Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு நெருக்கடி: சில வெளிப்படை உண்மைகள், பாகம் - 01

Featured Replies

கிழக்கு நெருக்கடி: சில வெளிப்படை உண்மைகள், பாகம் - 01

'யாழ். குடா முற்றுகையும் ஊடகங்களின் அரசியலும்" என்ற தலைப்பில் அண்மையில் நான் எழுதியிருந்த ஆய்வு கட்டுரையில் மறைந்த மாமனிதர் சிவராம் தொடர்பாகவும் அவரது தேசிய சிந்தனைகள் தொடர்பாகவும் சில கருத்துக்களை பதிவு செய்திருந்தேன். அது பின்வருமாறு அமைந்திருந்தது:

'........அழிவின் விளிம்பில் நிற்கும் தமிழினம், தமிழ் ஊடகங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறது. தமிழ்த் தேசியப் பரப்புரை உலகம் அளவிடமுடியாத் தேவை நிரப்பீடு கொண்டது. அதை ஈடு செய்வதற்கு தேசியத்தின் மீதான பற்றுறுதியும் காதலும் மட்டும் போதுமானவையல்ல. தற்கொடையும் துணிச்சலும் துறைசார் புலமையும் ஆளுமையும் அவசியம். அத்தகையவர்களை இனங்கண்டு நாம் இணைத்துக் கொள்ளத் தவறும் பட்சத்தில் இழப்பு எமக்கேயொழிய எதிரிகளுக்கு அல்ல.

இந்த இடத்தில் மறைந்த மாமனிதர் சிவராமை நினைவு கொள்வது பொருத்தமானது என நான் கருதுகிறேன். மேற்குறிப்பிட்ட அனைத்துப் பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்த ஊடகவியலாளர் அவர். அவரைப் போன்றோர்தான் இன்று தமிழ்த் தேசியத்துக்குத் தேவைப்படுகிறார்கள். தமிழ்த் தேசியத்தை ஊடகத்தளத்தில் தனி இயக்கமாகவே முன்னெடுத்தவர் அவர் என்றால் அது மிகையாகாது.

கிழக்கில் கருணா பிரச்சினையை கிளப்பியதிலிருந்து சிவராம் தான் கொல்லப்படும் வரை வீரகேசரி, டெய்லி மிரர் பத்திரிகைகளில் எழுதியிருந்த ஏறத்தாழ 10 கட்டுரைகள் மிக முக்கியமானவை.

...

http://www.tamilnaatham.com/articles/2006/...ani20061213.htm

கருணா குழு சம்பந்தமாக கிழக்குமக்களின் முடிவுகள் என்ன என்பதில் சந்தேகமே இல்லாது ஒரு விடயத்தை தெளிவு படக்கூறலாம்.. அது பயம் என்பது மட்டும்தான்... வடக்கில் எப்படி டக்ளஸ் கூட்டம் இயங்குகின்றதோ அதேபோலத்தான் இண்று கருணாவும்... அதவிட கேவலம் எண்றுகூட சொல்லிக்கொள்ளலாம்... மக்களிடம் பணம் பிடுங்குவதும் இராணுவ காவல் அரன்களில் இருந்து மிரட்டுவதும்தான் அவர்களின் தலையாய கடமையாக இருக்கிறது...

முன்னர் புளட் மோகன், ராசிக் போண்றோர் செய்ததை இப்போ கருணா கூட்டம் செய்துகொண்டு இருக்கிறது... அதுக்கு வளமைபோல இலங்கை புலனாய்வு பிரிவு ஆதரவு வளக்குகிறது...

கிழக்கு மக்களின் ஆதரவு நிலை என்பது வெளிப்படை அதைத்தான் அண்மைய இடைத்தேர்தல் முடிவுகளும் எடுத்து கூறின.. புலிகள் பிரதேசங்களுள் இடம்பெயர்ந்து இருக்கும் மக்களும் சொன்னது அதுதான்...

