுதியிருந்தார் எஸன். அந்த இரண்டு வரிகளுக்குத்தான் இந்தத் தண்டனை! நீ பற்றவைத்த நெருப்பொன்று...


38p1.jpg

* த்ரில்லர் கதைகள் வைத்திருந்தால் உடனடியாக நயன்தாராவிடம் ஓ.கே வாங்கலாம். அந்த அளவுக்கு `த்ரில்’ விரும்பியாக மாறிவிட்டார் நயன். ஈரம், வல்லினம் படங்களின் இயக்குநர் அறிவழகனின் படத்தில் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். படம் சைக்கலாஜிகல் த்ரில்லர் என்பதுதான் நயன்தாராவின் யெஸ்ஸுக்குக் காரணம். `இமைக்காத நொடிகள்’ படம் முடிந்ததும் அடுத்து இந்தப்படம்தான்! சூப்பர் காம்போ... கலக்குமே!


38p2.jpg

* ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கான ஹாட்ரிக் என்பது 26 வருடங்களுக்குமுன் கபில்தேவ் எடுத்தது. அதற்குமுன் சேத்தன் ஷர்மா எடுத்திருந்தார். இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு குல்தீப் யாதவ் கடந்த வாரம் ஆஸிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் எடுத்திருக்கிறார். கொல்கத்தாவில் நடந்த ஒருநாள் போட்டியில் 33-வது ஓவரில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். டிரஸ்ஸிங் ரூமில், கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் குல்தீப் யாதவை! 33-வது ஓவரில் மூன்று விக்கெட்!


* இந்தியா சார்பாக இந்த ஆண்டு ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம் `நியூட்டன்.’ `டங்கல்’ உள்பட பல படங்கள் போட்டியில் இருந்தும் `நியூட்டன்’ வென்றிருக்கிறது. இந்தியத் தேர்தல்கள் குறித்து விமர்சிக்கிற இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களாலும் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளைப்பெற்றது. சென்றுவா வென்றுவா...


* புயல் வேகப் பயிற்சிகளில் இருக்கிறார் லியாண்டர் பெயஸ். டென்னிஸ் வீரர்கள் பொதுவாக 35 வயதுக்குள்ளாகவே ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஆனால் பெயஸுக்கு வயது 44. இன்னமும் இரவு பகல் பாராமல் தீவிர பிராக்டீஸில் இருக்கிறார். `என் உடம்பு எப்போ ஓய்வெடுக்கணும்னு சொல்லுதோ அப்போதான் ஓய்வு. அதுவரை டென்னிஸை என்னிடமிருந்து பிரிக்க முடியாது’’ என்கிறார் பெயஸ். சல்யூட்!


38p3.jpg

* தமிழ் பிக்பாஸைப்போலவே இந்தி பிக்பாஸும் செம ஹிட் ப்ரோகிராம். இங்கு கமல் கலக்குவதைப்போலவே அங்கே சல்மான்கான் 10 சீசன்களாகப் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறார். அக்டோபரிலிருந்து 11-வது சீசன் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதுவரை ஒரு சீசனுக்கு 8 கோடி என வாங்கிக்கொண்டிருந்த சல்மான் இந்தமுறை தன்னுடைய சம்பளத்தை 11 கோடியாக உயர்த்தி இருக்கிறார். உள்ளே இருக்க ஊதியம் உண்டுங்களாண்ணா!


38p4.jpg

* பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு `கேன்சலேஷன் ஸ்டார்’ எனச் செல்லப்பெயர் வைத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் சந்திக்கலாம் என நேரம் கொடுத்தால் அது எந்த நேரமும் கேன்சல் செய்யப்படலாம் என்பதுதான் இந்தக் கலாய் கமென்ட்டுக்குக் காரணம். அவர் முதல்முறை சந்திக்க ஓகே சொல்லி, அப்படியே நடந்தது லட்சத்தில் ஒருவருக்குத்தான் என்கிறார்கள் நொந்தவர்கள். சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

53 மில்லியன் டாலருக்கு விலைபோன உலகின் இரண்டாவது பெரிய வைரக்கல்

நூற்றாண்டில் கண்டறியப்பட்ட பெரிய ரத்தின இணையான வெட்டப்படாத வைரக்கல் .படத்தின் காப்புரிமைSOTHEBY'S

உலகின் இரண்டாவது பெரிய வைரம், லண்டனில் உள்ள நகை வியாபாரியிடம் 53 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், அதற்கு ஏற்ற விலைகிடைக்காத நிலையில், கிராஃப் வைரங்கள் நிறுவனத்தின் இயக்குநரான லாரன்ஸ் கிராஃப், தனிப்பட்ட முறையில் இந்த வைரத்தை வாங்கியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாஸ்ட்வானாவில், லுக்காரா டைமண்ட் கார்ப்ரேஷன் இந்த 1,111 கேரட் வைரத்தை தோண்டி எடுத்தது.

2016ஆம் ஆண்டு, ஜூன் மாதம், சொத்தீபையில் நடைபெற்ற ஏலத்தில் கேட்கப்பட்டதை விட, தொகையில் முன்னேற்றம் உள்ளது என லுக்காரா தெரிவித்துள்ளது.

இந்த வைரம், "லெசிடி லா ரோனா" என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு "எங்களின் வெளிச்சம்" என போட்ஸ்வானாவின், ஸ்வானா மொழியில் பொருள்.

இந்த கல், 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் முன்பு உருவாகியது. இது ஏறத்தாழ டென்னிஸ் பந்தின் அளவில் உள்ளது.

அளவில் மட்டுமின்றி இந்த வைரம், "மிகச் சிறந்த தரத்துடனும், ஊடுருவிப் பார்க்கும் வகையிலும்" உள்ளது என அமெரிக்கன் ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் சான்றளித்துள்ளது.

லெசிடி லா ரோனா வைரம்படத்தின் காப்புரிமைREUTERS

"அந்த கல்லே தனது கதையை கூறும். அதுவே எந்த வடிவத்தில் வெட்டப்பட வேண்டும் என நமக்கு கற்றுத்தரும்" என்கிறார் கிராஃப்.

இந்த கல், மிகவும் துல்லியமான ஸ்கேனிங் இயந்திரம் கொண்டு ஆராயப்படும். அந்த இயந்திரம், வைரத்தின் மையப்பகுதியில் ஏதேனும் சிறு குறைபாடுகள் உள்ளதா என்பதை கவனித்தபின் எந்த வகையில் இந்த வைரம் இழைக்கப்படும் என்பது முடிவு செய்யப்படும் என்கிறது அந்நிறுவனம்.

மேலும் குறைபாடுகள் உள்ளதா என்பதை கவனிக்க, ஒரு நிபுணர் குழு, மைக்கிரோஸ்கோப்களின் மூலம் இந்த வைரத்தை ஆராயும்.

பிறகு அவர்கள், இந்த வைரத்தை எந்த வடிவத்தில், எத்தனை துண்டுகளாக வெட்ட வேண்டும் என்பதை முடிவு செய்வர்.

இந்த வைரம் 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகலுக்கு முன்பு உருவானது.படத்தின் காப்புரிமைGRIFF DIAMONDS

கடந்த ஆண்டு, லா ரோனா வைரத்தின் பகுதியாக இருந்த, 373 காரட் வைரத்தையும், கிராஃப் நிறுவனம் வாங்கியுள்ளது.

முதலில் இந்த சிறிய வைரத்தை வெட்டவுள்ளதாக கூறும் அந்நிறுவனம், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு, பெரிய வைரத்தில் எப்படி வேலை செய்வது என்பது முடிவு செய்யப்படும்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, உலகில் கண்டறியப்பட்ட பெரிய ரத்தினத் தரத்திலான வைரக்கலாகவும், எல்லாக் காலத்துக்குமான இரண்டாவது பெரிய வைரக்கல்லாகவும் `லெசிடி லா ரோனா` உள்ளது. 1905 ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட, 3,106 கேரட் எடையுள்ள கல்லியன் என்னும் வைரமே உலகின் மிகப் பெரிய வைரம்.

கிராஃப் நிறுவனம், இந்தக் கல்லை , "உலகிலேயே மிகவும் விலைமதிப்பு பெற்ற வெட்டப்பட்டாத வைரம்" என விவரிக்கிறது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஒட்டகத்தில் பயணிக்கும் பெண்கள் குழு வழங்கும் சிறப்பு செய்தி

 

இந்திய எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநில எல்லை கிராமங்கள் வழியாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களில் அமர்ந்தபடி இந்தப் பெண்கள் எங்கே செல்கின்றனர்? எதற்காக இந்த ஊர்வலமும், ஒட்டக சவாரியும்?

 

பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் செல்லும் பெண்களின் இந்த ஒட்டகச் சவாரி மக்களுக்கு ஆர்வமூட்டும் ஊர்வலமாக இருக்கிறது.

பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் செல்லும் பெண்களின் இந்த ஒட்டகச் சவாரி மக்களுக்கு ஆர்வமூட்டும் ஊர்வலமாக இருக்கிறது

குஜராத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் வரை இந்த பெண்கள் மேற்கொண்டிருக்கும் ஒட்டக ஊர்வலம் ஒரு சிறப்பு நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

குஜராத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் வரை இந்த பெண்கள் மேற்கொண்டிருக்கும் ஒட்டக ஊர்வலம் ஒரு சிறப்பு நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை பி.எஸ்.எஃப்பில் பணிபுரியும் இந்தப் பெண்கள், எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு சிறப்புச் செய்தியை கொண்டு செல்கின்றனர்.

இந்திய விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை பி.எஸ்.எஃப்பில் பணிபுரியும் இந்தப் பெண்கள், எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு சிறப்புச் செய்தியை கொண்டு செல்கின்றனர்.

விமானப்படை மற்றும் பி.எஸ்.எஃப்பை சேர்ந்த இந்த பெண்கள், ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் ஊர்வலத்தை மேற்கொண்டுள்ளனர்.

விமானப்படை மற்றும் பி.எஸ்.எஃப்பை சேர்ந்த இந்த பெண்கள், ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் ஊர்வலத்தை மேற்கொண்டுள்ளனர்

பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களின் வழியாக நூற்றுக்கணக்கான ஒட்டகங்களில் பெண்கள் சவாரி செய்தபடி ஊர்வலம் வருகின்றனர்.

பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களின் வழியாக நூற்றுக்கணக்கான ஒட்டகங்களில் பெண்கள் சவாரி செய்தபடி ஊர்வலம் வருகின்றனர்.

இந்த ஒட்டக ஊர்வலம் குஜராத்தில் 443 கிலோ மீட்டர் மற்றும் ராஜஸ்தானில் 609 கிலோமீட்டர் தொலைவையும் கடந்து வந்துள்ளது.

இந்த ஒட்டக ஊர்வலம் குஜராத்தில் 443 கிலோ மீட்டர் மற்றும் ராஜஸ்தானில் 609 கிலோமீட்டர் தொலைவையும் கடந்து வந்துள்ளது.

குஜராத்தில் இருந்து கிளம்பிய ஒட்டக ஊர்வலம் தற்போது பஞ்சாபில் உள்ள அபோஹருக்கு வந்துள்ளது.

 

குஜராத்தில் இருந்து கிளம்பிய ஒட்டக ஊர்வலம் தற்போது பஞ்சாபில் உள்ள அபோஹருக்கு வந்துள்ளது.

நெற்றியில் பொட்டு வைக்கிறார் ஒரு பெண்.

இந்த ஊர்வலம் செல்லும் இடங்களில் எல்லாம் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அலங்கரிக்கப்பட்ட ஒட்டங்கள் கொண்ட ஊர்வலம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்படுகிறது. மக்கள் ஒட்டகங்களுக்கு முன் நின்று ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

அலங்கரிக்கப்பட்ட ஒட்டங்கள் கொண்ட ஊர்வலம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்படுகிறது. மக்கள் ஒட்டகங்களுக்கு முன் நின்று ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

10 இந்தத் திட்டத்தின்கீழ் பஞ்சாப் மாநிலத்தில் 316 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க திட்டமிடப்பட்டது.

10 இந்தத் திட்டத்தின்கீழ் பஞ்சாப் மாநிலத்தில் 316 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க திட்டமிடப்பட்டது.

இந்த ஒட்டக ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதியன்று அட்டாரி-வாஹா எல்லைப் பகுதியை சென்றடையும். அப்போது ஊர்வலம் மொத்தம் 1368 கிலோ மீட்டர் தொலைவு பயணத்தை நிறைவு செய்யும்.

இந்த ஒட்டக ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதியன்று அட்டாரி-வாஹா எல்லைப் பகுதியை சென்றடையும். அப்போது ஊர்வலம் மொத்தம் 1368 கிலோ மீட்டர் தொலைவு பயணத்தை நிறைவு செய்யும்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

தூணில் ஏறும் வினோத போட்டியை ரசித்திருக்கீறீர்களா?

  • தொடங்கியவர்

சச்சின் முதல் தோனி வரை... அம்மாடியோவ்! கிரிக்கெட்டர்களிடம் இத்தனை கார்களா?

கிரிக்கெட்டில் ஸ்கோர் பண்றது ஒரு பக்கம் இருக்கட்டும். அவங்க வீட்டு கேரேஜிலும் காஸ்ட்லி கார்களாக வாங்கி ஸ்கோர் பண்ணுவது நம்ம கிரிக்கெட்டர்களின் ஹாபி. அப்படி நம் ஊர் கிரிக்கெட்டர்களின் வாகனங்கள் என்னென்னனு ஒரு சின்ன டூர்!

கிரிக்கெட்

 

விராட் கோலி

களத்தில் நின்று ஆடி விளையாடும் கோலிக்கு ரொம்பப் பிடித்தது ஆடி கார்கள்தான். திடீர்னு ஒரு ஷார்ட்ஸ், டீ-ஷர்ட்டோட கிளம்பிப் போய் ஆடி ஷோ ரூமில் ஏதாவது ஆடி கார் புக் பண்ணிட்டு வருவது கோலியின் ஸ்டைல். அப்படி இவர் கடைசியாக வாங்கிய கார் `ஆடி A8'. இவரிடம் ஆடி R8 V10, R8 LMX, ஆடி A8 W12, Q7, Q5, A6, S6 என எக்கச்சக்க ஆடிகள் உள்ளன. இதில் R8 கார், 2 சீட்டர் கார்தான். டெல்லியில் புதிதாகத் திறந்திருக்கும் ரெஸ்டாரன்ட்டில் அடிக்கடி கோலியின் R8 காரைப் பார்க்கலாம். இது தவிர, குட்டிக் குட்டி ரூரல் ஏரியாக்களுக்கு என்றால், இவரின் ஃபார்ச்சூனர் கிளம்பும். “மிட் நைட். ஆளே இல்லாத ஹைவேஸ்ல என்னோட ஆடி காரை விரட்டுறதுதான் எனக்கு கிரிக்கெட்டுக்குப் பிறகு வாழ்க்கையில் ரொம்பப் பிடிச்ச விஷயம்!’’ என்று ஒரு பேட்டியில் உளமகிழ்ந்திருக்கிறார் கோலி. இனிமேல் ஆடி கம்பெனியிலிருந்து கார் ரிலீஸானால்தான் கோலிக்கு வேலை. 

sachin

சச்சின் டெண்டுல்கர்

கோலிக்கு ஆடி என்றால் சச்சினுக்கு பிஎம்டபிள்யூ. ‘தமிழ் தலைவாஸ்’ தவிர, பிஎம்டபிள்யூவின் பிராண்ட் அம்பாஸடரும் சச்சின்தான். திடீரென பிஎம்டபிள்யூ ஃபேக்டரிக்குள் என்ட்ரி கொடுத்து, ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுப்பாராம் சச்சின். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், X5 M, M6 கிராண் கூபே, M5, பிஎம்டபிள்யூ i8 என, சச்சினின் கேரேஜில் பிஎம்டபிள்யூ வாசம். இதில் M5 கார் மொத்தமே 300 கார்கள்தான் தயாரிக்கப்பட்டன. அதில் ஒன்று சச்சினின் கிரே கலர் M5. இதில் i8, பார்த்தவுடன் கொள்ளைகொள்ளும் செம ஸ்போர்ட்ஸ் கார். இரண்டு சீட்டர் காரான இதுதான் சச்சினின் ஃபேவரைட். காரணம், இது பிஎம்டபிள்யூவே சச்சினுக்குப் பரிசளித்த கார்.  “இதன் ஹேண்ட்லிங் நான் வேறு எந்த கார்களிலும் பார்த்ததில்லை’’ என்று உருகுவார். இவரின் அனைத்து பிஎம்டபிள்யூகளும் 100 கி.மீ-யை 4 விநாடியில் தாண்டக்கூடியது.

கொஞ்ச நாள்களுக்கு முன்பு மும்பையில் சிவப்பு நிற ஃபெராரி கார் பறந்தால், அதில் சச்சின் இருக்கார்னு அர்த்தம். இப்போது ஒரு பிசினஸ் புள்ளியிடம் ஃபெராரியை நல்ல விலைக்கு விற்றுவிட்டார் சச்சின். இவரின் இப்போதைய செல்லம், `நிஸான் GTR' என்னும் ஸ்போர்ட்ஸ் கார். ``உலகம் முழுக்க இதற்கு ரசிகர்கள் உண்டு. அதில் நானும் ஒருவன்’’ என்பார். 549 குதிரை சக்தியை வெளிப்படுத்தும் GTR, 100 கி.மீ-யை 2.8 விநாடியில் தாண்டும். இது தவிர, ஒரு பென்ஸ் C63 AMG காரும் இவரிடம் உண்டு.

