Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நல்ல சூழ்நிலைகளை உருவாக்க முயலுங்கள்: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில டிப்ஸ்

 

 
happy%20life%20002jpg

பிரச்சினைகளை தீர்க்க சதா போராடுவதால் மன அழுத்தம்தான் மிஞ்சும், நம்மைச் சுற்றிலும் நல்ல சூழ்நிலைகளை உருவாக்க முயன்றால் பிரச்சினைகள் தானாக ஓடிப்போகும் என்கிறார்கள் பேராசியை நிதிகாவும் டாக்டர் மது கொடியாவும்.

தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில்முறை வாழ்க்கையோ எதுவாயிருப்பினும் நேர்மறைக் கண்ணோட்டம் முக்கியமானது என்கிறார்கள் இவர்கள். அடிப்படையில் ஒழுங்கீனமற்ற நிலையே நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம் என்கிறார்கள் இவர்கள்.

பேராசிரியை நிதிகா டக்கல் மற்றும் டாக்டர் மது கொடியா இருவரும் நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தரும் டிப்ஸ் இதோ:

* ஒழுங்கீனம் அற்ற நிலை: ஆமாம், இது ஒரு வீசியெறிப்பட்ட அறிவுரை. ஆனால் வேலைசார்ந்த வெற்றிக்கு இதுவே முதல் அடித்தளமாக உள்ளது.

* பசுமை சார்ந்த உணர்வு: வாரத்துக்கு ஒருமுறை உங்கள் வேலையிடத்திலேயே தோட்டப்பணிகளில் ஈடுபடவும்.

* நேர்மறையான ஆதரவுக் குழு: கடினமான நேரங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கு நேர்மறையான ஆதரவுக்குழு முக்கியம். எதிர்மறையான சூழ்நிலையில் உங்களுக்கு உதவக்கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

* ஏராளமான நண்பர்களை தவிர்க்கவும்: ஒவ்வொருவரின் மாறுபட்ட எதிர்மறையான அணுகுமுறை உங்களை கீழிறக்கிவிடும். நேர்மறையான சிந்தனைகளைப் பின்பற்றும் உங்களை எதை சாதிக்க முயற்சிக்கிறீர்களோ அதை எதிர்க்கும்.

* வாழ்க்கையில் கவனத்தை சரிசெய்யுங்கள்: நீங்கள் உங்கள் உடலையும் மனதையும் பயிற்சி செய்ய வேண்டும். இது உடற்பயிற்சி மூலம் நடக்கும். உடற்பயிற்சியின் மூலம் நம் மூளையில் உள்ள இயற்கை மனத்தடைகளை விடுவித்து உற்சாகமாக வைத்திருக்கும்.

* உடற்பயிற்சி உடல், மனம் மற்றும் உணர்ச்சி நன்மைகளை கொண்டுள்ளது. இது ஒழுக்கத்தை உடற்பயிற்சி செய்ய உங்கள் சுய மதிப்பை அதிகரிக்கும். உங்கள் மனதில் இருந்து எதிர்மறை எண்ணங்களை குறைக்க ஒரு சிறந்த வழியாகும்.

* பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நினைப்பது வீண்முயற்சி: உங்கள் கவனத்தை எங்கு, எப்படி கவனிக்க வேண்டும் உங்கள் உணர்ச்சி நிலை தீர்மானிக்கிறது. நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாக ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கு நீங்கள் நிறைய பாடுபடும்போது மன அழுத்தமே மிஞ்சும்.

* அதில் சிறு தோல்வி என்றாலும் எதிர்மறையான உணர்வுகளையும் உங்களுக்கு அது ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் உங்கள் சூழ்நிலைகளை மேம்படுத்த முயன்று பாருங்கள்... அதற்கான செயல்களை நோக்கி உங்கள் கவனம் மாறும்போது, நேர்மறையான உணர்ச்சிகள் அமையும்.. மன அழுத்தத்தை குறையும்.. சுய-திறனும் உங்களிடம் மேம்படும்..

முயன்றுதான் பாருங்களேன்.

 

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மீண்டும் வைரலாகும் நடிகை பிரியா வாரியரின் ஹோலி விடியோ!

 
holi_priya

 

புருவ அழகி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் நடிகை பிரியா வாரியரின் புகழ் நாளுக்கு இணையத்தில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹோலி கொண்டாடிய காணொலியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இதுவாஇ ரெண்டு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்ற அந்த விடியோ இதுதான்

 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

இறால் வடை முதல் கருப்பட்டி மிட்டாய் வரை - பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த ’உணவு’ படங்கள் #BBCTamilPhotoContest

  •  

ஹ. கெய்ஸர் பிர்தௌஸ் - எர்ணாக்குளம் ஹ. கெய்ஸர் பிர்தௌஸ் - எர்ணாக்குளம்

 

சரண்குமார் சம்பத் - ஓசூர் சரண்குமார் சம்பத் - ஓசூர்

 

 

சி.ரிக்சன் - சென்னை

சி.ரிக்சன் - சென்னை

 

முகிலன்

முகிலன்

 

ஜீவன் - பிரான்ஸ்

 

ஜீவன் - பிரான்ஸ்

 

 

விஜயன் மணி - துபாய்

 

விஜயன் மணி - துபாய்

 

மீனாக்‌ஷி - திருச்செந்தூர்

 

மீனாக்‌ஷி - திருச்செந்தூர்

 

 

இராஜா மதிவாணன் - தூத்துக்குடி

 

இராஜா மதிவாணன் - தூத்துக்குடி

 

 

ஆ. வள்ளி சௌத்திரி - தூத்துக்குடி

 

ஆ. வள்ளி சௌத்திரி - தூத்துக்குடி

 

 

எ.எ.எம். அஷாட் - இலங்கை

 

எ.எ.எம். அஷாட் - இலங்கை

 

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மறைக்கப்பட்ட போஸின் கண்டுபிடிப்பு

 

 
markoni

மார்க்கோணி

இத்தாலியைச் சேர்ந்த கக்லீல்மோ மார்க்கோனி அட்லாண்டிக் கடல் பரப்பில், இன்றைய கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டுக்கும் இங்கிலாந்தின் கான்வெல்லுக்கும் இடையில் 1901 டிசம்பர் 12-ல் கம்பியில்லாச் செய்தியை அனுப்பி, தொலைத் தொடர்புத் துறையில் இமாலயச் சாதனை செய்தார். இன்றைக்குள்ள எல்லாத் தொலைதொடர்புக்கும் இந்தக் கண்டுபிடிப்பு முன்னோடியானது.

அறிவியலின் மகத்தான இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் நோபல் பரிசு வழங்கிக் கவுரவிக்கப்பட்டார். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புக்கான மூலவர், ஒரு இந்தியர். இன்னும் சொன்னால், அவர் மார்க்கோனிக்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கு உரித்தானவரும்கூட. அவர்தான் சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.

தாவரவியல், இயற்பியல் ஆகிய இரு துறைகளிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தவர். முதன் முதலில் கம்பியில்லாத் தொலைத்தொடர்பைக் கண்டுபிடித்தவர் இவர்தான். அதற்கு ஐந்தாண்டுளுக்குப் பிறகுதான் மார்க்கோனி தனது கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவிக்கிறார்.

 

போஸின் கண்டுபிடிப்பு

ஹோஹெரர் (Coherer) என்னும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது கம்பியில்லாத் தொலைத்தொடர்பில் முக்கியமானது. ஆனால், இந்தக் கருவியைப் பயன்படுத்தி கம்பியில்லாத் தொடர்பை போஸுக்கு முன்னர் யாரும் செய்திருக்கவில்லை. அன்றைய கொல்கத்தாவில் போஸின் தனிப்பட்ட ஆய்வுக்கூடத்தில் தனியொரு மனிதனாக மின்காந்த அலைகள் குறித்த ஆராய்ச்சியின் மூலம் உலகின் முதல் கம்பியில்லாச் செய்தியைச் சோதித்து வெற்றிகண்டார்.

JCBose

சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்

ஒரு ‘U’ வடிவ இரும்புக்கு இடையில் குறைகடத்திப் (semiconductor) பொருளான பாதரசத்தை வைத்தார். இந்த இரும்புக் கம்பியின் ஒரு முனை மின் இணைப்பில் இருக்கும். ஒன்றின் மூலம் மின் காந்த அலைகள் ஈர்க்கப்படும். ஈர்க்கப்படும் நேரத்தில் இந்த இரு இரும்புகளுக்கும் இடையில் பாதரசத்தின் வழி மின்சாரம் கடத்தப்படும். இதுதான் போஸ் கண்டுபிடித்த ஹோஹெரர்.

அதாவது, மின்காந்த அலைகளைப் பெறும் உபகரணம். இதைக் கொண்டு 1896-ல் அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் முன்னிலையில் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியிலிருந்து கொல்கத்தா அறிவியல் கல்லூரிவரைக்கும் 3 கி.மீ. தொலைவுக்கு மின்காந்த அலைகளை அனுப்பி சோதித்தார்.

ஆனால், போஸ் இதற்கான உரிமைத்தை உடனடியாக வாங்கவில்லை. இந்த உபகரணத்தில் எப்படிப் பாதரசம் பயன்பட்டதோ அப்படித்தான் மார்க்கோனியும் பயன்படுத்திஇருக்கிறார்.

தொலைதூர மின்காந்த அலைகளை ஈர்க்க போஸ் படிகத்தைப் பயன்படுத்தினார். பின்னால் படிக டையோடு (Crystal Diode) கண்டுபிடிக்கப்பட போஸின் கண்டுபிடிப்பு ஆதாரமாக இருந்தது. டையோடு தொழில்நுட்பத்திலிருந்துதான் டிரான்ஸிஸ்டர் எனப்படும் உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இவைதான் மின்னணுவியல் கண்டுபிடிப்புகளில் பல ஆச்சரியங்களுக்கும் அடிப்படைக் காரணம்.

 

எப்படிக் கசிந்தது போஸின் கண்டுபிடிப்பு?

1899-ம் ஆண்டு போஸ், ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டனில் உரை நிகழ்த்துவதற்காக லண்டன் சென்றார். அங்கு தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கினார். அந்த உரையை மார்க்கோனியின் அறிவியல் ஆலோசகரான ஜான் அம்புரோஸ் பிளெம்மிங் உட்பட அறிஞர்கள் பலர் கேட்டனர். இந்தக் காலத்தில் மார்க்கோனி இங்கிலாந்தில் இருந்தார்.

