Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

தோனியின் சாதனைகளால் மனைவிக்கும், மகளுக்கும் வந்த சிக்கல்

தோனியின் சாதனைகளால் மனைவிக்கும், மகளுக்கும் வந்த சிக்கல்

 

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது தோனியின் மனைவி சாக்ஷிக்கு இப்படி ஒரு சங்கடத்தை அளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கோஹ்லி அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்திய அணியின் வெற்றியை இரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் இரசிகர்களின் கொண்டாட்டம் தோனியின் மனைவி சாக்ஷிக்கு இடையூறாக இருந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சாக்ஷி தோனி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எங்கள் வீட்டிற்கு வெளியே கூட்டம் கூடியுள்ளது. ஹார்ன் அடிப்பதுடன் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். உற்சாக கரகோஷமிடுகிறார்கள். தூங்கும் என் மகளை நீங்கள் எழுப்பப் போகிறீர்கள் (Ppl outside my house ...honking burning fire crackers ...screaming ...u guys r gonna wake up my daughter) என்று ட்வீட்டியுள்ளார் சாக்ஷி.

இது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி என்பதை புரிந்து கொள்ளும் வயது இல்லை என் மகளுக்கு. ஒரு நாள் கூறுகிறேன். என் மகளுக்கு அவரது தந்தை என்ன செய்கிறார் என தெரியாது (I would tell her one day as of now she is too young to understand it was #indpak match ! She doesn´t kno what n who her dad is !!!) என்று சாக்ஷி ட்விட்டரில் கூறியுள்ளார்.
tamil.adaderana
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
யானைகளில் அமர்ந்து போலோ விளையாட்டு
 

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் வருடாந்த போலோ சுற்றுப்போட்டியொன்றில் யானைகளில் அமர்ந்தவாறு போட்டியாளர்கள் போலோ விளையாடினர்.

 

1562831.jpg

 

வெளிநாட்டு அணிகள் உட்பட 10 அணிகளைச் சேர்ந்த 40 பேர் இப் போட்டிகளில் பங்குபற்றினர்.

 

1562832.jpg

 

1562834.jpg

 

1562833.jpg

-.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12068675_1005985526116808_82606804641708

 
 
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பாலின் பிறந்தநாள்
Happy Birthday Tamim Iqbal
  • தொடங்கியவர்

பிரமாண்டமாக காட்சியளிக்கும் வாகனத்தைப் பார்த்ததும் டிராக்டர் என்று நினைத்துவிடாதீர்கள். இது சைக்கிள், ஆச்சர்யமாக உள்ளதுஆ?! இந்தப் பெரி சைக்கிளை உருவாக்கியவர் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜெஃப் பீட்டர்ஸ். 6 மாதங்கள் உழைப்பில் தயாரித்த இந்த சைக்கிளின் உயரம் 7.5 அடி. பெரிய சக்கரங்களை பொருத்தியதால் எடை சுமார் 850 கிலோ. உலகிலேயே அதிக எடை கொண்ட சைக்கிள் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது.

12718383_692811604154718_321707310289740

1935963_692811610821384_6529347029068321

vikatan

  • தொடங்கியவர்

12593850_1005983819450312_18846072384173

நடிகை ரிச்சா கங்கோபத்யாயின் பிறந்தநாள்.
ஒஸ்தி, மயக்கம் என்ன புகழ் நடிகை..
Happy Birthday Richa Gangopadhyay

  • தொடங்கியவர்

1173665_562708657224297_8377478797994763

  • தொடங்கியவர்

12525158_1005983239450370_52530604180543

ஹிந்தி நடிகை, தமிழிலும் 'தாம் தூம்' திரைப்படத்தில் நடித்த கங்கனா ரணவாத்தின் பிறந்ததினம்.
Happy Birthday Kangana Ranaut

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

மகான்... மகிமை!

p42_1.jpg

``எங்களுக்காக வாயில் இருந்து, லிங்கம் எடுத்தார்; குங்குமம் எடுத்தார்; விபூதி எடுத்தார். எங்களால்தான் அவரை ஜாமீனில் எடுக்க முடியவில்லை’’ - வருத்தத்தோடு சொன்னார் பக்தர் ஒருவர்.

- சி.சாமிநாதன்

புலம்பல்

``லஞ்சம் வாங்குற வரைக்கும் இந்த நாடு உருப்படாது. பாரு...

p42_2.jpg

ஐந்நூறு ரூபாய் வாங்கிட்டான்’’ - லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டி டிராஃபிக் போலீஸிடம் பிடிபட்ட ராமன், தன் நண்பனிடம் புலம்பினான்.

- பிரேமானந்த் குமார்

ரிலே ரேஸ்

p42_3.jpg

ஓடாத கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது, மாறி மாறி பல ஃபங்ஷன்களுக்கு... கிஃப்ட் பார்சலின் உறையை மட்டும் மாற்றிக்கொண்டு!

- பாப்பனப்பட்டு வ.முருகன்.

ஃபாரீன் சரக்கு

p42_4.jpg

வெளிநாடு போய் வந்த நண்பனிடம் எல்லோரும் கேட்டார்கள்... ``சரக்கு கொண்டுவந்திருக்கியா மச்சி?’’

- பெ.பாண்டியன்

தாய் வீடு

p42_5.jpg

மூச்சுக்கு முந்நூறு தடவை, `என் அப்பா மாதிரி வராது’ என்றவள், ஒரு சண்டையில் `நான் அம்மா வீட்டுக்குப் போறேன்’ என்றாள்.

- அபிசேக் மியாவ்

அக்கறை

p42_6.jpg

``போன முறை பார்த்ததுக்கு இந்த முறை ரொம்ப இளைச்சிருக்கீங்களே!’’ - கரிசனத்தோடு டாக்டரை விசாரித்தார் பேஷன்ட்!

