Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இயற்கையும் ஓவியமும்!

 

 

‘‘இயற்கை அழகானது. அதை மேலும் அழகாக்கி, நேசிக்கவைப்பதுதான் என் ஓவியங்கள்’’ என்கிறார் நுக்ஸ்யுனோ ஸான் (Nuxuno Xan).

p20a.jpg

p20b.jpg

p20c.jpg 

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள  மார்டீனிக் (Martinique) தீவில் வசிக்கும் நுக்ஸ்யுனோ ஸான், சிறந்த தெரு ஓவியர்.  மதில் சுவர்கள், கட்டடச் சுவர்களை ஒட்டி இருக்கும் மரங்களை மையமாகவைத்து பிரமாண்டமான ஓவியங்களை வரைந்து, ‘Street Art Meets Nature’ என்று பெயர் சூட்டியுள்ளார் இந்த இயற்கை விரும்பி.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஸ்டைலிஷ்ஷா போடலாம்... ஜம்ப்சூட்!

 

 

‘ஜம்ப் சூட்’... அப்படீன்னா என்னனு கேக்குறீங்களா?

aval-16.jpg

டாப், பாட்டம் ரெண்டையுமே சேர்த்து வெச்சு தைத்த மாதிரி ஒரு பேட்டன்தான் ஜம்ப் சூட்!

ஜம்ப் சூட்டுக்கும் (jumpsuit) ராம்பர்ஸுக்கும் (rompers) இடையே ஆடை வடிவமைப்பில் சிறிய மாற்றம் மட்டுமே இருக்கும்.  ஜம்ப் சூட் என்றால் இதன் பேண்ட் நீளமாக இருக்கும். அதுவே ராம்பர்ஸ் என்றால் பாவாடை மற்றும் ஷார்ட்ஸ் வகைகளில் கிடைக்கும்.

p100a.jpg

ஓகே.. இப்ப ஸ்டைலிஷ்ஷான ஜம்ப்சூட் போட்டுக்க டிப்ஸ் தர்றோம் வாங்க!

red-dot.jpg டார்க் கலர் ஜம்ப்சூட்டுக்கு லாங் பேட்டன் பீட்ஸ் செயின்கள் பெர்ஃபெக்ட் சாய்ஸாக இருக்கும்.

(புரியலையாங்க.. முத்துமணி மாலையைத்தான் இப்டி ஸ்டைலா சொன்னோமுங்க!)

red-dot.jpg பேட்டன்ட் வகை டிசைன்கள் உங்கள் சாய்ஸ் என்றால் ஹைஹீல்ஸ் அணிவது சாலச்சிறந்தது

p100b.jpg

(ஹைஹீல்ஸ் போட்டுட்டு அசால்டா நடக்க கூடாது... பீ கேர்ஃபுல்)

red-dot.jpg `அச்சச்சோ... நான் ஒல்லிப் பொண்ணு’னு ஃபீலிங் ஆனீங்கனா... டோண்ட் வொர்ரி. வி-நெக் மட்டும் உங்க சாய்ஸ்ல வேணாம்.

(மத்தபடி ஆல்டைப்பும் ஆப்ட்டுதான்!)

red-dot.jpg ஸ்ட்ராப்லெஸ் ஜம்ப்சூட் போட்டுக்க ஆசை ஆசையா இருந்துச்சுனா, ஓவர் கோட் போட்டுக்கலாம். போடலனாலும் நீங்க க்யூட்தான்.

(இப்படி அப்படி... அப்படி இப்படி!)

red-dot.jpg ஃபுல் பேன்ட் டைப் ஜம்ப்சூட்டுகள் வெயிலுக்குப் புழுக்கமானவைனு தோணுச்சுனா, த்ரீஃபோர்த் பெஸ்ட் சாய்ஸ்.

p100c.jpg

(பார்ட்டிக்கும் போகலாம்... வாக்கிங்கும் போகலாம்)

red-dot.jpg அப்புறம்... டியர் காலேஜ் கேர்ள்ஸ், நீங்கள் உயரம் அதிகம் என்றால் லூஸ் பேன்ட் டைப் ஓ.கே! உயரம்  குறைவு என்றால் பென்சில் ஃபிட் டைப் பேன்ட் சூப்பராக இருக்கும்.

(பெர்ஃபாமன்ஸ்ல பின்னலாமே!)

vikatan

  • தொடங்கியவர்

ஓவியர் எலெனா எஃப்ரிமோவா (Elena Efremova) ரஷ்யாவில் பிறந்து, பிறகு பிரான்ஸ் நாட்டில் செட்டில் ஆனவர். இவர், செல்லும் இடங்களில் உள்ள இயற்கை காட்சிகளை அதேப்போல வரைந்து அசத்திவருகிறார். வரைந்த ஓவியத்தை அதே இடத்தில் வைத்து புகைப்படம் எடுத்து நெட்டில் அப்லோடு செய்கிறார். இப்போது இந்த ஓவியங்கள் வரைல் ஹிட்.

12439167_696302727138939_773978227152797

11235380_696302733805605_792755818410296

1936983_696302713805607_2003957395253346

12512671_696302770472268_522658290559691

12063830_696302773805601_492169042957484

12794594_696302837138928_240614809188158

37021_696302860472259_745231165915775319

1211_696302873805591_2825958486284044687

 

  • தொடங்கியவர்

ஹோம் டெலிவரியில் இது புதுசு!

 

மக்கு தேவையான பொருட்களெல்லாம் ஆட்டோல டெலிவரி ஆகிப் பாத்திருப்பீங்க, இல்ல கொரியர்ல டெலிவரி ஆகிப் பாத்திருப்பீங்க. வானம் வழியா டெலிவரி ஆகறதப் பாத்துருக்கீங்களா? இனிமேல் பார்ப்பீங்க. ஆம்.  அமெரிக்காவின் நெவாடாவில் ஆகாய வழியாக நீர், உணவு மற்றும் முதலுதவிப் பொருட்களை டெலிவரி செய்துள்ளது டுரோன் எனப்படும் பறக்கும் ரோபாட்.

டுரோன் என்பது வேறொன்றுமல்ல. நண்பன் திரைப்படத்தில் விஜய்,  ஒரு கருவியை பறக்கவிட்டு சத்யனின் அறையை கேமரா மூலம் பார்ப்பார் அல்லவா, அதுதான் டுரோன். முதலில் மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த டுரோன்களை,  பொருட்களை டெலிவரி செய்யப் பயன்படுத்த நினைத்தார்கள். அதன் வடிவமைப்பை சற்று மாற்றி, பொருட்களை கவனமாக தாங்கிச் செல்லும் வகையில் டுரோன்களை உருவாக்கியது ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஃபிலிர்டி நிறுவனம்.

trovc5.jpg

பொதுவாக ஆறு ரோட்டார்களைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த டுரோனில், கேமராவும் ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டிருக்கும். அந்த ஜி.பி.எஸ்  உதவியோடு எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும், எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பது புரோகிராமிங் மூலம் டுரோனுக்கு சொல்லப்படும். அதற்குக் கீழ்படிந்து அந்த திசையில் பறந்து, எங்கு பொருளை டெலிவரி செய்ய வேண்டுமோ அந்தக் கட்டடத்தின் முன்பு பொருட்களை வைத்துவிட்டுச் சென்று விடும் இந்த டுரோன். பெருகிவரும் வாகன நெரிசலுக்கு மத்தியில்,  பொருட்களை சரியான நேரத்தில் விரைவாக டெலிவரி செய்ய இது ஒரு மிகப்பெரிய மாற்றாக இருக்கும்.