yuvaraj

யுவராஜ் சிங்

பேட்டிங்காக இருந்தாலும் சரி, ஃபீல்டிங்காக இருந்தாலும் சரி, கேன்சராக இருந்தாலும் சரி - அடித்து முன்னேறுவது யுவராஜின் ஸ்டைல். யுவராஜும் பெரிய கார் கலெக்டர். ஆரம்பத்தில் சாதாரண ஹோண்டா சிட்டி பயன்படுத்திய யுவராஜ், அதற்குப் பிறகு `போர்ஷே 911' பயன்படுத்தினார். பிறகு இளைஞர்களின் கனவு காரான `லம்போகினி' ரொம்ப நாள்களாகப் பயன்படுத்தி வந்தார். ஆரஞ்சு வண்ண இந்த லம்போகினியில் ஒரு மணி நேரத்தில் சென்னையிலிருந்து மதுரை மாட்டுத்தாவணியை ரீச் பண்ணலாம். ஆனால், இதன் அனுபவத்தை உணர வேண்டும் என்றால், ரேஸ் ட்ராக் போன்ற சாலை தேவை. அதனால், டெல்லி புத் ரேஸ் சர்க்யூட்டில் அடிக்கடி லம்போகினியில் பறப்பாராம் யுவி. சச்சினுக்குப் பிடித்த வீரர் என்பதாலோ என்னவோ, கார் விஷயத்தில் சச்சின் வழியை ஃபாலோ செய்கிறார். பிஎம்டபிள்யூ M5 காரில் யுவராஜை அடிக்கடி பார்க்கலாம். இது தவிர, ரவிசாஸ்திரி பரிசளித்த ஆடி Q5 காரும் யுவராஜிடம் உண்டு.

ganguly

சவுரவ் கங்குலி

கங்குலிக்கு பென்ஸ் ஃபீவர். ஆம், பென்ஸ் என்றால் கங்குலிக்கு உயிர். E க்ளாஸ் கூபே, CLK, M க்ளாஸ், C220 என இவரிடம் 20-க்கும் மேற்பட்ட பென்ஸ் கார்கள் இருக்கின்றன. அதிலும் கன்வெர்ட்டிபிள் கார்கள் என்றால் ரொம்ப இஷ்டம். கன்வெர்ட்டிபிள் என்றால், காரின் ரூஃபைத் திறந்து பைக் போல் வெளிக்காற்று மூஞ்சியில் அடிக்கும்படியும் பயணிக்கலாம். லேட்டஸ்ட்டாக அவர் வாங்கியிருக்கும் பென்ஸ் CLK கன்வெர்ட்டிபிள்தான் கங்குலியின் ஃபேவரைட். இது தவிர, நான்கு பிஎம்டபிள்யூக்கள், இரண்டு ஆடி, ஒரு ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி என்றும் நீள்கிறது இந்த ‘பெங்கால் டைகர்’-ன் கார் கலெக்‌ஷன்.

harbajan

ஹர்பஜன் சிங்

ஸ்பின்னர் ஹர்பஜனுக்குப் பிடித்தது, எஸ்யூவி வகை கார்கள். ஹர்பஜனுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. இந்திய கிரிக்கெட்டர்களில் ஹம்மர் கார் வாங்கிய முதல் வீரர், ஹர்பஜன் சிங்தான். ஹம்மரில் மூன்று வகை உண்டு. H1, H2, H3. இதில் H3தான் கொஞ்சம் பட்ஜெட் குறைந்த ஹம்மர். சுமார் 2.5 கோடி. வேரியன்ட் குறையக் குறைய, விலை அதிகரிக்கும். ஹெச்3-ன் ஸ்பெஷல் 3.5 அடி தண்ணீரில் மூழ்கிச் செல்லக்கூடிய திறன்கொண்டது. அப்படியென்றால், H1 வேற லெவல். பஜ்ஜியிடம் இருப்பது H2. 6,200 சிசி, 8 சிலிண்டர்கொண்ட இதற்கு மேடு-பள்ளங்கள், சேறு சகதி, பாறைகளெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. ‘நான் ஏறிப் போறவன்டா’ என்பதுபோல், எந்த வகையிலான சாலைகளிலும் ஏறிச் செல்வது ஹம்மரின் ஸ்பெஷல். தனது ஜெர்ஸி நம்பரான 0003 எனும் எண்ணையே தனது ஹம்மருக்கும் வாங்கிவிட்டார் ஹர்பஜன். இது தவிர, பென்ஸ் GL க்ளாஸ், ஃபோர்டு எண்டேவர் போன்ற கார்களும் இவரிடம் உண்டு.

ரோஹித் ஷர்மா

பிஎம்டபிள்யூதான் கிரிக்கெட்டர்களின் கெத்து கார். இப்படித்தான் நினைக்கிறார் ரோஹித் ஷர்மா. ரோஹித்தும் கிரிக்கெட்டுக்கு வந்த கொஞ்ச நாள்களிலேயே 1.50 கோடி ரூபாய் விலைகொண்ட பிஎம்டபிள்யூ வாங்கிவிட்டார். இது தனது கனவு கார் என்று சொல்லிவந்த ரோஹித், M5 எனும் ஸ்போர்ட்ஸ் சலூன் காரில் பறக்க ஆரம்பித்துவிட்டார். இந்த கார் வாங்கியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். சச்சினும் யுவராஜும் வைத்திருப்பது பிஎம்டபிள்யூ M5. மற்றொன்று “இந்த காரில்தான் சோலார் சென்ஸார் இருக்கிறது. வெளியே உள்ள வெப்பநிலைக்கு ஏற்ப உள்ளே கதகதவெனப் பயணிக்கலாம்’' என்கிறார் ரோஹித் ஷர்மா.

suresh

சுரேஷ் ரெய்னா

பெரும்பான்மையான கார்கள், விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஸராகக் கிடைக்கும். அந்த வகையில் சுரேஷ் ரெய்னாவும் லக்கி ஃபெல்லோ. மினி கூப்பர், பிஎம்டபிள்யூ போன்றவை இவருக்குப் பரிசாக வந்த கார்கள். இது தவிர, மஞ்சள் நிற போர்ஷே பாக்ஸ்டர் காரை தன் சொந்தச் செலவில் வாங்கியிருக்கிறார் ரெய்னா. மஞ்சள் நிற காரைத் தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணம் என்கிறார் ரெய்னா. ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான இவரின் ஜெர்ஸி கலர் - மஞ்சள். உ.பி-யிலிருந்து இந்த போர்ஷேவில் லாங் டிரைவ் போவது ரெய்னாவுக்குப் பிடித்த விஷயம். 

 

sehwag
வீரேந்தர் சேவாக்

கிரிக்கெட் உலகத்துக்கே தெரியும். பென்ட்லி கார் வருகிறது என்றால், அதிரடி மன்னன் சேவாக் வருகிறார் என அர்த்தம். இவரின் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் காரின் மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய். பயிற்சியின்போது, நம் ஊர் பசங்க கிரிக்கெட் பொருள்களை சைக்கிளிலோ, பைக்கிலோ ஏற்றி வருவதுபோல், சேவாக்கின் பென்ட்லியில்தான் பொருள்கள் வந்திறங்கும். இது தவிர, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரும் சேவாக்கிடம் இருக்கிறது.

 

ஹர்திக் பாண்டியா

‘காக்க காக்க’ வில்லன் பாண்டியா மாதிரி, ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் வில்லனாக இருந்து டெரர் காட்டிய ஹர்திக் பாண்டியாவும் கார் ஃப்ரீக்தான். ஒவ்வொரு முறை டெல்லியில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போவுக்கு, குடும்பத்துடன் பிக்னிக் செல்வதுபோல் கிளம்பி புதுப்புது கார்களுடன் செல்ஃபி எடுப்பது ஹர்திக் பாண்டியா குடும்பத்துக்குப் பிடித்தமான விஷயம். இவரிடம் பெரிய கார் கலெக்‌ஷனெல்லாம் இல்லை. ஒரு பென்ஸ் மற்றும் ஒரு பிஎம்டபிள்யூ இரண்டும்தான் இவரின் கேரேஜில் வீற்றிருக்கின்றன. லேட்டஸ்ட்டாக தான் சம்பாதித்த சொந்தப் பணத்தில் தன் தந்தைக்கு ஜீப் காம்பஸ் கார் பரிசளித்திருக்கிறார் ஹர்திக்.

