Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரையறைகளின் காலப்பொருத்தம் பற்றி !

Featured Replies

ஒரு புதிய பண்பாட்டை புதிய சிந்தனையை நம்சமூகத்திற்கு கொடுக்க முயல்கின்றோம் என்பது தான் அடிப்படை நோக்காக இருக்க முடியும். இதில் யார் எவர் எதனை சொன்னார் என்பதல்ல.  மாறாக ஒட்டுமொத்த சிந்தனைகளையும் ஒன்றுகுவித்து சமூகத்திற்கு வழங்கிடும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.  எந்த சமூக சக்தி – எந்த வர்க்கம் தமிழ் தேசத்தின் போராட்டத்தை  கையாள்கின்றது?  இவைமாத்திரம் அல்ல நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு வளர்ச்சிக் கட்டத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வதும், சமூகத்தில் கொடுக்கின்ற மாற்றங்கள், முரண்பாடுகள், வெவ்வேறு வர்க்கங்களின் நலன்கள் முட்டி மோதுகின்றது என்பதை இயற்கை- சமூகம் – முரண்பாடு  என்ற பிரிவுகளை சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
இதனை நாம் செய்கின்றோமா? முயற்சிக்கின்றோமா? செயற்படுத்தும் போது ஏற்படும் இடறுகள் என்ன? இவைகளை புறநிலையில் இருந்து அணுக வேண்டும்.
மாறாக  முன்னர் கற்ரவைகளில் இருந்து அல்லது முன்னர் கற்பித்தவற்றை எதிர்ப்பது (anarchy) என்பதே நிலைப்பாடு என்று சிந்திக்கும் மனப்பான்மையில் இருந்து அல்ல. மாறாக புறநிலை யதார்த்தத்த உள்வாக்கி அகநிலையை ஆய்வதாகும். எனவே புறநிலை யதார்த்தம்  என்பது புறநிலை வெளிப்பாடுகளில் இருந்து அகநிலையை ஆராய வேண்டும். ஆனால்அகநிலை என்பதில் இருந்து புறநிலையை ஆராய முடியாது. இந்த வகையில் புறநிலை என்பது  இங்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாட்டுச் சிந்தனையாகும்.  நிறுவனமயப்படுத்தப்பட்ட சிந்தனை, அதன் வெளிப்பாடுகள் திட்டமிட்ட வகையில் சமூகப் பொருளாதார அமைப்பை பாதுகாத்தே வந்துள்ளது. மனிதர்களிடம் உள்ள அகவுணர்வின் அடிப்படையில் நிறுவனமயப்பட்ட சிந்தனை வடிவத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது.   மனிதர்களின் சிந்தனையை தீர்மானிப்பது அரசியல் பொருளாதார உற்பத்தி உறவேயாகும். மாறாக மனிதனின் தன்னியல்பான சிந்தனை, உணர்வு சமூகத்தை தீர்மானிப்பதில்லை.
இந்த நிலையில் தான் நிறுவனமயப்பட்ட உணர்வும், தன்னியல்பான உணர்வும் மாறுபடுகின்றது.  நிறுவனமயமாக்கப்பட்ட சிந்தனை வடிவம் என்பதை  சமூகத்திற்கு முன்தள்ளுவதற்கு  என்று நிறுவனங்கள் பின்புலமாக இருக்கின்றது.
நாம் பொதுப்புத்தில் சிந்திப்பதை வைத்துக் கொண்டு சமூகப் பொருளாதார ஓட்டத்தை விளங்கிட முடியாது.  மனித வாழ்க்கையில் பழைய சமூக உறவினாலும் , வளர்ந்து வரும் பொருளாதார உறவினாலும் கட்டமைக்கப்படுகின்ற போலியுணர்வுகள் ( கடவுள் நம்பிக்கை, பில்லி, சூனியம் )- அகவுணர்வில் தாக்கத்தை செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றது. இங்கு புறநிலை அழுத்தங்களை விளங்கிக் கொள்வது என்பது முக்கியமானதாகும். இது சிக்கலானதும் கூட  என்பது இங்கு கவனிக்கப்படவேண்டும்.
 
