Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை வான் கலாசாரத்தின் 'பிதாமகன்" கோத்தபாயவே : மேர்வின் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
white-van--gotabaya-rajapaksa-marvcin.jp
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளை வான் கலாசாரத்தின் பிதாமகன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே  என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்
 
வெள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பில் சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று நீதிமன்றில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
பசில் ராஜபக்ஷ ஒரு முரட்டுதனமான மனிதர். அவரே வெள்ளை வான் கலாசாரத்திற்கு காரணமானவர். இது உண்மை. இந்தை கருத்தை ஒரு போதும் மாற்றி கூறமாட்டேன் என்றார். 
 
வெள்ளை வான் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேன்வின் சில்வா செய்த முறைப்பாடு மற்றும் தகவல்களுக்கு அமைவாகஇ கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
 
2011 ஆம் ஆண்டு முகத்துவாரம் பிரதே­சத்தில் வெள்ளை வானில் மூவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில், கடத்தப்பட்ட மூவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் மேர்வின் சில்வாவை சாட்சிக்கு அழைக்குமாறு இதன் போது கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.
 
இது தொடர்பில் முழுமையான தகவலைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேர்வின் சில்வா வழங்கவில்லை எனவும் கடிதம் மாத்திரமே வழங்கியுள்ளதாகவும் புலனாய்வுப்பிரிவு நீதிமன்றில் அறிவித்தது.
 
இந் நிலையில் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி 26 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

 

http://onlineuthayan.com/news/2959

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குழப்பமான தவறான செய்தி.

கோத்தா என்று தொடங்கி பசிலை இழுத்து....

மேர்வினை Jan 26 நீதிமன்று வருமாறு உத்தரவு போய் உள்ளது. இன்னும் அவர் வரவில்லை. இந்த செய்தி தவறு.

எங்கவோ  போன ஆளைப் பிடித்து நாலு கேள்வி கேட்க, கோத்தபாய தான் வெள்ளை வான் 'Godfather' என்கிறார். 

பசில், பச்சைக் கள்வர்' என்கிறார். 10% எல்லாம் சும்மா. 20%, 30% தான் அவரது ஸ்டாண்டர்ட் என்று போடுகிறார்... 

http://www.dailymirror.lk/95021/cid-asked-to-produce-copy-of-mervyn-s-complaint-on-white-van-abduction

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.