- கே.லக்ஷ்மணன்

நல்லவன்

p42_7.jpg

போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மாமூல் கொடுத்து, நல்ல பெயர் வாங்கியிருந்தான் வழிப்பறித் திருடன்!

- பெ.பாண்டியன்

தீரா வலி

p42_8.jpg

வெயிலின் கடும் தாக்கத்தில் அவஸ்தையோடு, தாலுகா ஆபீஸ் வாசலில் நின்றுகொண்டிருந்தாள் முனியம்மா, வெள்ள நிவாரண நிதிக்காக!

- கணேசன்

பாலிசி

p42_9.jpg

டூ வீலர் இன்ஷூரன்ஸை ரெனியூவல் செய்யாமல் டிராஃபிக் போலீஸிடம் பிடிபட்டான், லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்!

- பாப்பனப்பட்டு வ.முருகன்

அறியாதது

p42_10.jpg

எல்.கே.ஜி படிக்கும் மகனிடம் ``நீளமான ட்ரெயின், ஒரு பெரிய மரவட்டை மாதிரி இருக்கும்பா’’ என்றேன். ``ட்ரெயின் தெரியும், `மரவட்டை'னா என்னப்பா?’’ என்று கேட்டான் அவன்.

- எஸ்கா

vikatan

  • தொடங்கியவர்

விமானத்தில் மேலும் ஒரு புதிய வகுப்பு!

10391530_1905297756363292_92379516302729

விமான போக்குவரத்தில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்த அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர் லைன் நிறுவனம் முடிவெடுத்தது. அதன்படி, பிசினஸ், எக்ஸிக்யூட்டிவ், எகானமிக்கு அடுத்தபடியாக ஒரு புதிய வகுப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை, எகானமி மைனஸ் அல்லது லாஸ்ட் கிளாஸ் என்கிறார்கள். இருக்கைகள் அருகருகே இருக்கும். ஆனால், டிக்கெட் ரேட் குறைவு

  • கருத்துக்கள உறவுகள்

கங்கணா ரனவூத் சுப்பர் நடிகை...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
1935 : பேர்ஷியாவை ஈரான் என அழைக்குமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை
 

வரலாற்றில் இன்று

மார்ச் - 21

 

689iran-MMAP-md.jpg1413 : ஐந்தாம் ஹென்றி இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி சூடினார்.

 

1800 : ரோம் நகரில் இடம்­பெற்ற கல­கங்­களை அடுத்து கத்­தோ­லிக்கத் திருச்­ச­பையின் தலை­வர்கள் நகரை விட்டு அகற்­றப்­பட்­டதை அடுத்து, வெனிஸ் நகரில் ஏழாம் பயஸ் பாப்­ப­ர­ச­ராகப் பத­வி­யேற்றார்.

 

1801 : பிரித்­தா­னியா மற்றும் பிரெஞ்சுப் படை­க­ளுக்­கி­டையில் எகிப்தின் அலெக்­ஸாந்­தி­ரியா நகரில் போர் இடம்­பெற்றது.

 

1917 : டேனிஷ் மேற்­கிந்­தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்­றன.

 

1933 :  நாசி­களின் முத­லா­வது வதை முகாம், ஜேர்­ம­னியில் அமைக்­கப்­பட்­டது.

 

1935 : பேர்­சியா என அழைக்­கப்­பட்ட நாட்டை ஈரான் எனும் சுதேசப் பெய­ரினால் அழைக்­கும்­படி சர்­வ­தேச சமூ­கத்­திடம்  ரெசா ஷா கோரிக்கை விடுத்தார்.

 

1948 : உருது மட்­டுமே பாகிஸ்­தானின் அரசு மொழி­யாக இருக்கும் என டாக்­காவில் வைத்து முஹ­மது அலி ஜின்னா அறி­வித்தார்.

 

1970 : முத­லா­வது பூமி தினத்­துக்­கான அழைப்பை சான் பிரான்­சிஸ்கோ மேயர் ஜோசப் அலி­யோட்டோ விடுத்தார்.

 

1980 : ஆப்­கா­னிஸ்­தானில் சோவியத் ஆக்­கி­ர­மிப்பை எதிர்த்து மொஸ்­கோவில் 1980 கோடை­கால ஒலிம்பிக் விளை­யாட்­டு­களைப் பகிஷ்­க­ரிப்­ப­தாக ஐக்­கிய அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜிம்மி கார்ட்டர் அறி­வித்தார்.

 

1990 : 75 ஆண்­டு­கால தென் ஆபி­ரிக்க ஆட்­சி­யி­லி­ருந்து நமீ­பியா சுதந்­திரம் பெற்­றது.

 

1994 : ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்­கிய “ஷின்ட்லர்ஸ் லிஸ்ட்” திரைப்­படம் ஏழு ஒஸ்கார் விரு­து­களை வென்­றது.

 

1998 : வட அயர்­லாந்தில் புனித வெள்ளி உடன்­பாடு  எட்­டப்­பட்­டது.

 

1999 : பேர்ட்ரான்ட் பிக்கார்ட், பிரையன் ஜோன்ஸ் ஆகியோர் முதல் தட­வை­யாக வெப்ப வாயு பலூனில்  உலகை சுற்றி வந்து சாதனை படைத்­தனர்.

 

2000 : பாப்ரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார். பாப்பரசர் ஒருவர் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டமை இதுவே முதல் தடவையாகும்.

 

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
70 வருட பழைமையான காதல் கடிதத்தையும் மோதிரத்தையும் மீளப் பெற உதவுமாறு கோரும் பெண்
 

திரு­டர்­களால் திருடிச் செல்­லப்­பட்ட 70 வரு­ட­காலம் பழை­மை­யான காதல் கடி­த­மொன்­றையும் திரு­மண நிச்­ச­ய­தார்த்த மோதி­ரத்­தையும் தான் மீளப் பெறு­வ­தற்கு பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

 

15644emma-netherwood-2.jpg

 

மன்­செஸ்­டரை நகரைச் சேர்ந்த எம்மா நெதர்வூட் எனும் இப்­பெண்ணின் வீட்டில் அண்­மையில் திரு­டர்கள் புகுந்து பொருட்­களை திருடிச் சென்­றனர்.

