Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இவங்களும் பிரபலங்கள்தான்!

 

p72a.jpg

‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள்’னு சொல்வாங்க. (அது யாருன்னுதான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்). அப்படி நாம் கொண்டாடும் நம் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைத் துணைகளைப் பற்றிப் பார்ப்போமா...

கீதா பாஸ்ரா: இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் மனைவி. இங்கிலாந்து நாட்டில் இந்தியப் பெற்றோர்களுக்கு பிறந்த இவர் நடிப்புக் கலை பயின்றவர். ‘தில் தியா ஹை’, ‘தி ட்ரெய்ன்’ என சில பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். பல நாட்களாகவே ‘லவ் பண்றாய்ங்களா, இல்லையா?’ என மக்களைக் குழப்பி மண்டை காய வைத்தவர்கள், ஒருவழியாக சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஹேசல் கீச்: ஹேசலை நம்மில் பல பேர் பார்த்திருப்போம். ‘செய் ஏதாவது செய்’ எனப் பாடியே ‘பில்லா’ படத்தில் அஜித்தின் துப்பாக்கியை ஆட்டையைப் போடுவாரே அவரேதான் இவர். இங்கிலாந்து நாட்டில் இங்கிலாந்து அப்பாவுக்கும், மொரிஷியன் அம்மாவுக்கும் பிறந்த ஹேசலுக்கு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மாப்பிள்ளை நம் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங். வாழ்த்துக்கள் யுவி.

p72b.jpg

ஆயிஷா முகர்ஜி: ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆங்கிலோ- இந்தியப் பெண்ணான ஆயிஷாதான் இந்திய அணியின் ஓப்பனர் ‘முறுக்கு மீசை’ தவானின் துணைவி. தவானை விட கிட்டத்தட்ட பத்து வயது மூத்தவரான ஆயிஷா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். ஹர்பஜன் சிங்தான் தவானுக்கு ஆயிஷாவை முகநூல் மூலமாக அறிமுகப்படுத்தினார். இருவரும் சில ஆண்டுகள் ஒருவரை ஒருவர் காதலித்து, 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, இன்று மூன்று குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள்.

சாக்‌ஷி: தோனியைத் தெரியும் எல்லோருக்குமே சாக்‌ஷியையும் தெரிந்திருக்கும். சாக்‌ஷியும் தோனியும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். அந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி 2010-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தச் சமயம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கும் சாக்‌ஷி, கொல்கத்தாவின் தாஜ் பெங்கால் ஹோட்டலில் ட்ரெய்னியாக பணியாற்றிக்கொண்டிருந்தார்.

p72c.jpg

ரித்திகா சஜ்தேஹ்: அதிரடி ஓப்பனர் ரோஹித் சர்மாவின் மனைவி. மும்பைப் பெண்ணான இவர் விளையாட்டுகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் ஒரு விளையாட்டு மேலாளரும்கூட. ரோஹித் சர்மாவும் இவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தோனிக்கும் சாக்‌ஷிக்கும் நடந்தது போலவே இவர்களுக்கும் நட்பு, காதலாக மாற சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

தீபிகா பல்லிகல்: தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி. தீபிகா பல்லிகல் சென்னையில் பிறந்த ஒரு கேரள குடும்பத்தைச் சேர்ந்த பெண். எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலம் படித்தவர். அது மட்டுமல்ல, 24 வயதே ஆன சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை. 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றவர். ஸ்குவாஷ் வீராங்கனைகள் தரவரிசையில் டாப்10-ல் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண் எனப் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவருக்கும் தினேஷ் கார்த்திக்குக்கும் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. தினேஷ் கார்த்திக் ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்துப் பெற்றவர்.

p72d.jpg

ப்ரியங்கா சௌத்ரி:  இந்திய அணியின் பிரபல ஆட்டக்காரர், சென்னை சூப்பர் கிங்ஸின் செல்லப்பிள்ளை சுரேஷ் ரெய்னாவின் மனைவி. ப்ரியங்காவும், ரெய்னாவும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் (நீங்களுமா?). ரெய்னாவின் தாயாருக்கு ப்ரியங்காவை ரொம்பவே பிடித்துப்போக  ரெய்னாவின் அம்மா ஆசைப்பட்டது போலவே, இருவருக்கும் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு வரை நெதர்லாந்து நாட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தார் ப்ரியங்கா.

மயந்தி லாங்கர்: ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி. உண்மையிலேயே கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஸ்டூவர்டை விட மயந்தியை நன்றாகவே தெரியும். பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளைத் தொலைகாட்சியில் தொகுத்து வழங்குவதே விளையாட்டு ஊடகவியலாளரான மயந்திதான்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மே 4: திப்பு எனும் மாவீரன் - ஒரு சிறப்பு பகிர்வு!

13173686_1128783480513774_31208373763119

திப்பு சுல்தான் மறைந்த தினம் இன்று .புலி என உண்மையாகவே குறிக்க வேண்டிய
வீரர் மற்றும் தலை சிறந்த நிர்வாகி இவர் .எளிய வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி
மைசூரின் மன்னர் ஆனார் ஹைதர் அலி . ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து
போராடிய அவரின் மகன் தான் திப்பு சுல்தான்.

திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட
ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப்
பறித்தார். கி.பி.1767முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில்
ஆங்கிலப் படைக்கும்மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே
பெற்றார் திப்பு.

இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட ஒரு இந்திய
மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம் போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால் வாய்த்தது.
ஹைதர் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே மரணம் அடைந்து விட மன்னர்
ஆனார் திப்பு .அவர் ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18 வருடங்கள்
போர்களத்திலேயே கழித்தார்

‘யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது
ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள்.
பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும்
முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்’ என்று, தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக
உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான். .

உலகத்தரத்திலான ராணுவத்தை உருவாக்கி இருந்தார் ; சொந்த தேதிமுறையை
பின்பற்றினார், தனித்த எடை,அளவுகள் ஆகியவற்றை புழக்கத்துக்கு கொண்டு வந்தார்.
இன்னமும் குறிப்பாக அதுவரை இந்தியாவில் பெரிய ராஜ்யங்களை அவர் காலத்தில்
ஆண்ட மன்னர்கள் முகாலயர்களின் சார்பாக ஆள்கிறோம் என்று சொல்லியபடியே
ஆண்ட பொழுது தனித்து நின்று தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டார்.

நாசாவின் கென்னெடி விண்வெளி மையத்தின் நுழைவாயில் ஒரு ஓவியம்
கொண்டிருக்கிறது -அதில் திப்பு ஏவுகணையை பயன்படுத்தி போரிடுவது
சித்தரிக்கப்பட்டுள்ளது ; போர்களத்தில் ஏவுகணையை முதன்முதலில் உலகிலேயே
பயன்படுத்தியவர் இவர்தான். அது இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக
சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது .அந்த ஆவணங்கள் இன்றும் லண்டனில்
பத்திரமாக உள்ளன ; அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கான்கிரீவ் ராக்கெட்களை
ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.

மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான எடுத்துகாட்டு இவர்- நூற்றி ஐம்பத்தாறு
கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது . எந்த அளவுக்கு அவரின் ஆட்சியில்
மத நல்லிணக்கம் நிலவியது என்பதற்கு இந்த தகவலே போதும் .கோயில்களுக்கு
செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும்
2,13,959 அளிக்கப்பட்டது இவர் ஆட்சியில்,சிருங்கேரி மடத்தலைவருடன் நெருங்கிய
உறவு பாராட்டினார் . மூன்றாம் மைசூர் போரில் பரசுராம் பாவ் எனும் மராத்தியர்
தலைமையிலான படைகள் நாசப்படுத்திய சிருங்கேரி ஆலயத்தை
சீரமைத்துக்கொடுத்தார்.

