Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஜெயலலிதா 10... அறிந்ததும் அறியாததும்!

றுக்கமான முதலமைச்சர், கட்சி நிர்வாகிகளுக்கு தூரத்து இடிமுழக்கம், நிருபர்கள் நெருங்க முடியாத அரசியல்வாதி என்பது ஜெயலலிதாவைப் பற்றிய பொது பிம்பம்.
 
அவரின் இன்னொரு உலகம், அவருக்கானது. நாம் அறிந்த, அறியாத 'அம்முவின்' சில பக்கங்கள் இங்கே...
 
 jaya2.jpg
 
1. ஜெயலலிதாவின் அம்மா சந்தியா, பெங்களூருவில் ஸ்டெனோவாக பணிபுரிந்தவர். எப்போதும் அம்மாவின்  புடவையைப் பிடித்துக்கொண்டு தூங்கும் குட்டிப்பெண் அம்முவான ஜெயலலிதாவை ஏமாற்ற, அந்தப் புடவையை அவர் வேறொரு பெண்ணுக்குக் கட்டிவிட்டுக் கிளம்பிவிடுவார். 
 
27990d98f5c5e8e25d53212dbcbb02f7.jpg
 
2. ஜெயலலிதாவின் பள்ளி நாட்களில் அவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்,  நாரி கான்ட்ராக்டர். 'நான் அவரைப் பார்ப்பதற்காகவே டெஸ்ட் மேட்ச்களுக்குப் போயிருக்கிறேன்' என ஜெயாவே சொல்லியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த நடிகர், ஷமி கபூர்.
 
Untitled.jpg
 
3. ஜெயலலிதா நல்ல பாடகி. 'அடிமைப் பெண்' படத்தில், 'அம்மா என்றால் அன்பு' என்று எம்.ஜி.ஆருக்குத் தாலாட்டுப் பாடிய குரல், இவருடையதே. இந்தியில் 'சோரி சோரி' படத்தின் 'ஆஜா சனம் மதுர்' பாடல் ஜெயாவுக்கு பிடித்த அல்டிமேட் சாங். ஓய்வு நேரங்களில் இருக்கும் போது முணுமுணுப்பார். 
 
Jayalalitha-.jpg
 
4. படிப்பில் செம கெட்டி. சர்ச் பார்க் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்தவருக்கு கல்லூரி செல்ல அவ்வளவு ஆசை. ஆனால், அவர் அம்மா அவரைப் படத்தில் நடிக்கக் கட்டாயப்படுத்தினார். அழுது, அடம் பிடித்த ஜெ., பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டு அரிதாரம் பூசிக்கொண்டார். சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஒரே ஒரு நாள், ஆசைக்காக வகுப்பில் அமர்ந்துவிட்டு, கல்லூரிக் கனவுக்கு பைபை சொல்லிவிட்டார். 
 
jaya3.jpg
 
5.  நடிக்கத் தொடங்கியதும் ஜெயலலிதாவின் சினி கிராப் தடதடக்க ஆரம்பித்தது. சில வருடங்களிலேயே அப்போது முன்னணியில் இருந்த சரோஜா தேவியை பின்னுக்கு தள்ளிவிட்டு, தென்னிந்தியப் பெண் சூப்பர் ஸ்டார் ஆனார். 1960களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவர்தான்.  
 
08jayalalithaa5.jpg
 
6. 'நான் யாரையும் பார்த்து நடிப்பதில்லை. பிறப்பிலேயே நான் ஒரு நடிகை' எனச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. வசனத்தை ஒரே வாசிப்பில் மனப்பாடம் செய்துவிடும் நடிகைகளில் இவர்தான் முதலாமவர். 'நடிப்புக்கு இலக்கணம்' என கருணாநிதியால் பாராட்டப்பட்டவர்.
 
jayawitkalai.jpg
 
7. ஹீரோயின் ஜெயலலிதாவுக்கு சொந்த கார் வாங்க நிறைய ஆசை. கையில் காசு சேர்ந்ததும், அம்மாவின்  அம்பாஸடர் காருக்கு விடைகொடுத்துவிட்டு, செகண்ட் ஹேண்ட் ப்ளைமவுத் காரை வாங்கினார். அந்தக் காரின் பதிவு எண்  MSX 3333. அந்தக் காலகட்டத்தில் அவர் வாங்கிய காண்டஸா கார், இன்றும் அவரிடம் உள்ளது. 
 
8. எம்.ஜி.ஆர்  இறுதி ஊர்வலத்தில் ஒரு பெண்ணாக ஜெயலலிதா சந்தித்த அவமானங்களின் வீடியோப் பதிவு காட்சிகள், சென்னை தூர்தர்ஷன் அலுவலக  அறையில் இன்றும் தூங்கிக்கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் இறுதிச் சடங்கு முடிந்த உடன் கலங்கிப்போன ஜெ., போயஸ் தோட்ட 'வேதா நிலையம்' வீட்டுக்குள் வேகமாக நுழைந்து, தன் அறையைப் பூட்டிக்கொண்டார். நான்கு மணி நேரம் கழித்து வெளியே வந்த ஜெயலலிதா, அதன் பின் எடுத்தது அரசியல் விஸ்வரூபம்.
 
jayamgrdead.jpg
 
9. தமிழக சட்டசபை 'மாண்புமிகுக்களால்' பெரிதும் அவமானப்பட்டவர் ஜெயலலிதா.  அப்போதைய திமுக ஆட்சியின்போது  சட்டசபைக்குள்  தனி மனுஷியாகப் பிரவேசித்து, முதல்வர் கருணாநிதி மற்றும் மூத்த அமைச்சர்களை கேள்விக்கணைகளால் திணறடித்தார்.
 
jaya1.jpg
 
10. பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு தடா சொல்பவர் ஜெயலலிதா.
 
jayawalk.jpg
 
2004-ல் பிபிசி-யின் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருடன் நடந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்விகளில் கோபமானவர், 'உங்கள் பேட்டி முடிந்துவிட்டதா? வேறு ஏதாவது கேட்க வேண்டுமா? இந்தப் பேட்டி எனக்கு மோசமான அனுபவத்தையே தந்துள்ளது' என முகத்துக்கு நேராகச் சொல்லிவிட்டு, காலர் மைக்கை தூக்கிவீசிவிட்டுச் சென்றுவிட்டார்
vikatan
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா,படித்து,கல்யாணம்,குடும்பம் என வாழ வேண்டிய பெண். அவரது தாயாலேயே அவரது வாழ்க்கை பாழாச்சு...ஒரு விதத்தில் பார்த்தால் பரிதாபத்துக்குரியவர்

  • தொடங்கியவர்

வாழ்வியல் தரிசனம்

article_1462767750-123.jpgஎந்தப் பெரிய பதவியும் பண பலமும் இருந்தாலும் கூட, வெட்கம் கெட்ட செயலைச் செய்தால், அவர்கள் உயிருடன் வாழும் நபர்களாகக் கருதப்படவே மாட்டார்கள். துஷ்டர்கள் வெட்கப்படுவதுமில்லை.

உலகத்துக்கு ஒவ்வாத எந்தச் செயலையும் கூசாமல் செய்வது வெட்கம் கெட்ட செயல்தானே. 

பணம், செல்வாக்கினால் தவறுகளை எத்தனைகாலம் தான் மறைக்க முடியும் சொல்லுங்கள்? மானத்தைக் காசு கொண்டு நீக்க முடியாது.

ஒருவரின் நடத்தைப் பிசகினால் ஏற்பட்ட வடுக்களை அவன் பின்னால் வந்த வாரிசுகளே மனம் நொந்து ஏற்க வேண்டி நேரிடும். இது தேவை தானா, இதனை உணர்ந்தால், மானம் கெட்ட செயல்களை ஒருவருமே செய்ய மாட்டார்கள்.

மனதில் பாரமின்றி வாழ்ந்திட நற்பழக்கங்களைப் பேணுதலே ஒரே வழியுமாகும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தாடி வைத்த அப்பாவும்...தங்க மீன் கண்ணம்மாவும் - தூரிகைகளில் விளையாடும் ஸ்நெஷானா சோஸ்!

 

63579241418099887665912156cuteimgopt1000

ப்பாக்கள்...வாழ்நாள் முழுக்க குழந்தைகளை இதயத்தில் சுமப்பதால், கருவில் சுமக்கும் அம்மாக்களுக்கு இணையானவர்கள்...

அதுவும் எல்லா தந்தைகளுக்குமே பெண் குழந்தைகள் என்றால், செல்லமோ செல்லம். அவர்கள்தான் அப்பாக்களின் வாழ்க்கை என்னும் கடலில் நீந்தும் ‘தங்க மீன்கள்'. திருமணத்திற்கு முன்பு வரை ஆண்கள் இவர்களை பெண்களாக பார்த்திருக்கலாம். ஆனால், ஒரு பெண்குழந்தை பிறந்த பிறகு அப்பாக்களாக மாறும் ஆண்களுக்கு இந்த பெயர்கள் எல்லாமே தங்கள் மகளின் பிரதிபிம்பம்தான்.

அப்படிப்பட்ட அன்போவியமான அப்பாக்களுக்கும், அவர்களின் செல்லக்குட்டி மகள்களுக்கும் இடையிலான உறவினை ஓவியப் பாணியில் வரிசைப்படுத்தி அழகூட்டி வருகின்றார் ஸ்நெஷானா சோஸ் என்னும் பெண்மணி. சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், இவருடைய அப்பா - மகள் ஆத்மார்த்தமான பாசப்பிணைப்பின் சித்திரங்கள், அந்த உறவிற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்க்கின்றன. 

appedited1.jpg
 
 
ஸ்நெஷானாவின் கற்பனையில், ஒரு குயில் குஞ்சு அளவில் இருக்கும் குழந்தைக்காக அந்த குண்டு அப்பா முழுப்படுக்கையையும் தியாகம் செய்துவிட்டு, இத்துணூண்டு இடத்தில் தூங்குகின்றார். மகளை தலையில் தூக்கி வைத்து ஊரையே வலம் வருகின்றார், தன்னுடைய தொப்பை வயிற்றில் குட்டிப் பாப்பாவை தூங்க வைக்கின்றார்.
appaedit2.jpg
 
அவரின் செல்லக் கரடிக்காக, குட்டிக் கரடி பொம்மைகளைக் கழுவிக் கொடுக்கின்றார்.  அவர்கள் இருவரும் ஒரு தனி உலகில் வாசம் செய்கின்றனர். மகளோடு சேர்ந்து செஃப்பாய் மாறி, சமையல் செய்கிறார். தன் கண்ணம்மாவிற்கு பொம்மலாட்டம் காட்டி மகிழ்விக்கின்றார். 
 
