Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

"தமிழ் சினிமாவில் காலடி வைக்கும் ஜிமிக்கி கம்மல் ஷெரில்"

 

"தமிழ் சினிமாவில் காலடி வைக்கும் ஜிமிக்கி கம்மல் ஷெரில்"

மூன்றே நாட்களில் 44 லட்சம் பார்வையாளர்களுக்கு மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஜிமிக்கி கம்மல் வீடியோவில் நடனமாடிய ஷெரில் ஓணம் பண்டிகைக்காக தான் ஆடினேன் என்று கூறியுள்ளார்.அடிப்படையில் ஒரு நடனமாடுவரான ஷெரில் ஒரு டீச்சராக தான் ஆடிய பாடல்தான் ஜிமிக்கி கம்மல்.

ஷெரிலுக்கு இந்த யோசனையை கொடுத்தவர் அவருடைய மேனேஜர் மிதுன் தான் என்று அவர் சொல்கிறார் .அந்த வீடியோவில் மொத்தம் 20 ஆசிரியர்கள் மற்றும் 40 மாணவர்கள் ஆடி உள்ளார்களாம்.அந்த டான்ஸ் வெறும் ஒத்திகைக்காக எடுக்கப்பட்டது என்றும் சொல்லிய அவர். அந்த வீடியோ இந்தளவுக்கு அது வைரல் ஆகும் என்று நான் நினைக்கவே இல்லையா என்றும் சொல்லி பிரம்மிக்கிறார்.

மேலும், ஷெரிலுக்கு தமிழ் சினிமா என்றால் மிகவும் பிடிக்குமாம். ஒருநாள் நிச்சயமாக தன்னுடைய பெற்றோரிடம் சம்மதம் வாங்கிய பிறகு தமிழ் சினிமாக்களில் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தேங்காய் நண்டு

 
Thengai%20Nandu
4.jpg
 
‘‘மனிதர்களில் பராக்கிரமசாலிகளை நாம் பாராட்டத்தான் செய்வோம். ஆனால், விலங்குகளில் மட்டும் பராக்கிரமசாலிகளை வசை பாடப் பழகிவிட்டோம். அப்படி நம்மிடம் கெட்ட பெயர் வாங்கிய பராக்கிரமசாலி தான் திருட்டு நண்டு எனப்படும் தேங்காய் நண்டு!’’

- காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பாடம் செய்யப்பட்ட தேங்காய் நண்டைக் காண்பித்து இந்தத் தகவலைச் சொன்னார் சென்னை அருங்காட்சியகத்தின் விலங்கியல் பிரிவு காப்பாட்சியர் அசோகன். அப்படி என்ன பராக்கிரமம் இந்த நண்டுக்கு? அதையும் அவரே விளக்குகிறார்...

‘‘நிலத்தில் காணப்படும் முதுகெலும்பற்ற விலங்கினங்களிலேயே இதுதான் மிகப் பெரியது. மூன்றடிக்கு மேல் நீளமும் நான்கு கிலோ வரை எடையும் இருக்கும். தண்ணீரில் வாழும் பெரும்பாலான நண்டுகளுக்கு மத்தியில்... நிலத்தில், அதிலும் தென்னை மரங்கள் அடர்ந்த பகுதிகளில் அதிகம் வாழும் நண்டுகள் இவை. தென்னை மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்து அதன் நாரையும் உரித்து உடைத்து உட்கொள்வதால்தான் தேங்காய் நண்டு என்ற பெயரைப் பெற்றது.

மனிதர்கள் வாழக்கூடிய பகுதிக்கு இது வந்தால் அவ்வளவுதான். மனிதர்கள் பயன்படுத்தும் சட்டி, பானை இத்யாதிகளை எல்லாம் ஏதோ உணவுப் பொருள் என்று நினைத்து உருட்டிக் கொண்டு போய்விடும். அதனால்தான் திருட்டு நண்டு என்றும் பெயர் பெற்றது.

இந்த வகை நண்டுகள் கடல் நீரில்தான் முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சிப்பி, நத்தை, சங்கு, ஆமை போன்ற உயிரினங்களின் ஓடுகளில் ஒட்டிக்கொண்டு சிறிது காலம் வாழும். கொஞ்சம் வளர்ச்சியடைந்ததும் தரைக்கு வந்து நிலத்தில் குழிகளைத் தோண்டி, மெத்தென்று தேங்காய் நார்களைப் போட்டு அதில் வசிக்க ஆரம்பிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் தீவுகளில் அதிகம் வாழும் தேங்காய் நண்டுகள், பல நிறங்களிலும் காணப்படுகின்றன. நல்ல நுகரும் சக்தி இருப்பதால் இவை எளிதில் இரையைக் கண்டுபிடிக்கின்றன. பொதுவாக இது மற்ற நண்டினங்களிலிருந்து மாறுபட்டு இருப்பதால் பலர் இதை உண்ண விரும்ப மாட்டார்கள். ஆனால், இந்த நண்டின் மாமிசத்தில் மருத்துவ குணம் உண்டென்று ஒரு புரளி உள்ளதால் சில நாடுகளில் இதை வேட்டையாடுவதும் உண்டு. இதனால் இந்த இனம் சில பகுதிகளில் முற்றிலும் அழியும் நிலைக்கு வந்துவிட்டது!’’ என்று அபாயமணி அடித்தார் அசோகன். இன்று வரை நாம் ஆச்சரியப்படுவதற்கென்று இருக்கும் ஒன்றிரண்டு உயிரினங்களையும் நம் நம்பிக்கைகள் அழித்துவிடக் கூடாது அல்லவா? -

kungumam.co.

  • தொடங்கியவர்

டாய்லெட் பேப்பரில் அதை பிரின்ட் செய்து என்ன பண்ணப் போறோம்?

 

17.jpg


சமூக வலைதளங்கள் படுத்தும் பாடு ஒரு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ‘ஜஸ்ட் 35 டாலர் கொடுங்கள்... உங்கள் ட்விட்டர் பதிவுகளையெல்லாம் அப்படியே நான்கு ரோல் டாய்லெட் பேப்பரில் பிரின்ட் செய்து உங்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறோம்’ என்று கிளம்பியிருக்கிறது ஒரு ஆன்லைன் அடாவடி குரூப்.

டாய்லெட் பேப்பரில் அதை பிரின்ட் செய்து என்ன பண்ணப் போறோம்?

‘உங்கள் பதிவுகளையும் நண்பர்களின் கருத்து      களையும் படித்து மகிழ்ந்த படியே காலைக்கடன் கழிக்கலாம்’ என்று கூல் பதில் சொல்லும் இந்தக் கடன்காரர்கள், தங்கள் இணையதளத்துக்கு ‘ஷிட்டர்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். அதையும் ட்விட்டர் இணையதளத்தைப் போலவே இமிடேட் செய்து எழுதியிருக்கிறார்கள்.

‘சமூக வலைதளக் கருத்துகள் எப்போதும் தூக்கி எறியும்படி இருக்காது’ என்று ஏதோ ஓர் உள் அர்த்தத்தோடு இந்தத் தளத்துக்கு ஒரு டேக் லைன் கொடுத்திருக்கிறார்கள். ‘ஒருவேளை சமூக வலைதளத்தை விட முடியாமல் தவிக்கும் யூத்களையும், இவற்றை தடை செய்யக் கோரும் பெருசு களையும் கலாய்க்கும் விதமாக இது உருவாக்கப்பட்டிருக்குமோ’ என்று தலையைச் சொறிகிறார்கள் இணையவாசிகள். பட், இந்த அப்ரோச் எங்களுக்குப் புடிக்கல!

kungumam.co.

  • தொடங்கியவர்

 

ராவணனை வதம் செய்யாமல் வழிபடும் ஓர் இந்திய கிராமம்

மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாட்டத்தில் உள்ள சங்கோலா கிராம மக்கள் ராவணனை வணங்கி வருகிறார்கள்.

  • தொடங்கியவர்

ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு நடனமாடிய யாழ்ப்பாண இளைஞர்கள்

  • தொடங்கியவர்

177,000 சதுர மீற்றர் பரப்பளவில் துபாயில் செவ்வாய் நகரம்; செவ்வாய் குடியேற்ற திட்டத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்மாணிக்கிறது

Mars.jpgசெவ்வாய் கிரகம் தொடர்­பான ஆராய்ச்­சி­க­ளுக்­காக செவ்வாய் கிரகச் சூழல் கொண்ட நக­ர­மொன்றை ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் நிர்­மா­ணிக்­க­வுள்­ளது.

இந்­ந­கர நிர்­மாணத் திட்டம் குறித்து ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் அர­சாங்கம் இவ்­வாரம் அறி­வித்­துள்­ளது.

 

துபாய் பாலை­வ­னத்தில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள இந்­ந­கரின் பரப்­ப­ளவு 177,000 சதுர மீற்­றர்கள் (19 லட்சம் சதுர அடி) ஆகும். இந்­ந­கர நிர்­மா­ணத்­துக்­காக 50 கோடி திர்­ஹாம்­கள் (சுமார் 2304 கோடி இலங்கை ரூபா) செல­வி­டப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் மொஹமத் பின் ரஷீத் விண்வெளிமத்­திய நிலை­ய­மா­னது இன்னும் 100 வரு­டங்­களில் அதா­வது 2117 ஆம் ஆண்டு செவ்வாய் கிர­கத்தில் மனித குடி­யி­ருப்பை ஸ்தாபிப்­பதை நீண்ட கால இலக்­காகக் கொண்­டுள்­ளது.

இந்த இலக்கை அடை­வ­தற்­கான ஒரு திட்­ட­மா­கவே துபாயில் இந்­ந­ந­கரம் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­ந­க­ருக்கு ‘செவ்வாய் நகரம்’ என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் விஞ்­ஞா­னிகள் மற்றும் பொறி­யி­ய­லா­ளர்­க­ளுடன் இணைந்து டென்மார்க் கட்­ட­டக்­க­லைஞர் ஜேர்க் இங்கில் இந்­ந­கரை கட்­ட­டங்­களை வடி­வ­மைத்­துள்ளார்.

dubai-4.jpg

ஆராய்ச்­சி­யா­ளர்கள் குழு­வொன்று ஒரு வரு­ட­காலம் இந்­ந­கரில் தங்­கி­யி­ருந்து உணவு, நீர், எரி­சக்தி தொடர்­பான ஆய்­வு­களை மேற்­கொள்வர்.

dubai-2.jpg
துபாயின் ஆட்­சி­யா­ள­ரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் இது தொடர்­பாக கருத்துத் தெரி­விக்­கையில், ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் ஆனது, தொலை­நோக்­கு­டைய, நாம் எதிர்­கொள்ளும் சவால்கள், நமது பூமி எதிர்­கொள்ளும் திடீர் மாற்­றங்கள் ஆகி­ய­வற்றை புரிந்­து­கொண்ட சிறந்த நாடொன்­றாகும். உலகின் ஏனைய பங்­கா­ளர்கள் மற்றும் தலை­வர்­க­ளுடன் இணைந்து மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்கும் பூமி­யி­லுள்ள உயிர்­களின் வாழ்க்கைத் தரத்தை முன்­னேற்­று­வ­தற்கும் இந்த விண்வெளி ஆராய்ச்­சியில் நாம் நம்­பிக்கை கொண்­டுள்ளோம்.

dubai-1.jpg
ஏனைய கிர­கங்­களில் மனி­தர்­களை தரை­யி­றக்­கு­வது மனி­தர்­களின் நீண்­ட­கால கன­வாக உள்­ளது. இக்­க­னவை நன­வாக்­கு­வ­தற்­கான சர்­வ­தேச முயற்­சி­களை ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் விஸ்­த­ரிக்க வேண்டும் என்­பது எமது நோக்கமாகும் என்றார்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

ஆரவ் வெற்றிபெற்றதற்காக ஓவியா செய்த காரியத்தை பாருங்களே..!