அவர் காலத்தில் சந்தன விற்பனை தேசியமயமானது. பட்டுப்புழு உற்பத்தியை தன்
ஆட்சிப்பகுதியில் அறிமுகப்படுத்தினார். கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்டியாக
இன்னொரு நிறுவனத்தை உருவாக்கவும் முனைந்தார் கப்பல் கட்டும்
தொழில்நுட்பம்,முகலாயர்களின் ஆட்சியில் இருந்து மாறுபட்ட
நிர்வாகம்,இடைத்தரகர்கள் இல்லாத நிலவரி விதிப்பு என இவரின் ஆட்சியின்
நிர்வாகப்பாடங்கள் ஏராளம். அந்த நிலவரி விதிப்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பலபேர்
நிலங்களை பெற்றார்கள் ; தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்த
மக்கள் இந்த முறைகளால் அங்கே இடம்பெயர்வதும் நடந்தது. நான்கு மைல்களுக்கு
ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை செயல்படுத்தினார் அவர் .

ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றெண்ணி திருமணத்துக்கு ஒரு
சதவிகிதம் மட்டுமே வருமானத்தில் செலவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத்
தடுத்து சட்டம் இயற்றியுள்ளார். கோயில்களில் இருந்த தேவதாசி முறையையும்
ஒழிக்கச் சட்டம் போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதைத் தீவிரமாகக்
கண்காணித்தார். ஆங்கிலேயரோ அதே காலத்தில் வங்கத்திலும்,பீகாரிலும் கஞ்சாவை
உற்பத்தி செய்து சீனாவை நாசமாக்கும் வகையில் அதை ஏற்றுமதி செய்து
கொண்டிருந்தனர்.

திப்பு அதே சமயம் ஆங்கிலேயருக்கு யாரேனும் உதவுகிறார்கள் என்று தெரிந்தால் தயவு
தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்கவும் யோசிக்கவில்லை. இவர் உருவாக்கிய பல்வேறு
சத்தமெழுப்பும் இயந்திரப்புலி ஒன்று இன்னமும் இங்கிலாந்து ம்யூசியத்தில் பழுதடைந்து
எவ்வளவோ முயற்சிக்குபின் சரி செய்ய முடியாமல் இருக்கிறது

ஆங்கிலேயரிடம் மூன்றாம் மைசூர் போரில் தோற்று அவரின் மகன்களை போருக்கான
பிணையாக கொண்டு சென்றார்கள் ஆங்கிலேயர்கள்; ஆங்கில கலாசாரத்தில் அவரின்
பிள்ளைகளை வளர்த்து இவரைக் காயப்படுத்தினார்கள் .

நான்காம் மைசூர் போரில் அவரின் அமைச்சர்கள் மீர் சதக் மற்றும் பூர்ணய்யா விலை
போய் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. ஹைதராபாத் நிஜாமின் கடல் போன்ற
படையோடு ஆங்கிலேயர் சேர்ந்த ஐம்பதாயிரம் பேர் படையை முப்பதாயிரம் பேர்
கொண்ட படையோடு எதிர்கொண்டு மரணம் அடைந்தார். இவர்.

“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள்
வீரம் காட்டி மடியலாம்” என்று தான் சொன்னபடியே தப்பித்து ஓடாமல் போரில் தீரம்
காட்டி இறந்தார் அவர். போரில் எண்ணற்ற இழப்புகள்,சூறையாடல்கள் எல்லாம் நிகழ்ந்த
அந்த கணத்தில் ஒரு ஒப்பற்ற தலைவன் இறந்து போனதற்காக மைசூர் மக்கள்
கண்ணீர்விட்டு அழுதார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். வீர
வரலாறு ஒன்று முடிவுக்கு வந்தது . திப்பு எனும் மாவீரன் மறைந்த நாள் இன்று (மே
நான்கு )

vikatan

  • தொடங்கியவர்
15 கைவிரல்கள், 16 கால்விரல்களுடன் பிறந்த குழந்தை
 

சீனாவில் குழந்­தை­யொன்று 15 கைவி­ரல்­க­ளையும் 17 கால் விரல்­க­ளையும் கொண்­டுள்­ளது. இக்­ கு­ழந்­தையின் பெற்றோர் சீனாவின் தென் பிராந்­தி­யத்­தி­லுள்ள குவாங்டோங் மாகா­ணத்தின் ஸெஷன்ஸென் நகரில் தொழில்­பு­ரி­ப­வர்கள். இவர்கள் மத்­திய பிராந்­தி­யத்­தி­லுள்ள ஹுனான் மாகா­ணத்தின் ஸோங்பிங் எனும் கிரா­மத்­தி­லி­ருந்து வந்­த­வர்­களார்.


16417childd.jpg

 

3 மாத வய­தான இந்த ஆண் குழந்­தையின் இடது கையில் 8 விரல்­களும் வலது கையில் 7 விரல்­களும் காணப்­ப­டு­கின்­றன. ஆனால், இரு கைகளிலும்­ பெரு விரல் இல்லை. ஹொங்கொங் என இக் ­கு­ழந்தை அழைக்­கப்­ப­டு­கி­றது.


இக்­ கு­ழந்­தையின் தாயா­ருக்கும் கை, கால்­களில் மேல­தி­க­மாக தலா ஒரு விரல் காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இக் ­கு­ழந்­தையின் தந்­தை­யான ஸோ சென்ங்லின் இது தொடர்­பாக கூறு­கையில், “எனது மனை­விக்கு கைக­ளிலும், கால்­க­ளிலும் மேல­தி­க­மாக தலா ஒரு விரல் உள்­ளது.

 

16417child.jpg

 

எனவே இந்­ நிலை மர­பியல் ரீதி­யாக எமது குழந்­தை­யையும் பாதிக்கும் என நாம் கவ­லை­கொண்­டி­ருந்தோம்.  இதனால், கர்ப்ப காலத்தில் ஷென்ஸென் நக­ரி­லுள்ள 3 பெரிய வைத்­தி­ய­சா­லை­களில் ஸ்கேன் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்டோம்.

 

எனினும், மருத்­து­வர்கள் குறை­பாடு எதையும் கண்­ட­றி­ய­வில்லை. எனவே, எமது குழந்தை 15 கை வி­ரல்­க­ளு­டனும் 16 கால் ­வி­ரல்­க­ளு­டனும் பிறந்­தமை எமக்கு அதிர்ச்­சி­யா­க­வுள்­ளது” எனத் தெரி­வித்­துள்ளார்.


16417child-1.jpg

 

இக்­ கு­ழந்­தையின் மேல­திக விரல்­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் அகற்­று­வ­தற்கு 1.1 கோடி ரூபா வரை செல­வாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந் நிதியை திரட்டுவதற்கு உள்ளூர் நலநிதியங்களின் உதவியை நாடுவதற்கு இக் குழந்தை யின் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சீனாவில் ஒரு வித்தியாசமான பாலத்தை தண்ணீரின் மீது கட்டியிருக்கிறார்கள். முழுக்க மரத்தினால் கட்டப்பட்ட இந்த மிதக்கும் பாலம், மத்திய சீனா ஹூபாய் மாகாணத்தில் ஓடும் ஒரு நதியின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைப் பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்தவாறே இயற்கையை ரசிக்கலாம்.

13102761_715583911877487_603460354631733

13147477_715583918544153_310396444376718

13119812_715583908544154_677021119777802

13131721_715583941877484_431367381501380

13177629_715583945210817_642125107301027

vikatan

  • தொடங்கியவர்

மே 4: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரும் தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய தியாகராஜ சுவாமிகள் பிறந்த தினம் இன்று..