குட்டி, குட்டி குறும்புத்தனத்துடன் அப்பா-மகளின் லூட்டியை தூரிகையில் வண்ணக்கலவைகளால் குழைத்துள்ளார் சோஸ். இழையோடும் அப்பா-மகள் அன்பின் அழகியலை காட்டும் இந்த ஓவியங்கள், சமூக வலைதளப் பக்கங்களில் மகள்களைப் பெற்ற அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகின்றது.
 
அப்பாக்கள் ராஜ்ஜியம்!
vikatan
  • தொடங்கியவர்

13227592_1043169019065125_46594606132139

உலகின் No 01 சமூக வலைத்தளம் பேஸ்புக்கின் நிறுவுனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிக்கு இன்று பிறந்த நாள்

உலகத்தை இணைக்க வேண்டும் என்ற கனவுடன். 2004 ஆம் ஆண்டு உலகில் உள்ள இணைய பயனாளர்களை ஒருசேர இணைக்கும் முகமாக முகப்புத்தகத்தை தொடக்கி வைத்தார். நீண்ட நெடிய முயற்சிகள் மூலம் தன் தூங்கும் அறையில் தொடங்கப்பட்ட பேஸ்புக்
வலைத்தளத்தால் நம் எல்லோரையும் வசியப்படுத்தி அதன் தாக்கத்தால் பைத்தியமாக்கியவர்.

இவருக்கு தமிழில் பேசவோ, எழுதவோ தெரியாது ஆனால் ஆத்திசூடியில் சொல்லப்பட்டிருக்கும் "நல்விதிகளின் ஐந்தை" நேர்த்தியாக கடைப்பிடிப்பித்தவர். உலகின் இளம் பில்லியனர்களின் ஒருவராக திகழும் இவர் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றியாளர்.

அசுர பலத்துடன் மில்லியன் பயனாளர்களுடன் வலம் வந்து உலகலாவிய நட்பு வட்டத்தை இணையமெங்கும் பரப்பி புதுமை செய்த மார்க் ஜூக்கர்பெர்க்கிக்கு சூரியனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Happy Birthday Mark Zuckerberg

  • தொடங்கியவர்

'விண்ணைத் தாண்டி வருவாயா' த்ரிஷாவைத் தெரியும்... ஆயிஷாவைத் தெரியுமா?

            ay.JPG

வானில் ஏரோப்ளேன் பறக்கும் சத்தம் கேட்டால், குழந்தைகள் பூரிப்போடு வானை அண்ணாந்து பார்த்து ஆச்சர்யப்படுவதுண்டு. ஆயிஷா அசிஸ், அப்படி ஆச்சர்யப்பட்டதோடு நிறுத்திவிடவில்லை. தானும் ஒரு நாள் விண்ணைத் தொட்டு விமானம் ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். தன் கனவைப் பின்தொடர்ந்து ஓடினாள். 20 வயதான ஆயிஷா, இன்று இந்தியாவின் இளம் விமானி. காஷ்மீரின் முதல் பெண் விமானி! 

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆயிஷா. 17 வயதிலேயே ஒரு விமானத்தைச் செலுத்த உரிமம் பெற்ற முதல் காஷ்மீர் பெண். அவரது வெற்றிப் பயணம் அசாத்தியமானது. சிறு வயதிலேயே குடும்பத்துடன் மும்பைக்கு  வந்துவிட்ட ஆயிஷாவுக்கு, வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை மும்பையிலிருந்து காஷ்மீருக்கு ஏரோப்ளேனில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ஆயிஷாவின் சகோதரன் பயத்தில் தூங்க, அவரோ ஏரோப்ளேனின் ஒவ்வொரு அசைவையும் அனுபவித்து சிறுகச் சிறுக பறந்து விண்ணை தொடும் மகிழ்ச்சியை அனுபவிப்பார். தானும் ஒருநாள் இப்படி விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பிறந்தது அவருக்கு.

"வித்தியாசமாக ஏதாவது சாதிக்கும்போது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும்" என்று கூறும் ஆயிஷா, "பெண்கள்  செய்யக்கூடாத வேலைகளில் விமானி வேலையும் உள்ளது. அதனால்தான் அந்த வேலையை நான் தேர்ந்தெடுத்தேன்.

    ay2.jpg   ay3.jpg

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போதே நாசாவில் நடத்தப்பட்ட விண்வெளி பயிற்சி முகாமில் பங்கேற்க இந்தியாவிலிருந்து ஆயிஷா தேர்வு செய்யப்பட்டார். பயிற்சி முகாமில் தனது ரோல் மாடலான சுனிதா வில்லியம்ஸை சந்திக்கும் வாய்ப்பு ஆயிஷாவுக்கு கிடைத்துள்ளது.

ஆயிஷா விமானி ஆக வேண்டும் என்ற உடனே அவரது பெற்றோர் மும்பையில் இயங்கும் விமான ஒட்டுனர் பயிற்சி வகுப்பில் சேர்த்துவிட்டார். அப்போது அவர் பத்தாம் வகுப்புதான். அந்த பயிற்சி வகுப்பில் 40 பேர் இருந்தார்கள். அதில் 18 வயது குறைவாக இருந்த ஒரே பெண் ஆயிஷாதான். மேலும் தன்னுடைய முதல் முயற்சிலே விமானிக்கான லைசென்ஸ் வாங்கினார்.

என்னை விமானி என்றவுடன் பலரும் என்னை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். இதற்கு என்னுடைய வயது காரணமா அல்லது விமானி என்பதால் இந்த ஆச்சர்யமா என்பது தெரியவில்லை. விமானம் ஒட்டும் போதும் பயமாக இல்லையா என்று கேட்கிறார்கள். சாவு என்பது எப்போது வேண்டுமானாலும் வரும். அதை கண்டு பயந்து விட கூடாது" என்கிறார்.


வாழ்த்துக்கள்  ஆயிஷா...!

vikatan

  • தொடங்கியவர்

13243669_1043171045731589_53643210193285

ஹிந்தி திரையுலகின் நடிகை Zarine Khan இன்
பிறந்த நாள் இன்று

  • தொடங்கியவர்

அழகு...அரசியல்!

 

p84e.jpg

லகம் முழுவதும் இருக்கும் அழகான பெண் அரசியல்வாதிகள் என எட்டுப் பேரை வரிசைப்படுத்தி இருக்கிறது ‘கேப்டிக்’ என்ற தளம். பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கோங்க மக்களே!

p84a.jpg

அலினா கபேவா, ரஷ்யா: ஜிம்னாஸ்டிக் கிற்குப் பெயர்போன ரஷ்யாவிலிருந்து வந்திருக்கும் இவர் ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கம் பெற்று பெருமை சேர்த்தவர். 2005-ல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் அரசியலில் குதித்தார். ‘யுனைடெட் ரஷ்யா பார்ட்டி’யில் முக்கியப் பதவி வகித்து வருகிறார். போய் நின்றாலே போதும், ஓட்டு கண்டிப்பாக விழும்!

p84b.jpg

யுலியா டைமோஷெங்கோ, உக்ரைன்:  இந்தப் பேரழகி உக்ரைன் நாட்டின் பிரதமராக இரண்டு வருடங்கள் கலக்கியவர். அரசியலுக்கு வருவதற்கு முன் பிசினஸ் உலகில் ‘மன்னன்’ பட விஜயசாந்தி ஸ்டைலில் கலக்கியவர். உக்ரைனைக் கலக்கிய ஆரஞ்சுப் புரட்சியின் பிதாமகள் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

p84.jpg

லூஸி டாரெஸ் கோமஸ், பிலிப்பைன்ஸ்: நம் ஊர் நமீதா ஸ்டைலில் பொழுதுபோக்குத் துறையில் இருந்து அரசியலில் குதித்தவர்தான் லூஸி. மாடல், நடிகை, டி.வி காம்பியர் எனக் கலக்கியவருக்கு கிளாமர் நடிப்பிற்காக எக்கச்சக்க ஃபாலோயர்ஸ் உண்டு. அங்கு லெய்ட்டே என்ற  மாவட்டத்தின் கட்சி நிர்வாகியாகக் கலக்கி எடுக்கிறார்.

யூரி ஃபியூஜிகவா, ஜப்பான்: ‘அரசியலுக்கு இவ்வளவு கூடாது!’ என ஜப்பானில் அதிகம் விமர்சிக்கப்படும் ஜீவன். ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்தான் என்றாலும் அழகால் அறியப்படுபவர். 38 வயது கட்சிப் பொறுப்பாளர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலில் பரவ இப்போது பொண்ணுக்கு எக்கச்சக்க எதிர்ப்பு கட்சிக்குள்!

p84c.jpg

வஞ்சா ஹாட்சோவிக், செர்பியா:  27 வயது செர்பிய அழகி, அண்மையில் ஒரு பத்திரிகைக்குக் கொடுத்திருக்கும் எக்குத்தப்பு போஸ்கள்தான் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அம்மணி அந்நாட்டின் ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் கௌரவ ஆலோசகராம்!

மரியா கர்ஃபாக்னா, இத்தாலி: உலகின் ஹாட்டஸ்ட் அரசியல்வாதி என மேக்ஸிம் பத்திரிகையால் ரேங்க் கொடுத்து அழைக்கப்படுபவர். பிஸியான மாடலும் கூட. நியூட் போஸ் கொடுத்துப் பரபரப்புக் கிளப்பியவர். ஆனால்,  தற்போது கிளாமர் இமேஜை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டு முழுநேர அசியல்வாதியாகி விட்டார். இத்தாலியின் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு அந்நாட்டின் பெண்கள் முன்னேற்றத்துறை மந்திரியாகி இருக்கிறார்.

p84d.jpg

ஜூலியா போங்க், ஜெர்மனி: டீனேஜிலேயே அரசியலில் குதித்து விட்டார். 18 வயதிலேயே ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினரானவர். 16 வயதில் மாணவர் அமைப்பின் பேச்சாளராக இடதுசாரிக் கட்சியில் அங்கம் வகித்தார். இப்போது ஜூலியாவுக்கு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு ஜெர்மனியில் செம செல்வாக்கு!

