Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12,000 டாலருக்கு ஏலம்போன சர்ச்சில் புகைத்த சுருட்டுத்துண்டு

12,000 டாலருக்கு ஏலம்போன சர்ச்சில் புகைத்த சுருட்டுத்துண்டுபடத்தின் காப்புரிமைRR AUCTION

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முன்பு புகைத்த ஒரு சுருட்டுத்துண்டு சுமார் 12,000 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக போஸ்டனை மையாக கொண்டு இயங்கும் ஆர் ஆர் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது இந்திய மதிப்பில் சுமார் 7.76 லட்ச ரூபாய் ஆகும்.

1947 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி பாரிஸில் உள்ள ல பொர்ஷே விமான நிலையத்திலில் சர்ச்சில் இருந்தபோது, இந்த சுருட்டை புகைத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு ஃபுளோரிடாவின் பால்ம் பீச்சை சேர்ந்த ஒரு சேகரிப்பாளருக்கு இந்த சுருட்டு விற்கப்பட்டது. சேகரிப்பாளரின் பெயர் வெளியிடப்படவில்லை.

பாதி புகைக்கப்பட்ட சர்ச்சலின் சுருட்டை பிரிட்டனை சேர்ந்த ஒரு விமானப் பணியாளர் வைத்திருந்தார். அவர், சர்ச்சில் மற்றும் அவரது மனைவியை பாரிஸிலிருந்து அழைத்து சென்று, திரும்ப அழைத்துவந்தார்.

12,000 டாலருக்கு ஏலம்போன சர்ச்சில் புகைத்த சுருட்டுத்துண்டுபடத்தின் காப்புரிமைRR AUCTION

சுருட்டில் வின்ஸ்டன் சர்ச்சிலின் முழுப்பெயர் இடம்பெற்றிருக்க அதன் அருகே ஒரு சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான லா கோரோனா என்ற சுருட்டு நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றிருக்கும். ராணுவ அதிகாரி கார்ப்பொரல் ஆலன் டர்னர் கியூபா நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த சுருட்டை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

சர்ச்சிலின் சுருட்டுடன் விமான பணியாளர் எடுத்திருந்த புகைப்படமும் இருந்தது. '1947 ஆம் ஆண்டு மே11 அன்று நார்ஹோல்டிற்கு பறப்பதற்குமுன், லா பொர்ஷே விமான நிலையத்தில் யோர்க் எம்டபிள்யு101 விமானத்தின் வாயிற்படியிலிருந்தபடி நான் எடுத்த புகைப்படம்,'' என்று அதில் பென்சிலால் எழுதப்பட்ட ஒரு சிறுகுறிப்பு இடம்பெற்றிருந்தது.

ஆர் ஆர் ஏல நிறுவனத்தின் துணைத் தலைவரான பாபி லிவிங்ஸ்டன், ''இந்த பொருள் சர்ச்சிலின் தனித்துவமான அடையாளத்தின் மிக நெருக்கமாக தொடர்புடையது'' என்றார்.

2015 ஆம் ஆண்டில், பிரிட்டனில் உள்ள ஒரு ஏல நிறுவனம், சர்ச்சில் பயன்படுத்திய மெல்லப்பட்ட சுருட்டுத்துண்டை சுமார் 2,000 பவுண்டுகளுக்கு விற்றுள்ளது.

http://www.bbc.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மும்பைக்கு ஒரு புகைப்பட கலைஞரின் காதல் கடிதங்கள் (படத்தொகுப்பு)

1977 ஆம் ஆண்டு மும்பையின் மெரின் ்ஹரைவில் ஓர் ஒட்டகப் பயணம்படத்தின் காப்புரிமைSOONI TARAPOREVALA Image caption1977 ஆம் ஆண்டு மும்பையின் மெரின் டிரைவில் ஓர் ஒட்டகப் பயணம்.

சோனி தாராப்பூர்வாலா ஒரு முன்னணி இந்திய புகைப்படக்கலைஞர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

‘மிசிசிப்பி மசாலா‘, ‘த நேம்ஸ்சேக்‘, மற்றும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சலாம் பாம்பே‘, போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதி பிரபலமாக அறியப்படுகிறார். தேசிய விருது வென்ற ‘லிட்டில் ஸிஸௌ‘ என்ற திரைப்படத்தை அவர் இயக்கியும் இருக்கிறார்.

அவர் வளர்ந்த மும்பை நகரத்தை தாராப்பூர்வாலா 1977 ஆம் ஆண்டிலிருந்து புகைப்படம் எடுத்து வந்துள்ளார்.

இவருடைய புகைப்படங்கள் வித்தியாசமான மற்றும் அன்றாட நடவடிக்கைகளை பதிவு செய்து, இந்தியாவில் பன்முக தன்மையோடு விளக்கும் நகரங்களில் ஒன்றான மும்பையின் சமூக வரலாற்றிற்கு முக்கிய பங்காற்றுகின்றன.

அவருடைய புகைப்படங்கள் வகுப்பு மற்றும் சமூக எல்லைகளை கடந்து, அந்நகரத்தில் வாழும் ஒருவரின் நேசமிக்க பார்வையை காட்டுகிறது. உலகிலேயே அதிக மக்கள் வாழும் பல நகரங்களில் ஒன்றான மும்பையை அவருடைய புகைப்படங்கள் கண்டுணர உதவுகின்றன.

மும்பையில் நடத்தப்படவிருக்கும் கண்காட்சியில், காட்சிக்கு வைக்கப்படும் படங்கள், இந்நகரத்தின் விசித்திரமான மனிதர்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோரை அந்த நில அமைப்பிலேயே காட்டும் ஒரு தனிப்பட்ட ஆவணம். ஓர் எளிய பார்வையாளரின் நோக்கில் மும்பையின் பண்பாடு மற்றும் அரசியலைக் காட்டும் கண்ணாடியாக உள்ளன இப்படங்கள்.

 

1987 ஆம் ஆண்டில் மும்மைபயில் ‘த பெர்பெக்ட் மர்டர்‘, படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்கள் லிலிப்புட் (இடது) மற்றும் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்

1987 ஆம் ஆண்டில் ஒரு படத்தின் தொகுப்பில் நடிகர்கள் லிலிப்புட் (இடது) மற்றும் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்.

Gun battle at Cusrow Baug, Bombay 1985

ஜெபக்கூடம், 2012

 

மெரின் டிரைவில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் பார்வையாளர்கள்

மெரின் டிரைவில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் பார்வையாளர்கள், 2005.

ஜூஹூ விமான நிலையத்தில் படுக்கைவிரிப்பில் அமர்ந்திருக்கும் பாதுகாப்பு பணியாளர், 1982.

ஜூஹூ விமான நிலையத்தில் கயிற்று கட்டிலில் அமர்ந்திருக்கும் பாதுகாப்பு பணியாளர், 1982

1987 ஆம் ஆண்டு ‘த பெர்பெக்ட் மேடர்‘ திரைப்படம் காட்சிப்படுத்தப்படும் இடத்தில்.

திரைப்படம் எடுக்கும் இடத்தில், 1987.

'சலாம் பாம்பே' படத்தின் பயிற்சியின்போது, கண் கட்டப்பட்ட நிலையில் நடிகர் சர்ஃபு மற்றும் இர்ஃபான் கான்

நடிகர் சர்ஃபு மற்றும் இர்ஃபான் கான் (வலது) ஆகியோர் ‘சலாம் பாம்பே‘ படத்தின் பயிற்சியின்போது, 1987.

மும்பையிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து ஓவியர் எம்எஃப் ஹுசைனின் படங்கள் வரைந்து வந்தார்.

இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவரான எம்எஃப் ஹுசைன், மும்பையில் உள்ள தமது வீட்டில், 2005. ஜூன் 2011 இல் அவர் இறந்தார்.

 

மும்மையில் கடற்கரையில் நிற்கும்போது பெருங்கடலை பார்வையிடும் சிறுமி.

கடற்கரையில் நிற்கும்போது பெருங்கடலை பார்வையிடும் சிறுமி.

இந்து மத பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்போது சிரித்து கொண்டிருக்கும் ஆண்கள்.

இந்து மத பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்போது சிரித்து கொண்டிருக்கும் ஆண்கள், 2016

 

ஒரு படப்பிடிப்பு இடத்தில் நசருதீன் ஷா (இடது) மற்றும் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்.

1987 ஆம் ஆண்டு ஒரு படப்பிடிப்பு இடத்தில் நசருதீன் ஷா (இடது) மற்றும் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்

1985 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஒரு பட சுவரொட்டி.

1985 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஒரு பட சுவரொட்டி.

1986 ஆம் ஆண்டு மெட்ரோ சினிமாவில் ஜான்பாஸின் திரைப்படத்தின் முன்னனோட்டத்திற்கு கடற்படை இசைக்குழுவின் நிகழ்ச்சி.

1986 ஆம் ஆண்டு மெட்ரோ சினிமாவில் ஜான்பாஸ் திரைப்படத்தின் முன்னனோட்டத்திற்கு முன்பு கடற்படை இசைக்குழுவின் நிகழ்ச்சி

 

ஜான்பாஸின் பட முன்னோட்டத்திற்கு வந்திருந்த நடிகர் ராஜ் கபூரை வெறித்து பார்க்கும் ரசிகர்கள்.

ஜான்பாஸ் பட முன்னோட்டத்திற்கு வந்திருந்த நடிகர் ராஜ் கபூரை பார்க்கும் ரசிகர்கள்

http://www.bbc.com

 

  • தொடங்கியவர்

வெளியானது 'மேயாத மான்' திரைப்பட ட்ரெய்லர்!

 
 

மேயாத மான்

'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ஸ்டோன் பென்ச்' சார்பாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'.  ரத்தின குமார் இயக்கிய 'மது' என்கிற குறும்படத்தைத்தான் தற்போது அவர் 'மேயாத மான்' என்கிற திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வைபவ் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன்னால் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. 'மேயாத மான்' வரும் தீபாவளி முதல் திரைக்கு வருகிறது. 

 

 

 

 
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Bart und Text

 

  • தொடங்கியவர்

ஜிமிக்கி கம்மலை அடகுவெச்சு ரேஸுக்கு வந்தேன்! - இலக்கியா

 

 

`ஸ்பீடு அப்’ டீமைச் சேர்ந்த ரெஹானா ரியா, தான் கலந்துகொண்ட முதல் ரேஸிலேயே முதல் பரிசு தட்டினார் என்றால், இலக்கியாவும் கிட்டத்தட்ட அதே ரகம்தான். ரேஸிங் ஃபீல்டில் நுழைந்து நான்கு மாதங்கள்கூட நிறையவில்லை; நான்கு ரேஸ்கள்கூட முழுசாக முடியவில்லை. முதல் ரேஸில் க்ராஷ்; இரண்டாவது ரேஸில் ஏழாவது; மூன்றாவது ரேஸில் மூன்றாவது எனப் படிப்படியாக போடியம் ஏறிவிட்டார் இலக்கியா.

