Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

`ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலுக்கு விரைவில் டும் டும் டும்!

`ஜிமிக்கி கம்மல்’ பாடல் மூலம் பிரபலமான ஷெரிலுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. 

ஷெரில்

ஒரே பாடலில் சமூக வலைதளங்களின் சென்சேஷனல் ஹிட் அடித்து, அதன் மூலம் பிரபலமானவர் `ஜிமிக்கி கம்மல்' ஷெரில் ஜி.கடவன். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் "வெளிப்பாடிண்டே புஸ்தகம்." இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்தான் 'என்னடம்மேட ஜிமிக்கி கம்மல்.' ஓணம் பண்டிகையின்போது அந்தப் பாடலுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள கல்லூரி ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நடனமாடியிருந்தனர். அவர்கள் நடமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. 

 

அந்த வீடியோவில் நடனமாடியிருந்த ஷெரிலுக்கு, தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர். மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர் என ஷெர்லியின் புகழ் பரவத் தொடங்கியது. அந்தப் பாடல் வெளியான பின்னர், ஊடகங்கள் பலவற்றிலும் ஷெரிலின் இன்டர்வியூ குவிந்தது. நடிகர் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 'சொடக்கு' பாடலின் யூடியூப் மேக்கிங் வீடியோவிலும் அவர் திரையில் தோன்றினார். அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும், தனக்கு ஆசிரியர் பணியில்தான் விருப்பமென்று, அவரது பணியைத் தொடர்ந்தார். இந்நிலையில், தற்போது ஷெரிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ப்ரஃபுல் டாமி (Praful Tomy Amamthuruthil) என்பவருடன் ஷெரிலுக்கு, சில தினங்களுக்கு முன்பு நிச்சயம் முடிந்துள்ளது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

https://www.vikatan.com

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
‘மனிதப் படையணி தொடரும்’
 

image_21143535cd.jpgகாலப் பெருவெளியூடாக மானுடப் பயணங்கள் நடந்தபடியே உள்ளன. இந்தப் பயணத்தில், குதூகலமும் மங்கலமும் குளிரின் கதகதப்பும் உஷ்ணத்தின் வெம்மையும் காற்றின் மெல்லிய ஓட்டமும், வேகமும், கடலின் மௌனமும் ஆர்ப்பரிக்கும் குமுறல்களும் மலையின் யௌவனமும் எரிமலைகளின் சீற்றங்களையும் கண்டபடி மக்கள் நடந்தபடியே...

எங்கே தொடங்கியதோ அதே புவனத்தின் மடியில் புரண்டு படுத்து, முடிவில் விழிகள் பனிக்க, உயிரை விடுவித்து, மூச்சை நிறுத்துகிறான். இது இயற்கைான சங்கதி.எல்லோருக்கும் இந்த அனுபவம் நிகழ்வது சர்வசாதாரணமானது. அழுது அரற்றறுதல் அநாவசியமானது.

எனவே அச்சப்பட்டு, அச்சப்பட்டு குறுகி நெழிந்து, ஓடிஓடி ஒளிக்க இடமின்றி, இதுதான் வாழ்வா எனச் சொல்வதை விடுத்து, நிமிர்ந்து நடந்தால் என்னே உன்வீரம்.

நாளையும் மனிதன் வருவான். ஒருவர் போக, தொடரும் மனிதப் படையணி. உங்களால்த்தான் பயம், உங்களைப் பயமுறுத்த விழைகிறது.இருக்கும் வாழ்வு நிறைவானது; அடுத்தவனுக்குப் பாடம் புகட்டுகிறது.

  • தொடங்கியவர்

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12

 
அ-அ+

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

 
 
 
 
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12
 
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

இப்பன்னாட்டு நாள் மொரோக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வீதியோரச் சிறுவர்களினால் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1832 - இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.
 
* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது.
 
* 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
 
* 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டணி இராணுவத்திடம் வீழ்ந்தது.

* 1927 - ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
* 1955 - ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.
 
* 1961 - சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார்.
 
* 1980 - லைபீரியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.

* 1981 - முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்டது.
 
* 1983 - பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.
 
* 1996 - யாஹூ! இனது முதற் பொதுப் பங்கு வழங்கல்.
 
* 2007 - இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.

 

 

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்: ஏப்.12

 
அ-அ+

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

 
 
 
 
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்: ஏப்.12
 
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7-ம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது.

உருசியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961-ல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

செடி வளர்ப்பதைப்போலத்தான் குழந்தை வளர்ப்பும்! - உண்மை சொல்லும் கதை #MotivationStory

 

கதை

`பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு கற்பித்தல் அடிப்படையில்தான் இருக்கிறது; அப்படி இருக்கவேண்டியது அவசியமும்கூட’ - ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கல்வியாளர் கில்பர்ட் ஹையத் (Gilbert Highet) தெளிவாகச் சொல்லியிருக்கிறார். குழந்தைக்கு வார்த்தையை, எழுத்தை, குடும்பத்தை, உறவினரை, அக்கம்பக்கத்தாரை, பழக்கவழக்கங்களை, பாரம்பர்யத்தை.. இன்னும் என்னென்னவோ கற்றுக்கொடுக்கும் முதல் ஆசிரியர்கள் பெற்றோரே. ஆனால் `பொத்தி வளர்க்கிறேன்’ என்கிற பெயரில் சுயகாலில் நிற்கத் தெரியாதவர்களாக, எதையும் எதிர்த்து நிற்கத் தெரியாதவர்களாக வளர்க்கப்படுகிறவர்கள்தான் இங்கு அநேகம். குழந்தை கேட்பதெல்லாம் எளிதாகக் கிடைத்துவிட்டால் அவற்றின் அருமை தெரியாமல் போகும்; ஒரு பொருளுக்காகக் கொடுக்கப்படும் உழைப்பின் மதிப்பு தெரியாமல் போகும். வாழ்க்கையை சுயமாக வாழ்வது எப்படி என்பது புரியாமல் போகும். சில நேரங்களில் வேண்டியதை பெற்றுத் தருவதைவிட, அதை எப்படிப் பெறுவது என்று வழிகாட்டுவது நல்லது. `குழந்தைகளை சுயமாக நடைபழக விடுங்கள்... அதே நேரத்தில் அவர்களைப் பத்திரமாகக் கண்காணித்தபடி பின்தொடர்ந்துகொண்டே இருங்கள்’ என்பது ஜப்பானியர்கள் பின்பற்றும் ஒரு வழிமுறை. இந்த உண்மையை விளக்குகிறது இந்தக் கதை.

கதை

அவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். ஒருவர் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்; மற்றொருவர், ஓய்வு பெற்ற பொறியாளர். பொறியாளருக்கு புதிது புதிதாக எதையாவது செய்து பார்ப்பதிலும், நவீன தொழில்நுட்பங்களிலும் ஆர்வம் அதிகம். இருவருக்குமே நேரம் அதிகம் இருந்தது. ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது ஆசிரியருக்கு அந்த யோசனை தோன்றியது. `இருவருக்கும்தான் வீட்டுக்கு முன்பாக பெரிய இடம் இருக்கிறதே... சின்னத் தோட்டம் போட்டால் என்ன?’ இதைச் சொன்னதும் பொறியாளர் ஒப்புக்கொண்டார். இருவரும் ஊருக்கு வெளியேயிருந்த செடிகள் விற்பனை நிலையத்துக்குப் போனார்கள். அவரவருக்குப் பிடித்த விதவிதமான செடிகளை வாங்கி வந்தார்கள். தங்கள் வீட்டில் செடிகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தார்கள். 

ஓய்வு பெற்ற ஆசிரியர் செடிகளை வளர்ப்பதில் அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார். குறைவாகத்தான் தண்ணீர் ஊற்றுவார். ஆனால், பக்கத்து வீட்டிலிருந்த பொறியாளர் அப்படியல்ல. எந்தச் செடிக்கு எந்த உரம் போட்டால் நல்லது என்று புத்தகங்களையும் இணையதளங்களையும் படித்து அதைப் பின்பற்றுவார். காலை, மாலை, இடைவெளியில் கிடைக்கும் நேரத்திலெல்லாம் தண்ணீர் ஊற்றுவார். மொத்தத்தில் அவர் வளர்க்கும் செடிகளை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார். 

ஆசிரியர் வளர்த்த செடிகள் எளிமையான தோற்றத்துடன் இருந்தன; நன்றாகவும் வளர்ந்திருந்தன. பொறியாளரின் செடிகளும் செழுமையோடும் பசுமையோடும் வளர்ந்துகொண்டிருந்தன. ஒருநாள் இரவு கனமழை பெய்தது. வெளியே வரவே முடியாத அளவுக்கு காற்றோடு சேர்ந்து விட்டு விளாசிய பெருமழை அது; காலையில்தான் நின்றது. கிட்டத்தட்ட சின்னதாக ஒரு புயலடித்து ஓய்ந்தது மாதிரி இருந்தது. பொறியாளரும் ஆசிரியரும் அடுத்த நாள் வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள். தாங்கள் வளர்க்கும் செடிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தார்கள். பொறியாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வளர்த்துக்கொண்டிருந்த செடிகளெல்லாம் மண்ணிலிருந்து வேரோடு வெளியே வந்து சேதமடைந்திருந்தன. அவர் துடித்துப் போனார். சரி, அடுத்த வீட்டில் நிலைமை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கப் போனார். 

கதை

ஆசிரியரின் வீட்டில் அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. சேதம் மிக மிக சொற்பமாகவே இருந்தது. இரண்டே செடிகள் மட்டுமே மண்ணைவிட்டு வெளியே வந்திருந்தன. பொறியாளர், ஆசிரியரிடம் கேட்டார்... ``நாம ரெண்டு பேருமே தோட்டத்துல செடிகளை வளர்த்தோம். நான் என் செடிகளைப் பார்த்துப் பார்த்து வளர்த்தேன். உங்களைவிட நல்லா பராமரிச்சேன். அதிகமா தண்ணிகூட விட்டேன். இப்போ பாருங்க... இந்த மழையில என்னோட செடிகளெல்லாம் வேரோட பிடுங்கிக்கிட்டு வெளியே வந்துடுச்சு. ஆனா, உங்க செடிங்க அப்படியே இருக்கு. அது எப்படி?’’ 

அந்த ஓய்வு பெற்ற, அனுபவமும் முதிர்ச்சியும் நிறைந்த ஆசிரியர் சொன்னார்... ``நீங்க உங்க செடிகள் மேல ரொம்ப கவனம் செலுத்தினீங்க, நிறைய தண்ணீர் விட்டீங்க. அதனாலேயே அந்தச் செடிகளுக்கு உழைக்கவேண்டிய, எதுக்கும் மெனக்கெடவேண்டிய அவசியம் இல்லாமப் போயிடுச்சு. உங்க செடிகளுக்கு எல்லாமே ஈசியா கிடைக்க நீங்க வழி செஞ்சுட்டீங்க. நான் என்னோட செடிகளுக்குக் கொஞ்சமா தண்ணிவிட்டதால அதுங்களோட வேர்கள் இன்னும் தண்ணி வேணும்னு நீள ஆரம்பிச்சுது. அதனாலயே மண்ணுக்குள்ள ஆழமாகப் புகுந்த வேர்கள் பலமானது. அதனாலதான் என் செடிகள் பிழைச்சுது...’’      

