Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூவருக்கெதிராக சட்ட நடவடிக்கை (யாழ்.நீதிமன்றம் அதிரடி உத்தரவு)

Featured Replies

யாழ். பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவருக்கு  எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதி பதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.நகரப் பகுதியில் இயங்கி வந்த உணவு விடுதி ஒன்றுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் 31ஆம் திகதி 3 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்று 3 கிலோ நிறையுடைய சோஸ் பைகள் மற்றும் 200 கிராம் நிறை யுடைய 11 ஒடியல்மா பைகளையும் கைப்பற்றி காலாவதியான பொருட் களைப் பயன்படுத்தியதாக கூறி குறித்த விடுதி முகாமையாளருக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு ஒன்றரை வருட காலமாக நடைபெற்று வரும் நிலை யில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவரும் மன்றில் சாட்சியமளிக்கும் போது தாம் குறித்த தினத்தில் அந்த விடுதிக்கு சாப்பிடப் போனதாகவும் அப்போது விடுதி முகாமையாளர் தான் விடுதிக்கான அனுமதி பெற வேண்டி இருப்பதால் விடுதியை பரிசோதித்து ஆலோசனை வழங்குமாறு தம்மைக் கோரியிருந்தார். 

அதற்கமைய விடுதியின் களஞ்சியசாலையை பரிசோதனை செய்த போது அங்கு பயன்படுத்த முடியாத பொருட்கள் பல இருந்ததுடன் பாவனைக்குதவாத தளபாடங்களும் இருந்தமையால் அவற்றைக் கைப்பற்ற வில்லை எனவும் கட்டட அமைப்பில் பல குறைபாடுகள் காணப்பட்ட போது அவற்றைத் திருத்துமாறும் அங்கு வேலை செய்பவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறும் கூறிவிட்டு அடுத்த அறைக்கு சென்றபோது காலாவதியான பொருட்கள்  பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்ததனால் அவற்றைக் கைப்பற்றியதாகவும்  கூறினார்கள்.

இது தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி சாட்சியமளிக்கும் போது குறித்த பொதுச்சுகாதார பரிசோத கர்கள் தமக்கு கீழ்  பணியாற்றுவதாகவும் அவர்கள் செய்யும் பணிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும் என்றும் திடீ ரென பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருப்பின் தன்னிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் அல்லது மாநகரசபை ஆணையாளருக்கு  அறிவிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். அத்துடன் குறித்த விடுதி தொடர்பாக தனக்கும் ஆணையாளருக்கும் அறிவிக்கவில்லை எனவும் சாட்சியமளித்தார்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி கடந்த காலத்தில் குறித்த விடுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றுக்கு பழிவாங்கும் நிகழ்வாக இச்செயற்பாடு இடம்பெற்றதாக தெரியவருவதால் குறித்த வழக்கில் இருந்து முகாமையாளரை விடுவிப்பதுடன் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவரும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனிப்பட்ட  குரோதத்துக்கு பழிவாங்கும் முகமாக செயற்பட்டதாக சாட்சியங்கள் தென்படுவதால் பொதுமக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள் மக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தக் கூடாது எனக்கூறி குறித்த மூவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=8100&ctype=news

  • தொடங்கியவர்
1 hour ago, Athavan CH said:

 

வழக்கை விசாரணை செய்த நீதிபதி கடந்த காலத்தில் குறித்த விடுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றுக்கு பழிவாங்கும் நிகழ்வாக இச்செயற்பாடு இடம்பெற்றதாக தெரியவருவதால் குறித்த வழக்கில் இருந்து முகாமையாளரை விடுவிப்பதுடன் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவரும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனிப்பட்ட  குரோதத்துக்கு பழிவாங்கும் முகமாக செயற்பட்டதாக சாட்சியங்கள் தென்படுவதால் பொதுமக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள் மக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தக் கூடாது எனக்கூறி குறித்த மூவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=8100&ctype=news

இப்படியான மனநிலை தான் எமது சமூகத்தின் மிகப் பெரிய சாபம். இவர்களை வேலையை விட்டே தூக்க வேண்டும்.

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

 

எங்கும் ஊழல்

எதிலும் பாரபட்சம்

அதிகார துஷ்பிரயோகம்

அசட்டையீனம்.

கடுமையான தண்டனைகள் வழங்கப்படணும்

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பச்சண்டைக்கும் வேலிச் சண்டைக்கும் ஊரில ஒரு குறைச்சலும் இல்லையாம் இப்ப. அதில் பழைய குருடி கதவைத் திறவடி கணக்கா.. பதவிகளும் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறதாம். இதைச் சில பேர் அதி உச்ச சன நாயகம் என்பினம். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.