Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

`55 பூனைகளை அன்போடு பார்த்துக்கணும்; கை நிறையச் சம்பளம்!' - வைரலாகும் விளம்பரம்

 

பூனை

பூனைப் பிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... இயற்கை எழில் கொஞ்சும் கிரேக்கத் தீவில் உங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு. 55 பூனைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குச் சம்பளம், தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தனி வீடு, உணவு என அனைத்தும் வழங்கப்படும். நம்ப முடியவில்லையா? 

பூனை
 

 

 

கிரீஸ் நாட்டில் மலை, நதி, காடு என இயற்கை சூழலில் சிரோஸ் என்னும் தீவு அமைந்துள்ளது. ஜோஹன் என்னும் பெண் சிரோஸில் தன் கணவருடன் 2010-ம் ஆண்டு குடியேறினார். அவர்கள் மன அமைதிக்காக அந்த இடத்துக்கு வந்தனர்.  ஜோஹன் சுற்றுவட்டாரப்பகுதியில் ஆதரவில்லாமல் சுற்றித்திரிந்த பூனைகளை வீட்டுக்கு அழைத்து வந்து கவனித்துக்கொள்ளத் தொடங்கினார். அந்த வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜோஹனின் வீடு, பூனைகளின் சரணாலயமாகவே மாறியது. ஆனால், தற்போது அவர் சிகிச்சைக்காக வேறு இடத்துக்குக் குடியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் தன் பூனைகளைப்  பிரியமுடன் பார்த்துக்கொள்ள ஓர் ஆள் தேவை என்று ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். அவரின் அந்த ஃபேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலாகிவிட்டது.

 

 

வீட்டின் முன்புறம்

வீட்டின் முன்புறம்..

ஜோஹான் பகிர்ந்திருந்த புகைப்படங்கள்  ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. முக்கியமாக அந்த வீடு அமைந்துள்ள இடம் அழகோ அழகு. 
ஜோஹான் பகிர்ந்த விளம்பரத்தின் தமிழாக்கம் பின்வருமாறு...

 `இது ஜோக் கிடையாது. உண்மையான அறிவிப்பு. பூனைகளை அன்புடன் பார்த்துக்கொள்ளும் பக்குவம் உடையவருக்கு கை நிறையச் சம்பளத்துடன் வேலை காத்திருக்கிறது. இயற்கை சூழலில் அமைந்துள்ள எங்கள் பூனைகள் சரணாலயத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 55 பூனைகள் உள்ளன.

வீடு
 

ஏகன் கடலுக்கு அருகில் உள்ள அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ள வீட்டில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். தண்ணீர், மின்சாரம் அனைத்துமே இலவசம்தான். நீங்கள் என் பூனைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டால் மட்டும் போதும். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த வேலை மிகவும் பொருத்தமாக இருக்கும்.

பூனை
 

இயற்கை சூழலில் பூனைகளின் அன்போடு நிம்மதியான வாழ்க்கை இங்கு நிச்சயம். உங்களுக்குப் பூனைகளின் மனநிலை பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஏன் என்றால் இங்கு இருப்பவை வீட்டுப் பூனைகள் இல்லை. காடுகளில் உலவும் பூனைகள். அவற்றை அன்போடு கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர். சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் பற்றி குறிப்பிடவில்லை. 

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

"சாதனைக்கு வயதெல்லையேது..?": 93 வயதில் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்த மூதாட்டி

 

தாய்வானில் 93 வயது மூதாட்டி துணிச்சலுடன் பாரா கிளைடிங்கில் பறந்து சென்று சாதனை படைத்துள்ளார். தாய்வானில் தென் கிழக்கு பகுதியில் உள்ள தைதுங் நகரம் பாரா கிளைடிங் விளையாட்டுக்கு உகந்த பகுதியாக கருதப்படுகிறது.

oldest_paraglider.jpg

49763.jpg

இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் பாரா கிளைடிங்கில் பறந்து சென்று பொழுதைக் கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், 93 வயது மூதாட்டியான வூ ரூய் லின் என்பவரும், பாரா கிளைடிங்கில் பறந்து செல்ல, அந்த விளையாட்டை நடத்தி வரும் நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.

முதலில் அதிர்ச்சி அடைந்த அந்நிறுவனம், மூதாட்டியின் ஆர்வத்தை பார்த்து, அதற்கு சம்மதித்தது.

அதன் பின் சிறப்பு ஏற்பாடுகளுடன், மூதாட்டி வூ ரூய் பாரா கிளைடிங்கில் பறந்து சென்று அனைவரையும் அசத்தினார்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 14
 

image_22b25bfa4a.jpg1900 : ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.

1908 : முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.

1912 : நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் நிக்கராகுவாவை முற்றுகையிட்டனர்.

1921 : தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.

1937 : ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1945 : பசுபிக் போர் முடிவுற்றது.

1945 : இரண்டாம் உலகப் போர் - நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது.

1947 : பிரித்தானிய - இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ், பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.

1969 : வட அயர்லாந்துக்கு ஐக்கிய இராச்சிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.

1972 : கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த விமானம், கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில், 156 பேர் கொல்லப்பட்டனர்.

1980 : போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.

2006 : இஸ்ரேல் - லெபனான் போர் முடிவுக்கு வந்தது.

2006 : முல்லைத்தீவு -  செஞ்சோலை சிறார் இல்லம் மீது, இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில், 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.

2007 : ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில், 796 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

நாம் இறந்தால் உடல் மண்ணுக்குப் போகிறது... ஆன்மா எங்கே செல்கிறது?

 
 

இந்தக் கோட்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் குவாண்டம் விஞ்ஞானிகள் இணை உலகங்கள் நம்மைச் சுற்றியிருப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது நம் உலகத்தின் ஜெராக்ஸ் காபி.

நாம் இறந்தால் உடல் மண்ணுக்குப் போகிறது... ஆன்மா எங்கே செல்கிறது?
 

இதைப் படிக்கலாமா? வேண்டாமா?

இந்தக் கட்டுரையைத் தொடங்குவதற்குமுன் உங்களுக்கு இப்படியான சந்தேகம் எழுந்திருக்கலாம். உங்களைப் பொறுத்தவரை படிக்கலாமென்று முடிவுசெய்து தொடங்கிவிட்டீர்கள். முதல்முடிவைத் தேர்வு செய்துவிட்டதால் இரண்டாவது முடிவு நிகழவில்லையென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுவும் நிகழ்ந்துவிட்டது. ஆம், இதைப் படிக்கலாமென்று முடிவெடுத்துத் தொடங்கிய மறுகணமே படிக்கவேண்டாமென்ற உங்கள் இரண்டாவது முடிவும் நிகழ்ந்திருக்கும். ஆனால் புதிதாகத் தோன்றிய வேறொரு பிரபஞ்சத்தில்.

ஆம். ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்குக் குறைந்தது இருவகையான எண்ணங்கள் தோன்றும். அதில் ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். அதைமட்டுமே செய்வீர்கள். ஆனால், உங்களுக்குத் தோன்றிய இரண்டாவது எண்ணத்தை நிகழ்த்தவும் அதன் விளைவுகளை அனுபவிக்கவும் செய்வீர்கள், வேறொரு பிரபஞ்சத்தில். 

 

 

பிரபஞ்சம் ஒன்றல்ல. ஒவ்வொரு முறை நாம் சிந்திக்கும்போதும் புதியதொரு பிரபஞ்சம் உருவாகிக்கொண்டு தானிருக்கிறது. இதைத்தான் பல்லண்டக் கோட்பாடு என்கிறார்கள் குவான்டம் இயற்பியல் விஞ்ஞானிகள். 

 

 

பல்லண்டக் கோட்பாடு

இந்தக் கோட்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் குவாண்டம் விஞ்ஞானிகள் இணை உலகங்கள் நம்மைச் சுற்றியிருப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது நம் உலகத்தின் ஜெராக்ஸ் காபி. அறிவியல் புனைகதை எழுத்தாளரான ஹெச்.ஜி. வெல்ஸ் என்பவர்தான் முதலில் இந்தக் கருத்தை முன்வைத்தார்; 1895-ல் அவர் எழுதிய ``தி டோர் இன் தி வால் (The Door in the Wall)" என்ற நாவலில். அது வெளியாகி 62 ஆண்டுகள் கழித்து ஹூக் எவெரெட் (Hugh Everett) என்பவர் தனது ஆய்வுக் கட்டுரையில் இதே கோட்பாட்டை முன்வைத்தார். ஒவ்வொரு கணத்தின்போதும் ஒரு புதிய பிரபஞ்சம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அவரது கட்டுரை குறிப்பிட்ட விளக்கம். அதாவது மேலே குறிப்பிட்டதுபோல. நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கலாமா என்ற சிந்தனையில் ஊசலாடியபோது இரண்டு வகையான சிந்தனைகளையும் நிகழ வைக்கும் இருவேறு பிரபஞ்சங்களாக நமது பிரபஞ்சம் பிரிந்திருக்கும். அதற்கடுத்த கணமே அந்தப் புதிய பிரபஞ்சமும் தன் பங்குக்கு அதிலிருந்து பல்வேறு பிரபஞ்சங்களைத் தோற்றுவிக்கத் தொடங்கும். அப்படிப் பிரியும் பிரபஞ்சங்களில் பலவற்றில் உங்கள் பிரதி இருக்கலாம், சிலவற்றில் இல்லாமலும் போகலாம்.

இந்தத் தோற்றங்கள் நடைபெறுவதற்குத் தூண்டுதலாக இருப்பது நமது செயல்களே. நாம் ஒரே செயலுக்குப் பல்வேறு சிந்தனைகளைச் செய்யும்போது அந்த ஒவ்வொரு சிந்தனையையும் நிகழ வைப்பதற்கான பிரபஞ்சங்கள் தோன்றும். உதாரணமாக ஒரு செயலைச் செய்வதற்குமுன் அதுகுறித்து நீங்கள் எட்டு முடிவுகளைச் சிந்தித்து இறுதியில் ஒரு முடிவைத் தீர்மானித்தால், மீதி ஏழு முடிவுகளுக்காக ஏழு புதிய பிரபஞ்சங்கள் தோன்றும். ஆக அந்த எட்டுச் சிந்தனைகளுக்கான விளைவுகளையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்.