 

இப் ­பொ­ருட்­களில் 70 வரு­டங்­க­ளுக்­கு முன் தனது பாட்­டிக்கு தனது தாத்தா கொடுத்த காதல் கடி­தமும் திரு­மண நிச்­ச­ய­தார்த்த மோதி­ரமும் அடங்­கி­யி­ருப்­ப­தாக எம்மா தெரி­வித்­துள்ளார். 

 

இரண்டாம் உலக யுத்த காலத்தில் தனது தாத்தா இந்­தி­யாவில் இருந்த காலத்தில் மேற்­படி கடிதத்தை எழு­தினார் எனவும் அக்­கடி­தத்தை தான் பொக்­கி­ஷ­மாக பாது­காத்து வந்­த­தா­கவும் எம்மா தெரி­வித்­துள்ளார். 

 

இந்­ நி­லையில், இக்­ க­டிதம் மற்றும் திரு­மண மோதி­ரத்தின் புகைப்­ப­டங்­களை இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ள எம்மா நெதர்வூட், இப் ­பொ­ருட்­களை எவரும் விற்­ப­னைக்கு கொண்டுவந்தால் இது குறித்து உடனடியாக தனக்கு அறிவிக்குமாறு கோரியுள்ளார். 

-metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தங்கம் வென்ற 'தெருவோரத் தங்கம்'...! -பிரேசிலை அதிர வைத்த சென்னை சிறுமி

 

பிரேசிலில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில்,  தங்கம் உள்பட நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹெப்சிபா. ' இந்த வெற்றியை என்னைப் போன்ற தெருவொரக் குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்' என்கிறார் உற்சாகத்தோடு.

'ஸ்ட்ரீட் சைல்டு யுனைடெட்' என்ற லண்டனைச் சேர்ந்த நிறுவனம், பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கான மினி ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. உலகில் முதல்முதலாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜன்டினா, எகிப்து, மொசாம்பிக், பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த தெருவோரக் குழந்தைகள் பங்கேற்றனர். கடந்த 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடந்த ஸ்ட்ரீட் ஒலிம்பிக் போட்டியில்தான் ஹெப்சிபா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

hepsiba1.jpg

 

பிரேசில் போட்டிக்குச் செல்லும் கடைசி நிமிடம் வரை பாஸ்போர்ட் கிடைக்காமல் தவித்து வந்தார் ஹெப்சிபா. காரணம், தெளிவான முகவரி இல்லாததுதான். சென்னை, ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள அல்லிகுளத்தின் தெருவோர குடிசையில் நீண்டகாலம் இவரது குடும்பம் வசித்து வந்தது. இதன்பிறகு, ஆக்ரமிப்புகளை அப்புறப்படுத்துகிறோம் என்ற பெயரில், வீடற்ற விடுதியில் தங்கியிருந்தார் ஹெப்சிபா. இவரது தந்தை உடல்நலமில்லாமல் இறந்துவிட்டார். இவருடன் பிறந்தது நான்கு பெண் குழந்தைகள். இவர் கடைக்குட்டி. அம்மா ஆராயி பூ வியாபாரம் செய்து வருகிறார். பிரேசில் ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க மெடல், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் என நான்கு பதக்கங்களை அள்ளியிருக்கிறார் அல்லிகுளம் ஹெப்சிபா.

அவரிடம் பேசினேன்.

" மொதல்ல எனக்கு பிரேசில் போக வாய்ப்பு கிடைக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு. அங்க போறதுக்கு பணமும் இல்லை. கருணாலயா அமைப்புக்காரங்கதான் உதவி செய்தாங்க. இப்ப டவுட்டன் கவர்மெண்ட் ஸ்கூல்ல பிளஸ் 1 படிச்சிட்டு இருக்கேன். பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கு போட்டி நடக்குதுன்னு எங்களைக் கூட்டிட்டுப் போறதுக்காக டெஸ்ட் மேட்ச் நடத்துனாங்க. அதுல நான் முதல் ஆளா வந்தேன். ஸ்கூல்ல நடக்கற போட்டிகள்ல பரிசு வாங்கியிருக்கேன். ஆனா, சர்வதேச அளவுல கலந்துக்குவோம்னு நினைக்கல. சென்னையில இருக்கும்போது காலை சாப்பாடுகிங்கறதே கிடையாது. அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பூ விக்கறதால அவங்ககிட்ட எதுவும் கேக்க முடியாது. போட்டிக்குத் தயாராகும்போது முட்டை, சுண்டல்னு நிறைய கொடுத்தாங்க. அதனால நல்லா ஓட முடிஞ்சது. ஜெயிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எப்பவும் போலத்தான் ஓடினேன். நாலு பதக்கம் வாங்குவேன்னு நினைச்சு கூடப் பார்க்கலை சார்..." என்றார் கண்களில் உற்சாகத்தோடு.

ashok.jpg

இதேபோல், சிறுவயதிலேயே பெற்றோரின்  செயல்பாட்டால், வீட்டை விட்டு ஓடிவந்த தர்மபுரி, சுங்கரஹள்ளி பகுதியைச் சேர்ந்த அசோக்,  குண்டு எறிதலில் வெண்கலப்  பதக்கம் வாங்கியிருக்கிறார்.

