Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் : சராசரி கடல் மட்டம் என்றால் என்ன?

 
 
Earth%20-2col

 

 
 

தெரு ஓரத்தில் கற்கள் ஒரு குவியலாகக் கிடக்கும். ஆனால் அருகே ஒரு குழியில் தேங்கியுள்ள நீர் இப்படிக் குவியலாக இருக்காது. குழியோ, நீச்சல் குளமோ, ஏரியோ, கடலோ எதுவாக இருந்தாலும் தண்ணீரானது எப்போதும் ஒரு மட்டத்தில் காணப்படும். திரவப் பொருட்கள் அனைத்தும் இப்படித்தான் இருக்கும்.

இது பல வகைகளிலும் நமக்கு வசதியாக இருக்கிறது. கட்டிடத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணியின்போது கட்டுமானம் ஒரே மட்டத்தில் உள்ளதா என்று அவ்வப்போது சோதிக்க நீண்ட மெல்லிய பிளாஸ்டிக் குழாய்களில் தண்ணீரை ஊற்றி அதைப் பயன்படுத்துகின்றனர். ரசமட்டம் எனப்படும் கருவியும் உண்டு.

ஓர் இடத்தின் உயரத்தைக் குறிப்பிட நாம் கடல் நீரின் மட்டத்தை அடிப்படையாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் நடைமுறையில் பூமியில் கடல் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை.அத்துடன் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதால் நாமாக சராசரி கடல் மட்டம் என ஒன்றை நிர்ணயித்து அதைப் பயன்படுத்துகிறோம்.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர். இவ்வாறு கூறுவது எவரெஸ்ட் சிகரம் சராசரி கடல் மட்டத்திலிருந்து அவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதைக் குறிக்கிறது. உங்கள் ஊர் எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதும் இப்படித்தான் குறிப்பிடப்படுகிறது, சரி, உங்கள் ஊர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் ஊரில் ரயில் நிலையம் இருக்குமானால் நடைபாதையின் கோடியில் உள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தால் போதும். அதன் அடிப்புறத்தில் above 245 MSL என்று எழுதப்பட்டிருந்தால் உங்கள் ஊரானது சராசரி கடல் மட்டத்திலிருந்து 245 மீட்டர் உயரத்தில் உள்ளது என்பதை அது காட்டும். MSL என்பது சராசரி கடல் மட்டம் (Mean Sea Level) என்பதைக் குறிப்பதாகும்..

சராசரி கடல் மட்டம் என்று கூறுவதற்குக் காரணம உள்ளது. நீச்சல் குளத்தில் அல்லது ஓர் ஏரியில் நீர் மட்டம் சலனமற்று இருக்கலாம். மாறாக, கடல்களில் எப்போதும் அலைகள் உண்டு. சில சமயங்களில் பெரிய அலைகளும் இருக்கும். இதற்கு காரணம் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஈர்ப்பு சக்தி. காற்றும் ஒரு காரணமே.

கடல்களில் வேலையேற்றம் வேலையிறக்கம் என உண்டு. (வேலை என்றால் கடல் என்று பொருள்) குறிப்பாகத் துறைமுகப் பகுதிகளில் இது நன்கு புலப்படும். அதாவது ஒரு சமயம் கடல் நீரானது துறைமுகத்துக்குள் வெள்ளம் போலப் பாயும். அது வேலையேற்றம். இன்னொரு சமயம் வெள்ளம் போன்று துறைமுகத்திலிருந்து கடல் நீர் வெளியேறும். இது வேலையிறக்கம். இப்படியாகக் கடல் நீரின் மட்டம் மாறிக் கொண்டே இருக்கிறது.

Earth%20-1col
 

இது போதாதென சூரியனிடமிருந்து கடல்கள் பெறும் வெப்பம் காரணமாக நீர் விரிவடைந்து கடல்களில் சில இடங்களில் கடல் நீர் ’மேடு’ போல அமைந்திருக்கும். இப்படி ’மேடு’ போல உள்ள இடங்களிலிருந்து கடல் நீர் வேறு பகுதிக்கு நதிபோல ஓடும். இதைக் கடல் நீரோட்டம் என்று கூறுவார்கள். கடல் நீரோட்டம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் செல்வதாக இருக்கலாம். உலகில் பல இடங்களில் கடல் நீரோட்டங்கள் உள்ளன.

தவிர, வட அமெரிக்கக் கண்டத்தையும் தென் அமெரிக்கக் கண்டத்தையும் இணைக்கும் நிலப் பகுதியில் மேற்கே உள்ள பசிபிக் கடலின் நீர் மட்டமானது அட்லாண்டிக் கடலின் நீர் மட்டத்தை விட சுமார் 20 சென்டிமீட்டர் உயரமாக உள்ளது.

கடந்த நூற்றாண்டில் நடந்த ஆய்வுப்படி விசாகப்பட்டினத்தில் அதாவது வங்கக் கடலின் நீர் மட்டம் மும்பையில் அதாவது அரபிக் கடலின் நீர் மட்டத்தை விட 30 சென்டிமீட்டர் உயரமாக உள்ளது. காற்றின் போக்கு, கடலில் கலந்துள்ள உப்பு அளவு போன்றவை இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரச்சினை இத்துடன் நிற்கவில்லை. பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதால் வட, தென் துருவப் பகுதிகளில் பனிப் பாளங்கள் மெல்ல உருகிவருவதால் கடலின் நீர் மட்டம் ஆண்டுக்குச் சராசரியாக 3.2 மில்லி மீட்டர் வீதம் உயர்ந்து வருகிறது. இவையெல்லாம் கடல் மட்டம் என்பது நிலையான ஒன்று அல்ல என்பதைக் காட்டுகிறன.

கடல் மட்ட நிலைமைகளை ஆராய்வதற்கென்றே பல ஆய்வு செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்பட்டுள்ளன. இவையும் கடல் மட்டம் மெல்ல உயர்ந்துவருவதை உறுதிப்படுத்தியுள்ளன.

இத்தனை அம்சங்களையும் கணக்கில் கொண்டுதான் சராசரி கடல் மட்டம் கணக்கிடப்பட்டு, அது பயனில் உள்ளது.

http://tamil.thehindu.com/

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆபத்தை எதிர்கொள்ளும் புதுரக ஒராங்குட்டான்கள்

ஒராங்குட்டான் (மனிதக்குரங்கு) வகை புதிய இனங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் விஞ்ஞானத்திற்கு புதிதாக விவரிக்கப்பட்டுள்ள பெரிய குரங்கு இனமாகும். ஆனால், தற்போது வெறும் 800 ஒராங்குட்டான்கள் மட்டுமே எஞ்சி இருப்பதால் அவை முற்றிலும் அரிதான இனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

இவன்கா ட்ரம்ப் வருகையையொட்டி ஹைதராபாத்தில் பிச்சை எடுக்கத் தடை!

 

இவன்கா

Chennai: 

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவன்கா ட்ரம்ப் வருகையையொட்டி, ஹைதராபாத்தில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிள்ளது. இது தொடர்பான அறிக்கையை, ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மஹேந்தர் ரெட்டி வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின்படி, “சில முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில், பிச்சை எடுப்பவர்கள் நடத்துகொள்கிறார்கள் என்று எங்கள் கவனத்துக்கு வந்தது. மேலும், இந்தத் தொழிலில் ஊனமுற்றவர்களும்  குழந்தைகளும் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இதனால், செவ்வாய்க்கிழமை (7.11.2017) 6 மணி முதல் 2018 ஜனவரி 7-ம் தேதி காலை 6 மணிவரை, ஹைதராபாத்தில் பிச்சை எடுக்கத் தடை விதித்துள்ளோம். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்கவே இந்தத் தடை அறிவித்தற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், இவன்கா டிரம்பின் வருகையையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தத் தடை, அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும்.  

 

ஹைதராபாத்தில் நடக்கவுள்ள சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில், இவன்கா ட்ரம்ப் கலந்துகொள்ளவிருக்கிறார். ஆனால், ஹைதராபாத்தில் இப்படி நடப்பது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே, கடந்த 2000-ம் ஆண்டு, ஹிலாரி கிளின்டன் வந்தபோது, பிச்சை எடுப்பது தடைசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

இந்த செய்திக்கு இருவர் எழுதி இருந்த கருத்து...:grin:

 

ஏன்... அவங்க மொத்தமா ??? எடுத்துடுவாங்களா .....

ஏன் தடை? அவங்க எடுக்கபோறாங்களாமா? மத்த பிச்சைக்காரர்களின் தொழில் பாதிக்கப்படாது? இது மனித உரிமை மீறல்!

 

  • தொடங்கியவர்

'Unbeatable service..!' வைரலாகும் ஏர் இந்தியா விளம்பரம்..!

 

விமானப் பயணி தாக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

DOHU0ZJVwAEUgh7_23415.jpg

 

சென்னையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக விமான நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏற முயற்சிக்கும் ராஜீவ் கட்டியால் என்ற பயணியிடம் விமான நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பின்னர், அவரை இழுத்துப் போட்டு கீழே தள்ளிவிட்டு தாக்குகின்றனர். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

DOHGNYRVoAM1QAR_23415.jpg

இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டதோடு, தாக்குதலில் ஈடுபட்ட ஊழியரை பணி நீக்கம் செய்ததாகவும் அறிவித்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம், அதனுடைய ட்விட்டர் பக்கத்தில் விளம்பரப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், Unbeatable service என்று மேற்கூறிய சம்பவத்தை குறிக்கும் விதமாக வெளியிட்டுள்ளனர். அதேப்போல, ஜெட் ஏர்வேஸ் லோகோவுடன் 'We beat our competition, not you'  என்று சமூக வலைதளங்களில் படம் ஒன்று வைரலானது. இதற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியது. இதுகுறித்து தெரிவித்த ஜெட் ஏர்வேஸ், 'ஜெட் ஏர்வேஸ் தொடர்பாக பரவும் அந்தப் படம் எங்களுடையது அல்ல' என்று விளக்கமளித்துள்ளது. 

http://www.vikatan.com/

 

  • தொடங்கியவர்

யானை வரைந்த ஓவியங்கள் ஏலத்தில் விற்பனை

யானையொன்று வரைந்த ஓவியங்கள் ஹங்கேரியில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹங்கேரிய சேர்க்கஸ் குழுவொன்றினால் பராமரிக்கப்படும் 42 வயதான சான்ட்ரா எனும் இந்திய யானை இந்த ஓவியங்களை வரைந்தன.

