Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்ரேலியா - மேற்கு இந்திய தீவுகள் டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

நாளை ஆரம்பிக்கிறது அவுஸ்திரேலியா - மே.தீவுகள்
 
 

article_1449678678-TamilseriprwAus-WI.jpஅவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நாளை ஆரம்பிக்கிறது. ஹோபார்டில் இடம்பெறும் முதலாவது போட்டியுடனே இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

நாளைய போட்டி, இலங்கை நேரப்படி காலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் ஓரளவு இளமையான அணிகளாகக் காணப்படுகின்ற போதிலும், இரு அணிகளுக்குமிடையிலான வித்தியாசம், மிக அதிகமானதாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளை விடப் பலமான அணியான நியூசிலாந்து அணியை, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்த தன்னம்பிக்கையுடன், அவுஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

மறுபுறத்தில், பயிற்சிப் போட்டியில், அனுபவமற்ற, சிறிய அணியொன்றுடன் 10 விக்கெட்டுகளால் தோல்வியடைந்த நிலையில், கடுமையான அழுத்தத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்குகிறது.

இப்போட்டியில் பங்குபற்றும் அவுஸ்திரேலிய அணி: ஜோ பேர்ண்ஸ், டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித், அடம் வோஜஸ், ஷோன் மார்ஷ், மிற்சல் மார்ஷ், பீற்றர் நெவில், ஜேம்ஸ் பற்றின்சன், பீற்றர் சிடில், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன்

எதிர்பார்க்கப்படும் மே.தீவுகள் அணி: கிறெய்க் பிறெத்வெய்ட், ஷாய் ஹோப், டெரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ், ஜேர்மைன் பிளக்வூட், டினேஷ் ராம்டின், ஜேஸன் ஹோல்டர், கார்லொஸ் பிறெத்வெய்ட், ஜெரோம் டெய்லர், தேவேந்திர பிஷூ.

- See more at: http://www.tamilmirror.lk/161016/%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-#sthash.h2nlu6MW.dpuf
  • தொடங்கியவர்

பல டெஸ்ட் சாதனைகளை உடைக்க ஆஸி. திட்டம்; வீழ்த்துவோம் என்கிறார் கர்ட்லி ஆம்புரோஸ்

 

மே.இ.தீவுகள் பவுலிங் ஆலோசகர் கர்ட்லி ஆம்புரோஸ். | படம்: கெட்டி.
மே.இ.தீவுகள் பவுலிங் ஆலோசகர் கர்ட்லி ஆம்புரோஸ். | படம்: கெட்டி.

ஹோபார்ட்டில் நாளை (வியாழன்) ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

மே.இ.தீவுகள் அணி தற்போதுள்ள நிலையில் டிரா செய்தால் அதுவே பெரிய சாதனை என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்கிறார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய பந்துவீச்சு ஆலோசகருமான கர்ட்லி ஆம்புரோஸ்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டிக்கு முன்னதான டூர் கேமில் மே.இ.தீவுகள் படுமோசமாகத் தோல்வியடைந்ததையடுத்து இந்தத் தொடரில் மே.இ.தீவுகள் நசுக்கப்படுவதோடு, ஆஸ்திரேலியா சிலபல டெஸ்ட் சாதனைகளை உடைக்கும் என்ற பேச்சு ஊடகங்களில் எழுந்துள்ளது.

இந்தத் தொடரில் ‘பலவீனமான’ மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக சில டெஸ்ட் உலக சாதனைகளை உடைக்க ஆஸ்திரேலியா தயாராகிவரும் நிலையில் ஆம்புரோஸ் கூறியிருப்பதாவது:

நாங்கள் நல்ல அணியல்ல, எங்களால் சவால் அளிக்க முடியாது என்றெல்லாம் பேசுபவர்கள் பேசட்டும். அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. ஆனால் வெற்றி பெற்றுவிட்டோம் என்றால் செய்தியாளர்கள் தங்கள் பார்வையை மாற்றிக் கொள்வார்கள்.

இதற்கு முந்தைய தொடரை நாங்கள் 2-0 என்று இழந்திருந்தாலும், அந்தத் தொடரில் ஒரு சில கணங்கள் அவர்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தினோம். எனவே நாங்கள் சவால் அளிக்க முடியும், சவால் மட்டுமல்ல நாங்கள் அவர்களை வீழ்த்த முடியும். எங்கள் கவனம் முழுதும் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதே. தோல்வியடையும் அணி என்ற ஒரு பெயர் சில வேளைகளில் அணிக்கு சாதகமாக திரும்பும் வாய்ப்பு உள்ளது.

எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை, எனவே ஆஸ்திரேலியர்களுக்குத்தான் நெருக்கடி. நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தப் போவது உறுதி.

நாங்கள் வீரர்கள் சந்திப்பில் இது பற்றி பேசியுள்ளோம். அண்டர்-19 அணிக்கு எதிராக தடுமாறினால் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப்போவது எப்படி? என்பது பற்றி நாங்கள் வலுவாக அணி வீரர்களிடம் எச்சரித்துள்ளோம்.

யார் அணியை பற்றி எது கூறியிருந்தாலும் அது எங்களது கவனத்தை சிதறடிக்காது. அணியைப் பற்றிய மோசமான கருத்துக்கள் அணி வீரர்களை நன்றாக விளையாட உற்சாகமூட்டும். விமர்சகர்கள் தவறு என்பதை நிரூபிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீங்கள் நினைப்பதை விட சிறப்பாகவே ஆடப்போகிறோம்.