இருங்காட்டுக்கோட்டையில் நடந்த ஆல் கேர்ள்ஸ் ஹோண்டா ரேஸில் ‘மூன்றாவது இடம் இலக்கியா’ என்று அறிவித்ததும் வெற்றிக்களிப்பெல்லாம் கொள்ளவில்லை இலக்கியா. ``அடுத்த ரவுண்ட்ல ஃபர்ஸ்ட் வந்துடணும்... என்ன?’’ என்று கட்டளையிட்ட தனது ட்ரெய்னர் ஜார்ஜிடம், ``செகண்டுக்கு ஜஸ்ட் மிஸ்ணா... ‘S’ பெண்டுல அவுட் ஆஃப் தி ட்ராக் போயிட்டேன்...’’ என்று பள்ளி மாணவிபோல் பம்மிவிட்டு, தனது ஹோண்டா சிபிஆரை நிறுத்திவிட்டு வந்தார் இலக்கியா.

82p1.jpg

சென்னையைச் சேர்ந்த இலக்கியா, ரேஸுக்கு வந்த கதையைக் கேட்டால், ‘இந்தச் சின்னப் பொண்ணுக்குள்ள என்னா வைராக்கியம் பாரேன்’ என்று கண்ணீரும்விடத் தோன்றும்; காமெடியாகவும் டீல் செய்யத் தோன்றும். ``உண்மையிலேயே நான் வைராக்கியம் நிறைஞ்ச பொண்ணுதான்ணா! நான் கோபக்காரியும் காமெடி பீஸும்தான்!’’ என்று ‘வ்வ்ர்ர்ரூம்’ பைக் சத்தங்களுக்கு மத்தியில் இலக்கியமாகப் பேசினார் 20 வயது இலக்கியா.
82p2.jpg
``6-ம் வகுப்பு படிக்கும்போதுதான் எனக்கு பைக் மேல ரொம்ப ஆசை வந்துச்சு. எங்க வீட்ல R15, ஆக்டிவா, பல்ஸர்னு கிட்டத்தட்ட ஆறு பைக்குகள் வெச்சிருக்கோம். என்னைப் பொறுத்தவரை எல்லாமே வேடிக்கை பார்க்க மட்டும்தான். ‘அண்ணா மட்டும் பைக் ஓட்டுறான். நானும் ஓட்டுவேன்’ என்று இலக்கியா 11-வது வயதில் அப்பாவிடம் தன் ஆசையைச் சொன்னபோது, ‘பொம்பளைப் புள்ளையா கம்முனு இரு; பைக்கைத் தொட்டா கையை உடைச்சுடுவேன்’ என்று அம்மாவிடமிருந்து வழக்கம்போல் எதிர்ப்புதான் வந்தது. அப்புறம் அப்பாகிட்ட கெஞ்சித்தான் பைக்கை எடுத்தேன். ‘நீ கியர் போடு செல்லம்’னு ஃபர்ஸ்ட் கியர் போட்டு பைக் ஓட்டுற வரைக்கும் அப்பா கூடவே வருவாரு. அப்பான்னா சும்மாவா? விளையாட்டா பைக் ஓட்ட ஆரம்பிச்ச நான், இப்போ ரேஸ் ட்ராக்ல பைக்கை முறுக்கும்போது அப்பாதான் முன்னால தெரிவார்!’’ என்று சொல்லும் இலக்கியாவுக்கு, ரேஸ் ஆர்வம் துளிர்விட்டதும் விளையாட்டான விஷயம்தான்.

82p3.jpg

``நான் ஃபேஸ்புக்ல அக்கவுன்ட் வெச்சிருக்கேன். என்கிட்ட ஒரு பழக்கம். யார் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தாலும் அக்செப்ட் பண்ணிடுவேன். ஒரு தடவை அரவிந்த்னு ஒரு அண்ணா, ரெக்வெஸ்ட் அனுப்பியிருந்தாங்க. அக்செப்ட் பண்ணிட்டு, அவங்க பேஜுக்குள்ள போய்ப் பார்த்தேன். அவங்க ரேஸர்போல. அந்த ரேஸிங் சூட் செமையா இருந்துச்சு. ‘சூப்பரா இருக்கு’னு நானும் கமென்ட் பண்ணினேன். ‘நாமளும் இதைப் போட்டா என்ன’னு ஆசை வந்துச்சு. ஆனா, அதுக்கு ரேஸர் ஆகணும்; பைக் நல்லா ஓட்டத் தெரிஞ்சிருக்கணும்ங்கிற விஷயம் தெரிஞ்சதும், களத்துல இறங்க ஆரம்பிச்சேன்.

அப்பாகிட்ட சொன்னப்போ, வழக்கமா எதிர்ப்பே தெரிவிக்காத அப்பா, ‘அடி பிச்சுடுவேன்’னு மிரட்ட ஆரம்பிச்சுட்டார். அம்மாவும் அண்ணாவும் இதுக்கு சப்போர்ட். ‘நாம ஒண்ணும் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைங்க இல்லை. ஒழுங்கா வீட்ல கிட’னு செம திட்டு. சரி; காலம் கனியட்டும்னு காத்திருந்தேன். யாரும் ஒப்புக்கலை. நான் ரேஸ்ல நுழையுறதுக்குக் காரணமே ரெஹானா அக்கா, சிண்டி அக்கா, ஆண்டி அண்ணாதான். சிண்டி அக்கா என்னை மாதிரி ஏழைப் பொண்ணுங்களுக்கு ட்ரெய்னிங் கொடுக்கிறதா கேள்விப்பட்டு, அவங்களுக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தேன். அவங்களோட ‘AS’ அகாடமியில சேரச் சொன்னாங்க. 6,500 ரூபாய் தேவைப்பட்டுச்சு. அப்பாகிட்ட கேட்டேன். ‘கையில காசு இல்லை. சும்மா கிட’னு சொல்லிட்டார். அம்மாவுக்குத் தெரிஞ்சு அவங்களும் டென்ஷன். சிண்டி அக்கா தொகையைக் குறைச்சுக்கிட்டாங்க. 3,500 இருந்தா போதும்னு சொன்னாங்க. கையில இருக்கிற மோதிரம், காதுல கிடந்த ஜிமிக்கி, கம்மல்னு எல்லாத்தையும் அடகு வெச்சேன். 3,000 ரூபாய் வந்துச்சு. வீட்டுக்குத் தெரியாம இதையெல்லாம் அடகு வெச்சுத்தான் அகாடமியில சேர்ந்து சர்ட்டிஃபிகேட் வாங்கினேன். இன்னும்கூட அதை மீட்டலை. பாருங்க!’’ என்று வெறும் கை, காதுகளை அப்பாவியாகக் காண்பித்தார் இலக்கியா.

82p4.jpg

அப்புறம் அடகு விஷயம் வீட்டுக்குத் தெரிந்து பரேடு வாங்கியது... அண்ணனின் R15 பைக்கைத் தெரியாமல் ரேஸ் ட்ராக்குக்குக் கொண்டு போய்ச் சல்லி சல்லியாக உடைத்து பைக்கைவிட செம அடி வாங்கியது... ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டும்போது சக ரைடரிடம் உதை வாங்கி ட்ராக்கைவிட்டு வெளியே போனது... பைக் ஓட்டும்போது ‘ப்ப்பா... பேய் வண்டி ஓட்டுது’ என்று கலாய்த்த பசங்களை ‘பளார்’ என்று அறைவிட்டது... என்று இந்த நான்கு மாதங்களில் எக்கச்சக்க அனுபவங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார் இலக்கியா.

``சிண்டி அக்காவுக்கு டைம் கிடைக்கலை. அப்புறம் இளங்கோ அண்ணனோட `C2’ டீம் பற்றிக் கேள்விப்பட்டு, அவங்க கிளப்ல சேர்ந்து ட்ரெய்னிங் எடுத்தேன். ‘சாலையில் பைக் ஓட்டுவதுபோல் ரேஸ் ட்ராக்கைக் கையாளக் கூடாது; ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டுவதுபோல் சாலையில் பைக் விரட்டக் கூடாது’ங்கிறதை எனக்குத் தெளிவா புரியவெச்சது இளங்கோ அண்ணனும் ஜார்ஜ் அண்ணனும்தான்! அவங்களுக்கு என்னோட தேங்க்ஸ். ‘ஃப்யூல், ட்ராக் சூட் செலவு மட்டும் பார்த்துக்கோ; ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்’னு சொல்லி என்னை அவங்க டீம்ல சேர்த்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம்தான் என்னோட வெறி அதிகமாச்சு.

82p5.jpg

போன ரவுண்ட்ல ஏழாவதா வந்தேன். இது எனக்கு மூணாவது ரேஸ். தீபிகாகிட்ட ஜஸ்ட் மிஸ்ல பெண்டுல வெளியே போயிட்டேன். இப்போ மூணாவதா ஃபினிஷ் பண்ணியிருக்கேன். அடுத்தமுறை விடமாட்டேன்!’’ என்று சபதம் போட்டார் இலக்கியா.

‘நீ பையனா பொறக்கவேண்டியவ... பொண்ணா பொறந்துட்ட’ என்று கவலைப்பட்டு வந்த இலக்கியாவின் அப்பாவிடம், ‘உங்க பொண்ணு என்ன பண்ணுது?’ என்று யாராவது கேட்டால், `அவ பெரிய ரேஸர்’ என்று பெருமை பொங்கச் சொல்லிவருகிறாராம் இப்போது.

அப்பா சமாதானம் ஆகிவிட்டார் என்ற சந்தோஷம், அண்ணா பைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்ற மகிழ்ச்சி, C2 டீமில் சேர்ந்த கொண்டாட்டம் - இதையெல்லாம் தாண்டி இலக்கியாவுக்கு முதல் குறிக்கோள் - ரேஸில் ஜெயித்து ஜிமிக்கி - கம்மல் மோதிரத்தை மீட்டெடுத்து, ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்று வாங்க வேண்டும் என்பதுதானாம்.

ஜிமிக்கி கம்மலும் புல்லட்டும் சீக்கிரம் கிடைக்கட்டும்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பாகிஸ்தானில் உள்ள மித்தி நகரில் இந்து குழந்தைகளுடன் இணைந்து முஸ்லிம் குழந்தைகளும் தீபாவளியை கொண்டாடுவார்கள். மொகரம் பண்டிகையின் போது ஷபீனாவில் 80 சதவிகித இந்துக்கள் பங்கேற்பார்கள். இங்கு யாரும் மாட்டுக்கறி உண்பதில்லை. இந்து-முஸ்லிம் ஒற்றுமை காரணமாக, அது இங்கு கிடைப்பதில்லை.

  • தொடங்கியவர்
‘சுயநலத்தின் ஆட்சி எதையும் செய்ய வைக்கும்’
 

image_ffbf8b34b1.jpgஒருவரைத் தாக்கித் தாக்கிக் கொண்டே, உதவிகளை அவரிடமே கேட்பவர்கள் இருக்கிறார்கள். மறைமுகமாக ஒருவரை வைதுவிட்டு, நேரே அவரைக் கண்டபின்னர், சுவாமியிடம் வரம் கேட்பதைப்போல் இரந்து, நடிப்பது வெட்கப்படத்தக்கதே! 

சுயநலத்தின் ஆட்சி எதையும் செய்ய வைக்கும்.

ஆனால் சிலர், ஏன் பிறரை வெறுக்கின்றார்கள் என அவர்களுக்குப் புரியாதது அல்ல. அது பொறாமையின் வெளிப்பாடுதான். துஷ்டர்களுடன் சிநேகிப்பவர்களுக்கு, நல்லவர்களைக் கண்டால் பிடிப்பது இல்லை. தங்களுக்கு மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டது இந்த உலகம் என எண்ணி, மற்றவர்கள் பெறுவதைப் பிடுங்குவதே, வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் இறை சாபத்தைப் பெறுவார்கள். இத்தகையவர்கள் நிரந்தரமாக ஜெயிப்பது கிடையாது.