கடந்த ஜூலை மாதம், முதல் முறையாக அமெரிக்காவின் விர்ஜினியாவிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு நாலரை கிலோ எடையுள்ள மருத்துவப் பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டது. கிராமப்புறமாக இருந்ததால் அந்தப் பகுதியில் பொருட்களை டெலிவரி செய்வது எளிதாக அமைந்துவிட்டது. ஆனால் நகர்ப்புறங்களில் டெலிவரி செய்வது சற்று சிரமமாகக் கருதப்பட்டது. கொச கொசவென வானளவு உயர்ந்து நிற்கும் கட்டடங்களை இடிக்காமல் பறப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றுதானே. அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்தனர். மேம்படுத்தப்பட்ட புரோகிராமிங்குகளோடு அதிக துல்லியமான ஜி.பி.எஸ் என மேலும் மேம்படுத்தப்பட்டது டுரோன். அப்படியான மாறுதல்களுக்குப் பிறகு கடந்த 10ம் தேதி,  நெவாடாவிலுள்ள ஹாவ்தோர்ன்சுக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் அரை மைல் தூரம் வானில் பறந்து, தண்ணீர், உணவு மற்றும் முதலுதவிப் பொருட்கள் உள்ளடக்கிய அந்தப் பார்சலை,  குறிப்பிட்ட அந்த வீட்டின் முன்பு டெலிவரி செய்தது. எங்கு ஃபெயில் ஆகிவிடுமோ என்று அதை மேனுவலாக இயக்கக்கூடியவரும் பார்வையாளர்கள் சிலரும் கண்கானித்துக்கொண்டே இருந்தனர். ஆனாலும் அது தன்னுடைய பணியை வெற்றிகரமாக செய்து முடித்தது.

 trovc2.jpg

இதுகுறித்து டுரோன்களை உருவாக்கும் ஃபிலிர்டி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மேட் ஸ்வீனி கூறுகையில், “ முதல் முறையாக நகர்ப்புறத்தில் பொருட்களை டுரோன் மூலம் டெலிவரி செய்தது மிகப்பெரிய சாதனையாகும். டுரோன்கள் மூலமாக டெலிவரிகள் சர்வசாதாரணமாக நடைபெறும் நாள் வெகுதொலைவில் இல்லை. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த டுரோன்கள் பாதுகாப்பாக பயணித்து,  பொருட்களை சரியான தருணத்தில் டெலிவரி செய்துவிடும்” என்றார். இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக கவர்னர் பிரையன் சாண்டோவலும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இது ஏதோ ஒரு சோதனை முயற்சி அல்ல. அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இந்த டுரோன்களைப் பரிசோதித்துப் பார்க்க ஆறு நகரங்களை சோதனைக் களங்களாகத் தேர்வு செய்துள்ளது. மேலும் அதன் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாசாவும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து டுரோன்கள் மோதிக்கொள்ளாமல் இருக்க,  போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை வடிவமைத்து வருகிறது. டுரோன்கள் மூலமாக,  வான் மார்க்கமாக பொருட்களை டெலிவரி செய்வதுதான் எதிர்கால வழக்கமாக இருக்குமென அமெரிக்க நம்புகிறது. அதற்கான வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள். அமேசான், ஃபிலிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் தங்கள் பொருட்களை டெலிவரி செய்ய டுரோன்களைப் பயன்படுத்துவதில் ஈடுபாடு காட்டி வருகின்றன.

அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களைக் சந்தித்துவரும் நாம்,  இந்த விநியோகத் துறையிலும் பெரும் மாற்றத்தைச் சந்திக்கக் காத்திருக்கிறோம். தினமும் லட்சக்கணக்கில் ஆன்லைனில் ஆர்டர்கள் குவிய,  அவற்றை டெலிவரி செய்ய வானெங்கும் ஆயிரக்கணக்கில் டுரோன்கள் பறந்த வண்ணம் இருக்கப் போகின்றன. எல்லாம் சரி காக்கா குருவிய இடிக்காம இருக்க புரோகிராமிங் போட்டிருக்காங்களா?

vikatan

  • தொடங்கியவர்
மோனாலிசா ஓவியத்தைப் பற்றிய சில இரகசியங்கள்!!!

 

 

monalisha.jpg


உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான்.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது.

இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci).

இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது.

ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது.

மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சிலவற்றைப் பார்ப்போமா!!!


மோனாலிசா யார்?
வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா.

ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

புன்னகையின் இரகசியம்
நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர்.

ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மோனாலிசா கர்ப்பிணியா?
மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையிலேயே லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார்.

மோனாலிசா ஒரு ஆணா?
சில ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர். ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது என்பதாலேயே தான்.


மோனாலிசா லியொனார்டோவின் அம்மா
மேலும் சில ஆய்வாளர்கள் மோனாலிசாவின் ஓவியத்தை ஆராய்ந்ததில், இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது என்று சொல்கிறது.


டா வின்சி தான் மோனாலிசா!
ஒருசில ஆராய்ச்சியாளர்கள், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர்.

மேலும் இந்த ஓவியத்தை நன்கு ஆராய்ந்ததில், டா வின்சிக்கும், ஓவியத்திற்கும் உள்ள ஒற்றுமை நன்கு புலப்படுவதாகவும் கூறுகின்றனர்.


ஆமோன் மற்றும் எலிசா: ஆண் மற்றும் பெண்
சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர்.

ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர்.

ஏன் புருவமில்லை?
மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை.

மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. எனவே இது ஒரு பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளது.


கோல்டன் டிரையாங்கிள்
சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர்.

ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். இதனைப் பற்றி விரிவாக டான் ப்ரௌன் அவரது நாவலில் தெளிவாக கூறியுள்ளார்.

virakesari

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஃபோட்டோ ஷாப் மூலமாக கனவை நிஜமாக்கிய கென்ய பெண்!

 

னவு காணுங்கள், அப்போதுதான் கனவினை வாழ்ந்திட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கென்யாவை சேர்ந்த சீவ்லின் கேட்ஸ் எனும் பெண் தனது கனவை வாழ்ந்திட வித்தியாசமக யோசித்ததால் அவரது கனவு நிஜமாகிவிட்டது.

c4.jpg

ஆம், கென்யாவின் நைரோபியில் வாழ்ந்து வரும் விவசாயின் மகளான சீவ்லினுக்கு ஒரு கனவு இருந்தது அது, சீனாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதுதான். பொருளாதாரம் காரணமாக தனது இந்தக் கனவை நிரைவேற்ற முடியாத சீவ்லின், அவரது நண்பரின் உதவியோடு தனது புகைப்படங்களை சீனாவில் இருப்பதுபோல ஃபோடோ ஷாப் செய்து அவற்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

c3.jpg

"நான் சீனாவுக்கு கிளம்பிவிட்டேன்" என்று, கென்ய விமானம் முன் நின்றபடி ஃபோட்டோ ஷாப் செய்த படத்தை ஃபேஸ்புக்கில் முதலில் வெளியிட்டார். தொடர்ந்து சீன பெருஞ்சுவரில் இருப்பது போன்ற புகைப்படத்தையும், மவுன்ட் ஹுஷான் மலை மீது வெரும் காலில் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இறுதியாக "தி லாஸ்ட் டே ஆஃப் விசிட், பை சீனா" என்று கூறி, சீனக் கோவிலின் முன் சுற்றுலா பயனிகளோடு இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தனது விஷுவல் கனவை நிரைவேற்றினார் சீவ்லின்.