அன்னா மரியா கேலோஜன், எஸ்டோனியா:   எஸ்டோனியப் புனர்வாழ்வுக் கட்சியின் உறுப்பினர் இவர். பலமுறை நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நின்று தோல்வியைத் தழுவி இருந்தாலும் அரசியலையும் தாண்டி ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிசினஸ் புலியாகக் கலக்கி வருகிறார்.

vikatan

  • தொடங்கியவர்

கேன்ஸ்  திரைப்பட விழாவில்

13240046_1938494376376963_38427167631341

1936078_1938494373043630_173758886959753

13226718_1938494429710291_30345044927270

Aishwarya Rai Bachchan, Aishwarya Rai Bachchan Cannes, Aishwarya Rai Cannes, Aishwarya cannes, Cannes, cannes 2016, cannes film festival, Aishwarya Rai Bachchan red carpet, Aishwarya Rai red carpet, Aishwarya red carpet, Aishwarya Rai cannes red carpet, Aishwarya cannes red carpet, Aishwarya cannes 2016, Aishwarya Rai cannes 2016, Entertainment news

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மார்க் எப்படி ஃபேஸ்புக்கை உலகின் நம்பர் 1 ஆக்கினார்? - #HBDMark

markvcvcvc3.jpg

நிச்சயம் இவருக்குத் தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. தமிழ்ப் பெருங்கிழவி ஔவை பற்றியோ, அவள் அருளிய ஆத்திசூடி பற்றியோ, இந்த இளைஞர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இவர் தன் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கும், இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் ஆத்திசூடியில் சொல்லப்பட்டிருக்கும் ‘நல்விதிகளில் ஐந்தை’ நேர்மையுடன் கடைப்பிடித்ததே.

யார் இவர்? உலகின் இளம் பில்லியனர்களில் ஒருவரும், உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனருமான - மார்க் ஸுக்கர்பெர்க்.

‘மார்க் மை வேர்ட்ஸ்’ என ஔவை சொல்லி, மார்க்கின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ஐந்து நல்விதிகளை அவரது வெற்றிக் கதையுடன் சேர்த்தே பார்த்துவிடலாம்.

நியூயார்க் அருகில் உள்ள டாப்ஸ் ஃபெரி என்ற சிறு நகரத்தில் பல் மருத்துவராக இருந்தவர் எட்வர்டு. இவரது ஒரு வயது மகன் மார்க் ஸுக்கர்பெர்க் தத்தித் தத்தி நடக்கும் பருவத்தில் (1985), எட்வர்டு தனது கிளினிக்கில் புதிய கம்ப்யூட்டர்களை நிறுவினார். விவரம் அறியாத வயதிலேயே கம்ப்யூட்டர் ஸ்பரிசத்துடன் வளர்ந்தான் சிறுவன் மார்க். விளையும் பயிர் முளையிலேயே, தனி கம்ப்யூட்டர் கேட்டு  அடம்பிடித்தது. சமாளிக்க முடியாமல் பெற்றோரும் வாங்கிக் கொடுத்தனர். 10 வயது மார்க், அதில் படம் வரைந்தான்; படம் பார்த்தான். வேறு என்ன செய்ய? ‘கம்ப்யூட்டர் போரடிக்குதுப்பா!’ என அலுத்துக்கொள்ள, ‘சி++ ஃபார் டம்மீஸ்’ என்ற புரோகிராமிங் புத்தகத்தை தன் மகனிடம் விளையாட்டாகத் தூக்கிக் கொடுத்தார் எட்வர்டு. மார்க், அதில் லயித்தான். புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொண்டு, சிறு சிறு புரோகிராம்கள் எழுத ஆரம்பித்தான். அந்த ‘விளையாட்டு’ அவனுக்குப் பிடித்திருந்தது. மகனின் ஆர்வத்தைக் கண்டுகொண்ட எட்வர்டு, அருகில் நடந்த ‘புரோகிராமிங் வகுப்பு’க்கு அனுப்பினார். பொடியனின் ஆர்வமும் திறமையும், வகுப்பில் இருந்த சீனியர்களைத் திகைக்கச் செய்தன.

p70a.jpg

‘அப்பா, உங்க கம்ப்யூட்டரையும் கிளினிக் ரிசப்ஷன்ல இருக்கிற கம்ப்யூட்டரையும் ஒரே நெட்வொர்க்ல கொண்டுவாங்க’ என மார்க் கட்டளையிட, எட்வர்டும் அப்படியே செய்தார். டாக்டரும் ரிசப்ஷனிஸ்ட்டும் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்ளும்படி புதிய ‘சாட் புரோகிராம்’ எழுதி அசத்தினான் மார்க். இன்றைக்கு உலகையே ஃபேஸ்புக்கால் இணைத்துவைத்திருக்கும் மார்க் நிகழ்த்திய முதல் ‘சாட்’ அது.

வீடியோ கேம்ஸ்களில் மூழ்கிக்கிடக்கும் பதின் வயதில், மார்க் தன்னைப் போன்ற புரோகிராமிங் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து புதிய கேம்ஸ்களை உருவாக்கினான். அதற்காக ‘புரோகிராமிங்தான் வாழ்க்கை’ என அவன் அப்போதே முடிவெடுக்கவில்லை. அது என்னவோ, செம்புலப் பெயல்நீர்போல, ‘பிஹெச்பி’யும் ‘சி ப்ளஸ் ப்ளஸ்’ஸும் அவனுள் இயல்பாகக் கலந்தன.

பள்ளி இறுதி ஆண்டில் ஒரு புராஜெக்ட் செய்ய வேண்டும். மார்க்கும் அவரது நண்பர் ஆடமும் இணைந்து ‘ஸினாப்ஸ்’ என்ற ஒரு புதிய மியூசிக் பிளேயரை உருவாக்கினார்கள். கம்ப்யூட்டரை உபயோகிப்பவர் என்ன மாதிரியான பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்கிறார் என அவரது ரசனையை ஸினாப்ஸ் மோப்பம் பிடித்துக்கொள்ளும். ஏற்கெனவே இருக்கும் பாடல்கள், புதிதாகச் சேர்க்கும் பாடல்கள் எல்லாவற்றிலும் இருந்து அவருக்குப் பிடித்த மாதிரியான பாடல்களைத் தானே தேர்ந்தெடுத்து, ‘ப்ளே லிஸ்ட்’ ஒன்றை உருவாக்கி ஒலிக்கச் செய்யும். பள்ளி அளவில் ஸினாப்ஸ் புகழ்பெற, மார்க்கும் ஆடமும் அதை இணையத்தில் இலவசமாக உலவ விட்டார்கள். உபயோகித்தவர்கள், உச்சி முகர்ந்து பாராட்டினார்கள்.

‘பள்ளிச் சிறுவர்’களின் அபாரத் திறமை, எட்டுத் திக்கும் எட்டியது. மைக்ரோசாஃப்ட் முதல் மியூசிக் மேட்ச் வரை, சிறிய பெரிய நிறுவனங்களின் ‘ஆஃபர் லெட்டர்’ இருவரது இன்பாக்ஸையும் தட்டியது. மார்க், சற்றே மிரளத்தான் செய்தார். ‘அதுக்குள்ளயா... அய்யோ, நான் காலேஜ் படிக்கணும்’! என நழுவினார். ‘சரி, ஒரு மில்லியன் டாலர் தர்றோம். அந்த ஸினாப்ஸை எங்ககிட்ட வித்துருங்க’ எனவும் கேட்டுப் பார்த்தார்கள். மைக்ரோசாஃப்ட் இரண்டு மில்லியன் தருவதாகவும் அழைத்தது. ஆனால், அங்கே மூன்று வருடம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன். மைக்ரோசாஃப்ட்டில் வேலை என்பது ஆகச்சிறந்த வெகுமதிதான். ஆனால், என் கல்லூரிக் கனவுகள்? கடும் குழப்பத்தில் தவித்த மார்க், இறுதியில் ‘குழந்தைத் தொழிலாளி’யாக மாற விரும்பாமல், ‘ஹார்வர்டு’ பல்கலைக் கழகத்தில் படிக்க விண்ணப்பித்தார்.

அங்கே ஒவ்வொரு செமஸ்டரின் ஆரம்பத்திலும், மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு உரிய பாடங்களைத் தேர்ந் தெடுக்க வேண்டும். தங்கள் நண்பர்கள், காதலிக்கத் துரத்தும் பெண்கள்/ஆண்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என விவரம் தெரிந்தால், தாங்களும் அங்கே நங்கூரமிடலாம் அல்லவா? அதைத் தொகுத்துச் சொல்லும் ஹார்வர்டுக்கு உரிய பொது இணையதளம் எதுவும் இல்லை. மாணவர்கள் தவித்தார்கள். அதற்காகவே மார்க், 2003-ம் ஆண்டு மத்தியில் ‘கோர்ஸ் மேட்ச்’ என்ற இணையதளத்தை இன்ஸ்டன்ட்டாக உருவாக்கினார். செம  ஹிட். தளத்தை உருவாக்க எந்தவித டேட்டாபேஸும் மார்க்கிடம் கிடையாது. ஒவ்வொரு மாணவரும் தளத்தினுள் நுழைந்து, தங்கள் விவரங்களைத் தாங்களே பதிவுசெய்துகொண்டனர். புதிய டேட்டாபேஸ் உருவானது. கோர்ஸ்  மேட்ச்-ன் இந்த மாடல்தான் ஃபேஸ்புக்கின் அடித்தளமும்கூட.