இவ்வாறு கூறினார் கர்ட்லி ஆம்புரோஸ்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/article7966642.ece

  • தொடங்கியவர்
வோஜஸ், மார்ஷ் அதிரடி; அவுஸ்திரேலியாவுக்கு 438/3
 
 

article_1449738959-TamilvogmarshsAus-WI.அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இன்றைய முதல்நாளில், அவுஸ்திரேலிய அணி, அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஹோபார்டில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, முதல்நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 438 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

ஆரம்பத்திலிருந்தே அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அவ்வணி, முதலாவது விக்கெட்டுக்காக 11 ஓவர்களில் 75 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்தது. அதன் பின்னர் விக்கெட்டுகள் இழக்கப்பட்டு, 3 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களுடன், சற்றுத் தடுமாற்ற நிலையை அவ்வணி எதிர்கொண்ட போதிலும், இணை சேர்ந்த அடம் வோஜஸ், ஷோர் மார்ஷ் இருவரும், பிரிக்கப்படாத 317 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

துடுப்பாட்டத்தில், அடம் வோஜஸ் ஆட்டமிழக்காமல் 174 (204), ஆட்டமிழக்காமல் ஷோன் மார்ஷ் 139 (205), டேவிட் வோணர் 64 (61), ஜோ பேர்ண்ஸ் 33 (43) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், ஜோமல் வரிக்கன் 2 விக்கெட்டுகளையும் ஷனொன் கப்ரியல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

- See more at: http://www.tamilmirror.lk/161110#sthash.owLAXyIJ.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா   583/4d
மேற்கு இந்திய தீவுகள்  106/5 (37.5 ov)
  • தொடங்கியவர்
 
அவுஸ்திரேலியாவுக்கெதிராக மேற்கிந்தியத் தீவுகள் தடுமாற்றம்
 

article_1449820624-228805.jpgஅவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையேயான, ஹோபார்ட்டில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின், இன்றைய இரண்டாம் நாள் முடிவில், தமது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 207 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தற்போது களத்தில், டரன் பிராவோ 94 ஓட்டங்களுடனும் கேமர் ரோச் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இவர்களைத் தவிர, வேறு எவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சொல்லிக் கொள்ளும் படியாக ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நேதன் லயோன் மூன்று விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹெசில்வூட் இரண்டு விக்கெட்டுக்களையும் பீற்றர் சிடில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக, இன்றைய நாளின் மதிய இடைவேளையின் போது, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியானது, நான்கு விக்கெட் இழப்புக்கு 583 ஓட்டங்களைப் பெற்றபோது தமது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, அடம் வொஜஸ், ஆட்டமிழக்காமல் 269 ஓட்டங்களையும் ஷோர்ன் மார்ஷ் 182 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஜோமெல் வொரிக்கான் மூன்று விக்கெட்டுகளையும் ஷனோன் கப்ரியல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

- See more at: http://www.tamilmirror.lk/161208/%E0%AE%85%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-#sthash.F0hN13Cb.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

4-வது விக்கெட்டுக்காக 449 ரன்கள்: வோஜஸ், ஷான் மார்ஷ் புதிய டெஸ்ட் சாதனை

 

 
  • 4-வது விக்கெட்டுக்காக புதிய டெஸ்ட் சாதனை நிகழ்த்திய ஆடம் வோஜஸ்-ஷான் மார்ஷ். | படம்: ஏ.எஃப்.பி.
    4-வது விக்கெட்டுக்காக புதிய டெஸ்ட் சாதனை நிகழ்த்திய ஆடம் வோஜஸ்-ஷான் மார்ஷ். | படம்: ஏ.எஃப்.பி.
  • பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டேரன் பிராவோ. | படம்: ஏ.பி.
    பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டேரன் பிராவோ. | படம்: ஏ.பி.

ஹோபார்ட்டில் காய்ந்து வரும் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீர்ர்களான ஆடம் வோஜஸ் (269 நாட் அவுட்), ஷான் மார்ஷ் (182) இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 449 ரன்களைச் சேர்த்து புதிய டெஸ்ட் சாதனை படைத்துள்ளனர்.

அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து அதிகபட்சமாக சேர்க்கப்பட்ட ரன்கள் இதுவே. இதற்கு முன்பாக கராச்சியில் 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஜெயவர்தனே, சமரவீரா ஆகியோர் 4-வது விக்கெட்டுக்காக சேர்த்த 437 ரன்கள் சாதனையை வோஜஸ், மார்ஷ் உடைத்தனர்.

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜோடி சேர்ந்து அதிக ரன்களைச் சேர்த்த வகையில் உலக சாதனையை வைத்திருப்பவர்கள் இலங்கை வீரர்களான சங்கக்காரா-ஜெயவர்தனே ஜோடியாகும், இவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006-ம் ஆண்டு கொழும்புவில் 3-வது விக்கெட்டுக்காக 624 ரன்களைச் சேர்த்து உலக சாதனையை வைத்துள்ளனர்.