 

குறிப்பு: குழந்தை தவறாக அடியெடுத்துவைத்து தடுமாறி, கீழே விழுகிறதா?  ஜப்பானியர்கள் பதறிப்போய் தூக்கிவிட மாட்டார்கள். அழுதாலும், தானாக எழுந்திருக்கும் வரை காத்திருப்பார்கள். `அப்போதுதான் குழந்தைக்குக் கீழே விழுந்தால் அடிபடுவோம் என்பது புரியும்; திரும்பக் கீழே விழக் கூடாது என்பதையும் கற்றுக்கொள்ளும் என்பது அவர்களின் லாஜிக்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

யாழ்ப்பாண நகரம் கஸ்தூரியார் சாலை, நாவலர் St, பலாலி Rd 2018 இலங்கை
  • தொடங்கியவர்

இந்தக் குரங்குகள் வெந்நீரில் குளிப்பது குளிருக்காக மட்டுமல்ல..!

 
 

குரங்கின் மொழி இங்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

``இன்னிக்கு கொஞ்சம் குளிர் அதிகமா இருக்குல்ல?"

``ஐயையோ...கொஞ்சமா??? ரொம்பவே அதிகமா இருக்கு."

``எனக்கு முதுகு ரொம்ப அரிக்குது. கொஞ்சம் பாறேன்..."

``எனக்கு தலையில் நீ பேன் பார்க்குறதா இருந்தா, இந்த உதவிய நான் உனக்கு செய்றேன்"

``சரி... நான் செய்றேன். முத எனக்குக் கொஞ்சம் உதவி பண்ணு..."

``சரி... பண்றேன். ஆனா, வா முதல்ல சுடு தண்ணி குளத்துக்குப் போயிடுவோம். என்னால் குளிர் தாங்க முடியில. "

வெந்நீர் குளியலில் குரங்குகள்

பனி படர்ந்திருக்கும் அந்த மரக்கிளையிலிருந்து தாவி, கீழே பனி மறைத்திருந்த பாறையின் மீது குதித்தன அந்தக் குரங்குகள். பொழிந்துகொண்டிருந்த பனி, பஞ்சுகளாய் அதன் ரோமங்களில் பதிந்தன. விறைப்பை ஏற்படுத்திடும் அந்த வெள்ளைப் பனியில் கால் வைத்தபடி நடந்து சென்றன அந்தக் குரங்குகள்.

ஜப்பானின் பனிக் குரங்குகள்

சற்று தூரத்தில் ஒரே புகை மூட்டமாக இருந்தது. அந்தப் புகையை நோக்கித்தான் இந்தக் குரங்குகள் போய்க் கொண்டிருந்தன. அங்கிருந்த அந்த சின்னக் குளத்தினுள் குதித்தன அந்தக் குரங்குகள். இரண்டும் கொடுத்த வாக்குகளை ஒன்றுக்கொன்று நிறைவேற்றின. 

கொஞ்சம் விலகி கழுகுப் பார்வையில் பார்த்தால் அந்தக் குளத்தில் பல குரங்குகள் சுடுநீர் குளியலில் இருப்பது தெரியும்.

ஜப்பானின் பனிக் குரங்குகள்

இது ஜப்பானின் வடக்கில் இருக்கும் நாகனோ (Nagano) பனி மலைப் பகுதி. இங்கு `ஜப்பானிய மக்காவு' (Japanese Macaque) எனும் குரங்கினம் அதிகமாக காணப்படும். இவை பனி மலைகளில் வாழும் குரங்குகள். இந்தக் குரங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே `ஜிகோகுடானி குரங்குகள் பூங்கா' (Jigokudani Monkey Park) அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பனிமலைகளில் குரங்குகள் அங்குமிங்கும் குதித்து ஓடுவதைப் பார்க்க அந்தக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர். அவர்களுக்காக அங்கு "கொரொகன்" (Korokan) எனும் உல்லாச விடுதி கட்டப்பட்டது. 

"ஜிகோகுடானி" என்பதற்கு ஜப்பானிய மொழியில் `நரக பள்ளத்தாக்கு' (Hell's Valley) என்று பெயர். அதற்கு முக்கியக் காரணம், இந்தப் பகுதியில் அதிகம் காணப்படும் "வெந்நீர் ஊற்றுகள்" (Hot Spring). பொதுவாக அந்த வெந்நீர் ஊற்றுகளில் வரும் தண்ணீர் 140 டிகிரி ஃபாரென்ஹீட் அளவிலிருக்கும். 

வெந்நீர் குளியல்

1963-ல் கொரொகன்  விடுதி, வெந்நீர் ஊற்றுகளிலிருந்து வரும் தண்ணீரைக் கொண்டு ஒரு செயற்கை வெந்நீர் குளத்தை அமைத்தது. அதை மனிதர்கள் அளவுக்கு 104 டிகிரி ஃபாரென்ஹீட் என்ற வெப்ப நிலையில் அந்தக் குளத்தில் தண்ணீரை நிரப்பியது. பல சுற்றுலாப் பயணிகளும் அதில் குளித்து குதூகலித்தனர். 

ஒரு நாள், ஒரு பெண் குரங்கு அந்த வெந்நீர் குளத்தில் இறங்கி குளிப்பதைச் சிலர் பார்த்தனர். அடுத்த சில நாள்களில் பல குரங்குகளும் அதில் இறங்கத் தொடங்கிவிட்டன. பின்னர், `ஜிகோகுடானி குரங்குகள் பூங்கா' நிர்வாகம் குரங்குகளுக்கு என பிரத்யேக வெந்நீர் குளத்தை அமைத்தது. இதில் பல ஆண்டுகளாக குரங்குகள் குளித்து வருகின்றன. உலகிலேயே குரங்குகள் வெந்நீர் குளியல் போடுவது இங்கு மட்டும் தான். உலகளவில் இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து குவியத் தொடங்கினர். 

வெந்நீர் குளியல்

குளிருக்கு இதமாக இருப்பதால் இந்த வெந்நீர் குளத்தில் குரங்குகள் குளிக்கின்றன என்பதே பொதுவான கருத்தாக இருந்து வந்தது. ஆனால், சில நாள்களுக்கு முன்பு ஜப்பானின் `கியோடோ பல்கலைக்கழகத்தை' (Kyoto University) சேர்ந்த டகேஷிட்டா என்பவர் தலைமையில் ஒரு குழு ஆராய்ச்சியை மேற்கொண்டது. அந்தக் குரங்குகளின் மலத்தை எடுத்து சில ஆய்வுகளை மேற்கொண்டது அந்தக் குழு.

இயல்பாக இந்தக் குரங்குகள் வெந்நீரில் இறங்கும் வழக்கம் கொண்டவை கிடையாது. ஆனால், 1963-ல் இறங்கிய முதல் குரங்கைத் தொடர்ந்து, இன்று இந்தப் பகுதியிலிருக்கும் அத்தனை குரங்குகளும் இதில் இறங்குகின்றன. 

இந்த ஆராய்ச்சியில், குளிருக்காக மட்டுமே குரங்குகள் வெந்நீரில் இறங்குவதில்லை. அதற்குப் பின்னணியில் இன்னுமொரு முக்கியக் காரணமும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பனிக் குரங்குகள் - வெந்நீர் குளியல்

 

இந்தக் குரங்குகளில்   "க்ளூகோகார்டிகாய்ட்ஸ்" (Glucocorticoids) எனும் ஹார்மோன் மனஅழுத்தத்துக்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. இந்த வெந்நீரில் இறங்கும்போது, அந்தக் குரங்குகளில் க்ளூகோகார்டிகாய்ட்ஸ் அளவு குறைகிறது. அதன் மூலம், இவை மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெந்நீரில் இறங்கும் குரங்குகளில் அதிக எண்ணிக்கையில் பெண் குரங்குகளே இருக்கின்றன. அதுவும், மாதவிடாய் காலங்களில் அதன் மன அழுத்தம் அதிகரிக்கும் சூழலில், இந்த வெந்நீர் குளியல் அவற்றுக்குப் பெரும் ஆறுதலாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வெல்கம் கேர்ள்ஸ்!

 

 

தமிழ் சினிமாவுக்கு ஜில்லுன்னு வந்திருக்கும் புதிய வரவுகள் இவர்கள். வெல்கம் கேர்ள்ஸ்!

p70d_1523350936.jpg

‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் ஹீரோயின், பிரபுதேவாவோடு ஆடத் தயாராகியிருக்கும் அதா ஷர்மா.

“பத்தாவது படிக்கும்போதே  மாடலிங் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இயக்குநர் விக்ரம் பட்டின் ‘1920’- ஹாரர் படம் மூலமா பாலிவுட்டில் அறிமுகமானேன். ‘2008 ஃபிலிம் ஃபேர் சிறந்த அறிமுக நடிகை’ விருதுக்கு  நாமினேட் ஆனதால், எனக்கான எதிர்பார்ப்பு பாலிவுட்ல அதிகமா இருந்துச்சு. முதல் படத்துக்கு அப்புறமா தொடர்ந்து மூன்று வருடங்கள் கதை கேட்கிறதுலயே செலவழிச்சேன்.  2011-க்கு அப்புறமா கமர்ஷியல் படங்கள்தான் அதிகமா வந்துச்சு. அந்தப் படங்கள் எல்லாம் ஆடியன்ஸ் மத்தியில பெருசா பேசப்படலை. 2014-ல் பரினீதி சோப்ராவோட சேர்ந்து நடிச்ச ‘ஹசி தோ பசி’ மூலமா என்னோட இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாச்சு. பத்து வருஷம் நடிச்சேன்னு சொல்றதைவிட, சாதிக்க வேண்டியது இன்னும் அதிகமா இருக்குன்னுதான் சொல்லணும். வித்யா பாலன் மாதிரி ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் அதிகமாப் பண்ணணும்.

p70a_1523350903.jpg

நான் நடனத்துல பட்டப்படிப்பு முடிச்சிருக்கேன். 7 வருஷமா கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டிருக்கேன். ‘சார்லி சாப்ளின்-2’ படத்தோட தயாரிப்பாளர் டி. சிவா இந்தப் படத்துல ஒரு பாடல் பாடுறதுக்காக என்னைக் கூப்பிட்டார். என்னை நேர்ல பார்த்ததும் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் சார் ஹீரோயினா நடிக்கச் சொல்லிட்டார். நடிக்கிறது மட்டுமில்லைங்க,  ஒரு பாடலும் பாடியிருக்கேன்.