தேவை இல்லாது கருணாவை பெரிய ஆக்கள் ஆக்குவதும் அவர்களை கணக்கில் எடுப்பது சரியானதுதானா என்பதை கவனத்தில் எடுக்கப்படவேண்டும்...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கிழக்கு நெருக்கடி: சில வெளிப்படை உண்மைகள் (பாகம் - 02)

கடந்த வாரம,; வீரகேசரி வாரப்பதிப்பில் (14.03.2002) 'கருணாவுக்கு ஒரு கடிதம்" என்ற தலைப்பில் சிவராம் எழுதியிருந்த பகிரங்கக் கடிதத்தைப் பதிவு செய்திருந்தேன். அதிலுள்ள சில முக்கியமான விடயங்கள் குறித்து இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். கருணாவின் முடிவுகள் தர்க்க ரீதியாகவும் நியாயபூர்வமாகவும் எடுக்கப்பட்ட முடிவுகள் இல்லை என்றும் தனது தவறுகளை மறைப்பதற்காக சுயலாபம் கருதி எடுக்கப்பட்டவை என்பதையும் சிவராம் ஆதாரங்களுடன் அக்கடிதத்தின் முலம் நிருபித்திருந்தார்.

(முடிந்தவரை சிவராமின் கட்டுரைகள் முழுவதையும் அறிமுகம் செய்ததன் பிற்பாடு எனது கிழக்கு நெருக்கடி குறித்த மேலதிக விளக்கங்களை பதிவு செய்ய உத்தேசித்திருப்பதால் எனது கருத்துக்கள் சுருக்கமாகப் பதிவு செய்யப்படுகி;ன்றன.)

அக்கடிதத்தின் மூலம் சிவராம் கருணாவின் முன்வைத்திருக்கும் சில கேள்விகளும் சந்தேகங்களும் மிகமுக்கியமானவை.

அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். (இதன் முலம் கருணாவின் கடிதத்திலுள்ள முழு விடயங்களையும் மீண்டும் ஒரு முறை வாசிப்பதற்கு ஒப்பான நிலையை நீங்கள் உணரலாம். இது ஒரு தவிர்க்கமுடியாத விளைவாக இருக்கின்றது.

ஏனெனில் இக்கடிதம்தான் இது போன்ற பிரதேசவாதக் கோரிக்கைகளை செயலிழக்க வைக்கும் முழு அடிப்படையையும் தன்னுள் முழுமையாகக் கொண்டுள்ளது. அத்துடன் இதை நாம் ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் மனதில்; பதிவு செய்வதனூடாக எம்மை வடக்குகிழக்கு இணைந்த தேசியச்சிந்தனைக்குள் ஐக்கியப்படுத்திக்கொள்ளவும் முடியும்.

இது போன்று இத் தொடர் கட்டுரையில் பல விடயங்கள் மீண்டும் மீண்டும் பேசப்பட வேண்டிய சில கட்டாயங்கள் உள்ளதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.)

1. எமது மட்டு-அம்பாறை மாவட்ட மண்ணையும் அதன் மக்களையும் மிகப் பாரதூரமாகப் பாதிக்கின்ற முடிவை எடுத்தபோது நாங்கள் ஏன் உங்கள் கண்களில் படவில்லை? ஏன் அமெரிக்கச்; செய்தி நிறுவனமான 'அசோசியேட்டட் பிரஸ்"சிற்கு மட்டும் உங்களுடைய முடிவுகளை பிரத்தியேகமாக அறிவித்துக்கொண்டிருந்தீர்க

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குப் பகுதிகளில் இருந்து புலிகளை வெளியேற்றி, தேர்தல் நடாத்தி, கருணா, டக்ளஸ் குழுவினரை ஆட்சியில் அமர்த்தச் சிங்கள அரசு வெளிப்படையாகத் திட்டம் போட்டு நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றது. இந்த நெருக்கடியான கால கட்டத்தில் தமிழ்த் தேசியத்தை வளர்க்கவும், அதனூடாகப் புலிகளின் பலத்தைக் கிழக்கில் தக்கவைக்கவும் என்ன மாதிரியான வேலைத்திட்டங்கள் தற்போது உள்ளன?

யாராவது தெளிவுபடுத்தினால் இங்கு வந்து கருத்தாடும் சிலர் பயன்பெறுவர்!

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவதோ, நான்காவதோ.... பிரச்சினைகளுக்குக் முகம் கொடுத்துத் தேசியத்தையும் தாயகத்தையும் பாதுகாக்கத் தேவையான வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தவேண்டும்.......