இந்த ஓவியங்கள் தலா 40,000 ஹங்கேரியன் ஃபொரின்ட்களுக்கு (சுமார் 23,000 ரூபா) விற்பனை செய்யப் பட்டுள்ளன.

http://metronews.lk

elephant.jpg

 

'பற்ற வைக்கப்பட்ட தீயுடன் ஓடும்' யானைகளின் புகைப்படத்திற்கு சர்வதேச விருது

இரண்டு யானைகள்படத்தின் காப்புரிமைBIPLAB HAZRA/SANCTUARY WILDLIFE PHOTOGRAPHY AWARDS Image captionபற்றி எரியும் தீயுடன், உயிரை காக்க மனிதர்களிடமிருந்து தப்பி ஓடும் யானைகள்

 

தங்களுக்கு தீ வைத்த ஒரு குழுவிடமிருந்து தப்பியோடும் இரண்டு யானைகளின் புகைப்படம் வனவிலங்கு புகைப்பட போட்டியொன்றில் முதன்மையான பரிசை வென்றுள்ளது.

http://www.bbc.com

யானை மிரண்டால்...

 

 
elepant_fire

பிப்லப் ஹஸ்ரா (Biplab Hazra) என்பவர் எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தில் குட்டி யானையும் அதன் தாயும் தீ வைக்கப்பட்ட நிலையில் தங்கள் உயிர்களை காக்க ஓடுகின்றன. மனத்தை கனக்கச் செய்யும் இந்தப் படம் சரணாலய வனவிலங்கு புகைப்பட விருதை வென்றுள்ளது. கானுயிர் பாதுகாப்பு மற்றும் சமுதாய ஈடுபாட்டை மையமாக்கிச் செயல்படும் மும்பையைச் சார்ந்த அரசு சார்பற்ற அமைப்பு (சான்சுவரி நேச்சர் பவுண்டேஷன்) இந்த விருதினை வழங்கியது. விருது அறிவித்த பத்திரிகை, 'இந்த வகையான மனித நேயமற்றச் செயல்....இங்கு வழக்கமானதுதான்’ என்று பதிவு செய்துள்ளது.

'நரகத் துளை' (‘Hell Hole’) எனப் பெயரிடப்பட்ட இந்தப் புகைப்படம் வனவிலங்குகளுக்கு எதிராக மனிதம் எந்த அளவுக்கு காலாவதியாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கான கண்கூடான சாட்சியாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான போராட்டம் அடிக்கடி நடந்தேறிக் கொண்டிருக்கிறது. பாங்குரா மாவட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் இரண்டு யானைகள் மீதும் தார் குண்டுகள் மற்றும் பட்டாசுகளை எறிந்துள்ளனர், தீப்பற்றியுள்ள நிலையில் அவை தப்பிக்க முயல்கின்றன.

hell-hole-powerful-photo-elephant-fire-w

இத்தகைய கொடூரமான வன்செயலுக்குப் பின்னர் அந்த இரண்டு யானைகளுக்கு என்ன நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. குட்டி யானை மட்டும் பிழைத்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஸ்ராவின் இந்தப் புகைப்படம், முடிவற்ற யானைகள் மற்றும் மனிதர்களுக்கிடையே நிகழும் மோதலுக்கான ஆதாரம் ஆகும்.

d9e6cc9509b96bf97af0595286d82399.jpg

மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் இத்தகைய செயல்கள் சர்வ சாதாரணமானது என்கிறனர் சான்சுவரி ஏஷியா பவுண்டேஷன் அமைப்பினர். ஆசியாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில்தான் 70 சதவிகிதம் உள்ளது. ஆனால் நம்முடைய சக ஜீவிகளான வனவிலங்குகளை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, இயலாதவர்களாகி, அவற்றை அழிக்கத் தொடங்குவது வெட்கக் கேடானச் செயல்.

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கிட்டத்தட்ட 84 யானைகள் கொல்லப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. யானைகள் பெரும்பாலும் தந்தங்களுக்காகத்தான் குறி வைக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. மனிதர்களின் கையில் சிக்கிய யானைகள் ஆண்டாண்டு காலமாக பலவகையான அழிவுகளுக்கு உள்ளாகி வருவது கொடும் நிஜம். இந்தப் புகைப்படத்தில் உள்ள காட்சி சுடும் நிஜமாகி மனதைப் பற்றி எரியச் செய்கிறது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் இந்த யானைகள் மிரண்டால் தங்களது நிலை என்ன என்பதை மனிதர்கள் உணர வேண்டும்.

http://www.dinamani.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 09

 

1799 : பிரெஞ்சுப் புரட்சி முடி­வுக்கு வந்­தது. நெப்­போ­லியன் போன­பார்ட்டின் கட்­டுப்­பாட்­டுக்குள் பிரான்ஸ் வந்­தது.

1872 : அமெ­ரிக்­காவின் மசா­சூசெட்ஸ் மாநி­லத்தில் பொஸ்டன் நகரில் களஞ்­சியசாலை ஒன்றில் ஏற்­பட்ட தீ பர­வி­யதில் பொஸ்­டனின் பெரும் பகுதி அழிந்­தது. 776 கட்­ட­டங்கள் அழிந்து 20 பேர் கொல்­லப்­பட்­டனர்.

welikada-varalaru.jpg1887 : ஐக்­கிய அமெ­ரிக்கா ஹவாய் தீவின் பேர்ள் துறை­மு­கத்தின் உரி­மையைப் பெற்­றது.

1913 : தென் ஆபி­ரிக்­காவில் மகாத்மா காந்தி கைது செய்­யப்­பட்டார். அவ­ருக்கு 9 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

1921 : அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்­கி­ய­மைக்­காக பௌதி­க­வி­ய­லுக்­கான நோபல் பரிசைப் பெற்றார்.

1937 : ஜப்­பா­னியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரைக் கைப்­பற்­றின.

1938 : அடோல்வ் ஹிட்­லரின் யூதப் பகைமைக் கொள்­கையின் ஒரு பகு­தி­யாக ஜேர்­ம­னியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்­பெற்­றது. 90 யூதர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். 25,000 பேர் கைது செய்­யப்­பட்டு நாஸி வதை முகாம்­களில் அடைக்­கப்­பட்­டனர்.

1953 : கம்­போ­டியா, பிரான்­ஸி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்­றது.

1963: ஜப்­பானில் மீக் என்ற இடத்தில் நிலக்­கரிச் சுரங்­கத்தில் இடம்­பெற்ற விபத்தில் 458 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1963: ஜப்பான் யோகோ­ஹாமா என்ற இடத்தில் மூன்று ரயில்கள் மோதி­யதில் 160 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1967 : நாசா நிறு­வனம் கேப் கென்­னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்­பல்லோ 4 விண்­க­லத்தை விண்­ணுக்கு அனுப்­பி­யது.

1985 : சது­ரங்க (செஸ்) உல­கக்­கிண்ணப் போட்­டியில், 22 வய­தான கெரி கஸ்­பரோவ், அன­டோலி கார்ப்­போவைத் தோற்­க­டித்து உலகின் முத­லா­வது வயது குறைந்த சது­ரங்க வீரர் என்ற பெரு­மையைப் பெற்றார்.

1989 : பேர்லின் சுவரை கம்­யூ­னிசக் கிழக்கு ஜேர்­மனி திறந்து விட்­ட­தை­ய­டுத்து, கிழக்கு ஜேர்­ம­னி­யி­லி­ருந்த பலர் மேற்கு ஜேர்­ம­னிக்குள் செல்ல ஆரம்­பித்­தனர்.

1990 : நேபா­ளத்தில் புதிய மக்­க­ளாட்சி அர­சி­ய­ல­மைப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

1994 : டார்ம்ஸ்­டாட்­டியம் (Darmstadtium) என்ற மூலகம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

2000 : உத்­த­ராஞ்சல் மாநிலம், இந்­தி­யாவின் உத்­தரப் பிர­தேச மாநி­லத்தில் இருந்து பிரிக்­கப்­பட்­டது.

2005 : வீனஸ் எக்ஸ்­பிரஸ் என்ற ஐரோப்­பாவின் விண்­கலம் கஸகஸ்­தானில் இருந்து ஏவப்­பட்­டது.

