Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: கிரிக்கெட் ஸ்பெஷல்

3_2797113f.jpg

6_2797110a.jpg

5_2797111a.jpg

2_2797114a.jpg

1_2797115a.jpg

4_2797112a.jpg

tamil.thehindu

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12901512_1017117825003578_32087003834716

நியூ சீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரருமான ஸ்டீபன் பிளெமிங்கின் பிறந்தநாள்.
Happy Birthday Stephen Fleming

  • தொடங்கியவர்

அடடே! மலரா இது? சாய் பல்லவி ஷாக்கிங் டான்ஸ்! (வீடியோ இணைப்பு)

 

 பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக மலையாளம் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு என பல மொழி ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார்  சாய் பல்லவி. தற்சமயம் சாய் பல்லவி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த கலி பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தியுடன் தமிழ் படமொன்றிலும் அறிமுகமாகவிருக்கிறார். சாய் பல்லவி நல்ல டான்சர் என்பது தெரியும் ஆனால் டாங்கோ நடனத்திலும் கை தேர்ந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ சாய் பல்லவி சிவப்பு நிற ஹாட் உடையில் கலக்கல் ரொமாண்டிக் நடனம்.. 

  • தொடங்கியவர்

நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் கொண்டிருக்கிறது?

  • தொடங்கியவர்

1620484_10154437953204578_60594453533543

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளிப்போம்!... இன்று உலக சிறுவர் புத்தக தினம்

 
 

bookfairvikatan3001.jpgபுத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் உலக சிறுவர் புத்தக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சென்னின் பிறந்த நாளே உலக சிறுவர் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், அதுவும் தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மிகக்குறைந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆறாம் / ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியைப் படிக்கத் திணறுவது தெரிய வந்துள்ளது. தமிழில் தான் எத்தனை படைப்புகள், எத்தனை தரமான எழுத்தாளர்கள், எத்தனை அறிவு பொருந்திய விஷயங்கள். தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி, புத்தகங்களை குழந்தைகள் தொடர்ந்து படிப்பதின் மூலம்  இன்றியமையாத பல உன்னத நலன்களை அளிக்க வல்லது. புத்திக்கூர்மை, அறிவு, சமச்சீரான எண்ண ஓட்டம், ஆழ்ந்த உறக்கம், சகிப்புத்தன்மை, எண்ணத்தில் உறுதி போன்ற நலன்களை பெறுகின்றனர். ஜோகன் டிக்கின்ஸ் என்பவர் “broken the hell)” என்ற புத்தகத்தை தேடி,  பன்னிரண்டு ஆண்டுகளாக 16,000 கி.மீ க்கு மேலாக அலைந்து திரிந்திருக்கிறார். அந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் டிக்கின்ஸ் குடும்பம் , உறவு, பணம், சந்தோசம் என வாழ்வின் ஒரு அத்தியாயத்தையே தொலைத்திருந்தார். ஆனால் அந்த புத்தகத்தை கண்டுபிடித்த தருணத்தில் உலகையே வென்றவரைப்போல் ஆனந்தப்பட்டார். இந்த மகத்தான பிரதியை அச்சாக்கி,  இனிவரும் தலைமுறையினருக்கு கொடுத்துவிடமுடியும் என்பதைவிட வேறென்ன சந்தோசம் இருந்திருக்கும் அவருக்கு வாழ்வில்?

bookkids.jpg

புத்தகங்கள் நம் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடும். காரல்மார்க்ஸின் ஒரு புத்தகம் உலகவரலாற்றையே மாற்றி இருக்கிறது. திருவள்ளுவரின் திருக்குறள், மானுடப்பண்புகளை உலகெங்கிலும் விதைத்திருக்கிறது. பகவத்கீதை திலகரையும், டால்ஸ்டாயின் ஒரு நூல் மகாத்மாவையும் உலகம் போற்றும் உன்னதத் தலைவர்களாக்கி இருக்கிறது.

ஒரு புத்தகமும்,  அதன் வாசிப்பும் நமக்கு ஆயிரம் ஆயிரம் கண்களையும் செவிகளையும் கொடுத்து,  அறிவின் விசாலப்பாதையில்,  உலகின் ஏதோ ஒரு மூலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. மொட்டை மாடியின் குட்டிச்சுவரில் உட்கார்ந்து படித்து கொண்டிருக்கும் நம்மை, விக்கிரமாதித்யன் காலத்திற்கும், ஈழத்தின் போர்ச்சத்தங்களுக்கும் நடுவே தன் அம்மாவைத்தேடி அலையும் குழந்தையின் பரிதவிக்கும் மன நிலைக்கும் கொண்டு சென்றுவிடுகிறது.

bookfair5001.jpg

நம்மால் போகமுடியாத இடத்திற்கெல்லாம் புத்தகம்,  அதன் சாளரத்தின் வழியே கூட்டிப்போகும். நம் கைக்கு எட்டும் தூரத்தில் எவரெஸ்ட்டை கொண்டுவந்து நிறுத்தும் , காலுக்கடியில் கங்கையை ஓடவிடும். தேயிலைத்தோட்டங்களில், ஏகாதிபத்தியத்தின் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் எவனோ ஒருவனுக்காக நம்மை தேம்பி தேம்பி அழவைக்கும்.

அடுத்தவர் மீதான அன்பையும், பாசத்தையும் கரிசனத்தையும், சகோதரத்துவத்தையும் விதைக்கும். வாசிப்பின் வாயிலாகவே சேகுவேராவுக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் சலாம் போட வைக்கும்.

bookreading250.jpgஅலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபோது,  இங்கு எழுதப்பட்ட நூல்களை எடுத்துவரும்படி அந்நாட்டு அறிஞர்கள் கேட்டுகொண்டார்களாம். புத்தகங்களை உருவாக்காத தலைமுறை உலகை மேம்படுத்தாது. புத்தகங்களை வாசிக்க தொடங்கிய பின்புதான் மைனராக இருந்த தலைமுறை மேஜரானது. புத்தகம் புரட்சியை உண்டு பண்ணும். கோடான கோடி மனிதர்களின் இதயங்களில் பட்டாம்பூச்சிகளாக பறக்கவிடும். புத்தகம் ஒரு நல்ல நண்பன். காதல் எப்போதும் கேட்க மட்டுமே செய்யும். நட்பும் புத்தகமும் தான் கொடுக்க மட்டுமே செய்யும்.

படிக்க நேரம் ஒதுக்குவோம். புத்தகத்திற்கு பணம் ஒதுக்குவோம். அப்போதுதான் இந்த உலகம் நம்மை ஒதுக்காமல் இருக்கும். இந்த நாளில், குழந்தைகளுக்கு நல்ல அறிவு சார்ந்த புத்தகங்களை பரிசளித்து அவர்களை படிக்க செய்யலாம். எதிர்கால தலைமுறை வாசிப்பு பழக்கம் இல்லாமல் வளர்வது சமூகத்தை பின்னோக்கி இழுத்துச்சென்றுவிடும். இன்றே உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்கும் முதல் அடியை எடுத்து வையுங்கள். குழந்தை விரும்பும் ஒரு அழகிய புத்தகத்தை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

vikatan

  • தொடங்கியவர்

ஏப்ரல் 2: டோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற தினம் இன்று.. (2011)