  • தொடங்கியவர்

கிழக்கு நெருக்கடி: சில வெளிப்படை உண்மைகள் - பாகம் - 03

(காலத்தின் தேவை கருதி மாமனிதர் சிவராமின் கட்டுரைகள் மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றன)

27.04.2004 திகதியிடப்பட்ட டெய்லி மிரர் பத்திரிகையின் வாரப்பதிப்பில் 'கருணா ஓடியது எதற்காக?" என்ற தலைப்பில் சிவராம் எழுதியிருந்த கட்டுரை குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

அதற்கு முன்பாக சென்ற வாரம் நாம் பார்த்த 'காலத்தின் தேவை அரசியல் வேலை" என்ற கட்டுரையில் சிவராம் கூறியிருந்த கருத்துக்களை நாம் கவனமாக உள்வாங்கிச் செயற்பட வேண்டும்.

தமிழ்ச் சமூகத்தை அதனுள் இயல்பாகக் காணப்படும் முரண்பாடுகளை கூர்மை அடையச் செய்வதன் மூலம் அடக்கி ஆளலாம் என்று சிங்கள பேரினவாதம் எத்தகைய வழிகளிலெல்லாம் செயற்படுகிறது என்பதை சிவராம் மிகச்சுருக்கமாக ஆனால் ஆழமாக விபரித்திருந்தார்.

இன்று கிழக்கு நெருக்கடியை சிங்களம் கையாளும் விதம் இதை எமக்குத் தெளிவாகவே எடுத்துக்காட்டுகிறது.

எனவே காத்திரமான அரசியல் செயற்பாடுகளின் முலம்தான் இந்த நெருக்கடியை நாம் தீர்த்துக்கொள்ள முடியும்.

எனவே ஒவ்வொரு மக்களையும் அரசியல் விழிப்புணர்வுள்ளவர்களாக மாற்ற வேண்டும். தமிழ் ஊடகங்கள் இதற்காக தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும் கடுமையாக உழைக்க வேண்டும்.

சிவராம் குறிப்பிடுவது போல 'ஊடகங்கள் மூலமாக மக்களை முழுமையாக சென்றடைந்து விடலாம், ஆனால் அவர்களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களே போதும் என எண்ணுவது மகா தவறாகும்.

தகவல் போர் யுகத்தில் நாம் வாழ்பவர்கள் என்ற வகையில் ஊடகங்கள்- குறிப்பாக எமது போராட்டம் சார்ந்த ஊடகங்கள்- மிக நுட்பமாகச் செயற்பட வேண்டும் என்பதிலோ அதில் நாம் கட்டாயம் பெரு முதலீடு செய்ய வேண்டும் என்பதிலோ மறுபேச்சுக்கு இடமில்லை.

ஆனால் மக்களிடம் சென்று அரசியல் கருத்தரங்குகளையும் உலக விடுதலைப் போராட்டங்கள் பற்றிய தெளிவு ஏற்படுத்தும் கூட்டங்களையும் நாம் செய்யும் வரை எமது ஊடகச் சாதனைகள் நீர் மேல் ஊற்றிய மண்ணெண்ணெய்யாகத்தான் இருக்கும்" என்று அவர் குறிப்பிடுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே விடுதலைப் புலிகள் பரப்புரை செயற்பாடுகள் மீது இன்னும் கூடுதலான கவனத்தை செலுத்தி அடித்தட்டு மக்களிடையே அரசியல் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்த வேண்டும். இன்று கிழக்கு மக்களிற்கான ஊடக நுகர்வு மறுக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் செய்தித்தணிக்கைகளும் தமிழ்த் தேசிய பத்திரிகைகள் பறிமுதல் செய்யப்பட்டு தீவைக்கப்படுவதும் நாம் தினம் கேள்விப்படும் செய்திகளாக இருக்கின்றன. அடிப்படை வசதிகளே மறுக்கப்பட்டு இருக்கும் அம் மக்களிற்கு நவீன ஊடக வசதிகள் (தொலைக்காட்சி, இணையம் போன்றவை) கிடைக்கும் என்று நாம் கனவில் கூட எதிர்பார்க்க முடியாது.

எனவே இன்றைய கிழக்கு நிலையைப் பொறுத்தவரை ஊடகங்களின் பங்கு ஒரு வரையறைக்குட்பட்டு விட்டது. எனவே மக்களிடையே நேரடியாக இறங்கி வேலை செய்வதுதான் போதிய பலனைத்தரும். எனவே எல்லோரும் ஒருமித்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இனி நாம் இந்த வாரம் அறிமுகம் செய்யவுள்ள கட்டுரை குறித்துப் பார்ப்போம். இந்த கட்டுரை மிக முக்கியமான கட்டுரை மட்டுமல்ல. தற்போதைய சூழலில் அறிமுகம் செய்வது பொருத்தமாகவும் இருக்கிறது.

