Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று ஆரம்பிக்கிறது பிக் பாஷ் லீக்

Featured Replies

இன்று ஆரம்பிக்கிறது பிக் பாஷ் லீக்
 
 

article_1450265288-Tami8lsshBBL.jpgஅவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் லீக் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது.

8 அணிகள் பங்குபற்றும் இந்தத் தொடர், ஐ.பி.எல் போன்ற வடிவமைப்பில் இடம்பெறுகின்ற போதிலும், ஓர் அணியில், வெளிநாட்டு வீரர்கள் இருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், பிறிஸ்பேண் ஹீற், ஹொபார்ட் ஹரிகேன்ஸ், மெல்பேண் றெனிகேட்ஸ், மெல்பேண் ஸ்டார்ஸ், பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர் ஆகிய அணிகளே இதில் பங்குபற்றவுள்ளன.
இன்றைய முதற்போட்டியில், சிட்னி தண்டர்ஸ் அணியும் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மோதவுள்ளன.

அணிகளின் விவரம்:

அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ்: தலைவர் - ட்ரவிட் ஹெட். முக்கிய வீரர்கள் - மஹேல ஜெயவர்தன, பிரட் ஹொட்ஜ், அடில் றஷீத், கேன் றிச்சர்ட்ஸன்.

பிறிஸ்பேண் ஹீற்: தலைவர் - ஜேம்ஸ் ஹோப்ஸ். முக்கிய வீரர்கள்: சாமுவேல் பத்ரி, ஜோ பேண்ஸ், பென் கட்டிங், லென்டில் சிமன்ஸ்.

ஹோபார்ட் ஹரிகேன்ஸ்: தலைவர் - டிம் பெய்ன். முக்கிய வீரர்கள் - குமார் சங்கக்கார, டெரன் சமி, ஜோர்ஜ் பெய்லி, டானியல் கிறிஸ்டியன், ஷோன் டெய்ட்.

மெல்பேண் றெனிகேட்ஸ்: தலைவர் - ஆரொன் பின்ச். முக்கிய வீரர்கள் - டுவைன் பிராவோ, டொம் கூப்பர், கிறிஸ் கெயில், ஜேம்ஸ் பற்றின்சன், பீற்றர் நெவில், பீற்றர் சிடில், கமரன் வைட், மத்தியூ வேட்.

மெல்பேண் ஸ்டார்ஸ்: தலைவர் - டேவிட் ஹஸி. முக்கிய வீரர்கள் - ஜேம்ஸ் போக்னர், கெவின் பீற்றர்சன், கிளென் மக்ஸ்வெல், ஜோன் ஹேஸ்டிங்ஸ், லூக் ரைட்.

பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ்: தலைவர் - அடம் வோஜஸ். முக்கிய வீரர்கள் - அஷ்டன் ஏகர், மைக்கல் காபரி, பிரட் ஹொட்ஜ், மைக்கல் கிளிங்கர், ஷோன் மார்ஷ், மிற்சல் மார்ஷ்.

சிட்னி சிக்ஸர்ஸ்: தலைவர் - மொய்ஸஸ் ஹென்றிக்கஸ். முக்கிய வீரர்கள் - ஜக்ஸன் பேர்ட், டக் பொலிங்கர், எட் கொவான், ஜொஹான் போத்தா, பிரட் ஹடின், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன், மிற்சல் ஸ்டார்க்.

சிட்னி தண்டர்ஸ்: தலைவர்: மைக்கல் ஹஸி. முக்கிய வீரர்கள் - பற் கமின்ஸ், பவாட் அஹ்மட், ஈடன் பிளிஸர்ட், ஜக்ஸ் கலிஸ், உஸ்மான் கவாஜா, அன்ட்ரூ மக்டொனால்ட், கிளின்ட் மக்காய், ஷேன் வொற்சன், அன்ட்ரே றசல்.

- See more at: http://www.tamilmirror.lk/161695/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%B7-%E0%AE%B2-%E0%AE%95-#sthash.H9WwoaUD.dpuf
  • தொடங்கியவர்

பிக் பாஷ் போட்டியில் களமிறங்குகிறார் சங்கா..!