 

ஆரவ் வெற்றிபெற்றதற்காக ஓவியா செய்த காரியத்தை பாருங்களே..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று முடிவடைந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை ஆரவ், சினேகன், கணேஷ் மற்றும் ஹரிஷ் தான் இருந்தனர். இந்த நால்வரில் ஆரவ் நேற்று பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார்.

ஆரவ் வெற்றிபெற்றதற்காக ஓவியா செய்த காரியத்தை பாருங்களே..!

மேலும் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொண்ட அணைத்து பிரபலங்களும் வந்தனர். நமீதாவை தவிர அனைவரும் இந்த பிக் பாஸ் இறுதிப் போட்டியில் அணைத்து பிரபலங்களும் பங்கு கொண்டனர். மேலும் காயத்ரி, சுஜா ஜூலி மேலும் சிலர் நடனம் ஆடி நிகழ்ச்சியில் மக்களை மகிழ்வித்தனர். இதுவரை நடந்த அனைத்தையும் அந்த தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர்.

ஆரவ் வெற்றிபெற்றதற்காக ஓவியா செய்த காரியத்தை பாருங்களே..!

இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒரு பார்ட்டி நடந்தது, அதில் அந்த தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் அனைவரும் பங்கு கொண்டனர். மேலும் அந்த பார்ட்டியில் ஓவியா ஆடிய ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிரது.

 

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

நீலக்கண் தவளை முதல் கணவாய் மீன் வரை: அழகில் சிரிக்கும் இயற்கை

2017-ம் ஆண்டின் தலைசிறந்த இயற்கைப் புகைப்படக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பதற்கான நேஷனல் ஜியாகரஃபிக் புகைப்படப் போட்டி நவம்பர் 17ம் தேதி நிறைவடைகிறது. அதற்குள் வந்த புகைப்படங்களின் அழகில் கண்கள் விரிவடைகின்றன.

கூர்க் மஞ்சள் புஷ் தவளை

இந்தியாவில் கர்நாடகா மாநிலம் அகும்பே மழைக்காடுகளில் கூர்க் மஞ்சள் புஷ் தவளையை (Coorg yellow bush frog) புகைப்படம் எடுத்தவர் அங்கத் அச்சப்பா. கண்களைச் சுற்றி இதற்கு நீல நிற வளையம் இருப்பதால் இந்தத் தவளை முதலில் ‘நீல வண்ண கண்கள் கொண்ட புஷ் தவளை’ என அழைக்கப்பட்டது.

சாரலுக்கு இடையே ஒரு அழகிய மலைப் பாலத்தைத் தாண்டுகிறது ரயில்.

ஃபுகுஷிமா மற்றும் நிக்காடாவை இணைக்கும் தடாமி பாதை, மின்வசதி செய்யப்படாத ஒற்றை ரயில் பாதை ஆகும். "அதிலும் குறிப்பாக தடாமி நதியில் இருந்து இந்த ரயில் பாதையை பார்ப்பது அற்புதமான கண்கொள்ளா காட்சியாக இருக்கும்" என்கிறார் இந்த புகைப்படத்தை எடுத்த டெர்யூ அராயா. "இந்தப் பாதையில் செல்லும் ரயில் வசந்த காலத்தில் செர்ரி பூக்களையும், கோடைகாலத்தில் பசுமையையும், இலையுதிர் காலங்களில் வண்ணமயமான இலைகளையும், குளிர்காலத்தில் பனியையும், பல பாலங்களையும் கடந்து செல்கிறது."

ஓதக்குளம்

"நார்வேயின் வடபகுதியில் உள்ள லோஃபோடென் தீவுகளில் கடல் ஓதத்தால் உருவாகியிருக்கும் குளம் கண்கவர் இயற்கை அற்புதம்" என்கிறார் இந்தப் புகைப்படத்தை எடுத்த ஃபெலிக்ஸ் இண்டென். பௌர்ணமிக்கு நெருக்கமான நாள்களில் ஓதம் உயர்ந்து வெள்ளை மணல் இந்தக் குளத்துக்குள் அடித்துக்கொண்டுவரும். பிறகு கண்முன் இயற்கையின் மாயாஜாலம் நிகழும் என்கிறார் அவர்.

புல்வெளியில் மேயும் குதிரை.

ருமேனியாவில் உள்ள டிரான்ஷில்வேனியாவில் உள்ள ஃபண்டாடுரா போனொருலி மலைப் பகுதியில் இந்த புகைப்படத்தை எடுத்தவர் செபாஸ்டியன். சூரிய உதயத்திற்குப் பிறகு காலை வேளையில் அமைதியான தருணத்தில் இரண்டு குதிரைகள் மேய்ந்துக் கொண்டிருக்கின்றன.

சிங்கம்.

கென்யாவின் மாசாய் மாரா தேசிய சரணாலயத்தின் பெரும்பரப்பில், தன் உடம்பை நீட்டிக்கொள்ளும் பெண்சிங்கத்தை புகைப்படம் எடுத்திருக்கிறார் ஜோயல் ஃபிஷ்ச்சர்

நீல நாரை

"டெலாவேரில் பாம்பே ஹூக் தேசிய வன உயிர் சரணாலயத்தின் பொன்னான காலை நேரம்" என்கிறார் புகைப்படத்தை எடுத்த ஜெர்ரி ஆம் எண்டே. "இந்த அற்புதமான நீல நாரை தனது இறக்கைகளை விரிக்கும் நேரம் அங்கே காற்று வீசுவதற்கான அறிகுறிகூட இல்லை என்கிறார் அவர்.

ஒட்டக நிழல் படம்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கேபிள் கடற்கரைப் பகுதியில் அந்திசாயும் வேளையில் ஒட்டகங்களின் அணிவகுப்பை, உச்சிக் கோணத்தில் புகைப்படம் எடுத்தவர் டோட் கென்னடி.

நதியில் நனையும் கரடிகள்

ரஷ்யாவின் கம்சட்காவில், இந்த புகைப்படத்தை எடுத்தவர் அனாட் குட்மேன் "பிறந்து மூன்று மாதங்களேயான கரடிக்குட்டி மிகவும் அழகாக இருந்தது, நான் அதன் அழகில் மயங்கி கிட்டத்தட்ட கேமராவைப் விட்டுவிட்டு அதை கட்டிப்பிடிக்க ஓடினேன், ஆனால் தாய்க் கரடி என்னை சந்தேகத்துடனே பார்த்துக்கொண்டிருந்தது."

பறவைகள்

ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையிலான குளிர்காலத்தில் வாத்துகள், ஈக்ரெட்ஸ், மற்றும் ஹெரோன்கள் உட்பட ஆயிரக்கணக்கான புலம்பெயரும் பறவைகள், கலிபோர்னியாவின் வட பகுதியை குளிர்கால வாசஸ்தலமாக மாற்றிக் கொள்கின்றன. மிகுந்த வேகத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து இந்த புகைப்படத்தை எடுத்தவர் ஜேசன் டோடொரோவ்.

கூடலில் கணவாய் மீன்கள்

"தெற்கு ஆஸ்திரேலியாவின் வொயாலா குளிர் நீரில் வருடாந்திர ஆஸ்திரேலிய மாபெரும் கணவாய் மீன் ஒன்று கூடும் காலத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த காலத்தில் லட்சக்கணக்கான கணவாய் மீன்கள் தங்கள் துணையை தேடி வருவது கண்கொள்ளக் காட்சியாகும். இந்த வகை மீன்கள் பெருமளவில் ஒன்று கூடும் இடம் இதுமட்டுமே " என்கிறார் புகைப்படக்கலைஞர் கேமரூன் மெக்ஃபார்லேன்.

பாசிக்கடியில் முதலை

லூயிசியானாவில், நியூ ஆர்லியன்ஸில் நீரில் படர்ந்திருக்கும் வாத்துப் பாசிக்கு அடியில் காத்துக்கொண்டிருக்கும் முதலையின் இந்த புகைப்படத்தை எடுத்தவர் கோல் ஃப்ரெச்சோ

சிறு எலும்புக்கூடு எறால்

"எனக்கு பிடித்தமான உயிரினத்தின் மிகப் பிடித்தமான புகைப்படம் இது என்கிறார் ஆடம் சில்வேர்மன். +25 உருப்பெருக்கியை பயன்படுத்தி எடுத்தேன் அதனால் இந்த சின்னஞ்சிறு

 

பறவைகள்

 

இந்த புகைப்பட்த்தை எடுத்த தருணத்தை நினைவுகூர்கிறார் க்சாபா டரோக்ஜி: "கொஞ்சம் புகைப்படங்களை எடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த காலை வேளை அது. ஏரி ஒன்றில் பெருமளவிலான வாத்துக்கூட்டத்தை பார்த்தேன். உடனே என்னுடைய டிரோனை (புகைப்படம் எடுக்கப் பயன்படும் ஆளில்லா சிறிய ரக விமானம்) வாத்துக் கூட்டத்திற்கு மேல் பறக்கவிட்டு புகைப்படங்களை எடுத்தேன்."

வளைந்து நெளிந்து செல்லும் சாலை

இந்த சேயியா டிஎன்1ஏ சாலை டிரான்ஸில்வேனியாவுக்கு அழைத்துச் செல்கிறது" என்கிறார் கலின் ஸ்டான். " இது புகழ்பெற்ற டிராகுலாவின் பிறப்பிடமான டிரான்சில்வேனியா. இது ஒரு அற்புதமான சாலையின் வியத்தகு கோணம்" என்கிறார் அவர்.

 

பச்சை, சாம்பல் வண்ண மலை.

கனடாவின் மக்கன்சி மலைத்தொடரில் சாம்பல் நிறத்திலும், வித்தியாசமான பச்சை வண்ணத்திலும் இருக்கும் மலைகளை புகைப்படம் எடுத்துள்ளார் அலைன் பெளத்ரியு.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

இணைய உலா: எல்லோரும் போட்டாச்சு ஜிமிக்கி கம்மல்!

 

 
mohan%20lal

மோகன் லாலின் ஜிமிக்கி கம்மல்.

ஒரே பாட்டில் பிறந்த குழந்தை கதாநாயகனாக வளர்ந்துவிடுவதையும், கூலித் தொழிலாளியான கதாநாயகன் கோடீஸ்வரனாக மாறிவிடுவதையும் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். அதேபாணியில் ‘ஜிமிக்கி கம்மல்’ என்கிற மலையாளப் படப் பாடலுக்குக் குத்தாட்டம் போட்ட பெண்களில் ‘ஷெரில்’ என்பவர் மட்டும் ‘ஓவர் நைட்டில் ஒபாமா’ ஆகிவிட்டார். அந்தப் பெண்ணுக்குச் சமர்ப்பண மீம்ஸ் போடுவதில் தொடங்கி ரசிகர் படை திரள்வதுவரை நம் இளைஞர்கள் இன்னும் ஜிமிக்கி கம்மலை விட்டப்பாடில்லை.

   
28CHModiJK1

தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாடப்படும் ஜிமிக்கி கம்மல் ரீமிக்ஸ்.

 

‘நாங்களும் ஆடுவோம்ல!’ எனப் பையன்களும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்குக் களமிறங்கினார்கள். சும்மா சொல்லக் கூடாது, அவர்களுடைய ஆட்டமும் யூடியூபில் ஹிட் அடித்தது. முதல் சில நாட்கள்வரை கடவுள் தேசத்தின் சேச்சிகளும் சேட்டன்களும் ஜிமிக்கி கம்மலுக்கு ஆடித்தீர்த்தார்கள். அடுத்துக் களமிறங்கினார்கள் தமிழ் ‘வீடியோ மீம்ஸ்’ மன்னர்கள். ‘வடிவேலு வெர்ஷன்’, ‘கவுண்டமணி வெர்ஷன்’ என ஆளாளுக்கு அசத்தினார்கள். அதிலும் சீமான் உடற்பயிற்சி செய்யும் காட்சிகளை வெட்டியும் ஒட்டியும், விஜயகாந்தின் யோகா ஆசனங்களையே நடனமாக்கியும், தோடர் பழங்குடியினருடனான ஸ்டாலினின் நடனத்தைக் கச்சிதமாகப் பொருத்தியும், ‘அம்மா’வின் சமாதியில் ‘சின்னம்மா’ அடித்த சத்திய சபதத்தையும் கலந்துகட்டி கிண்டல் வீடியோ மீம்ஸ் போட்டு வயிறு குலுங்கச் சிரிக்கவைத்தார்கள். இதில் எம்.எஸ். டோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரையும் விட்டுவைக்கவில்லை நம்மவர்கள்.

