Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ல் தொடக்கம்!

Featured Replies

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ல் தொடக்கம்! இந்தியா- பாக் மார்ச் 19-ல் மோதல்!!
 

 மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி தொடங்குகிறது. இந்தியா முழுவதும் 8 மைதானங்களில் ஏப்ரல் 3-ந் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன.

தர்மசாலாவில் மார்ச் 19-ந் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. இந்த போட்டி தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது.

11-1449824694-bangladesh-team342-600.jpg

குரூப் ஏ,பி
மொத்தம் 16 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. முதல் சுற்றுக்கான குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம்பெறுள்ளன. குரூப் பி பிரிவில் ஜிம்பாப்வே, ஹாங்ஹாங், ஸ்காட்லாந்த், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 2 பிரிவுகளில் முதலிடம் பெறும் 2 அணிகள் சூப்பர் 10 குரூப்புடன் இணைந்து கொள்ளும்.
 
சூப்பர் 10 குரூப்
சூப்பர் 10 குரூப் 1-ல் இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகளும் சூப்பர் 10 குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் உள்ளன. இந்த சூப்பர் 10-பிரிவுகளில் முதல் 2 இடங்களுக்கு வரும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
 
செமி பைனல், பைனல்
அரை இறுதிப் போட்டிகள் டெல்லி மற்றும் மும்பையில் மார்ச் 30, 31 தேதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டிகள் கொல்கத்தாவில் ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும்.
11-1449825054-cricket-ground8352-600.jpg
8 மைதாங்கள்
சென்னை, பெங்களூர், தர்மசாலா, கொல்கத்தா, மொகாலி, மும்பை, நாக்பூர், டெல்லி என 8 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
 
முதல் சாம்பியன் இந்தியா
2007ஆம் ஆண்டு முதன் முறையாக தென்னாப்பிரிக்காவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
 
2009-ல் பாகிஸ்தான்
2009 அம் ஆண்டு டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியனானது. 2010ஆம் ஆண்டு இங்கிலாந்தும் 2012ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியும் 2014ஆம் ஆண்டு இலங்கையும் சாம்பியன் பட்டம் வென்றன.
11-1449824664-india-pakistan7842-600.jpg
இந்தியா- பாக் மேட்ச்
தர்மசாலாவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மார்ச் 19-ந் தேதி மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-t20-india-pakistan-same-group-face-off-on-march-19-242039.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

2016 மார்ச்சில் ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டிகள்: ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான்

 

2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய-இலங்கை கேப்டன்கள் தோனி, மலிங்கா கோப்பையுடன். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்.
2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய-இலங்கை கேப்டன்கள் தோனி, மலிங்கா கோப்பையுடன். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்.

10 அணிகள் பங்கேற்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளின் பிரதான சுற்று மார்ச் 15-ம் தேதியன்று இந்தியா-நியூஸிலாந்து மோதும் போட்டியுடன் தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் பங்கேற்கும் ஐசிசி உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி பெறும் ஒரு அணியும் இடம்பெறுகிறது.

குரூப்-1-ல் கடந்த சாம்பியன் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியுமாக மொத்தம் 10 அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்றில் மோதும் அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

பிரிவு ஏ: வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன்

பிரிவு பி: ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து ஹாங்காங், ஆப்கானிஸ்தான்

தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மார்ச் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தரம்சலா மற்றும் நாக்பூர் மைதானங்களில் நடைபெறுகின்றன்.

தகுதிச் சுற்றுகளில் ஏ-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணி இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ள குரூப் 2-விலும், பி-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணி குரூப் 1 அணிகளான இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுடன் இணையும்.

பிரதான உலகக் கோப்பை டி20 போட்டித் தொடரின் முதல் போட்டியில் மார்ச் 15-ம் தேதியன்று இந்தியா-நியூஸிலாந்து அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.

மார்ச் 19-ம் தேதி தரம்சலாவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பிறகு மார்ச் 23-ம் தேதி தகுதிச் சுற்றுப் போட்டியிலிருந்து பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்ற அணியுடன் இந்தியா பெங்களூருவில் மோதுகிறது, பிறகு மார்ச் 27-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகிறது.