13103354_1128783407180448_57451928484870

 

தியாகராஜ சுவாமிகள்

 
 
10_2839420f.jpg
 

கர்னாடக இசை மேதை

‘தியாகப் பிரம்மம்’ என்று போற்றப்படும் கர்னாடக இசை மேதை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் (Thyagaraja Swamigal) பிறந்த தினம் இன்று (மே 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l திருவாரூரில் (1767) பிறந்தார். இவர் பிறந்த சிறிது காலத்தில் குடும்பம் திருவையாறில் குடியே றியது. தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளை தந்தையும், பக்திப் பாடல்களை தாயும் இவருக்கு கற்றுக் கொடுத்தனர்.

l ஸொண்டி வெங்கடரமணய் யாவிடம் கர்னாடக இசை கற்றார். 8 வயதுமுதலே சீதா, ராமர், லட்சுமணர், அனுமன் விக்ரகங்களுக்கு அன்றாடம் பூஜை செய்வார். அப்போது, தெலுங்கு, சமஸ்கிருதத்தில் ராமன் மீது புதிய கீர்த்தனைகளை இயற்றி, அவரே ராகமும் அமைத்துப் பாடுவார்.

l தனது தாத்தா வைத்திருந்த பல இசை நூல்களைப் படித்தார். அதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ஸ்ரீராமகிருஷ்ணானந்தா சுவாமிகளிடம் சென்றார். அவர் இவருக்கு நாரத உபாசனை மந்திரத்தை உபதேசித்தார். பக்தியுடன் அதை உச்சரித்து வந்த இவருக்கு நாரத முனிவரே காட்சி கொடுத்து சங்கீத ஸ்வர ரகசியங்கள் அடங்கிய ‘ஸ்வரார்ணவம்’ என்ற அரிய நூலை வழங்கியதாக நம்பப்படுகிறது.

l ‘ராம’ நாம மந்திரத்தை 96 கோடி முறை ஜெபிக்குமாறு யதீந்திரர் என்ற மகான் கூற, 21 ஆண்டுகளில் அதை செய்து முடித்த தியாகராஜர், பலமுறை ராமனின் தரிசனம் பெற்றதாக கூறப்படுகிறது.

l கீர்த்தனைகள் இயற்றுவது, அவற்றுக்கு இசையமைத்து பாடுவது, வேத பாராயணம் செய்வது, புராணங்கள் கற்பது, இசையை மற்றவர்களுக்கு கற்றுத் தருவது என்று வாழ்க்கையை ஓட்டினார். பல புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை சென்று, ஆங்காங்கே பல கீர்த்தனைகளை இயற்றினார்.

l நன்றாக பாடுவதோடு வீணையும் நன்கு வாசிப்பார். கின்னரீ என்ற தந்தி வாத்தியம் வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார். 2,400 பாடல்களை இயற்றியுள்ளார். 24 ஆயிரம் பாடல்களை இயற்றியதாகவும் ஒரு கருத்து உண்டு. பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களையும் எழுதியுள்ளார். ஜோதிடம், கணிதத்திலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

l இந்திய இசை வரலாற்றில் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு ஏராளமான சீடர்கள் இவரிடம் சேர்ந்தனர். தஞ்சாவூர் ராமாராவ், வீணை குப்பய்யர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். சீடர்களுக்கு கர்னாடக இசையுடன் கணிதம், ஜோதிட சாஸ்திரமும் கற்றுக்கொடுத்தார்.

l இவரது இசைத் திறமை குறித்து கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் தன் அரசவைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாடச் சொன்னார். ராம பக்தியில் திளைத்திருந்த இவரோ மனிதரை துதி செய்து பாடமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

l இவரைப் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டன. 1935-ல் ராமசாமி பாகவதர் எழுதிய ‘ஸ்ரீ தியாக ப்ரம்மோபநிஷத்’ என்ற முதல் நூல் குறிப்பிடத்தக்கது.

l ‘தியாகப் பிரம்மம்’ என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் 80-வது வயதில் (1847) சித்தியடைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், திருவையாறில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சமாதியில் ஆண்டுதோறும் இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி, அவருக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  • தொடங்கியவர்

‘ப்ளாக் & ஒய்ட் கண்ணு உன்னைப் பாத்தா கலரா மாறுதே..!’ எனப் பாடவைக்கும் தென்னிந்திய சினிமா அழகிகள் இவர்கள்!

சாண்டல்வுட் சம்யுக்தா ஹொர்னாட்

p108a.jpg

கன்னட சினிமாவின் பிரபல நாடக ஆளுமை பிரகாஷ் பெலவாடியின் உறவினர். டிவி தொகுப்பாளராய் கேரியரை ஆரம்பித்தவர் 2007-ல் ‘ஆ திங்களு’ என்ற படத்தில் அறிமுகமானார். லூசியா எடுத்த பவண்குமாரின் முதல்பட ஹீரோயின் இவர். ‘லைஃபு இஷ்டேனே’ என்ற அந்தப் படம் தந்த வெல்வெட் விரிப்பால் பிரகாஷ் ராஜின் ‘உன் சமையலறையில்’ மும்மொழிப்  (தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளிலும் தயாரான) படத்தில் நடித்தார். இப்போது 2 கன்னடப் படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங்! சமத்து சம்யுக்தா!
 
 மல்லுவுட் ஈடன் குரியகோஸ்

p108b.jpg

முட்டைக்கோஸ் போல கும்முனு இருக்கும் ஈடன் குரியகோஸ் மலப்புரத்து தேவதை. 2013-ல் ‘ஆண்டவப்பெருமாள்’ என்ற சுமார் படத்தில் நடித்திருந்தார். யூகி சேதுவின் அசிஸ்டெண்ட் சரவணன் இயக்கிய ‘இருக்கு ஆனா இல்லை’ காமெடி த்ரில்லர் படத்தில் ஹீரோயினாக நன்றாகவே நடித்திருந்தார். ஆனால் படத்தில் பேய் வேடம் போட்டதால் மேக்-அப்பில் ஈடனின் ஈடில்லா அழகு யாருக்கும் தெரியவில்லை. இப்போது ‘இனி வரும் நாட்கள்’ என்ற படத்திலும் ‘நச்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அவை மலையாளத்திலும் தயாராகும் இருமொழிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈடனை கோலிவுட் அரவணைச்சுக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்?
 
 டோலிவுட் அனிஷா அம்ப்ரோஸ்

p108c.jpg

ஒடிசல் அழகி ஒடிசாவின் சொத்து. அப்பாவின் ஊர் விசாகப்பட்டினம் என்பதால் ஜாகை மாறியவருக்கு அதிர்ஷ்டக்காற்று  ‘அலியாஸ் ஜானகி’ என்ற படத்தின் மூலம் அடித்தது. ‘எம்பிஏ முடிச்சுட்டு என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ செல்லம்!’ என அப்பா அம்மா சொன்னதைத் தட்டாமல் செய்தார் அனி பேபி. ஃபேஸ்புக்கில் மாடலிங் போட்டோக்களை விளையாட்டாக எடுத்து விட ஆரம்பித்தவருக்கு குறும்பட வாய்ப்பு கிடைத்து அப்படியே பெரிய திரை வசமானது. கோபாலா கோபாலா, எ செகண்ட் ஹேண்ட் லவ்வர், ரன் என மூன்று படங்கள் வரிசை கட்டி வந்து ஆளை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. ரன் நம்ம ஊர் ‘நேரம்’ படத்தின் ரீமேக். ரன் தெறி ஹிட் அடிக்க அனிஷா தெறி பேபி ஆகிவிட்டார். சூப்பர் பேபி!

vikatan

  • தொடங்கியவர்
இன்போசிஸ் நிறுவன ஸ்தாபகர் நாராயண மூர்த்தி திரு­ம­ண­மான மக­ளுக்­கு எழுதிய நெகிழ்ச்சி கடிதம்
 

இந்­தி­யாவின் பிரபல தொழிலதிபரான இன்போசிஸ் நிறுவன ஸ்தாபகர் நாராயண மூர்த்தி,  தன்­னு­டைய மக­ளுக்கு எழு­திய உருக்­க­மான கடிதம், இணை­யத்தில் வைர­லாகியுள்­ளது.

 

தன்­னு­டைய மூத்த மகள் அக்‌­ஷதா பிறந்த பின்னர் தான் எவ்­வா­றெல்லாம் மாறினேன் என்­பது உட்­பட பல்­வேறு நிகழ்­வுகள் குறித்து நெஞ்சை நெகிழச் செய்யும் வித­மாக அவர் எழு­திய அந்த கடிதத்தின் தமிழாக்கம். 