அடுத்து ‘கமாண்டோ-3’ படத்துல, ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜம்வால்கூட சேர்ந்து நடிக்கிறேன்” என்று தம்ஸ்-அப் காட்டுகிறார் அதா ஷர்மா.


p70e_1523350949.jpg

‘ராஜா ராணி’ படத்தின் கேமியோ கேரக்டர் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். பல்வேறு படங்களில் சிறிய ரோல்களில் நடித்திருந்தாலும், “ ’காலா’ எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். எனது சினிமா கனவின் திறவுகோல்” என்று உற்சாகமாய்ப் பேச ஆரம்பிக்கிறார் சாக்‌ஷி.

p70b_1523350971.jpg

படம்: ஜி.வெங்கட்ராம்

“ஒருநாள் ரஞ்சித் சார் டீம்ல இருந்து போன் வந்துச்சு. கதை என்னன்னு கேட்காமலேயே ஓகே சொல்லிட்டேன். அப்புறம்தான், ‘படத்துல நீங்க ஒரு முக்கியமான கதாபாத்திரம், ஹீரோயின் கேரக்டர் இல்ல’னு சொன்னாங்க. ஆடிஷன்போது ரஞ்சித் சார் ‘உங்களைப் பார்த்தா ஹீரோயின் மெட்டீரியல் மாதிரி இருக்கு. அதனால நீங்க வேண்டாம்’னு சொன்னார். ‘உங்க படத்தில் சின்ன கேரக்டர்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சா போதும்’னு சொன்னேன். அதுக்கப்புறம் நடிக்கிறதுக்கான ஒர்க்-ஷாப்ல என்னையும் கலந்துக்கச் சொன்னார். ரஜினி சார், ஹூமா குரேஷியைத் தவிர்த்து ஈஸ்வரி மேடம், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி சார் எல்லோரும் அந்த ஒர்க்-ஷாப்ல இருந்தாங்க. மொத்தம் 28-நாள் அந்த ஒர்க்-ஷாப் நடந்துச்சு. நாங்க எல்லோரும் ஒரு குடும்பமாவே மாறிட்டோம். ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் போன் பண்ணி போட்டோ ஷூட்டுக்கு வரச் சொன்னாங்க. அங்கதான் ரஜினி சாரை முதல் முறையா பார்த்தேன். நான் சின்ன வயசுல இருந்தே ரஜினி சார் ஃபேன். அவரைப் பார்த்தப்போ எதுவுமே என்னால பேச முடியலை. தூரத்துல நின்னு அவரைப் பார்த்துட்டே இருந்தேன். சரியா ஒரு மாதம் கழிச்சு, நான் இந்தப் படத்துல நடிக்கிறதை கன்ஃபார்ம் பண்ணாங்க.

முதல்நாள் ஷூட்டிங் மும்பையில நடந்துச்சு. சாரைப் பார்த்த உடனேயே அவர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். என்னைப் பார்த்து அவர் பாம்பே பொண்ணுனு நினைச்சுட்டார். நான் சென்னையில் பிறந்து வளர்ந்த கதையை அவர்கிட்ட சொன்னேன். ஆச்சர்யப்பட்டுப் பாராட்டினார்.

என்னோட பிறந்த நாளைக்கூட, ‘காலா’ செட்லதான் கொண்டாடுனோம். ரஜினி சார் கேக் கட் பண்ணி, எனக்கு ஊட்டிவிட்ட அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது.”

இனிப்பாய்ச் சிரிக்கிறார் சாக்‌ஷி.


p70f_1523350983.jpg

சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு ‘டப்ஸ்மாஸ் மிருணாளினி’யைத் தெரியாமல் இருக்காது. இப்போது  ‘நகல்’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

p70c_1523350998.jpg

“2016-ல இன்ஜினீயரிங் முடிச்சுட்டு ரெண்டு மாசம் வீட்ல சும்மா இருந்தேன். அப்போதான் டப்ஸ்மாஷ் பண்ண ஆரம்பிச்சேன். சமூக வலைதளங்களில் வரவேற்பு ஒருபக்கம் கூடிக்கிட்டே இருக்க,  சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சது. அதேசமயம் கேம்பஸ் இன்டர்வியூலயும் செலக்ட் ஆயிருந்தேன். எனக்கு அப்போ இருந்த குழப்பத்துல, என்ன பண்றதுனு தெரியாம வேலையில சேர்ந்துட்டேன். அதுக்கப்புறம், ஒரு வருடம் கழிச்சு ‘நகல்’ படத்துக்கான வாய்ப்பு வந்துச்சு. வேலை பார்க்குற கம்பெனியிலயும் எத்தனை நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. இப்போ ‘நகல்’ படத்துக்கான ஷூட்டிங் முடிந்து, திரும்ப வேலைக்குப் போயிட்டிருக்கேன். ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே படம் முழுக்க ட்ராவல் ஆகுற மாதிரியான த்ரில்லர் கதைதான் ‘நகல்.’ படத்தில் ஹீரோ கிடையாது.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தியாகராஜன் குமாரராஜா சாரிடம் ஒர்க் பண்ணினது நல்ல அனுபவம். ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் மத்தவங்களை வேலை வாங்குறது, படத்தின் கன்டென்ட், ஷூட் பண்ற விதம் என எல்லாமே தனித்துவமானதா இருக்கும். இன்னும் நிறைய படம் நடிக்கணும், வளரணும், உயரணும்! ”

நம்பிக்கையோடு சிரிக்கிறார் மிருணாளினி.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அடுத்த கதை எப்ப வரும் ரியா? யூ-டியூபில் கதை சொல்லி அசத்தும் குட்டிப்பெண்! #StoryTeller

 

கதை சொல்லி

பாட்டி சுட்ட வடையைக் காக்கா தூக்கிச் செல்லும் கதையை உங்களால் எத்தனை நிமிடங்கள் சுவையாகச் சொல்ல முடியும்? அதிகபட்சம் 3 நிமிடங்கள். ஆனால், ஒன்றாம் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குச் செல்லும் குட்டிப் பெண் ரியா அந்தக் கதையை எட்டு நிமிடங்களுக்குச் சொல்கிறாள். ஒரு நொடிகூட நாம் வேறு பக்கம் திரும்பி விட முடியாமல், அவ்வளவு சுவாரஸ்யமாக, அவளே உருவாக்கிய புதிய திருப்பங்களுடன் அசத்துகிறாள் புதிய கதை சொல்லி ரியா.  ' Rea Svm Stories' எனும் பெயரில் யூ டியூப் சேனல் தொடங்கி, தனது குட்டிக்குட்டிக் கதைகளை ஷேர் செய்திருக்கிறாள். 

ஒரு கதையைச் சொல்வது பெரிய விஷயமல்ல. ஆனால், பார்வையாளர்களை அக்கதையைக் கேட்கும் மனநிலைக்குத் தயார் செய்வது ரொம்பவே முக்கியம். ரியா தனது வீடியோக்களில் அதைத்தான் முதலில் செய்கிறாள். 

`என்ன.... எல்லோரும் கதை கேட்க வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க போல... சரி..சரி. கதை சொல்லட்டா.... " என விழிகளை அகலத்திறந்துகொண்டே கேட்பது அவ்வளவு அழகு. அதன்பின், `ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தார்களாம்....' எனத் தொடங்கி, 'ஆனா இந்தக் கதை... காக்கா வடையைத் தூக்கிட்டு போன கதைன்னு நினைச்சிடாதீங்கன்னு..." என்கிறார். நாமும் புதிய கதையோ என நினைத்துக்கேட்டால், காக்கா வடையைத் தூக்கிட்டு போன கதையைத்தான் சொல்கிறாள். ஆனால், அதில் ஏராளமான மாற்றங்கள். முதல் மாற்றமே காக்காவால் பாட்டியை ஏமாற்றி வடையைத் தூக்க முடியவில்லை. நரியின் துணையோடு பாட்டிக்கு உதவி செய்துதான் வடையைப் பெற்றுக்கொள்கிறது. சரி அவ்வளவுதான் என நினைத்தால், கதையை நீட்டுகிறாள் ரியா. பாட்டியோட கடையில் காக்காவும் நரியும் வேலைக்குச் சேர்கின்றன. காக்காவின் வேலை என்னவென்றால், பாட்டி வடையைச் சுட்டு வைத்து நேரமானால் ஆறிவிடும் அல்லவா.... அதனால், காக்கா கடையைச் சுற்றி பறக்க வேண்டும். வடை வாங்க யாரேனும் வருவதுபோல இருந்தால் பறந்து வந்து பாட்டியிடம் சொல்லிவிட வேண்டும். பாட்டி உடனே வடையைச் சுட்டு, வாடிக்கையாளருக்குச் சுடச் சுடக் கொடுப்பார். நரிக்குக் கொடுத்திருக்கும் வேலையோ ரொம்ப சுவாரஸ்யமானது. அதை நீங்கள் வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

 

 

ரியா கதை சொல்லும் விதம் நமக்கு அவரை ரொம்பவே பிடிக்க வைத்துவிடுகிறது. கதை இப்போது முடிந்துவிடும் என நினைத்தால் நீட்டிக்கொண்டே செல்வது, கதையின் போக்கிலிருந்து வேறு பக்கம் சென்றுவிடாமல் நேர்த்தியாகச் சொல்வது இடையிடையே எச்சில் விழுங்குவதற்கு இடைவெளிவிடும் அழகு.... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். சென்னையில் வசிக்கும் ரியாவிடம் பேசுவதற்கு என அவரைத் தொடர்புகொண்டால், அவரின் அம்மா ராதா பேசினார். நேரில் வந்தால்தான் ரியா பேசுவாள்; என்று சொல்லிவாறே பேசுகிறார் ராதா. 

கதை சொல்லி

"தினமும் தூங்கும் கதைகள் கேட்பது அவளது வழக்கம். ஒரு நாளைக்கு மூன்று கதைகள் எனக் கணக்கு வைத்திருக்கிறாள். எனக்கும் சில கதைகள்தான் தெரியும். சொன்ன கதைகளையே திரும்ப திரும்பச் சொல்வது எனக்கே அலுப்பாக இருந்தது. அதனால், சிறுவர்களுக்கான கதை புத்தகங்களைத் தேடி படித்தேன். அந்தக் கதைகளை கொஞ்சம் மாற்றிச் சொன்னது அவளுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. 

ஒருநாள், என்னுடைய மொபைலில் செல்ஃபி வீடியோவில் ரியாவே கதை ஒன்றைச் சொல்லி பதிவு செய்திருந்தாள். வீட்டில் உள்ள எல்லோருக்கும் அந்த வீடியோ பிடித்துவிட்டது. அதனால் அதை யூ டியூபில் பதிவேற்றினேன். அதைப் பார்த்ததும் என் உறவினர்கள், ஆபிஸில் பணிபுரியும் நண்பர்கள் என எல்லோரும் பாராட்டினார்கள். அந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த வீடியோக்களைப் பதிந்துவருகிறேன். 