" எங்க அப்பா பேர் சின்னத்தம்பி. எலக்ட்ரீசியனா இருந்தார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முழுநேர வேலையே சண்டை போடறதுதான். ஒருநாள் ஸ்கூலை விட்டு வீட்டுக்கு வந்தப்ப, ரெண்டு பேரும் இல்லை. சண்டை போட்டுட்டு ஊரைவிட்டு ஓடிப் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. சொந்தக்காரங்க கண்டுக்காததால, தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன்ல நின்ன ரயில்ல ஏறிப் படுத்துட்டேன். சென்னைக்கு வந்ததும் எங்க போறதுன்னு தெரியாம அழுதுட்டு இருந்தேன். கருணாலயா தொண்டு நிறுவனத்துக்காரங்கதான் இப்ப வரைக்கும் சோறு போட்டு வளர்த்துட்டு இருக்காங்க. 2014-ம் வருஷம்,  தெருவோரக் குழந்தைகளுக்கான ஃபுட் பால் போட்டி,  பிரேசில்ல நடந்துச்சு. அந்தப் போட்டியில நேர்மையான ஆட்டத்திற்கான பரிசை எனக்குக் கொடுத்தாங்க. இந்தமுறை குண்டு எறிதல் போட்டியில வெண்கலம் வாங்கியிருக்கேன். இது பத்தாது. அடுத்தமுறை இன்னும் நிறைய பதக்கங்களை வாங்கணும்" என்றார் நம்பிக்கையோடு.

இவர்களைப் போல, ஃபாரெக்ஸ் ரோடு உஷா, சூளை சிலம்பரசன், பீச் ஸ்டேசன் சினேகா என மொத்தம் ஐந்து பேர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். மற்ற மூவருக்கும் பங்கேற்பு சான்றிதழை வழங்கியுள்ளது போட்டியை நடத்தும் நிறுவனம்.

பதக்கக் குவியலுக்குப் பின்னால் இருந்தவர் பால் சுந்தர் சிங். கருணாலயா என்ற அமைப்பின் நிர்வாகியாக இருக்கிறார். அவரிடம் பேசினேன்.

" ஐந்து சிறுவர்களுக்கும் பயணச் செலவாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆனது. நாங்கள் சிரமப்படுவதைப் பார்த்ததும் நான்கு பேருக்கான கட்டணச் செலவை ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லண்டன் அமைப்பே ஏற்றுக் கொண்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தப் போட்டியில் பங்கேற்பதே நமக்கான வெற்றிதான். ஏனென்றால், போதிய அளவில் பயிற்சியை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சிறுவர்களுக்கு நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியெடுக்க அனுமதி கிடைத்தது மிக முக்கியமான விஷயம். ஹெப்சிபாவுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதை அறிந்து, வால்டர் தேவாரம் உதவினார். எல்லாவற்றையும் தாண்டி ஐந்து பதக்கங்களோடு சென்னை திரும்புவோம் என கனவிலும் நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. இந்தப் போட்டியில் அர்ஜண்டினா, எகிப்து, மொசாம்பிக், பாகிஸ்தான் உள்பட பல நாடுகளோடு போட்டி போட்டுக் கொண்டு நமது சிறுவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோரக் குழந்தைகள் வசிக்கின்றனர். அவர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தெருவோர ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. விரைவில் பதக்கங்களோடு சென்னை வருகிறோம்" என தம்ஸ்-அப் காட்டினார் பால் சுந்தர் சிங்.

வாருங்கள் தெருவோரத் தங்கங்களே....!

vikatan

  • தொடங்கியவர்

150 வருடங்களுக்கு பிறகு பூமியில் நடக்கும் அற்புதம்

சுமார்  150  வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகில் இரண்டு  வால் நட்சத்திரங்கள் பயணிக்கவுள்ளதாக சிரேஷ்ட மருத்துவர் தொழில்நுட்ப ஆய்வுக்கூட விஞ்ஞானியான கீர்த்தி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இன்று மற்றும் நாளைய தினங்களில் P252 மற்றும்  PBA14-2016 என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த வால் நட்சத்திரங்கள் ஒரே நேர் கோட்டில் பூமிக்கு அருகில் பயணிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முதல் கி.பி 1770 ல் லேக்ஸஸ் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கு அருகில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

meteor.jpg

virakesari.lk

  • தொடங்கியவர்

12525657_1006616759387018_53213876082823

தமிழில் மட்டுமன்றி பல மொழிகளிலும் முத்திரை பதித்த அற்புத நடிகையும், உலகப்புகழ்பெற்ற நாட்டிய தாரகையுமான ஷோபனாவின் பிறந்ததினம்.

  • தொடங்கியவர்

1536484_693692797399932_8822741892309985

  • தொடங்கியவர்

கருப்பில் கர்வம் கொள்வோம்! #unfairandlovely

 

‘வெள்ளையா இருக்கிற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்’, ‘வெள்ளை நிறம்தான் அழகு’, ‘கருப்புனா அசிங்கம்’, ‘கருப்பா பயங்கரமாவா இல்ல பயங்கர கருப்பாவா’, ‘வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்’ ‘கருவாப்பயலே’ என நம் சமுதாயத்தில் ஆழ படிந்திருக்கிறது வெள்ளை நிறத்தின் மீதான மோகமும் கருப்பு நிறத்தின் மீதான வெறுப்பும்.

ஒரு குழந்தை பிறந்த உடனே கேட்கப்படும் ஒரே கேள்வி, ‘குழந்தை கருப்பா, சிவப்பா’ என்பதாகதானே இருக்கிறது. ஏன் கருப்பாக இருப்பவர்கள் அழகாக இருக்க மாட்டார்களா? களையாக இருப்பவர்கள் கருப்பாக இருந்தால் அவர்கள் அழகு இல்லையா? திருமண வலைதளங்களில் தங்களின் மகளை குறித்து “நிறம்: வெள்ளை” என்று போடுவதில் பெற்றோருக்குதான் எவ்வளவு பெருமை.