ராகுல் டிராவிட்

‘இந்தியாவின் தடுப்புச்சுவர்’ ராகுல் டிராவிட்டுக்கு 2004-ம் ஆண்டில் ஐசிசி சார்பாக, ஒரு ஹூண்டாய் டூஸான் எனும் எஸ்யூவி பரிசளிக்கப்பட்டது. எளிமை விரும்பியான ராகுலும் அதில்தான் பயணத்தைத் தொடர்ந்தார். அதற்குப் பிறகு பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரும், ஒரு ஆடி Q5 எஸ்யூவியும் வாங்கினார் டிராவிட். அவரின் லேட்டஸ்ட் ஃபேவரைட் கார், சிவப்பு நிற போர்ஷே 911 டர்போ.

dravid

மஹேந்திர சிங் தோனி

‘உங்களுக்கு கார் பிடிக்குமா... பைக் பிடிக்குமா?’ என்றால், ‘இரண்டுமே’ என்று யோசிக்காமல் பதில் சொல்வார் தோனி. கவாஸாகி நின்ஜா H2, ஹெல்கேட் X132, நின்ஜா ZX-14R, ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், யமஹா தண்டர்கேட், டுகாட்டி 1098 என்று மொத்தம் 22 சூப்பர் பைக்குகள் உறுமிக்கொண்டிருக்கின்றன தோனியிடம். இதில் நின்ஜா H2 பைக்கின் ஆன்ரோடு விலை 35 லட்சம். இதன் டாப் ஸ்பீடு 300 கி.மீ. இது தவிர, க்ளாசிக் பைக்குகள் மீதும் தோனிக்கு ஒரு கண். BSA கோல்டுஸ்டார், நார்டன் ஜூபிளி, சுஸூகி ஷோகன், யமஹா RD350 என்று பழைய காலத்து பைக்குகளையும் ‘பவர் பாண்டி’ ராஜ்கிரண் போல் பட்டி டிங்க்கரிங் பார்த்துக்கொண்டிருப்பாராம் தோனி.

dhoni

கார்களும் தோனிக்கு ரொம்பப் பிடித்த விஷயம். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு காரை நினைத்தால், அது தோனியின் கேரேஜில் இருக்கலாம். சாம்பிளுக்கு சில கார்கள். ஃபெராரி 590 GTO, ஆடி Q7, ஹம்மர் H2, அவுட்லாண்டர், லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர், அமெரிக்காவின் புகழ்பெற்ற GMC சியரா என்னும் முரட்டுத்தனமான எஸ்யூவி, ஆடி Q5 எனக் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட கார்கள் தோனி வசம். மிட்சுபிஷி பஜேரோ, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, டொயோட்டா கரோலா ஆல்டிஸ், மாருதி SX4 போன்ற லோக்கல் பிராண்டுகளும் இதில் அடக்கம். பைக்குகளைப்போல் கார்களையும் மாடிஃபிகேஷன் செய்வது என்றால், லீவு போட்டு மெக்கானிக் கூடவே இருந்து ஐடியா கொடுப்பாராம் தோனி. தன்னிடமிருந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை ஹம்மர் லெவலுக்கு ரீ-மாடிஃபிகேஷன் செய்து, அதில் வலம்வருவது என்றால் தோனிக்கு இஷ்டம். 

அனில் கும்ப்ளே

ஒரு டீமில் மொத்தம் 11 பேர் என்றால், அதில் 10 விக்கெட்களைச் சாய்த்து, ‘அவ்வளவுதானா' என்று கேட்டவர் அனில் கும்ப்ளே. கும்ப்ளேவிடமிருப்பது இரண்டே இரண்டு கார்கள் மட்டும்தான். ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி மற்றும் பென்ஸ் E க்ளாஸ். தன் சொந்த ஊரான பெங்களூரில், பென்ஸ் E க்ளாஸ் காரில் தானாகவே பென்ஸை ஓட்டிச் சென்று ஷாப்பிங் பண்ணுவது கும்ப்ளேவின் பாலிசி.

shihar

ஷிகர் தவான்

இந்த லிஸ்ட்டில் ஷிகர் தவானை மிஸ்பண்ணினால் அது மகா பாவமாகிவிடும். படா படா லக்ஸூரி கார்கள்/பைக்குகள் தவிர்த்து கிரிக்கெட்டர்களில் படகுகளையும் தனது கேரேஜில் நிறுத்திவைத்திருப்பவர் ஷிகர் தவான். உலகின் தலைசிறந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் இவரே! இதுதவிர, ஜாகுவார், பிஎம்டபிள்யூ i8, பெர்சிடீஸ் பென்ஸ் என சொகுசு கார் ப்ரியர் ஷிகர் தவான். ஹார்லி டேவிட்சன், ஹயபூஸா என்று பைக்குகளையும் நிறுத்திவைத்திருக்கிறார். சிட்டிக்குள் பென்ஸ் காரை செல்ஃப் டிரைவில் பறப்பதுதான் தவானுக்குப் பிடிக்கும்.

அஷ்வின் ரவிச்சந்திரன்

அஷ்வினும் கார் ப்ரியர்தான். சுத்தத் தமிழனான அஷ்வினிடமும் எக்கச்சக்க கார்கள் இருந்தாலும், அவர் பயணிப்பது என்னவோ டொயோட்டா ஃபார்ச்சூனரில்தான். 

mitali raj

மித்தாலி ராஜ்

உலகக்கோப்பையில் பெண்கள் கிரிக்கெட் டீமை இந்தியாவை ஃபைனலுக்கு இழுத்துச் சென்ற நம்பிக்கை - கேப்டன் மித்தாலி ராஜ். இந்த ஆகஸ்ட் மாதம், தெலங்கானா பேட்மின்டன் அசோஷியேஷன் துணைத் தலைவர் சாமுண்டேஸ்வரநாத், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார் மித்தாலிக்கு. தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட மித்தாலி ராஜ், அதற்கு முன்பு வரை 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாதாரண மாருதி சுஸூகி காரில்தான் வலம் வந்தார்.

karun

கருண் நாயர்

 

ஒண்ணு பண்ணினாலும் நின்னு அடித்தார் கருண்நாயர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் முச்சதம் என்றால் சும்மாவா? சிவப்பு நிற ஃபோர்டு மஸ்டாங் காரை, கிட்டத்தட்ட 90 லட்சம் செலவில் வாங்கிவிட்டார் கருண். மஸ்டாங்கை மறந்தவர்களுக்காக... டெத் ரேஸ், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், நீட் ஃபார் ஸ்பீட் போன்ற படங்களில் குதிரை லோகோவுடன் ஒரு கார் பறக்குமே... அதே கார்!

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

"பெப்சி உமா" இப்படியும் இருந்துள்ளாரா இது தெரியாம போச்சே!!

 

90 -ல் (ninetees) செல்போன் பலபேருக்கிட்ட இல்லாத காலத்திலேயே ஒரு caller tv show பிரமாண்ட ஹிட் ஆனதுக்கும் அந்த நிகழ்ச்சியின் மூலமா ஒரு தொகுப்பாளரா பல்லாயிர கணக்கான ரசிகர்களை கவர்ந்து இன்றுவரைக்கும் புகழ்ந்து பேசப்படக்கூடிய ஒரு பெண்தான் "பெப்சி உமா" .இவங்கள பற்றி சில உண்மைகளை பாக்கலாம்.

"பெப்சி உமா" இப்படியும் இருந்துள்ளாரா இது தெரியாம போச்சே!!

சென்னையில் பிறந்த பெப்சி உமா MBA படிச்சிருக்காங்க. இவங்க சன் டிவி -ல அறிமுகம் ஆகறதுக்கு முன்னாலேயே பொதிகை டிவி-ல் (Doordharshan) "வாருங்கள் வாழ்த்தலாம்" என்ற நிகழ்ச்சி மூலமா மீடியாக்குள்ள வந்துட்டாங்க. இவங்க அழகான குரலும் தனித்துவமான பேச்சும், தான் சன் டிவி-ல் "பெப்சி உங்கள் சாய்ஸ்" என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வாய்ப்பு தேடி வந்ததுக்கு காரணம்.

"பெப்சி உமா" இப்படியும் இருந்துள்ளாரா இது தெரியாம போச்சே!!

இந்த நிகழ்ச்சி பற்றிய மீட்டிங் போது இவங்களுக்கு சில கண்டிஷன்ஸ் சொல்லப்பற்றுக்கு அதாவது நிகழ்ச்சியின்போது கால் மேல கால் போட்டு உட்காருவது ஆனா பெப்சி உமா இதற்கு ஒற்றுக்கொள்ளாமல் நான் இயல்பாகவே என்னோட ஸ்டைலில் இந்த நிகழ்ச்சியை பண்றேன்னு சொல்லிருக்காங்க. இவங்களுக்கு ரசிகர்கள் அதிகமான பிறகு பெப்சி உமாகாகவே கேரளால உமா ரசிகர்கள் ஒரு கோவிலையே கட்டிருக்காங்க. 2001-ல் பிரபலமான BBC-ல் கரண் தாப்பர் நிகழ்ச்சியில் interview எடுக்கப்பட்ட முதல் தென்னிந்திய பெண் இவர்தான்.

"பெப்சி உமா" இப்படியும் இருந்துள்ளாரா இது தெரியாம போச்சே!!

அதுமட்டும் இல்லாம நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தானாக வந்து உமாவை சந்தித்து சகஜமாக குடும்பத்துடன் மதிய உணவை கழித்திருக்கிறார். இளைஞர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகள் மத்தியிலும் உமா மிகவும் கவரப்பட்டுள்ளார். மூளை வளர்ச்சி இல்லாத ஒரு சிறுவன் உமாவின் தீவிர ரசிகனாகவும், வாயில் இருந்து வரும் வார்த்தையும் உமா மட்டும்தான் என்று அச்சிறுவனின் தாய் உமாவிடம் போனில் தெரிவித்துள்ளார். இதை கேட்டு நெகிழ்ந்து போன உமா அச்சிறுவனின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். உமாவை கண்டதும் அவன் சிரிப்புடன் கைகளை தட்டியுள்ளான். ஒரு பேனாவை எடுத்து ஒரு சார்ட்டில் uma என்றும் எழுதியுள்ளான்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

இந்திய  வரைபடத்தை கிண்டல் செய்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்: டிவிட்டரில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! 

