Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1_2220038g.jpg

இதுவாகத்தான் இருக்கும்...!  இதில் இனிப்பும் புளிப்பும் கலந்திருக்கும் சகோதரி....!  :)

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

பசங்க 2 நீங்கப்பட்ட காட்சி 02

  • தொடங்கியவர்

large_img-0699.jpg

large_img-0707.jpg

large_img-0014.jpg

large_img-0026.jpg

large_img-0028.jpg

large_img-0102.jpg

அரண்மனை 2 படத்தில் இருந்து படங்கள்

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

ஓவியங்கள்: செந்தில்

 

நம்பர் 1 

p62a.jpg

'சினிமாவுக்குக்கூட கூட்டிப்போவது இல்லை’ என வருத்தப்பட்டாள் நம்பர்1 நடிகரின் மனைவி!

 


கோரிக்கை

p62b.jpg

மதுக்கடையை அகற்றக் கோரி இதுவரை 10 மனுக்கள் கொடுத்திருந்த தியாகி ராமசாமி, மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்...  மதுக்கடைக்கு அருகில் இருக்கும் காந்தி சிலையை அகற்றக்கோரி!

 


கரப்டட்

p62c.jpg

''கரையான் அரித்த ஓலைச்சுவடினா என்னப்பா?'  கேட்ட மகனுக்கு எவ்வளவோ முயன்றும் புரியவைக்க முடியவில்லை. கடைசியாகச் சொன்னார்... ''அது Corrupted memory card மாதிரி''  இப்போது அவனுக்கு எளிதாகப் புரிந்தது!

 


கொண்டாட்டம்

p62d.jpg

பக்கத்துவீட்டுக் குழந்தைகள் புது ஆடைகள் உடுத்தி, பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதைப் பார்த்து ஏக்கத்தோடு சொன்னாள் மகள்... 'நம்ம அப்பா குடிக்காம இருந்திருந்தா, நானும் இப்படி சந்தோஷமா பட்டாசு வெடிச்சிருப்பேன்லம்மா!'  

 


ஆட்டம்

p62e.jpg

''அப்பா... தாத்தாவுக்கு தனியா ஒரு மொபைல் வாங்கிக் கொடுங்க. என் மொபைலை எடுத்து கேம்ஸ் ஆடுறார்' என்றாள் 10 வயது மகள்!

 


கொலை... கலை...

p62f.jpg

யானையைக் கொன்று தந்தத்தைத் திருடுகிறான் ஒருவன். அந்தத் தந்தத்தில் யானையைச் செதுக்கி விற்கிறான் இன்னொருவன்!  

 


ஹீரோ

p62g.jpg

'மாப்பிள்ளை 'ஹீரோ’ மாதிரி இருக்காரும்மா.'

' எனக்கு வேணாம்பா. ஹேர் கட்டிங் பண்ணாம, குளிக்காம, சதா சிகரெட் புகைச்சிட்டு, அப்பாகிட்ட பணம் திருடிக் குடிச்சிட்டு, ஊர் சுத்திட்டு, சைட் அடிச்சிட்டுத் திரியுற மாப்பிள்ளை வேணாம்பா.

வேற நல்ல மாப்பிள்ளையா பாருங்க...'  

 


திறந்த கதவு

p62h.jpg

இறந்த பின்னர் கொட்டகையில் இருந்து வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார் தாத்தா!

 


ஹோம் வொர்க்

p62j.jpg

'ஹோம் வொர்க் முடிச்சுட்டியா?’ எனப் பக்கத்து அறையில் இருக்கும் மகனுக்கு 'வாட்ஸ்அப்’புவ தற்குள் ஹாலில் இருந்த கணவரிடம் இருந்து 'காபி ரெடியா?’ என மெசேஜ் வந்தது!  

 


ரைம்ஸ்... புதுசு!

p62k.jpg

கை வீசம்மா கை வீசு.

கடைக்குப் போகலாம் கை வீசு.

ஐ பேட் வாங்கலாம் கை வீசு .

ஸ்கைப்பில் பேசலாம் கை வீசு!  

விகடன்

  • தொடங்கியவர்

12642709_10154276214139578_6438478578968

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 30
 

article_1422592545-Gandhisassassination.1648: முன்ஸ்டர், ஒஸ்னாபுருக் ஒப்பந்தங்கள் மூலம்; ஸ்பெய்னுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 8 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்தது.

1649: இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ள்ஸ் புரட்சியாளர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1750: 1835: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸனை சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதியொருவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட முதலாவது சம்பவம் இது.

1847: அமெரிக்காவின் யேர்பா புயெனா நகரத்தின் பெயர் சான் பிரான்ஸிஸ்கோ என மாற்றப்பட்டது.

1933: அடோல்வ் ஹிட்லர் ஜேர்மனியின் சான்ஸ்லர் (அரச அரசாங்கத் தலைவர்) ஆனார்.

1945: அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற ஜேர்மன் கப்பலான வில்லியம் குஸ்ட்லவ் பால்டிக் கடலில் சோவியத் நீர்மூழ்கி கப்பலின் தாக்கத்திற்குள்ளானதால் சுமார் 9000 பேர் பலி. கப்பல் அனர்த்தமொன்றில் மிக அதிக எண்ணிக்கையானோர் பலியான சம்பவம் இது.

1945:இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி, இந்து தீவிரவாதியான நாதுராம் கோட்சேவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1956: அமெரிக்க சிவில் உரிமை போராட்டத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியரின் வீட்டின் மீது குண்டுவீசப்பட்டது.

2003: அமெரிக்க விமானத்தை பாதணி குண்டு மூலம் தகர்க்க முயன்ற ரிச்சர்ட் ரீட்டுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/164923/2016-01-29-05-16-32#sthash.Phr9fLqj.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12650853_977475025634525_578358181049937

இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் நினைவு தினம்.

இவரது இயற்பெயர் கண்ணுசாமி. முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயரைப் பெற்றுக்கொண்டார்.

  • தொடங்கியவர்

12593628_1167222003296894_39099469508644

ஜடேஜா பந்து வீச்சில், ஜேம்ஸ் ஃபால்க்னரை, டோணி ஸ்டம்பிங் செய்து அவுட் செய்தார். இதன்மூலம், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலுமாக சேர்த்து, டோணி மொத்தம் 140 ஸ்டம்பிங்குகளை செய்து அசத்தியுள்ளார். முன்னதாக, இலங்கை கீப்பர், குமார் சங்ககாரா 139 ஸ்டம்பிங்குகள் செய்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. டோணி ஸ்டம்பிங்கில் இன்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
 
இலங்கையின் ரொமேஷ் கலுவிதரனா 101 ஸ்டம்பிங்குகளுடன் 3வது இடத்திலும், பாகிஸ்தானின் மொயின் கான் 93 ஸ்டம்பிங்குகளுடன் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 92 ஸ்டம்பிங்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
 
  • தொடங்கியவர்

ஜனவரி 30: காந்தி நினைவு நாள் - சிறப்பு பகிர்வு

 

இன்றைக்கு காந்தியின் நினைவு நாள். அவரைக்கொன்ற கோட்சே இங்கே பலருக்கு நாயகன் ! ஜெர்மனியில் ஹிட்லர் பற்றி பேசினால் ஒரு அருவருப்பான பார்வை கண்டிப்பாக கிடைக்கும். நம்மூரில்தான் கோட்சே ஒரு ஈடில்லாத நாயகன் போல கொண்டாடப்படுகிறார்.