 

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான குமார் சங்கக்கார முதல்முறையாக பிக் பாஷ்  லீக்போட்டியில் களமிறங்குகிறார்.

16sangakkara.jpg

பிக் பேஷ் லீக்கில் பங்குபற்றும் முகமாக நேற்றைய தினம்(16) அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தார் . 

குமார் சங்கக்கார ஹோபர்ட் அணிக்ககாவே சங்கக்கார இம்முறை ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளார்.

அங்கு இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், 

இலங்கை நாட்டிற்காக விளையாடும் போது பங்குபற்றிய போட்டிகளை காட்டிலும் தற்போது அதிகளவான போட்டிகளில் தான் பங்குபற்றுவதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன் தற்போது அதிகப்படியான வாய்ப்புக்களும் வந்து குவிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹோபர்ட் அணி தனது முதலாவது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியுடன் எதிர்வரும் ஞாயிறு அன்று மோதவுள்ளது.

http://www.virakesari.lk/article/1125

  • தொடங்கியவர்

பிக் பாஷ் லீக் தொடரில் களமிறங்கும் சங்கா

December 18, 2015

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் களமிறங்கவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரரும், விக்கெட் கீப்பருமான சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

 

தற்போது கவுண்டி போட்டியிலும், பல்வேறு டி20 போட்டிகளிலும் ஆடி வருகிறார். சமீபத்தில் முடிந்த வங்கதேச லீக் போட்டியில் ஆடிய சங்கக்காரா அதிரடி காட்டி அசத்தினார். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் ஹொபார்ட் அணிக்காக விளையாட உள்ளார்.

இது பற்றி பேசிய சங்கக்காரா, “ஓய்வு பெற்ற பிறகு நாட்டிற்காக விளையாடியதை விட அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் இது வித்தியாசமான உணர்வை தருகிறது. அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள தற்போது அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது. தற்போது உள்ள நிலையில் உலகின் அனைத்து பகுதியிலும் சென்று ஆட முடிகிறது. மேலும், எனது உடல்நிலையை பொறுத்தவரை சிறப்பாக உணர்கிறேன். சிறப்பான பயிற்சியின் மூலம் ஹொபார்ட் அணியில் அசத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6011&cat=2

  • தொடங்கியவர்

ஹோபர்ட் அணியை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்

December 21, 2015

அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 95 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதியது.

286016-c52e2d0e-83df-11e4-b7a3-5366c32c384a

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்தது. விக்கெட் கீப்பர் பிராட் ஹாட்டின் 72 ஓட்டங்களும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), சில்க் 41 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஹோபர்ட் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சங்கக்காரா தான் சந்தித்த முதல் பந்திலே ஆட்டமிழந்து டக்-அவுட்டாக வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

2 துடுப்பாட்ட வீரர்கள் டக்- அவுட்டாகவும், 8 பேர் ஒற்றை ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஹோபர்ட் அணி 15.5 ஓவர்களிலே 91 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி வரை போராடிய ஜார்ஜ் பெய்லி 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்து வீச்சில் அசத்திய நாதன் லயன் 23 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். பிராட் ஹாட்டின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6315

  • தொடங்கியவர்

சிட்னி தண்டர்ஸ் அணி ஒரு ஓட்டங்களால் அபார வெற்றி

December 21, 2015

அவுஸ்திரேலியாவில் நடைப்பெற்றுவரும் பிக் பாஷ் லீக் தொடரின் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணி 1 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. மெல்போர்னில் நடைப்பெற்ற இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

kaw-720x480

அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக, கவாஜா 70 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 109 ஓட்டங்களை பெற்று இறுதி வரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார். பந்து வீச்சில், ஹஸ்டிங்ஸ், மெக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 179 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களையே பெற்றது. இதனால் ஒரு ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக, பீட்டசன் 42 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில், ரசில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் ஆட்ட நாயகனாக சிட்னி தண்டர்ஸ் அணியின் கவாஜா தேர்வு செய்யப்பட்டார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6339&cat=1

  • தொடங்கியவர்

20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்

December 23, 2015

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது. அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் நேற்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஹோபர்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதிரடியாக ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் மட்டும் இழந்த நிலையில் 184 ஓட்டங்களை குவித்தது.