 

 
dennis_freeman
Ads by Kiosked
 

 

சிட்னி: இந்திய  வரைபடத்தை அநாகரிகமான முறையில் கிண்டல் செய்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளருக்கு சமூக வலைத்தளமான டிவிட்டரில் பயனாளர்கள் பாடம் புகட்டிய சம்பவம நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டெனிஸ் பிரீட்மன். இவர் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான கட்டுரைகள் எழுதி புகழ்பெற்றவர். இவர் சில நாட்களுக்கு முன்னால் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினைப்  பகிந்திருந்தார். அதில் தனக்கு பெண் ஒருவர் அனுப்பியதாகக் கூறி,  பெண்கள் அணியும் உள்ளாடை புகைப்படம் ஒன்றுடன் இந்திய வரைபடத்தினை இணைத்து வெளியிட்டு இருந்தார். அத்துடன் இங்கு எதற்காக இந்திய வரைபடத்தினை அவர் அனுப்பியிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கு றிப்பிட்டிருந்தார்.

map_comparision.jpg

அவர் இதனை வெளியிட்டவுடன் உலகெங்கும் உள்ள டிவிட்டர் பயனாளர்கள் பலரும் அவரைக்  கண்டித்துப் பதிவுகள் இட்டனர். அதில் அவரை கடுமையாகக் கிண்டல் செய்தும், அவருக்கு புத்திமதி கூறியும், அவரது அநாகரிகமான செயலைக் கண்டித்தும் எழுதப்பட்ட பதிவுகளும் அடக்கம்.

அதிலும் ஒரு பயனர் டெனிஸ் பிரீட்மன் செய்தது போலவே ஆஸ்திரேலிய வரைபடத்தினை விலங்கு ஒன்றின் சாணத்துடன் ஒப்பிட்டு படம் ஒன்றினை பகிர்ந்திருந்தார்.

 
 

map_reply.jpg

டெனிஸ் பிரீட்மன் சில நாட்களுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 'ஸ்வச் பாரத்' திட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் புகைப்படத்தினை வெளியிட்டு 'தெருக் கூட்டுபவர்கள்' என்று கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சென்னையைக் கலக்கும் 'பொம்மை ஆட்டோ'!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நங்கநல்லூரில் இருக்கும் தனக்குத் தெரிந்தவர் வீட்டில் கொலு வைப்பதற்காக அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் கிருஷ்ணமூர்த்தி அழைக்கப்படுகிறார். கொலு பொம்மைகள் வைப்பதற்காக இரும்பால் ஆன பலகைகளை பொருத்த கிருஷ்ணமூர்த்தி உதவி செய்துகொண்டிருந்தார். அப்போது, தன்னை சூழ்ந்திருந்த பொம்மைகள் மீது அவரின் கவனம் குவிந்தது. கொலு முடித்து, சுண்டல் மற்றும் இன்னபிற ஐட்டங்களை உள்ளே தள்ளிவிட்டு வெளியே வந்த பிறகும், கிருஷ்ணமூர்த்தியின் எண்ண ஓட்டம் பொம்மைகள் மீது இருந்துள்ளது.

ஆட்டோவுடன் கிருஷ்ணமூர்த்தி


வெளியே வந்தவர், தனது ஆட்டோவை மேலும் கீழுமாக இரண்டு மூன்று முறை பார்த்துள்ளார். அடுத்த நாளே ஆட்டோவின் டாப்பை கொலு ஸ்டாண்டாக மாற்றி, பொம்மைகளை புதியதாக வாங்கி அதில் பொருத்தியுள்ளார். இப்படி ஆட்டோவை அலங்கரித்த சில நாள்களிலேயே லோக்கலில் மட்டும் அல்லாமல் பக்கத்து ஏரியாக்களிலும் ‘பொம்மை ஆட்டோ’-வின் புகழ் பரவத் தொடங்குகிறது. திரிசூலம் அம்மன் நகரில் கிருஷ்ணமூர்த்தி வசித்து வந்தாலும், தற்போது பொம்மை ஆட்டோ என்றால் நங்கநல்லூரைச் சுற்றியுள்ள அனைத்து ஏரியாக்களிலும் ஃபேமஸ் ஆகியுள்ளது.

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் இந்த பொம்மைகளெல்லாம் வாங்கும்போதே கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் வரை இது செலவு பிடிச்சுது. வருஷத்துக்கு ஒரு முறை பொம்மைகளெல்லாம் புதுசா மாத்திட்டு இருக்கேன். இப்ப அதைவிட செலவு கூடதான். இருந்தாலும், நான் ஹாப்பி. அதனால, செலவு பத்தி கவலைப் படல’’ என்று முடித்தவரிடம், யார் இந்த ஆட்டோக்களில் அதிகம் விரும்பி சவாரி ஏறுகின்றனர் என்று கேட்டோம்.

ஆட்டோவின் உள்புறம்


‘‘இதுல என்ன சந்தேகம்… குழந்தைங்கதான்! நான் பொதுவா காலைலேயும் சாய்ந்தரமும் ஸ்கூல் சவாரி போவேன். அப்ப, என் ஆட்டோவுக்கு வரப் பசங்கலத் தாண்டி மத்த பசங்களும் அவங்க அப்பா, அம்மாகிட்ட ‘பொம்மை ஆட்டோவுல’ போகணும் அப்டின்னு அடம் பிடிக்கிறது தினம் நடந்துட்டுதான் இருக்குது. குழந்தைகளுக்கு இப்படி பொம்மையெல்லாம் இருந்தா பிடிக்கும்ணு தெரியும். ஆனா, அவங்கள இவ்ளோ ஈர்க்கும்ணு நினைக்கவேயில்லை. ஒரு சின்ன குறை என்னனா, கொஞ்சம் அசால்ட்டா இருந்தா, நல்லா இருக்கிற பொம்மைகள குழந்தைங்க யாராவது எடுத்துருவாங்க. ஆனா, பரவாயில்லைங்க. அவங்க குழந்தைங்கதான’’ என்று வெள்ளந்திச் சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார், ‘‘இந்த ஏரியா பெண்கள்கூட ஆட்டோவுல ஏறிட்ட அப்புறம், ‘ரொம்ப நாளா உங்க ஆட்டோ எங்க வீட்டுப் பக்கத்தில போறத பார்த்திருக்கோம். இதுல சவாரி செய்யணும்னு நினைச்சிகிட்டே இருப்போம். இவ்ளோ நாள் கழிச்சி இப்பதான் அந்த ஆசை நிறைவேறுது. சரி, உங்க போன் நம்பர் கொடுங்க. அடுத்த முறை உங்களையே வீட்டுக்கு வர சொல்லிட்றோ’-னு வந்த கஸ்டமர் ஏறாலமா இருக்காங்க” என்று பெருமிதத்தோடு விவரித்தார்.

மேலே பொம்மைகள் வைத்திருப்பது மட்டுமின்றி, ஆட்டோவுக்கு உள்ளே, செல்லாத பழைய காசுகளை ஒட்டி வைத்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அதே போன்று, பல மிருகங்களின் படங்களால் ஆட்டோவின் பக்கவாட்டில் ஒரு சின்ன கேப் கூட விடாமல் அலங்கரித்திருக்கிறார். இதெல்லாம் எதற்கு என்று கேட்டால், ‘‘இதெல்லாம் பார்த்த சின்னப் பசங்க குஷியாகிடுவாங்க. அவ்ளோதாங்க’’ என்கிறார்.

சுதந்திர தினத்தின் போது அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ


சாதரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள், காக்கிச் சட்டை போடவில்லை என்றாலோ நம்பர் ப்ளேட்டில் ஸ்டைலாக எண்களை எழுதினாலோ தமிழ்நாடு போலீஸ் தன் கடமையைச் செய்ய தவறுவதில்லை. அப்படி இருக்க, ஆட்டோவையே அலங்காரப் பொருளாக மாற்றி இருப்பதால் எந்தப் பிரச்னையையும் சந்தித்ததில்லையா என்று கேட்டோம். “அப்பப்ப போலீஸ் நிறுத்தி ‘என்ன இதெல்லாம்னு’ கேட்பாங்க. நான், ‘சார், குழந்தைங்க சவாரி ஓட்டுறேன். அதான் இப்படி பண்ணி வச்சிருக்கேன்’ அப்படின்னு சொன்னாலே பெரும்பாலான போலீஸ்காரங்க விட்டுருவாங்க. அதனால இதுவரைக்கும் எல்லாம் ஸ்மூத்தான். குழந்தைங்க ஹாப்பி அண்ணாச்சி… ஐ எம் ஹாப்பி அண்ணாச்சி…’’ என்று வழியனுப்பி வைத்தார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பல்லைக் காட்டினால் பணம் கிடைக்கும்!

 

சீனாவின் ஜினான் நகரில் தானியங்கி பண இயந்திரத்தில் பணம் வைப்புச் செய்யவோ, மீளப் பெறவோ அட்டைகள் தேவையில்லை; முகத்தைக் காட்டினால் போதும்!