மக்களின் மனதில் ஒரு வித தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம், ப்ளீச்சிங், க்ரீம், அழகு பொருட்கள் என ஒரு துறையே இந்த நிற பேதத்திற்கு பின்னால் தழைத்துக் கொண்டிருக்கிறது. பெண்ணின் முகம் தொடங்கி அந்தரங்க பாகங்கள் வரை வெள்ளையாக்கும் கிரீம்கள் இன்று சந்தையில் விற்கப்படுகின்றன.

women_11111.jpg

தெற்காசிய நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த நிறம் சார்ந்த பேதங்களுக்கும் பிரச்னைகளுக்கும் எதிராக,  #unfairandlovely என்ற பெயரில் ஒரு இணையவழி விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர் டெக்சாஸ் பல்கலைகழகத்தின் மாணவர்கள் மூன்று பேர்.

இவர்கள் தொடங்கி வைத்த இந்த #unfairandlovely ஹாஷ்டாக்கில்,  கருப்பு நிறமுடைய பலர் தங்களது புகைப்படங்களை அப்லோட் செய்து தங்களது பெருமிதத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கருப்பாக இருப்பதனால் இவர்கள் வாழ்வில் சந்தித்த பிரச்னைகள் குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஹிட்டடித்து இருப்பதோடு கருப்பு, வெள்ளை நிறங்கள் சார்ந்த பேதங்களை குறித்தும் மக்களை பேச வைத்திருக்கிறது.

புறம் காணும் நிறத்தில் என்ன இருக்கிறது. அகத்தில் இருப்பதே உண்மையான அழகு. சிறு விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றிருக்கும் #unfairandlovely குழுவினரை வாழ்த்துவோம்!

Dark-Skinned South Asian Women Take A Stand Against Colorism With #UnfairAndLovely

CdcTe7WWAAIL8Y8.jpg

 

vikatan

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பேட்மேனும், சூப்பர்மேனும் ஆப்ரிக்காவில் பிறந்திருந்தால்…?

 

லகம் முழுவதும், கோடிக்கணக்கான சூப்பர் ஹீரோ சினிமா ரசிகர்களை உருவாக்கியவர்கள், பேட்மேனும், சூப்பர்மேனும். இவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' திரைப்படம், அடுத்த வாரம் வெளிவர இருக்கிறது.

salim+purush01a.jpg

இந்நிலையில், கென்யா நாட்டைச் சேர்ந்த காமிக் புத்தக ஓவியரான சலீம் புசுரு, பேட்மேன், சூப்பர்மேன், ஜோக்கர், வொண்டர் வுமன் போன்ற சூப்பர்ஹீரோ திரைப்பட கதாபாத்திரங்கள் ஆப்ரிக்காவில் பிறந்திருந்தால் எப்படி இருப்பார்கள் என தன் கற்பனையை கார்ட்டூன் ஓவியங்களாக தீட்டியுள்ளார்.

salim+purush02.jpg

கார்டூன்களை உருவாக்கியது மட்டுமின்றி, அந்த ஆப்ரிக்க கார்ட்டூன் கதாபாத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டிக் கதையையும் உருவாக்கியுள்ளார் சலீம். இதுபற்றி, தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ள சலீம், "உலகம் முழுவதும் 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு, இந்த சூப்பர் ஹீரோக்கள் ஆப்ரிக்கர்களாக இருந்திருந்தால், எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

salim+purush03.jpgஅமெரிக்க கதாபாத்திரங்களுக்கு, வெரும் கருப்பு வண்ணத்தை மட்டும் பூசாமல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், ஆப்ரிக்க பழங்கதைகளுடன் பொருத்தி, வரையத் தொடங்கினேன். ஆப்ரிக்க சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய பின், இவர்கள் யாருடன் சண்டையிடுவார்கள் என யோசித்தேன். அமெரிக்க காமிக் கதாபாத்திரங்கள், ஹிட்லர் தொடங்கி இனவாதம் வரை பல இக்கட்டான சூழ்நிலைகளில் சண்டையிட்டு, மக்களை கவர்ந்துள்ளனர்.

ஆப்ரிக்காவும், வரட்சி, சர்வாதிகாரிகள், ஊழல், வறுமை போன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது. இதில் மாட்டிக்கொள்ளும் மக்கள், எதிர்த்து சண்டையிட துணிவு இல்லாதவர்களாக பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்ப்பவர்களோ, சித்திரவதை செய்யப்படுகின்றனர். சில சமயங்களில் கொலையும் செய்யப்படுகின்றனர். இதனால், ஆப்ரிக்க மக்கள், முகமூடி இட்ட சூப்பர் ஹீரோவை விரும்புவாரா அல்லது தங்களால் முடியாத செயலை செய்யும் தங்களில் ஒருவரை விரும்புவாரா என என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஆப்ரிக்க பேட்மேனை, போர் வீரனுடனும், ஆப்ரிக்க சூப்பர்மேனை, எகிப்தியக் கடவுளுடனும், ஆப்ரிக்க ஜோக்கரை ஊழல்வாதியுடனும், ஆப்ரிக்க வொண்டர் வுமனை உழைக்கும் ஆப்ரிக்கப் பெண்ணுடனும் பொருத்தி, இக்கதாபாத்திரங்களை சலீம் புசுரு உருவாக்கியுள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

 

பங்குனித் திருவிழா     

கோடை இடியெனக் குமுறத் தொடங்கிவிட்டன

திருப்பரங்குன்றம் ராசாத்தி ரேடியோஸ் குழாய் ஸ்பீக்கர்கள்.  

ராத்திரியே வந்திறங்கிவிட்டான் கள்ளிக்குடி ராட்டினக்காரன்.