காந்தி மதத்தின் அடிப்படையில் தன்னுடைய அரசியலை கட்டமைத்தார் என்பது பொதுவாக சொல்லப்படுகிற கருத்து, அதே சமயம் ஒரு கேள்வியை பலபேர் எழுப்பிக்கொள்வதே இல்லை. காந்தியை ஏன் அப்புறம் மூன்று முறை மதவாத சக்திகள் கொல்ல முயற்சி செய்தார்கள் ? காந்தியை இந்து மத துரோகி என்றும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள் ? கோயில் நுழைவு போராட்டங்களை ஏன் சங்கராச்சாரியார் முதலியோரின் எதிர்ப்புகளை மீறி அவரும், அவரின் தொண்டர்களும் முன்னெடுத்தார்கள் ?

Gandhi_art_6.jpg

‘என் ராமன் அயோத்தி ராமனில்லை ‘ என்று உறுதியாக காந்தியால் சொல்ல முடிந்தது. கோயில்கள் விபச்சார விடுதிகளாக இருக்கின்றன என்று வன்மையாக கண்டிக்கிற பண்பு அவரிடம் இருந்தது. கோயில்களுக்கு போவதை பெரும்பாலும் தவிர்த்தே இருந்திருக்கிறார் அவர் ; மத ஆச்சாரியர்களை ஒதுக்கியே வைத்திருந்தார் அவர். மதத்துக்குள் இருந்து வெறுப்பரசியலை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவரின் நிலைப்பாடு

எல்லா மதத்தின் நல்ல பண்புகளை இணைத்துக்கொண்டு நகரவேண்டும் என்ற காந்தி அகில பாரத சாஹித்ய பரிஷத் கூட்டத்தில் விடுதலைக்கு பதினாறு ஆண்டுகள் முன்னர் பேசியதை குறிப்பிடலாம். "நான் இந்த நாட்டின் சர்வாதிகாரி ஆனால் வெறுப்பை விதைக்கிற வகுப்புவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுகிற எல்லா வகையான எழுத்துகள் மற்றும் பேச்சுகளை தடைசெய்வேன் !" என்று காந்தி பேசினார். பெரும்பான்மையினரின் தீவிரவாதம் அவர்களுக்கு அதிகாரத்தையும்,போதையையும் தருகிறது என்று குறித்து அதை தொடர்ந்து எதிர்ப்பேன் என்று செயலாற்றினார் அவர்.

அதேசமயம் சிறுபான்மையினரின் மதவாதத்தை பற்றிய புரிதலும் அவருக்கு இருக்கவே செய்தது. "இந்துக்கள் மற்ற மதத்தவரை கொல்வதை செய்வார்கள் என்றால் அவர்கள் இந்து தர்மத்தை  கொன்றவர்கள் ; அதே போல மற்ற மதத்தவர் மீது வன்முறையை கைக்கொள்ளும் இஸ்லாமியர்களும் இஸ்லாமுக்கு எதிரானவர்களே !" என்று காந்தி பதிவு செய்தார். ஜின்னாவின் மதவெறி அரசியல் இஸ்லாமியமற்றது என்றும் சாடினார் அவர்.

Gandhi_art_1.jpg

Gandhi_art_4.jpgஇந்தியாவும், பாகிஸ்தானும் பிரியக்கூடாது என்று அழுத்தி சொன்ன காந்தியே வெள்ளையர்களின் பிரித்தாளும் கொள்கை, ஜின்னாவின் மதவாத அரசியல், காங்கிரஸ் மதவாதத்தை எதிர்கொள்வதில் காட்டிய அசட்டை,கட்சிக்குள்ளேயே இருந்த வலதுசாரிகள்,பதவி கிடைத்தால் போதும் என நகர்ந்த தலைவர்கள் என்று எல்லாமும் சேர்ந்து நிற்க நாட்டை பிரிக்க ஒத்துக்கொண்டார். வன்முறைகள் பெருமளவில் வெடிக்கும் ஒரே தாயின் கருவுக்குள் பிள்ளைகள் வெட்டிக்கொண்டு
சாவதை போல இங்கே மரணங்கள் நிகழும் என்று எச்சரித்தார்.

காந்தியின் வித்தியாசமான ஆளுமையையோ ; அவரின் அடிப்படை நேர்மையையோ, எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தன்மையையோ சந்தேகிக்க முடியாது. காந்தி ஒரு பழமைவாதியுமல்ல, முற்போக்குவாதியுமல்ல. தன்னளவில் பல முரண்களைக் கொண்டவர் என்றாலும், விடாப்பிடியாகப் பழமையைப் பேணவோ, புதுமையைக் காக்கவோ முனையும் அளவுக்கு அரை குறையானவரோ, தன்னிலிருந்து அந்நியப்பட்ட மனிதரோ அல்ல என்று நந்தி சொல்கிற அளவுக்கு வெறுப்பை உண்டு செய்யும் போக்கை காந்தி தயவு தாட்சண்யம் இல்லாமல் நிராகரித்தார். ‘காந்தி இருக்கும் வரை ஹிந்து தேசம்
சாத்தியமில்லை, இருப்பதும் இஸ்லாமியர்களுக்கு போய் விடும் என்று நம்பியது ஆர்.எஸ்.எஸ். முதலிய ஹிந்து மதவாத அமைப்புகள்.

இஸ்லாமியர்களையும் மதித்து நடக்க வேண்டும் ,அவர்களை கொல்லாதீர்கள் என்று ஹிந்துக்களை நோக்கி காந்தி சொன்னார். "ஏன் இதையே முஸ்லீம்களை நோக்கி சொல்லக்கூடாது?" என்று கேட்டார்கள் ஹிந்து மதவாதிகள். காந்தி வேறு மாதிரி நினைத்தார் ."சிறுபான்மையினரின் பயம் தாங்கள் சார்ந்திருக்கும் நாட்டில் சிறுபான்மை என்று உணர வைக்கப்படுகிற பொழுது எழுகிறது ; அவர்கள் அவ்வாறு உணர்கிற பொழுது இது தாங்கள் கனவு கண்ட தேசமில்லை என்று எண்ணுவார்கள் !" என்று அவர்களின் வலியை உணர்ந்தவராக பேசினார்.

