Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் நடவடிக்கைகள் பச்சோந்தித் தனத்தை காட்டுகின்றது : ஆனந்தசங்கரி

Featured Replies

சுமந்திரனின் நடவடிக்கைகள் பச்சோந்தித் தனத்தை காட்டுகின்றது : ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் பாதிப்படையவே செயகின்றன. சமீபகாலமாக  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நடவடிக்கையால் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளதால் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் அவர்களின் நிரந்தர தீர்விற்கும் வழி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக தமிழ் மக்களின் போராட்டம், அவர்களின் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்த வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை கடுகளவும் அறியாத, கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்திய சுமந்திரனின்  நடவடிக்கைகள், அவரின் பச்சோந்தித் தனத்தை எடுத்துக் காட்டுகின்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.Dd5s40dfdf.jpg

 

 எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனு;கு    எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக வாதாடி அதில் படுதோல்வியடைந்ததை தவிர சுமந்திரன்  வேறு எதையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ, அல்லது தமிழ் மக்களுக்கோ செய்யவில்லை. 
கடந்த காலத்தில், வேலைவெட்டி இல்லாத இளைஞர்கள்தான் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் எனவும், இராணுவத்தைவிட தமிழீழ விடுதலைப் புலிகள்தான் அதிகளவு தமிழ் மக்களை கொலை செய்தார்கள் என்றும் அதற்காக, விடுதலைப் புலிகளையும் விசாரணை செய்ய வேண்டுமென்றும் கூறியவர். 
அப்போதே அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் இன்று இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார். ஆனால் அவரை கட்சியின் தலைமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினருக்காக போட்டியிட வைத்தது மட்டுமல்லாமல், குறிப்பாக திரு.சுமந்திரனை   வெல்லவைக்க வேண்டிய கடமை வடபகுதி தமிழ் மக்களுக்கு உண்டு என   இரா. சம்பந்தன்  கூறியிருந்தார். 
மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்ற, அர்த்தத்திலேயே அதை அவர் கூறியுள்ளாhர் போல் தெரிகிறது. 
மக்களும் அவருக்கு வாக்களித்து அவரை மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள். முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு எதிராகக் கருத்துக்களை கூறியவர்  சுமந்திரன்;. 
ஆனால் சமீபகாலமாக விடுதலைப் புலிகளின் காலத்தில் நடந்த, முஸ்லிம் மக்களின் வெறியேற்றத்தை மட்டும், இனச் சுத்திகரிப்பு என்று கூறி அதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, திரும்பத் திரும்ப ஆணித்தரமாகக் கூறுகின்றார்.
 இவருக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.  இப்போது அவர் வட மாகாணசபை முதலமைச்சர் மீது குற்றம் சுமத்துகிறார். 
வட மாகாண முதலமைச்சரை தனிப்பட்ட தமிழரசு கட்சி மட்டும் தெரிவு செய்யவில்லை. பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் ஒத்துழைப்புடன்தான் பொது வேட்டபாளராக களம் இறக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். 
அத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றிபெறாவிட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கணிசமான வாக்குகளை பெற்று வெற்றிக்கு வழிவகுத்ததில் எமக்கும் முக்கிய பங்குண்டு என்பதை திரு.சுமந்திரன் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

                                
எனவே முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வது சுமந்திரன் சார்ந்த கட்சியின் பொருத்தமில்லாத செயற்பாடாகும். அதுவும் சுமந்திரன், முதலமைச்சர் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு வேடிக்கையானது. அதாவது தேர்தலுக்காக பணம் வசூல் செய்ய வெளிநாடுகளுக்கு போகவில்லை என்ற காரணத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். 

http://www.virakesari.lk/articles/2015/11/19/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.