இப்படியொரு வைரல் வரவேற்பை இப்பாடல் இடம்பெற்ற ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ குழுவினர்கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அதனால்தான், “ஜிமிக்கி கம்மல் பாடலை அதிரடி ஹிட் ஆக்கிய அனைவருக்கும் நன்றி” என்று ஆடியபடியே நடிகர் மோகன்லால் நன்றி சொன்னார். அதையும் யூடியூப்பில் ரசித்துத் தீர்த்தார்கள்! விதவிதமான ‘ஜிமிக்கி கம்மல்’ வெர்ஷன்கள் சமூக ஊடகங்களில் வலம்வர, கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 11 அன்று நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரப் பாடலாகவும் ‘ஜிமிக்கி கம்மல்’ தற்போது மாற்றப்பட்டுவிட்டது.

jimiki%20kammal

பசங்க ஆடிய ஜிமிக்கி கம்மல்.

 

பிரபல சினிமா பாடல்களை அரசியல் பிரச்சாரங்களுக்காக அப்படியே பயன்படுத்துவது அல்லது ரீமிக்ஸ் செய்து பயன்படுத்துவது காலங்காலமாக இருந்துவரும் வழக்கம்தான். இந்த முறை அதையும்தாண்டி அட்டகாசமாக உருமாற்றப்பட்டிருக்கிறது ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல். பெட்ரோல் விலை ஏற்றம், பண மதிப்பு நீக்கம் என மக்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளால் மொத்த நாடும் மோடி ஆட்சியில் படும்பாட்டை நையாண்டியாக ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலாக மிக்ஸ் செய்து எழுதியிருக்கிறார்கள். அப்துல்காதர் எழுதிய இந்தப் பாடலை ஃபஹாத், லில்லி பிரான்சிஸ் ‘அடிபொலி’யாக பாடியிருக்கிறார்கள். பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல மோடியின் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாடுகளில் அவர் மேளம், தாளம் என இசை வாத்தியங்களை வாசிக்கும் காட்சிகளைச் சேர்த்து ரகளையாகப் பாடலை வீடியோ பதிவாக வெளியிட்டிருக்கிறார்கள்.

‘ஜிமிக்கி கம்மல் எலக்‌ஷன் பேரடி’ என்ற இந்தப் பாடலையும் மூன்றே நாட்களில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 02
 

1187: ஜெருசலேம் நகரம் சலாடினினால் கைப்பற்றப்பட்டது.

1869: மகாத்மா காந்தி பிறந்தார்.
 

1941: மொஸ்கோ மீது ஜேர்மனி பாரிய தாக்குதலை ஆரம்பித்தது.

1944: வார்ஸோ எழுச்சியை அடக்கி, போலந்தை ஹிட்லரின் நாஸிப் படைகள் கைப்பற்றின.
 

1968: மெக்ஸிகோவில் ஒலிம்பிக் போட்டிகள் சில தினங்களில் ஆரம்பிக்கவிருந்த நிலையில் நடந்த வன்முறையில் குறைந்தபட்சம் 25 பேர் பலி.

1970: அமெரிக்காவின்; விசிட்டா மாநில பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணிஇ நிர்வாகிகள் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலி.
 

1975: தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலமானார்.
 

1990: சைனீஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று குவாங்ஸு விமான நிலையத்தில் கடத்தப்பட்டு வேறு இரு விமானிங்களுடன் மோதியதில் 132 பேர் பலி.

1993: ரஷ்யாவில் தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவு ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சினுக்கு ஆதரவான படைகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 25 பொலிஸார் 5 ஆர்ப்பாட்டக்காரர்கள் பலி.
 

1996:  இலத்திரனியல் தகவல் சுதந்திர சட்டத்திருத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கையெழுத்திட்டார்.
 

1997: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆம்ஸ்டர்டாம் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

2001: செப்டெம்பர்11 தாக்குதலின்பின் அமெரிக்க இராணுவத் தாக்குதலுக்கு நேட்டோ ஆதரவு.

2009: 2016 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரமாக பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரம் தெரிவு.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய தெருப்பாடகி!

 

அந்தத் தெருப்பாடகி, கொச்சியில் பிரபலம். பெயர் பிரியா சுமேஷ். தெருப்பாடகர்கள், பாடகிகளைப் பார்த்திருப்போம். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்துவிட்டுக் கடந்துவிடுவோம். ஆனால், பிரியாவை சாதாரண தெருப்பாடகி என நினைத்துவிட முடியாது. அவரின் நோக்கம் அவ்வளவு உன்னதமானது. கொச்சியில் தெருத் தெருவாகச் சென்று பாடல் பாடி, அதில் கிடைக்கும் நிதியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு வழங்குவதுதான் இவரின் பணி!

தெருப்பாடகி பிரியா சுமேஷ்

 

Photo Courtesy : NAMMA MATHRAM

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்காக ஃபேஸ்புக்கில் ஒருமுறை `லைவ்'வாகப் பாடினார் பிரியா. திரண்டது, ஒரு லட்சம் இரண்டு லட்சம் அல்ல... 27 லட்சம் ரூபாய். பிரியாவின் குரலுக்கு அவ்வளவு மவுசு. சாதாரண பின்புலம்கொண்ட பிரியாவின் கணவர் ஒரு டிரைவர். தினமும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கணவனும் மனைவியும் வாகனத்தில் புறப்படுவார்கள். வாகனத்தில், அன்றைய தினத்தில் திரளும் நிதி எந்தக் குழந்தைக்கு வழங்கப்படவுள்ளது, அவரின் வங்கிக்கணக்கு போன்ற விவரங்கள் எழுதப்பட்டிருக்கும்.

பிரியா, தினமும் மதியம் 12.30 மணி முதல் 4 மணி வரையும்,  இரவு 7 மணி முதல் 10 மணி வரையும் தெருத் தெருவாகச் சென்று நிகழ்ச்சி நடத்துவார். கணவர் சுமேஷ், அவருக்கு உதவியாக இருப்பார். நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை நிதி திரளும். சில சமயங்களில் 10,000 ரூபாய் வரை கிடைக்கும். சில வேளையில், பெட்ரோலுக்குக்கூட நிதி கிடைக்காது.

குறிப்பிட்ட அளவு நிதி திரண்ட பிறகு, குழந்தையின் வங்கிக்கணக்கில் பிரியா பணம் செலுத்திவிடுகிறார். நிதி வழங்கப்பட்ட குழந்தையின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று,  டெபாசிட் செய்த வங்கி ஸ்லிப்பையும்  வழங்குகிறார். நிதி திரட்டித் தருவதோடு கடமை முடிந்துவிட்டது என பிரியா ஒதுங்கிவிடுவதில்லை. குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவர்களையும் சந்தித்து, சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிந்துகொள்கிறார். 

இந்த வருடத்தில் மட்டும் ஐந்து குழந்தைகள் உள்பட ஏழு பேரின் புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்டி வழங்கியிருக்கிறார். “என் சகோதரி புற்றுநோயால்தான் இறந்தார். புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும். சிகிச்சைக்கு பணம் திரட்ட, நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டோம். குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், தாங்க முடியாத வலியால் அவதிப்படுவார்கள்.  குறைந்தபட்ச சிகிச்சை மேற்கொண்டால்தான் ரணமாவது குறையும். நிதி திரட்ட, தெருப்பாடகியாவதுதான் நல்ல வழியாகத் தெரிந்தது. என்னால் அடுத்தவர்களுக்கு உதவ முடிகிறது என்ற மனத் திருப்தியும் கிடைக்கிறது''  என்கிறார் பிரியா. 

சில சமயம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரே சிகிச்சைக்கு நிதி திரட்டித் தருமாறு கண்ணீர் மல்க கேட்பார்கள். சிலர், அறுவைசிகிச்சைக்கு நாள் குறித்துவிட்டு வந்து நிற்பார்கள். அந்தச் சமயத்தில் பிரியா, டபுள் டூட்டி பார்ப்பதுபோல பம்பரமாகச் சுழன்று நிதி திரட்டுவார். வாக்குறுதி அளித்துவிட்டால் நிறைவேற்றிவிட்டுதான் மறுவேலை. முதன்முதலாக பிரார்த்தனா என்கிற ஒரு வயது குழந்தையின் சிகிச்சைக்கு இரண்டே மாதங்களில் இரண்டு லட்சம் ரூபாய் நிதி திரட்டினார். அதற்குப் பிறகு கொச்சி நகரில் பிரியா பாப்புலராகிவிட, பிரியாவைப் பார்த்தாலே பணம் கொடுத்துவிட்டுப் போகும் மக்களின் எண்ணிக்கை  அதிகம். 

 

“உயிரோடு இருக்கும் வரை என்னால் எத்தனை பேருக்கு உதவ முடியுமோ, உதவ வேண்டும். பிறகு, மகிழ்வுடன் இறப்பைச் சந்திக்க வேண்டும்” எனக் கூறும் பிரியாவும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்தான்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

மனுசியிட்ட மாட்டிட்டு முழிக்கிற கணவனைப் பாருங்கள் 1f468_200d_1f469_200d_1f466.png? 1f601.png?1f602.png

  • தொடங்கியவர்

அதிசய மரம் - வியப்பில் ஆழ்ந்த மக்கள் !!!

 

 காரைதீவு-  1ஆம் பிரிவு விபுலானந்த வீதியிலுள்ள வீடொன்றில் விநோதமான முறையில் வாழைக்குலை தள்ளியுள்ளதால் அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அதிசய    மரம்   -   வியப்பில்  ஆழ்ந்த   மக்கள் !!!

இதில் வாழை மரம் ஒன்றின்  அடியிலிருந்து 2 அடி உயரத்தில் இடைநடுவில் வாழைக்குலை   தள்ளியுள்ளது.

6 அடி மெலிந்த உயரமான வாழை மரத்தின், அடியிலிருந்து 2 அடி   உயரத்தில் சுமார் 4 சிறிய சீப்புகளுடன் இக்குலை தள்ளியிருக்கிறது.

வாழை  மரத்தின் மேற்பாகத்தில் குலை தள்ளுவதே வழமை. எனினும் இந்த வாழைமரம் சற்று  வித்தியாசமாக காணப்படுகின்றது.

அதிசய    மரம்   -   வியப்பில்  ஆழ்ந்த   மக்கள் !!!

இடைநடுவில் குலைதள்ளி உள்ள, விநோத மரத்தை   அப்பகுதியில் இருக்கும் மக்கள்   வந்து பார்வையிட்டு  செல்கின்றனர்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

பறக்கும் டாக்ஸி துபாய் நகருக்கு வருகிறது

 

துபாய் தன் மண்ணில் பல நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய பறக்கும் டாக்சிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது .  இந்த வரிசையில் ஆளில்லாமல் பறக்கும் வோலோகொப்டர் ஒன்றையே துபாய் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது . இது ஒரு ஜெர்மன் நாட்டுத் தயாரிப்பாக இருக்கும் . ஏற்கனவே   துபாய்  இன்னொரு பறக்கும் டாக்சியில் முதலிட்டு உள்ளது , இதன் பாவனைக்கான வடிவமைத்து நெறிப்படுத்துவதில் அது இப்பொழுது   முனைந்துள்ளது.