”வெறுப்புக்கு வெறுப்பு தீர்வு கிடையாது. எல்லாரும் கண்ணுக்கு கண் என்று நகர்ந்தால் எல்லாரும் குருடாகத்தான் வேண்டும். ” சிறுபான்மையினர் இப்படி இயங்குவதன் பின்னர் இருக்கும் வெறுப்பை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது; பெரும்பான்மையினரை மிருகமாக்கும் இதை தேசியம் என்று சொல்லும் குழுவை நோக்கி வேகமாக எதிர்த்து இயங்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

வங்கம்,பீகார்,டெல்லி என்று எங்கெல்லாம் வன்முறைகள் வெடித்தனவோ அங்கெல்லாம் வெறுங்காலோடு ஒரே ஒரு ஜீவன் அமைதிக்காக நடந்தது. மதவாதத்தை எதிர்த்து பிரார்த்தனை செய்யுங்கள், அமைதி காத்திருங்கள் என்று மட்டும் சொல்லி ஒரு மனிதனால் அமைதியை மீட்க முடிந்தது என்பது இன்றைக்கு ஆச்சரியம் தரலாம். ஐம்பத்தைந்து ஆயிரம் ராணுவத்தால் கொண்டுவர முடியாத அமைதியை காந்தி கொண்டு வந்தார் என்று சிலாகித்தார்கள் ஆங்கிலேயர்கள் !

“டெல்லி மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் நடைபெற்ற எண்ணற்ற கொலைகளின் பின்னணியாக ஆர்.எஸ்.எஸ் இருந்தது எல்லோரும் அறிந்த உண்மை.. ” என்று காந்தி சொன்ன பொழுது இடைமறித்து ஒருவர் சொன்னார்:  ‘ (ஆனால்) ‘வா’வில் உள்ள அகதி முகாமில் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் செய்த சேவை குறிப்பிடத்தக்கது. ஒழுங்கு, தைரியம், கடும் பணி செய்யும் திறன் ஆகியவற்றை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.’ இதற்குக் காந்தி, ‘ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். ஹிட்லரின் நாசிகளும், முசோலினியின் பாசிஸ்டுகளும் கூடத்தான் இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தார்கள்’ என்று பதிலளித்தார். ‘எதேச்சதிகாரப் பார்வை கொண்ட வகுப்புவாத அமைப்பு’ என ஆர். எஸ். எஸ்சை அவர் வரையறுத்தார்.”

Gandhi_art_2.jpg

பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி தரவேண்டும் என்றும், கலவரங்கள் டெல்லியில் ஓய வேண்டும் என்றும் காந்தி இறுதி உண்ணாவிரதம் இருந்தது ,”காந்தி செத்து மடியட்டும் !” என்று கோஷம் எழுப்புகிற அளவுக்கு வெறுப்பாக மாறி இருந்தது. காந்தியின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கி நிற்கிறது என்று காந்திக்கு தெரியும் ; இப்படி பேசுவதற்காக, இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நம்பி இந்தியா வந்திருக்கும் எண்ணற்ற இஸ்லாமியர்களை காக்க தான் கொடுக்கும் குரல் தன் மூச்சை நிறுத்திவிடும் என்று அவருக்கு தெரிந்தே இருந்தது. “போய்விட்டு போகிறது ! நான் நம்பும் இறைவன் என் பணி முடிந்தது என்று எண்ணிக்கொண்டால் என்னை அழைத்துக்கொள்வான்” என்று அம்புஜம் அம்மாளுக்கு கடிதம் எழுதினார்.

பலபேர் ஏவப்பட்டு இறுதியில் கோட்சே கையால் அது நிகழ்ந்தது. கையில் இஸ்லாமியரின் பெயரை பச்சை குத்தி வன்முறையை தூண்டி நாட்டை ரத்த பூமியாக்க எண்ணிய அந்த மிருகத்தைதான் இங்கே நாயகனாக கொண்டாடுகிறார்கள் பலபேர். அப்பொழுது “காந்தியை கொன்றது ஒரு ஹிந்து !” என்று அழுத்தி சொன்னது ஊடகங்கள். இருந்தாலும் கோட்சேவை அப்படியே நாராயண் ஆப்தேவோடு தூக்கில் போடவில்லை அரசு. ஒழுங்காக வழக்கு விசாரணைகள் நடந்து, அவர்களுக்கு என்று வக்கீல் அமர்த்தப்பட்டு, ஜனாதிபதி வரை கருணை மனு போய் பின்னரே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

காந்தி இறந்ததும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து கொண்டாடிக்கொண்டார்கள் சங் பரிவார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலேயே இருந்த கோட்சே அப்பொழுது தான் அதில் உறுப்பினரில்லை என்று Gandhi_art_5.jpgசொன்னது உடனிருந்தவர்களை காப்பாற்றவே. காந்தியை கொல்ல திட்டம் தீட்டிக்கொடுத்த சவார்க்கரின் படத்தை பி ஜே பி அரசு நாடாளுமன்றத்தில் வைத்தது ; இந்த கண் கொள்ளா கட்சி வேறு எந்த நாட்டிலும் நிகழாது.

உங்களுக்கு காந்தியோடு ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால், மதவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் வெறுப்பரசியலை தணிக்க அயராது செயலாற்றிய அவரை அந்த ஒரு புள்ளியில் நீங்கள் எல்லாரும் ஏற்றுக்கொள்ள முடியும். பெரியார் அதனால் தான் காந்திஸ்தான் என்று இந்தியாவுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று எழுதினார்.

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதன் வலியோடு இங்கே சிக்கல்களை அணுகிய படேல் மற்றும் இஸ்லாமியர்களை இந்தியர்கள் என்று பார்க்க வேண்டும் என்ற நேரு ஆகிய இருவரையும் காந்தியின் மரணம்
உலுக்கியது. எவ்வளவு ஆபத்தானவர்கள் இந்து மதவாதிகள் என்று உணர்ந்தார்கள். இந்தியா இந்து தேசமாகாமல் தப்பியது !

நேரு காந்தியின் அந்த பன்முகத்தன்மையை முன்னோக்கி எடுத்து சென்றார். தேசம் எல்லா மக்களுக்குமான தேசமாக மாறியது. காந்தியார் சாந்தியடைய மதவாதத்தை புறக்கணிக்க வேண்டியது அவசியம் ; வெறுப்பை தாண்டி மனிதத்தை நோக்கி நம்மை செலுத்த வேண்டியது முக்கியம். அடையாள அரசியல்களை தாண்டி நம்மின் பன்முகத்தன்மையை காக்க ஒன்றிணைந்து நகரவேண்டும். ஆர்.எஸ்.எஸ் மாதிரியான அமைப்புகள், இந்தியாவை ஜனநாயகத்தின் மூலமே மீண்டும் வெறுப்பை தூண்டச் செய்யலாம் என்று வேகமாக செயலாற்றிக்கொண்டு இருக்கும் இக்காலத்தில், காந்தி இன்றைய சூழலில் அதிகம் அவசியமாக இருக்கிறார்.

vikatan.