21710_1107784572613665_30215821397200101

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

`மாயா' சூப்பர் ஹிட் அடித்ததில் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. தாஸ் துரைசாமி இயக்கும் இந்தப் படத்தில், நயன்தாராவுக்கு இணையாக கார் ஒன்று படம் முழுக்க வருகிறதாம். நயன்தாராவின் அப்பாவாக தம்பி ராமையா நடித்திருக்கும் இந்தப் படம், ஃபேன்டசி த்ரில்லர் கலந்த படமாம்!

p84a.jpg

`Standing on an apple box', ஐஸ்வர்யா தனுஷ் தனது அப்பா ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியிட இருக்கும் புத்தகம். `என் அப்பா பற்றி நிறையப் பேர் எழுதியிருக் கிறார்கள். ஆனால், ஒரு மகளின் பார்வையில் எழுதப்படும் முதல் நூல் இது. குழந்தைப் பருவத்தில் இருந்தே அப்பா நிறைய அறிவுரைகள், தத்துவங்கள் என்னிடம் சொல்வார். அவற்றை இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறேன். என் கணவர் தனுஷ், எங்களுக்குள் இருந்த காதல், திருமணம், இரண்டு குழந்தைகள் என, திருமண வாழ்க்கை பற்றியும் இதில் எழுதிக்கொண்டிருக் கிறேன்'' என மகிழ்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

p84b.jpg

`குங்ஃபூ யோகா' படப்பிடிப்புக்காக இந்தியா வந்திருக்கிறார் ஜாக்கி சான். ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையில் நடைபெறும் ஷூட்டிங்கைப் பார்ப்பதற்காகவே வெளிநாட்டில் இருந்தெல்லாம் டூரிஸ்ட்டுகள் குவிகிறார்களாம்.சீனாவில் உள்ள டெரகோட்டா வாரியர்ஸ் மியூஸியத்தின் பேராசிரியர் ஜாக்கி சான், அவரது டீமுடன் இந்தியாவின் மகத சாம்ராஜ்யத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார். அவர்கள் கண்டுபிடிக்கும் புதிய விஷயங்கள், அதில் இருந்து முளைக்கும் வில்லன்களை ஜாக்கி சான் அண்ட் கோ எப்படிச் சமாளிக்கிறது என்பதுதான் கதை. பாலிவுட் ஸ்டைலில் டான்ஸ் ஆடியிருக்கிறார் ஜாக்கி!

p84c.jpg

`நான் ஒரு ஹாலிவுட் மாடல். ஆனால், ஹாலிவுட் படங்களில் நடித்தது இல்லை. இப்போது இந்தியாவின் ஹாலிவுட் படமான `2.0’வில் நடிக்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது' எனப் பூரிக்கிறார் ஏமி ஜாக்சன். ` அதில் நான் பெண் ரோபோவாக நடிக்கவில்லை. மிகவும் வித்தியாசமான, நீங்கள் கற்பனை செய்யமுடியாத ரோலில் நடிக்கிறேன்' என ஹின்ட் கொடுக்கும் ஏமி,  ஸ்டன்ட் காட்சிகளில் எகிறிப் பறந்து நடித்திருக்கிறார்.

p84d.jpg

கோலிவுட் பார்ட்டிகளுக்குப் பிரபலமானவர் த்ரிஷா. சாதாரண பார்ட்டிகளுக்கே டிரெஸ்கோட் இருக்கும் நிலையில் த்ரிஷாவின் பார்ட்டிக்கு இருக்காதா? பிகினி டிரெஸ்தான் பார்ட்டிக்கு வருபவர்களுக்கு த்ரிஷா கொடுத்த டிரெஸ்கோட். 30 வயதைக் கொண்டாடும்விதமாக தன் பள்ளி, கல்லூரித் தோழிகள் அனைவரையும் பிகினி உடையில் வரவழைத்துக் கொண்டாடியிருக்கிறார் த்ரிஷா. `சென்னையில் இப்போது அடிக்கிற வெயிலுக்கு பிகினிதான் சரியா இருக்கும்' என்கிறார் த்ரிஷா.

p84e.jpg

p84f.jpg

தோனியைத் தொடர்ந்து சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படம் ஆகிறது. சானியாவின் நெருங்கிய நண்பரான ஃபாரா கான் இயக்கும் இந்தப் படத்தில், சானியாவாக நடிக்க இருப்பது பரிணீதி சோப்ரா.

`என் வாழ்க்கை வரலாறை நானேதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதி முடித்து எடிட்டிங்குக்கு அனுப்பும்போது எல்லாம் புதிதாக என் வாழ்க்கையில் ஏதாவது நடக்கிறது. அதை மீண்டும் எழுதி புத்தகத்தில் சேர்த்து இருக்கிறேன். விரைவில் பயோகிராஃபி புத்தகம் வரும். அதன் பிறகு திரைப்படம் வெளியாகும். பரிணீதி சோப்ரா என்னைப்போலவே இருக்கிறார். அவர் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய சாய்ஸ்தான்' என்கிறார் சானியா சந்தோஷமாக!

vikatan

  • தொடங்கியவர்

12891049_1017965901585437_20271016727933

அவுஸ்ரேலிய அணிக்கு உலக கிண்ணத்தை கடந்த ஆண்டில் வென்று கொடுத்த Michael Clarke இன் பிறந்த நாள் இன்று.
மனிதநேய குணமும் மகத்தான துடுப்பாட்ட திறமையும் கொண்ட மைக்கல் கிளாக்கிற்கு இன்று வயது 35 ஆகின்றது

  • தொடங்கியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தோழிக்காக மொட்டை அடித்துக் கொண்ட மாணவர்கள்! (வீடியோ)

கீமோதெரபி செய்துகொண்டதால், தனது தலைமுடியை இழந்த மார்லி, தன் மொட்டை தலையைக் கண்டு தனது நண்பர்களும், ஆசிரியர்களும் கிண்டல் செய்வார்களோ என்ற கவலையுடன் பள்ளிக்குத் திரும்பினாள்.

ஆனால், அவர்களின் செயலோ, மார்லியை ஆச்ர்யத்தில் ஆழ்த்தியது. தனது நண்பர்களும், ஆசிரியர்களும் தன்னை கிண்டல் செய்யாமல், ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, அவர்களில் பலர் தன்னைப் போலவே தலையை மொட்டை அடிக்க முடிவு செய்ததைக் கண்ட மார்லியுடைய மகிழ்ச்சியின் முன், புற்றுநோய் தோற்றே விட்டது.

child3.jpg


அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தில் உள்ள ப்ரூம்ஃபீல்ட் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி மார்லியின், இடது கால் பாதத்தில், சிறிய வீக்கத்தினை கண்ட மார்லியின் தாய், அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அது புற்றுநோய் என தெரியவந்துள்ளது. சிகிச்சைக்குப் பின், கீமோதெரபி செய்து கொண்ட மார்லி, தனது தலைமுடியை இழந்தாள். மார்லியை ஊக்கப்படுத்தும் விதத்தில், புற்றுநொயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் அரசு சாரா நிறுவனமான செயின்ட் பால்ட்ரிக்ஸ் சார்பாக, தங்களின் தலை முடியை அளிக்க, மார்லியின் நண்பர்களும், ஆசிரியர்களும் முன் வந்தனர்.



தலையை மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலமாகவும் குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்டும் நிறுவனம் செயின்ட் பால்ட்ரிக்ஸ். இந்த நிறுவனத்தின் வாயிலாக, மார்லியுடன் பயிலும் 80 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மொட்டை அடித்துக் கொண்டு, 25000 டாலர் நிதியினை அளித்து உதவியுள்ளனர். "என்னை கிண்டல் செய்வார்கள் என எதிர்பார்த்த எனது நண்பர்கள், என்னை ஊக்கப்படுத்தி, இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்" எனக் கூறியிருக்கிறாள் மார்லி.