கதை சொல்லி

இப்போது புதிய அப்பார்ட்மெண்டில் குடிவந்துள்ளோம். இங்கும் ரியா கதை சொல்லும் வீடியோ பற்றிக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். 'அடுத்த கதை எப்ப ரியா?' என்பதைத் தினமும் நான்கைந்து முறையாவது அவளைப் பார்த்து கேட்டுவிடுகிறார்கள். அவளும் ஆர்வமாக இருக்கிறாள். தமிழில் ஆர்வமாக கதைகளைப் படிக்கிறாள். அதனால் இன்னும் சூப்பரான கதைகள் சொல்வாள் என நானும் எதிர்பார்க்கிறேன்" என்றார். 

ரியாவின் அம்மா ராதா வங்கிப் பணியிலும் அப்பா செந்தில் வேல்முருகன் தனியார் நிறுவனத்திலும் வேலைபார்க்கிறார்கள். ரியாவின் மூன்று வயது தம்பி கிருஷ், அவனும் கதைகள் கேட்க ஆர்வமாக இருக்கிறாராம். ஆக, ரியா வீட்டில் இன்னொரு கதை சொல்லியும் தயாராகி வருகிறார்.

ரியாவின் கதை பயணம் இன்னும் பலரை இணைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லட்டும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘துணிச்சலே இனிது; அதுவே சிறப்பு’
 

image_17cd0b2568.jpgபயத்துடன் மனம் இசைந்து உறவுகொள்வதைப் போல, இம்சை வேறில்லை. இதனுடன் ஜீவிப்பவர்கள் இதன் சொற்படியே இயங்குகின்றனர். போராடத் திராணியற்ற நிலையை அச்சம் உருவாக்கி விடுகின்றது. 

எனவே, அச்சம் மாந்தர்களுக்கு எதிரி; உறவு அல்ல. எனினும் அறிவு பூர்வமாக உணர்ந்தவன், இதை எப்படிக் கையாள்வது என்பதை அறிந்து கொள்கிறான். 

துணிச்சல் மிகுந்தவன் எனும் இறுமாப்புடன் எதையும் செய்துவிட முடியாது. எதையும் சிந்தித்துச் செய்வது அச்சத்தினால் அல்ல; முன்யோசனையால்த்தான் என்பதை அறிக. 

எச்சரிக்கையுடன் இருப்பது என்பதற்காக, பெறுமதியற்ற சின்னக் காரியத்துக்கும் பதட்டத்துடன் நடப்பது, கேலிக்குரிய காரியம் அல்லவா? 

சின்னக் குழந்தைகள் எந்தவிதமான பதற்றமும் இன்றி, நடைபயில்கின்றன. 

ஆனால், சதா மனத்தைக் கலைத்து வாழ்வது, தன்னையே தான் இழப்பது போலாகும். துணிச்சலே இனிது; அதுவே சிறப்பு.

  • தொடங்கியவர்

காமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள்: ஏப்.13- 1954

 
அ-அ+

காமராஜர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்.

 
 
 
 
காமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள்: ஏப்.13- 1954
 
காமராஜர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்.

இவர் இறந்த பிறகு 1976-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

 

 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930

 
அ-அ+

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அருணாச்சலனார்- விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

 
 
 
 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930
 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார்- விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவிபாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உண்டு.

பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுக்கு குமரவேல் என்ற குழந்தை பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார்.

இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

நம் பெரும்பாலான கனவுகளை நாம் மறந்துவிடுவது எதனால்... ஓர் எளிய விளக்கம்! #Dreams

 
 

னவுகள். மாய வலைகள் விரித்து, நாம் அதை உண்மை என்று நம்பும் தருணத்தில், நம் ஆழ் மனதை எழச் செய்து, இது நிஜமல்ல, என்று நம்மைக் கிண்டல் செய்யும். அப்போது, கண்ட கனவின் தன்மையைப் பொருத்து அதை மகிழ்ச்சியுடனோ, வருத்தத்துடனோ ஏற்றுக் கொள்வோம். ஆனால், நாம் காணும் கனவுகள் அனைத்தும் நமக்கு நினைவில் இருக்கிறதா? பயமூட்டும் கனவுகள், நல்ல உணர்வுகளைக் கொடுக்கும் கனவுகள் மட்டும் நமக்கு நினைவில் இருக்கும். ஆனால், அதுவும் முழுமையாக நினைவில் இருக்காது. அதன் மையக்கரு மட்டும் வெளியே சொல்லும் அளவுக்கு மனதில் பதிந்திருக்கும். 

கனவு

மருத்துவ அறிவியலில் கனவுகள் குறித்த ஆராய்ச்சிகள் மிகவும் குறைவானவை. இன்றும் சிக்மண்ட் ஃபிராய்ட் (Sigmund Freud) அவர்களின் ஆராய்ச்சிகளைத்தான் நாம் மேற்கோள் காட்டுகிறோம். அவரின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளிவந்த 'The Interpretation of Dreams' புத்தகம்தான் கனவுகள் பற்றி நம்மிடம் இருக்கும் தகவல் களஞ்சியம். ``கனவுகள் ஏன் ஏற்படுகின்றன? இந்தக் கனவுக்கு என்ன அர்த்தம்?" போன்ற கேள்விகளுக்கு இன்று உளவியல் ரீதியாக நிறைய பதில்களை இணையத்தில் பெற்றுவிட முடியும். அந்த உளவியலுக்குள் சென்று குழப்பிக்கொள்ளாமல் கனவுகள் குறித்த ஒரு கேள்விக்கு ஓர் எளிய விடை காண்போமா? அந்தக் கேள்வி...

நம் பெரும்பாலான கனவுகளை நாம் ஏன் மறக்கிறோம்?

இதற்கு முதலில் கனவுகளின் தன்மை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். நிஜ வாழ்வில் ஒரு தெருவில் நாம் இறங்கி நடக்கும்போது, ஏற்கெனவே அதில் இருக்கும் விஷயங்களை நம் மூளை உள்வாங்கி, இது இந்தப் பொருள், அது அந்த இடம், இவர் இப்படியிருக்கும் மனிதர் என்று குறித்துக்கொள்ளும். நிஜ வாழ்வில் இதைச் செய்வது மிகச் சுலபம். ஆனால், கனவுகள் விநோதமானவை. காரணம், அங்கே தெரு என்ற ஒன்றே நீங்கள்தான், அதாவது உங்கள் மூளைதான் கட்டமைக்கிறது. நீங்கள் அந்தத் தெருவில் இறங்கி நடக்க நடக்க, அதிலிருக்கும் விஷயங்களை உணர உணர, திரைக்கு அப்பாலிருந்து அந்தத் தெருவை உங்கள் மூளையே உங்களுக்குத் தெரியாமல் உருவாக்கிக் கொண்டிருக்கும். அதாவது, உருவாக்குதலுக்கும், உணர்தலுக்கும் இடையில் உங்களை நிறுத்தி அழகு பார்ப்பதுதான் நீங்கள் காணும் கனவின் வேலையே. இதைத்தான் ஆங்கிலத்தில் "We create and perceive our dreams simultaneously" என்கிறார்கள். இதுகுறித்த விளக்கம், கிறிஸ்டோபர் நோலன் அவர்களின் கனவுப் படமான 'Inception'-லும் இடம் பெற்றிருக்கும்.

கட்டுப்பாடற்ற உலகம்

கண்ட கனவுகளை மறந்துவிட்டோம் என்று உணர்வது வெறுப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. "அது என்ன கனவு?" என்று யோசித்து யோசித்து எண்ணக்குலைவும் ஏமாற்றமும் ஏற்பட்டுப் பாதி நாளை அதில் ஒட்டி விடுவோம். ஒரு சிறிய கனவுக்காக இந்த அளவுக்கு நாம் மன வருத்தம் கொள்வதற்கு காரணம், நாம் அதைக் கனவு என்று பார்ப்பதே இல்லை. நேற்று இரவு நீங்கள் யோசித்த ஒரு விஷயம் அல்லது செய்த ஒரு செயல் உங்களுக்கு மறந்து போனால், எப்படி ஒரு ஏமாற்றம் ஏற்படுமோ, அதற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல, இந்தக் கனவுகளால் வரும் ஏமாற்றம். சுருக்கமாகச் சொன்னால், இரவு மது அருந்திவிட்டு, காலையில் ஹேங்ஓவரின்போது யோசித்து யோசித்து தலைவலியை தருவித்துக் கொள்வது போலத்தான்.

மனிதனின் சராசரி வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு உறக்கத்திலேயே கழிந்து விடுகிறது. இந்த உறக்கம் என்ற செயலில், நம் உடல் பல்வேறு உறக்க நிலைகளைக் கடக்கிறது. இதில் 25 சதவிகிதம் கனவுகள் உருவாவது வேகக்கண்ணசைவு உறக்கம் எனப்படும் Rapid Eye Movement (REM) தருணத்தில்தான். இங்கே உங்கள் கண் இமைகள் மூடியிருக்கும். நீங்கள் உறக்கத்தில் கனவுகளை கண்டுகொண்டிருப்பீர்கள். அதற்கு ஏற்றவாறு உங்கள் கருவிழிகளும் வேகமாக அசைந்து கொண்டிருக்கும். கனவில் என்ன நடந்தாலும் உங்கள் உடலால் ஒன்றும் செய்ய முடியாது. அது உங்கள் கனவுகளில் நடக்கும் செயல்களுக்கு மதிப்பளிக்காது. அதாவது உங்களைக் கனவில் நாய் ஒன்று துரத்துகிறது என்றால் அதற்கு உங்கள் படுக்கையின் மேலுள்ள கால்கள் எதுவும் செய்யாது. இது ஒரு வகையில் நம் பாதுகாப்புக்காகத்தான். கனவில் நடக்கும் சம்பவங்களுக்கு எல்லாம் நம் உடல் பதிலளிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்தால், அது நம்மை ஆபத்தில்தான் கொண்டுபோய் நிறுத்தும். இதைத்தான் தூக்கத்தில் நடப்பவர்கள் செய்கிறார்கள். அதனால்தான் அதை ஒரு வியாதியாக, ஒரு மனப்பிரச்னையாக கணக்கில் கொள்கிறார்கள்.

விந்தை உலகம்

சரி, 25 சதவிகித கனவுகள்தானே இந்த REM தூக்கத்தில் ஏற்படுகிறது. அப்போது மீதி கனவுகள் எப்போது நிகழ்கின்றன? REM எனப்படும் வேகக்கண்ணசைவு உறக்கத்தின் அடுத்த நிலை கண் அயர்ந்த உறக்க நிலை எனப்படும் Non-Rapid Eye Movement Phase. இது மிகவும் ஆழ்ந்த அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான உறக்கம். சில சமயம் நம் உடல் REM தூக்கத்துக்குச் செல்லாமலே இந்த ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றுவிடும். மிகவும் கடினமாக உழைத்த நாள்களில் இது சாதாரணமாக நிகழும். எது எப்படியோ, இதிலும் கனவுகள் ஏற்படும். இதிலும் சரி, நம் REM தூக்கத்தில் உண்டாகும் கனவுகளும் சரி, நமக்கு மறந்து போவது ஒரு சாதாரண விஷயம்தான்.