  • தொடங்கியவர்

9,034 மைல்... 18:34 மணி நேரம்... உலகிலேயே அதிக நேர விமான சேவையை தொடங்குகிறது கத்தார் ஏர்லைன்ஸ்!

 

உலகிலேயே நீண்ட நேர விமான சேவையை கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கத்  திட்டமிட்டுள்ளது. தோஹா- ஆக்லாந்து இடையே விமான சேவை துவக்கப்பட்டால்,  அந்த விமானம் 9,034 மைல் தூரத்தை 18 மணி நேரம் 34 நிமிடங்களில் கடக்கும். 

Qatar%20plane%20long%201.jpg

சில மணி நேரத்திற்குள் நாடு விட்டு நாடு செல்வதற்குத்தான் விமானப் பயணம் என்றாலும், அப்படிச் செல்வதற்கு பல மணி நேரத்திற்கும் மேல் பிடிக்கும் தொலை தூர விமானப் பயணங்களும் இருக்கின்றன. அந்த வகையில், 8,578 மைல் தூரத்தை 16 மணி நேரம் 55 நிமிடங்களில் கடக்கும் டல்லாஸ் - சிட்னி செல்லும் க்வாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவையே இதுவரை தொலைதூரப் பயணத்தின் ராஜாவாக இருந்தது.

இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்துக்கு,  நேரடி விமான போக்குவரத்து சேவை துவங்க கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விமான சேவையின் பயண நேரம் சுமார் 18 மணி நேரமாக இருக்கும். இதுவே உலகின் நீண்ட நேர விமான சேவையாகும். 259 பயணிகளுடன்,  போயிங் 777-LR ரக ஜம்போ விமானத்தின் மூலம் இந்த சேவையை தொடங்க கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.


தோஹா- ஆக்லாந்து இடையே விமான சேவை துவக்கப்பட்டால்,  அந்த விமானம் 9,034 மைல் தூரத்தை 18 மணி நேரம் 34 நிமிடங்களில் கடக்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இது ஒரு சாதனை பயணமாக இருக்கும் என கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார்.

விகடன்

  • தொடங்கியவர்

12615221_978070488908312_471477847208930

உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திரம் மிட்செல் ஸ்டார்க்கின் பிறந்தநாள்.

2015 உலகக்கிண்ணத் தொடரில் கலக்கிய ஸ்டார்க் தொடரின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவாகியிருந்தார்.

  • தொடங்கியவர்

புத்திசாலிகள் மறுபடியும் செய்யத் துணியாத 10 தவறுகள்...!

 

“தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படுபவையே…

-ஒப்புக்கொள்ளபட்டால்…” – புரூஸ் லீ

நாம் எல்லாரும் தப்பு செய்வோம். ஆன எங்க அந்த தவறை ஒத்துக்கொண்டால் சுய மரியாதை போய்விடுமோ என்ற வறட்டு பிடிவாதத்தோட இருப்போம். இதான் நம்ம பிரச்னையே. ஆனா அதே தவற என்னைக்கு ஒத்துக்கிட்டு அதிலிருந்து பாடம் கத்துக்கிறோமோ அன்னைக்குதான் அந்த தவற நாம மறுபடியும் செய்யமாட்டோம். இதுதான் இன்றைக்கு ஒவ்வொருத்தரோட முன்னேற்றத்தின் போராட்டக் களம்.

மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்,  தவறு செய்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கின்றனர். முதல் பிரிவினர், தீர்க்கமான மனநிலை கொண்டோர், அதாவது, ஒரு தவறு ஏற்பட்டதும் உடனடியா இந்த வேலை நமக்கு வராது. நா அவ்ளோதான் இனிமேல்... என ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிடுவர். இரண்டாம் பிரிவினர், வளரும் மனநிலை கொண்டோர், ‘ஆஹா, இந்த முறை தவறிவிட்டதே, பரவாயில்லை இந்த தவறு நமக்கு சிறந்த பாடம்’ என தங்களையே வளர்த்துக்கொள்வோர்.

arrow_vc1.jpg


“நமது தவறுகளை கவனிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். ஏனென்றால் அத்தவறுகள்தான் நம்மை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்பவை” என இந்த ஆய்வினை மேற்கொண்டு வரும் ஜேசன் மோசர் கூறுகிறார்.

மேற்சொன்னபடி வளரும் மனநிலை கொண்டோரே வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர். ஆனால் தவறை ஒப்புக்கொள்ள மனமில்லாதோர் தங்கள் நிலையிலேயே எவ்வித வளர்ச்சியும் இன்றி தீர்க்கமாக இருந்துவிடுகின்றனர்.

“தவறுகள் தொடர்ந்தால், அது உன் தவறு அல்ல, உன் முடிவு”-

-    பாலோ கொயேலோ

ஸ்மார்ட் ஆக இருப்போர், தவறு செய்தால் முடங்கிவிட மாட்டார்கள். காரணம், அந்த தவறை அவர்கள் மறுமுறை செய்யத் துணிய மாட்டார்கள். நம்மில் பலரும் கீழ்வரும் தவறுகளை பலமுறை செய்திருப்போம். ஆனால் ஸ்மார்ட் ஆக இருப்போர் இத்தவறுகளை ஒரு முறைக்கு மேல் செய்திருக்கமாட்டார்கள்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல:

எல்லாரையும் நல்லவர் என நம்பி, வெளுத்ததெல்லம் பாலாக நினைத்து இருக்கமாட்டார்கள் புத்திசாலிகள். வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கி எந்த ஒரு முடிவையும் எடுக்கமாட்டார்கள். யாரு எது சொன்னாலும் ஒரு முறை செய்வதற்கு முன்னாடி இரண்டு முறை யோசிப்பாங்க. எந்த ஒரு வாய்ப்பும் சும்மா வருவதில்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள்.

இந்த முறை சரியாவரும்

'இந்த முறை சரியா செய்திடுவோம என ஒரு வேலையில் செய்த தவறையே,  மறுபடி மறுபடி செய்துவிட்டு வெற்றி பெறுவோம் என்ற கற்பனைக் குதிரையில் பறக்கமாட்டார்கள்.

