Jump to content

முந்திரி முறுக்கு: தீபாவளி ஸ்பெஷல்


Recommended Posts

முந்திரி முறுக்கு: தீபாவளி ஸ்பெஷல்
 
 தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான்.
 
இதற்கு இந்நாளில் அனைவரது வீடுகளிலும் பல்வேறு பலகாரங்கள் செய்யப்படுவது தான்.
 
குறிப்பாக தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள்.
 
இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த முந்திரி முறுக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Cashew Murukku Recipe: Diwali Special

 தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

முந்திரி - 20

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

 

செய்முறை:

முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி பேஸ்ட், நெய் மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும். வேண்டுமானால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.

பின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் அதேப்போல் பிழிந்து பொரித்து எடுத்தால், முந்திரி முறுக்கு ரெடி!!!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்திரி , யு  மீன் கசுக்கொட்டை....!

Link to comment
Share on other sites

நன்றி இணைப்புக்கு சகோ நவீனன்!! :)

 

தீபாவளி வருகுது எல்லாரும் முறுக்குச் சுட்டு சாப்பிடுங்கோ!! :cool:

 

Link to comment
Share on other sites

சீப்பு சீடை

06-1446809142-seepu-seedai.jpg?zoom=1.5&
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்
உளுத்தம் மாவு – 1/4 கப்
கடலை மாவு – 1/4 கப்
கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
சுடுநீர் – தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.

பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி!!!

 

http://tamilcookery.com/?p=3569

 
 
 

 

காரச்சேவு

 

karasev.jpg?zoom=1.5&fit=300%2C225
 

 

 

 

 

 

 

 

 

 

 

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 1 கிலோ
டால்டா – 100 கிராம்
அரிசி மாவு – 100 கிராம்
மிளகு தூள் – 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சோடா மாவு, பெருங்காயப்பொடி – 1 டீ ஸ்பூன்
நசுக்கிய பூண்டு – சிறிதளவு
எண்ணெய் – 500 கிராம்

 

* எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காரச்சேவு அச்சில் பிழிந்து வெந்தவுடன் பிரித்து வெந்ததும் எடுக்கவும்.
* சுவையான காரச்சேவு ரெடி.

 

http://tamilcookery.com/?p=3553

 

 

சகோ நவீனன் தலையங்கத்தை 

"பலகாரங்கள் - தீபாவளி ஸ்பெஷல்"

என்று மாற்றி விட்டால் நல்லது போல் இருக்கு

Link to comment
Share on other sites

அதிரசம்

09-1352440288-athirasam.jpg?zoom=1.5&fit

 

 

 

 

 

 

 

 

தேவையான பொருட்கள்

2 கப் பச்சரிசி

2 கப் வெல்லம்

பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன்

ஒரு டேபிள்ஸ்பூன் நெய்

தேவையான அளவு எண்ணெய் பொரிப்பதற்கு

 

செய்முறை

அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
 

அடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.
 

சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.
 

சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.
 

அடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
சாப்ட்டுப் பாருங்க, அதிரசம் அட்டகாசமாக இருக்கும்.

http://tamilcookery.com/?p=3486
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.