ஒரு விஷயத்தை நாம் மறக்கிறோம் என்றால், அதற்கு ஒரேயொரு விளக்கம் மட்டுமே இருக்கக்கூடும். அந்த விஷயத்தை நம் நினைவகம் பதிவு செய்துவிட்டு, பின்பு ஏதோ ஒரு காரணத்துக்காக இது வேண்டாம் என அழித்துவிட்டிருக்கும். அல்லது உண்மையாகச் சொல்லப் போனால், இந்த விஷயம் வேண்டாம் என்று உங்கள் மனதின் ஓர் அறையில் பூட்டி வைத்துவிட்டு, சாவியையும் தொலைத்துவிடும். ஆம், நாம் எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு சீக்கிரம் மறப்பதில்லை. தேட முடியாத ஓர் இடத்தில் வைத்து விடுகிறோம் அவ்வளவே. காரணம், அது நமக்கு இப்போது தேவையில்லை என்று உங்கள் மூளை கருதுவதுதான். அதை நீங்கள் மீண்டும் நினைவுகூர பல்வேறு பயிற்சிகள் இருக்கின்றன. இப்போது பிரச்னை அதுவல்ல. இது அவசியமற்றது என்று நம் மூளை பூட்டி வைக்கும் கனவுகள் நமக்குப் பயன் தராதவை என்று நம் மூளை நினைக்கிறது.

மாறும் இயற்பியல் விதிகள்

இந்தச் செயல் கனவு என்றல்ல, நிஜ வாழ்விலும் நடக்கும். உதாரணமாக, இன்று காலை நீங்கள் பல் துலக்கும்போது எந்த விஷயத்தைக் குறித்து நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தீர்கள்? இன்று யோசித்ததை வேண்டுமானால், எப்படியோ சிரமப்பட்டு சொல்லி விடலாம். நேற்று யோசித்தது? ஒரு வாரத்துக்கு முன்பு யோசித்து? சென்ற மாதம் யோசித்தது? போன பொங்கல் அன்று யோசித்தது? எல்லாம் நீங்கள் யோசித்ததுதானே? உங்கள் நினைவகத்தில் பதிந்துபோன ஒரு விஷயம்தானே? தேடி எடுக்க முயற்சி செய்யுங்களேன்! கடினம்தானே? இதே போலத்தான் கனவுகள் குறித்த நினைவலைகளும். 

கனவுகள் என்பது பொதுவாகவே ஒரு படைப்பு போலத்தான். நாள் முழுக்க நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் செலுத்தி, கவனம் செலுத்தி சோர்வடைந்த உங்கள் மூளை, கனவுகளின்போதுதான் தன் இஷ்டத்துக்குச் சுதந்திரமாக உலா வருகிறது. இந்தக் கனவு உலகத்தில் இயற்பியல் விதிகள் கிடையாது, எந்தச் சட்டதிட்டமும் கிடையாது, கட்டுப்பாடுகளும் கிடையாது. இது ஒரு ஃபேண்டஸி உலகம் போலத்தான். கிட்டத்தட்ட, உங்கள் மூளைக்கு இது ஒரு போதை போலத்தான். இந்தக் கனவுலகில் உங்கள் மனதைப் பாதிக்கும் வகையில் அதிர்ச்சியான, துக்கமான, சந்தோஷமான அல்லது மிக முக்கியமான நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே அதை உங்கள் மூளை நினைவில் வைத்துக்கொள்ளும். ஒரு நிகழ்வு அல்லது ஓர் உணர்வு, அது நிஜ வாழ்வில் தோன்றியதோ, கனவில் தோன்றியதோ, அது உங்கள் நினைவகத்தில் சென்று அமர முன்நெற்றிப் புறணி அல்லது முன்நுதல் புறணியின் (Prefrontal Cortex) பங்கு மிக முக்கியமானது.

Dorsolateral Prefrontal Cortex (dlPFC)

இந்த முன்நுதல் புறணியின் ஒரு பகுதியான Dorsolateral Prefrontal Cortex (dlPFC) தான் நம் உணரும் விஷயங்களை நம் நினைவகத்தில் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கிறது. Dorso என்றால் உச்சிப்பகுதி, Lateral என்றால் பக்கவாட்டுப் பகுதி. முன்நுதல் புறணியின் இந்தப் பகுதிகள்தான் நம் நினைவகத்துக்குப் பொறுப்பு. பெரும்பாலான கனவுகளின்போது, இந்தப் பகுதியும் செயலிழந்து இருக்கும். அதனால்தான் நமக்கு நாம் காணும் எல்லாக் கனவுகளும் நினைவில் நிற்பது இல்லை. இந்தப் பகுதியை செயல்பட வைக்கத் தூண்டுகோலாக இருப்பவை நம் உணர்ச்சிகள். நீங்கள் காணும் கனவுகள் சோகம், துக்கம், சந்தோஷம், பயம் போன்ற உணர்வுகளைக் கடத்துமாயின், இந்தக் கனவு முக்கியமானது என்று உணர்ந்துகொண்டு இந்த Dorsolateral Prefrontal Cortex பகுதி தன்னை செயல்பட வைத்துக்கொள்கிறது. அந்தக் குறிப்பிட்ட கனவையும் பதிந்து வைத்துக்கொள்கிறது. மிகவும் ஆபத்தான கனவு எனும்போது உங்களைப் பதற்றத்துடன் உறக்கத்தில் இருந்து எழ வைக்கிறது. உங்களுக்கு அந்தப் பதிந்த கனவும் நினைவில் இருக்கிறது. எந்த உணர்வையும் தூண்டாத கனவுகள் வேறொரு சிறையில் பூட்டி வைக்கப்பட்டு, திறக்க முற்பட்டும் திறக்காமல், பின்பு ஒரு காலத்தில் அழிந்தே போய் விடுகிறது.

நிழல் உலகம்

சரி, அப்படிப் பார்த்தால் நமக்கு ஒரு சில நாள்களில் தேவையற்ற கனவுகளும் நினைவில் இருக்கின்றனவே, அது எப்படி? மிகச் சுலபம். அப்படிப்பட்ட கனவுகளை நீங்கள் கண்ட தினத்தன்று உறக்கத்தில் இருந்து ஒரு முறையோ, பல முறையோ எழுந்திருப்பீர்கள். எழுந்தவுடன் இப்போது நாம் என்ன யோசித்தோம் என்பதே உங்கள் மனதில் ஓடும் கேள்வியாக இருக்கும். இப்போது நீங்கள் விழிப்பு நிலையில் இருப்பதால் உங்கள் Dorsolateral Prefrontal Cortex பகுதியும் நீங்கள் எழும் முன்னரே தன் உறக்கத்தைவிட்டு செயல்பாட்டுக்கு வந்திருக்கும். அப்போது நீங்கள் கண்ட கனவும் உங்கள் நினைவகத்தில் பதிந்திருக்கும். நம் உடல் எப்படிச் செயல்படுகிறது என்பது விந்தையிலும் விந்தை அல்லவா?

உங்களுக்குத் தோன்றிய மறக்க முடியாத கனவுகளை கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்களேன்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

வெங்கட் பிரபுவின் `பார்ட்டி’, விஷ்ணு விஷாலோடு `சிலுக்குவார்பட்டி சிங்கம்’, செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, மற்றும் திரு இயக்கத்தில் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என ரிலீஸுக்குக் காத்திருக்கும் படங்களில் க்ளாமர், ஆக்ட்டிங் என வெரைட்டி காட்டி நடித்திருக்கிறாராம் ரெஜினா காஸான்ட்ரா. ஆந்திர ரசிகர்களைக் கவர்ச்சி மழையில் நனைய வைத்ததுபோல, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில்  தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வருகிறார். படத்தின் தாறுமாறு ஸ்டில்கள் பார்த்துத் தமிழ் இண்டஸ்ட்ரியே `கேடி பில்லா கில்லாடி ரங்கா பாப்பாவா இது?’ என ஆச்சர்யப்பட்டுக் கிடக்கிறது. கேடி கில்லாடி லேடி!

p46a_1523274388.jpg


p46b_1523274411.jpg

ஹாட்ரிக் உற்சாகத்தில் இருக்கிறார் மடோனா செபாஸ்டியன். விஜய் சேதுபதியோடு ‘காதலும் கடந்து போகும்’ படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் ‘கவண்’ படத்திலும் ஜோடி சேர்ந்தார். தற்போது கோகுல் இயக்கிவரும் `ஜூங்கா’ படத்தில், மூன்றாவது முறையாக இணைகிறார் மடோனா. வெளிநாட்டில் வசிக்கும் டானாக நடிக்கும் விஜய் சேதுபதியின் குரூப்பில் குட்டி லேடி டானாக நடித்திருக்கிறாராம் மடோனா.  ஹாட்ரிக் அழகி!


p46c_1523274436.jpg

லையாள தேசத்திலிருந்து  ஒரு சிறு கண்ணசைவில்  உலக அளவில் ட்ரெண்டாகி வைரலான ப்ரியா வாரியர் தமிழ்ப்படத்தில் நடிக்கவிருக்கிறார். நலன் குமாரசாமியின் அடுத்த ரொமாண்டிக்  காமெடி கேங்ஸ்டர் படத்தில் ப்ரியா வாரியர்தான் ஹீரோயின். ஹீரோ அநேகமாகப் புதுமுகமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு பீட்சா லவ்!


p46d_1523274452.jpg

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டி.வி நிகழ்ச்சி ஒன்றில், ‘ஜுராஸிக் பார்க்’ படத்தை ஆரம்பத்தில் தான்தான் இயக்கவிருந்ததாகவும் கடைசி நேரத்தில் அது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வசம் சென்றதாகவும் ஒரு தகவலைப் பகிர்ந்திருக்கிறார். `நல்லவேளை அந்தப் படத்தை நான் இயக்கவில்லை. நான் இயக்கியிருந்தால் ஜூராஸிக் பார்க் மிகப்பெரிய ஃப்ளாப்பாகியிருக்கும்!’ என்றும் சொன்னதுதான் ஹைலைட். ஏலியன் லெவல் மேன்!


p46e_1523274466.jpg

80-களில் இந்திய சினிமாவில் ஸ்டைலாக சிகரெட் பிடித்து ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது ரஜினிகாந்த், சத்ருகன் சின்ஹா, அம்பரீஷ் ஆகிய மூவரும்தான். மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். வயது, உடல் நிலை காரணங்களைக் காட்டி ரஜினியும் சத்ருகனும் புகைப்பழக்கத்துக்கு முழுக்குப் போட்டுவிட, அம்பரீஷ் மட்டும் இன்னும் அடம்`பிடித்து’ வருகிறார். அம்பரீஷையும் சிகெரெட்டை விட்டுவிட வெளிப்படையாகக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் ரஜினியும் சின்ஹாவும்! நகுதற்பொருட்டன்று!


