Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p109a.jpg

dot12.jpg  சோஷியல் மீடியா மீம்ஸ் நாயகன் விஜயகாந்த், இப்போது களத்தில் இறங்கிவிட்டார். ஏப்ரல் 30-ம் தேதி விஜயகாந்த்தின் முதல் ட்வீட்டே `நாளை உங்களுடன் உரையாட இருக்கிறேன். வாங்க பேசலாம்’ என்பதுதான். `கபாலி’ டீஸர் பரபரப்புகளுக்கு இடையே விஜயகாந்த் வந்ததால் கேள்விகள் குறைவுதான். எல்லா கேள்விகளுக்கும் தமிழ், ஆங்கிலம் என பதில்களைக் கலந்து அடித்த விஜயகாந்த்திடம் குறும்பு ட்வீட்டர் ஒருவர், `உங்களுக்குப் பிடித்த வில்லன் யார்... வைகோவைத் தவிர?’ எனக் கேட்க, `வைகோ ஹீரோ, வில்லன் கலைஞர், வில்லி ஜெயலலிதா' எனப் பதில் அளித்து லைக்ஸ் குவித்தார் கேப்டன். காமெடியன் யாருனு சொல்லலியே!

14.jpg

dot12.jpg `பிரசாரங்கள் பெரிதாக எடுபடவில்லை' என உளவுத்துறை அப்டேட் அனுப்ப, இப்போது முழுக் கவனத்தையும் தேர்தல் அறிக்கையின் மீது திருப்பியுள்ளார் ஜெயலலிதா. முழுக்க முழுக்க தாய்க்குலத்தின் ஆதரவைப் பெற அரசு கேபிள் கனெக்‌ஷன் முற்றிலும் இலவசம், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்கூட்டர்... என இலவசங்களை அள்ளிவீசும் அறிக்கை ரெடியாம். சீனா தானா?

p109b.jpg

dot12.jpgநாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்தான், தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, 36 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு எனக் கணக்குக்காட்டிய வசந்தகுமார், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 285 கோடி ரூபாயை சொத்து மதிப்பாகத் தாக்கல் செய்திருந்தார். இப்போது 332.27 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் பிடித்திருக்கும் தமிழகத்தின் பணக்கார வேட்பாளர், முதலமைச்சர் ஜெயலலிதா. 113 கோடியே 73 லட்சம் ரூபாய்க்கான சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார் ஜெ!  ஓ... வசந்தகுமாரைவிட அம்மா ஏழையா?

p109d.jpg

dot12.jpg  இந்தத் தேர்தலில் கருணாநிதி - ஜெயலலிதா இருவருக்குமான அதிசய ஒற்றுமை, மயிலாப்பூரில் உள்ள ரவுஃப் பாஷா என்பவரிடம்தான் இரண்டு தலைவர்களுமே வேட்புமனு பத்திரத்தை  வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான். 2006, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இவரிடம்தான் பத்திரம் வாங்கியுள்ளார் ஜெயலலிதா. `பத்திரத்தில் ஜெயலலிதாவின் பெயரை என் கையால் எழுதச்சொல்லி வாங்கிப்போனார் அ.தி.மு.க பிரமுகர். செய்தித்தாள்களில் பார்த்துதான், கருணாநிதியும் என்னிடம் வாங்கிய பத்திரத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்பது தெரியும்’ என்கிறார் ரவுஃப் பாஷா. லக்கிமேன்!

p109c.jpg

dot12.jpg மத்திய அமைச்சர்களை வரிசையாக அனுப்பியும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு கூட்டம் கூடாததில் பா.ஜ.க தலைமை செம அப்செட். வெங்கைய்யா நாயுடு, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் மட்டும் அல்லாமல் உள்ளூர் பிரபலமான பொன்.ராதாகிருஷ்ணனின் கூட்டத்துக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை என்பதால், அடுத்து வருவதாக இருந்த ஸ்மிரிதி இரானியின் தேர்தல் பிரசாரத்தையும் ரத்து செய்திருக்கிறார் அமித்ஷா. `மத்திய அமைச்சர்களுக்கு மொழிப் பிரச்னை இருப்பதால், உள்ளூர் பிரபலங்களே இனி தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்’ எனச் சொல்லியிருக்கிறார். மோடி வருவாரா?

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply

13139322_10154260549379379_5250349941518

  • தொடங்கியவர்

இன்டர்நெட் கிராமம். பெயரைக் கேட்டாலே கிராமம் முழுக்க இன்டர்நெட் வசதி இருக்குன்னு நினைத்துவிடாதீர்கள். இத்தாலியில் உள்ள காம்போபாசோ (Campobasso) மாகாணத்தின் Civitacampomarano என்ற சிறிய கிராமத்தில் 400 பேர் வசித்துவருகிறார்கள். இவர்களுடைய 'பேட் லக்' இங்கு இன்டர்நெட் வேலை செய்யவில்லை, செல்போன்களுக்கும் டேட்டா கனெக்ட் ஆகாது. அதனால் ட்விட்டர், ஃபேஸ் புக், மெயில், கூகுல் என சைன் போர்டுகளை வைத்து, தங்களின் ஆதங்கத்தை வித்தியாசமாக வெளிப்படுத்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

13095894_715162818586263_266501798826128

13092091_715162805252931_440356884809525

13151868_715162811919597_366095550445765

13166024_715162855252926_202026933510847

13100710_715162865252925_517558444552595

13151938_715162858586259_815379740955339

13151838_715162901919588_379983171983339

13118864_715162905252921_719363876927828

vikatan

 

  • தொடங்கியவர்

 

வாட்ஸ் அப் கலக்கல்

 
 
27_2842577g_2842619f.jpg

4_2842615a.jpg

5_2842614a.jpg

3_2842616a.jpg

2_2842617a.jpg

1_2842618a.jpg

tamil.thehindu.