2-ம் இடத்திலும் இலங்கை ஜோடியான சனத் ஜெயசூரியா-மகாணாமா ஜோடியே உள்ளது, இவர்கள் இந்தியாவை புரட்டி எடுத்த அந்த டெஸ்ட் போட்டியில் 2-வது விக்கெட்டுக்காக 576 ரன்களைச் சேர்த்தனர். அதாவது 39/1 பிறகு அடுத்த விக்கெட் 615-ல் விழுந்தது.

தற்போது மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா சிலசாதனைகளை உடைக்கத் திட்டமிட்டபடி முதலில் 4-வது விக்கெட்டுக்காக உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வோஜஸ்-ஷான் மார்ஷ் இன்னும் 3 ரன்கள் சேர்த்திருந்தால் ஆஸ்திரேலியா டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச ஜோடி ரன்கள் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கும். டான் பிராட்மேன், பில் போன்ஸ்ஃபோர்ட் ஆகியோர் ஓவல் மைதானத்தில் 1934-ம் ஆண்டு 451 ரன்களை குவித்ததே சிறந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் ஜோடி ரன் சேர்ப்பு சாதனையாகும். இதனால் வோஜஸ்-மார்ஷ் சாதனை ஆஸி. டெஸ்ட் வரலாற்றில் தற்போது 2-ம் இடத்தில் உள்ளது.

நேற்று 438/3 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா இன்று 583/4 என்று டிக்ளேர் செய்தது. ஆடம் வோஜஸ் 285 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் 269 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஷான் மார்ஷ் 266 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 182 ரன்கள் குவித்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் வாரிக்கன்னிடம் வீழ்ந்தார். மிட்செல் மார்ஷ் 1 ரன் எடுத்து நாட் அவுட்டாக இருந்த போது டிக்ளேர் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 2-ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. டேரன் பிராவோ 94 ரன்களுடனும், கிமார் ரோச் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பிராத்வெய்ட் 2 ரன்களில் ஹேசில்வுட்டிடம் எல்.பி.ஆனார். சந்திரிகா 25 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். தன்னம்பிக்கையுடன் ஆடிய அவர் லயன் வீசிய ஒரு ஆஃப் பிரேக் பந்துக்கு அடுத்த பந்து திரும்பாது சென்ற போது டிரைவ் ஆடி எட்ஜ் செய்து ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சாமுயெல்ஸ் துயரம் தொடர்ந்தது 9 ரன்களில் லயன் வீசிய பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பந்தின் லைனை தவறாக வாசித்த அவர் டிரைவ் ஆட பந்து சரியாகச் சிக்கவில்லை. இது ஒரு அபாரமான கேட்ச் ஆகும். இடது புறம் பாய்ந்து பிடித்தார் லயன். பழைய இந்திய ஸ்பின்னர் பிரசன்னா இப்படியாக சில இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தியதை நினைவூட்டியது இந்த அவுட்.

அதே ஓவரின் கடைசி பந்தில் பிளாக்வுட் ரன் எடுக்காமல் நேதன் லயனின் உள்ளே திரும்பிய ஆஃப் ஸ்பின் பந்தை தளர்வாக ஆடாமல் இறுக்கமாக ஆடியதால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஷார்ட் லெக் திசையில் பர்ன்ஸ் கையில் கேட்ச் ஆனது.

தினேஷ் ராம்தின் இறங்கி 8 ரன்கள் எடுப்பதற்குள் தவியாய் தவித்து பிறகு ஹேசில்வுட்டின் முன்னால் வந்து ஆட வேண்டிய பந்தை பின்னால் சென்று ஸ்டம்ப்களை இழந்தார்.

கேப்டன் ஜேசன் ஹோல்டர் 15 ரன்கள் எடுத்து பீட்டர் சிடில் பந்தில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு எல்.பி. ஆகி வெளியேறினார். அவர் 3-வது நடுவரிடம் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால் ரிப்ளேயில் பந்து ஸ்டம்புகளுக்கு மேலாகச் சென்றது தெரிந்தது. 116/6 என்ற நிலையிலிருந்து டேரன் பிராவோ, கிமார் ரோச் 207 ரன்கள் வரை மேலும் சேதமேற்படமால் கொண்டு சென்றனர். டேரன் பிராவோ தொடக்க நிலை சந்தேகங்களுக்குப் பிறகு அபாரமான பவுண்டரிகளை அடித்தார். அவர் தன் 94 ரன்களில் 17 பவுண்டரிகளை அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 3 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், சிடில் ஒரு (ஓசி) விக்கெட்டையும் கைப்பற்றினர். மே.இ.தீவுகள் 207/6.

http://tamil.thehindu.com/sports/4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-449-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article7976986.ece

  • தொடங்கியவர்
மே. தீவுகளுக்கெதிராக அவுஸிக்கு இனிங்ஸ் வெற்றி
 
12-12-2015 10:04 AM
Comments - 0       Views - 6

article_1449894968-Aus-Win.jpg

அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி, ஓர் இனிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

ஹோபார்டில் இடம்பெற்றுவந்த இப்போட்டியில், 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களுடன், இன்றைய நாளை மேற்கிந்தியத் தீவுகள் ஆரம்பித்தது.