கிழக்கை எப்படியாவது துண்டாடிவிட வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் சிங்களம் செயற்படுவதை நாம் தினம் தினம் நடக்கும் நிகழ்வுகளினூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நீதிமன்றத் தீர்ப்பு, ஆளுநர்கள் நியமனம், கிழக்கில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள், ஒட்டுக்குழுக்களின் நடவடிக்கைகள,; நிரந்தரமாக முடப்பட்டிருக்கம் யு-15 பாதை என்று அது ஒரு திருவிழாபோல் களைகட்டியுள்ளது.

சிங்களம் அதன் உச்ச சக்தியை பிரயோகித்து கிழக்கில் அரசியல் இராஜதந்திர ரீதியாக என்னவெல்லாம் செய்ய முடியோமோ அதையெல்லாம் செய்து கெண்டிருக்கிறது. இதன் உச்சகட்டமாக இராணுவ நடவடிக்கைகள் முலம் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை (குறிப்பாக வாகரையை) மீட்க முயன்று கொண்டிருக்கிறது.

...

http://www.tamilnaatham.com/articles/2007/...ni/20070103.htm

  • தொடங்கியவர்

கிழக்கு நெருக்கடி: சில வெளிப்படை உண்மைகள் (பாகம் - 04)

(காலத்தின் தேவை கருதி மாமனிதர் சிவராமின் கட்டுரைகள் மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றன)

சிவராமின் கட்டுரைகளை அறிமுகம் செய்வதற்காக நான் தொடங்கியுள்ள இந்தக் கட்டுரைத்தொடர் வெளிவரத் தொடங்கியதிலிருந்து இந்தக்கணம் வரை ஏராளமான மின்னஞ்சல்கள் வந்து குவிந்தவண்ணமுள்ளன. இவை எல்லாவற்றிற்கும் தனித்தனியாக பதில் எழுதுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. பாராட்டி தமிழ்த் தேசியத்தை ஆதரித்து கருத்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி. அவர்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும் என்பது என் அவா.

இங்கு நான் குறிப்பிட விரும்பும் வேறு ஒரு முக்கியமான விடயம் என்னவெனில், சிவராமின் கட்டுரைகள் மக்கள் பார்வைக்கு மீண்டும் வருவதை விரும்பாத தமிழ்த் தேசியத்திற்கெதிரான சில சக்திகள் தமது காழ்ப்பை, வெறுப்பை தமது மின்னஞ்சலினூடாக கவிழ்த்துக் கொட்டியிருந்தார்கள். இந்த நுண் அரசியலை நாம் தெளிவாகப்புரிந்து கொள்ளவேண்டும். அவற்றிற்கு மட்டும் சில விளக்கங்களைப் பதிவு செய்து விட்டு நாம் சிவராமின் கட்டுரைக்குள் உள்நுழையலாம் என்று நினைக்கிறேன்.

இந்தத் தொடரின் நோக்கமே, தற்போதைய கிழக்கு நெருக்கடிக்கான தீர்வு சிவராமின் இறுதிக்காலத்துக் கட்டுரைகளில் பொதிந்து கிடப்பதனாலும் அவற்றை தமிழ் தேசிய ஊடகங்கள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற காரணத்தினாலும்தான் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன என்பது தொடரின் ஆரமபத்திலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே சிவராமின் கட்டுரைகளை மீளுருவாக்கம் செய்வதை விரும்பாதவர்களின் அரசியல் மிகத்தெளிவானது. அத்துடன் 'வெளிப்படை உண்மைகள்" என்று தலைப்பிட்டுவிட்டு சில 'உண்மைகள்" மறைக்கப்படுவதாகவும் சில கருத்துக்களை பார்க்கக்கூடியதாக இருந்தது. அது என்ன 'உண்மைகள்" என்பதை நாம் சிவராமை உயிர்ப்பித்துத்தான் கேட்கவேண்டும்.