இரண்டாண்டுகளில் 1901-ல் மார்க்கோனி தனது கம்பியில்லாத் தொலைத்தொடர்பு சாதனையை நிகழ்த்தினார். ஆனால், அவர் மின்காந்த அலைகளைப் பெறும் உபகரணம் செயல்படும் விதம் பற்றிய விளக்கத்தைச் சொல்ல முடியவில்லை. அப்படியான கேள்விகளுக்கு அவருடைய நண்பரான கப்பல் பொறியாளர் சொலரி உருவாக்கித் தந்தது என்று சொல்லிவந்தார். ஆனால், சொலரியாலும் அதை விளக்க முடியவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலட்ரானிஸ் இன்ஜினீயரிங் மையத்தின் மூத்த உறுப்பினர் பி.கே.பந்தோபாத்யா இதைத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

1980-ம் ஆண்டு ‘தி நியூயார்க் டைம்’ஸில் வெளியான கட்டுரை மார்க்கோனி, தனக்கு மட்டும் என இந்தக் கண்டுபிடிப்பைச் சொந்தம் என்று சொல்ல முடியாது எனக் குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து மனமுடைந்த மார்க்கோனியின் மகளான மார்க்கோனி ப்ரகா கேட்டுக்கொண்டதற்கிணங்க, பந்தோபாத்யா இந்த அறிவியல் மோசடியை ஆராயத் தொடங்கினார். அதன் முடிவு மார்க்கோனியின் அறிவுத் திருட்டை அம்பலப்படுத்தியது.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

கோலியின் அடுத்த 'கெட்- அப்': பல வண்ணங்களில் 'டாட்டூஸ்': பெற்றோர் பெயர் , ஜெர்சி எண் உடலில் வரைந்து நெகிழ்ச்சி

 

 
kohli

மும்பை டாட்டூஸ் பார்லரில் விராட் கோலி   -  படம்உதவி: இன்ட்டிராகிராம்

 தென் ஆப்பிரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்து இந்தியா வந்துள்ள கேப்டன் விராட் கோலி அடுத்ததாக தனது 'கெட்-அப்'பை மாற்றத் தொடங்கிவிட்டார். உடலில் பல இடங்களில் பல வண்ணங்களில் டாட்டூஸ் வரைந்து வருகிறார்.

கேப்டன் விராட் கோலி தலைமையில் தென் ஆப்பிரிக்கா சென்று இருந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதேபோல டி20 தொடரையும் 2-1 என்று கணக்கில் கைப்பற்றி கடந்த வாரம் மும்பை திரும்பினர்.

இந்நிலையில், அடுத்து இலங்கையில் நடக்க உள்ள நிடாஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இடைப்பட்ட நாட்களில் தனது தோற்றத்தை விராட் கோலி மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டார்.

இந்திய அணியில் மிகவும் உடற்கட்டுடன், சிறந்த உடற்தகுதியுடன் கேப்டன் விராட் கோலி இருந்து வருகிறார். மேலும், விளம்பரங்களில் நடிப்பது போன்றவற்றினால், உடல் அழகை பராமரிப்பதில் அதிக அக்கறையும் எடுத்துக்கொள்கிறார்.

இந்தசூழலில், நேற்று மும்பையில் உள்ள பிரபர டாட்டூஸ் வரையும் பார்லருக்கு சென்று தனது இடது பக்க தோள்பட்டையில் பலவண்ண படங்களை விராட் கோலி வரைந்துள்ளார். இந்தப் படம் வரைந்தது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் பார்லரில் இருந்த ரசிகர் ஒருவர் இதை புகைப்படம் எடுத்து இன்ஸ்ட்டிராகிராமில் வெளியிட்டுவிட்டார்.

விராட் கோலி உடலில் ஏற்கெனவே பல்வேறு டாட்டூ படங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தகுந்தவை, கடவுள் சிவன், கைலாய மலையில் தவம் இருப்பது போலவும், பின்புறம் மானசரோவர் மலை இருப்பது போலவும் வரைந்திருப்பதாகும்.

மேலும், தனது தாய், தந்தையின் பெயரையும், ஒருநாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஜெர்சி எண் ஆகியவற்றையும் விராட் கோலி உடலில் எழுதியுள்ளார்.

இந்த முறை சாமுராய் வீரன் தோற்றத்தையும், ஓம் என்ற வார்த்தையையும் வரைந்துள்ளார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

1960 : சே குவே­ராவின் புகழ்­பெற்ற புகைப்­படம் பிடிக்­கப்­பட்­டது

வரலாற்றில் இன்று…

மார்ச் – 05

 

1496 : இங்­கி­லாந்து மன்னன் 7 ஆம் ஹென்றி, கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத புதிய நிலப்­ப­ரப்­பு­களை கண்­ட­றி­வ­தற்­கான உரி­மையை இத்­தா­லிய கட­லோடி ஜோன் காபோட்­டுக்கும் தனது மகன்­க­ளுக்கும் வழங்­கினார்.

1770 : அமெ­ரிக்­காவின் பொஸ்டன் நகரில் அமெ­ரிக்­கர்­க­ளுக்கும் பிரித்­தா­னியப் படை­யி­ன­ருக்கும் இடையில் ஏற்­பட்ட கல­வ­ரத்தை அடுத்து ஐந்து அமெ­ரிக்­கர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

1793 : பிரெஞ்சுப் படைகள் ஆஸ்­தி­ரி­யா­வினால் தோற்­க­டிக்­கப்­பட்­டன.

varalru-copy.jpg1824 : பர்­மாவின் மீது பிரித்­தா­னியர் போர் தொடுத்­தனர்.

1912 : துருக்­கியின் மீது இத்­தா­லிய படை­யி­னரின் விமா­னங்கள் பறந்­தன. இரா­ணுவ நட­வ­டிக்­கையில் விமா­னங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை இதுவே முதல் தட­வை­யாகும்.

1931 : அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்கும் உப்பை வறிய மக்கள் சுதந்­தி­ர­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்கும் அனு­ம­தி­ய­ளிக்கும் உடன்­ப­டிக்­கையில் இந்­தி­யா­வுக்­கான பிரித்­தா­னிய ஆளுநர் எட்வர்ட் பிரெட்ரிக் லின்ட்­லேயும் மகாத்மா காந்­தியும் கையெ­ழுத்­திட்­டனர்.

1933 : ஜேர்­ம­னியில் நடை­பெற்ற பொதுத்­தேர்­தலில் அடோல்வ் ஹிட்­லரின் நாஸி கட்சி 43.9 சத­வீத வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

1940 : சோவியத் யூனியனின் உயர்­பீடம் 25,700 போலந்துப் பிர­ஜை­க­ளுக்கு மர­ண­தண்­டனை விதிக்கும் உத்­த­ரவில் கையொப்­ப­மிட்­டது.

1946 : பிரித்­தா­னிய பிர­தமர் வின்ஸ்டன் சேர்ச்சில் “இரும்புத் திரை” எனும் வார்த்­தையை முதல் தட­வை­யாக பயன்­ப­டுத்­தினார்.

1960 : மார்க்­சிஸ புரட்­சி­யாளர் சே குவே­ராவின் புகழ்­பெற்ற புகைப்­ப­ட­மொன்றை மர­ணச்­ச­டங்­கொன்­றின்­போது கியூப புகைப்­ப­டக்­க­லைஞர் அல்பர்ட்டோ கோர்டா பிடித்தார்.

1966 : ஜப்­பானில் இடம்­பெற்ற விமான விபத்தில் 124 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1970 : அணு­வா­யுத பரவல் தடை ஒப்­பந்தம் 43 நாடு­களால் கையெ­ழுத்­தி­டப்­பட்டு அமுலுக்கு வந்தது.

1982 : சோவியத் யூனியனின் வெனேரா 14 விண்கலம் வெள்ளி கிரகத்தில் தரையிறங்கியது.

2003 : இஸ்ரேலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றலாமா? - தொழில் தர்மம் உணர்த்தும் கதை! #MotivationStory 

 
 

தன்னம்பிக்கை கதை

`விசுவாசத்தால் மட்டுமே ஒன்றைப் பின்பற்றுகிறவர்கள், கண்மூடித்தனமாகத்தான் அதைப் பின்பற்றுவார்கள்’ - அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் சுதந்திர அமெரிக்காவை நிறுவியவர்களில் ஒருவரான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin). விசுவாசத்தால் மட்டுமல்ல, யாரோ சொல்கிறார்கள் என்பதற்காகக் கண்மூடித்தனமாக எத்தனையோ விஷயங்களை நாம் கடைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சில பழமொழிகளைக்கூட நாம் அப்படியேதான் எடுத்துக்கொள்கிறோம். `ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் நடத்தலாம்’ என்பது சரியா? `ஆயிரம் பேரிடம் `போய்’ சொல்லி திருமணம் நடத்த வேண்டும்’ என்கிற நடைமுறை, `பொய்’ சொல்லியாகிப் போனது. `ஆயிரம் பேரைக் கொன்றால் அரை வைத்தியன்’... இதுவும் சரியல்ல. `ஆயிரம் வேர்களைக் (மூலிகைகளை) கொன்றால்தான் (பறித்தால்தான்) அரை வைத்தியனாக முடியும்’ என்பதே சரி. பழமொழிகளில் மட்டுமல்ல, நாம் அன்றாடம் பின்பற்றும் நடைமுறைகளிலேயேகூட இதுபோல பல கண்மூடித்தனமான பழக்கங்களைப் பார்க்கலாம்.  ஆனால், ஒரு தொழிலிலோ, வியாபாரத்திலோ எப்போதோ, யாரோ சொல்லிவிட்டுச் சென்றதை இப்போதும் பின்பற்றுகிறோம் என்கிற நடைமுறை தவறானது. அதை விளக்கும் கதை இது.   

 

இங்கிலாந்திலிருந்த குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று புதிதாக ஒரு பானத்தைத் தயாரித்திருந்தது. கொஞ்ச காலமாக விற்பனையில் சரிவிலிருந்த நிறுவனம். சின்னச் சின்ன டின்களில் அடைக்கப்பட்ட அந்தக் குளிர்பானத்தை முறையாக, பிரமாண்டமான முறையில் அறிமுகப்படுத்தினால் விற்பனை சூடுபிடிக்கும் என நிறுவனத்தின் அதிகாரிகள் நினைத்தார்கள். சிறு கடைகள் தொடங்கி, சூப்பர் மார்க்கெட்கள் வரை புதிய குளிர்பானத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது அவர்களின் இலக்கு. 

பஃபே

ஊரின் மிக முக்கியமான மனிதர்களும், பிரபலங்களும், நிறுவனத்தின் தொழிலாளிகளும் குளிர்பான அறிமுக விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். குளிர்பான அறிமுக விழா பிரமாதமாக நடந்தது. வழக்கமான சில நடைமுறைகளுக்குப் பிறகு விழா நிறைவடைந்தது; விருந்து தொடங்கியது. அது, பஃபே (Bufet) விருந்து. மிகப் பெரிய ஹாலில் சிறு குழுக்களாக நின்று பேசியபடி, எல்லோரும் பானங்களை அருந்தவும், உணவுகளை ஒரு பிடி பிடிக்கவும் ஆரம்பித்தார்கள். 