ஆனால், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில், டெரன் பிராவோ 108 ஓட்டங்களையும் கேமர் றோச் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், ஜொஷ் ஹேஸல்வூட் 4 விக்கெட்டுகளையும் நேதன் லையன் 3 விக்கெட்டுகளையும் பீற்றர் சிடில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, முன்னரைவிட மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. 5 விக்கெட்டுகளை இழந்து 30 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, இறுதியில் 148 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஓர் இனிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில், தனித்து நின்று போராடிய கிறெய்க் பிறெத்வெய்ட், 94 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்த வீரரும், 20 ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் ஜேம்ஸ் பற்றின்சன் 5 விக்கெட்டுகளையும் ஜொஷ் ஹேஸல்வூட் 3 விக்கெட்டுகளையும் மிற்சல் மார்ஷ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த அவுஸ்திரேலிய அணி, அடம் வோஜஸின் ஆட்டமிழக்காத 269 ஓட்டங்கள், ஷோன் மார்ஷின் 182 ஓட்டங்கள், டேவிட் வோணரின் 64 ஓட்டங்கள், ஜோ பேர்ண்ஸின் 33 ஓட்டங்களின் துணையோடு 4 விக்கெட்டுகளை இழந்து 583 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் நாயகனாக, அவுஸ்திரேலியாவின் அடம் வோஜஸ் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/161263#sthash.xl4W3eua.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

மே.இந்தியத் தீவுகள் இப்படி அடி மேல், அடி வாங்குவதைப் பார்த்து ஹரி சோபர்ஸ் தற்கொலை செய்யப் போகிறார்

  • தொடங்கியவர்

’’தோல்வி எங்களுக்கு பின்னடைவு இல்லை’’ ஹோல்டர்

December 13, 2015

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் எங்களது அணியின் படுதோல்வி எங்களுக்கு பின்னடைவு என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது என மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

jason-holder-wi-wc

ஒபர் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 212 ஓட்டங்களால் இணிங்ஸ் தோல்வியடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பே மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணியிடம் படு தோல்வியடைந்தே அங்கு சென்றது. இருப்பினும் தனமானம் விட்டுக்கொடுக்காது, மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்திரேலியா அணியை துவம்சம் செய்வோம் என கூறியிருந்த நிலையில் அதற்கு தக்க பதிலடியை முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா அணி கொடுத்துள்ளது.

இந் நிலையில், இனிங்ஸ் படு தோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது வரை, தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் வாதாடி வருகின்றது. இத் தோல்வி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் கூறுகையில்,

இந்த படுதோல்வி எங்களுக்கு பின்னடைவு என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. கடந்த காலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். அதேபோல் தங்களால் சரியான போட்டியை ஏற்படுத்த முடியும்.

அவுஸ்திரேலியா அணிக்கெதிராக மேற்கிந்திய தீவில் விளையாடிய பிறகு நாங்கள் இங்கிலாந்திற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு எதிராக சிறந்த போட்டியை எற்படுத்தினோம். தற்போது சற்று பின் தங்கியுள்ளோம். ஆனாலும் நாங்கள் வீரர்கள் ஓய்வறையில் நல்ல உணர்வுடன்தான் இருக்கிறோம்.

நாங்கள் சில ஒருநாள் தொடர்களிலும், முதல் தர போட்டிகளிலும் விளையாடிய பிறகு இங்கு வந்துள்ளோம். வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆகவே, டெஸ்ட் போட்டி ஐந்து நாட்கள் போட்டி என்பதால் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

நாங்கள் நல்ல நிலையில்தான் இருந்தோம், ஆனால் எங்களால் தொடர்ச்சியாக போட்டி கால முழுவதும் தொடர்முடியவில்லை என்று உணர்கிறேன். நீண்ட நேரம் சிறப்பாக விளையாடுவது தேவை. என தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/sports/?p=5516&cat=2

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

2 வது டெஸ்ட் முதல் நாள் ஆட்ட முடிவில்

அவுஸ்திரேலியா 345/3 (90.0 ov)

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்த ஜேசன் ஹோல்டர்: ஆஸ்திரேலியா 345/3

 

 
சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஜோ பர்ன்ஸ் மட்டையை உயர்த்துகிறார், அருகில் மற்றொரு சத நாயகன் உஸ்மான் கவாஜா. | படம்: கெட்டி.
சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஜோ பர்ன்ஸ் மட்டையை உயர்த்துகிறார், அருகில் மற்றொரு சத நாயகன் உஸ்மான் கவாஜா. | படம்: கெட்டி.

மெல்பர்னில் சனிக்கிழமை தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் ஸ்மித் 32 ரன்களுடனும், ஆடம் வோஜஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 16 பவுண்டரி 1 சிக்சருடன் 128 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கவாஜா 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 144 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 258 ரன்களைச் சேர்த்தனர்.

மெல்போர்னில் இதுவரை டெஸ்ட், ஒருநாள் சதம் காணாத டேவிட் வார்னர், அதற்கான மூடில் இறங்கினார். 5 பவுண்டரிகளை விளாசி 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் டெய்லர் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட நினைத்தார். ஆனால் ஷாட் ஆடும் போது மட்டை திரும்பியது, இதனால் ஆஃப் திசைக்கு சென்ற கேட்சை ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரிலிருந்து வலது புறம் ஓடி கேட்ச் செய்தார் சாமுயெல்ஸ். ஆனால் படுமோசமான பீல்டிங்குக்காக கடும் விமர்சனத்தைச் சந்தித்து வரும் மர்லான் சாமுயெல்ஸ் இந்தக் கேட்சையும் தட்டித் தட்டி விட்டிருப்பார், கடைசியில் ஒருவழியாக பிடித்துவிட்டார்.