7_Facial.jpg

சீனாவின் விவசாய வங்கியே இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சீனாவுக்கு இது புதிய வசதியல்ல. ஏற்கனவே, இதே தொழில்நுட்ப முறை மூலம் பணப் பரிமாற்றம், பொதிகள் பாதுகாப்பு போன்ற பல சேவைகளையும் செய்யக்கூடிய வசதிகள் சீனாவில் உள்ளன.

முகத்தை அடையாளம் கண்டுகொண்டபின் தனது தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர் பதிவுசெய்ய வேண்டும். தேவையான பணத்தைத் தெரிவித்தபின், இரகசிய எண்ணைப் பதிந்தால் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

முதற்கட்டமாக நாளொன்றுக்கு மூவாயிரம் யுவான்களை மட்டுமே தானியங்கி இயந்திரங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற சுமார் 24 ஆயிரம் இயந்திரங்களை நிறுவிய பின் மீளெடுக்கப்படும் பணத் தொகை அதிகரிக்கப்படும் என குறித்த வங்கி தெரிவித்துள்ளது.

இதுபோன்ற இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பானவை என்றபோதும், இவற்றை நிறுவவும், நிர்வாகம் செய்யவும் அதிக செலவாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட காலப்பகுதிகளில் வாடிக்கையாளர்கள் தமது தோற்றத்தைப் பதிவு செய்யவேண்டியிருக்கும் என்றும் தெரியவருகிறது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்
‘மனிதாபிமானம் கசிந்து நொந்தது’
 

image_37b096e64c.jpgஅந்தப் பிரதான நெடுஞ்சாலையின் நடைபாதையின் ஓரத்தில், எனது நண்பன் சந்திராவைக் கண்டபோது, அதிர்ந்து போனேன். தேகத்தில் பெருங்காயம். குருதியின் கோரப் பிரவாகம். நான் அந்த இடம் நோக்கி நடந்தபோது, தற்செயலாக இதைப் பார்க்க நேர்ந்தது. 

‘யாரோ தங்களது மோட்டார் வாகனத்தில் இருந்து, இவரை வீசி எறிந்ததைக் கண்டேன்’ என ஓர் இளைஞன் என்னிடம் சொன்னான். “நான் இவரின் நண்பன்” என்று சொன்னதும், உடன் எனக்கு அனைவரும் உதவி நல்கினர். ஒரு காரில் சந்திராவை ஏற்றி, வைத்தியசாலையில் அனுமதிக்கவும் உதவினர். என்னிடம் பேசிய இளைஞன், சந்திராவைத் தாக்கி, விட்டெறிந்து சென்றவர்களின் வாகன இலக்கத்தைத் தந்தான்.  

உடன் பொலிஸாருக்கும் அறிவித்து விட்டேன். அன்று இரவு முழுவதும் சித்தப்பிரமை பிடித்ததுபோல் வைத்தியசாலையில் இருந்தேன். 

அடுத்த நாள், காலையில் தினசரியைப் பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன். மேற்படி செய்தியில், அந்த இளைஞர் தந்த இலக்க வாகனம், அதே நாளில், அதே நெடுஞ்சாலையில் கோரவிபத்தில், அனைவருமே ஸ்தலத்தில் பலியாகிவிட்டனர். என்மனம் கனத்தது. “ஹே இறைவா என்ன இது”? என் மனிதாபிமானம் கசிந்து நொந்தது

  • தொடங்கியவர்

சுற்றுலா பயணிகளை கேரளா கவரும் ஆலப்புழா படகுவீடு..!

 
 

ஒரு பயணம் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக அமைந்தால் எப்படி இருக்கும் அது போல தான் ஆலப்புழா படகு வீடு பயணம். காஷ்மீரின் பாரம்பரிய சின்னமான படகு வீடுகளை, இப்போது தனது பாரம்பரியமாக மாற்றி விட்டது கேரளா. தண்ணீர் மீது தங்கும் அந்த அழகிய அனுபவம் வித்தியாசமான சூழலுக்கு கடத்திச் செல்கிறது. பாரம்பரியமிக்க வீடு ஒன்று தண்ணீரில் கம்பீரமாக மிதப்பதுபோல் காட்சியளிக்கிறது, `இரண்டு பெட் ரூம்களுடன் கூடிய படகு வீட்டின் வாடகை 8,000 ரூபாய். இந்தப் படகு வீட்டை இரு ஆட்கள் கவனித்து கொள்வார்கள். அவர்களே சமையலும் செய்து கொடுப்பார்கள். மதிய சாப்பாடு நேரத்தில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப மெனு சொன்னவுடன் கடல் உணவுகள் மெனுவில் இருந்தால் காயல் கரையோர சந்தைப் பகுதியின் முன் படகினை நிறுத்தி அங்கு எல்லா விதமான கடல் மீன்களையும் வாங்கி கொண்டு அதை வாங்கி பயணிகளுக்கு சுவையான விருந்தாக கொடுக்கிறார்கள்.

80185271_23487.jpg

 


இப்படி பயணிக்கும்போது படகோட்டிகள் மாலை ஆறு மணிக்கு படகை ஒரு இடத்தில நிறுத்தி விடுவார்கள். பின்னர் மறுநாள் காலை ஒன்பது மணிக்குத்தான் பயணம் தொடரும். பின்னர் அங்கு இருக்கும் சிறு கிராமங்களுக்குச் சென்று சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு வேண்டிய நினைவு பொருட்களை வாங்கி வரலாம். இருள் அடர்ந்த அந்தப் பொழுதில் இரவு உணவை முடித்துக்கொள்கிறார்கள். அதிகாலையில் அந்த சூரியன் உதிக்கும்போது படகும், தண்ணீரும் தங்கமாக மாறுவதுபோல ஒரு தோற்றம். அது ஒரு கண்கொள்ளாக்காட்சி . தூங்கி எழுந்த பின் காலையில் ஆப்பமும், கடலை கறி சாப்பாடு.

2_%284%29_23391.jpg

 


ஆலப்புழா மற்றும் குமரக்கோம் இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிக புகழ் பெற்றது. இரு இடங்களிலிருந்தும் இரவு நேர படகு சவாரி உண்டு. எனினும்- ஆலப்புழா தான் இப்படி ஒரு முழு நாள் சவாரி செல்ல சிறந்தது. ஆலப்புழாவில் 2000-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இதனால் சவாரிக்கான செலவு கணிசமாக குறைவு. குமரக்கோமில் 50-க்கும் குறைவான படகுகள் தான் உள்ளன. திருமணமான புது தம்பதியர்கள், இங்கு தான் ஹனிமூன் கொண்டாட வருகிறார்கள். படகு வீடும் அதன் மிதப்புத் தன்மையும் தண்ணீர் சத்தமும் ஒரு தனி ரம்மியத்தை கொடுக்கும். ஒரு மறக்க முடியாத பயணம் சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று இருக்கும். ஆற்று நீரை வீணாக கடலில் கலக்கவிடாமல் காயல்களில் விடுவதினால் நிலத்தடி நீர் வளமும் கேரளாவில் குறைவதில்லை. காயலில் எப்போதும் நீர் இருப்பதினால் படகு வீடுகள் மிதக்கின்றன. அதன் மூலம் சுற்றுலா பயணிகளை கேரளா கவர்கிறது.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

22 கிலோவில் தங்கப் புடவை - கொல்கத்தாவில் களைகட்டிய துர்கா பூஜை

துர்கை சிலைபடத்தின் காப்புரிமைRONNY SEN Image captionதங்கப் புடவையுடன் துர்கை சிலை

கொல்கத்தாவில் ஆண்டுதோறும் இந்துக்கடவுளான துர்காதேவியை போற்றும் விதமாக விமர்சையாக கொண்டாடப்படும் துர்கா பூஜை திருவிழா நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மிகப்பெரியதும் மற்றும் மிக பிரபலமானதுமாக அறியப்படும் இவ்விழாவில், "மாதிரி அலங்காரங்கள்" என்று அறியப்படும் விரிவான மேடை அலங்காரங்கள், இங்கு வரும் மிகப்பெரிய கூட்டத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும்.

ஒன்பது நாட்கள் திருவிழாவில், ஆயிரக்கணக்கான "மாதிரி அலங்காரங்கள்" அந்நகரின் சுற்றுப்புறம் முழுவதும் உருவாக்கப்பட்டிருக்கும். .

இவை கடந்த சில ஆண்டுகளில், அவர்களின் படைப்பாற்றல் மற்றும் ஆடம்பரமான அமைப்பை பறைசாற்றும் ஒரு பிரபலமான காட்சியாக மாறிவிட்டது.

புகைப்பட கலைஞர் ரோனி சென் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதன் லண்டன் நகரை கருப்பொருளாக் கொண்டுள்ள புகைப்படங்களையும், துர்கா தேவியின் சிலைக்கும் அணிவிக்கப்பட்டுள்ள தூய 22-காரட் தங்கத்தால் செய்யப்பட்ட புடவையின் ஒரு படங்களை எடுத்துள்ளார்.

தங்கப் புடவைபடத்தின் காப்புரிமைRONNY SEN Image caption22 கிலோ தங்கப் புடவை

22 கிலோ எடை கொண்ட இந்த தங்க புடவை, 6.2 கோடி ரூபாய் (62 மில்லியன்) மதிப்புடையது என்று கூறப்படுகிறது.