நன்றி மறத்தல், நல்லோரைத் துறத்தல் என்றைக்கும் தீமை தரும்.

  • தொடங்கியவர்

92 கி.மீ... டிரைவ் இன் கடற்கரை... காடு சூழ் வீடுகள்... கேரள மேற்கு கடற்கரைச் சாலை! #Travelogue

 
 

கேரளத்தின் கோழிக்கோடு தொடங்கி கன்னூர் வரையிலான 92 கி.மீ மேற்கு கடற்கரைச் சாலையில் இரண்டு நாட்கள் ‘ஃபோட்டோ வாக்’ 
பயணம். ‘வாண்டர்மைல்’ என்னும் பயணக்குழு தங்கள் முகநூல் பக்கத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலையின் நீள அகலங்களை திறந்தவெளி ஜீப்பில் நண்பர்களுடன் அளந்திருக்கிறேன். இதோ, இப்போது மேற்கு கடற்கரைச் சாலையில் ஒரு ட்ரிப்... அரபிக் கடல் பகுதிக்கும் படையெடுக்கும் வாய்ப்பு... மிஸ் பண்ண முடியுமா? வாண்டர்மைலின் பத்து பேர் கொண்ட குழுவில் நானும் இணைந்தேன். சென்னையிலிருந்து கேரளாவுக்குப் புறப்பட்டோம். ஒரு வார இறுதியின் அதிகாலை எங்களுக்கு, கேரளத்தின் கோழிக்கோடு நகரில் விடிந்தது. 92 கி.மீ பயணத்திற்கு எங்களை அழைத்துச் செல்லவிருக்கும் டாடா விங்கர் ரகக் கார், கோழிக்கோடு ரயில் நிலையத்தில் எங்களுக்காகக் காத்திருந்தது.

கோழிக்கோட்டின் பிரபலமான பாளையம் மார்க்கெட் பகுதிக்குள் கார் நுழைந்தது. காலை ஆறு மணிக்கே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் சட்டென காரிலிருந்து இறங்கி, மார்க்கெட்டைச் சுற்றிவரத் தொடங்கினோம். தன்னை
போட்டோ எடுப்பது தெரிந்ததும் வெட்கப்பட்ட பாட்டி, பூட்டப்பட்டிருந்த டீக்கடை வாசலில் அமர்ந்து விட்டேத்தியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவர், ‘எங்களை போட்டோ எடுங்கள், அவர்களை எடுங்கள்...’ என்று கேமிராவைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் மாறிமாறி  போஸ் கொடுத்த மக்களுடன் சில மணிநேரம் செலவிட்டுவிட்டு, அங்கிருந்து நகர்ந்தோம். கடற்கரைச் சாலையின் வழி எங்கிலும் இயற்கையாக உருவான ஹாலோப்ளாக் கற்களால் எழுப்பப்பட்ட சுவர்களும், அதில் கிளைத்து முளைத்திருந்த செடிகளும் எங்களை வரவேற்றன. கூடவே, கடலை நோக்கிப் பயணமாகும் கேரளத்து உப்பனாறுகளும், அதன் இரு கரைகளிலும் வளர்ந்திருந்த தென்னை மரங்களும் அந்த வெயிலிலும் அவ்வளவு இதம்!

 

பாளையம் மார்க்கெட்

கோழிக்கோடிலிருந்து மூன்று மணிநேரப் பயண தூரத்தில் இருக்கும் மாட்டணூரில் தங்கிவிட்டு, அங்கிருந்து பயணத்தைத் தொடர்வதாக யோசனை. கேரளத்தின் பழமைவாய்ந்த கட்டிடங்களை  ‘தாராவாட்’ என்பார்கள். அதுபோல, மாட்டணூரின் 300 வருடப் பழமைவாய்ந்த ‘கல்லூர் தாராவாட்’ என்னும் கட்டிடத்தில் தங்கினோம். எங்கு பார்த்தாலும், காரைக்குடி செட்டிநாடு வகையறா கட்டிடங்களைப் போல, எட்டுகட்டுகளை உடைய பிரமாண்ட வீடுகள். வீட்டின் அத்தனை பகுதிகளிலும் சூரியவெளிச்சம் படுவதுபோல கட்டமைப்பு. வீட்டின் பின்புறம் பாசி நிரம்பிய குளம். வீட்டைச் சுற்றிலும் சிறுகாடு என ரம்மியமாக இருந்தது இடம். அவ்வப்போது பெய்த சாரல் மழையில் ஒருபுறம் மண் வாசமும் மறுபுறம் காட்டின் வாசமும் நாசியைத் துளைத்தது.

 

கல்லூர் தாரவாடுக்குச் செல்ல இரவாகிவிட்டதால் வீட்டின் பின்னால் இருக்கும் குளத்தை அப்போது பார்க்க முடியவில்லை. இரவு அங்கே தங்கிவிட்டு, அதிகாலை வெளிச்சம் கண்ணில்பட்டதும் குளத்தைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். கட்டிடத்தின் பின்னிருக்கும் அந்த குளத்துக்கு இரண்டு நுழைவுவாயில். ஒன்று, அந்த வீட்டில் அந்தக் காலத்தில் இருந்த ஆண்கள் நுழைவதற்கும், மற்றொன்று பெண்கள் நுழைவதற்குமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. துணிதுவைப்பதற்கும் உடைமாற்றிக் கொள்வதற்கும் பெண்களுக்கு தனி அறை இருந்தது. அவ்வப்போது துள்ளிக்குதித்து நீச்சலடித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய மீன், குளத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது

மாட்டனூர் தாராவாட்

காலையில் மீண்டும் டாடா விங்கரில் மாட்டணூரில் இருந்து புறப்பட்டோம். மேற்குக் கடற்கரையோரம் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது அன்றைய இலக்கு. மாட்டணூரிலிருந்து புறப்பட்ட வண்டி மெல்ல ஊர்ந்து, கடற்கரையோர ஊர்களையும் கிராமங்களையும் கடந்து பயணித்தது. 

காணி நிலம் வேண்டும் பராசக்தி
அங்கு தூணில் அழகியதாய்
நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் 

அந்தக்காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தரவேணும் 

அங்கு கேணி யருகினிலே

தென்னைமரம் கீற்று மிளநீரும்

என்னும் பாரதியின் வரிகளைப் பிரதியெடுத்தது போலிருக்கிறது மேற்குக் கடற்கரைக்கோடி கேரளத்தின் அடையாளம். அங்குள்ள ஒவ்வொரு கிராமும், ஒவ்வொரு வீடும் அத்தனை அழகு. வீட்டை ஒட்டிச் செல்லும் ஓடைகள், குறைந்தபட்சம் வீட்டுக்கொரு தென்னை மரமாவது இருக்கிறது. இது, கார்ப்பரேட் சூழலில் சிக்கி தினம் ஓட்டமெடுத்துக் கொண்டிருக்கும் சென்னை வாசிகளின் கவனத்துக்கு... 

கேரள முதல்வரின் ஊரில்...

செல்லும் வழியில் ஓரிடத்தில் ஊரே திரண்டிருந்தது. பூக்கள் போல புலிகள் போல மாறுவேடம் போட்டிருந்தனர் சிறுபிள்ளைகள். தங்கள் பாரம்பரிய உடையில் வண்ணவண்ணக் குடைகளைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தனர் பெண்கள். எப்போது வேண்டுமானாலும் வாசிக்கத் தயாரான நிலையில், செண்டை மேளத்தைத் தோளில் சுமந்தபடி காத்திருந்தனர் சில கலைஞர்கள். ‘இது எந்த ஊர்’ என விசாரித்ததும், ‘பினராயி’ என பதில் வந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊர். 'கேரள உல்சவம்’ என்னும் வருடாந்திரத் திருவிழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. ‘கேரள உல்சவம்’ - கேரளாவின் மறக்கடிக்கப்பட்ட அல்லது அதிகம் அறியப்படாத நாட்டுப்புறக் கலைகளுக்கான திருவிழா. கேரளத்தின் ஒவ்வொரு ஊரிலும் எளிமையாகவும் பிரமாண்டமாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

செண்டை

திடீரென, செண்டை வாசிக்கத் தொடங்கியதும் கூட்டத்திலிருந்த வாண்டுகள் துள்ளிக்குதித்தனர். கேரள பாரம்பர்யத்தை உணர்த்தும் வேடங்களில் இருந்த சிறுவர்களையும், கேரளத் தலைவர்களின் புகைப்படங்களையும் தாங்கிய வண்டிகள், செண்டை மேளக்காரர்களைப் பின்தொடர்ந்து சென்றன. கோலாட்டம் ஆடிக்கொண்டு பெண்களும், தெய்யம் என்னும் நடனக்கூத்துக்கான வேடம் அணிந்த இளைஞர்களும் அணிவகுத்துச் சென்றனர். மேளத்தின்  தாளத்துக்கேற்ப ‘ததிங்கினதோம்’ என கால்கள் தன்போக்கில் ஆடத் தொடங்கின. அணிவகுப்பை முழுவதுமாக வழியனுப்பிவைத்துவிட்டு வண்டி அங்கிருந்து கிளம்பியது. 

பினராயி

ஆசியாவின் மிகப்பெரும் ட்ரைவ் இன் கடற்கரை

அடுத்து, வண்டி கண்ணூர் முழப்பிளங்காடு டிரைவ் இன் கடற்கரை நோக்கிச் சீறிப்பாய்ந்தது. ஆசியாவின் மிகப்பெரும் டிரைவ் இன் கடற்கரை அது. அங்கிருந்துதான் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதாகத் திட்டம். ஆனால், அன்று மேகங்கள் சூரியனை முற்றிலுமாக மறைத்திருந்தது. அலைகளையும் கரையொதுங்கிய சிப்பிகளையும் சங்குகளையும் மட்டும் அங்கே அமர்ந்து ரசித்துவிட்டு தாராவாட்டுக்குத்  திரும்பினோம். ஏமாற்றமே என்றாலும், எதிர்பாராமல் நிகழும் சம்பவங்கள்தானே பயணத்தின் அழகு!

ஆனால், தாராவாட் நோக்கிய பயணம் எங்களுக்கு வேறொரு உலகத்தைத் திறந்து விட்டிருந்தது. அதுவரையிலும், அந்நியப்பட்டிருந்தவர்கள் இப்போது நண்பர்களாகி விட்டோம். ‘அந்தாக்‌ஷரி’ என்னும் பாட்டுக்குப் பாட்டு விளையாடினோம். இது இன்னும் நீளாதா எனும் தருணத்தில், தாராவாட் வந்துசேர்ந்தோம். மறுநாள், சிறுபிள்ளைகளும் பயம் அறியாமல் சுழற்றி விளையாடும் களரிப்பயட்டு தற்காப்புக் கலை நிலையம் எங்களை வரவேற்கக் காத்திருந்தது.