 

 

ஹூக் தனது ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தபிறகு 1980-ல் ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரே லிண்டே என்பவரும் இதை உறுதிப்படுத்தித் தனது கோட்பாட்டை வெளியிட்டார். ``விண்வெளி பல மண்டலங்களைக் கொண்டுள்ளது. அவையனைத்தும் தொடர்ச்சியாக மேலும் பல மண்டலங்களை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கிறது. அப்படி உற்பத்தியான மண்டலங்கள் அவற்றின் பங்குக்கு முன்பைவிட அதிகமான மண்டலங்களை உற்பத்தி செய்கிறது. இவை குறிப்பிட்ட இடைவெளியோடு அருகருகே இருக்கின்றன. ஒன்றுக்கொன்று மற்றதன் இருப்பை அறிந்திருப்பதில்லை அவ்வளவுதான். பெரும்பாலும் மண்டலங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டவையாக இருக்கலாம்.

நமது பிரபஞ்சம் தனியாக இல்லையென்பதை நிரூபிக்கும் விதமாக பிளாங்க் விண்வெளித் (Planck Space telescope) தொலைநோக்கியில் நமக்குச் சில தரவுகள் விண்வெளியில் கிடைத்திருக்கின்றன. அந்தத் தரவுகளை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் ஒரு நுண்ணலை (Microwave) மாதிரியைத் தயார் செய்தார்கள். அதன்மூலம் அவர்களுக்குக் கிடைத்த தரவுகள் பிரபஞ்சம் உருவானதிலிருந்தே இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை நமக்கு அந்தத் தரவுகள் கிடைத்தபோதுதான் பிரபஞ்சம் உருவாகியதோ என்னவோ! ஒரு மண்டலத்திலிருந்து பிரிந்து உருவான அந்தப் புதிய பிரபஞ்சமே நமதுதானோ என்னவோ! இல்லை நம்மிலிருந்து பிரிந்து உருவான ஒன்றிலிருந்து நமக்குக் கிடைத்ததாகக்கூட இருக்கலாம்! இப்படிப் பிரபஞ்சங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன என்பதற்குச் சில ஆதாரங்களை முன்வைக்கிறார்கள். நமது பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான முரண்பாடுகள் இருக்கின்றன. காரணமற்ற பெரிய இடைவெளிகள், கருந்துளைகள், கருப்பொருள்கள் போன்றவை அவற்றில் சில. தொலைநோக்கியின் மூலம் நமக்குக் கிடைத்த நுண்ணலைத் தரவுகள் நம் பிரபஞ்சத்துக்கு அருகிலிருக்கும் வேறு பிரபஞ்சத்திலிருந்து வந்தவையே என்கிறார் கோட்பாட்டு இயற்பியல் பேராசிரியர் லாரா மெர்ஸினி (Laura Mersini). அதோடு நம்மிலிருந்து உருவான புதிய பிரபஞ்சங்களின் தாக்கத்தால் ஏற்பட்டவையே இந்த இடைவெளிகளும் கருந்துளைகளும் என்கிறார் அவர்.

மரணம்

இப்படித் தோன்றிக்கொண்டேயிருக்கும் பல லட்சக்கணக்கான பிரபஞ்சங்களில் நமது பிம்பங்களும் ஆங்காங்கு நமது முடிவுகளின் விளைவாகத் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. இறந்துவிட்டால் அவ்வளவு தானென்று நாம் நினைக்கிறோம். ஒருவேளை நமது உடல் அழிந்தபின் நம்மைப்போலவே வேறு பிரபஞ்சத்திலிருக்கும் நமது பிம்பத்தைத் தேடி நமது ஆன்மா சென்றுவிட்டால்!

2009-ம் ஆண்டு குவாண்டம் இயற்பியல் விஞ்ஞானியான ராபர்ட் லான்ஸா (Robert Lanza) எழுதிய ஒரு புத்தகம் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ``பயோசென்ட்ரிஸம்: வாழ்வும் ஆன்மாவும் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கான மூலக்கூறுகள் (Biocentrism: How Life and Consciousness are the keys to understanding the nature of the Universe)" என்ற அவரது புத்தகத்தில் பேசப்பட்ட விஷயமே அதற்குக் காரணம். அப்படி என்ன அவர் பேசியிருக்கிறார், உடல் இறப்பதோடு வாழ்வு முடிந்துவிடுவதில்லை என்பதே அந்த விஷயம். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையால் உயிருடன் வாழும் முக்கியமான விஞ்ஞானிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் ராபர்ட் லான்ஸாவுக்குத் தனது புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் அந்தக் கருத்து உண்மையென்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

உயிரை மையமாகக் கொண்டு மானிட மூலத்தைத் தேடுவதையே பயோசென்ட்ரிஸம் என்பார்கள். குவாண்டம் விசையியல் (Quantum mechanics), இயற்பியல், வான் இயற்பியல் (Astro Physics) போன்ற துறைகளில் காட்டிய ஆர்வம் இறுதியாக அவரை பயோசென்ட்ரிஸத்தில் கொண்டுசேர்த்துள்ளது. சொல்லப்போனால் இந்தத் துறைகள் கூட்டாக இணைந்ததில் உருவானதுதான் இந்தப் புதிய கோட்பாடே. வாழ்வும் ஆன்மாவுமே பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள அடிப்படையென்று போதிப்பதே பயோசென்ட்ரிஸம். அதைப் பின்பற்றுபவர்களைப் பொறுத்தவரை பொருள்களாலான பிரபஞ்சத்தை உருவாக்கியது உள்ளுணர்வுகளே.

லான்ஸாவைப் பொறுத்தவரை விண்வெளியும் நேரமும் ஏதோ பொருளோ விஷயமோ இல்லை. மாறாக நமது புரிதலுக்கான அளவுகோல்கள். நாம் நம்மோடு அவற்றைக் கொண்டு செல்கிறோம், ஓட்டைச் சுமந்துகொண்டு சுற்றும் ஆமையைப் போல. விண்வெளி, நேரமென்ற ஓடுகளை அகற்றினாலும் நமது இருப்பு இருக்கவே செய்யும். ஆனால் வேறு வடிவத்தில்.

அவரது கோட்பாட்டில் ஆன்மாவுக்கு இறப்பே கிடையாது என்கிறார். உடல் அழிந்தபிறகு அது வெறும் நினைவுகளாக இருக்கின்றன. மனிதர்கள் அவர்களை உடலை வைத்தே அடையாளம் கண்டுகொள்வதால்தான் அந்த நினைவுகள் தெரிவதில்லை என்கிறார். உடல் அழியும்போதோ அது அழிந்தபிறகோ ஆன்மாவும் அழிந்துவிடுகிறதென்று மனிதர்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். உடல்தான் ஆன்மாவை உருவாக்கியதென்றால் உடலோடு அதுவும் அழிந்துவிடும். ஒருவேளை கேபிள்கள் செயற்கைக்கோளின் சிக்னல்களை ஈர்ப்பதைப் போல், நமது உடலும் ஆன்மாவை ஈர்த்திருந்தால்!

அப்படித்தான் சொல்கிறார் லான்ஸா. அவரைப் பொறுத்தவரை விண்வேளி நேரம் போன்ற எல்லைகளைக் கடந்தது ஆன்மா. ஒரு உடலிலோ அல்லது அண்டவெளியிலோ, அதனால் எங்கு வேண்டுமானாலும் பிழைத்திருக்க முடியும். பல்லண்டக் கோட்பாடும் உண்மையென்று நம்புகிறார். ஒரு பிரபஞ்சத்துக்கு அருகிலேயே மற்ற பிரபஞ்சங்களும் இருக்கின்றன. ஒரு பிரபஞ்சத்தில் உடல் அழிந்துவிட்டால் மற்றொரு பிரபஞ்சத்தில் அதைப் போலவே இருக்கும் வேறு உடலில் சென்று கலந்துவிடும். அதிலும் இறந்துவிட்டால், வேறொரு பிரபஞ்சத்திலிருக்கும் உடலில் கலந்துவிடும். அதாவது நாம் இறக்கும்போது வேறு பிரபஞ்சத்தில் வாழும் நமது பிம்பம் கேபிள் சிக்னலை ஈர்ப்பதுபோல் நமது ஆன்மாவை ஈர்த்துக்கொள்ளும். இப்படியாகத் தொடர்ச்சியாக ஒரு பாதையில் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். அதனால், ஆன்மாவுக்கு இறப்பு என்பதே கிடையாது என்கிறார்.

ஆன்மா

இந்தக் கோட்பாடு பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இதைப் பலரும் முழுமையாக நம்புகிறார்கள். வெறும் மரணமில்லா வாழ்வுக்கு ஆசைப்படுபவர்கள் மட்டும் அவரது கோட்பாட்டை நம்பவில்லை. பல்லண்டக் கோட்பாடு உண்மையென்று ஏற்றுக்கொண்ட பல இயற்பியல், வானியல் விஞ்ஞானிகளும்கூட நம்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இணை உலகங்களின் இருப்பைப் பொய்யாக்கும் எந்த இயல்விதிகளும் இல்லையென்பதே இதை உறுதியாக நம்புவதற்குப் போதுமான காரணம்.

எது எப்படியோ! எந்த பிரபஞ்சத்துல எந்த முடிவுக்கு நீங்க விளைவுகள அனுபவிச்சாலும் சரி. இந்த பிரபஞ்சத்துல பாத்து முடிவெடுங்க.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இயற்கையைத் தேடும் கண்கள் : மீன்கொத்தியே… மீன்கொத்தியே…

 

 
iyarkaijpg

மீன்கொத்திப் பறவை இனங்களில் மிகப் பெரியது வெண்தொண்டை மீன்கொத்தி (ஒயிட் த்ரோட்டட் கிங்ஃபிஷர்). இவற்றின் தொண்டைப் பகுதி வெண்மையாக இருப்பதால் இந்தக் காரணப் பெயர். நீர்நிலைகளில் இதை அதிகம் பார்க்க முடியும்.

இது ஒரு பிரதேசப் (டெரஸ்ட்ரியல்) பறவை. அதாவது, குறிப்பிட்ட ஓரிடத்தில் தனக்கான உணவு இருக்கிறது என்று தெரிந்தவுடன், அதே இடத்துக்கே திரும்பத் திரும்ப வரும் குணம் கொண்டது.

 

இந்தப் பறவை, மரத்தில் கூடு கட்டாது. மாறாக, மண் பாங்கான இடத்தில், பொந்து மாதிரியான அமைப்பை ஏற்படுத்தி, அதற்குள் இவை முட்டையிடும்.

iyarkai%202jpg
 

விவசாயத்துக்கு ஊறு செய்யும் எலிகள் போன்றவற்றைப் பிடித்து உண்பதால், இந்தப் பறவைகள் விவசாயிகளுக்கு நண்பராக உள்ளன. ஆனால் அதே நேரம், ஒடிசாவில் உள்ள மங்கலஜோடி போன்ற இடங்களில், மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களைத் தங்கள் பகுதிகளில் காய வைத்திருக்கும் நேரத்தில், அவற்றை வந்து உண்பதால், மீன்கொத்திகள் மீனவர்களுக்குப் பகைவர்களாகவும் மாறிவிடுகின்றன.