  • தொடங்கியவர்

மே: 07 - பிராணம் குருதேவ்- தாகூர் எனும் தலைமகன் பிறந்த தின சிறப்பு பகிர்வு!

13178817_1130918523633603_57707360025845

 

கவியரசர் தாகூரின் பிறந்த தினம் இன்று. வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர் அவர் ;இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால் அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களை தொட்டது ;இங்கிலாந்திற்கு சட்டம் படிக்க போய் அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார் .

ஏகத்துக்கும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க்கொண்டிருந்தார் ;அப்பொழுது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்துபோயின .நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக்கொண்டே ஸ்தம்பித்து நின்றார் ;அங்கே தான் தாகூர் மஹாகவி தாகூர் ஆனார் .வீட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்ட தாகூர் கல்விமுறை குழந்தைகளின் மீது வன்முறையை கையாள்வதாக உணர்ந்தார் ;இயற்கையான சூழலில் பிள்ளைகள் கற்கவேண்டும் என விரும்பினார் .

அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார் ;அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார் .ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார் .அற்புதமான பல கவிதைகள் எழுதினார் ;அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது ;ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்தது .

ஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலா பாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார் .இவர் இயற்றிய பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார் இவர் ,அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன ;நல்ல ஓவியர்,நாவலாசிரியர்,சிறுகதை வல்லுநர்,நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்கு . காந்தியை மகாத்மா என அழைத்தது இவர் தான் .அவர் .இந்தியாவின் ஜன கண மண மற்றும் வங்காள தேசத்தின் அமர் சோனார் பங்களா எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே . என் ஆடைகள், ஆபரணங்களை களைந்து விடு அன்னையே ‘;அவை மணல்வெளியில் ஆனந்தித்து விளையாட பெருந்தடையாக உள்ளன என பாட மட்டுமல்ல அப்படியே வாழவும் செய்தார் தாகூர் .ப்ரணாம் குருதேவ் !

அவரின் HEAVEN OF FREEDOM மற்றும் WALK ALONE எனும் கவிதைகள் உங்களுக்காக

உள்ளம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசங்களின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பரிபூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய கட்டுப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விடவில்லையோ,
வாய்ச்சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சியின்றி
முழுமையை நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடியாதாரத்தை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரிகவும்,
ஆக்கப் பணி புரிகவும்
உள்ளத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சொர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழட்டும்
என் தேசம் !

****************
யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா ?
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்
உன் மனதை திறந்து,தனித்து பேசு !

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

சுடும்பாதை தடைகளால் அழுத்தும்
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார்
முற்களை நசுக்கு !
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில்
கம்பீரமாக பயணிப்பாய்

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு

தனித்து நட,தனித்து நட தனித்து நட....ந்

vikatan

  • தொடங்கியவர்

பிரபல பாடகி எஸ்.ஜானகி போலவே ஜானகியிடம் பாடிக்காட்டிய சீன இளைஞர்

சீனாவைச் சேர்ந்த சியா ஆ டிங் என்பவர் அச்சு அசலாக பாடகி எஸ்.ஜானகிாி போலவே பாடுகிறார். 'நெஞ்சினிலே..நெஞ்சினிலே' பாடலைப் பாடிய ஜானகியிடமே அப்பாடலை பாடிக் காட்டும்போது, ஜானகி நெகிழ்ந்துவிடுகிறார். பெண் குரலில் மிக நேர்த்தியாக பாடக்கூடிய திறனைப் பெற்றுள்ள இவரின் யுடியூப் சேனல் முழுக்க தமிழ் பாடல்கள்தான்!

  • தொடங்கியவர்

13122892_1038534926195201_59154847492783

இளம் நடிகர் அதர்வா முரளியின் பிறந்த நாள் இன்று

2010 ஆம் ஆண்டு பாணக்காத்தாடி திரைப்படம்
மூலம் தமிழ் திரையுலகில் தடம்பதித்த கட்டுமஸ்தான கலக்கல் நாயகன்.

"பரதேசி" திரைப்படம் நிலையான இடத்தை பதித்து கொடுக்க பின்னர் ஈட்டியாய் பாய்ந்து
கணிதனாய் அவதாரம் கொண்டவர்

இளம் பெண்களின் இதயம் கவர்ந்த ஆணழகன் அதர்வா முரளிக்கு சூரியனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

  • தொடங்கியவர்

13177504_10154593706269578_4455097384322

  • தொடங்கியவர்

தமிழக போலீஸ் பற்றி விசாரித்த தோனி!

 

e5dd6443-ef92-4d7c-86c7-cf30dafc86ea.jpg

நேற்று இரவு பெங்களூருவில் உள்ள ரிட்ஸ் கால்டன் ஒட்டலில்,  இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியை,  சென்னை போலீஸின் முன்னாள் கூடுதல் துணை கமிஷனர் முரளி மரியாதை நிமித்தமாக‌ சந்தித்தார்.

அப்போது ஐ.பி.எல் போட்டிகளின் லைவ் கவரேஜ்,  ரூமில் உள்ள டி.வியில் எந்த சேனலில் வருகிறது என்று தேடிக்கொண்டிருந்தாராம். எந்த சேனல் என்று அந்த ஸ்டார் ஒட்டல் நிர்வாகிகளுக்கும் தெரியவில்லையாம். பிறகு, தோனியே தேடிக் கண்டுபிடித்து, ஒட்டல் நிர்வாகிகளிடம் சொல்லியதோடு, 'இதே ஒட்டலில் விராட்கோலி டீம் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் கேட்டால், உடனே இந்த சேனல் எண்ணை சொல்லுங்கள்' என்றாராம்.