அப்படி ஹாலின் ஒரு மூலையில் மூன்று பேர் கூடினார்கள். நிறுவனம் எப்படி குளிர்பானங்களை விநியோகிக்கப் போகிறது, அதற்கான போக்குவரத்து வழிமுறைகள் என்னென்ன என்பதையெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவர், அந்த நிறுவனத்தின் டிஸ்ட்ரிபியூஷன் மேனேஜர். மற்ற இருவரும் இதற்கு முன்னர் அதே கம்பெனியில் பணியாற்றிய ஊழியர்கள்; அதே துறையில் மேனேஜர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அதாவது மூவருமே `டிஸ்ட்ரிபியூஷன் மேனேஜர்கள்’. மூன்று தலைமுறை மனிதர்கள் என்றும் சொல்லலாம். 

பேச்சுத் தொடர்ந்தது. அப்போது நிறுவனத்தில் டிஸ்ட்ரிபியூஷன் மேனேஜராகப் பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞர் தன் மனதிலிருந்ததையெல்லாம் கொட்டினார். நிறுவனம் நீண்டகாலமாக, அது தயாரிக்கும் குளிர்பானங்களை விநியோகிக்க ஒரு கொள்கையை வைத்திருந்தது. நீண்ட தூரத்திலிருக்கும் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளுக்குத் திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் டெலிவரி செய்ய வேண்டும். அருகிலிருக்கும் இடங்களில் வெள்ளிக்கிழமையன்று டெலிவரி செய்ய வேண்டும். மற்ற இடங்களுக்கு மீதி நாள்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கொள்கை, அந்த மேனேஜரை மிகுந்த மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாக்கியிருந்தது. 

``கம்பெனியோட இந்த பாலிசியால எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா..? இப்போ புதுசா வேற ஒரு கூல்டிரிங்க்ஸ் வந்துடுச்சா... அதுக்கு டிமாண்ட் அதிகமா இருக்கும். எப்படித்தான் டெலிவரி பண்ணப் போறேனோ..?’’ 

உரையாடல்

அந்த இளைஞர் சொன்னதை இரண்டாமவர் ஆமோதித்தார். அவர், அந்த இளைஞனுக்கு முன்னதாக நிறுவனத்தில் அதே பொறுப்பை வகித்தவர். ``என்னோட காலத்துலயும் இதே பிரச்னைதான். இப்படி ஒரு பாலிசி கம்பெனிக்கு இருக்குங்கிறதே ரொம்ப அதிசயமா இருந்துச்சு. திங்கக்கிழமை அன்னிக்கி ரொம்ப தூரம் கூல்டிரிங்க்ஸை ஏத்திட்டுப் போற வண்டிங்களும், லாரிகளும் சீக்கிரமே வந்துட்டாக்கூட, அதையெல்லாம் செவ்வாய்க்கிழமை அன்னிக்குப் பக்கத்துல இருக்குற லோக்கல் டெலிவரிக்குப் பயன்படுத்த முடியாது. ஏன்னா, வெள்ளிக்கிழமைதான் பண்ணணும்னு கம்பெனி விதிகள்ல இருக்கு. என்ன செய்ய முடியும்?’’ 

இப்போது மூன்றாமவர் பேசவில்லை. யோசித்தார். நிறுவனத்தின் இந்தக் கொள்கை எப்படி உருவானது என்பதை நினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்தார். சிறிது நேரம் கழித்து சிரித்தபடியே சொன்னார்... ``இப்போ நினைவுக்கு வந்துடுச்சு. அது இரண்டாம் உலகப்போர் நடந்துக்கிட்டிருந்த காலம். அதனால எரிபொருள் தட்டுப்பாடு வந்துடுச்சு. பெட்ரோல், டீசலுக்கெல்லாம் ரேஷன் முறையைக் கொண்டு வந்துட்டாங்க. அதனால டிஸ்ட்ரிபியூஷனுக்கு ட்ரக்குகளை, லாரிகளைப் பயன்படுத்த முடியலை. குதிரை வண்டிகளைப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அப்போதான் நம்ம கம்பெனி இந்தப் புது பாலிசியைக் கொண்டு வந்துச்சு. ஞாயித்துக்கிழமை லீவுங்கிறதால, குதிரைகளெல்லாம் நல்லா ரெஸ்ட் எடுத்திருக்கும். அதனால திங்கள், செவ்வாய்க் கிழமைகள்ல அதுங்களை ரொம்ப தூரம் போக பயன்படுத்தலாம். வியாழக்கிழமை வரைக்கும் நாலு நாள் வேலை பார்த்ததால, வெள்ளிக்கிழமையன்னிக்கி குதிரைகள் எல்லாம் டயர்டாகி இருக்கும். அதனால பக்கத்துல இருக்குற இடங்களுக்கு வண்டிகளைப் பயன்படுத்தினோம். அந்த பாலிசியை கம்பெனியில இன்னுமா மாத்தாம வெச்சிருக்காங்க..?’’ 

இந்த விஷயம் எப்படி நிறுவனத்தின் காதுக்குப் போனதோ, தன் டிஸ்ட்ரிபியூஷன் கொள்கையை விரைவிலேயே மாற்றிக்கொண்டது

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தாய்ப்பாலூட்டும் விளம்பரம் உப்பா? சர்க்கரையா?

சமீபத்தில் மலையாள இதழ் ஒன்று தனது அட்டைப்படத்தில் மாடல் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்ற ஒரு படத்தை பிரசுரித்திருந்தது. இது சமூக ஊடகங்கள் மட்டுமல்லாது பல்வேறு தளங்களிலும் விவாதத்தை எழுப்பி உள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியோடு, பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டு அமைப்பை சேர்ந்தவர்களின் கருத்தையும் விளக்குகிறது இந்த காணொளி.

  • தொடங்கியவர்

வெயில் பட்டால் வெந்துவிடும் தோல்... எப்படி வாழ்கிறார் இந்தப் பெண்?

 
 

லிஸி பிறந்து ஆறு வாரங்கள்தாம் ஆகியிருந்தன. அதுவரை அவள் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கவில்லை. வீட்டிற்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தாள். பிறந்ததே கொஞ்சம் குண்டாகத்தான். அவள் கன்னங்களைக் கிள்ளிக் கொண்டேயிருக்கலாம் என்று அவளைப் பார்க்க வரும் பாட்டிகள் சொல்வதோடு அல்லாமல், அவள் கன்னத்தைக் கிள்ளவும் செய்வார்கள். வலியில் அவள் கத்துவாள். கை, கால்களை ஆட்டிக்கொண்டு எப்போதுமே உற்சாகமாக இருப்பாள். பொக்கை வாயைக் காட்டி சிரித்துக் கொண்டேயிருப்பாள். தூங்கும் போது கூட, சமயங்களில் அவள் சிரித்தபடியே இருப்பதுண்டு. அவளை வீட்டிற்கு வெளியே அழைத்துப் போக வேண்டும், குழந்தைக்குச் சூரிய வெளிச்சம் நல்லது என்று கருதி அவளை அன்று அருகிலிருந்த ஒரு பார்க்கிற்கு கொண்டு சென்றார் லிஸியின் அம்மா, கிட்டி. வீட்டினுள் இருந்த அந்த உற்சாகம் லிஸிக்கு வெளியில் இல்லை. கொஞ்சம் அமைதியாகத்தான் இருந்தாள். முதன்முறை சூரிய வெளிச்சத்தை அனுபவித்த பரவசமும் அவளிடம் இல்லை. இரவு வீட்டிற்கு வந்து தொட்டிலில் போட்டார்கள். இரவு முழுக்க நிறைய அழுதாள். சரியாகத் தூங்கவே இல்லை. 

காலை எழுந்ததும் கிட்டிக்குப் பெரிய அதிர்ச்சி. லிஸியின் கண்கள் வீங்கிப் போயிருந்தன. முகம் முழுக்க சிவந்து போயிருந்தது. உடலின் பல இடங்களில் சிறு, சிறு கொப்புளங்கள் எழுந்திருந்தன. பதறியடித்துக்கொண்டு பக்கத்திலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். பல பரிசோதனைகளை எடுத்து, முடித்த பின்னர்...

 

வெயில் பட்டால் வெந்துவிடும் தோல் - லிஸி

"குழந்தைக்கு வெயில் ஒத்துக் கொள்ளவில்லை. கடுமையான வெயிலில் கொண்டு சென்றீர்களா?" என்று சொல்லி சில மருந்துகளைக் கொடுத்தார். உடல் ஓரளவிற்குத் தேறியது. ஆனால், ஒவ்வொரு முறை லிஸி வெயிலில் சென்று வரும்போதும் இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் கொப்புளம் பெரிதாக, அவருக்கு ஸ்கின் கேன்சர் இருப்பதாகச் சில டாக்டர்கள் சொல்ல, கொப்புளங்களை அறுக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. வெயில் பட்டால் முகத்தில் கொப்புளம் ஏற்படும். அந்தக் கொப்புளத்தோடு சேர்த்துச் சுற்றியிருக்கும் தோலையும் அறுப்பார்கள். பின்னர், அதைச் சேர்த்து வைத்துத் தைப்பார்கள். இப்படியாக, இன்று 22 வயதாகும் லிஸிக்கு இதுவரை 42 ஸ்கின் கேன்சர் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

நோயின் பெரும் வலியோடு வளர்ந்தார் லிஸி. 12 வயதாகும் அவர்கள் ஊருக்குப் புதிதாக வந்திருந்த தோல் மருத்துவரிடம் சென்றார்கள். அவர்தான் முதன்முதலில் லிஸிக்கு வந்திருப்பது "ஸீரோடெர்மா பிக்மென்டோசம்" (Xeroderma Pigmentosum) என்பதைக் கண்டுபிடித்தார். இதற்கான தீர்வு ஒன்றே ஒன்றுதான். லிஸி வெயில் படாமல் தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். என்ன பிரச்னை என்றே தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த குடும்பத்திற்கு, அது என்ன பிரச்னை என்று தெரிந்ததே பெரிய நிம்மதியாக இருந்தது. லிஸி வெயில்படாத ஒரு வாழ்க்கைக்குத் தயாராகத் தொடங்கினார். 

வெயில் படாத வாழ்க்கையில் லிஸி

அமெரிக்காவின் உடாஹ் (Utah) மாகாணத்திலிருக்கும் ஹைலேண்ட் (Highland) நகரில்தான் லிஸி வசிக்கிறார். அந்தக் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், அந்த ஊருக்குமே கூட லிஸி ஒரு தேவதை. லிஸி தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்வார். லிஸி வீட்டைவிட்டுக் கிளம்புவது என்பது ஒரு போர்வீரன் போர்க்களத்திற்குக் கிளம்புவதற்கு இணையானது. 