பிறகு உஸ்மான் கவாஜாவுக்கு அவர் கேட்ச் ஒன்றையும் கோட்டை விட்டார். கவாஜா அப்போது 142 ரன்களில் இருந்தார். இருந்தாலும் கைக்கு வந்த கேட்சை விட்டார் சாமுயேல்ஸ். கடைசியில் அவர் டெய்லரின் லெக் திசை பந்தை பிளிக் செய்ய முயன்று ராம்தின்னிடம் கேட்ச் கொடுத்து 144 ரன்களில் வெளியேறினார். சாமுயேல்சின் அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு நிற்பதாக ஹோபார்ட் டெஸ்ட் போட்டியிலேயே விமர்சனம் எழுந்தது. மேலும் ஆட்டத்தில் கவனமில்லாமல் விட்டேத்தி மனோபாவத்துடன் செயல்படுவதாகவும் அவர் மீது கடும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

டாஸ் வென்ற ஜேசன் ஹோல்டர் ஓரளவுக்கு பசும்புல் காட்டப்பட்டிருந்த பிட்சில் ஆஸ்திரேலியாவை அவதிக்குள்ளாக்க பீல்டிங் தேர்வு செய்தார் என்பதை விட அத்தகைய பிட்சில் முதலில் பேட் செய்து சடுதியில் ஆல் அவுட் ஆகிவிடுவோம் என்ற பயத்தில்தான் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்திருக்கிறார் என்றே கருத நேரிடுகிறது.

வார்னர் நல்ல வேளையாக அவுட் ஆனார். இல்லையெனில் மே.இ.தீவுகள் நிலைமை இன்னும் பரிதாபமாகியிருக்கும். கவாஜா 50-வது பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்தார். ஆனாலும் அவர் நெருக்கடியைச் சந்திக்கவில்லை, களவியூகம் எளிதில் ஒன்று, இரண்டு என்று ரன்களை எடுக்க வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. கவாஜா இந்த நிலையில் டெய்லர் பந்தை எட்ஜ் செய்து கேட்ச் வாய்ப்பு கொடுத்தார், ஆனால் ஜெர்மைன் பிளாக்வுட் அங்கு எச்சரிக்கையாக இல்லை. இது கடினமான வாய்ப்புதான், ஆனால் மே.இ.தீவுகள் இத்தகைய கேட்ச்களை பிடித்தேயாக வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நிலையிலிருந்து கடைசி 2 மணி நேர ஆட்டத்தின் மத்தியப் பகுதி வரை மே.இ.தீவுகள் பந்து வீச்சு விக்கெட் எடுக்கும் தரத்தில் இல்லை. ஒரு நேரத்தில் பிராத்வெய்ட் ஜெண்டில் ஆஃப் ஸ்பின்னர்களை வீச ஆஃப் திசையில் 7பீல்டர்கள் நிறுத்தப்பட்டனர். பிராத்வெய்ட் மிகவும் வெளியே வீசினார். நடுவர் இருமுறை வைடு என்று அறிவித்தார். கடைசியில் ஒருவழியாக பிராத்வெய்ட் பந்தை மேலேறி வந்து அடிக்கும் முயற்சியில் 128 ரன்களில் ஸ்டம்ப்டு ஆனார் பர்ன்ஸ்.

உஸ்மான் கவாஜா டெய்லர் பந்தில் ராம்தினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்மித் 32 ரன்களுடனும் வோஜஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், இனி அடுத்த விக்கெட் எப்போது விழுமோ?

ஒரு விசித்திர புள்ளிவிவரம்:

இன்று ஜோ பர்ன்ஸ் அவுட் ஆவதற்கு முன்பாக 2 டெஸ்ட் போட்டிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 700 ரன்களை எடுத்தது.

2 டெஸ்ட் போட்டிகளுக்கிடையே என்பதால் இது அதிகாரபூர்வ புள்ளிவிவரக் கணக்கில் சேராது. ஆனால் மே.இ.தீவுகளின் பரிதாப நிலையை சுட்டிக் காட்ட வேண்டுமானால் ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் வார்னர் அவுட் ஆகும் போது ஆஸ்திரேலியா 121/3 என்று இருந்தது. அதன் பிறகுதான் ஆடம் வோஜஸ், ஷான் மார்ஷ் இணைந்து டெஸ்ட் சாதனை நிகழ்த்தப்பட்டது, அதன் பிறகு ஷான் மார்ஷ் கடந்த போட்டியில் அவுட் ஆனதன் மூலம் ஒரு விக்கெட், பிறகு தற்போது மெல்போர்னில் வார்னர் அவுட் ஆன வகையில் 2-வது விக்கெட், ஆனால் இடையில் சேர்க்கப்பட்ட ரன்களோ 749! இதுதான் மே.இ.தீவுகள் அணியின் நிலை.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3453/article8031867.ece?homepage=true

  • தொடங்கியவர்
இரண்டாம் நாள்  ஆட்ட முடிவில்
ஆஸ்திரேலியா    551/3d
மே.இந்தியத் தீவுகள் 91/6 (43.0 ov) 
Spoiler
இந்த அநியாயம் நம்ம ரகுவின் கண்ணில் படதா:grin:
  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா சகலதுறைகளிலும் அபாரம் மேற்கிந்தியத் தீவுகள் மீண்டும் தடுமாற்றம்
2015-12-28 10:27:23

மெல்பர்ன் கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா துடுப்­பாட்­டக்­கா­ரர்கள் நால்­வ­ரது அபார சதங்­களும் மூவ­ரது துல்­லி­ய­மான பந்­து­வீச்சும் மேற்­கிந்­தியத் தீவு­களை மீண்டும் திக்­கு­முக்­காட வைத்­துள்­ளன.