நாம் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் சொற்பதங்கள் என்பது புதியவையாகவும், சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையில் இருக்கின்றது. புதிய புதிய வரைவிலக்கணக்கங்கள் பொருளாதார வளர்ச்சி ஏற்பட புதிய சொற்கள் அறிமுகப்படுத்துவதும் அதன் பொருளின் விளக்கம் என்பது கொடுக்கப்படுவது இயல்பானது.
சமூக விஞ்ஞானப்பார்வையில் வெளிப்படுத்தப்படும் சொற்கள் பற்றிய பரீட்சையம் போதியளவு இல்லாதது குறையாக இருப்பதும் இயல்பானதாகும்.
 இந்த அடிப்படையில் இருந் தான் வரைவிலக்கணம் பற்றிய கரிசனை அவசியமானதாகும். குறிப்பாக தேர்தல் காலங்களில் தேசம், தாயகம், தேசியம், நாடு என்பது பற்றிய  புரிதல் பற்றாக்குறை இருந்திருப்பதை அறிய முடிகின்றது.
ஒரு வரையறையில் இருந்து சமூகத்தை அணுகிட முடியாது என்பது கவனிக்க வேண்டும். அதேவேளை ஒவ்வொரு வரையறைகளும் பொருளாதார அமைப்பின் உற்பத்தி உறவிற்கு ஒப்பவே இருக்கின்றது. ஒரு காலத்தின் வரைவிலக்கணம் என்பது இன்னொரு காலத்திற்கு பொருத்தமில்லை.
இவ்வாறே சமூகத்தில் உள்ள வௌ்வேறு சக்திகள் சமூக விஞ்ஞானப் பார்வையற்ற நிலையை பயன்படுத்தி வங்குரோத்து அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிந்திருக்கின்றது.
இந்த வகையில் முதன்மையான முரண்பாடான தேசிய இனப்பிரச்சனை பற்றிய தெளிவுகளும் விஞ்ஞானப் பார்வை கொண்டதாக அமைதல் வேண்டும்.
புல இடங்களில் நேசன் - தேசம் என்ற சொல்லாடல் குழப்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. இந்தச் சொல்லிற்றான விளக்கம் என்பது போதில பரீட்சையம் இல்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.
தேசியம் என்பது எவ்வளவு புனிதப்பட்டதே அதேயளவு கொச்சைப்படுத்தப்பட்ட அல்லது தவறாக பயன்படுத்தப்பட்ட சொல்லும் அதுவாகவே இருக்கின்றது.
 
இனம் பற்றிய புரிதல்
மனித இனத்தின் வகையை 3 வகையாக பிரிக்கின்றனர். 1. ஆபீரிக்க வகை2. இந்தோ ஐரோப்பிய 3 மொங்கோலிய வகையாகவும் பின்னர் உள்ளாக பல வகைக் கூறுகளாக பிரிந்து வந்துள்ளது.
இது நாகரீக மனிதர்களின் மூதாதேயர்களாகும். இனம் என்பதை ஆங்கிலத்தில் ரேஸ் - race என்று அழைக்கப்படுகின்றது. இந்தச் சொல்லாடல் குறுக்கி வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 
இனவகையில் தூய்மை இருக்க முடியும் என்ற கருத்து வளர்ச்சி என்பது இதன் விளைவுகளில் ஒன்றாகும்.
இனம் (race) என்பது இரத்தவகை சார்ந்ததாக இருக்கின்றது பௌதீகமானதாக மரபணு என்பது பல்வேறு மாற்றங்களுக்கும் பல்வேறு மனித கூட்டங்கள் பல்வேறு கட்டங்களில் கலந்து வந்துள்ளது. மனித குலம் ஆபீரிக்காவில் தோன்றினாலும் அந்த மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு பரந்தும் கூடியும் பிரிந்தும், மறுபடியும் கூடியும் உள்ளது.   மனித கூட்டத்தின் கலப்புத் தான் இன்றைய நாரீகவளர்ச்சி கொண்ட மனிதர்களாகும்.
 