மீன்கள்தாம் இவற்றின் முக்கிய உணவு. என்றாலும், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள், பல்லிகள், தவளைகள் போன்ற ஊர்வன உயிரினங்கள் போன்றவற்றையும் இந்தப் பறவைகள் சாப்பிடும்.

என்னுடைய ஒளிப்படத் துறை அனுபவத்தில், மீன்கள், மீன்கள் அல்லாத உயிரினங்கள் ஆகியவற்றைச் சாப்பிடும் வெண்தொண்டை மீன்கொத்திப் பறவைகளைப் படமெடுத்து, அதை ஆவணப்படுத்தியுள்ளேன். அந்தப் படங்கள்தாம் இங்கே…!

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

https://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

குப்ப கொட்டுற பிரச்சன கடலுக்கு அடியிலயும் இருக்கு போலருக்கு...????

  • தொடங்கியவர்

மலரே, குறிஞ்சி மலரே...

 

 
kurinjijpg

நீலக் குறிஞ்சி பூக்கத் தொடங்கிவிட்டது!

மக்களின் கண்களுக்கு

 

விருந்தளிக்கத் தொடங்கிவிட்டது!

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதிக்கே உரித்தான இந்த மலர், இந்த ஆண்டு ஜூலை மாத மத்தியில் பூக்கத் தொடங்கியது.  இந்தப் பூத்தல் நிகழ்வு செப்டம்பர் மாதக் கடைசிவரை தொடர வாய்ப்புள்ளது. கோடைக்கானல் பகுதி தொடங்கி ஆனைமலை, உதகை, மூணாறு, இடுக்கிவரை உள்ள மலைப்பகுதிகளில் குறிஞ்சி மலர்ப் போர்வைகளை வெளிபடத் தொடங்கிவிட்டன. தமிழக, கர்நாடக, கேரள மக்கள் இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண்பதற்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு ஏற்கெனவே படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

குறிஞ்சி பூத்தல் நிகழ்வில் அப்படி என்ன சிறப்பு? உலகிலுள்ள பூக்கும் தாவரங்களில் ஒரு சில மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் பூக்காமல், அவற்றின் வாழ்நாளின் முடிவில் ஒரே முறை பூத்து, காய்த்து, இறக்கும் தன்மையுடையன. இதை ஆங்கிலத்தில் semelparous அல்லது monocarpic என்றழைக்கிறார்கள். இத்தகைய தாவரங்களில் ஒன்று குறிஞ்சி.

வாழ்நாளில் ஒரே முறை பூக்கும் தாவரங்களிலும் அனைத்து உறுப்பினத் தாவரங்களும் ஒரே காலகட்டத்தில் ஒன்றாகப் பூக்கும் நிகழ்வைக் கொண்டவை மிக அரிது. இதை ஒருமித்தப் பூத்தல் (mast flowering) என்பார்கள். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு நீலக் குறிஞ்சி. இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கிறது. எனவே, ஒரே முறை பூத்தல், ஒருமித்த பூத்தல் ஆகிய பண்புகளை ஒருங்கே கொண்டது நீலக்குறிஞ்சியின் தனிச்சிறப்பு.

முதல் அறிவியல் பதிவு

குறிஞ்சி பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் ஒருமித்துப் பூக்கும் என்பதைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர். தமிழ்ப் பழங்குடிகளில் இன்றும் நிலைத்து வாழும் பழங்குடி இனங்களில் ஒன்றான பளியர் இன மக்கள், அவர்களுடைய வயதை குறிஞ்சி பூத்த ஆண்டை மனத்தில்கொண்டே கணக்கிட்டு கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

என்றாலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் (Middle Ages), பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காலம் வரையிலும் நீலக்குறிஞ்சியின் பூத்தல் பற்றிய சரியான தரவுகள் பதிவு செய்யப்படவில்லை. பிரிட்டிஷ் மக்கள் நீலகிரியில் 1820-களில் குடியேறத் தொடங்கினர். குறிஞ்சி பற்றிய இவர்களுடைய முதல் பதிவு 1826-ம் ஆண்டில் செய்யப்பட்டது. அந்த ஆண்டு குறிஞ்சி ஒருமித்துப் பூத்ததை

1935-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையில் (Journal of the Bombay Natural History Society) எம்.இ. ராபின்சன் என்பவர் சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளார். இதேபோன்று அடுத்தடுத்த 12-வது ஆண்டுகளும் 1934 வரை (1850, 1862, 1874, 1886, 1898,1910, 1922, 1934) குறிஞ்சியின் ஒருமித்தப் பூத்தல் நடைபெற்றதை ராபின்சன் பதிவுசெய்துள்ளார்.

1934-ம் ஆண்டு பழனி / ஆனைமலைப் பகுதிகளில் அவர் நேரில் கண்ட குறிஞ்சிப் பூத்தல் நிகழ்வை விவரித்துள்ளார். 1934-ம் ஆண்டு முதல் இன்றுவரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்தல் தொடர்ந்து காணப்பட்டு வந்துள்ளது (1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018).

kurinji%203jpg

பண்டைய பதிவுகள்

குறிஞ்சித் தாவரம் / பூ பற்றிய குறிப்புகள் பழந் தமிழிலக்கியத்தில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் நான்கு திணைகளில் ஒன்றாகவும் ("முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" - தொல்காப்பியம் பொருள்: 5), சங்க இலக்கியத்தின் ஐந்து திணைகளில் ஒன்றாகவும் கருதப்பட்ட குறிஞ்சித் திணையின் முதற் பொருளாக மலையும் மலை சார்ந்த இடமும், முக்கியக் கருப்பொருட்களாக குறிஞ்சித் தாவரமும் கடவுளாக சேயோனும் (முருகனும்) உணவாகத் தேனும் தினையும், உரிப்பொருளாக புணர்ச்சி ஒழுக்கமும் கருதப்பட்டன.

இவற்றின் காரணமாக குறிஞ்சிக்கும் குறிஞ்சித் திணைக்கும் பண்டைய தமிழர் ஒரு பண்பாட்டு மதிப்பை (cultural value) கொடுத்தனர். குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதால், குறிஞ்சியின் உரிப்பொருளை மனதிற்கொண்டு, 12 வயதுப் பெண்கள் திருமணத்துக்கு ஏற்ற வயதினர் என்று பண்டைய தமிழர் கருதினர். மேலும் குறிஞ்சிப் பூவின் கருநீல நிறம் மறையொழுக்கத்தின் குறியீடாகவும் குறிஞ்சிப் பூவின் தேன் களவின்ப மிகுதிக் குறியீடாகவும் அவர்களால் கருதப்பட்டது.

தேன் தொடர்பு

குறிஞ்சித் தேனைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். குறிஞ்சி ஒருமித்துப் பூக்கும் காலத்தில் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். தற்போதைய ஆய்வின்படி ஒரு குறிஞ்சித் தாவரத்தின் சராசரியாக 82 மஞ்சரிகளும் ஒவ்வொரு மஞ்சரியிலும் சராசரியாக 24 பூக்களும் (அதாவது, ஒரு தாவரத்தில் சராசரியாக 1,768 பூக்கள்), ஒவ்வொரு பூவிலும் ஏறத்தாழ 4 மி.லி. தேனும் (அதாவது ஒரு தாவரத்துக்கு 7,072 மி.லி. அல்லது 0.007 லிட்டர் தேன்) உருவாக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

எனவே, குறிஞ்சி பூக்கும் காலத்தில் தேன் உற்பத்தி மிகவும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே குறிஞ்சி நில மக்களின் முக்கிய உணவாகத் தேனும் (தினையோடுகூடியது), முக்கியத் தொழிலாக தேன் சேகரித்தலும் இருந்ததாக பண்டைய தமிழ் இலக்கியம் கூறுகிறது ("கருங்கோற் குறிஞ்சி பூக் கொண்டு, பெருந்தேன் இழைக்கும் நாடன்" - குறுந்தொகை - 8).

இது தொடர்பாக மேற்கத்திய மலைத் தொடர் பகுதிகளில் குடியேறிய ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்பு சுவாரசியமானது. குறிஞ்சி பூக்கும் காலத்தில் தேனீக்களின் படை மிகவும் அதிகமானதாகவும், 1922-ம் ஆண்டில் (ஒருமித்த குறிஞ்சிப் பூத்தல் காணப்பட்ட ஆண்டு) ஏறத்தாழ 28 தேன் கூடுகள் ஒரே ஒரு யூகலிப்டஸ் மரத்தில் தொங்கிக் காணப்பட்டதாகவும் அதற்கு அருகில் இருந்த பாறையில் 28 தேன் கூடுகள் காணப்பட்டதாகவும் ராபின்சன் குறிப்பிட்டுள்ளார்.

குறிஞ்சிக் குழப்பங்கள்

குறிஞ்சி, ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ் என்ற தாவரப் பெயரைக் கொண்டது. உலகில் ஏறத்தாழ 360 ஸ்ட்ரோபிலாந்தஸ் சிற்றினங்கள் காணப்படுகின்றன; இவற்றில் ஏறத்தாழ 150 சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுவதாகவும் 60 சிற்றினங்கள் இந்திய தீபகற்பப் பகுதியில் காணப்படுவதாகவும், இவற்றில் 47 மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை பெரும்பாலும் 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. இந்தியச் சிற்றினங்களின் பூக்கும் கால இடைவெளிகள் சிற்றினங்களுக்கேற்ப 1 முதல் 16 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிஞ்சியோடு காணப்படும் சில சிற்றினங்களில் இந்த கால இடைவெளி எட்டு அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளது என்பதாலும், இவற்றின் பூக்களின் நிறமும் நீலமாக இருப்பதாலும் குறிஞ்சிப் பூத்தலோடு இவை குழப்பிக்கொள்ளப்படுகின்றன.

தமிழிலக்கியக் குறிஞ்சி 1,300 முதல் 2,500 மீட்டர் உயரமுள்ள இடங்களில் வளரக் கூடியது; புதரை ஒத்த வளரியல்பைக் கொண்ட இது, பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம்வரை வளரக் கூடியது; புனல் வடிவ நீல / அடர்நீல நிற பூக்களைக் கொண்டது; ("கருங்கோல் குறிஞ்சி மதன் இல் வான் பூ" - நற்றிணை 268:3:3. இங்கு மதன் - வலுவான கருமை நிற பூத்தண்டு; வான்பூ - வானத்தை ஒத்த நீலநிறப்பூ); மகரந்தச் சேர்க்கை அடைந்த பின் பூவின் நிறம் மாறக்கூடியது.

