Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தடை விதிக்கக் கூடாது! - ஆனந்தசங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாவீரர் தினம் அனுஷ்டிப்பதனை அரசாங்கம் தடைசெய்யக்கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1989ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கால்நூற்றாண்டுக்கு மேலாக மாவீரர் தினம் சில சமய நிகழ்வுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருவதை தடுப்பது அரசாங்கத்தின் புத்திசாதுரியமான செயலன்று.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பதனை அரசாங்கம் தடைசெய்யக்கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1989ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கால்நூற்றாண்டுக்கு மேலாக மாவீரர் தினம் சில சமய நிகழ்வுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருவதை தடுப்பது அரசாங்கத்தின் புத்திசாதுரியமான செயலன்று.

   

அன்று தொட்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்களால் அந்தந்த இடத்தில் வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறியதாகவோ பெருமளவிலோ இந் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பிரபாகரனின் பிறந்த தினம் கார்த்திகை மாதம் 26ஆம் திகதியாகும். அப்படியிருந்தும் அவர் கார்த்திகை மாதம் 27ஆம் திகதியையே மாவீரர் தினமாக நினைவுகூர வேண்டுமென கட்டளை பிறப்பித்திருந்தார்.

பல இளைஞர்கள் சரியாகவோ பிழையாகவோ தாம் ஒரு பெறுமதிமிக்க தேவைக்காக தம் உயிரை அர்ப்பணிப்பதாக கருதினர். இந்த இளைஞர்களின் உறவுகளை பொறுத்தவரை அவர்கள் பெரும் நல்ல நோக்கத்துக்காகவே தம் உயிரை அர்ப்பணித்துள்ளனர் என கருதுகின்றனர். இவ் உறவினர்களை புலி ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணமுடியாது.

தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதாகவும் அவர்களுக்காகவும் அவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் சில சமய கிரியைகள் செய்வதாகவே கருதுகின்றனர். அதேபோல்தான் நாமும் வருடாவருடம் எம்மைவிட்டு பிரிந்தவர்களுக்காக சமய ரீதியான கிரியைகளை செய்கின்றோம். இந்நிகழ்வு ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் அரசாங்கம் கூட இந்த மக்களுடைய உரிமையில் தலையிடக்கூடாதென்று கருதுவதே நியாயமானதாகும். இந்த நிகழ்வுகளில் அரசு தலையிடாமல் இருப்பதற்கு பொருத்தமான இன்னுமொரு காரணம் யாதெனில் இந்த தியாகிகளின் உறவுகள் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருக்கின்றார் என்றும் அந்த அடிப்படையில் சேர்த்த பெருந்தொகை பணம் அவரிடம் நம்பிக்கை நிதியமாக இருக்கின்றதென நம்புகின்றனர்.

பிரபாகரன் உயிருடன் இல்லையென்பதை அரசு ஆதாரபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில் இவ்வாறு பெருந்தொகை பணத்தை நம்பிக்கை நிதியமாக வைத்திருக்கின்றவர்கள் மிகச் சிறந்த வகையில் முதலீடுகளை செய்யலாம். இந்த விண்ணப்பத்தை நான் விடுப்பதற்கு முன்பு தற்போது பிரபாகரன் இல்லாதபடியினாலும் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளமையாலும் சமாதானம் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்பதனாலும் இவர்களுடைய இந்த நிகழ்வுகளில் அரசாங்கம் தலையிட வேண்டாமென வினயமாக வேண்டுகிறேன்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145728&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.