c2.jpg

இந்த ஃபோட்டோ ஷாப் சுற்றுலாவை ஃபேஸ்புக்கில் கண்ட சீவ்லின்னின் நன்பர்கள் "உனது கனவு நனவாகட்டும்" என்று வாழ்த்தியவர்கள் ஒரு பக்கம் இருக்க, மண்ணிப்பது மனித இயல்பு என்பதை கடந்து கலாய்பது மனித இயல்பு என்றாகிவிட்ட காலம் என்பதால், சீவ்லினின் ஃபோட்டோ ஷாப் புகைபடங்களை கலாய்த்து அவரது புகைபடங்களை கொண்டு பல கலாய் புகைபடங்களை ஃபோட்டோ ஷாப் செய்து வெளியிட்டு வருகின்றனர் பல கலியுக கலாய் மனிதர்கள்.

c1.jpg

ஆனால், சீவ்லினின் கனவை நிஜமாக்க நினைத்தார் ஒருவர். சாம் கிசுரு என்னும் கென்ய தொழில் அதிபரான இவர், தனது நண்பர்களின் உதவியோடு சீவ்லின் கேட்ஸ் சீனா சென்று வருவதற்கான விமான டிக்கெட், சீனாவில் தங்குவதற்கு 4 ஸ்டார் ஹோட்டல் என எல்லா செலவுகளையும் ஏற்றுள்ளார். அது மட்டுமின்றி கை செலவிற்கும் பணத்தையும் அளித்து சீவ்லினின் கனவை நனவாக்கி உள்ளார்.

c5.jpg

நான்கு புகைப்படங்களை ஃபோட்டோ ஷாப் செய்து உலக பேமஸ் அடைந்த சீவ்லின், இன்று செம ஹாப்பி. காரணம், அவர் கனவு கண்டார், கனவு கண்டதோடு மட்டுமில்லாமல் அக்கனவினை துரத்தினார். கனவுகளை என்று நாம் துரத்த தொடங்குகிறோமோ அன்று வெற்றி நிச்சயம் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார் சீவ்லின் கேட்ஸ். கூடிய விரைவில் சீவ்லின் தனது ஒரிஜினல் சீன சுற்றுலா புகைப்படங்களை வெளியுடுவார் என நம்புவோம்!

vikatan

  • தொடங்கியவர்

யாழில் நடைபெற்ற திருமண நிகழ்வில்
மீண்டும் நாகரீகமாக மாறும் எம் முன்னோர்களின் செயல்

12524379_994968220580949_882047109294094

10649488_994968870580884_496841161773524

11032365_994970790580692_853951658826632

 

  • தொடங்கியவர்

12671767_1720194881556788_58404932644861

சூரியக் கதிரின் வீச்சுத் தன்மையின் செறிவு காரணமாக.. மத்திய கோட்டிற்கு அண்மையில் அதுவும் இலங்கை மற்றும் மாலைதீவு பிரதேசங்களில் அதி உச்ச வெப்பநிலையாக 30 பாகை செல்சியஸூக்கு மேல் எதிர்வரும் நாட்களில் நிலவலாம்.
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ் நூல் தந்த கிழக்கிலங்கையின் தவப்புதல்வன் சுவாமி விபுலானந்தரின் ஜனன தினம் இன்று.

இவரது தமிழ்ப்பணிகள் அரும் பணிகளைப் போற்றுவோம்.

12321392_1011202405595120_21145831114985

  • தொடங்கியவர்

வலைபாயுதே V 2.0

 

facebook.com/vinayaga.murugan.7:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதியில் சாலை அமைத் துள்ளார்கள். எங்கள் தெருவில் சிமென்ட் சாலை மீது தார் சாலை அமைத்துள்ளார்கள். சுற்றி உள்ள எல்லா பகுதிகளிலும் போர்க்கால நடவடிக்கையாக சாலைகளை அமைத்து வருகிறார்கள். பழைய சாலைகளைப் பெயர்க்காமல் அதன் மீது அப்படியே ஜல்லியையும் தாரையும் கொட்டிவிடுகிறார்கள். புதுச் சாலைகள் வந்ததும் வீடுகள் பள்ளத்துக்குச் சென்றுவிட்டன. சாலைகளின் உயரம் அதிகமானதும் பல வீடுகளில் அவர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தை (கார் பார்க்கிங்) உயரமாக்க ஆரம்பித்துள்ளார்கள். சாலைகளை எவ்வளவு வேண்டு மானாலும் உயர்த்திக்கொண்டே போகலாம். அதற்கு இணையாக வீட்டை எங்களால் உயர்த்த முடியாது. இந்த வருடம் மழை வந்தால், நிலைமை இன்னும் மோசமாகும்போல!

p106c.jpg

facebook.com/saravanan.chandran.77: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்தோ, அதில் பொங்கி வழிந்த தேசப் பெருமிதம் குறித்தோ நான் பேசப்போவது இல்லை. அதில் உள்ள இன்னொரு முக்கியமான விஷயம் பற்றிச் சொல்கிறேன். தோனிக்கும் கோஹ்லிக்கும் இடையிலான பஞ்சாயத்துக்கள் உலகம் அறிந்தவை. ஆனால், களத்தில் இருவருக்கும் இடையிலான மனவேற்றுமைகளை எல்லாம் தாண்டி ஒரு கெமிஸ்ட்ரி உருவானதே, அது விளையாட்டுத் துறையில் மட்டுமே சாத்தியம் என்று, ஒரு விளையாட்டு வீரன் என்ற முறையில் தோன்றுகிறது!

facebook.com/elango.kallanai:

வடிவேலு, போலீஸ் ஏட்டாக வரும் படம் ஒன்றில், பிச்சைக்காரரிடம் இருந்து காசைத் திருடி இடியாப்பம்-பாயா வாங்கித் தின்றுவிடுவார். அப்படித்தான் இருக்கிறது, இந்திய அரசின் செயல்பாடுகள். வரி ஒழுங்காகக் கட்டுவது நடுத்தரவர்க்கம்தான். வங்கிகளுக்கு கடனை ஒழுங்காகத் திருப்பிக்கட்டுவதும் அவர்கள்தான். தங்கள் முதுமைக்காக அவர்கள் சேர்த்துவைக்கும் வைப்பு நிதியிலும் வட்டிக் குறைப்புச் செய்திருக்கிறார்கள். ஆனால், வங்கிகள் மட்டும் மக்களுக்குக் கொடுக்கும் கடனில் வட்டியைக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள். பெட்ரோலியப் பொருட்களின் விலை உலகம் முழுவதும் வீழ்ந்துகிடக்கும்போது, இந்திய அரசு மட்டும் விலையேற்றம் செய்கிறது. நம்மிடம் இருந்து பிடுங்கித் தின்னும் கார்ப்ப ரேட்டுகளுக்கு மின்சாரம், சாலை, குறைந்த வட்டியில் கடன், ஆட்கள்... என எல்லாவற்றையும் வழங்கும் அரசின் லாஜிக்தான் என்ன? `பாரத் மாதா கி ஜே’னு இவனுங்க சொல்லச் சொல்றது `பஜகோவிந்தம்... பஜகோவிந்தம்...’னு கேட்கிறது. இந்த அரசு வரும்போது குறைந்தபட்சம் ஒன்றை எதிர்பார்த்தேன்... `பா.ஜ.க., உள்ளூர் பொருளா தாரத்துக்கு ஒரு கவனத்தை அளிக்கும்’ என. எல்லாத்தையும் விற்றுத் தின்பதில் இவர்கள் காங்கிரஸை விஞ்சிவிட்டார்கள்!