ட்ரைவ் இன் பீச்

பழஸிராஜாவின் பிண்டாளிக் களரி

அதே மேற்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் பிண்டாளிக் களரி பயிற்சி மையத்தில் அடியெடுத்து வைத்தோம். கேரள வர்ம பழஸிராஜாவும் அவரது தளபதி வேலுத்தம்பியும், ஆங்கிலேயர்களை எதிர்க்கக் கற்றுக் கொண்டதுதான் பிண்டாளிக் களரி முறை. பின்னாளில் அவர்களே அதை தம்முடைய போர் வீரர்களுக்குக் கற்றுத்தரத் தொடங்கினர். மங்கலான வெளிச்சம் நிறைந்த அந்த கூடாரத்தில் ஏழு வயது சிறுவன் முதல் நாற்பது வயது பெரியவர் வரை, பாரபட்சமின்றி வாளைச் சுழற்றிக் கொண்டிருந்தனர்.

பிண்டாளி களரி

சுழன்றும் பறந்தும் பயிற்சி செய்யும்போது அவர்களது உடல், படகுபோல வளைந்து நெளிந்து பாய்கிறது. கேடயம், சிலம்பம், வாள் என அனைத்தையும் அநாயசமாகச் சுற்றிச் சுழற்றுகின்றன அவர்களது கைகள். உருமி எனப்படும் சுருள்வாள் வீச்சின்போது, வீசுபவரைச் சுற்றி யாரும் இருக்கக் கூடாது. உருமிப் பயிற்சியின்போது வேடிக்கை பார்ப்பதற்குக் கூட யாரும் அவர் அருகே நிற்பதில்லை. உருமி, காற்றைக் கிழித்துச் சுழலும் சத்தம் காதுகளில் கேட்கிறது. விசாரித்தபோது, கேரளத்தின் பல பகுதிகளில் பெண்களுக்கு, களரி கட்டாயத் தற்காப்புப் பயிற்சியாகக் கற்றுத்தரப்படுவது தெரியவந்தது. வாள் சுழற்றியவர்களில் ஒருவர், பெண்களுக்கான தேசிய அளவிலான களரியில் சாம்பியன் பட்டம் வென்றவர். கேரளம் போல தமிழகத்திலும் பெண்களுக்கான தற்காப்புக் கலை பயிற்சி என்பது கட்டாயமாக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்கிற ஏக்கப்பெருமூச்சுடன் அங்கிருந்து வெளியேறினோம்.

அந்தி சாயும் வேளையில் மீண்டும் தாரவாட் திரும்பினோம். தாராவாடின் குளத்தருகே இருந்த கொடியில் சில எறும்புக் கூட்டங்கள் வரிசையாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. கடல் வாசத்தையும் காட்டின் வாசத்தையும் சுமந்தபடி, மீண்டும் அந்த எறும்புகள் போலத்தான் நாங்களும் சென்னையை நோக்கிப்  பயணப்படத் தொடங்கியிருந்தோம்.

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

செல்போன் வார்த்தைகள் வி.ஐ.பி களுக்கு பொருத்தமாய்.!
----------------
Call waiting : ஸ்டாலின்...
Not reachable : அழகிரி...
Full talk time : வை.கோ...
2g mobile : கனிமொழி...
No balance : விஜயகாந்த்...
Blocking : சசிகலா...
Duel sim : EPS & OPS...
Home screen: அமித்ஷா...
Blue tooth : தமிழிசை...
Flight mode : மோடி...
Old version: அத்வானி...
Paired device: வெற்றிவேல்& புகழேந்தி...
Missed call : ஜெயலலிதா...
Settings : TTV தினகரன்...
More settings: அப்பல்லோ...
Account settings : அதானி& அம்பானி...
Play store : செல்லூர் ராஜு & கருப்பண்ணன்...
Voice Sms : கமல் & ரஜினி ...
Top-up : நாஞ்சில் சம்பத்...
Vibrating Mode : அனைத்து தமிழக அமைச்சர்கள்...
My documents : சுப்பிரமணிய சாமி...
Mute : கலைஞர்...
Sleeping mode : தமிழக அரசு...

  • தொடங்கியவர்

கிராமப்புறப் பெண்கள் தினத்தின் முக்கியத்துவம் என்ன? #InternationalDayOfRuralWomen

 
 

பெண்கள்

இன்று சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம். பெண்கள் தினம் என்று ஏற்கெனவே இருக்க, கிராமப்புற பெண்கள் தினம் என்று தனியாக ஒரு நாள் கடைபிடிக்க வேண்டுமா? என்று பலருக்கும் கேள்வி எழலாம். பொதுவாக, பெண்கள் எத்தனையோ சவால்களைத் தினந்தோறும் அவர்கள் வாழ்வில் எதிர்கொண்டு வருகிறார்கள். அதிலும், நகர்ப்புறத்தில் வசிக்கும் பெண்களைவிடவும் கிராமப்புறத்தில் வசிக்கும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் ஒப்பிட்டளவில் அதிகமானவை. நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பயணத்திலும் வேலையிடங்களிலும் சில பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. வேலைத் தேடுவதே பெரும் போராட்டமாக பல பெண்களுக்கு இருக்கிறது. ஆனபோதும், அவற்றை யெல்லாம் எதிர்கொள்ளும் விதமாகக் கல்வியைப் பெற்றிருக்கின்றனர். தங்களுக்கான உரிமைகளைப் பற்றிய தெளிவும் நகர்புறப் பெண்களிடம் இருக்கிறது. ஆனால், கிரமப்புறப் பெண்களுக்கு, தங்களுக்கான கல்வியைப் பெறுவதே பெரும் சவாலாக இருக்கிறது. பள்ளிக் கல்வியிலிருந்து மேல் படிப்புக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் குறைவானதே. கழிவறை இல்லாத வீடுகள் ஏராளம் இருக்கத்தானே செய்கின்றன. அதுபோன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் ஒவ்வொரு நாளையும் கடப்பதே பெரும் சவால்தான். 

 

ஐக்கிய நாடுகள் சபை 2008 ஆண்டு, அக்டோபர் 15ஆம் தேதியை சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினமாக அறிவித்தது. அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15தேதி சர்வதேச கிராமப்புற பெண்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐ.நா சபை இந்த (2017) ஆண்டிற்கான சர்வதேச கிராமப்புற பெண்கள் தினத்தின் குறிக்கோளாக , கிராமப் புறப் பெண்களுக்கு அதிகாரம் அளித்து வளர்ச்சியடைய வைத்தலும் பாலினப் வேறுபாடுகளைக் களையவதையுமே முன்னெடுக்க உள்ளது. அதற்கான விழிப்பு உணர்வு பிரசாரங்களைப் பல்வேறு குழுக்கள் மூலமாகச் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

பெண்கள்

கிராமப்புற பெண்கள் விவசாயப் பணியையே பெரும்பாலும் பார்க்கிறார்கள். உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் விவசாயம் பார்க்கிறார்கள். ஆனால், சம்பளம் ஒரே மாதிரியாகத் தரப்படுகிறதா என்றால் இல்லை. ஒரே வேலை, அதற்கு ஆணுக்கொரு கூலி, பெண்ணுக்கொரு கூலி. விவசாயத்தில் ஆண்களுக்கு நிகராக, பெண்களின் எண்ணிக்கை இருந்தாலும் பெரும்பாலான பெண்களின் சொத்தாக, விவசாய நிலங்கள் இல்லை. இதனால், அவர்களின் வருமானம் ஆண்களோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. இதை ஐநா சபையும் தன் ஆய்வின் வழியே சொல்கிறது. 

சுகாதார அடிப்படையிலும் கிராமப்புற பெண்களின் நிலை மிக மோசமானதாகவே உள்ளது. இதன் விளைவு மிக எளிதாக நோய்தொற்றும் அபாயமும் இருக்கிறது. குறிப்பாக, தங்கள் உடல் சார்ந்த வெளிப்படையான உரையாடல்கள் நிகழ்வது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. மாதவிலக்கு குறித்த சந்தேகங்களும் நாப்கின் பயன்படுத்துவதில் தயக்கமும், அதை அப்புறப்படுத்துவதில் கூச்சமும் கொண்டவர்கள் கிராமப் புற பெண்கள் இருக்கின்றனர். அவற்றைச் சீர் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஸ்மார்ட் கார்டு திட்டங்களை விடவும் இது மிக அவசியம். பள்ளியிலிருந்தே இதைத் தொடங்குவது ரொம்ப நல்லது.   

 

நமக்கு உணவளிக்கும் உன்னத வேலையில் ஈடுபட்டிருக்கும் கிராமப் புறப் பெண்களின் சிக்கல்களை அறிந்துகொள்வோம். அவற்றைக் களைய குரல் கொடுப்போம். வழக்கமாகக் கொண்டாடப்படும் பல தினங்களில் ஒன்றாக, கிராமப் புற பெண்கள் தினத்தைக் கருதாமல் தனிக் கவனம் குவிப்போம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை விதைக்கும் கலாமின் 9 பொன் மொழிகள்!

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 86ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அறிவியல் துறையில் பல சாதனைகளை புரிந்த அவர், குழந்தைகளை சந்தித்து பேசுவதில் விருப்பம் கொண்டிருந்தார். குழந்தைகளிடையே அவர் ஆற்றிய பல உரைகள் பிரபலமானவை. அவ்வற்றிலிருந்து சில பொன்மொழிகளை தொகுத்து வழங்குகிறோம்.

"கனவு காணுங்கள். ஆனால், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு."

குடியரசு தலைவர் மாளிகையில், மாணவர்களுடன் கலாம்.படத்தின் காப்புரிமைPRESIDENTIAL PALACE/AFP/GETTY IMAGES Image captionகுடியரசு தலைவர் மாளிகையில், மாணவர்களுடன் கலாம். line break

"நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன."

குழந்தைகளுடன் கலாம் line break

"கனவு காணுங்கள். கனவு எண்ணங்கள் ஆகும், எண்ணங்கள் செயல்கள் ஆகும்."

குழந்தைகளுடன் கலாம் line break

"உன்னுடைய இலக்கினை அடையும் வரை, மிகவும் கடினமான சண்டைகளை நீ போட வேண்டும்."

குழந்தைகளுடன் கலாம் line break

"நீ யார் என்பது முக்கியமல்ல. உனக்கென்று ஒரு பார்வை இருந்து, அதை அடையக்கூடிய உறுதி உனக்கு இருந்தால், நீ நிச்சயம் அதை செய்வாய்."

குழந்தைகளுடன் கலாம் line break

"புத்தகங்களே நிரந்தர தோழர்கள். சில நேரங்களில், அவை நமக்கு முன்பு பிறக்கின்றன, நம் வாழ்க்கை முழுவதும், நம்மை வழிநடத்துகின்றன. பல தலைமுறைகளுக்கு அவை தொடர்கின்றன."

குழந்தைகளுடன் கலாம் line break

"படைப்பாற்றல் என்பது, ஒரே விஷயத்தை பார்த்தாலும், அதை வேறு வழியில் சிந்திப்பது."

நிகழ்ச்சிக்கு பிற்கு குழந்தைகள் கலாமுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். line break

"நாம், நமது நம்பிக்கைகளை போல இளமையாகவும், நம் சந்தேகங்களை போல முதுமையாகவும் இருக்கிறோம்."

கலாமிற்கு மாலையிடும் குழந்தை line break

"நீங்கள் சூரியனை போல ஒளிர வேண்டும் என்றால், முதலில், சூரியன் போல எரிய வேண்டும்."