 

13910_4515684.jpgகைவி­சேட நாளான (பொக்ஸிங் டே) நேற்­று­முன்­தினம் ஆரம்­ப­மான இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டு­மாறு அழைக்­கப்­பட்ட அவுஸ்­தி­ரே­லியா தனது முத­லா­வது இன்­னிங்ஸை 3 விக்கெட் இழப்­புக்கு 551 ஓட்­டங்கள் என்ற நிலையில் நிறுத்­திக்­கொண்­டது.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தாடும் மேற்­கிந்­தியத் தீவு­கள் அதன் முத­லா­வது இன்­னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடி­வின்­போது 6 விக்­கெட்­களை இழந்து 91 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றி­ருந்­தது.

 

போட்­டியின் முதல் நாளன்று ஐந்­தா­வது ஓவரில் மொத்த எண்­ணிக்கை  29 ஓட்­டங்­க­ளாக இருந்த­போது டேவிட் வோர்­னரை 23 ஓட்­டங்­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லியா இழந்த­போ­திலும் ஜோ பேர்ன்ஸ் (128 ஓட்­டங்கள்), உஸ்மான் கவாஜா (144) ஆகிய இரு­வரும் இரண்­டா­வது விக்­கெட்டில் 258 ஓட்­டங்­களைப் பகிர்ந்து அவுஸ்­தி­ரே­லியாவை பலம்­வாய்ந்த நிலைக்கு இட்டுச் சென்­றனர். 

 

இவர்கள் இரு­வரும் ஆட்­ட­மி­ழந்த பின்னர் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் அடம் வோஜஸும் வீழ்த்­தப்­ப­டாத நான்­கா­வது விக்­கெட்டில் 223 ஓட்­டங்­களைப் பகிர்ந்து மேற்­கிந்­தியத் தீவு­களை தர்­ம­சங்­க­ட­மான நிலைக்குத் தள்­ளினர்.

 

முதல் நாள் ஆட்ட நேர முடி­வின்­போது ஆட்­ட­மி­ழக்­காமல்  இருந்த ஸ்டீவன் ஸ்மித் (32), வோஜஸ் (10) ஆகிய இரு­வரும் இரண்டாம் நாளன்று அபார ஆற்­றலை துடுப்­பாட்­டத்தில் வெளிப்­ப­டுத்தி முறையே 134 ஓட்­டங்­க­ளு­டனும் 106 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­த­போது ஸ்மித் தமது அணியின் இன்­னிங்ஸை நிறுத்­திக்­கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து 43 ஓவர்கள் தட்­டுத்­த­டு­மாறி துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் 6 விக்­கெட்­களை இழந்து 91 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.
ஜேர்மெய்ன் பிளக்வூட் (28), ராஜேந்த்ர சந்;ரிக்க (25) ஆகிய இரு­வரே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

 

நதன் லியொன் (18 க்கு 2), பீட்டர் சிட்ல் (19 க்கு 2 விக்.), ஜேம்ஸ் பெட்டின்சன் (36 க்கு 2 விக்.) ஆகியோர் வீழ்ந்த 6 விக்கெட்களைப் பகிர்ந்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=13910#sthash.tooDkhpL.dpuf
  • தொடங்கியவர்
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக உச்சத்தில் அவுஸ்திரேலியா
 
28-12-2015 12:25 PM
Comments - 0       Views - 2

article_1451303034-Tamilsmith70WI.jpgஅவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இன்றைய 3ஆவது நாள் முடிவில், அவுஸ்திரேலிய அணி உச்சநிலையில் காணப்படுகிறது.

6 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களுடன் தடுமாற்றத்துடன் இன்றைய நாளைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஓரளவு போராட்டத்தை வெளிப்படுத்தியது.
7ஆவது விக்கெட்டுக்காக 90 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் டெரன் பிராவோ 81, அறிமுக வீரர் கிறெய்க் பிறெத்வெய்ட் 59, ஜேர்மைன் பிளக்வூட் 28, ராஜேந்திர சந்திரிகா 25 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், ஜேம்ஸ் பற்றின்சன், நேதன் லையன் இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் பீற்றர் சிடில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

280 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில், மீண்டும் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாளில் 32 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைக் குவித்துள்ளது. அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், 70 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் உஸ்மான் க்வாஜா 61 பந்துகளில் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் கிறெய்க் பிறெத்வெய்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 551 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/162518/%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF-#sthash.BwNs0OiQ.dpuf
  • தொடங்கியவர்
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி
 
 

article_1451383269-tamilboc2LEAD.jpgஅவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், 177 ஓட்டங்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, அத்தொரையும் கைப்பற்றியுள்ளது.