kalai.jpg

twitter.com/kalaignar89: ஜாலி டைம். (கலைஞர் கருணாநிதி)

facebook.com/perumalrajan.d: தென் ஆப்பிரிக்காவின் முரட்டு ஆட்டத்தைக் கண்டு, பெரிதாக விசனப்படத் தேவை இல்லை. தென் ஆப்பிரிக்கா அணி என்பது, `சூது கவ்வும்’ படத்துல வரும் பிரம்மா இன்ஸ் கேரக்டர்போல. ஆரம்பத்துல மாஸ் காட்டுறது போலத்தான் தெரியும். கடைசியா யார் தயவும் இல்லாம அவனுகளே சுட்டுப்புட்டு வெளியேறிருவானுக!

facebook.com/venkatesh.arumugam1: அ.தி.மு.க-விடம் 31 ஸீட்டுகள் கேட்க உள்ளோம் - த.மா.கா # பாஸ்... கட்டுக்கு 52 சீட்டு. மிச்சத்தையும் கேளுங்க!

facebook.com/guru.shree.16: `வானத்தைப்போல’, `ஆனந்தம்’, `திருமதி செல்வம்’... குடும்பத்தைவிட பாசமான குடும்பமா இருக்காங்க `மக்கள் நலக் கூட்டணி’!

twitter.com/MrElani: கிரிஸ்கெயில் அடிக்கிற சிக்ஸருக்கு எல்லாம் தாராளமா எட்டு ரன்கள் தரலாம்!

twitter.com/thalabathe:  தி.மு.க - குடும்ப அரசியலை எதிர்க்கும், அ.தி.மு.க - ஊழலை ஒழிக்கும், பா.ம.க - சாதிக் கொலையைக் கண்டிக்கும், தே.மு.தி.க -  மதுவிலக்கை அமல்படுத்தும். இப்படியாக தேர்தல்...

p106a.jpg

twitter.com/raatworaa:  `ரமணா’ படத்துக்குப் பிறகு `நம்ம பேரு லிஸ்ட்ல இருந்திடுமோ’னு பயப்படுறது தே.மு.தி.க வேட்பாளர் பட்டியலாத்தான் இருக்கும்.

twitter.com/rannjjii:  மொபைலை சர்வீஸ் சென்டரில் கொடுத்துவிட்டு வெளியே உட்காரும்போது, தலைப் பிரசவத்துக்காக மனைவியை ஐ.சி.யூ வார்டுல சேர்த்த கணவன் ஃபீலிங் வருது!

twitter.com/dineshsmc:  உலகத்திலேயே ரொம்ப பொறுமைசாலி யாருன்னா # 2G நெட் பேக் போட்டவங்கதான்!

twitter.com/mani_kuttans: பரீட்சைக்கு `பிட்டும்’ கொண்டுபோக முடியலை... வெளியூருக்கு `துட்டும்’ கொண்டுபோக முடியலை # பறக்கும் படை!

twitter.com/teakkadai: மூன்று நாட்களாக `நான் செல்லும் வாகனத்தில் பணம் இருக்கிறதா?’ என சோதனை செய்கிறார்கள். கடன் வாங்க அலைஞ்சுக் கிட்டிருக்கேன் ஆபீஸர்ஸ்!

twitter.com/rajaa_official: ட்விட்டரை டி-ஆக்ட்டிவேட் பண்ணவே நமக்கு யோசனையா இருக்கு! நாட்ல எப்படி தற்கொலை எல்லாம் பண்றாங்க?

twitter.com/writercsk: `நினைவு தினம்’ என்பது, இறப்பை நினைவூட்ட அல்ல; வாழ்ந்ததை நினைவூட்ட!

twitter.com/mekalapugazh: எல்லா உண்மையும் பேசுகிறீர்களா... உங்களுக்குத் தேவையான உண்மை மட்டும் பேசுகிறீர்களா என்பதில் இருக்கிறது உங்கள் நேர்மை!

twitter.com/gpradeesh: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டெல்லியில் விசாரணை. அமைச்சர்கள் சொத்துக் குவிச்சதைப் பற்றி ஜெயலலிதா விசாரணை ;-)))

p106b.jpg

twitter.com/writercsk: மிடில் கிளாஸ் காரர்கள் சேமிக்க ஒரே வழி இ.எம்.ஐ கட்டுவதுதான்!

twitter.com/withkaran: முப்போகம் விளைந்த நிலத்தை தரிசாகப் பார்க்கும் விவசாயியின் வேதனையைவிடக் கொடியது பங்க் வைத்து அழகுபார்த்த தலையை சொட்டையாகப் பார்ப்பது.

twitter.com/barathi_: பெத்தவங்களுக்கு அடிக்கடி போன் பண்ணுங்க. பேச ஒண்ணும் இல்லாட்டியும் கேட்க நிறைய இருக்கும்!

twitter.com/teakkadai: கட்ட வேண்டாம் ஒட்டிக்கலாம், பாக்கெட் இருக்குன்னா, அதுக்குப் பதிலா வெள்ளை பேன்ட்டே போட்டுக்கலாமே? #வேட்டி

twitter.com/am_pradee: பழைய ஜீன்ஸ்ல திடீர்னு கிடைக்கிற 50 ரூபாய்தான் நடுத்தரவர்க்கதோட அதிகபட்ச அதிர்ஷ்டம்!

vikatan

  • தொடங்கியவர்

பிரிட்டனின் நேர மாற்ற நடைமுறை அறிமுகமாகி 100 ஆண்டுகள்

 

பிரிட்டனில் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் கடிகாரத்தில் நேரம் மாற்றப்படும்.

140425085713_clock_switch_512x288_rianov
 

வசந்தகாலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேரம் மாற்றப்படும்.

வசந்தகாலம் துவங்கும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிரான இன்று, அதிகாலை ஒரு மணி இரண்டு மணியாக மாற்றப்பட்டது.

இலையுதிர் காலமான அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, மீண்டும் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்படும்.

பிரிட்டனில் நேரத்தில் இவ்வாறு மாற்றம் செய்யும் நடைமுறை நடைமுறைக்கு வந்து 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1916-ம் ஆண்டு கோடைகால சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, கடிகாரத்தில் நேரத்தை மாற்றம் செய்வது தொடர்பில் மக்களுக்கு தெளிவான விளக்கம் இருக்கவில்லை.

  150311171804_big_ben_640x360_bbc_nocredi

இதனால் கடிகாரத்தில் எவ்வாறு நேரத்தை மாற்றுவது என்பது தொடர்பில் அரசு சுவரொட்டிகள் மூலம் விளக்கமளித்து வந்தது.

1941-ம் ஆண்டு பிரிட்டன் நேரத்தில் மற்றுமொரு மாற்றம் கொண்டுவரப்பட்டது.

அதாவது ஜிஎம்டி நேரத்திலிருந்து கடிகாரம் இரண்டு மணி நேரம் முன்னோக்கி மாற்றப்பட்டது. அது இரண்டாம் உலகப்போரின் மத்திய காலப்பகுதியாகும்.

இதன் மூலம் எரிசக்தியை சேமிக்கலாம் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், 1947ஆம் ஆண்டு மீண்டும் இரண்டு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டது.

    160218221155_clocks_wall_624x460_getty_n

இதேபோன்றதொரு முயற்சி 1968-ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டு கடிகாரம் ஒரு மணி நேரம் முன்நோக்கி மாற்றப்பட்டு, 1971ஆம் ஆண்டு வரை அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

அதன் பின்னர் மீண்டும் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நேரத்தை மாற்றும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

BBC

  • தொடங்கியவர்

மகளிர் கிரிக்கெட்டையும் பாருங்கப்பா!

