Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலில் விழப் போகும் மர்மப்பொருள்! - நிலத்தில் சிதறும் பொருட்களை தொடக்கூ்டாது என அறிவுறுத்தல் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் விழப் போகும் மர்மப்பொருள்! - நிலத்தில் சிதறும் பொருட்களை தொடக்கூ்டாது என அறிவுறுத்தல் 
[Wednesday 2015-11-11 08:00]

வரும் வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேவேந்திரமுனையிலிருந்து 65 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் மர்மப் பொருளொன்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு விழவிருக்கின்றது. சந்திரன் தற்பொது இருக்கும் இடத்திலிருந்து இரு மடங்குகளுக்கு அப்பாலான தூரத்திலிருந்தே இப்பொருள் பூமியை நோக்கி வருகின்றது. இந்தப் பொருள் இரண்டு மீற்றர்கள் நீளமானதாக (07 அடிகள்) காணப்படுகின்றது. குழாய் வடிவில் துளை கொண்டதாகக் காணப்படும் இப்பொருள் ஏற்கனவே சந்திரனுக்கு ஏவப்பட்ட ரொக்கட்டின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இப்பொருள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியே வந்து கொண்டிருக்கின்றது. என்றாலும் இன்னும் வளி மண்டலப் பகுதிக்குள் உட்பிரவேசிக்கவில்லை. அவ்வாறு பிரவேசிக்கும் போது வெப்ப நிலை அதிகரித்து ஒரு பகுதி தீப்பற்றி எரிந்து விட முடியும். அப்பொருள் ரொக்கட்டின் என்ஜின் பாகம் என்றால் வளிமண்டலத்தில் சுமார் நூறு கிலோ மீற்றர்கள் செல்லும் போது வெப்ப நிலை அதிகரித்து வெடித்து சிதற முடியும். அவ்வாறு வெடித்துச் சிதறும் போது அதன் பாகங்கள் நிலப் பகுதியிலும் விழலாம்.

இதன் பாகங்கள் நிலப்பகுதியில் விழுந்தால் அவற்றை எவரும் தம் கைகளால் பிடிக்க வேண்டாம். ஏனெனில் அப்பாகங்களில் கதிர் தாக்கங்கள் காணப்படலாம். அதனால் அப்பாகங்கள் விழுந்திருக்கும் இடம் தொடர்பான தகவலை உடனடியாக எமக்கு அறியத் தாருங்கள். அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவென நாம் குழுவொன்றை அமைத்துள்ளோம். இப்பொருள் வளிமண்டலத்தினுள் பிரவேசித்த பின் தீப்பந்து போன்று கூட காட்சியளிக்கலாம். இப்பாகம் விழுவது குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறான பொருட்கள் உலகின் பல பிரதேசங்களில் ஏற்கனவே விழுந்துள்ளன. அதே நேரம் இப்பொருள் கடலில் விழுவதால் சுனாமி பேரலை ஏற்படும் என்றும் அஞ்சத் தேவையில்லை.

என்றாலும், இப்பொருள் முற்பகல் 11.50 மணிக்கு விழவிருப்பதால் அதற்கு முன்னரான ஒரு மணித்தியாலம் முதல் பின்னரான ஒரு மணித்தியாலம் வரையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளுகின்றோம். அதே நேரம் இப்பொருள் எமக்கு அருகிலுள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதை பகுதியிலேயே விழவிருக்கின்றது.

அதனால் இக்காலப்பகுதியில் இப்பகுதியின் ஊடாக கப்பல் போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவூட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அத்தோடு விமானங்களையும், ஹெலிக்கொப்டர்களையும் இக்காலப் பகுதியில் இப்பகுதியில் பயணிக்க வேண்டாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=144513&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே.... ஆற்ரை தலையிலை, அந்த "மர்மப் பொருள்" விழப் போகுதோ.....  Smiley
நல்ல காலம், சிங்களப் பகுதியில் விழ இருப்பதால்..... தமிழர் பயப்படத் தேவையில்லை.  Smiley

  • கருத்துக்கள உறவுகள்

மர்மப் பொருள், மாவீரர் மாதத்தில் வீழப்போகும் மர்மமென்ன.....? அதுவும் சிங்களப்பகுதியில்....!! :(

விமல் வீரவம்சாவே! விரைவில் உன் மூளையைத் தீட்டி அறிக்கையை வெளியேவிடு.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
world.jpg
வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப்பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன நேற்று  தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
 
இலங்கையின் தென்பகுதியிலுள்ள தெய்வேந்திரமுனையிலிருந்து 65 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் மர்மப் பொருளொன்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு விழவிருக்கின்றது.
 