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவுஸ்திரேலிய அணி, மேலதிகமாகத் துடுப்பெடுத்தாடாது, 460 ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலக்காக வழங்கியது.

இத்தொடரின் ஏனைய இனிங்ஸ்களைப் போலல்லாது, ஓரளவு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்ற அவ்வணி, ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களுடன் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர் விக்கெட்டுகள் இழக்கப்பட்டு, 5 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களுடன் காணப்பட்டது. 6ஆவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், இறுதியில் 282 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 177 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜேஸன் ஹோல்டர் 68, டினேஷ் ராம்டின் 59, ராஜேந்திர சந்திரிகா 37, கிறெய்க் பிறெய்த்வெய்ட் 31 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், மிற்சல் மார்ஷ் 4, நேதன் லையன் 3, ஜேம்ஸ் பற்றின்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, ஜோ பேர்ண்ஸ், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், அடம் வோஜஸ் ஆகியோரின் சதங்களின் உதவியோடு 551 ஓட்டங்களைப் பெற்றதோடு, மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெரன் பிராவோவின் 81 ஓட்டங்களின் துணையோடு, 271 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

இப்போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அவுஸ்திரேலியாவின் வெற்றிக்குப் பங்களிப்பை வழங்கிய நேதன் லையன், இப்போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/162599/%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%B1-#sthash.y2BZrn2W.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மே.இ.தீவுகளை வீழ்த்தி 20 ஆண்டுகளாக பிராங்க் வொரல் கோப்பையை தக்கவைத்த ஆஸ்திரேலியா

 
கடைசி விக்கெட்டை வீழ்த்தி வெற்றியைக் கொண்டாடும் ஆஸி. வீரர்கள். | படம்: கெட்டி.
கடைசி விக்கெட்டை வீழ்த்தி வெற்றியைக் கொண்டாடும் ஆஸி. வீரர்கள். | படம்: கெட்டி.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளை 177 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1995-ம் ஆண்டு முதல் 2015 வரை பிராங்க் வொரல் டெஸ்ட் டிராபியைத் தக்கவைத்து சாதனை புரிந்துள்ளது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்று ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

மே.இ.தீவுகள் மண்ணில் 1995-ம் ஆண்டு மார்க் டெய்லர் தலைமையில் சாதித்த டெஸ்ட் தொடர் வெற்றி தற்போது வரை நீடித்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 179/3 என்ற நிலையில் டிக்ளேர் செய்ய, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் சரணடையாமல் சற்றே போராட்ட குணத்தை வெளிப்படுத்தி 282 ரன்கள் வரைத் தாக்குப் பிடித்தது.

நேதன் லயன் அருமையாக வீசி இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். மிட்செல் மார்ஷ் தனது மிதவேகப்பந்து வீச்சின் மூலம் அவ்வப்போது வேகம் கூட்டி பந்துகளை எழும்பச் செய்து அதிர்ச்சியளித்தார். இதனால் 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

தொடக்க வீரர்களான கிரெய்க் பிராத்வெய்ட் மற்றும் ராஜேந்திர சந்திரிக்கா ஆகியோர் ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரது தொடக்க ஓவர்களை நிதானத்துடன் எதிர்கொண்டனர். இருவரும் 11 ஓவர்கள் தாக்குப் பிடித்து 35 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 34 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த கிரெய்க் பிராத்வெய்ட் கட் ஆட முடியாத நேதன் லயன் பந்தை கட் ஆட முயன்று ஸ்லிப்பில் ஸ்மித் கையில் சிக்கி நடையைக் கட்டினார்.

அடுத்த 22 ஓவர்களை டேரன் பிராவோ, சந்திரிகா ஆகியோர் சிறப்பான தடுப்பாட்டத்துடன் அவ்வப்போது சில ஷாட்களுடன் ஆடினர். 2-வது விக்கெட்டுக்காக 48 ரன்கள் சேர்த்தனர், உணவு இடைவேளைக்கு சற்றுமுன் ஹேசில்வுட் நோ-பாலில் டேரன் பிராவோ எட்ஜ் செய்தார், அது கேட்ச் ஆனாலும் நாட் அவுட். தப்பித்தார் பிராவோ.

ஆனால் பீட்டர் சிடில் பந்தில் 21 ரன்களில் அவரது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. விக்கெட் கீப்பர் நெவிலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சந்திரிகா 130 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டின்சன் பந்தில் எல்.பி. ஆனார். சாமுயெல்ஸ் 19 ரன்னில் மிட்செல் மார்ஷ் பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மே.இ.தீவுகள் 118/4 என்று ஆனது. பிளாக்வுட், ராம்தின் தேநீர் இடைவேளை வரை சேதமேற்படமால் ஸ்கோரை 146 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

தேநீர் இடைவேளை முடிந்தவுடன் 150 ரன்களாக இருந்த போது 20 ரன்கள் எடுத்த பிளாக்வுட், நேதன் லயன் பந்தில் எல்.பி.ஆனார். ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடச் சென்று பந்தைக் கோட்டை விட பந்து பின் தொடையில் பட்டு எல்.பி.ஆனது.