“ஒரே விதமான அணுகுமுறையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்ப்பவன் அறிவிலி”   - ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்

எடுத்த காரியத்தில் தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால், மறுபடியும் முயலும் போது புது விதமான அணுகுமுறையுடன் களமிறங்குவார்கள், புத்திசாலிகள்.

arrow_vc2.jpg



வெற்றிகள் சுலபமல்ல:

ஸ்மார்ட்டா இருப்பவங்களுக்கு தெரியும் வெற்றிகளும் மனத்திருப்தியும் அவ்வளவு எளிது அல்ல என்பது. அதைவிடுத்து, இன்றைய உலகத்துல உலகையே விரல் நுனியில வச்சிருக்கலாம் என்ற மிதப்பில், நினைத்தது எல்லாம் உடனே கையில் கிடைச்சிடும், இன்னைக்கு விதைத்து நாளைக்கு அறுவடை செய்திடலாம் என்ற முட்டாள்தனம் அறவே கூடாது. வெற்றி சுலபமல்ல, தாமதமானாலும் அதை எப்படி தக்கவைக்க வேண்டும் என்பதை  விடா முயற்சி உடைய புத்திசாலிகள் தெரிந்துவைத்திருப்பர். ஏனெனில் அவர்கள் தவறில் பாடம் கற்றவர்களாகவே இருப்பர்.

எதைப் பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்:

ப்ளான் பண்ணி, பட்ஜெட் போட்டு செலவு செய்யப் பழகணும். அப்போதுதான் பொருளாதார ரீதியா நாம ஸ்டடி ஆக முடியும். இப்படி வரும் காசு அப்படி எப்படி போகுது என்பதே தெரியாம இருந்தா முன்னேற்றம் கேள்விக்குறி ஆகிடும். அநாவசிய செலவுகளைக் குறைக்க பட்ஜெட் போட்டுதான் வாழணும். ஸ்மார்ட் ஆக இருக்கணும்னு நினைத்தா, இத ஃபாலோ பண்ணுங்க.

பெரிய லட்சியங்களை மறந்திடக்கூடாது:

நம்ம முன்னாடி இருக்குற சின்ன சின்ன வேலைகளில் மூழ்கி,  பெரிய லட்சியங்களை ஒரு போதும் மறந்திட கூடாது. வாழ்க்கை நமக்காக பெரிய சிம்மாசனம் போட்டு வைத்து காத்திட்டு இருக்கும் போது,  இரும்பு நாற்காலிக்கா புத்தியை செலவழித்து சண்டை போட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. சின்ன வெற்றிகளுக்கு சந்தோசம் அடைந்து அதுலயே மயங்கி,  பெரிய லட்சிய வெற்றிக்கான பணிகளை ஒருபோதும், விவேகம் உள்ளவன் மறக்கமாட்டான்.

நம்ம வேலைய நாமதான் செய்யணும்:

ஸ்கூல் படிக்கும் காலத்துல இருந்தே வீட்ல செய்யசொல்லி கொடுத்த ஹோம் வொர்க் எல்லாம் க்ளாஸ் வொர்க்காகதான் செய்திருப்போம். எப்போவாவது லக் அடிச்சு வின் பண்ணிருப்போம். ஆனா பெரிய உலக சாதனையை பதிவு செய்த மாதிரி அத கொண்டாடி,  அடுத்து செய்ய வேண்டியதை மறந்திடுவோம். இப்படி எல்லம் இல்லாம கொடுத்த வேலையை எங்க எப்போ செய்யணும் என்ற அடிப்படையில் தெளிவா இருக்கணும். நாம செய்த வேலைக்கு கிடைக்கும் வெற்றிதான் நிலையானது என நம்புபவன் அறிவாளி.

வான்கோழி மயிலாக முடியாது:

இந்த மாதிரி வாழணும் அந்த மாதிரி வாழணும் என்கிற எதிர்பார்ப்பில்,  எந்த மாதிரியும் வாழாம போறதுக்கு நம்ம வாழ்ற வாழ்க்கையில் உண்மையோடு இருந்தாலே போதும். இன்னொருத்தர் மாதிரி வாழணும் என்று ஆசைப்படுபவன் தன்னையே இழக்கிறான்.

arrow_vc3.jpg



ஜால்ரா தட்டுவதை நிறுத்தவும்:

ஆளுக்கு தகுந்த மாதிரி ஜால்ரா தட்டி ரொம்ப காலம் வாழ முடியாது. உங்களுக்கு எது சரி எது தவறு என தெரியுதோ அதன்படி நடக்கணும். அடுத்தவங்களுக்காக மறைத்து, மறைந்து, வளைந்து நெளிந்து வாழமாட்டான் புத்திமான்.

அப்பாவியாக நடிக்க வேண்டாம்:

ஒரு வேலை நடக்கணும் என்பதற்காக அப்பாவி வேஷம் தரித்தால் முன்னேற்றம் நிலையானதாகக் கிடைக்காது. அது ஒரு வகை அடிமைத்தனம். பாவப்பட்டவர் போல் காட்டிக்கொள்வதில் ஒரு போதும் பெருமைப்படமாட்டார்கள் புத்திசாலிகள்.

அடுத்தவரை மாற்ற முயற்சிப்பது:

மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்கவேண்டும். நான் ரொம்ப பெரிய திறமைசாலி. இப்படி இந்த  நபரை மாற்றிக் காண்பிக்கிறேன் என வீண் சவால்கள் உடம்புக்கு ஆகாது. இப்படி டம்பம் பேசும் ஜாம்பவான்கள் அடுத்தவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன் பேர்வழி எனப் பெரிதாக்குவர். ஒரு விஷயம் ஒத்துவரவில்லை என்றால் உங்களை மாற்றுங்கள் எதிராளியை மாற்ற எண்ணி உங்களையே இழக்காதீர்கள்.

vikatan

5 hours ago, நவீனன் said:

9,034 மைல்... 18:34 மணி நேரம்... உலகிலேயே அதிக நேர விமான சேவையை தொடங்குகிறது கத்தார் ஏர்லைன்ஸ்!

World’s longest direct passenger flights

  1. Dallas-Sydney, Qantas, 8,578 miles (16h 55m)
  2. Johannesburg-Atlanta, Delta, 8,439 miles (16h 40m)
  3. Abu Dhabi-Los Angeles, Etihad, 8,390 miles (16h 30m)
  4. Dubai-Los Angeles, Emirates, 8,339 miles (16h 35m)
  5. Jeddah-Los Angeles, Saudia, 8,332 miles (16h 55m)
  6. Doha-Los Angeles, Qatar Airways, 8,306 miles (16h 25m)
  7. Dubai-Houston, Emirates, 8,168 miles (16h 20m)
  8. Abu Dhabi-San Francisco, Etihad, 8,158 miles (16h 15m)
  9. Dallas-Hong Kong, American Airlines, 8,123 miles (16h 20m)
  10. Dubai-San Francisco, Emirates, 8,103 miles (15h 50m)
  11. http://www.theguardian.com/travel/2016/jan/27/qatar-airways-worlds-longest-direct-flight-doha-auckland-santiago
  • தொடங்கியவர்

 

தாரை தப்பட்டை வரலட்சுமி டான்ஸ் வீடியோ!

  • தொடங்கியவர்

12646750_978069505575077_312102566031026

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் சுராஜ் ரண்டிவின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

large_kajal-agarwal-filmfare-awards-2016

large_2n9jjk-kajal-aggarwal-at-filmfare-

large_06-kajal-aggarwal-pink-gown-hd-pho

large_kajal-aggar.jpg

கவர்ச்சியில் கண் குளிர வைத்த காஜல் அகர்வால்...