p46f_1523274479.jpg

மானை வேட்டையாடிய வழக்கில் தண்டனை பெற்று ஜோத்பூர் மத்திய சிறையிலிருக்கும் சல்மான்கானுக்குப் பத்துக்குப் பத்து சைஸில் தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது. `பாலிவுட்டின் டைகர்’ என்றழைக்கப்படும் சல்மானுக்கு 106 என்ற கைதி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. செக்ஸ் வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையிலிருக்கும் சாமியார் அஷராம் பாபுவின் அறைக்கும் இவரின் அறைக்கும் ஒரு சுவர் மட்டுமே நடுவில் உள்ளது. நீ விதைத்த வினையெல்லாம்


p46g_1523274492.jpg

ஜெனிஃபர் லோபஸ் தன்னை பெர்ஃப்யூம் பைத்தியம் என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொள்வார். பத்து வயதில் துவங்கி, தான் சேகரித்த சென்ட் பாட்டில்களைப் பொக்கிஷமாய் வைத்திருந்தவருக்கு, புது ஐடியா பிறக்க, சொந்தமாய் பெர்ஃப்யூம் பிஸினசில் இறங்கினார். 2001-ல் சிறிய அளவில் ஆரம்பித்த அவரின் ‘ஜே லோ’ பெர்ஃப்யூம் கம்பெனி, சமீபத்தில் விற்பனையில் நம்பர் 1 ஆகிச் சாதனை படைத்துள்ளது.  ‘நடிகையாக விருது வாங்கியதைவிட பிசினஸ் உமனாக நம்பர் 1 இடத்தைப் பிடித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று சொல்லியிருக்கிறார். வாசமுள்ள மலரிது!


p46h_1523274506.jpg

பாலிவுட் என்றாலே `பயோபிக்’ தான். தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையைப் படமாக்க செம போட்டாபோட்டி பாலிவுட்டில். ராஜ்குமார் ஹிரானி, நீரஜ் பாண்டே, ஜோயா அக்தர், அஷுதோஷ் கவாரிகர் என ஹிட் இயக்குநர்கள் எல்லோருமே இதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். யார் ஆக்‌ஷன் கட் சொல்லப்போகிறார்கள் என விரைவில் தெரிந்து விடும். மயில்போல பொண்ணு ஒண்ணு...!


p46j_1523274520.jpg

சையமைப்பாளர் அனிருத், ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை விரைவில் நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சிஜுன் 16 மற்றும் 17-ம் தேதியில் லண்டன் மற்றும் பாரீஸில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கான இசைக்கோர்ப்புக்கான வேலைகளையும் லண்டன் மற்றும் பாரீஸில் நடத்த ஏற்பாடுகள் செய்துவருகிறார் அனிருத். இசை, அதை அமை!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

பொம்மை தேவதைகள்!

 

Doll-5
Doll%20-4
11chsujdolls1jpg
Doll%20-2
Doll%20-3
Doll-5
Doll%20-4

லுக் தெப் என்றால் குழந்தைத் தேவதைகள் என்று அர்த்தம். தாய்லாந்து வீடுகளில் இந்தப் பொம்மைகளை வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. ஒரு நிஜ குழந்தையின் அளவிலேயே செய்யப்படும் இந்தப் பொம்மைகளுக்கு உணவு படைக்கிறார்கள்; புத்தாடை அணிவிக்கிறார்கள்; நகைகளால் அலங்கரிக்கிறார்கள். தொட்டிலில் இட்டு, தூங்க வைக்கிறார்கள். இவை பிளாஸ்டிக் பொம்மைகள் என்றாலும் உயிருள்ளவை என்று நம்பப்படுகிறது.

11chsujlukthepjpg

2016-ம் ஆண்டில் தாய் ஸ்மைல் விமான நிறுவனம் ‘லுக் தெப்’ பொம்மைகளுக்குத் தங்கள் வாடிக்கையாளர்கள் உணவும் இருக்கையும் தரலாம் என்று விளம்பரம் செய்தது. அப்போதுதான் ‘லுக் தெப்’ பொம்மைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றன. விமானப் பணியாளர்கள் ‘லுக் தெப்’ பொம்மைகளை மனிதர்களைப் போலவே நடத்த வேண்டும் என்று அறிவிக்கையும் அனுப்பப்பட்டது. தாய்லாந்தில் பிரத்யேகமான ’லுக் தெப்’ மெனு அட்டைகளைக்கொண்டு உணவு தரும் உணவகங்களும் உள்ளன.

லுக் தெப் பொம்மைகளை நன்கு பார்த்துக்கொண்டால், அவை அவர்களையும் நன்கு பார்த்துக்கொள்ளும் என்பது நம்பிக்கை. சிலர் லுக் தெப் பொம்மைகளைத் தங்கள் நிறுவனங்கள், கடைகளிலும் வைத்திருக்கிறார்கள். ’லுக் தெப்’ பொம்மைகளைப் பராமரிப்பதற்காக ஆட்களையும் நியமிக்கின்றனர்.

குழந்தைகளுக்காக ஏங்கும் அம்மாக்களுக்கு லுக் தெப் பொம்மைகள் ஆறுதலைத் தருவதாக உள்ளன. பொம்மைகளை வாங்கிப் பராமரிக்கும் தாய்மார்களிடம் பொம்மை எவ்வளவு விலை என்று கேட்டால் அவர்கள் கோபப்பட்டு விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது ஓர் உயிர்.

லுக் தெப் பொம்மைகள், சிறிய அளவிலிருந்து ஒரு குழந்தையின் அளவுவரை சந்தையில் கிடைக்கின்றன. உயர் ரக பிளாஸ்டிக்கில், அசலான தலைமுடியுடன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களுடன் கிடைக்கின்றன.

Doll%20-1
 

ஒரு குழந்தை நம்மைப் பார்ப்பது போலவே அச்சு அசலாக இருப்பதுதான் லுக் தெப் பொம்மைகளின் தனிச் சிறப்பு. லுக் தெப் பொம்மைகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் தாய்லாந்திலும் உலக அளவிலும் புழக்கத்தில் உள்ளன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

2hnt4hw.jpg

 

2zfkf82.jpg

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள்: ஏப்ரல் 14, 1912

 

 
 

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.

 
 
 
 
டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள்: ஏப்ரல் 14, 1912
 
ஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.

புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ் டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயார்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது. டைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள் சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் கடலில் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கை அடையவில்லை.

இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40 க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது. ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது. மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.

டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக் காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

ஃபிட்னெஸ்மீது அதீத ஆர்வம் கொண்ட ரகுல் ப்ரீத் சிங் ஒருநாளைக்கு 3 மணிநேரம் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்கிறார். தேசிய அளவிலான கோல்ஃப் போட்டிகளில் பதக்கங்கள் வாங்கியுள்ள ரகுலுக்கு, சாய்னா நேவால் விளையாடும் பேட்மின்டன் போட்டிகளை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று ஆசை. ஆனால், ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதனால், ஆசை நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போகிறதாம்.

p35a_1523266462.jpg


சாய்பாபாவின் தீவிர பக்தையான நிவேதா பெத்துராஜ், ஷூட்டிங் நாள்களில்கூடக் கோயிலுக்குப் போவதை வழக்கமாக வைத்திருக்கிறார். உலகின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது, அவற்றின் நினைவாக ஃபிளைட் டிக்கெட்களைச் சேகரிக்கிறார். கூடிய விரைவில் சொந்தமாக ஸ்கிரிப்ட் எழுதிப் படம் இயக்க வேண்டும் என்பது இவரது எதிர்காலத் திட்டம். அதனால் ஓய்வு கிடைக்கும்போது நிறைய புத்தகங்களைப் படிப்பதையும் தகவல்கள் சேகரிப்பதையும் பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.

p44a_1523273443.jpg

p44b_1523273452.jpg

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்: கேமராவில் கலைவண்ணம்!

 

 
tanjore

 

 
       
 

ஆரம்பம்: சிறுவயது முதலே கோயில்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம். அப்போதிருந்து சற்று வித்தியாசமான கோயில்களை படம் எடுக்கத் தொடங்கினேன். நாளடைவில் ஒளிப்படங்கள் எடுப்பது பேரார்வமாக மாறிவிட்டது.

mylapore

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்.

 

 

tanjoree

தஞ்சாவூர் பெரிய கோயில்.

 

 

temle%201

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்.

temle%202
temle%203

கங்கைகொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம்.

temle%204

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிலைகள்.

temle%205

தூத்துக்குடி நத்தம் வரகுணமங்கை நவதிருப்பதி கோயில்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923

 
அ-அ+

இன்சுலின் ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது. இத்தொடர்கள் டைசல்பைடு பாலங்கள் மூலம் இரண்டு சிஸ்டைன்களுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளன.இன்சுலின் ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது. இத்தொடர்கள் டைசல்பைடு பாலங்கள் மூலம் இரண்டு சிஸ்டைன்களுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளன.

 
 
 
 
இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923
 
இன்சுலின்  ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது. இத்தொடர்கள் டைசல்பைடு பாலங்கள் மூலம் இரண்டு சிஸ்டைன்களுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளன.

இன்சுலின் இரத்தத்தின் சர்க்கரையை மூன்று வழிகளில் குறைக்கிறது. (அ) இது குளுக்கோசை, கிளைக்கோசனாக மாற்றிக் கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்க உதவுகின்றது. (ஆ) திசுக்களில் குளுக்கோசு ஆக்சிகரணம் (oxydation) அடைய உதவுகின்றது. (இ) குளுக்கோசு கொழுப்பாக மாற்றப்பட்டு அடிபோசு திசுக்களில் சேமிக்கப்படுவதற்கு உதவுகின்றது. (ஈ) அமினோ அமிலங்கள் சிதைவுற்று நீர் மற்றும் காபனீரொட்சைட்டு ஆக மாறும் செயலின் வீதத்தை ஒழுங்குபடுத்துகிறது. (உ) மிதமான அளவில், கல்லீரலில் காபோவைதரேட்டு அல்லாத பொருளிலிருந்து குளுக்கோசு உற்பத்தியையும் (குளுக்கோ நியோஜெனிஸிஸ்) சீராகப் பராமரிக்கிறது. ஆகவே, இன்சுலின் இரத்தத்திலுள்ள குளுக்கோசின் அளவை குறைக்கிறது (ஹைபோகிளைசிமியா).

போதுமான அளவு இன்சுலின் சுரக்காவிடில் தசைகள், கல்லீரல் இவற்றால் குளுக்கோஸை, கிளைகோசனாக மாற்ற இயலாது. இதன் விளைவாக இரத்தத்தில் குளுக்கோசு அதிக அளவு சேர்வதால் இரத்தச் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. இந்த மிகைச் சர்க்கரை நிலைக்கு ஹைபர்கிளைசிமியா என்று பெயர். இதன் காரணமாக, அதிக அளவு குளுக்கோசு சிறுநீருடன் வெளியேற்றப்படும். இதுவே நீரிழிவு நோயாகும் (டயாபடீஸ் மெல்லிடஸ்).