குழந்தைகளிடம்தான் மனிதநேயம் அதிகமாக இருக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. 

vikatan

  • தொடங்கியவர்

கையடக்கத்தொலைபேசியில் கைத்துப்பாக்கி (வீடியோ இணைப்பு)

கையடக்கத்தொலைபேசிகளில் ஸ்மார்ட் தொலைப்பேசிகளுக்கு தற்போது மக்களிடையே அதிக ஆர்வம் நிலவியுள்ளது.இவ்வாறு இருக்க அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றினால் ஸ்மார்ட் தொலைப்பேசி உருவத்தை கொண்ட கைத்துப்பாக்கி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதில் போலியான கெமரா மற்றும் லேசர் கதிர் மூலம் இலக்கை இனங்காணும் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

12.jpg

  • தொடங்கியவர்

நடுத்தெரு கல்லுக்கு வந்த திடீர் சோதனை

இது சாதாரணக்கல் அல்ல! இங்கிலாந்தின் பக்கிங்ஹம்ஷையரில் உள்ள சோல்பெர்யில் 11,000 ஆண்டுகளாக இந்த கல் இருக்கிறது.

சமீபத்திய விபத்துக்கு பின் அதை அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முயலுகின்றனர்.அதை அகற்றக்கூடாது என்று ஆதரவாளர்கள் அதை காவல் காக்க ஆரம்பித்துள்ளனர்.

  • தொடங்கியவர்

விமானக் கடத்தல்: உயிர் பயத்தில் மனைவியிடம் 'உண்மை'யை சொன்ன பயணி!

 

டந்த மாதம், 29-ம் தேதி எகிப்து நாட்டை சேர்ந்த 'எகிப்து ஏர்' என்ற பயணிகள் விமானம்,  அதே நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு, விமானக் குழுவினர் உள்பட ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களுடன் புறப்பட்டபோது மர்ம நபர் கடத்தியது நினைவிருக்கலாம். பிறகு சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டு பயணிகள் விடுவிக்கப்பட்டனர். விமானத்தைக் கடத்திய சயிஃப் அல்தின் முஸ்தஃபா, சைப்ரஸ் நாட்டில் தஞ்சமடைய கடத்தியதாகவும், சைப்ரஸில் உள்ள தன் முன்னாள் மனைவியைச் சந்திக்க வேண்டி கடத்தியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின.

egpvc1.jpg


இந்நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த அப்து அல்லாஹ் இ ஆஸ்மாவி என்ற 31 வயதுடைய அறுவை சிகிச்சை நிபுணர், அந்த விமானப் பயண அனுபவத்தை பத்திரிகை ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தக் கடத்தலின்போது நிகழ்ந்தவை, இப்போது கேட்க சுவாரஸ்யமாவே இருக்கின்றன. அவை, அவர் மொழியிலேயே...

‘பேசறதுக்கு நேரமில்லை’

”டேக் ஆஃப் ஆகி 15 நிமிஷம் கழிச்சு, விமானப் பணிக்குழுவினர் எல்லாரோட பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்கச் சொன்னாங்க. ‘பேசறதுக்கு நேரமில்லை. சீக்கிரம் குடுங்க’ இதான் அவங்க சொன்னது. நான்கூட யாரோட பாஸ்போர்ட்டோ தொலைஞ்சுடுச்சு, அதான் கேட்கறாங்கன்னு நெனைச்சேன்.

பணிகுழுவைச் சேர்ந்த ஒரு சிலர் ஏதோ பேசிக்கிட்டிருந்தாங்க. எனக்கு குழப்பமாகி, ‘என்ன ஆச்சு.. என்ன நடக்குது?’ன்னு கேட்டேன். அவங்க, ‘அதோ அங்க பின்னால நிக்கற ஆளு பெல்ட்ல பாம் வெச்சிருக்கான்னு சொல்றான். எப்ப வேணா விமானத்தை வெடிச்சுத் தகர்த்துடுவேன்னு சொல்லிட்டிருக்கான்’ன்னாங்க.

egpvc4.jpg

பதட்டமானாலும், கெய்ரோ போனா எல்லாம் சரியாப்போகும்னு நெனைச்சுகிட்டேன். ஆனா, எனக்கு முன்னால இருந்த மேப்பைப் பார்த்தா, சுத்திலும் கடல்தான். கடலைத் தவிர எதுவுமே தெரியல. நட்டநடுக் கடலுக்கு மேல பறந்துட்டிருக்குன்னு தெரிஞ்சது.

அப்பதான் எனக்கு பதட்டம் அதிகமாச்சு. சினிமால நடக்கறமாதிரி, வெடிச்சு சிதறப்போறோம்னு நெனைச்சுகிட்டேன். அடுத்த அரைமணி நேரத்துல விமானத்துல இருக்கற எல்லாருக்கும் தகவல் தெரிஞ்சுடுச்சு.

ஒரு பயணி அந்தக் கடத்தல்காரன்கிட்ட பேசப் போறதுக்காக எந்திரிச்சார். போய் பெல்ட்ல பாம் இருக்கான்னு பார்க்கப்போறேன்னு சொன்னார். உண்மையாவே பாம் இருந்தா, எல்லாரும் காலின்னு போகல.

கடத்தல்காரன் ஆக்ரோஷமாவெல்லாம் இல்ல. பின்னால நின்னு சிகரெட் குடிச்சிட்டிருந்தான். ஒரு பணிப்பெண், அவன் தனக்கு என்னென்ன தேவைன்னு லெட்டர் குடுத்திருக்கறதா சொன்னாங்க.
நான், நாம சாகப்போறது உறுதின்னு நினைச்சுக்கிட்டேன். நண்பர்கள், குடும்பம் அவங்ககூட இருந்த இனிமையான நிகழ்வுகள்லாம் மனசுல வந்து வந்து போச்சு. அப்பாம்மா எப்படி எடுத்துப்பாங்கன்னெல்லாம் நினைச்சுக்கிட்டேன். 

egpvc2.jpg


பாம் கொண்டு போகலாம்... சிக்கன் கொண்டு போகக்கூடாதா?

விமானம் சைப்ரஸை நெருங்கினதும், பயணிகள் அவங்க மொபைல்ல நெட்வொர்க் வருதுன்னு நோட் பண்ணினாங்க.

உடனே, தரையிறங்கறதுக்கு முந்தியே ஒரு பயணி,  எல்லா நம்பருக்கும் கூப்பிட்டு சத்தமா கத்த ஆரம்பிச்சுட்டார். ‘கடத்திட்டாங்க.. கடத்திட்டாங்க’ன்னு ஃபோன்ல புலம்பறார். நான், ‘நீ இப்டி கத்தி கடத்தல்காரன் கோவிச்சுக்கப் போறான்’ன்னு சொல்லியும் அவர் கேட்கல.

வேறொரு பயணி, அவரோட மனைவியைக் கூப்பிட்டு, ‘உனக்கு தெரியாம ஒரு சீக்ரெட் அக்கவுண்ட் வெச்சிருக்கேன். அதுல இவ்ளோ இவ்ளோ பணம் இருக்கு’ன்னெல்லாம் சொல்லிட்டிருந்தார். அவரோட மனைவியும் விடாம, ஃபோன்ல எல்லா தகவல்களையும் கேட்டு கேட்டு வாங்கிட்டிருந்தாங்க.