இந்த பெரும் மனித கூட்டத்தில் ஆதியிலேயே குடும்பங்கள் கூட்டாகவும்,  பிரிந்தும் வாழ்ந்துள்ளது. இனக்குழும வாழ்வு முறையே அதிக ஆண்டுகளைக் கொண்டதாகும். அதாவது 80000 தான் நாகரீக மனிதர்களின் காலம் என்றால் சுமார் 70000  ஆண்டுகள் இவ்வாறு  காட்டுமிராண்டித் தனத்தைக் கொண்ட சமூகக் குழுக்களாக வாழ்ந்துள்ளனர். இதன் பின்னர் நாகரீக காலத்து இனங்குழுமங்களாக (tribal) வாழ்ந்துள்ளன.
இற்றைக்கு  அண்ணளவாக 7000களில் நாகரீக நகர்கள் தோன்றுகின்றனது. இவ்வாறு வளர்ந்த நாகரீகமாதே  நாங்கள் தெரிந்து கொள்ளும் நிலமானியம் வளர்ந்துள்ளது என்று கருதிவிட முடியாது எனினும்  முன்னோர்கள் வெவ்வேறு அடையாளம் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.  
மனித வரலாற்றின் வளர்ச்சிக் கட்டம் ஆதிப்பொதுவுடமை, அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என்று வளர்ந்து வந்துள்ளது.  இந்த நிலையில் ஒவ்வொரு காலத்தையும் புறநிலையில் இருந்து  அணுக வேண்டும், அதே வேளை அந்தக் காலத்துக்குரிய அரசியல் பொருளாதார மொழிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
இந்த வகையில் தான் இனம் என்ற சொல்லாடல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இனம் என்பதை வரையறுக்கின்ற போது பொருள்முதல்வாதத்தினை ஏற்றுக் கொண்டால் அதில் இருந்து வெளிப்படும் அரசியல் சொற்பதம் என்பது உயர்ந்த  வளர்ச்சிப் பரிமாணம் கொண்டதாக இருப்பதனால் மற்றைய முதலாளிய வரலாற்றாளர்களை விட முக்கிய பங்கைக் கொண்டவர்கள்.
இனம் - race- இரத்த வழிவந்ததாக பல நூற்றாண்டுகள் இருந்த சமூகமாகவும் புவியியல் காரணமாக வாழ்ந்த மக்கள் உடலமைப்பிலும், நிறத்திலும் மாறுபட்டு வருகின்றார்கள்.
குலங்கள் (பல குடும்பங்களின் கூட்டு  clan)
இனக்குழுமங்கள் (பல குலங்களின் கூட்டு )  நிலப்பிரபுத்துவத்திற்கு முன்னைய உற்பத்தி உறவில் அமைகின்ற சமூக ஒழுங்குமுறையாகும்.
தேசிய இனங்கள்- ( பல இனக்குழுமங்களின் கூட்டு) மறுபடியும், தேசிய இனங்கள் தேசிய இனத்துடன் ஐக்கியமாக முடியும். இவைகள் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிக் கொள்கின்றது.
பின்னரே நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு நகர்ந்து கொள்ளும் போது   தேசத்திற்குரிய பண்பைக் கொண்டு தேசிய இனங்கள் வளர்கின்றது.
 