 
மித்தாலி ராஜ்
மித்தாலி ராஜ்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முதலில் இரட்டைச் சதம் அடித்த வீரர் யார் தெரியுமா?

“இது தெரியாதா? 2010-லேயே இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் டபுள் செஞ்சுரி அடிச்சிட்டாரே… அதுக்குப் பிறகு வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, மார்டின் கப்டில், கிரிஸ் கெயில் இவங்க எல்லாமே டபுள் செஞ்சுரி அடிச்சிருக்காங்களே… ” இப்படித்தான் கிரிக்கெட்டைப் பெரிதும் ரசிப்பவர்களிடமிருந்து பதில் வரும்.

ஆனால் இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. அது, முதன்முதலாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தவர் ஒரு பெண். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பெலிண்டா கிளார்க். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 229 ரன்களை 1997-லேயே அடித்திருக்கிறார்.

கிரிக்கெட்டைப் பெரிதும் விரும்பும் நாடான இந்தியாவில்கூடப் பெண்கள் ஆடும் கிரிக்கெட்டுக்குப் பெரிதாக ரசிகர்கள் இல்லை. அவர்களைப் பற்றிய செய்திகளும் அக்கறையில்லாமல்தான் பார்க்கப்படுகின்றன. ஆண் கிரிக்கெட் வீரர்களைவிடப் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியம், ஊக்கத் தொகை, பராமரிப்பு வசதி எல்லாமே குறைவாகவே இருக்கின்றன.

1970-களிலேயே இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொழில்முறைப் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கிய பின்னும் இந்த நிலையில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை.

தற்போதுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் குழுவில் இடம்பெற்றுள்ள பலரும் மிகவும் பின்தங்கிய சமூகங்களிலிருந்து பெரும் போராட்டத்துக்குப் பின் வந்திருப்பவர்கள். இந்தியாவில் ஆண்கள் விளையாடும் கிரிக்கெட்டுக்கு இருக்கும் வரவேற்பில் பத்தில் ஒரு பங்குகூட மகளிர் கிரிக்கெட்டுக்கு இல்லாத நிலையிலும், உலக அரங்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, எந்த அணிக்கும் சளைத்தது அல்ல என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ், 164 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 5,000 ரன்களை எடுத்திருப்பவர். உலக அளவில் இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸுக்கு அடுத்து அதிக ரன்களைக் குவித்திருப்பவர் மித்தாலி ராஜ் மட்டுமே.

தற்போது உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் 20:20 நடந்துவரும் நிலையிலாவது மகளிர் கிரிக்கெட் குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

நான் அப்பவே சொன்னேன்.. அந்த மஞ்ச சட்டைய போடலாம்..பச்ச சட்டைய பார்த்தா அடிப்பாய்ங்கன்னு.. கேட்டியா.. tw_tounge:

12321517_1175675269139038_18994708499046

  • கருத்துக்கள உறவுகள்

டேய் நாங்க பாக்கிஸ்தான் இல்லடா அவுஸ்ரேலியா..

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது பச்சை சட்டையை போட்டா நாங்க அடிப்போம்

30 minutes ago, நவீனன் said:

நான் அப்பவே சொன்னேன்.. அந்த மஞ்ச சட்டைய போடலாம்..பச்ச சட்டைய பார்த்தா அடிப்பாய்ங்கன்னு.. கேட்டியா.. tw_tounge:

12321517_1175675269139038_18994708499046

 

  • தொடங்கியவர்
2005 : இந்­தோ­னே­ஷிய பூகம்­பத்­தினால் 1300 பேர் பலி!
 

வரலாற்றில் இன்று

மார்ச் - 28

 

693varalaru-28-03-2016.jpg193 : ரோம் பேர­ரசன் பேர்ட்­டினெக்ஸ் மெய்ப்­பா­து­கா­வ­லர்­களால் படு­கொலை செய்­யப்­பட்டான்.

 

1802 : ஓல்பேர்ஸ் என்­பவர் 2 பேலெஸ் என்ற சிறு­கோளைக் கண்­டு­பி­டித்தார்.

 

1809 : மெடெலின் என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் ஸ்பெயினை பிரான்ஸ் வென்­றது.

 

1814 : சிலியின் வால்­ப­ரெஸ்ரோ நகரில் இடம்­பெற்ற சமரில் அமெ­ரிக்க கடற்­படையை பிரித்­தா­னிய கடற்­படை வென்­றது.

 

1879 : ஆங்­கி­லோ-­சூலு போர்: பிரித்­தா­னியப் படைகள் ஹுலோபேன் நகரில் இடம்­பெற்ற சமரில் படு­தோல்­வி­ய­டைந்­தனர்.

 

1930 : துருக்­கியின் கொன்ஸ்­தான்­தி­நோபிள், அங்­கோரா ஆகிய நக­ரங்கள் இஸ்­தான்புல் மற்றும் அங்­காரா எனப் பெயர் மாற்றம் பெற்­றன.

 

1939 : ஸ்பானிய உள்­நாட்டுப் போரில் பிரான்­சிஸ்கோ பிராங்கோ மட்ரிட் நகரைக் கைப்­பற்­றினான்.

 

1979 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் பென்­சில்­வே­னியா மாநி­லத்தில் ஓடும் ஸஸ்­கு­வான் ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலை­யத்தில் விபத்து ஏற்­பட்­டது.

 

1994 : தென் ஆபி­ரிக்­காவில் சூலு இனத்­த­வர்­க­ளுக்கும் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் இடையில் ஜொஹன்ஸ்பேர்க் நகரில் இடம்­பெற்ற கைக­லப்பில் 18 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1999 : கொசோவோ அல்­பே­னி­யர்கள் 146 பேர் சேர்­பிய படை­யி­னரால் கொல்­லப்­பட்­டனர். 

 

2005 : இந்தோனேஷியாவின் சுமத்ராவில் இடம்பெற்ற 8.7 ரிச்டர் அளவு நிலநடுக்கத்தினால் 1,300 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மார்ச் 28: உலக புகழ்பெற்ற 'தாய்' நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று

10399649_1102546706470785_17653362384014

  • தொடங்கியவர்

இவை பெண்களின் சினிமா..!

 

சினிமா என்ற பொழுதுபோக்கு, கலை என்பதைக் கடந்து, தொழில் என்பதை நோக்கி முன்னேறி ஆண்டுகள் ஆகின்றன. எல்லாவற்றிலும் சம உரிமையை நிலைநாட்ட முயன்றாலும், இன்னமும் சினிமாவில் கதாநாயகனுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கதாநாயகிகளுக்குத் தரப்படுவதில்லை. அவர்களுக்குத் தரப்படும் சம்பளமும்கூட கதாநாயகனோடு ஒப்பிடமுடியாத நிலையில்தான் இருக்கிறது. இந்த எல்லா தடைகளையும் கடந்து பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சமீப காலங்களில் வெளியான, வெளியாக இருக்கும் படங்களின் தொகுப்பு இது!

