Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிங்களவர்கள் போராட வேண்டும்! - ஞானசார தேரர் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிங்களவர்கள் போராட வேண்டும்! - ஞானசார தேரர் 
[Wednesday 2015-12-30 08:00]

வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழ் மக்கள் போராடுவதைப்போல தெற்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிங்கள மக்களும் போராட வேண்டும். வடக்கிற்கு ஒரு நியதியும் தெற்கிற்கு ஒரு நியதியும் இருக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

  பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இராணுவ முகாம்களை நீக்குவது தொடர்பில் தொடர்ச்சியாக தமிழ் அரசியல் தலைமைகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அதேபோல் மேற்கத்தேய நாடுகள் அனைத்தும் இந்த செயற்பாட்டை பலப்படுத்தும் வகையில் பணத்தை வழங்கிக் கொண்டு உள்ளன. மறுபக்கம் அரசியல் அமைப்பை திருத்துவது தொடர்பில் மிகப்பெரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செயற்பாடுகளின் பின்னணியில் யார் உள்ளனர் என்று அவதானித்தால் புலம்பெயர் அமைப்புகளும் ஐக்கிய தேசியக் கட்சியுமே.

அரசியல் அமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொள்ள ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம். மேலும் இப்போது வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுத்து வரப்பட்டுவரும் நிலையில் தெற்கிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் மக்கள் இராணுவ முகாம்களை அகற்றுமாறு போராட வேண்டும். சிங்கள மக்களும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து போராட வேண்டும். இந்த நாட்டை பாதுகாக்கவே இராணுவம் உள்ளது. மாறாக அரசாங்கத்தை பாதுகாக்க அல்ல. ஆகவே அதை விளங்கிக்கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும்.

அதேபோல் வடக்கில் நிலங்களை விடுவிக்குமாறு தமிழ் மக்கள் போராடுவதை போலவே சிங்கள் மக்களும் வடக்கில் தமது நிலங்களை விடுவிக்குமாறும் விகாரைக்கு உரித்தான காணிகளை விடுவிக்குமாறும் போராட வேண்டும். வடக்கில் இருந்து தெற்கு வரையில் இலங்கையில் எந்த பகுதியிலும் சிங்கள மக்கள் வாழக்கூடிய உரிமை உள்ளது. அதில் எவரும் தடை விதிக்க முடியாது என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=148135&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.