விடியலில் அது பூக்கும் என்று சங்க இலக்கியச் செய்தி கூறுவதை தற்போதைய ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன; காலை ஐந்து முதல் ஒன்பது மணிவரை பூ மலரும். மகரந்தச் சேர்க்கை அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் நடைபெற்றுவிடும்; ஒவ்வொரு பூவும் 3-4 விதைகளை உருவாக்கும் எனவே, விதையும் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

எதிர்காலத்தில் தப்பிக்குமா?

ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் காணப்பட்டு பெருமளவு பூத்த நீலக் குறிஞ்சி (இதன் காரணமாகவே, நீலகிரி என்ற பெயர் ஏற்பட்டது) பல்வேறு காரணங்களால், குறிப்பாக மனிதர் ஏற்படுத்திய சூழலியல் மாற்றங்களால், அதன் விரவல் பரப்பில் பெருமளவு சுருங்கிவிட்டது. யூகலிப்டஸ், சீகை (வேட்டில்) போன்ற அயல் மரங்களின் நுழைப்பும், காய்கறி பழத் தோட்டங்களின் ஆக்கிரமிப்பும் குறிஞ்சி நில இழப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, 30 ஆண்டுகளுக்கு முன்பாகக்கூட கோடைக்கானல் பகுதியில் பாம்பாறு ஆற்றுக்கும் வட்டக்கனல் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் (குறிப்பாக, கோக்கர்ஸ் வாக் பகுதிக்கு கீழே) நன்கு பரவிக் காணப்பட்ட குறிஞ்சியின் விரவல், தற்போது பெரிதும் சுருங்கிவிட்டது. இது மேலும் சுருங்காமல் இருக்க, இந்த இடத்தை குறிஞ்சிப் பேணலிடமாக அறிவிக்கக் கோரி 2004-ம் ஆண்டிலேயே கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

 

இந்தக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. குறிஞ்சி விதைகளை உணவாக உண்ணும் காட்டுக் கோழியின் (இதுவே வளர்ப்புக் கோழியின் முன்னோடியாகக் கருதப்படுகிறது) எண்ணிக்கையும் அதிக அளவில் குறைந்துள்ளது என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

அதேநேரம், இந்த ஆண்டில் (2018) குறிஞ்சியின் ஒருமித்தப் பூத்தலைக் காணும்போது என்னுடைய காதுகளில் சங்க காலத்து குறிஞ்சி நில மக்களின் குறிஞ்சிப் பண்ணும், குறிஞ்சியாழ், குறிஞ்சிப் பறைகளான தொண்டகப் பறை, வெறியாட்டுப் பறை போன்றவற்றின் ஓசையும் ரீங்காரம் இடுவது போன்ற ஒரு புத்துணர்வு ஏற்படுகிறது.

எதிர்கால ஆர்வலர்களிடமும் இந்த உணர்வு தொடரும் என்று நம்புவோம்.

 

- பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

 

https://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
‘மமதைக் குணம் தொடர்பாடலுக்கு ஆகாது’
 

image_e243803559.jpgசந்தோஷத்திலும் நம்மவர்கள் கண்டதையும் உளறிக் கொட்டிவிடுவார்கள். ஏன் சோகத்தில் கூட, மற்றவர்கள் மீது பாய்வார்கள். எதனையும் எந்த உணர்வையும் அடிக்கி வைக்க முடியாது விட்டால், அவலப்படுவது யார்? 

உறவுகளின் பிரிவும் எம் மீது நம்பிக்கை கொள்பவர்களும் எங்கள் வார்த்தைகளின் உஷ்ணத்தால் பஷ்மமாகக் கூடாது.  

அழகு என்பது உடல் அழகு மட்டும் அல்ல. பேச்சின் அழகும் அதனுடன் இணைந்துள்ளது. நாகரீகம் என்பதுதான் என்ன? வாழும் வழி முறைதான் நாகரீகமாகும். இது பண்புடன் பிரிக்க முடியாத பிணைப்பாக ஒவ்வொருவரும் வைத்துக்கொள்ள வேண்டும். 

ஒருவர் நிலையுணர்ந்து உரையாடுதல், அன்பு கலந்த பார்வையைச் செலுத்திவிட்டு சம்பாஷித்தல் சந்தோஷகரமானது. 

பேச்சில் கௌரவத்தைக் காட்டாதவனுடன் சமூகத்தில் வேண்டாத பிரகிருதியாகின்றான். 

மமதைக் குணம் தொடர்பாடலுக்கு ஆகாது. அன்பான சொற்களுடன் கனிவும் சேர்ந்தால் எவரும் எங்கள் வசமாவார்கள். 

நெஞ்சத்தின் நெகிழ்ச்சி வார்த்தைகளில் இருந்தும் செய்யும் செயல் மூலம் பிரவாகிக்கின்றது.

  • தொடங்கியவர்

கண் நோய்களைத் துல்லியமாக கண்டறியும் மென்பொருள்! - கூகுள் அசத்தல்

 

கண்ணில் தோன்றும் 50 நோய்களை செயற்கை நுண்ணறிவின் மூலம் மிக துல்லியமாக கண்டறியும் மென்பொருளைக் கூகுள் நிறுவனம் தயாரித்து அசத்தியுள்ளது. 

கூகுள்

கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான டீப் மைண்ட் (DeepMind) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் லண்டனில் உள்ள மோர்ஃபைல்டு கண் மருத்துவமனை மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மனிதக் கண்களில் ஏற்படும் 50 நோய்களைக் கண்டறியும் அதிநவீன மென்பொருளைத் தயாரித்துள்ளனர். 

 

 

இந்த மென்பொருள் கண்ணில் உள்ள விழித்திரையை ஸ்கேன் செய்து அதன் மூலம் நோய்களைக் கண்டறியும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மற்றும் இவற்றின் செயல்பாடுகள் தி ஜெர்னல் நேட்சர் மெடிசின் (The Journal Nature Medicine) என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்கை நுண்ணறிவு நோயாளிகளின் கண்களை 3D முறையில் ஸ்கேன் செய்து அதில் குறைபாடுகள் இருந்தால் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் வேலையை மட்டுமே செய்கிறது. மேலும் நோய் எந்த அளவு பாதிப்புள்ளாக்கியுள்ளது என்ற அளவையும் இது துல்லியமாக கணித்துவிடுகிறது. முன்னதாக இந்த மென்பொருளை வைத்து சுமார் 14,884 பேரின் கண்களில் சோதனை செய்யப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது. 

 

 

eye_14514.jpg

மனிதர்களின் கண்களில் உள்ள விழித்திரையை ஏற்கும் இந்த செயற்கை நுண்ணறிவு பல பாகங்களைக் கொண்ட ஓ.சி.டி ஸ்கேனுக்கு உட்படுத்தப்படுகிறது. பிறகு அதன் மூலம் எடுக்கப்படும் முப்பரிமாண மேப் மூலம் கண்ணில் உள்ள நோயின் பெயர், அளவு, சிகிச்சை பெறும் முறை போன்ற அனைத்து விஷயங்களையும் தெரிவித்துவிடுகிறது. இந்த நுண்ணறிவு இன்னும் அதிகாரபூர்வமாக எங்கும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் துல்லியமான முறையில் நோயின் அளவைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வெள்ளத்தில் மிதந்த தேவாலயத்தில் நடந்த திருமணம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் மழையால் தேவாலயத்தினுள் வெள்ளம் புகுந்திருந்த நிலையிலும் இளம் தம்பதிகள் திருமணம் செய்து கொண்ட காட்சி வீடியோவாக வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ‘யாகி’ புயல் கடும் சேதத்தையும் பெரும் மழையையும் கொண்டு வந்துள்ளது பல பகுதிகள் வெள்ளக்காடாக கட்சி தருகின்றன. பல கட்டிடங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்நிலையில் புலாகான் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் நடந்தது.

இப்பகுதியில் குடியிருக்கும் 24 வயதான ஜோபல் டேலோஸ் தமது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இளைஞரை அந்த பெருமழை சூழ்ந்த நாளில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பெரு வெள்ளமோ- பெரும் மழையோ வாழ்க்கையில் ஒரு முறை தான் திருமணம் செய்து கொள்வோம். அதை ஏன் நாம் தள்ளிப்போடவேண்டும் என ஜோபல் மகிழ்ச்சி பொங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் நடந்த தேவாலயமானது தண்ணீரில் மூழ்கியிருந்தது. இதனால் தங்களின் திருமண உடைகள் நனைந்தன. ஆனால் அது பெரிதாக தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

 

உலகில் அதிகம் செல்வாக்கு செலுத்திய ஐந்து பெண்கள் யார்?

விஞ்ஞானி மேரி கியூரி உலக சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்கிறது ஒரு கருத்துகணிப்பு. பிபிசியின் வோர்ல்டு ஹிஸ்டரி பத்திரிகை வாசகர்கள் இவருக்கு அதிகளவு வாக்களித்துள்ளனர். உலகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்த்திய மேலும் சில முக்கியமான பெண்களை தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள்.

  • தொடங்கியவர்
‘சத்தியத்தின் வேர்கள் அறுபடுவதில்லை’
 

image_7e48bb4576.jpgசமூப்புரட்சி வீரன் அவன். எவருக்கும் அவன் அஞ்சுவதில்லை. ஏழை, எளியவர் முன் தலைசாய்ப்பான். பொல்லாதவர்களை அன்பால் வெல்வான்.  

எத்தர்கள் அவனை அழிக்கப் பெருமுயற்சி செய்தனர். திடீரென அவன் முன் நின்றனர் இராணுவத்தினர். மிரட்டி, அடித்து, உதைத்து, உருட்டினர். 

“எதற்கு என்னுடன் மோதிப் பார்க்கிறீர்கள்; கௌரவமாக மக்களை நடத்திப் பாருங்கள்” என்றான். இராணுவத்தில் ஒருவன் வெகுண்டெழுந்து, “என்னடா பேசுகிறாய்” எனக் கேட்டு, பதில் வரும்முன் துப்பாக்கியால் சுட்டான். 

விழிகளில் அக்னி, புருவம் குறுகி விரிய சரிந்தவன், சுட்டவனைப் பார்த்தான். கரங்களைக் குவித்து அவனை வணங்கினான். அடுத்த நொடி, அவன் ஆவி புன்னகையுடன் கரைந்தது.  

துப்பாக்கியால் சுட்டவன், “உன்னையா சுட்டேன்” எனச் சித்தம் சிதற, தவித்தான்; வாடி வீழ்ந்தான். சத்தியத்தின் வேர்கள் அறுபடுவதில்லை; துளிர்க்கும்; உலகம் முழுவதும் படரும்.  

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…. ஆகஸ்ட் 16 நிகழ்வுகள்…!

1513: கினெகேட் என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் இங்­கி­லாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர் பிரெஞ்சுப் படை­களை வென்றார்.