மார்க், ஃபேஸ்புக்கை நிறுவுவதற்கு பல ஆண்டுகள் முன்பே ஹார்வர்டில் ஒரு ‘ஃபேஸ்புக்’ புழக்கத்தில் இருந்தது. ஹார்வர்டு மாணவர்களின் சுயவிவரங்களும் புகைப்படங்களும் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு. இணைய வசதி வந்தபின் அவை டிஜிட்டல் வடிவில் கிடைத்தன. ஆனால், அவற்றை அந்தந்தத் துறை சார்ந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும். மற்ற துறையினர் உள்ளே நுழைய முடியாது. செக்யூரிட்டி... பாஸ்வேர்டு... இத்யாதி.

p70b.jpg

‘மப்பும்’ மந்தாரமுமாக இருந்த ஒரு பொழுதில், மார்க்குக்கு ‘ஹார்வர்டிலேயே அழகான பெண் யார்... ஆண் யார்?’ என்பதைத் தேர்ந்தெடுக்கும் ஒரு புரோகிராம் எழுதும் கோக்குமாக்கு யோசனை தோன்றியது. நெட்வொர்க் வழியே ஹார்வர்டின் ஒவ்வொரு துறையில் இருந்தும் மாணவர்களின் விவரங்களைத் திருடினார். `ஃபேஷ்மேஷ்' என்றொரு புரோகிராம் உருவாக்கினார். இரண்டு பெண்களின் (அல்லது ஆண்களின்) புகைப்படத்தை ஒப்பிட்டு யார் அழகானவர் எனத் தேர்ந்தெடுத்தால், தேர்ந்தெடுக்கப்படாத படம் மறைந்து அடுத்த படம் தோன்றும். இப்படியே ஓட்டு அளித்துக்கொண்டே செல்லலாம். மார்க், ஃபேஷ்மேஷை உருவாக்கி இணையத்தில் ஏற்றிய சில மணி நேரத்திலேயே, மாணவர்கள் அதை மொய்க்க ஆரம்பித்தனர். ஓட்டுகள் குவியக் குவிய, ஹார்வர்டின் இணைய இணைப்பு டிராஃபிக்கால் செயல் இழந்தது. மார்க்கும் அத்துடன் ஃபேஷ்மேஷுக்குத் திரை போட்டார். தனக்குள் முடிவெடுத்தார். குற்றமான விளையாட்டைச் செய்யாதே.  `கோதாட்டு ஒழி'  .

சில நாட்களில் மார்க், பல்கலைக்கழகத்தின் விசாரணை வளையத்துக்குள் நிறுத்தப்பட்டார். புகைப்படங்களைத் திருடியது, இணைய இணைப்பைத் தவறாகப் பயன்படுத்தியது, அழகுக்கான ஓட்டு என்ற பெயரில் கறுப்பு இனத்தவரின் மனதைப் புண்படுத்தியது - இப்படிச் சில குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மார்க், ‘சாதாரண மாணவன் ஒருவன் தகவல்களை எளிதாகத் திருடும் அளவுக்குத்தான் பல்கலைக்கழகத்தின் இணையதளப் பாதுகாப்பு இருக்கிறது என்பதை உணர்த்தியிருக் கிறேன். அதற்காகப் பாராட்டுங்கள்’ என்றார் சாமர்த்தியமாக. தண்டனை இல்லாமல் தப்பித்தார்.

அடுத்ததாக மார்க், ஹார்வர்டு மாணவர் களுக்கான புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் ஒன்றை அமைக்கும் யோசனையில் இறங்கினார்.       `தூக்கி வினை செய்'  அந்தச் செயலை முடிக்க என்னவெல்லாம் தேவை எனத் தீவிரமாகத் திட்டமிட்ட பின்பே முனைப்புடன் களத்தில் இறங்கினார். ‘கோர்ஸ் மேட்சை'விட அதிகப் பயனுள்ளதாக, குறிப்பாக சாட்டிங்கில் தொடங்கி டேட்டிங் வரை புதிய தளம் மாணவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் செயலாற்றினார். தளத்தினுள் நுழைய அடிப்படைத் தேவை ஹார்வர்டு இமெயில் கணக்கு. மாணவர்கள் சுய விவரங்களைத் தாங்களே இதில் பதிவுசெய்துகொள்ளலாம். அடுத்தவர்களின் தகவல்களை நோட்டம்விடலாம். ‘கொஞ்சம் படிக்கிறேன்’, ‘நீச்சல் அடிக்கிறேன்’, ‘காதலில் துடிக்கிறேன்’ என ஏதாவது ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் போடலாம்.

`thefacebook.com' என, அந்தத் தளத்துக்காக இணையதள முகவரியை 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவுசெய்தார் மார்க். இரவு, பகல், பசி, தூக்கம் எல்லாம் மறந்து அடுத்த செமஸ்டர் தொடங்குவதற்கு முன்பாகவே தளத்தை இயக்கிவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இயங்கினார். சமயங்களில் சாண் ஏறாமலேயே முழம் சறுக்கியது. அத்தனை ‘எரர்’. `இதெல்லாம் தேவையா... அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' என மார்க், தூக்கிப் போட்டுவிடவில்லை.  `ஊக்கமது கைவிடேல்'     தன்னலம் இல்லாத உழைப்பைக் கொட்டி தளத்துக்கு உயிர்கொடுத்தார் மார்க்.

மார்க்கின் நண்பர் சாவ்ரின், தளத்தில் 1,000 டாலர் முதலீடு செய்ய, மாதத்துக்கு 85 டாலரில் தளத்துக்காக ஒரு சர்வரை வாடகைக்கு எடுத்தார்கள். அந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி மார்க், தனது ஹார்வர்டு இமெயில் மூலம்   தி ஃபேஸ்புக்கின் முதல் உறுப்பினராகப் பதிவுசெய்தார். தளம் இயங்க ஆரம்பித்தது. ஆரம்பமே ரணகள ஹிட். ஒருசில நாட்களிலேயே ஹார்வர்டு வளாகத்தில் ‘ஹலோ'வுக்குப் பதிலாக, ‘நீ ஃபேஸ்புக்ல இருக்கியா?’ என எல்லோரும் கேட்டனர்.

p70c.jpgஹார்வர்டு பேராசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் உள்ளே ஊர்வலம் வர ஆரம்பித்தனர். ‘எங்க காலேஜுக்கும் இதே மாதிரி ஒரு வெப்சைட் தேவை... செஞ்சு தாங்க ப்ளீஸ்!’ என கோரிக்கைகள் மார்க்கை மொய்த்தன. இரண்டே மாதங்களில் அமெரிக்காவின் முக்கியமான கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஃபேஸ்புக்கின் நீலக்கொடி. ஏற்கெனவே ஏதாவது ஒரு சமூக வலைதளம் கால் பதித்திருந்த கல்லூரிகளில்கூட ஃபேஸ்புக் நுழைந்து அரியணையைப் பிடித்தது. பணம் போட்ட சாவ்ரின், விளம்பரங்கள் வெளியிட்டு பணம் சம்பாதிக்கவும் நினைத்தார். அதற்கு மார்க் சம்மதிக்கவில்லை. ‘இது ஜாலியான தளம். இன்னும் பல லட்சம் பேரைச் சென்றடைய வேண்டும். விளம்பரங்கள்,  உறுப்பினர்களுக்கு எரிச்சல் தரும். அதனால் ஃபேஸ்புக்கின் இமேஜ் கெடும்’ என்றார் தீர்க்கமாக. பின்பு உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிக்கொண்டே சென்றதால், செலவினங் களைக் கட்டுப்படுத்த, சிறிய வகை விளம்பரங் களை, உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யாத விதத்தில் வெளியிட அனுமதித்தார்.

ஃபேஸ்புக்கை லபக்கிக்கொள்ள சிறிய, பெரிய நிறுவனங்களின் தூண்டில்கள் நீண்டன. மார்க் எதிலும் சிக்கிக்கொள்ளவில்லை. ‘இந்த புராஜெக்ட் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கே சலிப்புத்தட்டும் வரை இதை மென்மேலும் விரிவடையச் செய்வதில்தான் முழுக் கவனம் செலுத்தப்போகிறேன். இதை விற்பது குறித்தோ, பணம் சம்பாதிப்பது குறித்தோ கொஞ்சமும் யோசிக்கவில்லை’ என்றார்.

அந்த விடுமுறை காலத்தில், சீன் பார்க்கர் என்பவருடன் கைகோத்தார் மார்க். ஃபேஸ்புக்கின் அடுத்தகட்ட வளர்ச்சி அப்போது தொடங்கியது. பார்க்கர், இதே துறையில் சில தோல்விகளைக் கண்ட அனுபவஸ்தர்; ஆனால், திறமைசாலி. ‘இப்போது சிறிய அளவில் இருந்தாலும் ஃபேஸ்புக் ஒருநாள் உலகத்தையே தன் பிடிக்குள் கொண்டுவந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு நிறைய முதலீடு தேவை’ என வருங்காலத்தைச் சிந்தித்த பார்க்கர், புதிய முதலீட்டாளர்களை அழைத்துவந்தார். முதல் கட்டமாக ஆறு லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்தது. ஃபேஸ்புக்கின் புதிய தலைமைப் பொறுப்பாளராக பார்க்கர் பொறுப்பேற்றார். ஃபேஸ்புக்கில் வேறென்ன புதிய வசதிகள் சேர்த்து உலகத்தை வளைக்கலாம் என இரவு-பகலாக கோடிங் சிந்தினார் மார்க்.

விடுமுறை காலம் முடிந்தது. ஹார்வர்டுக்குத் திரும்பிச் சென்று படிப்பைத் தொடரலாமா...இல்லை ஃபேஸ்புக்கை நம்பி படிப்பை விட்டு விடலாமா? - குழப்பத்தில் தவித்தபோது, ஹார்வர்டின் பழைய மாணவரான பில்கேட்ஸ் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு, மார்க்கின் நினைவுக்கு வந்தது. ‘உங்கள் மனதில் ஏதாவது புது புராஜெக்ட் இருந்தால், அதில் முழுக் கவனம் செலுத்துங்கள். தேவைப்பட்டால், படிப்பைப் பிறகுகூட தொடரலாம். ஹார்வர்டில் அந்த வசதி உண்டு. ஒருவேளை வருங்காலத்தில் மைக்ரோசாஃப்ட் படுத்துவிட்டால், நான்கூட ஹார்வர்டுக்கு வந்து படிப்பைத் தொடர்வேன்’ என்றார் பில்கேட்ஸ். மார்க்கும் அதே முடிவெடுத்தார். தேவைப்படும் வரை ஃபேஸ்புக் குக்காக உழைப்பது, அதற்குப் பின் ஹார்வர்டுக்குத் திரும்பி வந்து படிப்பைத் தொடர்வது.

மார்க்கின் உடல், உயிர், நாடி, நரம்பு, ரத்தம், சதை, சிந்தனை, செயல் அனைத்திலும் ஃபேஸ்புக் நீக்கமற நிறைய... அதில் புதிய புதிய வசதிகள் பிறந்தன. அமெரிக்க இளைஞர் கூட்டம் ஃபேஸ்புக் போதையில் மணிக்கணக்கில் திளைத்தது. 2004-ம் ஆண்டு அக்டோபரில் அரை மில்லியன் உறுப்பினர்கள். அடுத்த ஆறே மாதங்களில் ஐந்து மில்லியன். எல்லோருக்கும் எல்லா விளம்பரங்களும் தோன்றி எரிச்சல்படுத்தாமல், ஏரியா வாரியாக குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் சென்று சேரும் லோக்கல் விளம்பரங்களை வெளியிட வழிவகுத்தார் மார்க். அது வருமான வாய்ப்புகளைக் கொட்டியது. thefacebook.com என்பது facebook.com ஆகப் பெயரில் சுருங்கி, புகழில் பரந்து விரிந்தது.