நீரிழிவு நோயாளி ஒருவர், அதிக அளவு சிறுநீரை வெளியேற்றுவார், (பாலியூரியா), மேலும் அதிகமாக நீர் அருந்துவர், (பாலிடிப்ஸியா), எப்போதும் பசி ஏற்பட்டு அதிகமாக உணவு உட்கொள்வர் (பாலிபேஜியா). இன்சுலின் அளவு குறையும்போது கொழுப்புச் சிதைவு அதிகரித்து குளுக்கோசாக மாற்றப்படுகிறது. இதனால் இரத்தத்தில் மேலும் குளுக்கோசு அளவு அதிகமாகி, அதன் விளைவாக கீட்டோன் பொருட்கள் சேர்கின்றன. இந்நிலைக்கு கீட்டோஸிஸ் என்று பெயர்.

 

 

சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்- ஏப்.15- 1976

 
அ-அ+

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

 
 
 
 
சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்- ஏப்.15- 1976
 
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது.
 
* 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜான்சன் அமெரிக்காவின் 17-வது அதிபரானார்.
 
* 1892 - ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
 
* 1912 - இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.
 
* 1940 - இரண்டாம் உலகப் போர்: நாசிப் படைகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நார்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
 
* 1943 - கூட்டுப் படைகளின் போர் விமானம் ஒன்றில் இருந்து மினேர்வா தானுந்து தொழிற்சாலை மீது வீசப்பட்ட குண்டு குறி தவறி பெல்ஜியத்தின் மோர்ட்செல் நகர் மீது வீழ்ந்ததில் 936 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் நாசிகளின் பேர்ஜேன்- பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.

* 1986 - லிபியா மீது ஐக்கிய அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது.
 
* 1989 - இங்கிலாந்தின் ஹில்ஸ்பரோ கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர் இறந்தனர்.
 
* 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
 
* 1997 - மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 2002 - ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

`நடிகையர் திலகம்' படத்தின் டீஸர் வெளியீடு..!

 
 

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும்  `நடிகையர் திலகம்' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

நடிகையர் திலகம்

தன் நடிப்பாலும் முகபாவனைகளாலும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து,  `நடிகையர் திலகம்' என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகை சாவித்ரி. சிவாஜி கணேசன் ஒன்பது கதாப்பாத்திரத்தில் நடித்த நவராத்திரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற இவர், தெலுங்கில் 147 படங்களும், தமிழில் 102 படங்களும் நடித்துள்ளார். இப்போது, இவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதில் ஜெமினி கணேசனாக நடிக்கிறார் துல்கர் சல்மான். 

மதுரவாணியாக சமந்தாவும், அலூரி சக்கரபாணியாக பிரகாஷ் ராஜும் நடிக்க, நாக் அஸ்வின் என்பவர் நான்கு மொழியில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். அவ்வப்போது, இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.  `அவங்க பேரு நடிகையர் திலகம்' என சமந்தா பேசும் படி டீஸர் வெளியாகியுள்ளது. அநேகமாக மே மாதம் 9-ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ட்ரைக் காரணமாகப் படம் வெளியாகக் கால தாமதமாகும் எனத் தெரிகிறது. 

 

 

  • தொடங்கியவர்

வயலட் கலர் வந்தாச்சு!

 

 
dress

ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால், தற்போது டிரெண்டிங்கில் என்ன நிறம் பிரபலமாக இருக்கிறதோ அது இளைஞர்கள் மத்தியிலும் பிடித்த நிறமாக வலம் வரும். அந்த வகையில் தற்போது உலகெங்கும் இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்காக உள்ள நிறம் வயலட். இந்த நிறத்தில் உடையை அணிவது முதல் பொருட்களை வாங்கிக்குவிப்பதுவரை வயலட் மோகம் அதிகரித்திருக்கிறது.

 

அப்போ பச்சை, இப்போ வயலட்

nail%20polish
 

அதெல்லாம் சரி, உலகெங்கும் ஒரு நிறம் எப்படி டிரெண்டாகிறது? அதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது பான்டோன் (pantone) என்ற நிறுவனம். இந்த நிறுவனம் புதுமையான வண்ணங்களை அறிமுகப்படுத்துவதற்குப் புகழ்பெற்றது. இந்நிறுவனம் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்துக்கொண்டு பிரத்யேகமாக நிறங்களைத் தேர்வுசெய்து வருகிறது. இவ்வாறு தேர்வுசெய்யப்படும் நிறங்கள் அந்த ஆண்டு ஃபேஷன் உலகிலும் அலங்காரப் பொருட்கள் உற்பத்தியிலும் பிரதிபலிக்கும்.

 

வயலட் மோகம்

கடந்த ஆண்டு பசுமைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தேர்வுசெய்யப்பட்ட பச்சை நிறம் ஃபேஷன் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த ஆண்டுக்கான நிறமாக வயலட்டை பான்டோன் நிறுவனம் தேர்வுசெய்துள்ளது. அண்டவெளியைப் பிரதிபலிப்பதிலும் புதுமையான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதிலும் வயலட் நிறம் முக்கியமானதாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான நிறமாக வயலட் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

hair%20colour
 

அடர் நிறங்களை முந்தைய தலைமுறையினர் தவிர்த்துவந்த நிலையில், இன்றைய தலைமுறை இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அடர் நிறங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டுக்கான நிறமாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளதால் லிப் ஸ்டிக், நெயில் பாலிஷ், சன் கிளாஸ், தொப்பி, ஹேர் கலரிங், காலணிகள், ஆடைகள் என ஃபேஷன் உலகில் வயலட் தற்போது கோலோச்சிக்கொண்டிருக்கிறது.

இவ்வளவு ஏன், இருசக்கர வாகனங்களைக்கூட வயலட் வண்ணத்தில் பார்த்து வாங்கும் அளவுக்கு வயலட் வண்ணத்தின் மீதான மோகம் இளைஞர்கள் மத்தியில் கூடியிருக்கிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

twitter.com/BlackLightOfl: ``ஜெயலலிதாவை ஒருசமயத்தில் எதிர்த்துப் பேசினேன்'' -செல்லூர் ராஜு.

உடனே அலாரம் அடிச்சித் தூக்கத்தைக் கலைச்சுவிட்டிருக்குமே!

twitter.com/Mr_Kirukkan: வருஷம்பூராவும் கெத்தா திரியுற கோலிய, ரெண்டு மாசம் தல கவுந்து சுத்தவிடுறதுக்குன்னே இந்த ஐபிஎல்லைக் கண்டுபிடுச்சிருக்காய்ங்க!

ttwitter.com/m3rcel:

அ.தி.மு.க-வோட அறவழிப் போராட்டம்னா என்னண்ணே?

அதாவது தம்பி, உண்ணாவிரதம் இருக்கிறமாதிரி போவோம்... பாதியில வந்திருவோம். ராஜினாமா பண்ற மாதிரி போவோம்... பாதியில வந்திருவோம்!

நீ சொல்றது அரைவழிப் போராட்டம்.

அதான்...அதான்..!

p112a_1523427045.jpg

p112b_1523427060.jpg

twitter.com/Kannan_Twitz:

நைட்ல துணி துவைக்கிறதுதான் எப்பவுமே பெஸ்ட்!

ஏன்?

அழுக்குத் தெரியாது, சீக்கிரம் வேலை முடிஞ்சுடும்!

twitter.com/CreativeTwitz: என்னப்பா, உண்ணாவிரதப் போராட்டத்துல கூட்டம் எப்டி இருந்துச்சு? மூணு பந்தி முடிஞ்சு நாலாவது பந்தியிலதான் உட்கார இடம் கிடைச்சுதுப்பா!

twitter.com/Thaadikkaran: `இந்த டிரெஸ்ல நீ நல்லா இருக்கேன்'னு சொன்னாப் போதும்,  `வேற டிரெஸ்ஸே இல்லையா?'னு சொல்லும்வரை அந்த டிரெஸ்ஸை உடுத்துவது டிசைன்!

twitter.com/BoopatyMurugesh: கடையடைப்புப் போராட்டம்னு ஹோட்டலையெல்லாம் மூடி மக்களைச் சாப்பிடவிடாம பண்ண ஸ்டாலின் எங்க.., உண்ணாவிரதப் போராட்டத்தில்கூட எல்லோருக்கும் வயிறாரச் சோறு போட்ட சின்ராசு, எடப்பாடி எங்க?

லாலலலாலா...

twitter.com/sultan_Twitz: ``போராட்டங்களால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை" - தமிழிசை # அது சரி, நீங்க காண்டு ஆகுறீங்கல்ல... அது போதும்!

p112c_1523427083.jpg

p112d_1523427093.jpg

twitter.com/Kozhiyaar: ஏன் விவசாயிகள் எந்த வளர்ச்சித் திட்டம் கொண்டுவந்தாலும் எதிர்க்கிறார்கள்?ஏன்னா, எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் சோற்றைத்தான் திங்கணும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்!

twitter.com/abuthahir707: ஞாயிற்றுக்கிழமை மட்டும் வழக்கத்துக்கு மாறாக மொபைலுக்கு சார்ஜ் போட வேண்டியுள்ளது.

twitter.com/Kozhiyaar: உங்களுக்கு ஒரு செயலில் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறதெனில், அதைச் சார்ந்த அனைத்துச் செயல்களுமே தவறானவைதான்!

facebook.com/Mano Red : ஒயின் ஷாப் பக்கத்துல ஃபாஸ்ட் ஃபுட் கடை வெச்சுச் செழிப்பா வாழ்ற மாதிரி, ஃபாஸ்ட் ஃபுட் கடை பக்கத்துல மெடிக்கல் ஷாப் வெச்சுச் செழிப்பா வாழ்றானுக!

p112e_1523427116.jpg

facebook.com/ Viyan Pradheep :  ஸ்டாலின் உடல் எடை கம்மியா இருக்கிறதால் அடிக்கடி தூக்கிட்டுப்போயிடறாங்க. துரைமுருகனைத் தூக்க முடியுமா?

twitter.com/Vinithan_Offl: பேனாவை எழுதிப்பார்த்து வாங்கியவர்களைவிடக் கிறுக்கிப்பார்த்து வாங்கியவர்கள்தான் அதிகம்.

twitter.com/nathanjkamalan: எதையுமே கண்டுக்காமல் இருக்கும்போது மனிதனும் கடவுளாகிறான்!

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: தம்பி எங்க போறீங்க?

 

 
4e16f6043657456mrjpg
4e16f6043657459mrjpg
4e16f6043657454mrjpg
4e16f6043657452mrjpg
4e16f6043657451mrjpg
4e16f6043657453mrjpg
4e16f6043657455mrjpg
4e16f6043657458mrjpg
4e16f6043657459mrjpg

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சார்லி சாப்ளின் பிறந்த தினம்: ஏப். 16- 1889

 
 அ-அ+

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர்

 
 
 
 
சார்லி சாப்ளின் பிறந்த தினம்: ஏப். 16- 1889
 
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பனிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் (Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928ஆம் ஆண்டில் இறந்தார்.

சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903ஆம் ஆண்டில் "ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்" (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது - செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் அக்டோபர் 2, 1912 - அன்று அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார் - இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர்.