286016-c52e2d0e-83df-11e4-b7a3-5366c32c384a

தொடக்க வீரராக களமிறங்கிய அணித்தலைவர் பெய்னே அதிரடியாக விளையாடி 58 பந்தில் 87 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து வந்த சங்கக்காரா 43 ஓட்டங்களும், ஜார்ஜ் பெய்லி 40 ஓட்டங்களும் எடுத்தனர். 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு தொடக்க வீரர்கள் பியர்சன் (29), சிம்மன்ஸ் (16) ஓரளவு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பின்னர் வந்த புளொரோஸ் (42), ரியர்டன் (41) அதிரடியாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெய்னே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6527

  • தொடங்கியவர்

மெல்பேர்ன் ரெனேகட்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்ஸர்ஸ்

December 27, 2015

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பாஷ் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மெல்பேர்ன் ரெனேகட்ஸ் அணியை எதிர்கொண்ட சிட்னி சிக்ஸர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதற்கேற்ப மெல்பேர்ன் ரெனேகட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

 

மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கெய்ல் 33 பந்துகளை எதிர்கொண்டு 46 ஓட்டங்களையும் வெயின் பிராவோ 29 பந்துகளை எதிர்கொண்டு 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள பின்ஞ் 11 பந்துகளை எதிர்கொண்டு 13 ஓட்டங்களை பெற்றார். இதனால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து 173 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்சர்ஸ் 18.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை பெற்று 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அணியின் சார்பில் லம்ப் 63, ஹென்றிக்ஸ் 62 ஓட்டங்களை பெற்றனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6825&cat=2

  • தொடங்கியவர்

மக்கல்லமின் மூக்கை உடைத்தார் பிரட் லீ

December 27, 2015

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ எதிரணியை தனது வேகத்தாலும், பவுன்சர் பந்தாலும் மிரட்டக் கூடியவர். தனது துல்லியத்தன்மை கொண்ட பந்துவீச்சால் அவுஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தவர். அதிவேகப்பந்து வீச்சில் அக்தருக்கு அடுத்த இடத்திலும் உள்ளார்.

இந்த நிலையில் பிக் பாஷ் லீக் டி20 தொடரின் ஒரு போட்டியில் சிட்னி சிக்சர்- பிரிஸ்பேன் ஹேட் அணிகள் மோதியது. இதில் 2வது ஓவரை சிட்னி சிக்சர் அணியின் பிரட் லீ வீசினார். அந்த ஓவரை அதிரடி துடுப்பாட்ட வீரரான மக்கல்லம் எதிர்கொண்டார். அப்போது ஓவரின் 2வது பந்தை பிரட் லீ பவுன்சராக வீசினார். அது ஹெல்மெட்டை தாண்டி மக்கல்லமின் முகத்தை தாக்கியது. இதில் அவரது மூக்கு உடைந்து இரத்தம் நிற்காமல் வழிந்தது. இதைத் தொடர்ந்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6839

  • தொடங்கியவர்

பிக் பாஷ் T20 தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றி

December 31, 2015

பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹேட் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பிக் பாஷ் லீக் டி20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- பிரிஸ்பேன் ஹேட் அணிகள் மோதியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹோபர்ட் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது.