ஏனெனில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்தும் 'மாமனிதர்" சிவராமின் கருத்துக்கள்தான். அவை வெளிப்படையான உண்மைகள் என்பது உண்மையின் வழிதவறாத தேசியத்தின் வழி நடப்பவர்களுக்கு வெளிப்படையானது.

கருணா பிரச்சினையைத் தொடங்கியதிலிருந்து சிவராம் தான் கொல்லப்படும் வரை கிழக்கைச்சுற்றி கருணாவாலும் அவர் சார்ந்துள்ளவர்களாலும் போர்த்தப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் தனது ஒவ்வொரு கட்டுரையினூடாகவும் மெல்ல மெல்ல தோலுரித்து வருவதை நீங்கள் மிகத்தெளிவாகவே அவதானிக்கலாம். இதைத்தான் நாம் வெளிப்படை உண்மை என்கிறோம்.

அத்துடன் ஏன் சிவராமை முன்னிறுத்த வேண்டும்- அவர் முதலில் துரோகியாக இருந்தவர்தானே என்ற சில விசித்திரமான வியாக்கியானங்களையும் அந்த மின்னஞ்சல்களில் பார்க்கக்கூடியதாக இருந்தது. இது குறித்து தொடரின் ஆரம்பத்திலேயே ஒரு விடயத்தைப் பின்வருமாறு பதிவு செய்திருந்தேன்:

'கிழக்கை மையப்படுத்திய இந்த அவலச்சூழலை ஒற்றை மனிதராக தனித்து எதிர்கொண்டவர்தான் சிவராம். இந்த இடத்தில்;தான் சிவராம் என்ற மனிதரின் சிந்தனைகள், எழுத்துக்கள் தொடர்பான மறுவாசிப்பு கோரப்படுகிறது- அதுசரி சிவராம் அவர்களை முன்னிறுத்தி ஏன் நாம் கிழக்கு நெருக்கடியை பேச வேண்டும் என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு எழலாம். இதை நாம் ஒவ்வொரு கட்டுரையையும் அறிமுகம் செய்யும்போது பகுதி பகுதியாக ஆராய்வோம்".

எனவே இந்த இடத்தில் சிவராமை முன்னிறுத்துவதற்கான காரணத்தைப் பதிவு செய்வது பொருத்தமானது என்று நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை கிழக்குப் பிரச்சினையை பேசக்கூடிய முழுத்தகுதியும் தராதரமும் சிவராம் அவர்களிற்குத்தான் இருக்கிறது. அது நேற்றுமட்டுமல்ல இன்றும்கூட - ஏன் நாளையும்தான். ஏனெனில் கருணா கிளப்பிய சர்ச்சை பிரதேசங்கள் குறித்த வாதங்களை உள்ளடக்கியது.

எனவே அந்த மண்ணைச்சேர்ந்த ஒருவரால்தான் அதன் முழுத்தார்ப்பரியங்களையும் உள்வாங்கி கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். அதுதான் ஒருவகையில் தர்க்க ரீதியானதாகவும் இருக்கும். இதைத்தான் சிவராம் அவர்களும் 'கருணாவுக்கு ஒரு கடிதம்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

';.........இதையெல்லாம் மறைத்து நீங்கள் போரியல் அரிவரி தெரியாத கற்றுக்குட்டியாக பிரதேசவாதம் பேசுவது ஏன்? உங்களுடைய நிலைப்பாடு மேற்படி விடயங்களை ஆராயும்போது தர்க்க ரீதியாகவும் நியாயபூர்வமாகவும் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. இதை நான் மட்டக்களப்பு மண்ணில் நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளானாக் கூறவில்லை. அந்த மண்ணோடு பல நூற்றாண்டுகளாக பின்னிப்பிணைந்த பரம்பரையைச்; சேர்ந்தவன் என்ற வகையில் எடுத்துரைக்கிறேன்." அத்துடன் மிக மிக முக்கியமான ஒன்றும் உள்ளது. அது இந்த வாரம் நாம் அறிமுகம் செய்யவுள்ள கட்டுரையில் உள்ளது. அது என்னவென்று சிவராமின் மொழியிலேயே வாசியுங்கள்:

'....மட்டக்களப்பு மண்ணின் விடுதலைக்காக என கருணா எதைச் செய்திருந்தாலும் அதை இரண்டாம் பேச்சிற்கு இடமின்றி முன்னின்று ஆதரித்திருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான மண்ணின் மைந்தர்களில் என்னையும் கணக்கில் எடுக்கலாம்...