முதலில் அவர் அணியும் உடையைச் சரிபார்க்க வேண்டும். ஒரு சின்ன இடத்தில் கூட வெயிலின் புறஊதா கதிர்கள் (UltraViolet Rays) உட்புகாத அளவிற்கு மிகச் சரியாக அதை அவர் அணிய வேண்டும். அடுத்து முகத்தில் சன் ஸ்க்ரீன் க்ரீமைப் பூசிக்கொள்ள வேண்டும். அடுத்து லிஸிக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட முகமூடியுடன் கூடிய அந்தத் தொப்பியை அணிய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கையில் வெயிலின் அளவைச் சொல்லும் அந்தக் கருவியைக் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். சாதாரணமான நாளில் வெயிலின் அளவு 400லிருந்து 500 புள்ளிகள் வரை இருக்கும். கோடைக்காலத்தில் அது 1600 புள்ளிகளை எட்டும். ஆனால், லிஸி நலமாக இருக்க வேண்டுமென்றால் அவருக்கு வெயிலின் அளவு 10 புள்ளிகளைத் தாண்டக் கூடாது. அவரின் அந்த முகமூடிக்குள் கருவியை வைத்துப் பார்த்தால் அது 10 புள்ளிகளுக்குள்தாம் இருக்கும். 

லிஸி

அறுவைசிகிச்சைகளின் காரணமாக ஏற்பட்ட தழும்புகள் ஒருபக்கம், தொங்கும் அந்த முகமூடியைக் கண்டு கேலி செய்யும் மக்கள் கூட்டம் ஒரு பக்கம் என ஆரம்ப காலங்களில் வெளியில் வரவே மிகவும் பயந்துள்ளார் லிஸி. ஆனால், போகப் போக நண்பர்களும், குடும்பமும் கொடுத்த தைரியத்தில் இன்று தன் குறைகளையே தனக்கான அடையாளமாகக் கொண்டு உற்சாகமாக வெளியில் வருகிறார் லிஸி. வாழ்வின் நீண்ட நேரத்தை தன் வீட்டிற்குள்ளாகவே கழிப்பதால் வீட்டிற்குள் லிஸிக்கு ஏகப்பட்ட நண்பர்கள். கிளிகள், லவ்பேர்ட்ஸ், ஆமை, மீன்கள் என அந்தப் பட்டியல் நீள்கிறது. 

 Xeroderma Pigmentosum என்பதைச் சுருக்கமாக XP என்று சொல்வார்கள். இது ஒரு மரபணு பிரச்னை. சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதா கதிர்கள், தோலில்  ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சரி செய்யும் திறன் டி என் ஏவுக்கு இல்லாமல் போகும் நிலை. 

அமெரிக்காவில் பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு இந்த நோய் தாக்குகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனால், அந்த இருபது லட்சத்தில் இருவர் லிஸி குடும்பத்திலேயே பிறந்தது பெரும் சோகம். 4 வயதாகும் லிஸியின் அண்ணன் குழந்தைக்கும் இதே நோய் தாக்கியிருக்கிறது. இருந்தும் இருவரையும் அத்தனை அன்போடும், அக்கறையோடும் பார்த்துக் கொள்கிறது அவர்களின் குடும்பம். 

ஒரு பேட்டியில் லிஸியிடம் இப்படிக் கேட்கப்பட்டது...

வெயில் படாத வாழ்க்கையில் லிஸி

"எப்படி எப்பவும் சிரித்துக்கொண்டேயிருக்கிறீர்கள்? இந்த உலகத்திற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"

"நான் மகிழ்ச்சியைப் பரப்ப விரும்புகிறேன். மகிழ்ச்சியாக வாழ்கிறேன். நீங்களும் அப்படி வாழ முயற்சி செய்யுங்கள். இது நிச்சயமற்ற வாழ்க்கை. நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவர்களோடு வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்." 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

அழியும் அபாயத்தில் எடே லீ பென்குவின்கள்

அன்டார்டிகாவில் பனிப்பாறைகள் நிறைந்த அபாயகர தீவில் அழியும் நிலையில் பென்குவின் பறவைகள்.

  • தொடங்கியவர்
5000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த எகிப்தியரின் 'பச்சை குத்தும் பழக்கம்'
 

image_93a2c2356c.jpg

அண்மையில்  எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட, 5000 வருடங்கள் பழைமை வாய்ந்த மம்மிகள் இரண்டில் பச்சை குத்தியிருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண் மம்மி மற்றும் பெண் மம்மி ஆகிய இரண்டையும்  ஆய்வுக்குட்படுத்திய வேளையில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

image_3776040f40.jpg

18 – 20 வயதுகளில் இறந்திருக்கக்கூடியதாக கருதப்படும்  ஆண் மம்மியின், மேல் தோள்பட்டையில் காளையொன்றின் வடிவம் பச்சையாகக் குத்தப்பட்டுள்ளதோடு, பெண் மம்மியில் அதே மேல் தோள்பட்டையில் ‘S’ எனும் வடிவத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது.

image_9e521e4ab9.jpg

இதனை தொடர்ந்து பழங்கால எகிப்திய மக்கள் பச்சை குத்துதலை பழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர் என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_5b5f28ce51.jpg

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்
‘பணிவுதான் மாந்தர்க்கு அணிகலன்’
 

image_e869eb84a4.jpgகுளிரூட்டப்பட்ட அறையில், சுழலும் கதிரையில் அமர்ந்த வண்ணம், உயர்நிலையில் உள்ளவர்கள், “இவையெல்லாம் எனது சொகுசுக்காக வழங்கப்பட்டவையல்ல. மக்கள் சேவைக்காக, நான் அயராது உழைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுகளே” என, தங்களுக்குத் தாங்களே மனதினுள் சொல்லிக் கொள்ள வேண்டும்.

பணிவுதான் மாந்தர்க்கு அணிகலன். மிகப்பெரும் தலைவர்கள், உயரிய தொழில்களைச் செய்து வருபவர்கள், தங்கள் இல்லங்களில் எளிமையான முறையில் வாழ்ந்து வந்தமையை நாங்கள் அறிவோம்.

பட்டம், பதவி, செல்வம் கிட்டியிருந்தும், மக்களிடம் அன்பைப் பகிர்ந்தால், அவர்கள் மேன்மேலும் உச்ச நிலையை எண்துவர். இதுவே நிரந்தரமானது.

அன்பைச் சுவீகரிப்பவர்கள், தங்கள் பணிகளை மிக இலகுவாகப் பெற்றுக் கொள்கின்றனர்.

  • தொடங்கியவர்

1964 : கஸியஸ் கிளே, முஹமட் அலி ஆனார்

வரலாற்றில் இன்று…

மார்ச் – 06

 

1521 : போர்த்­துக்­கேய கட­லோடி பேர்­டினண்ட் மகலன் பசுபிக் சமுத்­தி­ரத்தின் குவாம் தீவை அடைந்தார்.

1788 : பிரித்­தா­னிய குற்­ற­வாளிக் கைதி­களைக் குடி­ய­மர்த்தும் திட்­டத்தில் முதற்­ப­டி­யாக முத­லா­வது தொகுதி கைதிகள் அடங்­கிய கப்­பல் அவுஸ்­தி­ரே­லி­யாவின் நோர்போக் தீவை அடைந்­தது.

1790 : தமி­ழ­கத்தின் மதுரை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­டது.

1836 : அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ் மாநி­லத்தின் அலாமோ நகரை மெக்ஸிக்கோ படைகள் தாக்கிக் கைப்­பற்­றின.

varau23-copy.jpg1869 : திமீத்ரி மென்­டெலீவ் தனது முத­லா­வது ஆவர்த்­தன அட்­ட­வ­ணையை சமர்ப்­பித்தார்.

1902 : ஸ்பெய்னின் றியல் மட்ரிட் கால்­பந்­தாட்ட கழகம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1940 : குளிர்­காலப் போர் பின்­லாந்­துக்கும் சோவியத் ஒன்­றி­யத்­துக்கும் இடையில் தற்­கா­லிகப் போர் நிறுத்த ஒப்­பந்தம் ஏற்­பட்­டது.

1946 : வியட்நாம் போரில் ஹோ சி மின் பிரான்ஸுடன் செய்து கொண்ட ஒப்­பந்­தத்தின் படி பிரான்ஸ் வியட்­நாமை பிரெஞ்சு ஒன்­றியம் மற்றும் இந்­தோ­சீனக் கூட்­ட­மைப்­பினுள் தன்­னாட்சி அதி­காரம் கொண்ட பகு­தி­யாக ஏற்றுக் கொண்­டது.

1953 : ஸ்டாலினின் மறை­வை­ய­டுத்து சோவி­யத்தின் பிர­த­ம­ரா­கவும், சோவியத் கம்­யூனிஸ்ட் கட்­சியின் தலைமை செய­லா­ள­ரா­கவும் கியோர்கி மாலென்கோவ் பத­வி­யேற்றார்.

1957 : ஐக்­கிய இராச்­சியக் குடி­யேற்ற நாடு­க­ளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்­தா­னிய டொகோ­லாந்து ஆகி­யன இணைந்து கானா குடி­ய­ரசு என்ற பெயரில் சுதந்­திரம் பெற்­றன.

1964 : அமெ­ரிக்க குத்­துச்­சண்டை ஜாம்­பவான் கஸியஸ் கிளே தனது பெயரை உத்­தி­யோ­கபூர்வமாக முக­மது அலி என மாற்றிக் கொண்டார்.

1964 : 2 ஆம் கொன்ஸ்­டைன்டைன் கிறீஸ் நாட்டின் மன்­ன­ரானார்.

1967 : தமிழ்­நாட்டில் அறிஞர் அண்ணா தலை­மை­யி­லான திரா­விட முன்­னேற்றக் கழகம் முதன்­மு­றை­யாக ஆட்­சியைக் கைப்­பற்­றி­யது.

1967 : சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் மகள் ஸ்வெட்­லானா அமெ­ரிக்­கா­வுக்கு தப்பிச் சென்றார்.

1975 : ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்­பாக உடன்­பாட்­டிற்கு வந்­தன.