1780: தென் கரோ­லி­னாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்­தா­னியப் படைகள் அமெ­ரிக்கப் படை­களை வென்­றனர்.

1819: இங்­கி­லாந்து, மன்­செஸ்­டரில் அர­சுக்­கெ­தி­ராகக் கிளர்ந்த கிளர்ச்­சி­யா­ளர்கள் அடக்­கப்­பட்­டதில் 11 பேர் கொல்­லப்­பட்டு 400 பேர் காய­ம­டைந்­தனர்.

1865: 4 ஆண்­டுகள் ஸ்பானி­யரின் பிடியில் இருந்த டொமி­னிக்கன் குடியரசு மீண்டும் சுதந்­திரம் பெற்­றது.

1929: பிரிட்­டனின் ஆதிக்­கத்­துக்கு உட்­பட்­டி­ருந்த பலஸ்­தீ­னத்தில் அரே­பி­யர்­க­ளுக்கும் யூதர்­க­ளுக்கும் இடையில் வன்­மு­றைகள் மூண்­டன. இம்­மோ­தல்­களால் இரு வார­கா­லத்தில் 133 யூதர்கள், 116 அரே­பி­யர்கள் உயி­ரி­ழந்­தனர்.

1945: ஜப்­பா­னியப் பிர­தமர் கண்­டாரோ சுசுக்கி மீது கொலை முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

1946: இந்­தி­யாவின் கொல்­கத்­தாவில் பாரிய வன்­மு­றைகள் மூண்­டன. இவ்­வன்­மு­றை­களால் 3 நாட்­களில் சுமார் 4000 பேர் பலி­யா­கினர்.

1945: சீனாவின் கடைசி மன்னன் பூயி, சோவியத் படை­க­ளினால் கைப்­பற்­றப்­பட்டான்.

1960: பிரிட்­ட­னி­ட­மி­ருந்து சைப்­பிரஸ் சுதந்­திரம் பெற்­றது.

1960: அமெ­ரிக்­காவின் நியூமெக்­ஸிகோ மாநி­லத்தில் ஜோசப் கிட்­டிங்கர் என்­பவர் 31,300 மீற்றர் (102, 800 அடி) உய­ரத்­தி­லி­ருந்து பரசூட் மூலம் குதித்தார். இதன் மூலம் அவர் படைத்த சாத­னைகள் 2012 ஆம் ஆண்டு வரை முறி­ய­டிக்­கப்­ப­டாமல் இருந்­தன.

1962: இந்­தி­யாவில் பிரான்ஸின் வச­மி­ருந்த பிராந்­தி­யங்கள் இந்­தி­யா­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு 8 ஆண்­டு­களின் பின்னர் இம்­மாற்­றத்­துக்­கான ஆவ­ணங்கள் உத்­தி­யோ­கபூர்வமாக பரி­மா­றப்­பட்­டன.

1964: தென் வியட்­நாமில் அமெ­ரிக்­காவின் ஆத­ர­வுடன் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் ஜனா­தி­பதி டோங் வான் மின் பத­வி­யேற்­றப்­பட்டார்.

1972: மொரோக்கோ மன்னர் இரண்டாம் ஹசனை படு­கொ­லை­செய்து ஆட்­சியைக் கவிழ்க்கும் நோக்­குடன் அவர் பய­ணம்­செய்த விமா­னத்தின் மீது மொரோக்கோ விமா­னப்­படை விமா­ன­மொன்று தாக்­குதல் நடத்­தி­யது. எனினும் அவ்­வி­மானம் வீழ்த்­தப்­ப­ட­வில்லை.

1987: அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் மாநி­லத்தில் பய­ணிகள் விமானம் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 155 பேர் கொல்­லப்­பட்­டனர். செசி­லியா சீசான் என்ற 4 வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்­தது.

2005: வெனி­சு­லாவில் விமானம் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 160 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2006: இந்­தி­யாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்­டாட்­டங்­களின் போது இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 5 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2012: தென் ஆபி­ரிக்­காவில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட சுரங்கத் தொழி­லா­ளர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் 34 பேர் உயிரிழந்தனர்.

2013: பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலொன்றும் சரக்குக் கப்பலொன்றும் மோதியதால் 61 பேர் உயிரிழந்தனர்.

2015: சிரிய விமானப் படையின் வான் தாக்குதல்களில் சுமார் 96 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அழகியின் சிதைந்த முகத்தின் கதை!!!

 

அமெரிக்காவில் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்து முகச் சிதைவுக்குள்ளான இளம் பெண்ணிற்கு அறுவை சிகிச்சையின் மூலம் வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது.

katie.jpg

தனது 16 வயதிலிருந்து பள்ளித் தோழனை காதலித்து வந்த கேட்டிக்கு கடந்த 2014ஆம் ஆண்டளவில் காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.

காதல் தோல்வியினால் ஏற்பட்ட விரக்தியில் குளியறையிலேயே தனது முகத்தை பல தடவைகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

 

 

அதிர்ஷ்டவசமாக கேட்டி காப்பாற்றப்பட்டாலும் அவரது முகம் முழுவதுமாக சிதைவடைந்து சுவாசித்தல் உமிழ்தல் உணவை உட்கொள்ளுதல் என்பவற்றுக்கு  பெரும் சிரமத்தை அனுபவித்துள்ளார்.

சில மாத சிகிச்சையின் பின்னர் கேட்டியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட கேட்டியின் பெற்றோர் அவருக்கு முகத்தை சீர் செய்யும் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து க்ளீவ்லேண்ட் வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

அங்கு கடந்த ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி தொடர்ந்து 31 மணித்தியாலங்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

9ad7d575a35cf84684a3d34218330f62.jpg

அறுவை சிகிச்சை வெற்றியளிக்கப்பட்டாலும் பார்வை குறைப்பாட்டால் தனியாக இயங்க முடியாத சூழ்நிலையிலும் ப்ரெய்லி முறையில் படித்து வருவதோடு பேசவும் நடக்கவும் பெற்றோரின் உதவியோடு பயிற்சி எடுத்து வருகிறார்.

“நான் இரண்டாவது வாழ்க்கையை பெற்ற விட்டேன் எனக்கு இப்போது 22ஆவது வயதாகி விட்டது எனக்கு கிடைத்த இரண்டாவது வாழ்க்கை அற்புதமானது எனது புதிய முகம் அழகாக இருக்கிறது என்னைப் போன்று தற்கொலை முயற்சி செய்து தப்பியவர்களுக்காக என் வாழ்வை அர்ப்பணிக்க போகிறேன்” என கேட்டி தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

4F17D52D00000578-6059273-image-a-50_1534

4F17D51D00000578-6059273-image-a-55_1534

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

 

’கோலமாவு கோகிலா’ ட்ரைலர்

  • தொடங்கியவர்
‘பாமரனை, பரமன் பிள்ளை எனக் கருதுக’
 

image_729a8c2a22.jpgபாமரனுக்கு உள்ள உலகஞானம், இரக்கம், அன்பு, பயன்கருதாது உதவும் மனப்பான்மை, இயற்கை பற்றிய அறிவு, அதிகம் படித்தவர்களுக்கோ, உயர்பதவி, அரசியலில் உள்ளவர்களுக்கோ இல்லை என்பதுதான் உண்மை. 

அவன் அப்பாவித்தனத்தைக் கண்டதும், ஒன்றுமே புரியாதவன் என எண்ணுவது மடமை. சிலர் இத்தகையவர்களை ஏளனமாகப் பார்ப்பதுமுண்டு. தனது சொற்ப சம்பாத்தியத்தில் ஒரு பங்கை, அறம் சார்ந்த பணிகளுக்குக் கொடுத்துதவுவான்.

வசதி குறைவாக இருப்பின், தனது தேகத்தின் மூலம் தொண்டு செய்வான். தனது உறவினர்களுடன் பகிர்ந்து உண்பது, இவன் மகிழ்ச்சி. கோவில்களில், பொது இடங்களில் இவன் இன்றி எதுதான் இயங்கும். மயானம் வரை கூடவருவது இவன் இயல்பு.  

சமைப்பதும் அதைப் பகிர்வதும் கோவில் உற்சவ காலத்தில் அல்லது தங்கள் பகுதி திருமண வைபவங்களில் மட்டுமல்ல, தங்களோடு அனைவரையும் இணைத்துக் கொள்கின்றான். சிக்கனமாகச் செலவு செய்கின்றான். உறவுக்காக எதையும் செய்கிறான். மெய்வருந்தி உழைப்பது இவனுக்குப் பிடிக்கும். பாமரனை, பரமன் பிள்ளை எனக் கருதுக. 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று ஓகஸ்ட் 17
 

image_b64fb17863.jpg1918 :போல்ஷெவிக் புரட்சியாளர் மொயிசேய் யுரீட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார்.

1939 : த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூ யோர்க் நகரில் காண்பிக்கப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போர் - ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் ஜெர்மனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.

1943 : இரண்டாம் உலகப் போர் - வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட்,  கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.

1945 : இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.

1947 : இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.

1958 : பயனியர் - 0 சந்திரனைச் சுற்ற அனுப்பப்பட்டது. புறப்பட்ட 77 செக்கன்களில் இது அழிந்தது.

1959 : மொன்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.

1960 : காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1962 : கிழக்கு ஜேர்மனியில் இருந்து பேர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18 வயதுடைய பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.

1969 : மிசிசிப்பியில் இடம்பெற்ற சூறாவளியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.

1970 : வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1979 : இரண்டு சோவியத் ஏரோபுளொட் வானூர்திகள் உக்ரேன் வான்வெளியில் மோதியதில், 156 பேர் கொல்லப்பட்டனர்.

1982 : முதலாவது இறுவட்டு ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.

1988 : பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியா உல் ஹக் மற்றும் பாகிஸ்தானின் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.

1991 : சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில், வேட் பிராங்கம் என்பவர் சகட்டுமேனிக்கு சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.