  • தொடங்கியவர்

வலைபாயுதே V 2.0

 

facebook.com/swaravaithee: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸின் நேர்காணலை, இந்துஸ்தான் டைம்ஸில் படித்தேன்...

p100a.jpg

`என் அப்பா இந்தத் தேசத்துக்கு எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறார். ஆனால், அவர் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் `ஓ... அவர் செத்துப்போனதுகூட பிரச்னை ஆச்சே. அவரா..?' என்றே தொடங்குகிறார்கள். இப்படியா அவர் புகழ்பெற வேண்டும்?' என்று கேட்டிருக்கிறார்!

facebook.com/saravanan.chandran.77: கேரளாவில் நிறையச் சுற்றினேன். அதில் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லியே ஆகவேண்டும். அங்கு உள்ள டீக்கடைகளில், டீ எட்டு ரூபாய்க்கும், சர்க்கரை இல்லாத டீ ஏழு ரூபாய்க்கும் விற்கிறார்கள் சேட்டன்கள். இப்படி ஆப்ஷன் கொடுப்பதே அசத்தலாக இருக்கிறது. ஒரு ரூபாய்னாலும் சும்மாவா? சேட்டன்கள், அதை இங்கும் சாத்தியப்படுத்திக்காட்டினால் எல்லோருக்கும் மகிழ்ச்சி!

p100b.jpg

facebook.com/guru.shree.16: யாருடன் தேர்தல் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் - சரத்குமார் # கேட்காத காதுக்கு ஹெட்செட்டாம்... பாயசம் குடிக்கிறத்துக்குப் பல்செட்டாம்!

p100d.jpg

facebook.com/guru.shree.16: கோபத்துல வார்த்தைங்களைக் கொட்டினா அள்ள முடியாது. அதே மாதிரி பீங்கான் பிளேட்டையும் உடைக்கக் கூடாது. அதை அள்ளுவதும் கஷ்டம்!

facebook.com/swaravaithee:

படிக்கிற பசங்களுக்கு எதுக்கு மொபைல்?

படிக்கிற பசங்க எதுக்கு டி.வி பார்க்கணும்?

படிக்கிற பசங்க எதுக்கு பேப்பர் படிக்கணும்?

படிக்கிற பசங்களுக்கு எதுக்கு காசு?

என்பதன் நீட்சியாக

படிக்கிற பசங்களுக்கு எதுக்கு அரசியல்?

படிக்கிற பசங்களா இருக்கிறது மாதிரி கொடுமை இருக்கவே முடியாது!

facebook.com/sukirtha.rani: கவிதை வாசிப்புக்காக சென்னை செல்ல, அரசுப் பேருந்தில் ஏறினேன். நடத்துநரிடம், `சார்... ஒரு டிக்கெட்' எனச் சொல்லி, காசை நீட்டினேன். `இரு... வாங்கிக்கிறேன்' என என்னைக் கடந்துபோய்விட்டார். அதற்குள் கவிஞர் சுகுமாரனின் `தவறிய அழைப்பை மீள' எடுத்தேன். பின்னால் இருந்து ஒரு குரல், `ஹே... செல்போன்... டிக்கெட் எடு!'. `அப்ப என் கையில் துடைப்பம் இருந்தால், `ஹே... தொடைப்பக்கட்டை'னு கூப்பிடு வீங்களா? காசு வாங்காம கடந்துபோனது உங்க தப்பு. உங்களை `சார்'னுதானே கூப்பிட்டேன். உங்க பதில் மரியாதை நல்லா இருக்கு. டிக்கெட் கிழிக்கப் படிச்சப்பவே, பயணிங்ககிட்ட பழகவும் படிச்சிருக்கலாமே. போங்க சார்... இனியாவது அதைச் செய்யுங்க' என்றேன். ராணிப்பேட்டையில் நான் இறங்கும் வரை, பேருந்தில் பேரமைதி!

p100c.jpg

facebook.com/donashok: அதென்ன... எவன் செத்தாலும் `அரசியல் ஆக்காதீங்க... அரசியல் ஆக்காதீங்க'னு கூவுறது? செத்தவன் என்ன, புற்றுநோய் வந்தா செத்தான்? மத அரசியலின் உட்பிரிவான சாதி அரசியல் தாங்க முடியாம செத்துப்போயிட்டான். அநியாயமான அரசியலால் நிகழ்ந்த அந்தச் சாவை, நியாயமான அரசியல் ஆக்குவது மட்டுமே, அந்தச் சாவுக்கு நாம் தேடும் நீதி. ரோஹித் வெமுலாவுக்கு நாம் செய்யும் நியாயமும் அதுதான்!

p100f.jpg

twitter.com/g_for_Guru: நாஞ்சில் டு விஜயதரணி: - `ஆர் யூ ஓ.கே பேபி?’

twitter.com/Im__Joshi:  `1100' என்ற எண்ணில் தொடர்புகொண்டு, முதலமைச்சரிடம் உங்கள் கேள்வி களைக் கேட்கலாம் - செய்தி. #தெய்வத்தை, மனிதன் கேள்வி கேட்பதா... அய்யகோ!

 twitter.com/Kiruku_Official: இன்பமோ துன்பமோ... சிரித்துக் கொண்டே இரு. பார்க்கிறவன் காண்டாகி சாவட்டும்!

twitter.com/withkaran: தமிழ்நாட்டுல 234 தொகுதிகள்லயும் ரெளடிகளை ஒழிச்சுக்கட்டின பிறகுதான், விஷாலின் கலைப்பயணம் முடியும்போல!

twitter.com/Tamil_Typist: ஜெ - ஒரு லைன் வாசிச்ச உடன் கொஞ்சம் நேரம் கொடுக்கிறார் டேபிளைத் தட்ட... கச்சேரியைப் பார்ப்பதுபோலவே இருக்கு!

twitter.com/chevazhagan1: இளையராஜாவின் `பச்சரிசி மாவிடிச்சு... மாவிடிச்சு... மாவிடிச்சு...' எனும் பாடல், நம் கை பிடித்து ஊர்த் திருவிழாவுக்கே கூட்டிச் செல்கிறது!

twitter.com/kumaresann01: கடவுளுக்கும் `ழ'கர பிரச்னை இருக்கும்போல, நான் `நல்ல வழியைக் காட்டு'னு வேண்டினா, அவர் `வலி'யைக் காட்டுறார்!

twitter.com/sindhutalks: `கெத்த உடாத... பங்கு கெத்த உடாத...'னு தல சொல்லியும் கேக்காம ரிலீஸ் பண்ணினாங்க. படம் ஃப்ளாப்பு # `கெத்து’!

