Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!

 

சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

prithika%20Yasini.jpg

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம்.

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/article.php?aid=54723

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்று

1860 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.

   

1935 - எட்வின் ஆம்ஸ்ட்ரோங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.

   

1999 - அவுஸ்திரேலியர்கள் அனைத்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருக்க சம்மதம் தெரிவித்தனர

 

  • 1891 - இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் 'லேடி ஹவ்லொக்' முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.

     

    1911 - விமானம் ஒன்று முதன்முறையாக இலங்கை வந்தடைந்தது.

     

    1963 - இலங்கை பற்றரிகளை உற்பத்தி செய்ய தொடங்கியது.

     

    1969 - ஆசிய அபிவிருத்தி வங்கி முதல் முறையாக இலங்கைக்கு அபிவிருத்தி தேவைகளுக்காக கடன் வழங்கியது.

  • தொடங்கியவர்

உலகம் சுற்றும் ஃபேமிலி!

 

நெடுந்தூர பயணங்களின் அருமை தெரியாத முதல் தலைமுறை நாம் தான். காதில் செவிட்டு மெஷின்  (ஹெட் போன்ஸ்) மாட்டி வெளியுலக சத்தங்களுக்கெல்லாம் ம்யூட் போட்டு விட்டு, சகிக்க முடியாத ஒரு பாடலை  ஃபுல் வால்யூமில் கேட்டு  நொடிக்கு நொடி காதில் ஒரு சின்ன பூகம்பமே உருவாகும் அளவிற்கு பயணிக்கிறோம்.

இங்கிருந்து ஆபீஸ் சென்று வருவதற்குள்ளேயே  டயர்ட் ஆகிடுது. பேசாமல் காரை விட்டு இறங்கி நடந்தே போயிடலாம் என தோன்றும் அளவுக்கு  டிராபிக் பாடாய் படுத்துது என்று நினைப்பவரா நீங்கள்?

ஒரு குடும்பம்  பெங்களூருவிலிருந்து பாரீஸ் வரை 11 நாடுகளை கடந்து, 50 க்கும் மேற்பட்ட நகரங்களை தாண்டி , 111 நாட்களாக பயணித்து தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். இவர்கள் ப்ளைட்டில் பறக்கவில்லை, 22, 780 கி.மீ. காரிலேயே பயணித்து இருக்கின்றனர்.

car_vc1.jpg


இது போன்ற சாதனைகளை மேற்கத்திய நாடுகளில் தனி நபர்கள் செய்ததாக கேள்விபட்டது உண்டு  எ.கா.-  சைக்கிளில் உலகை வலம் வருபவர்கள். ஆனால் இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி இப்படி ஒரு பயணம் சாத்தியமானது என்பது ஆச்சரியம்தான். இவர்கள் பயணத்தில் சந்தித்த இன்னலகள் கொஞ்ச நஞ்சம் இல்லை.நேபாள  பூகம்பம் ஏற்பட்ட சமயம் இவர்கள் மிகவும் பாதிப்படைந்த பகுதிகளுக்கு மிக அருகிலேயே இருந்தனர். வெயில் மலை, பனிச்சரிவுகள், உணவு, விசா அனுமதிகள் என பல பல.

ஆனந்த பெயிட், அவரது மனைவி புனிதா பெயிட் மற்றும் இரு குழந்தைகள் யஷ் , த்ரிஷ்டிதான் இந்த இமாலய பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.

car_vc2.jpg

ஏப்ரல் 8-ம் தேதி பெங்களுரில் தொடங்கிய இந்த பயணம், மத்திய இந்தியாவின் நகரங்களை கடந்து, வாரணாசி, டெல்லி வழியாக பார்டரை தாண்டி நேபாளை அடைந்த சமயம்தான் அங்கு பூகம்பம். ஐந்து நாட்களுக்கு மேல் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர். 'ஓவர்லேண்ட் ஸ்டோரீஸ்' என்ற தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்கள் போட்டு வந்தவர், பூகம்பம் தாக்கிய இடத்திற்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என ஒரு படத்தையும் போட்டிருக்கிறார்.

திபெத், சீனா, மத்தியா ஆசியா என இவர்களது பயணம் பல தட்ப வெப்ப நிலைகளையும், இயற்கை வளங்களையும் தாண்டி சென்றது. சைவ உணவு எல்லா இடங்களிலும் கிடைக்காது என்பதால் இரு சின்ன அடுப்பையும், பாத்திரங்களையும் கூடவே எடுத்து சென்றனர்.