பறக்கும் டாக்ஸி துபாய் நகருக்கு வருகிறது

ஏற்கனவே தரையில் இட நெருக்கடியால்    நெடுஞ்சாலைகளில்     திணறும் இச் சமயத்தில் , ஆகாயமார்க்கமாக பயணிகளைக் கொண்டு செல்ல  முடிந்தால் அது பெரிய உதவியாக இருக்குமென்று அதிகாரிகள் நம்புகிறார்கள் .இது பஸ் , கார் போன்று புது மக்களுக்கு சேவை செய்யும் வாகனமாக இருக்கும் . ஒரு காரில் செல்ல எடுக்கும் செலவை  விட அதிக்கமாக இராது என்கிறார் வோலோகொப்டரின் இணை ஸ்தாபகர் அலெக்சாண்டர் சொசெல் . .

பறக்கும் டாக்ஸி துபாய் நகருக்கு வருகிறது

தெருக்களை ,பாலங்களை நிர்மாணிக்க பெரும் பணம் செலவாகும் . இவையெல்லாம் தேவைப்படாத  வான்பரப்பில் இப்படியான வாகனங்களை வைத்து மக்கள் போக்குவரத்தை நடாத்துவது , இலாபகரமானது மட்டுமல்ல , போக்குவரத்து நெரிசல்களையும் தவிர்க்க வழி செய்யும் என்று மேலும் கூறுகிறார் இவர் .துபாய் நகரில் இன்றுவரை 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் , நெடுஞ்சாலைகளில் காணப்படுவதாக அறியப்படுகிறது

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

வெளிநாட்டில் விவசாயம் செய்யும் இந்தியர்கள்!

- ச.அன்பரசு

கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்புகள் என்றால் விவசாயம்தான் கிராமங்களின் முதுகெலும்பு. அரசின் பொருளாதாரக் கொள்கைகள், உலகமயமாக்கல் போன்ற பல்வேறு சூழல்களால் இந்திய விவசாயிகள் நாள்தோறும் தற்கொலை செய்துகொண்டிருக்க, மறுபுறம் விவசாயத்தை விட முடியாத மக்கள் வெளிநாடுகளுக்குப் பறந்துபோய் ஏர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பஞ்சாபியர்கள்தான் இதில் அதிகம்.
19.jpg
பஞ்சாப், ஐந்து நதிகள் பாயும் வளமான நிலம். காலகாலமாய் விவசாயம் செழித்த பகுதி. மொத்த தேசத்துக்கும் கோதுமையும் அரிசியும் வழங்கும் அன்னதாதாக்கள் பஞ்சாபியர்கள்தான். பஞ்சாபில் விவசாயம் பொய்த்துப்போகத் தொடங்கியவுடன் விவசாய டிஎன்ஏ நிறைந்த சிங்குகள் கனடாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் கிளம்பிப் போய் கலப்பை பிடித்து மகசூல் பார்த்து மகிழ்கிறார்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, வட ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நிலங்கள் அரசின் மானிய விலையில் ஒரு ஏக்கர் ரூ.500க்கு கிடைக்கத் தொடங்கியதும் தொடைதட்டிக் கிளம்பிவிட்டார்கள் சிங்குகள். விவசாயத்தை அந்த நிலத்தில் வளர்ப்பதற்காக எத்தியோப்பிய அரசும் நிறைய சலுகைகள் வழங்க அத்தனையையும் கப்பென பிடித்துக்கொண்டு எத்தியோப்பிய வயல்களில் பங்காரா இசைத்தபடி இப்போது பண்ணையம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
19a.jpg
பஞ்சாபின் ஃபாஸில்கா மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத்தைச் சேர்ந்த விவசாயி உபேந்திரகுமார், எத்தியோப்பியாவின் பாஹிர் டார் பகுதியில் 1,500 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார். ‘‘உரம் தேவைப்படாத நல்ல வளமான நிலம் அது. முதலில் காய்கறிகள், பின்னர் வாசனைப் பொருட்களுக்கான பயிர்களைப் பயிரிட்டேன். அருகிலேயே விமான நிலையம் இருப்பது போய்வர வசதி...’’ என்கிறார்.

தொலைதூரத்தில் இருந்து நிர்வாகம் செய்வது சிரமமாய் இருக்கிறது என இப்போதுதான் கைவிட்டிருக்கிறார். ஜிம்பாப்வே, மொசாம்பிக் ஆகியவற்றிலும் பஞ்சாபியர்களின் அன்னக்கொடி காற்றில் பறக்கிறது. கருங்கடல், காகசஸ் மலை சூழ இருக்கும் முன்னாள் சோவியத் குடியரசு நாடான ஜார்ஜியாவில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.20 ஆயிரம் என அரசு அறிவித்தவுடன் அங்கும் நுழைந்தது பஞ்சாபியர் படை.
19b.jpg
கடந்த 2012ம் ஆண்டிலிருந்தே ஜார்ஜியாவின் தலைநகர் பிலிஸியிலும், அங்கிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள சோனோரி என்னும் காகசியன் மலைகள் சூழ்ந்த கிராமத்திலும் ஏறத்தாழ 2,000 பஞ்சாபிய குடும்பங்கள் குடியேறியுள்ளன. ‘‘அதிகரிக்கும் விவசாய செலவுகள், இன்ஸூரன்ஸ் இன்மை, தரகர்களின் தொல்லை, அரசின் ஆதரவின்மை, விவசாயிகள் தற்கொலை, போதைக் கலாசாரம், விவசாய நிலம் ரியல் எஸ்டேட்டாக மாறும் அவலத்தை எவ்வளவுநாள் பொறுத்திருப்பது? எனவே ஐரோப்பிய நாடுகளில் பஞ்சாபியர்களின் குடியேற்றங்கள் ஆச்சரியமான ஒன்றல்ல...’’ என்கிறார் விவசாயி குஷ்வந்த் சிங்.

இவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள். எண்பதுகளில் இடம்பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள். ஃபாரீன் விவசாயம், விவசாயிகளை ஈர்க்கக் காரணம் ஊழலற்ற எளிய நடைமுறைகள், குற்றங்கள் குறைவு என்ற நிம்மதியான சூழல்தான். மேலும், பஞ்சாபியர்கள் தங்கள் குடும்பத்தோடு இங்கு குடியமரவும் இதுவே முக்கியக் காரணம்.

உலக அளவில் எளிதாகத் தொழில் தொடங்க உதவும் நாடுகளில் ஜார்ஜியாவுக்கு 17வது இடம். அதோடு நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணம் இந்திய மதிப்பில் ரூ.7,059 மட்டுமே. நூறு தொழில்களைச் செய்வதற்கும் ஒரே அனுமதி போதும். விவசாய நிலங்கள் அதன் அமைவிடத்தைப் பொறுத்து இந்திய மதிப்பில் ரூ.60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை குத்தகைக்குக் கிடைக்கின்றன. தரம் இல்லாத உரங்கள், வணிக மின்சாரக் கட்டணம், சொத்துவரி, விலையுயர்ந்த விதைகள் ஆகியவற்றோடு மொழி, உணவு உள்ளிட்ட மைனஸ்
பக்கங்களும் இதில் உள்ளன.

இந்திய விவசாயிகள் மட்டுமல்ல, சீனர்கள், ஈரானியர்கள், ரஷியர்கள் ஆகியோரையும் ஜார்ஜியா அரசு வரவேற்று உணவு தன்னிறைவுக்காக விவசாயத்தில் ஈடுபடுத்தியதை உள்ளூர் விவசாயிகள் விரும்பவில்லை. வெளிநாட்டு மக்கள் ஜார்ஜியாவில் நிலங்களை வாங்குவதற்கு தடை விதிக்க உள்நாட்டு விவசாயிகள் ஆக்ரோஷப் போராட்டம் நடத்தியதால், 2014ம் ஆண்டு அரசு இதற்கான தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தது. எனவே, நஷ்டத்திலிருந்து தப்ப பஞ்சாபியர்கள் நிலத்தை விற்கவும்; குத்தகை நிலங்களை குறைத்துக்கொள்ளவும் தொடங்கினர்.

காய்கறி, கோதுமை என விவசாயம் செய்தவர்கள் பின்னாளில் விவசாயத்தை மட்டும் நம்பியிருக்காமல் சுற்றுலா வாகனங்கள் எனத் தொழில் நிறுவனங்களிலும் சமயோசிதமாகக் கால் பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் விவசாயம் செய்யும் இந்த பஞ்சாப் சிங்கங்கள் மனதில் தங்கள் தாயகத்தில் விரைவில் விவசாய சூழல் சீராகும் என்ற நம்பிக்கை மலைபோல் உள்ளது. அந்த நம்பிக்கைதான் அந்நிய வயல்களில் அவர்களை உற்சாகமாய் உழைக்க வைக்கிறது. உழவுக்கு வந்தனை செய்வோம்!    

அக்ரி தேசம் ஜார்ஜியா!

ஜார்ஜியாவில் முன்பு பயிரிடப்பட்டவை தேயிலை, சோளம், திராட்சை ஆகியவை மட்டுமே. சோவியத்திலிருந்தபோது 428 ஹெக்டேர்கள் நிலம் கூட்டுப்பண்ணை முறையில் இருந்தன. சோவியத்திலிருந்து பிரிந்து உள்நாட்டுப் போர் சிக்கல் ஏற்பட்டபோது நிலங்கள் தனியார்மயமாயின. 1990க்கு முன் தனியாரிடமிருந்த நிலங்கள் 7%. இது, 2000ம் ஆண்டுக்குப் பிறகு 37% என உயர்ந்து இன்று 100% விவசாய உற்பத்தி தனியாரிடமே உள்ளது.

கிராம மக்களுக்கு நிலங்கள் பிரித்தளிக்கப்பட்டதில் தனியார் நிலத்தின் அளவு 0.96%. இதில் 5% விவசாய பண்ணைகள் மட்டுமே 2 ஹெக்டேர்களுக்கும் அதிகம். ஜார்ஜியாவின் ஜி.டி.பியில் விவசாயத்தின் பங்கு 8.4% (2012). விவசாய ஏற்றுமதி மதிப்பு 1.1 பில்லியன் டாலர்கள் (2012). (www.wikipedia.org, www.moa.gov.ge தகவல்படி).

எத்தியோப்பியா

தேன் மற்றும் தேன்மெழுகு தயாரிப்பில் முன்னணி நாடு. நைஜீரியாவுக்கு அடுத்து அதிக மக்கள்தொகையாக 96 மில்லியன் பேர் வசிக்கிறார்கள். இவர்களில் 85% மக்களின் தொழில் விவசாயம்தான். பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு 36.7%, ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7%. காபி, பருப்புகள், தோல் பொருட்கள் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். (www.fao.org, www.export.gov 2015 - 16 தகவல்படி)

www.kungumam.co.i

  • தொடங்கியவர்

மகன் திருமணத்துக்கு ‘தமிழ்நாட்டின் சம்பந்தி’ காந்தி விதித்த நிபந்தனை!

 
 

காந்தி

ந்திய சுதந்திரப்போர் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த கடந்த நுாற்றாண்டின் ஆரம்பத்தில் அதன் திசை கொஞ்சம் புலப்படாமல் இருந்தது. காங்கிரஸில் காந்தியின் வருகைக்குப்பின் இந்திய சுதந்திரப்போரில் காங்கிரஸின் கீழ் மக்கள் ஒன்றிணைந்த அதிசயம் நிகழ்ந்தது. அதுவரை அல்லாத சுதந்திர வெறி மக்களிடம் கனன்று எரிய ஆரம்பித்தது. தன் அஹிம்சை  கொள்கையால் காந்தி மக்கள் மனதில் மாபெரும் தலைவராக உயர்ந்தார். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கைக்கொண்ட அஹிம்சை போராட்ட யுக்திதான் முதன்முறையாக காந்தியை இந்திய மக்களிடையே ஆச்சர்யமாக பார்க்கவைத்தது. அதன் எதிரொலியாக காந்தி இந்தியாவிற்கான சுதந்திர வெளிச்சத்தை பெற்றுத்தருவார் என அவர்கள் நம்பினர்.