1987 : பிரித்­தா­னி­யாவின் எம்.எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்­ததில் 193 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2007 : இந்­தோ­னே­ஷி­யாவின் சுமாத்­ராவில் இடம்­பெற்ற இரண்டு அடுத்­த­டுத்த பூகம்பங்களினால் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2008 : ஈராக்கின் பாக்தாத் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 68 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

மகனின் கண்ணைக்கட்டி காட்டில்விட்ட தந்தை! - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 

கதை

`னியாகத்தான் பிறக்கிறோம், வாழ்கிறோம், இறக்கிறோம். அன்பு, நட்பு இவற்றின் மூலமாகத்தான் `நாம் தனியாக இல்லை' என்கிற மாயத் தோற்றத்தை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும்' - உண்மையை, பொன்மொழியாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் அமெரிக்க நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்சன் வெல்ஸ் (Orson Welles). நேசத்துடன்கூடிய ஒரு புன்னகை, `நான் இருக்கிறேன்' எனச் சொல்லும் இறுக்கமான கைகுலுக்கல், ஆதரவான ஓர் அணைப்பு இவை செய்யும் மாயாஜாலம் கொஞ்சநஞ்சமல்ல. சோர்ந்து கிடப்பவரை உற்சாகம் கொள்ள வைக்கும்; வேதனையிலிருப்பவரைத் தேற்றும்; பெரிய இழப்பொன்றினால் நொடிந்துபோயிருப்பவரை ஆற்றுப்படுத்தும். அத்தனை மகத்துவமானது அன்பு. தனிமையைவிடக் கொடுமை வேறொன்று இருக்க முடியாது. உண்மையில் நம்மில் பெரும்பாலானோர் தனிமையிலில்லை. துயரங்களிலிருந்து தூக்கிவிட, இன்னல் ஏற்படும்போதெல்லாம் கரம்கொடுக்க, அன்பு செலுத்த யார் யாரோ இருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என மிக நீளமான பட்டியல் அது. அதை விளக்கும் உதாரணக் கதை இது.

 

`செரோக்கீ' (Cherokee) அமெரிக்காவின் ஆதிப் பழங்குடியினர்களில் ஒரு பிரிவினர். அமெரிக்க மண்ணின் பூர்வகுடியினர். அவர்களின் பழக்கவழக்கங்கள் வித்யாசமானவை. அதிலும், அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தனி. ஆண் குழந்தைகள் தைரியமானவர்களாக வளர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இயல்பாகவே பிள்ளைகளுக்குத் துணிவு இருக்கிறதா என்பதை சோதித்துக் கண்டறிவார்கள். மிகக் கடுமையான சோதனையாக அது இருக்கும். விலங்குகளை, விதவிதமான விஷ ஜந்துகளை எதிர்கொண்டு வாழ தைரியம் மிக அவசியம் அல்லவா! செரோக்கீ இனத்தைச் சேர்ந்த ஒரு தந்தை தன் மகனுக்கு ஒரு சோதனை வைத்தார்.

இருள் கவிய ஆரம்பித்திருந்த ஒரு மாலை நேரம் அது. அவர்கள் குடியிருந்த பகுதியிலிருந்து, வெகு தூரத்திலிருந்த ஓர் அடர்வனப் பகுதிக்குத் தன் மகனை அழைத்துக்கொண்டு போனார் அந்தத் தந்தை. அவனுக்கு வயது பதினான்கிருக்கலாம். அவனுடைய கண்களைக் கட்டிவிட்டார். ஒரு பாறையில் அமரவைத்தார்.

பழங்குடியினர்

``இதோ பாரு மகனே... இன்னிக்கி ராத்திரி முழுக்க இங்கேயேதான் இருக்கணும். என்ன நடந்தாலும், யார் வந்தாலும் கண் கட்டை அவுக்கக் கூடாது. எழுந்திரிச்சிப் போகவும் கூடாது. பாம்பு வந்து கடிக்கலாம்; கரடி வந்து அடிக்கலாம்... என்ன நடந்தாலும் இருக்கிற இடத்தைவிட்டு அசையக் கூடாது. காலையில சூரியன் உதிக்கிறவரைக்கும் இப்படியே இருக்கணும். அப்போதான் நீ முழு மனுஷன். புரியுதா?''

பையன் தலையை அசைத்தான்.

``அதே மாதிரி இங்கேருந்து போனதும் உன் வயசுப் பசங்ககிட்டயோ, வேற யார்கிட்டயும் இங்கே என்ன நடந்துச்சுனு சொல்லக் கூடாது. புரிஞ்சுதா?''

``சரிப்பா...''

அப்பா கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது. இருட்டு காட்டில் கவிய ஆரம்பித்தது. பையனுக்கு லேசாக உதறலெடுத்தது. பூச்சிகளின் ரீங்காரமே அவன் நரம்புகளை அதிரவைத்தது. சிறிது நேரம் கழித்து பக்கத்திலிருக்கும் புதரில் சலசலப்பு. `முயலாக இருக்குமோ? கருஞ்சிறுத்தையாகக்கூட இருக்கலாம். கண் கட்டை அவிழ்த்துவிடலாமா... யாருக்குத் தெரியப் போகிறது? கூடாது. அப்பா என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். அதைக் காப்பாற்றியாக வேண்டும்.'

பனி நடுக்கியதைவிட பயம் பாடாகப்படுத்தியது. ஆனாலும், அவன் அப்படியே உட்கார்ந்திருந்தான். சற்று தூரத்தில் ஓர் ஓநாய் ஊளையிடும் சத்தம். இப்போது அவன் யோசித்துப் பார்த்தான்... `என்ன நடக்கும்... உயிர் போகும். அவ்வளவுதானே... போகட்டும்.' இந்த தைரியம் அவனுக்குள் வந்ததும் அவன் எந்தச் சத்தத்தையும் பொருட்படுத்தவில்லை. புற்களை வருடும் காற்று, இலைகள் அசையும் சத்தம், ஆந்தைகளின் அலறல்... எந்தச் சத்தமும் அவனைச் சற்றுக்கூட அசைக்கவில்லை. அவன் அப்படியே அமர்ந்திருந்தான். இப்போது அவன் மனசு முழுக்க `நான் முழு மனுஷனாகணும்' என்கிற எண்ணமே நிறைந்திருந்தது.

காடு

 

அந்த பயங்கரமான இரவு மெள்ள மெள்ள நகர்ந்தது. காலையில் சூரிய ஒளி அவன் மேல் பட்ட பிறகுதான் அவன் கண்களைத் திறந்தான். அவனுக்கு நேர் எதிரே ஒரு சிறு பாறையில் அவனுடைய அப்பா உட்கார்ந்திருந்தார்... முதல் நாள் இரவு முழுக்கத் தன் மகனின் அசைவுகளைப் பார்த்தபடி அவரும் அங்கேதான் உட்கார்ந்திருந்தார்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதலைக் காற்றில் கடத்தும் சில்வண்டுகள்... இயற்கையின் இன்னிசை சுவாரஸ்யம்!

 
 

சாலையோரம் நின்று விசிலடிக்கும் ரோட்சைடு ரோமியோக்களைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கவிருக்கும் சீரிகையும் கிட்டத்தட்ட ஒரு ரோமியோதான். ஆம், தன் துணையைக் கவர இந்த விசிலடிக்கும் உத்தியைத்தான் பயன்படுத்துகிறது. அதென்ன சீரிகை?

நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு சில்வண்டு பற்றித் தெரிந்திருக்கும். இரவு முழுக்க ஒலி எழுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பூச்சி. ஆங்கிலத்தில் அதன் பெயர் Cicada. இந்த வகைப்பூச்சிகள் அனைத்தும் கிரிக்கெட் என்னும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அவற்றில் ஒன்றுதான் இந்தச் சீரிகை. அதாவது, Tree Cricket. இணை சேர்வதற்காக ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமான வழிகளைக் கையாளும். இலையை வைத்து ஓசை எழுப்பி, இணையை அழைப்பது இந்தச் சீரிகையின் ஸ்டைல். 

 

சில்வண்டு

Photo Courtesy: Natasha Mhatre, University of Bristol

எப்படி ஓசை எழுப்புகிறது?

இணையைக் கவர்வதற்கான ஓசையை எழுப்புவதற்காக முதலில் ஆண் சீரிகைகள் ஓர் ஒலிப்பெருக்கியைத் தயார் செய்கின்றன. இதற்காக முதலில் இருப்பதிலேயே பெரிய இலை ஒன்றைத் தேர்ந்தெடுத்து, சரியாக அதன் நடுப்பகுதியில் துளையிடுகின்றன. பின்னர், தன் முழு உடலையும் அந்தத் துளைக்குள் பொருத்திக்கொள்ளும். இதற்குப் பின்பு ஓசை எழுப்புவதற்கான பணிகளைத் தொடங்கும்.

ஒருவேளை பெரிய இலை எதுவும் கிடைக்காவிட்டால், அதைத்தேடி நேரத்தை வீணாக்குவதில்லை. உடனே கிடைக்கும் இலையை வைத்து ஓசை எழுப்பத்தொடங்கிவிடும். அந்த ஓசை வெறும் சப்தமாக மட்டுமின்றி, இணையை ஈர்ப்பதற்கான இன்னிசையாகவே இருக்கும். இதில் ஏதேனும் பெண் சீரிகை மயங்கினால், உடனே இணை சேர்வதற்கு முடிவுசெய்யும். 

ஆண் சீரிகைகளின் முன்னங்கால்களின் நான்காம் முட்டியில் இரண்டு செவிப்பறை உறுப்புகள் உள்ளன. ஓசை எழுப்புவதற்காக இவைதான் உதவுகின்றன. இலைகளில் தன் சிறகுகளை அடிக்கும்போது இலைகளைக் கவ்வியிருக்கும் முன்னங்கால்களில் உள்ள இந்தச் செவிப்பறைகள் ஓசையினை அதிகப்படுத்தும். தன்னைத் துளையினுள் பொருத்திக்கொண்ட பிறகு சிறகடிக்கும் சமயத்தில் இலைக்கும், சிறகுக்கும் மத்தியில் ஒரு சீரான அதிர்வெண்ணோடு ஒலி உருவாகும். இச்செயற்பாடு இவற்றின் மரபுரிமையோடு தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

சில்வண்டு

Photo Courtesy: Lisa Rainsong

ஆண் சீரிகைகளில் அளவில் பெரியவற்றால் அதி இனிமையான ஒலியினை எழுப்ப முடியும். இதனால் பெண் சீரிகைகள் விரைவில் ஈர்க்கப்படும். இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி தட்பவெப்பநிலைகூட இச்செயற்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. தட்பவெப்பநிலை அதிகமாக இருந்தால் அவற்றின் உடல் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும். அவ்வாறு இருக்கும்போது அவற்றால் வேகமாகத் தனது சிறகுகளை அடிக்க முடியும்; அதிகமான ஒலியும் எழுப்ப முடியும். ஆனால், தட்பவெப்பநிலை குறைந்து உடல் உஷ்ணம் குறைந்தால் சிறகின் வேகம் தடைப்பட்டு ஓசை குறையும். 

