Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலுவிழந்த சிங்கள கடற்படைக்கு இந்தியா பிச்சை போடுமா

Featured Replies

உலக நாடுகளின் படைப்பலப்படுத்தல்களை முக்கியமாக அதன் புவியியல் சார்புநிலைகள் தான் தீர்மானிக்கின்றன. பின்னர் புவியியல் அமைப்பு மற்றும் களத்தின் தன்மை கொண்டு வடிவமைக்கப்படும் படைக் கட்டமைப்புக்களே போரில் முன்னிலை வகிக்கின்றன. அதாவது சில நாடுகளில் தரைப்படை வலிமையுள்ளதாகவும், சிலவற்றில் கடற்படை வலுவுள்ளதாகவும், மேலும் சிலவற்றில் விமானப்படை வலுவுள்ளதாகவும் பேணப்படுகின்றன.

பெரும்பகுதியான எல்லைகள் நிலப்பரப்பினால் சூழப்பட்ட ஜேர்மன் இரண்டாம் உலகப்போரின் போது தனது தரைப்படையையும், விமானப்படையையும் தான் அதிகளவில் பலப்படுத்தியது. கடற்படையை பதுங்கித்தாக்குதல் நடவடிக்கைக்கே பெருமளவில் பயன்படுத்தியது. இறுதியில் ஜேர்மனியின் தோல்விக்கான காரணிகளில் பலவீனமான அதன் கடற்படையும் சேர்ந்து கொண்டது. அதாவது நோமண்டி (னு-னுயல) தரையிறக்கத்தை தடுக்கமுடியாது போனது பாரிய பின்னடைவாகும்.

சுவிற்சர்லாந்து போன்ற முழு எல்லைப்பகுதிகளும் நிலத்தினால் சூழப்பட்ட நாட்டை பொறுத்தவரை அதனிடம் கடற்படை இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஏனெனில் அதை ஆக்கிரமிக்க முனையும் நாடுகள் தரைவழியாக அல்லது வான்வழியாகத்தான் ஊடுருவ முடியும்.

அப்படியானால் பெரும்பகுதி தரையினால் சூழப்பட்ட ஜேர்மனி அதன் வலிமையற்ற கடற்படையால் ஏன் தோற்றுப்போனது என்று நீங்கள் நினைக்கலாம். ஜேர்மனுக்கான கடற்தொடர்பு மிகக்குறைவாக இருந்த போதும் அதனால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகள் பெருமளவில் கடல் எல்லைகளை கொண்டவையாக இருந்தது தான் கிட்லருக்கு பிரதிகூலமாக அமைந்துவிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளை தக்கவைப்பதானால் வலிமையான கடற்படையை ஜேர்மன் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று அப்போது உணரப்பட்டது. இந்த கள யதார்த்தத்தை ஜேர்மனி உணரும்போது களநிலைமை கைமீறி விட்டது.

ஜப்பானை பொறுத்த வரையில் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட தீவான அதன் புவியியலை கருத்தில் கொண்டு மிக வலிமையான கடற்படையை கட்டி எழுப்பியிருந்தது. இரண்டாம் உலகப்போரில் அதன் கடற்படையின் வலிமையும், நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானம் தாங்கி கப்பல்களின் தொழில் நுட்பமும் தான் ஹவாய் (ர்யறயii) தீவில் அமைந்திருந்த அமெரிக்காவி;ன் பேள்காபர் (Pநயசட ர்யசடிழரச) துறைமுகத்தையும் அதன் பசீபிக் பிராந்திய கடற்படைத்தளத்தையும் (Pயஉகைiஉ குடநநவ) தாக்கி அழித்திருந்தது.

எனினும் ஜப்பானின் துரதிர்ஸ்டம் அன்று பேள்காபர் துறைமுகத்தில் அமெரிக்கா கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்கள் (யுசைஉசயகவ ஊயசசநைசள) தரித்து நிற்கவில்லை. அவற்றை தேடிக்கண்டுபிடித்து தகர்ப்பதற்கு ஜப்பானுக்கு போதிய கால அவகாசமும் இருக்கவில்லை. அரைகுறையாக தகர்க்கப்பட்ட பேள்காபர் துறைமுகத்தை மீண்டும் முற்றாக தகர்ப்பதற்கு அனுமதி கோரப்பட்ட போதும் தமது படையினருடன் சேதமின்றி மீண்டும் ஜப்பான் திரும்புவதற்கு ஏதுவாக தாக்குதலுக்கு தலைமை தாங்கிய அட்மிரல் (ஏiஉந யுனஅசையட ஊhரiஉhi யேபரஅழ) அனுமதி கொடுக்கவில்லை.