சனம் மொய்க்கும் சாத்தூர் சேவு  சீலிபுத்தூர் பால்கோவா

கோவில்பட்டி கடலைமிட்டாய் சரக்கோடு

கடை பரப்புகிறார் திருமங்கலம் அண்ணாச்சி.

rupee_symbol.pngநாடக சாம்ராட்' நாராயண பாகவதர்  

வைகுந்தப் பதவி அடைந்தபடியால்

வள்ளித் திருமணத்தை ஒத்திவைத்து

இந்த வட்டம் rupee_symbol.pngதிரைப்படப் புகழ்' திண்டுக்கல் ஜலஜா நடனம்,  

மேலத்தெரு மொக்கை மகளை நேசித்த  

கீழத்தெரு முனியன் மகன்  

காளி கோயில் தண்டவாளத்தில் வெட்டுப்பட்டுக் கிடந்ததைக் கண்டும்

நின்று கொல்லாத தெய்வத்துக்குத்

தேர் என்ன... திருவிழா என்ன?

 - ஸ்ரீதர்பாரதி   

பாட்டி சுட்ட வடை 

ஒரு ஊரில் ஒரு பாட்டி

வடை சுட்டுக்கொண்டிருந்தாள்

அங்கிருந்த ஒரு காக்கா

அதில் ஒரு வடையை வஞ்சித்துக் கவ்வி

அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்து

தின்ன முயலும்போது

தூரத்திலிருந்து தந்திரமாக

சூழ்ச்சியில் விழச்செய்து

அந்த வடையைக் கவ்வி

காட்டுக்குள் ஓடித் தின்றது ஒரு நரி.

அறிந்தும் இன்னமும் அந்த ஊரில்

அந்தப் பாட்டி

வடை சுட்டுக்கொண்டேதான் இருக்கிறாள்.

-  எஸ்.நடராஜன்

 துளிர்க்கும் ஞானம் 

சிறுகாட்டின்

பெருமரங்களுடைத்துச் செதுக்கி

தடதடவென நான்கு மரச் சக்கரங்களுடன்

உருள்கிறது தேர்.

ரத வீதிகளில் கலசத்தை வழிமறித்த

அரசமரக் கிளைகள் வெட்டப்பட்டு

நிலை சேர்ந்து

நூலாம்படை பிடித்த ஏழாம் நாளில்,

துளிர்விட்டிருந்தது அரசம்

சித்தார்த்தனின் ஞானம் என.

 ரா.சென்றாயன்

 வீடு 

ரியல் எஸ்டேட்காரர்களின்

விளம்பரத்துக்காகப்

பயன்படுத்திவிட்டுத்

தூக்கி எறிந்த

ஃப்ளெக்ஸ் பேனரில்

அழகான ஒரு வீடு அமைத்து

நிம்மதியாகத் தூங்குகிறான்

வசிக்க வீடு இல்லாத

ஓர் ஏழை. 

- க.விக்னேஷ்

p56a.jpg

 அரசியல் காலம் 

காகத்தைப் போன்று

கூர்மையான வாய் உங்களுக்கு

கொத்தித் தின்கிறீர்கள்

எவ்வளவு குறுகிய பாத்திரமென்றாலும்.

பாம்பைப் போன்ற உடல் உங்களுக்கு

வளைந்து நெளிந்து சென்றுவிடுகிறீர்கள்

எத்தகு வழியென்றாலும்.

ஒட்டகச்சிவிங்கி போன்ற கழுத்து உங்களுக்கு

எட்டிப்பார்க்கிறீர்கள் எல்லா ரகசியங்களையும்.

வெட்டியானைப் போன்ற மனம் உங்களுக்கு

புன்னகைக்கப் பழகிவைத்திருக்கிறீர்கள்

பிணங்களைப் பார்த்தும்.

ஓவியனைப் போன்ற கலை நெஞ்சம் உங்களுக்கு

அடிபட்டுக்கிடப்பவனின் துக்கத்திலிருந்து

கறுப்பு நிறத்தையும்

வழியும் அவன் குருதியிலிருந்து

சிவப்பு நிறத்தையும் எடுத்து

வண்ணத்துப்பூச்சியொன்று வரைகிறீர்கள்.

கடவுளென்ற எண்ணம் உங்களுக்கு

வரைந்த வண்ணத்துப்பூச்சியை உயிர்ப்பிக்க

அடிபட்டுக்கிடப்பவனின் உயிருக்காக

விழிப்போடு காத்திருக்கிறீர்கள்.

காந்தம் போன்ற ஈர்ப்பு உங்களுக்கு

எந்த மேடையென்றாலும்

எப்படியேனும் ஒட்டிக்கொள்கிறீர்கள்

பார்த்தீனியம் போன்று.

ஆசை உங்களுக்கு

எல்லா இடங்களையும்

ஆக்கிரமிக்க முயல்கிறீர்கள்

உங்களுக்கு மட்டும் குடைபிடிக்கிறீர்கள்

உங்களை மட்டும்

குளிர்பதன அறையில் குடியமர்த்துகிறீர்கள்

உங்களுக்கு வழங்கப்படுகிறது

கைதட்டல்களுடன் மனிதநேய விருது.

 - சௌவி

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

மார்ச் -22

 

690varalaru--DSS.jpg1622 : அமெ­ரிக்­காவின் வேர்­ஜி­னி­யாவில் ஜேம்ஸ்­டவுன் நகரில் அல்­கோன்­கியான் பழங்­கு­டிகள் 347 ஆங்­கில குடி­யேற்­ற­வா­சி­களைப் படு­கொலை செய்­தனர்.

 

1829 : கிரேக்­கத்­துக்­கான எல்­லை­களை  பிரித்­தா­னியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகி­யன வரை­ய­றுத்­தன.

 

1873 : புவேர்ட்டோ ரிக்­கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அடிமை முறையை ஒழிக்க சட்­ட­மி­யற்­றப்­பட்­டது.

 

1939 : இரண்டாம் உலகப் போர்: லித்­து­வே­னி­யா­விடம் இருந்து மெமெல் பிர­தே­சத்தை ஜேர்­மனி கைப்­பற்­றி­யது.