''பாசமும், அன்பும் கொண்டவர்கள் சென்னைவாசிகள். உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் இதுவரை கிரிக்கெட் பார்க்க டிக்கெட் கூட கேட்டதில்லை. நான் தந்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டீர்கள். கிரவுண்டுக்கு வந்து பார்க்கமாட்டீர்கள். டி.வியில்தான் பார்ப்பீர்கள். நான் கொச்சின் வந்தாலோ, பெங்களூரு வந்தாலோ... நட்புடன் என்னை வந்து பார்த்து செல்கிறீர்கள். உங்களைப்போலத்தான் சென்னைவாசிகள். எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். அனைவரும் இப்படித்தான் இருக்கிறார்கள்" என்றாராம் தோனி.

முரளி தொடர்ந்து கூறும்போது, " 2004-ம் வருடம் முதல் பழக்கம். கொழும்புவில் கிரிக்கெட் விளையாட வீரராக வந்தார். இந்திய டீமிற்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தேன். என்னிடம் இருந்த துப்பாக்கியை வாங்கி ஆச்சர்யத்தோடு பார்த்தார். நிச்சயமாக ஒருநாள் இந்திய கேப்டனாக வருவார் என்று நான் சொன்னேன். அது குறுகிய காலத்தில் நடந்தது. நுங்கம்பாக்கம் ஏ.சி-யாக 2011-ல் இருக்கும்போது என் வீட்டுக்கு வந்திருந்தார். உலக கோப்பை வென்றுவிட்டு வந்த சந்தோஷத்தில் இருந்தார். 'பருப்பு வடை கிடைக்குமா?' என்று கேட்டார். தேங்காய் பால், பாசிபருப்பு, வெல்லம் கலந்து குடிக்க கேட்டார். அது அவருக்கு விருப்பமான உணவு. அடுத்து, என் மகள் திருமண நிகழ்ச்சிக்காக இரண்டாவது முறையாக 2015-ம் வருடம் ஆகஸ்டில் வந்திருந்தார். தோனி, அவர் மனைவி சாக்ஷி, மகள் ஸிவா(3 மாத குழந்தை)..மூவரும் வந்திருந்தனர். இட்லி, தோசை, சிக்கன் கறி, மட்டன் பிரியாணி சாப்பிடக் கொடுத்தோம். ரசித்து சாப்பிட்டார்கள். இந்தமுறை பெங்களூருவில் என்னிடம் சென்னையைப் பற்றி பல தகவல்களை கேட்டார். தமிழக போலீஸுன் லேட்டஸ்ட் அப்டேட் பற்றியெல்லாம் ஆர்வத்தோடு கேட்டறிந்தார். எனக்கு சந்தோஷமாக இருந்தது'' என்றார்.

vikatan

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

லக சாதனையை சமன்செய்து சாதனை படைத்திருக்கிறார் 21 வயதான இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி. சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் மொத்த புள்ளிகளான 720 புள்ளிகளில் 686 புள்ளிகள் பெற்று சாதனை படைத்திருக்கிறார் தீபிகா. `ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதில்தான் என் முழுக் கவனமும் இருக்கிறது. இந்தச் சாதனை, எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது’ என்கிறார் தீபிகா.

p20a.jpg

ப்படி ஒரு வெற்றியை டிஸ்னியே எதிர்பார்க்கவில்லை. ‘தி ஜங்கிள் புக்' பாக்ஸ் ஆபீஸில் 3,500 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருக்கிறது. உலகம் முழுக்க பல இடங்களில், உள்ளூர் சினிமாக்களைவிடவும் அதிகம் கல்லா கட்டியதுதான் இதற்குக் காரணம்.  இந்தியாவிலும் அதே ட்ரெண்ட்தான். பத்தே நாட்களில் நூறுகோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி, பாலிவுட் பாட்ஷாக்களை பதறவைத்திருக்கிறான் மோக்லி. சூட்டோடு சூடாக அடுத்த பாகத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது டிஸ்னி.

p20b.jpg

`இதுதான் கடைசி வாய்ப்பு...  இனி பேசுவதற்கோ, மன்னிப்பதற்கோ எதுவும் இல்லை. பூமியை நாசாமாக்கும் செயல்களை இனி எந்த நிறுவனத்தையும் செய்யவிடக் கூடாது’ என ஆவேசமாகப் பேசியிருக்கிறார் லியோனார்டோ டிகாப்ரியோ. பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று ஐநா சபையில் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டது. 175 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கையொப்பமிட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில்தான் லியோனார்டோ இப்படி கோபமாக உரையாற்றினார். நேர்மையான அவருடைய கருத்துக்களுக்கு  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட லைக்ஸ்!

p20c.jpg

ஷ்யாவின் கோடீஸ்வரரான யூரி மில்னர், கடந்த வாரம் சிலிக்கான் வேலியில் ‘The man who knew infinity’ என்ற படத்தைத் திரையிட்டார். கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கைப் பற்றிய இந்தப் படத்தைப் பார்க்க, ஃபேஸ்புக் தல மார்க் ஸூக்கர்பெர்க், கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை என டாப் டெக் மனிதர்கள் வந்திருந்தனர். படம் பார்த்த பலரும் கண்ணீரோடுதான் வெளியே வந்தனர். மார்க் ஸூக்கர்பெர்க்கும் சுந்தர் பிச்சையும் ஒரு படிமேலே சென்றுவிட்டார்கள்; இருவரும் இணைந்து கணிதமேதை ராமானுஜன் பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனராம்.