எனக்குப் பின்னால ஒருத்தர், நல்லா தூங்கிட்டிருந்தார். நான் எழுப்பி, ‘சைப்ரஸ்ல தரையிறங்கிடுச்சு’ன்னேன். அவர் ‘சைப்ரஸ்ல எதுக்கு? நான் போகவேண்டிய இடத்துக்குப் போகணும்’னார்.
“யோவ்... ஹைஜாக் பண்ணிருக்காங்க’ன்னேன்.

egpvc350.jpg‘தெரியுமே.. நான் பாஸ்போர்ட்டைக் குடுத்ததுமே தூங்கிட்டேன்’ங்கறார். ‘டென்ஷனா இல்லையா?’ன்னா, ‘நான் எங்க அப்பாக்கு மெசேஜ் அனுப்பிச்சுட்டேன். அவர் ஐபாட்ல இந்த ஃப்ளைட்டை டிராக் பண்ணிட்டிருப்பார்’னு சொன்னார் கூலா.

தரையிறங்கி, குழந்தைகள், பெண்கள்லாம் போலாம்னதும்,  ஒரு தம்பதிகளா வந்திருந்தவங்களோட மனைவிகள் சத்தமா அழ ஆரம்பிச்சுட்டாங்க,  ‘தனியா போகமாட்டோம்’னு. அப்புறம், 'எகிப்தியர்களெல்லாம் போலாம்'னான் கடத்தல்காரன். பாஸ்போர்ட் கைல கெடச்சதும் ஒரு பெரியவர், நம்ப முடியாம ‘ஓ’ன்னு அழ ஆரம்பிச்சுட்டார்.

எல்லாரும் விடுவிக்கப்பட்டதும், ஏர்போர்ட்லேயே ரொம்ப நேரம் இருந்தோம். செய்திகள்ல ‘ சக பயணி இப்ராஹிம் சமஹா’ங்கறவர் கடத்தினார்’னு தகவல்கள் தப்பா பரவிடுச்சு. அந்த இப்ராஹிமோட மனைவி அவரைக் கூப்பிட்டு,  ‘எதுக்குய்யா கடத்தின?’ன்னு கேட்டுட்டிருந்தாங்க. அவர் பாவம்,  ‘நான் இல்லம்மா’ன்னு விளக்கம் கொடுத்துட்டிருந்தார்.

திரும்ப எங்களுக்கு எகிப்து போகறதுக்காக விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. போறப்ப, ஒருத்தர் சிக்கன் வாங்கி வெச்சிருந்தார். விமான நிலைய செக்யூரிட்டி, அதை அனுமதிக்க முடியாதுன்னுட்டார்.
’அப்படின்னா, பெல்ட்ல பாம் கொண்டு போகலாம்.. சிக்கன் கொண்டு போகக்கூடாதா’ன்னு ரொம்ப நேரம் வாக்குவாதம் பண்ணி, கடைசில ஃப்ளைட் ஃப்ரிட்ஜ்ல வெச்சு, தரையிறங்கப்ப எடுத்துக்கச் சொன்னாங்க.

இப்ப ஜாலியா பேசிக்கறோம். தமாஷ் பண்ணிக்கறோம். ஆனா அந்த நிமிடங்கள் அவ்ளோ பதட்டமாவும், பயத்தோடவும்தான் போச்சு”  என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரி... மனைவியிடம் அந்த சீக்ரெட் அக்கவுண்ட் குட்டை உடைத்த பயணியின் கதிதான் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. அதையும் முடிந்தால் விசாரிச்சு எழுதுங்க ஆஸ்மாவி! 

vikatan

  • தொடங்கியவர்

செல்ஃபி ஜாக்கிரதை!

 

‘கும்தலக்கடி கும்மாவா, செல்ஃபினா சும்மாவா!’னு டான்ஸைப் போட்டுக்கிட்டே செல்ஃபி எடுக்கிறது சரி. ஆனால், சீறும் பாம்புக்குப் பக்கத்துல நின்னு செல்ஃபி எடுத்துக்கிட்டு கொத்து வாங்குறது, சிவனேனு சும்மா கிடக்கிற பூனையைச் சீண்டிவிட்டு செல்ஃபி எடுக்கிறேன்னு கடி வாங்குறதுனு அலப்பறையைக் கொடுத்தா, அதுங்க சும்மா விடுமா? இதோ, உலகம் முழுக்க செல்ஃபி எடுக்கிறப்போ, மற்ற உயிரினங்களிடம் பல்பு வாங்கிய மனிதர்கள்!

p96a.jpg

red-dot8.jpg அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் எருதுகளை விட்டு மனிதர்களைத் துரத்தவிடுவது ஒருவகை விழா. இதில் கலந்துகொண்ட கிறிஸ்டியன் என்பவர், எருதுகள் தன்னைத் துரத்திவருவதை செல்ஃபி போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்திருக்கிறார். மற்றவர்களையெல்லாம் ஏனோ தானோவெனத் துரத்திய எருதுகள் செல்ஃபி எடுத்துக்கொண்டே ஓடிய கிறிஸ்டியனை மட்டும் குறிவைத்துத் துரத்திக்கொண்டிருந்தன. விழுந்து, புரண்டு எருதுகளிடமிருந்து தப்பித்தவர், நேராகச் சென்றது மருத்துவனைக்கு. ஏனெனில், ஓடிய ஓட்டத்தில் அடி கொஞ்சம் ஓவராம்! #ஆனாலும் கெத்துதான்!

p96b.jpg

red-dot8.jpg பாம்பைப் பார்த்தா படையே நடுங்கும்னு சொல்றதெல்லாம், அந்தக் காலம். அமெரிக்காவில் சான் பிரான்ஸிஸ்கோ நகரைச் சேர்ந்த டாட் பாஸ்லர், விஷப்பாம்புக்குப் பக்கத்துல போய் செல்ஃபி எடுத்துத் தொலைக்க, ஒரே போடா போட்டிருக்கு! அப்புறம்? அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரிக்குப் போனதால, உயிர் தப்பித்தார். ஆனா, காப்பாத்துறதுக்கு ஆன செலவு, 95 லட்சம் ரூபாய்! #போச்சா!

p96c.jpg

red-dot8.jpg பேரும் தெரியாம, ஊரும் தெரியாம வாட்ஸ்-அப்ல சுத்திக்கிட்டு இருக்கு ஒரு படம்! தேன்கூட்டுக்குப் பக்கத்துல போனோமோ, ரசிச்சோமானு இல்லாம, கெத்தா செல்ஃபி எடுத்திருக்கிறார் ஒருவர். தேனீக்கள் என்ன மூடுல இருந்துச்சோ தெரியலை! மூஞ்சிக்கு நேரா மொத்தமா பறந்துவந்து கொத்திட்டுப் போக, மனுஷனுக்கு முகம் பப்பாளிப் பழமா பழுத்ததுதான் மிச்சம்! அப்பவும் மனுஷன் அசரலையே... தேனி கொட்டுவதற்கு ‘முன்/பின்’னு அதையும் சமூக வலைதளங்களில் உலவவிட்டிருக்கார்! #கெத்து காட்டுறாராம்!

p96d.jpg

red-dot8.jpg ஃபுளோரிடாவில் இருக்கும் பொழுதுபோக்குப் பூங்காவுக்குப் போன, பிரையன் ஜெனெஸ்ட் என்ற சிறுவன், அங்கிருந்த அணிலுக்குப் பக்கத்துல செல்ஃபி எடுத்திருக்கார். ‘அணில் நம்மை என்ன பண்ணிடப்போகுது?’னு எகத்தாளம்! விடலையே... பையனோட டி-ஷர்ட்டைக் கவ்விப் பிடிச்சு மிரட்ட, தம்பி அலறியடிச்சு ஓடியிருக்கான். காயம் எல்லாம் எதுவும் இல்லைதான். ஆனா, கரடியே காறித் துப்புன கதையா வரலாற்றுல நின்னுடுச்சே! #ரைட்டு!