2005 : ஜோர்­தானின் அம்மான் நகரில் மூன்று விடு­தி­களில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில் 56 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2012 : பர்­மாவில் எரி­பொருள் ஏற்­றிச்­சென்ற ரயில் தீப்­பற்­றி­யதால் 27 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2012 : வெலிக்­கடை சிறைச்சா­லையில் கைதி­க­ளுக்கும் சிறைக் காவ­லர்­க­ளுக்கும் இடை­யி­லான மோதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

2016 : அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தல் பெறு­பே­று­களில் ஹிலாரி கிளிண்­டனை தோற்­க­டித்து ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கு­வ­தற்­கான 270 தேர்தல் கல்­லூரி வாக்­கு­களை டொனால்ட் ட்ரம்ப் சுவீகரித்தார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்! - மரணத்தைத் தள்ளிப்போட்ட நார்மேன் கசின்ஸ்! #MotivationStory

 

‘சிரிப்பே மருந்து’... எத்தனையோ பேர் நம்மிடம் சொல்லியிருப்பார்கள், பலமுறை கேட்டிருப்போம். உண்மையில் அதை முயன்று பார்ப்பதற்கு நம்மில் பலர் தயாராக இல்லை. சிரிப்புக்கு அத்தனை மகத்துவம் உண்டு. அதை மருந்தாகப் பயன்படுத்தி ஒரு பெரிய துன்பத்திலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட ஒருவர் உண்டு. கடந்த 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர், பேராசிரியர், வழக்கறிஞர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மையோடு இயங்கிய அவர் நார்மேன் கசின்ஸ் (Norman Cousins). சிரிப்பின் அருமையை உலகுக்கு உணர்த்திய அவரின் கதை இது.

நார்மேன் கசின்ஸ்

 

1915, அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் பிறந்தார் நார்மேன் கசின்ஸ். பதினோரு வயதிலேயே காசநோய் பாதிப்பு... மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். காசநோய் போன்ற நுரையீரல் பாதிப்புக்கு ஆளான சிறுவர்களால் விளையாட்டில் ஈடுபடுவது கடினம். ஆனால், தடகள விளையாட்டுகளில் அத்தனை ஆர்வமாக இருந்தார் கசின்ஸ். உற்சாகமாக அந்த விளையாட்டுகளில் பங்கெடுத்துக்கொள்ளவும் செய்தார். சிறுவயதிலேயே பத்திரிகைகளைப் படிப்பதிலும், எழுதுவதிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அவர் படித்த பள்ளியிலிருந்து வெளிவந்த பத்திரிகையின், கட்டுரைகளில் தன் எடிட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

படித்து முடித்ததும் `நியூயார்க் ஈவினிங் போஸ்ட்’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். அடுத்த வருடமே `கரன்ட் ஹிஸ்டரி’ என்ற பத்திரிகையில் வேலை. ஒருகட்டத்தில் அங்கே மேனேஜிங் எடிட்டர் பதவி வரை உயர்ந்தார். பிறகு `சாட்டர்டே ரிவ்யூ ஆஃப் லிட்டரேச்சர்’ என்ற பத்திரிகையில் சேர்ந்து, அங்கே முதன்மை ஆசிரியரானார். 20,000 பிரதிகள் மட்டுமே விற்றுக்கொண்டிருந்த பத்திரிகை விற்பனையை 6,50,000 லட்சத்துக்கு உயர்த்தினார்.

நார்மேன் கசின்ஸ்

நேர்மறைச் சிந்தனை ஒரு மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு உதாரணம் நார்மேன் கசின்ஸ். லாஸ் ஏஞ்சலிஸில் இருந்த கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியாகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. மனநிலைக்கும் உடல்நிலைக்கும் உள்ள தொடர்பை ஆராய்வதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. இன்னொரு பக்கம் சமூக அக்கறையும் அவருக்கு இருந்தது. அணு ஆயுதங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள், உலக அமைதிக்கான செயல்பாடுகள் என ஒரு சமூகச் செயல்பாட்டாளராகவும் இருந்தார். ஒரு மனிதரின் பயோடேட்டாவை விவரிப்பதுகூட சில நேரங்களில் அவசியமாகிறது. தன்னம்பிக்கை, எதையும் பாசிட்டிவாக அணுகுவது என்கிற பழக்கம் ஆரம்பகாலத்திலிருந்து இருந்ததால்தான் கசின்ஸால் எதையும் தன் வாழ்வில் எதிர்கொள்ள முடிந்தது. பல பரிசுகள், விருதுகள், பல அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளையெல்லாம் வகித்தார் கசின்ஸ். இனி கதைக்கு வருவோம்.

1964-ம் ஆண்டில் திடீரென்று அவருக்கு உடல்நல பாதிப்பு. `கனெக்டிவ் டிஸ்யூ டிசீஸ்’ (Connective Tissue Disease), `கொலாஜன் டிசீஸ் (Collagen Disease)’ என்ற பெயரையெல்லாம் சொல்லி `வாழ்வே மாயம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்குச் சொல்வதுபோல மருத்துவர்கள் நாள் குறித்தார்கள். `இன்னும் ஆறு மாசம்தான்... அதுக்கு மேல தாங்காது’ என்றார்கள். `இந்த நோய் வந்தவர்களில் 500-ல் ஒருவர் பிழைப்பதற்குத்தான் வாய்ப்பு இருக்கிறது’ என்று பயமுறுத்தினார்கள். எதற்கும் அசரவில்லை கசின்ஸ். அதே நேரத்தில் அவர் அனைத்தையும் கடந்த துறவியும் அல்ல. அவருக்கும் கோபம், மனஅழுத்தம், கவலை இவையெல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஒருவேளை இந்த நோய் வந்ததற்கு இவையெல்லாம்கூட காரணமாக இருக்கலாம் என்றும் நினைத்தார்.

நேர்மறை

வீட்டுக்கு வந்தார். ஆர அமர உட்கார்ந்து `என்ன செய்யலாம்... இந்த மாதிரி நோயெல்லாம் எனக்கு வரக் கூடாதே... இதுல இருந்து மீண்டுடணுமே...’ என்றெல்லாம் யோசித்தார். யோசிக்க யோசிக்க அவருக்கு ஓர் உண்மை பிடிபட்டது. `எதிர்மறை எண்ணங்கள், செயல்கள் உடல்நலக் குறைபாட்டுக்கு காரணமாகின்றன. அப்படியானால், நேர்மறை எண்ணங்களும் செயல்களும் உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்க வேண்டும் அல்லவா?’ அதை நடைமுறையில் செய்து பார்த்துவிடுவது என்கிற முடிவுக்கு வந்தார். செயலில் இறங்கினார்.

நேர்மறை எண்ணங்கள்

அவருக்குத் தெரிந்து நேர்மறை செயல்பாடுகளில் முக்கியமானது சிரிப்பு. அதையே தன்னை நோயிலிருந்து காக்கும் கவசமாகப் பயன்படுத்த முடிவெடுத்தார் கசின்ஸ். கீட்டோன், சார்லி சாப்ளின், மார்க்ஸ் பிரதர்ஸ்... என்று அப்போதிருந்த பிரபல நகைச்சுவை நடிகர்கள் நடித்த படங்களையெல்லாம் பார்க்க முடிவெடுத்தார். அது வி.சி.ஆரெல்லாம் பயன்பாட்டில் இல்லாத காலம். இவர்கள் நடித்த திரைப்படங்களையெல்லாம் வாடகைக்கு வாங்கி வீட்டிலேயே தனியாக புரொஜெக்டர், திரையெல்லாம் அமைத்து போட்டுப் பார்த்தார். படங்களைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார். இது போதாதென்று நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்தார். நண்பர்களிடம் சதா நகைச்சுவை குறித்தே பேசிச் சிரித்து மகிழ்ந்தார். கூடவே உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொண்டார். வைட்டமின் சி மருந்துகளை எடுத்துக்கொண்டார்.

சிரிப்பு

 

 

அவருக்கு வந்த நோய் சாதாரணமானதல்ல. உடல் வலியில் உறக்கம் வராது. ஆனால், தன் சுயபரிசோதனை முயற்சிகளில் ஒன்றைக் கண்டுபிடித்தார் கசின்ஸ். பத்து நிமிடங்களுக்குச் சிரித்தால் பல மணி நேரங்களுக்கு வலி வருவதில்லை என்பதைக் கண்டுகொண்டார். அதனாலேயே சிரிப்பை `சிக்’கென்று பற்றிக்கொண்டார். சிரிப்பை வாழ்நாளெல்லாம் துரத்திக்கொண்டு ஓடினார். சிரிப்பும் அவரை `விடாது சிரிப்பு’ என்பதுபோல கூடவே வந்தது. நோயோடு போராடியதில் வெற்றி அவருக்கே கிடைத்தது. `ஆறு மாதங்கள்கூட வாழ முடியாது’ என்று சொல்லப்பட்ட கசின்ஸ், 20 வருடங்களுக்கும் மேல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார். அந்த நோயிலிருந்து தான் மீண்ட கதையை ஒரு புத்தகமாக எழுதி, விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் கசின்ஸ். அந்தப் புத்தகத்தின் பெயர், `அனாட்டமி ஆஃப் அன் இல்னெஸ் பெர்சிவ்டு பை தி பேஷன்ட்’ (Anatomy of an Illness as Perceived by the Patient). மகிழ்ச்சியான வாழ்க்கையும் சிரிப்பும் நமக்கெல்லாம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் புத்தகம். கசின்ஸ் மரணத்தைத் தள்ளிப் போட்டதன் மூலமாக நமக்கெல்லாம் அதன் உண்மையை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இது மர்லின் மான்றோவுக்குப் பிடிச்ச பெர்ஃப்யூம்... ‘வாவ்’ வாசனைத் திரவியங்கள்!

 
 

என்னதான் நாம உடைகளுக்கு மேட்சிங்கா நகைகள், நெயில்பாலிஷ்னு போட்டாலும், உங்களோட தனித்தன்மையை என்றும் நினைவில் இருக்கச்செய்வது பெர்ஃப்யூம்கள்தான். அதிலும் குதூகலமான விழாக்களில் தனித்திருக்க, உங்களின் ஞாபகம் என்றுமே நிலைத்திருக்க சூப்பரான பெர்ஃப்யூம்ஸ் லிஸ்ட் இதோ...