ஐரோப்பிய நாகரீகத்திற்கும் பல்வேறு தேசிய இனங்களுக்கும் முன்னோடிகளாக Etruscan,Teutons, Gauls, saxon, Briton போன்ற இனக்குழுக்கள்இருந்திருக்கின்றன. இவ்வாறேதமிழர்களுக்கு முன்னோடிகளாக சுமேரியர்கள் இருந்துள்ளார்கள். அவர்களின் நாகரீக வளர்ச்சி என்பது பல்வேறு மக்கள் கூட்டத்தினை உருவாக்கிக் கொண்டது.  தமிழர்கள் மொழிரீதியாக இணைகின்ற  போதிலும் இனக்குழுமம்  சங்ககாலம் வர தொடர்கின்றது. நிலப்பிரபுத்துவத்தில் இனக்குமங்களான கைம்பர், வில்லவர், எயினர், ஒழியர், தோடர், மறவர், மாறர், தகாசர், கூறும்பர், கங்கர், வானரர், நாகர், கரூநாடார், தூளுவர், ஆய், விறலியர், இனசவாணர், பாணர், பனறயன், தூடியன், கைம்பன் என்றும் வேளீர் என்று வாழ்ந்துள்ளார்கள். இவ்வாறான இனக்குழுமக்களின் இணைப்பும் பின்னர் வெவ்வேறு தேசிய இனங்களாக மாறிக் கொண்டவர்களின் கலப்புத் தான். அதாவது மொழிக்குழுவாகிய மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிக்குழுமங்களின் தொடர்ச்சியாக மீளவும் கலந்துள்ளது.  இவ்வாறு தான் நவீன காலத்து தேசிய இனங்கள் உருவாகியிருக்கின்றது. இந்த நிலையில் இரத்தவகையில் தூய்மைவாதம் (சாதிய தேசியவாதிகள் போல அல்லது கிட்லரின் தூய்மையான இனம் போல)  கணிப்பிடுவது நவீன தேசிய இனங்கள் ஆகும்.
இனம் என்பதை பொதுப்படையாக பொதுப்புத்தியில் இருந்து வரையறைத்துக் கொள்வது என்பது சோம்பேறித்தனமாகும். இவ்வகையாக சோம்பேறித்தனம் இலகுவில் மக்களை திசைதிருப்பிக் கொள்ள முடிகின்றது. ஆகவே வெவ்வேறு காலகட்டத்தில் உள்ள சமூக உறவையும், பொருள் உற்பத்தி முறையை பிரதிநிதித்துவம் செய்யும் சமூக  அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் வரைவிலக்கணங்கள்,  அரசியல் சொல்லாடல்கள் அமைய வேண்டும்.
இனக்குழு என்பதை இலங்கையில் உள்ள சமூகத்தவர்களை பகுப்பு படுத்துவதற்கு பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். முதலாளித்துவத்திற்கு முன்னையை உற்பத்தி உறவைக் கொண்ட சமூகமாக இருப்பது பழங்குடிகளாக வேடர்களே. இவர்களில் அதிகமாக சிங்கள மொழி பேசுகின்ற வேடர்களாகும். ஆனால் தமிழ் வேடர்கள் தமிழ் மக்களிடையே கலப்பிற்கு உள்ளாகி வருகின்ற வேளையில் தனியடையாளத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் நம்மிடையே இருக்கின்ற சாதிய மனோபாவமாகும்.  எனவே இனக்குழு என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன்னையது. எனவே இங்கு இனக்குழு என்று பயன்படுத்துவது தவறானதாகும். நிலப்பிரபுத்துவம் இனக்குழுக்களாக இருந்தவற்றை இணைத்து தேசிய இனங்களாக அதிகமானவை மொழிவழியில் (assimilation ) நடைபெறுகின்றது. இது நீண்டகாலமெடுக்கும். எனவே இங்கு இனக்குழுமம் என்று வரையறுப்பது மானிடவியல் ரீதியாக கூட ஏற்றுக் கொள்ள முடியாது.
 
பாகுபாட்டுச் சிந்தனைகள்
நிறுவனமயப்பட்ட பாகுபடுத்தும் சிந்தனை
தன்னியல்பிற்குட்டபட்ட பாகுபடுத்தும் சிந்தனை
இங்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட சிந்தனை என்பது மனித குலவரலாற்றில் பல்வேறு கட்டிரமங்களின் மனித அழிவினை உண்டுபண்ணியிருக்கின்றது.
நிறுவனமயப்பட்ட பாகுபாட்டுச் சிந்தனை என்பது ஒரு அரசியல் பொருளாதார கட்டமைப்பை பாதுகாப்பதாக உள்ளது.  
நிறுவனமயப்பட்ட பாகுபடுத்தும் சிந்தனை
நாசிச- இரத்தத் தூய்மையில் அமைந்த சிந்தனை வடிவமாகும்.  நாசிச சிந்தனையின் அடியொற்றியே சாதிய – தேசியவாதம் தமிழகத்தில் உருப்பெற்றுள்ளது.
நிறவாதம் – இது விவிலியத்தில் இருந்து பெறப்படும் சிந்தனை வடிவமாகும். கறுப்பர்கள் எதற்கும் பொருத்தமற்றவர்கள் என்ற சிந்தனைவடிவம் இது தென்னாபீரிக்காவில் முக்கிய பாத்திரம் வகித்ததாகும்.
இனவாதம் (Racism) நிறத்தினையும், பௌத்தீக ரீதியான உறவைக் கொண்டதாகும்.
வர்ணாசிரமச் சிந்தனை – இந்து – இந்தி- இந்தியா என்னும் ஆதிக்கச் சிந்தனை
சியோனிசம்- வாக்களிக்கப்பட்ட பூமி என என்ற சிந்தனை வடிவம் என்பது தொழிற்புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட யூதர்களின் மீதான ஒடுக்குமுறையின் காரணமாக எழுத சிந்தாந்த வடிவமாகும். இதுவும் முதலாளித்துவம் 1850களின் பின்னராக வாக்களிக்கப்பட்ட  பூமிக்கு செல்லல் என்ற வடிவத்தில் ஒன்றமைக்கப்பட்டதாகும்.
 