அன்று முற்றாக தகர்க்கப்படாத பேள்காபர், தப்பவிடப்பட்ட அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்கள், அவசர அவசரமாக அமெரிக்காவினால் கட்டப்பட்ட பெருமளவான விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் தாக்குதல் கப்பல்கள் என்பன ஜப்பானின் வலிமையான கடற்படையை முறியடித்து வலிமையில் மேலோங்க அமெரிக்காவிற்கு பின்னர் கைகொடுத்திருந்தன. எனினும் பேள்காபர் தாக்குதல் ஜப்பானின் கடற்படை உலகில் முதல்தர வரிசையில் இருந்ததற்கான அடையாளமாக இன்றும் ஆர்வத்துடன் நினைவுகூரப்படுகின்றது.

1982 ஆண்டு நடைபெற்ற போக்லன் (குயடமடயனௌ றயச) போரின் போது 8,500 மைல்களுக்கு அப்பால் பிரிட்டனின் வெற்றியை தீர்மானித்தது அதன் கடற்படையின் வலிமை தான். அண்மையில் லண்டனில் நடைபெற்ற 25 ஆவது ஆண்டு நினைவுகூரல் வைபவத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், கடற்படையின் போரிடும் வலுவை பேணுவது மிக அவசியமானது என தெரிவித்ததுடன். அதன் ஆளுமையை அதிகரிக்க அதிகளவு வளங்களை பயன்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளார்கள்.

உலக வரலாற்றில் நிகழ்ந்த போர்களில் கடற்சமர்கள் மிகமுக்கிய இடத்தை பிடித்ததுடன் கடற்சமர்கள் சில போர்களைக்கூட முடிவுக்கு கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

1790 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெரும் கடற்சமர் தான் உலகின் வல்லமை மிக்க சோவியத்தை பேச்சுவார்தை மேடைக்கு கொண்டு வந்தது. சோவியத்திற்கும் சுவீடனுக்கும் 1788-1790 இல் நடைபெற்ற (சுரளளழ-ளுறநனiளா றயச) போரில் முக்கியமானது செவன்ஸ்குவாட் சமர் (டீயவவடந ழக ளுநஎநமௌரனெ). ஏறத்தாழ சமபலம் மிக்க இரு கடற்படைகள் மோதிக்கொண்டன. ஏறத்தாழ 500 கப்பல்கள் (சாதாரண கப்பல்கள உட்பட), படகுகளும், 2,200 பீரங்கிகளும் 26,500 கடற்படையினரும் பங்குபற்றிய இப்போரில் ஆள், ஆயுத பலத்தில் சற்று மேலோங்கியிருந்த சோவியத் படைகள் பேரிழப்பை சந்தித்தன.

அதன் கடற்படை 40 விழுக்காடு கப்பல்களையும், 65 விழுக்காடு படையினரையும் இழந்தது. சோவியத்தை விட ஆள், ஆயுத பலத்தில் குறைந்ததாயும் மிகச்சிறந்த கடற்சண்டை போர் உத்திகளையும் கொண்ட சுவீடன் 1 கப்பலையும் 5 படகுகளையும் 304 படையினரையும் இழந்து வெற்றிவாகை சூடியது. போர்முடிவுக்கு வந்தது ஒப்பந்தம் கைச்சாத்தானது, இக்கடல் சமரானது உலக வரலாற்றில் நடந்த மிகபெரிய கடற்சமர்களில் ஒன்றாகும்.

தமிழீழத்தின் வரைபடத்தை பொறுத்த வரை கடற்பகுதியின் நீளம் அதிகமானது. எனவே போரில் மேலோங்குவதற்கும், நாட்டை பாதுகாப்பதற்கும் கடற்படையின் வலிமை மிக அவசியம். இந்த களயதார்த்தம் உணர்ந்து கட்டியெழுப்பட்ட கடற்புலிகள் தான் இறுதிச்சமரில் பெரும்பங்கை வகிக்கப்போகிறார்கள். அண்மையில் தென் இந்திய சஞ்சிகை ஒன்றிற்கு பேட்டி வழங்கியிருந்த கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசையின் கருத்தும் இதைத்தான் பிரதிபலிக்கின்றது. அதாவது 'ஈழப்போரின் இறுதிச்சமர் கடற்சமராகவே இருக்கும்" என கூறியிருந்தார்.