பெரிய நிறுவனங்கள், ஃபேஸ்புக்குக்கு 500 மில்லியன், 600 மில்லியன் என்ற விலையுடனும் வலையுடனும் சுற்றிச் சுற்றி வந்தன. `மாற்றானுக்கு இடம் கொடேல்'!  மார்க் அசைந்துகொடுக்கவில்லை. ‘சம்பாதிப்பதோ, பணத்தைக் குவிப்பதோ, எல்லோராலும் இயலும் காரியமே. ஆனால், ஃபேஸ்புக் போன்றொரு ஹிட் சமூக வலைதளத்தை எல்லோராலும் உருவாக்க இயலாது. இதை நான் விற்க மாட்டேன்’ எனத் தீர்க்கமான முடிவுடன் இருந்தார் மார்க். ஃபேஸ்புக்கின் நிர்வாக அதிகாரம் தன் கையில் இருந்தால்தான் தான் நினைத்ததை முழுமையாகச் சாதிக்க முடியும் என்ற சிந்தனைத் தெளிவு மார்க்கிடம் இருந்தது. மார்க்கின் வலதுகை யாகச் செயல்பட்ட பார்க்கர், வெளி முதலீடுகளைக் கொண்டுவந்து கொட்டினார். அதே சமயம் மார்க்கின் அதிகாரத்துக்கு இடையூறு வராத வகையில் கவனித்துக்கொண்டார்.

2006-ம் ஆண்டு செப்டம்பரில், மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் பொதுமக்களுக்கான சேவையையும் ஆரம்பித்தது ஃபேஸ்புக். 2007-ம் ஆண்டு, நிறுவனங்களுக்கான பிசினஸ் பக்கங்கள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்து ஃபேஸ்புக் வால், நியூஸ் பீட், போட்டோ ஷேரிங், கேம்ஸ், குரூப்ஸ் எனப் புதிய வசதிகள் பளபளக்க, சமூகம் அள்ளி அணைத்து ‘லைக்’கிட்டு, அபாரம் என ‘கமென்ட்’ போட்டு, ‘ஃபேஸ்புக்குக்கு நீங்க வாங்க’ என தங்கள் கருத்துகளை எங்கெங்கும் ‘ஷேர்’ செய்ய ஆரம்பித்தது. ‘ஃபேஸ்புக்கை ஆரம்பிக்கும்போது அதற்குப் பின் இத்தனை  பெரிய வியாபார வாய்ப்பு இருப்பதாக நான் சத்தியமாக நினைக்கவில்லை’ என பிறகு சொன்னார் மார்க். 


இருந்தாலும் உறுப்பினர்களின் அந்தரங்கத் தகவல்கள் மற்றவர்களுக்குக் கசிந்துவிடுமோ என்ற சந்தேகம் வலுப்பெற்றது. மார்க் தெளிவாகப் பதிலளித்தார், ‘கசியாது... கசியவும்விட மாட்டோம்.’ அதற்கு ஏற்ப புதிய, பயனுள்ள பிரைவசி செட்டிங்களையும் கொண்டுவந்து நம்பிக்கையைப் பலப்படுத்தினார். கண்டம்விட்டுக் கண்டம், நாடுவிட்டு நாடு ஃபேஸ்புக்கின் கிளை பரவியது. 2009-ம் ஆண்டு மொபைல் போனில் ஃபேஸ்புக்கை உபயோகிப்போர் சதவிகிதம் உயர ஆரம்பித்தது. 2011-ம் ஆண்டு கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பயனாளர்களைக்கொண்ட தளமாக புன்னகை சூடியது ஃபேஸ்புக். 2008-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலுக்கு, பின் 2011-ம் ஆண்டு எகிப்தியப் புரட்சிக்கு ஃபேஸ்புக் தான் கொ.ப.செ! மாபெரும் சமூக மாற்றங்கள் இப்போது ஃபேஸ்புக்கில் இருந்தும் தொடங்குகின்றன. நம் சமூகத்திலும் திராவிடத் தலைவர் தொடங்கி தெருவோர வியாபாரி வரை அனைவருக்கும் முகநூல் தனி முகவரி.

ஃபேஸ்புக்கில் போலியான பெயர்களில் திரியும் விஷமிகள், ஃபேஸ்புக்கின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, மோசடிகளை அரங்கேற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள், அவை குறித்த வழக்குகள், பயனாளிகளின் தகவல்கள் திருட்டுப்போவது, அதற்காக ஃபேஸ்புக் வழக்குகளைச் சந்தித்து நஷ்டம் வழங்குவது, ஃபேஸ்புக் மூலம் அரசாங்கத் துக்குத் தகவல் கொடுக்கப்படுவது, இப்படி முகநூலின் குறும்புப் பக்கங்களுக்கும் குறைவு இல்லை. அதனால் மார்க் சந்திக்கும் தலைவலிகளும் ஏராளம். இதையெல்லாம் அமைதியாகச் சமாளித்துவிட்டு, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மார்க் அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொள்ளும் வாசகம், ‘மிகப் பெரிய ரிஸ்க் எதுவென்றால், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பதே!’

2014, டிசம்பர் கணக்குப்படி 1,390 மில்லியன் பயனாளர்களுடன் அசுர பலத்துடன் வலம்வருகிறது ஃபேஸ்புக். உலகின் இளம் பில்லினியர்களில் ஒருவரான மார்க்கின், 2015-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரச் சொத்து மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைவிட அதிகம். இன்றைய தேதியில் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வெற்றியாளர். அதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தன் சாதனை குறித்து மார்க் சொல்லும் வார்த்தைகள் மிக எளிமையானவை.

‘பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தொடர்பில் இருக்க உதவுவது என்பது ஆச்சர்யமான விஷயம். அதைச் சாத்தியப்படுத்தியதை என் வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்!’

vikatan

  • தொடங்கியவர்

சென்னையில் ஒரு பனிக்காலம்!

 

மீபத்தில் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலாவி சென்னை மக்களை ஜில்லிட வைத்தது. ஆரம்பத்தில் அது டுபாக்கூர் நியூஸ் என்றுதான் பலர் நினைத்தனர். காரணம் செய்தி அப்படிப்பட்டது. 200 வருடங்களுக்கு முன் அதாவது சரியாக 1815-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி சென்னையின் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ்ஸாகவும் அப்படியே நான்கு நாட்கள் வரை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மைனஸ் மூன்று டிகிரி செல்சியஸ்ஸாகக் குறைந்து சென்னையே பனிக்காடாக உறைந்து போய்க் கிடந்தது என்ற செய்திதான் அது!

p22.jpg

ஆச்சரியமாக இருக்கிறதா? கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தகவல் போல் இருந்தாலும்  அது உண்மைதான். இந்தோனேஷியா தீவில் இருக்கும் தம்போரா மலையில் ஏற்பட்ட எரிமலைச் சீற்றத்தால் நிலப்பரப்பு 4300 மீட்டர் அளவுக்கு உயர்ந்ததாம். லாவா எனப்படும் நெருப்புக் குழம்பானது அதிக அளவில் 1815-ம் ஆண்டு ஏப்ரல் 10 மற்றும் 11-ம் தேதி வெளியேறியது. கிட்டத்தட்ட 12,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். 2,000 கிலோமீட்டருக்கு அப்பாலும் சீற்றம் உணரப்பட்டதாம். அதனால் ஏற்பட்ட தூசுத்துகள்களை ‘தம்போரா துகள்’ என அறிஞர்கள் அழைக்கிறார்கள். அது வடக்கு நோக்கி நகர்ந்து காலநிலையையும் தட்ப வெப்பத்தையும் மாற்றிவிட்டது. வியாபாரக்காற்று எனப்படும் கிழக்கிலிருந்து உருவான ஈரப்பதமானது இந்தியப் பெருங்கடலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிலமணி நேரங்களில் அதன் தாக்கம் வங்காள விரிகுடா வரை பரவியது. ‘ஏரோசால்’ எனப்படும் சாரல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் உருவாகி சென்னையைத் தாக்கியது. காற்றிலிருக்கும் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை வாய்ந்த அந்த ஏரோசால்களால்தான் சென்னை, வரலாறு காணாத குளிரில் மூழ்கியது. மைனஸ் குளிரில் எல்லாமே உறைந்தும் போனது. ஆரம்பத்தில் அந்தத் தட்பவெப்ப நிலையால் குஷியான மக்கள் அடுத்த சில நாட்களில் கதறி அழ ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம். ஒரு வருடத்திற்கு மழைப்பொழிவு இல்லாமல் போனதும் பயிர்கள் விளையவில்லை என்பதும் அதன் தாக்கமாம். இதனால் பஞ்சம் தலைவிரித்தாடியது. காலரா பரவியது. 70,000 பேர் பாதிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

ஆகஸ்ட் 1815-ல் ஜாவா தீவில் இருந்து கப்பலில் வந்து ஆய்வு செய்து திரும்பியதாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ‘தி மெட்ராஸ் கொரியர்’ என்ற பத்திரிகை செய்திக்குறிப்பில் இருக்கிறதாம்.

‘200 வருஷத்துக்கு முன்னாடி இப்படினா அடுத்த 200 வருஷத்துக்கு அப்புறம் சென்னை இருக்குமா?’ என்ற கேள்வியை இணையவாசிகள்  உருவாக்கி பீதியைக் கிளப்புகிறார்கள்.