p20d.jpg

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்குக்கு இந்தியாவின் தூதுவராக சல்மான் கான் நியமிக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங். `ஒலிம்பிக்கில், விளையாட்டு வீரர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். மாறாக, பாலிவுட் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவமானமாக இருக்கிறது’ எனக் குமுறினார். இதற்கு சல்மான் கானின் தந்தை சலீம் ` `பாஹ் மில்கா பாஹ்' படத்தின் மூலம் பாலிவுட்தான் உங்களை உலகப் பிரபலமாக்கியது’ என ட்வீட் போட, `அந்தப் படத்தின் மூலம் என் வாழ்க்கையில் எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை’ எனக் கடுகடு ரிப்ளை கொடுத்திருக்கிறார் மில்கா சிங்.

p20e.jpg

சோஷியல் மீடியாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஸ்டார் ஷான் ஓ பிரையன். 130 கிலோ அமுல்பேபியான ஷான், லண்டனில் ஒரு கிளப்பில் டான்ஸ் ஆடத் தொடங்கினார். செம குண்டு ஆசாமி ஆடுவதைப் பார்த்து அத்தனை பேரும் கேலி பேசிச் சிரிக்க, அவமானத்தில் மூலையில் போய் நின்றுவிட்டார். ஆனால், இவர் ஆட முயன்றதை அங்கு இருந்த ஒருவர் ட்விட்டரில் போஸ்ட் போட, படம் வைரலானது. லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்த எழுத்தாளர் கேசண்ட்ரா, `இந்த டான்ஸிங் மேனைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். நாங்கள் அவருக்காக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்கிறோம்' என ட்வீட் போட்டார். ஷானைக் கண்டுபிடித்து சில ஹாலிவுட் பிரபலங்களையும் அழைத்து பார்ட்டி கொண்டாடிவிட்டார்கள். பார்ட்டியில் செம ஜாலி ஆட்டம்போட்ட ஷான், `ஒரு நடனம் என்னை உலகப் பிரபலமாக்கிவிட்டது' என நெகிழ்ந்திருக்கிறார்.

vikatan

  • தொடங்கியவர்
 

article_1450848099-a.jpg

ஒரு சிசு பிறந்தது முதல் வளரும் வரை, என்னென்ன நிலைப்பாடுகளுடன் காணப்படுமோ, அவற்றையே உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் செய்து வருகின்றன. அவ்வாறு, பெண்குயின் ஒன்று முட்டையிலிருந்து வெளிவந்தது முதல் 5 காலப்பகுதிக்குள் அதற்கு ஏற்படும் மாற்றங்களை புகைப்படவியலாளர் ஒருவர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  

article_1450848107-b.jpg

article_1450848113-c.jpgarticle_1450848119-d.jpg

article_1450848126-e.jpg

article_1450848133-f.jpg

article_1450848140-g.jpg

article_1450848146-h.jpg

article_1450848154-i.jpg

article_1450848161-j.jpg

article_1450848167-k.jpg

article_1450848175-l.jpg

article_1450848186-m.jpg

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜிப்ஸி ஆடைகள்... இப்ப ட்ரெண்ட்!

 

 

p66a.jpg

ஃபேஷன் டெக்னாலஜி மாணவர் களின் பிரத்யேகமான திறமைகளை வெளிக்கொணரும் விதத்தில் அவர்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபேஷன் ஷோ நடத்தி வருகிறது ‘ஃபேஷன் ஸ்டூடன்ட் அசோஸியேஷன்’ என்னும் அமைப்பு. இந்த அமைப்பின் தலைவர் அருள்மொழி பேசும்போது,

p66f.jpg

p66b.jpg

“சென்னை மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த அமைப்பை உருவாக்கினோம். சென்னையைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து 35 மாணவர்கள் இந்த ஃபேஷன் ஷோவுக்கான தங்களது பிரத்யேக ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தனர்’’ என்றார்.

p66c.jpg

ஃபேஷன் ஷோவில்... வெஸ்டர்ன் உடைகளான மிடி, வெயிஸ்ட் கோட் போன்ற வெஸ்டர்ன் ஆடைகளுடன், வளையல், நெத்திச்சுட்டி போன்ற அணிகலன்களையும் சேர்த்து அணியும்  `இண்வெஸ்டோ’ டிசைன் பார்க்க நேர்த்தியாக இருந்தது.

p66d.jpg

ஆப்பிரிக்க ஆதிவாசிகளின் உடைகளை, தற்காலத்துக்கு ஏற்றது போல மாடர்னாக வடிவமைத்த ’ஜிப்ஸி’ ஆடை பார்ப்பவர்களை ஈர்க்கும் விதமாக இருந்தது.

p66e.jpg

கேரள பாரம்பர்ய உடையை பறைசாற்றும் வகையில் அமைந்த ’ஸ்வர்ணா’ என்னும் டிசைன் அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

p66.jpg

இது போன்ற பல ஆடை வகைகள் பேஷன் டெக் மாணவர்களாலேயே டிசைன் செய்யப்பட்டு இருந்தது நிகழ்ச்சியின் ஹைலைட். நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து டிசைனர்களுக்கும் விகடன் சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

vikatan

  • தொடங்கியவர்

13174122_10154595870609578_7788227593905

  • தொடங்கியவர்

மே 8: செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு...