Hobart-Hurricanes1

சங்கக்காரா 19 பந்தில் 32 ஓட்டங்களும் (1 பவுண்டரி, 2 சிக்சர்), பெய்லி 21 பந்தில் 31 ஓட்டங்களும் எடுத்தனர். அதிரடியில் மிரட்டிய கிறிஸ்டியன் அரைசதம் கடந்தார். அவர் 24 பந்தில் 56 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் 195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு தொடக்க வீரர்கள் சொதப்பினர். அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த அணித்தலைவர் கிறிஸ் லயன் சதம் அடித்தார். அவர் 51 பந்தில் 101 ஓட்டங்கள் (5 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்த வந்தவர்கள் சொபிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனையடுத்து ஹோபர்ட் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சதம் அடித்த கிறிஸ் லயன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

http://www.onlineuthayan.com/sports/?p=7033&cat=2

  • தொடங்கியவர்

ஷான் மார்ஷ் அதிரடி பெர்த் அபாரம்

 

Tamil_DailyNews_8419872522355.jpg

 

பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரின் 17வது லீக் ஆட்டத்தில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தியது. பெர்த் வாகா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்தது. மைக்கேல் லம்ப் 47 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கார்ட்டர்ஸ் 27, த்வார்ஷுயிஸ் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். பெர்த் பந்துவீச்சில் டேவிட் வில்லி 3, பெஹரன்டார்ப், ஆண்ட்ரூ டை தலா 2, ஜோயல் பாரில் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 14.3 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்து எளிதாக வென்றது. கேப்டன் மைக்கேல் கிளிங்கர் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஷான் மார்ஷ் 63 ரன் (54 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), மார்கஸ் ஹாரிஸ் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டேவிட் வில்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். பெர்த் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=187867

  • தொடங்கியவர்

ஜெயவர்த்தனே அதிரடியால் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் வெற்றி

January 06, 2016

பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 36 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்- பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.

adelaide_win_002

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்டு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் ஜெயவர்த்தனே 37 பந்தில் 57 ஓட்டங்கள் (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) குவித்தார். அதே போல் ஹெட் 31 பந்தில் 51 ஓட்டங்களும் (3 சிக்சர், 1 பவுண்டரி), ஹாட்ச் 15 பந்தில் 30 ஓட்டங்களும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் அணி களம் இறங்கியது. ஆனால் அடிலெய்டு அணியின் அபார பந்து வீச்சால் பெர்த் அணி 17.3 ஒவரில் 138 ஓட்டங்களில் சுருண்டது. அதிகபட்சமாக டேவிட் வில்லி 31 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டு அணியின் ரஷித் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=7254&cat=2

  • தொடங்கியவர்

பிக் பாஷ் தொடரில் பிரிஸ்பேன் அணியை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ்

January 09, 2016

பிக் பாஷ் லீக் டி20 தொடரில்  பிரிஸ்பேன் ஹேட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பிக் பாஷ் லீக் டி20 தொடரின் இன்றைய 23வது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹேட்- அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரிஸ்பேன் ஹேட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர் பெரிசன் (51) அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

1452295110756

பின்னர் 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களான லூட்மேன், ஜெயவர்த்தனே அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். பெர்த் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 57 ஓட்டங்கள் குவித்த ஜெயவர்த்தனே, இந்தப் போட்டியிலும் அரைசதம் கடந்தார். அவர் 30 பந்தில் 53 ஓட்டங்கள் (5 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் லூட்மேன் 57 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 50 ஓட்டங்களும் எடுத்தனர். இதனால் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=7411&cat=2

  • தொடங்கியவர்

’’மூக்கையும் ஸ்டெம்பையும் சேர்த்து உடைத்தார்’’ பிராவோ

January 10, 2016

பிக் பாஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன் ரெனேகாட்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பீட்டர் நெவில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தார். பிக் பாஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனேகாட்ஸ் – மெல்போர் ஸ்டார்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் மெல்போர்ன் ரெனேகாட்ஸ் அணி துடுப்பெடுத்தாடும் போது பிராவோ அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது 12வது ஓவரை மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சம்பா, பிராவோவுக்கு வீசினார். அதில் 3வது பந்தை பிராவோ அடித்த போது மறுமுனையில் இருந்த துடுப்பாட்ட வீரர் நெவில் பேட்டின் மீது பட்டு எகிறிய பந்து சம்பாவின் மூக்கை தாக்கி ஸ்டெம்பின் மீது பட்டது. இதனால் நெவில் ஓட்ட முறையில் ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டமிழப்பு வினோதமாக இருந்தது. இது போன்று வேறு எந்த போட்டியிலும் நடந்தது கிடையாது. ஆனால் சம்பாவின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பீட்டர்சன் அதிரடியால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=7514