சோனம் கபூர் (நீர்ஜா)

p10a.jpg

எப்பொதெல்லாம் உங்களை பயம் தொற்றிக்கொள்கிறதோ, அப்போ தெல்லாம் உங்கள் ஆழ்மனதில் இருக்கும் தைரியம் வெளிவரும்... தானாக! 1986-ம் ஆண்டு மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத் துக்குப் பயணிக்க இருந்தது பேன் ஏம் விமானம். கராச்சியில் விமானம் தரை இறங்கியபோது, அதைத் தீவரவாதிகள் கடத்தினர். நீர்ஜா என்ற விமானப் பணிப்பெண் மட்டும் அந்த விமானத்தில் இல்லையென்றால், பயணம்செய்த 300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், நீர்ஜா சாமர்த்தியமாக எடுத்த முடிவுகளால் 360 பயணிகளையும் அவரால் காப்பாற்ற முடிந்தது. தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாது, பயணிகளை மீட்டார் நீர்ஜா. அந்த திக் திக் நிமிடங்களை மையமாகவைத்து எடுக்கப்பட்ட பாலிவுட் படம், ‘நீர்ஜா’. சோனம் கபூர் நீர்ஜாவாக லைக்ஸ் அள்ளிக்கொண்டார். இனி நீர்ஜாவையும், சோனம் கபூரையும் பிரித்துப் யோசிக்க முடியாத அளவுக்கு மனதில் தங்கிவிட்டார் சோனம்.

ப்ரியங்கா சோப்ரா (குவான்டிக்கோ)

p10b.jpg

இந்திய சினிமாவில் நடிகைகளின் வேலிடிட்டி பீரியட் மிகவும் குறைவு. ஆனால், பிரியங்கா சோப்ரா அதை உடைத்து எறிந்து பயணித்துக்கொண்டிருக்கிறார். ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான ப்ரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் வரை அசத்திக்கொண்டு இருக்கிறார். அமெரிக்கத் தொலைக்காட்சி தொடரான ‘குவான்டிக்கோ’வில் (Quantico) முதன்மை வேடத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் ப்ரியங்கா, அடுத்து ‘பே வாட்ச்’ என்னும் ஆங்கிலப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். 1989-ஆம் வருடம் வெளிவந்து ஹிட் அடித்த ‘பே வாட்ச்’ தொலைக்காட்சி தொடரை மையமாக வைத்து இப்படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ப்ரியங்கா விருது வழங்க அழைக்கப்பட்டிருந்தது, பெருமையான தருணம்.

ப்ரீ லார்சன் (ரூம்)

p10c.jpg

ஒரு அறையில் உங்களால் எவ்வளவு நேரம் இருக்க முடியும்? ஒரு கொடியவன், ஜாய் என்ற பெண்ணைக் கடத்தி ஒரு அறையில் அடைத்துவைத்துவிடுகிறான். சில நாட்கள் அல்ல, சுமார் ஏழு ஆண்டுகள். அவள் அந்த அறையின் தனிமையில்தான் காலம் கடக்கிறாள். அவளைப் பல்வேறு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குகிறான் அவன். ஜாய்க்கு குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது, இருவரும் இருப்பது ஒரு சிறை என்பதை தன் குழந்தைக்குப் புரியவைத்து, அங்கிருந்து குழந்தையின் உதவியுடன் தப்பிக்கிறாள் ஜாய். உண்மைச் சம்பவத்தை மையமாகவைத்து எழுதப்பட்ட ‘ரூம்’ நாவலின் தழுவலே ‘ரூம்’ ஹாலிவுட் திரைப்படம். ஜாயாக நடித்த ப்ரீ லார்சன்தான், இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.

எமிலி ப்ளன்ட் (தி கேர்ள் ஆன் தி ட்ரெயின்) 

p10d.jpg

ரேச்சல், அன்னா, மேகன் ஆகிய மூன்று பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகவைத்து எடுக்கப்படும் ஹாலிவுட் படம், தி கேர்ள் ஆன் தி ட்ரெயின் (The Girl on the Train). வேலையில்லாமல் இருப்பதைவிட கொடுமையான விஷயம், நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது. எனவே, வேலைக்கும் செல்வதைப் போலவே, தினமும் ரேச்சல் ரயிலில் பயணிக்கிறாள். ரயில் பயணத்தின்போது, தன் முன்னாள் கணவர் டாம் - அவருடைய மனைவி அன்னா  மகிழ்வாக இருப்பதைப் பார்க்கிறாள். அருகில் இருக்கும் மற்றொரு வீட்டில், ஸ்காட்டும் மேகனும் மிகவும் மகிழ்வாக வாழ்கிறார்கள். அவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டாலும், உள்ளூர மகிழ்கிறாள் ரேச்சல். ஆனால், தினமும் செல்லும் வழி என்பதால், அந்த இருவருக்கும் ஏதோ பிரச்னை என்பதை உணர்கிறாள் ரேச்சல். ஒருநாள் மேகன் மாயமாக மறைகிறாள். ரேச்சல், மேகன், அன்னா மூவரையும் இணைக்கிறது கதை. ரேச்சலாக எமிலி ப்ளன்ட் கலக்கியிருக்கும் இந்தப் படம், அக்டோபர் மாதம் வெளியாக விருக்கிறது.

காஜல் அகர்வால் (டூ லஃப்ஜொன் கி கஹானி)

p10e.jpg

முன்னாள் பாக்ஸர் ஆன சூரஜ், ஒரு நிறுவனத்தில் பார்க்கிங் ஆளாக வேலைக்குச் சேர்கிறான். அங்கு வரும் பார்வையற்ற ஜென்னிக்கும், சூரஜுக்கும் காதல் மலர்கிறது. ஜென்னியின் பார்வைக்காக மீண்டும் பாக்ஸராகக் களமிறங்குகிறான் சூரஜ். இந்தக் கதைப்புலத்தில் வெளிவரவிருக்கும் பாலிவுட் படம், ‘டூ லஃப்ஜொன் கி கஹானி’ (Do Lafzon Ki Kahani). ஜென்னியாக, நம் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தாலும், காஜல் அகர்வாலை பெரும்பாலும் பாடல்களுக்கு மட்டுமே நம் திரையுலகம் பயன் படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், ‘இது காஜலா?!’ என்று வாய்பிளக்க வைக்கிறது. ஜென்னியாக காஜல் ஜெயித்துவிட்டார் என்று கொண்டாடுகிறது பாலிவுட். காஜல் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் அகல விழிக்கும் கண்கள்தான். பார்வையற்றவராக, அந்தக் கண்கள் இருளைப் பேசுவது இன்னும் அழகு.

ஆண்மயமான திரையில்... பெண்களின் முத்திரை!  

vikatan

  • தொடங்கியவர்

இனி நீங்கள் ஸ்பூனையும் சாப்பிடலாம்...

 

பிளாஸ்டிக்’,  சுற்றுச் சூழலியலில் இந்த நூற்றாண்டின் அபாயகரமான வார்த்தை இதுதான்!... நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்ட பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து நாம் அறியாததல்ல. ஆனால் தவிர்க்கும் வழிதெரியாமல்தான் தவித்துக்கொண்டிருக்கிறோம். 

ஒரு ஆய்வின்படி இந்தியாவில் மட்டும் 120 பில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் ஆனது தாலேட், பென்சீல் வினைல் குளோரைடு போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்களின் கலவை. இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதெல்லாம் யாருக்கும் தெரியாத புதிய விஷயமல்ல. இதெல்லாம் தெரிந்தும் நம்மிடையே ’பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளதா?’  எனக் கேட்டால் ’இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.

ஏனென்றால் இதற்கான மாற்று இன்னும் கண்டறியப்படாததே. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல், துணிப்பை என பயன்படுத்தினாலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவை தயார் செய்வதிலிருந்து அது நம் உடலுக்குள் செல்வது வரை பிளாஸ்டிக் நம்மை நேரடியாகவே பாதிக்கிறது. 

spvc2.jpg

இதனை தவிர்க்கும் முயற்சியாக சாப்பிட உபயோகிக்கும் பிளாஸ்டிக் ஸ்பூன்களுக்கு பதில் சாப்பிடக்கூடிய ஸ்பூன்கள் (Eatable Spoons) அறிமுகமாகியுள்ளது. அதாவது கோன் ஐஸ்-ல் க்ரீமை சாப்பிட்டு விட்டு கீழே கோன் வடிவிலான பிஸ்கட் பகுதியையும் சேர்த்து சாப்பிடுவோமே அதுபோல, உணவு உண்டபின் உணவை உண்ண நாம் உபயோகித்த ஸ்பூனையும் சாப்பிடலாம்.