Perfumes

 

ஜியோர்ஜியோ அர்மானி:ஜியோர்ஜியோ அர்மானி பெர்ஃப்யூம்

நாம் பெர்ஃப்யூம் பயன்படுத்தும் வழக்கம், சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது. அந்தக் காலத்தில் செல்வந்தர்களின் நவநாகரிக ஆயுதமாக இருந்தது இந்த பெர்ஃப்யூம்தான். அவர்கள் வாசனைத் திரவியத்தை மேனியில் பூசிக்கொள்வது மட்டுமல்லாமல், குடிக்கவும் செய்வார்களாம்! அப்படி பெர்ஃப்யூம் பயன்படுத்திய காலம் போய், இப்போது ஒவ்வோர் இடத்துக்கு ஏற்ப பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.

அந்த வகையில் `ஜியோர்ஜியா அர்மானி' இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனை ஆகும் பெர்ஃப்யூம். 1982-ம் ஆண்டில்  வெளிவந்த இந்த அர்மானி வாசனை திரவியம், பல பெரிய வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. 80-க்கும் மேலான பெர்ஃப்யூம் வகைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளன. 4,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை இந்த அர்மானி பெர்ஃப்யூம்கள் கிடைக்கும். நாள் முழுக்க நறுமணத்துடன் இருக்க, கொஞ்சமா ஸ்பிரே பண்ணாலே போதும்... கல்யாண வீடே அர்மானி ஜாலம்தான்.

பர்பெர்ரிபர்பெர்ரி:

பெர்ஃப்யூம் உருவாக்குவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. நல்ல வாசனைத் திரவிய உற்பத்தியாளருக்கு `ஒல்ஃபாக்‌ஷன்' (olfaction) எனும் ஆற்றல் இருக்க வேண்டும். அதில் முதல் தேர்வு 250 திரவிய நோட்ஸ்களை நுகர்ந்து பார்த்து, அத்தனை மணங்களையும் சரியாகச் சொல்ல வேண்டும். அப்படி எல்லோராலும் சரியாகக் கணிக்கக்கூடிய வாசனைத் திரவியம் `பர்பெர்ரி பெர்ஃப்யூம்'. தரத்திலும் மணத்திலும் என்றைக்கும் மேலோங்கியிருக்கும் ஒரே பெர்ஃப்யூம். க்யூட்டான பாட்டில்களில் வரும் இந்த பர்பெர்ரி வாசனைத் திரவியம், 1,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய் வரை கிடைக்கும். இதைக் கொஞ்சமா  அடிச்சாலே வாசனை  தூக்கும்!

ரால்ஃப் லாரென்:ரால்ஃப் லாரென்

வாசனைத் திரவியத்தை, ஆண்களுக்கானது, பெண்களுக்கானது என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஆனால், பெண்கள் அதிகமாக விரும்புவது ஆண்களுக்கான பெர்ஃப்யூம் நறுமணத்தைதான். உலகளவில் சுமார் 30 சதவிகிதப் பெண்கள் அதிகம் விரும்பிப் பயன்படுத்துவது ஆண்களுக்காகத் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்தைதான். அப்படிப்பட்ட பெர்ஃப்யூம்தான் இந்த `ரால்ஃப் லாரென்'.

இது ஆண்களுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பெர்ஃப்யூம். இந்தியாவிலேயே அதிகமாக வாங்கிப் பயன்படுத்தும் ஒரு வாசனைத் திரவியம். குறிப்பாக, பெண்கள். பல அழகிய வடிவமைப்பில் வரும் இந்த வாசனைத் திரவியம், 2,000 ரூபாயிலிருந்தே கிடைக்கும். இன்னுமா வெயிட் பண்றீங்க? 

ஹியூகோ பாஸ்:

ஹியூகோ பாஸ்ஒரே பெர்ஃப்யூம் வெவ்வேறு உடலில் வெவ்வேறு மணத்தைக் கொடுக்கும். காரணம், நம் தோல்களில் ஏற்படக்கூடிய pH (கார அமிலத்தன்மை), ஈரப்பதம், ஹார்மோன்கள் என இந்த அளவீடுகளின் மாற்றமே. அதனால், மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கண்மூடித்தனமாக வாங்கிவிடாதீர்கள். உங்களுக்கு அது பொருந்துகிறதா என்பதை சோதனை செய்துவிட்டு வாங்குங்கள்.

`அட போப்பா... சோதனையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தா, என் ஆளை நான் எப்ப பார்க்கிறது?' எனும் நபரா நீங்கள்? உங்களுக்காகவே இருக்கிறது `ஹியூகோ பாஸ்' வாசனைத் திரவியம். இதை சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. தனித்தன்மையிலும் தரத்திலும் ஹியூகோ பாஸுக்கு முதல் இடம் உண்டு. ஆண்-பெண் என எண்ணற்ற நறுமண வகைகளைக்கொண்ட இந்த வாசனை திரவியம், 1,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை உள்ளது. விழாக்களை இன்னும் சிறப்பாகக் கொண்டாட இந்தப் பெர்ஃப்யூம் நிச்சயம் உதவிபுரியும்.

டியோர்:

உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த மூக்கு யாருக்கு இருந்தது தெரியுமா? `ஜீன்CD2_12188.jpg சார்லஸ்' என்கிற மிகச்சிறந்த பெர்ஃப்யூமர்தான் அந்தப் பெருமைக்குரியவர். இவருடைய மூக்கு, சுமார் 1 மில்லியன் டாலருக்குக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றனர். இவர், தன் இறுதி நாள்களில் நுகரும் தன்மையை முற்றிலும் இழந்துவிட்டார். இருப்பினும், வாசனைத் திரவியம் தயாரிக்கும் செயலிலிருந்து அவர் எப்போதுமே பின்வாங்கியதில்லை. தொடர்ந்து தலைசிறந்த பெர்ஃப்யூம்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதில் ஒன்றுதான் `டியோர்' பெர்ஃப்யூம். விலை உயர்ந்த சிறந்த பெர்ஃப்யூம்களில் டியோருக்கு இணை எதுவுமே இல்லை. பண்டிகை நாள்களில் சற்றும் யோசிக்காமல் பயன்படுத்தலாம். கிளாஸ் திரவியமான `டியோர்' 6,000 ரூபாயில் தொடங்கி 30,000 ரூபாய் வரை உள்ளது.

CC_12196.jpgஷநெல்:

1924-ம் ஆண்டு வெளிவந்த `ஷநெல்' ரொம்பவே ஸ்பெஷல். கொஞ்சம் பயன்படுத்தினாலே சுற்றி உள்ளவர்களைச் சுண்டி இழுக்கும். 10,000 ரூபாய் முதல் 30,000  ரூபாய் வரை இருக்கும் இந்த வாசனை திரவியம், நம்ம மர்லின் மான்றோவுக்கு ரொம்பப் பிடிச்ச பெர்ஃப்யூம் பாஸ்! மக்கள் அனைவரும், தற்போது ஆர்கானிக் பொருள்களைத் தேடிப்போக ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பெர்ஃப்யூம்களிலும் ஆர்கானிக் வந்துவிட்டது. ஏபெல் ஆர்கானிக், கிறிஸ்டி ஆர்கானிக், நிம்மட் ஸ்பிரே இப்படிப் பல வகையான பெர்ஃப்யூம்கள் ஆர்கானிக்கிலும் உள்ளன.

உங்களின் சாய்ஸ் எதுவானாலும் உங்க ஸ்பெஷல் நாளில் நறுமணத்தோடும் உற்சாகத்தையும் தரக்கூடிய ஷநெல் போன்ற பெர்ஃப்யூமை வாங்குங்க.

 

வாழ்க்கையை வாசனையா கொண்டாடுங்க.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வானம்பாடி கூட்டத்தில் கவிபாடிய குயிலுக்கு இன்று பிறந்தநாள்!

 
 

'கவிக்கோ' என்று போற்றப்படும் கவிஞர் அப்துல் ரகுமான், கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் - ஜைனத் பேகம் இணையருக்கு1937-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி, மதுரை கீழ்ச்சந்தைப் பேட்டையில் பிறந்தார். கவிதை,  தந்தை, தாத்தா வழியில் இயற்கையாக வந்ததால் சிறந்த இலக்கியவாதியாக நாடறியப்பட்டார்.

abudurhaman_09290.jpg

 

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, இவருக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை. தமிழில் மட்டுமே ஆர்வம்கொண்டிருந்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பதை அறிந்து, அங்கேயே சேர்ந்து பயின்றார். 

படிக்கும் காலத்தில் ஆங்கில இலக்கியம் மீதும் தன் ஆர்வத்தைக் கொண்டுசென்றார். கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் நடக்கும் அனைத்து கவிதைப் போட்டிகளிலும் முதல் பரிசை வென்றுவிடுவார்.

முதுகலைக் கல்வி பயிலும்போது, மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தார். அவர்களைப் போலவே எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாறே எழுதவும் தொடங்கினார். 

‘தமிழ்நாடு’ என்ற நாளிதழில் சில ஆண்டுகள் பணியாற்றினார். தமிழில் புதுக்கவிதைக் குறியீடுகள்குறித்து ஆராய்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பிறகு, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றினார்.

சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம்கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். 1974-ல் இவரது முதல் கவிதையான ‘பால்வீதி’ வெளிவந்தது.

திராவிட நாடு, திராவிடன், முரசொலி, தென்றல், இன முழக்கம், மன்றம், விகடன் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது தொடர் கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்தன.

இலக்கியத்தின் பல களங்களில் முத்திரை பதித்தாலும், ஒரு கவிஞராகவே இவர் புகழ்பெற்றார். இவரது தத்துவக் கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

வானம்பாடி இயக்கத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவரானார். மற்றவர்களைக் கவரும் வண்ணம் பேச்சு நடையில் சிலேடை மொழிகளாலும், நையாண்டி கலந்தும் பேசும் ஆற்றல் படைத்திருந்தார் கவிக்கோ.