காந்தியின் தென் ஆப்பிரிக்க வெற்றியினால் இந்தியாவில் பல மெத்தப் படித்தவர்களும் தங்கள் மேல்தட்டு உத்தியோகங்களை துறந்து சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்றனர். குறிப்பாக வழக்கறிஞர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜாஜி என்ற ராஜகோபாலாச்சாரியார். இந்திய அரசியலில் சாணக்கியன் என வர்ணிக்கப்பட்ட ராஜாஜி காந்தியின் சாகசங்களை கண்டு சேலத்தில், தான் வெற்றிகரமாக நடத்திவந்த வழக்கறிஞர் தொழிலை கைவிட்டவர். பள்ளி, கல்லுாரி நாட்களில் கோகலே திலகர் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். பின்னாளில் காந்தியின் அஹிம்சை நெறியால் ஈர்க்கப்பட்டு அவரையே தன் குருவாக ஏற்றவர். “என் மனசாட்சியின் காவலர்” என காந்தியால் சிலாகிக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

அரசியல் சாணக்கியன், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், பரந்துபட்ட சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரி என்றெல்லாம் நாம் அறிந்த ராஜாஜிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. ஆம் அவர் தேசத் தந்தை காந்திக்கு சம்பந்தி. ஆம் காந்தி நம் தமிழகத்தின் சம்பந்தி என்பது இன்றைய தலைமுறை அறியாத சேதி; ஆச்சர்யமான சேதி... காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தி ராஜாஜியின் மகள் லட்சுமியை காதலித்து மணந்தவர்!

காந்திஇந்திய சுதந்திரப்போரில் ஈடுபட்டு சீற்றமான போராட்டங்களையும் அதற்குப் பரிசாக சிறைவாசமும் அனுபவித்துவந்த இந்த இருபெரும் தலைவர்களின் பிள்ளைகளுக்கு இடையே காதல் கணிந்தது எப்படி... கல்யாணம் கைக்கூடியது எப்படி
அது 20 களின் மத்தியில் நடந்த சம்பவம்...

சேலத்தில் பிரபல வழக்கறிஞரிடம் இளம் வழக்கறிஞராக பணியாற்றி பின்னர் குற்றவியல் வழக்கறிஞராக பிரலமடைந்திருந்தார் ராஜாஜி. தென் ஆப்பிரிக்க சம்பவத்திற்குப்பிறகு காந்தி என்ற ஆளுமை மீது அவருக்கு காதல் உருவானது. இதனால் தொழிலில் கொஞ்சம் கவனம் குறைய ஆரம்பித்திருந்தது. இந்திய சுதந்திரம் குறித்தும் காந்தி குறித்தும் எந்நேரமும் பேசிவந்தார். இது அவரது தந்தைக்கு கவலை தர, 'நல்ல முறையில் தொழில் சென்றுகொண்டிருக்கும்போது இப்படி அக்கறை இல்லாமல் இருக்கிறானே' என வருந்தினார். காந்தி என் மகனுக்கு சொக்குப்பொடி போட்டுவிட்டார் என போவோர் வருவோரிடம் புலம்பித்தள்ளினார். அரைகுறை மனதுடன் தொழில்செய்த ராஜாஜி ஒருநாள் அதை திடுதிப்பென விடவேண்டியதானது. 

ஒருமுறை கொலை வழக்கொன்றில் திறமையுடன் வாதாடி வெற்றிபெற்ற ராஜாஜி அதற்காக தன் சக வழக்கறிஞர்களுக்கு சிறுவிருந்து ஒன்றை அளித்தார். அப்போது அங்கு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் வந்தார். “ஐயா குற்றம் செஞ்சேன்னு தெரிஞ்சும் சாமர்த்தியமா பேசி துாக்கிலிருந்து என்னை காப்பாத்திட்டீங்க. அப்படியே இன்னொரு உதவியும் செய்யணும்...என்றான். “என்ன உதவி என்றார் ராஜாஜி. “கொலைக்கு பயன்படுத்தின கத்தி பரம்பரை பரம்பரையா எங்க குடும்பத்துல பயன்படுத்திட்டு வர்றது... அதனால் எப்படியாவது நீதிமன்றத்துல மனு போட்டு அதை வாங்கித்தரணும்” என்றான். குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். 'பணத்துக்காக உடலை விற்பவளைவிட, காசுக்காக அறிவைப்பயன்படுத்தி ஒரு குற்றவாளியை காக்கும் வழக்கறிஞர் செயல் கேவலமானது... இனி எக்காலத்திலும் உண்மையான வழக்குகளையே எடுத்து நடத்துவேன்' என உறுதியெடுத்துக்கொண்டார். சிறிது சிறிதாக வழக்குகளை குறைத்துக்கொண்டு இந்திய சுதந்திரப்போரில் பங்கேற்கும் முடிவெடுத்தார். காந்தியின் அஹிம்சை ஆயுதமே பிரிட்டிஷாரை விரட்டும் சக்தி மிக்கதாக மாறும் என பெரிதும் நம்பினார். காந்தியை நேரில் சந்தித்து அவரது பணிகளை ஏற்று நடத்தும் தளகர்த்தர்களில் ஒருவராகதன்னை ஆக்கிக்கொண்டார். ராஜாஜியின் சாதுர்யமான வாதங்கள் நடவடிக்கைகள் உறுதியான குணம் இவை காந்தியின் முதல்வரிசை தளகர்த்தராக அவரை உயர்த்தியது. 

1919 ல் ரவுலட் சட்டத்திற்கு எதிராக நடந்த இந்தியா தழுவிய பொது வேலைநிறுத்தம்தான் இந்தியாவில் காந்தியின் தலைமையின் கீழ் முழுமையான  நடந்த முதற்போராட்டம். சென்னையில் ராஜாஜியின் விருந்தினராக காந்தி வந்து தங்கியிருந்த சமயத்தில்தான் இந்த போராட்டத்தின் வியயூகங்கள் வகுக்கப்பட்டன என்பது வரலாறு. அப்போது காந்தியுடன் அவரது நான்காவது மகன் தேவதாஸ் காந்தியும் ராஜாஜி வீட்டிற்கு வந்திருந்தார். இதே காலகட்டத்தில் அகில இந்திய அரசியலுக்கு இந்தி மொழி அவசியம் என்பதை உணர்ந்து அதை கற்றுக்கொள்ள விரும்பினார் ராஜாஜி.  காந்தி டெல்லிதிரும்பியபோது தேவதாஸ் அவருடன் செல்லவில்லை. சில பணிகளுக்காக  சென்னையில் அவர் தொடர்ந்து தங்கினார். இதனால் தேவதாஸ் காந்தியிடமே இந்தி மொழியை கற்றார் ராஜாஜி. தொடர்ந்து இந்தி வகுப்புகளை நடத்தி தம் நண்பர்களுக்கும் இந்திமொழிப் பயிற்சி அளித்தார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் தேவதாஸ். இந்த காலகட்டத்தில் தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் புதல்வி லஷ்மிக்கும் ஒரு வித புரிதல் உண்டானது. படித்த, நல்ல விமர்சனப்பார்வையும், பலவிஷயங்களில் ஞானமும் பெற்ற தேவதாஸ் மீது லஷ்மி காதல் கொண்டார். இருவீட்டிலும் துணிந்து தங்கள் காதலை சொல்லி சம்மதம் கேட்டனர் காதலர்கள். 

காந்தி

ராஜாஜி, காந்தி இருவருக்குமே அதிர்ச்சி. தேச சேவையில் ஒன்றிணைந்து பணியாற்றிவரும் தங்களின் நட்புக்கு வந்த சோதனையாக இதை கருதினார் காந்தி. மகனின் மனதை மாற்ற முடியுமா என சில சோதனைகளை வைத்துப்பார்த்தார். தேவதாஸ் உறுதியாக நின்றார் தன் காதலில். ராஜாஜி வீட்டிலும் இதே நிலை. 

இருவரும் பேசி முடிவுக்கு வந்தனர். தங்கள் பிள்ளைகளை அழைத்த அவர்கள், “இருவரும் உங்கள் காதல் உண்மையானது என்றால் இன்றிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நீங்கள் சந்திக்கவோ கடிதப்போக்குவரத்தோ வைத்துக்கொள்ளக்கூடாது. நேர்மையுடன் இதை கடைபிடித்தால் உங்கள் திருமணத்தை நடத்திவைக்கிறோம்” என்றனர். நிபந்தனையை ஏற்று தத்தம் வேலைகளில் ஈடுபட்டனர் காதலர்கள். இந்த 5 ஆண்டுகளில் இருவரது மனமும் அதே மனநிலையில் இருந்தது. அவர்களது காதல் இன்னும் பலமாகியிருந்தது. உண்மையில் இந்த பிரிவு இருவரது மனதையும் மாற்றிவிடும் எனக் கணக்கிட்டே அப்படி ஓர் நிபந்தனையை விதித்தனர் ராஜாஜியும் காந்தியும். ஆனால் பிள்ளைகளின் உறுதி அவர்கள் மனதை கரைத்தது. திருமணத்திற்கு சம்மதித்தனர். 

1933 ம் ஆண்டு ஜ-ன் மாதம் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைமீண்டிருந்த காந்தி, பர்ணகுடியில் தங்கியிருந்தார். பல மாத சிறைவாசம் அவரது உடலை கரைத்திருந்தது.“சுதந்திரப்போராட்ட களத்தில் எதுவும் நடக்கலாம். அதனால் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஓர் முடிவெடுக்கவேண்டியது அவசியம். பாபுஜியின் சம்மதம் கேட்டுப்பெற்றால் நான் மகளை அழைத்துவருவேன். அங்கேயே திருமணம் நடத்திவிடலாம்” என ராஜாஜி கஸ்துாரிபாய்க்கு ஓர் கடிதம் எழுதினார்.  சில தினங்களில் ராஜாஜிக்கு நல்ல தகவல் கிடைத்தது.
பர்ணகுடியில் 1933 ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி லட்சுமி-தேவதாஸ் காந்தி திருமணம் நடைபெற்றது. திருமணம் மிக எளிமையாக நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் காந்தி. மணமகளின் தந்தை ராஜாஜிக்கு ஆன செலவு சென்னை - பர்ணக்குடி ரயில் டிக்கட் செலவு மட்டுமே. மருமகளுக்காக கஸ்துாரிபாய் 2 தங்க வளையல்களையும் 4 கதர்ப்புடவைகளையும் வாங்கிவைத்திருந்தார். காந்திஜியிடம் அதற்கு அனுமதிபெற அவர் படாதபாடுபடவேண்டியதானது. 

லட்சுமி

திருமணத்தில் கூட்டம் அதிகம் இருக்கக்கூடாது என்பதற்காக தன்னுடன் ஆசிரமத்திற்கு உதவியாக வந்தவர்களையும் திருப்பியனுப்பினார் காந்தி. தனக்கு நெருங்கியவர்களுக்குக்கூட தகவல் சொல்லவில்லை அவர். ஆனாலும் சீனிவாச சாஸ்திரி, தொழிலதிபர் ஜி.டி.பிர்லா, சரோஜினிதேவி உள்ளிட்ட சிலர் வந்திருந்தனர். கலப்பு திருமணம் என்றாலும் சாஸ்திரிய முறைப்படி திருமணம் நடந்தது. மணமக்கள் மாலைகளுக்கு பதிலாக நுால் மாலைகளை மாற்றிக்கொண்டனர். பரிசு எதையும் வழங்கக்கூடாது என கறாராக கூறினார் காந்தி. எல்லோரும் அதை ஏற்றனர். பிர்லா மட்டும் வற்புறுத்தவே அவர் அளித்த 4 பட்டுப்புடவைகளில் சாதாரணமான ஒன்றை ஏற்றுக்கொண்டார் காந்தி. சிறையில் இருந்ததால் நேருவும் பட்டேலும் திருமணத்திற்கு வர இயலவில்லை. அங்கிருந்தபடியே வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார்கள். தம்பதிகளுக்கு தன் கையால் நெய்த நுால்மாலையும் பகவத் கீதை புத்தகம் ஒன்றையும் பரிசளித்தார் காந்தி. 