 

16426narayanamurthuvc3.jpg

 

அக்‌­ஷதா, ஒரு அப்­பா­வாக ஆனது நான் நினைத்­தி­ராத அளவு என்னை மாற்­றி­விட்­டது.

 

நான் மீண்டும் பழைய ஆளாக மாற முடிந்­ததே இல்லை. உன்­னு­டைய வரவு கற்­பனை செய்­து­கூட பார்க்­காத அள­வுக்கு மகிழ்ச்­சி­யையும், ஒரு பெரிய பொறுப்­பையும் எனக்கு தந்­தது. இப்­போது நான் வெறும் மகனோ, கண­வனோ, வளர்ந்து வரும் நிறு­வ­னத்தின் ஊழி­யரோ மட்டும் இல்லை.  

 

நான் இப்­போது ஒரு மகளின் வாழ்க்­கையில் ஒவ்­வொரு கட்­டத்­திலும் அவளின் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப மாற வேண்­டிய தந்தை.உன்­னு­டைய பிறப்பு எல்லா வகை­யிலும் என் வாழ்வில் ஒரு அடை­யா­ள­மாக மாறி விட்­டது.

 

வேலை­யி­டத்தில் மிகவும் சிந்­தித்தும், அள­விட்டும் மட்­டுமே நான் பேச்­சு­வார்த்தை நிகழ்த்­து­கிறேன். வெளி உல­கோடு நான் செய்யும் பரி­மாற்­றங்கள் அனைத்­துமே மிகவும் கண்­ணி­ய­மா­கவும், முதிர்ந்த சிந்­தனை உடை­ய­தா­கவும் மாறி விட்­டன.

 

ஒவ்­வொரு மனி­த­ரையும் மிகவும் மரி­யா­தை­யா­கவும் கவ­ன­மா­கவும் அணுக வேண்­டிய அவ­சி­யத்தைப் புரிந்து கொண்டேன். ஏனெனில், என்­றேனும் ஒரு நாள் நீ வளர்ந்து வெளி உலகை புரிந்து கொள்­ளும்­போது,  உன் தந்தை தவ­றி­ழைத்து விட்டார் என நீ எண்ணக் கூடாது.

 

இப்­போது நீங்கள் இருக்கும் நிலைக்கு உங்­களைக் கொண்டு வந்­த­தற்கு நான் உன் தாய்க்கு நன்றி உள்­ளவன் ஆவேன். அவள் உங்­க­ளுக்கு வார்த்­தை­களைக் காட்­டிலும் செய­லில்தான் அனைத்­தையும் கற்றுக் கொடுத்தாள்.

 

உனக்கும் ரோஹ­னுக்கும் அவள் எளிமை, சிக்­கனம் ஆகி­ய­வற்றின் முக்­கி­யத்­து­வத்தைக் கற்று கொடுத்­தி­ருக்­கிறாள்' என்­ப­துதான். ஒரு முறை பெங்­க­ளூரில் இருக்கும் போது உன் பள்ளி விழா­விற்கு நீ ஒரு சிறப்­பான உடையை அணிய வேண்டியிருந்­தது. அப்­போது அடிப்­ப­டை­யான விஷ­யங்­களைத் தவிர்த்து, வேறுறெதும் வாங்க எங்­க­ளிடம் வசதி கிடை­யாது.

 

உன் அம்மா உன்­னிடம்,  'அந்த உடையை வாங்க முடி­யாது, அதனால் நீ அந்த போட்­டியில் பங்­கேற்க வேண்டாம்' எனக் கூறினாள். வெகு நாட்­க­ளுக்குப் பின்னர், நாங்கள் ஏன் அப்­படி உன்­னிடம் நடந்­து­கொண்டோம் என புரி­ய­வில்லை எனக் கூறினாள்.

 

அன்று ஒரு குழந்­தை­யாக பாட­சா­லையில் அந்த விழாவில் கலந்து கொள்­ளாமல் நீ வருத்­தப்­பட்­டது தெரியும். ஆனால், அது உனக்கு வாழ்க்­கையில் சிக்­க­னத்தைப் பற்­றிய மிகப் பெரிய பாட­மாக அமைந்­தது.

 

ஆனால், வாழ்க்கை இப்­போது மாறி விட்­டது. நம்­மிடம் போது­மான அளவு பணம் உள்­ளது. ஆனால், உனக்குத் தெரியும். நம் வாழ்க்­கை­முறை எளி­மை­யா­னது என்று. ஒரு முறை நமக்கு சிறிது பணம் வந்­ததும், உங்­களை காரில் பள்­ளிக்கு அனுப்­பலாம் எனக் கூறினேன்.

 

ஆனால் உன் அம்மா, 'நீயும் ரோஹனும் எப்­போதும் போல் ஆட்­டோவில் மற்ற மாண­வர்­க­ளுடன் செல்­லட்டும்' எனக் கூறினாள். நீ ஆட்­டோவின் ஓட்­டுனர் 'மாமா'வுடனும் மற்ற குழந்­தை­க­ளு­டனும் நல்ல நட்பு கொண்டு மகிழ்ச்­சி­யோடு சென்றாய். சில நேரத்தில் இப்­படி சின்ன சின்ன விஷ­யம்தான் வாழ்வில் மகிழ்ச்சி.

 

நீ அடிக்­கடி என்­னிடம், 'மற்ற குழந்­தைகள் வீட்டில் தொலைக்­காட்சி இருக்­கும்­போது ஏன் நம் வீட்டில் மட்டும் இல்லை?' எனக் கேட்பாய்.

 

ஆனால் உன் தாய்,  'படிப்­ப­தற்கும், விளை­யா­டு­வ­தற்கும், நண்­பர்­களைச் சந்­திப்­ப­தற்கும் நேரம் இருக்­காது' எனக் கூறி தொலைக்­காட்சி வாங்க வேண்டாம் எனக் கூறி­விட்டாள். 

 

அதனால், தினமும் இரவு 8  மணி­யி­லி­ருந்து 10 மணி வரை நம் குடும்­பத்­தோடு சேர்ந்து ஏதா­வது பிர­யோ­ச­ன­மாக செய்ய முடி­வெ­டுத்தோம்.

 

ஒரு மகள் திரு­ம­ண­மாகி செல்லும் போது, தந்­தையின் மன­நிலை மிகுந்த குழப்­பத்தில் இருக்கும் என்­பது அனை­வரும் அறிந்த ஒன்றே. அவ­ளு­டைய வாழ்வில் எல்­லா­மு­மாக இருந்த அப்­பாவின் இடத்தை,  நம்­பிக்­கை­யு­டைய வேறு ஒரு இளைஞன் பிடிப்பான்.

 

அவ­னி­டம்தான் இனி அவள்,  அவ­ளது சோகம், மகிழ்ச்சி என அனைத்­தையும் பகிர்ந்து கொள்வாள் என்னும் விஷ­யத்தை அனைத்து அப்­பாகளும் வெறுப்­பார்கள். நீ உன் வாழ்க்கை துணையைக் கண்­டு­விட்டாய் எனக் கூறி­யதும் எனக்கும் சிறிது சோக­மா­கவும், பொறா­மை­யா­க­வும்தான் இருந்­தது.

 

 

ஆனால், நான் ரிஷியைச் சந்­தித்­ததும் அவ­னது தோற்­றமும், தைரி­யமும், அனைத்­திற்கும் மேலாக அவன் நேர்­மையும் என்னைக் கவர்ந்த போதுதான்,  'நீ ஏன் உன் மனதைப் பறி­கொ­டுத்தாய்?' எனத் தெரிந்து கொண்டேன். அதன் பிற­குதான் நீ அவ­னுடன் உன் வாழ்க்­கையை வாழ நான் ஒப்புக் கொண்டேன்.