"ஆண் தாய்" என்று கவிஞர்களால் அழைக்கப்படும் கவிக்கோ, இன்றைய காலத்து இளந்தலைமுறைக் கவிஞர்களுக்கு ஆசிரியராய் விளங்கினார்.

நீண்ட காலமாக தமிழ்க் கவிதைக்கு வழங்கப்படாமல் இருந்த சாகித்ய அகாடமி விருது,  இவரின்  ‘ஆலாபனை’ கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் முதன் முதலாக சாகித்ய அகாடமி விருதை பெற்றுத்தந்த பெருமையை அடைந்தார்

ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளைத் தமிழில் பரவச்செய்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் தெரியும் வண்ணம் இவரது பாடல்கள் அமைந்திருக்கும்.

கவிதை உலகில் பெரும் ஆளுமையைப் பெற்ற கவிக்கோ, 2017 ஜுன், 2-ம் தேதி மரணமடைந்தார். "மரணம் முற்றுப்புள்ளி அல்ல" என்ற அவரது கட்டுரைக்கு எடுத்துக்காட்டாக இருந்தும்வருகிறார்.

 

கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

சாதாரண பொருட்களின் அசாத்திய கண்டுபிடிப்புகள் அசத்தும் இந்தியர்

  • தொடங்கியவர்

மனைவி முன் நடனமாடும் தோனி! வைரல் வீடியோ

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தன் மனைவி சாக்ஷி முன்பு உற்சாகமாக ஆடும் வீடியோ ஒன்று இன்ஸ்ட்ராகிராம் தளத்தில் வைரலாகி வருகிறது.

DHONI-1_17140.jpg

 


தோனி களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உற்சாகமானவராகவே இருப்பதுண்டு. அவர் கோபப்படுவது அரிதான நிகழ்வு. எப்போதும் கூலாக இருப்பதாலே மிஸ்டர்.கூல் என்று புகழப்படுகிறார். வைரலாகிவரும் நடன வீடியோவில் வெகுஉற்சாகமாக கைகளை அசைத்து தோனி நடனம் ஆடுகிறார். அதை அவருடைய மனைவி சாக்ஷி ரசித்துப் பார்க்கிறார். பலரும் இந்த வீடியோவை ஆர்வமுடன் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை.

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பனாமா கால்வாய் தெரியும்... அது செயல்படும் முறை தெரியுமா? #WowEngineering

பனாமா கால்வாய்

பொறியியல் கண்டுபிடிப்பில் உருவான சிறந்தப் படைப்பு; இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் சாதனை. சர்வதேச கடல்வழி வர்த்தகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய சிறப்பு என பனாமா கால்வாய்க்கு ஏகப்பட்ட சிறப்புகள் உண்டு.

 

பனாமா கால்வாய் உருவாக்கப்படுவதற்கு முன்னர் கப்பல்கள் 13,000 மைல்கள் சுற்றித்தான் தெற்கு அமெரிக்காவை அடைய முடிந்தது. ஆனால், பனாமா கால்வாய் மூலம் 7,872 மைல்கள் வரை பயண தூரத்தைக் குறைக்க முடிந்தது. பனாமா கால்வாய் உலகம் முழுவதும் 160 நாடுகள் மற்றும் 1700 துறைமுகங்களை இணைக்கிறது.

பனாமா கால்வாய் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட 77 கிலோமீட்டர் நீர் வழி மார்க்கம். இது அட்லாண்டிக் கடலையும், பசிபிக் கடலையும் இணைக்கிறது. சர்வதேச கடல்வழி வர்த்தகம் பனாமா கால்வாயில்தான் நடைபெறுகிறது. ஓர் ஆண்டுக்கு மட்டும் இந்த வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களின் எண்ணிக்கை 14,000.

உண்மையில், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலை இணைப்பதற்கு தெற்கு மற்றும் வடக்கு அமெரிக்காவில் நீர்வழி இல்லை. அங்கிருந்ததெல்லாம் 50 மைல்கள் பரந்த குறுகிய நிலம். வட அமெரிக்காவையும் தெற்கு அமெரிக்காவையும் இணைக்கும் இடம் "தெற்கு மத்திய அமெரிக்கா". இந்த நிலத்தின் பெயர் பனாமா பூசந்தி. (பூசந்தி -  இரண்டு பெரும் பகுதிகளை அல்லது பாகங்களை இணைக்கும் குறுகிய நிலப்பரப்பு) .

மிகப்பெரும் இரண்டு கடல்களை இணைக்க, கடல்வழிப் பயணத்தை எளிமையாக்க பனாமா பூசந்தியில் அமெரிக்கர்களால் கட்டப்பட்டதுதான் பனாமா கால்வாய். அமெரிக்கர்கள் இதை வடிவமைத்திருந்தாலும், பல அரசியல் மாற்றங்களுக்குப் பின் 1999-ம் ஆண்டு கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவிடமே ஒப்படைத்தது அமெரிக்கா. பனாமாவின் குறுக்கே செயற்கையாக கட்டப்பட்ட ஏரி, இரண்டு பெரும் கடல்களையும் இணைக்கிறது. இந்த ஏரியின் பெயர் காடன் ஏரி (Gatun lake). இந்த ஏரி  கடல் மட்டத்தில் இருந்து 85 அடி உயரத்தில் உள்ளது .

அப்படியென்றால் பயணிக்கும் கப்பல்கள் எப்படி 85 அடி உயரம் மேலே செல்ல முடியும்? 

இதற்காக இவர்கள் கால்வாயில் உருவாக்கிய அமைப்பு நீர்ப் பூட்டு (Water lock system). இந்த அமைப்பு ஓர் உயர்த்தும் சாதனத்தை (Lift) போல செயல்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து படகுகளையும், கப்பல்களையும் உயர்த்தவும், இறக்கவும் பயன்படும். நதி அல்லது கால்வாயின் நீர்நிலை மாறும் இடத்தில்தான் இது  கட்டப்பட்டுள்ளது. லாக் கியர்கள் அறையில் உள்ள தண்ணீரை காலியாக்கவும், நிரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூட்டு அமைப்பில் உள்ள மற்றொரு அமைப்பு நிலையான அறை (Fixed chamber). இங்கே நீரின் அளவு மாறுபடும். ஒவ்வொரு லாக்கின் இறுதியிலும் பெரிய அறை கொண்ட வாயில் கதவு இருக்கும். அங்கே வரும் கப்பல் அடைப்பான் திறக்கும் வரை காத்திருக்கும்; பின் ஒரு லாக்கிலிருந்து மற்றொரு லாக்கிற்கு ஓட்டம் நடைபெறும். லாக்கின் பரப்பு 110 அடி மற்றும் நீளம் 1050 ஆகும். மூன்று ஜோடி லாக்குகள் - மூன்று உயர்த்தும் லாக், மூன்று இறக்கும் லாக். பனாமாவில் லாக்குகள் இல்லையெனில் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் நீரின் ஓட்டம் இருக்காது. ஏனெனில் இவற்றிற்கிடையேதான் மலை உள்ளது.

லாக்குகள்  வேலை செய்யும் விதம் (Water lock function):

கப்பல் செல்லும்போது ஏரியிலிருந்து வரும் நீரின் மூலம் உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு பூட்டும் கடல் மட்டத்திலிருந்து படகை உயர்த்திக் கொண்டேயிருக்கிறது; அவை 85 அடி உயரம் அடையும்வரை கப்பலை மேலே கொண்டு செல்கிறது. பிறகு  கப்பல் காடன் ஏரியை கடந்து செல்கின்றன. ஏரியை கடந்தபின் பூட்டில் உள்ள நீரின் அளவு குறைந்துகொண்டே வரும்; கப்பலானது கடலின்  சமநிலையை அடையும் வரை நீரின் மட்டம் குறையும். இவ்வாறு கப்பல் நீரின் சமநிலையில் இருந்து, பூட்டின் உதவியுடன் படிப்படியாக மேலே சென்று 85 அடி உயரத்தை அடைந்து ஏரியை கடந்து பின், நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து மீண்டும் கடலை அடைகிறது.

பொறியியலின் மிகப்பெரும் பிரமாண்டம் "பனாமா கால்வாய்".

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

மருந்தாகும் பீர் : சிங்கப்பூர் கண்டுபிடிப்பு

டார்க் சாக்லேட், ரெட் வைன் போன்றவை உடலுக்கு நலம் தரும் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பீர் எப்படி? சிங்கப்பூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஜீரணத்துக்கு உதவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீரை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

 

விண் உடை இல்லாமல் விண்வெளியில் என்ன நடக்கும்?

  • தொடங்கியவர்

2006 : நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ந.ரவிராஜ் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 10

1444 : ஹங்­கேரி, போலந்து ஆகி­ய­வற்றின் அரசர் மூன்றாம் விளா­டிஸ்லாஸ் பல்­கே­ரி­யாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்­டோமான் பேர­ர­சுடன் இடம்­பெற்ற சமரில் தோற்­க­டிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்டார்.

varalaru-NRaviraj2-240x400.jpg1520 : டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிஸ்­டி­ய­னினால் சுவீ­டனை முற்­று­கை­யி­டப்­பட்­ட­போது ஸ்டொக்ஹோம் நகரில் பலர் கொல்­லப்­பட்­டனர்.

1674 : ஆங்­கி­லே­ய-­டச்சு போரை­ய­டுத்து, வெஸ்ட்­மின்ஸ்டர் உடன்­பாட்டின் படி, அமெ­ரிக்­காவில் ஸ்தாபிக்­கப்­பட்ட “புதிய நெதர்­லாந்து” பிராந்­தி­யத்தை இங்­கி­லாந்­திடம் நெதர்­லாந்து ஒப்­ப­டைத்­தது.