எனவே தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் ஏப்ரல் 3-ம் தேதி வரை தொடர்கிறது. மொத்தமாக 35 போட்டிகள் பெங்களூரு, சென்னை, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாக்பூர், மற்றும் புதுடெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகள் முறையே புதுடெல்லி மற்றும் மும்பையில் நடைபெற, மார்ச் 3-ம் தேதி இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

ஆடவர் அணிகள் உலகக் கோப்பைக்கு மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் டாலர்களாகும். 2014-ம் ஆண்டு தொடரைக் காட்டிலும் இது 86% அதிகரிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1-ல் மார்ச் 16-ம் தேதி இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணி மோதுகிறது. பிறகு இங்கிலாந்து அணி மார்ச் 18-ல் தென் ஆப்பிரிக்காவை மும்பையிலும் தகுதிச் சுற்றிலிருந்து வந்த அணியை மார்ச் 23ம் தேதி புதுடெல்லியிலும் மீண்டும் 26-ம் தேதி புதுடெல்லியில் இலங்கையையும் எதிர்கொள்கிறது.

சூப்பர் 10 மோதும் அணிப் பிரிவுகள் வருமாறு:

குரூப் 1: இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து மற்றும் தகுதிச் சுற்று பிரிவு பி-யில் வென்ற அணி

குரூப் 2 : இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் தகுதிச் சுற்று பிரிவு ஏ-ல் வென்ற அணி.

http://tamil.thehindu.com/sports/2016-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7976396.ece?homepage=true

  • தொடங்கியவர்
2016+%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
 
2016 ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள்: முழு விபரம் print.png
 
 
 

2016 ஆம் ஆண்டு 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்  இந்தியாவில் நடைபெற உள்ளது. 

இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி,  இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும்,

பிரிவு-2-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி பெறும் ஒரு அணிஉட்பட மொத்தமாக 10 அணிகள் மோதவுள்ளன.

121843_1.png

தகுதிச் சுற்றில் மோதும் அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

 பிரிவு ஏ: பங்களதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன்

பிரிவு பி: சிம்பாவே, ஸ்கொட்லாந்து, ஹொங்கொங், ஆப்கானிஸ்தான் 

தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மார்ச் 8-ம் திகதி முதல் 13-ம் திகதி வரை தரம்சலா மற்றும் நாக்பூர் மைதானங்களில் நடைபெறுகின்றன. 

தகுதிச் சுற்றுகளில் ஏ-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணியானது  இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ள பிரிவு 2-விலும், பி-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணி பிரிவு 1 இன் அணிகளான இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுடன் இணையும். 

பிரதான உலகக் கோப்பை டி20 போட்டித் தொடரின் முதல் போட்டியில் மார்ச் 15-ம் திகதியன்று இந்தியா-நியூஸிலாந்து அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.

ஆடவர் அணிகள் உலகக் கோப்பைக்கு மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2014-ம் ஆண்டு தொடரைக் காட்டிலும் இது 86 விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பிரிவு 1-ல் மார்ச் 16-ம் திகதி இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணி மோதுகிறது. பிறகு இங்கிலாந்து அணி மார்ச் 18-ல் தென் ஆப்பிரிக்காவை மும்பையிலும் தகுதிச் சுற்றிலிருந்து வந்த அணியை மார்ச் 23ம் திகதி புதுடெல்லியிலும் மீண்டும் 26-ம் திகதி  புதுடெல்லியில் இலங்கையையும் எதிர்கொள்கிறது. 


Tue, 8 Mar – Zimbabwe v Hong Kong (PM), Nagpur
                     Scotland v Afghanistan (Eve.), Nagpur

Wed, 9 Mar – Bangladesh v Netherlands (PM), Dharamsala
                      Ireland v Oman (Eve.), Dharamsala

Thu, 10 Mar – Scotland v Zimbabwe (PM), Nagpur
                        Hong Kong v Afghanistan (Eve.)