கடற்புலிகளின் குடாரப்பு தரையிறக்கமும் நாகர்கோவில், வடமராட்சி கிழக்கு கடற்சமரும் தான் ஆனையிறவு தளத்தை வீழ்த்தியது. இரண்டாம் ஈழப்போரின் இறுதியில் தீவிரமடைந்த கடற்சமர் மூன்றாம் ஈழப்போரில் உக்கிரமடைந்ததுடன் கடற்படையின் தாக்குதிறனில் பாரிய சேதத்தைம் ஏற்படுத்தியிருந்தது.

தற்போது நிகழும் பிரகடனப்படுத்தப்படாத போரில் கடற்படை சந்தித்த இழப்புக்கள் மிக அதிகம். சிங்களக் கடற்படையின் கள முன்னணி தாக்குதல் படகான டோராக்களின் இழப்புக்கள் கடற்படையின் செயற்திறனை முடக்கிவிட்டது என்றே கூறமுடியும். மூன்றாம் ஈழப்பேரில் சிங்களக் கடற்படை அதிகளவில் வலிமைமிக்க கடற்படை கப்பல்களையும் படகுகளையும் இழந்த போதும் இந்த வருடம் கடற்படை எதிர்கொண்ட சமர்கள் தான் அதனை ஆட்டம்காண வைத்துள்ளது.

ஏனெனில் இந்த வருடம் நடைபெற்ற கடற்சமர்களில் மூழ்கடிக்கப்பட்ட ஏழு டோரா பீரங்கிப்படகுகளில் 03 படகுகள் தான் கரும்புலித்தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டன. மிகுதி 04 டோராக்களும் நேரடிச்சமரில் அழிக்கப்பட்டது தான் சிங்களப் படைகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் ஆயுத உற்பத்தியிலும் தொழில் நுட்பத்திலும் மிகச்சிறந்த வல்லமையுள்ள இஸ்ரேலின் டோரா படகுகள் நேரடிச்சமரில் தோற்றுப்போனது சிங்கள கடற்படைக்கு பேரதிர்ச்சியானது என்பதை சிங்களக்கடற்படை அதிகாரிகளே அண்மையில் ஒப்புக்கொண்டிருந்தார்கள்.

29.08.1993 ஆம் ஆண்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து முதன் முதலாக டோராப் படகு கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதுடன் டோராப் படகுகளின் ஆதிக்கம் ஆட்டம் காணத்தெடங்கியது. அன்று மூழ்கிப்போன டோராவின் செய்தி அறிந்த இஸ்ரேலிய கடற்படை அதிகாரிகள் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளோ அல்லது டோராவை எதிர்கொண்டு அதன் தாக்குதிறனை முறியடித்து அதனை மூழ்கடிக்கும் வல்லமை கொண்ட கடற்கலங்களோ அல்லது அதற்குரிய ஆயுதங்களோ இல்லாமல் புலிகள் எவ்வாறு டோராவை தகர்த்தார்கள் என ஆச்சரியம் அடைந்திருந்தனர்.

ஆனால் அன்று கடற்கரும்புலி தாக்குதல் மூலம் டோரா தகர்க்கப்பட்டிருந்தது. இன்றைய களநிலை முற்றிலும் வேறுபட்டது. அதாவது டோராக்களை நேரடியாக எதிர்கொண்டு அதன் தாக்குதிறனை முறியடித்து அதனை தகர்க்கும் அளவிற்கு கடற்புலிகளின் படகுகள், ஆயுதங்கள் என்பன டோராவுக்கு இணையாக வலிமையாக இருக்கின்றன. மேலும் கடற்புலிகளின் போரிடும் நுட்பமும் டோராக்களில் பணியாற்றும் சிங்கள மாலுமிகளை விட பலமடங்கு அதிகரித்துள்ளதையே சமர்கள் காட்டுகின்றன.

1993 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஏறத்தாழ 24 டோராப் படகுகளை (இஸ்ரேலிய, உள்ளுர் தயாரிப்புக்கள்) இழந்து நிற்கிறது சிங்களக் கடற்படை.