1847 : ஸ்டீவன் விட்னி என்ற பய­ணிகள் கப்பல் அயர்­லாந்தின் தெற்குக் கரையில் மூழ்­கி­யதில் 92 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1871 : காணாமல் போன­தாகக் கரு­தப்­பட்ட ஸ்கொட்­லாந்தின் நாடுகாண் பயணி, டேவிட் லிவிங்ஸ்­டனைத் தான்­சா­னி­யாவில் தாம் கண்­ட­தாக நாடுகாண் பய­ணியும் ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறி­வித்தார்.

1928 : ஹிரோ ஹிட்டோ, ஜப்­பானின் 124 ஆவது மன்­ன­ரானார்.

1970 : சோவி­யத்தின் லூனா 17 விண்­கப்பல் சந்­தி­ர­னுக்கு “லூனாகோட்” எனப்­படும் தானி­யங்கி ஊர்­தியைக் கொண்டுசென்­றது.

1971 : கம்­போ­டி­யாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நக­ரையும் விமான நிலை­யத்­தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமா­னங்­களை அழித்­தன.

1972 : இங்­கி­லாந்தின் பேர்­மிங்­ஹாமில் இருந்து புறப்­பட்ட விமானம் கடத்­தப்­பட்டு கியூபாவில் இறக்­கப்­பட்­டது. கடத்­தல்­கா­ரர்கள் கியூ­பாவில் கைது செய்­யப்­பட்­டனர்.

1983-bill-gates.jpg1983 : மைக்­ரோசொப்ட் விண்டோஸ் 1.0 பதிப்பை பில்கேட்ஸ் அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

1995 : நைஜீ­ரி­யாவில் சுற்றுச் சூழல் ஆத­ர­வாளர் கென் சரோ-­வீவா என்­ப­வரும் அவ­ரது 8 சகாக்­களும் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

1999 : பாகிஸ்­தானில் தேசத் துரோகம் மற்றும் சதிச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக முன்னாள் பிர­தமர் நவாஸ் ஷெரீப்­புக்கு எதி­ராக வழக்குத் தொட­ரப்­பட்­டது.

2006 : தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

2007 : மலே­ஷி­யாவில் தேர்தல் மறு­சீ­ர­மைப்பை வலி­யு­றுத்தி சுமார் 40,000 பேர் ஊர்­வலம் சென்றனர்.

2008 : செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்ஸ் விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

பக்கவாதத்தால் முடங்கிப்போன உடல்... ஒற்றை விரலில் உருவான புரூக்ளின் பாலம் - சாதனைக் கதை! #MotivationStory

உன்னை அறிந்தால்...

`ஒருவர் முயற்சி என்ற ஒன்றை மட்டும் கையில் எடுத்துவிட்டால், அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை.’ இந்த வாசகத்தைச் சொன்னவர் சாதாரண ஆள் கிடையாது. உலகின் பல நாடுகளைத் தன் வீரத்தாலும், புத்திசாலித்தனத்தாலும், படைபலத்தாலும் வென்ற மாவீரர் அலெக்ஸாண்டர். `இது சாத்தியமில்லை’, `இதை யாராலும் செய்ய முடியாது’ எனப் பலர் கைவிட்ட அரிய செயல்களைச் சிலர் தங்கள் திறமையாலும், அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பாலும் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அவர்களைப் போற்றும் சரித்திரச் சின்னங்களாக இன்றைக்கும் சில அற்புதமான கட்டடங்கள், தேவாலயங்கள், அரண்மனைகள்... என எத்தனையோ உலகமெங்கும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, அமெரிக்கா, நியூயார்க்கில் பார்ப்பவர்களை பிரமிக்கவைக்கும்படி நீளமாகக் காட்சியளிக்கும் `புரூக்ளின் பாலம்.’ இதை வடிவமைத்து, கட்டி முடித்தவர்களின் கதை நம்மைக் கலங்கவைப்பது. அந்தக் கதையில் அப்படி என்ன விசேஷம்... பார்க்கலாமா?  

 

புருக்ளின் பாலம்

அவர் பெயர் ஜான் அகஸ்டஸ் ரோப்ளிங் (John Augustus Roebling). ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான பிரபல இன்ஜினீயர். `சஸ்பென்ஷன் பிரிட்ஜ்’ (Suspension Bridge) என்று பொறியியல் துறையில் சொல்வார்கள். அந்த வகை பாலங்கள் சிலவற்றை அமெரிக்காவில் சிறப்பாக வடிவமைத்து, கட்டிக்கொடுத்து நல்ல பெயர் எடுத்திருந்தார் ஜான். 1863-ம் ஆண்டு அவருக்கு ஒரு யோசனை பிறந்தது. நியூயார்க்கின் மன்ஹாட்டனுக்கும் புரூக்ளினுக்கும் நடுவில் `ஈஸ்ட் ரிவர்’ (East River) ஓடிக்கொண்டிருந்தது. `அதற்கு மேல் கண்ணைக் கவரும் பாலம் ஒன்றைக் கட்டினால் என்ன?’ என்று நினைத்தார். நினைத்ததை தன் சக பொறியாள நண்பர்களிடம் பகிர்ந்தார். கேட்டவர்கள் அவரைக் கேலி செய்தார்கள். `இதை மறந்துடுங்க’, `அப்படி ஒரு பாலத்தைக் கட்டவே முடியாது’ என்றார்கள். 

`சாத்தியமில்லை’ என்று பிறர் சொல்வதை சாத்தியப்படுத்தும் வேட்கை கொண்டவர் ஜான். அந்தப் பாலத்தைக் கட்டி முடித்தே தீருவது என்கிற முடிவுக்கு வந்தார். அவருடைய மகன் வாஷிங்டன் ரோப்ளிங். அவரும் ஒரு இன்ஜினீயர்தான். மகனை அழைத்தார். விஷயத்தைச் சொன்னார். முடிவாக ``அந்தப் பாலத்தை எப்படியாவது கட்டி முடித்தே ஆக வேண்டும்’’ என்றார். இருவரும் நாள் கணக்கில் விவாதித்தார்கள். மன்ஹாட்டனுக்கும் புரூக்ளினுக்கும் போய்வந்தார்கள். ஈஸ்ட் ரிவரை அங்குலம் அங்குலமாக அலசினார்கள். அந்தப் பாலத்தை எப்படிக் கட்டுவது... அதனால் ஏற்படும் இடர்கள் என்னென்ன... அவற்றை எப்படிக் களைவது? - எல்லாவற்றையும் பேசித் தீர்த்தார்கள். 

புரூக்ளின் பிரிட்ஜ்

ஜானின் கனவுப் பாலம் நனவாகும் அந்த நாள் வந்தது. அது, 1869-ம் ஆண்டு. வேலை செய்ய ஆட்களைத் திரட்டினார்கள்; வேண்டிய உபகரணங்கள், தளவாடங்கள் அனைத்தையும் சேகரித்தார்கள். களத்தில் இறங்கினார்கள். `ஈஸ்ட் ரிவர்’ என்கிற அந்த நதியின் மேலாக ஜான் கற்பனையாலேயே அந்தக் கனவுப் பாலத்தைக் கட்டிப் பார்த்தார். பாலம் கட்டும் வேலை ஆரம்பமானது. 

ஜான் ரோபளிங்

வேலையை ஆரம்பித்து சில மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. பாலம் கட்டுமிடத்தில் ஒரு விபத்து... அல்ல... துயரம். ஜான் ஒரு கப்பல் துறையின் மேடை விளிம்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது வேகமாக துறைமுகத்தை நோக்கி வந்த ஒரு சிறு வணிகக் கப்பல் (Ferry) மோதியதில் அவர் கால் விரல்களில் படுகாயம். கிட்டத்தட்ட கூழாகிப் போயின விரல்கள். மருத்துவர்கள், `கால் விரல்களை எடுத்துவிட வேண்டும், இல்லையென்றால் ஆபத்து’ என்று சொல்லிவிட்டார்கள். விரல்களை அறுவைசிகிச்சை செய்து அகற்றினார்கள். மேற்கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை ஜான். `வாட்டர் தெரபி’ என்று ஏதேதோ மாற்று வைத்தியம் செய்து பார்த்தார். அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமானது. `டெட்டானஸ்’ (Tetanus - தசைகளில் ஏற்படும் ஒருவகைத் தொற்று) என்றார்கள் மருத்துவர்கள். பிறகு என்ன சிகிச்சை கொடுத்தும் கேட்கவில்லை. அந்த விபத்து நடந்து வெறும் 24 நாள்களிலேயே இறந்து போனார் ஜான். 

ஜானின் மகன் வாஷிங்டனின் கைக்கு புரூக்ளின் பாலம் கட்டும் பொறுப்பு வந்தபோது அவருக்கு 32 வயது. அப்பாவின் மரணம், வாஷிங்டனைக் கொஞ்சம் உலுக்கித்தான் போட்டது. இருந்தாலும், அப்பாவின் லட்சியம் அவருக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் பாலம் கட்டுவதில் தொடர்ந்து பல பிரச்னைகள், இன்னல்கள், தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. பாலத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அது, வாஷிங்டனையும் விட்டுவைக்கவில்லை. ஆரம்பத்தில் வாய்வு தொடர்பான `கேய்ஸன் நோய்’ (Caisson Disease), `டிகம்ப்ரெஷன் நோய்’ (Decompression sickness) என்றார்கள். ஆனால், அந்த நோய் வாஷிங்டனைப் படுத்தி எடுத்துவிட்டது. ஒரு கட்டத்தில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதம் வந்தது. அதன் விளைவாக அவரால் வாய் பேச முடியவில்லை; நடக்க முடியவில்லை. `அவ்வளவுதான் புரூக்ளின் பிரிட்ஜ் பிராஜக்ட்’ என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள். ஏனென்றால், ஜானுக்கும் அவர் மகன் வாஷிங்டனுக்கும்தான் அந்தப் பாலத்தை எப்படிக் கட்டி முடிக்க வேண்டும் என்பது தெரியும். அப்பா இறந்துவிட்டார்; மகன் நடைப்பிணம். பிறகு எப்படிப் பாலத்தைக் கட்டுவார்கள்? 