p96e.jpg

red-dot8.jpg இந்தோனேஷியாவில் இருக்கும் பாலித் தீவிற்கு சுற்றுலா வந்த ஒரு பெண், குரங்கு ஒன்றின் அருகே சிரித்தபடி போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்திருக்கிறார். செல்ஃபி எடுப்பதைப் பெரிதும் பொருட்படுத்தாமல், அந்தப் பெண்ணின் தலைமுடியைத் தடவிப்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது குரங்கு. ‘ச்சே... செம மூவ்மென்ட் ஆச்சே’ என ஆர்வமாக அடுத்தடுத்த செல்ஃபியை எடுக்க ஆரம்பித்த அந்தப் பெண்ணின் தலைமுடியை, கொத்தாகக் கையில் பிடித்து அலறவிட்டிருக்கிறது குரங்கு. #போவியா...!

p96f.jpg

red-dot8.jpg பால் சோடர்ஸ் என்பவர், கரடிக்குப் பக்கத்தில் செல்ஃபி எடுக்கும் படத்தைப் பார்த்தாலே, அவர் கண்ணில் தெரியும் மரணபயம் நமக்கும் தெரியும். ஏதோ, கரடி பாவம் பார்த்து விட்டதால, மனுஷன் தப்பிச்சிருப்பார்.  அவ்வளவு ஏங்க... நம்ம கிம் கர்தாஷியனே செல்ஃபி எடுக்கிறதுக்காக, யானைக்குப் பக்கத்துல பவ்யமா நின்னுருக்காங்க! டென்ஷனான யானை, இழுத்துவிட்ட மூச்சுக்கே அம்மணி 300 அடி தூரத்துக்கு ஓடியிருக்காங்க! #பயம், அதானே எல்லாம்!

vikatan

  • தொடங்கியவர்

இணையத்தை உருகவைத்த தாத்தா!

 
thaathaa_2797102f.jpg
 

சமூக ஊடகச் செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் தன் பேரப் பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெகிழவைக்கும் இந்தக் கதையில் பேரப் பிள்ளைகளுக்கான பாடம் அடங்கியிருப்பதோடு, இணையப் புகழ் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலும் இருக்கிறது.

முதலில் முன்கதைச் சுருக்கம்! அதற்கு முன்னர் உங்களுக்குத் தாத்தாவோ பாட்டியோ இருந்து அவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கச் செல்லாமல் இருந்தால், அந்தத் தவற்றைச் சரிசெய்துகொண்டு பாசக்காரப் பேரப் பிள்ளைகளாக மாறுங்கள். ஏனெனில் இந்தக் கதை உணர்த்தும் நீதி இதுதான்... தாத்தாக்களும் பாட்டிகளும் அன்புக்கு ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள், அதை ஓரளவுக்காவது தீர்த்துவைப்பது பேரப் பிள்ளைகளின் கடமை!

இணையத்தை மெல்லப் பிடித்து உலுக்கியிருக்கும் இந்தக் கதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ட்விட்டரில் பகிரப்பட்ட ஓர் ஒளிப்படத்துடன் தொட‌ங்குகிறது.

முதியவர் ஒருவர் தனியே சோகமாக அமர்ந்திருக்கும் ஒளிப்படம் அது. முதியவரின் பேத்தியான கல்லூரி மாணவி கெல்ஸே ஹார்மன்தான் இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் (https://twitter.com/kelssseyharmon) பகிர்ந்துகொண்டார். அந்தப் படத்துடன் அவர் தெரிவித்திருந்த தகவலின் பின்னே வருத்தத்தின் சாயலும் இருந்தது. “பாப்பாவுடன் (தாத்தா) டின்னர் சாப்பிடுகிறேன். அவர் தனது ஆறு பேரப் பிள்ளைகளுக்காக 12 பர்கர்களைத் தயார் செய்திருந்தார். ஆனால் நான் மட்டும்தான் அதைச் சாப்பிட வந்திருக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன்”.

கையில் பாதி கடித்தபடி தாத்தா தனிமையில் சோகத்துடன் காட்சி தரும் ஒளிப்படத்தைப் பார்த்துவிட்டு இந்தச் செய்தியைப் படிக்கும்போது, மனதில் மெல்லிய சோகம் எழும். ‘ஆறு பேரப் பிள்ளைகளுக்காகத் தாத்தா அன்புடன் பர்கர் செய்து காத்திருந்தால் அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எட்டிப் பார்க்காமல் அவரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றனரே! பாவம் அந்தத் தாத்தா!’ என்று நினைக்கத்தோன்றும்.

அந்தப் படத்தை ட்விட்டரில் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் இதுபோன்ற எண்ணங்கள் அலைமோதின. முதியவரின் சோகமோ பேரப் பிள்ளைகளின் பாராமுகமோ ஏதோ ஒன்று பார்த்தவர்கள் நெஞ்சைத் தொட்டு இந்தப் படத்தை ரீட்வீட் மூலம் பகிர்ந்துகொள்ளத் தூண்டியது. அவ்வளவுதான். அடுத்த 24 மணி நேரத்தில் 70,000 முறை இந்தப் படம் பகிரப்பட்டது. அதைவிட அதிகமான முறை இந்தப் படம் மீது விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

பலரும் தாத்தா மீது பரிவு கொண்டு கருத்துத் தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் தாங்களும் தாத்தா பாட்டியை அடிக்கடி பார்க்கச் செல்லாமல் இருப்பதைக் குற்றவுணர்வுடன் பகிர்ந்துகொண்டனர். சிலர் வராமல் போன அந்தப் பேரப் பிள்ளைகளை வறுத்தெடுக்கவும் தவறவில்லை. இதன் வைரல் தன்மையும், அதற்குப் பின்னே இருந்த பெரியவரின் சோகமும் மீடியாவின் கவனத்தையும் ஈர்த்து இந்த நிகழ்வு பற்றிய‌ செய்தியை வெளியிட வைத்தன. ‘சோகமான தாத்தா’ எனும் அடைமொழியுடன் வெளியான செய்திகள் மேலும் பல லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தன.

ஆனால் இந்தக் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. இதில் சில திருப்பங்களும் காத்திருந்தன. பரவலாகக் கருதப்பட்டது போல இதர‌ ஐந்து பேரப் பிள்ளைகளும் தாத்தாவை முற்றிலுமாகப் புறக்கணித்துவிடவில்லை. இணையத்தில் சிலர் கல் நெஞ்சக்காரர்கள் எனத் தூற்றியதை மீறி அவர்கள் பாசக்காரப் பேரப் பிள்ளைகளாகவே இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.

விஷயம் என்னவென்றால், பேரப் பிள்ளைகளில் இன்னொருவர் சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார். மற்ற நான்கு பேர் வராத‌தற்குக் காரணம் தாத்தாவின் டின்னர் பற்றி அவர்களுக்குச் சரியாகத் தகவல் தெரிவிக்கப்படாததுதான். தாத்தா தன் மகனிடம் இது பற்றித் தெரிவித்த தகவலை அந்த மறதிக்கார அப்பா தன் மகன்களிடம் தெரிவிக்க மறந்திருக்கிறார். அதனால்தான் அவர்கள் வரவில்லை. புகழ்பெற்ற ‘டெய்லி மெயில்’ நாளிதழ் இந்த வெளிவராத பின்னணித் தகவல்களைத் தேடிப்பிடித்துச் செய்தி வெளியிட்டது.