ஓர் ஆண் சீரிகை ஓசை எழுப்பி, அதனைப் பெண் சீரிகை ஏற்றுக்கொள்வது சரி. ஒரே நேரத்தில் பல சீரிகைகள் ஓசை எழுப்பினால் என்ன ஆகும்? ஒவ்வொரு பூச்சி எழுப்பும் ஓசைக்கும் ஓர் அதிர்வெண் உண்டு. இதனைப் பெண் சீரிகைகளால் எளிதில் இனம்கண்டுகொள்ள முடியும். அந்த அதிர்வெண்களில் எது பிடிக்கிறதோ, அதனைப் பெண் சீரிகை தேர்வு செய்யும். தோராயமாக ஒரு சீரிகையால் 3.6 கிலோ ஹெர்ட்ஸ் அளவுக்கு ஒலியெழுப்ப முடியும். 

 

இலைகளின் இடுக்கில் தன்னை இருத்திக்கொண்டு, சீரிகைகள் செய்யும் இந்த இயற்கை ஒலிபெருக்கி நிஜத்தில் ஒரு விந்தைதான். இனிமேல் எங்கேனும் சீரிகைகளின் ஓசையைக் கேட்டால் அதனை இரைச்சல் என நினைக்காதீர்கள்; ஏனெனில் அந்தக் காற்றில் ஒரு காதல் சம்பாஷணை நடந்துகொண்டிருக்கிறது! 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தேநீரின் தரத்தை உறுதிப்படுத்தும் பணியாளர்

1975-ல் தேநீரின் சுவையை உறுதிப்படுத்த தேநீர் சுவைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

  • தொடங்கியவர்

15 வருடத்தில் காணாமல்போன 5 மில்லியன் எலிகள்... என்ன செய்தனர் அமெரிக்கர்கள்?

 
 

ந்த ஓடையில் பாதங்கள் மூழ்கும் அளவிற்கு மட்டுமே நீர் ஓடுகிறது. தண்ணீர் ஓடும் சத்தத்தை தவிர வேறெதுவும் கேட்கவில்லை. கரையோரத்தில் நிற்கிறது அந்த விலங்கு. உடம்பெங்கும் செம்பட்டை சாயம் பூசியது போல ஒரு நிறம். ரோமங்கள் ஆங்காங்கே குத்திட்டு நிற்கின்றன. அதன் கண்கள் விழித்தும், விழித்திடாத ஒரு நிலையில் இருப்பதாய் தெரிகிறது. ஆனால், அது விழிப்புடன்தான் இருக்கிறது. இருந்தாக வேண்டிய கட்டாயம் அதற்கு! கரிய நிறத்தில் இருக்கும் அதன் முன்னங்கால்களில் ஒன்றைக் கையைப் போலே மேலே எடுத்துப் பிடித்து எதற்கோ, யாருக்கோ காத்திருக்கிறது. அதையும் நீரில் புதைத்து ஓட்டம் எடுக்கும் எண்ணத்தில்தான் இருக்கிறது. அது ஒரு வகை எலி. நீரிலும் நிலத்திலும் வாழும் என்கிறார்கள். எலி என்று சொல்வதைக் காட்டிலும் பெருச்சாளி என்று சொல்லலாம். இல்லை, இரண்டு பெருச்சாளிகள் என்று கூட சொல்லலாம். காரணம், அதை அப்படியே தூக்கி ஒரு எடை பார்க்கும் இயந்திரத்தில் வைத்தால் எப்படியும் ஒன்பது கிலோக்களுக்குக் குறையாமல் இருக்கும்.

நியுட்ரியா எலிகள்

 

பிரச்னை என்னவென்றால், அதன் இடம் இது அல்ல. இந்தக் கலிஃபோர்னிய சதுப்பு நிலங்கள் அதன் சொந்த பூமி இல்லை. இந்த நிலத்திற்கு அது ஓர் அழையா விருந்தாளி. அதுவும் எப்படிப்பட்ட விருந்தாளி? புகுந்த நிலத்தின் சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்கும் தன்மையுடைய விலங்கினம். கோய்பு (Coypu) என்று அழைக்கப்படும் அந்த எலியின் வியாபார பெயர் நியூட்ரியா (Nutria). பார்ப்பதற்கு ஒரு ரக்கூன் போல இருக்கும். புதிதாக கலிஃபோர்னிய சதுப்பு நிலங்களில் அடியெடுத்து வைத்திருக்கும் அதன் தலையாய கடமைகளே, அங்கு நிகழும் விவசாயத்திற்குத் தொல்லை கொடுப்பது, வங்குகள் பறித்து வெள்ளத் தடுப்புகளை சீரழிப்பது, நிலத்தில் வாழும் பூர்வீக மிருகங்களை விரட்டியடித்து அதன் இடங்களில் வாழ்வது போன்றவைதாம். உண்மையில், இந்த வகை எலிகளின் பூர்வீகம் தென்னமெரிக்கா. ஆனால், இன்று இந்த வகை எலிகள் ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர மற்ற அனைத்துக் கண்டங்களிலும் குடியேறிவிட்டன. தற்போது கலிஃபோர்னிய சதுப்பு நிலங்களில் ஆட்டம்போடும் இதை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் பின்பற்றியும் எந்த மாற்றமும் நிகழவில்லை. போர்கள் வென்று சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் அரசன் போல, இன்று வட அமெரிக்காவின் பதினெட்டு மாகாணங்களில் இவை ஊடுருவிவிட்டன. 

முன்னர் இதே நியூட்ரியா எலி லூசியானா மாகாணத்தில் நுழைந்து அட்டகாசம் செய்ய, அப்போதுதான் அமெரிக்கர்களுக்குத் தோன்றுகிறது அந்த யோசனை. ஒன்பது கிலோ எடை இருக்கிறது. இதன் கறி எப்படி இருக்கும்? இந்தக் கேள்வி எழுந்த சில நாள்களிலேயே, அந்தப் பகுதி மக்களின் பிடித்த உணவுகள் பட்டியலில் இடம்பெற்றுவிட்டன நியூட்ரியா எலிகள். பெயருக்குத் தகுந்தாற்போல் சத்து இருக்கிறதோ இல்லையோ, கரிய வான்கோழிகளின் கறியைப் போலச் சுவையாக இருப்பதாகச் சிலாகிக்கிறார்கள் லூசியானா வாழ் அமெரிக்கர்கள். ஜம்பாலயா (Jambalaya) என்று ஒரு ஸ்பானிஷ் - பிரெஞ்சு உணவு வகை. பேல் பூரி போல இருக்கும் இதில், கறியைச் சேர்த்து தயாரிக்கிறார்கள். இதில் வழக்கமாகப் பயன்படுத்தும் போர்க் சாசேஜ்களுக்குப் பதில், இந்த நியூட்ரியா எலி கறியைக் கலந்துவிட, இந்தப் புதிய முயற்சிக்கு ஏகபோக வரவேற்பு. Rodents of Unusual Size (அசாதாரண அளவில் இருக்கும் எலிகள்) என்று இந்த எலிகள் குறித்த ஆவணப்படத்தை எடுத்த மூன்று படத் தயாரிப்பாளர்கள் தனியாக அந்த எலிகளின் கறியை சாசேஜ்களாக உண்ண முடியாது எனவும், ஜம்பாலயா போன்ற உணவுகளில் சேர்த்தால் சுவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

நியுட்ரியா எலிகள்

லூசியானா மாகாணத்தின் அதிகாரபூர்வ வனஉயிர் மற்றும் மீன்பிடி இணையதளத்தில், நியூட்ரியா எலிகளின் ஸ்பெஷல் ரெசிப்பிகளுக்கு என்றே தனியாக ஒரு பக்கம் ஒதுக்கியிருக்கின்றனர். அதில் நியூட்ரியா சூப், சாலட் உள்ளிட்ட ஐட்டங்களை எப்படிச் செய்வதென விளக்கியிருக்கிறார்கள். தங்கள் விவசாய நிலங்களில் உலாவும் நியூட்ரியா எலிகளை விவசாயிகள் பிடித்து வைத்தால் சன்மானம் என்றெல்லாம் அறிவிப்புகள் வந்தன. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 5 மில்லியன் நியூட்ரியா எலிகள் காணாமல் போயிருக்கின்றன. ஆனால், தற்போது அவை புதிதாக நுழைந்திருக்கும் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு சட்டம் இருக்கிறது. நியூட்ரியா எலிகள் போன்ற ஆக்கிரமிக்கும் உயிரினங்களைப் பாதுகாக்க அங்கே சட்டமே இருக்கிறது. அவ்வகை உயிரினங்களை உரிமையாக்குவது, கடத்துவது அல்லது வேட்டையாடுவது போன்ற செயல்கள் அங்கே தண்டனைக்குரியக் குற்றங்கள். அது மட்டுமன்றி, இவ்வகை எலிகள், ஒருவித ஒட்டுண்ணியுடன் வருவதால், Nutria-Itch என்ற அரிப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள்.

 

தனக்குச் சொந்தமில்லாத இடத்தில் கால்பதித்து அட்டகாசம் செய்ததற்காக நியூட்ரியா எலிகளுக்கு இப்படியொரு தண்டனை!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘இரசனை கூட, அன்பளிப்புத்தான்’
 

image_f9a27fd39a.jpgசப்தத்தில் மௌனத்தைத் தரிசிப்பதும் மௌனத்தில் மாபெரும் ஓசையைக் காண்பவனே சித்தன்.

மிக அதிகமாகப் பேசுபவர்களையும் ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருப்பதையும் பக்கத்தில் இருப்பவர்கள் இரசிக்க மாட்டார்கள்.

இடி, மின்னல், பலத்த மழை, காற்று இவைகளை இரசித்துப் பாருங்கள். எல்லாமே எங்களை மகிழ்விக்கக்கூடிய இயற்கை தந்த வெகுமதிப் படைப்புகளேயாகும்.

எதையும் வெறுக்கும் முன், அவைகள் தருகின்ற அனுகூலங்களையும் அற்புதங்களையும் சற்று நோக்கப் பழகுங்கள்.

இரசனை கூட, எமக்கு வழங்கப்பட்ட பெரும் அன்பளிப்புத்தான்.

இது, எம்மை உற்சாகப்படுத்தும்; மனச்சாந்தி கொள்ளச் செய்யும்.

சில விடயங்களை எங்கள் நெஞ்சம் ஏற்பதுமில்லை. ஆனால், நாங்கள் விரும்புவதும் ஏற்கக்கூடியதும் அல்ல.

  • தொடங்கியவர்

2009 : கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டது!

வரலாற்றில் இன்று…

மார்ச் – 07

 

1793 : ஸ்பெயி­னுக்கு எதி­ராக பிரான்ஸ் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1798 : பிரெஞ்சு இரா­ணுவம் ரோமினுள் நுழைந்­தது. ரோமன் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.

1799 : பிரான்ஸின் முதலாம் நெப்­போ­லியன் பலஸ்­தீ­னத்தின் ஜாஃபா நகரைக் கைப்­பற்­றினான். நெப்­போ­லி­யனின் படைகள் கிட்­டத்­தட்ட 2,000 அல்­பே­னி­யர்­களைக் கொன்­றன.