எது எப்படியோ சென்னையில் ஒரு கடும் பனிக்காலம் நிகழ்ந்ததை இந்தக் கொடும் வெயில்காலத்தில் நினைக்கும்போது ஜில்லென்று இருக்கிறது!

vikatan

  • தொடங்கியவர்

டோனி பாவம்!

p64a.jpg

ஐ.சி.சியின் அத்தனை கோப்பைகளையும் வென்று தந்த கேப்டன், உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர், தி ஃபினிஷர், கேப்டன் கூல் என பல பெயர்களால் கொண்டாடப்படும் டோனியாய் இருக்கிறது எவ்ளொ கஷ்டம் தெரியுமா? என்னது, தெரியலையா? தெரிஞ்சுக்கோங்க!

red-dot.jpg டோனி மீது பெரும்பாலும் தூக்கிப் போடப்படும் குண்டு ‘சீனியர் வீரர்களை ஒதுக்கி வெச்சது’ என்பதுதான். (ஒதுக்கி வைக்க, பதுக்கி வைக்க அவங்க என்ன ஃபாரீன் சரக்கா? ) இதனாலேயே, சேவாக், காம்பீர் போன்ற சீனியர் ப்ளேயர்களின் சினங்கொண்ட ரசிகசிங்கங்கள் மீம்ஸ், ஸ்டேட்டஸ் மூலம் மேட்சுக்கு மேட்ச் டோனியைத் தாக்கி டரியலாக்குவார்கள். ஒவ்வொரு மேட்ச் ஆடும்போதும் இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா?

red-dot.jpg ‘வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் மேட்ச்களில் டோனி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்வது கிடையாது. எனவே. அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என ஒவ்வொரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளின் போதும் திரி கொளுத்திப் போட்டு எப்படியோ நினைச்சதை சாதித்துவிட்டார்கள். அடுத்து ஒருநாள் போட்டிகளுக்கும் போட்டுக்கொடுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. இப்போ தெரியுது மனுஷன் குத்தவெச்சு உட்கார்ந்திருப்பது முள் நாற்காலியில் என்று.

red-dot.jpg முன்னர் நீளமாக, ஸ்ட்ரெய்ட்னிங் செய்த ஹேர்ஸ்டைலோடு இருந்த டோனி, பின்னர் கட்டிங்கைப் போட்டார். அப்போது ‘ மயிர் நீப்பினும் உயிர் வாழும் சிங்கம்’னு பூரிப்பு பூரி சுட்ட அதே பயபுள்ளைக தான் இப்போ அரமண்டை கட்டிங், மாவுத்தலை கட்டிங்னு கலாய்க்குறாய்ங்க. முடியில் கூடவா? முடியலை..

red-dot.jpg ‘டோனி பெஸ்ட் ஃபினிஷரா?’ என கேட்டால் பூம்பூம் மாடு கூட ‘ஆமாம்’னு தலையை ஆட்டும். அப்படிப்பட்ட ‘ஃபினிஷிங்’ சிங்கத்தைக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக உமேஷ் யாதவ் கூடவும், ஹர்பஜன் கூடவும் ஒப்பிட்டுப் பேசுவது ரொம்ப பாவம் மை சன். அந்த மனுஷன் மனசு எப்படி கிடந்து துடிக்கும்!

red-dot.jpg டீமில் ஒருவரை எடுக்கவில்லை என்றாலும் ‘பாலிடிக்ஸ்’, டீமில் ஒருவரை எடுத்தாலும் ‘பாலிடிக்ஸ்’, தண்ணீர் பாட்டில் தூக்காவிட்டால் ‘பாலிடிக்ஸ்’, ஓவர் கொடுக்கலைனா ‘பாலிடிக்ஸ்’, பேட்டிங் கொடுக்கலைனா ‘பாலிடிக்ஸ்’, தூரத்தில் ஃபீல்டிங் நிப்பாட்டினால் ‘ பாலிடிக்ஸ்’ என எதற்கெடுத்தாலும் பாலிடிக்ஸ் என கூறி டோனியை நடமாடும் பாலிடிக்ஸ் பால்டாயிலாகவே உருவகப்படுத்திவிட்டார்கள்.

red-dot.jpg இப்படி அடிமட்டும் வரை இறங்கி அடிக்கும் டோனி ஹேட்டர்ஸ்களை விட அவரது ரசிகர்கள் தான் உண்மையிலேயே ஸ்லீப்பர் செல்கள். அடிக்கடி ‘ டோனியிடம் பத்து மரக்கட்டைகளைக் கொடுத்துப் பாருங்கள், அவைகளை வைத்தே போட்டியில் ஜெயித்துக் காட்டுவார்’ என்பது போல் கரியை அள்ளிப் போடுவார்கள்.

என்னத்த சொல்றது!

  • தொடங்கியவர்

செத்துச் செத்து விளையாடறாங்க!

 

p74a.jpg

மிருகக்காட்சி சாலையில் முதலை வாய்க்குள் எதையெல்லாம் விடுவாங்க? சிக்கனை விடுவாங்க, மட்டனை விடுவாங்க, ஆனால் தாய்லாந்தில் இருக்கும் சம்ப்ரான் என்ற மிருகக்காட்சி சாலையில் மனிதத் தலையை விடுறாங்க!   

p74b.jpg

அக்ரபால் வன்னாவாட், சாம்ரிட் மைபோரன் இந்த இரண்டு பேரின் தலைதான் இப்படி முதலை வாய்க்குள் டிராவல் பண்ணிட்டு வருது. தலையை மட்டுமல்ல, முதலையின் தொண்டைக்குள் கையை விடுவது, முதுகில் ஏறி சவாரி செய்வதுனு இன்னும் நிறையப் பண்றாங்க. இப்படி வாரத்துக்கு 24 முதலை ஷோக்கள் இங்கே நடக்கின்றன. இங்கே இருப்பவை நன்னீர் முதலைகள். எல்லாமே பதினைந்து வயதுக்கு மேலே உள்ளவை. முக்கியமான ஒரு விஷயம், ஷோ நடக்கும்போது ஒரு சின்னத் தப்புக்கூட நடக்கக் கூடாது.  அப்படி ஏதாவது நடந்தா, கழுத்துல தலை இருக்காது. இது நல்லாத் தெரிஞ்சும் இவங்க துணிச்சலா இந்த வேலை செய்றாங்க.    

p74c.jpg

முதலையின் முதன்மைப் பயிற்சியாளர் அக்ரபால் ஏழு வருடங்களாக இந்த வேலையில் இருக்கிறார். தினமும் காலையில் இவர் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது இவருடைய மனைவி கடவுளே காப்பாத்துப்பானு வேண்டியபடிதான் வேலைக்கு அனுப்புவாராம். அதுபோக இவருடைய அப்பாவும் அம்மாவும் எப்போதும் ஒருவித பீதியிலேயே இருப்பாங்களாம். அவங்க பயந்த மாதிரியே ஒருநாள் ஒரு முதலை இவரைக் கடிச்சு வெச்சிடுச்சு. எல்லோரும் பதறிட்டாங்க. பல தையல்கள் போட்டு ஹாஸ்பிட்டலில் ரெஸ்ட் எடுத்தவர், திரும்பப் பழைய பன்னீர் செல்வமா வந்திருக்கிறார். இப்போ இன்னும் ஆக்டிவா இருக்கிறாராம்.

p74d.jpg

அக்ரபாலுக்கு இந்த சாகசத்தில் கம்பெனி கொடுப்பவர் சாம்ரிட். முதலில் இவர் வாள்வீச்சு வீரராகத்தான் இங்கே வேலைக்குச் சேர்ந்தாராம். அந்த நேரத்தில் முதலை ஷோவுக்கு ஆள் தேவைப்பட இவராகவே விருப்பப்பட்டு இதில் குதித்திருக்கிறார். சாம்ரிட்டின் ஸ்பெஷல், முதலையின் தொண்டைக்குள் கையை விடுவது. அத்துடன் பத்தே நாட்களில் முதலையோடு பழகுவது எப்படி என்று பார்வையாளர்களுக்குச் சொல்லியும் தருகிறார். இவர் சொல்வதெல்லாம் ஒன்றுதான். ‘எந்த ஒரு சூழ்நிலையிலும் பயப்பட மட்டும் கூடாது’ என்கிறார் இந்த பாங்காக் வீரர்.

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 15
 

article_1431661818-israel300.jpg1610: பிரான்ஸில் 4 ஆம் லூயி மன்னன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து 13ஆம் லூயி ஆட்சிக்கு வந்தார்.

1643: பிரான்ஸில் 4 வயதான 16 ஆம் லூயி மன்னராக முடிசூடப்பட்டார்.

1948: இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1796: எட்வட் ஜென்னரால் சின்னம்மை நோய்கக்hன தடுப்பூசி ஏற்றப்பட்டது.

1870:  நியூஸிலாந்தில் முதலாவது றக்பி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

1879: இந்தியாவிலிருந்து பிஜிக்கு அழைத்து செல்லப்பட்ட 463 தொழிலாளர்களின் முதல் தொகுதியினர் பிஜியை சென்றடைந்திருந்தனர்.

1940: ஜேர்மனியிடம் நெதர்லாந்து சரணடைந்தது.

1948: இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது. இப்பிரகடனத்தையடுத்து இஸ்ரேல் மீது அரபுநாடுகள் தாக்குதலை ஆரம்பித்தன.

1955: 8 கம்யூனிஸ நாடுகள் இணைந்து வார்ஷோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

1963: ஐ.நாவில் குவைத் இணைந்தது.

1973: அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையமான ஸ்கைலாப் ஏவப்பட்டது.

2005: திருகோணமலை நகர மத்தியில் புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் கலவரம் வெடித்தது.

2006: வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இந்த பீட்ஸாவின் பெட்டியையும் சுவைத்து உண்ணலாம்
 

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நக­ரி­லுள்ள பீட்ஸா நிலை­ய­மொன்று பீட்ஸா வைக்­கப்­பட்­டுள்ள பெட்­டி­யையும் உண்­ணப்­ப­டக்­கூ­டி­ய­தாக தயா­ரிக்­கி­றது. 

 

1663958.jpg

 

உணவு கொண்­டுள்ள கோப்­பை­யையும் சேர்த்து உண்­ணப்­ப­டக்­கூ­டி­ய­தாக தயா­ரிக்­கப்­பட்ட உணவே பீட்ஸா என்­பார்கள். 

 

ஆனால், நியூயோர்க் புரூக்ளின் பகு­தி­யி­லுள்ள “வின்னீஸ் பீட்­ஸே­ரியா” எனும் பீட்ஸா தயா­ரிப்பு நிறு­வ­ன­மா­னது பீட்ஸா பெட்­டி­யையும் 100 சத­வீதம் உண்­ணப்­ப­டக்­கூ­டி­ய­தாக தயா­ரித்­துள்­ளது.