இப்பொருளுக்கு தீஹி 1190பி எனப் பெயரிடப்பட்டுள்ளது. சந்திரன் தற்பொது இருக்கும் இடத்திலிருந்து இரு மடங்குகளுக்கு அப்பாலான தூரத்திலிருந்தே இப்பொருள் பூமியை நோக்கி வருகின்றது. இந்தப் பொருள் இரண்டு மீற்றர்கள் நீளமானதாக (07 அடிகள்) காணப்படுகின்றது. குழாய் வடிவில் துளை கொண்டதாகக் காணப்படும் இப்பொருள் ஏற்கனவே சந்திரனுக்கு ஏவப்பட்ட ரொக்கட்டின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
 
இப்பொருள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியே வந்துகொண்டிருக்கின்றது. என்றாலும் இன்னும் வளி மண்டலப் பகுதிக்குள் உட்பிரவேசிக்கவில்லை. அவ்வாறு பிரவேசிக்கும் போது வெப்ப நிலை அதிகரித்து ஒரு பகுதி தீப்பற்றி எரிந்து விட முடியும். அப்பொருள் ரொக்கட்டின் என்ஜின் பாகம் என்றால் வளிமண்டலத்தில் சுமார் நூறு கிலோ மீற்றர்கள் செல்லும் போது வெப்ப நிலை அதிகரித்து வெடித்து சிதற முடியும். அவ்வாறு வெடித்துச் சிதறும் போது அதன் பாகங்கள் நிலப் பகுதியிலும் விழலாம்.
 
இதன் பாகங்கள் நிலப்பகுதியில் விழுந்தால் அவற்றை எவரும் தம் கைகளால் பிடிக்க வேண்டாம். ஏனெனில் அப்பாகங்களில் கதிர் தாக்கங்கள் காணப்படலாம். அதனால் அப்பாகங்கள் விழுந்திருக்கும் இடம் தொடர்பான தகவலை உடனடியாக எமக்கு அறியத் தாருங்கள். அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவென நாம் குழுவொன்றை அமைத்துள்ளோம். இப்பொருள் வளிமண்டலத்தினுள் பிரவேசித்த பின் தீபந்து போன்று கூட காட்சியளிக்கலாம்.
 
இப்பாகம் விழுவது குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறான பொருட்கள் உலகின் பல பிரதேசங்களில் ஏற்கனவே விழுந்துள்ளன. அதே நேரம் இப்பொருள் கடலில் விழுவதால் சுனாமி பேரலை ஏற்படும் என்றும் அஞ்சத் தேவையில்லை.
 
என்றாலும், இப்பொருள் முற்பகல் 11.50 மணிக்கு விழவிருப்பதால் அதற்கு முன்னரான ஒரு மணித்தியாலம் முதல் பின்னரான ஒரு மணித்தியாலம் வரையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளுகின்றோம். அதே நேரம் இப்பொருள் எமக்கு அருகிலுள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதை பகுதியிலேயே விழவிருக்கின்றது.
 
அதனால் இக்காலப்பகுதியில் இப்பகுதியின் ஊடாக கப்பல் போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவூட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அத்தோடு விமானங்களையும், ஹெலிக்கொப்டர்களையும் இக்காலப் பகுதியில் இப்பகுதியில் பயணிக்க வேண்டாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு கடற்பகுதி எச்சரிக்கை வலயமாகப் பிரகடனம்! - நாளை விழுகிறது மர்மப் பொருள் 
[Thursday 2015-11-12 07:00]

இலங்கை தென் கடற்பரப்பில் நாளை வானிலிருந்து மர்மபொருள் விழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் தென் வான் மற்றும் கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.  ஆகையால் குறித்த தினங்களில் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க செல்ல கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளை 13 ஆம் திகதி வெள்ளிகிழமை முற்பகல் 11.48 மணிக்கு குறித்த மர்மபொருள் தென் கடற்பரப்பில் விழும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றும் நாளையும் தென் வான் மற்றும் கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்பிரகாரம் மீனவர்கள் அனைவரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என் றும் அறிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=144588&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.