1999 : துருக்கி, இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

ரு படம் ரிலீஸாகும் முன்பே அதன் ஒரு பாட்டு ஆந்திராவைத் தாண்டியும் சார்ட் பீட்டில் அலறிக் கொண்டிருக்கிறது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நடித்த `கீத கோவிந்தம்’ படத்தின் ரொமாண்டிக் பாட்டுதான் அது. லிரிக்கல் வீடியோ, ஒரிஜினல் வீடியோ என இரண்டையும் தாண்டி ஆங்காங்கே வெவ்வேறு தமிழ் வரிகளைப் போட்டு தமிழ் கவர் வெர்ஷனும் பாடி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் யூத்துகளின் ஏகபோக சாய்ஸ் இப்போ ‘இன்கே இன்கே காவாலி’ என்ற அந்த தெலுங்குப் பாட்டுதான். குழல் வளர்ந்து அலையானதே 


p70a_1534241560.jpg

பாலிவுட்டின் திடீர் ஹாட் கேக்காகி இருக்கிறார் டாப்ஸி பன்னு. ஆகஸ்ட் 9-ல் ரிலீஸான ‘மன்மர்ஸியான்’ படத்தின் டிரைலரில் முத்தக் காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார். இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் அந்தப் படத்தில் விக்கி கௌஷாலுடன் நிறைய லிப்-லாக் இருக்கிறது! `பஞ்சாப்பில் நடக்கும் இந்தக் கதையில், ஒரே நேரத்தில் இரண்டு பேர் மீது காதல் வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்பயணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்று குறும்பாக சொல்லியிருக்கிறார் அனுராக். அபிஷேக் பச்சனும் விக்கியும் போட்டி போட்டுக் காதலிக்கும் அழகியை டிரைலரில் பார்த்தே பாராட்டுகள் குவிவதால் டாப்ஸி செம ஹாப்பி!. டாப்பா வருவீங்க டாப்ஸி!


p70b_1534241590.jpg

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகை, முன்னாள் மிஸ் இந்தியாவுமான இஷா குப்தாவுக்குக்குமிடையே திருமணம் என பாலிவுட் மீடியாக்கள் கிசுகிசுத்தன. இதையடுத்து நடிகை ஈஷா இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. தனது கல்யாணம் நடக்கும்போது எல்லோரையும் கூப்பிட்டு விருந்துவைக்கிறேன் இப்போ ஆளைவிடுங்க என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவுக்கும் பாலிவுட் நடிகை எல்லி அவ்ரமுக்கும் காதல் என்று கிசு கிசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ப்ளேபாய் பாண்டியா!


p70c_1534241613.jpg

த்தமவில்லன் படத்தில் ‘ஏப்ரிலியா காப்போனார்டு’ டூரர் பைக்கில் வரும்போதே தெரிந்திருக்கும் கமல் ஒரு பைக் பிரியர்என்று. ‘மேட்ச்லெஸ் ஸ்கிராம்பிளர்’ என்னும் 1950-களில் விற்பனைக்கு வந்த வின்டேஜ் பைக்கை பத்திரப்படுத்தி தன் வீட்டில் வைத்திருக்கிறார் கமல். நீண்ட நாள்களாக பயன்படுத்தாததால்  ஸ்டார்ட் ஆக மறுக்கும் இந்த பைக்கை ரெஸ்டோர் செய்ய ஆள் தேடிக்கொண்டிருக்கிறார் கமல். வின்டேஜ் கலெக்டர்கள் கமல் வீட்டை ‘மய்யம்’ கொள்ளலாம். டபுச்சிக்கு டபுச்சிக்கு மேட்ச்லெஸ்


p70e_1534241666.jpg

கஸ்ட் 18-ம் தேதியோடு சர்வதேச அரங்கில் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் விராட் கோலி. அன்று மாற்று ஓப்பனராகக் களம் கண்டவர், இன்று கிரிக்கெட் உலகையே மாற்றிக்கொண்டிருக்கிறார். `ஆங்ரி பாய்’, `இம்மெச்சூர்ட் கிரிக்கெட்டர்’ என திட்டிய பேனாக்களும், கீபோர்டுகளும் இன்று ‘கிங் கோலி’ என்று புகழாரம் சூட்டுகின்றன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என வெளிநாட்டுப் மண்ணிலும் ஆதிக்கம் செலுத்துகிறது அவரது பேட். இளம் இந்திய அணியை உலகக் கோப்பையையும் நோக்கி வழிநடத்திக்கொண்டிருக்கும் கிரிக்கெட் சூறாவளியின் 10-வது ஆண்டு நிறைவை வெறித்தனமாகக் கொண்டாடக் காத்துக்கொண்டி ருக்கிறது விராட் ஆர்மி. வீறுநடை போடும் விராட்!


p70d_1534241697.jpg

‘தங்கல்’, ‘பாகுபலி’, ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ என இந்தியப் படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு ஹிட் அடித்து வருகின்றன. இதனால் சீனாவில் இந்தியப்படங்க ளுக்கு பெரிய சந்தை உருவாகி இருக்கிறது. சீன திரைப்பட நிறுவனங்கள் இந்தியப்படங்களை வாங்கி டப் செய்து வெளியிட ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில் அடுத்து ‘மெர்சல்’ திரைப்படத்தை மேண்டரின் மொழியில் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆளப்போறான் தமிழன்!


p70f_1534241746.jpg

கேரளாவே தென்மேற்குப் பருவமழையில் மூழ்கித் தத்தளிக்கிறது. இதுவரை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் இதுவரை 29 பேர் பலியாகி இருக்கிறார்கள். பலி என்ணிக்கை கூடும் என அரசு தரப்பில் அறிவித்திருப்பது மாநிலம் தாண்டியும் கவலை ரேகையைப் படர விட்டிருக்கிறது. ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் இடம்பிடித்த பல இடங்கள் உருத்தெரியாமல் மாறிக் கிடப்பதால் அந்தப் படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரியும், படத்தின் கதாசிரியர் செம்பன் வினோத்தும், ஹீரோ ஆன்டனி வர்கீஸும் ஒரு டீமாக புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கப் போகிறார்கள். விரைவில் அங்கமாலி பழையப் பொலிவைப் பெறும் என்கிறார்கள். கடவுள் தேசம் மீண்டெழட்டும்


p70g_1534241788.jpg

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் திரையில் தோன்றி 50 ஆண்டுகளுக்குமேல் ஆன நிலையில், கடைசியாக வெளியான 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் டேனியல் கிரேக்தான் பாண்ட் வேடத்தில் நடித்திருந்தார். முதன்முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை நடிக்கவைக்கலாமா என சிந்தித்துக்கொண்டிருக்கிறது தயாரிப்பாளர்கள் தரப்பு. அனேகமாக இட்ரிஸ் எல்பா பாண்ட் வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல சாய்ஸ்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சீனாவில் வித்தியாசமாக கொண்டாடப்படும் காதலர் தினம்!!!

 

சீனாவில் காதலர் தினம் "கிஷி" என்ற பெயரில், 2000 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய விழா இன்று தென் மற்றும் கிழக்கு சீன மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

qishi_festivel.jpg

சீனாவின் புராணக் கதைகளின் படி காளை போன்ற வீரமுடைய ஆண் மகனும் தூக்கணாங்குருவி போன்ற இனிமையான குரலினுடைய பெண் மகளும் வருடாந்தம் இத் தினத்தில் பால் வீதியில் நட்சத்திரக் கூட்டத்திற்குள் சந்தித்துக் கொள்வதாகவும் பின்னர் மீண்டும் பிரிந்து அடுத்த வருடம் இதே நாளில் சுவர்க்கத்தில் சேர்ந்து கொள்வார்கள் என்பது நம்பிக்கை

இந் நம்பிக்கையின் படியே சீனாவில் பாரம்பரிய காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தென் சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் சுச்சுன் கிராமத்தில் இவ் விழா கிஷி என்ற பெயரில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இவ் விழாவில் குறித்த பகுதிப் பெண்கள் தூக்கணாங் குருவியின் குரலையுடைய பெண் தெய்வத்தை தாமரை வடிவ விளக்குளை ஏற்றி வழிபடுவதோடு சுறுசுறுப்பான மற்றும் வீரமான காதலன் வேண்டும் என பிரார்த்தனை செய்வது வழக்கமாகும்.

இக் காதலர் தினக் கொண்டாட்டம் இன்று ஆரம்பித்து இன்றிலிருந்து தொடர்ந்து ஒரு மாதத்திற்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

தனி ஒருவனாய் 16 ஆண்டுகளாக காடு வளர்த்து ஒரு நாட்டையே மாற்றியவர்... யார் இந்த மாங்குரோவ் மாஸ்டர்?

 

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 40 ஆயிரம் ஹெக்டேர் சதுப்பு நிலக்காடு காணப்பட்டது. ஆனால், தொழில் வளர்ச்சி மற்றும் விறகுகளுக்காக சதுப்பு நிலக் காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது.

தனி ஒருவனாய் 16 ஆண்டுகளாக காடு வளர்த்து ஒரு நாட்டையே மாற்றியவர்... யார் இந்த மாங்குரோவ் மாஸ்டர்?
 

லகில் பல ஆண்டுகளாக மரம் வளர்க்கும் மனிதர்கள், விலங்குகளைப் பாதுகாக்கும் ஆர்வலர்கள் பற்றிய பல கதைகள் உள்ளன. அக்கதைகளைப் படிக்கும்போது இவர் ஏன் இதைச் செய்கிறார், இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்று பலரும் நினைக்கலாம். ஒரே வேலையை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் செய்வதற்குக் காரணம் அந்த வேலை தரும் போதைதான். அந்தப் போதை கொடுக்கும் உற்சாகத்தால் அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்கும் வேலையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார் ஒருவர். 

அலையாத்திக் காடு

அது மேற்கு இலங்கையின் ஒரு கடல் பகுதி. அதிக அளவில் வளர்ந்திருந்த அலையாத்திக் காடுகளின் அடர்த்தி கடந்த 15 ஆண்டுகளாகக் குறைய ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம் தொழில் வள மேம்பாடு. அழிந்த காடுகளுக்கு இணையாக மீண்டும் காடுகள் வளர ஆரம்பிக்கின்றன. அதைக் கடந்த 16 ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறார், டக்ளஸ் திசேரா (Douglas Thisera). இலங்கை மீனவர் ஒன்றியமான சுதேச நிறுவனத்தின் கரையோரப் பாதுகாப்பு இயக்குநர் என்ற பதவி வகித்து வருகிறார். காலை 7 மணிக்குத் தனது வேலையை ஆரம்பித்துவிடுகிறார் திசேரா. தன் படகை எடுத்துக் கொண்டு கடற்கரையிலிருக்கும் அலையாத்திக் காடுகளினுடைய விதைகளைச் சேகரிக்கிறார். சில மணிநேரங்கள் நீடிக்கும் அந்தப் பறிப்பு, முடிந்தவுடன் தனது வீட்டுக்கு வந்துவிடுகிறார். தன் வீட்டுப் பண்ணையில் இருக்கும் ஒவ்வொரு பைகளிலும், ஒவ்வொரு விதையாக விதைக்கிறார் (அந்த விதையானது வளர சில காலங்கள் எடுத்துக்கொள்ளும்). விதைத்த பின்னர் தயாராக இருக்கும் அலையாத்தி மரக் கன்றுகளை எடுத்துக்கொண்டு நடுவதற்காகக் கிளம்புகிறார். தன் பண்ணையில் உருவாக்கிய கன்றுகளை எடுத்துக்கொண்டு கடற்கரையோர கிராமங்களுக்கு கொண்டு சென்று இலவசமாகக் கொடுத்து வருகிறார்.  