 

பீட்­ஸாவை பொதி செய்­வதால் ஏற்­படும் வீண் விர­யத்தை தவிர்க்கும் நோக்­குடன் இந்­ நி­று­வ­னத்தின் உரி­மை­யாளர் சீன் பேர்­தியம் இத்­ திட்­டத்தை ஆரம்­பித்­தாராம்.

 

1663959.jpg

 

இந்தப் பெட்­டியை நீங்கள் எறிந்துவிட வேண்டியதில்லை. அதையும் உண்ணலாம் என்கிறார் சீன்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13217488_1043699342345426_57631175401814

ஹிந்தி திரையுலகின் புகழ் பெற்ற நடிகை madhuri dixit
இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்

  • தொடங்கியவர்
ஹை ஹீல்ஸ் அன்ட் சூட்ஸ் ரன்”
 

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற “ஹை ஹீல்ஸ் அன்ட் சூட்ஸ் ரன்” எனும் விநோத ஓட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிய ஆண்கள், பெண்கள் சிலரை படங்களில் காணலாம்.

 

1663855.jpg

 

இப்போட்டியில் பங்குபற்றிய ஆண்கள் கோட் சூட் அணிந்து பங்குபற்றியதுடன் பெண்கள் குதி உயர்ந்த (ஹை ஹீல்ஸ்) பாதணிகளை அணிந்திருந்தனர். 

 

1663857.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மே 15: சர்வதேச குடும்ப தினம் இன்று கொண்டாடப்படுகிறது..

ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், எவருக்காகவும், குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

13226771_1136202966438492_83831219549688

13173061_1043751752340185_10663375698401

  • தொடங்கியவர்

ரொம்ப ரசிக்கிறாங்க!

 

p60a.jpg

சினிமாப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறது சகஜம். அப்படி இல்லாத சிலருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்காங்க. இவங்கதான் அவங்க.

மழை ரமணன்: இவருடைய ரசிகர்கள் கொஞ்சமா நஞ்சமா? இவருக்கு மட்டும் எப்புடி இம்புட்டு ஆடியன்ஸ் சேர்ந்தாங்கனு யோசிச்சா இப்போகூட ஆச்சரியமா இருக்கு. அவர் ஓய்வு அறிவிச்சதும் போகாதீங்க போகாதீங்கனு ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் வரைக்கும் கதறி அழுததுதான் ரமணன் சாரோட வெற்றி. இவருடைய மிகப்பெரிய பலமே இவரால் பலன் அடைந்த முன்னாள் மாணவர்கள்தான். சென்னை வெள்ளம் வந்தப்போ அவர் வழக்கம்போல லீவ் விட அதைப் பாராட்டி ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்துச்சு. அது இப்பவும் என் காதுல கேட்குது, ‘புயலின் பூபதியே, அடை மழையின் ஆண்டவனே, அண்ணா யுனிவர்சிட்டியை அதிரவைத்தவனே’னு அட்டகாசமா பேசியிருப்பார் ஒரு தீவிர ரமணன் ரசிகர். இவரைப் பற்றி வரும் மீம்ஸ்களுக்கும் பஞ்சம் இல்லை. ஓய்வுக்குப் பிறகு என்ன பண்ணப்போறீங்க ரமணன் சார்?

p60c.jpg

சாஷா சேத்ரி: பையன் மாதிரி முடி வெட்டியிருக்கும் க்யூட்டான பொண்ணு, ஒரே ஒரு விளம்பத்துல நடிச்சுது. அதுக்கே இந்தியா முழுக்க ஃபேமஸாகி ஃபேன்ஸ் குவிஞ்சிட்டாங்க. அந்த ஏர்டெல் விளம்பரத்தில் நொடிக்கு நொடி சாஷா முகத்தைக் காட்ட எல்லாருக்கும் அவங்க முகம் பச்சக்குனு ரெஜிஸ்டராகிடுச்சு. இன்னொரு விஷயம் இப்போ சாஷாவின் புகழ் ரிவர்ஸ் கியரில் போய்க்கிட்டு இருக்கு. அது என்னன்னா இந்தியாவிலேயே வெறுப்பான முகம் யாருடையதுனு நடந்த ஒரு சர்வேயில் எல்லாரும் சாஷா பெயரைச்  சொல்லியிருக்காங்க. ஆமா பொழுதேன்னிக்கும் முகத்தைக் காட்டினா கடுப்பாகத்தானே செய்யும்!

p60b.jpg

ஸ்ரீனிவாசன்: முன்னாள் பி.சி.சி.ஐ, ஐ.சி.சி தலைவர். சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனர்னு ஏகப்பட்ட பொறுப்புகளை வகித்தவர். தோனிக்கு அடுத்தபடியா னிவாசனுக்குத்தான் ஆடியன்ஸ் அதிகம். நெட்டிசன்ஸ் அவரை செல்லமா சீனினுதான் கூப்பிடுறாங்க. அவருடைய வீட்டுக்கு தோனி வந்து போவதைக்கூட என்னமோ சி.பி.ஐ இன்வெஸ்டிகேஷன் மாதிரி ரகசியமா போட்டோ எடுத்து டிரெண்ட் பண்ணி விடுறாங்க, இந்த ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லைனு தெரிஞ்சதும் இவருடைய ஆடியன்ஸ் பொங்கிட்டாங்க. கிரிக்கெட்டில் என்ன நடந்தாலும் சம்பந்தமே இல்லாம னிவாசனையும் கோர்த்துவிட்டு மீம் போடுற பழக்கம் ரொம்ப நாளா இவங்ககிட்ட இருக்கு. அவர் மேல அம்புட்டு பாசமா இருக்காய்ங்க. எப்போதும் இவரை டிரெண்டிங்கிலேயே வெச்சுருக்காய்ங்க.

 

vikatan

  • தொடங்கியவர்

  13131272_1043696705679023_33087115937546

 
பிரிட்டனின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே
இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்

28 வயதான ஆண்டி முர்ரே, சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான இவர், யுஎஸ் ஓபன் மற்றும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார்.
  • தொடங்கியவர்


ஒரே குடும்பத்தில் 76 ஓட்டுக்கள்.... பெருமாள் சாமியின் பிரமாண்ட குடும்பத்தை முற்றுகையிடும் அரசியல் கட்சிகள்!- சுவாரஷ்ய பதிவு... (Video)

  • தொடங்கியவர்

சொதப்பல் பிரீமியர் லீக்!

 

 

p32a.jpg

கொண்டாட்டம், கோலாகலம், கவர்ச்சி, குத்தாட்டம்... என கிரிக்கெட் கொஞ்சமாகவும் மற்றவை அதிகமாகவும் இருப்பதுதான் ஐ.பி.எல் வழக்கம். ஆனால், இந்த ஆண்டு யார் கண்பட்டதோ ஓவர் சோகம், தடுமாறும் சறுக்கல்கள், வெறுப்பு காட்டும் ரசிகர்கள் என வழக்கத்துக்கு மாறாக ஐ.பி.எல் செம டல்லடிக்கிறது.

சரிந்த  டி.ஆர்.பி

மேட்ச் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டச் சர்ச்சைகளால், சென்ற ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே-தான் நட்சத்திர அணி. கோடிக்கணக்கான ரசிகர்களைக்கொண்ட அணி. அது இல்லையென்றதும் இந்த முறை ஐ.பி.எல்-லில் ஆர்வம் காட்டவில்லை ரசிகர்கள். அது டி.ஆர்.பி-யில் அப்படியே எதிரொலித்தது.

உலகக்கோப்பை டி20 போட்டி முடிந்து ஒரு வாரம்கூட ஆகாமல் உடனே ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதுதான் ஓவர் டோஸ் ஆகிப்போனது. ஐந்து மாநிலத் தேர்தலில் மக்கள் மும்முரமாக இருப்பதும் ஐ.பி.எல்., தன்  பொலிவை இழக்க ஒரு காரணம். தொலைக்காட்சி பார்வையாளர்களை ஆய்வுசெய்யும் பார்க் இந்தியா அமைப்பு, `ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பித்த முதல் வாரத்தில், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்டது ஐ.பி.எல் போட்டிகள்தான் என்றாலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது ரேட்டிங்கில் மிகப் பெரிய சரிவு' என்கிறது.
 
தண்ணீர் சர்ச்சை

மஹாராஷ்டிரா மாநிலம், கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மும்பை, புனே என இரண்டு அணிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த கிரிக்கெட் மைதானங்களில், கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்காக சுமார் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுவதால் பலர் கொதித்து எழுந்தனர். இதையடுத்து ஐ.பி.எல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட, மே 1-ம் தேதிக்கு மேல்   மஹாராஷ்டிரா மாநிலத்துக்குள் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவதற்குத் தடைவிதித்தது மும்பை உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை உறுதிசெய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால் வேறு வழி இல்லாமல் ஹைதராபாத்துக்குப் போட்டிகளை மாற்றினார்கள்.  இதுவும் ஐ.பி.எல் டல்லடிக்க ஒரு முக்கியமான காரணம். 

p32b.jpg

ஃபேன்டசி கிரிக்கெட்

கடந்த ஐ.பி.எல் தொடர்களில்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது, ஃபேன்டசி கிரிக்கெட் விளையாட்டுதான். ஐ.பி.எல்-லின் பிரத்யேக வலைதளத்தில்  ரசிகர்களே  ஒரு கனவு அணியை உருவாக்கி விளையாடும் ஜாலி விளையாட்டு இது. லட்சக் கணக்கானவர்கள்  பங்கேற்கும் இந்த ஆட்டத்தில் அதிகமான புள்ளிகள் எடுப்பவர் களுக்கு ஐ.பி.எல் நிர்வாகமே பரிசு தரும். இந்த ஆண்டு ஐ.பி.எல் ஆரம்பிப்பதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக வலைதளம் முக்கி முனகி, திக்கித் திணற ஆரம்பித்து, ஒருகட்டத்தில் முழுவதுமாக முடங்கிவிட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் வலைதளம் இயங்கினாலும், கடந்த வருடங்களைப்போல சிறப்பாக இல்லை. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கடுப்பாகி விலக ஆரம்பித்துள்ளனர்.