சிரியா விடுதலை நாள்: ஏப்ரல் 16- 1946

 
 அ-அ+

சிரியா அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

 
 
 
 
சிரியா விடுதலை நாள்: ஏப்ரல் 16- 1946
 
சிரியா அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த நிகழ்வுகள்:-

1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
1876 - பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.
1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
1912 - ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.
1917 - நாடு கடந்த நிலையில் பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.

1919 - அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.
1925 - பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: செம்படையினர் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.

1947 - ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் துறைமுகத்தில் நிற சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் கொல்லப்பட்டனர்.
1947 - சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.
1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
1972 - நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
2007 - ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.

https://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

எந்தச் சூழ்நிலையிலும் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி? - #MotivationStory

 
 

தன்னம்பிக்கைக் கதை

`புத்திசாலித்தனத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், புத்திசாலிக்குத் தன் எல்லை தெரியும்’ - விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொன்மொழி இது. பணியிடம், தனிப்பட்ட வாழ்க்கை இவற்றில் எதில் பிரச்னை என்றாலும், கொஞ்சமே கொஞ்சூண்டு புத்திசாலித்தனம் இருந்தால் சமாளித்துவிடலாம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எத்தனைபேர் வந்தாலும், எப்பேர்ப்பட்ட இடராக இருந்தாலும் புத்திசாலித்தனம் கைகொடுக்கும்; அதோடு நம் மரியாதையையும் கௌரவத்தையும் அது காப்பாற்றும்; தலைகுனிவை ஏற்படுத்தாமல், தன்னம்பிக்கையோடு வீறுநடைபோட்டு நடக்கவைக்கும். புத்திசாலித்தனத்தின், அறிவுகூர்மையின் மேன்மையைப் பறைசாற்றும் கதை இது. 

வாத்து வேட்டை

அவர் இங்கிலாந்தின் பிரபல வழக்குரைஞர்களில் ஒருவர். ஓய்வாக இருக்கிற நேரங்களில் இங்கிலாந்து மக்களில் சிலருக்கு ஒரு பழக்கமுண்டு... வேட்டைக்குப் போவது. அந்த வழக்கறிஞர் அப்படி ஓர் ஓய்வுக் காலத்தில் வேட்டைக்குப் புறப்பட்டார்... வாத்து வேட்டை. அன்றைக்கு அவர் போனது ஸ்காட்லாந்து பகுதிக்கு. அவருக்கு அது கொஞ்சம் மோசமான நாள். காலை ஆறு மணியிலிருந்து அலைந்து திரிந்தும் ஒரு வாத்துக்கூட அவர் கண்ணில்படவில்லை. வெயில் சுட்டெரிக்கும் பதினோரு மணிக்குத்தான் ஒரு வாத்து கண்ணில்பட்டது. துப்பாக்கியால் அதை சுட்டு வீழ்த்தினார் வழக்கறிஞர். 

துப்பாக்கிச் சூட்டை வாங்கிய வாத்து ஒரு வயல்வெளியிலிருந்த வேலியைத் தாண்டி அந்தப் பக்கம் போய் விழுந்தது. வழக்கறிஞர் ஒரு கணம்தான் யோசித்தார். பிறகு தயங்கவே இல்லை. வேலியைத் தாண்டி குதிப்பதற்கு முயற்சி செய்தார். அப்போது வேலிக்கு அந்தப் பக்கமிருந்து ஒரு குரல் கேட்டது. 

``நில்லுங்க... யார் நீங்க...இங்கே என்ன செய்றீங்க?’’ 

வழக்கறிஞர் குரல் வந்த திசையைப் பார்த்தார். ஒரு முதிய விவசாயி, தன் ட்ராக்டரில் அமர்ந்தபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

``நான் ஒரு வாத்தை சுட்டேன். அது இந்த வயல்ல விழுந்துடுச்சு. அதை எடுத்துட்டுப் போறதுக்காக வந்தேன்...’’ 

அந்த முதியவர் சொன்னார்... ``இது என் நிலம்... இங்கே அத்துமீறி யாரும் நுழையக் கூடாது.’’ 

``பெரியவரே... நான் யார்னு தெரியாமப் பேசுறீங்க... நான் யார் தெரியுமா? இங்கிலாந்துலயே புகழ்பெற்ற லாயர்கள்ல ஒருத்தன். நீங்க மட்டும் அந்த வாத்தை எடுக்க விடலைனு வைங்க... அப்புறம் நடக்குறதே வேற. கோர்ட்ல கேஸ் போட்டு உங்களை உண்டு,இல்லைனு பண்ணிடுவேன். அதுக்கப்புறம் நீங்க நடுத்தெருவுலதான் நிக்கணும்...’’ 

முதியவர் இதைக் கேட்டு லேசான புன்முறுவல் பூத்தார். இவ்வளவு ஆணவத்தோடு பேசும் அந்த வழக்கறிஞருக்கு ஒரு பாடம் கற்றுத்தர வேண்டும் என்கிற எண்ணமும் அவருக்குத் தோன்றியது. ``சரிங்கய்யா... இங்கே, ஸ்காட்லாந்துல இது மாதிரி சின்னப் பிரச்னை வந்தா நாங்க என்ன செய்வோம்னு உங்களுக்குத் தெரியாதுனு நினைக்கிறேன்... சரியா?’’ 

கதை - தன்னம்பிக்கை

``என்ன செய்வீங்க?’’ 

`` `மூணு உதை விதிமுறை’-யை கடைப்பிடிப்போம்...’’ 

``அதென்ன மூணு உதை விதி?’’ 

``அது ஒண்ணுமில்லை. முதல்ல நான் உங்களுக்கு மூணு உதை கொடுப்பேன். அதுக்கப்புறம் நீங்க என்னை மூணு உதை உதைக்கலாம். அப்புறம் நான் மறுபடியும் உங்களுக்கு மூணு உதை கொடுப்பேன். அப்புறம் நீங்க... கடைசியில யார் `நான் தோத்துட்டேன்’னு ஒப்புத்துக்குறாங்களோ, அவங்க தோத்தவங்க. இந்த விதிப்படி நான் தோத்துட்டேன்னு ஒப்புத்துக்கிட்டா நீங்க வாத்தை எடுத்துட்டுப் போயிடலாம். நீங்க தோத்துட்டேன்னு ஒப்புத்துக்கிட்டா, வாத்தை இங்கேயே விட்டுட்டுப் போயிடணும். அவ்வளவுதான்.’’ 

வழக்கறிஞர் முதியவரைப் பார்த்தார். நிச்சயம் மூன்று உதைகளுக்குக்கூட இந்தக் கிழவர் தாங்க மாட்டார் என்றே அவருக்குப்பட்டது. போட்டிக்கு ஒப்புக்கொண்டார். முதியவர் ட்ராக்டரைவிட்டு இறங்கினார். வழக்கறிஞரிடம் போனார். இது முதியவர் முறை. தன் பூட்ஸ் அணிந்த கால்களால் ஓங்கி வழக்கறிஞரின் கால்களில் ஓர் உதைவிட்டார். அவ்வளவுதான். வழக்கறிஞர் அப்படியே முழங்கால் தரையில்பட கீழே உட்கார்ந்துவிட்டார்.  

கதை - மோட்டிவேஷன் கதை

 

அவர் எழுந்ததும் அடுத்த உதை விழுந்தது... கிட்டத்தட்ட மூக்குவரை உயர்ந்தது கிழவரின் கால்கள். அந்த உதை வழக்கறிஞரின் தாடையைப் பதம் பார்த்தது. வழக்கறிஞர் கீழே விழுந்துவிட்டார். முதியவர் கொடுத்த மூன்றாவது உதை வயிற்றில். ஆனால், அந்த உதை பலமாக விழவில்லை. 

இப்போது ஒருவழியாக வழக்கறிஞர் சமாளித்து எழுந்து நின்றார். ``ஓ.கே. கிழவா... இப்போ என் முறை... கிட்டே வா. உன்னை நான் என்ன செய்றேன்னு பாரு...’’ 

கிழவர் அமைதி தவழும் முகத்தோடு சொன்னார். ``சார்... இருங்க... இருங்க. ஒத்துக்கிறேன். நான் உங்ககிட்ட தோத்துட்டேனு ஒத்துக்கிறேன். தயவுசெஞ்சு உங்க வாத்தை நீங்களே எடுத்துட்டுப் போங்க...’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பெருகும் ஃபங்கி கலாச்சாரம்!

 

 
funky%20dress

 

ஆடை முதல் காலணிகள் வரை விதவிதமாக எதிர்பார்க்கும் இளைஞர்களிடம் தற்போது ஃபங்கி கலாச்சாரம் பிரபலமாகி வருகிறது. அதென்ன ஃபங்கி கலாச்சாரம் என்று யோசிக்காதீர்கள். கண்களைப் பறிக்கும் வகையிலான பளீர் வண்ண ஆடைகளுக்குத்தான் இந்தப் பெயர். இதன் மீதுதான் இளைஞர்களின் கவனம் திரும்பியுள்ளது.

வழக்கமாக பளீர் ரக ஆடைகளை அணிந்தால், ராமராஜன் ஸ்டைல் உடை எனக் கிண்டால் செய்வார்களே, அதுபோன்ற உடைதான் ஃபங்கி டிரெஸ். எப்படி ஒரு காலத்தில் ராமராஜன் மூலம் பளீர் ஆடைகள் பரிச்சயமானதோ, அதுபோலவே அண்மைக் காலமாக இந்த ஆடைக்கு மவுசுகூட, சினிமாக்கள்தான் காரணம்.

funky
 

இந்த ஆடைகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக, எங்கும் தனித்து தெரிய வேண்டும் என்ற அவர்களின் இளமையின் துடிப்பே காரணம். அந்த வகையில் இந்த ஃபங்கி கலாச்சாரம் முதலில் ஆடையில் தொடங்கி இப்போது இளைஞர்கள் விரும்பி பயன்படுத்தும் பொருட்கள்வரை வந்துவிட்டன.

ஆப்பிரிக்க பாப் பாடகர் பாப் மார்லிதான் இந்த ஃபங்கி கலாச்சாரத்தை மேடைதோறும் தொடங்கிவைத்தார். அப்படி அவர் மேடைகளில் தனித்துவத்தோடு தெரிந்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். அது இளைஞர்களைக் கவர்ந்திழுக்கவே, பல இளைஞர்கள் இந்த ஆடைகளில் ஈர்ப்பு கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த ஃபங்கி கலாச்சாரம் முடிவில்லாமல், உலகை வந்துகொண்டிருக்கிறது. நம்மூரிலும்கூட இளைஞர்கள் பலர் ஃபங்கி கலாச்சாரத்துக்கு மாறிவருகிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து ஃபங்கி கலாச்சாரம் தற்போது வந்திருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஃபங்கி உடைகளின் குருநாதர் நடிகர் ராமராஜன்தான் என்பதை மறுக்க முடியுமா?

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.