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர் அணி

January 22, 2016

பிக் பாஷ் லீக் டி20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற சிட்னி தண்டர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடந்த பிக் பாஷ் டி20 லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்- சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

sydney_thunder_win_002

நாணய சுழற்சியில் வென்ற அடிலெய்டு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் ராஸ் 47 ஓட்டங்களும், நேஸர் 16 பந்தில் 27 ஓட்டங்களும், ரஷித் 3 பந்தில் 14 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் இடம்பெற்றிருந்த ஜெயவர்த்தனே 2வது ஓவரில் வாட்சன் பந்தில் சிக்சர் விளாச ரசிகர்கள் உற்சாகமாகினர். ஆனால் அதே ஓவரில் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர் 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கவாஜா 13 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 பந்தில் 104 ஓட்டங்கள் சேர்த்தார்.

இதனால் 17.4 ஓவரிலேயே அந்த அணி 160 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாட்சன் 8 பந்தில் 7 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அணித்தலைவர் மைக் ஹசி 11 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த வெற்றியால் சிட்னி தண்டர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மெல்போர்னில் இன்று நடக்கும் 2வது அரையிறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்- பெர்த் ஸ்காட்செர்ஸ் அணிகள் மோதுகின்றன.

http://www.onlineuthayan.com/sports/?p=8301&cat=2

  • தொடங்கியவர்
Melbourne Stars 176/9 (20/20 ov)
Sydney Thunder 181/7 (19.3/20 ov)
Sydney Thunder won by 3 wickets (with 3 balls remaining)
  • தொடங்கியவர்
சம்பியனாகியது சிட்னி தண்டர்
 
 

article_1453640406-InBBlThundersNEW.jpgஇடம்பெற்றுவந்த பிக் பாஷ் லீக் தொடரின் சம்பியன்களாக, சிட்னி தண்டர் அணி தெரிவாகியுள்ளது. மெல்பேண் ஸ்டார்ஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, அவ்வணி சம்பியன் பட்டத்தை வென்றது.

சிட்னி தண்டர் அணிக்கு மைக் ஹஸியும் மெல்பேண் ஸ்டார்ஸ் அணிக்கு அவரது சகோதரரான டேவிட் ஹஸியும் தலைமை தாங்கிய இப்போட்டி, சகோதரர்களுக்கிடையிலான மோதலாக அமைந்தது. அத்தோடு, அவுஸ்திரேலிய மண்ணில் மைக் ஹஸி விளையாடும் இறுதிப் போட்டியாகவும் இது அமைந்தது.

மெல்பேண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி தண்டர் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பேண் ஸ்டார்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. தனது முதலாவது விக்கெட்டை 6 ஓட்டங்களுக்கே இழந்த ஸ்டார்ஸ் அணி, இரண்டாவது விக்கெட்டுக்காக லூக் ரைட், கெவின் பீற்றர்சன் இணைந்து பகிர்ந்த 44 ஓட்டங்களின் துணையுடன், பலமான நிலையில் காணப்பட்டது.

துடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கெவின் பீற்றர்சன், 39 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 74 ஓட்டங்களைக் குவித்தார். லூக் ரைட் 23, டேவிட் ஹஸி 21 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷேன் வொற்சன், கிறிஸ் கிறீன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் அணி, 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டுக்காக ஜக்ஸ் கலிஸ், உஸ்மான் கவாஜா இருவரும் 9.1 ஓவர்களில் 86 ஓட்டங்களைப் பகிர, சிட்னி தண்டர் அணிக்குப் பலமாக அடித்தளம் கிடைத்தது.

துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா, 40 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 70 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, ஜக்ஸ் கலிஸ் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் 3, அடம் ஸம்பா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக உஸ்மான் கவாஜா தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/164565#sthash.OanYnpbO.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.