அப்போது தன் காலில் விழுந்துவணங்கிய தம்பதிகளிடம் அசரீரி போன்று சில அறிவுரைகளை வழங்கினார் காந்தி. “இந்த திருமணத்தில் தர்மத்திற்கு விரோதமான எந்த காரியமும் நடக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். அப்படி அதர்மமான காரியமாக இதை நான் கருதினால் இந்த திருமணத்திற்கு வந்திருக்கவே மாட்டேன்.  தவத்தைப் போன்ற உங்களின் உறுதியாலும் ஒருவருக்கொருவர் கொண்ட அன்பினாலும்தான் எங்களது சம்மதத்தையும் ஆசியையும் பெற்றிருக்கிறீர்கள். கடவுளுக்கு அஞ்சி பணிவுடன் நடந்துகொள்ளுங்கள். எனக்கும் என் நண்பர் ராஸாஜிக்குமான நட்பு இதன்மூலம் இன்னும் மேன்மை அடையும்படி உங்கள் வாழ்க்கை இருக்கவேண்டும்” என்றார். 

பின்னர் மகனை நோக்கி, என் நண்பர் ராஜாஜியிடம் இருந்து அரியதொரு பொக்கிஷத்தை நீ பறித்துக்கொண்டாய். அந்த பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டியது இன்றுமுதல் உன் பொறுப்பு” என்றார். சுதந்திரப்போராட்டக் களத்தில் தளபதிகளாய் தோளோடு தோள் நின்று களப்பணியாற்றிய காந்தியும் ராஜாஜியும் எதிர்பாராதவிதமாக உறவுமுறை ஆனதில் அன்றையதினம் நெகிழ்ந்துபோய் காணப்பட்டனர் இருவரும்.  தன் மகன்களில் ஒருவருக்கு தமிழகத்தில்பெண் எடுத்தது குறித்து காந்தி ஒருமுறை “எதிர்பாராத நல்வினைப்பயனால் ஏற்பட்ட ஒன்று அது” என குறிப்பிட்டார். தம் மகனுக்கு பெண் எடுத்து தமிழகத்தின் சம்பந்தியானார் காந்தி.

காந்தி

பின்னாளில் தேவதாஸ் காந்தி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். இந்த தம்பதிக்கு ராம்சந்திர காந்தி, ராஜ்மோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, மற்றும் தாரா என நான்கு பிள்ளைகள். இவர்களில் கோபாலகிருஷ்ண காந்தி கடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக  நின்று வெற்றிவாய்ப்பை இழந்தவர்.

இந்தியா முழுமைக்குமான தேசத்தலைவராக இருந்தாலும் காந்திக்கு தமிழகத்தின் மீது எப்போதும் ஒரு கூடுதல் அன்பு இருந்ததுண்டு. 
1921 ம் ஆண்டு தமிழக சுற்றுப்பயணம் வந்த காந்தி, மதுரையிலிருந்து திருச்சிக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோதுதான் இந்தியர்கள் முழுமையாக உடை அணியும் நிலையில் கூட இல்லை என்பதை அறிந்தார். அதன்பிறகே பிற்காலத்தில் அவரது அடையாளமாகிப்போன அரை நிர்வாண உடையை அணியத்துவங்கினார். அவரது இறுதி ஆசைப்படி அவரது அஷ்தி, புனித நதிகளிலெல்லாம் கரைக்கப்படும் என அன்றைய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக்கரையருகில் 12.2.1948 அன்று அஸ்தி கரைக்கப்பட்டது.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person
 

*மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்..*
*************************

1. #மூலாதாரம்:- முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.

உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.

உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

2. #சுவாதிஷ்டானம்:- இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது.

பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.

மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது.

பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

3. #மணிபூரகம்:- நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு.

தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது.

உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது.

கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன.

கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

4. #அனாகதம்:- இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு.

மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது.

அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

5. #விசுத்தி:- இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது.

தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம்.

தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

6. #ஆக்கினை:- இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது.

தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது.

இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

7. #தூரியம்:- இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயருகள் உண்டு.

இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது.

இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது.

என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது.

பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

 
  • தொடங்கியவர்

 

உங்கள் கைகளை கழுவ நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரியுமா?

  • தொடங்கியவர்

பூமியில் எந்த இடத்திற்கும் ஒரு மணி நேரத்தில் செல்லலாம்... ஸ்பேஸ் எக்ஸின் ‘ஷேர் ராக்கெட்’! #BFR

 

ப்பிள் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை வெளியிடுவது போல, அடிக்கடி புதுப்புது ராக்கெட் மாடல்களையும், வியப்பூட்டும் திட்டங்களையும் வெளியிட்டு அசத்துவது எலான் மஸ்க்கின் வழக்கம். அப்படி, சமீபத்தில் நடந்த சர்வதேச ஆஸ்ட்ராநாட்டிக்கல் காங்கிரஸில் BFR எனப்படும் Big Falcon Rocket-ஐ அறிமுகம் செய்திருக்கிறார் மஸ்க். ராக்கெட் அறிமுகம் செய்ததோடு மட்டுமின்றி, அத்துடன் சில வியப்பூட்டும் அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

Big Falcon Rocket

இதுவரைக்கும் விண்வெளிக்கு செல்லவும், செயற்கைகோள்களை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தவும் மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருந்த ராக்கெட்கள் மூலம், பூமிக்குள்ளேயே பயணம் செய்யலாம் எனவும் அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் டெல்லியில் இருந்து சிட்னிக்கு வெறும் 36 நிமிடத்தில் (மணிக்கு 18,000 மைல் வேகத்தில்) சென்றுவிட முடியும். நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு வெறும் 29 நிமிடத்தில் சென்றுவிட முடியும். உலகின் எந்தவொரு இடத்திற்கும் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம். எப்படி இயங்கும் இந்த ராக்கெட்?

உதாரணமாக டெல்லியில் இருந்து சிட்னிக்கு ராக்கெட் செல்லவிருப்பதாக வைத்துக்கொள்வோம்.  முதலில், டெல்லி பயணிகள் ராக்கெட் ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கே இருந்து பயணிகள் ராக்கெட்டில் ஏற்றப்படுவார்கள். பின்னர் ராக்கெட் பறந்து சென்று, சிட்னியில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இறங்கும். வெறும் 36 நிமிடங்களில் இந்தப் பயணம் நடந்து முடிந்துவிடும். ஒரு விமான டிக்கெட் செலவுதான் இதற்கு ஆகும் என்கிறது ஸ்பேஸ் எக்ஸ். அது எப்படி சாத்தியமாகிறது?

ராக்கெட்டில் பூஸ்டர் மற்றும் ஸ்பேஸ் ஷிப் என இரண்டு பாகங்கள் இருக்கும். பூஸ்டர் பகுதியில்தான் இன்ஜின்கள் இருக்கும். ஸ்பேஸ் ஷிப் பகுதியில் மனிதர்கள் இருப்பார்கள். பூமியில் இருந்து ராக்கெட் கிளம்பியதும், இன்ஜின்கள் உந்துசக்தியை அளித்து ராக்கெட்டை மேலே பறக்க உதவி செய்யும். ராக்கெட் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பித்து சென்றதும், இந்த இன்ஜின்கள் தேவைப்படாது. எனவே அவை ஸ்பேஸ் ஷிப்பில் இருந்து பிரிந்து மீண்டும் ராக்கெட் கிளம்பிய இடத்திற்கே சென்றுவிடும். இதனை வீடியோவில் தெளிவாகக் காணலாம். பின்னர் ராக்கெட் ஸ்பேஸ் ஷிப் பூமியை சுற்றிவிட்டு, இறங்க வேண்டிய இடத்திற்கு வந்து சேரும். BFR ராக்கெட்டின் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று. இந்த வசதியையும் சில மாதங்களுக்கு முன்னர் Falcon 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது ஸ்பேஸ் எக்ஸ்.

இப்படி பூஸ்டர்களைத் திரும்பப் பெற முடிவதால், அடிக்கடி ராக்கெட்டுகளை புதிதாக ஏவ வேண்டிய அவசியம் இருக்காது. ஒரே ராக்கெட் மூலம் பல செயற்கை கோள்களை விண்வெளியில் ஏவ முடியும். செலவும் மிச்சம். இதுதான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ப்ளஸ். இதையே பூமிக்குள் ராக்கெட் விடும் திட்டத்திலும் பின்பற்றுவதால், குறைந்த செலவில் அந்நிறுவனத்தால் பயணங்களை ஏற்பாடு செய்ய முடியும். இதனால்தான் ஒரு விமான டிக்கெட் அளவிலான கட்டணத்திலேயே இந்த ராக்கெட் மூலம் பயணம் செய்ய முடியும் என்கிறார் மஸ்க். தற்போது இந்தத் திட்டம் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. இன்னும் சோதனைக்கு வரவில்லை. ஆனால் இன்னும் 6 முதல் 9 மாதங்களுக்குள் இதற்கான கட்டுமானப் பணிகளைத் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

Supporting the creation of a permanent, self-sustaining human presence on Mars. https://t.co/kCtBLPbSg8 pic.twitter.com/ra6hKsrOcG

— SpaceX (@SpaceX) September 29, 2017

இதேபோல, 2022-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றவிருப்பதாகக் கூறியிருந்தார் மஸ்க். அங்கே ஒரு காலனியை உருவாக்கி அதில் மனிதர்களை வசிக்க செய்ய திட்டமிருப்பதாகவும், முதல்கட்டமாக 100 பேரை அனுப்பவிருப்பதாகவும், அதற்கான டிக்கெட் விலை குறித்தும் அப்போது அறிவித்திருந்தார். இந்தமுறை அதனை உறுதி செய்திருக்கிறார் மஸ்க். தற்போது அறிமுகம் செய்திருக்கும் BFR ராக்கெட் மூலமாக 2024-ம் ஆண்டு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்போவதாகக் கூறியிருக்கிறார். செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதோடு மட்டுமின்றி, சர்வதேச விண்வெளி மையத்திற்கு பொருட்களை டோர் டெலிவரி செய்ய, செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப என பல்வேறு விஷயங்களுக்கு இந்த ராக்கெட்டை பயன்படுத்தலாம். மேலும், Interplanetary Transport System-ற்காக ஸ்பேஸ் எக்ஸ் எப்படி இந்த ராக்கெட்டை பயன்படுத்தவிருக்கிறது என்பதையும் விளக்கினார். 

ஸ்பேஸ் எக்ஸ் BFR ராக்கெட்

2022-ம் ஆண்டு இந்த ராக்கெட் மூலமாக இரண்டு கார்கோ ராக்கெட்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி சோதனை செய்யவிருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இத்துடன்  செவ்வாய் கிரகத்தின் தண்ணீர் வளம், எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான சாத்தியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும். பின்னர் 2024-ம் ஆண்டு இரண்டு கார்கோ ராக்கெட்களும், இரண்டு மனிதர்களை ஏற்றிச்செல்லும் ராக்கெட்களும் செவ்வாய்க்கு அனுப்பப்படும். கார்கோ ராக்கெட்டில் ஆராய்ச்சி மற்றும் மனிதர்களுக்கு தேவையான பொருள்கள் இருக்கும். மனிதர்கள் அங்கே இறங்கிய பின்னர் எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான உலைகள் நிறுவப்படும். பின்னர் மனிதர்களுக்கான இருப்பிடத்தை விரிவுபடுத்துவதற்கான பணிகளும் துவங்கும். பின்னர் அங்கே மனிதர்களுக்கான நகரம் நிர்மாணிக்கப்படும். 

