Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துபாயில் வானுயர் கட்டடம் ஒன்றில் தீ

Featured Replies

துபாயில் வானுயர் கட்டடம் ஒன்றில் தீ

151231183002_dubai_hotel_fire_624x351_re

 

துபாயில் நகர மத்தியில் உள்ள வானுயர் மாடிக் கட்டடம் ஒன்றில் தீ பிடித்துள்ளது.

புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தை ஒட்டி வாணவேடிக்கை நடக்க இருந்த இடத்துக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் உள்ளது.

அட்ரஸ் டவுன்டவுன் ஹோட்டல் என்ற இந்த 63 -மாடிக் கட்டடம், உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவுக்கு அருகே உள்ளது.

1000 அடி உயரமான இந்தக் கட்டடத்திலிருந்து எரிந்த துண்டுகள் விழுந்துகொண்டிருப்பதை பலரும் அவதானித்துள்ளனர்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி உடனடியாக எந்தவிதமான தகவலும் இல்லை.

இந்த தீயிற்காக காரணம் என்ன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

http://www.bbc.com/tamil/global/2015/12/151231_dubai_fire?ocid=socialflow_facebook

10390498_948109378608728_347702772969095

10635827_948109385275394_824031953506385

1377039_948109398608726_1464495018519273

  • தொடங்கியவர்

டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.article-3380507-2FB68BEE00000578-324_636

டுபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

இதன்போது 20ஆவது மாடியில் இருந்து திடீரென தீ  பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து விடுதியின் அனைத்து தளங்களுக்கும் தீ பரவியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தீ விபத்து வானவேடிக்கையின் போது வெடித்த பட்டாசிலிருந்து வந்த தீப்பொறி பற்றி இருக்கலாம் என டுபாய் பொலிஸார் கருதுகின்றனர். தீ பற்றுவது குறித்து அறிந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து விடுதிகளும் மூடப்பட்டன.

இந்த தீ விபத்தில் பலியானவர்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

http://www.virakesari.lk/article/1566

  • தொடங்கியவர்

தொடர்ந்து எரிகிறது துபாய் கட்டிடம்

 

துபாயின் சொகுசு ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன்னர் ஏற்பட்ட தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

151231183002_dubai_hotel_fire_624x351_re

 தொடர்ந்து எரியும் டவுண்டவுன் ஹோட்டல் கட்டிடம்

புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான வேடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக இந்த தீ ஏற்பட்டது.

அந்த கட்டிடத்தில் தீ பரவ ஆரம்பித்து 12 மணி நேரங்கள் ஆன பின்னரும், அது அணைக்கப்படவில்லை.

அங்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிவதைக் காணக் கூடியதாக உள்ளது என அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

151231215545_address_downtown_hotel_fire  புருஜ் கலீஃபா அருகில் இந்த ஹோட்டல் உள்ளது

எனினும் தீயணைப்புத் துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் அவர் கூறுகிறார்.

இதனிடையே திடீரென ஏற்பட்ட இந்தத் தீ குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அட்ரஸ் டவுண்டவன் எனும் 63 மாடிகளைக் கொண்ட அந்த ஹோட்டலின் பக்கவாட்டில் தீ எரிந்தது.

இச்சம்பவத்தில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global/2016/01/160101_dubaifire_continue

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.