Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டி! - மோல்டா மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

maithri-cw-380-seithy.jpg

பொதுநலவாய அமைப்பின் செல்வாக்கானது உறுப்பு நாடுகளின் அரசியல் மற்றும் சமூக நடத்தைக்கு வழிகாட்டியாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை கடந்த இரண்டு வருடங்களாக இவ்வமைப்பின் தலைமைப் பதவியை வகித்ததுடன். இக்காலப்பகுதியில் தாம் மேற்கொண்ட பணிகளில் திருப்த்தியடைவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

மோல்டாவில் நேற்று ஆரம்பமான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஆரம்ப நிகழில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

"பொதுநலவாய அமைப்பு 2 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சனத்தொகையைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அபிவிருத்தி அடைந்துவருகின்ற மற்றும் அபிவிருத்தி குறைந்த உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களது வாழ்க்கைத்தரங்களை மேம்படுத்துவது எமது குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால இலக்காகும். இலங்கை பொதுநலவாய அமைப்பின் ஒரு ஸ்தாபக உறுப்பு நாடு என்பதாடு, கடந்த சில வருடங்களாக இவ்வமைப்பின் வளர்ச்சியை வரவேற்கின்றோம். இவ்வமைப்பின் செல்வாக்கு எமது எல்லா உறுப்பு நாடுகளினதும் அரசியல் மற்றும் சமூக நடத்தைக்கு வழிகாட்டுவதற்கு பெரிதும் உதவியுள்ளது.

உறுப்பு நாடுகளின் பலம் அல்லது செல்வ வளம் அன்றி பொதுப் பெறுமானங்களே எம்மை ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் இலங்கையில் சந்தித்தபோது சமத்துவம் மற்றும் உள்ளீர்ப்பு என்பனவற்றுடனான வளர்ச்சியை அடைந்துகொள்வதே பொதுநலவாய நாடுகளின் பிரதான கரிசனைக்குரிய அம்சமாக இருக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொண்டோம். நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவது தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளை வேண்டி நிற்கிறது என்பதையும் நாம் சுட்டிக் காட்டினோம். நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையும் முன்னுரிமை அளித்து இருப்பதை குறிப்பிடுவதில் நான் மேலும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இன்றயை இளம் தலைமுறை ஒரு சுபீட்சமான நாளைக்கான அடித்தளமாகும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டோம். இளைஞர் தலைமுறைக்கான அர்ப்பணத்தின் மாகம்புற பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் எமது இளம் தலைமுறைக்கான எமது ஆர்வத்தை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். பொதுநலவாய இளைஞர் பேரவை தாபிக்கப்பட்டதை நாம் வரவேற்பதோடு, முதலாவது பொதுநலவாய இளைஞர் பேரவை மாநாட்டை நடாத்துவதற்கு உபசரிப்பு நாடாக இருந்ததையிட்டு இலங்கை மகிழ்ச்சியடைகின்றது. தொழில்வாய்ப்புகளை உறுவாக்குவதிலும் வறுமையை ஒழிப்பதிலும் பொருளாதார சுபீட்சத்தை மேம்படுத்துவதிலும் வர்த்தகமும் முதலீடும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றதென்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எமது நாடுகளின் மூலம் மூலப் பொருட்களை விற்பனைச் செய்வதற்கு பதிலாக பெறுமதிசேர் கைத்தொழில் துறைக்கான ஒத்துழைப்பு கூடிய கவனத்தை பெற வேண்டும்.

' கொழும்பு உச்சி மாநாட்டின்போது நாம் வெளியிட்ட கோட்டே அறிக்கை பொதுநலவாய முதலீடு மற்றும் தனியார்துறை ஈடுபாடுகளை மேம்படுத்துவதற்கான எமது அர்ப்பணத்தை வலியுறுத்துகின்றது. இது எமது அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டு நண்பர்கள் மற்றும் அவர்களது பொருளாதாரங்களின் கேள்வியாகும். வெளிச் செல்லும் தலைவர் என்ற வகையில் கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் நாம் மேற்கொண்டுள்ள பணிகளை பின்னோக்கி பார்க்கின்றபோது, நாம் திருப்தியடைகின்றோம். நான் இப்பதவியில் இருக்கின்றபோது எனக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காக எல்லா பொதுநலவாய அரச தலைவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145793&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.