ட்விட்டர், வைரல் புகழ் பற்றி எல்லாம் அதிகம் அறிந்திராத அந்த முதியவர், எல்லோரும் தன்னைப் பற்றிப் பேசுவதைப் பார்த்துக் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போயிருக்கிறார். இந்தத் திடீர் புகழ் வெளிச்சம் அவருக்கு வியப்பை அளித்தாலும், உற்சாகத்தோடு எல்லோரையும் விருந்துக்கு அழைத்து ‘நான் பர்கர் தயார் செய்கிறேன்’ எனக் கூறினார்.

அந்த விருந்து கடந்த‌ 26-ம் தேதி நடைபெற்றது. அதில் நூற்றுக்கும் அதிகமான புதிய நண்பர்கள் இந்த தாத்தாவுக்குக் கிடைத்திருக்கின்றனர். தாத்தா மீதான தங்களின் பாசத்தை வெளிப்படுத்த அந்தப் பேரப் பிள்ளைகள் ‘சேட்பாப்பா.காம்’ (www.sadpapaw.com) எனும் இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் தாத்தாவின் படம் அச்சிடப்பட்ட‌ டி ஷர்ட் மற்றும் தொப்பிகளை விற்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

tamil.thehindu.com/

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 03
 
 

article_1428037703-ThisaraPerera300.jpg1917: அஞ்ஞான வாசம் புரிந்த விளாடிமிர் லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பினார். ரஷ்ய புரட்சியின் ஆரம்பத்தில் இது முக்கிய நிகழ்வாகும்.

1948: 16 நாடுகளுக்கு 5 பில்லியன் டொலர்  உதவியளிக்கும் மார்ஷல் திட்டத்தில் அமெரக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் கையெழுத்திட்டார்.

1973: முதலாவது செல்லிட தொலைபெசி அழைப்பை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது. மோட்டரோலா நிறுவன  ஆராய்ச்சியாளர் பெல் கூப்பர் இந்த அழைப்பை மேற்கொண்டார்.

1974: அமெரிக்கா, கனடாவில் ஏற்பட்ட சூறாவளியினால் 315 பேர் பலி 5,500 பேர் காயம்.

1982: பாக்லாந்து தீவுகளை ஆர்ஜென்டீனாவிடமிருந்து மீட்க பிரிட்டன் கடற்படையை அனுப்பியது.

1982: போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.

1989: இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் திசாரா பெரேராவின் பிறந்ததினம்.

1996: ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35பேர் கொல்லப்பட்டனர்.

1997: அல்ஜீரியாவில் தலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள், ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்

-tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12916725_1018503994864961_18297784934181

காந்தக்குரலோன் ஹரிஹரனுக்கு (Hariharan A )இன்று பிறந்நாள்

ரோஜாவில் தமிழா தமிழா பாடலோடு தமிழுக்கு இசைப்புயலால் அழைத்து வரப்பட்ட இவ்வற்புதமான பின்னணிப் பாடகர்
எங்கள் காதுகளுக்கு இசையின் ஸ்வரங்களை காற்றோடு கலந்து இனிக்க செய்தவர்
காலங்கள் கடந்தும் தன் காந்தக்குரலால் இசையில் ஜாலங்கள் கொண்டு
எங்களை என்றென்றும் கட்டிப்போட வேண்டும்

  • தொடங்கியவர்

வலைபாயுதே V 2.0

facebook.com/gkarlmax: நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது ‘அதிருப்தி அலை’ இல்லை. ஜெயாவின் இந்தச் செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, தி.மு.க-வுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடங்களில் தி.மு.க ஆடிய ஆட்டத்தை மக்கள் மறக்கவில்லை. அதுதான்.

அதுமட்டும் அல்லாமல் தி.மு.க-வின் பலவீனத்தை, ஸ்டாலினைவிட விஜயகாந்த் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார். அது எப்படி? விஜயகாந்தின் அரசியலே இரண்டு திராவிடக் கட்சிகளின் பலவீனத்தின் மீது கட்டப்பட்டிருப்பதுதான். அதனால்தான் அவரது கோரிக்கைகள் தி.மு.க-வால் ஜீரணிக்க முடியாத அளவுக்கு மிகுதியாக இருக்கின்றன. கருணாநிதியைவிட, தி.மு.க அனுதாபிகள் இந்த விஷயத்தில் ரொம்பவும் தம் கட்டுகிறார்கள். விஜயகாந்த் தி.மு.க கூட்டணிக்கு வராமல்போனது ஸ்டாலினின் தோல்வி. இப்போதும் கருணாநிதிதான் அரசியல்வாதி. அவர் இறங்கிவந்து கெஞ்சியதுதான் கள யதார்த்தம். தேர்தல் முடிந்ததும் விஜயகாந்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற அவரது திட்டம் தோற்றுப்போய்விட்டது.

விஜயகாந்த் ம.ந.கூ-வுக்குப் போய்விட்டதால், ஏதோ அதன் மாண்பு கெட்டுவிட்டதுபோல புலம்புகிறார்கள். இது ஒரு சுயபுலம்பல். வைகோ அங்கு ஏற்கெனவே இருப்பதால், `மாண்பு' என்ற வார்த்தை எல்லாம் ம.ந.கூ விஷயத்தில் ரொம்பப் பெரிய வார்த்தைகள். அப்புறம் `நல்லகண்ணுவை ஏன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை?' எனக் கேட்கிறார்கள். காரணம் நம்மைவிட நல்லகண்ணுக்கு நன்றாகத் தெரியும். சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து அவர் அரசியலில் இருக்கிறார். நம் தமிழ்ச் சூழலில் கம்யூனிசம் என்பது ஒப்புநோக்க, மற்ற கட்சிகளின் அற விழுமியங்களைக் கேள்விகேட்க நாம் கையில் வைத்திருக்கும் ஒரு கருவி. அவ்வளவுதான். அதன் ஓட்டு பலம் என்பது மிகக் குறைவானது. ஃபேஸ்புக் லைக்கை எல்லாம் தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்வது இல்லை என்பது தா.பாண்டியனுக்கும் தெரியும்.

ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்காகப் பாவம் சுமந்ததன் பயன் திருமாவுக்குக் கிட்டவில்லை; எந்தக் காலத்திலும் அது கிட்டாது என்பதுதான் கருணாநிதியின் அரசியல். தி.மு.க கூட்டணியில் இருந்து திருமா விலகியது, தி.மு.க-வுக்குப் பலவீனம் என்ற பேச்சு வருகிறது இல்லையா. அதுதான் திருமா சாதித்தது. அவர் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எல்லாம், நல்லகண்ணுவைச் சொல்வதுபோலத்தான். எப்படியும் ஜெயிக்கப்போவது இல்லை என்பதால் சொல்கிறார்போல.
இந்தத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்பதைவிட, எத்தகைய மதிப்பீடுகள் எல்லாம் தோற்றிருக்கின்றன என்ற வகையில் மக்கள் தெரிந்துகொள்ள நிறையக் காட்சிகள் கிடைத்திருக்கின்றன. மிக நேர்மையாக, எந்தக் கூச்சமும் அற்று மக்கள், அரசியல்கட்சிகளிடம் காசு வாங்குவார்கள். அந்த வகையில் எல்லா கட்சிகளையும்விட சீரழிவின் உச்சத்தை மக்களும் அடையப்போகும் தேர்தல் இது.