 

ஹென்றி டூனன்ட் என்கிற ஒப்பற்ற மனிதர் பிறந்த தினம் இன்று. சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப்பெரிய செல்வவளம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் இவர் ;இளம் வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் கொண்டு இருந்தவர்;வடக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரிய ஒரு முதலீட்டு திட்டத்தோடு அங்கே நீர்வள பயன்பாட்டு உரிமையை பெறுவதற்காக கிளம்பினார்.  அங்கே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த பிரான்ஸ் தேசத்து மன்னரை சந்திக்க போனார். அங்கே  போரில் எப்படியெல்லாம் வீரர்களும் மக்களும் துன்பப்படுகிறார்கள் என பார்த்து மனம் நொந்து போனார்.

hendrytoney.jpg

போரில் துன்பப்படும் ,காயப்படும் ஜீவன்களை காப்பாற்ற ஒரு நடுநிலையான அமைப்பை உண்டாக்கி காயப்பட்டவர்களின் உயிர் காக்க,உதவி செய்ய உருவாக்க வேண்டும் என அவர் எடுத்த முன்னெடுப்பு தான் செஞ்சிலுவை சங்கம்;தன் ஒட்டுமொத்த வருமானத்தையும் போட்டு அதை நடத்தினார்; பல்வேறு நாடுகளை அதில் இணைத்தார் .நடுவே பிசினஸ் படுத்து தொலைத்தது;எல்லாம் போனது-பிச்சைக்காரன் போல வாழ்வு வாழ்ந்தார்-எங்கே இவர் என்றே யாருக்கும் தெரியாது.மனிதர் இறந்தே போனார் என பலரும் நினைத்தார்கள்.

அவர் வரிகளிலேயே பாருங்கள்," நான் ஓரிரு ரொட்டித்துண்டுகளில் வாழ்கிறேன். என்னுடைய சாயம் போன கோட்டை செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவி கேட்க போகும் பொழுது மையால் கருப்பாக்கி கொள்கிறேன்; எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாக [படுத்து இரவில் தூங்கிக்கொள்கிறேன்.

முதல் நோபல் பரிசு அறிவிக்கபட்ட பொழுது அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.அதையும் முழுக்க செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட கொடுத்துவிட்டார்  ஒரே ஒரு அறையில் அனாதையாக வாழ்ந்தார் ; தனியாளாக தன் அறையில் இறந்து போனார். எனினும் இன்றைக்கும் பலபேரின் உயிர்களை காப்பாற்றி அவரின் கனவை நிலைபெற செய்து இருக்கிறது செஞ்சிலுவை சங்கம்;

அதுதானே வெற்றி

vikatan

  • தொடங்கியவர்

13174210_1022497677828003_39603968963846

அன்றும் இன்றும் யாழ்ப்பாணத்தின் நிலை ??

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 08
 
 

article_1431000835-CocaCola.jpg1886: அமெரிக்க மருந்தகவியலாளர் ஜோன் ஸ்டெய்த் பெம்பேர்ட்டன் என்பவர் காபன் கலந்த பானமொன்றை கொகாகோலா என்ற பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

1927: முதல் தடவையாக பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு இடைநிறுத்தப்படாத விமானப் பறப்பை மேற்கொள்ள முயன்ற சார்ள்ஸ் நங்கீஸர், பிரான்கோய்ஸ் கோலி ஆகியோர்  காணாமல் போயினர்.

1933: இந்தியாவில் மகாத்மா காந்தி 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1980: சின்னம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

1945: ஜேர்மனியுடனான யுத்தம் முடிவடைந்துவிட்டதாக பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் அறிவித்தார்.

1984: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என சோவியத் யூனியன் அறிவித்தது.

2007: புதிய வடஅயர்லாந்து உயர்சபை அமைக்கப்பட்டது.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13096212_1039201846128509_10848298067806

கிசு கிசுவிற்கும் பரபரப்பிற்கும் பஞ்சமில்லாத பொப் பாடகர் Enrique Iglesias க்கு இன்று பிறந்த நாள்.

  • தொடங்கியவர்
திகில் தரும் புகைப்படம்
 
 

article_1458885358-a.jpgகட்டுக்கடங்காத இளைஞர்களால், சுமார் 1381 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே காணலாம். சுற்றுலாவுக்குச் செல்லும்  போது அதன் ஞாபகமாக வித்தியசமான புகைப்படங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இவ்வாறான புகைப்படங்களை எடுத்துக்கொண்டனராம்.

article_1458885372-b.jpg

article_1458885380-c.jpg

article_1458885385-d.jpg

article_1458885393-e.jpg

article_1458885401-f.jpg

article_1458885414-h.jpg

article_1458885429-i.jpg

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆடுகளத்தில் அசத்திய 'அம்மா'க்கள்!

 

sports-women01.jpg

தாய்மை ஒரு வரம். பிரசவம் வலி தரும் தான். ஆனால், தாய்மை வலி தராது. அது ஒரு எல்லையில்லா பேரின்பம். தாய்மை தரும் உடல் வலிமையும், மன வலிமையும் வேறு எதுவும் தர முடியாது. அதனால் ஏற்படும் மெச்சூரிட்டி எந்த வகை பிரச்னையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தரும். பிள்ளைப்பேறு அடைந்த பிறகு தங்கள் வேலைகளை விட்டவர்கள் எத்தனையோ பேர். குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி தங்கள் லட்சியத்தையும், வெறியையும் விட்டவர்கள் எத்தனையோ பேர். ஆனால் ‘தாய்மை எதற்கும் தடை இல்லை’ என்பதை நிரூபித்த பெண்களும் உள்ளனர். சினிமா, விளையாட்டு, வணிகம் என எத்தனையோ துறைகளில் சாதித்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களுள் விளையாட்டுத் துறையில் சாதித்த ஒரு சில அம்மாக்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