அதன் பிறகு தினேஷ் ராம்தின் (59), கேப்டன் ஹோல்டர் (68) ஆகியோர் 6-வது விக்கெட்டுக்காக 100 ரன்களைச் சேர்த்தனர். ராம்தின், ஹோல்டர் இருவரையும் மிட்செல் மார்ஷ் வீழ்த்த சி.ஆர்.பிராத்வெய்ட், கிமார் ரோச், டெய்லர் ஆகியோர் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். கடைசி 5 விக்கெட்டுகளை 32 ரன்களுக்கு இழந்த மே.இ.தீவுகள் 88.3 ஓவர்களில் 282 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைந்தது.

மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 3 விக்கெட்டுகளையும், பேட்டின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிடில் ஒருவிக்கெட்டை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றி பிராங்க் வொரல் டெஸ்ட் டிராபியை 20-வது ஆண்டாக தக்கவைத்தது ஆஸ்திரேலியா.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article8041690.ece

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியாவுக்கெதிராக மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் தடுமாற்றம்
 

article_1451813233-TamilagAussie.jpgஅவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவருகின்ற நிலையில், இன்று சிட்னியில் ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் மேற்கிந்தியத்தீவுகள் அணி, முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில் கார்லோஸ் பிராத்வெயிட் 35 ஓட்டங்களுடனும் தினேஷ் ராம்டின் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, கிரேய்க் பிராத்வெயிட் 85 ஓட்டங்களுடனும் டரன் பிராவோ 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்திருந்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நேதன் லயோன் இரண்டு விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹேசில்வூட், ஸ்டீவ் ஒஃப் கெவி, ஜேம்ஸ் பட்டின்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில், அவுஸ்திரேலிய அணி சார்பாக இரண்டாவது போட்டியில் பங்கேற்ற பீற்றர் சிடிலுக்குப் பதிலாக ஸ்டீவ் ஒஃப் கெவியும் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக, ராஜேந்திர சந்திரிக்காவுக்குப் பதில் ஷை ஹோப்பும் இப்போட்டியில் பங்கேற்றனர்.

தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி கொண்ட அவுஸ்திரேலிய அணி, ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/162919/%E0%AE%85%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-#sthash.FPnRl03c.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஆசி - மே.தீவுகள்: மழையில் சிக்கியது 2ஆம் நாள்
 
 

article_1451902894-TamilRainaffwiAussie.அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியின் 2ஆவது நாள், மழை காரணமாகப் பாதிக்கப்பட்டதாக அமைந்தது. 2ஆவது நாளில், 11.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்படக்கூடியதாக அமைந்தது.

6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களுடன் இரண்டாவது நாளை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.

ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களுடன் 2ஆவது நாளை ஆரம்பித்த கார்லொஸ் பிறெத்வெய்ட், 71 பந்துகளில் 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டினேஷ் ராம்டின், 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் காணப்படுகிறார். முன்னதாக, கிறெய்க் பிறெத்வெய்ட், 85, டெரன் பிராவோ 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில், ஜேம்ஸ் பற்றின்சன், நேதன் லையன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் ஜொஷ் ஹேஸல்வூட், ஸ்டீவ் ஓப்கீ இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

- See more at: http://www.tamilmirror.lk/163012#sthash.6OhX2vA9.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஆசி - மே.தீவுகள்: நான்காவது நாளும் கைவிடப்பட்டது
 
 

article_1452084279-Tamil4wsemaAussie.jpgஅவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியின் 4ஆவது நாள் ஆட்டமும் இன்று கைவிடப்பட்டது.

ஏற்கெனவே, மழை காரணமாக முதலாவது நாளில் 75 ஓவர்களும் 2ஆவது நாளில் 11.2 ஓவர்களும் மாத்திரமே வீசப்பட்டன. மூன்றாவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, நான்காவது நாள் ஆட்டமும் இன்று கைவிடப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இனிங்ஸில், 7 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.tamilmirror.lk/163220/%E0%AE%86%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-#sthash.l9IuoOjJ.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிராக தொடரை வென்றது அவுஸ்திரேலியா

article_1452171533-TamilwisAussie.jpgஅவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் விளையாடியிருந்த நிலையில், இத்தொடரை, 2-0 என்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

இத்தொடரில், இன்று முடிவுக்கு வந்திருந்த 3ஆவது டெஸ்ட் போட்டி, மழை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முற்றிலுமாக 150.1 ஓவர்களே வீசக்கூடியதாக இருந்தது.

இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, தனது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக, கிரேய்க் பிராத்வெயிட் 85, கார்லோஸ் பிராத்வெயிட் 69, டினேஷ் ராம்டீன் 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில், அவுஸ்திரேலியா சார்பாக ஸ்டீவ் ஓஃப் கெவி, நேதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் பற்றின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியபோது, போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டுவர இரு அணிகளின் தலைவர்களும் இணங்கியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக 122 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற டேவிட் வோணர், சிட்னி மைதானத்தில் டெஸ்ட் போட்டியோன்றில் குறைந்த பந்துகளில் (82) சதம் பெற்றவர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். வீழ்த்தப்பட்ட இரண்டு விக்கெட்டுகளையும் ஜோமெல் வொரிக்கான் கைப்பற்றியிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக டேவிட் வோணரும், தொடரின் நாயகனாக அடம் வொஜஸும் தெரிவாகினர்.

- See more at: http://www.tamilmirror.lk/163305#sthash.WpwfOcSh.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.