மாணவர்களுடன் கலாம்/AFP/GETTY IMAGES

http://www.bbc.com

  • தொடங்கியவர்

புகைப்படக் கலைஞர்கள் கூட்டமைப்பு விருதுகள் 2017 (புகைப்படத் தொகுப்பு)

புகைப்படக் கலைஞர்களின் கூட்டமைப்பின் புகைப்பட மற்றும் ஓபன் விருது வென்ற கலைஞர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புகைப்படக்   கலைஞர்களிற்கான   விருது   -  300 சிறந்த புகைப்படங்கள்   தேர்வு !!

இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்க்ப்பட்ட சுமார் 300 சிறந்த புகைப்படங்கள் லண்டனிலுள்ள 'த ஓல்டு ட்டூமன் பிரிவெரி'யில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

புகைப்படக்   கலைஞர்களிற்கான   விருது   -  300 சிறந்த புகைப்படங்கள்   தேர்வு !!

புகைப்பட விருதுகள் புகைப்பட கூட்டமைப்பினருக்கான விருதுகள் மற்றும் உதவி புகைப்படக் கலைஞர் விருதுகள் மற்றும் அனைவரும் போட்டியிடக்கூடிய ஓபன் விருதுகள் ஆகியவை இந்த விருதுகளில் அடங்கின்றன.

டெய்லி டெலகிரஃப் பதிப்பாசிரியர் கிரிஸ் இவான்ஸ், கிரியேட்டிவ் ரிவீவ்-யின் ஓவிய இயக்குநர் பால் பென்சோம் மற்றும் பிபிசி நியூஸ் ஆன்லைன் புகைப்பட பதிப்பாசிரியர் ஃபில் கோமஸ் ஆகியோர் இந்த ஆண்டு விருது பெறுவோரை தேர்வு செய்துள்ளனர்.

புகைப்படக்   கலைஞர்களிற்கான   விருது   -  300 சிறந்த புகைப்படங்கள்   தேர்வு !!

டேனியல் கலினோவ்ஸ்கிஸ் என்பவர்    ஓபன் விருது தொடர்    விருதிற்காகவும்,  ராப் லாசன் என்பவர்    டிசைன் தொடர் கமிஷன்  விருதிற்காகவும்,  நிக் ஹால்   என்பவர்  எடிட்டோரியல் தொடர் விருதிற்காகவும்,   ஃபிலி ஃபிக்ச் என்பவர்    கமிஷன் செய்யப்படாத போர்ட்ரெயிட் தொடர் விருதிற்காகவும்,   ஜேசன் ஹாக்ஸ்  என்பவர்   கமிஷன் செய்யப்படாத சுற்றுச்சூழல் தொடர் விருதிற்காகவும்,   பெனடிக்ட் ரெட்கோவ்  என்பவர் பணித்திட்ட  விருதிற்காகவும்  தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

புகைப்படக்   கலைஞர்களிற்கான   விருது   -  300 சிறந்த புகைப்படங்கள்   தேர்வு !!

ராப் லாசன், டிசைன் தொடர் கமிஷன்

ராப் லாசன், டிசைன் தொடர் கமிஷன்

நிக் ஹால், எடிட்டோரியல் தொடர்

நிக் ஹால், எடிட்டோரியல் தொடர்

ஃபிலி ஃபிக்ச், கமிஷன் செய்யப்படாத போர்ட்ரெயிட் தொடர்

ஃபிலி ஃபிக்ச், கமிஷன் செய்யப்படாத போர்ட்ரெயிட் தொடர்

ஜேசன் ஹாக்ஸ், கமிஷன் செய்யப்படாத சுற்றுச்சூழல் தொடர்

ஜேசன் ஹாக்ஸ், கமிஷன் செய்யப்படாத சுற்றுச்சூழல் தொடர்

பெனடிக்ட் ரெட்கோவ், பணித்திட்ட விருது

பெனடிக்ட் ரெட்கோவ், பணித்திட்ட விருது

http://www.bbc.com

  • தொடங்கியவர்

 

ஜிமிக்கி கமல் பாட்டுக்கு மோடியின் இசைக்கு ஆடும் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப்பின் புது டான்ஸ்! Narendra Modi மற்றும் Donald J. Trump

  • தொடங்கியவர்

உகாண்டாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்கள்

ஆப்பிரிக்காவின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராக அறியப்படும் இடி அமின் என்பவர், உகாண்டாவில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை 1972ம் ஆண்டு 90 நாட்கள் மட்டும் காலக்கெடு அளித்து, நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டார். அங்கிருந்து பிரிட்டனுக்கு சென்ற அவர்கள், எவ்வாறு வாழ்க்கையில் வெற்றிப் பெற்றார்கள் என்பதை இக்காணொளி விவரிக்கிறது.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 16

 

1775 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் மேய்ன் மாநி­லத்தின் போர்ட்லண்ட் நகரம் பிரித்­தா­னி­யரால் எரிக்­கப்­பட்­டது.

1793 : பிரெஞ்சுப் புரட்­சி­யின்­போது, பிரான்ஸின் பதி­னாறாம் லூயி மன்­னனின் மனைவி மரீ அண்­டொனெட் கழுத்து வெட்டி மர­ண­தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார்.

1799 : பாஞ்­சா­லங்­கு­றிச்சி மன்னன் கட்­ட­பொம்­மனை ஆங்­கி­லே­ய­ர்கள் தூக்­கி­லிட்­டனர்.

1813 : ஆறா­வது கூட்­டணி நாடுகள் நெப்­போ­லியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்­கு­தலை ஆரம்­பித்­தன.

1834 : லண்டன் வெஸ்ட்­மின்ஸ்டர் அரண்­ம­னையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேத­ம­டைந்­தன.

varalru2-339x400.jpg1905 : ரஷ்ய இரா­ணுவம் எஸ்­தோ­னி­யாவில் மக்கள் கூட்­ட­மொன்றின் மீது சுட்­டதில் 94 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1905 : பிரித்­தா­னிய இந்­தி­யாவில் வங்­காளப் பிரிப்பு இடம்­பெற்­றது.

1934 : குவோ­மின்­டாங்­கு­க­ளுக்கு எதி­ரான சீனக் கம்­யூ­னிஸ்­டுக்­களின் தாக்­குதல் ஆரம்­ப­மா­னது.

1939 : இரண்டாம் உலகப் போரில் பிரித்­தா­னியா மீதான ஜேர்­ம­னிய வான்­ப­டையின் முத­லா­வது தாக்­குதல் இடம்­பெற்­றது.

1942 : பம்­பாயில் இடம்­பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1949 : கிரேக்க கம்­யூ­னிஷத் தலைவர் நிக்­கலாஸ் சக்­கா­ரி­யாடிஸ் தற்­கா­லிக போர்­நி­றுத்­தத்தை அறி­வித்தார். கிரேக்க உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­தது.

1951 : பாகிஸ்­தானின் முத­லா­வது பிர­தமர் லியாகத் அலி கான் ராவல்­பிண்­டியில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

1964 : மக்கள் சீனக் குடி­ய­ரசு தனது முத­லா­வது அணு­வா­யுதச் சோத­னையை மேற்­கொண்­டது.

1975 : கிழக்குத் திமோரில் ஆஸ்­தி­ரே­லிய தொலைக்­காட்சி ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஐந்து பேர் இந்­தோ­னே­ஷியப் படை­க­ளினால் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

1978 : போலந்தை சேரந்த கரொல் வொஜ்­திலா பரி­சுத்தப் பாப்­ப­ர­ச­ராக தெரி­வானார். இவர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்பர் என்ற பெய­ருடன் பாப்­ப­ர­ச­ராக பத­வி­யேற்றார்.

1984 : தென்­னா­பி­ரிக்­காவின் டெஸ்மண்ட் டுட்டு சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசு பெற்றார்.

1987 : தெற்கு இங்­கி­லாந்தில் ஏற்பட்ட சூறா­வ­ளியில் 23 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1996 : குவாத்­த­மா­லாவில் கால்­பந்­தாட்டப் போட்டியின்போது ஏற்­பட்ட நெரி­சலில் சிக்கி 84 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1998 : சிலியின் முன்னாள் சர்­வா­தி­காரி ஆகஸ்டோ பினொச்செட் லண்­டனில் கைது செய்­யப்­பட்டார்.

2006 : ஹப­ர­ணையில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் இலங்கைக் கடற்­ப­டை­யினர் 102 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2006 : இலங்­கையில் 1987 இல் இலங்கை- – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

2013 : லாவோஸில் இடம்­பெற்ற விமான விபத்தில் 49 பேர் உயி­ரி­ழந்­தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

ஒரு மில்லினர் வீட்டு ‘ஸோ சிம்பிள்’ திருமணம்... இரண்டு கம்ப்யூட்டர்கள் மட்டுமே திருமணச் செலவாம்!

 

 
simple_weddinggg

 

இந்தியா என்றதும் வெளிநாட்டுக்காரர்களுக்கு உடனடியாக ஞாபகம் வருவது என்னவென்று நினைக்கிறீர்கள்? முதலில் சென்னையின் இட்லி, தோசை, சாம்பார் என்று நினைத்து விடாதீர்கள். அதெல்லாம் வட இந்தியர்களுக்கு மட்டும் தான் ஞாபகம் வரும். பொதுவாக இந்தியா என்றதும் உலகத்தின் பொதுப்பார்வை என்ன தெரியுமா? பிரியாணி, பாலிவுட், படாடோபமான நமது பகட்டுத் திருமணங்கள் இவ்வளவு தானாம். இந்த மூன்று விஷயங்களுக்குள் அடங்கிப் போகிறதாம் இந்தியர்களின் வாழ்க்கை. தென்னிந்தியர்களையும் இப்போது இந்த பிரியாணி வகைகள் ஒரேயடியாய் மயக்கித் தான் வைத்திருக்கின்றன என்பதற்கு நமது திருமணங்களில் தவறாது பரிமாறப்படும் பிரியாணிகளே சாட்சி! இன்றைய தேதிக்கு பிரியாணி இல்லாமல் ஒரு திருமணத்தை நிறைவாக நடத்தி முடித்து விடத்தான் முடியுமா என்ன? அதை, விடுங்கள்... அப்புறம் நமது திருமணங்கள்... அடடே ரகம். பணமதிப்பிழப்பு இக்கட்டு நேரங்களில் கூட கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகரான ஜனார்த்தன ரெட்டியால், தன் மகளது திருமணத்தை 500 கோடி ரூபாய் செலவிட்டு டாம்பீகமாய் நடத்தி முடிக்க முடிந்தது என்றால் இந்தியத் திருமணங்களில் ஆடம்பரம் எத்தகைய இடத்தை வகிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் திருமணங்கள், பல குடும்பங்களைக் கடனாளியாக்கி தவிக்க விட்டிருக்கின்றன என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும்.