வடிவமைப்பாளர் அக்னிமித்திரா இந்நிகழ்ச்சிக்காக விரிவான அலங்கார வடிவமைப்புகளையும் மற்றும் பளபளப்பான கற்களையும் கொண்டு இந்த தங்க புடவையை உருவாக்கியுள்ளார்.

50 க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக இந்த புடவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறியுள்ளது.

பக்கிங்காம் அரண்மனைபடத்தின் காப்புரிமைRONNY SEN Image captionபக்கிங்காம் அரண்மனையின் முன் தோற்றம்

பக்கின்ஹாம் அரண்மனையை போன்ற வடிவமைக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்புக்குள்ளே இந்த சிலை காணப்படுகின்றது, இது திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது மற்றும் இது நகரின் சந்தோஷ்மித்ரா சதுக்கத்தில் அமைந்துள்ளது.

பிக் பென்படத்தின் காப்புரிமைRONNY SEN

மேலும் லண்லனில் காணப்படும் பிக் பென், டவர் பிரிட்ஜ் மற்றும் லண்டன் ஐ போன்ற மாதிரிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தாவில் துர்கா பூஜை திருவிழா அவற்றின் ஆடம்பரமான அலங்காரங்களுக்காக அறியப்படுகின்றன, மற்றும் "மாதிரி அலங்காரங்களும்" இதற்கான போட்டியில் தற்போது நுழைந்துள்ளன.

டவர் பிரிட்ஜ்படத்தின் காப்புரிமைRONNY SEN Image captionடவர் பாலத்தின் மாதிரி

அந்த காலங்களில் ஐகானிக் மஞ்சள் நிற டாக்ஸிகள், இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு இயக்கப்பட்ட மைத்ரேயி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பௌத்த பகோடா கட்டமைப்புகள் ஆகியவை இத்திருவிழாவின் கருப்பொருள்கள் இருந்தன.

இந்த பிக் பென் மாதிரி இத்திருவிழாவிற்காக உருவாக்கப்பட்டுள்ளது, இது இங்கு முதன்முறையாக அமைக்கப்படவில்லை.

2015ஆம் ஆண்டு பிக் பென் போன்று நிரந்தர தோற்றமளிக்கும் அமைப்பானது, அந்நகரத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவை லண்டனைப் போல புகழ்ப்பெற்று விளங்கும் விதமாக உருவாக்கும் நோக்கில் கட்டப்பட்டது.

பக்கிங்காம் அரண்மனைபடத்தின் காப்புரிமைRONNY SEN

இந்த ஆண்டு திருவிழாவில் தாய்லாந்திலுள்ள வெள்ளை கோவில், கொல்கத்தா நகரங்களின் நகர்ப்புற விரிவாக்கம், மற்றும் சுயப்புகைப்பட கலைகள் போன்ற மற்ற மாதிரிகளும் இடம்பெற்றிருந்தன.

தற்போதைய நிகழ்வுகள் அல்லது சமூகப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்க மதிரிகள் திருவிழாவில் இடம்பெறுவது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல. 2013 ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது போன்று ஒரு அமைப்பும், அதே வேளையில் ஒரு படகு போன்ற வடிவமானது கங்கை நதியின் மாசுபாடுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இத்திருவிழா செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைகிறது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

உலகின் முதல் கோடீசுவரர் என்று பெயர் பெற்ற ராக்பெல்லர் (செப்.29- 1916)

ஜான் டி. ராக்பெல்லர்இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்ப்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். கல்விக்காகவும் ஏழ்மையை ஒழிப்பிற்காகவும் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கியவர். ஸ்டேண்டர்டு ஆயில் என்ற எண்ணை நிறுவனத்தை நிறுவியவர். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும் பெட்ரோல் பொருட்களின் புதியவகை பயன்பாடுகளின் பெருக்கத்தாலும் கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்த்து பின்னர், பொதுப் பணிகளுக்கு அப்பணத்தை வாரி இறைத்தவர் என்ற கருத்தும் உண்டு.

உலகின் முதல் கோடீசுவரர் என்று பெயர் பெற்ற ராக்பெல்லர் (செப்.29- 1916)
 
ஜான் டி. ராக்பெல்லர்இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்ப்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.

கல்விக்காகவும் ஏழ்மையை ஒழிப்பிற்காகவும் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கியவர். ஸ்டேண்டர்டு ஆயில் என்ற எண்ணை நிறுவனத்தை நிறுவியவர். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும் பெட்ரோல் பொருட்களின் புதியவகை பயன்பாடுகளின் பெருக்கத்தாலும் கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்த்து பின்னர், பொதுப் பணிகளுக்கு அப்பணத்தை வாரி இறைத்தவர் என்ற கருத்தும் உண்டு.

1916-ம் ஆண்டு செப். 29-ந்தேதி உலகின் முதல் கோடீசுவரர் என அறிவிக்கப்பட்டார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1941 - உக்ரைனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் கொல்லப்பட்டனர். * 1962 - கனடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது. * 1971 - அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது. * 1998 - இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து ரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது. * 2003 - சூறாவளி 'ஜுவான்' கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

கைதியின் குழந்தைக்குப் பால் கொடுத்த போலீஸ் அதிகாரி!

சீனாவில் சிறைக்கைதியின் குழந்தைக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் தாய்ப்பால் ஊட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது. 

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த போலீஸ்

 

மத்திய சீனாவில் உள்ள, ஷாங்ஸி ஜிங்ஸாங் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அந்தப் பெண்ணுக்கு 4 மாத கைக்குழந்தை உண்டு. நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, அவரின் குழந்தை ஹாவோ லினா என்றபெண் போலீஸ் அதிகாரியிம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தாயைப் பிரிந்த குழந்தை பசி காரணமாக அழத் தொடங்கியது. பசியால் துடித்த அக்குழந்தையின் அழுகையை லினாவால் நிறுத்த முடியவில்லை.  

தொடர்ந்து, சற்றும் யோசிக்காமல் ஹாவோ லினா குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டினார். இதை, மற்றொரு பெண் போலீஸ் புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட, அது வைரலாகியுள்ளது. நீதிமன்றத்தின் இணையதளத்திலும் ஹாவோ லினா குழந்தைக்குப் பால் கொடுக்கும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஹாவோ லினா கூறுகையில், ''தாயைப் பிரிந்ததிலிருந்து குழந்தை அமைதியற்று இருந்தது. என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. தாய்ப்பால் கொடுத்த பிறகே அமைதியானது. எனக்கு, இதே நிலை ஏற்பட்டாலும், என் குழந்தைக்கு யாராவது தாய்ப்பால் ஊட்டுவார்கள். போலீஸ் அதிகாரிகள் கடைமையைக் காட்டிலும் மனித நேயத்துடன் இருக்க வேண்டியது அவசியம்'' என்றார். 

ஹாவோ லினாவின் செயலை உயர் போலீஸ் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினர். இணையத்திலும் அவருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மனித உடலின் மகத்தான எந்திரம்... இதயம்! #WorldHeartDay

 
 

தயம்... மனித உடலின் மகத்தான எந்திரம்... ஆனால் அந்த எந்திரத்தின் மீது நாம் எந்த அளவுக்குக் கவனம் காட்டுகிறோம் என்பது தான் கேள்விக்குறி. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதயம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ம் தேதி 'உலக இதய தினம்'-ஆகக் கடைபிடிக்கப்படுகிறது. 'சக்தியைப் பரப்புவோம்' ('Share the power') என்ற கருத்தின் அடிப்படையில் உலக இதயக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு இந்த நாளைக் கொண்டாடவிருக்கின்றன.

இதயம்

 

இந்த உலக இதய நாளில், நம் உயிர் வாழ ஆதாரமாக இருக்கும் இதயத்தை பாதுகாப்பது குறித்தும், இதய நோய்கள் குறித்தும்,  முதலுதவி, சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்குகிறார் இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.

 

இதயம் நம் கைகளில்!

இதயத்தின் அளவென்பது, நம்முடைய மூடிய கைகளின் அளவு தான். 400 கிராம் எடை கொண்டது. நாம் கருவிலிருக்கும்போதே இதயம் துடிக்க துவங்கும்.  ஒரு நிமிடத்துக்கு, சராசரியாக  72 முறையும், ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறையும் துடிக்கும். 'Myocardium' என்னும் இதயத் தசைகளால் ஆன இதயம், நான்கு அறைகள், நான்கு வால்வுகள் உடையது.  உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தத்தையும் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதே இதயத்தின் பிரதான பணியாகும். 

 

ஓய்வின்றி இயங்கும் இதயம்!

நம் உடலில் தொடர்ந்து இயங்கும் இதயத்தின் துடிப்பு நின்றுபோனால் அசுத்த ரத்தம் இதயத்துக்குள்ளேயே தேங்கிவிடும். உடலில் உள்ள திசுக்களுக்குத் எனர்ஜியைத் தரும் குளூக்கோஸ், தாது உப்புகள் போன்றவை தேவையான அளவு கிடைக்காதுபோகும். திசுக்கள் பாதிப்புக்குள்ளாகும்.  புதுப்பிக்க முடியாத நிலை உண்டாகும். இறுதியில், உடல் செயலிழந்து போகும். இறுதியில் உயிரிழப்பு நேரிடும். 