உலக வரலாறு நெடுகிலும் விருப்பு வெறுப்பு என்பது தன்னியல்பிற் உட்பட்டதாகவும், நிறுவனமயப்பட்டதாகவும் இருந்திருக்கின்றது.  இதில் புறயினர்த்தார், வாக்களிக்கப்பட்ட பூமி, வர்ணாசிரமச் சிந்தனைகள் பழமையானது. அவைகள் கூட நிலப்பிரபுத்துவத்தின் வக்கிரச் சிந்தனையைாகும்.  இந்தச் சிந்தனைகள் என்பது மனிதர்களின் உணர்வுகளுடன் சேர்ந்திருக்கின்றது. இவைகள் அரசியல் , பொருளாதார நலன் கொண்டு வளர்த்தெடுக்கப்படும் போது ஆபத்தாகின்றது.  
 
இலங்கையில் என்ன நடக்கின்றது?
மக்கள் கூட்டத்தினை குறிக்க இனம் என்ற சொல்லும் அதன் பொருட்டு வெளிப்படும் பாகுபாட்டுச் சிந்தனை என்பதை இனவாதமாக ஓட்டுமொத்தமான பார்வையில் பயன்படுத்தப்படுகின்றது. 
இலங்கையில் இருப்பது ஒடுக்கும் பாகுபாட்டுச் சிந்தனை மற்றையது அதனை எதிர்க்கும் பாதுகாப்புச் சிந்தனையாகும்.
பெருந்தேசியவாதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வு என்பது அமைப்பு வடிவமாக எதிர்க்கப்படுவது இருக்கின்ற போதிலும் பாதிக்கப்படுவதினால் ஏற்படும் உணர்வலை ஏற்படுகின்றது.
மற்றையது தேசிய எழுச்சி பெறும் பொருட்டு  தேசிய இனத்தின் மரபு ரீதியாக கட்டமைக்கப்பட்ட சின்னங்கள், தேசிய வீரர்கள், வரலாறுகள் முன்வருவதும் அதில் குறிப்பான் என்பது முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இதனை தமிழ் மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆண்ட பரம்பரைக் கோசம் என்பது  இந்த  தேசிய இனத்தின் எழுச்சிக்கு உட்பட்டதேயன்றி இது இனவாதத்திற்கு உட்பட்டதல்ல.
ஆனால் இவைகள் எல்லாவற்றையும் சந்தர்ப்பவாதமாக இனவாதம் என்று வரையறுத்து தேசிய இனங்களின் உரிமையையும், தேசங்களின் வளர்ச்சி என்பது முதலாளித்துவம் ஏற்படுத்துகின்றது என்று விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் பெருந்தேசியவாதம் திட்டமிட்டு செயற்படுகின்ற வேளையில் பின்னவீனத்துவ முதலாளித்துவ தாராளவாதச் சிந்தனையும் துணை செய்கின்றது.
தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது ( myth- symbol- national heroes ) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்.
குறிப்பிட்ட விடயத்தை  அடையவதற்கான குறிப்பான் பொதுவாக  இருக்கின்றது. இதனை இனவாதம் என்று எமது தேவைக்காக சுருக்கிப் பார்த்துவிட்டுச் செல்லமுடியும். ஆனால் பொதுவாக அவ்வாறு இல்லை. இங்கு  இனவாதம் என்ற வரையறை தன்னார்வம் சார்ந்த வரையறையாகும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை பெருந்தேசியத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொண்டு தேசிய இனப்பிரச்சனையை இனவாதமாகப் பார்ப்பது புறநிலை அணுகுமுறை அல்ல.
 