இப்படி நம்பவே முடியாத விஷயங்களை எல்லாம் மஸ்க் அறிவிக்க, இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் இதற்கு சாத்தியமே இல்லை என்கிறார்கள் விண்வெளித் துறையைச் சேர்ந்த ஆர்வலர்கள். ஆனால், "சவாலான இந்தப் பணியை செய்துமுடிப்போம். இன்னும் ஐந்து வருடங்கள் இருக்கின்றன. எனக்கு இந்த அவகாசமே அதிகம்" என தைரியமாக தம்ப்ஸ் அப் காட்டுகிறார் மஸ்க்.

சொல்வது எலான் மஸ்க் என்பதால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

விகடன்

  • தொடங்கியவர்

1932 : பிரிட்­ட­னி­ட­மி­ருந்து ஈராக் சுதந்­திரம் பெற்­றது.

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 03

கி.மு. 2333: கொஜொ­சியோன் ராஜ்­ஜியம் டங்கூன் வாஞ்­சியோம் என்­ப­வரால் உரு­வாக்­கப்­பட்­டது. இந்த ராஜ்­ஜியம் தற்­போது கொரிய தீப­கற்­பம் என அழைக்­கப்­ப­டு­கி­றது.

1739 : 3 வரு­ட­கால ரஷ்ய – துருக்கி போரின் முடிவில் ரஷ்­யா­வுக்கும் ஒட்­டோமான் பேர­ர­சுக்கும் இடையில் சமா­தான ஒப்­பந்தம் ஏற்­பட்­டது.

1778 : பிரித்­தா­னி­யாவின் கெப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்­காவில் தரை­யி­றங்­கினார்.

1908 : பிராவ்டா செய்­திப்­பத்­தி­ரிகை லியோன் ட்ரொட்ஸ்­கி­யி­னாலும் அவ­ரின் சகாக்­க­ளி­னாலும் வியென்­னாவில் வெளி­யி­டப்­பட்­டது.

1912 பெஞ்­சமின் ஸெல்டென் தலை­மை­யி­லான நிக்­க­ர­குவா கிளர்ச்­சிப்­ப­டை­யி­னரை அமெ­ரிக்­கப்­
ப­டைகள் தோற்­க­டித்­தன.

1918 : மூன்றாம் போரிஸ் பல்­கே­ரி­யாவின் மன்­ன­னாக முடி­சூ­டினார்.

1929 : சேர்­பியா, குரோ­ஷியா, ஸ்லோவே­னியா இணைக்­கப்­பட்டு, அதற்கு யூகொஸ்­லா­விய இராச்­சியம் எனப் பெய­ரி­டப்­பட்­டது.

iraq.jpg1932 : பிரிட்­ட­னி­ட­மி­ருந்து ஈராக் சுதந்­திரம் பெற்­றது.

1935 : எதி­யோப்­பி­யாவை இத்­தாலி கைப்­பற்­றி­யது.

1949: அமெ­ரிக்­காவில் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்குச் சொந்­த­மான முத­லா­வது வானொலி ஜோர்­ஜியா மாநி­லத்தில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1952 : ஐக்­கிய இராச்­சியம் வெற்­றி­க­ர­மாக அணு­வா­யுதச் சோத­னையை நடத்­தி­யது.

1962 : சிக்மா – 7 விண்­கலம் வெற்­றி­க­ர­மாக ஏவப்­பட்­டது. வொல்லி ஷீரா 6 தடவைகள் பூமியைச் சுற்­றினார்.

1963: ஹொண்­டு­ராஸில் இராணுவப் புரட்சி ஆரம்­ப­மா­கி­யது.

1981 : வட அயர்­லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் “மேஸ்” சிறைச்­சா­லையில் ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணுவக் கைதி­களின் ஏழு மாத உண்­ணா­நோன்பு முடி­வுக்கு வந்­தது. இந்த உண்­ணா­வி­ர­தத்­தின்­போது 10 பேர் இறந்­தனர்.

1985 : அட்­லாண்டிஸ் விண்­வெளி ஓடம் தனது முத­லா­வது விண்­வெளிப் பய­ணத்தை ஆரம்­பித்­தது.

1990 : இரண்டாம் உலக யுத்­தத்தின் பின் பிரிந்த கிழக்கு, மேற்கு ஜேர்­ம­னிகள் மீண்டும் ஒன்­றாக இணைந்­தன.

1993 : சோமா­லி­யாவில் ஆயுதக் குழு­வொன்றை முறி­ய­டிப்­ப­தற்­கான முயற்­சியில் 18 அமெ­ரிக்கப் போர்­வீ­ரர்­களும் 1,000 சோமா­லி­யர்­களும் கொல்­லப்­பட்­டனர்.

1995: அமெ­ரிக்க கால்­பந்­தாட்ட வீரர் ஓ.ஜே.சிம்ஸன், தனது முன்னாள் மனைவி உட்­பட இரு­வரை கொலை செய்த வழக்கில் நிர­ப­ரா­தி­யென தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டார்.

2001 : பங்­க­ளா­தேஷின் நாடா­ளு­மன்றத் தேர்­தலில் பேகம் காலீதா சியாவின் பங்­க­ளாதேஷ் தேசியக் கட்சி வெற்றி பெற்­றது.

2009: அஸர்­பைஜான், கஸக்ஸ்தான், கிரி­கிஸ்தான், துருக்கி ஆகி­யன இணைந்து துர்கிக் கவுன்­ஸிலை ஸ்தாபிப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கையில் கையெ­ழுத்­திட்­டன.

2013: இத்­தா­லிக்கு அருகில் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களின் பட­கொன்று கவிழ்ந்­ததால் 134 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2013: பொது­ந­ல­வாய அமைப்­பி­லி­ருந்து காம்­பியா வில­கி­யது.

2015: ஆப்­கா­னிஸ்­தானின் குந்தூஸ் மாகா­ணத்தில் வைத்­தி­ய­சா­லை­யொன்றின் மீது அமெ­ரிக்கப் படை­யினர் தவ­று­த­லாக நடத்­திய வான் தாக்­கு­தலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

நியூ ஜெர்ஸி முதல் லாஸ் வேகாஸ் வரை... 68 வருடத்தில் அமெரிக்காவை உலுக்கிய 32 துப்பாக்கிச் சூடுகள் #USDeadliestGunShoots

 
 

அமெரிக்கா

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 64 வயது ஸ்டீபன் படோக் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில்  50க்கும் அதிகமானோர் இறந்தனர். மேலும் 516 பேர் காயமடைந்துள்ளனர். இன்னும் இறப்புகள் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தோடு சேர்த்து அமெரிக்காவில் கடந்த 1949 முதல் 68 வருடங்களில் 32 மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த கொடுமையான 32 நிகழ்வுகள் இதோ...

 

செப்டம்பர் 5, 1949

நியூஜெர்ஸியில் ஹோவர்டு எனும் 28 வயது இளைஞன் காம்டேன் பகுதியின் 32-வது தெருவில் துப்பாக்கியால் 13 பேரை சுட்டுக் கொன்றான். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்ட அவன் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டான். 

ஆகஸ்ட் 1, 1966

டெக்ஸாஸில் அமெரிக்க முன்னாள் கப்பற்படை வீரர் சார்லஸ் ஜோசப் வொயிட்மேன் என்பவர் டெக்ஸாஸ் பல்கலைக்கழக டவர் மீது இருந்து தாக்கி 16 பேரை கொன்றார். இந்த தாக்குதலுக்கு முன் தனது தாயையும், மனைவியையும் சுட்டுக் கொன்றுள்ளார். போலீஸ் அவரை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றது.

அமெரிக்கா

ஆகஸ்ட் 20, 1982

மியாமியில் கார்ல் ராபர்ட் ப்ரவுன் எனும் ஆசிரியர் மெஷின் ஷாப் தந்த பில் மீது உண்டான கோபம் காரணமாக அங்குள்ள 8 பேரை சுட்டுக் கொன்றார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செப்டம்பர் 25, 1982

பென்சில்வானியாவில் 40 வயது ஜார்ஜ் பேன்க்ஸ் எனும் சிறை பாதுகாவலர் தனது ஐந்து குழந்தைகள் உட்பட 13 பேரை சுட்டுக் கொன்றார். மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது மரண தண்டனையை 2011ல் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நீடித்தது.

பிப்ரவரி 18, 1983

சியாட்டில் பகுதியில் உள்ள க்ளப்பில் நுழைந்த மூன்று பேர் 13 பேரை தலையில் சுட்டுக் கொன்றனர். கொலையை செய்த ஃபாய் மாக், பெஞ்சமின் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றவாளி டோனி வேறு வழக்கிலும் தொடர்புடையதால் 2014ல் ஹாங்காங் சிறைக்கு மாற்றப்பட்டார்.

ஜூலை 18, 1984

கலிஃபோர்னியாவில் 41 வயதுமிக்க ஜேம்ஸ் ஹுபெர்டி 21 பேரை சுட்டுக் கொன்றார். அங்கு வந்த போலீஸ் அதிகாரிகளால் அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

ஆகஸ்ட் 20, 1986

ஒக்லஹோமாவில் பகுதிநேர கொரியர்க்காரராக பணிபுரிந்து வந்த ஹென்றி ஷெரில் 3 துப்பாக்கிகளால் 14 தபால் ஊழியர்களை சுட்டு வீழ்த்திவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டார்.

செப்டம்பர் 14,1989


கென்டகியில் 47 வயது ஜோசப் வெஸ்பெக்கர் என்பவர் நவீன ரக துப்பாக்கிகளுடன் ஸ்டான்டர்ட் க்ராவ்யூர் கார்ப்பரேஷனில் நுழைந்து 8 பேரை சுட்டு தானும் சுட்டுக்கொண்டு இறந்தார். விசாரணையில் அவர் மனநல பிரச்னை காரணமாக விடுப்பில் இருந்து வந்தது தெரியவந்தது.

ஜூன் 18, 1990

ஃப்ளோரிடாவில் ஜேம்ஸ் போக் என்பவர் கடனை திரும்ப செலுத்தாததால் அவரது காரை திரும்ப பெற்ற ஜெனரல் மோட்டார்ஸுக்குள் நுழைந்து 9 பேரைக் கொன்றார். அவரும் தற்கொலை செய்துகொண்டார். 

ஆகஸ்ட் 10, 1991

அரிசோனாவில் உள்ள புத்தர் கோவிலில் 6 துறவிகள் உட்பட 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். சில நாள்களுக்குப் பிறகு ஜோனாதன் டோடி, கார்சியா எனும் 16 வயது சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

அக்டோபர் 16, 1991

டெக்ஸாஸில் 35 வயது ஜார்ஜ் ஹென்னார்டு என்பவர் லூபி காபி ஷாப்பில் தனது வாகனத்தை மோதிவிட்டு உள்ளே சென்று 23 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தானும் தற்கொலை செய்துகொண்டார்.

ஜூலை 1, 1993

சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் கியான் ஃபெரி என்பவர் சட்ட அலுவலகத்தில் 8 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்டார்.

அமெரிக்கா

ஏப்ரல் 20, 1999

லிட்டில்டானில் உள்ள பள்ளியில் 8 வயது எரிக் ஹாரிஸ் எனும் சிறுவனும், 17 வயது டைலன் எனும் சிறுவனும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 12 சக மாணவர்கள், ஒரு ஆசிரியை என 13 பேரை சுட்டுக்கொன்றனர்.

ஜூலை 29, 1999

அட்லாண்டாவில் 44 வயது மார்க் பார்டன் என்பவர் மனைவி, 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு அதே தெருவில் உள்ள 9 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்டார்.