புரூக்ளின் பிரிட்ஜ்

நடமாட்டமில்லை, பேச முடியவில்லை. ஆனால், வாஷிங்டனுக்கு எப்படியாவது பாலத்தைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்கிற வேட்கை இருந்தது. தான் நினைப்பதை ஒருவர் புரிந்துகொண்டால் போதும். அதை அவர் மற்ற இன்ஜினீயர்களுக்குத் தகவல் பரிமாற்றம் செய்யலாம். அவர்கள் தான் நினைத்ததைச் செய்துவிடுவார்களே! என யோசித்தார். அந்தத் தகவல் பரிமாற்றத்துக்கு உதவ தன் மனைவியையே தேர்ந்தெடுத்தார் வாஷிங்டன். அப்போது அவரால் ஒரு கையைத்தான் உயர்த்த முடிந்தது. அதிலும் ஒரு விரல்தான் லேசாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அந்த விரலால் தன் மனைவியின் கையைத் தொடுவார். அந்தத் தொடுகை மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டுக் கேட்டு அவர் மனைவி புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அதுவரை யாரும் கேள்விப்பட்டிராத `பிறரின் கையை விரலால் தொட்டுத் தொட்டுச் சொல்லும்’ சங்கேத மொழி. 

வாஷிங்டனின் மனைவி எமிலி வெகு சீக்கிரமே அந்த மொழியைக் கற்றுக்கொண்டார். கணவர் சொன்னதை மற்ற இன்ஜினீயர்களுக்கு எடுத்துச் சொன்னார். மறுபடியும் பாலம் கட்டும் வேலை வேகமெடுத்தது. எமிலி, வாஷிங்டன் ரோப்ளிங்குக்கு 11 வருட காலம் உதவினார். பாலம் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டது. 1869-ம் ஆண்டு தொடங்கிய பணிகள், 1883-ம் ஆண்டு முடிவடைந்தன. கிட்டத்தட்ட 14 அண்டுகள். அமெரிக்காவே அந்தப் பாலத்தை ஆச்சர்யத்தோடு பார்த்தது. முடியாது என்றதை முடியும் என்றார் தந்தை; முடித்தே காட்டிவிட்டார் மகன். கண்ணைக் கவரும் அந்த `புரூக்ளின் பாலம்’ கம்பீரமாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. அந்த அப்பா, மகனின் மன உறுதிக்கும், நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதல் தோல்வியடைந்த காலர்களின் வலியை குறைக்கும் விசித்திர சந்தை

 

 

வியட்நாமில் உள்ள ‘ஓல்ட் ஃப்ளேம்ஸ்’ சந்தையில் காதலில் தோல்வியடைந்தவர்கள் காதலிக்கும் போது காதலனோ காதலியோ  கொடுத்த காதல் பரிசுகளை  விற்பனை செய்துவிடுகிறார்கள்.

Local_News.jpg

குறித்த சந்தையில் காதல் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், கிடார், ஆடைகள், வாசனைத் திரவியம், மெழுகுவர்த்தி, பணப்பை, புத்தகங்கள் என்று ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.

இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் தோல்வியடைந்த காதலின் வலியைச் சுமந்துகொண்டு இருக்க விரும்புவதில்லை. வலியிலிருந்து விரைவில் விடுபடவே விரும்புகிறார்கள். அதனால் உண்மையை ஏற்றுக்கொண்டு, தங்களிடமிருக்கும் பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிடுகிறார்கள்.

இதன்மூலம் அவர்கள் அந்தத் துன்பத்திலிருந்து வெளிவந்துவிடுகிறார்கள். “என் காதல் உடைந்தபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். என்னால் சாப்பிடவோ, எதுவும் குடிக்கவோ முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு துன்பத்திலிருந்து வெளிவர முடிவெடுத்தேன். துணிகள், பணப்பைகள், பற்பசை என்று அனைத்தையும் விற்றுவிட்டேன். இப்போது பாரம் குறைந்துவிட்டது” என்கிறார் 29 வயது கதலில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர்.

கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கிறது. “போன தலைமுறை வரை பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்கள்தான் அதிகம். இன்றைய இளைஞர்கள் 30 வயது வரை சுதந்திரமாக இருந்துவிட்டு பிறகே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். காதல் தோல்வியடைந்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டுவிட நினைக்கிறார்கள். ” என்கிறார் இந்தச் சந்தையின் உரிமையாளர் டின் தாங் 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 விக்ரம் வேதாவின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-தான் இப்போது மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளர். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் அடுத்த படத்துக்கு சாம்தான் இசையமைப்பாளர். மெகா பட்ஜெட்டில் மலையாளத்தில் தயாராகும் மோகன்லாலின் `ஒடியன்’ படத்துக்கும் சாம்.சி.எஸ் இசையமைக்கவிருக்கிறார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்துக்கும் சாம்தான் இசை. ஆல் தி பெஸ்ட் ப்ரோ!

p36.jpg

நான்காவது முறையாக `சிறுத்தை’ சிவாவுடன் இணையும் அஜித்தின் படத்துக்கான வேலைகள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. ‘`இந்தப் படத்துக்குப் பின்னணி இசை ரொம்ப முக்கியம். `மங்காத்தா’ போல மியூஸிக் இருந்தா நல்லா இருக்கும்’’ என அஜித் சொல்ல யுவன் ஷங்கர் ராஜாவையே இசையமைக்கவைத்திருக்கிறார் சிவா. இந்தப் படத்துக்கான ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்குகிறது.
வி ஃபார் ...

p36b.jpg

கிரண் பேடியின் அதிரடிகளால் அரண்டுகிடக்கிறது பாண்டிச்சேரி அரசு. தனியாளாக அரசு அலுவல கங்களுக்கு ரகசிய விசிட் அடிப்பது, அமைச்சர்களுக்கு `சுளீர்’ அறிவுரைகள் வழங்குவது என காங்கிரஸைக் கடுப்படிக்கும் பேடியின் சமீபத்திய சாதனை, அரசு மருத்துவமனைக்குள் சுவர் ஏறிக் குதித்து ஆய்வுப் பணிகள் செய்தது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரான கிரண் பேடி, கடந்தவாரம் காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் திடீரென விசிட் அடிக்க, அரசு அதிகாரிகள் `நுழை வாயிலின் சாவியைத் தொலைத்து விட்டோம்’ எனச் சொல்ல, தாவிக்குதித்து மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அன்று 16 பேர் வேலையில் இல்லாததைக் கண்டுபிடித்தவர், `` `16 பேரும் உடனே வேலைக்கு வருகிறீர்களா? இல்லையென்றால் சம்பளத்தைப் பிடிக்கவா?’ என்று கேளுங்கள்” என ஒரு காட்டுக்காட்டியிருக்கிறார். தில் ஆளுநர்!

p36c.jpg

சாயிஷா ஃபீவரில் இருக்கிறது தமிழ் சினிமா. ‘வனமகன்’ மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமான சாயிஷா இப்போது கோலிவுட்டின் லீடிங் லேடி. விஜய் சேதுபதியுடன் ‘ஜுங்கா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சாயிஷா அடுத்தாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கிறார். பப்ளி பேபி!

ம்பர் ஒன் டென்னிஸ் வீரர்களாகக் கோலோச்சிய ரோஜர் ஃபெடரருக்கும், ரஃபேல் நடாலுக்கும் இடையே மீண்டும் துவங்கியிருக்கிறது நம்பர் 1 இடத்துக்கான மோதல். 10 ஆயிரம் புள்ளிகளுடன் 31 வயதான ரஃபேல் நடால் முதலிடத்தில் இருக்க, 36 வயதான ரோஜர் ஃபெடரர் 9 ஆயிரம் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ‘`அடுத்த ஆண்டு எனக்கான ஆண்டாக இருக்கும்’’ என இருவருமே சொல்ல, 2018 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கான பரபரப்பு இப்போதே எகிறத் தொடங்கியிருக்கிறது. லெஜெண்ட்ஸ்!

p36d.jpg

மோடியைச் சமாளிக்க சோஷியல் மீடியாவில் வைரல் ஆவதுதான் ஒரே வழி என்கிற முடிவில் இறங்கியடிக்கிறது காங்கிரஸ். ராகுல் காந்தியின் கராத்தே வித்தைகள் முதல் ‘வலைபாயுதே’ ஸ்டைல் சட்டையர் ட்வீட்டுகள் என எகிறியடிக்கிறார்கள். இதில் ராகுல் காந்தியின் கராத்தே படங்கள் உலகம் முழுக்க வைரலாக, மீம்களால் வெச்சு செய்கிறது பா.ஜ.க தரப்பு! வைரல் வியாதிகள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நாயின் காதுக்குள் டொனால்ட் ட்ரம்பின் தோற்றம்

பிரிட்­டனைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தனது நாயின் காதுக்குள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் முகத்­தோற்றம் தென்­பட்­டதைக் கண்டு பெரும் வியப்­ப­டைந்­துள்ளார்.

trump-1.jpg

இங்­கி­லாந்தின் சௌத் ஷீல்ட் நகரில் வசிக்கும் ஜேட் ரொபின்சன் எனும் 26 வய­தான யுவதி, தனது வீட்டில் செல்லப் பிரா­ணி­யாக நாய் ஒன்றை வளர்த்து வரு­கின்றார்.

trump.jpg

சில நாட்­க­ளுக்கு முன்னர் அவ­ரது நாயின் காதில் நோய் தொற்று ஏற்­பட்டு அவதிப்பட்­டுள்­ளது. இதனை கவ­னித்த நாயின் உரி­மை­யாளர் ஜேட் ரொபின் சன் கால் நடை மருத்­து­வ­ரிடம் நாயை அழைத்துச் சென்றார். அங்கு நாயின் காதின் உள்ளே உள்ள பகு­திகள் புகைப்­படம் எடுக்­கப்­பட்­டது.

dong.jpg

பின்னர் எடுத்த புகைப்­ப­டத்தைப் பார்த்தபோது நாயின் காதின் உட்­ப­குதி மடிப்­புகள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவம் போல் தெரிந்­துள்­ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், நாயின் புகைப்­ப­டத்தை இணை­யத்தில் வெளியிட்­டுள்ளார். இப் படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

கம்யூனிஸ்ட் கொடியில் உள்ள சுத்தி, அரிவாள் எதை குறிக்கிறது? இச்சின்னத்தை தேர்ந்தெடுத்தது யார்?