தேசங்களிடையேயான முரண்பாடுகள் தான் தேசிய உணர்வை தூண்டுகின்றது. ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தின்   போலியுணர்வு- அகவுணர்வு-  (spontaneous )  என்பது ஒடுக்குமுறைக்கு எதிராக குவிக்கப்படுகின்றது. இது அரசியல் நோக்கத்திற்கானதாகவும் ஒடுக்குமுறையில் இருந்து வெளியேறுவதற்காகவும்  இருக்கின்றது.  இவ்வாறு தேசிய இனங்களின் முரண்பாடுகளால் ஏற்படுவது தேசியவாதமேயன்றி இனவாதம் அல்ல.
அவை இரண்டும் தன்னிருப்பை, அடையாளத்தை, வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மரபுரீதியாக கடத்தப்படும்  ஐதீகங்களை உருவாக்கிக் கொள்கின்றது, இவ்வாறு ஐதீகங்களில் இருந்து உருவாக்கப்படும் தேசிய வீரர்கள், தேசிய சின்னங்களாக முன்னிறுத்தப்படுகின்றது.
இலங்கையில் இருப்பது தேசியஇனப்பிரச்சனையும், தேசியவாதமேயன்றி இனவாதமல்ல. ஒரு குறிப்பான நாட்டில் உள்ள சூழ்நிலையில் குறிப்பான ஆய்வுகளும் அதன் மீதான கோட்பாடுகளையும்  உருவாக்க வேண்டும்.   
இலங்கை வரலாற்று ரீதியாகவே தேசங்களாக வளரக்கூடிய  (Potential )சாத்தியமான)தேசிய இனங்கள் இருந்திருக்கின்றது.  முதலாளித்துவத்தின் வளர்சி என்பது தேசங்களைக் கொண்ட பண்பைக் கொண்டு வளர்ந்து வருகின்றபோது ஏற்படுகின்ற முரண்பாடுகளைஇனவாதமாக அல்லது தனியே பொருளாதார நலன் சார்ந்த வர்க்கப் பிரச்சனையாக (பொருளாதாரவாதம்) குறுக்கிப் பார்க்கும் பார்வை இலங்கைஇடதுசாரிகளிடையே  விட்டுப்போகாத குறையாக இருந்துவருகின்றது.        
 
சமூகத்தின் பிற்போக்குப் பிரிவிரின் சிந்தனைகள் வெவ்வேறு வடிவத்தில் இருக்கின்றது. குறிப்பாக பின்னவீனத்துவ அரசியல் அதாவது இயற்கை- சமூகம்- வர்க்க முரண்பாடு என்ற மூன்று  கூறுகளை மறுத்துரைக்கும் சிந்தனைவடிவம் வெவ்வேறு தளத்தில் வெளிப்படுகின்றது. இந்த சக்திகளின் கோட்பாடுகளை இயங்கிலுக்கு உட்பட்டதாக காட்டப்படுகின்றதேயன்றி அவைகள் இயங்கியலுக்கு ஒத்ததாக இருப்பதில்லை மாத்திரம் அல்ல  இயங்கியலாகவும் இருக்க முடியாது.
 இயங்கியலை மறுத்த சாத்தியவாதமும், அனுபவவாதமும் (சமூக சோவனிஸ்டுக்கள்) முன்வைக்கப்படுகின்ற அரசியல்  போக்கினை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த போக்கிற்கு மாற்றாக சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது
 
இனவாதத்தினை  பேசுபவர்களை தண்டிக்கும் சட்டம்
பாடசாலைகளில் சமாதானம் பற்றி கற்பிக்கப்படும்  அதாவது சமாதானக் கல்விமற்றும் முரண்பாட்டுத் தீர்வு என்ற பாடம் கல்வித் திட்டத்தில் இடம்பெறும் என முன்னாள்ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
 விஜயன் என்ற கற்பனைக்கதையும், சிங்களவர்கள் தான் பூர்வீகக் குடிகள் என்றசிந்தனையை பள்ளிகளில் கற்பிப்பதை நிறுத்தாது. எவ்வித முன்ளேற்றத்தையும்கொண்டு வரப் போவதில்லை. இவர்களின் செயல் தந்திரம் என்பது தமிழ் மக்களுக்குதான் அறிவுரையாக இருக்குமேயன்றி சிங்கள மக்களுக்கு அல்ல.
 