கரும்புலித்தாக்குதல், டாங்கி மூலமான தாக்குதல், ஆட்டிலறி தாக்குதல், நேரடிச்சமர் என்பன மூலம் ஈழப்பேரில் அழிக்கப்பட்ட டோரா படகுகளின் விபரம்;:

1993 பருத்தித்துறை கடலில்;-01 டோரா

1995 முல்லைக்கடலில்; - 02 (P446இ P456) டோராக்கள்

1997 புல்மோட்டைக்கடலில்; - 01 டோரா

1998 புல்மோட்டை, முல்லைக்கடலில் - 02 டோராக்கள்

1999 திருமலை கடலில் - 01 டோரா

2000 வடமராட்சி கிழக்கு கடலில் - 02 (P496)

(P463) சுப்பர் டோராக்கள் - 02 (P482)

(P493) டோராக்கள், திருமலைத் துறைமுகத்தில் 01, கற்பிட்டிக்கடலில் 01,

2001 பருத்தித்துறைக்கடலில் 02 டோராக்கள், முல்லைக்கடலில் 01 (P495) டோரா.

2004 திருமலையில் சுனாமியி;ன் போது - 02 டோராக்கள்.

2006 திருமலையில் ஒரு சுப்பர் டோரா (P-476), கற்பிட்டிக்கடலில் ஒரு டோரா, வடமராட்சி

கிழக்கில் இரு டோராக்கள் (P418இ P421), காலித்துறைமுகத்தாக்குதலில் ஒரு

டோரா, வடமராட்சி கிழக்கு கடலில் இரு டோராக்கள் (P416இ P461)

இவற்றுடன் ஈழப் போர்க்காலப்பகுதியில் பல வகைப்பட்ட 14 டோராக்கள் கடுமையாக சேதமக்கப்பட்டதுடன் 21 டோராக்களும் சேதமக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெருமளவான டோராக்களை இஸ்ரேலோ அல்லது வேறு எந்த நாடுகளோ போரில் இழந்தது கிடையாது. ஓவ்வொன்றும் 500 மில்லியன் ரூபாய்கள் (ஆயுதங்களுடன்) பெறுமதி;யான டோராக்களின் இழப்பு கடற்படையின் தாக்குதிறனில் மட்டுமல்லாது அரசின் பொருளாதாரத்திலும் பாரிய தேசத்தை உண்டு பண்ணக்கூடியது.

சண்டைக்களத்தில் டோராக்கள் தோற்றுப்போவது எதனால் என்பது தொடர்பாகவும் அதை முறியடிப்பது எப்படி என்பது குறித்தும் சிங்கள கடற்படை அதிகாரிகள் மட்டுமல்லாது சிங்கள ஆய்வாளர்களும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். முதலில் தோற்றுப்போவதற்கான காரணிகளை பார்ப்போம்.

கடற்புலிகளின் படகுகள் டோராவை விட வேகமாக இருப்பதுடன், டோராவுக்கு சமனாக 20 அஅஇ 23 அஅ பீரங்கிகளையும் கொண்டிருப்பது.

புலிகள் ஆதரவுச்சூட்டுக்கு ஒரே கலத்தை பயன்படுத்தாது பல சிறிய ரக கலங்களை இலகு இயங்திர துப்பாக்கிகளுடனும் குறைந்த மனித வலுவுடனும் (பொதுவாக இருவர்) பயன்படுத்துவது.

சிங்கள விமானப்படை சடற்சமர்களில் செயற்திறனற்று இருப்பது.

புலிகளின் விமான எதிர்ப்புபடையணி, கடற்புலிகள், கரும்புலிகள் இணைந்த நடவடிக்கை (ஊழஅடிiநென ழுpநசயவழைn).

என்பவற்றை கடற்புலிகளின் அனுகூலங்களாக கருதும் ஆய்வாளர்கள், கடற்புலிகளின் கலங்கள் ஒரு 20 மி.மீ அல்லது 23 மி.மீ பீரங்கியை கொண்டிருப்பது அதன் பிரதிகூலமாகவும். டோராக்கள் அதே வகையான 02 பீரங்கிகளை (குசழவெ யனெ சுநயச) கொண்டிருப்பது சிங்களக் கடற்படைக்கு அனுகூலமாகவும் கருதுகிறார்கள்.

ஆனால் அதன் மறுதலையே உண்மையானது. சிங்கள ஆய்வாளர்களின் கூற்று கொள்கையளவில் (வுhநழசல) சரியாகலாம் ஆனால் களத்தில் பிரதிகூலமானதே.....

அடுத்தவாரம் முற்றுப்பெறும்.

http://www.tamilnaatham.com/articles/2006/dec/arush/09.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.