ஏனெனில் மட்டக்களப்பு மண்ணின் விடிவுபற்றி கருணாவிற்கு திடீரென ஞானோதயம் தோன்றுவதற்கு சரியாக 22 வருடங்களுக்கு முன்னர் கிழக்கிற்கென தனி இயக்கம் தொடங்கியவர்களில் நானும் ஒருவன்.....

http://www.tamilnaatham.com/articles/2007/...ni/20070111.htm

முன்னர் புளட் மோகன், ராசிக் போண்றோர் செய்ததை இப்போ கருணா கூட்டம் செய்துகொண்டு இருக்கிறது... அதுக்கு வளமைபோல இலங்கை புலனாய்வு பிரிவு ஆதரவு வளக்குகிறது...

இந்த எண்னிக்கை கூடி கொண்டே போகலாம்

ஆனா எமது புலிகளை போன்ற கொள்கைக்காக உயிரை விடும் ஒரே விடுதலை அமைப்பு விடுதலை புலிகள் தான்.............

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கிழக்கு நெருக்கடி: சில வெளிப்படை உண்மைகள் (இறுதிப் பாகம்)

இத்தொடரின் இந்தப் பகுதியை எழுதுவதற்காக கூடுதலாக இன்னும் ஒருவார காலம் காத்திருக்கவேண்டியிருந்தது. ஏனெனில் கிழக்கில் வாகரையை கைப்பற்றுவதற்கான முன்முயற்சிகளில் இராணுவம் ஈடுபட்டுக்கொண்டிருந்ததே காரணம்.

இப்போது வாகரையை இராணுவம் ஆக்கிரமித்து விட்டது. எனவே இப்போது கிழக்கு நெருக்கடி பிரச்சினையின் வேறு ஒரு பரிமாணத்துக்குள் பொருந்திக்கொண்டுள்ளது. கடந்த வாரம் பிரதேசவாதம் குறித்து விரிவாக ஆராய இருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இப்போதைய கிழக்கின் சூழலில் அந்த ஆய்வு பொருத்தமற்ற ஒன்றாகவே உள்ளது.

முற்றுமுழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்ட போர்ச்சூழல் கிழக்கை மையம் கொண்டுள்ளது. வாகரையை ஆக்கிரமித்திருப்பதனூடாக சிங்களத்தால் வெளிப்படையான போர் அறிவி;க்கப்பட்டு விட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கை, போர் நிறுத்த ஒப்பந்தம் எல்லாம் சிங்ளத்தால் கிழித்து சர்வதேசத்தை நோக்கி வீசி எறியப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்கள் (அல்லது மாதங்கள்) இலங்கைத்தீவின் வரலாற்றைப் புரட்டிப் போடும் இராணுவ நகர்வுகளால் நிரம்பப் போகின்றதென்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனால் இந்த இராணுவ நகர்வுக்குச் சொந்தக்காரர்கள் சிங்களப்படையினர் அல்ல. அவர்கள் புலிகள். வாகரையைக் கைப்பற்றியதனூடாக சிங்களம் தனது அழிவுப்பாதையை மிகத் தெளிவாகவே எழுதிச்செல்கிறது.

இதில் நாம் மிக உன்னிப்பாகக் கவனிக்கவேண்டிய விடயம். புலிகள் வாகரையை சிங்களம் ஆக்கிரமித்தது குறித்து கண்காணிப்புக் குழுவினரிடமோ, நோர்வே அனுசரணையாளர்களிடமோ எந்த வித முறைப்பாட்டையும் செய்யவில்லை. ஏன் வெளிப்படையாக எந்தவிதமான அறிக்கையும்கூட விடவில்லை. இதன் பின்னுள்ள செய்தி ஏராளம். குறிப்பான செய்தி 'புரிந்துணர்வு உடன்படிக்கை செத்து விட்டது". எனவே சிங்களப்படையினரின் படை நகர்வுகளை கட்டுப்படுத்தாத 'புரிந்துணர்வு உடன்படிக்கை" புலிகளின் படை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தாது.