p16a.jpg

facebook.com/DavidEXIM:  `சரோஜா' படத்துல நிகிதா ஆடுற ‘கோடானகோடி...’ பாட்டு டி.வி-யில ஓடும்போதுலாம் வீட்டம்மா சொல்ற ஒரே டயலாக்... ‘வாய மூடிக்கிட்டுத்தான் பாருங்களேன்'!

facebook.com/saravanakarthikeyanc:
`நான் அப்போ மூணாவது படிச்சிட்டிருந்தேன்' என ‘தூள்’ விக்ரம் பேசுவதுபோல், எதற்கெடுத்தாலும் தான் டீ விற்ற கதையைச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார் மோடி!

facebook.com/thaamiraa: அவ்வளவு செஞ்ச போதி தர்மராலேயே வழுக்கமண்டைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியல... ஸோ ஸேட்!

twitter.com/imsivaraina27: ஆண்கள், எப்போதும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவே விரும்புகிறார்கள். பெண்களோ, ஆண்களுக்கு அட்வைஸ் பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்!

twitter.com/kumarfaculty: ஓர் இழவுக்குச் சென்று வந்த பிறகு, கொஞ்ச நேரமேனும் நம்மிடம் பேசுபவர்களிடம் அன்பாகப் பேச முடிகிறது!

twitter.com/vandavaalam: இந்த `வெண்மதி வெண்மதியே நில்லு...' பாட்டைக் கேட்டாலே, 2 மி.மீ தாடி வளந்துருது!

twitter.com/vasanthi_tweetZ: `மங்காத்தா'வுல வருவது மாதிரி ஏதாவது கன்டெய்னர் போகுதானு பார்த்துச் சொல்லுங்கப்பு. ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்!

p16b.jpg

twitter.com/jroldmonk: ‘வீடு வாங்கியிருக்கேன்’, ‘காரு வாங்கியிருக்கேன்’னு சொல்றாங்க. ஆக்சுவலி நீங்க எல்லாம் கடன் வாங்கியிருக்கீங்க மக்கா!

twitter.com/withkaran: தே.மு.தி.க-வுல இனி எல்லாம் அண்ணிதானாம். `நான் எல்லாம் செக் பண்ணிட்டேன். நீங்க வீட்டைப் பூட்டிட்டு மட்டும் வாங்க'னு கேப்டன்கிட்ட சொல்லிருச்சுபோல!

twitter.com/mekalapugazh: முன்னர் எல்லாம் டி.வி பார்த்து செய்தி தெரிந்துகொண்டார்கள்; இப்போது எல்லாம் செய்தி கேட்டு எந்த டி.வி எனப் புரிந்துகொள்கிறார்கள்.

twitter.com/kumarfaculty: மனிதனின் மெமரியைக் குறைத்து தன் மெமரியை அதிகப்படுத்திக்கொண்டது செல்போன்!

twitter.com/chevazhagan1: சறுக்குவதை, குழந்தைகளைப்போல விளையாட்டாக எடுத்துக்கொண்டாலே வாழ்க்கை அழகாகிவிடும்!

twitter.com/Whale_Spks:  அபராதம் என்பது, தவறாக நடந்துகொண்டதற்கான வரி. வரி என்பது, சரியாக நடந்துகொண்டதற்கான அபராதம்!

twitter.com/thalabathe: பிரிஞ்சதுக்கு அப்புறம் `என்னைய மறந்துடு'னு பொண்ணுங்க கெஞ்சின காலம் போயி, `இப்ப தயவுசெய்து செல்ஃபியை டெலிட் பண்ணிடு'னு வந்து நிக்குதுக!

twitter.com/kumarfaculty: தனியார் பள்ளிகள் வந்த பிறகு, பெற்றோர்களின் மேக்கப் செலவு அதிகமாகிவிட்டது!

vikatan

  • தொடங்கியவர்

12891549_1018553104860050_67479764404796

இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேராவின் பிறந்த நாள் இன்று
இலங்கை இரசிகர்களால் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Thisara Perera

  • தொடங்கியவர்

12439300_1732008670344378_42697102052270

  • தொடங்கியவர்

ஏப்ரல் 3: தனது நடிப்பால் உலகை வசீகரித்த மார்லன் பிராண்டோ பிறந்த தின சிறப்பு பகிர்வு..

மார்லன் பிராண்டோ

marlionmandro.jpgஉலகம் முழுக்க எத்தனையோ கேங்க்ஸ்டர் கதைகள் வந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் முன்னோடி காட்ஃபாதர் திரைப்படம். அந்த படத்தில் நடித்த மார்லன் பிராண்டோவின் வாழ்க்கை அத்தனை அற்புதமானது. ஒரு நடிகன் என்பவன் வானத்தில் இருந்து குதித்தவன் என்பதைப்போன்ற மனோபாவமே பெரும்பாலும் கொண்டிருக்கும் நமக்கு அவரின் வாழ்க்கை ஆச்சரியங்களை அள்ளி வழங்குகிறது.  பத்தே   துளிகளில் அந்த பெருங்கடல் உங்களுக்காக :

துன்பங்கள் செதுக்கும் உன்னை !:

அம்மா நடிகை, அப்பா பல ஊர்களுக்கு சென்று பொருட்களை விற்கும் சேல்ஸ் ரெப். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிணக்குகள் ஏற்பட்டு அம்மா குடியிலேயே மூழ்கிப்போக அன்பு என்பது என்ன என்றே தெரியாமல் தான் வளர்ந்தார் மார்லான் பிராண்டோ. இருபது வயதை தொடுவதற்கு முன்னரே தீவிர நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. அப்பா மிலிட்டரி ஸ்கூலில் இருந்து டிராப்பான இவரைப்பார்த்து ,"நீயெல்லாம் உருப்படவே மாட்டே !" என்று அடித்துச் சொன்னார்/ மனப்பிறழ்வுக்கு உள்ளாகி மருத்துவமனையில் கதியாக கிடந்து மீண்டு வந்தார் பிராண்டோ.

மீள்வதே வாழ்க்கை :

சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பிராண்டோ ஒரு காலத்துக்கு பிறகு ஹாலிவுட்டில் காணாமல் போனார்.  எங்கே அவர் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஒரு தீவில் போதும் சினிமா என்று ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார் ! கப்போலா காட்ஃபாதர் கதையோடு அவரைத்தேடி வந்தார். சுருக்கம் விழுந்து, கண்கள் ஒளி இழந்து அமர்ந்திருந்த இவர் இதற்கு சரிப்படுவாரா என்று அவருக்கு சந்தேகமே வந்து விட்டது.

கதையை அமைதியாக கேட்டுவிட்டு கதவை பிரிந்து போய் சாற்றிக்கொண்டார் பிராண்டோ. கதவுகள் திறந்த பொழுது முழு ஒப்பனையோடு ஒப்புமை இல்லாத இத்தாலி நாட்டை சேர்ந்த காட்ஃபாதர் நின்று கொண்டு இருந்தார். ஆஸ்கரில் வந்து நின்றது அந்த கம்பீரம் !