உஸ்பெகிஸ்தான், ஈரான், துர்க்மேனிஸ்தான் என வித்தியாசமான கலாச்சாரங்களை கொண்ட நாடுகளை கண்டு களித்தனர்.

car_vc3.jpg

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி,  ஃபிரான்ஸ் வழியாக பாரீஸ் நகரத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா  வந்தனர். காரை என்ன செய்தார்கள் என்று யோசிக்கிறீர்களா?

குடும்பத்தில் ஒருவராகி விட்ட அந்த காரை விமான கார்கோ மூலம் கொண்டு வந்து விட்டனர். பள்ளிக்கூடம் கற்று தர இயலாத பாடங்களை ,இந்த நீண்ட் நெடும் பயணம் நிச்சயம் கற்பித்து இருக்கும்.

துர்க்மேனிஸ்தானின்  'டோர் டு ஹெல்', கிரீஸின் பழமையான கட்டிடங்கள், கிரிகிஸ்தானின் பனி படர்ந்த மலைகள், துருக்கியின் இயற்கை அழகு, சைவ உணவே கிடைக்காத ஈரான் என எண்ணில் அடங்காத அனுபவங்கள் நிறைந்தது இவர்களது பயணம்.

இவர்கள் குடும்பத்தின் ஐந்தாவது உறுப்பினரான கார், தற்போதுதான் இந்தியா வந்து அடைந்துள்ளது. குடும்பம் ஒரு வழியாக ஒன்று சேர்ந்து விட்டது.

 
  • தொடங்கியவர்

12188961_728270300641134_139907770507993

வாழ்க்கைச் 'சக்கரம்'!!

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்

 
 
t2_2611351f.jpg
 

t1_2611352a.jpg

t3_2611350a.jpg

w1_2611349a.jpg

w2_2611348a.jpg

w3_2611347a.jpg

  • தொடங்கியவர்

12227679_10154049578919578_3390879306650

களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய கலைப்பயணத்தில் ஒருபோதும் களைப்படையாமல் தூங்காவனம் வரை தொடர்ந்து பரிணமித்துக் கொண்டிருக்கும் கமலுக்கு இன்று பிறந்தநாள்!

12106897_1018590378199752_37750906136059

12188185_1018778368180953_77007076468493

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

துபாயில் ஃபிளை எமிரேட்ஸ் விமானத்துடன் பறந்த இரு மனிதர்கள்!(வீடியோ )

 

துபாயில் ஃபிளை எமிரேட்ஸ் நிறுவனத்தின்  ஏர்பஸ் 380 ரக விமானத்துடன் இணைந்து இரு ஜெட் மனிதர்கள் பறந்து சாதனை படைத்துள்ளனர்.

 

 

            

 

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 'ஜெட் மனிதர்'  என்று அழைக்கப்படும் யூவ்ஸ் ரோசி மற்றும் வின்சென்ட் ரெஃபே ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

துபாய் நகரின்  மேல் ஃபிளை எமிரேட்சுடன் இந்த மனிதர்கள் இணைந்து பறப்பது பிரமிக்க வைத்துள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=54815

 

  • தொடங்கியவர்

இன்று

2012 - பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்கு 9 பேர் அடங்கிய குழு பாராளுமன்றில் நியமிக்கப்பட்டது

 
    • 1492 - உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.

         

      1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

         

      1941 - இரண்டாம் உலகப் போர்: 'ஆர்மேனியா' என்ற சோவியத் மருத்துவக் கப்பல் ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சில் மூழ்கியது. 5,000 பேர் வரையில் இதில் கொல்லப்பட்டனர்.

        

      2002 - அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.

 
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12194713_939449292770432_279412279488880

உயரமான அழகி, தமிழின் முன்னணி நடிகை..
அனுஷ்காவின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

12182612_939448062770555_858182241701153

இந்திய சினிமாவின் அற்புத நட்சத்திரம்...
தமிழிலும் 'அழகி'யாக மனம் கவர்ந்த அபூர்வ நடிகை..