p100e.jpg

twitter.com/udanpirappe: அம்மா அழைப்பு மையத்தை 20,000 பேர் தொடர்புகொண்டனர் - ஜெயா நியூஸ் # இதுக்குப் பெருமைப்படக் கூடாது சென்றாயன்... வெட்கப்படணும்!

twitter.com/kathirvelrajan: புதுசா ஒரு கைலியைக் கட்டினேன். வடிவேலு, கூடையை இடுப்புல கட்டிக்கிட்டு நடந்தா மாதிரி எனக்கும் ஃபீல் ஆவுது!

twitter.com/arattaigirl: டக்குனு ஒரு செகண்ட் கண் மூடினதும் யார் முகம் நினைவுக்கு வருதோ... அவங்கதான் நம்ம கடனைத் திருப்பித்தராம இருக்கிறவங்க ;-)

twitter.com/kavinvk: லவ் பண்றதைவிட, லவ் பண்றவன்கூட ரூம்மேட்டா இருக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம் # ஸ்ட்ரெய்ட்டா நானே பாதிக்கப் பட்டிருக்கேன்!

twitter.com/king_prasath: இந்தப் பூமி,  வேறு ஒரு கிரகத்தின் நரகமாகவும் இருக்கலாம்!

twitter.com/chinnapulla: எல்லா ஊர் பொருட்காட்சியிலயும் தாஜ்மஹால் செட் போடுறதுனால, தாஜ்மஹாலை நேர்ல பார்க்கும்போது ஏதோ பொருட்காட்சியில் இருக்கிற மாதிரியே ஃபீல் ஆகுது!
 
twitter.com/Whale_Spks: கவர்ச்சி நடிகைகளின் கடைசிக் காலம், காங்கிரஸில்தான் கழியும்போல!

twitter.com/Sathik_Twitz: பொண்ணுங்களைப் பொறுத்தவரையில், அவங்க யார் மேல இம்ப்ரஸ் ஆகுறாங் களோ... அவன் நல்லவன்; அவங்க மேல யார் இம்ப்ரஸ் ஆகுறானோ... அவன் கெட்டவன்!

twitter.com/Aasifniyaz: இந்த மேசையைத் தட்டுறதுல இருந்து மின்சாரம் தயாரிக்க முடிஞ்சா, தமிழ்நாடு மின்மிகை மாநிலம் ஆகிடும் # என்னா தட்டு தட்டுறாங்க!

twitter.com/Itzmejaanu: டீக்கடை பன்னுக்கு நல்லா மேக்கப் போட்டு `பர்கர்'னு விக்கிறதே தொழில் ரகசியமாம்!

twitter.com/Shanthhi: ஏன் புதுத் துணி போடாமல் வெச்சிருக்க? வெயிட் குறை யட்டும்னு காத்துட்டிருக்கோம்!

twitter.com/SkSoundhar: பேங்க்ல பணம் போடுறவன், வரிசையில் நின்னு கிட்டு இருக்கான்; கடன் வாங்குறவன், மேனேஜருக்கு எதிர்ல சொகுசா உட்கார்ந்திருக்கான்!

vikatan

  • தொடங்கியவர்

 

இது போல நீங்களும் செய்ததுண்டா?

  • தொடங்கியவர்

12631404_1063926626999460_32377913426030

 

வாழ்த்திய இந்திய அணி கேப்டன் தோனி... மகிழ்ச்சியில் மகளிர் அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய மகளிர் அணியை நேரில் சந்தித்த இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் தோனி.

 
  • தொடங்கியவர்

செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்!

 

வாஷிங்டன்: நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் செல்பி படம் எடுத்து அனுப்பியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 5 மாதத்திற்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோவை அனுப்பி வைத்தது.

rover%20selfy01.jpg

இந்த ரோபோ கடந்த 5 மாதமாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்தும், அங்குள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்தும், அவற்றை படம் எடுத்து நாசாவு ஆய்வு மையத்திற்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில், ஆய்வு மேற்கொண்டு கியூரியாசிட்டி ரோபோ, செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு மலையின் பின்னனியில் செல்பி எடுத்து நாசா ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

vikatan

  • தொடங்கியவர்
5 hours ago, ஜீவன் சிவா said:

World’s longest direct passenger flights

  1. Dallas-Sydney, Qantas, 8,578 miles (16h 55m)
  2. Johannesburg-Atlanta, Delta, 8,439 miles (16h 40m)
  3. Abu Dhabi-Los Angeles, Etihad, 8,390 miles (16h 30m)
  4. Dubai-Los Angeles, Emirates, 8,339 miles (16h 35m)
  5. Jeddah-Los Angeles, Saudia, 8,332 miles (16h 55m)
  6. Doha-Los Angeles, Qatar Airways, 8,306 miles (16h 25m)
  7. Dubai-Houston, Emirates, 8,168 miles (16h 20m)
  8. Abu Dhabi-San Francisco, Etihad, 8,158 miles (16h 15m)
  9. Dallas-Hong Kong, American Airlines, 8,123 miles (16h 20m)
  10. Dubai-San Francisco, Emirates, 8,103 miles (15h 50m)
  11. http://www.theguardian.com/travel/2016/jan/27/qatar-airways-worlds-longest-direct-flight-doha-auckland-santiago

நன்றி ஜீவன் மேலதிக தகவலுக்கு..:)

  • தொடங்கியவர்

“சந்தோஷமா இருந்தாலும் ஆடுவேன். சந்தோஷமா இருக்கவும் ஆடுவேன்!”

 

‘மலர் டீச்சர்’ ஃபிட்னெஸ் சீக்ரெட்

 

‘பிரேமம்’ படம் மொழிகளைத் தாண்டி ஹிட் அடிக்க முக்கியக் காரணம் மலர் டீச்சர் கதாபாத்திரம். இன்று தென் இந்தியாவே ‘மலர் டீச்சர்... மலர் டீச்சர்’ என மயங்கிப்போய் பொக்கே நீட்டுகிறது. தென்னிந்திய சினிமாவே  வலைவீசித் தேடிக்கொண்டிருக்க, நடிப்புக்கு சின்ன பிரேக்விட்டு ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ் படிக்கப் போய்விட்டார் சாய். மலர் டீச்சரின் ஃபிட்னெஸ், பியூட்டி ரகசியம் என்ன..?

“எம்.பி.பி.எஸ் கடைசி வருஷம் படிக்கிறேன். ப்ராக்டிக்கல், எக்ஸாம்னு பரபரப்பா இருக்கேன். அடிப்படையில் நான் ஒரு டான்ஸர். டான்ஸ்செய்ய உடம்பில் நல்ல ஃப்ளெக்சிபிளிட்டி இருக்கணும். அதனால்,  எப்பவுமே என்னோட ஃபிட்னெஸுக்குத்தான் முதல் இடம். நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கும்போது, டான்ஸ் ஆடிப் பரிசு வாங்கினேன். அப்போ ஆரம்பிச்சதுதான் இந்தப் பயணம். பரிசுக்காக இல்லாவிட்டாலும், என் சந்தோஷத்துக்காக ஆட ஆரம்பிச்சுட்டேன். 