 

1943 : இரண்டாம் உலகப் போர்: பெலா­ரஸின் கஹட்டின் நகர மக்கள் அனை­வரும் நாசி ஆதிக்­க­வா­தி­களால் உயி­ருடன் எரித்துக் கொல்­லப்­பட்­டனர்.

 

1945 : அரபு லீக் அமைக்­கப்­பட்­டது.

 

1952 : இலங்­கையின் தேச­பி­தா­வான முத­லா­வது பிர­தமர் டி.எஸ்.சேன­நா­யக்க, காலி­முகத் திடலில் குதி­ரை­யோட்டப் பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­த­போது மார­டைப்பு ஏற்­பட்டு கீழே வீழ்ந்து மர­ண­ம­டைந்தார்.

 

1960 : ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்ள்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேச­ருக்­கான முத­லா­வது காப்­பு­ரி­மத்தைப் பெற்­றார்கள்.

 

1993 : இன்டெல் நிறு­வனம் முதல் பென்­டியம் சிப்ஸை (80586) அறி­முகம் செய்­தது.

 

1995 : சோவியத் விண்­வெ­ளி­வீரர் வலேரி பொல்­யக்கோவ் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் 438 நாட்கள் தங்­கி­யி­ருந்து சாதனை படைத்­து­விட்டு பூமிக்குத் திரும்­பினார்.

 

2004 : ஹமாஸ் இயக்­கத்தின் இணை ஸ்தாபகர் அஹமட் யாசின் இஸ்­ரே­லிய வான் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்டார்.

 

2012 : இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் போர்க் குற்­றச்­சாட்­டுகள்  குறித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மெனக் கோரும் பிரே­ரணை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டது.

 

2014 : அமெ­ரிக்­காவின் வொஷிங்டன் மாநி­லத்தின் ஒசோ நகரில் மண்­ச­ரி­வினால் 43 பேர் உயி­ரி­ழந்­தனர். 

 

2014 : உகண்டாவிலிருந்து கொங்கோவை நோக்கி அகதிகளை ஏற்றிச்சென்ற படகொன்று  ஆபிரி க்காவின் அல்பேர்ட் ஏரியில் கவிழ்ந்ததால் 251 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

30 வயதுக்குட்பட்டவர்களுக்கு விராட் கோலி சொல்லும் 5 பாடங்கள்!

 

ங்கள் வயது 30க்குள் இருந்து அலுவலகத்தில் பெரிய இலக்குகளை அடைய நினைப்பவரா நீங்கள். அப்படியென்றால் நீங்கள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் இருந்து இந்த 5 விஷயங்களை கற்க வேண்டியது அவசியம். இலக்குகளை அடைவது துவங்கி உங்கள் நெகட்டிவ் விஷயங்களை பாசிட்டிவாக மாற்றுவது வரை கோலியின் அணுகுமுறை நிறைய மேலாண்மை தத்துவங்களோடு ஒத்து போகிறது.

1.jpg

இலக்குகளை சிக்கீரம் எட்டுங்கள்:

அலுவலகம் உங்களுக்கு நிர்ணயித்த இலக்குகளை கொடுக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க முயற்சி செய்யுங்கள். உதாரணமாக ஒரு வருடத்தில் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை 10 மாதத்துக்குள் முடிக்க முயற்சி செய்யுங்கள். இதற்காக நீங்கள் பெரிதாக அலட்டி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாத இலக்குகளை 25 நாட்களில் முடித்து பழகுங்கள் வருட இலக்கு தானாகவே 10 மாதமாக குறைந்துவிடும். இதையே தான் கோலியும் செய்தார். ஆரம்ப காலத்தில் சச்சின் செய்த விஷயங்கள் அவருக்கு முன்னதாக முடித்தார். அதனால்தான் தற்போது  கோலியின் ஆட்டங்களோடு ஒப்பிட்டால் சச்சின் பின்னால் தான் இருக்கிறார் என்கின்றன புள்ளி விவரங்கள்.

ஒரே மாதிரியாக இருங்கள்:

நீங்கள் பொறுமையாகவோ அல்லது அதிரடியாகவோ வேலைகளை முடிப்பவராக இருக்கலாம். உங்கள் நிலையிலிருந்து மாறி அடுத்த நிலையில் வேலை செய்ய போகிறேன் என்று மாறாதீர்கள். உங்கள் செயல்திறனை அதிகப்படுத்துங்கள். ஆனால் அணுகுமுறையை மாற்றாதீர்கள். உங்களுக்கு சிறப்பாக செய்ய தெரிந்த செயலை மட்டும் செய்யுங்கள். கோலி ஆடிய காலங்களில் டிவில்லியர்ஸ், கெயில் ஆகியோர் 360 டிகிரியில் ஷாட்களை ஆடினாலும், தனக்கு வரும் க்ளாஸிக் ஷாட்களால் 360 டிகிரியையும் கோலி கவர் செய்வது க்ளாஸ்.

2.jpg
 

விமர்சனங்களுக்கு பயப்படாதீர்கள்:

உங்கள் அலுவலகத்திலோ அல்லது நீங்கள் இருக்கும் குழுவிலோ 'இவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது, 30 வயது கூட ஆகவில்லை, இவரால் இந்த விஷயங்களை செய்ய முடியாது என்ற விமர்சனங்கள் உங்கள் வேலை சிறப்பாக அமையும் போது எழும், இந்த விமர்சனங்களை ஒரு சதவிகிதம் கூட பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள். உங்களை நம்பி அளிக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்ய துவங்குங்கள். நீங்கள் மிகப்பெரிய உயரங்களை தொடுவீர்கள். ஆட்டத்தை பார்க்காமல் அனுஷ்கா ஷர்மாவோடு ஊர் சுற்றுகிறார், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை, மைதானத்தில் கோவத்தை வெளிப்படுத்துவது அழகல்ல என்ற விமர்சனங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் செயலை சரியாக செய்து நம்பர் ஒன் வீரராக வலம் வருகிறார்.

தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்யுங்கள்!

