Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களை ஏமாற்றியவர் கைது .ஏமாற்றத்திற்கு உள்ளானவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய கோரிக்கை

Featured Replies

பெண்களை ஏமாற்றியவர் கைது .ஏமாற்றத்திற்கு உள்ளானவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய கோரிக்கை

 
பெண்களை ஏமாற்றியவர் கைது .ஏமாற்றத்திற்கு உள்ளானவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய கோரிக்கை:-


யாழில் பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் மற்றும் நகை என்பவற்றை பெற்று மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை பொது மக்கள் பிடித்து யாழ்.பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபரினால் ஏமாற்றத்திற்கு உள்ளாகியவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக வந்தோ 021 222 2222 எனும் தொலைபேசி இலக்த்தின் ஊடாகவோ முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு யாழ்.பொலிசார் கோரியுள்ளனர்.

மூதூர் பகுதியினைச் சேர்ந்த அப்துல் கரிம் (வயது 38) எனும் சந்தேக நபரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் ஆவார், அவரிடம் இருந்து போலி நகைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளது என்றும் யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன் தெரிவித்தார்.
xp99b8.jpg
மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது

மூதூர் பகுதியினைச் சேர்ந்த குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள பல பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தன்னை வசதி படைத்த நபர் போல் காண்மித்துள்ளார். இதனால் ஏமாந்த பல பெண்கள் இவருடன் தொடர்பினை பேனி வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித் பெண்களிடம் போலி நகைகளை கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்த தங்க நகைகளை பெற்றுக் கொண்டு அப் பெண்களை ஏமாற்றுவதையே இவர் தொழிலாக செய்து வந்துள்ளார்.

இதனால் பல பெண்கள் குறித்த நபரிடம் பெரும் தெகையான நகைகளை கொடுத்து ஏமாந்துள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் ஒரு பெண்னை ஏமாற்றி அவரிடம் இருந்து நகைகளை பெற முயன்ற போது  அப்பெண்ணின் உறவினர்களால் குறித்த நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

முடக்கிப் பிடிக்கப்பட்ட நபர் வீதியோரமாக இருந்த மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களால் நயப்புடைக்கப்பட்டு உள்ளார்

இதன் பின்னர் சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது  செய்யப்பட்ட நபரினால் பாதிக்கப்பட் பெண் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார்.

புதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த நபர் யாழில் பல பெண்களை ஏமாற்றி உள்ளமையால் ஏமாற்றத்திற்கு உள்ளானவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதியுமாறு யாழ்.பொலிசார் கோரியுள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126026/language/ta-IN/article.aspx

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வசதிபடைத்தவர்கள் மாதிரி பந்தா காட்டுபவர்களிடம் மயங்குமளவிற்கு சுயபுத்தி இல்லாதவர்களாக சில பெண்கள் இப்போதும் இருப்பது வருத்தமான விடயம்.

  Views - 313
- செல்வநாயகம் கபிலன்

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து  வந்த நபரை, பிரதேச மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

தோப்பூர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அப்துல் கலீம் (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அலைபேசியினூடாக அழைப்பை ஏற்படுத்திய நபர், ஆசை வார்த்தைகள் கூறி அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். 

பின்னர், அப்பெண்ணை வவுனியாவுக்கு அழைத்துச் சென்று, அவரிடமிருந்த நகைகளை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக போலி நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை திருப்பித்தருமாறு கேட்ட போது, அந்த நகைகளில் தாலி செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

நடந்தவற்றை குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தி பெண், அவருடைய நெருங்கிய நண்பியொருவருக்கும் இது குறித்து கூறியுள்ளார். 

தப்பிச் சென்றவனை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று எண்ணிய பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பி, அதேநபருக்கு அலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி, ஆசை வார்த்தை கூறி, அந்த நபரை தான் காதலிப்பதாக கூறியது மாத்திரமல்லாது, அவரை கொக்குவிலுக்கு வருமாறும் அழைத்துள்ளார்.

எதிர்பார்த்தைப்போன்று, சந்தேக நபர் கொக்குவில் பகுதிக்கு வந்தபின்னர், அங்கு தயாராக இருந்த இளைஞர் குழுவினர், சந்தேக நபரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி நையப்புடைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர், இவ்வாறு பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 021 222 2222 என்ற இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி முறைப்பாட்டை தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/159322#sthash.rdUAf6HO.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.