எனவே மாமனிதர் சிவராமின் கட்டுரைகளை (சமாதான காலத்தில் எழுந்த கிழக்கு நெருக்கடிக்குத் தீர்வாக) அறிமுகம் செய்யும் இத்தொடர் யுத்த காலத்தில் வேறு ஒரு பரிமாணம் பெறுகிறது. இனி கிழக்கை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகள், பிரச்சாரங்கள், மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள், களப்பணிகள் எல்லாம் ஒரு வரையறைக்கு மேல் பயனளிக்கப்போவதில்லை. அது மட்டுமல்ல இனி அது தேவையுமில்லை. கிழக்கை மையப்படுத்திய நெருக்கடிகள், பிரதேசவாதங்கள், பிரிவினைகள் எல்லாம் முடிவுக்கு வந்துட்டன அல்லது அதன் செயல் வீச்சை இழந்துவிட்டன.

சமாதான காலம்தான் பலவிதமான நெருக்கடிகளை ஒரு போராடும் இனத்திற்கு உருவாக்கும். போர் ஆரம்பித்தவுடன் உளவியல் ரீதியாக அடைந்திருந்த குழப்பங்கள் நீங்கி மீண்டும் ஒரு குடையின் கீழ்திரண்டு போராடும் எழுச்சியை மக்கள் பெறுவார்கள். இது எமக்கு உலக போராட்ட வரலாறுகள் சொல்லும் அடிப்படைப் பாடம். எனவே கிழக்கு நெருக்கடிக்குத் தீர்வாக அறிமுகம் செய்யப்பட்ட சிவராமின் கட்டுரைகளை நாம் இந்தப் பகுதியுடன் நிறைவு செய்வது பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன்.

15.08.04 திகதியிட்ட வீரகேசரி வாரவெளியீட்டில் சிவராம் அவர்கள் 'சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோர் தரும்பாடம்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இத்தகைய நிலையை தெளிவாக வரையறுத்திருந்தார்.

அதில் அவர் பின்வருமாறு எழுதியிருந்தார்:

'கிழக்குத் தீமோர் மக்களிடையே காணப்பட்ட பல்வேறு வட்டார மற்றும் மொழி, மத பிரிவுகளையும் முரண்பாடுகளையும் இந்தோனேசிய இராணுவம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பல மோசமான ஒட்டுப்படைகளையும் கைக்கூலிகளையும் உருவாக்கியது. இந்த ஒட்டுப்படைகள் தாம் விரும்பயபடி அட்டூழியங்களில் ஈடுபட்டன. கிழக்குத் தீமோர் சமூகத்தில் காணப்பட்ட மேற்படி முரண்பாடுகளை இந்தோனேசிய இராணுவம் மிக நுட்பமாகப் பயன்படுத்தியதன் மூலம் அந்நாட்டின் சுயநிர்ணய உரிமை பற்றிய ஒருமித்த கருத்தை பிரேட்டிலின் அமைப்பு அரசியல் ரீதியாக கட்டியெழுப்ப விடாமல் பார்த்துக் கொண்டது."

ஆனால் தீமோர் விடுதலை இயக்கம் சமாதானத் தளைகளிலிருந்து தன்னை விடுவித்து முழு அளவலான விடுதலைப்போரை முன்னெடுத்தபோது கிழக்குத் தீமோர் மக்கள் பிரதேசவாதம், மதம், சாதி, வட்டார வழக்கு உரசல்கள் போன்ற மாயைகளிலிருந்து விடுபட்டு, ஒட்டுப்படைகளும் கைக்கூலிகளும் விரட்டியடிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய சர்வஐன வாக்கெடுப்பில் எண்பது சதவீதமான கிழக்குத் தீமோர் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு வாக்களித்தது வரலாறு.

எனவே வரும் வாரங்களில் சமாதானத் தளைகளிலிருந்து விடுபட்டு தீவிரமடையப் போகும் தமிழீழ விடுதலைப் போராட்டம் 'கிழக்கு நெருக்கடி" என்ற சொல்லாடலை முழுவதுமாகத் துடைத்தெறியப் போகிறது. அதன் வழியில் ஒட்டுப்படைகளின் அழிவும் எழுதப்படும்.

சமாதான காலத்தில் பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்த சிங்களத்தால் யுத்த காலத்தில் அதை பிரயோகிக்க முடியாது. அதை வரும் நாட்கள் மிகத் தெளிவாகவே எடுத்துச் சொல்லும்.

...

http://www.tamilnaatham.com/articles/2007/...ni/20070124.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.