வீட்ல ஒரு டயட்டீஷியனுக்கு நிகரா என்னோட அம்மா, நிறைய தால், ராஜ்மா, போன்ற புரதம் நிறைந்த உணவுகளைக் கொடுப்பாங்க. அதுதான் என் எனர்ஜிக்குக் காரணம். நிறைய டான்ஸ் ஆடுவேன் என்பதால், பசியும் அதிகமா இருக்கும். ஆனா, எவ்வளவு டான்ஸ் ஆடினாலும் சோர்வடைய மாட்டேன். என் உணவில், பழங்களுக்கு மிக முக்கிய இடம் இருக்கு. சாப்பாடுகூட சாப்பிடாம இருந்திடுவேன். ஆனா, பழங்கள் இல்லைன்னா ரொம்பக் கஷ்டம். இன்னும் சொல்லணும்னா, என்னோட சாப்பாடே ஃப்ரூட்ஸ்தான். தண்ணீர், ஜூஸ், இளநீர், மோர்னு நிறைய எடுத்துப்பேன். 

p4a.jpg

`அசைவ உணவில் சத்து நிறைவாக இருக்கு’னு சொல்வாங்க. ஆனா, நான் அசைவம் தொடவே மாட்டேன். இருந்தாலும், அதைச் சாப்பிட்டு வளர்ந்தவங்களுக்கு சரிசமமா எனக்கு எனர்ஜி இருக்கும். 

 சின்ன வயசுல இருந்தே நான், அம்மா, தங்கச்சினு வீட்டுல எல்லாரும் ஒண்ணா யோகா செய்வோம்.  தினமும் காலையில் ஒரு லிட்டர் தண்ணீரும், நிறையப் பழங்களும் சாப்பிடுவேன்.  கிரீன் டீயில் ஆரம்பிச்சு, நேரம் தவறாம, உணவு உட்கொள்வது என்னோட குட் ஹெல்த்துக்குக் காரணம்னு நினைக்கிறேன். உணவிலும் எண்ணெயில் பொரித்தது, வதக்கியதைத் தவிர்த்து,  ஆரோக்கியமான ஆர்கானிக் ஃபுட்ஸ் சாப்பிடுவேன்.

 அழகுக்கு ரொம்ப மெனக்கெடுவது இல்லை. கெமிக்கல் ரசாயனங்கள் நிறைந்த சோப் போடுவது இல்லை. பயத்தம் பருப்பு மாவுதான் என்னோட சோப். தலைமுடிக்கு எந்த ரசாயனமும் பயன்படுத்துவது இல்லை. முடிக்குத் தேவையான, சத்தான உணவை மட்டுமே சேர்த்துக்கொள்வேன். கீரை, பழங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகம் எடுத்துப்பேன்.

நான் முறையாக எந்த நடனமும் கற்றுக்கொள்ளவில்லை. இன்டர்நேஷனல் டான்ஸ் ஷோஸ் பார்த்துத்தான் நானும் அம்மாவும் எப்படி ஆடலாம்னு டிஸ்கஸ் செய்வோம். அப்படித்தான் டான்ஸ் ஆடக் கத்துக்கிட்டேன். இதுவே என்னுடைய ஃபிட்னெஸுக்கு உதவியாக இருக்கு. இப்போ, டெய்லி டான்ஸ்தான். நான் சந்தோஷமா இருந்தாலும் ஆடுவேன். சந்தோஷமா இருப்பதற்காகவும் ஆடுவேன். நான் பாட்மின்டன் பிளேயர். தினமும் விளையாடுவேன். எந்த ஒரு விளையாட்டையும் பொழுது போக்குக்காக எப்போதாவது ஒருமுறை ஆடுறதைவிட, தினமும் விளையாடினாலே போதும், ஃபிட்டாக இருக்கலாம். ஜார்ஜியாவில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘லாங் வாக்’ செல்வேன். என் தாத்தா ஒரு துளசி மாலையைத் தந்தார். அதைவெச்சு தினமும் ஒரு மணி நேரம், 100 முறை காயத்ரி மந்திரம் சொல்லி தியானம் செய்வேன். இது என்னோட கான்சன்ட்ரேஷனுக்கும் ஸ்ட்ரெஸ் ரிலீஃப்க்கும் உதவியாக இருக்கு.

நம் உடல், நமக்காக எவ்வளவோ செய்கிறது. அதற்கு, முதலில் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கணும். அதை நேசிக்கப் பழகணும். ஒரு நோய் வந்தபிறகு சரிசெய்வதைவிட, இதை எல்லாம் செய்யக் கூடாது, இதனால்தான் உடல்நலக் குறைபாடு வருகிறது என்று விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என்னோட ஆசை” எனப் புன்னகைக்கிறார் மருத்துவம் படிக்கும் மலர் டீச்சர்! 

விகடன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 31
 
 

article_1454045086-Central.jpg1891: போர்த்துக்கல் குடியரசுப் புரட்சி ஆரம்பமாகியது.

1915: முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி நச்சு வாயு தாக்குதல் நடத்தியது.

1943: ஜேர்மன் பீல்ட் மார்ஷல் பிரெட்ரிச் பௌலஸ் சோவியத் யூனியனிடம் சரணடைந்தார்.

1945: ஜேர்மனியினால் ஸ்டத் ஓவ் முகாமிலிருந்த சுமார் 3000 கைதிகள் பால்டிக் கடல் பகுதிக்கு அழைத்துக் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.

1946: சோவியத் யூனியனின் அரசியலமைப்பை பின்பற்றி யூகோஸ்லாவியாவில் 6 குடியரசுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது.

1950: ஹைதரசன் குண்டுத் தயாரிப்புத் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1953: வடகடல் வெள்ளம் காரணமாக நெதர்லாந்தில் 1800 பேர் பலி.

1968: அவுஸ்திரேலியாவிலிருந்து நௌரு சுதந்திரம் பெற்றது.

1996: இலங்கை மத்திய வங்கி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 86 பேர் பலியானதுடன் 1400 பேர் காயமடைந்தனர்.

1996: ஹையாகுட்டாகே வால்வெள்ளி ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் யூஜி ஹையாகுட்டாகேவினால் கண்டுபிடிக்கப்பட்டது.

2003: ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7பேர் கொல்லப்பட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/164929/2016-01-29-05-30-21#sthash.YJnTp7gM.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12650848_1000891976650655_16474201225271

 

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

-விவேகானந்தர்.

  • தொடங்கியவர்

ஜனவரி.31 - நாகேஷ் நினைவு தினம் - 25 நினைவுகள்..

 

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!...

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

nagesh_vc1%281%29.jpg

* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

nagesh_vc4.jpg

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

nagesh_vc5.jpg

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

nagesh_vc6.jpg

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.