 

சில மாதங்­க­ளுக்கு முன்பு, என்னை நீ ஒரு தாத்­தா­வாக மாற்றி பெரு­மை­ப்­டுத்­தினாய். ஒரு அப்­பா­வாக உன்னை தூக்­கிய மகிழ்ச்­சியை வார்த்­தை­களால் விளக்க முடி­யாது என்றால், உன்­னு­டைய இல்­ல­மான சாண்டா மோனி­காவில் உன் அழ­கிய மகள் கிரிஷ்ணாவைத் தூக்­கிய அனு­பவம் முற்­றிலும் மாறு­பட்­டது.

 

நான் இனி ஒரு ஞான­முள்ள வய­தா­ன­வ­னாக நடந்­து­கொள்ள வேண்­டுமோ என ஆச்­சர்­யப்­பட்டேன்! இனி ஒரு அழ­கிய குட்டிச் செல்­லத்தை வளர்க்கும் இன்­பத்தை நான் அனு­ப­விப்பேன்.

 

உன் திருப்தியான வாழ்வில்,  உன் இலட்சியத்தை நோக்கி நீ சென்று கொண்டு இருக்கையில், ஒன்றை மட்டும் நினைவில் கொள். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு கிரகத்தில்தான் அதுவும் இப்போது ஆபத்தில் உள்ளது.

 

நன்றாக ஞாபகம் வைத்துக்கொள். நாங்கள் எப்படி, நீ வாழ ஒரு நல்ல இடமாக பூமியைத் தந்தோமோ அதேபோல் கிருஷ்ணாவிடம் இப்பூமியை ஒப்படைப்பது உன் கடமை!பத்திரம் அன்பு மகளே! என எழு­தி­யி­யுள்ளார்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நியூ சிலாந்து காவல் துறையினரின் அட்டகாசமான நடனம்
========================================================

இணையத்தில் பிரபலமடைந்துவரும் ரன்னிங் மேன் பந்தயத்தின்படி, ஒருவர் தொண்ணூறுகளின் பாடல்களுக்கு ஆடும் காணொளியை இணையத்தில் பகிர வேண்டும்.

அந்த பந்தயத்தை ஏற்றுக்கொண்ட நியூசிலாந்து காவல் துறையினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதனை இணையத்தில் ஐம்பது லட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். நியூ சிலாந்தின் ஜனத் தொகையை விட இது அதிகம்!

  • தொடங்கியவர்

மே 5: சரித்திர மாவீரன் நெப்போலியன் நினைவு தினம் இன்று..

13174006_1129497277109061_35759043510202

நெப்போலியன் இறந்தது எப்படி என்கிற கேள்விக்கு வரும் பதில்கள் இவை...

நெப்போலியன் போனபார்ட் எப்படி இறந்தார்?' - ஐரோப்பா பல்லாண்டுகளாக விடை தேடிக் கொண்டு இருக்கும் கேள்வி. ஏனெனில், மைனஸ் 26 டிகிரி குளிரில் குதிரைகளின் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழ்ந்தவர். தீவுச் சிறையில் இருந்து கடலை நீந்திக் கடந்த மாவீரன் நெப்போலியன்.அவர் தானாக நோய் வாய்ப்பட்டு இறந்தார் என்றால், எப்படி நம்புவது? 'தனிமைச் சிறையில் நெப்போலியனுக்கு என்ன நடந் தது?' என்பதை அறிய யாருக்கும் எந்த க்ளூவும் அப்போது கிடைக்கவில்லை.

1816-ம் வருடத்தில் இருந்து 1821-ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை உதிர்ந்த முடிகள் ஆய்வுக்குக் கிடைத்தன. அப்போதுதான் நெப்போலியனின் முடிகளில் ஆர்சனிக் அமிலம் கலந்திருந்தது முதல் க்ளூவாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 'ஆரோக் கியமான ஒரு மனிதரின் முடியில் சோதனையில் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு ஆர்சனிக் இருப்பது இல்லை. எனவே, நெப்போலியன் மரணத்துக்குக் காரணம் விஷமாக இருக்கலாம்' என்று கண்டுபிடித்தார்கள். 'விஷம் கலந்த காற்றை அவர் சுவாசித்ததாலோ, விஷம் கலந்தவற்றை உண்டதாலோ நெப்போலியன் மரணம் அடைந்திருக்கலாம்!' என்று லக்ஸம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் வென்னிங் அறிவித்தார்.

பின்பு, நெப்போலியனின் அறை பற்றிய ஆய்வுகள் இரண்டு க்ளூக்களை அளித்தன. ஒன்று, அங்கு இருந்த ஓவியம். இரண்டாவது, அந்த அறையின் சுவரை அலங் கரித்த வால் பேப்பர்கள். இவை இரண்டிலுமே 'மெள்ளக் கொல்லும்' ஸ்லோ பாய்சன் பூசப்பட்டு இருந் தது. 'அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வண்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே இருந் ததால், விஷத்தைச் சுவாசித்துச் சுவாசித்து அவர் இறந்துவிட் டார்!' என்று ஒரு தரப்பு ஆய்வாளர் கள் சொன்னார்கள்.

'வால் பேப்பரை ஒட்டும் பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்க முடியாமல் நெப்போலியன் வால் பேப்பரைக் கிழித்துத் தின்றதால் இறந்தார்' என்று இன்னொரு தரப்பு அறிவித்தது. இன்னும் ஊர்ஜிதமான உண்மை வெளிவந்த பாடு இல்லை!

vikatan

  • தொடங்கியவர்
 
இந்தக்கால த்ரிஷா, சமந்தா, ஹன்சிகா மாதிரி அக்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த
டி. ஆர். ராஜகுமாரி அவர்களின் பிறந்த தினம்.

இவர் நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்று விளங்கியிருந்தார்.
13139097_1037349096313784_38953207186042
  • தொடங்கியவர்
நியூஸிலாந்து பொலி­ஸாரின் நடன சவா­லுக்கு நியூயோர்க் பொலிஸார் பதி­லடி
 

16445police.jpgநியூஸிலாந்து பொலி­ஸாரின் நடன வீடி­யோ­வொன்று இணை­யத்தில் கலக்கி வரு­கி­றது. 

 

“கோஸ்ட் டவுன் டீ.ஜே.” எனும் இசை­க் கு­ழு­வினால் 1996 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்டு பிர­ப­ல­மான  ‘மை பூ’ எனும் பாட­லுக்கு நியூஸிலாந்து பொலிஸார் சிலர் நட­ன­மாடி வீடி­யோ­வொன்றை பதி­வு­செய்து இணை­யத்தில் வெளி­யிட்­டுள்­ள­துடன் உலகின் ஏனைய நாடு­க­ளி­லுள்ள பொலி­ஸாரும் முடிந்தால் இவ்­வாறு நட­ன­மா­டலாம் என சவால் விடுத்­தனர்.

 

‘ரன்னிங் மேன் சலேஞ்’ என இது அழைக்­கப்­ப­டு­கி­றது. மைக்கல் ஜக்­ஸனின் சகோ­தரி ஜெனட் ஜக்­ஸனால் 1978 இல் அறி­மு­கப்­ப­டுத்­தப்பட்ட ‘ரன்னிங் மேன்’ நட­னத்தின் பாணியில்  நியூஸிலாந்து பொலிஸார் நட­னமா­டி­யுள்­ளனர்.


16445police3.jpgநியூஸிலாந்தின் ஆக்­லாந்து நக­ரி­லுள்ள வாக­னத்­ த­ரிப்­பி­ட­மொன்றில் பொலி ஸார் நட­னமா­டிய காட்சி அவ் ­வீ­டி­யோவில் பதி­வா­கி­யுள்­ளது. இவ் ­வீ­டியோ இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்டு 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் சுமார் 48 இலட்சம் தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டி­ருந்­தன. இது நியூஸிலாந்து மக்கள் தொகை­யை­விட அதி­க­மாகும்.