இந்தியத் திருமணங்கள் என்றாலே, விதம், விதமான பட்டும், நகைகளும், ஊரை அசத்தும் கல்யாணச் சாப்பாட்டு மெனுக்களுமாக பகட்டு பலவிதங்களில் பல்லைக் காட்டும். இந்தியத் திருமணங்கள், இரு மனங்களை இணைக்கும் சங்கம விழாக்கள் மட்டுமல்ல, இரு குடும்பங்களின், சொத்து மதிப்பை பொருட்காட்சியாக்கி ககை விரிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவும் கூடப் பார்க்கப் படுகிறது. இரு குடும்பங்கள் என்று கூறி திருமண வீட்டாரை மட்டும் குறை சொல்வானேன். திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்வோரையும் சேர்த்தே கற்பனை செய்து பாருங்கள். அவர்களுக்கும் கூட திருமண விழாக்களில் கலந்து கொள்வது என்பது, தங்களிடமுள்ள நகைகளையும், விதம் விதமான விலையுயர்ந்த ஆடைகளையும் சமூகத்திற்குக் காட்டி தங்களது அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பே என்றால்... அது மிகையில்லை.

இந்தியத் திருமணங்களின் பொது இலக்கணம் இப்படியாக இருக்கும் போது, யாராவது, அதிலும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஒரு கோடீஸ்வரர், தமது மகனுக்கு எவ்விதப் பகட்டுகளுமின்றி மிக எளிமையாக பதிவுத் திருமணம் செய்து வைத்தால் அது நிச்சயம் அதிசயமான விஷயமாகத்தான் கருதப்படும்.

porinju_veliyath.jpg

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான பொறிஞ்சு வெலியத் என்பவரது மகன் சன்னி வெலியத்தின் திருமணம் தான் அத்தனை எளிய திருமணமாக நடந்து முடிந்திருக்கிறது. பொறிஞ்சு வெலியத், சுமார் 1200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி என அவரது புரோஃபைல் காட்டுகிறது.

simple_wedding.jpg

தனது மகனது திருமணம் குறித்து பொறிஞ்சு வெலியத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; 

இன்று என் மகனது திருமணம் கேரளாவில், சார் பதிவாளர் அலுவலகத்தில் இனிதே நடந்து முடிந்தது. சார் பதிவாளர் வேண்டுகோளின் படி, அலுவலகத்துக்கு என இரண்டு கம்ப்யூட்டர்களை வாங்கி அன்பளிப்பாக அளித்தோம். திருமணத்திற்கான செலவென்றால் அது ஒன்று மட்டும் தான் :)

என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கோடீஸ்வரராக இருந்து கொண்டு, மகனுக்கு இத்தனை எளிமையாகத் திருமணம் நடத்தி வைத்ததில் ஏதாவது உள்நோக்கம் உண்டா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்; ‘ இதில் எந்த உள்நோக்கமும் இல்லை, என் திருமணமும் இப்படித்தான் நடந்தது. அது மட்டுமல்ல என் மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவர், திருமணம் முடிந்ததும் விரைவாக அமெரிக்கா திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருந்தார். உடனடியாகச் சென்று முடித்தாக வேண்டிய அலுவல் அங்கிருந்தது. எனவே மணமகள் வீட்டாரிடம் பதிவுத் திருமணத்திற்கு சம்மதமா? என்று கேட்டதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். அதனால் எளிமையாக திருமணத்தை முடித்துக் கொண்டோம். அதோடு திருமணம் என்றில்லை பொதுவாக எல்லா விஷயங்களிலுமே மக்கள் அவரவர் அறிவிற்கும், ஞானத்திற்கும் உட்பட்ட வகையில் முடிவெடுத்துச் செயலாற்றுகிறார்கள். அவ்வளவு தானே தவிர, இதில் பிரமாதமாகப் பேச ஒன்றுமில்லை’. என்ற ரீதியில் பதில் அளித்திருக்கிறார் பொறிஞ்சு வெலியத்.

பொரிஞ்சு வெலியத் ஈக்விட்டி இண்டலிஜென்ஸ் எனும் நிறுவனத்தின் ஸ்தாபகராகவும், செயல் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் வளர்ந்து வரும் சிறிய அளவிலான பங்கு வர்த்தக நிறுவனங்களில், மிக வேகமாக முன்னேற்றமடைந்து வரும் ஸ்தாபனங்களில் இவருடையதும் ஒன்று எனக் கருதப்படுகிறது.

 

திருமணம் ஒரு மனிதனுக்கும் சரி, குடும்பத்துக்கும் சரி சந்தோசத்தைத் தருவதாக இருக்க வேண்டுமே தவிர, கடனாளியாக்கக் கூடாது. என்று நினைப்பவர்கள்  இப்படிப்பட்ட எளிமையான திருமண முறைகளைத் தேர்ந்தெடுக்கலாமே!

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

நம் மொபைலுக்குள் குடியேற கூகுள் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

 

லகின் நம்பர் ஒன் சர்ச் இன்ஜின் எது எனக் கேட்டால், கூகுளில் தேடாமலே, கூகுள்தான் எனப் பதில்சொல்லிவிடலாம். அந்தளவிற்கு டெஸ்க்டாப் முதல் மொபைல் வரை ஆதிக்கம் செலுத்திவருகிறது கூகுள். இந்த நம்பர் 1 அந்தஸ்திற்கு, கூகுளின் சேவைகள் மட்டுமே காரணமில்லை. மற்ற மொபைல் நிறுவனங்கள் மற்றும் கேட்ஜெட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் கூகுளின் சேவைகளுக்குத் தரும் ஒத்துழைப்பும் ஒரு காரணமே.

கூகுள்

 

உதாரணமாக ஆண்ட்ராய்டு மொபைல்களைக் குறிப்பிடலாம். ரெட்மியில் இருந்து சாம்சங் வரைக்கும் எந்த மொபைல் வாங்கினாலும், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யூ டியூப், குரோம் பிரவுசர் உள்ளிட்டவை ஏற்கெனவே போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இப்படி மொபைல் நிறுவனங்கள், தங்கள் மொபைல் போன்களில் கூகுள் ஆப்களை ப்ரீ இன்ஸ்டால் செய்வதற்காக, கூகுள் நிறுவனம் பணம் கொடுக்கும். இதற்கு Traffic Acquisition Cost (TAC) என்று பெயர்.

கூகுளுக்கு, தனது சேவைகளில் இருந்துவரும் வருமானங்களில் முக்கியமானது விளம்பர வருமானம். மொபைல் ஆப்ஸ், பிரவுசர், யூ டியூப் என கூகுளின் எல்லா சேவைகளிலும் இந்த விளம்பரங்கள் எட்டிப்பார்க்கும். இந்த விளம்பரங்கள் அதிகம் பேரை சென்றடைய வேண்டுமென்றால், அதிகமான வாடிக்கையாளர்கள் தேவை. இதற்காகத்தான் மற்ற நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கிறது கூகுள்.

Google Search

முதலில் கணினிகளுக்காக அதிகம் செலவிட்ட கூகுள், தற்போது மொபைல்களுக்கே அதிகமாக செலவு செய்கிறது. மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், மொபைலில் கூகுளின் சேவைகள் அதிகளவில் பயன்படுவதுமே இதற்கு காரணம்.

சில நாட்களுக்கு முன்னர், ஆப்பிளின் சஃபாரி பிரவுசரில் கூகுள் சர்ச் வசதியை நிறுவுவதற்காக, அந்நிறுவனத்திற்கு சுமார் 3 பில்லியன் டாலர்கள் கொடுத்திருந்தது கூகுள். இதன்மூலம் ஐபோன்கள் மற்றும் மேக் கணினிகளில் கூகுள் சர்ச் வசதி, டிஃபால்ட்டாக இருக்கும். அதைதொடர்ந்து ஐபோன் மற்றும் மேக் பயனாளர்களிடம் இருந்து விளம்பர வருமானமும் கூகுளுக்கு கிடைக்கும். இது சர்ச் இஞ்சினுக்கு.

இதேபோல, கூகுள் மேப்ஸ், யூ டியூப், ஜிமெயில், குரோம் பிரவுசர் போன்ற ஆப்களை, தங்கள் டிவைஸ்களில் டிஃபால்ட்டாக நிறுவுவதற்காக, கடந்த ஆண்டு 7.2 பில்லியன் டாலர்களை, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளது கூகுள். இந்த Traffic Acquisition Cost-ஐ கூகுள் மொத்தமாக, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கிவிடாது. மாறாக, தயாரிப்பு நிறுவனங்களின் டிவைஸ் மூலமாக வரும் விளம்பர வருவாயை, அந்தந்த நிறுவனங்களுடன் குறிப்பிட்ட சதவிகிதம் பகிர்ந்துகொள்ளும். இதன்மூலம், கூகுளின் விளம்பரம் நிறைய பேரை சென்றடைவதோடு, கூகுளின் சேவைகளும் தொடர்ந்து வளரும். மேலும், நிறுவனங்களுக்கு செலுத்தும் பணமும், கூகுளின் வருமானத்திற்கு ஏற்பவே இருக்கும். இது கூகுள் மற்றும் கேட்ஜெட் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகிய இருவருக்குமே பயனுள்ள ஓர் வழி. ஆனால், மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமான பணத்தை, கூகுள் விளம்பரங்களில் பங்கு கேட்கும்பட்சத்தில், கூகுளுக்கு விளம்பர வருமானத்தில் தொய்வு ஏற்படும். உதாரணமாக, ஆப்பிள் நிறுவனத்தைக் குறிப்பிடலாம். கூகுளின் சர்ச் இன்ஜின் வருமானத்தில், 50% வருமானம் ஐ.ஓ.எஸ் டிவைஸ்கள் மூலமாகத்தான் வருகின்றன. எனவே, ஆப்பிள் நிறுவனம் விளம்பர வருமானத்தில் அதிகப் பங்கு கேட்கலாம். 

google apps

 

இப்படி சில சிக்கல்கள் இருந்தாலும், ஆண்டுதோறும் கூகுள் TAC-க்கு அதிகப்பணத்தை செலவிட்டுவருகிறது. இதற்கு காரணம், வேறு எந்த நிறுவனங்களும் கூகுளின் இடத்தைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். ஒருவேளை வேறு ஏதேனும் சர்ச் இன்ஜின் நிறுவனம், கூகுளை விடவும் அதிகமாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தினால், ஸ்மார்ட்போன்களில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இடம்பெறலாம்; அப்போது கூகுளின் வீச்சு குறைவதோடு, அதன் விளம்பர வருமானமும் பாதிக்கப்படும். எனவேதான் தொடர்ந்து இதில் அதிகப்பணத்தை செலவிட்டுவருகிறது கூகுள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கால்பந்து போட்டியில் 'ஆட்ட நாயகன்' மகேந்திர சிங் தோனி !

மகேந்திர சிங் தோனிபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionகால்பந்து களத்தில் மகேந்திர சிங் தோனி

செலிபிரிட்டி கிளாசிகோ என்ற பெயரில் நடக்கும் தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேர்க்கும் கால்பந்து போட்டியில் பாலிவுட் நடிகர்களும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் பங்கேற்றனர். கடந்த வருடம் நடந்த முதல் சீசனில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடிக்க ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்த வருடம் இரண்டாவது சீசனுக்கான போட்டி நேற்று மும்பையில் நடந்தது . இந்த போட்டியில் விராட் கோலியின் ஆல் ஹார்ட் எஃப் சி அணி 7-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

விராட் கோலி தலைமையிலான ஆல் ஹார்ட் எஃப் சி அணியில் தோனி, ஷிகர் தவான், உமேஷ் யாதவ், மனிஷ் பாண்டே முதலான வீரர்கள் இருந்தனர்.