நடிகன் ஒன்றும் தேவனில்லை :

புகழின் உச்சியில் வெகுகாலம் இருந்த மார்லான் பிராண்டோ நடிகர்களை இறைவன் போல கொண்டாடுவதை வெறுத்தார். கூட்டங்கள் அவருக்கு கடுப்பைத்தந்தன.   ஒரு பாராட்டு விழாவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திக்கு முக்காட வைத்த பொழுது ,"கர்த்தரே ! நான் ஏன் எந்த நகரத்திற்கு வரவேண்டும் !" என்று புலம்பிய ஒரே கலைஞன் அவராகத்தான் இருக்க முடியும்

marlionmandro_3.jpg

உலகம் வலிகளால் நிரம்பியது :

உலகம் முழுக்க தன்னுடைய படங்களுக்காக பயணம் போன பொழுது அவர் எப்படி கிழக்கு நாடுகள் பஞ்சத்தில் தோய்ந்து துன்பப்படுகின்றன என்பதை கண்டார். "இந்த நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம். அதற்கு உகந்த அரசாங்கங்கள் அங்கே செயல் படுகின்றன !" என்று கச்சிதமாக அவர் குறித்தார்.

விருதெல்லாம் வீண் ! :

மார்லன் பிராண்டோவுக்கு காட் பாதர் படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக,தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார்.

கண்ணீர் விடலாம் கலைஞன் :

லண்டன் நகரத்துக்கு படப்பிடிப்புக்கு போனவர் அங்கே அப்பாவி கறுப்பின மக்களை கைது செய்து வைத்திருக்கும் அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் பேரணி போவதை கண்டார். அந்த மெழுகுவர்த்தி பேரணியில் தான் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்பதை தூக்கி கிடாசிவிட்டு கலந்து கொண்டார் அவர். மார்ட்டின் லூதர் கிங் எனக்கொரு கனவு இருக்கிறது உரையை நிகழ்த்தும் பொழுது அதை கேட்க ஓடோடி வந்தவர் அவர். அவர் இறந்த பொழுது படப்பிடிப்பை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு மண்டியிட்டு கண்ணீர் விட்டார் அவர் !


வாசிப்பை நேசிப்பாய் நண்பா ! :

செவ்விந்திய மக்களை எப்படி கொன்றும்,குலைத்தும் அமெரிக்கா எழுந்தது என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து பதைபதைத்து போனார் அவர். கறுப்பின மக்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளவும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசித்தார் அவர். தென் அமெரிக்காவில் எழுந்த போராட்டங்கள் பற்றியும் தீவிர வாசிப்பு மற்றும் பயணத்தால் தெரிந்து கொண்டு எளியவர்களுக்கு குரல் கொடுத்தார் அவர்.


சொந்த நாட்டை விமர்சிப்பதே தேசபக்தி :

காட்ஃபாதர்  படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார். அதே போல இந்தியாவின் பீகாரில்  நிலவிய கொடிய பஞ்சத்தை பற்றி படமெடுத்து அமெரிக்க மக்களுக்கு போட்டு காண்பித்து அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முயன்ற பொழுது அதற்கு பெருந்தடைகள் எழவே "அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை !" என்று கோபத்தோடு பதிவு செய்தார் அவர்.

பணம் வாங்கத்தான் நடிக்கிறேன் நான் :

"நான் ஹாலிவுடில்  இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை. எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது ! வேறொன்றும் இல்லை !" என்று ஓபனாக பேசிய ஒரே நபர் அவராகத்தான் இருக்கவேண்டும்.

marlionmandro_1.jpg

தேவை ஒரு நாயகன் :

"மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை கொண்டாடுகிறார்கள். உங்களை சந்திக்காமலே நீங்கள் அற்புதமானவர்கள் என்று நம்புவார்கள். அதே மக்கள் உங்களின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக உங்களை வெறுப்பார்கள். மக்கள் தங்களுக்கான எதிரிகளை இழக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு பிடித்த வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். வெறுப்பதை காதலிக்கவும்,காதலிப்பதை வெறுக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு திட்டவும்,கொண்டாடவும் ஒரு நாயகன் எப்பொழுதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறான்" என்று அவர் சொன்னது எத்தனை உண்மையானது !

vikatan

  • தொடங்கியவர்

12890890_1018508148197879_16558011258556

நடனப் புயல் பிரபு தேவாவுக்கு இன்று பிறந்தநாள்.

உடல் அசைவில் உற்சாகம் கொண்டவர் நடிப்புலகில் நட்சத்திரமாய் ஜொலிப்பவர்
இயக்குனராய், தயாரிப்பாளராய் தமிழ் சினிமாவில் தடம் கொண்டவர்.
நடனமே உயிரென கொண்டு நாற்றிசையெங்கும் பெயர் கொண்டவர்
ஆடிய ஆட்டத்தில் எம்மையெல்லாம் ஆட வைக்கும்

  • தொடங்கியவர்

12936754_611212625693821_920975873622952

வாழ்த்துக்கள் மேற்கிந்திய தீவுகள்!

12963563_1093067617422566_83669973847457

  • தொடங்கியவர்

இந்த நடனத்தை தவறவிடவேண்டாம்!

  • தொடங்கியவர்

கஜகஸ்தானின் ஏஞ்செலினா ஜோலி !

 

 

jarina300.jpgஜரினா ட்சொலேவா..கஜகஸ்தானை சேர்ந்த 22 வயதாகும் இந்த இளம்பெண்தான் இன்டர்நெட்டின் லேட்டஸ்ட் வைரல். கஜகஸ்தானின் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் ஜரினா. அந்நாட்டின் பத்திரிக்கைகளில்  இதற்காக இடம்பெற்ற ஜரினாவின் பெயர் தற்போது ஹாலிவுட் மீடியாக்கள் வரை பிரபலம் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் இதுதான். ஜரினா அச்சு அசலாக அப்படியே நடிகை ஏஞ்செலினா ஜோலி போலவே இருப்பதுதான்.

திறமையால் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்றது இரண்டாவதாகவே பேசப்படுகிறது. மீடியாக்கள் அவர் ஏஞ்சலினா போல் இருப்பதைதான் இன்ட்ரோ கொடுத்து எழுதுகின்றன.

“இதுவரைக்கும் பார்த்ததில் ஏஞ்செலினா ஜோலி நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஸ்மித் படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் நிச்சயமாக பொய் சொல்லவில்லை. உண்மையிலேயே ஜோலி மிகவும் அழகானவர். மொத்த உலகமும் ஜோலியின் நடை, உடை, பாவனைகளை பின்பற்ற ஆசைப்படுகிறது. நானும் அவரும் ஒரே மாதிரி இருப்பதாக நிறைய பேர் கூறுகிறார்கள்.

jarina60011.jpg

ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஏதாவது ஒருசில விஷயங்களில் எங்களுக்குள் ஒற்றுமை இருக்கலாம். ஆனால் அப்படியே இருவரும் ஒரே மாதிரி இருக்கிறோம் என்பதை மறுக்கிறேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு விதங்களில் அழகாக இருக்கிறோம்” என முகத்தில் புன்னகையை படரவிடுகிறார் ஜரினா.

jarina6002.jpg

பாக்ஸிங்கில் ஜரினா செம கில்லி. “மற்றவர்கள் ஆண்டுமுழுவதும் கற்றுக்கொள்ளும் விஷயங்களை அவள், 5 நிமிடத்தில் கற்றுக்கொள்வாள். அந்தளவு திறமைசாலி. இன்னும் நிறைய ஜெயிப்பாள். ஜரினாவின் இப்போதைய ஒரே இலக்கு ரியோ ஒலிம்பிக்ஸ்தான்.” என்கிறார் ஜரினாவின் பயிற்சியாளர் அலெக்சாண்டர்.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.