மேரி கோம் (குத்துச் சண்டை)

sports-marykom.jpg

வசதிகள் அதிகம் இல்லாத மணிப்பூர் மாநிலத்தில் பிறந்து, குடும்பத் தடைகள் எல்லாம் மீறி ஐந்து முறை உலக அமெச்சூர் பாக்சிங் பட்டம் வென்ற இந்த இரும்புப் பெண், ஒரு இரும்புத் தாயும் கூட. 3 குழந்தைகளுக்கு அம்மாவான இவர், உடல் பலம் அதிகம் தேவைப்படும் பாக்சிங்கில் சற்றும் மனம் தளராமல் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். 2012 ஒலிம்பிக்கில் மேரி வெண்கலம் வென்றது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், பயிற்சியாளரே இல்லாமல் அவர் சண்டையிட்டது நம்மில் பலருக்குத் தெரியாது. ‘அன்பிரேக்கபிள்’ எனப்படும் தனது சுயசரிதையில், தனது உடல் நலம் குறைந்த குழந்தையை இந்தியாவில் விட்டுவிட்டு தான் உலக சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் வலியோடும், வேதனையோடும் பங்கேற்றதாகக் கூறுயுள்ளார். லட்சிய வெறியும், தாய்மையின் வலியும் இணையும் அவ்விடம் நம்மையும் கண்கலங்க வைக்கும். தற்போது ராஜ்ய சபா எம்.பி.யாக உள்ள மேரி 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற போராடி வருகிறார். அவரது வெற்றி ஒட்டுமொத்த தாய்மார்களுக்குமான வெற்றி.

டேன் சாரா (சைக்கிளிங் & ஸ்விம்மிங்)

sports-sara.jpg

பிறக்கும்போதே தொப்புள் கொடியில் இடது கை சிக்கிக்கொண்டு செயலிழந்தது. ஆனால், எந்த தடையும் அவருக்குத் தடையாய் இருக்கவில்லை. பாரா நீச்சல் போட்டியிலும், சைக்கிள் பந்தயத்திலும் 27 முறை பட்டம் வென்றுள்ளார். 2013-ம் ஆண்டு குழந்தை பெற்றெடுத்த சாரா, அடுத்த ஆறே வாரங்களில் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். 1992-ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் நீச்சலில் 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சாரா, 2012-ம் ஆண்டு சைக்கிள் பந்தயத்தில் 4 தங்கங்கள் வென்றார். தாய்மை எப்பொழுதும் அவருக்குத் தடையாய் இருந்ததில்லை.

கிம் கிளிஸ்டர்ஸ் (டென்னிஸ்)

sports-kim.jpg

டென்னிஸ் வரலாற்றிலேயே விம்பிள்டன் வென்ற முதல் அம்மா, இந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த கிளிஸ்டர்ஸ் தான். 2008-ம் ஆண்டு டென்னிசிலிருந்து ஓய்வு பெற்ற கிளிஸ்டர்ஸ் மகளைப் பெற்ற பிறகு 2009-ம் ஆண்டு மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். ஏதோ வருவார், விளையாடுவார், போவார் என்று எதிர்பார்த்த போது, டென்னிஸ் உலகின் ஃபீமேல் ஸ்டார் செரினாவைப் போட்டுத்தள்ளி அதிர்ச்சியளித்தார் கிளிஸ்டர்ஸ். அதோடு மட்டும் நிற்காமல் அவ்வாண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்று சரித்திரம் படைத்தார் கிம். கோப்பையை ஒரு கையிலும், குழந்தையை ஒரு கையிலும் வைத்துக் கொண்டு கிம் கொடுத்த போஸ், மொத்த தாய்மார்களையும் நெகிழ வைத்தது.

ஷெல்லி ரூட்மேன் (பனிச்சறுக்கு)

sports-shelley.jpg

“நான் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை என் மகள் கேலரியில் இருந்து பார்த்தாள் எப்படி இருக்கும்? அதுவொரு அற்புத அனுபவம்” என்று தாய்மையை அனுவனுவாக அனுபவிக்கிறார் ரூட்மேன். இரண்டு குழந்தைகளின் தாயான ரூட்மேன், 2007-ம் ஆண்டு தனது மகள் எல்லா பிறந்த அடுத்த மூன்றாவது மாதமே பயிற்சி எடுக்கத் தொடங்கி விட்டார். தாய்மையை அவர் ஒரு பாரமாகக் கருதவில்லை. அதையொரு வரமாகவே கருதினார். அதன்பிறகு 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற ஸ்கெலிடன் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டின் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கமும், 2011-ல் தங்கப் பதக்கமும் வென்று அசத்தினார். தனது மகள் எல்லாவையும் ஒரு விளையாட்டு வீராங்கனயாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார் ஷெல்லி.