“இந்த நட­ன­மா­டு­வது பொலி­ஸாரின் வேடிக்­கை­யு­ணர்வை வெளிப்­ப­டுத்­து­வ­துடன்  இது விசு­வா­சத்­தையும்  நம்­பிக்­கை­யையும் கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பா­னது” என நியூஸிலாந்து பொலிஸ் பேச்­சா­ள­ரான ஷெலி நாஹ்ர் தெரி­வித்­தி­ருந்தார்.


மேற்­படி வீடி­யோவை தமது பேஸ்புக் பக்­கத்தில் வெளி­யிட்ட நியூஸிலாந்து பொலிஸார், அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, பிரிட்டன் ஆகிய நாடு­களின் பொலி­ஸாரின் பேஸ்புக் பக்­கங்­க­ளையும் ‘டெக்’ செய்­தி­ருந்­தனர்.


இந்­நி­லையில், நியூஸிலாந்து பொலி­ஸாரின் சவா­லுக்கு முத­லா­வ­தாக அமெ­ரிக்­காவின் நியூயோர்க் பொலிஸ் திணைக்­கள அதி­கா­ரிகள் பதில் அளித்­துள்­ளனர். நியூயோர்க்கின் புரூக்ளின் பாலத்தின் பின்­ன­ணியில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலர் நட­ன­மாடும் காட்சி பதி­வு­செய்­யப்­பட்டு நேற்று புதன்­கி­ழமை இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 

 

நடனக் கலை­ஞர்கள் சில­ருடன் இணைந்து நியூயோர்க் பொலிஸார் மேற்­படி வீடி­யோவில் நட­ன­மா­டு­கின்­றனர். அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பொலி ஸாரும் இச்சவாலுக்கு பதிலளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவு ஸ்திரேலிய பொலிஸாரும்  இச் சவாலுக்கு பதிலளிக்கக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

/metronews.lk

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13087170_1037345096314184_64552903384235

நடிகை ஷெரீனின் பிறந்தநாள்
Happy Birthday Sherin

  • தொடங்கியவர்

டேடிங் போக கேட்ட பெண்ணுக்கு நச்சென பதிலளித்த கெய்ல்

 

இந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் டுவிட்டரில் கெய்லிடம் கேட்ட கேள்விக்கு அவர்  நச்சென பதிலளித்துள்ளார்.

 

chris-gayle.jpg

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடி வீரர் மட்டுமல்ல, பற்கல சேஷ்டைகளிலும் கில்லாடி.

அதேவேளை, குசும்பாக பேசுவதிலும்  அவரை விஞ்ச எவரும் இல்லை. அண்மையில், அவுஸ்திரேலியாவில் பெண் நிருபரிடம் குசும்பாகப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.  அதற்குப் பின்னர்  கெய்ல் ரொம்ப நாசூக்காக பேசி வருகிறார்.

 

இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இதில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார்.

 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் டுவிட்டரில் கெய்லிடம் ஒரு கேள்வியைக் கேட்க அவர் அதற்கு நச்சென பதிலளித்துள்ளார்.

gayle1.jpg

 

மிஸ் அரோஹி என்ற பெண் தனது டுவிட்டரில் கெய்லிடம், எனது இதயம் உங்களுக்காக மட்டுமே துடிக்கிறது பாஸ். நாம் டேட்டிங் போகலாமா என்று கேட்டுள்ளார். 

gayle.jpg

அதற்கு கெய்ல், நீங்கள் பில்லை கட்டுவதாக இருந்தால் நான் தயார் என்று கலாய்த்துள்ளார்.

virakesari

  • தொடங்கியவர்
 

வரலாற்றில் இன்று...
மே - 05

718varalru.jpg1260: மொங்­கோ­லியப் பேர­ரசின் மன்­ன­னாக குப்ளாய் கான் முடி சூடினான்.


1762: ரஷ்­யாவும் பிரஷ்­யாவும் சமா­தான உடன்­பாட்டை எட்­டின.


1821: பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லியன், பிரித்­தா­னி­யரால் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­தி­லுள்ள செயின்ற் ஹெலினா தீவில் சிறை­வைக்­கப்­பட்ட நிலையில் இறந்தான்.

 

1916: டொமி­னிக்கன் குடி­ய­ரசை அமெ­ரிக்க கடற்­ப­டை­யினர் கைப்­பற்­றினர்.


1936: எத்­தி­யோப்­பி­யாவின் தலை­நகர் அடிஸ் அபா­பாவை இத்­தா­லியப் படைகள் கைப்­பற்­றினர்.


1940: இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாடு கடந்த நிலையில் நோர்­வேயின் அரசு லண்­டனில் அமைக்­கப்­பட்­டது.


1941: எத்­தி­யோப்­பி­யாவின் மன்னர் ஹைலி செலாசி அடிஸ் அபாபா திரும்­பினார். மே 5, அங்கு விடு­தலை நாளாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.


1942: பிரித்­தா­னியப் படை­யினர் மட­கஸ்­காரைத் தாக்­கினர்.


1944: இந்­தி­யாவில் மகாத்மா காந்தி சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யானார்.


1945: இரண்டாம் உலகப் போரில் கனடா மற்றும் பிரித்­தா­னியப் படை­க­ளினால் ஜேர்மன் படைகள் நெதர்­லாந்து, டென்மார்க் நாடு­களில் இருந்து விரட்­டப்­பட்­டன.


1945: இரண்டாம் உலகப் போர்: ஆஸ்­தி­ரி­யாவில் நாஸி­களின் மோதோசென் வதை முகாம் விடு­விக்­கப்­பட்­டது.


1950: தாய்­லாந்தின் ஒன்­ப­தா­வது ராமா மன்­ன­ராக பூமிபால் அதுல்­யாதே முடி சூடினார்.


1955: மேற்கு ஜேர்­மனி முழு­மை­யாக சுதந்­தி­ர­ம­டைந்­தது.


1961: அலன் ஷெப்பார்ட் விண் ­வெ­ளிக்குச் சென்ற இரண்­டா­வது மனி­தரும் முத­லா­வது அமெ­ரிக்­கரும் ஆனார்.


1980: லண்­டனில் ஆறு நாட்­க­ளாக ஆயு­த­பா­ணி­களால் முற்­று­கை­யி­டப்­பட்­டி­ருந்த ஈரா­னியத் தூத­ர­கத்தின் மீது பிரித்­தா­னிய வான்­ப­டை­யினர் தாக்­கு­தலை ஆரம்­பித்­தனர்.


1981: ஐரிஷ் புரட்­சி­யாளர் பொபி சான்ட்ஸ் சிறையில் உண்­ணா­வி­ர­த­மி­ருந்து இறந்தார்.


2006: சூடான் அர­சுக்கும் சூடான் விடு­தலை இரா­ணு­வத்­துக்கும் இடையில் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.


2007: கென்­யாவின் விமானம் ஒன்று கெமரூனில் வீழ்ந்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.


2010: கிறீஸில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13179434_1037345569647470_91476100835558

நவீன அரசியல் ஞானிகளில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்.

ஜெர்மனியைச் சேர்ந்த இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக விளங்கிய மார்க்ஸ் எழுதிய
'மூலதனம்' நூல் மிகப் புகழ் பெற்றது.

 

மே 5; சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று .உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை . போராட்டம், வறுமை, வலிகள், பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர் .ஜெர்மனியில் மே - 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் . மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது ..

தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .

karamarx.jpg

கரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை செல்வ வளம் மிகுந்த குடும்பத்தின் நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .

பிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .

ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர் .எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார் . இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;ஒரு
பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை வாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை -மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்

அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;"பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை !"என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .

ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது .'

vikatan

  • தொடங்கியவர்

அமெரிக்க தூதருக்கு துடுப்பாட்ட நுணுக்கங்களை கற்றுக்கொடுத்த மெத்தியூஸ்

 

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கைக்கான அமெரிக்கத் தூதருக்கு துடுப்பாட்ட நுணுக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளார்.