 

 

தன்னுடைய பதினோறு வயதில் மீன்பிடித் தொழிலை ஆரம்பித்திருக்கிறார் திசேரா. பெரும்பாலும் மீன்பிடிப்பது அலையாத்தி காடுகளைச் சுற்றித்தான். அவற்றில்தான் அதிகமான மீன்கள் அவருக்குக் கிடைத்திருக்கிறது. மீன்கள் தவிர பல உயிரினங்களும் அலையாத்திக் காடுகளால் பலனடைந்திருக்கின்றன. மீன்களுடன் சேர்த்து நண்டுகளையும் பிடித்து விற்பனை செய்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட தொழில் வளர்ச்சியின் தாக்கத்தால் ஏற்பட்ட அலையாத்திக் காடுகளின் அழிவு ஆரம்பிக்கிறது. அம்பன் தோட்டம் என்ற கரையோரப் பகுதிகள் தொடங்கி பல பகுதிகளும் அலையாத்தி காடுகளை இழக்க ஆரம்பிக்கின்றன. அதன் காரணமாக ஊருக்குள் தண்ணீர் புக ஆரம்பிக்கிறது. இது வெகுவாக திசேராவைப் பாதிக்கிறது. அதனால் சுதேசா நிறுவனத்தில் இணைந்து அலையாத்திக் காடுகளைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்காக 14 மாவட்டங்கள் முழுமையாகப் பயணம் செய்து மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.  
 

 

 

அலையாத்திக் காடு

அதன் காரணமாக அதிகமான மக்கள் இவரின் பின்னால் திரும்ப ஆரம்பித்தனர். அதன் விளைவாக சதுப்பு நிலப் பாதுகாப்புத் திட்டத்தை அரசே தொடங்கியிருக்கிறது. தற்போது இத்திட்டம் இலங்கை முழுவதும் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. சுதேசா நிறுவனம் இலங்கை அரசு மற்றும் அமெரிக்கச் சூழல் பாதுகாப்புக் குழு ஆகியவை இணைந்து 3.4 மில்லியன் டாலர்கள் செலவில் இத்திட்டத்திற்கான பணிகளைச் செயல்படுத்தி வருகிறது. சுதேசா நிறுவனத்தின் மூலமாகக் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்தந்த கிராமத்துக்குப் பொறுப்பாளராகவும் நியமித்திருக்கிறார். முதலில் மக்களும் சதுப்பு நிலம் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்ந்திருக்கவில்லை. அதன் பின்னர் இத்திட்டம் அரசால் முன்னெடுக்கப்பட்டு மக்களுக்கு அலையாத்தி காடுகளை வளர்க்க உதவித்தொகையும் வழங்கப்பட்ட பின்னர்தான் அம்மக்களுக்கு இத்திட்டத்தின் வீரியம் புரிய ஆரம்பிக்கிறது.  

இதனால் மக்கள் குறிப்பாக பெண்கள் இத்திட்டத்தில் இப்போது அதிகமான ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது வரை திசேரா மூலமாக ஒன்றரை மில்லியன் அலையாத்திக் கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. இரண்டு மில்லியன் நடுவது என்பதை லட்சியமாகக் கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறார். 

``கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 40 ஆயிரம் ஹெக்டேர் சதுப்பு நிலக்காடு இருந்தது. ஆனால், தொழில் வளர்ச்சி மற்றும் விறகுகளுக்காக சதுப்பு நிலக் காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அதனை முக்கியமான காரணமாக எடுத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம் சிறப்பான முறையில் நடந்துகொண்டிருக்கிறது" என்கிறார், திசேரா. இன்று மக்களால் `மாங்குரோவ் மாஸ்டர்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தாமரைக் கோபுர உச்சியிலிருந்து கொழும்பில் தெரிந்த அற்புதக் காட்சிகள்!

 
 

ஆசியாவின் மிக உயர்ந்த கட்டடம் என வர்ணிக்கப்படும் கொழும்பு தாமரைத் கோபுரத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த கோபுரப் பணிகள் நிறைவு பெற்றதும் ஏராளமான வணிக ஸ்தாபனங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.

தாமரைக் கோபுரத்தின் உச்சியில் நின்று பார்த்தால் கொழும்பு மாநகரத்தின் அழகு எவ்வாறு வெளிப்பட்டு நிற்கின்றதென்பதை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com

 

  • தொடங்கியவர்

கான்பூர் கல்லூரியில் எனது வகுப்புத் தோழன் வேறுயாருமல்ல.. வாஜ்பாயியே விவரிக்கிறார்

 

 
vajpayee-pm-17


லக்னௌ: 1945ம் ஆண்டு 21 வயதான அடல் பிகாரி வாஜ்பாய் கான்பூரில் உள்ள கல்லூரியில் சட்டம் பயின்றார். அப்போது அவரது வகுப்புத்  தோழனாக இருந்தவர் 30 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அவர் வேறு யாருமல்ல.. வாஜ்பாயியின் தந்தைதான்.

பண்டிட் கிருஷ்ண பிஹாரிலால் வாஜ்பாயி 50 வயதாக இருந்த போது, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் வாஜ்பாயுடன் ஒன்றாகப் படித்தார். 

வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு 2002ம் ஆண்டு கல்லூரியின் இதழில், வாஜ்பாய் பகிர்ந்து கொண்ட இந்த ஆச்சரியத் தகவல் வெளியாகியிருந்தது.

மேற்கொண்டு வாஜ்பாயியே கூறுகிறார், நீங்கள் யாராவது இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா, தந்தையும், மகனும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் என்பதை. அதுவும் இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அப்படி கேள்விப்படவில்லை என்றால் கான்பூர் கல்லூரியைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இது பற்றி கல்லூரியின் முதல்வர் கூறுகையில், இருவரும் அதிர்ஷ்டவசமாக ஒரே படிப்பில் சேர்ந்தனர். ஆனால் பிறகு தங்களது செக்சனை மட்டும் மாற்றிக் கொண்டனர் என்கிறார்.

வாஜ்பாயி கூறுகையில், எனது தந்தை வகுப்புக்கு தாமதமாக வந்தால், பேராசிரியர் சிரித்தபடியே, எங்கே உனது தந்தை மாயமாகிவிட்டார் என்று கேட்பார். நான் தாமதமாக வந்தால், தந்தையிடம் உங்கள் மகன் எங்கே காணவில்லை என்று சிரித்துக் கொண்டே கேட்பார். இது எங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதால்  நாங்கள் வேறு வேறு வகுப்புக்கு மாறிவிட்டோம் என்றும் அந்த இதழில் எழுதியுள்ளார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சுற்றுலா பயணிகளின் செல்பிக்கு போஸ் கொடுத்த சிறுத்தை

டன்சானியா வனவிலங்கு பூங்காவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட குடும்பத்தினர் எதிர்பாராத சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த குடும்பத்தினர் ஜீப் வண்டியில் வனவிலங்கு பூங்காவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் அங்கு புகைப்படம் எடுக்க வந்த போது திடீரென அவர்களின் ஜீப் வண்டி மீது சிறுத்தை ஒன்று புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்துள்ளது.

5-6-300x188.jpg

download-2-300x168.jpg

சுற்றுலா பயணம் மேற்கொண்ட குடும்பத்திற்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் இந்த சிறுத்தை செல்பி எடுக்க உதவியுள்ளது.

6-300x143.jpg45-2-300x143.jpg

உலகிலேயே மிக வேகமான மிருகமாக இந்த சிறுத்தை அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

twitter.com/Thaadikkaran

என்னவெல்லாம் கொஸ்டின் கேக்கணும்னு முடிவு பண்ணிட்டு, டாக்டர்  ரூமுக்குள்ள போனதும் அவர் ஒண்ணு கேட்க, நாம கேட்க வந்தது எல்லாம் மறந்துபோய் வெளிய வந்து புலம்புறதெல்லாம் டிசைன்ல இருக்கு..! 

p110a_1534336768.jpg

facebook.com/ranjith.devi.5

வாழ்வில் செட்டில் ஆகிவிட்டது என்பது எந்தப் பிரச்னையும் இல்லாமல் இஎம்ஐ கட்டுவது!

twitter.com/iKrishS

‘அழகிரி எங்கள் கட்சியில் இணைய முன்வந்தால் பரிசீலிப்போம்’னு தீபா அறிக்கை விடணும்.

twitter.com/meenammakayal

வாட்ஸ்-அப்ல மெசேஜ் அனுப்பி ரிப்ளை வராம இருக்குதுன்னா.. ஒரு நாலஞ்சு மெசேஜ்கள் அனுப்பிட்டு உடனே டெலிட் செஞ்சிடணும்.. curiosity wins

twitter.com/morattumama:

இவனைத் திருத்தவே முடியாதுனு ஒரு இமேஜ் நம்ம மேல வந்துட்டாலே போதும். சுதந்திரமா இருக்கலாம்.

twitter.com/MJ_twets

பத்து நிமிஷம் பஸ்ல போனாகூட பெரிய இவனாட்டம் வர்றியே... தைரியம் இருந்தா நைட்ல வா, பாக்கலாம்! - தூக்கம் 

p110b_1534336795.jpg

twitter.com/iyyanars

மாதக்கடைசியில் கடைப்பிடிக்குற சிக்கனத்தை மாத ஆரம்பத்துலயே கடைப்பிடிக்கறவன்தான் பணக்காரன்!

twitter.com/mekalapugazh

கலைஞர் அழவைத்தார்..

எடப்பாடி கோபப்பட வைத்தார்..

ஸ்டாலின் போராடி சிரிக்கவைத்தார்..