இறுதியாக
முதலாளித்துவ தாராளவாத சிந்தனை இதனை இனவாதமாகக் கொள்கின்றது. அனைத்தையும் கறுப்பு வெள்ளையாகப் பார்க்கும்  பின்னவீனத்துவப் பார்வையாகும். வர்க்கங்கள், வர்க்க முரண்பாடுகள், சமத்துவமற்ற தன்மை, வரலாற்றுப் போக்கை மறுத்துரைக்கும் அகவுணர்வுப்  போக்காகும். ஆனால் அந்த கோசத்தின் புறநிலைத் தேவை என்பது தேசிய அரசியல் நோக்கிய பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் குறிப்பாக முன்வைக்கப்படுகின்றது.  தமிழ் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை மறுக்கும் வரையில் தேசிய வீரர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள், முன்னர் இருந்த எல்லாளனுக்கு பதிலாக பிரபா இடம்பெறத் தான் போகின்றார். குறிப்பாக வலதுசாரிய அணிகளுக்கு அவசியமாக மாத்திரம் இருக்கப் போவதில்லை. மாறாக மக்கள் அவர்களை தம் தலைவராக கொள்ளுமிடத்தில் அந்த இடத்தை மாற்றியமைத்திட முடியாது. தமிழ் தேசத்தின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யாத வரையில் நீடிக்கப் போவதாகும்.
முதலாளித்துவ காலத்திற்கான தேசிய இனங்களின் வளர்ச்சி என்பது முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான காலகட்டமாகும்.  முதலாளித்துவ ஜனநாயகத்திற்காக தேசிய இனங்களின் வளர்ச்சியை அரைகுறையாக புரிந்து கொள்வது என்பது வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கு என்பதை மறுத்துரைப்பதினால் உள்ளாகும் புரிதல் சிக்கல் இருந்து வருகின்றது.
தேசத்தின் வளர்ச்சி பற்றிய புரிதல் இருந்திருப்பின் தமிழ் தேசத்தின் உரிமைக்காக போராடக் கூடியவகையில் வேலைத்திட்டத்தினை முன்வைத்திருக்க முடியும். தேசங்களாக வளரக்கூடிய ஆற்றல்வளம் (potential)  கொண்ட  தேசிய இனங்கள் நிர்வாக வசதிக்காக இணைக்கப்பட்டது  வெவ்வேறு நாடுகளில் இடம்பெற்றிருக்கின்றன.   அதேவேளை முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கு தேசிய இனங்களை தேசமாக பண்பு ரீதியாக  உருவாக்குவதுடன் நிலப்பிரபுத்துவத்துடன் இருந்து அகன்றுவரும் ஜனநாயகக் கட்டமாகின்றது. அதனைச் செய்யவில்லை அது என்பதை சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்விக்கு உட்படுத்த வேண்டும்.  
முன்னெடுக்க தயங்குகின்றார்கள் அல்லது புரிதல் இல்லையா என்று மறுகேள்வி என்பது அவசியமாகின்றது.
இங்கு ஒரு விடயத்தினை விளங்கிக் கொள்ள இயற்கை- சமூகம்- வர்க்க முரண்பாடு என்ற மூன்று அம்சம் பற்றிய முறையான அணுகுமுறைப் பரீட்சையம், தேடல் உள்ளனவா என்பதும்  ஆய்விற்குரிய பிரச்சனைதான்.
 
இனக்குழுமங்கள்- தேசிய இனங்களிடையே மோதல் என்பது அடையாளம், இருப்பு, வளம் சார்ந்தாக இருக்கின்றது.  முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முரண்பாடுகளை இனமோதல்களாக கொள்ள முடியாது. பண்டைய உறவுமுறையில் உறவுகளைக் கொண்ட பங்காளிகளை (மாமன் மச்சான், இரத்த உறவுகள், குலம் கோத்திரங்கள் ஒன்றிணைந்து எதிர்க்கும் கட்டமாகும்) இணைத்து எதிர் கொண்டு மோதும் நிலையும் அந்த காலகட்டமும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
இது வெவ்வேறு பருமனில் மாறுபட முடியும். குறிப்பாக மார்க்சியவாதிகளின் மீது உள்ள பெரும் விமர்சனம் என்பது தேசிய இனப்பிரச்சனையை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதேயாகும்.
தேசிய இனங்களுக்கிடையே நடைபெறுவது கூட வர்க்கப் பிரச்சனையேயாகும்.  தனியே பொருளாதாரப் போராட்டத்தினை மாத்திரமே முன்னிறுத்தி பொருளாதாரப் போராட்டதை மாத்திரமே வர்க்கப் போராட்டமாகச் சுருக்கி க் கொண்ட புரிதல் இலங்கை இடதுசாரிய வரலாறு இன்றுரை தொடர்கின்றது.
சமூக வளர்ச்சிப் போக்கில் முழுமையான அணுகுமுறைஊடாக அணுகியாராய வேண்டும்.  இங்குதான் தான் கோளாறு உள்ளது. நாம் பகுதியான விடயங்களை அணுகுதன் ஊடாக தவறான முடிவிற்கு வரப்படுகின்றது. 
Ø  இன்று சாதிகளாக இருப்பவை பழைய இனங்குழுமங்களின் எச்சக் கொண்ட பெயர்களாவும்
Ø  குலங்களின் சின்னங்களை கொண்ட பெயர்களாவும்
Ø  செய்த தொழில் மற்றும் அதிகாரி பதவிகளின் பெயர்களை கொண்டதாகவும்
Ø  வதிவிடங்களைக்  அடிப்படையாகக் கொண்டு   உருவாகிய பெயர்
Ø  சமூகங்களினால் வடுச் சொற்களைக் கொண்டு உருவாகிய பெயர்கள்
 