13151688_10154864654552846_3834346372628

தூதரகம் ஏற்பாடு செய்துள்ள கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 

இந்நிலையேிலேயே அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அதுல் கேஷாப்பிற்கு துடுப்பாட்ட நுணுக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

13087343_10154864654702846_6286823819117

13118985_10154864700487846_8993754270417

13125007_10154864654397846_5147470457551

virakesari

  • தொடங்கியவர்

13131115_1037341532981207_81111038696323

நடிகை ராய் லக்ஷ்மியின் பிறந்தநாள் இன்று

  • தொடங்கியவர்

லகத்துலேயே கஷ்டமான வேலை பத்திரிகையாளராக இருப்பதுதான் என்கிறது ஓர் ஆராய்ச்சி. எங்க கஷ்டம் எங்களோட இருக்கட்டும். இப்போ, உலகின் ஈஸியான, ஜாலியான வேலைகளைத் தெரிஞ்சுக்கலாமா?

p48a.jpg

சொகுசு மெத்தைப் பரிசோதனையாளர்: பெரும்பாலான நாடுகளில் பகுதி நேரமாகக் கிடைக்கும் வேலை. மாசத்துக்கு ஒருநாள் வேலை பார்த்தால் போதும். சம்பளம் 75,000 ரூபாய்னு சொன்னா, மயக்கம் போட்டு கீழே விழுவீங்க. சொகுசு மெத்தைகளைப் பரிசோதனை பண்ற வேலை இப்படித்தான். மாதத்தில் ஒருநாள், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மெத்தை நிறுவனங்கள் தயாரித்திருக்கும் புதிய வகை சொகுசு மெத்தையைப் பயன்படுத்திப் பார்த்து, நிறை குறைகளைச் சொல்ல வேண்டியது முக்கியமான வேலை (?!). எக்ஸ்ட்ரா வேலையாக ‘இந்த மெத்தையில் தூங்கும்போது தூக்கம் எப்படி இருக்கிறது?’ போன்ற சர்வே கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு, சம்பளத்தை வாங்கிக்கொண்டு கிளம்பலாம்!

p48b.jpg

நீர் சறுக்குப் பரிசோதனையாளர்: சுற்றுலாத் தளங்கள், பூங்காக்கள், பெரிய பெரிய ரிசார்ட்களில் சறுக்கிக்கொண்டே தண்ணீரில் விழும் ‘வாட்டர் ஸ்லைட்’டைப் பரிசோதிப்பதுதான் வேலை. ஒருமுறை, இருமுறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் சறுக்கி விளையாடலாம். ஆட்டம் முடிந்ததும், ‘வாட்டர் ஸ்லைடின்’ உயரம் போதுமானதாக இருக்கிறதா, வேகம் எப்படி, செலுத்தும் தண்ணீரின் அளவைக் குறைக்கலாமா, அதிகரிக்கலாமா? என ‘சாம்பார்ல உப்பு சரியா இருக்கா?’ கதைதான். ஆனால், சம்பளம் நம் ஊர் மதிப்பில் இருபது லட்சத்தைத் தாண்டும்!

p48c.jpg

ஒயின் டெஸ்டர்: காலையில் எழுந்திரிச்சதுமே, சில பேர் விதம்விதமான ஒயின் பாட்டில்களுடன் வந்து, ‘சார்.. இது எப்படி இருக்குனு குடிச்சுட்டுச் சொல்லுங்களேன்’னு எழுப்பினா எப்படி இருக்கும்? அதுதான், அதேதான் ஒயின் டெஸ்டரோட வேலை. தங்குவதற்கு இடம், இலவச வைஃபை வசதியும் உண்டு. ஏனெனில், ஒயினைக் குடித்துப் பார்த்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிந்துகொள்ள வேண்டும். சம்பளம் 7 லட்சங்களாம்!

p48d.jpg

கேண்டி டெஸ்டர்: மேலே சொன்னது சரக்கு, இது சாக்லேட். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால், சிறுவர்களுக்குத்தான் இந்த வேலையில் முன்னுரிமை. பகுதி நேர வேலைக்கே பல்க்கான சம்பளம் கைக்கு வரும். சாக்லேட் நிறுவனங்கள் மட்டுமல்ல, நொறுக்குத் தீனிகளை உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்கள் இந்த வேலைக்கு ஆட்களைத் தேர்வுசெய்வார்கள். புதிதாகத் தயாரித்த தீனியை அல்லது கொஞ்சம் மாற்றியமைத்த சாக்லேட், கேக், ஸ்நாக்ஸ் வகைகளைத் தின்று வாசனை, சுவை எப்படி இருக்கிறது எனக் கமென்ட் கொடுக்க வேண்டியதுதான் வேலை. நினைத்தாலே இனிக்குதுல்ல?

p48e.jpg

பைக்-ரைடர் போட்டோகிராஃபர்: ‘கூகுள் மேப்’பில் பயன்படுத்துவதற்காகப் புகைப்படங்களை எடுப்பதுதான் இந்த வேலை. வரலாற்றுப் பிரசித்திபெற்ற இடங்கள், முக்கியமான கட்டடங்கள், லேண்ட் மார்க், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள் எனக் கண்ணில் பட்டதை க்ளிக்கலாம். ‘ஸ்ட்ரீட் வியூ’ வசதியும் அறிமுகமாகிவிட்டதால், தெருத் தெருவாக அலைய வேண்டிய அவசியமும் இருக்கும். புகைப்படப் பிரியர்களுக்கு இது ஈஸியான வேலைனு சொல்லியாத் தெரியணும்?

vikatan

  • தொடங்கியவர்

ஆரம்பகால தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கிய பாவலர் பி. யு. சின்னப்பா அவர்களது பிறந்த தினம்.

13124944_1037348332980527_58955083674196

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 06
 
 

article_1430888024-eiffel-tower.jpg1542: பிரான்சிஸ் ஷேவியர் அடிகளார் இந்தியாவின் கோவா நகரை அடைந்தர்.

1682: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னன் நீதிமன்றத்தை வேர்செய்ல்ஸ் அரண்மனைக்கு மாற்றினான்.

1889: ஈபில் கோபுரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது.

1910 பிரிட்டனின் 7ஆம் எட்வர்ட் மன்னர் இறந்ததையடுத்த 5ஆம் ஜோர்ஜ் மன்னரானார். 

1937: ஜேர்மனின் வெப்பவாயு ஆகாயக் கப்பலான (ஸெப்பளின்) ஹிண்டன்பர்க் அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகரில் தரையிறங்க முயன்றபோது தீப்பற்றியதால் 36 பேர் பலி.

1976: இத்தாலியின் பிரியூலி நகரில் வீசிய சூறாளியினால் 989 பேர் பலி.

1994: பிரிட்டன் - பிரான்ஸூக்கு இடையிலான கடலடி சுரங்கப்பாதையை பிரித்தானிய அரசிய இரண்டம் எலிஸபெத்தும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்கொய்ஸ் மிட்டரான்ட்டும் திறந்து வைத்தனர்.

1994: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக ஆர்கான்ஸ் மாநில அசாங்க ஊழியரான பௌலா ஜோன்ஸ் பாலியல் தொந்தரவு குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தார்.

2001: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் சிரியாவுக்குச் சென்றபோது பள்ளிவாசலொன்றுக்குள் சென்ற முதலாவது பாப்பரசரானார்.

2010: அணு உலையை ஜப்பான் மீண்டும் செயற்படுத்தியது.

2011: அமெரிக்காவில் வேலையின்மை வீதம் 9 சதவீதத்தினால் உயர்வடைந்தது.

2012: சோசலிஸ கட்சி வேட்பாளர் பிரான்ஸின் ஜனாதிபதியாக ப்ரன்சொயிஸ் ஹோலண்ட் தெரிவானார்.

2013: 2000ஆம் ஆண்டு காணாமல் போன அமெரிக்கப் பெண்கள் மூவர் உயிரோடு மீட்பு.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13173282_1037913766257317_13735782220189

ஹொலிவூட்டின் கலக்கல் நாயகன் - முதுமை ஏற ஏற இன்னும் துடிப்பு மாறா கதாநாயகன் ஜோர்ஜ் க்ளூனியின் பிறந்தநாள்.
Happy Birthday George Clooney
Salt and Pepper hairstyleஐ உலகம் முழுக்கப் பிரபலமாக்கிய ஹீரோ இவர் தான்.