  • தொடங்கியவர்

‘தீ' இல்லாத தீபாவளி கொண்டாடலாமே!

no_2611363f.jpg
 

தீபாவளி என்றாலே பட்டாசுதானே. ‘ஒரு நாள் கூத்துக்கு ஏன்டா இப்படி காசைக் கரியாக்குற' என்கிற பெற்றோர்களுக்கும், ‘இன்னிக்கு ஒரு நாள்தானே' என்று பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் கெஞ்சல், கொஞ்சல் விளையாட்டுகளை பரஸ்பரம் இரு தரப்புமே காதில் போட்டுக்கொள்வதில்லை.

தீபாவளி நெருங்க ஆரம்பித்த சமீபத்திய சில வாரங்களாக ‘இந்த தீபாவளியை பட்டாசுகளின்றி பசுமையாகக் கொண்டாடலாமே' என்ற வாசகங்களைத் தாங்கிய பதாகைகளுடன் இளைஞர்கள் பலரின் ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் மாறி மாறி பதிவிடப்பட்டன.

அந்த பிரசாரத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் யார் என்று தேடினால்... அவர்தான் குர்மீத் சபல். அவர் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் காதைக் கொடுப்போமே?

பசுமை தீபாவளி

"பொதுவாக நமது ஊர்கள் எல்லாம் எப்போதும் குப்பைக் கூளமாகக் காட்சி தருகின்றன. தீபாவளி நேரம் சேரும் குப்பைகள் குறித்து தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. குப்பை ஏற்படுவது தவிர, பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் வேதிப் புகை, ஏற்கெனவே மாசடைந்த நமது சூழலை மேலும் மாசுபடுத்துகிறது" என்று சொல்லும் இந்த டெல்லிக்காரர் ஒரு திரைக் கலைஞர்.

"நாம் ஏன் பட்டாசுகள் இல்லாத தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று என் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அதை உடனடியாகச் செயல்படுத்த நினைத்தேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள இளைஞர்களிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர்களும் ஆர்வமாக முன்வந்தார்கள். உடனே விழிப்புணர்வு பதாகைகளைத் தயார் செய்து ஒவ்வொருவரையும் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றினேன். இப்போது அது தேசத்தின் பல மூலைகளுக்கும் சென்றடைந்துள்ளது" என்கிறார் பூரிப்புடன்.

உயிர்ப்புள்ள பிரசாரம்

இந்தப் பிரசாரம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய ஒளிப்படங்கள்தான், இந்த ஆண்டும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பல சமூக வலைதள ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அப்படியானால், இந்தப் பிரச்சாரத்துக்கான தேவை இன்றும் இருக்கிறது என்பதுதானே அர்த்தம்?!

http://tamil.thehindu.com/society/lifestyle/தீ-இல்லாத-தீபாவளி-கொண்டாடலாமே/article7850119.ece

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 07
 

article_1446784577-t.jpg1492 - உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.

1502 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.

1665 - உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.

1893 - கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை, ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1918 - மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு (வைரஸ்) நோய் காரணமாக 7,542 பேர் (20வீத மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.

1931 - மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.

1941 - நாசி ஜெர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.

1983 - ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.

1991 - மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.

1996 - நைஜீரிய விமானம் ஒன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/158468/2015-11-06-04-53-32#sthash.9W07qnAM.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகமே வியக்கும் 12 வயது மாணவி!

 

'மென்ஸா சங்கம்' எனப்படுவது உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் திறமிக்க அறிவாளிகளின் கூட்டமைப்பு ஆகும். இச்சங்கம் நடத்தும் IQ டெஸ்ட் என்று சொல்லக்கூடிய நுண்ணறிவு திறனை சோதிக்கும் தேர்வை எழுதுபவர்களின் மொத்த எண்ணிக்கையில், 98 சதவீதத்தை விட அதிகமாக மதிப்பெண் எடுப்பவர்களே சங்கத்தின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இந்தியாவில் கூட இச்சங்கம் செயல்பாட்டில் உள்ளது. சமீபத்தில் இத்தேர்வை எழுதிய 12 வயது பிரிட்டிஷ் மாணவி எடுத்திருக்கும் மதிப்பெண், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. காரணம், ஏழாம் வகுப்பு மாணவியான நிகோல் பர் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்களை விட அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பதுதான்.

Nikol01.jpg

மென்ஸா தேர்வில் அதிகபட்சமான 162 மதிப்பெண்கள் எடுத்திருக்கும் நிகோல் கூறும்போது,  “கடந்த வார  தேர்வு முடிவுகளை பார்த்து என்னால் நம்பவே முடியவில்லை” என வியக்கிறார்.