லிஸ் மெக்கோல்கன்

sports-liz.jpg

1987-ல் தாயான இந்த ஸ்காட்லாந்து ஓட்டப்பந்தய வீராங்கனை தாயான அடுத்த ஆண்டே பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கினார். அதுவும் அதிக ஸ்டெமினா தேவைப்படும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில். அடுத்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற மெக்கோல்கன், 1991-ல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதித்தார். ஐந்து குழந்தைகளுக்குத் தாயன லிஸ், காமன்வெல்த் போட்டிகளிலும் இரண்டு தங்கம் வென்றவர். அவரது மகள் எல்லிஸ் கூட 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்றார். தனது மகளையும் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் ஒரு மங்கையாக உருமாற்றப் போராடி வருகிறார் லிஸ் மெக்கோல்கன்.

sports-women.jpg

இந்த ஐவர் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தாய்கள் விளையாட்டுத் துறையில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். சரிதா தேவி (குத்துச் சண்டை), மேரி கிங் (ஈக்குஸ்டெரியன்), பவுலா ரெட்கிளிஃப் (மாரத்தான்) என எத்தனை எத்தனையோ அம்மாக்கள் இன்னும் தாய்மையை சுகமாகவே கருதி வெற்றிகளை ஈட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒவ்வொரு அம்மாக்களும், தங்கள் குழந்தைகளுக்காக இப்படியான தங்களது லட்சியங்களை தியாகம் செய்த தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

p99b.jpg

facebook.com/Thamira Aathi: காலையில் ஆட்டோ கத்திக்கொண்டே போகிறது... `உழைப்பாளிகளின் சின்னம் கை! விவசாயிகளின் சின்னம் கை! பாட்டாளிகளின் சின்னம் கை!’ - 30 வருடங்களுக்கு முன்னால் கேட்ட அதே வசனங்கள்.

இந்த டயலாக்கையாவது `இன்ஜினீயர்களின் சின்னம் கை! டாக்டர்களின் சின்னம் கை! ஐடி-க்காரர்களின் சின்னம் கை...’ என  ஒரு சேஞ்சுக்கு இப்படி மாத்தி எழுதித்தரக் கூடாதா ஐயா!

twitter.com/manipmp: `கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பது ஓட்டு போடுவதற்காகவே சொல்லப் பட்டிருக்கலாம்!

twitter.com/amuduarattai: பேக்குக்குள் ரகசிய அறை, ரகசிய அறைக்குள் பர்ஸ், பர்ஸுக்குள் போன், போனும் சைலன்ட் மோடு... என, பெண்களின் போன்கள், நான்கு அடுக்குப் பாதுகாப்பு நிறைந்தவை!

twitter.com/Veedhisattva: பிரமிப்புகளிடம் இருக்கும் பிரச்னையே, அவை ஒரு கட்டத்தில் பழகிப்போய் விடுவதுதான்!

twitter.com/kumarfaculty: உலகத்திலேயே மிகச் சுவையான உணவு, குழந்தைகளுக்காகப் பிசையப்பட்டதாகத்தான் இருக்கும்!
twitter.com/iKaruppiah: ஒரு சிட்டிகை வாசனைப்பொருள் சேர்த்தாற்போல் உள்ளது, உரையாடலில் நீ உபயோகிக்கும் ‘ம்ம்’!

p99a.jpg

twitter.com/karunaiimaLar: ரெண்டு நிமிஷம் சுத்தம்பண்றதுக்கு ஃபேனை ஆஃப் பண்ணாக்கூட, கொலைவெறி வருது!

twitter.com/aruntwitz: ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தா `என்ன வாங்கலாம்?’னு தோணும். அதே நோட்டு கிழிஞ்சு இருந்தா, `எவன் அந்த நோட்டை வாங்குவான்?’னு தோணும். இதுதான் வாழ்க்கை!

twitter.com/Rajeshveeraa: சின்னக் குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கய்யா... சிப்ஸ் பாக்கெட்ல ரெண்டு எடுத்தா கத்துது!

twitter.com/lakschumi: இயல்பாகச் சிரிக்கும் குழந்தைகளைக்கூட செஃல்பிக்குச் சிரிப்பவர்களாக மாற்றி வருகிறோம்!

twitter.com/sorubaravi: நமது பொய்யைச் சட்டெனக் கண்டுபிடிப்பவர், ஏற்கெனவே அதைச் சொன்னவராக இருக்கக்கூடும்!

p99c.jpg

twitter.com/kavathu: மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்... அவனை மளிகைக்கடைக்கு அனுப்புனா மீதி காசு வராதுனு!

twitter.com/Evanno_oruvan: ` `அம்மா’ உரையைக் கேட்பதற்காக வெயிலில் செத்து மடியத் தயார்’ - நாஞ்சில் சம்பத். #இன்று முதல் நீ, `நாஞ்சில் சன்பாத்’ என அன்போடு அழைக்கப்படு வாயாக!

twitter.com/itzNandhu: மரியாதையை வெளிப்படுத்த, ஹெட்செட்டைக் காதில் இருந்து எடுத்தாலே போதுமானதாக இருக்கிறது இப்போதெல்லாம்!

twitter.com/prakashalto: குரங்கில் இருந்து வந்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அநேகமாக குரங்கு இனத்தில் இருந்து அடித்துத் துரத்தப்பட்டு வந்திருப்பான் # மனிதன்!

p99d.jpg

twitter.com/writercsk: குழந்தைகள் க்ரீம் பிஸ்கட் சாப்பிடுவதுபோல்தான் வெள்ளைக்காரர்கள் மசால் தோசை சாப்பிடுகிறார்கள்!

facebook.com/Senthil Kumar: பாதி ரஜினி ரசிகர்களுக்கு, இந்த யூடியூப், இன்டர்நெட் சங்கதி எல்லாம் இன்னும் தெரியாது! அவங்களும் வந்திருந்தா இந்நேரம் கோடிக்கணக்குல கிராஸ் ஆகியிருக்கும்! ‪#‎கபாலி‬

vikatan

  • தொடங்கியவர்

சொன்னீங்களே, செஞ்சீங்களா?