கடுப்பேற்றிய கமென்ட்ரி

இந்த ஐ.பி.எல்-லில் அதிகம் நகைச்சுவையாக மாறிப்போனது  தமிழ் கமென்ட்ரிதான். `சும்மா வாரிவிட்டார்னு சொல்லலாம்', `நல்லா பெருக்கிவிட்டார்', `செல்லமாத் தட்டினார்', `மம்பட்டிய  எடுத்துச் செதுக்கிட்டார்' என தமிழ் கமென்ட்ரி வசனங்கள் கிரிக்கெட் ரசிகர்களை எரிச்சலின் உச்சத்துக்கே தள்ளின. சமீபத்திய கலாய் மெட்டீரியல் மீம்ஸ் எல்லாமே இந்தத் தமிழ் வர்ணனையாளர்களின் தகரடப்பா தமிழ் தான். `ஆங்கில கமென்ட்ரி உள்ள சேனலுக்கு, காசுகூட அதிகமா கொடுக்கிறோம். தயவுசெய்து இவங்க வாயை மூடுங்க ப்ளீஸ்' என ஆன்லைனில் கொதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஸ்கோர் கார்டு

போட்டிகளை டி.வி-யில் பார்ப்பது இந்த முறை மிகவும் மோசமான அனுபவமாக இருக்கிறது என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்து. காரணம், டி.வி-யில் நன்றாகத் தெரியும் அளவுக்கு இல்லாமல், சிறிய எழுத்துக்களில் ஸ்கோர் போர்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. பூதக்கண்ணாடி வைத்து ஸ்கோர் பார்க்கவேண்டிய நிலை. டி.வி-யில் மேட்ச் பார்த்தாலும், மேட்ச் விவரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள ஆன்லைனை நாடவேண்டிய கட்டாயம்.

p32c.jpg

காயம்... காயம்... காயம்!

ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக வீரர்கள் காயம் அடைந்தது இந்த ஐ.பி.எல்-லில்தான்.  அயல்நாட்டு வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறிகொண்டே இருக்கிறார்கள். இதை எழுதும்போதுகூட ஸ்டீவன் ஸ்மித் பெட்டியோடு விமானம் ஏறிவிட்டார். இதனால் போட்டிகளின் சுவாரஸ்யம் தாறுமாறாகக் குறைந்திருக்கிறது.  கெவின் பீட்டர்சன், ஃபாப் டூ பிளைசிஸ், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், சாமுவேல் பத்ரி என முக்கியமான வீரர்கள் பலரும் இல்லை. உள்ளூர் ஆட்டக்காரர் யுவராஜ் சிங்  பாதி போட்டிகளில் விளையாடவில்லை.

தல-தளபதிக்கு என்ன ஆச்சு?

ஐ.பி.எல் வரலாற்றில் தனது அணியை எட்டு முறை அரை இறுதிக்கு அழைத்துவந்தவர் தோனி. ஆனால், இந்த சீஸனில் தோனி தலைமை ஏற்றுள்ள புனே அணி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துவருகிறது. விராட் கோஹ்லி தலைமையேற்றுள்ள பெங்களூரு அணியோ டிவில்லியர்ஸ், கெயில், வாட்சன் என நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது. தோனி - கோஹ்லி என தல, தளபதிகள் இருவர் தலைமையேற்ற அணிகளும் சொதப்பிவருவதும் பின்னடைவை உண்டாக்கியிருக்கிறது.   

`முதல் பாதிதான் இப்படி இருக்கு, இரண்டாவது பாதியில் இது மாறும், விறுவிறுப்பு கூடும்' என்கிறது ஐ.பி.எல் தரப்பு. ஆனால், அது சந்தேகம்தான்!

vikatan

  • தொடங்கியவர்

பிரேமம் 'மலரே' பாடலின் டாப் 7 ரொமான்ட்டிக் மொமென்ட்ஸ் - GIFs!

லையாள சினிமாவின் லேட்டஸ்ட் ஹிட் 'பிரேமம்'. இப்படத்தில் வரும் 'மலரே' பாடலுக்கு இளசுகள் மத்தியில் அவ்வளவு கிரேஸ்!. ராஜு முருகேசனின் இசையில், விஜய் யேசுதாஸின் குரலில் 'மலரே' பாடல்தான் இன்றைய காதல் கீதம்! ஆனெந்த் சி சந்திரனின் சினிமாட்டோகிராஃபியில் பாடலின் வீடியோவும் அவ்வளவு 'அழகே'!. காதல் தருணங்கள் நிறைந்த இந்தப் பாடலின் வீடியோவும் வாட்ஸ்-அப்பில்கூட ஹிட்! சாய் பல்லவி - நிவின் பாலி கெமிஸ்ட்ரியும் 'ஃபிஸிக்ஸ்' இல்லாமலேயே பத்திக்கொள்கிறது!
 

இடது புருவம் மட்டும் உயரும் இடம் அழகு! 

Premam-Malare-Nivin-Pauly-Gif

 

அது என்னமோ தெரியல.. 2 கையையும் ஸ்லோமோஷனில் விரிக்கும்போது அவ்வளவு ஃபீலிங்ஸ்! 

Premam-Malare-Nivin-Pauly-Gif 

 

நாணம் அழகு!

Premam-Malare-Nivin-Pauly-Gif%20%287%29.

 

சான்ஸே இல்ல!

Premam-Malare-Nivin-Pauly-Gif

 

பார்வையில் பல அர்த்தங்கள்!

Premam-Malare-Nivin-Pauly-Gif

 

பல்லவியின் ரியாக்‌ஷன்..வாவ்!

Premam-Malare-Nivin-Pauly-Gif

 

அந்த லுக்!

Premam-Malare-Nivin-Pauly-Gif

 

ஆஹான்.. இந்த GIFலாம் எப்படி இருக்கு?!

Nazriya-Nazim-Nenjodu-gif

 

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

மே 16

 

725oscars.jpg1812 : ரஷ்­யா­வுக்கும் துருக்­கிக்கும் இடை­யி­லான 6 வரு­ட­கால யுத்தம் முடி­வுற்­றது.

 

1868 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி அன்ட்றூ ஜக்ஸன் குற்­ற­வியல் பிரே­ரணை விசா­ர­ணையில் ஒரு மேல­திக வாக்­கினால் நிர­ப­ரா­தி­யாக காணப்­பட்டார்.

 

1891 : ஜேர்­ம­னியின் பிராங்பேர்ட் நகரில் நடை­பெற்ற கண்­காட்­சி­யொன்­றின்­போது முதல் தட­வை­யாக நீண்ட தூரத்­துக்கு உயர் அழுத்த மின்­சாரம் வியோ­கித்துக் காட்­டப்­பட்­டது.

 

1811 : அல்­பி­யூரா யுத்­தத்தில் ஸ்பெய்ன், போர்த்­துக்கல், பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து பிரான்ஸை தோற்­க­டித்­தன.

 

1929 : ஹொலிவூட்டில், அக்­க­டமி ஒவ் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ் எனும் அமைப்­பினால் முத­லா­வது சினிமா விருது விழங்கல் விழா நடத்­தப்­பட்­டது. இது பின்னர் ஒஸ்கார் விருது என அழைக்­கப்­பட்­டது. 

 

1951 : அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்துக்­கூ­டான முத­லா­வது வழக்­க­மான விமான சேவை நியூயோர்க், லண்டன் நக­ரங்­க­ளுக்­கி­டையில் “எல் அல் இஸ்ரேல் எயார்­லைன்­ஸினால்” ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1960 : ரூபி லேசர் எனும் லேசர் செயல்­முறை முதல் தட­வை­யாக செய்­து­காட்­டப்­பட்­டது.

 

1961 : தென் கொரி­யாவில் லெப்­டினன்ட் ஜெனரல் தோயங் சாங் தலை­மையில் இரா­ணுவப் புரட்சி ஏற்­பட்­டது. ஜனா­தி­பதி போசன் யுன் கைது செய்­யப்­பட்டார்.

 

1975 : எவரெஸ்ட் சிக­ரத்தின் உச்­சியை அடைந்த முதல் பெண் எனும் பெரு­மையை  ஜப்­பானைச் சேர்ந்த ஜூன்கோ தபேய் பெற்றார்.

 

1975 : சிக்கிம் ராஜ்­ஜி­யத்தில் நடை­பெற்ற அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்பை அடுத்து அதை தனது மாநி­லங்­களில் ஒன்­றாக இந்­தியா இணைத்­துக்­கொ­ண்­டது.

 

1983 : சூடா­னிய அர­சாங்­கத்­துக்கு எதி­ராக சூடான் மக்கள் விடு­தலை இரா­ணுவம் எனும் அமைப்பின் கிளர்ச்­சி­யா­ளர்கள் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தனர்.

 

1991 : அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தில் பிரித்­தா­னிய அரசி 2 ஆம் எலி­ஸபெத் உரை­யாற்­றினார். பிரித்­தா­னிய மன்னர் அல்­லது அரசி அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யமை அதுவே முதல் தடவை.

 

2003 : மொரோக்­கோவில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களில் 33 பேர் பலி­யா­கினர். 

 

2005 : குவைத் நாடா­ளு­மன்றத் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு அந்­நாட்டு பெண்­க­ளுக்கு முதல் தடவையாக அனுமதி வழங்கப்பட்டது.

 

2007 : பிரெஞ்சு ஜனாதிபதியாக நிக்கலஸ் சார்கோஸி பதவியேற்றார்.

 

2011 : எண்டேவர் விண்வெளி ஓடம் தனது கடைசி விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வாழ்வியல் தரிசனம்

article_1463371808-holhop.jpgநாட்டுப்பற்றை விட, உலகப் பற்று மேலானது. ஏனெனில் இந்த நாடுகள் எல்லாமே முழு உலகில் அடக்கம்.

நாங்கள், எமது நாட்டுக்காகச் செய்யும் பணி, முழு உலகையும் சேர்ந்துவிடும்.

ஒவ்வொரு தனி மனிதனின் உழைப்பு ஏதோ ஒரு வகையில் சமூகத்துக்கோ அல்லது அவனுக்கோ சேர்வதில்லை. மறைமுகமாக அவன் வாழும் தேசத்துக்குக் கிடைத்துவிடுகின்றது.

ஒவ்வொரு தேசங்களும் தனித்து இயங்க முடியாது. தேசங்கள் எல்லாவற்றின் வளங்களும் வௌ;வேறு வடிவில் மக்களைச் சென்றடைகின்றன.

எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் தனது நாட்டுக்குச் செய்யும் அர்ப்பணிப்புடனான சேவை, முழு உலகையும் சென்றடைந்து விடுகின்றது.

உலகம் வேறு மனிதன் வேறு அல்ல. புரிந்து கொள்க. 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.