சிறு வயதிலிருந்தே அதீத அறிவுதிறனுக்கான அறிகுறிகள் நிகோலிடம் காணப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பாடங்களில் காணப்படும் சிக்கலான கணக்குகளுக்கு கூட ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே வெகு சுலபமாக விடை கண்டுபிடித்து விடுவாராம். மிகவும் கடினமாக உழைக்கும் நிகோல், பள்ளி நேரம் முடிந்த பின்னரும் கூட கூடுதல் நேரம் வேலை பார்த்து பிற வகுப்பு பாடங்களையும் படிப்பாராம்.

படிப்பை தவிர பாட்டு மற்றும் நாடங்களில் ஆர்வமுள்ள நிகோலை இன்று உலகே கண்டு வியக்கிறது.

1946ல் ரோலந்து பெரில் மற்றும் லேன்செலோட் வேர் என்பவர்களால் தொடங்கப்பட்ட மென்ஸா சங்கம், இன்று 100 நாடுகளில் கிட்டத்தட்ட 1.2 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/article.php?aid=50584

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 8
 
 

article_1446785145-5.jpg1520 - டென்மார்க் படைகள் சுவீடனை முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1889 - மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.

1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.

1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

1938 - பாரிஸ் நகரில் ஜெர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.

1939 - மியூனிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1942 - மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.

1950 - கொரியப் போர்: ஐக்கிய அமெரிக்க வான்படையினர் வட கொரிய மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.

1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1977 - கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1987 - வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 - பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/158470/2015-11-06-04-54-27#sthash.CLUqcYKG.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று.
வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.
அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.

புலி கரடியிடம் கூறிற்று:
இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்;
இவனைக் கீழே தள்ளி விடு!

இருக்கலாம் ஆனால்,
இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால்
என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான்.
சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன்
இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.

சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று:
எனக்கு பசியாக இருக்கிறது.
நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால்,
நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான்
கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு,
விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.

அப்போது புலி கரடியிடம் சொன்னது.
இந்த மனிதன் நன்றிகெட்டவன்.
சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!

அதற்கு கரடி சொன்னது:
எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான்
என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது.
இன்னமும் அவன் சரண் புகுந்தவனே.
அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு.
சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும்,
துன்பம் இழைக்க மாட்டார்கள்....

 

  • கருத்துக்கள உறவுகள்

தேள் கொட்டக் கொட்ட அதனை நீரிலிருந்து வெளியே எடுத்துக் காப்பாற்றி ஒரு துறவியின் கதையை மாற்றியமைத்திருக்கிறார்கள்.

 

  • தொடங்கியவர்

ரஷ்ய அதிபர் புதின் - சூப்பர் ஹீரோ அதிபரின் டாப் 14 புகைப்படங்கள்

 

லக நாடுகளின் அதிபர்களில் யாருக்கு இணையத்தில் விசிறிகள்(ஃபேன்ஸ்) அதிகம் தெரியுமா? பராக் ஒபாமா என்றால் நீங்கள் இணையத்தின் ஒரு பகுதியைத்தான் பார்த்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இணையத்தின் ஃபேவரிட் எப்போதும் ரஷ்யாவின் அதிபர் புதின்-தான். ஏன்? புதின்-ன் புகைப்படங்கள்தான்.

 ரஷ்ய அதிபர் புதினுக்கு தன்னை மற்ற அதிபர்களிடம் இருந்து வித்தியாசமாகக் காட்டிக் கொள்வதில் எப்போதுமே விருப்பம் அதிகம். மற்ற நாடுகளின் அதிபர்களின் புகைப்படங்களில் பெரும்பாலும், கோட்சூட் அணிந்துகொண்டு கைகுலுக்கிக் கொண்டிருப்பார்கள் அல்லது நம்மூர் அரசியல்வாதிகள் அரெஸ்ட் ஆகும்போது சிரித்துக்கொண்டே கையசைப்பதுபோல டாடா காண்பித்துக்கொண்டிருப்பார்கள்.

 

ஆனால் புதின், காட்டில் துப்பாக்கியுடன் உலாவுகிறார். சட்டையில்லாமல் குதிரைகளில் வலம்வருகிறார்.  ஃபார்முலா 1 காரில் சீறிப் பாய்கிறார்.  நீர்மூழ்கிக் கப்பலில்  Baikal ஏரியின் ஆழம் பார்க்கிறார். ஜூடோ பயிற்சியில் எதிரியை தூக்கி அடிக்கிறார். இன்னொரு பக்கம் கச்சேரியில் பியானோ வாசிக்கிறார், பாடுகிறார். ஐஸ் ஹாக்கியில் கோல் போடுகிறார். பப்பி நாய்க்குட்டியைத் தூக்கிக் கொஞ்சுகிறார்.