#கலைஞர் மரணநாள்.

twitter.com/amuduarattai

பேசும்போது, போதை ஏறினால், ‘மனைவியாகப் போகிறார்’ என்றும், பேசும்போது, ஏறிய போதை இறங்கினால், ‘மனைவியாகிவிட்டார்’ என்றும் அறிக.

twitter.com/Aruns212

ஜெயலலிதாவின் மரணத்திற்கும் அழுது, கலைஞரின் மரணத்திற்கும் அழும் இயல்பைப் பெற்றவளுக்கு ‘அம்மா’ என்று பெயர்.

p110c_1534336834.jpg

twitter.com/ameerfaj

சாமானியர்களுக்குக் கிடைக்காத சகல சௌபாக்கியங்களும்  ‘சாமியார்’களுக்குக் கிடைத்துவிடுகிறது நம் நாட்டில்..!

twitter.com/karukkan

‘’பிசினஸ்ல இன்ட்ரஸ்ட் இருக்கா... 60 லட்சம் கொடுங்க, பியூட்டி பார்லர் ஃப்ரான்சைஸி எடுத்துடலாம்’’கிறான் ஒருத்தான். அடேய்... 60 லட்சம் அக்கவுன்ட்ல இருந்தா நான் வேலைக்கே போகாம வாழ்ந்திருவேன்டா!

facebook.com/ Sriramsathiyamoorthy2690

ஆண்டவரே... நீங்க, நா மட்டுமல்ல அந்த ஒமரே நெனச்சாலும் ஜலால் இங்கிலாந்தில M.Tech படிக்க முடியாது. ஏன்னா அங்க M.Techனு ஒரு படிப்பே இல்ல!

facebook.com/umar.ibu.3

கலைஞர் சமாதியில காதை வைத்துக் கேட்டால் கடிகாரச் சத்தம்லாம் கேக்காது. போராட்டச் சத்தம்தான் கேக்கும்...

twitter.com/Aruns212

செருப்பை எடுத்துக் காட்டினால், கூலாக ‘வேற எடுத்துக் காட்டுங்க’னு சொல்ற ஒரே இடம் செருப்புக் கடை மட்டுமே.

p110d_1534336938.jpg

facebook.com/karthekarna

மோடி சசிகலா தலையில வச்சது இடதுகை, கனிமொழி தலையில வச்சது வலதுகை. ஆகவே... #வாட்ஸ்-அப் ஜோசியர்கள்

facebook.com/jvp.sachin

அமெரிக்கா : எங்ககிட்ட இருக்குற ஒரே ஒரு பட்டனை அமுக்கினா போதும், உங்க கட்சியே காணாமல் போயிடும்.

எளிய தமிழ்ப் பிள்ளைகள்: எவ்வளவு ஆயுதம் வேணாலும் உபயோகப்படுத்திக்கங்க. ஆனா நாங்க பனங்கொட்டைகளையே எறிகற்களாக்கி வீசுவோம். பச்சைப் பனை ஓலைகளைப் பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்துவோம். கிட்டிப் புல் செதுக்கிக் குறிபார்த்து அடிப்போம்.

p110e_1534337043.jpg

அமெரிக்கா: நீங்க அந்தளவுக்குலாம் வொர்த் இல்ல. நாங்க சொன்ன ஒரே ஒரு பட்டன், வாட்ஸ் அப் சர்வீஸையே டோட்டலாக கட் பண்றது. உங்க கட்சியே அதை வச்சித்தான் ஓடிக்கிட்டு இருக்கு. அதைக் கட் பண்ணிட்டாலே போதும்.

twitter.com/amuduarattai

 அதிக ‘தோற்றப் பிழைகளுக்கு’ உள்ளானது, ஆண் - பெண் நட்பாகத் தான் இருக்கும்.

twitter.com/MJ_twets

 உலகின் மிகச் சிறந்த அறிவுரை  ‘அட்வைஸ் பண்ணி யாரையும் திருத்த முடியாது!’ என்பதுதான்.

twitter.com/saravananucfc

மனைவி: உங்களுக்குப் பேசவே தெரியலைங்க. 

p110f_1534337016.jpg

கணவன்: இங்க பாரு நட்ராஜ் ஜாமின்டரி பாக்ஸ். எட்டாம் வகுப்பு பேச்சுப்போட்டியில் நான் வாங்கியது.

facebook.com/gunacm96

படுத்துக்கிட்டே ஜெயித்தது எம்.ஜி.ஆர்.

இறந்த பின்பும் ஜெயித்தது கலைஞர்.

facebook.com/vk.kannan666

ஹிஸ்டரிய புத்தகத்துல படிங்கடா, வாட்ஸ் அப்ல படிக்காதீங்க...

சைபர் ஸ்பைடர்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சின்ன சின்ன வரலாறு –  : பெல்ட்டின் கதை! 

beltjpg

கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஒரு பொருளைப்பற்றிப் பார்க்கலாம். அதற்கு முதலில் அறணாள் என்று பெயர். பின்னர் நிலை உயர்ந்து பெல்ட் எனும் பெயர் பெற்றது. 

இந்த பெல்டின் வரலாறு தனித்தன்மை வாய்ந்தது. ஏதோ ஒரு தேவைக்காக உபயோகத்திற்கு வந்து பின் வெவ்வேறு தேவைகளான நிலை, இடம், பொருள் என்று அனைத்தும் உயர்ந்திருக்கிறது. கற்கால மனிதர்கள் தங்கள் அந்தரங்க பாகங்களை இலைகளால் மறைக்கத்தொடக்கிய காலத்தில், இதன் தேவையை உணரத்தொடங்கினான். தேவைக்காக ஒரு கயிறாக அடி வயிற்றில் கட்டிக்கொண்டான். அரசியல் மற்றும் சமுதாய அந்தஸ்தை வெளிக்காட்டக்கூடிய பொருளாகப் பதவி உயர்வு பெற்றபோது, பெல்ட்டின் அளவும் பெரிதாகி, அணியும் இடமும் உயர்த்தப்பட்டு இடுப்பில் வந்து குடி ஏறத் தொடங்கியது .

 

ஆக, தேவைப்பொருளாக இருந்த பெல்ட்டுகள் மெதுவாக ஆபரணமாகவும் ஃபேஷனாகவும் மாற்றம் கண்டது.ஃபேஷன் என்றான பின், பெண்களும் அதை அணியத்தொடங்கி , இன்று எல்லோர் இடுப்புக்களும் பெல்டால் அலங்கரிக்கப்படுகின்றன.

இதன் தேவை ஒவ்வோர் காலகட்டத்திலும் எவ்வாறு மாறுதல் அடைந்திருக்கிறது என்பது ஆச்சர்யமே. கற்கால மனிதன் முதலில் தன் லங்கோட்டியை இழுத்துக்கட்ட கயிற்றை உபயோகிக்கத்தொடங்கினான். இடுப்பில் அரணாளாக அறிமுகமானது இந்த பெல்ட். மனிதனின் உணவுத் தேவைக்கு ஏற்ப, அவன் வேட்டையாடக் கிளம்பியபோது, அவன் வேட்டை ஆயுதங்களை வைப்பதற்கு உடலில் ஒரு கருவி தேவைப்பட, பெல்ட் சற்றே அகலமாக்கப்பட்டு இடுப்பில் குடிபுகுந்தது. வெறும் நூலாக இருந்தது மெதுவாகத் துணி, பின் உலோகம் அதன் பின் தோல் என்று வகை வகையாக உருவாகின.

இதே காலகட்டத்தில் மதங்களும் உருவாகத் தொடங்க, பெல்ட் இவற்றின் மதத் தடயங்களாக மாறின. கெர்டில் எனப்பெயரிடப்பட்டு இந்த பெல்ட்டுகள் ஒரு பாதிரியின் உடையில் ஒரு பாகமாக்கப்பட்டன.

ரோமானியர்களின் சிப்பாய்கள் அவர்கள் ராணுவ முக்கியத்துவத்தை வித விதமான பெல்ட்டுக்கள் மூலம் காட்டினர். அடிமைகள் மட்டும்தான் பெல்ட் இல்லாத உடை அணிந்தனர்.

அதேபோல் ட்யூடானிக் படைவீரர்கள் தங்களை அடிமை வகுப்பினரிடமிருந்து தனிமைப் படுத்தி காட்ட, பளபளக்கும் கத்திகள் இணைந்த பெல்ட்டுகளை உபயோகப்படுத்தினர்

ஆனால் 15ம் நூற்றாண்டில் பெல்ட், ஒரு புதிய முகம் எடுத்தது. ஒரு மனிதனின் அன்றாட உடையின் ஒரு பங்காக அது மாற்றப்பட்டது. ஆனால் அப்போது அவை மிகவும் தளர்வாக இடுப்பில் இடப்பட்டு, ஒரு பெரிய வாலாக அதன் இரு பக்கமும் கால்களுக்கு இடையே தொங்கவிடப்பட்டன.

ரினைசான்ஸ் காலத்தில் பெண்களும் பெல்ட்டுகள் அணிந்தார்கள்.  காரணம் உடலோடு ஒட்டிய உடை என்பது மாறி , உடலைச்சுற்றித் தளர்வாக வழியும் உடைகள் நாகரீகச் சின்னமாக மாற, இந்த உடைகளை அழுத்திப்பிடிக்க இடுப்பு பெல்ட்டுகள் தேவைப்பட்டன.

பெண்களும் இதை அணியத்தொடங்கிய உடன், நாகரீக மதிப்பீட்டுச் சின்னமாகவே மாறியது. ஒருவிதத்தில் பார்த்தால், எப்படிப் போர் வீரர்களின் ராணுவ நிலையைக் காட்ட உபயோகப்படுத்தப்பட்டதோ, அதேபோல் இப்பொது சொல்லியும் சொல்லாமலும் ஒருவரின் பண நிலையைக் காட்டும் பொருளாக மாறி இருக்கிறது.

சமீபகாலத்தில் வந்த ஒரு செய்தி, போலீஸ்காரர்கள் தங்கள் வயிற்று அளவைக் குறைக்காவிட்டால், வேலை போய்விடும் என்ற அச்சுறுத்தல். இது புதிது அல்ல. முதல் உலக யுத்தத்தின் போது ரஷ்யா முதலான நாட்டு வீரர்களுக்கு மிகப் பெரிய அளவில் பட்டையான பெல்ட்டுகளும் அதை விட மகா பெரிய பக்கிள்களும் கொடுக்கப்பட்டன. இந்த பக்கிள்கள் வயிற்றை இறுக்கிப் பிடிப்பதோடு, வீரர்களை மிகவும் நேர்த்தியான உடலமைப்போடு காட்டியது

அமெரிக்காவைப் பொருத்தவரை, 1989க்குப் பிறகு இந்த இறுகிய பெல்ட் அணிவது லேசாக இளக்கப்பட்டு, மிலிட்டரி பெல்ட்டுகள் உடலை இறுக்கிபிடிக்காத வகையில் மாற்றி அமைக்கப்பட்டன. தவிர பெல்ட்டுகள் உடல்ரீதியான தண்டனைகள் கொடுப்பதற்கும் உபயோகப்படத் தொடங்கின.

இந்தியாவைப் பொருத்தவரை, அறணாள் கயிறாக உபயோகிக்கத் தொடங்கியது, பெண்களின் இடுப்பு அணியாக மாறி, தற்போது ஆண்களும் பெண்களும் தங்கள் உடையுடன் ஒரு பாகமாக உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். நாலாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இந்த வகை நகைகள் நம் முன்னோர் அணிந்திருக்கிறார்கள். அதுவே ஒட்டியாணம்.

https://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.