 

 

p62a.jpg

‘சொன்னீங்களே செஞ்சீங்களா?’னு நம்ம வாழ்க்கையில எங்கெல்லாம் கேட்டிருக்கிறோம். கேட்டுப் பார்த்திருக்கோம். வாங்க ரீவைண்ட் ஓட்டிப் பார்க்கலாம்!

மனைவி டு கணவன்: ‘‘போனஸ் போட்டா வாடாமல்லி கலர்ல காஞ்சிபுரம் பட்டு எடுத்துத் தர்றதா சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

நண்பன் டு மீ: ‘‘இந்த மாசத்தோட ஃபேஸ்புக்கை விட்டு நிரந்தரமாப் போறேன்னு சொன்னியே, செஞ்சியா?’’

ஸ்டூடன்ட் டு ஒரு கேட்டரிங் காலேஜ்: ‘‘படிக்கும்போதே சம்பளம்னு சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

புரொபஸர் டு ஸ்டூடன்ட்: ‘‘அல்காரிதமிக் ஃபன்டமென்டல் ட்ரிக்னோமெட்ரி தீசிஸை முந்தாநாளே செஞ்சு முடிப்போம்னு சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

p62c.jpg

பொது ஜனம் டு ரியல் எஸ்டேட் கம்பெனி: ‘‘சென்னைக்கு மிக அருகில்னு சொன்னீங்களே, செஞ்சீங்களா?”

ரஜினி ரசிகர்கள் டு ரஜினி: ‘‘ ‘என் ரசிகர்களுக்கு விருந்து வைப்பேன்’னு சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

ரஜினி ரசிகர் டு கமல் ரசிகர்: ‘‘ஆஸ்கர் வாங்குற ‘மருதநாயகம்’ படத்தை எடுப்பேனு சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

வாடகைதாரர் டு வீட்டு ஓனர்: ‘‘சீக்கிரமா மோட்டார் போட்டு தண்ணிப் பிரச்னையைத் தீர்த்து வைப்போம்னு சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் டு பொண்ணு வீட்டுக்காரர்கள்: ‘‘உங்க பொண்ணுக்கு 50 பவுன் நகை போடுவேன்னு சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

பெண்ணின் அம்மா டு தரகர்: ‘‘நல்ல வரன் பார்த்துத் தர்றேன்னு சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

p62b.jpg

எங்க அப்பா டு மீ: ‘‘அடுத்த செமஸ்டர்ல அரியரை கிளியர் பண்ணுவேனு சொன்னியே, செஞ்சியா?’’

மீ டு அம்மா: ‘‘போன சண்டே பிரியாணி செஞ்சு தர்றேன்னு சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

தமிழ் சினிமா ரசிகன் டு டைரக்டர் அட்லி: ‘‘இது வித்தியாசமான கதை. எந்தப் படத்தின் தழுவலும் இல்லைனு சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிஸ்டர் பப்ளிக் டு எம்.எல்.ஏ: ‘‘கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன்னு சொன்னீங்களே, செஞ்சீங்களா?’’

vikatan

  • தொடங்கியவர்

பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் வீடியோ

 

சீனாவினர் நாம் பயன்படுத்தும் அனைத்தையும் போலியாக தயாரித்து வரும் நிலையில், சமீபத்தில் பலத்த சர்ச்சையில் இருந்துவரும் பிளாஸ்டி அரிசியையும் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

ricecover.jpg

தற்போது, கேரளாவின் பல இடங்களில் இந்த பிளாஸ்டிக் அரிசியானது விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.

பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் வீடியோவை இங்கு பாருங்கள்

 

vikatan

  • தொடங்கியவர்

சொல்வதெல்லாம் பொய்!

 

p124a.jpg

குனியாமல் நிமிர்ந்து நின்று அ.தி.மு.க-வில் இணைந்த முதல் நபர் நமீதாதான் என்பதால், அவருக்கு இந்த ஆண்டு மத்திய அரசு விருது வழங்கிக் கௌரவிக்க இருக்கிறது.

p124c.jpg

வேட்புமனுத் தாக்கலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் சமர்ப்பித்த தொகையைப் பார்த்து, மாவட்ட ஆட்சியர்களே தங்கள் செலவில் ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

p124b.jpg

நட்சத்திர கிரிக்கெட்டில் கோலிவுட் நடிகர்கள் சிறப்பாக விளையாடி இருப்பதால், அவர்களை ஒருங்கிணைத்து, ஐபிஎல் அணி ஒன்றை உருவாக்க இருக்கிறது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்!

p124e.jpg

மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாளைக் கொண்டாடிய அவரது ரசிகர்கள், அஜித்தின் பிறந்த நாளை சிம்ப்ளிசிட்டி தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

p124g.jpg

ஐ.ஐ.டியில் சமஸ்கிருதம் கட்டாயப் பாடம் ஆகியுள்ள நிலையில், கூகிள், ஃபேஸ்புக் போன்ற தளங்களும் சமஸ்கிருதத்தில் இயங்க வேண்டும் எனக் கட்டளையிட்டு இருக்கிறார் ஸ்மிருதி இரானி

p124d.jpg

விவசாயம் அழிந்துவிட்டதால், பச்சைத்துண்டு கட்டியிருக்கிறார் வைகோ. விவசாயம் அழிந்துவிட்டது என்ற அவரது அரிய கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு தர இருக்கிறார்கள்.

p124f.jpg

‘தெறி’ படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து, படத்தில் ஒரு பங்கு எனக்கு வேண்டும் என வழக்கு தொடுத்து இருக்கிறார் ‘சத்ரியன்’ படத்தின் தயாரிப்பாளர்!

vikatan

  • தொடங்கியவர்

13178939_10154595911564578_8382736041805

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.