 

எல்லாத்தையும் நீங்களே பாருங்க பாஸ்!

 

putin1.jpg

 

வாட் எ மேன்...!

 putin.jpg
 
டாப்லெஸ் புதின்!
(ஆகஸ்ட் 15, 2007. Dmitry Astakhov/AP)
 
Putin-stares-down-a-young-chick-at-an-Ag
 
ச்சோ க்யூட்ல...!
(அக்டோபர் 11, 2008. REUTERS/RIA Novosti/Alexei Druzhinin/Pool)
 
Putin-in-a-Tree.jpg
 
                                                                                                   ஓவர் ஆக்டிங்                                                                                                        (AFP/GETTY)
 
 
putin-gun.jpg
 
காட்டுக்குள் வேட்டை!
(ஆகஸ்டு15, 2007. REUTERS/RIA Novosti/KREMLIN)
 
putin_si.jpg
 
பாசக்கார நண்பன்ஸ்..!
(RIA Novosti / Alexsey Druginyn)
 
 
putingun.jpg
 
 
ரஷ்யாவின் GRU மிலிட்டரி இன்டெலிஜென்ஸ் தலைமையகத்தில் 'பாயின்ட் & ஷூட்'!
(Reuters)
 
o-PUTIN-HORSE-facebook.jpg
 
குதிரையுடன் கூலிங் கிளாஸில் புதின்!
(Getty)
 
Putin-Drinking.jpg
 
சைபீரியாவின் Khakasiya பகுதியில் இளைப்பாறும்போது!
(ஃபிப்ரவரி 25, 2010 - REUTERS/Ria Novosti/Alexei Druzhinin/Pool)
 
Putin-Horse-Topless-2.jpg
 
என்னா ஸ்டைலான ஃபோட்டோ...!
(ஆகஸ்டு 3, 2009. REUTERS/RIA Novosti/Pool/Alexei Druzhinin)  
 
no-guns-no-problem-putin-also-holds-a-si
 

(டிசம்பர் 18, 2009 - REUTERS/Ria Novosti/Pool/Alexei Druzhinin)

vijayakanth-delhi-press-meet-reactions%2

(இப்ப எதுக்குய்யா சம்பந்தமில்லாம என்ன இழுக்குறீங்க..?)

 
fishing1.jpg
 
'அமெரிக்காவையும் இப்படித்தான் டீல் செய்வேன்!'
(AP)
 
putin-dinner.jpg
 
அந்த வானத்தப்போல மனம் படைச்ச மன்னவனே..!
(மே 9, 2012. . REUTERS/Alexei Nikolsky/RIA Novosti/Pool)  
 
swim.jpg
 
தல...நீங்க ஹீரோ லெவல்....
(ஆகஸ்டு 3, 2009. REUTERS/RIA Novosti/Pool/Alexei Druzhinin)
 
%5BUntitled%5D.jpg

                       புதின் அதிகமாக பியானோவில் வாசிக்கும் இசை 'From What the Motherland Begins?'                                 (செப்டம்பர் 15, 2011. REUTERS/Alexei Nikolsky/RIA Novosti)

இவற்றில் பெரும்பாலான புகைப்படங்கள் புதினுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்டது. அவர் நன்றாக இருக்கிறார் என்று ரஷ்ய மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கவும், உலகத்துக்குச் சொல்லவும் 'அரெஞ்ச்' செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இதனாலே புதின் மீம்களும் இணையத்தில் பிரபலம்.

ஆனாலும், ரசனைக்கார பிஆர் டீமைத்தான் வைத்திருக்கிறார் மனுஷன்!

http://www.vikatan.com/news/article.php?aid=50134

  • தொடங்கியவர்

ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக ஒரு மூலகம்...???

® பெயர்..பெண் (Girl) ?

® குறியீடு .. GL

® பெளதீக இயல்பு

1.திடீர் திடீரென காரணம் இன்றி சூடாகும்.

2.காதல்,அன்புடன் கையாளும் போது உருகக்கூடியது.