  • தொடங்கியவர்

மே 6: கல்வியாளர் மரியா - நினைவு தின சிறப்பு பகிர்வு!..

 

mariya-2.jpg

மரியா மாண்டிசோரி : குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு ஏன் எக்கச்சக்கமாக பயப்படுகிறார்கள் என்று நாம் யோசித்து இருக்கிறோமா ? பள்ளிகள் குழந்தைகளை பயமுறுத்துகிற விஷயமாகவே பெரும்பாலும் இருக்கிறது.  ஆனால்,கல்விக்கூடங்கள் குழந்தைகள் ஆனந்தமாக வந்து சேர்ந்து கற்றுத்தேர்கிற இடமாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர் மரியா மாண்டிசோரி. மருத்துவப்படிப்பு படிக்கப்போனார் அவர்.

அங்கே அவரைப்பெண் என்பதால் இழிவாக நடத்தினார்கள். பாடங்களை சொல்லித்தரக்கூட ஆசிரியர்கள் மறுத்தார்கள். விலங்குகளை அறுக்கிற பொழுது தனியாக ஒரு அறையில் விட்டு அறுக்க வைத்தார்கள். மனம் வெறுத்தார் அவர். இருந்தாலும் மருத்துவப்பட்டம் பெற்று வெளியே வந்தார். உளவியலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தினார்.

கல்வி சார்ந்த இத்தாலியில் ஐம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக அவர் ஆனார்.. பிள்ளைகளை மிரட்டுவதோ,அடிப்பதோ  பிடிக்காத அன்பான நபர் அவர். அங்கே இருந்த பிள்ளைகளின் பொழுதை எப்படி உற்சாகம் நிறைந்ததாக ஆக்குவது என்று அவர் யோசித்தார்.

நோட்டு புத்தகங்களுக்கு பதில் பொம்மைகளை அவர்களின் கையில் கொடுத்தார். எழுத்துக்களை சொல்லித்தருவதற்கு முன்னர் அவற்றை உணர்கிற வகையில் பொருட்களை காட்டினார். வீட்டில் குழந்தைகள் வேலையே செய்ய விடக்கூடாது என்று இருந்த பொழுது எளிய செயல்களை செய்ய  வைத்து பிள்ளைகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டார்.

mariya-1.jpgமாணவர்கள் ஆசிரியர்களை கவனிக்க வைக்க நாம் முயலக்கூடாது,ஆசிரியர் மாணவரை கவனித்து கற்றுக்கொள்ள  வேண்டும் என்று சொன்னவர் அப்படியே பிள்ளைகளை நடத்தினார். வண்ண அட்டைகள்,ஒலி எழுப்பும்கருவிகள்,ஓவியங்கள்,வண்ணத்தாள்கள், புட்டிகள் என்று குழந்தைகளின் கற்றலை வண்ணமயமானதாக இந்த வகுப்புகள் மாற்றின. அவரின் கல்விமுறையில் படித்து சாதித்தவர்கள் தான்  கூகுள் மற்றும் அமேசான் நிறுவனர்கள் ஆகியோர் இவரின் கல்விமுறையில் படித்தவர்களே. இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம்  பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது இல்லையா?.

vikatan

13124846_1130150257043763_87113006698438

  • தொடங்கியவர்

13087077_1037889119593115_39403976426202

உலகப் புகழ் பெற்ற உளவியல் மேதை
சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) அவர்கள் பிறந்தநாள்.

உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம்(unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள் இன்று வரை எம்மால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக்கனவுகளை விளக்குதல், உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை, பாலியல், பாலுணர்வு விருப்பம் போன்ற ஆராய்ச்சிகள் தொடர்பிலும் பிராய்ட் உலகின் மிக முக்கியமான உளநோய் மருத்துவராக, மனோவியலாளராக கருதப்படுகிறார்.

  • தொடங்கியவர்
மழை வீழ்ச்சிக்காக செயற்கை மலை நிர்மாணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆராய்கிறது
 

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் மழை வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக செயற்­கை­யாக மலை­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு அந்­நாட்டு அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர். 

 

1646864a.jpg

 

மத்­திய கிழக்கு நாடான ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் மழை வீழ்ச்சி குறை­வாக உள்­ளது. இந்­நி­லையில் காற்றை குளிர்­வித்து மழையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக செயற்­கை­யாக மலை­யொன்றை நிர்­மா­ணிப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்பட்­டுள்­ளது. 

 

அமெ­ரிக்­காவைத் தள­மாகக்கொண்ட யூனிவர்­ஸிட்டி கோர்ப்­ப­ரேஷன் ஃபோர் அட்­டோம்ப்­ஷயர் ரிசேர்ச் (யூ.சி.ஏ.ஆர்.) எனும் நிறு­வ­கத்தைச் சேர்ந்த நிபுணர்கள், இந்த செயற்கை மலைக்­கான மாதி­ரிகள் (மொடல்) குறித்து ஆராய்ந்து வரு­கின்­றனர் என தலைமை ஆராய்ச்­சி­யா­ள­ரான ரோலப் புருய்ன்ஜெஸ் தெரி­வித்­துள்ளார்.

 

1646864b.jpg

 

முதற்­கட்ட நட­வ­டிக்­கையின் அறிக்­கை­யொன்று இந்த கோடைப் பரு­வத்தில் எமக்கு கிடைக்கும் என அவர் கூறினார்.

 

இத்­திட்­டத்­தின்­படி சுமார் 2 கிலோ ­மீற்றர் உய­ர­மான மலை­யொன்று நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

 

எனினும், இம்­மலை எந்த இடத்தில் நிர்­மா­ணிக்­கப்­படும், அதற்­கான செலவு எவ்­வ­ளவு என்­பது குறித்த விப­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. மலையை நிர்­மா­ணிப்­ப­தற்­காக பல்­வேறு இடங்கள் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன என  ரோலப் புருய்ன்ஜெஸ் கூறினார்.

 

1646865c.jpg

 

'செயற்­கை­யாக மலையை நிர்­மா­ணிப்­பது இல­கு­வான விட­ய­மல்ல. இத்­திட்டம் அர­சாங்­கத்­துக்கு மிக அதிக செலவை ஏற்­ப­டுத்தும் எனில் இந்­ந­ட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட மாட்­டாது. 

 

ஆனால், நீண்ட கால அடிப்­ப­டையில் எத்­த­கைய மாற்று வழி­களைக் கையா­ளலாம் என்­பது குறித்த ஒரு யோசனை இது” எனவும் அவர் தெரி­வித்தார். 

 

ஓமானுடனான எல்லையிலுள்ள 1925 மீற்றர் (6316 அடி) உயரமன ஜெபில் அல் ஜேசிஸ் சிகரமானது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிக உயரமான சிகரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகிலேயே பிரமாண்டமான 'Glass Sightseeing Platform' சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கண்ணாடி நடைப்பாதை, மலை உச்சியில் இருந்து 38 மீட்டர் தூரம் வரை இருக்கும். இதன் மேல் நடந்து சென்றால், ஆகாயத்தில் மிதப்பதுபோன்ற ஃபீலிங் ஏற்படும். இதன் மேல் நடக்கவேண்டும் என்றால் 'தில்' வேண்டும்.
ஏப்ரல் 30, 2016 அன்று மக்கள் பார்ப்பதற்காகத் திறக்கப்பட்டது

13100885_716421855127026_600548166065766

13139130_716421848460360_715874737395676

13166054_716421851793693_288316608276820

13124491_716421911793687_159916516501367

13164254_716421908460354_490159363362319

13124452_716421915127020_164285919478459

13198535_716421945127017_575323265407229

13179394_716424541793424_794841976506981

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.