1862 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: வட­மேற்கு ஆர்­கன்­சாவில் அமெ­ரிக்கப் படைகள் அமெ­ரிக்க மாநி­லங்­களின் கூட்­ட­மைப்புப் படை­யி­னரை வென்­றனர்.

varalaru-march-07.jpg1876 : அலெக்­சாண்டர் கிரஹம் பெல் தொலை­பே­சிக்­கான காப்­பு­ரி­மையைப் பெற்றார்.

1902 : பிரித்­தா­னி­யர்­க­ளுக்கு எதி­ரான கடைசிச் சமரில் தென் ஆபி­ரிக்­காவின் போவர்கள் வெற்­றி­யீட்­டினர்.

1912 : தென் துரு­வத்தை 1911 டிசம்பர் 14 ஆம் திகதி தான் அடைந்­த­தாக ருவால் அமுன்சென் அறி­வித்தார்.

1918 : முதலாம் உலகப் போர்: பின்­லாந்து ஜேர்­ம­னி­யுடன் கூட்டுச் சேர்ந்­தது.

1936 : லொக்­கார்னோ உடன்­ப­டிக்­கைகள், வெர்சாய் ஒப்­பந்தம் ஆகி­ய­வற்­றிற்கு எதி­ராக ரைன்­லாந்தை ஜெர்­மனி கைப்­பற்­றி­யது.

1951 : கொரி­யாவில் ஐ.நாப் படைகள் சீனப் படை­க­ளுக்­கெ­தி­ராகத் தாக்­கு­தலை ஆரம்­பித்­தன.

1969 : கோல்டா மேயிர் இஸ்­ரேலின் முதற் பெண் பிர­த­ம­ரானார்.

1989 : மக்கள் சீனக் குடி­ய­ரசு திபெத்தின் லாசா பகு­தியில் இரா­ணுவச் சட்­டத்தைப் பிறப்­பித்­தது.

1996 : பலஸ்­தீ­னத்தில் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட முதுலாவது நாடா­ளு­மன்றம் அமைக்­கப்­பட்­டது.

2006 : இந்­தி­யாவின் காசி நகரில் அடுத்­த­டுத்து இரண்டு குண்­டுகள் வெடித்­ததில் 12 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2007 : இந்­தோ­னே­ஷி­யாவின் ஜகார்த்தா விமான நிலை­யத்தில் தரை­யி­றங்க முயற்­சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்­ததில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

2009 : பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

வெங்காயத்துக்கு எடைக்கு எடை தங்கம்... பூண்டுக்கு? - பேராசைக்கு பதில் சொல்லும் கதை! #MotivationStory

 

கதை

`னிதனின் தேவை என்னவோ, அவை எல்லாமே போதுமான அளவுக்கு இந்த உலகில் இருக்கின்றன. ஆனால், அவனின் பேராசைக்குத் தீனி போட அவற்றால் முடியாது’ - தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் மகாத்மா காந்தி. செல்வம், செல்வாக்கு, பதவி, வாழ்க்கை வசதிகள்... அத்தனையும் கிடைத்துவிட்டாலும், `இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்...’ என அலைகிற மனிதனை திருப்திப்படுத்தவே முடியாது. `போதும்’ என்கிற மனம் வாய்த்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அந்த மனமில்லாமல் பேராசைப்படுபவர்கள், அதற்கானப் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இந்த நீதியைச் சொல்லும் பழைய கதை இது... 

 

ஃபிரான்ஸிலிருக்கும் சிறு கிராமத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். வாழ்க்கையில் முன்னேறத்  துடிக்கும் வயது. அப்பா, விவசாயி. அவனுக்கோ வியாபாரத்தில் நாட்டம். என்ன தொழில் செய்தால், வாழ்க்கையில் ஒரு படி உயரலாம் என்கிற எண்ணம்தான் சதா அவனுக்கு. 

ஒரு நாள் அவனிருந்த கிராமத்துக்கு வழிப்போக்கர் ஒருவர் வந்தார். பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்று வந்த தேசாந்திரி அவர். அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனான் இளைஞன். நன்கு உபசரித்தான். அவர் சாப்பிட்டு முடித்த பிறகு, அவரின் பயணக் களைப்பெல்லாம் நீங்கிய பிறகு அவருடன் பேச ஆரம்பித்தான். அவர் போய் வந்த நாடுகள், மனிதர்கள், பார்த்த அற்புதமான இடங்கள், அரிய தாவரங்கள், உயிரினங்கள்... என நீண்டுகொண்டே போனது பேச்சு. ஒரு கட்டத்தில், தன் ஆசையை அவரிடம் தெரிவித்தான் இளைஞன். ``ஐயா... நான் ஏதாவது ஒரு தொழில் செய்ய விரும்புகிறேன். ஆனால், என் குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு அந்தத் தொழில் லாபம் பெற்றுத் தர வேண்டும். என்ன வியாபாரம் செய்யலாம்... யோசனை சொல்லுங்கள்’’ என்றான். 

அந்த தேசாந்திரி, வெங்காயமே இல்லாத ஒரு நாட்டைப் பார்த்ததாகக் கூறினார். ``என்னது... வெங்காயமே இல்லாத நாடா... வெங்காயம் இல்லாம அங்கே ஒரு சமையலா... அப்புறம் எப்படி சாப்பாடு ருசிக்கும்?’’ ஆச்சர்யப்பட்டுப் போனான் அந்த இளைஞன். அந்த நாட்டுக்குச் சென்று, வெங்காயத்தை அறிமுகப்படுத்தி விற்றுவிட்டு வந்தால், வாழ்க்கைக்குத் தேவையான அளவுக்கு செல்வம் சேர்த்துவிடலாம் என்று தெரிந்தது. இந்தத் தகவலைச் சொன்னதற்காக அந்தப் பயணிக்கு நன்றி சொன்னான். அங்கே போவதற்கான வழியை விசாரித்துவைத்துக்கொண்டான். 

வெங்காய வண்டி

ஒரு நல்ல நாளில், ஒரு வண்டி நிறைய வெங்காயங்களை மூட்டை மூட்டையாக ஏற்றிக்கொண்டு அந்த நாட்டுக்குப் பயணமானான். பல நாள்களுக்குப் பிறகு அங்கே போய்ச் சேர்ந்தான். நேராக அந்த நாட்டு அரண்மனைக்குப் போனான். காவலர்களிடம், தான் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பதாகவும், அரசரைப் பார்க்க அனுமதி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தான். கொஞ்ச நேரத்தில் அவனுக்கு அனுமதி கிடைத்தது. 

அரசர், அவனை விசாரித்தார். ``அரசே... என் தேசத்திலிருந்து மிகப் பிரமாதமான பரிசு ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தக் காய் என் தேசத்தில் விளைந்தது. ஆனால், உங்களுக்குப் புதுசு. எந்த உணவின் ருசியையும் மேம்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. இதுக்குப் பேர் வெங்காயம். இதை உங்க நாட்டுக்கு அறிமுகப்படுத்தறதுக்காகவே கொண்டு வந்திருக்கேன்...’’ 

ராஜாஅரசர், தன் மந்திரிகளுடன் கலந்தாலோசித்தார். கடைசியில்,  வெங்காயத்தைக்கொண்டு அந்த இளைஞனை உணவு தயாரிக்கச் சொன்னார். இளைஞன், தன் திறமையையெல்லாம் பயன்படுத்தி, தான் கொண்டு வந்திருந்த வெங்காயத்தைச் சேர்த்து பிரமாதமான ஒரு விருந்தைத் தயார் செய்தான். அன்று இரவு விருந்து நடந்தது. வெங்காயம் சேர்த்த உணவைச் சாப்பிட்டுப் பார்த்த அரசரும் மந்திரி, பிரதானிகளும் சுவையில் சொக்கிப் போனார்கள்.  அரசர் வெங்காயத்தைக் கொண்டு வந்ததற்காக இளைஞனுக்கு நன்றி சொன்னார். அவன் மீதம் வைத்திருந்த எல்லா வெங்காயத்தையும் பெற்றுக்கொண்டு, அதன் எடைக்கு எடை தங்கத்தைக் கொடுத்தனுப்பினார்.  இளைஞன் மகிழ்ச்சியோடும் வண்டி நிறைய தங்கக்கட்டிகளுடனும் ஊர் திரும்பினான். வழியில், இரவில் ஒரு சத்திரத்தில் அவன் தங்கவேண்டி வந்தது. அங்கே இன்னொரு வியாபாரியைச் சந்தித்தான் இளைஞன். இருவரும் பல விஷயங்களைப் பேசினார்கள். பேச்சுவாக்கில் இளைஞன் தான் வெங்காயம் இல்லாத நாட்டுக்குப் போய்வந்த கதையைச் சொன்னான். கூடவே, அந்த நாட்டுக்காரர்கள் பூண்டு வாசனையையே அறியாதவர்கள் என்றும் சொன்னான். அந்த வியாபாரி ஆச்சர்யப்பட்டுப் போனார். `வெங்காயத்துக்கே இப்படி மயங்கிப் போனாங்கன்னா, பூண்டு சுவைக்கு நாட்டையே தந்தாலும் தந்துடுவாங்கபோல...’ என்று நினைத்தார். அடுத்த நாள் காலை இளைஞன், அவரிடம் விடைபெற்று தன் கிராமத்துக்குக் கிளம்பினான். 

அந்த வியாபாரி, ஒரு வண்டி நிறைய பூண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டார். அந்த இளைஞன் குறிப்பிட்ட தேசத்துக்குப் போனார். எல்லாம் வழக்கம்போல் நடந்தது. வியாபாரியும், இளைஞன் செய்ததைப்போலவே பூண்டைப் பயன்படுத்தி, தன் திறமையையெல்லாம் காட்டி, பல உணவுகளைச் சமைத்து, விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.  அரசரும், மந்திரி பிரதானிகளும் விருந்துக்கு வந்தார்கள். உணவின் சுவையில் கிறங்கிப் போனார்கள்.  வெங்காயம் தந்த சுவையைவிட, பூண்டு சேர்த்த உணவுகள் ஒரு படி மேலே சுவை கூட்டியிருந்தன. 
அரசர், தன் மந்திரிகளை தனியே அழைத்துப் போனார். இவ்வளவு அற்புதமான சுவை நிறைந்த பூண்டைக் கொண்டு வந்திருக்கும் வியாபாரிக்கு என்ன பரிசு தரலாம் என்று நீண்ட நேரம் விவாதித்தார். கடைசியில், வியாபாரி கொண்டு வந்திருக்கும் பூண்டுக்கு தங்கம் ஈடல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள். அதைவிடச் சிறந்த ஒன்றைப் பரிசாக வியாபாரிக்குக் கொடுக்க முடிவு செய்தார்கள். வேறென்ன... வெங்காயம்தான்! 