Fri, 11 Mar – Netherlands v Oman (PM), Dharamsala
                     Bangladesh v Ireland (Eve.), Dharamsala

Sat, 12 Mar – Zimbabwe v Afghanistan (PM), Nagpur
                      Scotland v Hong Kong (Eve.), Nagpur


Sun, 13 Mar – Netherlands v Ireland (PM), Dharamsala
                       Bangladesh v Oman (Eve.), Dharamsala

Tue, 15 Mar – India v Bangladesh (W) (PM), Bengaluru
                       New Zealand v Sri Lanka (W) (Eve.), New Delhi
                       New Zealand v India (M) (Eve), Nagpur

Wed, 16 Mar – West Indies v England (M) (PM), Mumbai
                        Pakistan v Q1A (M) (Eve.), Kolkata
                        West Indies v Pakistan (W) (Eve.), Chennai


Thu, 17 Mar – England v Bangladesh (W) (PM), Bengaluru
                       Sri Lanka v Q1B (M) (Eve.), Kolkata

Fri, 18 Mar – New Zealand v Ireland (W) (PM), Mohali
                     Australia v New Zealand (M) (PM), Dharamsala 
                     South Africa v England (M) (Eve.), Mumbai 
                     Australia v South Africa (W) (Eve.), Nagpur

Sat, 19 Mar – India v Pakistan (W) (PM), New Delhi
                      India v Pakistan (M) (Eve.), Dharamsala

Sun, 20 Mar – South Africa v Q1B (M) (PM), Mumbai
                       West Indies v Bangladesh (W) (PM), Chennai
                       Sri Lanka v Ireland (W) (Eve.), Mohali
                       Sri Lanka v West Indies (M) (Eve.), Bengaluru

Mon, 21 Mar – Australia v New Zealand (W) (PM), Nagpur
                       Australia v Q1A (M) (Eve.), Bengaluru

Tue, 22 Mar – England v India (W) (PM), Dharamsala
                       New Zealand v Pakistan (M) (Eve.), Mohali

Wed, 23 Mar – England v Q1B (M) (PM), New Delhi
                       India v Q1A (M), (Eve.), Bengaluru
                        South Africa v Ireland (W) (Eve.), Chennai

Thu, 24 Mar – England v West Indies (W) (Eve.), Dharamsala
                       Australia v Sri Lanka (W) (PM), New Delhi
                        Pakistan v Bangladesh (W) (Eve.), New Delhi

Fri, 25 Mar – Pakistan v Australia (M) (PM), Mohali
                     South Africa v West Indies (M), (Eve.), Nagpur

Sat, 26 Mar – Australia v Ireland (W) (PM), New Delhi
                      Q1A v New Zealand (M) (PM), Kolkata
                      England v Sri Lanka (M) (Eve.), New Delhi
                      South Africa v New Zealand (W) (Eve.), Bengaluru

Sun, 27 Mar – West Indies v India (W) (PM), Mohali
                      India v Australia (M) (Eve.), Mohali
                       England v Pakistan (W) (Eve.), Chennai
                       Q1B v West Indies (M) (PM), Nagpur

Mon, 28 Mar – South Africa v Sri Lanka (W) (PM), Bengaluru 
                       South Africa v Sri Lanka (M) (Eve.), New Delhi

Tue, 29 Mar – Rest/travel day

Wed, 30 Mar – Women’s semi-final (2nd group A v 1st group B) (PM), New Delhi
                        Men’s semi-final (Super 10 Group 1 2nd v Super 10 Group 2 1st) (Eve.), New Delhi

Thu, 31 Mar – Women’s semi-final (1st group A v 2nd group B) (PM), Mumbai
                       Men’s semi-final (Super 10 Group 1 1st v Super 10 Group 2 2nd) (Eve.), Mumbai

Fri, 1 Apr – Rest/travel day

Sat, 2 Apr – Rest/travel day

Sun, 3 April – Women’s final (PM), Kolkata; men’s final (Eve.), Kolkata

http://www.hirunews.lk/tamil/sports/121843/2016-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

12345469_936040679776459_665791913184457

12370807_936040746443119_376055240022008

 

12369215_936041259776401_812038472666816

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.