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

twitter.com/HAJAMYDEENNKS 

சென்னையில மழை பெய்தால் ஏரிகள் நிரம்புதோ இல்லையோ எல்லா வீட்டிலும் ஃப்ரிட்ஜ் நிரம்பிவிடுகிறது... உணவுப் பொருள்களால்!

twitter.com/BoopatyMurugesh 

இன்னிக்கு வீடு வெள்ளத்தில் மிதக்குதுன்னு ஃப்ளாஷ் நியூஸ் போடுற மீடியால்லாம் போன மாசம் ரியல் எஸ்டேட், அப்பார்ட்மென்ட் விளம்பரம் போட்டவங்கதான்.

twitter.com/chithradevi_91

கல்யாண மண்டபத்தைக் கடப்பவர்களுக்கு இரண்டே மனநிலைதான்:

“இப்படியெல்லாம் நமக்கு எப்ப செஞ்சு வைப்பாங்க?”
“இப்படித்தானே நம்மளை அப்ப வெச்சு செஞ்சாங்க!”

p16a.jpg

twitter.com/mujib989898 

ஆசைகளைத் துறந்த சாமியார்களைவிட இப்போதெல்லாம் அதிக ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவே சாமியார்களாகப் போகிறார்கள்.

twitter.com/Pa_Siva

வடநாட்டு சாமியார் ‘கலைஞரோட தலையை சீவிடுவேன்’னு சொன்னதுக்கு, `என் தலையை நான் சீவியே ரொம்ப நாளாச்சு, முடிஞ்சா வந்து சீவட்டும்’னு கலைஞர்  சொன்னார்.

twitter.com/mrithulaM

மொடாக் குடிகாரனா இருக்கும், ஆனா டீ காபி பழக்கமில்லைங்குறதை ரொம்பப் பெருமையா சொல்லிட்டு வெக்கமில்லாம திரியும்!

twitter.com/HAJAMYDEENNKS

நம்ம நாட்டுல மாதிரி வேற எந்த நாட்டிலும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இவ்வளவு வேலை இருந்திருக்காது...!

p16b.jpg

twitter.com/navi_n 

‘பணம் இல்ல, என்ன பண்றது?’, ‘பணத்த வெச்சுக்கிட்டு என்ன பண்றது?’ எனப் பணத்தை இரண்டு வகையில் டீல் செய்கிறது வாழ்க்கை.

twitter.com/manipmp

அயர்ன் செய்யாததைச் சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறது சட்டை!

twitter.com/Thaadikkaran

`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!

twitter.com/pisaasu 

ஜீன்ஸ தொவச்சப்புறம் வெறும் வாஷிங் மிஷினை அலசி விடுது ஆத்தா.. #நம்மள அசிங்கப்படுத்துறதுக்குன்னே...

twitter.com/iindran 

காவிரில தண்ணி கேட்போம் தரலியா, நாங்க ஒரு லட்சம் தமிழ்ப் பிள்ளைகள் கூடிப்போய் ஆளுக்கொரு வாளில பிடிச்சாந்திருவோம். யாருகிட்ட... #நாம்தமிழர்ஆட்சியில்

twitter.com/mrithulaM

யாராவது லூசுத்தனமா பேசுனா உடனே கல்லைக் கொண்டு எறியக்கூடாது...`ம்ம் பேச்சுகுடு பேச்சு குடு’ன்னு எண்டர்டெய்ன்மென்ட் பண்ணிக்கறது தான் இணைய எத்திக்ஸ்!

p16c.jpg

twitter.com/sarankaran_y

இவங்களுக்குத் தெரிஞ்ச ஒரே முன்னெச்சரிக்கை ஸ்கூல் லீவ் விடுறது, பவர் கட் பண்றது...

twitter.com/ak_eswari 

மழையில் நனையும் ஆசையோடு ஒவ்வொரு வீட்டிலும் காத்திருக்கிறது குடை...!

facebook.com/Araathu R

நிர்வாண சாமியார்கள் இருக்கும் நாட்டில் அம்மணம் என்பது அவ்வளவு பெரிய அசிங்கமா?

facebook.com/Shan Karuppusamy

வரலாறு காணாத வெள்ளங்களுக்குக் காரணம் வரலாறு காணாத மழைகள் இல்லை... நாம் வீசியிருக்கும் வரலாறு காணாத பிளாஸ்டிக் குப்பைகள்தான்.

p16d.jpg

twitter.com/azam_twitz

வங்கியில் கடனாக வாங்கும் `பேனாவிற்கு’ மட்டும்தான் வட்டி இல்லை. மற்ற எல்லாக் கடனுக்கும் வட்டிக்கு மேல் வட்டி வசூலிச்சுருவாங்க!

twitter.com/Bubbly_Girl__

மேய்ச்சலுக்காக ஆடு மாடுகளை அழைத்துச் சென்ற இடங்களுக்கு, இப்போது ஃபிளாட்டுக்காக மனிதர்களை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

p16e.jpg

twitter.com/abuthahir707
 
மழை பெய்து ஏரி குளம் நிறையுதுனு சந்தோஷப்பட்டா அது கிராமம்! `என்னது, ஏரி நிறையுதா!’  என்று ஷாக் ஆனால் அது சென்னை மாநகரம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

புத்திசாலித்தனமாக பெட்ரோலை திருடி குடிக்கும் குரங்கு.

இந்தியாவிலுள்ள ஹரியானா மாவட்டத்தில் உள்ள பானிபட்டில் உள்ள குரங்கு ஒன்று இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோலை திருடி குடித்து வருகிறது. இதனால் அப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த குரங்கு வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்களிலில் எஞ்சினுக்குச் செல்லும் பெட்ரோல் ட்யூபை பிடுங்கி புத்திசாலித்தனமாக பெட்ரோலை திருடி குடிக்கின்றது. 

Local_News.jpg

இதனால் வாகன ஓட்டிகள் சில சமயங்களில் பெட்ரோல் இன்றி திண்டாடும் நிலையும் ஏற்பட்டுள்ளதாம்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

302 டன் எடையுள்ள விமானத்தை கைகளால் இழுத்து துபாய் போலீசார் சாதனை

துபாய் போலீசார்படத்தின் காப்புரிமைFACEBOOK

துபாயில் வைரலாகி வரும் உடற்பயிற்சி சார்ந்த சவாலின் ஒரு பகுதியாக துபாய் போலீசார் 302 டன் எடையுள்ள ஏர்பஸ் A380 விமானத்தை கைகளால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளனர்.

உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக துபாயில் #dubaifitnesschallenge என்ற ஹாஸ்டேகுடன் தங்களது உடற்பயிற்சி மற்றும் பலத்தை வெளிப்படுத்தும் செயல்களை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், துபாயின் போலீசார் 302 டன்கள் எடையுள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் A380 ரக விமானத்தை கைகளால் இழுத்து, நகர்த்தி உலக சாதனை படைத்துள்ளனர்.

இதுதொடர்பான காணொளியை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள துபாய் போலீசார், இது ஒரே வாரத்தில் தாங்கள் நிகழ்த்தியுள்ள இரண்டாவது உலக சாதனை என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.bbc.com/

 

  • தொடங்கியவர்

வைரலாகும் காஜல் அகர்வாலின் ஃபோட்டோ இதுதான்

 

 
kajal-agarwal

ஒரு நடிகைக்கு தோற்றமும் பொலிவும் மிகவும் அவசியம். அதுவே அவர்களின் திரை வாழ்க்கையை நிர்ணயிக்கும் முக்கியமான தகுதியாகிவிட்டது. நடிப்பு மற்றும் பிற தகுதிகள் அதன் பின்னரே கவனிக்கப்படுகின்றன. 

kajal-agarwal-hot-photoshoots-nov-2016-2

சமீபத்தில் பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப் படத்தை அலங்கரித்தார் காஜல் அகர்வால். அவருடைய புதிய லுக்ஸ் அனைவரையும் கவர்ந்தது.

kajal_1.jpg

புகைப்படக் கலைஞர் சுபி சாமுவேலின் கைவண்ணத்தில் அந்த ஃபோட்டோ ஷூட்டில் இதுவரை காணாத வகையில் அழகிய தோற்றத்தில் ஜொலித்தார் காஜல். 

kajal-aggarwal-photoshoot-5.jpg

சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய காஜலுக்கு ரசிகர்களிடமிருந்து சில எதிர்வினைகள் கிடைத்தன.

maxresdefault.jpg

அதிலும் ஒரு மெகா சைஸ் ஸ்பூனை தனது வாய்க்குள் நுழைக்க முயலும் புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்ட போது சிலர் ஆபாச கமெண்ட் கொடுத்திருந்தனர்.

kajal-aggarwal-photoshoot-2.jpg

காஜல் அதற்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அந்தப் படத்தையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

1809311.JPG

 

 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.