அதெப்படி? என உங்க மைண்ட் வாய்ஸ் கேள்விக்கான விடை கீழே…

இதுபோன்ற ஈட்டபிள் ஸ்பூன்களை ஹைதராபாத்தில் உள்ள பேக்கிஸ் ஃபுட் ப்ரைவேட் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண பீஸாபதி உருவாக்கி இருக்கிறார். இந்த ஈட்டபிள் ஸ்பூன்களை சிறுதானியங்கள், அரிசி, கோதுமை மற்றும் சில பல காய்கறிகளை கொண்டு தயாரித்து உள்ளனர்.  இது மிகவும் சுவை மிகுந்தது மற்றும் நியூட்ரிஷியன் கொண்டதும் கூட.

இதுமட்டுமல்லாமல் இவை இன்னும் பல சுவாரஸ்யமான கலவைகள் கொண்டும் தயாராகிறது. அவை சர்க்கரை, இஞ்சி, இலவங்கப்பட்டை, பூண்டு, சீரகம், புதினா, கருப்பு மிளகு, கேரட், பீட்ரூட் ஆகியவை கொண்டும் தயாரிக்கப்படுகிறது.

அரிசியை உற்பத்தி செய்ய கம்பு போன்ற சிறுதானியங்களை விட 40 மடங்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும். இதனால் இந்த ஸ்பூன்கள் அதிகளவு சிறுதானியங்களை கொண்டே தயாரிக்கப்படுகிறது.

“பிளாஸ்டிக்கை எல்லோரும் பரவலாக உபயோகிக்க பொதுவாக சொல்லப்படும் காரணங்களில் அது மிகவும் சீப்பானது என்பது தான் முதன்மையானது. இந்த காரணத்தை தகர்த்தெறிய விவசாயிகளிடமிருந்து நேரடியாக தானியங்கள் மற்றும் அதற்கான மூலப்பொருள்களையும் பெறுவதன் மூலம் இந்த வகையான ஸ்பூன்களை பிளாஸ்டிக்கை விட மலிவான விலைக்கு விற்பனைக்கு கொண்டுவர முடியும். மேலும் சிறுதானியங்களின் உற்பத்தியையும் பெருக்க முடியும்” என்கிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள்.

ஆகவே, இந்த ஸ்பூன்கள் மிகவும் சுவை மிகுந்தவை, நியூட்ரிஷியன் மிகுந்தது மற்றும் சுற்றுசூழல் பாதிப்பில்லாதது. சாப்பிட விருப்பமில்லாமல் தூர எறிந்தாலும் எளிதில் மட்கக் கூடியது. இனி இந்தவகை ஸ்பூனை நாம் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு நம்மாலான பங்களிப்பாக இருக்கும்.

சிறுதானிய ஸ்பூனை பயன்படுத்துவோம், உபயோகித்து பிளாஸ்டிக் தவிர்ப்போம்!

vikatan

  • தொடங்கியவர்

12891526_1013102678738426_98415098243509

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் நாசர் ஹுசெய்னின் பிறந்தநாள்.
இப்பொழுது இவர் ஒரு முன்னணி நேர்முக வர்ணனையாளர்
Happy Birthday Nasser Hussain

  • தொடங்கியவர்
பிரியங்காவா இது?
 

article_1459082884-1.jpgஉலக அழகியான ப்ரியங்கா சோப்ரா, ஹிந்தித் திரையுலகில் இப்போதும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்திய சினிமா மட்டுமே கலக்கி கொண்டிருந்த ப்ரியங்கா இப்போது ஹொலிவூட்டை கலக்கி வருகிறார்.

அமெரிக்காவில் குவாண்டிகோ என்ற ஹொலிவுட் சீரியலில் நடித்து வரும் பிரியங்கா, சண்டைக்காட்சிகளில் அசத்தினார். அதோடு அந்த சிரீயலில் உடன் நடித்த ஜேக் மெக்குலின் உடன் நெருக்கமாக முத்தக்காட்சிகளில் எல்லாம் துணிச்சலாக நடித்தார்.

இப்போது அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்றுள்ளார். குவாண்டிகோ சீரியலின் சீசன்2வில், குளியல் காட்சி ஒன்றில் ஜேக் மெக்குலினுடன் மிகவும் செக்ஸியாக நடித்திருக்கிறார்.

ப்ரியங்காவின் இந்த குளியல் வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்தவர்கள் எல்லாம் ப்ரியங்காவா இது...? என்று வாயடைத்து போய் உள்ளனர்.

அந்தளவுக்கு ப்ரியங்கா இஸ் ஸோ ஹொட்ட்ட்ட்.......

/www.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரு முடிவோடதான் இருக்காங்க!

ல்லைகள் கடந்து பாகிஸ்தான் - இந்தியா யூத்துகள் சிலர் ஜொள்ளு ஊத்துகிறார்கள் காந்தீல் பலோச்சைப் பார்த்து. யார் இவர்? ‘இந்தியாவை டி20 மேட்ச்சில் தோற்கடித்தால் நிர்வாணமாக டான்ஸ் ஆடுவேன்!’ என்று சொன்ன பாகிஸ்தானிய மாடலேதான். அப்படி என்ன மாடல் என மேய்ந்தால் கிடைத்த தகவல்கள்.

p12a.jpg

ரொம்ப சுமாரான மொக்கையான திராபையான மாடல். கொஞ்சம் கட்டைக்குரலில் பாட்டும் பாடுவார். சரியான மேக்-அப் மோகிதான் இந்த பலோச். எல்லாவற்றையும்விட செம பப்ளிசிட்டி பப்ளிக்குட்டி!

சில நாட்களுக்கு,  ‘மோடி ஜி, உங்க டீ வியாபாரம் எல்லாம் எப்படிப் போகிறது? உங்களுக்கு நான் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். பாகிஸ்தானியர்கள் அன்பு, ஒற்றுமை ஆகியவற்றை நம்புபவர்கள். எங்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை. எங்களைக் கோபப்படுத்திப் பார்க்காதீர்கள். பிறகு நாங்களும் கோபப்பட்டால் உங்களால் தாங்க முடியாது. உங்களை எச்சரிக்கிறேன்’ என்று கிக்கான டிரெஸ்ஸில் வீடியோ ஒன்றை யூ டியூபில் போட்டு பரபரப்பு கிளப்பியவர். மேட்ச்சில் தோற்றுப்போனதற்கு எல்சிடி டி.வி-யைத் தூக்கிப்போட்டு உடைக்கும் மன வலிமை வாய்ந்த பாகிஸ்தானியர்கள் அந்த வீடியோவுக்கு எப்படி ரியாக்ட் செய்யாமல் போவார்கள்? கொண்டாடினார்கள். இந்தியத் தரப்பிலும் பலத்த எதிர்ப்பு வீடியோக்களை பலர் ரெடி செய்து பலோச்சை கலாய்த்தனர். அடுத்து என்ன அதிரடி செய்யலாம் என்று யோசித்தார்.