3.முறையாக கையாளாதவிடத்து கசந்து விடும்.

® இரசாயன இயல்பு

1.மிக அதிகமான எதிர்வினை கொண்டது.

2.அதிகம் நிலைத்து நிற்பதில்லை.

3.GOLD , DIAMOND, PLATINUM, CLOTHES மற்றும் பெறுமதி மிக்க பொருட்களால் அதிகம் ஈர்க்கப்படக் கூடியது.

® இயற்கை இயல்பு

1.பணத்தை சுலபமாக கறக்க கூடியது.

2.தனிமையில் விடப்படும் போது துரிதமாக ஆவியாகும்.?

® காணக்கூடிய இடம்

1.கண்ணாடிக்கு அருகில்?

2. phone உடன்

 

  • தொடங்கியவர்

மேரி க்யூரி

MARY_2612782f.jpg
 

நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் விஞ்ஞானி

இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவரும், கதிர்வீச்சைக் கண்ட றிந்தவருமான மேரி க்யூரி (Marie Curie) பிறந்த தினம் இன்று (நவம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# போலந்து தலைநகர் வார்சாவில் (1867) பிறந்தார். இயற்பெயர் மரியா சலோமியா ஸ்கோடோஸ்கா. பள்ளி ஆசிரியரான தந்தையிடம் கணிதம், இயற்பியல் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கினார்.

# இவருக்கும், இவரது அக்காவுக்கும் மருத்துவம் படிக்க ஆசை. இவர் வேலை பார்த்து அக்காவைப் படிக்கவைப்பது, பிறகு அவர் வேலைக்குப் போய் இவரைப் படிக்கவைப்பது என்று உடன்படிக்கை செய்துகொண்டனர். அக்கா பாரீஸ் சென்றார். அவருக்கு உதவ ஒரு வீட்டில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தார் மேரி. 6 ஆண்டுகளாக அக்காவுக்கு பணம் அனுப்பினார்.

# அக்காவின் அழைப்பை ஏற்று, பாரீஸ் சென்றார். அங்கு சோர்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் பயின்றார். பகுதிநேர வேலைகள் பார்த்து சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்தினார்.

# பியரி என்ற ஆராய்ச்சியாளரின் அறிமுகம் கிடைத்தது. இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இருவரும் வாழ்விலும் இணைந்தனர். எக்ஸ் கதிர்களை ஆராய்ந்துவந்த விஞ்ஞானி பெக்கரெல், அந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளும் பணியை மேரியிடம் ஒப்படைத்தார். தம்பதிகள் இணைந்து ஆராய்ச்சிகளில் இறங்கினர்.

# யுரேனியம் விலை அதிகம் என்பதால், இவர்களால் வாங்க இயலவில்லை. ஆஸ்திரியாவில் யுரேனியத்தைப் பிரித்தெடுத்த பிறகு, எஞ்சியவற்றை குப்பையில் கொட்டுவதாக கேள்விப்பட்டனர். போக்குவரத்து செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து, அதை கொண்டுவந்தனர். டன் கணக்கில் குப்பை குவிந்தது.

# உரிய கருவிகள், உபகரணங்கள் இவர்களிடம் கிடையாது. எளிமையாக மண்ணைக் கரைத்து, கொதிக்க வைத்து பக்குவம் செய்து, சளைக்காமல் ஆய்வு செய்தனர். யுரேனியக் கதிர் போல 300 மடங்கு ஆற்றல் கொண்ட கதிர்களைக் கண்டறிந்தனர்.

# அந்த கதிர்கள் பட்டு இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையிலும் மேரி, ‘இது திசுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. எனவே நோய் விளைவிக்கும் திசுக்களையும் இதன்மூலம் அழிக்கலாம்’ என்பது தெரியவருவதாக கூறி மகிழ்ந்தார்.

# தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். யுரேனியக் கழிவில் இருந்து பொலோனியம் தனிமத்தைக் கண்டறிந்தார். தொடர் ஆய்வுகளில் கிடைத்த சில படிகங்கள் ஆற்றல் மிக்க கதிர்களை தொடர்ந்து வீசின. இந்த கதிரியக்க ஆராய்ச்சிகளுக்காக பெக்கரெல் மற்றும் க்யூரி தம்பதிக்கு 1903-ல் நோபல் பரிசு கிடைத்தது.