 

இதய நோய்கள் எவை...

கரோனரி தமனி நோய், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, சீரற்ற இதயத்துடிப்பு, பிறப்பிலேயே இதயம் சிறிதாக இருப்பது, இதய வால்வு பிரச்னை, இதயத் தசை நோய், மூச்சுத் திணறல், புற தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் வீக்கம், தலை சுற்றல், இதய சுற்றுப்பை அழற்சி, கணைய சுரப்புக் குறைபாடு, நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் போன்றவை இதயம் சார்ந்த நோய்களாகும். 

 

எதனால் இதய நோய் ?

* இதய ரத்தக் குழாய்களின் மூலம் ஆக்சிஜன் கலந்த ரத்தம் இதயத்துக்குச் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறைவாக இருந்தாலும், ஆக்சிஜன் இல்லாமல் போனாலும் மாரடைப்பு ஏற்படும். 

* நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பானது ரத்தக் குழாய்களின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு, ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். 

* அதிக அளவு உணர்ச்சிவசப்படுதல், மனஅழுத்தம் இது போன்ற நிலைகளில் இதய ரத்தக் குழாய்கள் சில விநாடிகளில் முழுமையாகச் சுருங்கும். இதனாலும் மாரடைப்பு உண்டாகும். 

* புகைப்பழக்கம், மது அருந்துபவர்கள் போன்றவர்களின் கல்லீரலில் அதிகமாக உருவாகும் கெட்ட கொலஸ்ட்ரால், ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை உண்டாக்கும். இதன் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படும். 

* எதிர்மறையான எண்ணங்கள் கார்டிசால் மற்றும் அட்ரீனல் ஹார்மோன்களின் சுரப்பை ரத்தத்தில் கலக்கச் செய்யும். இது உடலின் எந்தப் பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களிலும் அடைப்பை உண்டாக்கும். 

* பெரும்பாலும் இதய நோய் வருவதற்கு முதல் முக்கிய காரணம் ரத்தக்குழாய் அடைப்பேயாகும்.

இதயம்

 

ரத்தக் குழாய் அடைப்புக்கு காரணங்கள்...

* உடலுக்குத் தேவையான அளவைவிட அதிக அளவு உணவைச் சாப்பிடுதல்.

* தினசரி உடற்பயிற்சி செய்யாதது 

* அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வது.

 

இதய நோய்க்கான அறிகுறிகள்

* இடது புற மார்பு மற்றும் தோள்ப்பட்டைப் பகுதியில் வலி

* தாடைப் பகுதியில் வலி

* மார்பு இறுக்கம்

* மூச்சு விடுவதில் சிரமம்

* படபடப்பு, மயக்கம், தசை வலி, உடலில் எனர்ஜி இல்லாது போவது போன்ற பொதுவான அறிகுறிகளும் இதில் அடங்கும். 

 

இதய நோய்க்கு வழிவகுப்பவை... 

* அதிக ரத்த அழுத்தம்

* அதிக கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ் 

* புகைப்பழக்கம் 

* முறையற்ற உணவுப்பழக்கம்

* உடல் பருமன்

 

இதய நோய்களுக்கான பரிசோதனைகள்...

30 வயதைக் கடந்தவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு பரிசோதனை, ஈசிஜி, மார்பு எக்ஸ்ரே பரிசோதனை போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். 

ரத்தத்தில் - சி.பி.கே - எம்.பி (CPK-MB) என்ற பரிசோதனையையும்,  இதயத்தில் - எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனை, ஆஞ்சியோகிராம், நியூக்ளியர் ஸ்கேன் பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். 

 

இதய நோய் யாருக்கு வரலாம்...

* மனஅழுத்தம், மனஉளைச்சல் உள்ளவர்களுக்கு

* புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு

* 140/90 mm Hgக்கு அதிகமாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு

* ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு

* உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு

* நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு

 

ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன்...

பெண்களுக்கு மட்டும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு பெண்களை இதய நோயிலிருந்து காக்கும். அதேநேரத்தில் இதய நோய்க்கு வழி வகுப்பதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள்தான் காரணம். மனஅழுத்தத்தினால் நிகழும் ஹார்மோன்களின் எதிர்மறையான சுரப்பு இதய நோயை ஏற்படுத்தும்.

 

இதய நோயாளிகள் செய்ய வேண்டியவை?

* ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், வாரத்தில் ஐந்துநாள்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

* இரவில் எட்டு மணி நேரமும், மதிய வேளையில் உணவு சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் தூங்க வேண்டும். 

* சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருப்பின் அவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

* உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிக அளவுச் சேர்த்துக்கொள்ளலாம். 

செய்யக் கூடாதவை?

* அதிக எடையுள்ள கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது. 

* கைகளை மூடியபடி, குனிந்தபடி செய்யவேண்டிய வேலைகளை முடிந்த அளவு தவிர்க்கலாம். உதாரணமாக, வாளிகளில் தண்ணீர் கொண்டு செல்லுதல், துணி துவைத்தல், பைக் ஓட்டுதல் போன்றவை. இவை இதயத்துக்குச் சுமையை அதிகரிக்கச் செய்யும். 

இதய நோய்க்கான சிகிச்சைகள்

 

இதய நோய்க்கு செய்யப்படும் சிகிச்சைகள்...

ஆஞ்ஜியோ பிளாஸ்டி: அடைப்புள்ள ரத்தக் குழாய்க்குள் ஸ்டென்டை உள்செலுத்தி ஸ்டென்டில் உள்ள பலூனை விரிக்கச் செய்வதன் மூலம் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை சரிசெய்யலாம்.

பைபாஸ் சர்ஜரி: இதயத்தில் ஓட்டை, வால்வு பழுது, வால்வு சுருக்கம், ரத்தக் குழாய் வீக்கம் போன்றவற்றால் ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தைச் சரிசெய்து சீராக்கும்.

பேஸ்மேக்கர்: பேஸ் மேக்கர் கருவி மூலம் செயற்கை இதயத் துடிப்புக்கு வழிவகுக்கும்.

ஹார்ட் அசிஸ்ட் டிவைஸ்: அசுத்த ரத்தத்தை சுத்திகரித்து சுத்த ரத்தத்தை உடலுக்குச் செலுத்தும் செயலின் தன்மையை இதயம் இழக்கும்போது ஹார்ட் அசிஸ்ட் டிவைஸ் பொருத்தப்படுகிறது. இது இதயத்துக்குள் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உடலின் உள்ளுறுப்புகளுக்குத் தேவையான ரத்தத்தைப் பரவச் செய்யும். 

எக்மோ: ரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு போன்றவற்றால் இதயம் முழுவதுமாக செயலிழந்துபோகும்போது 'எக்மோ' என்னும் கருவி பொருத்தப்படும். இது இதயம் மற்றும் நுரையீரலின் பணிகளைச் செய்யும். செயற்கை இயந்திரம் மூலம் இதயத்தின் பணியை செய்யும்.

 

சைலன்ட் அட்டாக்!

பெரும்பாலும் மதுப்பழக்கம் உடையவர்களுக்கும், 70 - 80 வயதைக் கடந்தவர்களுக்கும் சைலன்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலை 5 மணி முதல் 8 மணி வரை சைலன்ட் அட்டாக் வரும். நீண்ட நேரம் இரவில் விழித்திருத்தல், அடுத்தடுத்த பணிகளால் உண்டாகும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் சைலன்ட் அட்டாக் வரலாம். 

 

திடீரென மாரடைப்பு ஏற்பட்டால்...

வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் சில முதலுதவிகளின் மூலம் அவர்களின் உயிரைக் காக்கலாம்.

மயக்கம் அடைந்தவரை சமதளத்தில் படுக்க வைக்க வேண்டும். இறுக்கமான உடைகளைத் தளர்த்தி காற்றோட்டமான சூழ்நிலையை உண்டாக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. இதயத் துடிப்பு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இதயத்துடிப்பு நின்றுவிட்ட பட்சத்தில், இடது மார்புப் பகுதியில் நமது கைகளை வைத்து லேசாக அழுத்த வேண்டும். மிகவும் வேகமாக அழுத்தக் கூடாது அது மார்புப்பகுதியில் உள்ள எலும்புகளைப் பாதிக்கும். அவற்றால் இதயத்துக்கு பாதிப்பு நேரலாம். மயக்கம் அடைந்தவர் சுவாசம் இல்லாது இருக்கும்போது வாயோடு வாய்வைத்து வேகமாக ஊத வேண்டும். பிறகு, மீண்டும் மார்புப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

உடனடியாக மருத்துவரின் உதவியைப் பெறுவது நல்லது. நெஞ்சுவலி ஏற்பட்டவர்களுக்கு 350 மி.கிராம் ஆஸ்பரின் மாத்திரையைக் கொடுக்கலாம். இது அதிக பட்சம் 4 மணி நேரத்துக்குள் மருத்துவ உதவியை நாடுவது நல்லது. 

 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.