உலகக் கோப்பையை வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனச் சொன்ன பூனம் பாண்டே ஸ்டைலில் ‘மார்ச் 18-ம் தேதி டி20 மேட்ச்சில் இந்தியாவை பாகிஸ்தான் டீம் தோற்கடித்தால் நாட்டு மக்கள் சார்பாக நிர்வாணமாக நடனமாடி அதை நம் டீமின் கேப்டன் அஃப்ரிடிக்கு சமர்ப்பிப்பேன்!’ என்று பேசி ஒரு வீடியோவை ஷேர் செய்து ஹாட்டாக்கினார்.
 

p12b.jpg

இளசுகள் பலோச்சின் முகநூல் பக்கத்தில் செமத்தியாய் லைக்ஸ் அண்ட் ஷேர் செய்தார்கள். ஆனால், மேட்ச்சில் பாகிஸ்தான்  தோற்றுப்போனதும் ‘என்ன செய்வாரோ பலோச்?’ என எல்லோரும் காத்திருக்க  வேறுவிதமான வீடியோவை அப்லோட் செய்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் டீஷர்ட் அணிந்தபடி அழுதுகொண்டே இந்திய அணியையும் பாகிஸ்தான் அணியையும் திட்டித் தீர்த்தார்.  செயற்கையாக இருந்த அந்த வீடியோவைக் கலாய்த்து மீம்ஸில் தெறிக்கவிட்டனர் இந்தியர்கள். கிருஷ்ணபரமாத்மாவாக டோனி அந்தப் பெண்ணுக்கு ஆடை கொடுத்து மானத்தைக் காப்பாற்றினார் என மீம்ஸ் போட்டுத் தாக்கினர். அதோடு விட்டாரா பலோச்? ‘இந்த டான்ஸ் இந்தியர்களுக்கு!’ என இடுப்பை வெட்டி கில்மா டான்ஸை ஆடி அதை வீடியோவாக்கி வெளியிட, மீண்டும் வைரலில் பலோச்!

ஃபத்வா கொடுக்கலாம் என இஸ்லாமிய அமைப்புகள் கூட்டம் போட்டு யோசித்துக்கொண்டிருக்க... விளம்பர வெறியில் அடுத்து என்ன செய்யப்போகிறாரோ என பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் ஜொள்ளுவிட்டபடி அவர் முகநூல் பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்கிறார்கள்!

vikatan

  • தொடங்கியவர்
1973 : வியட்­நா­மி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் கடைசி துருப்­புகள் வெளி­யே­றின
 

வரலாற்றில் இன்று...

மார்ச் - 29

 

694varalaru-march--29.jpg1632 : கன­டாவின் கியூபெக் பிராந்­தியம் ஆங்­கி­லே­யர்­க­ளி­ட­மி­ருந்து பிரெஞ்­சுக்­க­ளிடம் கைமா­றி­யது.

 

1792 : 13 நாட்­க­ளுக்கு  முன்னால் சுடப்­பட்­டி­ருந்த சுவீ­டனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னன் இறந்தார்.

 

1831 : துருக்­கிக்கு எதி­ராக பொஸ்­னிய எழுச்சி ஆரம்­ப­மா­னது.

 

1849 : இந்­தி­யாவின் பஞ்­சாபை பிரித்­தா­னிய படைகள் கைப்­பற்­றின.

 

1857 : பிரித்­தா­னிய கிழக்­கிந்­தியக் கம்­ப­னியின் வங்­காள இரா­ணு­வத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்­தா­னிய ஆட்­சிக்­கெ­தி­ராக கிளர்ச்­சியை ஆரம்­பித்தார். சிப்பாய் கழகம் எனும் இந்தக் கிளர்ச்சியே பின்னர் இந்­திய விடு­தலைப் போருக்கு முன்­னோ­டி­யாக அமைந்­தது.

 

1867 : கனடா கூட்­ட­மைப்பை ஜூலை 1 இல் உரு­வாக்­கு­வ­தற்­கான பிரித்­தா­னிய வட அமெ­ரிக்க சட்­டத்துக்கு பிரித்­தா­னி­யாவின் விக்­டோ­ரியா மகா­ராணி அரச ஒப்­பு­தலை அளித்தார்.

 

1879 : ஆங்­கி­லோ-­ சூலு போர்: தென் ஆபி­ரிக்­காவில் கம்­பூலா என்ற இடத்தில் பிரித்­தா­னியப் படை­யினர் 20,000 பேர் இக் சூலு படையை வென்­றனர்.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: வி – 1எனும் ஜேர்­ம­னியின் பறக்கும் குண்டு கடைசித் தட­வை­யாக இங்­கி­லாந்தைத் தாக்­கி­யது.

 

1971 : வியட்­நாமின் மைலாய் படு­கொ­லைகள் தொடர்­பாக, அமெ­ரிக்­காவின் லெப்­டினன்ட் வில்­லியம் கலி என்­ப­வ­ருக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 

1973 : தெற்கு வியட்­நா­மி­லி­ருந்து அமெ­ரிக்கப் படை­களின் கடைசி துருப்­புகள் வெளி­யே­றின.

 

1974 : நாசாவின் மரைனர் – 10 விண்­கலம் புதன் கோளை அண்­மித்த முத­லா­வது விண்­கலம் என்ற பெயரைப் பெற்­றது.

 

1999 : இந்­தி­யாவின் உத்­த­ர­ பி­ர­தேச மாநி­லத்தில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 103 பேர் உயி­ரி­ழந்­தனர். 

 

2004 : பல்­கே­ரியா, எஸ்­தோ­னியா, லாத்­வியா, லித்­து­வே­னியா, ருமே­னியா, ஸ்லோவாக்­கியா, ஸ்லோவே­னியா ஆகி­யன நேட்டோ அமைப்பில் முழு­மை­யான அங்­கத்­துவம் பெற்­றன.

 

2004 : அயர்­லாந்து, உண­வ­கங்கள் உட்­பட எல்லா வேலை­யி­டங்­க­ளிலும் புகைத்தலை தடை செய்த முதல் நாடாகியது.

 

2005 : யாஹு 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது.

 

2013 : சீனாவின் திபெத் பிராந்தியத்தில் மண்சரிவு காரணமாக சுமார் 66 பேர் இறந்தனர். 

 

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் உயிர்த்த ஞாயிறு ஊர்­வலம்

 

அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் உயிர்த்த ஞாயிறு தினத்­தை­யொட்டி இடம்­பெற்ற வரு­டாந்த ஊர்­வ­லத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் தமது செல்லப் பிரா­ணிகள் சகிதம் விநோத ஆடை அலங்­கா­ரங்­க­ளுடன் பங்­கேற்­றனர்

மேற்­படி பாரம்­ப­ரிய ஊர்­வ­ல­மா­னது 1880 களி­லி­ருந்து வரு­டந்­தோறும் இடம்­பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

329A8AC700000578-3511677-Doggy_style_Eve
329A8ACB00000578-3511677-image-a-14_1459
329A880700000578-3511677-image-a-47_1459
329A882300000578-3511677-image-a-30_1459
329A881300000578-3511677-image-a-26_1459#

 

virakesari

  • தொடங்கியவர்

கடந்த வருடம், இதே நாளில்..
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மெல்பேர்னில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நியூ சீலாந்தை வீழ்த்தித் தமது ஐந்தாவது உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

12932785_1013985865316774_86667358273571

12592575_1013986188650075_27299122650256

 

  • தொடங்கியவர்

பாடகி சுசீலா கின்னஸ் சாதனை!

ஆசியாவிலேயே அதிகமாக சோலோ பாடல்களை பாடி
பின்னணி பாடகி சுசீலா கின்னஸ் சாதனை

12932820_1103697499689039_56443109149933

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.