ஒருமுறை உங்களது வெற்றியை பதிவு செய்துவிட்டால் அதோடு உங்களை நிறுத்தி கொள்ளாதீர்கள். உங்களிடம் இருந்து இரண்டாவது வெற்றி வரவில்லை என்றால் உங்களது முதல் வெற்றி அதிர்ஷ்டம் ஆகிவிடும். அதனால் தொடர்ச்சியாக உங்களை வெற்றி பாதையில் வைத்திருக்க கடுமையான முயற்சியை மேற்கொள்ளுங்கள். டி20, ஒருநாள் டெஸ்ட் போட்டிகள் என எந்த டாஸ்க்கை கொடுத்தாலும் சரியாகவும், தொடர்ந்தும் செய்வது தான் கோலியிடம் நாம் கற்க வேண்டிய எவர்க்ரீன் பாடம்!

4.jpg
 

தலைவனுக்கான ஆட்டிட்யூடோடு இருங்கள்!

உங்களைவிட அனுபவமுள்ள ஒருவரை தாண்டி உங்களிடம் தலைமை பண்பு காணப்பட்டால் அதனை காட்ட ஒருபோதும் தயங்காதீர்கள். நீங்கள் தான் தலைவன். உங்களால் மட்டும் தான் இது முடியும் என்ற ஆட்டிட்யூடோடு இருங்கள். தேவைப்படும் இடங்களில் சீனியர், ஜூனியர் பார்க்காமல் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நீங்கள் தலைவனாக இல்லாத இடங்களிலும் நீங்கள் தனித்து தெரிவீர்கள். தோனி போன்ற அனுபவசாலி கேப்டன் இருக்கும் ஒருநாள், டி20 போட்டிகளில் கோலி கெத்தாக இருப்பதற்கு காரணம் அவரது டெஸ்ட் கேப்டன் ஆட்டிட்யூட் தான். தோல்விகளை கண்டு பயப்படாமல் கெத்து காட்டுவதால் தான் கோலி நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.

30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமல்ல, இலக்குகளை தாண்டி தன்னை நிரூபிக்க ஓடும் அனைவருக்குமே கோலியின் பாடங்கள் பொருந்தும். 30 வயதுக்குட்பட்டவர்களால் கோலியை தன்னோடு எளிதாக ஒப்பிட்டு கொள்ள‌ முடியும். 27 வயதுள்ள கோலி இந்திய அணியை வழிந‌டத்தும் போது 30 வயதுக்குள் உங்கள் துறையில் தலைமை பதவியை எட்ட முடியாத என்ன? உங்களது இலக்குகளை துரத்துங்கள்! கமான் பாஸ்!

 

vikatan

  • தொடங்கியவர்

12473785_693883227380889_620097123324935

மார்ச் 22: உலக தண்ணீர் தினம் இன்று...

  • தொடங்கியவர்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த நடிகர், காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் நினைவு தினம்.

12670752_1007513135964047_48273107157648

  • தொடங்கியவர்
தொடர்ச்சியாக 92 மணித்தியாலங்கள் T V பார்த்து புதிய கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரிய இளையோர்
 

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஐவர் தொடர்ச்சியாக 92 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். 


15666tv-watching.jpg

இடமிருந்து வலமாக: ஜொஹான்னஸ் ஸ்பைகா (19), மார்கஸ் வேல்டேல் (24), ஸிவான் பஜ்கனோவிச் (23), நதீன் பௌஸர் (20), டொமினிக் ஸெல்லர் (24) 


 

19 முதல் 25 வயதான 4 இளைஞர்களும் ஒரு யுவதியுமே இவ்வாறு புதிய சாதனை படைத்துள்ளனர். ஜொஹான்னஸ் ஸ்பைகா (19), மார்கஸ் வேல்டேல் (24), ஸிவான் பஜ்கனோவிச் (23), (நதீன் பௌஸர் (20), டொமினிக் ஸெல்லர் (24) ஆகியோரே தொடர்ச்சியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துள்ளனர். 


சுமார் 60 கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்குப் போதுமான நேரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஆஸ்திரியர்கள் தினமும் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை கருத்திற்கொண்டால் 92 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அவர்களுக்கு 32 நாட்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இந் நிகழ்வில், பங்குபற்று வதற்கு சுமார் 400 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந் நிகழ்வுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் கழிவறை செல்வதற்கு, குளிப்பதற்கு, குட்டித்தூக்கம் போடுவதற்கு என மணித்தியாலத்துக்கு 5 நிமிடங்கள் ஓய்வெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.  


தொடர்ந்து விழித்திருந்து தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவர்கள் சைக்கிள் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டும்,  கோப்பி மற்றும் சக்தியளிக்கும் எனர்ஜி ட்ரிங்ஸ் ரக பானங்களை அருந்திக்கொண்டும் இருந்தனர். 


இறுதிக் கட்டம் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது என இந் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மொரிட்ஸ் ஆர்னோல்ட் ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளார்.

 

இவர்களின் சாதனையை கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந் நிகழ்வில் பங்குபற்றிய ஒரே யுவதியான நதீன் பௌஸர், மிக அதிகமான நேரம் உறங்கியதன் மூலம் இந்நிகழ்வுக்கு தான் தயாராகியதாகக் கூறினார். 

 

ஸிவான் பஜ்கனோவிச் எனும் இளைஞர் கூறுகையில், இந்நிகழ்வில் பங்குபற்றுவதை தனது பெற்றோர் ஆட்சேபித்ததாகவும் ஆனால், கின்னஸ் சாதனை நூலில் தனது பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக தான் இதில் பங்குபற்றியதாகவும் தெரிவித்தார். 

 

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

1779033_1063594813699532_740809309649939

சென்னையில் நடந்த ஃபேஷன் ஷோ ஒன்றில் நமிதா கேட் வாக்...நோ நோ...ஹாட் வாக் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.