அன்றிரவு அந்த வியாபாரி தன் வண்டி நிறைய வெங்காய மூட்டைகளுடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.    

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

100 கிளைகளுடன் ஒரு பனைமரம்

 

 
palm53456JPG

பண்ணந்தூரில் வளர்ந்துள்ள 100 கிளைகளுடன் கூடிய அதிசய பனைமரம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் கூடிய அதிசய பனைமரத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த மரத்தை 7 தலைமுறையாக பராமரித்து வருகின்றனர் விவசாயி அப்பாஜி குடும்பத்தினர்.

அப்பாஜி கூறும்போது, ‘‘எங்க முன்னோர் காசியில் இருந்து ஒரு பனை விதை எடுத்து வந்து, இங்கு இருக்கிற பெருமாள் கோயில் எதிரே நட்டு வளர்த்தாங்க. இந்த பனை மரத்தில் கிளைகள் படர்ந்து, ஒவ்வொரு கிளையிலும் ஒரு மரம் வளர்ந்தது. இப்போது 7 தலைமுறைகளைத் தாண்டி, 100 கிளைகளுடன் பரப்பி நிற்கிறது. கடந்த ஆண்டு பெய்த கடும் மழை, சூறாவளிக் காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த பனைமரத்துக்கு சிறு சேதாரம்கூட இல்லை’’ என்றார் பெருமை பொங்க.

‘‘இந்த அதிசய பனை மரத்தால்தான் எங்கள் ஊருக்கு பண்ணந்தூர் என்கிற பெயரே வந்திருக்கும்” என்கின்றனர் கிராமத்து இளைஞர்கள். தொடர்ந்து அவர்கள் கூறும்போது, “விஞ்ஞானிகள் பலர், இதன் விதைகளை எடுத்துச் சென்று பதியமிட்டனர். ஆனால் செடி வரவில்லை. அதேநேரம் மற்றொரு செடி இந்த பனைமரத்தின் கீழே முளைத்தது. அதை தாய் மரத்தின் எதிரே நட்டு வளர்த்தோம். அதிலும் கிளைகளுடன் மரம் வளரத் தொடங்கியது. வேறு இடத்தில் நட்டு வைத்த எந்த விதையும் வளரவில்லை’’ என்றனர். வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மரபணு மாற்றத்தால் இதுபோன்ற அதிசயங்கள் நிகழும்’’ என்றனர்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

சினிமா ஸ்டைலில் ஸ்நோ ஹோட்டல் - புதுமை... இனிமை!

 

 

னியால் ஆன தங்கும் விடுதி . Got-யைப் பார்க்க விரும்புவார்கள் செல்ல வேண்டிய இடம்.

#GOT பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? HBO சேனலின் டீ.ஆர்.பி-யை எகிறவைத்தது இந்தத் தொடர். `கேம் ஆப் த்ரோன்ஸ்’ என்னும் இந்தத் தொலைக்காட்சி தொடருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அதில் வரும் இடங்கள் எல்லாம் ரொம்பவே பிரபலம். `அந்த இடங்களுக்கெல்லாம் நாம் போக முடியாதா?’ என்று ஏங்கும் GOT ரசிகர்கள் பலர் உண்டு.  

p86a_1519807286.jpg

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக் காகவே HBO நிறுவனம் பின்லாந்த்தில், லாப்லாந்து ஹோட்டலுடன் இணைந்து புதுமையான தங்கும் விடுதி ஒன்றை வடிவமைத்துள்ளது. முழுவதும் பனிக்கட்டியைக்கொண்டே உருவாக்கப்பட்டுள்ள இந்த விடுதி முழுக்க முழுக்க #GOT-ல் வரும் இடங்களையும் கதா பாத்திரங்களையும் கண்முன்னே கொண்டு வருகிறது.

இதுபோன்ற விடுதிகள் இதுவரை 17 முறை கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முறைதான் முதன்முதலாக #GOT-யை மையக்கருத்தாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, போலந்து, லட்வியா, உக்ரைன் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த சிற்பக்கலைஞர்கள் இந்த #GOT கதாபாத்திரங்களையும் காட்சிகளையும்  வடிவமைத்து அசத்தியிருக்கின்றனர்.  

p86b_1519807359.jpg

அப்படி என்னதான் இங்கு ஆச்சர்யம்? #GOT-ல் ஏழு அரசாட்சிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும். அந்த அரசாட்சி களும் அங்கிருக்கும் அரசாட்சி பீடங் களும் போர்வாள்களும் டிராகன் போன்ற ஜந்துகளின் வடிவங்களும் பனியிலே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விடுதியின் உள்ளே பனியால் வடிவமைக்கப்பட்ட உணவகங்களும் உள்ளன. இந்த உணவகங்களின் நாற்காலிகளும் பனிகளால்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு பனியால் செய்யப்பட்டிருக்கும் தேவாலயம் ஒன்றும் உள்ளது. இது தம்பதியருக்கான பிரத்யேகமான தேவாலயம். #GOT-ல் வரும் சிவப்பு கல்யாண நிகழ்வைப் போன்று இந்த இடம் நிச்சயம் இருக்காது என்கின்றனர் இந்த விடுதியின் நிர்வாகிகள் (அது என்ன சிவப்புக் கல்யாணம் GOOGLE பண்ணி பாருங்க).

இந்த விடுதியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டும்தான் நடத்த முடியும். அப்போதுதான் பனி கிராமத்தின் வெப்பநிலை 10 டிகிரிக்கும் கீழே குறைய ஆரம்பிக்கிறது. இந்த விடுதியில் பொழுதைக் கழிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 8-ம் தேதிவரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் அந்த விடுதி தெரிவித்திருக்கிறது. 

p86c_1519807402.jpg

சரி... இந்தப் பனியைக்கொண்டும், பனிக்கட்டிகளைக்கொண்டும் கட்டப்பட்டுள்ள விடுதியைக் கட்ட தோராயமாக எவ்வளவு பனியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் தெரியுமா? சுமார் 2 கோடி கிலோ பனியையும், 3 லட்சத்து 50 ஆயிரம் கிலோ பனிக்கட்டிகளையும் 20 ஆயிரம் சதுரஅடி கொண்ட இந்தப் பனி விடுதிக்காகச் செலவிட்டிருக்கிறார்கள் இந்த விடுதியை வடிவமைத்த வடிவமைப்பாளர்கள்.

இந்த விடுதியில் தங்கும் விருப்பம் உள்ளவர்களின் கவனத்துக்கு...

* பனிக்கிராமம் என்று அழைக்கப்படும் இந்தத் தங்கும் விடுதியில் முழுவதும் பனியிலே தயாரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 30 அறைகள் இருக்கின்றன.    

p86d_1519807433.jpg

* இரண்டு பேர் ஓர் இரவு இந்த பனித்தொகுப்பில் தங்குவதற்கான கட்டணம் 420 டாலர். அதிகபட்சம் ஐந்து நபர்கள் தங்கிக்கொள்ளலாம். சாதாரண அறையே போதும் என்றால் ஓர் இரவுக்கான கட்டணம் 315 டாலர். தங்கும் அறைகளின் வெப்பநிலை 2 முதல் 5 டிகிரி வரையே இருக்கும். அந்தக் குளிரைத் தாங்கும் அளவுக்கு அறையும் அதிலுள்ள பொருள்களும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

நம்ம ஊர் வெயிலுக்கு வெளிநாட்டுக்கு ஒரு பயணம் போக வேண்டும் என்னும் விருப்பப்படுகிறவர்களின் விருப்பப் பட்டியலில் இந்தப் பனிக்கிராமத்தையும் மறக்காமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.  

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரவு எப்படி?: சிறந்த காப்பீட்டை தேர்வு செய்வது எப்படி?

சிறந்த காப்பீட்டு திட்டங்களை எப்படி தேர்வு செய்வது என்பதை விளக்குகிறது பிபிசி தமிழின் "வரவு எப்படி" நிகழ்ச்சியின் இந்த வாரப்பகுதி.

  • தொடங்கியவர்

சந்திரபாபு இறந்த தினம்: மார்ச் 7- 1974

 
 

சந்திரபாபு தூத்துக்குடியில் கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட, அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே

 
சந்திரபாபு இறந்த தினம்: மார்ச் 7- 1974
 
சந்திரபாபு தூத்துக்குடியில் கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட, அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16-ம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார், "உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும். என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்."

1947-ம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.

தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.

தமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார். இன்றளவும் அவரது பாடல்கள் வானொலிகளிலும், மேடைகளிலும் ஒலித்து வருகின்றன. இசைப் பேழைகளில் இவரது பாடல் தொகுப்புக்கள் விற்பனையாகின்றன. தலைமுறைதாண்டிய ரசிகர்கள் இவருக்கு உண்டு.

நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் அந்த 7 நாட்கள் படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக - இயக்குனர் பாக்கியராஜ் கூறினார்.)

சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன. *கவலை இல்லாத மனிதன் மற்றும் குமாரராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார்.

அவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960களில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.

1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.

சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
‘இரக்கப்படுதல் மானுடநெறி’
 

image_6127c4f092.jpgஇரக்கப்படுதல் மானுடநெறி. இது தர்மத்தின் ஓர் அங்கமுமாகின்றது. இத்தகைய இரக்க உணர்வுள்ளோரை ஏமாற்ற விளைவோர் பாவாத்மாக்களாகின்றனர்.  

பொய்யுரைத்தும், நடித்தும் வருவோரை நம்பவைத்து ஏமாற்றுவது சகஜமாகி விட்டது. சிலபேர்வழிகள் தங்கள் துயரக்கதைகளை சொல்லிச்சொல்லியே பிறரிடம் பொருள் கோருகின்றனர். ஆனால் அவர்கள் சொல்வதில் பெரும்பாலும் கற்பனை கலந்த நெடும்தொடர் என்பதை இரக்கம் மிகுந்தவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

துன்பப் பட்டவர்களைத் தாங்குதல் மேலான கைங்கரியம். ஆனால், தர்மம் சேரும் இடத்தில் சேர வேண்டும் எனப் பற்பல காரணங்களைக் காட்டி, பணம் சேகரிக்கும் கூட்டம் அதிகரித்துவிட்டது. இணையத்தளங்களிலும் இந்தச் சூது நடக்கின்றது.  

கொடுக்கும் முன்னர் அதைப் பெறுவதற்கு வருபவர் யார் எனத் தெளிந்து கொள்வது நல்லது.  

எக்காரணம் கொண்டும் தர்மம் வீணாக அனுமதித்தலாகாது. ஏதிலிகளுக்காக இரங்குபவர்கள் இயன்றளவு வழங்குங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.