ஆல் ஸ்டார்ஸ் அணியில் பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர், ஆதித்யா ராய் கபூர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே தோனி கோல் அடித்தார். 39 வது நிமிடத்தில் அவர் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

அவ்விரு சிறப்பான கோல்களுக்காக தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

கிரிக்கெட்டைப் போலவே கால்பந்திலும் ஆட்ட நாயகன் விருதை பெற்றதையடுத்து சமூக வலைதளங்களில் தோனிக்கு பாராட்டு கிடைத்தன.

http://www.bbc.com

 

  • தொடங்கியவர்

ஒரே ஒரு கிராமத்து மாணவிக்காக நடத்தப்படும் அரசு பள்ளி

  • தொடங்கியவர்

 

ஆஃப்ரிக்க கலைக்கு அதிகரிக்கும் அங்கீகாரம்

ஆப்ரிக்க கலைஞர்களுக்கு இது மறக்கமுடியாத ஆண்டு . உலக அளவில் , பாரிஸ், லண்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவில் நடந்த முக்கிய கலைக்கண்காட்சிகளில் ஆப்ரிக்க கலைப்படைப்புக்கள் பிரதானமாக இடம்பிடித்திருந்தன .

  • தொடங்கியவர்

விளையாடி களைத்த டோணிக்கு தண்ணீர் கொடுத்த மகள் ஸிவா

 

விளையாடி களைத்த டோணிக்கு தண்ணீர் கொடுத்த மகள் ஸிவா

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஹார்ட்ஸ் எப்.சி என்றழைக்கப்படும் கால்பந்து அணியும், பாலிவுட் நடிகர்களின் ஆல் ஸ்டார்ஸ் எப்.சி என்றழைக்கப்படும் கால்பந்து அணியும் நேற்று முபையில் மோதின. தொண்டு நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் விராட்க்ஹோலி தலைமையிலான அணி களம் இறங்கியது. இதில் டோணியும் களம் இறங்கி அசத்தினார்.

விளையாடி களைத்த டோணிக்கு தண்ணீர் கொடுத்த மகள் ஸிவா

கால்பந்து பயிற்சி ஆட்டத்துக்கு பின் இடைவெளியில், டோனியின் மகள் ஸிவா அப்பாவிற்கு மைதானத்திற்குள் வந்து தண்ணீர் கொடுக்கும் வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மகளுக்கு சமமாக அமர்ந்து டோணியும் தண்ணீர் பருகிக்கொண்டே பேசும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

ஹனிமூனுக்கு ஏன் ஹனிமூன் என்று பெயர் வந்தது!

 

 
0000_honeymoon

 

திருமணத்துக்குப் பிறகு ஹனிமூன் செல்லாத தம்பதிகள் இப்போதெல்லாம் அரிதானவர்கள் ஆகி விட்டார்கள். ஹனிமூன் என்பது இன்றைக்கெல்லாம் புதிதாகத் திருமணமானவர்கள் பின்பற்றும் கட்டாயமான சம்பிரதாயங்களில் ஒன்றாகி விட்டது. ஹனிமூன் செல்லாத அல்லது ஹனிமூனை ஒரு பொருட்டாக நினைக்காத தம்பதிகளைக் கூட ‘அச்சச்சோ நீங்க ஹனிமூன் போகலையா? ஏன்? என்னாச்சு? என்பது மாதிரியான பரிதாபமான விசாரிப்புகள் ஏதோ பெரிதாக ஒன்றை தங்களது வாழ்வில் இழந்து விட்டதான உணர்வை ஏற்படுத்தி ஹனிமூன் போகாதவர்களின் மனவிசாரங்களை அதிகப்படுத்தி விடுகிறது. இப்போது இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைபேருக்கு திருமணமான புதிதில் ஹனிமூனை மிஸ் பண்ணி விட்டோம் என்று பெரிய ஏக்கம் இருக்கக் கூடுமோ தெரியவில்லை. ஆனால், நீங்களும் கூட கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. இப்போது ‘லேட் ஹனிமூன்’ செல்வதும் ஒரு ஃபேஷன் என்றாகி விட்டது. ஆனால் அதில் என்ன ஒரு இஷ்டமான கஷ்டமெனில் லேட் ஹனிமூனுக்கு நீங்கள் உங்கள் குழந்தைகளையும் கட்டாயம் அழைத்துக் கொண்டு தான் சென்றாக வேண்டும். 

சரி இப்போது தங்களது வாழ்க்கையில் ‘ஹனிமூன்’ அனுபவங்களை தவற விடாமல் சென்று மகிழ்ந்தவர்களிடம் ஒரு கேள்வி. பட்டென பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். 

ஹனிமூனுக்கு, ஹனிமூன் என்று எப்படி பெயர் வந்தது?

அட என்னங்க இது?! உலகத்தில் திருமணம் ஆனவர்கள் எல்லோரும் செல்கிறார்களே என்று நாங்களும் ஹனிமூன் போனோம்! அப்படிப் போனது ஒரு குற்றமா? இப்படி கேள்வி எல்லாம் கேட்டு மண்டை காய வைக்கிறீர்களே? பதில் எல்லாம் எங்களுக்குத் தெரியாது. ‘ஹனிமூனுக்குச் போனோம் என்றால் போனோம்’ அவ்வளவு தான். ஆனால் அங்கேயும் போய் சண்டை தான் போட்டோம், அதை வேறு இப்போது நீங்கள் ஞாபகப்படுத்தி புண்ணியம் கட்டிக் கொண்டீர்களே! என்று யாராவது கொந்தளித்துக் குமுறி விடாதீர்கள். கூல்...கூல்! பதிலையும் நாங்களே சொல்லி விடுகிறோம்.

ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஸ்னரி வரையறையின் படி, திருமணத்திற்குப் பிறகு வரும் முதலாம் மாதத்தை ஹனிமூன் என்கிறார்கள். ஆனால் இன்றைய வழக்கப்படி, திருமணமான புதுத் தம்பதிகள், தங்களது திருமணத்திற்குப் பிறகு வீடென ஒரு கூட்டை அமைத்து தனியாக வாழும் காலம் வரும் வரையிலான நாட்களை ஹனிமூன் பீரியட் என்று குறிப்பிடுவது வழக்கம். இதை புதிதாக வேலையில் சேர்ந்தவர்களைக் கலாய்க்க கார்பரேட் கனவான்கள் பயன்படுத்தும் வார்த்தைகளோடு கூட ஒப்பிடலாம். புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு முதல் மூன்று மாத காலத்தை ‘ஹனிமூன் பீரியட்’ என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவது வழக்கம். கிட்டத்தட்ட அந்த ஹனிமூனும், இந்த ஹனிமூனும் ஒன்றே தான் என்பது, ஹனிமூன் சென்று வந்த அனுபவசாலிகளுக்கும் புதிதாக வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் கழிந்தவர்களுக்கும் நன்கு விளங்கக் கூடும்.

ஹனிமூனைக் கண்டுபிடித்த பெருமை ஜெர்மானியர்களையே சாருமென்றாலும் ஹனிமூன் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்களே! பண்டைய பாபிலோனில், திருமணமான தம்பதிகளில் பெண்ணைப் பெற்ற தந்த, திருமணத்திற்குப் பிறகு தன் மகளுக்கு ஆல்கஹாலுடன் தேன் சேர்த்து அருந்தத் தருவது வழக்கம். அதோடு பாபிலோனியர்கள் காலண்டர் கணக்கிடும் முறை சந்திரனை மையமாகக் கொண்டது. எனவே இந்த அடிப்படையில் திருமணமான முதல் மாதத்தை ‘ஹனி மந்தா’ என்றார்கள் அவர்கள். அதுவே பின்னாட்களில் மறுவி மக்களது புழக்கத்தாலும், பழக்கத்தாலும் ஹனிமூன் என்றானது. அது மட்டுமல்ல, திருமணமான தம்பதிகளுக்கு ஒரு மாதம் கழித்து, திராட்சை ரசத்துடன் தேன் கலந்து தரும் பழக்கம் பாபிலோனிய மன்னர் அட்டிலாவின் காலத்தில் நடைமுறையில் இருந்தது. அந்த அடிப்படையிலும் கூட ஹனிமூன் என்ற வார்த்தை தோன்றியிருக்கக் கூடும். என்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு ஹனிமூன் என்றால் திருமணமான புதுத்தம்பதிகள் இருவர் மட்டுமாக தனியாக எங்காவது மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்றூ வருவதையே நாம் ஹனிமூன் என்று குறிப்பிடுகிறோம். இந்த வழக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்குப் பிறகே தோன்றியது. ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத புது மணமக்கள், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு அவர்களை அப்படித் தனிமையில் அனுப்பி வைப்பது இன்று வரை தொட்டுத் தொடர்ந்து பின்பற்றப்படும் வழக்கங்களில் ஒன்றாகி இருக்கிறது. சில குடும்பங்களில் தேனிலவென்றால் திருமணத்திற்கு வருகை தர முடியாத தங்களது சொந்தங்களைத் தேடிச் சென்று காணும் ஒரு வாய்ப்பாகவும் கருதப்பட்டு, அப்படியான நெருங்கிய சொந்தங்களின் வீடுகளுக்குச் சென்று தங்கும் வாய்ப்பாகவும் இன்று அமைகிறது.

எது எப்படியோ தேனிலவென்பது புதுத்தம்பதிகளுடன் இலவச இணைப்புகள் என்று எவரும் ஒட்டிக் கொள்ளாமல், தம்பதிகள் தாங்கள் மட்டுமே தனியே சுற்றுலா சென்று வர கிட்டிய ஒரு வாய்ப்பு என சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். அப்புறம் தான் இருக்கவே இருக்கிறதே குழந்தைகள், புகுந்த வீட்டு உறவுகள், பிறந்த வீட்டு பந்தங்கள் என்று ஏராளமான கமிட்மெண்ட்டுகள். எல்லோரையும் பிறகெப்போதும் உங்களால் அத்தனை ஈசியாக கழட்டி விட்டு விட்டு தனியாக டூரெல்லாம் சென்று விட முடியாது தம்பதிகளே!

அதனால் கிடைக்கும் வாய்ப்பை, கிடைத்த நேரத்தில் உபயோகப்படுத்த மறந்து ஹனிமூன் வாய்ப்பை இழந்தவர்களாகி விடாதீர்கள்!

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

நகரங்களின் ஒளித் திருவிழா

 
12jkrbangkok

பாங்காக்

தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் கதைகளாகச் சொல்லப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு தீபாவளி என்பது தீபத்தை, நெருப்பை வணங்குவதற்கான பண்டிகை எனலாம். தமிழ்த் திருநாளில் சூரியனை வணங்குவதுபோல இந்தத் தீபத் திருநாளில் எல்லோரும் ஒளியை வணங்குகிறார்கள்.

12jkramsterm

ஆம்ஸ்டர்டம் ஒளித் திருவிழா

     
 

இந்தத் தீபத் திருநாள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கொண்டாடப்படும் தீபத் திருவிழா உலகப் பிரசித்திபெற்றது.

12jkrbijing

பீஜிங் விளக்குத் திருவிழா

 

இது அல்லாமல் சீனாவில் புத்தாண்டை ஒட்டியும் தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் தீபத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அங்கு இவை நகரங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டாடப்படுகின்றன.