# சாலை விபத்தில் கணவர் பியரி 1906-ல் இறந்தார். சிறிதுகாலம் சோகத்தில் இருந்த மேரி, பின்னர் உறுதியுடன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். கணவர் பார்த்த பேராசிரியர் பணியை பிரான்ஸ் அரசு இவருக்கு வழங்கியது. பாரீஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியை என்ற பெருமையைப் பெற்றார். ரேடியக் கூட்டுப் பொருளின் படிவங்களை பிரித்தெடுத்து, ரேடியம் தனிமத்தை தனியாகப் பிரித்தார். இதற்காக 1911-ல் 2-வது நோபல் பரிசைப் பெற்றார்.

# கதிர்வீச்சால் தன் உறுப்புகள் பாதிக்கப்படுவதை அறிந்தார். ஆனாலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ரேடியத்தைக் கண்டறிந்த தன்னலமற்ற விஞ்ஞானி மேரி க்யூரி உடல்நலம் பாதிக்கப்பட்டு 67-வது வயதில் (1934) மறைந்தார்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-10/article7854526.ece

  • தொடங்கியவர்

12186778_940069049375123_737406924017897

உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய,அவுஸ்திரேலிய அதிவேகப் பந்துவீச்சாளர் ப்ரெட் லீ நேற்று பிறந்தநாள் கொண்டாடினார்.

டெஸ்ட், ஒருநாள், T 20 சர்வதேசப் போட்டி ஆகிய மூன்று வகைப் போட்டிகளிலும் ஹட் ட்ரிக் எடுத்த ஒருவர் லீ மட்டுமே.

  • தொடங்கியவர்
  • இன்று
  • 1506 - இலங்கை முதன்முறையாக புவி வரைபடம் தொடர்பான நூலை வெளியிட்டது.

     

    1640 - போர்த்துகீசரால் நீர்கொழும்பு மீண்டும் கைப்பற்றப்பட்டது.

     

    1941 - ரிட்டிகல மலைப்பகுதி உயரம் கூடியபகுதியாக அறிவிக்கப்பட்டது.

     

    1908 - ராகம தொடக்கம் யா எல வரையான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.

 

 

 

1920 - புனித பைபிள் என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது.

 

1965 - ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

2012 - கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்தனர்.

1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.

   

1963 - ஜப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பலமே வாழ்வு; பலவீனமே மரணம் !

உலகில் சுவாமி விவேகானந்தர் மிகவும் வெறுத்தது ஒன்று உண்டு என்றால், அது 'பயம்'தான்! ''பலமே வாழ்வு; பலவீனமே மரணம்'' என்றார் விவேகானந்தர்.

பயத்தை எப்படி வெல்வது? பயம் யாருக்கு வரும்? தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்க்கே பயம் வரும்.

'இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்கிறார்கள். ஆனால் நான் கூறுகிறேன்... முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே உள்ளன' என்றார் விவேகாந்தர்.

’இளைஞன்’ என்பதற்கு அவர் சொல்லும் இலக்கணம் என்ன தெரியுமா? 'பயமற்றவனே இளைஞன்!'

12190873_1019470944778362_34259906871161

  • தொடங்கியவர்

பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர் எனற அறிய வேண்டுமா..?

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது. பெயரில் என்ன உள்ளது என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் பெயரானது வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

ஒருவரின் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே அவர்களின் பெயர் தான். சில நேரங்களில் அவரவர்களின் விதியை பிரதிபலிக்கும் விதமாகவும் பெயர் உள்ளது.
அப்படிப்பட்ட பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளல்லாம்.

பெயரின் முதல் எழுத்து A to Z:
A: உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.


B: உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


C: உங்கள் பெயர் எழுத்து C-யில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.


D: உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.


E: உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.


F: உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.


G: நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.


H: H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.


I: நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.


J: J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.


K: ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.


L: வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில் அமையும்.


M: M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.


N: N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.


O: O என்ற எழுத்து அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.


P: உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.


Q: Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்


R: உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.


S: S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.


T: எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.


U: அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும். ஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில் பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.


V: V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.


W: W என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.


X: சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.


Y: சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.


Z: இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.

12227667_1071585299548910_81728193160842

இது ஒரு பல்சுவை பதிவு மாத்திரமே.:)

 
  • தொடங்கியவர்

11148735_1071545266219580_86709525396564

உங்களில் எத்தனை பேருக்கு
கல்லெறிந்த ஞாபகம் இருக்கிறது.....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.