மார்ச் 21, 2005

ரெட் லேக் பள்ளியில் 16 வயது சிறுவன் ஜெஃப் தனது தாத்தா, 5 மாணவர்கள், ஆசிரியர், பாதுகாப்பு அதிகாரி என 9 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டான்.

ஏப்ரல் 16, 2007

விர்ஜினியாவில் 23 வயது செங் ஹூய் சோ எனும் மாணவர் 32 பேரை கல்லூரி வளாகத்தில் சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார்.

டிசம்பர் 5, 2007

ஒமஹா பகுதியில் 19 வயது ராபர்ட் ஹாக்கின்ஸ் என்பவர் ஷாப்பிங் மாலில் நுழைந்து 8 பேரை சுட்டு வீழ்த்தி தற்கொலை செய்துகொண்டார்.

மார்ச் 10, 2009

அலபாமாவில் மைக்கேல் மெக்லென்டன் என்பவர் தனது தாய் உட்பட 10 பேரை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மார்ச் 29, 2009

வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ராபர்ட் ஸ்டுவர்ட் ஒரு நர்ஸ் மற்றும், 7 நோயாளிகளை மருத்துவமனையில் சுட்டுக்கொன்றார். அவருக்கு 179 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 3, 2009

நியூயார்க்கில் உள்ள புலம் பெயர்ந்தவர்களுக்கான சமுதாயக்கூடத்தில் 13 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார் வோங்.

நவம்பர் 5, 2009

டெக்ஸாஸில் நிடால் மாலிக் ஹசன் என்பவர் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

அமெரிக்கா

ஜனவரி 19, 2010

விர்ஜினியாவில் உள்ள கிறிஸ்டோபர் என்பவர் தனது வீட்டுக்கு அருகில் 8 பேரை சுட்டுக்கொன்று போலீஸில் சரணடைந்தார். அவருக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 18 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 3, 2010

மான்செஸ்டரில் த்ரான்டன் என்பவர் அங்குள்ள ஹர்ட்போர்டு நிறுவனத்தில் மதுபான பாட்டில்களை திருடி விற்றதற்காக வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த த்ரான்டன் 8 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார்.

அக்டோபர் 12, 2011

8 பேரை கலிஃபோர்னியாவில் உள்ள சீல் பீச்சில் சுட்டுக் கொன்றுள்ளார் டெக்ராய் . அவரைக் கைதுசெய்து 2014ல் குற்றவாளி என உறுதி செய்துள்ளனர்.

ஜூலை 20, 2012

அரோராவில் பேட்மேன் படம் திரையிட்ட அரங்கில் ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் என்பவர் புகுந்து 12 பேரை சுட்டுக் கொன்றார். அவருக்கு பரோலில் வர முடியாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

டிசம்பர் 14, 2012

நியூ டவுனில் உள்ள பள்ளியில் உள்ள ஆறு வயது குழந்தைகள் 20 பேரை சுட்டுக் கொன்றான் ஆடம் லான்சா. அதோடு பள்ளி ஊழியர்கள் ஆறு பேரையும், அதற்கு முன் தனது தாயையும் சுட்டுக் கொன்றுள்ளான்.

செப்டம்பர் 16, 2013

வாஷிங்டன் கப்பல் தளத்தில் 34 வயதான ஆரோன் 12 பேரை சுட்டுக் கொன்றான். கப்பற்படையால் அவனும் சுட்டு வீழ்த்தப்பட்டான்.

அமெரிக்கா

ஜூன் 17, 2015

தெற்கு கலிஃபோர்னியாவில் 21 வயதான டைலான் ரூஃப் எனும் சிறுவன் தொடர் கொலைகளைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு 9 பேரைக் கொன்றான். அவனுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர்1, 2015

கிரிஸ்டோபர் சீன் ஹார்பர் என்பவர் கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து 9 பேரை சுட்டுக் கொன்றுள்ளார். அவரை போலீஸ் சுட்டு வீழ்த்தியுள்ளது.

டிசம்பர் 2, 2015

திருமணமான தம்பதியினர் சையத் ரிஸ்வான் ஃபாருக் மற்றும் டஷ்ஃபீன் மாலிக் பணியாளர்கள் சந்திப்பில் துப்பாக்கியால் 14 பேரை சுட்டுக் கொன்றனர்.

ஜூன் 12, 2016

ஒமர் சாதிக் மாடீன் எனும் 29 வயது நபர் ஓர்லாண்டோவில் இரவு விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதில் 49 பேர் உயிரிழந்தனர். மாடீனையும் போலீஸ் சுட்டு வீழ்த்தியது. 

அக்டோபர் 2, 2017

லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 64 வயதான ஸ்டீபன் படாக் எனும் முதியவர் 50க்கும் அதிகமானோரை சரமாரியாக சுட்டு வீழ்த்தினார். இசை நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்து இந்த தாக்குதலை 10 துப்பாகிகளை கொண்டு நடத்தியுள்ளார். போலீஸ் அறையை அடைவதற்கு முன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதான் அமெரிக்க துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் மிக மோசமானதாக பதிவாகியுள்ளது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 இருண்ட கண்டத்தின் ஒளி விளக்கு!

 

 
gravity%20lamp

எடை மெஷின் போன்ற ஒரு அமைப்பில் எடையை ஏற்றியதும் விளக்கு எரியும் அதிசயத்தைப் பார்த்திருக்கிறீர்களா?கென்யாவில் மார்ட்டின், ஜிம் என்ற இரு விஞ்ஞானிகள் இந்த அதிசயத்தைத் தினமும் செய்துக்காட்டுகிறார்கள். புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி, இந்த விளக்கை இவர்கள் எரிய வைக்கிறார்கள். ‘கிராவிட்டி லாம்ப்’ என்றழைக்கப்படும் இது ஆப்பிரிக்காவில் இப்போது புகழ்பெற்றுவருகிறது.

வயர்கள் இல்லாமல் தானாக சார்ஜ் ஆகும் தானியங்கி உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதே உலகில்தான் சுமார் 100 கோடி மக்கள் மின் வசதி சரிவர இல்லாமல் வாழ்ந்துவருகிறார்கள். குறிப்பாக ஆப்பிரிக்காவில் இந்த நிலை அதிகம். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று விஞ்ஞானிகள் மார்டினும் ஜிம்மும் விரும்பினார்கள். ‘கிராவிட்டி லாம்ப்’ என்ற பெயரில் புவியீர்ப்பு விளக்கை உருவாக்கும் முயற்சியில் குதித்தனர். நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டில் தங்கள் ஆராய்ச்சியை இவர்கள் தொடங்கினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆராய்ச்சியில் இவர்கள் வெற்றியும் பெற்றனர். 2014-ம் ஆண்டில் முதல் முறையாக இந்த விளக்கை கென்யாவில் அறிமுகப்படுத்தினர். இந்த புவியீர்ப்பு விளக்கை அவர்கள் அறிமுகப்படுத்தியபோது ஒட்டுமொத்த ஆப்பிரிக்க அறிவியல் உலகமும் மூக்கில் விரல் வைத்தது.

அதுசரி, அதென்ன கிராவிட்டி லாம்ப்? மண்ணெண்னெய் விளக்குகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தும் மாற்று விளக்கு இது. 6 அடி உயரத்தில் புவியீர்ப்பு லைட்டைப் பொருத்திகொள்ள வேண்டும். அதோடு சேர்ந்து இழுக்க ஒரு சக்கரத்தையும் கயிறையும் கட்டிவிட வேண்டும். இதன் அடியில் இரு பைகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் பையில் சுமார் 12 கிலோ எடை உள்ள பொருட்களை வைக்க வேண்டும். இதில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதால், அதன் உதவியுடன் எடையை மேலே இழுக்கலாம். எடை மேலே சென்றதும், விளக்கு எரியும். எடை மேலே இருக்கும்வரை சுமார் 20-30 நிமிடங்கள் விளக்கு தொடர்ந்து எரியும்.

எடை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வந்ததும் விளக்கு அணைந்துவிடும். எடையை மீண்டும் மேலே இழுத்தால் விளக்கு எரியும். மின்சார உதவியின்றி, புவியீர்ப்பு விசையின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த விளக்கு எரிய வைக்கப்படுவதால், கென்யாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்கா முழுவதும் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை மண்ணெண்னெய் விளக்கு வெளிச்சத்தில் இரவைக் கழித்த ஆப்பிரிக்க மக்களுக்கு இது வரப்பிரசாதமாகவும் அமைந்துவிட்டது. மின் வசதி முழுமையாக இல்லாத வளரும் நாடுகளில் எல்லாம் இந்த கிராவிட்டி விளக்கைக் கொண்டு செல்லும் முயற்சியில் இரு விஞ்ஞானிகளும் தற்போது ஈடுபட்டுள்ளார்கள்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் (அக்.3 -1990)

 

ஜெர்மனி அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு என்பது ஐரோப்பாவின் நடுவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்த ஜெர்மனி நாடு பத்தாம் நூற்றாண்டில் (கி.பி. 962) புனித ரோமானிய பேரரசால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

 
மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் (அக்.3 -1990)
 
ஜெர்மனி அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு என்பது ஐரோப்பாவின் நடுவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்த ஜெர்மனி நாடு பத்தாம் நூற்றாண்டில் (கி.பி. 962) புனித ரோமானிய பேரரசால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

பின்னர் ஜெர்மனை ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லர் 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாவது உலகப் போரில் தோல்வி கண்டார். பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார். நேச நாடுகளிடம் ஜெர்மனி சரண் அடைந்தது.

ஜெர்மனியை நேச நாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது. மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க ஆதரவு அரசாங்கமும், கிழக்கு ஜெர்மனியில் ரஷிய ஆதரவு அரசாங்கமும் அமைக்கப்பட்டன. பெர்லின் நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1950-ம் ஆண்டில், கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஏராளமான பேர் மேற்கு ஜெர்மனிக்கு அகதிகளாக குடியேறினார்கள். அகதிகள் போவதற்கு பெர்லின் நகரம்தான் வழியாகப் பயன்பட்டது. எனவே, அகதிகள் போவதை தடுக்க பெர்லின் நகரில் பெரிய சுவர் ஒன்றை கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் அமைத்தது. அதுவே இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையானது. அது "பெர்லின் சுவர்" என்று அழைக்கப்பட்டது.
 
அமெரிக்காவின் உதவியுடன் மேற்கு பெர்லின் நகரம் புதுப்பிக்கப்பட்டது. சுமார் 45 ஆண்டு காலம் இரு ஜெர்மனிகளும் பிரிந்தே இருந்தன. இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனி மக்கள் உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்களாகவே இருந்தனர். ஆகையால், அவர்கள் ஒன்றாக இணைய பல்வேறு போராட்டங்களை நடத்த தொடங்கினர்.

இந்நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் ஜெர்மனியில் இணைப்பு கோரிக்கை வலுப்பெற்றது. 1989 அக்டோபர் மாதம், இணைப்பு கோரிக்கை மாபெரும் போராட்டமாக வெடித்தது. ரஷிய அதிபர் கார்பசேவும் இணைப்பு முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டினார்.

இதனை தொடர்ந்து இரு நாடுகளும் இணைய ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டு ஜெர்மனிகளையும் ஒன்றாக இணைப்பது என்று 1990-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. பிரிவினையின் அடையாளமாக காட்சி அளித்த பெர்லின் சுவரை அப்போது மக்கள் இடித்துத்தள்ளினர்.
 
ஒப்பந்தத்தின்படி 1990-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி இரு ஜெர்மனிகளும் ஒரே நாடாக இணைந்தன. அக்டோபர் 2-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு தேவாலய மணிகள் முழங்க பட்டாசுகள் வெடிக்க இரு நாடுகளும் இணைந்தன. 8 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனி இன்று உலகின் வல்லரசுகளில் ஒன்றாக திகழ்கிறது.

http://www.maalaimalar.com

 

Bild könnte enthalten: Auto

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.