தமிழ் ethnic group – இனக்குழுமாக சாதிய ஒடுக்குமுறைகாரணமாக ஏற்பட்ட தோற்றத்தை கொண்டிருந்த வேளையில் தான்  அதவாது  1966 வரை சாதி என்ற சகதியை உடைத்து தமிழ் தேசம் என்ற பண்பிற்கு வளர்ந்த காலமாகும். இது மற்றைய நாடுகளில் இருந்து மாறுபட்ட இந்திய- இலங்கை சமூகத்திற்குரிய பிரத்தியோகமான வளர்ச்சிப் போக்காகும்.
பிரித்தானியா வழங்கிய போலிச் சுதந்திரத்தின் முன்னரே தமிழர்கள் அதிகாரத்தைக் கோரினர். முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்  இளைஞர் காங்கிரஸ் போன்ற குட்டி முதலாளிய அமைப்புக்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தினை வேண்டிய அரசியல் பாதையை முன்வைத்திருக்கின்றது.  ஆனால்  கம்யூனிச அமைப்புக்களின் வளர்ச்சிப்   போக்கிற்கு பின்னரே  தேசிய இனங்கள் பற்றிய புரிதல் ஏற்பட்டது.  அதற்கு முற்பட்ட சமூகப்  போக்கு என்பது குட்டிமுதலாளிய  ஜனநாயக சீர்திருந்தங் கோரியதாக இருந்திருக்கின்றது. ஏனெனில் முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுத்து எதிர்வினையாற்றிய  சைவம்- தமிழ்- வேளாளம் என்ற நிலமானிய பிற்போக்கு முதன்மை இடையூறாக இருந்ததே காரணமாகும்.
போலிச் சுதந்திரத்தின் பின்னரா இலங்கை ஒற்றைத் தேசியத்தினுள் மூழ்கியிருந்த வேளையில்  தொழிலாளர் ஐக்கியம் என்பதையும் மீறி இனவெழுச்சி ஏன் உருவாகிய என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததாக கருதிவிட முடியாது. ஒரு புறம் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் நல்லெண்ணத்தை காட்டிக் கொண்டிருக்கின்றது. அதே வேளை இடதுசாரியம் தேசிய இனமுரண்பாடுகளை சரியாக கணித்து அதனை வழிநடத்தத் தவறிவிட்டது.  தேசங்களின் பண்பை வளர்த்துக் கொண்ட தேசிய இனங்களின் அரசியல் குறிக்கோள் கூட  வர்க்க நலன் சார்ந்ததாக விளங்கிக் கொண்டிருக்க வில்லை.  கம்யூனிச அமைப்பு  சுதாகரித்த போது குட்டிமுதலாளியம் தலைமைப் பாத்திரம் பெற்றுவிட்டது. தேசிய முரண்பாட்டில் அமைந்த  தமிழ் தேசத்தின் உரிமையை முன்னிறுத்திய பாதுகாப்பு யுத்தத்தை தமிழ் தேசம் எதிர்க் கொண்டது.
முள்ளிவாய்க்காலின் பின்னரும் பெருந்தேசியவாதம் என்பதை பண்புருவில் இனவாதமாக குறுக்கிவிட முடியுமா? அதே போல பெருந்தேசியவாதபெருந்தேசியவாதத்தின் எதிர்வினை என்பது தரகு - குட்டி முதலாளத்துவ வர்க்கத்தால் முன்வைக்கப்படும் குறுந்தேசிவாதத்தினை அவ்வாறு வகைப்படுத்த முடியுமா?
என்ற அடிப்படைக் கேள்வி என்பது இயங்கியலுக்கு அப்பால் முன்வைக்கப்படும் பின்னவீனத்துவக் கோட்பாடுகளில் இருந்து  உருவாகின்ற சிந்தனைப் போக்காகும்.
 

நன்றி .. வேலன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.