12jkrdubaifestival

துபாய் ஒளித் திருவிழா

 

அதன் பாதிப்பாலோ என்னவோ ஆசிய நாடுகளிலும் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் இதேபோல் ஒரு தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இம்மாதிரியான தீபத் திருவிழாக்களின் ஒளிப்படத் தொகுப்பு இது.

12jkrlondonfestival

லண்டன் ஒளித் திருவிழா

12jkrsydneyfestival

சிட்னி ஒளித் திருவிழா

12jkrsingaporeLightfestival

சிங்கப்பூர் ஒளித் திருவிழா

http://tamil.thehindu.com

ஜேர்மனியில் பேர்லினிலும் Festival of Lights என்று அலங்கரித்து இருப்பார்கள்.

Bildergebnis für berliner lichtfestival

Bildergebnis für berliner lichtfestival

Bildergebnis für berliner lichtfestival

Ähnliches Foto

  • தொடங்கியவர்

வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த கட்டபொம்மன்

வியாபார நோக்கிலே இந்தியாவிற்குள் காலூன்றி நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களுக்கு எமனாய் திகழ்ந்த வீரத்தின் விளைநிலம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இன்றைக்கு அவரின் நினைவு நாள். அவரை நினைவு கூறும் இந்நாள் இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படும் நாள்.

பிறப்பு

பொம்மு வம்சாவளியில் வந்த ஜெகவீர கட்டபொம்மனுக்கும், ஆறுமகத்தமாளுக்கும் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிஞ்சியில் ஜனவரி மாதம் 3-ம் தேதி, 1760-ம் ஆண்டில் பிறந்தவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும்.கெட்டி பொம்மு என்றும் கூறுவர். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும். பூர்வீகம் ஆந்திரா மாநிலம் (பெல்லாரி). ஆனால் இவர் தமிழனாகவே வாழ்ந்தார்.

வெள்ளயனை எதிர்த்த வீரனாக

தமிழர்களை அடிமைப்படுத்தி தமிழ்நாட்டை ஆட்சிசெய்யலாம் என நினைத்துக்கொண்டு இருந்த வெள்ளையர்களை எதிர்த்து அவர்களை கதிகலங்க வைத்த வீரன் கட்டபொம்மன். கி.பி. 1797-ல் முதன்முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று தெறித்து ஓடினார். ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார்.
கட்டபொம்மனை அவமானப்படுத்த வேண்டும் என கங்கணம் கட்டிகொண்டு திரிந்தான் ஜாக்சன் துரை. ஆனால் கட்டபொம்மன் அனைத்தையும் பந்தாடினார். வரியை கேட்டு வந்த துரையிடம் மாமனா? மச்சானா? என வீர முழக்கமிட்டார் பொம்மன்.

கட்டபொம்மனின் தனிப்பட்ட வாழ்க்கை

வீரபாண்டிய கட்டபொம்மன், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். கட்டபொம்மன் வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்டபொம்மன். பின்னர், பிப்ரவரி 2-ம் தேதி, 1790-ம் ஆண்டில், 47-வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப்பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

இறக்கும் வரை வீரனாக வாழ்ந்த கட்டபொம்மன்

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளி என்று பழி சுமத்தினான் வெள்ளையன். கட்டபொம்மன் தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ மறுக்கவும் இல்லை. உயிர்ப்பிச்சை கேட்கவும் இல்லை. கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, வெள்ளைத் தோல்களுக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று வீர முழக்கம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை ஏறியபோதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் உள்ளத்திலும் பெருமையை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு நான் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார். தூக்குக் கயிற்றுக்கு புன்னகையுடன் முத்தமிட்டார் கட்டபொம்மன்.

இறப்பு

அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கோழைத்தனமாக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டான்
வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின்படி, கயத்தாறு கோட்டையிலே ஒரு ஒரு புளிய மரத்திலே தூக்கிலிடப்பட்டார்.

கட்டபொம்மனை நினைவுகூறும் சின்னங்களும்,மரியாதையும்.

கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடம் உள்ளது.கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக இன்றளவும் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறார்.1974-ல், தமிழக அரசு அவரது நினைவாக ஒரு புதிய நினைவுக் கோட்டை கட்டியது. மெமோரியல் ஹால் முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். பிரிட்டிஷ் சிப்பாய்களின் கல்லறைகூட கோட்டை அருகே காணப்படுகின்றன.அவரது அரண்மனைக் கோட்டையின் எச்சங்கள் இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.அவர் தூக்கிலிடப்பட்ட இடமான திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கயத்தாறில், அதாவது இன்றைய NH7 சாலையில், கட்டபொம்மனுக்கு மற்றுமொரு நினைவுச்சின்னம் இருக்கிறது. அவரது வீரத்தைப் போற்றும் விதமாகவும், நினைவுகூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. கட்டபொம்மனை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்டு இருநூறாம் ஆண்டு விழாவின் நினைவாக அக்டோபர் 16, 1799-ம் ஆண்டில், இந்திய அரசு ஒரு தபால் முத்திரையை வெளியிட்டது. இந்தியாவின் முதன்மையான தொடர்பு நரம்பு மையமாகக் கருதப்படும் விஜயணாராயனத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என பெயரிடப்பட்டது.1997 வரை, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன.வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம்), என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக பெயரிடப்பட்டு, செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டுவிழாவை, பாஞ்சாலங்குறிச்சியில் `வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக’ கொண்டாடுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வுபூர்வமான சுதந்திர போராட்டத்தில் உண்மையான முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு எழுப்பி வருகிறது.

 
Bild könnte enthalten: 1 Person, Text
  • தொடங்கியவர்

வளரும் நாடுகளில் 15-ல் ஒரு குழந்தைக்குப் போதுமான உணவில்லை... என்ன செய்யப் போகிறோம்? #WorldFoodDay

 
 

னித வாழ்க்கைக்கு ஆதாரம் நீர், உணவு, காற்று. எத்தனையோ நாடுகளில் டன் கணக்கில் உணவுகள் வீணாகிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில்தான், ஒரு வேளை உணவுக்குக்கூட உத்தரவாதம் இல்லாமல் ஹைத்தியிலும் ஜாம்பியாவிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கிறார்கள். அதிகம் போக வேண்டாம். இந்தியாவிலேயே நம் எல்லோருக்கும் உணவளிக்கும் விவசாயிகளே உணவில்லாமல் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை. இப்படிப்பட்டச் சூழலில்தான் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது... ‘உலக உணவு தினம்’. உலகின் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை வலியுறுத்துவதே இந்த நாளின் நோக்கம்.

உலக உணவு தினம்

 

உலக உணவு தினம் (World Food Day) ஆண்டுதோறும் அக்டோபர் 16-ம் நாளன்று உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. 1945-ம் ஆண்டில், இதே நாளில் ஐக்கிய நாடுகள் சபையால், கனடாவில் உள்ள கியூபெக் நகரில், உலக உணவு மற்றும் விவசாயக் கழகம் (FAO) நிறுவப்பட்டது. 1979-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகளவில் நாடுவிட்டு நாடு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 2015-ம் ஆண்டின் கணக்குப்படி, 24 கோடியே 40 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 2000-ம் ஆண்டைவிட 40 சதவிகிதம் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உலக அளவில் வளர்ச்சியடையாத நாடுகளில் சுமார் 98 சவிகிதம் குழந்தைகள் போதுமான அளவுக்கு ஊட்டச்சத்துள்ள உணவில்லாமல் இருக்கிறார்கள் என்கிறது அந்தப் புள்ளிவிவரம். வளரும் நாடுகளில் 15 குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்குப் போதுமான உணவில்லை..


காய்கறிகள், பழங்கள்

இவர்களுக்கான உணவுத் தேவையை எப்படிப் பூர்த்தி செய்யப் போகிறோம் என்பது நம் கண் முன் நிற்கும் மிகப் பெரிய கேள்வி. உணவு உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சவாலை எதிர்கொள்வதற்காகவே உலக உணவு தினத்தில் (World Food Day) `இடம்பெயர்பவர்களின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும்' (Change the future of migration) என்பதை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவித்திருக்கிறது ஐ.நா. மேலும், `உள்நாட்டிலேயே அதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும்; உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த உணவு உற்பத்திக்குப் பெரும் தடையாக இருப்பது பருவநிலை மாற்றம். அதாவது, புவி வெப்பமயமாதல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் பருவநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் தட்பவெட்ப நிலை, காற்று, ஈரப்பதம் என எல்லாச் சூழலியல் காரணிகளும் மாறிவிட்டன.

உலகில் பெரும்பாலான விவசாயிகள், பருவமழையைச் சார்ந்துதான் விவசாயம் செய்கின்றனர். மேலும், பருவ காலமே விவசாயத்துக்கும் பயிர் உற்பத்திக்கும் முக்கியமானதாக உள்ளது. ஆனால், இங்கே பருவ மழை பொய்த்துப் போகிறது; காவிரிக்கு நீதிமன்ற படி ஏறுகிறோம். வடக்கிலோ, பெருவெள்ளம்.


பசுமையான உலகம்

இந்தப் புவி நிலை மாற்றத்துக்கு இன்றியமையாத காரணம், புவி வெப்பமயமாதல். இன்றைய நிலையில், உலகில் மக்கள்தொகை அதிகரிப்பால், வாகனப் பயன்பாட்டால், கார்பன்டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்கள் அதிகரித்துவருகின்றன. மற்றொரு பக்கம், நகரமயமாக்கல் காரணமாக காடுகள், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுவருவதால், காடுகளின் அளவும் குறைந்துவருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, உலகின் வெப்பநிலை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இது தவிர, பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்தல் போன்ற பல்வேறு பாதிப்புகளை இன்றைய பருவநிலை மாற்றம் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்... நாடு என்ன செய்ய வேண்டும்... என்பதையெல்லாம் சிந்திக்கவேண்டிய முக்கியமான தருணம் இது. அதே நேரத்தில், நவீன வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியதும், அதற்கான மாற்று வழிகளைப் பற்றி சிந்திக்கவேண்டியதும் அவசியமாகிறது.

 

இரு சக்கர வாகனப் பயன்பாட்டைக் குறைப்பது; மாற்றாக, மிதிவண்டியைப் பயன்படுத்துவது. பிளாஸ்டிக்குகளைத் தவிர்ப்பது. இப்படிப் பல முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீர் நிலைகளைப் பாதுகாத்தல், ஆறுகளைப் பாதுகாப்பது, மரக்கன்றுகள் நடுவது எனத் திரும்பத் திரும்ப சூழலியலாளர்கள் வலியுறுத்தும் செயல்களில் ஈடுபடலாம். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைப் பிறருக்குத் தெரிவிப்பது, குழந்தைகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது போன்ற எளிய காரியங்களைச் செய்யலாம். உணவின் உற்பத்தியை அந்தந்த நாடுகளில் அதிகரிப்பதன் மூலம் உணவுக்காகவும், வாழ்க்கைக்காகவும் நடைபெறகூடிய மக்களின் இடப்பெயர்வை தடுக்கலாம். அதற்கு முக்கியமாக, விவசாயிகளின் வாழ்வாதாரம் கெடாமல் பாதுகாக்கவேண்டியது மிக மிக அவசியம். இந்த உலக உணவு தினத்தில் நாம் செய்யவேண்டியது இதைத்தான்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.